இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி

மழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார்… “வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே இருக்கிறேன். ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ?” அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது “சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் தான்… “என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல். அடுத்த பால பாடம் “பேராசையும் கபடமும் இல்லாமல் இருக்க வேண்டும்”….

View More இரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி

ஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்

ஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு. எதை அல்லது யாரை குறிக்கிறது இந்த இலச்சினை?…. பலவாறாக வெளிப்படும் பன்மையை ஏற்பவனாகவும் அனைத்து பன்மைகளும் ஒருங்கிணையும் ஒருமையாகவும் ஆறுமுகன் உள்ளான். பாரத பண்பாட்டின் சமன்வய இயக்கத்தின் முதன்மை வெளிப்பாடுகளில் முக்கியமானவர் முருகக் கடவுள்… அந்த ‘அறுவர் பயந்த ஆறமர் செல்வனை’ இந்த திருக் கார்த்திகை திருநாளில் வணங்குவோம். அதே நேரத்தில் இத்திருநாளின் பழமை வேர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உணர்வோம்….

View More ஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)

திருவண்ணாமலை மகாதீப விழாவில் வெனிஸ் நகரைச் சேர்ந்த சிவபக்தர்கள் குழுவினர் நெய் காணிக்கை, கிரிவலம்… கேரள-தமிழக மக்கள் இடையே உள்ள பாசப்பிணைப்பையும் நல்லுறவையும் கெடுக்கும் வகையில் கேரள கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது… டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென்று பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். சவுதி அரேபிய பணபலத்துடன் செயல்படும் வஹாபி இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு பிளவுபடுத்துவதாக சமீபத்திய பேட்டி…

View More இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.

View More அருணையின் கருணை

பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

.. சென்னை பிருங்கி மலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது… புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ள பாதிரியார் தற்போது இந்த மலையிலும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன…

View More பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா