நன்றி! சன் டிவி வீரபாண்டியன்…

morning_hindutva2013 இல் தமிழ்நாடு ஊடக உலகத்தில் நடந்த மிக நல்ல விஷயங்களில் ஒன்று சன்-டிவியில் அரசியல் உரையாடல்களை நடத்தும் வீரபாண்டியனின் வெளிப்படையான சார்வு வெளிப்பட்டதுதான். முன்னாள் பிரதமரையும் ஒரு மாநில முதலமைச்சரையும் ’அவன்’ ’இவன்’ என ஏகவசனத்தில் குறிப்பிடுவதும் பின்னர் இஸ்லாமியர்களிடம் வன்முறையையும் வெறுப்பையும் தூண்டிவிடும் விதத்தில் பேசுவதும் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன. இதை வெளியிட்ட இஸ்லாமிய அமைப்பு இந்த காணொளி இந்துக்களிடம் இத்தனை எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என நினைக்கவில்லை.  உடனடியாக அந்த காணொளியை நீக்கி விட்டது. ஆனால் இந்த செயல்பாட்டை ஏற்கனவே எதிர்பார்த்து அந்த காணொளியை உடனடியாக தரவிறக்கம் செய்து தங்கள் இணையதளத்தில் வலையேற்றி விட்டனர் நம் சகோதர இந்துத்துவ இணையதளமான ’வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்’ அமைப்பினர் (vsrc.in). அருமையான முன்யோசனை. இதற்காக நம் சகோதர vsrc.in அமைப்பினரை ஒவ்வொரு தமிழ் இந்துவும் மனமகிழ்ந்து பாராட்ட வேண்டும்.

வீரபாண்டியனுக்கு ஏன் நன்றி?

தன்னை நடுநிலையாளன் அல்ல என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தமைக்காக நன்றி. இனி மக்களுக்கு இவரது செயல்பாடுகளை சரியான விதத்தில் புரிந்து கொள்ள முடியும். வீர பாண்டியனின் முத்திரை வாக்கியம் ‘மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.’  ஆம் மக்கள் வீரபாண்டியனின் இந்த  தூண்டிவிடும் கீழ்த்தர பேச்சையும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.   சமகால வரலாறு கூட சரியாக  தெரியாமல் பண்பாடும் இல்லாமல் பேசி தன் நடுநிலை முகமூடியை தானே கிழித்து கொண்டமைக்கு.  இம்முறை இந்து அமைப்புகள் முகத்தில் வீசப்பட்ட அவமானத்தை துடைத்துக் கொண்டு புன்னகைக்கவில்லை. உடனடியாக  வீரபாண்டியன் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிந்திருக்கிறார்கள்.  பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனடியாக கண்டனம் செய்திருக்கிறார். கடுமையாகவே. ஹிந்துக்களுக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்.

வீரபாண்டியன் சொல்லும் பச்சை பொய்களில் ஒன்றுக்கு வருவோம். பௌத்தத்தின் தர்ம சக்கரத்தை எடுத்துவிட்டு காந்தியை நுழைத்தது வாஜ்பாயாம். காரணம் பௌத்த சின்னத்தை நீக்குவதாம். ரூபாய் நோட்டுகளில் காந்தியை கொண்டு வந்தது 1996 இல். மகாத்மா காந்தி சீரிஸ் என சொல்லப்படுவது. 1996 இல் ஆட்சியில் இருந்த கட்சிகள் எவை? ஜனவரி 1996 முதல் மே 1996 வரை ஆட்சியில் இருந்தது நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு. மே-15 1996 முதல் 1-ஜூன் 1996 வரை 13 நாட்கள் பாஜக அரசு அடல்ஜி தலைமையில் ஆட்சி அமைத்தது.  ஜூன் 1 1996 முதல் 1996 இறுதி வரை பிரதமராக இருந்தவர் தேவ கௌடா அவர்கள். இதில் வீரபாண்டியன் சொல்வது உண்மை என்றால் இந்த 13 நாட்களில் பாஜக அரசு இந்த முடிவை எடுத்து அமுல் படுத்தியது. இதை ஒரு பள்ளிச்சிறுவன் கூட நம்ப மாட்டான். ஆனால் நம் வீரபாண்டியன் கேட்பவர்களின் புத்தி திறமையில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். தைரியமாக பேசுகிறார்.

ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து கொள்ளுங்கள். பழைய ஐந்து ரூபாய் நோட்டில் அசோக ஸ்தூபியின் கீழே தெள்ளத் தெளிவாக ‘சத்யமேவ ஜெயதே’ எனும் முண்டக உபநிடதத்தின் வாசகம் இருக்கும். ஆனால் இந்து மதத்தை நுழைப்பதற்காக தந்திரமாக வாஜ்பாய் கொண்டு வந்ததாக சொல்லப்படும் ஐந்து ரூபாய் நோட்டில் பாருங்கள். 1996 இல் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி ரூபாய் தாள்கள் தொடரில் இந்த குறிப்பிட்ட நோட்டு 2002 இல் வெளியிடப்பட்டது. உபநிடத வாசகத்தை புறந்தள்ளி காந்தியை நடுநாயகமாக்கியது பாஜக என்பது எத்தனை அபத்தமானது.

five_rupees

விஷயம் புரிகிறதல்லவா… ஆனால் இது ஏதோ வீரபாண்டியனின் தனிப்பட்ட மனப் பிறழ்வு, பார்வைக் கோளாறு என நினைத்து விட வேண்டாம். இப்படி கதை கட்டி விடுவது ஒன்றும் போலி மதச்சார்பின்மையாளர்களுக்கு புதிதல்ல. உண்மையில் இன்றைக்கு வீரபாண்டியன் செய்வது போலி மதச்சார்பின்மையாளர்களின் கூட்டு மனப் பிறழ்வு ஒன்றின் வெளிப்பாடுதான்.

1998 இல் எழுந்த ‘rational vs national’ என்கிற சர்ச்சை நினைவிருக்கிறதா? இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR-Indian Council of Historical Research)தொடக்க ’மெமோரண்டம் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங்’  1972 இல் எழுதப்பட்டது. இதில் வரலாற்று ஆராய்ச்சி ‘அறிவு பூர்வமான திசையில்’ (rational direction) என்றிருக்கிறது. eminient-historiansஆனால் 1998 இல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை ICHR குறித்த தன் தீர்மானம் ஒன்றில் இதை   ‘தேசிய ‘ (national direction) மாற்றிவிட்டதாக -வேறு யாருமில்லை- நம் மவுண்ட்ரோட் மாவோ ‘தி கிண்டு’ தான் வெளியிட்டது. அது ஒரு sophisticated டீலக்ஸ் எடிஷன் வீரபாண்டியன்.  இது வெறும் வார்த்தைகள் குறித்தது அல்ல என்று வீர பாண்டியன் போலவே மிரட்டியது மவுண்ட்ரோட் மாவோ. பாஜகவின் வரலாற்றை மாற்றும் சதி. பத்திரிகையாளர் அருண் ஷோரி இது உண்மையா என பார்க்க பழைய ஆவணங்களைத் துழாவினார். இதே விசயத்தில் 1987 இல் அதாவது பாஜக ஆட்சிக்கு வருவதற்கு 11 ஆண்டுகள் முன்னால்  மனித வள மேம்பாட்டுத் துறை 6 அக்டோபர் 1987 இல் நிறைவேற்றிய மார்க்சிய பார்வை கொண்ட வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப்பை ICHR சேர்மனாக்கிய முடிவுகளைக் கொண்ட  தீர்மானத்தில் கண்டிருந்தது: “to give a national direction to an objective and national presentation and reinterpretation of history”. ICHR குறித்த ஒவ்வொரு மனிதவள அமைச்சரவை தீர்மானத்தையும் ஷோரி எடுத்து பார்த்தார்… 1978 முதல் ஒவ்வொரு அமைச்சரவை தீர்மானத்திலும் அதே வாசகங்கள். அது  காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படித்தான், ஜனதா தள ஆட்சியிலும் அப்படித்தான். ஆக நடந்தது என்னவென்றால் யாரோ ஒரு குமஸ்தா அன்றைய டைப்ரைட்டரில் ICHR இன் ஆவணத்தின் அடிப்படையில் தான் டைப் செய்த போது ‘rational’ என இருந்ததை தவறுதலாக ‘national’ என மாற்றியிருக்கிறார்… பாஜக ஆட்சிக்கு வருவதற்கு இருபதாண்டுகளுக்கு முன்னால் 1978 இல். அன்று முதல் அதே தாள்களை ஒவ்வொரு தீர்மானத்திலும் எல்லா ஆட்சிகளும் பயன்படுத்தியிருக்கின்றன.

ஆக வீரபாண்டியனின் மனப் பிறழ்வு வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த பிறழ்ச்சி  வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் – மரியாதையான தோற்றங்களில். அன்று இதே வக்கிரம் ’தி கிண்டுவில் வெளிப்பட்ட போது அதை அருண் ஷோரி வெளிப்படுத்தினார்.  அது அவரது புகழ்பெற்ற நூலிலும் அறிவுஜீவிகள் வட்டத்திலும் அடங்கிவிட்டது. குற்றச்சாட்டோ வெகுஜன ஊடகங்களாக அன்று விளங்கிய பெரும் ஊடக முதலாளிகளால் எல்லோரிடத்திலும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்று நிலை வேறு. பெரும் ஊடக முதலாளிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் தீவிரமாக இயங்குகின்றன. இந்துத்துவம் போல வஞ்சிக்கப்பட்ட மூன்றாம் உலக பண்பாட்டின் குரலுக்கு அந்த ஊடகங்கள் பெரும் வலிமை. இந்த வலிமையை இந்துத்துவர்களாகிய நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். எனில் மேலும் மேலும் பெரும் வெற்றிகளை ஈட்ட முடியும்.

[வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் வீரபாண்டியன் குறித்த கட்டுரையும் அந்த காணொளியும் இங்கே கிடைக்கும்: ’சன் நியூஸில் ஒரு பின்லாடன்’ ]

33 Replies to “நன்றி! சன் டிவி வீரபாண்டியன்…”

 1. மவுண்ட் ரோடு மாவோ ‘தி கிண்டு’ எப்போதுமே அப்படித் தான். சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் கிளையாக செயல்படுகிறது. அது போகட்டும் வீரபாண்டியன் மட்டுமல்ல, ஞாநி மற்றும் இதேபோல அடையாளம் காணப்படவேண்டிய போலிகள் ஏராளம் உள்ளனர்.

  வீரபாண்டியனின் உளறல்களை வீடியோவாக வெளியிட்ட இஸ்லாமிய இணைய தளத்துக்கு நம் நன்றிகள். இல்லையென்றால் பலர் அறிய வாய்ப்பு கிடைத்திருக்காது. இஸ்லாமிய இணைய தளம் காணொளியை நீக்கும் முன்னர் பதிவிறக்கம் செய்த நண்பர்களைப் பாராட்டுவோம்.

  சன் டீவி- வீரபாண்டியனை உடனடியாக நீக்கிவிட்டு, வேறு உருப்படியான நபரை அந்தப்பணியில் அமர்த்தவேண்டும். இல்லையென்றால் சன் டி வி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம்.

 2. விழிப்புணர்வுள்ள அரும்பணி அரவிந்தன்! நன்றி.

  சுயநலக் கயவனின் விடியோ பதிவை அவர்களே நீக்குவதற்கு முன் அதை பத்திரப்படுத்தி, இந்து- முஸ்லிம் வேற்றுமையைத் தூண்டுபவர்களை அடையாளம் காட்டியதற்காக, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நண்பர் பால.கௌதமனுக்கும் நன்றி!

  முகாம்களில் முஸ்லிம்கள் இனப்பெருக்கம் செய்வதாக மோடி கூறியதாக வரும் புரளியை வீரபாண்டியன் இலங்கையில் கடன் பெற்றிருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் முள்வேலி முகாமுக்கு சென்ற இலங்கை அதிபரின் தம்பி சொன்னதாக (தமிழர்கள் முகாம்களில் கஷ்டப்படமேதும் படவில்லை; சந்தோஷமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள்) வந்த செய்தி அது.

  அதையே தனக்கு சாதகமாக மோடி கூறியதாக அவிழ்த்துவிடுகிறார். இதற்கு சாட்சி இருப்பதாகவும் கூறுகிறார். இவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து அமைப்புகள் முயல வேண்டும்.

  -சேக்கிழான்

 3. வீரபாண்டியன் போன்ற சமூஹ விரோத சக்திகளின் போலி மதசார்பின்மை முகத்திறையைக் கிழித்து எறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். பினாத்திய விஷயத்தை *மனித நேயர்கள்* அண்டு கும்பனி சந்தடி சாக்கில் தங்கள் வலைத் தளத்திலிருந்து நீக்கி விட்டாலும் இதை எதிர்பார்த்து முன்னமேயே இந்தக் கண்றாவிக் கந்தறகோளத்தை வலையிலேற்றிய “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்” என்ற நமது சஹோதர நிறுவனத்தின் பணி ச்லாகிக்கத் தக்கது.

  வீழ்க சமூஹ விரோத சக்திகள்
  ஓங்குக தேச ஒற்றுமை
  வெற்றிவேல்

 4. Anyone watching Veera pandian over the years on Sun TV will not be surprised by this news. He is anti hindu & pro minority i.e he is “secular”.

  There is a christian who calls himself “Iman annachi”, who takes a dig at hinduism whenever possible. He appears in many Sun TV channels.

  There is a program on Suriyan FM daily titled “kittu maama susie maami”.

  It has a conversation between a chrisian lady & a brahmin male. The male speaks with an exaggerated brahmin accent & there are also digs at hinduism by the lady.

  Sun channels will never change.

 5. // வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள் – மரியாதையான தோற்றங்களில் //

  மோடி பிரதமராவதற்குள் அனைத்து சைக்கோக்களும் தானாகவே அவர்களுக்கான மருத்துவமனைகளுக்கு சென்று விடுவார்கள். இல்லாவிட்டால் அனுப்பப்படுவார்கள்.

 6. அன்பர்களே விஜயபாரதம் 29–11–13 இதழின் பக்கம் 34இல் வந்த தொலைகாட்சியில் இந்த தொல்லை தீர என்ற ஆசிரியரின் கருத்தை பார்க்கவும் நம் கண்டனத்தை சன் டிவி க்கு தெரிவிக்கவும்

 7. புத்திசாலித்தனத்துடன் அந்தக் காணொளியை தரவிறக்கம் செய்து வைத்த VSRC க்கு மனமார்ந்த நன்றி.

  //ஆக வீரபாண்டியனின் மனப் பிறழ்வு வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த பிறழ்ச்சி வெளிப்படுத்தப்படாத போலிமதச்சார்பின்மை சைக்கோக்கள் பலர் இன்னும் ஊடகங்களில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்//

  அருமை! இது நன்றாகத் தெரிந்த உண்மை. எந்த நாளில் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறார்களோ அப்போது இதேப்போல் பிடித்து வெளிப்படுத்த வேண்டும்.

 8. சமீபத்தில் கே டி ராகவனையும் அழைத்து, சில முஸ்லீம் அமைப்புகளையும் அழைத்து வீரபாண்டியன் கண்ட பேட்டியில் கே டி ராகவனைப் பேசவே விடாமல், வாய்ப்பே அளிக்காமல் பேட்டியை நடத்தியது நினைவுக்கு வருகிறது.

 9. எனக்கு தெரிந்த யோசனை, பாஜகவோ, நமது இந்து அமைப்புக்களோ சன் டி.வி யை புறக்கணிக்காமல், இனி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை பற்றி நம்மவர்கள், வீரபாண்டியிடம் கேட்கவேண்டும். அதனால், ஓன்று, ஆயிரக்கணக்கான மக்களுக்கும் உண்மை புரியும். இரண்டாவது, கேள்விகளை இவர்கள் கேட்பதும், ஏதோ நாமெல்லாம் குற்றவாளிகள் போல, இந்த கேள்விகேட்பவர்கள் எல்லாம் புனிதவான்கள் போல, அவர்கள் கேட்பதற்க்கெல்லாம் பதில் மட்டுமே சொல்வதை விட்டுவிட்டு, நாமும் அர்த்தமுள்ள கேள்விகளை கேட்டு இவர்களின், போலி மதச்சார்பின்மை முகமூடியை கிழித்தெறிவோம். சமீபத்தில் இப்படிதான் ஒரு ஆங்கில சானலில், பிரபல ‘கேள்விகேட்கும் பேர்வழி’ கேட்ட ஓரவஞ்சனையான கேள்விக்கு, நமது பெண் பிரமுகர் கேட்ட பதில் கேள்வியால், கிட்டத்தட்ட நிலைகுலைந்து போனார், குரல் கம்மிவிட்டது, எதிர்பார்க்கவில்லை அவர். பாரதியார் சொன்ன புதுமை பெண்ணை அங்கு கண்டேன், உவகயடைந்தேன். வாழ்க அந்த தாய்! அதன் பின் அந்நிகழ்ச்சி முடியும் வரை அவரது நிம்மதியற்ற முகத்தை பார்க்கவேண்டுமே! இதைதான் நாம் செய்ய வேண்டும். ஏனெனில் குனிய, குனிய குட்டதான் செய்வர். துயின்றது போதும். துடித்தேழுவோம். ‘ஹிந்துஎழுந்தால், தன்னையுணர்ந்தால் அடக்கிடுவாருண்டோ?

 10. ம்……ஆரோக்கியசாமி என்று பெயருள்ளவர் இருமிக்கொண்டே இருக்கக்கூடாது என்று ஏதும் உள்ளதா?

  *வீரபாண்டியன்* அவர்கள் தன் ரத்தத்தின் ரத்தமான இசுலாமிய சஹோதரகள் முன் தன் பேச்சில் காண்பித்த வீரத்தை ……… அதை அப்படியே சன் டிவியில் உலகமறிய………….வாந்தியெடுத்தால்……….வீரம் மெச்சப்படும்.

  ஓ!!!!!!!!! இவர் த்ராவிட பரம்பரையாயிற்றே!!!!!

  சட்டத்தை எரித்தோம் என்று ஊரில் தம்பட்டம் அடித்த வீரர்கள்…… ந்யாயாலயத்திலே போய்……….. நாங்கள் எரித்தது சட்டமெல்லாம் இல்லை சாமி ….. அதெல்லாம் வெறும் பேப்பர்………என்று மியாவ் மியாவ் என்று கர்ஜித்த பரம்பரை ஆயிற்றே.

 11. ஒர ஜாதி என்று இந்த வீரபாண்டியன், ராம்தாஸ்யை பேட்டிக்கு கேட்டாலும் நோ நோ சொன்ன ராம்தாஸ் ஒரு தீர்க்கதரிசி.

 12. //மோடி பிரதமராவதற்குள் அனைத்து சைக்கோக்களும் தானாகவே அவர்களுக்கான மருத்துவமனைகளுக்கு சென்று விடுவார்கள். இல்லாவிட்டால் அனுப்பப்படுவார்கள்.//

  பர்த்வான்: நரேந்திரமோடி பிரதமர் ஆனால், நாடு பிளவுபடும். அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறி உள்ளார். மேலும்,’ மோடி ஏழைகளுக்கு வேண்டப்பட்டவர் அல்ல. பணக்காரர்களால் முன்னிறுத்தப்படுபவர்,’ என்று கூறினார்.

  https://www.dinamalar.com/news_detail.asp?id=880351

 13. suvanappiriyan
  நீங்கள் ரொம்ப கஷ்டபடுகின்றீர்கள். இதை இப்படி படித்து பாருங்கள். கூட்டி கழித்து – கணக்கு சரியா வரும்..

  1st
  நரேந்திரமோடி பிரதமர் ஆனால், நாடு பிளவுபடும். அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறி உள்ளார். மேலும்,’ மோடி ஏழைகளுக்கு வேண்டப்பட்டவர் அல்ல. பணக்காரர்களால் முன்னிறுத்தப்படுபவர்,’ என்று கூறினார்

  2nd
  மோடி பிரதமராவதற்குள் அனைத்து சைக்கோக்களும் தானாகவே அவர்களுக்கான மருத்துவமனைகளுக்கு சென்று விடுவார்கள். இல்லாவிட்டால் அனுப்பப்படுவார்கள்

 14. நாடு பிளவுபடாது. நாடு பிளவு படும் என்று சொல்பவன் ஒரு அயோக்கிய சிகாமணி.கம்யூனிஸ்டுகள் குழப்பவாதிகள். அவர்கள் ஆட்சியில் மேற்குவங்காளம் ஒரு முழு நரகமாக மாறிவிட்டது. தொழில், வேலைவாய்ப்பு , பொருளாதார உற்பத்தி எல்லாம் முடங்கி விட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றோர் புலம்புவது ஏனெனில், மமதா பானெர்ஜியிடம் ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டு இஞ்சி தின்ற குரங்கு போல அலைகிறார்கள். வரும் தேர்தல் காங்கிரசைப் போல, கம்யூனிஸ்டுகளுக்கும் கடைசி தேர்தலாக இருக்கும். அவ்வளவுதான். இனி இந்தியாவில் ஜனநாயகம்,சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் இவற்றுக்கு எதிரான எந்த இயக்கத்துக்கும் இடம் இல்லை. காங்கிரஸ் ஜனநாயகத்துக்கு எதிரான இயக்கம். கம்யூனிஸ்டுகள் புரட்சி என்ற பொய்யான பெயரில் சீனாவிலும், ரஷ்யாவிலும் சுமார் 12 கோடி மக்களை கொலை செய்தவர்கள். அவர்கள் என்னவேண்டுமானாலும் உளறுவார்கள் .

 15. சன் டிவி வீரபாண்டியன் also DMK UNITES is very less mind owners. They are 100% truth less people. I knew very well his political since 1967.Ex DMK leader and current DMK leader are very worst acting in Indian political.

  Jagadeesan

 16. எல்லாம் பணம் படுத்தும் பாடு, பிழைப்புக்கு என்னவேனா செய்வாங்க போல.

 17. வீரபாண்டியன் கோமாளி கருத்துக்களை யாரும் சட்டை செய்வதில்லை ! முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் !

 18. இவ்வளவு சிரமப்பட்டு இதனை வெளிகொணர்ந்த வேத விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்திற்கும் அதைக் கட்டுரையாக எழுதிய அரவிந்தன் அய்யாவிற்கும் கோடி நமஸ்காரங்கள்.

  வீரபாண்டியனின் இந்த வெறுப்பு பேச்சைப் போன்றே பல தொலைக் காட்சிகளிலேயே ஒலிபரப்பப் பட்டுள்ளன. சில உதாரணங்கள்:-

  1. 2008- ஆம் ஆண்டில் இலங்கைப் பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது ‘பச்சைத் தமிழர்’ சீமான்:- “இலங்கையில் இனவெறியோ மொழிவேறியோ மட்டும் இல்லை; மதவெறியுமுண்டு: ஒரு பவுத்தர் மட்டுமே பிரதமராகலாம், ஒரு முஸ்லிமோ கிறிஸ்தவரோ ஆகமுடியாது!”. முறையே ஒன்பது மற்றும் ஏழு சதவிகிதம் மட்டுமே இருக்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களே அவர் கண்ணுக்குத் தெரிந்தன. பதினாறு சதவிகிதமீருக்கும் இந்துக்கள் இவரைப் பொறுத்தவரையில் தெரு நாய்கள் போலும்!

  2. சிலம்டாக் மில்லியனேர் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டபோது, கலைஞர் அவர்கள் “சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த அவர் விருது வென்றுள்ளது மிக்க மகிழ்ச்சி” என்று பேட்டியளித்தார். ஆக, பாராட்டுகள் திறமையை வைத்தல்ல, மதத்தை வைத்துதானோ!

  3. வருண் காந்தி “இந்துக்களக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் கையை வெட்டிவிடுவேன்” என்று சொன்னதற்கு அவர் குடும்பத்தையே நாரடித்தனர். ஆனால் ஆந்திராவில் ஒரு அரசியல்வாதி “சிறுபான்மையினர்களுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் அவர்கள் கையை வெட்டிவிடுவேன்” என்று கூறியதை ஒரு லோக்கல் தெலுங்கு சேனலைத் தவிர எந்த தொலைக்காட்சியும் கவனிக்கவில்லைபோலும்!

  இதுபோல அடுக்கிக் கொண்டே போகலாம். இதுதவிர செய்தித் தாள்களில் வருபவை இன்னும் கேவலமானவை. உதாரணத்திற்கு ‘the anti-hindu’ வில் வந்த இரண்டு கட்டுரைகளைப் பற்றிக் கூறுகிறேன்:-

  1. 2007- ஆம் ஆண்டில் ஒரிசாவில் 85 வயது முதியவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கிறிஸ்தவ மதவெறியர்களால் தெருநாயைப் போல சொட்டுக் கொல்லப்பட்டதை அச்செய்தித் தாள்:- “அதைச் செய்தது கிறிஸ்தவர்கள் அல்ல, மாவோயிஸ்டுகள். ஏனெனில் கொல்லப்பட்ட அந்த துறவி காட்டுவாசிகளை இந்துக்களாக ‘மதமாற்றம்’ செய்தார். ஆனால், இந்துத் தீவிரவாதிகள் பாவம் கிறிஸ்தவர்களைத் தாக்குகிறார்கள்” என்று எழுதியது. சரி சார், கிறிஸ்தவ மிஷினரிகளும் அதைத் தானே செய்தனர். ஏன் மாவைச்டுகள் அவர்கள் எவரையுமே தாக்கவில்லை?

  2. இதைவிடக் கேவலமாக சில மாதங்களுக்கு முன்னாள் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை:- “பத்திராசல இராமதாசர் போன்ற உண்மையான பக்தர்கள் இராமருக்குக் கோவில்கட்ட தனது மனதிலேயே கட்டினர். பிறரின் நிலத்தை அபகரிக்கவில்லை”.
  ஆகா, பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊடகம் கூட இவ்வளவு கேவலமாக வக்காலத்து வாங்காது!

  media-watch என்று ஒரு அமைப்புத் தோன்றி இவர்களை கட்டுப்படுத்தினால்தான் உண்டு!

 19. அய்யா சுவன பிரியன் அவர்களே !!!
  செல்வ செழிப்புள்ள பெரும் பணக்காரரான முஹம்மது நபியை அரேபியாவின் மன்னராக எந்த ஏழை முன்னிறுத்தினான் ? இதற்கு விளக்கம் அளியுங்கள் பார்ப்போம்.

 20. நம்ப புத்தூ இருக்கும் மாநிலத்தில் கிழக்கு , மேற்க்கு என்று போயிவிட்டதே. அதுவும் மோடி என்ற ஒருவர் அரசியலில் இல்லாத போதே . அதுக்கு புத்தூ என்ன சொல்லி இருக்கின்றார்?

 21. அட நம்ப புத்த்துவை பற்ரி பேசிய ஒருவர், அட்சு என்ன சொல்லி இருக்கின்றார் என்பதியிம் படிக்கட்டும்.

  ஆழப்புழா:கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.

 22. திரு சோமசுந்தரம்!

  //அய்யா சுவன பிரியன் அவர்களே !!!
  செல்வ செழிப்புள்ள பெரும் பணக்காரரான முஹம்மது நபியை அரேபியாவின் மன்னராக எந்த ஏழை முன்னிறுத்தினான் ? இதற்கு விளக்கம் அளியுங்கள் பார்ப்போம்.//

  மன்னராக ஆவதற்கு முன்பு அன்னை கத்தீஜாவை மணந்ததால் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தார். ஆனால் ஓரிறைக் கொள்கையை பிரசாரம் பண்ணியதால் அந்த மக்களால் அவரும் அவரை பின்பற்றியவர்களும் மக்காவிலிருந்து மதினாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். அங்குள்ள ஏழைகளாலும், மக்காவிலிருந்து விரட்டப்பட்ட ஏழைகளாலும் மதினாவின் ஆட்சித் தலைவராக முகமது நபி நியமிக்கப்படுகிறார். வெறும் பேரித்தம் இலைகளால் வேயப்பட்ட ஒரு குடிசைதான் முகமது நபியின் அரண்மணையாக இருந்தது.

 23. ஜெனாப் சுவனப்ரியன்

  மதவெறி மிக்கதான தரம் தாழ்ந்த வீர(!)பாண்டியனுடைய பேச்சு முஸல்மான் களால் ஆரவாரமிக கேழ்க்கப்பட்டுள்ளது இந்தத் திரியில் பதிவாகியுள்ளது.

  வீர தீரமிக முதலில் இதனை தங்களது இணைய தளத்தில் இஸ்லாமிய சஹோதரர்கள் பதிவு செய்துள்ளனர். பின்னர் சந்தடி சாக்கில் இதை தளத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

  இந்தத் திரியில் தாங்கள் உத்தரம் பகிர்வது இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். இதனுடன் உட்பட்டு அல்லது மறுதலித்து.

  உங்கள் செயல்பாடுகள் கல்லெறிந்து ஓடுவதாக ஏன் மாறிவிட்டது.

  ஒரு உத்தரத்தில் என்னை எந்த முகாந்தரமும் இல்லாது ஜாதிப்பற்று மிக்கவன் என்று கல்லெறிந்து விட்டு ஓடிவிட்டீர்கள்.

  இங்கு திரி பேசும் விஷயத்தை அம்போவென்று விட்டு விட்டு கதைக்க முனைகிறீர்கள்.

 24. ஒரு பிதற்றலுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து ஒன்றுமில்லாத ஆளை பெரிய மனிதனாக நாம் ஆக்கவேண்டாம். சரக்கு இல்லாத பாண்டம், வெறுப்பையே மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் இந்த மனிதருக்கு நாம் தேவை இல்லாத விளம்பரம் கொடுக்க வேண்டம். ஒரு தியாகிக்கு மகனாகப் பிறந்த இந்த மனிதர், ஒரு தேச பக்தரின் கல்லூரியில் படித்த இவர் யாருக்காக இப்போது இப்படி விஷத்தைக் கக்குகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

 25. இவனையெலாம் ஒரு மனுசன்னு மதிச்சு கருத்து சொல்லவே வெக்கமா இருக்கு.

 26. அவரின் பேச்சில் பல காமெடிகள் இருந்தாலும் பின்வரும் வரிகளை மறக்கவே முடியாது:-

  //உங்களுக்குமுன் உள்ள ஒரே லட்சியம் மோடி போக வேண்டும். அதற்கு காங்கிரஸ் தடி பயன்படுமா, சி.பி.ஐ தடி பயன்படுமா? சி.பி.எம் தடி பயன்படுமா, தி.க தடி பயன்படுமா? எடுத்து அந்தப் பாம்பை அடியுங்கள்! அதற்காக உங்கள் கருத்து மோதல்களை தள்ளிவையுங்கள்//

  காங்கிரஸ், சி.பி.எம். மற்ற கட்சிகளாலேயே எதுவும் செய்து விட முடியவில்லையாம். தி.க.வை வைத்து அடிப்பாராம். விளக்கமாருகுச்சியை வைத்து அடிக்க மோடி என்ன தண்ணிபாம்பா, அனகோண்டா சார்!

 27. அவரு அனகோண்டா இல்லை சார்… ஆதி சேஷன்!!!

 28. கண்ணன் அவர்களே,
  நீங் கள் கூறும் பேட்டியின் விபரத்தைத் தெரிவிக்கவும்.அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

 29. நம் இந்து மதமே மத சார்பற்றது, நமக்கு எல்லா கடவுளும் ஒன்றுதான்; நம் மத சார்பின்மைதான் இவர்களுக்கு வசதியாய் போய்விட்டது, நாமும் இவர்களை போல நம் கடவுள் மட்டுமே உண்மை மற்றவை சாத்தான் என்ற வகையில் இருந்திருந்தால் நம் நாட்டில் வேறு மதங்களே இன்று இருந்திருக்காது. சுவாமி விவேகானந்தர் சொன்னார் “இந்து மதம் அழிந்தால் உலகமே அழிந்து விடும் என்று” அதுதான் உண்மை. இதற்காகதான் உண்மை ஹிந்துக்கள் யாவரும் பொறுமையுடன் பிற மதத்தை இகழாது தங்கள் மதத்தை கடைபிடித்து வருகின்றனர். இதை பிற மதத்தினரும்,அறிவு ஜீவிகள் என நினைத்து கொண்டிருப்போரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 30. அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
  https://puthu.thinnai.com/?p=18181

  வீர பாண்டியன் போன்ற மடயர்கள் படிக்க வேண்டியது இது

 31. @suvanappiriyan
  //. வெறும் பேரித்தம் இலைகளால் வேயப்பட்ட ஒரு குடிசைதான் முகமது நபியின் அரண்மணையாக இருந்தது.//
  ஓஹோஹ் ,,, மாடியுள்ள குடிசை இல்லையா?

  7263. உமர்(ரலி) அறிவித்தார்.
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் ‘இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்’ என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதிய ளித்தார்கள்.
  20 Volume :7 Book :95

  https://tamilan1001.blogspot.com/2011/10/blog-post_16.html [முகமதுவின் பொருளாதார நிலை ? முகமது ஏழையா?]
  இதை படித்து விட்டு தைரியம் இருந்தால் பேச வரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *