ஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு. எதை அல்லது யாரை குறிக்கிறது இந்த இலச்சினை? ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளை ஆராய்ந்தவர்களில் முக்கியமாக அஸ்கா பர்போலாவையும் ஐராவதம் மகாதேவனையும் கூற வேண்டும். (இருவருமே ஆரிய-திராவிட இரட்டையை ஒத்துக் கொண்டவர்கள். ஆனால் ஹரப்பா இலச்சினைகளை அறிந்திட வேத இலக்கியங்களில் உள்ள தொன்மங்களையே அடிப்படையாக கொண்டு இவற்றினை அணுகியுள்ளனர். இதை குறித்து இறுதியில் பார்க்கலாம்.) இது குறிப்பது முருகனாக இருக்கலாமா எனும் சாத்தியத்தை இங்கு முன்வைத்து இதனை அணுகலாம். முதலில் இந்த இலச்சினையில் உள்ள மரம் எது? இங்கிருந்து நம் தேடலை தொடங்கலாம்.
அந்த மரம் அரச மரம் என்றே முதல் கணிப்பில் தோன்றுகிறது. ஆனால் ஹரப்பா சித்திர எழுத்துகளில் கிளை பிரிந்த இலைகளுடன் காணப்படுவதை ’வட’ எனும் ஆலுடனேயே இணைக்கிறார் பர்போலா. உதாரணமாக:
– வட + மீன் = வடமீன் (அருந்ததி)
இதை ஆலமரம் என்றே கருதலாம். ஆலமரத்தின் சித்திர எழுத்துரு போலவே இந்த இலச்சினையில் காணப்படும் ‘மரமும்’ எழுவதை காணக. முருகனின் வசிப்பிடங்களில் ஆலும் ஒன்று. ’ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்’ என பரிபாடல் அவன் வசிக்கும் இடங்களை கூறும். ‘துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்’ என்று சொல்லும் கலித்தொகை. ஆல மரத்துக்கு மற்றொரு குறியீட்டுத் தன்மையும் உண்டு. அதற்கு பிறகு வருவோம். இனி இந்த ஏழு மகளிர் யார் அவர்களுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம். ஏழு மகளிரின் மிக பழமையான தொன்மம் அவர்களை சப்த ரிஷிகள் எனும் ஏழு விண்மீன்களுடன் இணைப்பதாகும். பாரத தொன்மங்களில் சப்தரிஷிகளுடன் தொடர்புடைய ஏழு பெண்கள் கார்த்திகை மாதர் அறுவரும் அருந்ததியும் ஆவர். சதபத பிராமணத்தில் (2,1,2,4) சப்த ரிஷிகளின் மனைவியரான கார்த்திகை மாதர் எழுவரென்றும் அதில் அருந்ததி தவிர பிறர் கற்பொழுக்கம் தவறியதால் தம் கணவரிடமிருந்து பிரிந்தனர் என்றும் அவரே கார்த்திகை மாதர் அறுவராகினர் என்றும் கூறப்படுகிறது. இவர்களை ஸ்கந்தனுடன் இணைக்கும் மிகப் பழமையான முழுமையான தொன்மம் மகாபாரதத்தில் (3.213.1-3.219.11) கூறப்பட்டுள்ளது. இங்கு அக்னியின் மகனான ஸ்கந்தனுக்கு கார்த்திகை மாதர் வளர்ப்பு அன்னையராக இருந்தனர் என்றும் எனவே அவர்கள் விண்மீன்களாக வானில் என்றென்றுமாக இருந்தனர் என்பதும் கூறப்படுகிறது.
கிருத்திகை எனும் வடமொழி பெயருக்கான் வேர் சொல் ‘அறுபடுதல்’. ’அறுமீன்’ என கார்த்திகை கூறப்படுவதில் ’அறு’ என்பது இதே பொருளை சிலேடையாக அளிப்பதையும் அஸ்கோ பர்போலா சுட்டுகிறார். அக்னி மூலமாக கார்த்திகை விண்மீன்கள் வானுலகில் இடம் பெற்றன என தைத்ரீய சம்ஹிதை (5.3.9) கூறுகிறது. ஆனால் கார்த்திகை மாதராகவே அருந்ததியையும் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளது என்பதை நம்மால் காண முடிகிறது. ’அறுபட்டு’ அறுவரானோரில் அருந்ததி இல்லாத போதிலும் அவள் கார்த்திகை மாதரில் முதன்மையானவள் அன அழைக்கப்பட்டுள்ளாள். அக்னியுடன் சப்த மாதரை இணைக்கும் கருத்தொன்றை முண்டக உபநிடதம் (1.2.4) கூறுகிறது. சுவாரசியமாக பின்னர் அக்னியின் ஏழு பண்புகளை குறித்து பேசும் போது அதே உபநிடதம் குகையின் வாழும் பிராணன் குறித்து கூறுகிறது. (குகன் அவனது மற்றொர் பெயர். குகையில் வளரும் கனலே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பாரதி பாடுவார்.) இந்த தொன்மத்துடன் இணைந்த நடன உரு ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அது சங்க இலக்கியங்களில் நாம் காணும் குரவை கூத்து ஆகும். ’குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கை கோத்து அந்நிலைக் கொப்ப நின்றாடலாகும்’ என்பது வரையறை. இதில் குன்றக்குரவை முருகனை புகழ்ந்து செயப்படும் வழிபாட்டு செயலாகும். சப்த அன்னையராக இருந்து அறுவரான கார்த்திகை பெண்டிர், எழு மகளிர் ஆடும் குரவை கூத்து ஆகிய இரண்டுமே தொடர்புடையதாக இருக்கலாம். இரண்டுக்கும் தொடர்புடைய ஒரு இணைப்பாக முருக பெருமான் இருக்கிறார்.
இனி அந்த ஆடு. ஆட்டை பலி கொடுத்து முருகனுக்கு பூசை செய்யப்படுதல் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது ‘சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து’ அவன் வணங்கப்படுதலை திருமுருகாற்றுப்படை கூறுகிறது. (மறி-ஆடு).
ஆலயத் தேர்களில் காட்டப்படும் திருமுருகனின் வடிவங்களை விளக்கும் முனைவர் ராஜு காளிதான் பின்வரும் வடிவத்தை சுட்டுகிறார்:
ஆலயத் தேர்களில் காணப்படும் முருகனின் இன்னொரு வடிவம் அருணதமூர்த்தி என்பது.
இந்த வடிவத்தில் காணப்படும் முருகன் ஒரு மூர்க்கமான வெள்ளாட்டை வீரபாகுவின் உதவியுடன் அடக்கி, அதை தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டார் என்பதைப் போல உள்ளது.
ஜடாமுடியுடனும், தாடியுடனும் காணப்படும் பிரும்மா ஒரு பலிதானம் கொடுக்கும் காட்சி உள்ளது.
அதில் வளைந்தக் கொம்புகளைக் கொண்ட ஒரு ஆடு யோம குண்டத்தில் விழுவது போலவும், தான் அடக்கிய ஆட்டின் மீது அமர்ந்தபடி முருகன் செல்லும் காட்சியும் காணப்படுகிறது.
இப்போது ஹரப்பா இலச்சினையை திரும்ப ஒரு முறை பாருங்கள்.
இந்த இலச்சினையில் மரம் பிளந்து நடு நிற்கும் தெய்வம் கந்த வழிபாட்டுடன் மற்றொரு வடிவத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம். பழந்தமிழர் இலக்கியத்தில் முருக வழிபாட்டின் ஒரு முதன்மை வடிவமும் மிகவும் பரவியதுமான வழிபாடு கந்து வழிபாடு ஆகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகிறார்:
சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த “கந்துடைப் பொதியில்” குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை கியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.
ராமச்சந்திரன் குறிப்பிடும் கந்து வழிபாட்டுக்கும் லிங்க வழிபாட்டுக்குமான தொடர்பை ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் ஸ்தாணு என்பதுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறார். பிரபஞ்சத்தின் அச்சாக தூணாக ருத்ரன் நிற்பதையும் யோக நிலையில் விந்துவினை மேல் நோக்கி செலுத்தும் கோட்பாட்டின் தொன்மமாகவும் இதனை அவர் காட்டுகிறார். ( The Presence of Siva,1981, பக்.119) இதை ஹரப்பா யோகி இலச்சினையுடனும் தொடர்பு படுத்த முடியும். கிரேக்க புராணங்களிலும் பிரபஞ்சங்களின் ஊடாக நிற்கும் ஒளிமயமான நெருப்பு ஜுவாலைகளாலான கம்பத்தினைக் குறித்து கூறப்படுகிறது. எர் எனும் புராணவீரன் அவனது சிதை எரியூட்டப்படுதற்கு சற்று முன்னர் உயிரளிக்கப்பட்டு வேறு சிலருடன் பிற உலகங்களுக்கு செல்கிறான். அப்பாதையில் அவனும் அவன் கூட்டத்தாரும் “ஒரு செங்குத்தான ஒளிமயமான கம்பம் போன்ற ஒன்று விண் உலகங்களையும் மண்ணுலகையும் இணைத்து சுழலவைப்பதாக” கண்டனர். (Book of the Republic, 10 ஆம் பாடல்) ஆனால் இந்த உருவாக்கங்கள், ரிப்பளிக்கில் ஏறுவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னதான பழமையான பழங்குடி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். பின்லாந்து தேசத்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்தைய நம்பிக்கைகளில் உலக சிருஷ்டி குறித்த தொன்மப்பாடலில் (kaleval) இந்த பிரபஞ்ச அச்சு வருகிறது. இப்பாடலில் அது ஸம்போ (Sampo) என அழைக்கப்படுகிறது. ஸம்போ என்பது முவ்வேர்களை பூமியிலும், ஆகாயத்திலும், சமுத்திரத்திலும் கொண்ட பிரபஞ்ச மரம். இது அதர்வண வேதத்தில் கூறப்படும் பிரபஞ்ச அச்சுக்கம்பமான ஸ்கம்பத்துடன் தொடர்புடையதாகும். (Giorgio De Santillana, Hertha von Dechend, Hamlet’s Mill: An Essay on Myth and the Frame of Time , பக்.140) அதர்வண வேதம் (10,7) இந்த ஸ்கம்பத்தைனை இருப்பையும் இருப்பின்மையையும் தனது கிளைகளாக கொண்ட மரமாக பேசுகிறது. ஒரு தொன்மம் ஒரு ஆழ்ந்த தத்துவ குறியீடாக பரிணமிக்கும் தருணம். ஆக, இலச்சினையில் மரத்தின் நடுவில் காணப்படும் இந்த தெய்வம் கந்த கடவுளின் கந்து-ஸ்கம்ப வழிபாட்டின் ஆதி வடிவமாக இருக்க வாய்ப்புள்ளது.
ஹரப்பா இலச்சினைகளில் மற்றொன்றிலும் முருகன் காட்டப்பட்டிருக்கலாம். மகாபாரதம் ( 3.22) மகிஷாசுரனையும் பத்மர்களையும் தாரகனையும் ஸ்கந்தன் வேலெறிந்து வதம் செய்ததை சொல்கிறது. பின்னர் மகிடனை வதம் செய்தவள் கொற்றவை என்றான போதிலும் பத்மாசுரனையும் தாரகனையும் முருகன் வதைத்தான் என்பது மாறவில்லை. ஹரப்பா இலச்சினைகளின் தொன்மங்களை ஆராய்ந்த சோவியத் இந்தியவியலாளர்கள் மகாபாரதம் கூறும் மகிஷ வதத்தை இந்த இலச்சினை காட்டுவதாக கருதுகின்றனர். (The Soviet Decipherment of the Indus Valley Script: Translation and Critique, Ed. Arlene R. Zide, Kamil V. Zvelebil, Walter de Gruyter,1977, பக்.114-5) எனில் நாம் முதலில் கண்ட இலச்சினை முருக வழிபாட்டின் முதன்மை அம்சங்கள் பலவற்றை (குரவை, கந்து வழிபாடு, குறமகள் வெறியாட்டு, மறி பலியிடுதல்) இணைத்து காட்டும் ஒரு இலச்சினை என்றே நாம் கண்டடையலாம்.
முருகன் குறிப்பிட்ட இந்த தொன்மங்கள் அனைத்துமே இன்றைய பாரத பண்பாட்டிலும் சரி, தமிழர் வழிபாட்டிலும் சரி நன்றாக பேணி வளர்ந்து பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உண்மையில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சரியமாகவும் மர்மமாகவும் இருக்கும் இலச்சினைகள், பாரத பண்பாட்டு சூழலில் பொருத்தப்படும் போது அழகிய முறையில் முடிச்சவிழ்ந்து நம் பண்பாட்டின் நம் ஆன்மிக மரபின் தொடர்ச்சியையும் செழுமையையும் நமக்கு காட்டுகின்றன.
இவை அனைத்துமே ஆரியர் படையெடுப்பு கோட்பாடு ஆரிய-திராவிட இரட்டை ஆகியவற்றை அறிவியல் ஆதாரமோ பண்பாட்டு அடிப்படையோ இல்லாததாகுகின்றன என்பது தெளிவு. ஒரு வேளை ஹரப்பா பண்பாட்டில் ஆரியர் வருவதற்கு முன்னால் இருந்து அவற்றை ஆரியர் உள்வாங்கினர் என கருதலாமா எனில் அது வரலாற்று ரீதியாக இயலாத ஒன்றாகும். ஏனென்றால் கார்த்திகை ஏழு சகோதரிகளாக இருந்து அறுவராகினர் என்பது பல மேற்கத்திய பாகன் தொன்மங்களில் உள்ளதாகும். ’வட’ எனும் சொல் ஆலமரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. வாடை காற்று என்பது அதிலிருந்தே வருகிறது. ‘வாடை’ எனும் சொல் காற்றுடன் தொடர்புடையதாக பிற ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிகளிலும் உள்ளன. ஆனால் தமிழிலேயே இது முழுமையான பொருளுடையதாக உள்ளது. மேலும் முருகவேள் வழிபாட்டின் மிக பழமையான மிகவும் பரவியிருந்த வழிபாட்டு முறையான கந்து வழிபாட்டின் வேர்களும் தொன்மங்களும் கூட மேற்கத்திய ‘இந்தோ-ஐரோப்பிய’ மொழிக்குழும தொன்மங்களில் வியாபித்துள்ளன. இவை அனைத்தையும் கணக்கிலெடுக்கும் போது வடமொழி தமிழ் மொழி ஆகியவற்றின் ஆதி வடிவங்கள் ஹரப்பா பண்பாட்டிலேயே இருந்திருந்தன. பின்னர் அவை அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து பரவி பல புதிய வடிவங்களை அடைந்திருக்கலாம் என கருதவே இந்த தொன்மங்களும், மொழியாடல்களும் இடம் தருகின்றன.
ஆனால் இந்த இருமை பிளவு பார்வை பல நேரங்களில் முழுமை நோக்கையும் முக்கிய கண்டறிதல்களையும் தடுத்து விடுகின்றன. உதாரணமாக மேற்கண்ட ஹரப்பா இலச்சினையில் எழுமாதரையும் கார்த்திகையையும் தொடர்புபடுத்திய அஸ்கோ பர்போலா அல்லது ஹரப்பா ஆராய்ச்சியாளர் அடுத்த இயல்பான நிலைபாடாக இந்த இலச்சினை காட்டும் தெய்வத்தை ஏன் கந்தனுடன் தொடர்புபடுத்தவில்லை எனும் கேள்வி எழுகிறது.
எதுவாயினும், பலவாறாக வெளிப்படும் பன்மையை ஏற்பவனாகவும் அனைத்து பன்மைகளும் ஒருங்கிணையும் ஒருமையாகவும் ஆறுமுகன் உள்ளான். பாரத பண்பாட்டின் சமன்வய இயக்கத்தின் முதன்மை வெளிப்பாடுகளில் முக்கியமானவர் முருகக் கடவுள்.
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உரைதலும் அறிந்தவாறே
என்பது நக்கீரர் வாக்கு.
அந்த ‘அறுவர் பயந்த ஆறமர் செல்வனை’ இந்த திருக் கார்த்திகை திருநாளில் வணங்குவோம். அதே நேரத்தில் இத்திருநாளின் பழமை வேர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உணர்வோம். இத்தகைய பழமையும் புத்தாக்கமும் தொடர்ச்சியும் கொண்ட பண்பாடுகள் உலகெங்கும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஹிந்து பண்பாடு -குறிப்பாக தமிழ் நாட்டில்-இவற்றை தன்னுள் கொண்டு இன்றும் வாழ்கிறது. எனவே இதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், பரப்ப வேண்டியதன் அவசியம், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு கட்டாயமாகிறது. பாரதத்தை இணைக்கும் மற்றொரு முக்கிய அம்சம் சப்த அன்னையர்/சப்த கன்னியர் வழிபாடு. அதனை நாம் பிறிதொருநாள் காணலாம்.
காலைத் தேநீருடன் மீண்டும் நாளை சந்திப்போம்.
இதில் மேலும் அறிய இணையத்தில்:
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
Article is informative, good and I thought as today is Thiruvannamalai Deepam regarding that morning tea may be served. In that intention I am disappointed a little but satisfied with other taste. Happy Karthikai Deepam.
Wonderful insights. Timely too. congrats. But the mundaka upanishd reference that you have presented points to the seven tongues (काली कराली च मनोजवा च…लेलायमाना इति सप्त जिह्वा:) ofe ritualistic fire that can carry the offerings to the respective deities. The Upanishad nor the commentary of Sankara speaks about the seven karthigai pengal in this context. Is it an inference? if so how? kindly clarify.
இந்துக்கள் அனைவரின் மனதிலும் “மதசார்பின்மை” குறித்த அறியாமை எனும் இருள் அகலவும் அது குறித்த நல்லறிவு எனும் ஒளிச்சுடர் மனதிற்குள் புகலவும் இந்த தீபத்திருநாளில் அருள் புரிய்மாறு அந்த முருகனை உருகி வேண்டுகிறேன் . இந்த நன்னாளில் ஒரு சில கருத்துக்களை உங்களோடு பகிர்வு கொள்வதிலே மகிழ்வு கொள்கிறேன்.
1) ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிகவேள் எனும் நெஞ்சில் குத்தும் முள் “திருவண்ணாமலை தீபத்தை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்கின்றனர்” ஆனால் அவர்கள் வீடு தீப்பிடித்து எரியும்போது மட்டும் “குய்யோ முய்யோ” என்று கத்துகின்றனர். அதுவும் நெருப்புதானே. அதையும் பார்த்து கன்னத்தில் கும்பிடு போட்டு கொள்ளாமல் குய்யோ முய்யோ என்று கூக்குரல் எழுப்புவதேன்? என்று பெரிய பகுத்தறிவு புலி என்ற நினைப்பில் பேசுவான்.
உன்னை முந்தி முந்தி தவம் இருந்து 10 மாதம் சுமந்து பெற்றவள் உன் அன்னை. உனக்கு முந்தானை விரித்து உன்னோடு வாழ்பவள் உன் மனைவி. அவளும் ஒரு பெண்தான். இவளும் ஒரு பெண்தான் எப்படி நீ உன் மனைவியிடம் நடந்து கொள்கிறாயோ அப்படியே உன் தாயிடமும் நடந்து கொள்கிறாயா? வேறு வேறாகத் தானே நடந்து கொள்கிறாய். உனை பெற்ற தாயும் உன் பிள்ளையின் தாயும் எப்படி ஒன்றல்லவோ அதே போலதான் அந்த தீயும் இந்த தீயும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ள முடியாத நீ எல்லாம் ஒரு மனிதனா?
2) தீ என்றாலே வெப்பம் நினைவுக்கு வரும். வெப்பம் என்றாலே நமக்கு சூரியன் நினைவுக்கு வரும். சூரியனுக்கும் குந்திக்கும் பிறந்தவன் கர்ணன் என்று வரும் மகாபாரதக் கதை ஒரு குப்பை. எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் சித்திரை மாதத்தில் வாட்டி வதைக்கிறது. அப்படியிருக்க சூரியனோடு நெருங்கி இணைந்து குந்திதேவி கர்ணனை பெற்றாள் என்றால் அறிவுள்ளவன எவனாவது நம்புவானா? என்று சிறியார் (sorry பெரியார்) கேட்டார்.
நாம் அன்றாடம் Newspaper களில் “இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன” என்று விளையாட்டு செய்தியிலும் “இந்திய – பாக் பேச்சு வார்த்தை இன்று நடக்கும்” என்று அரசியல் செய்தியிலும் படித்திருக்கிறோம். அப்போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் எங்காவது மோதுமா? அப்படி மோதினால் என்னாவது? என்று நினைத்திருக்கிறோமா? இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கு ஒன்று பேசுமா என்று ஆச்சர்யபடுகிறோமா? இல்லையே! இந்தியா என்ற நாட்டிற்கு ஒரு தலைவன் ( PM or President ) இருப்பார். பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டிற்கு ஒரு PM இருப்பார். அவர்கள் இருவரும் பேசுவார்கள் என்பதை நம் புரிந்து கொள்கிறோம். உலகம் சிரித்தது என்றால் உலகமா சிரித்தது? உலகத்தில் உள்ள மக்கள் சிரித்தனர் என்று புரிந்து கொள்கிறோம் இல்லையா? அதே போலத்தான் சூரியன் என்ற கிரகத்திற்கு ஒரு தலைவன் செவ்வாய் என்ற கிரகத்திற்கு ஒரு தலைவன். ஆகவே இங்கே சூரியன் என்றால் கிரகத்தை குறிக்கவில்லை. அதன் தலைவனை குறிக்கும். அந்த தலைவனுக்கும் குந்திக்கும் பிறந்தவன் கர்ணன் என்பதை புரிந்து கொள்ளாமல் மதம் மீது எரிந்து விழுகின்றனர் . ஆகவே அவரைப் பற்றி நன்கு அறியார் மட்டுமே அவரை பெரியார் என்று அழைக்கின்றனர்
சப்தமாத்ருகா குறித்த கட்டுரையில் இதை விவரிக்கலாமென்று நினைத்திருந்தேன். ஏழு பெண் தெய்வங்களை அக்னியின் நாக்குகளாக முண்டக உபநிடதம் சொல்கிறது. காளீ, கராளீ, மனோஜவா, ஸுலோஹிதா, சுதூம்ரவர்ணா, ஸ்புஃலிங்கினீ, என்பவர்கள் அந்த ஏழு பெண் தெய்வங்கள். சிறிது கவனியுங்கள். மகாபாரதத்தில் அக்னியுடன் ஏழு கார்த்திகை மாதர் உருவத்தில் கலப்பவள் ’சுவாகா’ இவள் அக்கினியின் மனைவி. இதுவே சப்தமாதருக்கும் முண்டக உபநிடதம் சொல்லும் அக்னியின் ஏழு பெண் தெய்வ பிழம்புகளுக்குமான தொன்மத் தொடர்பு. ஆதிசங்கரரின் நோக்கு வரலாற்று ஆராய்ச்சி அல்ல பிரம்ம ஞானம் எனவே இந்த வரலாற்று தொடர்பு இழைகளைக் குறித்து அவர் பேச வேண்டியதில்லை. சப்த மாதர் குறித்த கட்டுரையில் பிறிதொரு சமயம் இதனை முழுமையாக பேசலாமென்றிருக்கிறேன்.
“HONEST MAN” on November 17, 2013 at 8:50 am
ஒன்றையும் புரிந்து கொள்ளாமல் பேசிய பல நாத்திகர்களுள் திரு எம் ஆர் ராதா அவர்களும் ஒருவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே திரு HONESTMAN – போன்றோர் தந்த இந்த தெளிவான விளக்கங்களை திரு எம் ஆர் ராதா அவர்கள் கேட்டிருந்தால், தனது தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்திருந்திருப்பார். என்ன செய்வது ? அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். தங்களது விளக்கம் அற்புதம். தமிழ் கூறு நல்லுலகம் தங்களைப் போன்ற சான்றோருக்கு மிக்க கடமைப்பட்டுள்ளது. தங்கள் கடிதங்கள் தமிழ் ஹிந்துவை மேலும் சிறப்பாக அலங்கரித்து மேம்படுத்தட்டும்.
ஹர+அப்பா = ஹரப்பா என்று எப்போதோ ஒரு தாந்த்றிக் புத்தகத்தில் பார்த்த ஞாபகம்.
முருகன் ஹரப்பாவில் இருந்தாரா? அப்படின்னா இந்த “பசுபதி” என்பவர் யார்? மேலே உள்ள ஒரு படத்தில் ஒருவர் ஒரு யோகா ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறாரே அவரை பசுபதி என்றுதானே அழைத்தர்கள் என்று வரலாறு சொல்கிறது. அதை விடுங்கள், வட இந்தியாவில் பல பேருக்கு முருகன் என்ற ஒரு கடவுள் இருப்பதாகவே தெரியாதே. ஹரப்பாவை நம்மைவிட அதிகமாக ஆராய்ந்தவர்கள் அவர்கள்தானே . ஒருவேளை சரியாக ஆராயாமல் விட்டுவிட்டார்களோ 🙂
ஆர்யா-திராவிட சண்டை, இந்த கடவுள் அங்கிருந்து வந்தார், இங்கிருந்து வந்தார் என்று ஆராயும் நீங்கள், (என் முன்னோர்கள் அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஊரை விட்டு நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆட்களை குறிப்பிடுகிறேன். ஹரப்பாவில் இருந்து வந்தவர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்) ஆனால் அவர்கள் எப்படி தாழ்த்தபட்டவர்கள் ஆனார்கள் என்று உங்கள் வரலாற்றை ஆராய்ந்து சொல்ல முடியுமா 🙂
அதே போல இந்த கடவுள்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று ஆராய செலவு செய்யும் நேரங்களில் ஒரு ஒரு மணிநேரம் ஒதுக்கி ஹிந்து மதத்தின் ஆணிவேராக கருதப்படும் வர்ணாசிரம ஜாதியை, அதன் மூலம் வந்த தீண்டாமையை எப்படி ஒழிப்பது என்று சிந்திதீர்கள் என்றால் ஊரும் வளப்படும், உங்கள் மதமும் அப்படியே இருக்கும். இல்லையென்றால் நீங்கள் கடவுள்களை பற்றி ஆயிரம் வரலாறு சொன்னலும் அது கடலில் போட்ட குப்பிதான் அது மீண்டும் உங்களுக்கே திருப்பி வந்தே விடும்.
எதை முன்னெடுக்க வேண்டுமோ அதை முதலில் முன்னெடுங்கள் அப்புறம் போகலாம் முருகன் ஹரப்பாவில் கஞ்சி குடித்தார் அதற்கு இந்த இலட்சினை சாட்சி, தமிழ் அங்கிருந்துதான் பறந்துவந்தது என்று ஆராய்ச்சி செய்யலாம்.
போற்றுதலுக்குரிய எழுத்தாளர் அ.நீயின் அறிவின் விரிவையும் ஆழத்தையும் சிறப்பாக இக்கட்டுரை உணர்த்துகின்றது…
புரிந்து கொள்ளவதற்காகவும், மேலே மேலே சிந்திப்பதற்காகவும் இக்கட்டுரையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை படித்தேன்..
நம் செந்தில் மேய வள்ளி மணாளனை இப்படி ஹரப்பாவோடு இணைத்து நோக்கும் கட்டுரையை இது வரை படித்ததில்லை… மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது…
நமஸ்காரத்துக்குரிய கட்டுரை ஆசிரியருக்கு எனது மனம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்…
//சப்தமாத்ருகா குறித்த கட்டுரையில் இதை விவரிக்கலாமென்று நினைத்திருந்தேன். //
இக்கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்..
ஒரு நல்ல அற்புதமான கட்டுரையைப் படித்த திருப்தி கிடைத்தது.
திருக்கார்த்திகைத்திருநாளாம் இன்று இதனைப் படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கந்த சஷ்டி கவசத்தினையும், ஸ்கந்த குரு கவசத்தையும் அனுபவித்து படித்தவர்கள், பாராயணம் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த செய்தி ஓர் ஆனந்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும் என்பது உறுதி.
நன்றி திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே.
Excellent article.High time the Tamils realised the greatness of their Hinduism and Murugan worship and throw away all the Theera vidam concepts and the protestant christian forces which are spreading this british poison on the Tamil land.
முருக வழிபாடு ஆப்ரிக்காவிலும் உள்ளது.அதே போன்று கார்த்திகை மாதம் தான் தமிழர்களுக்கு மிக முக்கியமான மாதம் மற்றும் திருக்கார்த்திகை தான் முக்கியமான பண்டிகையாக இருந்து கொண்டிருக்கிறது.பல பழைய சமயங்களில் கார்த்திகை அல்லது தீப வழிபாடு உண்டு.
நமது பழமையான வழிபாடுகளை பேணிக்காப்பத்தின் அவசியத்தையும் ஏன் அதனை கொண்டாடுகிறோம் என்பதையும் தெளிவாக விளக்குகிறார்.
இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒருவரே.
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாலயோகா, தங்கள் அறிவுரைக்கு நன்றியும் வந்தனங்களும். இனி மேல் தங்கள் அறிவுரைகளை மனதில் கொண்டு செயல்பட முயற்சி செய்கிறேன்.
முருகனை தமிழ்க் கடவுளாக்க் தான் நாங்கள் வணங்கி வருகிறோம். ஆகவே தங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை . மன்னிக்கவும்.
பரமசிவம்
அண்ணா, இது நக்கல் மாதிரி தெரிகிறது. நக்கலாக சொல்லி இருந்தாலும் பரவாயில்லை.அதைப்பற்றி எனக்கு கவலையும் இல்லை. மோதிரக் கையால் குட்டு படுவதில் சந்தோசமே.
வர்ணாசிரம ஜாதி தீண்டாமையை தாண்டி பல நல்ல விஷயங்கள் சனாதனத்தில் இருக்கிறது. அந்த நல்ல விஷயங்கள் எல்லாம் மனிதனை பிறப்பால் பிரித்து பார்த்ததின் விளைவாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. எப்படி புத்திசம் தன் உண்மையான முகத்தை மறந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறதோ அப்படிதான் ஹிந்து மதமும் போய்க்கொண்டிருக்கிறது. அப்புறம் நான் அறிவுரை எல்லாம் சொல்லவில்லை. என் மனதிற்கு தோன்றியதை சொன்னேன்.
நன்றி.
மிக சிறந்த கட்டுரை.
பல அறிய செய்திகள். அ.நீ அவர்களுக்கு நன்றி.
அன்புள்ள பாலயோகா,
நான் ஏன் உங்களை நக்கல் செய்ய வேண்டும்? நான் நக்கல் செய்யவில்லை. உங்கள் பார்வையை அல்லது அறிவுரையை அல்லது வழிகாட்டுதலை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவ்வளவுதான். நக்கல் போல தோன்றியிருந்தால் மன்னிக்கவும்.
Balayoga, you could have written bit mildly. If you don’t like the above article leave it. There are many more interested people . I don’t know about your personal life. Willl u wholeheartedly welcome an ‘electrician’ who repaired the wire at your house, to your kitchen and offer him meals ? U will simply ask him to go home by giving his fees. U know one thing ? Adi Sankara did sashtanga namaskaram in front of a ‘chandalan’ in Kasi, when he made him understand that God resides inside every one. ‘Untouchability’ is for the healthy atmospere only . No one is big no one is small. Can u tell which part of the body is important ? All are essential. Is it possible for u to eat with yr left hand and wash after going to bathroom with your right hand ? Just try friend for one day. No hand is inferior. When respecting elders we fold both hands to indicate ‘vanakkam’. Will the electrician allow you u to do the electrical work ? If u touch the wire at the wrong place , shock will through you out. Similarly, varnashrama dharmam asks different people to do different works. Don’t blame it. Not only brahmins even kshatriyas or vaisyas misbehaves with the 4th varna people, don’t blame me. I will definitely support you that all varna-people should respect each other for the betterment of the society. Please accept my love.