”வேதாந்திக்கு எதுக்காக்கும் சுதேசி …. தேசம் தேசபக்திங்கதெல்லாம் எல்லாத்தையும் போல மாயைன்னுல்லா பெரியவங்க சொல்லுகாங்க…. “ கடல்காற்றுடன் சேர்ந்து எழுந்தது திருநெல்வேலி மணத்துடன் எழுந்தது அந்த கருத்து… வங்கத்திலிருந்து வந்திருந்த அந்த இளம் சன்னியாசிக்கு தமிழ் ஓரளவு பழகியிருந்ததென்றாலும் திருநெல்வேலி தமிழின் வேகமும் தன்மையும் புரியவில்லை. அதை புரிந்து கொண்ட தலைப்பாகைகாரர் ஆங்கிலத்தில் மீண்டும் சொல்கிறார்: “வேதாந்திக்கு எல்லாம் பிரம்மம். பின் எங்கிருந்து வருகிறது சுதேசி? எதற்கு இந்த தேசபக்தி… வேறெந்த பற்றையும் போல பிணைக்கும் பாசம் எதற்கு தேவை ஆத்ம சாதகனுக்கு?”
கேட்டவர் வேதாந்தத்தில் ஊறியவர். நெற்றி முழுவதும் நீறும், கூர்மையான கண்களும் கொண்ட அந்த ஒட்டப்பிடாரம் வக்கீலின் பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம். வ.உ.சி. அந்த வங்க சன்னியாசி ‘சசி மகராஜ்’ என அன்புடன் அழைக்கப்படும் சுவாமி ராமகிருஷ்ணானந்தர். விவேகானந்த சுவாமிகளால் தென்னகத்துக்கென தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட துறவி. சசி மகராஜ் வ.உ.சியிடம் தேசபக்தியின் ஆன்மிகத்தன்மையை விளக்கினார். தேசம் இன்றிருக்கும் நிலையில் ஆன்மிகம் என்பது தேசசேவை என்பதை விளக்கினார். உண்மையான அத்வைதி பிறர் வேதனையை தன் வேதனையாக உணர்பவன். தன் சுகங்களை மாயையாக துறப்பவன். மக்களின் துயரங்களை மாயை என சொல்வது தப்பும் உக்தி மட்டும்தான். துயரங்களை துடைப்பவனே உண்மை வேதாந்தி. உன்னை சுற்றி வாழ்வோர் துயரைத் துடைப்பதைக் காட்டிலும் பெரிய ஆன்மிக சாதனை என்ன? கட்டுண்டு இருப்பவரின் தளை அகற்றி விடுதலை தீபத்தை ஏற்றுவதைக் காட்டிலும் பெரிய இறை வழிபாடு என்ன இருக்க முடியும்?
சென்னையிலிருந்து திருநெல்வேலி திரும்பிய வ. உ. சி சுதேசி அனல் தாங்கி வந்தார். அதன் பின்னர் நிகழ்ந்த வரலாறு தியாகமும் துயரமும் நிரம்பியது. நேற்று அவரது நினைவு தினம். நான்கு ஆண்டுகள் மிக மோசமாக சிறையில் அவதிப்படுகிறார் வ உ சி. அவரது உடல்நலம் சீர் கெடுகிறது. அவரது குடும்பம் அந்த நான்கு ஆண்டுகளில் கடன் சுமையால் தத்தளிக்கிறது. காங்கிரஸ் மேலிடம் அவரது கடிதங்களுக்கு ஒற்றை வரிகளில் பதில் அனுப்பி அலைக்கழித்து காலம் தாழ்த்தி அவருக்கென்று சேகரிக்கப்பட்ட பணத்தை வழங்குகிறது. இறுதிவரை துயரத்துடன் வாழ்ந்து மடிகிறார் அந்த மனிதர். தேச பக்தியும் தமிழ் உணர்வும் கொண்ட அந்த பெரியவரை இன்று சாதி சிமிழில் அடைத்து வேடிக்கை பார்க்க விரும்புகிறது ஒரு கூட்டம்.
அந்த மகத்தான தேசபக்தரை சிறைவைத்து செக்கிழுக்க செய்து சித்திரவதை செய்த வெள்ளைக்காரன், அவரை உதாசீனம் செய்த காங்கிரஸ் மேலிடம்… இவர்களெல்லாம் அவருக்கு செய்த கொடுமைகள், அவமானங்கள் போதாதா? இந்த ஆழமான தமிழறிஞரைசாதிய சிறையில் அடைத்து இழிவு படுத்தி அவருக்கும் குருபூஜை போட்டு என்றென்றைக்கும் அவரை சாதிய செக்கிழுக்க வைக்க வேண்டுமா? போதும் வாழும் போது அவர் பெற்ற சிறைவாசமும் அவர் அனுபவித்த கொடுமையும்.
வேண்டாம் அவருக்கு குரு பூஜை.
// தேச பக்தியும் தமிழ் உணர்வும் கொண்ட அந்த பெரியவரை இன்று சாதி சிமிழில் அடைத்து வேடிக்கை பார்க்க விரும்புகிறது ஒரு கூட்டம் //
எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
வ.உ.சி.போன்ற தியாக செம்மல்களை அரசும், மக்களும் மறந்துவிட்டு போகும்போது, கடைசியில் ஜாதி உணர்வாளர்களாவது அவர்களை தூக்கி பிடிக்க முயற்சிக்கிரார்களே என்று நான் பெருமைப்படுகிறேன்.
நான் நெல்லை சீமைக்கு சென்று வரும்போதெல்லாம், மணியாச்சியில் ரயில் நிற்கையில் இறங்கி அந்த நிலையம் முழுவதும் தேடி அலைந்திருக்கிறேன். எங்காவது அந்த மாவீரனின் (வாஞ்சிநாதன்) ‘அடையாளம் எதாவது உள்ளதா….?’ என்று…!
அதேபோல் ஈரோட்டிற்கு அருகில் உள்ள சென்னிமலைக்கு, சிரகிரி வேலவனை தரிசிக்க செல்லும்போதெல்லாம், கொடிகாத்த குமரனின் ‘பாழடைந்த வீட்டை’ பார்த்து வேதனையுற்றிருக்கிறேன்.
இன்றைக்கு அந்த தலைவர்கள் பிறந்த ஜாதிய உணர்வாளர்களாவது, அவர்களை தூக்கி பிடிக்க முயற்சிக்கிரார்களே என்று நான் ஒவ்ஒருமுறையும் பெருமைபட்டதுண்டு.
ஆசிரியர்கள் பணி….
ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற தேசிய, தெய்வீக தலைவர்களின் பிறந்த – நினைவு நாளில் அவர்களின் உருவ படங்களை அலங்கரித்து வைக்க வேண்டும். அவர்களை பற்றி நினைவு கூறுதல் வேண்டும். என்னை பொறுத்தவரை இது ஆசிரியர்கள் பணி. அவர்கள்தான் செய்ய வேண்டும்.
எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில்
கடந்தகாலம் குறித்த பெருமிதமும்,
நிகழ்காலம் குறித்த வேதனையும்,
வருங்காலம் குறித்த பொற்கனவுகளும் நிறைந்துள்ளதோ,
அந்த தேசம்தான் முன்னேற்றமடையும்.
– மகரிஷி அரவிந்தர். மகாகவி பாரதி, சுவாமி விவேகனந்தர்.
– சு.சண்முகவேல், ஈரோடு.
இந்தியாவின் சரித்திரத்தை அறுபது ஆண்டுகளில் தலை கீழாக எழுதி இளைய சமுதாயத்தின் நினைவையே மாற்றிய பெருமை கம்முநிச்டுகளுக்கும் கோங்க்றேச்சிற்கும் மட்டுமே சேரும். அதனை மாற்றும் முயற்சியில் சாதியின் மூலம் தோல்வி காணல் தவிர்க்க வேண்டிய காரணி. மேலும் களைய வேண்டியவற்றை எதற்கு மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்? விடுதலை போராட்ட வீரர்கள் சாதியின் அடிப்படையில் போராடவில்லை. மாறாக ஒருங்கிணைப்பை குறியாகக் கொண்டிருந்தனர் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இளைய சமுதாயமாவது சாதியை தாண்டி வெளிவந்து உண்மை சரித்திரத்தை உணர்ந்து செயல் பட்டால் ஒருவேளை அடுத்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் தலைவிதி மாறும் வாய்ப்புள்ளது. அ.நீ. அவர்களின் பணி இவ்வழியில் மக்களை இட்டுச்செல்லும் என்று உறுதியுடன் நம்புகிறேன். வாழ்க உங்கள் முயற்சி.
ரொம்ப நன்றாக எழுதுகிறார்
ஆனால் எத்தனை பேருக்கு இந்த உண்மைகள்
தெரியுவரும்
வ.உ.சி. குரு பூஜை – அந்த தவறை லட்சம் முறை செய்வோம் – வேளாளர்.காம், ஆசிரியர் குழு
https://www.velaler.com/index.php/world/world-news/us-politics/702-editorial-19112013
தேசியவாதிகள் செய்யாததை சாதியினர் செய்கிறார்களே என்று இந்த விஷயத்தில் ஆறுதல்படமுடியாது; உயர்ந்த பீடத்தில் இருந்தவர்களை இழுத்துத் தரையில் தள்ளும் வேலைதான் இது; சாதியினரே தேசீயவாதிகளைக் கொண்டாடுவது – அதாவது அவர் தம் சாதியினராக இல்லாதபோதும்கூட என்ற நிலையிருந்தால் பெருமைப் படலாம், இது முன்னேற்றம் என்று;
இந்த நிலையில் என்னவாகுமென்றால் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சாதி அமைப்புக்களிடையே விவகாரங்கள் வரும்போது ஒருவன் வ உ சி யைக் கேவலமாகப் பேசலாம், இன்னொருவன் அம்பேட்கரைக் கேவலப்படுத்தலாம் மற்றொருவன் வாஞ்சிநாதனை சிறுமைப்படுத்த முயற்சிக்கலாம் – இது ஏற்கனவே நடந்திருக்கிறது.
what is wrong in it when the Govt itself did not do anything to remembrance of the freedom fighter VOC? It may not be difficult to digest the fact that Hindus are caste oriented in many aspects not only in religion but also in the politics. Let others also have identification!
It is better not to remember VOC at all than to honour him as a caste leader. That is more insulting.
Frankly, tell me, how many of us today remember our freedom fighters?
We simply build memorials & statues.
Our political leadrers garland them on their birthdays & pose for photos.
VOC was igored by the congress once he was back from jail & died a pauper.
His friends Subramania Siva contracted leprosy & died an unhappy death.
Did anyone care?
பார்பனர்கள் அவர்களுக்கு உரிய தங்கள் இனத்துக்கு உரியவர்களை குருவாக ஏற்றுகொள்கிறார்கள் அது போல் பிள்ளை சமுதாயம் வ.உ சி தேவர் சமுதாயம் பசும்பொன் தேவரை தங்கள் குருவாக ஏற்றுகொள்வதில் தவறு இல்லை. வழிபாட்டினால் இன கலவரம் ஏற்படுமானால் அரசு கவனிதுகொள்ளும். தனி நபர் வழிபாடு ஏற்றுகொண்ட ஒன்று.
வேளாளர்.கம மற்றும் ஆண்டாள் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ! தனி நபர் வழிபாட்டில் ஜாதிய பற்றில் பெருமை கொள்ளும் இவர்கள் நோயில் வீழ்ந்து பாயில் கிடக்கும் போது தெரியும் ஜாதியும் வாராது தனி நபரும் வாராது கடை வழிக்கு என்று.
வ ஊ சியின் பேரன் நோயில் வாடுகிறார் அவருக்கு உதவி செய்ய இந்த ஜாதி கூட்டம் வரவில்லை ஆனால் அவர் இழுத்த செக்கிற்கு மாலை போட்டு போடோக்குபோஸ் கொடுக்கிறார்கள் என்ன ஜாதி அபிமானிகள் !!
அம்மா ஆண்டாள் , சித்தி அடைந்தவர்களுக்கும் ஞானிகளுக்கும் தான் குரு பூஜை . மற்ற மனிதர்களுக்கு பண்ணுவது திவசம். வ ஊ சி, முத்துராமலிங்க தேவர் போன்றவர்கள் உம்மையும் என்னையும் போன்ற மனிதர்கள். அவர்கள் வாழ்ந்தபோது ஜாதிகள் சோறு போடவில்லை, அவர்களது நற்செயல்கள்தான்.
ஞானி என்பவர் முற்றிலும் துறந்தவர்கள். மனிதனும் தெய்வமாகலாம். தேச பக்தியும் கடவுள் பக்திதான். தேவர் பிள்ளை இவர்கள் தன்னலம் கருதாமல் உடல் பொருள் ஆவி இழந்தவர்கள் இது தனி நபர் வழிபாடு இல்லை. செய்த தியாகத்திற்கு நன்றிகடன். பகவனை தவிர எல்லோரும் மனிதர்தான்.
காங்கிரசை குறை சொல்லும் இந்துத்துவர்கள் கப்பலோட்டிய தமிழனின் குடும்பத்துக்கு என்ன செய்துவிட்டார்கள் ? அவரது கொள்கைக்காவது மதிப்பு கொடுத்து, வ.உ.சி. செய்தது போல முழுக்க முழுக்க சுதேசிகளுக்கான ஒரு பல்நாட்டு நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டார்களா ?
அப்படி எதுவும் செய்யாமல் குறை சொல்வதுதான் இவர்கள் வேலையாக இருந்து வருகிறது. பாபர் மசூதியை இடித்தார்கள். இப்போது வ.உ.சியின் குருபூஜையை நிறுத்த சொல்கிறார்கள்.
இந்த கட்டுரை ஆசிரியர் எழுதுவது எல்லாமே வெறுப்பை கொட்டுவதாகவும், எதையாவது அழிக்க வேண்டும் என்பதாகவுமே இருக்கிறது. நடக்கிற நல்லதுகூட நடக்கக்கூடாது என்கிறார்.
தமிழ்நாடும் இந்தியாவும் மதிக்காத வ.உ.சியை அவரது சமூகத்தவர்கள் மதித்து குருபூஜை கொடுக்கிறார்கள். அவருக்கு அவர்களாவது கொடுக்கும் மரியாதையைகூட கொடுக்கக் கூடாது என்று சொல்லுவதுதான் இந்துத்துவம் என்றால், அந்த இந்துத்துவம் நாசமாகப் போகட்டும்.
இம்மானுவேல் சேகரனுக்கு கூட குருபூஜை நடத்துகிறார்கள். இந்த கட்டுரை ஆசிரியர் அதை பற்றி எதுவும் குறை சொல்லவில்லை என்பது மட்டும் ஆறுதல் தருகிறது. அதை பற்றி எல்லாம் இந்துத்துவர்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள். 🙂
இந்த கட்டுரைகளை எல்லாம் படிக்கும்போது மதம் ஒரு அபின் என்று எங்கள் மார்க்ஸ் சொன்னது சரி என்பது நிறுவப்படுகிறது.
மார்க்ஸ் கொள்கையை மறுபடியும் பறைசாற்ற இன்னொரு ராசா ((அதாவது வரதராசனார்)) வந்துட்டாரையா வந்துட்டார். மதம் ஒரு அபின். OK எந்த மதம் மட்டும்? இந்து மதம் மட்டும் ஒரு அபின். ஆனால் முஸ்லிம் மதம் ஒரு வயாக்ரா அப்படிதானே?
இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கி தந்தது (சிறு அளவிற்கு) காந்தியும் (பெருமளவிற்கு) நேரு குடும்பமும் தான் என்ற எண்ணம் காங்கிரஸ் இடம் உள்ளது. இந்திரா இறந்த தினம் மற்றும் பிறந்த தினம் என்று கொண்டாடும் காங்கிரஸ் மற்றவர்களை மறந்து விட்டது. மறக்கடிக்க செய்துவிட்டது. தியாக செம்மல் வ.உ.சி தினத்தை அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவரை ஒரு ஜாதி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடகூடாது வ.உ.சி போன்ற எண்ணற்ற தியாகிகளின் உழைப்பில் கிடைத்த சுதந்திரத்தை முழுக்க முழுக்க தன கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா ஆகியோரின் மூலமே கிடைத்து போல நினைக்கும் ராகுல் இடம் கேட்கவேண்டிய கேள்வி இது. (அதாவது வ.உ.சி க்கு இந்துதுத்வம் என்ன செய்தது? என்றகேள்வி)
/////காங்கிரசை குறை சொல்லும் இந்துத்துவாக்கள்///// வ உ சி யை கொண்டாடாத காங்கிரஸ் கட்சி மீது நீங்கள் குறை கூறமாட்டீர்களாக்கும்! காரணம் என்னவோ?
////மசூதியை இடித்தது/////—–. ஐயா மக ராசா! மசூதி இடிப்பதற்கு முன்னால் (அதாவது 6-12-1992க்கு முன்னால்) 36 கோவில்கள் காஷ்மீரில் முஸ்லிம் தீவிரவாதிகள் இடித்த போது எங்கே போயிருந்தீர்கள் ராசா? காஷ்மீர் நம்ம நாட்டில்தானே இருக்கிறது? உங்கள் கண்களுக்கு கோவில் என்றால் அபின். மசூதி என்றால் வயாக்ராவா? அப்படிதானே?
////இம்மானுவேலுக்கு ———————–நடத்துகிறார்கள்//////////// நல்லவர்களுக்கு விழா எடுப்பதில் (அதாவது குருபூஜை) யார்க்கும் வருத்தமில்லை. ஆனால் அதை அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் வ உ சி ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சுதந்திரம் கிடைக்க கஷ்டப்படவில்லை. கஷ்டப்பட்ட வ உ சி யின் வாரிசுகள் வறுமையில் வாடும்போது நேருவின் குடும்ப வாரிசுகள் மட்டும் வாழையடி வாழையாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது ஆகவே நாட்டுக்கு நல்லது செய்தார்கள் என்றால் (அது யாராக இருக்கட்டும் நீங்கள் குறிப்பிடும் இம்மானுவேல் உட்பட)) அவர்களை நாடே கொண்டாட வேண்டும். அதை செய்ய தவறிய காங்கிரஸ் கட்சிக்கு வரும் தேர்தல் தக்க பாடம் புகட்டுங்கள்
இந்த கட்டுரையாளர் வெறுப்பை கொட்டுகிறாராம்.இப்படி சொல்கிறவர்தான் “இந்துத்துவம் நாசமாக போகட்டும்” என்று சபிக்கிறார் . நான் கூறுகிறேன். கருத்துக்களை மார்க்ஸ் என்ற கருப்பு கண்ணாடி போடாமல் வெள்ளை கண்ணாடி போட்டு இதய சுத்தியோடு கருத்துக்களை நோக்கி தெளிந்து நீங்கள் நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வளர்க என்று வாயார வாழ்த்தி மனதார மகிழ்கிறேன்.
\\ இந்த கட்டுரைகளை எல்லாம் படிக்கும்போது மதம் ஒரு அபின் என்று எங்கள் மார்க்ஸ் சொன்னது சரி என்பது நிறுவப்படுகிறது. \\
அன்பர் வரதராசனார் அவர்களின் உத்தரங்களை வாசிக்குங்கால் கம்யூனிஸ் மதம் எப்படி இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ மதத்துடன் போட்டி போடுகிறது என்பதும் கம்யூனிஸ் மத அபின் அன்பர் அவர்களை எப்படி மயக்கியுள்ளது என்பதும் புரிகிறது 🙂
பிள்ளைக்கு குருபூஜை வேண்டாம் என்று சொல்வதில் ‘குடுமி’ வெளித்தெரிகிறதே…சைவ சித்தாந்தத்தை அல்லவா முன்னிறுத்தினார் வஉசி. பார்ப்பனம் சனாதன வர்ணத்தை முன்னிறுத்த அது தடை இல்லையா?
Submission is stressed more from the childhood in our culture. eg Maatha, Pitha, Guru, Theivam. (different explanations are given for this). Whle first two are natural, Guru shows the way of life/knowledge &/or to God.. As most gurus were not showing the knowledge to all, the reverence should have gone to higher level leading to total submission to Guru as Guru himself as demigod/god in the earlier/middle periods. As there is enough freedom and choice to any god, Gurus/Gnanis were also chosen as god.
Every caste has Identity crisis to show/align with popular leaders/ Wealth/Positions for Power.
In this Iyers/Iyengars have more Gurus and it was easier for them to make any one as god. (Note: The Evangelists first few sentences will contain”….Iyer has converted or secretly following the christianity…Who is the head of Teresa Missionaries—-Nirmal Joshi…”)
Now, question raised by Nellaiooran is valid. while Sankaracharya is worshipped as God and Many temples have the portraits of the three, There was a huge cry when Kirubanatha Vaariyar statue was kept in Kangeyanallur Murugan Temple and when few tried to make him as 64th. Why double standards?
இங்கே குடுமி என்று தேவை இல்லாமலும் புரியாமலும் ஒரு சொல்லை பயன்படுத்தி உள்ளார் ஒரு நண்பர். இதே தளத்தில் வெளிவந்துள்ள பல பழைய படங்களை பார்த்தால் சில உண்மைகள் புரியும். எங்கள் காலத்தில், எங்கள் கிராமத்தில் எல்லா சாதியினருமே குடுமிதான் வைத்திருந்தனர். எண்ணெய் செக்கு வைத்து எண்ணெய் ஆட்டும் நாட்டு செக்கு உரிமையாளர் முதல், பெரிய கொத்தனார், மரவேலை செய்யும் தச்சர் , கோயிலில் திருமுறைகளை ஓதும் ஓதுவாமூர்த்திகள் உட்பட ,அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் குடுமி என்பது அனைத்து சாதியினரும் வைத்திருந்த சிகை அலங்காரமாக இருந்தது. இப்போது கோயிலில் பூஜை செய்யும் பார்ப்பான் கூட குடுமி வைக்காமல் கிராப்பு தலையுடன் தான் உள்ளனர். இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், உருவு, நடை,உடை, கண்டு எள்ளாமை வேண்டும். அது பெரிய பாவம். இன்னும் கொஞ்ச நாள் போனால், வெட்டி கட்டிய தமிழனைக் கூட எள்ளி நகையாடும் காலம் வந்துவிடும். இப்போதே, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வீ ஆர் கிருஷ்ண அய்யர் , வெட்டி கட்டிக்கொண்டு , ஒரு விழாவுக்கு சென்றபோது, அவரை உள்ளே விட மறுத்து விட்டார்கள் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது அனைவரும் அறிந்ததே. அப்போது வெட்டி கட்டிய ஒரு தமிழக அரசியல் தலைவர் அதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. பிறர் அவமானப்படுத்தப்படும்போது, நாம் ஒன்றும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதித்தால், நாம் அவமானப்படும் சூழல் வருங்கால், நமக்கும் ஆதரவாக யாரும் வாய்திறக்க மாட்டார்கள்.
நெல்லை சைவபிள்ளைகளின் சைவ சித்தாந்தத்தை முன் நிறுத்துவதில் எதிர்க்க வேதாந்தத்தை சனாதனத்துடன் ‘அதி புத்திசாலித்தனமாக’ நுட்பமான அரசியல் சேர்ந்த கட்டுரை இது. அந்த வேதாந்தி சொல்லவில்லையெனில் வஉசி அப்படி மாறிஇருக்க மாட்டாராம்…வாழைப்பழத்தில் ஊசி சொருகுவதைப்போல எழுத்து.
பிராமணர்களின் வீடுகளில் உயிரோடு இருக்கிற-இல்லறத்தில் ஈடுபட்ட-நபர்களின் புகைப்படங்களுக்கு பூஜை செய்வது தெவசம் தானே???
ஏன் பெண்ணோடு சல்லாபம் செய்த,கொலை குற்றமே சாட்டப்பட்டிருக்கும் சங்கராச்சாரியாரை வணங்காதீர் என்று ஒரு மாலை தேநீர் கட்டுரை எழுதலாமே?
சித்தாந்தத்தை மிக அழுத்தமாக சொல்லிய சைவ பிள்ளைகளை பொறுக்காத பிராமணீயம் இப்படி உள்குத்து குத்துவதில் கில்லாடிகள்தான்…
இங்கே அரசுகள் ஒன்றும் செய்யவில்லை.சாதி சங்கம் அதை செய்வது வரவேற்கத்தக்கது.
நெல்லை ஊராரே,
முதல் தவறு , பார்ப்பனர்களின் வீடுகளில் உயிரோடு உள்ள, யாருடைய படத்துக்கும் எந்த பூஜையோ, திவசமோ செய்ய மாட்டார்கள். எல்லா சாதியினருமே, இறந்த முன்னோரின் ( இறந்துவிட்ட தாய், தந்தை, பாட்டி, தாத்தா, கொள்ளுப்பாட்டி, கொள்ளுத்தாத்தா, எள்ளுப்பாட்டி, எள்ளுத்தாத்தா என்று ) திதி நாளில் திவசம் செய்வது தான் மரபு.
வ உ சி சுதந்திர போராட்ட வீரர் எனவே அவருக்கு தமிழக அரசே அவரது பிறந்த நாளிலும், இறந்த நாளிலும் மரியாதை செய்ய வேண்டும். தமிழகத்தை ஆண்ட தீய சக்திகள் ஆன திராவிட இயக்கங்கள், காலஞ்சென்ற சுதந்திர போராட்ட வீரர்களை உரியமுறையில் கவுரவிக்க தவறியதால் தான், பசும்பொன் தேவர் , வ உ சி போன்றோர் சாதி சங்கங்களின் பிடியில் அடைபட நேர்ந்து விட்டது. திராவிட இயக்கங்கள் தமிழகத்துக்கும் , நாட்டுக்கும் செய்துள்ள தீங்குகள் ஏராளம்.
சங்கராச்சாரியை வணங்கு , இன்னொருவரை வணங்காதே என்றெல்லாம் தமிழ் இந்து என்றும் சொல்லியது இல்லை, என்றும் சொல்லவும் சொல்லாது. நாம் யாரை வணங்க வேண்டும் என்பது நாமே முடிவு செய்துகொள்ளவேண்டிய விஷயம். இதில் பிறர் தலையிட முடியாது. நம் நாடு இன்னும் ஐந்து மாதங்களில் ஒரு பொது தேர்தலை சந்திக்க விருக்கிறது. சுமார் 80 கோடி வாக்காளப் பெருமக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இந்துக்களின் நியாயமான உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும், நம் நாடு நல்ல அரசியல் தலைமை பெற்று சிறக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் , நம் நாட்டை மீண்டும் அழிக்க முற்படும் நேரு குடும்ப தலைமை , நாட்டுக்கே பேரபாயம் என்ற உண்மையை உணர்ந்து , நேரு எப்படிப்பட்ட பெருமகனார் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
அதேபோல, சங்கராச்சாரியார்கள் அரசியல் பதவிகளுக்கு போட்டிபோடும் நிலை ஏற்பட்டால், அவர்களது தகுதிகள் அல்லது தகுதியின்மை பற்றி , நீங்கள் மட்டுமல்ல, நம் நாட்டில் உள்ள குப்பனும், சுப்பனும் கூட விமரிசித்து, விவாதம் செய்வார்கள். அதை யாரும் தடுக்க மாட்டார்கள். திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதியது எதுவும் தவறல்ல. குறுகிய அரசியல் மற்றும் சாதி கண்ணோட்டத்தில் அவர் எதனையும் எழுதவில்லை.
தாங்கள் என்ன கூறவருகிறீர்கள் என்பது புரியவில்லை. அத்வைதம் என்பது யாரோ ஒரு சங்கராச்சாரியால் உருவாக்கப்பட்டதல்ல. ஆதி சங்கரர் கூட அத்வைதத்தின் வழி வந்தவரே தவிர அத்வைதத்தை உருவாக்கியவர் அன்று. சங்கர மடம் என்பது இந்துமதத்தின் எத்தனையோ பிரிவுகளில், எத்தனையோ நிறுவனங்களில் ஒன்று , அவ்வளவுதான். ஒரு சங்கராச்சாரியார் பெண்ணோடு சல்லாபம் செய்தபோது, தாங்கள் சாட்சியாக [தேவையற்ற தனிமனித தாக்குதல் நீக்கம் செய்யப்படுகிறது-ஆசிரியர் குழு] இருந்தால், வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் ஏறி சாட்சி சொல்லுங்கள் அய்யா.
இந்த இடத்தில் தீர்க்கமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்துமதம் என்பது பூரண சுதந்திரங்களின் தொகுப்பு. இங்கு எல்லைகள் இல்லை. இது மட்டுமே, மற்றதெல்லாம் இல்லை என்று எல்லை வகுப்பவன் இந்து அல்ல. என் வழி எனக்கு , உன் வழி உனக்கு என்பதே இந்து மதம். என் வழி மட்டுமே சரி, பிறவழிகள் சரி இல்லை என்று சொல்வது ஆபிரகாமிய மதங்கள். இந்த வேறுபாட்டினை மனதில் நன்கு புரிந்து கொண்டால் , இப்படி எல்லாம் எழுதியிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் திரு வ உ சி அவர்களை சந்தித்து பேசியது கற்பனை அல்ல.யாரும் மறுக்கமுடியாத உண்மை. பல நூல்களில் இந்த உரையாடல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அநீ- அவர்கள் அதனை மேற்கோள் மட்டுமே காட்டியுள்ளார். மேலும் இராமகிருஷ்ண மடம் இந்து மதத்தினரின் எல்லாப் பிரிவையும் அணைத்து செல்லும் மடம் ஆகும். சைவம், வைணவம் ஆகிய இரு முக்கிய பிரிவுகளையும் அவர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இன்னும் ஒருபடி மேலான உண்மை என்னவென்றால், ராமகிருஷ்ண பரமஹம்சர் , அத்வைத உபதேசம் பெற்ற பின்னரும், அன்னை பவதாரணி- காளியை தொடர்ந்து வழிபடும் சிறந்த சாக்தராகவே திகழ்ந்தார். எனவே, ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுதமொழிகள் மூன்று தொகுதிகளையும் படித்து , அவரைப்பற்றியும், ராமகிருஷ்ணரின் தொண்டர்கள் பற்றியும் சரியான புரிதல் பெறவேண்டும் என்று மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்.
திரு கே எம் வீ அவர்களே,
சங்கராச்சாரிகளின் படம் , அவர்களின் மடம் நடத்தும் / பராமரிக்கும் கோயில்களில் மாட்டப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால் அதனை யாரும் வணங்குவது கிடையாது. கோவையில் காமாட்சி கோயிலில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் பிற கடவுளர் சிலைகள் உள்ள சந்நிதிகளை அனைவரும் வணங்குகிறார்களே தவிர, சங்கராச்சாரியார் படத்தை யாரும் வணங்குவது கிடையாது. திரு அநீ அவர்கள் இதே தளத்தில் எழுதியுள்ள பல கட்டுரைகளை தாங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள் என்று தெரிகிறது. காலஞ்சென்ற மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களைப்பற்றிக்கூட , மிக சரியான விமரிசனங்களை கடுமையாக அதேசமயம் வாதங்களை தொகுத்து வைத்துள்ளார் அநீ.
வெள்ளையனும், ஆபிரகாமிய மதப் படைஎடுப்பாளர்களும், கடந்த நாலு நூற்றாண்டுகளில், இந்துக்களைப் பிரித்து , ஒருவருக்கு ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்த்து, தாங்கள் காலூன்றி வளர்ந்தனர். அதே நிலையை மீண்டும் உருவாக்க இப்போதும் முயல்கின்றனர். சைவ சித்தாந்தம் என்று அல்ல, வேறு எந்த தத்துவம் ஆனாலும் , மற்ற தத்துவத்தை விட தான் உயர்வு என்று எண்ணி, பிற தத்துவங்களை காரணகாரியமின்றி மட்டப்படுத்திப் பேசியோ, எழுதியோ , அழிக்கவோ முனைந்தால், அவை கால வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். மதம், கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இன்மை ஆகியவை தனிப்பட்டவை. யாரும் பிறர்மீது ஒன்றை கட்டாயப்படுத்தி திணித்து வெற்றிபெற முடியாது.
அது சரி, யாரோ ஒரு பார்ப்பனப்பெண் , தெரேசா சாரிடீஸ் நிறுவனத்தில் மதம் மாறி, கிறித்தவ மதத்தில் சேர்ந்ததைப்பற்றி எழுதியுள்ளீர்களே, பார்ப்பனப்பெண்கள் மட்டுமல்ல, சைவப்பிள்ளைமார் சாதியை சேர்ந்த கிருட்டிணப்பிள்ளை போன்ற ஏராளம் பேர் , இந்து மதத்தில் இருந்து , வெள்ளையர் ஆட்சியின் போது, கிறித்தவராக மாறினார். பல சாதிகளிலும் இதே போன்ற நிகழ்வுகள் மதமாற்ற சக்திகளின் தூண்டுதலால் நடந்துள்ளது. எனவே, இதில் ஒரே ஒரு சாதியினரை மட்டும் குறைகூற முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
வாரியார் சுவாமிகளின் தொண்டு அனைவராலும் பாராட்டுதலுக்கு உரியது. அவருடைய நினைவு இல்லத்திலோ , அவர் பிறந்த ஊரிலோ அவருக்கு நினைவுச்சின்னமோ, சிலைகளோ நிறுவுதல் தவறில்லை. ஆனால் திருக்கோயில்களுக்குள் அவர் சிலை வைக்க இடம் போதுமானதாக இருந்தால் வைத்துக்கொள்ளலாம். இப்போது நம் சிவன் கோயில்களில் பஞ்சமூர்த்தி, நவக்கிரகம், துர்க்கை, வீரபத்திரர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஆகிய சன்னதிகள் மட்டுமே உள்ளன. வாரியாருக்கு என்று தனியே கோயில் கட்டுவதே சிறப்பு.
கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கே குருபூஜைகளை பிராமணர்கள் நடத்தும்போது வஉசிக்கு நடத்தினால் என்ன என்றுதான் கேட்கிறேன்.வஉசி தன்னை முன்னிலை படுத்தியது சித்தாந்தி என்றுதான்.ஆனால் அவர் வரலாற்றில் ஒரு பகுதியை எடுத்து சரியாக கோர்த்து அரசியல் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.(தேர்தல் வருவதால்…).
[ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்த அவதூறான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழுமம்] ஜெயேந்திரருக்கு ஊர் கூடி மேடைகளில் பூஜை நடப்பது தவறு என்று மாலை தேநீர் கட்டுரையில் வராதா? வராது!!! (இதே ஜெயேந்திரர் (கூடவே மஹா சிறியவாள்-விஜயேந்திரன்-படமும் சேர்த்து பிராமணர்கள் வீடுகளில் பூஜை நடக்கிறதே) ராமகிருஷ்ண மடம் பிராமணர்கள் கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்கள் ஆகிவிட்டனவே…அதை ராமகிருஷ்ணர்,விவேகானந்தர் பேரைச் சொல்லி பூசி மெழுகி தப்பிப்பார்கள்…
இந்த கட்டுரை ஆரம்பிப்பதே அரசியல் நோக்கத்துடன்தான் என்கிறேன்…
நெல்லை ஊராரே,
பார்ப்பனருக்கு காஞ்சியை தவிர சிருங்கேரி , துவாரகை, பூரி மற்றும் பல சங்கர மடங்கள் உள்ளன. மேலும் பார்ப்பனருக்கு தீயோம்புதல் மட்டுமே கடன். சங்கர மடங்கள் வழிகாட்டுதலைப் பெறவேண்டும் என்ற கட்டாயம் எந்த பார்ப்பானுக்கும் இல்லை. சங்கர மடங்கள் தோன்றுவதற்கும் முன்னரே பார்ப்பனர்களும் தங்கள் கடமையை செய்து வந்தனர்., அத்வைதமும் சங்கர மடங்கள் தோன்றுவதற்கும் முன்னரே உள்ளது. எனவே, தேவை இல்லாமல், யாரோ ஒரு சிலர் செய்யும் செயல்களை வைத்து , ஒட்டு மொத்தமாக ஒரு சாதியினரையோ , மொழி பேசுவோரையோ விமரிசனம் செய்வது தவறு.
நெல்லை ஊராருக்கு , வேதாந்தமும் தெரியாது, சித்தாந்தமும் தெரியாது என்று அவரது கடிதங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. நமது சைவ ஆதீனங்கள் நடத்தும் சைவ சித்தாந்த வகுப்பில் சேர்ந்து படித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன்.
உங்கள் கருத்துப்படியே , கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருடன் அல்லது சிலருடன் ஒரு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரரை ஒப்புநோக்கி பேசுவது உங்கள் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது. ஒப்பிடுவதற்கு வேறு விஷயமோ, நபர்களோ கிடைக்கவில்லையா ? சுதந்திரப் போராட்ட வீரரை சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தான் ஒப்பிடுதல் பொருத்தம். உங்கள் கெட்ட எண்ணமும் , தகாத புத்தியும் தங்கள் கடிதங்களில் தெளிவாக வெளிப்படுகின்றன.
நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.-
தேவாரம்.
வணக்கம் மாசிப் பெரியசாமி அவர்களே…ஜெயேந்திரர் [edited] பற்றி எழுத இவர்களுக்கு துப்பில்லை என்கிறேன். சுதந்திர போராட்ட வீரரை குருவாக வழிபடுவதில் தவறே இல்லை. அவர் சுதந்திரபோராட்ட வீரருக்கும் மேலே.
கதிரவன் என்பவர் எழுதிய கேவலமான வார்த்தைகளை பிரசுரித்துவிட்டு நான் அதே வார்த்தைகளை எழுதினால் எடிட் செய்துவெளியிடுவது ஏனோ? கதிரவனும் ஆசிரியர் குழுவில் இருப்பவர்தானோ?
ஸ்ரீ அ.நீ அவர்கள் ஜாதி சார்ந்து கருத்து சொல்லக்கூடியவர் என்று இந்த தளத்தில் வ்யாசங்களை வாசிக்கும் ஒரு அன்பரும் சொல்ல இயலாதே.
ஜாதிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவரல்லவா ஸ்ரீ அ.நீ.
யார் யார் முன்னம் சொன்ன விஷயங்கள் என்ன என்று அறியேன். ஸ்ரீமான் கதிரவன் அவர்கள் மிகப் பொறுமையாக உத்தரங்கள் பகிர்ந்து வந்துள்ளது தெரிகிறது. அபத்ரமான சொற் ப்ரயோகங்களை அனைவரும் தவிர்ப்பது நன்றே.
ஸ்ரீமான் கதிரவன் அவர்கள் பகிர்ந்த மிகப்பல கருத்துக்களும் சாரமானவையே. ஒரு கருத்திலிருந்து மட்டும் நான் விலகுகிறேன்.
சித்தாந்தங்களிடையே முரண் இருப்பது இயற்கையே. ஒவ்வொரு சித்தாந்தமும் தன் வழி மிக உயர்ந்த வழி என்று பறை சாற்றுவது புதிதல்ல. ஆனால் இது ஆப்ரஹாமிய வெறியுடன் ஒப்பிடத் தக்கதன்று. தன் வழி உயர்ந்த வழி என்று சொல்லும் எந்த ஒரு சித்தாந்தமும் மாற்று வழியை பேணுபவர்கள் மீளா நரகம் புகுவார்கள் என்று ஆப்ரஹாமிய மதங்கள் போல் எங்கும் போதிப்பது கிடையாது.
சைவ சித்தாந்தம் ஹிந்து மதத்தின் மிக முக்யமான கருத்தாக்கங்களில் ஒன்று. சைவ சித்தாந்த நெறிமுறைகளை வாழையடி வாழையாக ஆக்ரஹத்துடன் பின் பற்றுபவர் போற்றுதலுக்குறியவர்கள். அதே போலவே ஸ்ரீவைஷ்ணவத்தின் வடகலை மற்றும் தென் கலை சம்ப்ரதாயங்களை ஆக்ரஹத்துடன் பின்பற்றுபவர்கள்.
அடுத்த தலைமுறைக்கு நம் கருத்தாக்கங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது ஒவ்வொரு தலைமுறையினரும் செய்ய வேண்டிய மகத்தான கார்யம். அப்படி ஒரு நிகழ்வுக்கு இது போன்ற சடங்குகள் வழி வகுக்கும் என்றால் அவை வரவேற்கப்பட வேண்டியவையே.
பிள்ளை சமூஹத்தைச் சேர்ந்த பெரியோர்கள் கப்பலோட்டிய தமிழர் ஸ்ரீ வ.வு.சி அவர்களுக்கு குரு பூஜை செய்தால் மற்ற சமூஹத்தைச் சேர்ந்தவர்கள் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எங்கும் இல்லையே. அல்லது மற்ற சமூஹத்தைச் சேர்ந்த அன்பர்கள் அந்த குரு பூஜையில் கலந்து கொள்வதை பிள்ளை சமூஹத்தைச் சேர்ந்தவர்கள் மறுப்பார் என்று எண்ணவும் முகாந்தரம் இல்லையே. மாறாக மற்ற ஜாதி ஏன் — மாற்று மதத்தவரும் அது போன்றதொரு குருபூஜையில் கலந்து கொள்வதை பிள்ளை சமூஹத்தைச் சேர்ந்த சான்றோர்கள் வரவேற்பார்கள் எனவே எண்ணுகிறேன்.
கப்பலோட்டிய தமிழர் ஸ்ரீ வ.வு.சி அவர்கள் கொண்டாடப் படுகிறார் என்பது தமிழர்கள் அனைவருக்கும் ஹிந்துக்கள் அனைவருக்கும் சைவ சமயத்தைப் போற்றுபவர்கள் அனைவருக்கும் களிப்பளிக்கும் விஷயம். இதில் நமக்குள் ஏன் அபிப்ராய பேதம் கொள்ள வேண்டும்?
திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.
திரு.நெல்லையூரான், நீங்கள் தெ(ரி)ந்துதான் எழுத்கிறீர்களா இல்லை நடிக்கிறீர்களா ? நிஜமாகவே புரியவில்லை, அதனால்தான் கேட்கிறேன்.
குருபூசை என்பதே இந்து மத ஆன்மீகத் துறவிகளுக்கு தான் . குருபூசை செய்யப்படும் துறவிகளை இறந்த பின் அதற்குறிய ஆகம விதி.படி
அடக்கம் செய்யப்பட வேண்டும். இந்த விதிகளுக்கு
உட்பட்டே பசும்பொன் தேவருக்கு குருபூசை
நடத்தப்படுகிறது. தேவர் மறைந்தது 29/10/1963ல்
அடக்கம் செய்தது அவர் பிறந்த நாளான மறுநாள் 30
அன்று. முதல் முதலாக அவர் குருபூசை அவருக்கு மண்டலபூசை
சேர்த்து டிசம்பர்5 1963 கொண்டாடபட்டது. 1964ல்
இருந்து அக்டோபர் 28,29,30 ஆகிய மூன்று நாட்களும்
அரசியல் விழா ஆன்மீக விழா குருபூசை &ஜெயந்தி விழா என
முறையே நடைபெறுகிறது.தேவருகு ஆகமவிதிப்படி
அடக்கம் செய்தவர் சாது சிதம்பரசுவாமிகள் தான்.எம்ஜிஆர் ஆட்சியின் போது
அரசே விழா நடத்தி அரசு பதிவேட்டில் குருபூசை
ஜெயந்தி விழா என பதிவேற்றியது.
ஆனால் பின்னர் நடந்த அரசியல் காரணமாக அவ்விழா சாதி
விழாவாக ஆக்கினார்கள்.ஆனாலும் இன்றுவரை அனைத்து மக்களும் கல.து
கொள்ளும் விழாவாகவே உள்ளது. பல சித்தர் துறவிகளுக்கு ஆண்டு
முழுவதும் குருபூசை நடந்தாலும் அதிகமான
பத்தர்கள் கலந்துகொள்ளும் குருபூசை தேவர் குருபூசையே