மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

malarmannanதமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்ட பெரியவர் திரு. மலர்மன்னன் அவர்கள் இன்று (9-பிப்ரவரி-2013) காலை 5 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை கண்ணீருடனும் ஆற்றொணாத் துயரத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் தருணத்தில் அவரது பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தினர், சமூகத் தொண்டர்கள், அபிமானிகள், வாசகர்கள் ஆகியோருடன் தமிழ்ஹிந்துவும் துயரத்தில் இணைகிறது.

அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

malarmannan_1

38 Replies to “மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்”

 1. மலர் மன்னர் அவர்களின் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று கலக்க நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்.

 2. பெரியவர் மலர்மன்னன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல முத்துக்குமாரசாமி அருள்புரிவான்.

 3. ஆழ்ந்த இரங்கல்கள்.. அப்பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்!!

 4. கண்ணீருடன் படித்த செய்தி. தமிழ் ஹிந்து தளத்தில் கிட்டத்தட்ட ஒரு பிதாமஹ ஸ்தானத்தில் இருந்து கருத்துப் பகிர்ந்த குழந்தை மனமுடைய உறுதியான ஹிந்து. அகண்ட ஹிந்துஸ்தானத்தில் அதீதப் பிடிப்புடைய ஒரு ஹிந்து. அவருடைய ஆன்மா சாந்தியடைய முருகப்பெருமானை வணங்குகிறேன்.

 5. மிகவும் வருத்தம் தரும் செய்தி.ஆழ்ந்த இரங்கல்கள்

 6. மலர் மன்னன் அவர்கள் தன் உடலை விட்டு நீங்கினாலும், படிப்பவர்கள் உள்ளத்தில் என்றும் வாழ்கிறார்.

 7. மேலே உள்ள அறிவிப்பில் 2013-க்கு பதிலாக , தவறுதலாக 2012- என டைப் ஆகி உள்ளது அதனை 2013- என சரியாக திருத்த , தமிழ் ஹிந்துவை வேண்டுகிறேன்.

  திரு மலர்மன்னனின் எழுத்துக்கள் அனைத்தையும் பயின்ற மாணவன் நான். அவர் ஒரு நல்வழி காட்டும் ஒளி விளக்காக திகழ்ந்தார். .அவர் உடல் மறைந்திருக்கலாம். அவர் ஆன்மா என்றும் தமிழ் இந்துவுக்கும், முழு மனித இனத்துக்கும் நல்ல பாதைகளை நிச்சயம் காட்டும். அவர் ஆன்மா சாந்தி அடைய , அன்னை அகிலாண்டேஸ்வரியையும் , அவள் திருக்குமரன் ஞான மூர்த்தியாம் ஐங்கரத்தானையும், பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறோம்.

  திரு மலர் மன்னன் புகழ் ஓங்குக.

 8. தமிழக அரசியல் இந்திய அரசியல் சரித்திர நிகழ்வுகள் சமூக மாற்றங்கள் என்ற பல தளங்களில் அனுபவபூர்வமான உண்மை செய்திகளை நமது இளம் தலைமுறையினறுக்கு இதுவரை விளக்கி புத்தகம் மூலமாகவும் வலைதளம் மூலமாகவும் சொல்லி வந்த அன்னாரின் திடிர் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இரு தினங்களுக்கு முன்கூட அவரது மறுமொழிகளை வலை தளங்களில் வாசித்தேன். அன்னாரது ஆண்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்..

 9. மிகவும் வருத்தமான செய்தி .
  இன்று காலை கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது .
  என் பிரார்த்தனைகளை, உடனே மானசீகமாக அவரை நோக்கித் தெரிவித்துக்கொண்டேன் . பிறகு, யோசிக்கும்வேளையிலே, அவர் விரும்பின மாதிரியே, அநாயேசேன மரணம் + பினா தைன்யேன ஜீவனம், க்ருபயா க்ருஷ்ண – த்வமயீ பக்திம் + அசஞ்சலம் – என்றபடி ஜீவித்து பிறகு தை அமாவசையிலே – ஸ்ரீ க்ருஷ்ண சரணங்களை அடைந்துள்ளார் என்பது ஒரு நிறைவான விஷயமே தவிர, இதிலே அதிர்ந்து துக்கப்பட, ஒன்றும் இல்லை – அவர் அப்படியே கருதினார் – என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
  அற்புதமான, சங்கதிகளை அவர் கவனமாக எப்போதும்போல தமது எழுத்திலே விதைத்துள்ளார். ( ஆரிய சமாஜம் + கண் விழித்த கானகம் + விட்டோபா + வந்தே மாதரம் + நமது நாயகன் பாரதி + சிந்தனையாளர் ராமலிங்கம் + இன்னபிற எல்லாமே காலம் கடந்து நிற்கப் போகும் கருவூலங்கள். ) சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்கள் என்கிற உத்தமமான ஒரு புத்தகம் திரு மலர்மன்னன் மிகச் சமீபத்திலே எழுதினது, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலே வெளியிட இருக்கிறார்கள், என்று அறிகிறேன் . ஆவலோடு அதில் அவர் பதித்து எழுதி இருக்கிற ஆன்மீக சாரங்களை கிரஹித்துத் தெரிந்து கொள்ள, ஆவலாக இருக்கிறேன் .
  சாந்தி அடையும், அவரது ஆத்மா – நம்மை ஆசிர்வதிக்கும்.
  அவரின் ஆசிகள் – அவரது எழுத்துக்கள் மூலம் – சிந்தனைகள் மூலம், நாம் எல்லோரையும் – ஒரு உன்னதமான + உறுதியான ஹிந்து என்கிற சிரேயஸ் நோக்கி நம்மை வழி நடத்திச் செல்லும் .
  சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் .
  அன்புடன் ,
  ஸ்ரீனிவாசன் .

 10. மிக மிக வருந்தத்தக்க அதிர்ச்சியான செய்தி………

  சமீப காலமாக அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன்…….கொங்கு பகுதியில் கணிசமாக நாடார்கள் உள்ளனர் என்றும் ,அவர்களில் மத மாற்றம் என்பதே கிடையாது என்று நான் கூறியவுடன் , என்னிடம் அது குறித்த தகவல்களை கேட்டுக்கொண்டே இருந்தார்…… ஒன்று நீங்கள் புத்தகமாக எழுதுங்கள் , அல்லது தகவல்களை என்னிடம் கொடுங்கள் ……நான் எழுதுகிறேன்…….உடல் நலம் குறைவதற்குள் எழுதிமுடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டார்…….பல்வேறு காரணங்களால் என்னால் குறித்த காலத்துக்குள் தகவல்களை கொடுக்க முடியவில்லை…….அய்யா ,……என்னை மன்னித்து விடுங்கள்……….

  உண்மையில் அவர் நம்மிடையே வாழ்ந்த பீஷ்மர்…….தமது இறுதிக்காலத்தை அவர் உணர்ந்தே இருந்தார்……
  அந்த மாபெரும் மனிதரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்……

 11. Very very shocked and depressed to read this news. Krishnakumar is right. He was like a god father in this tamilhindu.com, I feel very sad 🙁

 12. I forgot to mention, i urge tamilhindu.com to keep all his aritcles in an archive for us to read in one section. Thank you for your contributions and services to both our tamilhindu.com and our religion. We are very indebted to you sir.

 13. ஐயா ஸ்ரீ மலர்மன்னன் அவர்களுக்கு எமது அஞ்சலி. ஒரு ஹிந்துத்துவ ஜாம்பவானின் மறைவு நெஞ்சத்தினை நெகிழச்செய்கிறது. தினம் தோரும் சிவபூஜை செய்தவர். ஸ்ரீ கண்ணபிரானை தனது எஜமானன் என்று போற்றிய அந்த தூய ஹிந்துத்துவரின் சிந்தனைகளை தொடர்ந்து போற்றுவோம். அவருக்கு நிச்சயம் இறைவன் திருவடி நிழலை அடைந்திருப்பார்.இறையோடு இணைந்த அவரை வணங்குவோம் திருச்சிற்றம்பலம்.
  சிவஸ்ரீ.

 14. எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.. நான் அறிந்த அளவில் தன் வாழ்வின் கடைசிக்காலம் வரை ஹிந்துதர்மத்திற்காகப் போராடியவர் மலர்மன்னன் அவர்கள்.. அவரது ஆத்மா இறைவன் திருமலரடிகளில் என்றும் நிலைத்திருந்து இன்பம் பெற பிரார்த்திக்கின்றோம்..

 15. சில இடங்கள் இட்டு நிரப்ப இயலாதது என்பதை அடர்த்தியாக உணர்கிறேன். அவருக்கு எங்கள் அஞ்சலி.

 16. பெரியவர் மலர்மன்னன் அவர்களது எழுத்துக்களை கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். சில முறை அவரை நேரில் சந்தித்து ஆசியும், வழிகாட்டுதலும் பெற்றுள்ளேன். தனியொரு மனிதராகவும், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்தும் தன் வாழ்நாள் முழுவதும் இந்து சமுதாயத்திற்காகப் போராடியவர், தொண்டு செய்தவர். ஆழ்ந்த ஆன்மீக நோக்கும், மனித நேயமும், துன்புறுவோரிடத்து பரிவும் நேசமும் கொண்டிருந்த நல்ல மனிதர்.

  இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி.

 17. மலர் மன்னன் மறையவில்லை.
  மலராய் மன்னனாய் நம் மனதில் நிறைந்தார்.

 18. மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தரும் செய்தி. இரு நாட்களுக்கு முன் என் நண்பர் டோண்டு இராகவன் மறைந்த செய்தி. இப்போது பெரியவர் மலர்மன்னன் மறைந்த செய்தி.

  அண்ணாவின் நெருங்கிய தோழர். அண்ணாவின் பலருக்குத் தெரியா முகத்தை எல்லாருக்கும் எப்போதும் உவகையாகச் சொல்லி எழுதிவந்தவர்.

  ஆழ்ந்த இரங்கல்கள்.

  (அவர் ஜாதகப்பெயரென்ன? இரங்கல்களும் பிரார்த்தனைகளும் இயற்பெயரிலேயே இருக்க வேண்டும் என்பார்கள்)

 19. வணக்கம்,
  மிகவும் வருந்தத்தக்க செய்தி.

  அவர் சமுதாயா நலனுக்காக அயராதுபாடுபட்ட மாமனிதர். அவரது உழைப்பும் நல்லாசிகளும் நமது நன்முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.

  அவருக்கு நமது இதய அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

 20. சிறந்த இந்து தர்ம வாதியும் சிறந்த ஆன்மிக எழுத்தாளருமான பெரியவர் மலர்மன்னனின் மறைவு நமது மதத்துக்கு பேரிழப்பு என்று கூறினால் அது மிகையாகாது. நாம் அவர் வழி சென்று எமது மதத்திற்கு தொண்டாற்றுவதே அவருக்கு நாம் செய்யும் கைம்மாறாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

 21. பெரியவர் மலர்மன்னனுக்கு எனது அஞ்சலிகள்.

 22. அதிர்ச்சியளிக்கும் செய்தி. பல புண்ணிய ஸ்தலங்களில் அரும் பெரும் தொண்டு செய்து இறைவனடி சேர்ந்திருக்கிறார். எளிமைக்கும் தன்னலமில்லா தொண்டு உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக மக்கள் மனங்களில் இவர் விளங்கப் பிரார்த்திப்போம்.

 23. மிகவும் வேதனையளிக்கும் விஷயம். அவரது கோணம் நமக்கு மிகவும் தேவையான ஒன்று. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பலவும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கப்பட வேண்டியவை.

  இது தான் சரித்திரம் என்று நமக்கு அரசாங்கத்தால் வலிந்து புகட்டப்பட்ட “சரித்திரம் ” நமக்கு தீமை தான் செய்திருக்கிறது. இப்படி எத்தனையோ தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சொந்த சுகங்களை விட்டு எத்தனையோ விஷயங்களை பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் அதையும் படிக்க வேண்டும் என்று நம் அடுத்த தலைமுறை உணர வேண்டும்.

  அவரது வயதில் நாமெல்லாம் அவர் செய்த தொண்டில் ஒரு சிறு பகுதியேனும் செய்ய முடியுமா என்பது சந்தேகம். அதுவும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில். ஆனால் நாம் செய்யக்கூடியது அவரது கர்ம யோக வாழ்வை ஒரு வழிகாட்டியாகக்கொள்ள முயற்சி செய்யலாம்.

  சாய்

 24. Very saddened to hear this news. It is sad day for all the Hindus, That GuruJi will always be in the chapters of Hindusim and He will be remembered like Bharadhiyar, he was that famous when he was a alive, TamilHindu should bring His sacrifice to to Hindu Society. Some of writers pick this opportunity and right his memoir.

 25. எனது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி.

 26. மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. எழுத்து மற்றும் கருத்துகளில் தெளிவு, நல்ல சீரிய நோக்கம், நாஸ்திகம் ஆஸ்திகம் இரண்டையும் பார்த்து ஆச்தீஹம் மீது ஈர்ப்பு கொண்டு அதை பரப்பியவர் கண்ணதாசனை போல, அவர் ஆன்மா அவர் வணங்கிய கண்ணனை சேர இறைவனை பிரார்த்திகிறேன்.

 27. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

 28. ஐயா மலர் மன்னன் அவர்களது ஆன்மா இறைவன் அடி புகவும் மீண்டும் இங்கு பிறந்து இத்தேசத்துக்கு சேவை புரியவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
  ஈஸ்வரன்,பழனி.

 29. https://puthu.thinnai.com/?p=18201

  மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி. இந்திய வரலாறு தெரிந்த உயர்ந்த தமிழ் ஞான முனிவர் ஒருவர் காலமானது தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு.

  சி. ஜெயபாரதன்

 30. எனது வணக்கத்திற்குரியவரும், மிகச்சிறந்த அனுபவசாலியும், தனது எழுத்தால், வாதத்தால் இந்துத்வா கொள்கையை தூக்கி பிடித்தவருமான திரு.மலர்மன்னன் அவர்களது மறைவு பற்றிய செய்தியை நான் இன்றுதான் தங்கள் வலைதளத்தின் மூலம் அறிந்தேன். நான் சில வருடங்களே அவருடன் பழகியிருந்தாலும் அவரையும் அவரது அர்ப்பணிப்பு தன்மையையும் கண்டு வியந்திருக்கிறேன். அண்ணாரது ஆத்மா நம் அனைவருக்கும் ஊக்கத்தையும், சக்தியையும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 31. திரு.மலர்மன்னன் அய்யாவின் மறைவு ஆழ்ந்த துயரமளிக்கிறது.

 32. மலர்மன்னன் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம். — டி. ஆர். கௌஷிக் சாஸ்த்ரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *