ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…

அண்மையில் எழுந்த சர்ச்சை குறித்து எழுத்தாளர் திரு.ஜெயமோகன் தமிழ் தமது வலைதளத்தில் பின்வருமாறு எழுதுகிறார்.morning_hindutva

அப்படியென்றால் ஈவேராவின் பகுத்தறிவுப்பிரச்சாரம் இங்கே என்னவாயிற்று? நாராயணகுருவும் காந்தியும் என்னவானார்களோ அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவாக ஆனார். நாராயணகுருவுக்கு கோயில்கள் கட்டப்பட்டன….

வாழ்நாளெல்லாம் ஈவேரா அவர்கள் சொல்லிவந்த பகுத்தறிவு பற்றிய அறிவுறுத்தல்கள் அப்படித்தான் ‘தெய்வத்தின்குரல்’ ஆக மாறி மறைந்தன. ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமாகக் கண்டார். ஆகவே எல்லா நம்பிக்கைகளையும் அவர் அடித்து நொறுக்க முயன்றார்.

எவையெல்லாம் புனிதமானவை, jmகேள்விக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் விமர்சித்து கிண்டல்செய்து நிராகரிக்கிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள், ஆசாரங்கள் , பண்பாடு, பழம்பெருமைகள் எல்லாவற்றையும். தமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனை மேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும்.

அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை. நேர்மாறாக அவர்சொன்னவை எல்லாம் அவரது மகத்துவத்தின் இயல்புகளாக மட்டுமே கருதினர் நம் மக்கள்.

இது எந்த அளவு உண்மை? ஈவேரா செய்தது பகுத்தறிவு பிரச்சாரமே அல்ல. அவர் செய்ததெல்லாம் வெறுப்பு வியாபாரம் மட்டும்தான். சமூக அவலங்களை மூலதனமாக்கி ஈவேரா செய்த வெறுப்பு பிரச்சாரத்துக்கு மேல் அவர் எழும்பவே இல்லை. ஜெயமோகனின் அண்மை கருத்தையும் ஈவேரா எப்படி அணுகியிருப்பார்? அதற்கு வேறு கணக்குகள் வைத்திருப்பார் ஈவேரா. திமுக உடனான கருத்து வேறுபாட்டால் காமராஜரை ஆதரித்தவர், திமுக வென்றவுடன் காமராஜரை வெங்காய கிண்டலடிக்க தயங்கவில்லை:

 கடவுள் கதையும் சிரிப்பாய் சிரிக்குது. செருப்பால் அடித்தார்களே கடவுளை என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டு போட மாட்டேன் என்று காமராஜர் முதற்கொண்டு பிரச்சாரம் செய்தார். திமுக 184 வந்துவிட்டதே! காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர் கூட வரவில்லையே. (19-12-1973, ஈ.வே.ராமசாமி தியாகராய நகரில் பேசியது.)

இது புனிதம் உடைத்தல் அல்ல பச்சை சந்தர்ப்பவாதம். கேவலமான அதிகார பச்சோந்தித்தனம்.  ஜெயமோகனால் தனக்கு என்ன ஆதாயம் என பார்த்திருப்பார் ஈவேரா. தனக்கு என்றால் தனக்கு தன்னுடைய கருத்தாக்கம் என அவர் முன்வைத்த வெறுப்பு பிரச்சாரத்துக்கு கூட இல்லை. தனக்கு. தான் தன் சுகம் என்பவற்றுக்கு. எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாக இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக் கூடாது. என்று பிரகடனம் செய்தவர் ஈவேரா. (விடுதலை 20-10-1967). எனவேதான் ஞாநி என்னதான் போலி-பகுத்தறிவு குட்டிக்கரணம் போட்டு, இந்துத்துவர்களை கொலைவெறியுடன் கேவலமாக பேசி தன் திராவிட விசுவாசத்தை காட்டினாலும் மிக எளிய முதல் சந்தர்ப்பத்திலேயே அவர் ‘பாப்பான்’ என விளித்து வசை பாடப்படுவார். ஜெயமோகன் எந்த திராவிட கும்பல் லும்பனாலும் அல்லது கழக-குடும்ப தலைவனாலும் எண்ணிக்கூட பார்க்க முடியாத உயரத்தில் தமிழுக்கு என்றென்றைக்குமான பங்களிப்பை தந்திருக்கட்டுமே. அதனால் என்ன!  கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் மலையாளி என கல்லெறியப் படுவார். ஈவேராவே இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல… திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்… ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து evr_fraudஅதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது?’ என அறைகூவலிடும் சித்தாந்த வாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்.

இறக்குமதி செய்தது ஐரோப்பாவிலிருந்து. ஆம் ஐரோப்பாவில் தொழில் புரட்சியின் போது தனிமனிதத்துவம் மட்டும் எழவில்லை. இனவாத கோட்பாடுகளும் மீள்பலம் பெற்று எழுந்தன. கிறிஸ்தவ இறையியலில் வேர் பிடித்த யூத வெறுப்பு நவீன ஐரோப்பாவில் பலம் கொண்டு எழுந்தது. சமுதாயத்துக்கு இலக்கியத்துக்கு யூதர்கள் எத்தனை பங்களித்திருந்தாலும்  ஒருவரை யூதராக அடையாளம் கண்டு அவர் மீது வசைகளும் அவமானங்களும் பொழியப்பட ஒரு சிறு சந்தர்ப்பம் கூட தவறவிடப் படவில்லை. ஈ.வே.ராமசாமி – சி.என்.அண்ணாதுரை அதை தமிழகச் சூழலுக்கு கொண்டு வந்தார்கள். ஆரியனாக பிராம்மணர்கள் அடையாளப் படுத்தப் பட்டனர்.  மற்றெந்த மொழி சிறுபான்மையும் தந்திரக்காரர்களாக ஊடுருவிகளாக ஐந்தாம் படையாக பார்க்க நாம் கற்றுத் தரப்பட்டோம். ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஜெயமோகன் விஷயத்திலும் நடந்தேறியது இதுதான்.

ஆதீனங்களை கிண்டல் செய்யும் பரமார்த்த குரு கதையை கான்ஸ்டண்டைன் பெஸ்கி (‘வீரமா முனிவர்’) தமிழ்நாட்டில் எழுத முடிந்தது. தனிமனித வாதம் துளிர்விட்ட காலகட்டத்தில் கூட ஐரோப்பாவில் ஒரு இந்து துறவி சென்று அங்குள்ள பாப்பரசர்களையும் இதர சபை ஊழிய அதிகாரிகளையும் குறித்து இப்படி ஒரு இலக்கியத்தை எழுதியிருந்தால் நடுச்சந்தியில் குத்தீட்டியில் எரிந்து  மீளாநரகத்துக்கு அனுப்பப் பட்டிருப்பார். அன்று மூத்தார் வழிபாடு நம் மத்தியில் இல்லையா?

துரதிர்ஷ்டவசமாக ஜெயமோகன்  இதில் இந்து முன்னணியின் சுசீந்திரம் கிளையினர் அவ்வூர் அம்மன் குறித்து ஜெயமோகன் எழுதியதற்கு எதிராக அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு வைத்த ஒரு பலகையை முன்வைக்கிறார். கொஞ்சம் யோசித்தால் இதில் உள்ள அபத்தம் புரியும். இணையத்தில் இயங்குவோரும், அறிவுசீவிகள் என தம்மை முன்வைப்போரும், ஏன் தமிழக அரசியலில் ஜெயமோகனால் மிகவும் புகழப்பட்டவரும் கூட, ஜெயமோகன் ஏதோ தமிழுக்கு எதிராக வஞ்சப்போர் புரிவது போல ’தி கிண்டு ’ அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்தனர்.  இணையம் முழுக்க வசையால் நிரம்பியது. ஆனால் ஜெயமோகன் முன்னுதித்த நங்கை அம்மன் குறித்து எழுதிய போது இந்துத்துவர்களில் ஒரு சாரரே இணையத்தில் இதற்கான ஜெயமோகனின் கருத்து சுதந்திரத்தை ஆதரித்து குரல் எழுப்பினர் – ஜெயமோகன் கூறியதில் தகவல் பிழை இருந்த போதிலும். ஒரு சிற்றூர் இந்துத்துவர்களின் உணர்ச்சி வசப்படுதலை இணையம் முழுவதும் நிரம்பி உயர் அதிகார கும்பல் வரை பொங்கி வழியும் வசைபாடலுடன் ஒப்பிடுதல் என்பது – மென்மைப்படுத்தி சொன்னால், இன்றைய சூழலை சமாளிப்பதற்கான சாமர்த்தியமான அரசியல் உத்தி. அவ்வளவுதான்.

இந்துத்துவம்அதன் ஆக சிறந்த வடிவில் உரையாடலை சமரசமின்றி முன்வைத்து வந்துள்ளது.

manthan1

ஆண்டு 1988. சோவியத் அக்டோபர் புரட்சி குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்த இதழான மந்தன் (தீன்தயாள் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரபூர்வ இதழ்),  மூன்று சிறப்பிதழ்களை கொண்டு வந்திருந்தது:malkani_ems ‘The October Revolution & its Impact on World Civilisation’.

இதில் முதல் இதழில் (மார்ச் 1988) அன்றைய பாரதத்தின் மிகவும் அறிவார்ந்த ஆழங்கால் பட்ட பொதுவுடமை சித்தாந்தவாதிகள்  ஒவ்வொரு கட்டுரை கொடுத்திருந்தனர். பர்தன், சுபத்ரா பானர்ஜி, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஆகியோர். இதில் மந்தன் ஆசிரியர் கே.ஆர்.மல்கானி அவர்களும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் முன்வரைவை பார்த்தார் ஈ.எம்.எஸ். உடனடியாக அதை மறுத்து ஒரு கட்டுரை எழுதினார். அந்த மறுப்பு கட்டுரை அதே இதழில் வெளியானது.

இன்றைக்கு ’தி கிண்டு’ உள்ளிட்ட எந்த பத்திரிகையாவது இந்த கருத்தியல் சுதந்திரத்தை இந்த நேர்மையுடன் கையாளுகிறதா? ”ஹிந்துத்துவம் அதன் சீரிய வடிவில் முன்வைத்த இத்தகைய மகோன்னதாமன கருத்து சுதந்திரத்துக்கான  தார்மீகத் திடம் இன்றைய சூழலில் நிலவுகிறதா?”  என்பது நாம் கேட்க வேண்டிய கேள்வி.

இந்த ’நாம்’  அறம் சார்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைய இணைய இந்துத்துவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கியது.

நாளை காலை மீண்டும் தேநீருடன் சந்திப்போம்.

24 Replies to “ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…”

  1. “தமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனைமேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும். அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை” -ஜெயமோகன்

    தமிழ் சமுகத்திற்கு அந்தரங்க சுத்தியோடும் உண்மையோடும் அவர் எதுவும் சொல்லவில்லை; அப்படியிருக்க, எந்த சமூகம் எதை ஏற்றுக்குகொள்ளும்?.

    ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமாகக் கண்டார்.- ஜெயமோகன்

    இது சரிதான்; அந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டார்; எப்படிப் பயன்படுத்துவது என்று தம் சீடர்களுக்கு வழிகாட்டினார்; இன்றளவும் அது நிகழ்கிறது.

    இதற்கு எதிராகத்தானே ஈவேரா பகுத்தறிவை முன்வைத்தார்?- ஜெயமோகன்.

    ‘பகுத்தறிவு’ என்ற சொல்லைய் முன்வைத்தார்; அதன் கருத்தை, கருத்தியலை அல்ல.

    இவ்விவாதம் இன்று உருவாகிவரும் சூழலை கவனிப்பதற்கும் அதை வெல்வதற்கான வழிகளை ஆராயவும் உதவினால் நல்லது. அதற்குத்தேவை சமநிலையான, பகுத்தறிவுசார்ந்த அணுகுமுறை. -ஜெயமோகன்.

    தர்க்க நியாய முறையை பழந்தமிழன் ஒருவன்தான் உருவாக்கினான் என்று எங்கேயோ படித்தேன்; எந்தவிதமான் தர்க்கத்திற்கும் நியாயத்திற்கும் பகுத்தறிவு அடிப்படையிலான விவாதங்களுக்கும் ஈவேராவின் தமிழ் மண்ணில் இடமில்லாமல் இருக்கிறது என்ற உண்மை தீர்கமான சிந்தனையுள்ள திரு. ஜெயமோகன் உணராமல் இருப்பது ஆச்சர்யம்தான். அதானால்தான் ஈவாரா ‘பகுத்தறிவை’ தமிழ் நாட்டில் நிலைநாட்டிவிட்டார் என்ற தொனியில் எழுதுகிறார்.

    ஈவேராவின் காலடியில் சருக்கி விழுவது என்பது எம்மாம் பெரிய ஆளானாலும் தப்பமுடியாமல் முழு மூடநம்பிக்கை சார்ந்த சடங்காக தமிழ் நாட்டில் ஆகிப்போய் உள்ளதைக் காணும்போது பகுத்தறிவு சாராத இன்னொரு நம்பிக்கையான ‘விதி’யைத்தான் நொந்துகொள்ளவேண்டியிருக்கிறது!

  2. நான் சொல்கிறேன் என்றுமட்டும் நம்பாதே;நீயே பகுத்தறிந்து அறிந்துகொள்”
    என்று சொல்லிவிட்டாராம் ஈரோட்டுக்காரார்.

    அதே மூச்சில் ‘பகுத்தறிவாளன் ஆனாலும் பார்ப்பானை ஏற்றுக் கொள்ளாதே’
    என்பது என்ன பகுத்தறிவோ?!!!

    அந்தப் பகுத்தறிவுக்கே வெளிச்சம்!

    இல்லத்தில் த‌மிழ் பேசும் ‘பார்ப்பான்’ தமிழனே அல்லன். வந்தேறி!
    வீட்டில் உருது பேசும் இஸ்லாமியன் பச்சைத்தமிழன்!
    என்னே பகுத்தறிவு!

  3. திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் இந்தப் பதிவு கூட திரு.ஜெயமோகனை மலையாளி என்பது போல சொல்கிறது. ஆனால் விக்கியில் திரு.ஜெயமோகன் நாகர்கோயில்க்காரர் என்பதாகவும் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாவும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது திரு.ஜெயமோகன் எப்படி மலையாளி ஆவார். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் மட்டுமே, தனிப்பட்ட வசைபாடல்களையும் இனவாதக் கருத்துகளையும் சொல்ல முடியும்.

    இருப்பினும் திரு.ஜெயமோகன் தமிழுக்கு லத்தீன் வரிவடிவத்தைப் பயன்படுத்தலாமே என்று கோரியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. அவர் உதாரணமாகக் காட்டியிருக்கும் மொழிகள் அத்தனையும் காலத்தால் மிகவும் பிந்தையவை. தமிழின் வரிவடிவத்தை மாற்றுவது என்பது தமிழை அழிக்கவே செய்யும்.

    சமூகத்தின் சிந்தனையைத் தூண்டும் திரு.ஜெயமோகன் அவர்கள் இத்தகு கருத்தை ஒரு ஆக்கப்பூர்வமான விவாதத்திற்காகவே தெரிவித்திருக்கலாம் என நம்புகிறேன்.

    நன்றி

    அன்புடன்
    செ.அருட்செல்வப்பேரரசன்

  4. தமிழின் வரிவடிவம் மாற்றத்தக்கது தான். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் கல்வெட்டுக்களில் உள்ள தமிழை இன்று படிக்க யாராலும் முடியாது.( கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களைத்தவிர ). பழங்கதை கிடக்கட்டும். நம் காலத்திலேயே திரு எம் ஜி ஆர் அவர்கள் பெரியார் எழுத்தினை அறிமுகப்படுத்தினார். அது என்ன தமிழ் எழுத்தா ? புதிய மாற்றம் தானே ? அதனை தமிழன் ஏற்கவில்லையா ? எனவே, ரோமன் எழுத்துருவை நாம் ஏற்பது என்பது காலத்தின் கட்டாயம். இதனால் எல்லாம் தமிழ் அழிந்துவிட்டதா ? தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன தமிழினத்துரோகி ஈ வே ரா பெரியாராலேயே தமிழை அழிக்க முடியவில்லை. இனி எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. எழும்பூர் அருங்காட்சியகத்தில் (மியூசியத்தில்) உள்ள பல பழைய கல்வெட்டுக்கள் யாருக்கும் புரியாது. காலப்போக்கில் தமிழ் எழுத்துக்கள் எவ்வளவோ மாறிவிட்டன. எனவே புதிய மாற்றங்கள் வந்துதான் தீரும்.
    இன்று தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் ஆங்கில மீடியத்தில் 70 விழுக்காடு படிக்கின்றனர்.30 விழுக்காடு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயிலுகின்றனர். இன்னும் இருபது வருடம் போனால் தமிழ் நாட்டுக் குழந்தைகளுக்கு தமிழே படிக்கத் தெரியாது என்ற நிலை வருவது உறுதி. எனவே தமிழ் எழுத்துரு மாறினாலும் பரவாயில்லை. நமது தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் காக்கப்பட வேண்டும் என்பதால், எழுத்துருவை மாற்றுவது நல்லதே. ஒன்றும் தவறில்லை.

  5. //இன்றைய சூழலை சமாளிப்பதற்கான சாமர்த்தியமான அரசியல் உத்தி. அவ்வளவுதான்//
    இந்தக் குற்றச்சாட்டு ஜெயமோகன் மீது மட்டும் தானா? இது போன்ற அரசியல் உத்திகளை கைக்கொள்லாதவர்களைப் படிக்க நேர்ந்ததாக நினைவில்லை. மற்றவருக்கு ஒரு இடி என்றால் இந்துவிற்கு ஒன்று! சமயத்தில் ஒன்றிரண்டு கூடும்.
    அதுபோன்றே,
    சாதி வேறுபாடுகளை கண்டிக்கவோ மறுக்கவோ நேரும்போது சிறு சாதிபட்டியலைக் குறிப்பிடுவர். அரசிதழ் போன்று அனைத்து சாதிகளையும் பட்டியலிட முடியாது. அடிக்கு பயந்து ஒன்றிரண்டை விடுவர். ஆனால் தவறாது பார்ப்பான் பட்டியலில் இருப்பான். இவ்விதியை இந்துத்துவவாதிகளும் கடைபிடிப்பர்.
    இதில் நீதி தேடுவது கடினம் என்றே நினைக்கிறேன்!

  6. நான் அறிந்தவரை திரு ஜெயமோகன் அவர்கள் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

  7. . மக்கள் தொகை கணக்கெடுப்பில் “வீரமணி & கம்பெனி” தேவையான தகவல் அளிக்கும்போது “மதம்” என்ற இடத்தில் “இந்து” என்று எழுதவிட மாட்டார்கள். அம்பேத்கர் அவர்கள் ஈவேராவை புத்த மதத்தில் சேர்ந்துவிடுமாறு அழைப்பு விடுத்த போது “” புத்த மதத்தில் சேர்ந்து விட்டால் இந்து மதத்தை தாக்கினால் effective ஆக இருக்காது. “ஒரு இந்து” இந்துமதத்தை தாக்குவதுதான் நல்லது” என்று பதில் தந்தார். அப்படியானால் ஈவேராவே “தான் ஒரு இந்து” என்பதை ஒத்துகொள்ளும்போது அவரது அடியா(ட்)ர்கள் ஏன் இந்து என்று சொல்ல தயங்குகின்றனர்?

    “அம்பேத்கர் வழியில் அடிபிறழாமல் நடக்கிறோம்” என்று அடிக்கடி சொல்லும் போது எதற்கு தலித்துகள் புத்த மதத்தில் சேராமல் அன்னியர் சோனியாவின் (not அன்னை சோனியா) மதமான கிறிஸ்தவ மதத்திற்கு சேர ” திருமாவளவன் & கம்பெனி” agent வேலை செய்கின்றது? முசாபர் நகரில் ஜாட் இன பெண்ணை ஒரு முஸ்லிம் பையன் பகடிவதை (teasing ) செய்ததால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் இறந்தனர். இதனை மக்களுக்குள் ஏற்பட்ட ஒரு கலவரம் என்று நினைக்காமல் எதற்கெடுத்தாலும் மதசாயம் பூசி கடைசியில் பிஜேபி மீது ஒரு வீண்பழி போட்டுவிடுவது என்று தொழிலாக கொண்டிருக்கும் நீங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் புத்தமத பித்தர்கள் (அல்லது வெறியர்கள்) என்று சொல்லாமல் சிங்கள அரசு கொன்றது என்று பூசி மெழுகுகிறீர்கள்? எதையும் மதரீதியில் பார்ப்பதுதானே உங்கள் கொள்கை? புத்தமதத்தை திட்டினால் (புத்தமதம் நல்ல மதம் & அன்பு மதம் என்று கருதி மதம் மாறிய) அம்பேத்கருக்கு அவமானம் என்று நினைகிறீர்களா?

    எனக்கு கூட பிராமணர்களிடம் வெறுப்பு உண்டு.””உனக்கும் எனக்கும் உரியவன் முருகன். எனவே இடையில் எதற்கு அங்கே ஒரு தரகன்?”” என்ற கொள்கை கொள்கை உடையவன் நான் அதற்காக அவர்கள் மனிதர்களே அல்ல அவர்கள் அனைவரும் அழிந்தொழியவேண்டும் என்று நினைப்பது மனித தர்மம் அல்ல. பார்ப்பனர்கள் என்றாலே அறவே வெருக்கதக்கவர்கள் என்பது போல சித்தரிப்பது சரியல்ல. நமது சட்ட மேதையின் ஆசிரியர் (மகாதேவ் அம்பேத்கர்) மற்றும் அவரின் 2 வது மனைவி (டாக்டர் சாரதா கபீர்) ஆகிய இருவருமே brahmin தான். அவர் ஒரு தலித் என்று அவர்கள் இருவரும் ஒதுங்கியா நின்றார்கள்?

    பார்ப்பனர்கள் இப்போது நிறைய மாறிவிட்டனர். டெல்லியில் 50 public toilets உள்ளன அவற்றை BRAHMIN கள்தான் சுத்தம் செய்து பராமரித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல “படேல் நகரில்” உள்ள ரிகஷா இழுப்போர்களில் 50% பேர் BRAHMIN ஆவார்கள். மேலும் AP யில் 75% OF BRAHMINS இப்போது DOMESTIC HELPS /COOKS ஆக உள்ளனர். போலன், கைபர் கணவாய் வழியாகே வந்தவர்களே! என்று கூறும் கருணாநிதி என்றைக்கேனும் முஸ்லிம் வந்தேரிகளைப் பார்த்து “PERSIA , MIDDLE EAST லிருந்து வந்தவர்களே! என்று கூறி உள்ளாரா?

    மோடி என்ற அரசியல்வாதி எதை பேசினாலும் உடனுக்குடன் விமர்சனம் செய்வோர் “I am not a worshipper of idol . I believe DESTRUCTION of IDOLS ” என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். இந்துக்கள் மட்டும்தான் சிலை வழிபாடு நடத்துகின்றனரா? புத்தரை சிலையாக வழிபடவில்லையா? கிறிஸ்தவர்கள் இயேசு, மேரி ஆகியோரை சிலையாக வழிபடவில்லையா? ஆப்கானில் புத்தர் சிலையை முஸ்லிம் தீவிரவாதிகள் உடைத்தபோது இங்கே இருந்த போலி மதசாற்பற்றவாதிகள் ஏன் கண்டித்தனர்?. அம்பேத்கர்தான சிலைகள் உடைப்பதை ஆதரிக்கின்றாரே! அப்புறம் என்ன?

  8. மொழிநடை சற்று கடினமாக இருக்கிறதே! கூடவே அருந்தும் தேநீரின் சுவை அறிய முடியா வண்ணம் எழுதினால் நலம்.

  9. /ரோமன் எழுத்துருவை நாம் ஏற்பது என்பது காலத்தின் கட்டாயம். இதனால் எல்லாம் தமிழ் அழிந்துவிட்டதா ? / மு. வ. அவர்கள் வேகமாக எழுதவும் கடிதமெழுதவும் ரோமன் எழுத்துக்களைப் ப்யன்படுத்துவார் என நான் கேள்விப்பட்டுள்ளேன். அவருடன் நெருங்கிய பழக்கம் உடைய மூத்த பேராசிரியர்க்ள் இதனை அறியக் கூடும்.

  10. திரு முத்துகிருஷ்ணன் சொல்வது போல முஸ்லிம்கள் வீட்டில் மட்டும் உருது பேசுவதில்லை. சாலையில், பேருந்து, தொடர்வண்டி, திரையரங்கம் என்று “நீ இல்லாத இடமே இல்லை அல்லா அல்லா” என்ற பாட்டு போல முஸ்லிம்கள் உருதுவை பேசாத இடமே இல்லை. பேருந்தில் செல்லும்போது சில முசல்மான்கள் ((சினால்கா பச்சா, பேவார்சி ராண போன்ற வார்த்தைகளையும் கலந்து)) மிக சத்தமாக பேசுவார்கள். காரணம் இந்த இந்துக்களுக்கு நாம் பேசுவது எங்கே புரியபோகிறது என்ற எண்ணம்தான்.

    “ஈவி”ரக்கமற்ற “ரா”ட்சசனின் திராவிட கழக பொது செயலாளர் வீரமணி “பார்ப்பனர்களே! தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று சென்னையில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் பேசினார். அது மட்டும் தவறு கிடையாது.ஆனால் பிஜேபி “முஸ்லிம்களே! முஸ்லிம் லீக் கட்சியை துவக்கி இந்துக்களோடு எங்களால் சேர்ந்து வாழமுடியாது என்று எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டீர்கள். அதை அடையவும் அடைந்தீர்கள். ஆனால் கேட்டபடி தனி நாடு கிடைத்தபின் ஒரு சிலர் மட்டும் போய்விட்டு மற்றவர்கள் அங்கே போகாமல் எதற்காக இங்கேயே தங்கிவிட்டீர்கள்? அந்த “முஸ்லிம் லீக் கட்சி” இன்னும் உங்களிடம் இருக்கிறது. ஆகவே மீண்டும் ஒரு தனி நாடு கேட்க திட்டமா?” என்று பேசி விட்டால் போதுமே. “”பார்த்தீர்களா! பார்த்தீர்களா! பாரதிய ஜனதா கட்சி மதவாதம் பேசுகிறது” என்று கூக்குரல் போடுவார்கள் “24 x 7 channelகள்” 24 மணி நேரமும் இதையே breaking news ஆக சொல்லுவார்கள். பார்ப்பனர்கள் தனி நாடு கேட்டு அங்கே போகாமல் இங்கேயே தங்கிவிட்டது போல “தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று முஸ்லிம்களிடம் (Money க்கு) சோரம்போன வீரமணி பேசுகிறார். பகுத்தறிவு பகைவன் (sorry பகலவன்)ஈவேரா “பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை அடிக்காதே பார்ப்பனை அடி” என்று அப்பட்டமாக வன்முறை பேச்சு பேசியதையும் Hyderabad ல் ஒரு முஸ்லிம் MLA “போலீஸ் ஒரு 10 நிமிடம் சும்மா கைகட்டிக் கொண்டிருந்தால் இந்துக்களை துவம்சம் செய்து விடுவோம்” என்று அப்பட்டமாக வன்முறை பேச்சு பேசியதையும் எந்த print மற்றும் electronic media களும் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் “காரில் செல்லும்போது ஒரு நாய் குட்டி இறந்து விட்டால் கூட நான் வருத்தம் அடைவேன். எனும்போது மனித உயிர்கள் பறி போகும்போது சொல்லொணா வருத்தம் அடைவேன்” என்று மோடி கூறியதும் ஒவ்வொரு மீடியாகாரனும் அவசர அவசரமாக “விவாத மேடை” க்கு 3 இந்து விரோதிகளை (அதாவது அந்நியநாட்டு அடிமைகளான கம்யூனிஸ்ட்காரன் , அன்னிய்நாட்டு lady தலைமையில் இயங்கும் காங்கிரஸ்காரன், பாகிஸ்தானை தன தாய்வீடாக மதிக்கும் ஒரு “”நல்ல”” முஸ்லிம்) அழைத்து ஒரு பிஜேபிகாரனையும் அழைத்து பேசுவார்கள். அந்த 3 பேரின் ஒட்டுமொத்த 15 நிமிட குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல பிஜேபிகாரனுக்கு வெறும் 5 நிமிடம் மட்டுமே. அதிலும் “மனிதநேய மக்கள்கட்சியின்” மாநாட்டில் பங்குபெற்று பேசிய வீரபாண்டியன் போன்றோர் அந்த debate ஐ நடத்தினால் பிஜேபிகாரனை பேசவே விடமாட்டார்கள். ஒரு சிறிய விளம்பர இடைவேளை என்று கூறி மடக்கிவிடுவார்கள்

  11. மிகவும் அருமையான கட்டுரை.தமிழகத்தில் பெரியார் செய்தவற்றையும் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  12. ஜெயமோகனை நாயர் என்று வசைபாடும் ஈ.வே.ரா.கம்பெனியார் திராவிட இயக்கத்தை உருவாக்கியதே தரவாடு மாதவன் நாயர் என்ற நாயர் ஜாதியை சார்ந்த மலையாளிதான் என்பதை மறந்துவிட்டார்கள் போலும்!!

    அற்புதமான கட்டுரை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இங்கு மறுபிரவேசம் செய்துள்ளார்.வெல்கம் ஸார்!!!

  13. திராவிடம் என்பது ஒரு முற்றிய மனவாத நோய்தான் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. எங்கள் சொந்த கிராமத்தில் திக வினர் மூன்று பேர் இருந்தனர்.1967- தேர்தலுக்கு முன்னர் பச்சை தமிழன் காமராஜரை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஈ வே ரா , அண்ணா ஆட்சியை கைப்பற்றியவுடன் நாடி தளர்ந்து, காமராஜருக்கு துரோகம் செய்துவிட்டு, 1971-தேர்தலில் திமுக கண்ணீர்த்துளிகளுடன் குலாவி தேனிலவு அனுபவித்தார்.இந்த துரோகத்தால் மனம் வெறுத்துப்போன அவரது தொண்டர்களில் பலர் திகவில் இருந்து விலகி , ஸ்தாபனக்காங்கிரசில் சேர்ந்து கொண்டனர். 1971-லே செய்த செயலை தைரியம் இருந்தால் 2013-லே செய்து காட்டட்டும். நல்ல பாடம் புகட்டுவோம். பெரியாரை விட அசிங்கம் பிடித்த அரசியல் வாதி இந்தியாவில் இனிமேல் தான் பிறக்க வேண்டும்.

  14. “நான் அறிந்தவரை திரு ஜெயமோகன் அவர்கள் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்.”

    அப்படியா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போய் விட்டதே. அவர் நாயர் என்பதால் அவருக்கு தமிழைப்பற்றி எழுத உரிமை கிடையாது.
    ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சொல்லியே, நம்மவர்கள் ஜாதியை கலக்காமல் எதையுமே யோசிக்க தெரியாது. ஒரு ஆணின் கருத்தை எதிர்க்கவேண்டும் என்றால் உடனே ஜாதியைப்பற்றி பேசவேண்டும். ஒரு பெண்ணின் கருத்தை எதிர்க்கவேண்டும் என்றால் உடனே கற்பைப்பற்றி பேசவேண்டும்.
    இது தான் நம்ம பெரியாரியர்கள் சாதித்தது.

  15. அருமையானக்கட்டுரை வழங்கிய அ நீ அவர்களுக்குப் பாராட்டுக்கள். ஜெயமோகன் அவர்கள் எழுதியக்கட்டுரையை அடியேனும் வாசித்தேன்.
    கடந்தக்காலத்தில் தனிமனிதன் என்ற எண்ணமே நமது சமூகத்தில் இல்லை அத்தகைய எண்ணத்தினை மனப்போக்கை நாட்டில் ஏற்படுத்தவே ஈவெரா முயன்றார் என்று ஜெமோ எழுதியுள்ளார். ஈவெராவை நவீனமயமாக்கும் அதாவது மேற்கத்திய மயமாக்கும் போக்கு கொண்டவர். கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்திய மயமாக நமது பண்பாட்டை மாற்ற முயன்றவர் என்பது பொருந்துமே அன்றி தனிமனித சுயத்தினை மக்களிடையே ஏற்படுத்த முயன்றவர் என்ற ஜெமோவின் கருத்து பொருந்தாது. இந்த நாட்டில் மட்டும் தான் தனித்தனியே மனிதனுக்கு வாழ்வும் முக்தியும் மோட்சமும் இருந்தது. பொத்தாம் பொதுவாக குழுவுக்கே முக்தி விடிவு என்ற கருத்து இல்லை என்பதை ஜெமோ ஏனோ மறந்துவிட்டார்.
    இன்னும் ஜெமோ அவர்கள் பழங்குடி மனநிலை, நிலபிரபுத்துவ மனனிலை மற்றும் முதலாளித்துவ மனநிலை என்ற நிலைகளில் மக்கள் மாறிவருவதாகக்காண்கிறார். ஜடமுதல்வாத மார்க்சிய கோட்ப்பாட்டினை கொஞ்சம் மாற்றி கருத்துமுதல் வாதமாக பயன்படுத்துகிறார் ஜெமோ அவர்கள். ஈவெரா ஏதோ மக்களின் மனனிலையில் பெரிய புரட்சிகரமான மாற்றத்தினை காண விழைந்ததாக ஜெமோ கருதுகிறார்.
    நிச்சயம் அப்படி இல்லை. ஈவெராவுடையது சுத்தமான நிலபிரபுத்துவ சாதீயமன நிலைதான்.சாதிகளைக்காட்டி இனவாதத்தினை திணித்து மக்களை மோதவிட்டு அரசியல் சுயலாபம் தேடும் போக்கைத்தவிர ஒருபெரும் சமூக மாற்றத்திற்கான காரணியாக நாயக்கரைக்காண முடியாது.

  16. திரு.அரவிந்தன் நீலகண்டன், எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையை வேறு திசையில் கொண்டு செல்கிறார்.
    (1) ஜெயமோகன் எழுதியது, பகுத்தறிவு, கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் தேவைகளை. அரவிந்தன் இதை போகிற போக்கில் ஒரே ஒரு இடத்தில்
    எழுதிவிட்டு, ஐரோப்பிய இனவாதத்தைக் குறித்து எழுதுகிறார்.

    (2)பெரியார் புனிதத்தை அதன் அனைத்து பரிமாணங்களிலும் போட்டு உடை என்று ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததை ஜெயமோகன் எழுதுகிறார்.
    ஆனால் அரவிந்தன் பெரியாரின் சந்தர்ப்பவாதத்தை முன்னிறுத்தி எழுதுகிறார்.

    சம கால தமிழ் சூழலில், திராவிட இயக்கங்களின் போலித்தனத்தை, அதன் வேர் வரை சென்று எதிர்த்து எழுதி வருபவர் ஜெயமோகன். மேற்கத்திய
    இனவாதத்தைக் குறித்தும் பலமுறை விமர்சனம் செய்துள்ளார். இந்த இரண்டு விஷயங்களைக் குறித்து அவர் இக்கட்டுரையை எழுதவே இல்லையே!
    பின் ஏன் திரு.அரவிந்தன், ஜெயமோகன் பலமுறை எதிர்த்துள்ள, இக்கட்டுரையில் முக்கியத்துவம் அளிக்காத விஷயங்களை அவரின் கட்டுரையை
    முன்வைத்து எதிர்க்க வேண்டும்.

    பெரியாரின் சந்தர்ப்பவாதத்தை ஜெயமோகன் வெளிப்படையாக எதிர்த்துள்ளார். ஆனால் இக்கட்டுரையில் அவர் பெரியாரின் ஒரு குறிப்பிட்ட குணாதிசயத்தை,
    அதன் சாதக அம்சத்தை முன்னிறுத்தி எழுதுகிறார். சந்தர்ப்பவாதமாகவே இருந்தாலும்.

    எனக்குப் புரிந்த ஒரு உதாரணம். சாமியார் கனவு காண்கிறார். தொல்லியல் துறை தங்கம் கிடைக்குமா என்று மண்ணை குடைகிறது. இந்த கண்றாவியை,
    தெளிவான சிந்தனை கொண்ட அனைவருமே எதிர்த்தார்கள்.

    ஜெயமோகன் சொல்வது. சந்தர்ப்பவாதம் கொண்டவராகவே இருந்தாலும், போலி நாத்திகராகவே இருந்தாலும், ஒருவர் எதிர்த்தால், அவரின் அந்த
    குணாதிசயத்தை சாதகமாகவே கொள்ள வேண்டும்.

    அரவிந்தன் சொல்வது. எதிர்ப்பவர் சந்தர்ப்பவாதி, வேறு மதத்தலைவர்களின் இதைப் போன்ற செயல்களை எதிர்ப்பதில்லை. ஆகவே எதிர்ப்பை
    ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

    ஆனால், முக்கியமாக, அரவிந்தன் எழுதாதது. “பகுத்தறிவு, தனி மனித கருத்து சுதந்திரம், ஜனநாயகம்” போன்றவற்றினால் மட்டுமே சமூகம் முன்னேற
    முடியும். அவை பயணிக்கும் பாதையில் புனிதங்கள் மிதிபடும். இது அரவிந்தனுக்கும் தெரியும்.

    ஐரோப்பிய இனவாதம் இருந்தது வேறு கதை. ஐரோப்பிய புனிதங்கள் மிதிபட்டதுதான் இக்கட்டுரையின் விஷயம். வரலாறு அரவிந்தனுக்கு தெரியாதா?
    இங்கிருந்து யாராவது ஐரோப்பாவிற்கு சென்று விமர்சனம் செய்திருந்தால் எரித்திருப்பார்களே என்பது கேள்வி? அங்கிருந்து கொண்டே விமர்சனம்
    செய்தவர்களையும் எரித்ததுதானே வரலாறு! கோப்பர்னிகஸுக்கு பிறகு புரூனோவை உயிருடன் எரித்தது அதே ஐரோப்பாதானே! உலகம் எவ்வாறு உருவானது
    என்ற கேள்வியுடன் Big Bang Theory வரை பயணிக்கையில் மிதிபட்டதும் பைபில் வாசகங்கள்தான். உயிர்கள் எவ்வாறு உருவாகின என்ற கேள்வியுடன் Evolution
    வரை பயணிக்கையில் மிதிபட்டதும் பைபில் வாசகங்கள்தானே! நான் கூற வருவது இந்த அற்புதங்கள் நிகழ்ந்தது “பகுத்தறிவு, சுய சிந்தனை,. கருத்து சுதந்திரம்”
    ஆகியவற்றால்தானே! இதைத்தானே எழுதினார் ஜெயமோகன்.

    ஜெயமோகன் வருத்தப்படுவது. இந்த சுதந்திர சிந்தனை இன்னமும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இன்றும் இல்லை என்பதைத்தானே! என்னைப்
    பொறுத்தவரை, திரு. ஜெயமோகன் எழுதியது முற்றிலும் சரிதான். இங்கும் பல புனித பிம்பங்கள் மிதிபட்டு, உடைக்கப்பட வேண்டும்.

    பெரியாரின் கருத்து சுதந்திரத்தால் விளைந்த நன்மையை வேறு வகையிலும் பார்க்க முடியும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த கட்டுரை இது.
    https://www.indianexpress.com/news/mars-and-modern-india/1193123/0
    வீர் சவார்க்கரும், காந்திஜியும் லண்டனில் சந்திக்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்னதான வருங்கால இந்தியாவை குறித்து பேசுகிறார்கள். வீர் சவார்க்கரைப்
    பொறுத்தவரை, இந்தியா ஐரோப்பாவைப் போல் தொழில்துறையிலும், நவீனத்திலும் வீறுநடை போட வேண்டும் என்கிறார். காந்திஜியோ. கிராம
    சுயராஜ்யம்தான் வழி என்கிறார்.

    காந்திஜியின் நோக்கம் உயரியது. ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது.
    பெரியாரின் நோக்கமே கேள்விக்கு உட்படுத்தக் கூடியது. சந்தர்ப்பவாதியும்தான். ஆனாலும் அவர் அனுசரித்த வழிமுறைகள், (பகுத்தறிவு, கருத்து சுதந்திரம்)
    நெடுங்கால நோக்கில் சரியானதுதான்.

    எது எப்படி இருப்பினும், பெரியாரின் சிந்தனைகளால், சில புனித பிம்பங்கள் உடைந்ததை பெரியாரை எதிர்ப்பவர்களால் கூட மறுக்க முடியாது. மேற்கில்
    பல புனித பிம்பங்கள் உடைக்கப்பட்டுவிட்டாலும், சில இன்னும் தொடர்கின்றன. ஆனால், நம் சூழலில், சில புனித பிம்பங்கள் தேய்ந்திருந்தாலும், மேலும்
    பல புனித பிம்பங்கள் கட்டுடன் தொடர்கின்றன.

    இதைத்தான் ஜெயமோகன் எழுதினார்.

  17. இதற்கு நேர் எதிர்நிலையில் ஈ.வே.ரா பற்றி ஜெயமோஹன் எழுதியிருப்பதை நான் படித்திருக்கிறேன். அந்த ஜெயமோஹன் இப்போது ஈ.வே.ரா பற்றி இப்படி எழுதுகிறார் என்றால் அவர் திமுக விலிருண்டு அதிமுகவுக்கும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கும் கட்சி மாறி தலைவர்/தலைவி காலில் விழும் கட்சிக்காரர் இரண்டாம் கட்டத் தலைவர்கள் போல ஆவதற்கு அதிக காலம் ஆகாது. ஜெயமோஹன அப்படி ஆக முடியாது. நான் அறிந்த ஜெயமோஹன் இம்மாதிரியான அபத்த தர்க்க நிலையில் சிந்திப்பவரில்லை. இந்த கட்டுரை ஏதோ தனித்த aberration-ஆ, அல்லது திடமாக மாறி வரும் கருத்து நிலையா என்பது தெரியவில்லை. வெறும் தாற்காலிக aberration தான் என்றாலும் அதைப் புரிந்து கொள்வது கடினம். இனி அவர் தொடர்ந்து எழுதி வருவதை கவனிக்க வேண்டும்.
    எதாக இருந்தாலும், முன்னர் எம் ஜி ஆரைப் பற்றி, திண்ணை வம்புப் பேச்சு மாதிரி பொறுப்பற்றுக் கேலி செய்து பின்னர் அதிலிருந்து மீள திண்டாடியது நினைவிருக்கும். அது அற்ப சந்தோஷத்துக்குச் செய்த கேலி.பொறுப்பற்ற செயல்.விளைவுகளை மனதில் கொண்டு, பொற்றுப்பற்ற செயல் என்று நான் சொல்ல வில்லை.ஒரு மனிதனின் உடல்நலக் கேட்டை கேலி செய்தல் சரியல்ல. அது போல இப்போது ஏதாவது திண்டாட்டத்திலிருந்து மீள இப்படி ஈ.வே.ரா. ஆராய்வு திசை மாறிப் போகிறதோ என்னவோ.

    சாபக் கேடு தான். தமிழ் நாட்டில் யாரும் தன் கருத்தின் பலத்தில் நிற்க ஆசைப்படுவதில்லை.ஏதாவது சுப்போர்ட் வேணும். அதுக்கு ஆவன செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

  18. ஆர் பாலாஜி,
    “காந்திஜியின் நோக்கம் உயரியது. ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது”.
    ஏன் நடைமுறையில் சாத்தியமில்லை.மேற்கத்திய மாயையிலிருந்த நேரு அதனை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. நேரு கொண்டுவந்த சேவியத் பாணியிலான வேளாண்மையை கிராமப்புறத்தை ஒதுக்கித்தள்ளி தொழிழ்துறையை முன்னெடுத்துசென்ற திட்டவியல் முறை பெரும்பாலும் தோற்றுப்போனது’. காந்தியின் திட்டம் நடைமுறைபடுத்தப்படாமலே அது சாத்தியமில்லை என்பது மேலை மோஸ்தரில் மூழ்கி அவர்களைப்போன்று மாறிவிடத்துடிப்பவர்களில் ஒருவரான பாலாஜியிடமிருந்து வருவதில் ஆச்சரியம் இல்லை.
    ஆர் பாலாஜி,
    “பெரியாரின் நோக்கமே கேள்விக்கு உட்படுத்தக் கூடியது. சந்தர்ப்பவாதியும்தான். ஆனாலும் அவர் அனுசரித்த வழிமுறைகள், (பகுத்தறிவு, கருத்து சுதந்திரம்)
    நெடுங்கால நோக்கில் சரியானதுதான்”.
    என்ன முறையை அவர் அனுசரித்தார். அவையில் பேசக்கூசும் வார்த்தைகளைப்பேசுவது.எல்லா சமூக சிக்கலுக்கு ஒரு சாதியினரேக்காரணம் என்று பிதற்றுவது. கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று உளருவது. இவையெல்லாம் கருத்து சுதந்திரமா. இந்தியாவில் உள்ளது சமயம் நம்ப்பிக்கை இவை அனைத்தும் தவறு அப்படியே அன்னியரைப்பின்பற்றுவது சிறந்தது. இதுவா பகுத்தறிவு. ஈவெரா அடிப்படையில் ஒரு சாதிவெறியர், சந்தர்ப்பம் போல் செய்ல் பட்ட அரசியல் வாதி. தமிழ்கத்தில் நிகழ்ந்த எல்லா சீர்திருத்தங்களுக்கும் அவரே காரணக்கர்தா என்று ஒரு கூட்டம் கதைவிடுகிறது. நாட்டை, மொழியை, பண்பாட்டை மேற்கத்திய மயமாக்க விரும்புகிறவர்கள் அவர் சமூகத்தில் சீர்திருத்ததிற்காகப்போராடினார் என்று கதைவிடுகிறார்கள்.

  19. ஹானஸ்ட் மேன் அவர்களின் கருத்து சரியான நெத்தியடி கருத்து மட்டுமல்ல, சிந்தனையை தூண்டுவதாகவும் உள்ளது.

  20. ஞாநி என்னதான் போலி-பகுத்தறிவு குட்டிக்கரணம் போட்டு, இந்துத்துவர்களை கொலைவெறியுடன் கேவலமாக பேசி தன் திராவிட விசுவாசத்தை காட்டினாலும் மிக எளிய முதல் சந்தர்ப்பத்திலேயே அவர் ‘பாப்பான்’ என விளித்து வசை பாடப்படுவார்.

    The same thing happened to kamal haasan also. When he launched the film “Sandiyar”, PT leader krishnasamy protested & criticised kamal in a similar manner.

  21. நிறைய சொத்தும் எந்த வேலை வெட்டியும் இல்லாத ஒரு கிழட்டு மைனர் என்ன செய்வாரோ அதைதான் ஈவேராமசாமியும் செய்தார் .கூடவே ஒழுக்கக்கேட்டுக்கு ஆசைப்பட்டும் ஆனால் கூச்சப்பட்ட ரசிக மகா குஞ்சுகளுக்கு விடுதலை அளித்தார் .

  22. பெரியார் ஒரு பொய்யர், கேடு கேட்ட அயோக்கியன் தமிழினத்தின் எதிரி. அவர் ஒரு சுயநலவாதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *