இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01

இந்தியன் முஜாஹிதீன்

im10சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா ஷகீல் அகமது தனது டுவிட்டர் இணயதளத்தில் ஆட்சேபகரமான  கருத்துக்களை எழுதியுள்ளார்.  இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கு வக்காலத்து வாங்குவதாகவும், மறைமுகமாக பயங்கரவாத செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும், 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரமே இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்ற கருத்தே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  இவ்வாறு சிந்திப்பது மோசமான சிந்தனையாகும்.  உண்மையில் ஷகீல் அகமதுவின் கருத்து சரியானதுதானா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

தொடர்ச்சியாகவே காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள், பயங்கரவாத செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமில்லாமல், பயங்கரவாத செயலுக்கும், பயங்கரவாத அமைப்பிற்கும் ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். 2001-ல் சிமி இயக்கத்திற்கு தடை விதித்த போது பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் வந்தது, காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி  பேசிய போது,  ஒரு இயக்கத்தை தடை செய்வதால், பயங்கரவாத்த்தை ஒடுக்க இயலாது என்றார்.  இவரை போலவே தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சரும்,  உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான சல்மான் குர்ஷித் சிமி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உச்ச நீதி மன்றத்தில் சிமி சார்பாக வாதாடிய வக்கீல் ஆவார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திருவாளர் திக் விஜய் சிங் பல்வேறு கால கட்டங்களில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவான கருத்தையே பேசி வருகிறார்.  காங்கிரஸ் கட்சியின் துணைத் தவைரான ராகுல் காந்தி, லஷ்கர்-இ-தொய்பாவை விடமோசமான இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என பேசியுள்ளார்.

im01ஷகீல் அகமது கருத்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரின் செயல்பாடுட்டிற்கு ஆதரவு கொடுப்பதாக அமைந்துள்ளது.  இக் கருத்தின் மூலமாக காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை தங்களுக்கு சாதமாக அறுவடை செய்யலாம் என நினைக்கின்றனர்.  ஒவ்வொறு முறையும் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காகவே சில சலுகைகள் கொடுப்பது அபாயகரமானது என்பதை கூட நினைத்து பார்க்காமல் செயல்படுகிறது.  காங்கிரஸ் கட்சியில் உள்ள சல்மான் குர்ஷித், ஷகீல் அகமது, போன்றவர்களும், திக் விஜய்சிங் போன்ற கிறிஸ்துவர்களும் பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவது இந்த நாட்டின் இறையான்மைக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை சிந்திக்காமல் செயல்படுகிறார்கள்.

இந்தியன் முஜாஹிதீன் உருவான நிகழ்வுகள்

im02இந்தியாவில் உருவாகிய பயங்கரவாத அமைப்பு. ஷகீல் அகமது கூறியது போல் 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உருவான அமைப்பு கிடையாது என்பதை முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.  2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது வெடி குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்தவர்கள்.  இஸ்லாத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் மீது ஜிகாத் தொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே துவக்கப்பட்டது சிமி அமைப்பாகும்.  1977-ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பினர், 1941-ம் ஆண்டு லாகூரில் இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் (Jamaat-e-Islami Hind  )என்ற அமைப்புடன், 1981-ம் ஆண்டு வரை நல்ல நெருக்கத்துடன் செயல்பட்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவிற்கு பாலஸ்தீன அதிபர் யாசா அராபத் விஜயம் செய்த போது, இந்த விஜயத்திற்கு சிமி இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர், சிமி இயக்த்தின் கருத்துக்கு மாறாக ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் இயக்கத்தினர் கருத்து தெரிவித்தார்கள், இந்த கருத்து வேறுபாடு காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் அமைப்பினர், சிமிக்கு மாற்றாக  Students Islamic Organization   என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள்.  ஆகவே அப்போதே  தீவிரவாத மாணவர் அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் இயக்கத்தினருக்க ஏற்பட்டது.

2001-ல் சிமி இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்ட பின்னர், சிமி இயக்கத்தினர்  மறைமுகமாக தங்களது சந்திப்புகளை தொடர்ந்தார்கள், இந்த சந்திப்புகளில்  ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அதாவது ஒரு பிரிவினர் தீவிரவாத நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும்  முகமது இஸ்லாம் என்பவர் இவ்வாறு தீவிரவாத எண்ணங்களை கொண்டதால் ஒரு புதிய இயக்கம் உதயமானது, அது  இந்தியன் முஜாஹிதீன் என்றும் கூறப்பட்டது.  இந்தியாவிலேயே உள்ள தீவிரவாதிகளை கொண்ட ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உருவானது என்றும் பல ஆய்வாளாகள் கூறுகிறர்கள்.  ரோகித் சிங் என்பவர் தனது ஆய்வு கட்டுரையில் The IM hsd mutated into a radical extremist organization, with pan-Indian spread.   என்று குறிப்பிட்டுள்ளார் ( ஆதாரம் Understanding the Indian Mujahideen    by Rohit Singh  page no.2   )  இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் ஏற்படுத்தப்பட்டது என்பதை கூட மறந்து விட்டு ஷகீல் அகமது கருத்து  தெரிவித்துள்ளார்.

im03சிமி இயக்கத்தின் மறு அவதாரம் என்பதால், ஏற்கனவே சிமி இயக்கத்திலிருந்த அப்துல் சுபான் குரேஷி (Abdul Subhan Qureshi ) மற்றும் Riyaz  Ismail  Shahbandri   என்ற இருவரும் இந்தியன் முஜர்ஹிதீன் என்ற அமைப்பை துவக்கியவர்கள்.  தெற்கு குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மற்றும் மகாராஷ்ட்ராவில் இயங்கி வந்த தியோபந்தி மதராஸாக்களில் ( Deobandi madrasas )படித்துக்கொண்டிருந்த காஷ்மீர் மாணவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்களில்  200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வெடி குண்டுகள் கையாளுவது, பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது சம்பந்தமான பயிற்சிகளை பாகிஸ்தானில் பெறுவதற்காக சென்றவர்கள்.  2006-ல் குஜராத்தில் உள்ள மதரஸாவில் 30 மாணவர்கள் மாயமானதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது, ஆனால் தீவிர விசாரணையில் மாயமான 30 மாணவர்களும், பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே பாகிஸ்தான் சென்றவர்கள் என்பது பின்னர்   தெரியவந்த்து.  2009-ம் ஆண்டு வரை பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாக மாறியது.  2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ந் தேதி சூரத்தில் உள்ள   மதரஸாவில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்யப்பட்டவர்கள் கோத்ராவில் நடந்த சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காகவே, லஷ்கர்-இ-தொய்பாவில் மதரஸா மாணவர்களை சேர்க்கும் பொறுப்பை ஏற்று, அவ்வாறு சேருபவர்களை இந்தியாவிலிருந்து பங்களா தேஷ் வழியாக பாகிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்படும் பணியினை செய்தவர்கள்  இந்த கைது சம்பவத்திற்கு பின் இந்தியாவில் உள்ள தியோபந்த் இஸ்லாமியர்களின் முழு ஆதரவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு இருப்பது தெரியவந்தது.  இறுதியாக சிமி இயக்கத்தை உருவாக்க எவ்வாறு ஜமாத்-இ-இஸ்லாமி முக்கியமான காரணியாக இருந்த்தோ அதே போல் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஏற்பட ஜமாத்-இ-இஸ்லாமி காரணமாக அமைந்த்து.

நோக்கம்

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு இருக்கின்ற அதே நோக்கம் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கும் இருந்தது. ஆனால் வார்த்தைகள் மட்டுமே மாறியிருந்தன.  மேற்கத்திய பொருள் சார்ந்த பண்பாடு கொண்ட இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது மட்டுமே முதன்மையான நோக்கமாகும்.  இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால், இந்தியாவில் தியோபந்தி சித்தாந்த்தை செயல்படுத்துவது என்றும், இஸ்லாமியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, தீவிரவாத தன்மையை மேற்கொள்வதும் முக்கியமானதாகும்.  ஆனால் 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசத்தில் லக்னே வாரனாசி, பைசாபாத் போன்ற நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு தாக்குதல்களை நடத்திய பின்னர், இந்தியன் முஜாஹிதீன் வெளியிட்ட தங்களது அறிக்கையில் குறிப்பிட்டது வேறுவிதமானது. அவர்களின் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும் ”   The pathetic conditions of Muslims in India that idol worshippers can kill our brothers, sisters and outrage the dignity of our sisters at any time and place    ”  என்றும் பின்னர் நாகரீகத்தின் மீது தொடுக்கும் யுத்தம் என்றும் தெரிவித்தார்கள்.  இன்னும் ஒரு படி மேலே சென்று அவாகள் தெரிவித்த கருத்துதான் ”     Only Islam has the power to establish a civilize society and this could be only possible in Islamic rule which could be achieved by only one path,  Jihad-Fee-Sabililah (Which means jihad in Islam) ”.  ஆகவே  எந்த வார்த்தைகளை பயன்படுத்தினாலும் இறுதியில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது தான் இறுதி தீர்வு என்ற முறையில் தங்களது செயல்பாடுகளை அமைத்திருந்தார்கள்.

தலைமை

im062001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிமி இயக்கத்திற்கு தடை விதித்த பின்னர், 2008-ம் ஆண்டு மார்சு மாதம் 27ந் தேதி சிமியின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி கைது செய்யப்பட்டார், அதே ஆண்டு ஜீலை மாதம் 28ந் தேதி டெல்லியில் ஜாகீர் நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்த சிமியின் தலைவர் டாக்டர் ஷாகித் பதார் ஜலால் என்பவரும் கைது செய்யப்பட்டார்.  இதன் காரணமாக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே இருந்த்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு கூட்டு நிறுவனராக இருந்த      Riyaz  Ismail  Shahbandri   என்பவரும், அப்துஸ் சுபான் குரேஷி என்பவரும் முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.  ஆனாலும் டெல்லியில் உள்ள காவல் துறையினர் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்கண்ட இருவரும் இருந்தார்கள்.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர்  நாட்டில் நடத்திய  பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்ட நடத்தியவர்கள் என குறிப்பிட்டால், அது இருவரை மட்டுமே குறிக்கும், ஒருவர் ரியாஸ் பட்கல் ( Riyaz Bhatkal ) மற்றெருவர் அப்துல் சுபான் குரேஷி. இதில்    ரியாஸ் பட்கல் என்பவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் வெடி குண்டு தயாரிக்கும் பணியினை கவனித்து கொண்டவன்,  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் சின்னத்தை உருவாக்கி கொடுத்தவன் பீர்பாய் (Peerbhoy ) என்பவன், இவன் சாப்ட்வேர் பொறியாளர்,  பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் முன் அனைத்து மீடியக்களுக்கும் இ-மெயில் மூலம் தகவல்களை அனுப்பியவன்.

im05தென்னக பகுதிகளில் இந்தியன் முஜாஹிதீனுக்கு ஆட்கள் சேர்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கேரளத்தை சார்ந்த அப்துல் சத்தார், நசீர் ( Abdul Sattar alis Saibuddin,  Nasir )என்பவர்கள்,  இவர்கள் இருவரும் கேரளத்தில் உள்ள அப்துல் மதானியுடன் ரகசிய உறவு கொண்டவர்கள்.  1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட பைப் வெடி குண்டை தயாரித்தவன் அப்துல் சத்தார்.  இவர்கள்  குஜராத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு, ரியாஸ் பட்கலுக்காக  அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வெடி குண்டு தயாரித்து கொடுத்தவர்கள்.  பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதற்காக 40 க்கு மேற்பட்டவர்களை அனுப்பி வைத்தவன் பட்கல் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.  இதுவும் எப்போது தெரியவந்த்து என்றால், வடக்கு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி  கேரளத்தில் உள்ள அப்துல் சத்தாரின் மருமகன் என தெரியவந்த்து.

டெல்லியில் ஜாம்யா என்கவுன்டரில் கொல்லப்பட்ட அடிப் அமீன் ( ) என்பவனால் நியமிக்கப்பட்ட முகமது சாதிக் ஷேக் என்பவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் முக்கியமானவன், 2006-ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளியாக பாகிஸ்தானியர்கள் உண்டு என்றாலும், பெரும்பாலனவர்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள ஆஸம்காட் பகுதியில் செயல்பட்ட இந்தியன் முஜாஹிதீன் செல் என்றார்கள், இந்த செல்லில் இருந்த முக்கியமானவன் முகமது சாதிக் ஷேக் . இந்த அமைப்பில் பட்கல் சகோதர்கள் மற்றும் அப்துல் சுபான் குரேஷியை போலவே இன்னும் பலர் அமைப்பாளராக இருந்தார்கள்.  கூலி வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் குரேஷி , தொழிற்சாலையில் எலக்ட்ராணிக் பொறியளாராக 1995-ல் தனது படிப்பை முடித்துவிட்டு, மும்பையில் பல்வேறு கன்னி நிறுவனத்தில் பணியில் புரிந்தவன்.  2001-ல் சிமி அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவன்.  2008-ல் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு திட்டம் வகுத்து செயல்படுத்தியவன்.

ஆயுதங்கள் தொடர்பு மற்றும் பயிற்சி முகாம்கள்

2007-ல் இந்தியாவில் உள்ள காடுகளில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.  இந்த பயிற்சி முகாம்களில், பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்கள், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு ஐ.ஈ.டி வெடி(IED ) குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், மிகப்  பெரிய தாக்குதல்கள் நடத்துவது சம்பந்தமான வழி முறைகளையும், அப்பொழுது பயன்படுத்த வேண்டிய வேதிய பொருள்களான அமோனியம் நைட்ரேட் (Ammonium nitrate ) , ஹைட்ரஜன் பாராக்சைட் ( Hydrogen peroxide)போன்றவற்றை பயன்படுத்துவது சம்பந்தமான பயிற்சி அளிக்கப்பட்டது.  இதன் காரணமாக உள்ளுரில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு வெடி குண்டுகள் தயாரிப்பதிலும்,  உதரி பாகங்களை இணைப்பதிலும் வல்லுநர்களாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் மாறினார்கள்.  இதிலும் குறிப்பாக வெடி குண்டுகளில் பால் பேரிங் மற்றும் இரும்பு துகள்கள் சேர்ப்பதிலும் பயிற்சி பெறுவதற்காக, ஐ.எஸ்.ஐ உதவியுடன் பாகிஸ்தானில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சி அளிப்பதற்காகவே லாகூர் பல்கலைகழகத்தில் கெமிஸ்ட்ரி பேராசிரியாக பணியாற்றிய அசீம் சீமா ( Azam Cheema  ) என்பவன் நியமிக்கப்பட்டார்.  இவர் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்த பயிற்சி அளித்துள்ளார், குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜீ முகமது, ஹஜ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் அடங்கும்.  ஜமாத்-உத்-தாவாவின் கட்டளைப்படி தனது பேராசிரியர் பதவியை ராஜினமா செய்து விட்டு, பைசலாபாத் (Faisalabad ) நகரில் ஒரு புதிய ஆய்வு கூடத்தை நிர்மாணித்து, வெடி குண்டுகள் தயாரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் வெடி குண்டுகளின் மூலப் பொருட்களை கொண்டு இணைக்கும் தொழில் நுடபத்தையும்  பயங்கரவாதிகளுக்கு கற்றுக் கொடுக்க தொடங்கினார்.  இவ்வாறு பயிற்சி பெற்ற இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

im077.3.2008ந் தேதி கைது செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி விசாரனையின் போது தெரிவித்த தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானதாகும்.  2005-ம் ஆண்டு ஜீலை மாதம் 7ந்தேதி லண்டன் மாநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது வெடி குண்டுக்கு பயன்படுத்தபட்ட வேதியியல் பொருள் ப்ராக்சைட் (peroxide  ) என்பதாகும்.   இம் மாதிரியான குண்டுகளை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தங்களது வீட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்தான்.  2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ரியாசூதின் நசார் என்பவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் 15 முதல் 20 பேர்கள் வீட்டிலேயே வெடி குண்டு தயாரிக்கிறார்கள் என்ற தகவலை உறுதி செய்தான்.  இவ்வாறு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் பயிற்சி பெற்றாலும், இன்னும் குறிப்பாக சிறப்பு பயிற்சி கொடுப்பதற்காகவே கேரளத்தில் சில பகுதிகள் உள்ளன, அவை Vagamon, Pavagarh, Vododara   என்றும் உளவு துறையினர் தெரிவித்தார்கள்.

தலைமைக்கு ஏற்ப  உறுப்பினர்களை சேர்பதில், இந்தியன் முஜாஹிதீன் சிரமப்படவில்லை, ஏன் என்றால் உஜ்ஜயின், ஆஸம்காட், ஷஹகரன்புர் மற்றும் பல இடங்களில் செயல்படும் தியோபந்தி மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த மதரஸாக்களுக்கு நிதி உதவி செய்வது சவுதி அரேபியா என்றும், இவர்களின் நிதி உதவியால் உலகம் முழுவதும், 1,500 மசூதிகளும், 10,000க்கு மேற்பட்ட மதரஸாக்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளது.  நிதி உதவி அளிப்பது மட்டுமில்லாமல், இமாம்களுக்கு பயிற்சி கொடுப்பதும்,  செய்தி துறையில் ஆதிக்கம் செலுத்துவது, வாகாபி இலக்கியங்கள் உருவாக்குவது, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களில் வாகாபி இஸ்லாமிய பயிற்சியாளர்கள நியமிக்க வைப்பது போன்ற செயல்பாடுகளையும் செய்து வருகிறது.  இது மட்டுமில்லாமல் பெட்ரேலிய பொருட்களை கொண்டும் தங்களது செயல்பாடுகளை ஊக்குவிப்பதும் சவுதியின் பணியாகும். 1970-ல் பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்ட போது, அதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்த்து சவுதி அரேபியா . இவ்வாறு அதிக அளவில் ஆதிக்க  சக்தியாக திகழும் தியோபந்தி மதரஸாக்கள் இந்தியாவிலும் உருவானது.

im08ஷா வாலியுல்லா (Shah Waliullah )என்பவரால் 1762-ல் இந்தியாவில் தியோபான்ட் பள்ளிகள்(Deoband Schools ) மற்றும் ஹகி-இ-ஹதீத்( Ahl-e-Hadith) பள்ளிகளும் துவங்கினார்  உத்திர பிரதேசத்தில் உள்ள ஷாரன்புர் நகரில்  முகமது அபித் உசைன்(Mohammad Abid Husayn )  என்பவரால் 1867-ல் தியாபந்த மதரஸா ஏற்படுத்தப்பட்டது.  1879-ல் தியாபந்த மதரஸாவுடன் தார்-உல்-உலும் என்ற அமைப்பும் இணைந்து கொண்டது.  இவ்வாறு உருவாக்கப்பட்ட தியாபாந்தி வாஹாபியின் சித்தாந்தங்கள் கட்டாயமாக இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டும் என இமாம்கள் உத்திரவிட்டார்கள்.  முதலில் மதத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மதத்திற்கு பின்னர் தான் நாட்டிற்கு கட்டுப்பட வேண்டும்.  இரண்டாவது உம்மாக்களுக்கு கீழ்படிய வேண்டும்,  மூன்றாவதாக இஸ்லாமியர்களின் நலனை காக்க ஜிகாத் தொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு கட்டுப்பட வேண்டும்.  இதன் அடிப்படையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தியோபந்தி மதரஸாக்களுக்கும், Mawdudi  பள்ளிக்கும் விசுவசமாகவே நடந்தார்கள்.   இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பணியே தீவிரவாத இஸ்லாத்தை உருவாக்குவது,  இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் பரவ வேண்டும் என்ற நோக்கமே முதன்மையாக இருந்த்து.

இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள்

11.7.2006ந் தேதி மும்பையில் ரயிலில் தொடர் குண்டு வெடிப்பு 216 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 700க்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள். 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசத்தில் லக்னே, வாரனாசி, பைசாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதி மன்ற வளாகத்தின் வெளியே குண்டு வெடிப்பு, 14 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 50க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.  1.1.2008ந் தேதி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த ராம்புர் நகரில் வெடி குண்டு தாக்குதல் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 8 பேர்கள் கொல்லப்பட்டார்கள், பாதுகாப்பு படையினர் ஆறு பேர்கள் படுகாயமடைந்தார்கள். 13.5.2008ந் தேதி ஜெய்புர் கடைவீதியில் வெடி குண்டு வெடித்த்தில் 60 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 200க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். 25.7.2008ந் தேதி பெங்களுரில் எட்டு இடங்களில் வெடித்த குண்டுகளின் காரணமாக 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தாலும், இருவர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்.  26.7.2008ந் தேதி அகமதாபாத் நகரில் 18 இடங்களில் வைத்த குண்டுகள் வெடித்ததில் 38 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 130க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதை போலவே சூரத்திலும், டெல்லியிலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் என்பது முழு உண்மையாகும்.  இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்களில், தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கு சவால் விடும் வகையில் அமைந்துவிடும், ஆனால் இந்தியன் முஜாஹதீன் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ஊடகங்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல்களை கொடுத்து விட்டு தாக்குதல்களை நடத்தினார்கள்.  எனவே தாக்குதல் நடப்பதற்கு முன்பும், நடந்த பின்னரும் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் உள்ள முக்கியமானவர்கள்

இந்த அமைப்பில் உள்ள அனைவரும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள்.  இவர்கள் 2006லிருந்து இன்று வரை நாட்டில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்.  அப்துல் சுபான் குரேஷி, இவன் சப்ட்வேர் என்ஜினியர், வெடி குண்டு தயாரிப்பில்  திறமையானவன். ரியாஸ் இஸ்மாயில் ஷாபந்திரி (Riyaz Ismail Shahbandri ) , முப்தி அபு பஸிர் Mufti Abu Bashir என்பவன் சிமிக்கும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் தொடர்பாளர், சப்தார் நகோரி கைது செய்யப்பட்டவன், க்யுமைதீன் கப்பாடியா Qayamuddin Kapadia வதோராவில் உள்ள வியாபாரி,  சாஜித் மன்சூரி  Sajid Mansuri , உஸ்மான் அகர்பட்டிவாலா Usman Agarbattiwala, ஆலம்ஜிப் அப்ரிதி Alamzeb Afridi, அப்துல் ரஸாக் மன்சூரி, முஜிப் ஷேக், சாகீத் ஷேக்,அமில் பர்வோஸ்  போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.  இவர்கள் அனைவரும் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள்.

வெளி நாட்டு தொடர்பு மற்றும் நிதி உதவி

எவ்வாறு சிமி இயக்கத்திற்கு வெளிநாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி அளித்தனரோ அதே அமைப்பினர் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் நிதி உதவி செய்தார்கள்.  ரியாத்தில் உள்ள World Assembly of Muslim Youth   என்ற அமைப்பும், குவைத்தில் உள்ள  International Islamic Federation of Students Organisation  அமைப்பினரும் உதவி செய்த்துடன், சிக்காகோவில் உள்ள கன்சலடிவ் கமிட்டி ஆப் இந்தியன் முஸ்லிம் அமைப்பும் ( Consultative committee of Indian Muslims ) அதிக அளவில் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள்.  சவுதி அரேபியாவில் உள்ள சிமி ஆதரவாளர்கள்,  இந்தியாவில் உள்ள குறிப்பிட தக்க இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளார்கள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கேரளத்தை மையமாக கொண்டு செயல்படும் நேஷனல் டெமாக்கரடிக் ஃப்ரண்ட் மற்றும் இஸ்லாமிக் யுத சென்டர் அமைப்பும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.   இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு தேவையான பயிற்சிகளும், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் வாங்க தேவையான நிதி உதவிக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும் இவர்களின் முக்கிய பணியாகும்.

im09பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ தான் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த்தால், அவர்களுடனான நெருக்கம் அதிக அளவில் இருந்த்து.  சிமி இயக்கத்தின் பொறுப்பாளரான சப்தார் நகோரி என்பவர் பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றே கூறி வந்தார்.  ஆனால் 1996-1997-ல் Kashmir Awareness Bureau என்ற அமைப்பு நடத்திய கூட்டங்களில் நகோரி கலந்து கொண்டார், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹூரியத் மாநாட்டு கட்சியின் மீர்வாஸ் உமர் பரூக்? ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் பொறுப்பாளர் யாசின் மாலிக், போன்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.  புது டெல்லியில் பாகிஸ்தான் தூதர் ரியாஸ் கோக்கர் என்பவர் கொடுத்த இப்தார் விருந்தில் நகோரி கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியில் சபி நாசன் (Saif Nachan  ) அப்துல் சுபான் குரேஷி ஆகியோர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சிமி இயக்கத்தினர் ஐ.எஸ்.ஐயுடன்  உறவு கொள்ள துவங்கியதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.   ஐ.எஸ்.ஐயை போலவே பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புனருடனும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  நேபாள், பங்களா தேஷ் நாடுகளிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்புடனும் உறவு கொண்டார்கள்.  ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் துணையோடு, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயினர்.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு அதிக அளவில் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பு என்றால் அது லஷ்கர்-இ-தொய்பாவுடன் மட்மே.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த சர்பிரிஷ் நவாஸ் (Sarfaraz Nawaz ) என்பவனை பெங்களுரில் கைது செய்யப்பட்டான். இவனிடம் விசாரனை செய்த போது,  லஷ்கர்-இ-தொய்பாவின் நேரடி கட்டளையின் படி பெங்களுர் குண்டு வெடிப்பு நிகழந்த்து, இத்திட்டத்திற்காகவே நஸிர் (Nazeer )என்பவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவன்  விசாரனையின் போது, 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓமன் நாட்டில் கைது செய்யப்பட்ட மஸ்காட் தொழிலதிபர் அலி அப்துல்-அஸிஸ் அல்-ஹொட்டி (AliAbdul Aziz al-Hooti )என்பவன் இந்தியாவில் உள்ள சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு நிதி உதவி செய்வதும், மேற்படி நிதியானது சர்பிரிஷ் நவாஸ் மூலகமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்த்து.  2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 மற்றும் 17ந் தேதி  ஹொட்டி மும்பைக்கு விஜயம் செய்திருப்பதாகவும்,  2007-ல் பஃகீம் அன்சாரி மூலம் ஒரு கப்பல் லஷ்கர் அமைப்பினருக்கு அனுப்பியவனும் இந்த ஹொட்டி தான் என்பதும்,  ராம்புர் மத்திய ரிசர்வ் படையின் மீது 1.1.2008ந் தேதி தாக்குதல் நடத்தியவன் பஃகீம் அன்சாரி( Fahim Ansari) என்பதும், இவனை உத்திர பிரதேச காவல் துறையினர் பின்னர் கைது செய்த போது கிடைத்த தகவல் ஆகும்.  மஸ்காட்டில் பணியில் இருந்த போது அங்குள்ள மசூதியில் தொடர்ச்சியாக ஹொட்டியை சர்பிரிஸ் நவாஸ் ஜிகாதி நன்பர்கள் மூலமாக சந்திப்பு நடந்து வந்துள்ளது.

ஆகவே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முயற்சியின் காரணமாக முழுவதும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை கொண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற நீன்ட நாள் சிந்தனையில் உருவானதுதான இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பாகும்.  2001-ல் சிமி மீது மத்திய அரசு தடை விதித்தவுடன், அந்த அமைப்பினரில் ஜிகாத் சிந்தனையை தூண்டி அதன் மூலம் உருவான அமைப்பாகும்.  இவர்களை பற்றிய தகவல்கள் இன்னும் நிறை இருப்பதால் பின்னர் ஒரு காலக் கட்டத்தில் விரிவாக அலசுவோம்.

அடுத்த கட்டுரையில் லஷ்கர்-இ-தொய்பாவைப் பற்றி பார்போம்.

 

14 Replies to “இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01”

 1. இந்தியாவின் மைய அரசுக்கே ஆபத்து விளைவிக்கும் மற்றும் சவால் விடும் போக்கில் வன்முறைக்கு வித்திடும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு சாமரம் வீசும் சல்மான் குர்ஷித் போன்ற தேசவிரோத சக்திகளை உடன் களைய வேண்டும். காங்கிரஸ் மத்தியில் பதவியில் தொடர்வது நம் நாட்டுக்கே ஆபத்து விளைவிக்கும். காங்கிரஸ் திருந்தாது.எனவே காங்கிரசை ஒழிப்போம். சிறந்த கட்டுரையை தொகுத்து வழங்கிய சரவணன் அவர்களுக்கு நமது நன்றிகள்.

 2. சித்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகளை பற்றி எழுதுங்கள் சார்

 3. சமிபத்தில் ஆந்திர புத்தூரில் கைது செய்யப்பட பயங்கர வாதிகள் தாங்கள் இரும்பு வியாபாரம் செய்வதாக கூறி வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். இஸ்லாமியரக்ளுக்கு வாடகைக்கு வீடு விடுவதற்கு முன்பு வீட்டு உரிமையாளர்கள் நன்கு யோசிக்க வேண்டும்.

 4. Irony is, still people, even educated people, think that BJP is communal and Congress is Secular. The current situation of the country is solely because of Congress’s divisive mentality and minority appeasement and still peoply call BJP communical. Not sure how and why this falsehood has been spread. If BJP is communal, Congress is 1000 times more communal. When will our countrymen understand this truth?

 5. —————————-முஸ்லிம் “படவாக்கள்” விடுவிக்கும் FATWA கள்————————

  Darul Uloom Deoband சமீபத்தில் விடுவித்த fatwa என்னவென்றால் “Shias are not muslims “. இதற்கு முன் வெளியிட்ட fatwas கீழே விலாவரியாகப் பார்ப்போம்.

  1. Women cannot preach or deliver sermons .
  2. முஸ்லிம் பெண்கள் நீதிபதிகளாக பணியாற்ற கூடாது..
  3. 13 வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் bicycle ஓட்ட கூடாது.
  4. அவர்கள் கார் ஓட்டகூடாது.
  5. அவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
  6. இருபாலர் படிக்கும் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் சேரக் கூடாது.
  7. செல்போனில் 3 முறை தலாக் சொன்னாலும் அது செல்லும்.
  8. முஸ்லிம்கள் (ஆண் மற்றும் பெண்) வங்கிகளில் பணியாற்றக் கூடாது.
  9. சினிமாக்களில் (ஆண் மற்றும் பெண்) நடிக்கக் கூடாது.
  10. ரத்த தானம் மற்றும் உறுப்பு தானம் செய்யக் கூடாது
  11. Photography ஒரு பாவச் செயல் ஆகும்.
  12. பிறந்த நாள் கொண்டாடக் கூடாது.
  13. Body Scan செய்ய அனுமதியில்லை.
  14. Life Insurance ஒரு illegal தொழில் ஆகும்.
  15. LAST BUT NOT LEAST : முகமது நபியை நிந்தனை செய்வோர் அனைவரும் கொல்லப் படவேண்டும் .

  Darul Uloom Deoband ல் கற்று தரப்படும் subjects 3 தான். அவை. 1. இஸ்லாமிய சட்டம் 2. Hadith 3. குர்- ஆன ஆகியவையே.
  முஸ்லிம்கள் அடிக்கடி “பிதற்றும்” சச்சார் கமிட்டியின் அறிக்கையில் “மதரசா சீர்திருத்த சட்டம்” கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதனை மத்திய அரசு செய்ய முனைந்தபோது எதிர்ப்பு குரல் எழுந்தது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைக்கு நேர்ந்த கதையை பார்த்தீர்களா? Mainstream school கள் விஞ்ஞானி டாக்டர் பொறியாளர் என்று உருவாக்கி அனுப்பினால் இந்த Darul Uloom Deoband ஜிகாதிகளையும் suicide bomber களையும் உருவாக்கி அனுப்புகிறது.இப்போது புரிகிறதா நாட்டில் எப்படி குண்டு வெடிப்பு படுகொலை ஆகியவை நடக்கின்றன என்று? இது நம் நாட்டில் மட்டும் நடக்கவில்லை. உலகம் பூராவும் இந்த கலகம் நடக்கிறது. செய்தித்தாள்களை புரட்டும்போது சினிமா செய்திகளை படித்து விட்டு வீசி எறந்து விடாதீர்கள் உலகச் செய்திகளையும் படியுங்கள். அங்கே குண்டு வெடித்தது இங்கே குண்டு வெடித்தது என்று தினமும் படிக்கலாம்.

 6. நாம் விழிப்புடன் செயல்படவேண்டும் ; இந்த மாதிரி நேரங்களில் நாம் சிறந்த காவல் துறையையும் சிறந்த இராணுவத்தையும் பெற்றிருகிரோம் என்று ஆறுதல் பெறவேண்டியிருகிறது. இந்த பயங்கரவாதிகளால் மொத்த சமுதயதினருகும் கேடு.

 7. ————————முஸ்லிம் மூடநம்பிக்கைகளின் முடை நாற்றம் ————————–

  நிச்சயமாக “இறுதிநாள்” வந்தே தீரும். அதில் சந்தேகமில்லை ( 49 : 59 ) இறுதிநாள் நெருங்கிவிட்டது என்று சில அடையாளங்கள் உள்ளன. 1) தஜ்ஜால் வருவது அவன் ஒற்றை கண்ணன். 2) சூரியன் மேற்கில் உதிக்கும் 3) முமின் களின் உயிரை பறிக்க தூய்மையான காற்றை அல்லா அனுப்புவான். 4) சூர் ஊதப்படும் இது வெள்ளிகிழமை ஏற்படும். பூமியிலுள்ள அனைவரும் மயங்கி பின்னர் மரணித்து விடுவார்கள். மு8துகு தண்டின் கடைசி ஒரு சிறு எலும்பைத் தவிர அணைத்து பகுதிகளையும் பூமி தின்றுவிடும். அல்லா வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான் . அழிந்த உடல்கள் அனைத்தும் வளர்ந்து விடும். மக்கள் தம் மண்ணறை களிலிருந்து செருப்பு இல்லாமல் நிர்வாணமாக விருத்தசெதனம்செஇயப்படாதவர்கலாக் வருவார்கள் இதன் பின்னர் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு காபிர்கள் தலைகீழாக நடந்து வருவார்கள் (அதாவது தலை கீழே கால் மேலே). அந்த நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். மக்கள் அவரவர் பூமியில் செய்த செயல்களின் அடிப்படையில் வேர்வை வெளியிடுவார்கள். அல்லாவின் நிழலைத் தவிர வேறு நிழலே இருக்காது.அவனின் நிழல் கீழே சிலர் நிழல் கொடுக்கப் படுவார்கள். (ஒரு சந்தேகம்:::::அல்லா ஒரு உருவமற்றவர் எனும்போது அவருக்கு நிழல் எப்படி தோன்றும்?) அந்நாளில் மக்கள் கடும் தாகத்தில் இருப்பார்கள். நபி அவர்கள் தண்ணீர் தடாகத்திற்கு வந்து நீர் அருந்துவார்கள். அந்த நீர் பாலை விட வெண்மை.தேனை விட நல்ல சுவை. கற்பூர மனத்தை விட நல்ல நறுமணம். அந்த தண்ணீர் பாத்திரங்கள் நட்சத்திரங்களை போன்ற அளவில் இருக்கும். (ஒரு சந்தேகம்:::: ஒரு நட்சத்திரம் எவ்வளவு பெரியது என்று நபிக்கு தெரியுமா? அவருக்கு science பற்றி ஏதாவது தெரியுமா?)

  அந்த மறுமை நாளில் நன்மை தீமை கொண்டே தீர்ப்பு வழங்கப்படும். “சிராத்” எனும் பாலம் முடியை விட மெல்லியதாகவும் வாளை விட கூர்மையானதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட பாலத்தின் மீது மக்கள் அவரவர் பூமியில் செய்த செயல்களுக்கு ஏற்ப கடந்து செல்வர். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய சங்கிலிகள் மனிதர்களை பிடித்து நரகில் தள்ளிவிடும். இறை மறுப்பாளர்கள் (அதாவது வீரமணி கருணாநிதி போன்றவர்கள்) நிரந்தரமாக நரகத்திலேயே என்றும் இருப்பார்கள். இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பாலத்தில் நிற்பார்கள். யார் ஒருவர் தனது சகோதரனுக்கு துரோகம் செய்தாரோ அவர் தனது சகோதரனுக்கு நியாயம் செய்யும் வரை சொர்க்கம் செல்லாமுடியாது. (ஔரங்கஷீப் தான் அரியணை ஏறவேண்டும் என்பதற்காக தன சகோதரர்களை கொன்றான் அல்லவா. அவன் அந்த பாலத்தில் மாட்டி கொண்டிருப்பான். அவன் அவர்களுக்கு என்ன நியாயம் செய்து சொர்கத்திற்கு போனானோ அல்லது நரகத்திற்கு போனானோ. நரகத்திற்கு போயிருந்தால் நரகவாசி பெரியாரை கேட்டால் விவரம் தெரியும்.)

  எல்லாரும் தீர்ப்பு முடிந்து அவரவர் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் நுழைந்த பின் ஒரு ஆடு வெட்டப்படும் (அங்கே போயும் அந்த ஆடு வெட்டும் வேலை நிற்க வில்லையா? ஆமாம் அந்த ஆட்டை அல்லாவே வெட்டுவாரா? ஆம், உண்மையிலேயே அவர் மிகவும் கருணை மிக்க கடவுள்தான்!) இந்த ஆடு வெட்டும் நிகழ்ச்சியை சொர்க்கம் நரகம் சென்ற மக்கள் அனைவரும் பார்ப்பார்கள். (அனைவரும் என்றால் கோடி கணக்கான பேர். பார்த்து ரசிக்க CCTV வை அல்லா சவுண்ட் சர்வீஸ் காரனிடம் சொல்லி நல்ல ஏற்பாடு செய்திருப்பார் என்று நம்புவோமாக) சொர்க்கம் சென்றவர்களுக்கு என்றுமே மரணம் இல்லையாம் (ஆதாரம்:::: “சொர்க்க தோழி” என்ற முஸ்லிம்களின் மாதாந்திர இதழ் டிசம்பர் 2011)

  அறிவுள்ள அணைத்து மத மக்களே! இதை கவனமாக படியுங்கள் இதில் கூறப்பட்டுள்ளவை உங்களுடைய அறிவுக்கு ஏற்புடையதா என்று யோசியுங்கள்.
  அவர்கள் (முஸ்லிம்கள்) எங்கள் மதம் தான் சிறந்தது எங்கள் மதம் தன சிறந்தது என்று சதா எந்நேரமும் உளறி கொட்டுகிறார்கள். இதை படித்த பின்னரும் முஸ்லிம் மதம் நல்ல மதம் என்ற கருத்தை ஏற்று கொள்வீர்களா? கம்யூனிஸ்ட்கள் கண்டிப்பாக ஏற்றுகொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் ஒட்டு போய்விடுமே!

 8. சொர்க்கத்தில் அல்லா முஸ்லீம்களுக்கு 72 கன்னிப் பெண்களைக் கொடுப்பாராம். அப்பெண்கள் கன்னித்தன்மை மீண்டும் தோன்றிவிடுமாம். என்ன முட்டாள்தனம். சரி பெண்களுக்கு என்ன கொடுப்பார் ? 72 பொலி காளை போன்ற ஆண்களா ? ஆண்களுக்கு கோரீஸ் பெண்கள் 72 என்றால் பெண்களுக்கு காம சுவை அணுபவிக்க ஆண்கள் அளிக்கப்படவேண்டுமே? விபரம் குரானில் இல்லை.அலிசேனா ” முகம்மது ஒரு மனநோயாளி.எனவேதான் இப்படி அபத்தமான உளறிக் கொண்டியிருக்கின்றார். ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரும் இதே கருத்தைச் சொல்லியுள்ளார். செங்கொடி இறையில்லா இஸ்லாம் பகடு போன்ற வலைதளங்களைப் படித்தால் அரேபிய முட்டாள்தனங்களைப் பற்றி ஆயிரம் தகவல்கள் கிடைக்கும். வெளியிடுங்கள்.

 9. “OHM ” என்பது மின்தடையை அளக்க கூறும் ஒரு அறிவியல் சொல்.
  “ஓம்” என்பது வாழ்க்கை கஷ்டங்களை அகற்ற கூறும் ஒரு மந்திரச் சொல்.
  “Secularism ” என்பது அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து தப்பிக்க கூறும் ஒரு தந்திரச் சொல். ஆம், சகோதரர்களே! மாட்டு தீவன ஊழலில் மாட்டிகொண்ட பார் போற்றும் லல்லுவின் பாரியாள் (அதாவது wife ) “இது மதவாதிகளின் சதிச் செயல்” என்று தன திருவாயை திறந்து கூறியிருக்கிறார். இவர்கள் வீட்டில் Mixie , Wet grinder ஏதாவது repair ஆகிவிட்டாலும் கூட “இ(ந)து மதவாதிகளின் திட்டமிட்ட சதி வேலை. இதற்கு RSS பின்னணியும் உள்ளது” என்று ஒப்பாரி வைப்பார்கள். நான் பள்ளியில் படித்த ஒரு “ஆடு ஓநாய் கதை” எனக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது ஒரு ஓடையில் ஓநாய் மேல்பகுதியில் நீர் அருந்துகிறது. ஆடு கீழ்பகுதியில் அருந்துகிறது. அந்த ஓநாய் “ஏய், ஆடே! ஏன் தண்ணீரை கலக்கி கலக்கி விடுகிறாய்? அந்த அசுத்த நீரை நான் குடிக்க வேண்டியுள்ளது” என்றதாம். அதற்கு ஆடு ” ஓநாய் அண்ணா! நீங்கள் மேல்பகுதியில் குடிக்கிறீர்கள். நீங்கள் குடித்த தண்ணீர்தான் என்னிடம் வருகிறது. அதைதான் நான் குடிக்கிறேன்.நான் எப்படி நீரை கலக்க முடியும்? என்றதாம். “நீ கலக்காவிட்டால் உன் முன்னோர்கள் கலக்கிவிட்டிருப்பார்கள்” என்று வீண் பழி போட்டதாம். பிஜேபி கட்சி என்ற ஆட்டிடமும் RSS என்ற முன்னோர்களிடமும் secular parties எனப்படும் ஓநாய்கள் ஆடாத ஆட்டம் ஆடுகின்றன. ஆட்டம் பாட்டம் எல்லாம் அடுத்த வருடம் “மே” க்கு பிறகு அம்பேல் ஆகிவிடும்.
  பாராளுமன்றத்தை தகர்த்தவன் யார் என்று தெரியும். அசோகா ஹோட்டலில் குண்டு வைத்தவன் யார் என்று தெரியும். மும்பையில் தொடர் குண்டு வைத்தவன் யார் என்று தெரியும்.காஷ்மீரில் தினம் குண்டு வைப்பவன் யார் என்று தெரியும். கேரளாவில் ஒரு கல்லூரியின் (கிறிஸ்தவ) lecturer ன் கைகளை வெட்டியவன் யார் என்று தெரியும். இவ்வளவு தெரிந்தும் முஸ்லிம்களை அப்பாவிகள் என்று கூறுகிறார்கள். இவர்கள் நம் நாட்டில் மட்டும் தீவிரவாத செயல்களை செய்யவில்லை. உலகம் பூராவும் (பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், ஈராக், ஈரான், என்று எல்லா இடங்களிலும்) நடத்துகின்றனர். ஈராக்கில் கடந்த வாரத்தில் மட்டும் 42 தீவிரவாத குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 11.10.13) இங்கு தீவிரவாதிகளை கைது செய்தால் கம்யூனிஸ்ட்கள் ரத்தம் கொதிக்கின்றனர். சீனாவிலுள்ள XINJIANG வில் 130 பேர் JIHAD பரப்பியதற்காக கைது செய்யப்பட்டனர். மேலும் online மூலம் வதந்திகளை பரப்பியதற்கு 256 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.(ஆதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 10.10.13) இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் என்ன சொல்லபோகிறார்கள்? மேலும் அப்துல் அலீம் (83) என்பவன் 3 முறை வங்காள தேச MP ஆக இருந்தவன். இவன் 1971 ல் பாகிஸ்தான் படை வீரர்களை Korai Kadipur என்ற கிராமத்திற்கு கூட்டி சென்று அங்கிருந்த 372 இந்துக்களை இரண்டு line ல் நிற்கவைத்து சுட்டு கொல்ல உத்தரவிட்டான். அப்பாவி 372 இந்துக்கள் இறந்தனர். அவர்கள் செய்த பாவம்தான் என்ன? நிலைமை இப்படி இருக்க முஸ்லிம்களை ஏதுமறியாத அப்பாவிகள் என்று கூறுகின்றனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் என்பவர் முஸ்லிம்களை பார்த்து “அரசாங்கத்திடம் நீங்கள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தாதீர்கள்.” என்று கூறுகிறான். இவனைப் போல ஒரு நல்லவனை துனியாவில் துருவி துருவி தேடினாலும் கிடைக்கவே மாட்டார்கள். கேவலம் முஸ்லிம்களின் ஓட்டுக்காக நாட்டை குடிச்சுவராக்க எதையும் செய்ய துணியும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் துரோகிகளை பற்றி என்ன சொல்வது? இவர்கள் மதச் சார்பின்மைவாதிகளா அல்லது மனச்சாட்சி இன்மைவாதிகளா? இப்படிப்பட்ட முஸ்லிம்களுடன் தேர்தல் கூட்டு வைத்துகொண்டு இவர்களிருவரும் மதசார்பின்மை பேசுவார்கள். முஸ்லிம் கட்சிகளோடு தேர்தலில் கூட்டு வைப்பது தப்பில்லை என்பார்கள். ஆதாயம் வருகிறது என்றால் தான் பெற்ற மகளையும் கூட்டி வைப்பது தப்பில்லை என்று இந்த 2 கட்சிகாரர்கள் கூறுவார்கள். மானம் ஈனம் சூடு சொரணை அற்றவர்கள்.
  “தி இந்து” என்று மதப்பெயரை தன பத்திரிக்கைக்கு வைத்துகொண்டு மோடியை எந்நேரமும் “மதவாதி மதவாதி” என்று கூறும் அதன் Editor க்கு “சீதபேதி” வந்து சீக்கிரம் “ஊர்” போய் சேரட்டும். மோடி பொது கூட்டங்களில் உரையாற்றும் போது நாட்டுக்கு வளர்ச்சி ஒன்றே அடிநாதம் என்று எண்ணி வளர்ச்சி பற்றி மட்டும் பேசுகிறார். எந்த மதத்தை பற்றியும் பேசுவதில்லை. ஆனால் மக்களிடம் பிரிவினை பேதம் செய்வதையே முக்கிய குறிகோளாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தன கைக்கு ஒரு Mike கிடைத்துவிட்டால் போதும். மதவாதம் மதவாதம் என்று பிடிவாதமாய் பேசுகின்றனர். ஒருவேளை அவர்களுக்கு பித்தவாதம் தலைக்கு ஏறிவிட்டதோ? இவர்கள் வயிறுக்கு அரிசி சாதம் சாபிடுகிரார்களா அல்லது வேறு ஏதேனும் சாபிடுகிரார்களா? இவர்களின் கால் கைக்கு மட்டுமின்றி வாய்க்கும் பக்கவாதம் வந்தால்தான் இப்படி கண்டபடி குதர்க்கவாதம் செய்யமாட்டார்கள். அதற்கு அந்த நான்கு வேதம் படைத்த அந்த நாதன்தான் அருள் புரியவேண்டும் என்று அவன் பொற்பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
  இந்து மதத்தை கேலி பேசுவார்கள். கிறிஸ்தவர்களின் மதப் பிரசாரத்திற்கு தங்களின் சொந்த இடத்தை வாடகைக்கு விடுவார்கள். முஸ்லிம் பண்டிகைக்கு குல்லாய் அணிந்து கொண்டு கஞ்சி குடித்து விட்டு வாழ்த்து சொல்வார்கள். இதனை “மதச்சார்பின்மை” என்று ஓங்கி சொல்வார்கள். இந்த பச்சை பொய்க்காக இரண்டு பிரியாணி பொட்டலம் extra வாக வீட்டுக்கு வாங்கி செல்வார்கள்.
  பொய் குற்றசாட்டிற்கு இன்னுமொரு example ஐ தருகிறேன். 3 நாட்களுக்குமுன் தந்தி டிவியில் “ஆயுத எழுத்து” நிகழ்ச்சியில் தெலுங்கானா குறித்த விவாதத்தில்
  “”””அந்த வகையில் பார்த்தீர்களானால்””’ என்ற சொற்றொடர் புகழ் காங்கிரஸ் MLA விஜயதாரணி பங்கு பெற்றார். ஆந்திராவை பிரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு பின்னர் மக்களை தூண்டிவிடும் வேலையை “”மதவாத கட்சி””” பிஜேபி செய்து வருகிறது என்று கூறுகிறார். ஆந்திராவில் பிஜேபி அவ்வளவு பெரிய பலமான கட்சி இல்லை, பிஜேபி தூண்டி இவ்வளவு நாள் இத்தனை பெரிய போராட்டம் நடக்கிறது என்றால் அதை யாராவது நம்புவார்களா? பல்லம் ராஜி ராஜினாமா, காங்கிரஸ் MLA , MP க்கள் ராஜினாமா செய்ததும் பிஜேபி யின் தூண்டுதல் தான் காரணமா? மின் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் பிஜேபி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களா? பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும் என்ற common sense கூட இல்லாத இவர் ஒரு சட்ட மன்ற உறுப்பினராம்! விவாத நிகழ்ச்சிக்கு வரும்போது மூளையை அடகு கடையில் வைத்துவிட்டு வரக்கூடாது. “அரை லூசுகளை” எல்லாம் இனிமேல் அழைக்க கூடாது என்று “தந்தி டிவியினர் முடிவெடுக்க வேண்டும். இவரை MLA வாக ஆக்கிய விளவங்கோடு நல்லா வெளங்கிடும்.

 10. HONESTMAN ! மதசார்பின்மை பேசும் ஓட்டு பொறுக்கிகளுக்கு சவுக்கடி கொடுத்துவிட்டிர்கள் ! ஆபிரகாம் மதத்தின் யோக்கியதையை நாற அடித்த , தங்கள் கருத்துக்கள் சத்தியமானவை ! இறை மறுப்பாளர்கள் நரகம் -அப்போ ஈவேரா அங்கே தான் இருப்பார் .

 11. கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் தனியார் பஸ்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்பார், கிடைக்கவேண்டியது கிடைத்ததும் அமைதியாகி விடுவார், சிமெண்ட் ஆலைகள் அரசுடைமை ஆக்கப்படும் என்பார், வரும்படி வந்தவுடன் நழுவிவிடுவார். உர ஆலைகள் எனும்போதே வருமானத்தைப் பார்த்துவிடுவார். அதுபோலத்தான் முஸ்லிம் பாசமும், கருணாநிதி மட்டுமல்ல எல்லா அரசியல்வாதிகளுமே அப்படித்தான். இந்துக்கள் ஓட்டு எப்படியும் கிடைத்துவிடும், மற்ற மதத்தினரைத்தானே தாஜா செய்யவேண்டும், இந்துக்கள் ஒன்றுபட்டால் எல்லா அரசியல்வாதியும் நம்மிடம் பணிவர், நம்மிடம்தான் 73% வோட்டுக்கள் இருக்கிறதே. இந்துக்கள் ஒற்றுமை கானல் நீரோ?

 12. காங்கிரஸ் கட்சியை அழிக்கப் பாடுபடும் விஜயதாரணி போன்ற பெண்மணிகளை விமரிசிக்க வேண்டாம். இவரைப் போன்றவர்கள் சட்ட பேரவை உறுப்பினர்களாக இருந்தால் தான், காங்கிரசுக்கு விரைவில் கருமாதி செய்யலாம். காங்கிரஸ் அழிவது நாட்டுக்கு நல்லது. விஜயதாரணி போன்றோர் வாழ்க- காங்கிரஸ் ஒழிக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *