இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?

”மத அடிப்படையில் கல்வி வழங்கக் கூடாது என்று அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்துக்களில் ஜாதி இருப்பது போல, முஸ்லீம் மற்றும் கிறித்தவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களுக்குள்ளும் ஜாதியை உருவாக்கி, இந்து மாணவர்களின் தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ‘ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசு, சிறுபான்மையிர் ஓட்டுக்களைப் பெற, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”.

கல்வியும் , வேலைவாய்ப்பும் , தான் இந்த நவீன யுகத்தின் அதிகாரத்திற்கும், வறுமையை விரட்டவுமான சாவி . அப்படியான கல்வியும் , வேலை வாய்ப்பும் இந்துக்களுக்கு குறிப்பாக ஏழை இந்து மாணவர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காக களம் இறங்கி செயல் படுகின்றது மத்திய காங்கிரஸ் அரசு.  இந்த கீழ்த்தரமான செயல் திட்டத்திற்கு மாநிலத்தை ஆளும் திராவிட அரசுகளும் துணை நின்று அப்பாவி இந்துக்களுக்கு துரோகம் செய்கின்றன. கல்வி உதவித்தொகை என்பதே பொருளாதார சமூக அடுக்குகளில் பின்தங்கியுள்ள ஒரு மாணவன் தங்கு தடையின்றி கல்வி கற்பதற்காக வழங்கப்படுகிறது .  பொருளாதார , சமூக , புறச்சூழல்கள் மாணவனின் கல்வியையோ, அவன் சிந்தனைகளையோ, அறிவுப்பயணத்தையோ தடை செய்யக்கூடாது . புறக்காரணிகள் அவன் அறிவியக்க செயல்பாடுகளை தடை செய்து அவன் எதிர்காலத்தையோ, வேலைவாய்ப்பையோ ,ஆரோக்கியமான சமூக பங்களிப்பையோ தடை செய்வதாக இருக்ககூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இப்படியான உதவியை ஒரு மாணவனின் பிறந்த மதத்தை காரணம் காட்டி மறுக்கும் அநியாயம் உலகிலேயே இங்கு மட்டும் தான் நடக்கிறது.

ஒரு மாணவன் இந்து சமயத்தை பின்பற்றுபவனாக இருப்பதாலேயே அவன் கல்வியை , முன்னேற்றத்தை குழி தோண்டி புதைக்கும் கேவலமான வேலையை அரசுகள் செய்கின்றன. சிறுபான்மையினத்தை சேர்ந்த கோடிஸ்வரர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரிக்கொடுக்க இவர்களுக்கு மனம் இருக்கிறது. ஆனால் சாக்கடை அள்ளும் சேரி இந்துவுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கிள்ளி கொடுக்க கூட இவர்களுக்கு மனமில்லை. ஒரு ரூபாய், 2 ரூபாய்க்கு தட்டேந்தும் ஏழை பிராமணர்கோ, இறப்பு காரியங்களில் சடங்கு செய்யும் சவண்டியின் ஏழை இந்து குழந்தைக்கு கொஞ்சமும் கொடுக்க மனமில்லை. ரோட்டோரத்தில் வெற்றிலை கடை வைத்திருப்பவனுக்கும், தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் அபலை இந்து கைம்பெண்ணின் மகனுக்கோ, மகளுக்கோ கொடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு மனமில்லை. ஆனால் தோல் தொழிற்சாலை வைத்திருப்பவருக்கும், மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்து கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்களின் வாரிசுகளுக்கு அள்ளி அள்ளி வீச அரசுகள் தயாராக இருக்கிறது. எதற்காக இந்த அவலம், ஏன் இந்த கேவலமான பிரிவினை, வஞ்சகமான சமனிலை?. எல்லாம் சிறுபான்மையினரை குறிவைத்து ஓட்டு பொறுக்குவதற்காகத்தான்.

TN_BJP_hindu_scholarship_campaign_2

உதாரணமாக சமீபத்தில் நாளிதழில் வந்த ஒரு செய்தி எப்படி ஒரு அதிர்ச்சி கரமான விளைவையும் , அப்பாவி ஏழை இந்துக்களுடைய நிலையையும் தெளிவாக உணர்த்தியது .கப்பலோட்டிய தமிழனும் செக்கிழுத்த செம்மலுமான வ. வூ.சி. யின் பேத்தி வறுமை காரணமாக உயர் கல்வி பெற முடியாமல் தவிக்கிறார் என்ற செய்தி .  1130 /1200 மதிபெண்கள் பெற்றும், மருத்துவத்திற்கான கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 மதிப்பெண் பெற்றும் பிரம்ம நாயகி இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார். நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக செக்கிழுத்தவருக்கும், முதல் சுதேசி கப்பலை இயக்கியவரின் வாரிசு இப்போது வறுமை நிலையால் கஷ்டப்பட்டாலும் நீ இந்து என்பதால் உனக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படக்கூடாது என்ற நிலையை அரசு எடுக்கிறது. 900 மதிப்பெண் எடுக்கும் பணக்கார இஸ்லாமிய ஆண் எளிதாக அரசு உதவியோடு மருத்துவம் படித்து வெளியேறிவிடுவான் இலவசமாக . ஆனால் 1130 மதிபெண் எடுத்தாலும் ஒரு இந்து பெண் உயர்கல்வி பெற முடியாது. அதிலும் இவர்கள் போடும் நிபந்தனைகளை போன்ற அபத்தத்தை எங்கும் பார்க்க முடியாது.

நீங்கள் ஒரு ஏழை இந்து சமூகத்தை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி என்றால், அதுவும் உங்கள் குடும்பத்தின் ஆண்டு மொத்த வருமானம் 50000 ரூபாய்க்குள் இருந்தால் மட்டும் உங்களின் சமூக அடுக்குகளுக்கு ஏற்ப உங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும், அதாவது உங்கள் குடும்பத்தின் மொத்த வருமானம் மாதத்திற்கு 4500 க்குள் இருந்தால் உங்களுக்கு கல்வி உதவித்தொகை இல்லாவிட்டால் இல்லை. இதே நீங்கள் சிறுபான்மையினர் ஆக இருந்தால் உங்களுக்கு வருமானம் ஒரு பொருட்டே இல்லை. அதிர்ச்சி அடையாதீர்கள் . மத்திய அரசு சிறுபான்மையினருக்கு என்ன சொல்கிறது என்றால் ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் அதாவது இந்துக்களை விட குறைந்த்து 500% அதிகமாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு உதவித்தொகை கிடைக்கும். மேலும் இவர்களுடைய வருமானத்திற்கு யாரும் உத்திரவாதம் அளிக்க வேண்டாம். அவர்களாக ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் வருமானம் இரண்டரை லட்சம் தான் என்று எழுதிக்கொடுத்தால் போதும் உங்களுக்கான கல்விக்கட்டணம் முழுமையும் இலவசம். ஏழை இந்துக்கள் என்றால் மாதம் 4500 என்ற வருமானத்திற்கு சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலர் முதல் தாசில்தார் வரை 2000 ரூபாய் லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டும் என்று அரசு சொல்கிறது. இது என்ன விதமான நியாயம் என்று சொல்லுங்கள்.

மேலும் அரசு சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை அளிக்க முடிவு செய்து பயனாளிகள் தேர்வையும் முடித்து நிதி ஒதுக்கீடும் செய்து விடுகிறது. ஆனால் ஆண்டு இறுதியில்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 120% முதல் 330% அதிகமாக இலக்கை எட்டி மாநில அரசுகள் சாதனை புரிகின்றன. (பார்க்க : இணைப்பு 1  )

அது தொகையாகட்டும் ,பயனாளிகளின் எண்ணிக்கையிலாகட்டும் எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று பாருங்கள்.  (மாவட்ட வாரியாக பயனாளிகளின் பட்டியலை பாருங்கள், அவர்களின் கல்வி தகுதி மதிப்பெண்களையும் பாருங்கள். தகுதி இல்லாத சிறுபான்மையினருக்கு கல்வி முன்னுரிமை அளிப்பதன் மூலம் கல்வியின் தரம் குறைவதோடு, முறையான கல்வி தகுதி உள்ள பல இந்து மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இந்த அரசாங்கம் அரசு உயர்பதவிகள், மேலான வியாபார வாய்ப்புக்கள், தொழில் நுட்ப படுப்புகள், பட்ட மேற்படிப்புகள் அனைத்திலும் சிறுபான்மையினர் மட்டுமே இருக்க வேண்டும். பெரும்பான்மை இந்து சமூகம் கீழ் மட்ட கல்வி மட்டுமே கற்று கூலி வேலைக்கும் , அடிமை தொழிலுக்கும், தினக்கூலியாகவும் செல்லட்டும் என்று திட்டமிட்டு சதி செய்கிறது. இந்துக்களின் சமூக , கல்வி உரிமைகளை மறுத்து அவர்களை ஏழ்மையிலும் , வறுமையிலும் நீடிக்க வைக்க மத்திய மன்மோகன் அரசும் மானிலத்தை ஆளும் திராவிட அரசாங்கங்களும் முயற்சி செய்கின்றன.

nmdfcமேலும் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து 37 விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. ஆனால் இதில் பெரும்பாலான பயனாளிகள் சிறுபான்மையினத்தை சார்ந்தவருக்கு மட்டுமே. இப்படியான ஒரு சமூக அநீதியை இழைப்பதற்காகவே சிறுபான்மையினர் நலத்திற்கென தனியாக ஒரு அமைச்சரவையையே ,மத்திய அரசு அமைத்து பெரும்பான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. ராஜேந்திர சச்சார் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான இரு வேறு கமிஷன்களின் பரிந்துரைகளை அப்படியே ஏற்று அமல்படுத்தி பெரும்பான்மை இந்துக்களின் வாழ்க்கை தரத்தை குலைக்க சதி செய்கிறது. (https://ncm.nic.in/pdf/compilation.pdf) சச்சார் கமிட்டி பரிந்துரையிலேயே தெளிவாக சொல்லப்பட்டு இருப்பது தேசிய சராசரி கல்வி தகுதியை விட இந்துக்கள் பெருமளவு குறைவாக இருக்கிறார்கள். அதாவது தேசிய கல்வி சராசரியான 64.30% க்கு கீழ் இந்துக்களின் கல்வி சராசரி 55% மாகவும் இஸ்லாமியர்களின் கல்வி 59.88% ஆகவும் இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் , பெளத்த , சமணர்களும் தேசிய சராசரியை விட மேலான கல்வி நிலையில் இருக்கிறார்கள் எனும் போது கல்வி உதவித்தொகை நியாயமாக யாருக்கு கொடுக்கப்பட வேண்டும். இந்துக்களுக்கு தானே, ஆனால் முறைகேடாக இது இஸ்லாமியர்களுக்கும், தேவையே இல்லாத கிறிஸ்த்தவர்களுக்கும் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும் பிரதமரின் 15 அம்ச திட்டம் என்ற அலங்கார பெயரோடு பெரும்பான்மை இந்துக்களை எப்படி கல்வி, வேலை வாய்ப்பில் பின்னுக்கு தள்ளுவது என்ற சதித்திட்டம் வெளியிட்டு இருக்கிறது. (https://www.minorityaffairs.gov.in/sites/upload_files/moma/files/pdfs/pm15points_eguide.pdf ) இந்த அறிவிக்கை முழுக்கவும் சிறுபான்மையினரை எப்படி குஷிப்படுத்தலாம் என்ற ஒரே நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மையினரை எப்படி கல்வி, வேலைவாய்ப்பில் மிக அதிக அளவில் பங்கேற்க செய்வது . மத்திய மானில அரசு பணிகளில் எப்படி இவர்களை அதிகமாக நியமிப்பது. தொழில் நுட்ப கல்வி, ஆராய்ச்சி கல்வித்துறையில் எப்படி இவர்களை முன்னிறுத்துவது என்பது பற்றி விரிவாக சொல்லும் இந்த அறிக்கை படித்தான் சிறுபான்மையின நலத்துறை அமைக்கப்பட்டு செயல் படுகிறது .

இந்த சிறுபான்மை கல்வி உதவித்தொகை எனும் உரிமை ஏழைகளாக இருந்தாலும் அவன் இந்து என்பதற்காக மறுக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை 3 நிலைகளில் வழங்கப்படுகிறது.

 1. pre metric scholarships
 2. post metric schlorships
 3. higer studies scholarships

இவற்றில் ப்ரி மெட்ரிக் எனும் முதல்னிலை வகுப்புகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பாருங்கள்.   ஒவ்வொரு ஆண்டும் என்ன இலக்கு நிரணயிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். போஸ்ட் 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையினர் என்றால் மாதம் 380 ரூபாய் முதல் 550 வரை வழங்கப்படுகிறது. இதுவே ஏழை இந்துக்குழந்தையாக இருந்தால் ஆண்டுக்கு 23 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை போலவே உயர் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் கல்வி கற்பதற்கு சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதே இந்துக்களுக்கு ஆண்டுக்கு 12,000 முதல் 40,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின கல்வி நிலையங்களிக்கு கல்வி உரிமை பெறும் சட்ட்த்தின் நெருக்குதலும் இல்லாத்தால் அவர்கள் முழுமையாக 100% சிறுபான்மையினரை படிக்க வைத்து விடுவார்கள். பெரும்பான்மையினரின் கல்வி நிலை என்பது எந்த உதவியும் இன்றி சீரழிந்து போய்விடும்.

ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காகவும், போலி மதச்சார்பின்மை, முற்போக்கு வேடங்களை அணிந்து கொள்வதற்காகவும் நியாயத்திற்கும் , தர்மத்திற்கும் புறம்பாக இப்படியான நிலைப்பாடுகளை அரசுகள் மேற்கொள்கின்றன. சிறுபான்மையினருக்கு சலுகைகள் கொடுப்பதை பாஜக எதிர்க்க வில்லை. ஆனால் அதே நேரம் ஏழை இந்துக்குழந்தைகளுக்கு அந்த சலுகைகளை கொடுங்கள் என்று கேட்கிறோம். என்ன தவறு இருக்கிறது. இந்த மண்ணில் பிறந்த இந்து குழந்தைகளும் நன்றாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்று வளமான வாழக்கை வாழட்டுமே என்று கெஞ்சுகிறோம். உங்களின் பிரித்தாளும் வெறிக்காக அப்பாவி ஏழை இந்து குழந்தைகளின் வாழ்க்கையில் மண் அள்ளி போடுவதை தாங்க முடியாமல் தான் வீதிக்கு வந்து போராடுகிறோம். கட்டிட வேலையும், சாக்கடை அள்ளும், குப்பை அள்ளும் பணி செய்து தன் வருமானத்தை எல்லாம் அரசு மறைமுகமாக பிடுங்கிக்கொள்ளும் அடித்தள இந்துவின் சந்ததிகள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் வறுமையினாலும், ஏழ்மையினாலும் கல்வி அறிவு பெறுவதிலிருந்து விலகி முன்னேற்றம் இல்லாமல் இருக்க சதி செய்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம். என்ன பாவம் செய்தார்கள் என்று யோசித்து பாருங்கள் மக்களே ?

சிறுபான்மையினர் என்ற ஒரு காரணத்திற்காக ஆண்டிற்கு 12000 ரூபாயை உதவித்தொகையை பெறுகிறார்கள், ஆனால் ஏழை இந்து மாணவன் பட்டை நாமத்தோடு பிச்சை தட்டை ஏந்திக்கொண்டு செல்ல வேண்டிய அவலம்.சிறுபான்மையினத்தை சேர்ந்த செல்வச்செழிப்பில் திளைக்கும் கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மாணவன் மாதம் 1000 ரூபாயிலிருந்து ஆண்டுக்கு 75000 ரூபாய் வரை உதவியாக பெறுவான். குடிசையில் வாழ்ந்து அழிந்து போகும் ஏழை இந்து மாணவன் வெற்று கையுடன் எந்த உதவியும் இன்றி சமூக அடுக்கில் கீழ் விழுந்து நசிந்து போக அரசே சதி செய்கிறது. இது ஒட்டுமொத்த இந்து சமயத்தையே திட்டமிட்டு அழிக்கும் நீண்ட கால சமூக சதியின் ஒரு பாகமாகவே இதை கருத வேண்டி இருக்கிறது. ஏழை இந்து மேலும் கீழான நிலைக்கு சென்று பரம ஏழையாக மாறுவதற்கும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இந்து உயர்கல்வி மறுக்கப்பட்டு ஏழையாக மாற மத்திய , மாநில அரசுகளின் சதி வேலை தான் இது.

2006 ஆம் ஆண்டு முதல் பெரும்பான்மையான மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஒரு கல்வி உதவித்தொகையை அறிவிக்கிறது. தொழில் நுட்ப கல்வி மற்றும் உயர்கல்விக்கான உதவித்தொகை. பயனாளிகள் முழுக்க முழுக்க சிறுபான்மையினர் மட்டுமே நாடு முழுதும் 60000 பயனாளிகளுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டு 962.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பைசா கூட ஏழை இந்து மாணவனுக்கு கொடுக்கப்பட வில்லை. மத்திய அரசுக்கு சிறுபான்மையினர் மட்டும் தான் ஓட்டுப்போட்டும் வரி கட்டிக்கொண்டும் இருக்கிறார்களா? பெரும்பான்மை இந்து மக்கள் ஏன் இப்படி 3ம் தர குடிமக்களை போல நடத்தப்பட வேண்டும் . இந்த உதவித்தொகையில் 95.4% முழுக்க முழுக்க இஸ்லாமிய கிறிஸ்த்தவ சிறுபான்மையினர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சீக்கிய, சமண, பெளத்த சிறுபான்மை மக்கள் அனைவரும் சேர்ந்து 4.6 % உதவித்தொகையை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த கால கட்டத்தில் பொறியியல் மருத்துவம் ,மேலாண்மை கல்வி நிறுவனங்களின் குறைந்த பட்ச கல்விக்கட்டணத்தை கூட கட்ட முடியாமல் தேசம் முழுக்க 2,64,000 ஏழை இந்து மாணவர்கள் கல்வி கூடங்களிலிருந்து வெளியேறி விட்டார்கள்.963 கோடியை ஒதுக்கி சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் காங்கிரஸ் அரசு. இன்னும் ஒரு 1000 கோடியை ஒதுக்கி ஏழை இந்து பெற்றோர்களின் வாரிசுகளையும், மாணவர்களையும் படிக்க உதவி இருக்கலாமே? . 264000 குடும்பங்கள் இன்று தங்களுக்கான சமூக முன்னிலையை இழந்து மூன்றாந்தர மக்களாக தரம் தாழ்ந்து இருப்பதற்காவே இந்த அரசு இப்படியான துரோகத்தை செய்கிறது. இந்து சமயத்தில் பிறந்து ஏழையாக தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த அப்பாவி மாணவர்கள் செய்த பாவம் என்ன?

christian_college_faculty1ஆண்டிற்கு 25ஆயிரம் ரூபாய் தினம் வந்து செல்பவர்களுக்கும்  (day scholars) விடுதியில் தங்கி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்படுகிறது. ஏழை இந்து மாணவனுக்கு 1 ரூபாய் கூட கொடுக்கப்படுவதில்லை. மேலும் இதன் அயோக்கியத்தனங்களை பாருங்கள். 2,50,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த உதவித்தொகை பொருந்துமாம், ஆனால் அதை சொல்ல வேண்டியது அவரே தான். (அறிக்கை எண்1)அதாவது 1கோடி வருமானம் ஈட்டும் ஒரு நபர் தான் 2,50,000 தான் சம்பாதி[ப்பதாக சொன்னாலே போதுமானதாம். அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டுமாம். ஆனால் இந்து சமயத்தை சேர்ந்த மாணவன் என்றால் அவனுக்கு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி, இணை தாசில்தார் உள்ளிட்டவர்கள் பார்த்து சான்று வழங்கினால் தான் ஏற்றுக்கொள்வார்களாம். என்ன விதமான அயோக்கியத்தனமும், பாரபட்சமும் நிலவுகிறது பாருங்கள். அப்படியே இந்து சமயத்தை சேர்ந்தவர் 1 லட்சத்திற்கு கீழ் வருமானம் உடைவராக இருந்தால் அவருக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.1 லட்சத்திற்கு மேல் என்றால் ஒரு பைசா கூட நிதி உதவி கிடையாது . என்ன விதமான நியாயம் என்று பாருங்கள். இதனுடைய நோக்கம் என்பது இந்து மாணவர்களை கல்வி கற்பதை நிறுத்தி அவர்கள் மூன்றாந்தர வேலைகளில் ஈடுபட்டு அடிமையாக இருக்க வேண்டும், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மாணவர்கள் கல்வி கற்று பெருவாரியான அரசு, தனியார் பணிகளை ஆக்ரமித்து இந்த நாட்டை அழிக்க வேண்டும் என்ற கெடு நோக்கோடு மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

2006 – 2007 காலத்தில் 64000 ஆக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை 75000 ஆக அடுத்த ஆண்டு உயர்த்தப்படுகிறது.அத்தோடு இன்னொரு மிகப்பெரிய அராஜகம் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. அது என்ன வென்றால் அரசாங்கம் உதவித்தொகை பெற தகுதியானவர்களாக ஒரு எண்ணிக்கையை அறிவிக்கிறது. பின்னர் அதில் 75% மத்திய அரசும், 25% மாநில அரசும் பகிர்ந்து அளிக்கலாம் என்று சொன்னதோடு, பயனாளிகளின் எண்ணிக்கையை எவ்வளவு வேண்டுமானாலும் இஷ்டம் போல உயர்த்தி கொடுங்கள் . சிறுபான்மையினரின் ஓட்டும், அவர்களின் மனம் குளிர்வது தான் நமக்கு முக்கியம் . பெரும்பான்மை மாணவர்கள் கல்வி கற்காமல் நாசமாக போக வேண்டும் என்பது அதை விட முக்கியம் என்று சொல்கிறது மத்திய காங்கிரஸ் அரசாங்கம். சிறுபான்மையினருக்கு கல்வி ஊக்கத்தொகையை மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி வீசி அடிக்கும் காங்கிரஸ் அரசு. பெரும்பான்மை இந்துக்களுக்கு துரோகம் செய்கிறது எப்படி என்றால் அவர்களின் வருமான அளவீடுகளில் ஆண்டுக்கு 60,000க்கும் மேல் சம்பாதிக்கும் ஏழை மேல் சாதி இந்து எந்த உதவித்தொகையும் பெற முடியாது. அதாவது மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கும் 5 நபர்களை கொண்ட இந்து குடும்பம் கல்வி உதவித்தொகை பெற தகுதி அற்றது. இதோடு மட்டுமல்லாமல் தலித் மாணவர்களுக்கும் , இன்ன பிற சாதி அடுக்குகளில் உள்ள மாணவர்களுக்கும் வருமான அளவீட்டிற்குள் கொண்டு வர தனியாக சதி ஆலோசனை வேறு செய்து கொண்டு., கீரிமி லேயர் விவகாரத்தில் இரட்டை வேடம் புனைகிறது மத்திய அரசு.

உதாரணத்திற்கு 2010 -2011 ஆம் ஆண்டிற்கான மெட்ரிக் பள்ளி முடித்த மாணவர்களுக்கான சிறுபான்மையின அமைச்சகத்தின் வெளியீட்டை பார்ப்போம். மாதம் 500 முதல் 1000 வரை பெறும் கல்வி உதவித்தொகை வழங்க நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 400000 ஆனால் வழங்கப்பட்டது 525644 பேர்களுக்கு 132% குறிப்பட்ட இலக்கை விட அதிகமாக சிறுபான்மையினர்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. எந்த சமூக மேம்பாட்டு திட்டத்திலும் இவ்வளவு பெரிய தில்லு முல்லு இருக்காது. 132% உயர்வு ஏற்பட்டு இருக்குமேயானால் அதை பற்றி அரசு ஏதேனும் விசாரித்திருக்கிறதா ? முன்னால் சொன்ன இலக்கு, வருமான அலகு இவற்றில் உள்ள தப்பு ஆராயப்பட்டு திருத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. மீண்டும் 2011 2012 ஆண்டுகளிலும் இதே அளவிற்கு தில்லு முல்லு நடந்திருக்கிறது. தமிழகத்தை எடுத்துகொள்வோம்,. தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பயனாளிகள் இஸ்லாமிய சமூகம் :7320 க்கு வழங்க தகுதி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.தமிழக அரசு தாயுள்ளத்தோடு வழங்கியது 16618 பேருக்கு . 223% அதிகமான பேருக்கு இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்த்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே 7980 பயனாளிகளுக்கு தகுதி இருப்பதாக மத்திய அரசு சொன்ன பிறகு தமிழக அரசு 17489 பேருக்கு 220 % அளவில் உயர்த்தி வழங்கி இருக்கிறது. என்ன ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி என்று உங்களுக்கு புல்லரிக்கும் அந்த அரசு ஏழை தலித் மாணவர்களுக்கு செய்த அநீதியை பாருங்கள்.

இதே தமிழக அரசு ஏழை தலித் இந்து மாணவர்களுக்கு ஆதி திராவிட நல நிதியை சுத்தமாக பயனில்லாமல் இருக்கிறது என்று சொல்லி அரசு இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு நிதியாக 500 கோடியை திருப்பி விட்டு விட்டனர்.ஏழை தலித் மாணவன் படிக்க கூடாது என்பதற்காக இவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செய்யும் அரசு சிறுபான்மையினருக்கு எப்படி சொம்படிக்கிறது என்று பாருங்கள். ஆதி திடாவிட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டையும் அது செலவிடப்பட்ட திட்டங்களையும் பாருங்கள். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியும் , சாக்கடை அள்ளும் கூலித்தொழிலாளியின் வாயில் மண்ணைப்போட்டு, அவன் கல்வியில் கொள்ளிக்கட்டையை சொருகும் வேலையை இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து திட்டமிட்டு செய்கின்றன. காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் நலனுக்கு பாடுபடுவதில் 1% ஏழை இந்து தலித் மாணவர்கள் மேல் காட்டியிருந்தால் அவர்களின் வாழ் நிலை எப்படியோ மாறி இருக்கும். ஆனால் அதற்கு இவர்களுக்கு மனமில்லை.

TN_BJP_hindu_scholarship_campaign_1

தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கும் அரசாணையை அமலாக்க தனியார் சுயநிதிக் கல்லூரி கள் மறுப்பதால், வட்டிக்கு வாங்கி கல்விக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு தலித் மாணவர்கள் தள்ளப்பட் டுள்ளனர்.தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் 11.09. 2012ம் தேதி அரசா ணை எண் 92 வெளியிடப்பட்டது . 2012-13 கல்வி ஆண்டிலி ருந்து சுயநிதி கல்வி நிறுவ னங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற் றும் மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய (அரசு நியமித்த சுயநிதி கல் லூரிகளுக்கான கட்டணக் குழு நிர்ணயித்த) கட்டணங் களை, மாணவ- மாணவியர் சேர்க்கையின் போது அவர் களிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

மாறாக மாணவ, மாணவியர்கள் செலுத்த வேண்டிய மேற்கண்ட கட்டணங்களை தொழில் நுட்ப கல்வி இயக் ககம்/மருத்துவ கல்வி இயக்ககம்/கல்லூரி கல்வி இயக்ககம் தேவையின் அடிப்படை யில் ஆதிதிராவிட நல ஆணையரிடமி ருந்து கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே தொகையினை பெற்று, தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள சுயநிதி கல்லூரிகளுக் கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும் இத்திட்டத்தின்படி பெற் றோர்/ பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட் சத்திற்கு மிகாமல் உள்ள, தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற் றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவியர்களிடமிருந்து எவ்வித கல்விக் கட்டணங் களையும் வசூலிக்கக் கூடாது என்பதை சம்பந்தப் பட்ட கல்வி நிலைய இயக் கங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது சுய நிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக் னிக் கல்லூ ரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்க ளிடத்தில் கல்வி கட்டணம் வசூலிக்கின்ற னர். இதனால் மாணவர்க ளின் பெற்றோர் கள், மிகுந்த சிரமத்தோடு வட்டிக்கு கடன் வாங்கி கல்வி கட் டணம் செலுத்தி வருகின்றனர். ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களி டத்தில் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுத்திட வேண்டும், அரசாணை 92 குறித்து பொது அறிவிக்கை வெளியிடவேண்டும் என நாம் கோருகிறோம்.

கல்வி உதவித்தொகை என்பது ஒரு மாணவனின் சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதற்கும் அவனுடைய அடிப்படை அறிவை பெருக்கி கொள்வதற்காகவும் கொடுக்கப்படும் ஆதாரமான செயல்பாடு . அதில் மத , மொழி வேறுபாடுகளை புகுத்தி அப்பாவி ஏழை இந்து மாணவர்களின் வாழ்க்கையை சிதைத்து விட வேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வி பயில வரும் மாணவனுக்கு மத ரீதியாக பார்த்து சலுகைகளையும் பெரும்பான்மை மதம் என்பதால் அவனுக்கு உதவிகள் மறுக்கப்படுவதும் மிகுந்த அநீதியானதும், அரசியல் சட்ட்த்திற்கு விரோதமானதும் ஆகும். இது பிற்காலத்தில் சமூக சம் நிலையை பாதித்து பெரும்பாலான இந்து குடும்பங்களை அடியோடு நாசம் செய்து விடும் என்பதால் அரசு தனது ஓட்டு வங்கி அரசியலுக்காக செய்யும் சிறுபான்மை நல அரசியலை விடுத்து நீதியின் பால் நின்று அறத்தை நிலை நாட்ட வேண்டும் .

வறுமைக்கும் தாழ்மைக்கும் உண்டா மதம் ?

”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்ட பாழ்பட்டு நின்ற பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்ததாக நினைத்த அரசுகள், சிறுபான்மை மாணவர்களுக்குபெரும்பான்மை சலுகைகளையும், பெரும்பான்மை மாணவர்களுக்கு ஏமாற்றத்தையும், விரக்தியையும், வேலை  இல்லாத் திண்டாட்டத்தையும் பரிசாக அளிக்கிறார்கள்.பெரும்பான்மையான இந்து சமூக மக்கள் படிக்காமல் ,சாதாரண வேலைக்கு செல்வதற்காகவும், சிறுபான்மையினரை நல்ல அரசு வேலையில் அமர வைப்பதற்க்காகவும் திட்டமிட்டு இப்படியான சதிசெயலை செய்கிறது மத்திய அரசு. இந்நிலை தொடர்ந்தால் இந்துக்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும் தங்களின் முன்னுரிமையை இழப்பதோடு மூன்றாந்தர குடிகளாக மாறி அடிமைப்பட்டு ஒழிந்து போவதற்காகவே இப்படியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கிறது. இத்தனையும் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மேலுள்ள விருப்பத்தினால் அல்ல அப்பாவியான இந்துக்கள் மீதுள்ள வெறுப்பினாலும், மதமாற்றத்திற்கு வசதியாக அவர்கள் அறிவு, தன்மானம் இல்லாமல் இருப்பதற்காகவுமே இப்படி செய்கிறது. இத்தாலிய கிறிஸ்த்தவ சோனியா தலைமையில் உள்ள கான்கிரஸ். இதை எதிர்த்து தமிழகத்தில் 42 நகரங்கள், மாநகரங்களில் பாஜக பெரும் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. 3,00,000 க்கும் மேலான பாஜக தொண்டர்களும், மக்களும் பங்கேற்று இந்த போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி இருக்கிறார், பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் . தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாஜக போராடுவதற்கு மத்திய அரசு இன்னும் செவி சாய்க்க வில்லை. இந்த நிலையும் மாறும்.

11 Replies to “இந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்?”

 1. இதுவும் ஒரு விதமான மதமாற்றத தூண்டி இந்து மதத்தை அழிக்கும் செயல் தான்.

  வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல். இந்துக்கள் இளிச்சவாயர்களா

  முருகானந்தம்
  திருச்சி

 2. எல்லாம் சரி. பார்லியில் பாஜக, இதற்காக இதுவரை குரல் எழுப்பியதாக தெரியவில்லையே? ஈனெனில், இது நம்முடைய அவசரமான & அத்யாவாசியமான விஷயமன்றோ?

 3. இதற்கு பா.ஜ.க., ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறது?
  மற்ற இந்து அமைப்புகளும் அமைதியாக இருப்பது ஏன்? ஒருவேளை காசு வாங்கிட்டாங்களா?

 4. இந்துக்கள் ரோஷம், மானம், போராட்டகுணம், சமுதாய பொருப்பு , விழிப்புணர்வு என்பதை எல்லாம் மறந்து மானம் கெட்டு கேடுகெட்டு ரொம்ப வருடம் ஆகிவிட்டது ! இந்த நாசமாய் போன சமுகத்திற்கு என்றுமே ஒரு ரோஷமோ . எழுச்சியோ இனி வரேவே வராது! இப்படியே அடிமை பட்டு அடிமைபட்டு ஒரு நாள் இந்த உலகை விட்டு மறையும் ! அவ்வளவு மன குமுறல்உடன் இதை பதிகிரேன் !

 5. //கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு இது போன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது”.// அரசு இதற்காக சட்டம் இயற்றினார்களா ? எல்லா மாநிலத்தை சேர்ந்த அரசு உறுப்பினர்களும் இதை வழி மொழிந்தார்களா என்பதும் தெரிந்தால் நலம் ?

  மேலும் இது தொடர்பான விஷயங்களை பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் அந்தந்த மொழிகளில் இடுகிறார்களா என்பதும் கவனிக்க பட வேண்டும். காதும் காதும் வைத்தால் போல் செய்கிறார்கள் என்றால், RTI போன்ற விஷயங்களின் மூலம் வெளிப்படை தன்மை வர வைக்கவேண்டும் .

  முதலில் சக மாணவர்களுக்கே இந்த பிரிவினை தெரிந்தால் இன்றையை தலைமுறை நிச்சயம் விழித்து எழும் !

 6. திரு எஸ். ஜெனார்த்தனன் என்பவரின் மனக்குமுறல் எனக்கும் உள்ளது. நேற்று மாலை கம்யூனிஸ்ட்கள் (அதில் 95% இந்துக்கள்தான்) ஆர்பாட்டம் ஒன்று நடத்தினர். அது எதற்கு தெரியுமா? அமேரிக்கா சிரியாவை தாக்க்போகிறதாம்! இவர்கள் ஊரானை பற்றி கவலை படுவார்கள் ஆனால் இந்தியாவில் நடப்பதை பற்றி கண்டும் காணாமல் இருப்பார்கள். காஷ்மீரில் 4 லட்சம் இந்துக்களை வெளியே துரத்தியது போதாது என்று மீண்டும் அவர்கள் பழைய வேலையை தொடர்கின்றனர் சமீபத்தில் Eid prayer க்கு பிறகு பாகிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தி கொண்டு ஒரு முஸ்லிம் வெறியர் கூட்டம் ஹிந்துகள் வாழும் தெரு வழியாக சென்று அவர்களது வீடுகளை கொளுத்தி கடைகளை கொளுத்தி வாகனங்களை கொளுத்தி அவர்கள் மனதில் ஒரு பீதியை உண்டாக்கி உள்ளனர். இதற்கு அந்த அப்பாவி இந்து செய்த குற்றம் என்ன? பாவம் என்ன? இதை எதிர்த்து ஒரே ஒரு போராட்டம் நடத்தினார்களா இந்த கம்யூனிஸ்ட்கள்? நிச்சயமாக இல்லை. ஏன் என்றால் இந்துக்களுக்கு அதரவு தெரிவித்தால் அது முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு. என்று அர்த்தமாகிவிடும். . கம்யூனிஸ்ட்கள் முஸ்லிம்களின் ஓட்டை இழக்க தயாராக இல்லை. ஆக, இந்துக்களுக்கு ஆதரவு தர (கட்சியில் பெரும்பான்மை இந்துக்களை கொண்ட) கம்யூனிஸ்ட்களே தயாராக இல்லை.

  “Hindu resurgence” is the need of the hour
  If not now, Hindus can’t raise their head ever.

  Our Problems and plights are infinite
  To get rid of them, We should unite.

  It is time Hindus woke up
  Hello, Dear hindus hurry up!

  ஒரு அன்பான வேண்டுகோள்:- இந்த “தமிழ்ஹிந்து” வலைத்தளத்தில் feedback எழுதுவோர் அனைவரும் தவறாமல் அவர்களது இனிய நண்பர்களுக்கு வலை தளத்தின் முகவரியை கொடுத்து தினமும் இவ்வலைதளத்தை பார்க்குமாறு recommend செய்யவேண்டும் .இதில் வரும் கட்டுரைகளை படிக்கும் நமது (சூடு சுரணை இல்லாத) இந்துக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும். ஆகவே தயவு செய்து recommend செய்வீர்களா? இந்த வலை தளத்தை பார்ப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்தால்தான் இந்துக்களிடம் awareness அதிக அளவில் ஏற்படும். இந்துகளிடம் ஒற்றுமை ஏற்படும். நான் அதை செய்கிறேன். நீங்களும் செய்யுங்கள் தயவு கூர்ந்து.

 7. குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 26 ம் தேதி திருச்சி வரவிருக்கிறார்.
  அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள, மற்றும் உதவி செய்ய விரும்புவோர் பதிவு செய்வதற்கான தகவல்கள் கீழே:
  Namaste Ji,

  Please promote our Online Registration Page regarding Shri. Narendra Modi ‘ji’s Trichy visit on 26th September.

  Your contribution highly regarded.

  Also anybody would like to become volunteer for this event please let me know

  In the Service of Nation,

  Manikandan SK
  State Executive – TN BJP IT Cell
  8056123814

  http://www.modiintamilnadu.com

  twitter.com/tamilnadubjp

  https://www.facebook.com/TamilnaduBJP

 8. தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம் ? கேரளாவை கேளுங்க….கம்முனிஸ்ட்ஆட்சியில் மதசிறுபான்மே மகளின் பெண் பிள்ளைகளுக்கு மாதம் ஐயாயிரம் உதவித்தொகை…..பிஸ் ஆண்டிற்கு ஆறாயிரம் .நமக்கோ பீஸ் நாற்பத்துய் ஐந்தைராதிர்க்கு மேல் அனால் உதவிகள் இல்லை.அடிப்படை மார்க்கு அவர்கள் நாற்ப்பதிந்து நமக்குத் தொண்ணூறு எடுத்தாலும் சந்தர்ப்பம் தருவதுகூட அரிது…..வருமான இந்துக்களுக்கு ஆண்டுக்கு நாற்பந்திஇந்தாயிரதிர்க்கு கீழ்மட்டும் என்றலாண்டுக்கு பத்தாயிரம் தருவதாக நிறைய விளம்பரம் செய்துவிட்டு தொண்ணுற்றிஒன்று மார்க்கு எடுத்த இந்து குழந்தைகளை கூட அவாய்ட் செய்து விடுகிரரர்கள்.சிறுபான்மையினர் எல்லாவிதத்திலும் விதிவிலக்கு …..இது என்சொந்த அனுபவம்.மகள் சித்த மெடிசின் படிக்கிறார்கள்.நாங்கள் சாதாரண தையல் தொழில் செய்துவரும் தமிழ் குடும்பம்…….மன்னன்

 9. Not only tamilnadu & kerala. It is prevalent in many states.

  Recently UP Chief minister Akhilesh yadav distributed laptops to students.

  Most of the benefecaries were students from the minority community.

 10. மிக அருமையான பதிவு
  தங்களை போன்றவர்களின் இந்த முயற்சிக்கு எம்பெருமான் ஈசன் துணைநிற்க வேண்டும் என்று இடையறாது பிரார்த்திக்கும்
  க.சி சண்முகசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *