காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசும் பொறுப்பேற்றாகி விட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம் என அலசுவதானால் அது அரைத்த மாவை மீண்டும் அரைப்பதாகத்தான் இருக்கும். அதே வேளையில் பல் வேறு கருத்துக்கள், கட்டுரைகள் வந்தபின்னரும் வாராத கருத்துக்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் , ஆம் இருக்கின்றன என்றுதான் தெரிகிறது. இமாலய ஊழல்கள், வரலாறு காணாத உணவுப் பொருள்விலை, பெட்ரொல் விலை என்பன  உட்பட விலைவாசி உயர்வு, பணவீக்கம், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி,  உள்நாடு வியாபார விவசாய எதிர்ப்பு மசோதக்கள், சட்டங்கள், அமைச்சர் பெருமக்களின் அலட்சியப் போக்கு, அகங்கார வார்த்தைகள் என பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டாலும் அவற்றிற்கான அடிப்டையிலான நான்கு முக்கிய காரணங்களை யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. கண்ணை மறைத்துவிட்ட அந்த நான்கு முக்கிய காரணங்களை கண் முன் நிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

sonia-gandhi-slams-for-targeting-pm1. NAC எனப்பட்ட National Advisory Committee.. அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சோனொயாவின் தலைமையில் அரசாங்கம் அங்கீகரித்து உருவாகப்பட்ட அமைப்பு. எளிதில் சொல்வதானால் மன்மோகன் தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு. இந்தக் கமிட்டியில் உள்ள எந்த உறுப்பினர்களும் நேரடியாக பொது மக்கள் தொடர்பு கொண்டவர்கள் இல்லை. பல மக்கள் விரோத மசோதாக்களுக்கு இவர்களே காரணம். இந்த கமிட்டியில் ஒருவரான டீஸ்தா டெதல்வார்ட் குஜராத் கலவரத்தில் மோடி மீது அதிக பொய் பிரச்சாரம் செய்து உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளானவர். பொய் காட்சி, பொய் சாட்சி உருவாக்கி அம்பலப்படுத்தபட்டவர். இதில் உள்ள ஜான் தயால் தான் மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பு வழங்க காரணமானவர்.  ” ” prevention of targetted communaல் violance bill ”  இவர்களால் உருவானதுதான். இவர்களின் அழிச்சாட்டியங்களையெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி களும்எம் எல் ஏக் களும் இதர கட்சித் தலைவர்களும் நியாயப்படுத்த வேண்டியதாயிற்று. சோனியாவின் அந்நிய தேச வேர்களும் இந்திய அறியாமையும் அவரை என்றுமே இந்த தேசத்தை நேசிப்பவராக மாற்றவில்லை.  எனவே, இந்த தேசத்தின் புராதனத்தையோ, மாண்பையோ அவர் என்றுமே புகழ்துரைத்ததில்லை. இந்த வெறுப்பே அவரை இத்தேசத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கஇவர்களுக்குக்  போதுமானதாக இருந்ததது. தேசத்தை புரிந்த அமைச்சர்கள் இருந்தாலும் கூட அவர்களும் தேர்ந்தெடுக்கப்படாத இந்த நிழல் அமைச்சரவையான என். ஏ.சி.க்குத்தான் அடிபணியும் நிலை.  ஆக, சோனியாவின் இந்த shadow cabinet தான் தோல்விக்கு முதல் காரணம்.

2. இரண்டாவது  முக்கிய காரணம் பொதுமக்களோடு சற்றும் தொடர்பில்லாத,  அவர்களது அத்தியாவசியத் தேவைகளை சற்றும்  புரிந்து கொள்ளாமல் அவர்களை அவமதித்து வந்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூபாய் 26ம் நகர் புறத்தில் ரூ 32 ம் சம்பாதித்தாலே போதும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என இவர் அறிவிக்க…, ஆமாம் ஆமாம் ஒரு ரூபாய்க்கு முழுசாப்பாடு கிடைக்கிறது, 5 ரூபாய்க்கு கிடைக்கிறது, 12 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றெல்லாம் நியாயப்படுத்தினார்களே அப்போதே காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து அந்நியப் படுத்தப்பட்டு விட்டது. கழிப்பறை இல்லாத நாடு என்று காங்கிரஸ் கட்சி அமைச்சர்களே ஓங்கிப் பிரச்சாரச் செய்துவந்த போது, சுமார் 70 லட்சம் செலவில் திட்ட கமிஷன் அலுவலுகத்திற்கு மட்டுமே என கழிப்பறை கட்டியதுதான் இவர் சாதனை.

3. மக்களோடு தொடர்பற்ற NAC, மக்களோடு தொடர்பற்ற திட்ட கமிஷன், என இந்த வரிசையில் மக்களோடு தொடர்பற்ற பிரதமர் மூன்றாவது, முக்கிய காரணம். எந்த நிலையிலும், பிரதமர் மன்மோகன்சிங் அதிகாரம் படைத்தவராக ஆகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டது. எனவே அவரையும் பொதுமக்களோடு தொடர்பற்றவாராகவே இருத்திவந்ததது. 2004 ல் அவர் பிரதமர் ஆக்கப்பட்ட சூழல் வேறாக இருந்தாலும் அதன் பின் வந்த காலங்களில் அவரோடு மக்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். 2009 பொது தேர்தலில் அவரைப் போட்டி இட வைத்திருக்கலாம். சோனியா அம்மையாரோ, அவரது என் ஏ சி யோ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர். தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஊடகங்கள் வரை பலவீனாமான பிரதமைரைத் தான் விரும்பின.  அப்படியானால் தானே நீரா ராடியா முதல் பர்காதத் வரை அரசில் புரோக்கர் செய்ய முடியும். நன்றி உணர்வுள்ள பிரதமரும் ” இரண்டு பவர் செண்டர் ” தேவையில்ல…அது அவர்களாகவே இருக்கட்டும் ” என மனம் திறந்ததை அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு தனது accidental prime minister புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2009 பொதுத் தேர்தலின் போது அத்வானி தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து மன்மோகன்சிங் தான் இதுவரை உள்ள பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர் எனக் கூறி வந்த போது அதை தனிநபர் விமர்சனமாகக் கருதி வாக்காளர்கள் பாஜகை நிராகரித்ததோடு அத்வானியையும் கண்டித்தனர். ஆனால் 2009 ற்குப் பிறகு சமூக ஊடகங்கள் பிரபலமான நிலையில் அத்வானி கூறிய உண்மை வெளிப்பட்டது. ஒரே ஒரு முறை அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அவர் பேட்டிக்காக சந்தித்ததே மாபெரும்  செய்தி ஆயிற்று. தொடர்ந்து அது போல் சந்திப்பேன் என அவர் கூறினாலும் அதன்பின் அது போன்று ஒரு சந்திப்பு நடைப்பெறவே இல்லை. இதன் காரணாங்களா பலவீனமான, செயல்தன்மையற்ற, மக்களோடு தொடர்பற்ற பிரதமர் மீதான கோபம் இந்த அரசு வெளியேறப்பட மூன்றாவது, முக்கிய காரணம் ஆயிற்று.

4. கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ” சும்மா போற ஓணான எடுத்து மடில உட்டுட்டு குத்துதே..குடையுதேன சொன்ன மாதிரி ” என்பார்கள். சிறுபாண்மை ஓட்டுக்காக ” இந்த நாட்டின் இயற்கை வளங்களிம் முதல் உரிமை மதச் சிறுபாண்மையினருக்கே ” என்ற பிரதமர், ஹிந்துகளை பயங்கரவாதிகளாகக் காட்ட எண்ணி ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ( இன்று வரை அவற்றில் ஒன்று கூட நீருபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ), அமைச்சர் சிதம்பரத்தின் ” காவி பயங்கரவாதம் ” என்ற அரிய கண்டு பிடிப்பு, அந்நிய நாட்டு ஊடகங்களிடம் ” உலகு தழுவிய ஜிகாதிய பயங்கரவாதம் அல்ல, தேசமெங்கும் பரவியுள்ள பெரும்பாண்மை பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்து ” என ஜிகாதிகளுக்கு நற்சான்று வழங்கி ஹிந்துமக்களை பயங்கரவாதியாக சித்தரித்த ராகுல், எல்லாவற்றிற்கும் மேலாக ” இந்தத் தேர்தல் பாஜக வுக்கும் காங்கிரஸிக்குமான தேர்தல் அல்ல, ஆர் எஸ் எஸிக்கும் காங்கிரஸூக்குமான தேர்தல் எனக் கூறி ” இதோடு ஆர் எஸ் எஸ் ஒழிந்தது, ஹிந்து தேசியம் பேசுவோர் ஒழிந்தனர் ” எனப் பல்வேறு  நடவடிக்கைகளால்,  அன்றாட அரசியலிலும் தேர்தல் அரசியலிலும் தலையிடாத ஆர்..எஸ்.எஸ். இயக்கத்தை தேர்தல் களத்தில் இறக்கியது தோல்விக்கான நான்காவது பெரும் காரணம். அண்ணால் காந்தியும், ஏன் நேருவும் இந்திராவும் கூட தேசத்திற்கு அவசியம் தேவையான இயக்கம் என்று உணர்ந்து உரைக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போய் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

[கட்டுரை ஆசிரியர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (சுதேசி ஜாக்ரன் மஞ்ச்) மாநில அமைப்புச் செயலாளர்]

14 Replies to “காங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்”

 1. அறிவு பூர்வமான சிந்தனை. காங்கிரசின் வீழ்ச்சிக்கு பல காரணங்களில் விட்டுப்போன சிலவற்றை விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இதுபோன்ற கனமான விஷயங்களுள் புகாமல், மேலெழுந்தவாரியாக நான் பார்த்து, கேட்டு முகம் சுளித்த விஷயங்களில் முக்கியமானது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், தலைவர்கள் ஆகியோரின் திமிரான, அலட்சியமான, எதேச்சாதிகார தோரணையில் சொன்ன பதில்கள், கருத்துக்கள் முக்கியமானவையாகக் கருதுகிறேன். குறிப்பாக திக் விஜய சிங், மனீஷ் திவாரி, அபிஷேக் மனு சிங்வி, ப.சிதம்பரம், அரைவேக்காட்டுத் தனமாக மேடைகளில் உரக்க பொருளற்ற விஷயங்களைப் பேசிய ராகுல் ஆகியோர் முக்கிய காரணங்கள். வெளியில் வாயைத் திறக்காமல், ஆணவத்தின் மொத்த உருவாக திமிரோடு நடமாடிய சோனியா எனும் பெண்மணியின் கர்வத்துக்கு தேர்தல் முடிவு அளித்த பரிசு. ஆக மொத்தம் இனி வருங்காலங்களில் தங்களை யாராலும் அசைக்கமுடியாது என்று இறுமாந்திருந்த காங்கிரஸ் தலைவர்களுக்குச் சரியான அடி, இல்லை இல்லை சரியான இடி.

 2. நல்ல அலசல் நம்பி அவர்களே!மன்மோகன் தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு அல்ல! அவர் மீது திணிக்கப்பட்ட அப்பு என்றே நான் கருதுகிறேன்.பல விமர்சகர்கள் நீங்கள் சொன்ன முதல் மூன்று விஷயங்களை தொட்டு பேசினாலும், தெளிவாக சொல்லவில்லை. தெளிவாக எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

 3. அருமையான கட்டுரை. காங்கிரஸுக்கே கூட இன்னும் ‘உணரமுடியாத’ தமது தவறுகளை உணர்த்தும் விதமான கட்டுரை.
  இதில் முதல் காரணமாக குறிப்பிடப்பட்டிருப்பதில் மிக மேலெழுந்தவாரியாக குறிப்பிடப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது. ஒருவேளை தேர்தல் முடிந்து சிலகாலம் ஆகிவிட்டதால் சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
  இந்த தேசத்தின் சமூக, கலாசார, குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் விதமாக கொண்டுவந்த சட்டங்களும், செய்த செயல்பாடுகளும் காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணம்.
  உதாரணமாக
  1) ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்களின் பகிரங்க ஆதரவு
  2) குடும்பங்களை உடைக்கும் வகையில், பொய் வழக்குகளை புனையும் வகையில் உருவாக்கப்பட்ட ‘குடும்ப வன்முறை தடுப்பு மசோதா’
  3) பாரதத்தின் அடிப்படையான குடும்ப அமைப்ப சிதைக்கும் வகையில் ‘எளிதாக்கப்பட்ட’ விவாகரத்து மசோதா- காரணம் எதுவும் இல்லாமலே கூட ஒரு பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோரும் வகையில் அமைந்திருந்தது.
  4) விவாகரத்து ஆனபோதும் அந்த பெண்ணுக்கு கணவனின் சுய சம்பாத்தியத்திலான சொத்துக்கள் மட்டுமல்லாது அவரது பரம்பரை சொத்துக்களிலும் உரிமை உண்டு- என்பதான சட்டத்திற்கு முயற்சி எடுத்தமை

  இவையும் காரணமே. இந்த சட்டங்கள் ஹிந்துக்களை குறிவைத்தே கொண்டுவரப்பட்டன. ஆனால் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையினரை (இங்கே ஹிந்துக்களை) இத்தகைய சட்டத்திற்கு பழக்கிவிட்டால் பின்னர் அதை சிறுபான்மையினருக்கும் நீட்டிப்பது எளிது. இவை ஹிந்துக்களை உடனடியாகவும் பிற மதத்தினரை சற்றுதாமதமாகவும் பாதிக்கக்கூடியவை. இவை ஹிந்துக்கள் மத்தியில் மட்டுமல்லாது இஸ்லாமியர் மத்தியிலும் எதிர்ப்பை பெற்றன. அதனால்தான் முஸ்லிம் பெரும்பான்மையான காஷ்மீர் போன்ற இடங்களிலும் சரிபாதி அளவு வெற்றிபெற முடிந்தது. பா.ஜ.கவுக்கு போதுமான அடிப்படைக்கட்டமைப்புகளே இல்லாத வடகிழக்கு மாநிலங்களிலும்கூட குறிப்பிடத்தக்க வெற்றியைபெற்றது.

  வெறும் ஊழல் மட்டுதான் பிரச்சனை என்றால் ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியை (குறைந்தபட்சம் 25 தொகுதியிலாவது) பெற்றிருக்கவேண்டும். ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பு ஊழலையும் தாண்டி பா.ஜ.க (மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின்) தனிமனித மறும் சமூக ஒழுக்க மதிப்பீடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பு ஆகும். இதை (இத்தாலிய காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு) பா.ஜ.க மீது “Moral Policing” என்று குற்றச்சாட்டு சுமத்திய “Moral Culprit”களின் பேச்சுக்களிலிருந்தும், பேட்டிகளிலிருந்தும் அறியலாம்.

 4. ராகுல் என்ற ஒரு ஜந்து இந்திய அரசியலில் திணிக்கப்பட்டு அனுபமும் திறமையும் உள்ள இரண்டு உயர்ந்த ஆளுமைகள் DUMMY ஆக்கபட்டதின் விளைவு ,காங்கிரஸ் காணமல் போனது .பத்து வருடம் அவர்கள் செய்த சேவையை காங் வெளியே வராமல் பார்த்துகொன்டர்கள் .அதே செயலை பிஜேபி /ரஸ் செய்கிறது (TALL PERSONALITIES MMS,PRANABDA,ADVANIJI,VAJPAYEJI EQUAL AND REAL UNSUNG HEROES OF INDIAN POLITICS)

 5. ///சோனியா அம்மையாரோ, அவரது என் ஏ சி யோ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலவீனமற்றவாராக இருப்பதையே விரும்பினர்.///

  இங்கே ஒரு தட்டச்சுப் பிழை வந்து பொருட்குற்றத்தை விளைத்து விட்டது. தயவு செய்து திருத்தவும். “வீன” நுழைந்து “வீணாக” ஆக்கிவிட்டது!

  சரியான சொற்றொடர் இதோ:

  “சோனியா அம்மையாரோ, அவரது என் ஏ சி யோ மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் அவர் பலமற்றவராக இருப்பதையே விரும்பினர்.”

 6. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்பொழுது இருக்கும் பெரியவர் ஞானதேசிகனை மாற்றவேண்டும் என்று சில கோஷ்டிகள் கொடி பிடிப்பதாக இன்றைய செய்தி தாளில் செய்தி வந்துள்ளது.

  1.சோனியா -இராகுல்காந்தி -பிரியங்கா -ராபர்ட் வதேரா போன்ற ஜவஹர்லால் குடும்ப வாரிசுகளிடம் தலைமைப்பதவி இருக்கும் வரை காங்கிரசு உருப்படாது.

  2. பெரியவர் ஞானதேசிகன் போன்ற மாநிலத்தலைவர்களை மாற்றுவதால் ஒரு பயனும் விளையாது.

  3. உள்கட்சி தேர்தல்களை நடத்தி , மாநில அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மாநில தலைவர்களை டெல்லியில் இருந்து நியமிக்கும் போக்கு நீடிக்கும் வரை கடவுளே வந்தாலும் காங்கிரசின் பேரழிவை தடுக்க முடியாது.

  4. எந்த ஒரு அரசியல் கட்சி ஆனாலும், ஒரு ஜனநாயக நாட்டில் , உள்கட்சி தேர்தல்கள் தங்கு தடை இல்லாமல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். 1969-லே இந்திரா காந்தி காலத்தில் தான் மாநில தலைவர்களை டெல்லியில் இருந்து நியமிக்கும் போக்கு தொடங்கியது. அப்போதிலிருந்து தான் காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரம் ஆட்டங் காணத்தொடங்கியது . இன்றோ முற்றிலும் செல்லரித்துப் போய்விட்டது.

  5. நேரு குடும்பத்தலைமை காங்கிரசை விரைவில் அழித்து விடும். காங்கிரஸ் அழிவது நாட்டுக்கு நல்லது தான்.வேறு புதிய பெயரில் அரசியல் கட்சிகள் வரட்டும். காங்கிரஸ் என்ற சைத்தான் பெயர் வேண்டாம். காங்கிரசை களையுங்கள் என்ற மகாத்மாவின் விருப்பம் நிறைவேறட்டும்.

 7. மிகத் தெளிவான அலசல் நம்பி அவர்களே.இதில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது ராகுலின் உச்ச கட்ட ஆணவமும் ,அறியாமையும் ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பார்க்காமல்,அவரின் மந்திரி சபை கூடி முடிவு செய்த (சோனியாவின் ஆசியுடன்) லாலுவுக்கு ஆதரவான-முற்றிலும் தவிர்க்க வேண்டிய – ஒரு அவசர சட்டத்தை,ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பின பிறகு(ஜனாதிபதி இதற்கு எதிர் கட்சிகளின் ஆட்சேபனை காரணமாக ஒப்புதல் அளிக்க தயங்கிய நேரத்தில்)பெரும் தூக்கத்தில் இருந்து திடீர் என எழுபவர் போல் ,பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இதை கிழித்து குப்பை தொட்டியில் எறியுங்கள் என்று (கட்சியின் உதவி தலைவராக இருந்தும்)பொறுப்பற்ற முறையில் நாடகமாடின இவரையும்,இவரின் அடிபொடிகளையும் தேர்ந்து எடுக்க நம் மக்கள் அவ்வளவு முட்டாள்களா என்ன?

 8. நல்ல அலசல். NAC ஒரு நல்ல எண்ணம். ஆனால், தவறாக பயன்படுத்தப் பட்டது. அதன் உறுப்பினர் அனைவருமே தவறானவர்கள். ஆகவே நமக்கு NAC பற்றி தவறான எண்ணம் உருவாகி உள்ளது. மக்களோடு தொடர்புடைய, சிறந்த அறிவாற்றல் உள்ள, மக்கள் மதிக்கும் படியான உறுப்பினர்கள் மற்றும் வெவ்வேறு மத தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் (உண்மையான மேல் சபை போன்று) சார்ந்த NAC நிச்சயம் நல்லது. வேண்டுவதும் கூட. மேலும், மோடி அவர்கள் மாநில முதல்வர் அனுபவம் வாய்ந்தவர் ஆதலால் மக்கள் தொடர்பும் உண்டு, மக்கள் எதிர் பார்ப்பும் புரியம் மற்றும் கீழ் உள்ளவர்களை வேலை வாங்கவும் தெரியும். ஒளி மயமான எதிர் காலம் தெரிகிறது. என்ன ஒரு உறுத்தல், தமிழ் நாடு தன்னை இந்த முக்கிய பணியில் இணைத்துக் கொள்ள தவறி விட்டது. வருத்தமாக உள்ளது.

 9. ஒன்று குறுப்பிட மறந்து விட்டேன். சிதம்பரம் தனது புகழ் பெற்ற கண்டு பிடிப்பான “காவி பயங்கரவாதம்” மூலம் ஹிந்துக்களை ஒருங்கிணைத்து விட்டார். இதை சொன்னதில் இருந்து அவருக்கு இறங்கு முகம் தான். இக்கட்டுரை மிக அழகாக ஹிந்துக்கள் இணைந்ததை விவரித்து உள்ளது. ஒற்றுமையே உயர்வு.

 10. காங்கிரஸ் அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால் புரிகிறது இன்றைய கேவலமான நிலைமைக்கு யார் காரணம் என்று. 1967இல் தமிழக தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், பெருந்தலைவர் காமராஜும் தோற்கடிக்கப்பட்டார். அப்போது தோற்ற காமராஜ், மனமுடைந்து போன தொண்டர்களைத் தேற்றி ஊக்கமளித்ததோடு அல்லாமல், அடுத்த ஒரு வருஷத்துக்கு தி.மு.க.ஆட்சி பற்றி தான் எந்த விமர்சனமும் செய்யமாட்டேன் என்று கூறி மவுனமானார். புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மூச்சுவிட நேரம் வேண்டாமா? அந்த நாகரிகம் காமராஜர் போன்ற தலைவர்களுக்கு இருந்தது. இன்று தரம் கேட்டுப் போன கேவலமான காங்கிரசார் குறிப்பாக திக் விஜய் சிங் போன்றவர்கள் பா.ஜ.க.பதவி ஏற்பதற்கு முன்பாகவே வயித்தெரிச்சலைக் கொட்டத் தொடங்கிவிட்டனர். மணி சங்கர ஐயருக்குத் தோற்றது கூட பெரிதில்லை டெபாசிட் போனதில் மனம் குழம்பிப் பொய் வாய்க்கு வந்ததைப் பேசத் தொடங்கிவிட்டார். இனி காங்கிரஸ் தேறவே தேறாது. தினமணியின் தலையங்கம் சொல்வதைப் போல, ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் ஆரம்பித்த காங்கிரஸ் இத்தாலி பெண்மணியால் மூடுவிழா காணப் போகிறது. இடையில் அந்தக் கட்சியில் இருந்த மாபெரும் தலைவர்களின் உழைப்பு எல்லாம் வீனாகிவிட்டதற்கு வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? காங்கிரசே உன் முடிவைக் கண்டு வருந்துகிறோம்.

 11. மூன்றாவது பத்தியில் “பலவீனமற்றவாராக” என்பது “பலவீனமானவராக” என்று திருத்தப்பட வேண்டும்.

 12. அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் வெற்றி பெற்றவர் , தோற்றவர் இருவருமே ‘ ஜனநாயகம் வென்றது- ஜனநாயகம் மீண்டும் வென்றது- அமெரிக்கா மீண்டும் வென்றது ” – என்று தங்கள் நாடும், ஜனநாயகமும் வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள்.

  ஆனால் தமிழகத்தின் இழிநிலையை பாருங்கள்:-

  ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றவுடன் தமிழனுக்கு பல விதமான வசவுகளும் , சாபங்களும் கிடைக்கின்றன. தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், ஜனநாயகத் தீர்ப்பை ஏற்போம்- தலைவணங்கி ஏற்போம் – என்று சொல்வது ஒரு கண்ணியம். அந்த கண்ணியம் தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு இல்லை.

  தேர்தலில் தோற்றவுடன் ” தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் “- என்பார் தந்தை. அவர் மகளோ ஒருபடி மேலேபோய், ” அக்கினிப் பாறைகளை தங்கள் தலையில் தமிழன் போட்டு கொடுமைப்படுத்துவதாக “- ஒரு தமிழ் மாலை பத்திரிகையில் 19-6-2014 அன்று கடிதம் ( கவிதை என்ற பெயரில்) எழுதிப் புலம்புகிறார். மக்கள் தீர்ப்பினை அக்கினிப்பாறை என்று சொல்கிறார்.

  அளவு கடந்த ஊழல்களை செய்துவிட்டு கம்பி எண்ண காத்திருப்போருக்கு தேர்தல் மூலம் மக்கள் அளிக்கும் தீர்ப்பு இப்படி இடிபோலவும், அக்கினிப்பாறை போலவும்தான் தெரியும் என்ன செய்வது ? ஊழல்களை செய்யும் முன்னர் யோசித்திருக்கவேண்டும்- இப்போது புலம்பி என்ன செய்ய ? ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு கடும் விமரிசனங்களுக்கு ஆளானவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால், மக்கள் இப்படித்தான் தூக்கி வீசுவார்கள். இன்னமும் ஊழல் குற்ற சாட்டுக்கு ஆளானவர்களை கட்சியிலிருந்து சில காலத்துக்கு ஒடுக்கிவைக்காவிட்டால், திமுகவுக்கு அதோகதிதான்.

  இப்போது வல்வினை வந்து உறுத்துகிறது – இனியும் திருந்தாவிட்டால் , குடும்ப அரசியல் சகதியில் கட்சி முற்றிலும் மூழ்கிவிடும். அப்புறம் தமிழனை திட்டி ஒரு புண்ணியமும் இல்லை.

 13. இந்த தேர்தலில் 44 தொகுதிகளில் எப்படியோ வெற்றி பெற்றுவிட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தரவேண்டும் என்று வெட்கம் சிறிதுகூட இல்லாமல் மனுப்போடுகிறார்கள்.

  உண்மை என்ன தெரியுமா ?

  காங்கிரஸ் அரசாண்டபோது , நேரு பிரதமரை இருந்த காலத்திர்லும் சரி, அதன் பிறகு லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் ,ஆகியோர் பிரதமாராக இருந்த காலக்கட்டங்களில் எதிர்க்கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான எம் பிக்களே இருந்ததால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து யாருக்கும் வழங்கப்படவில்லை.

  அதாவது ஏப்பிரல் 1952 முதல் மார்ச் 1977 வரையிலும், அதன் பின்னர் ஜனவரி 1980- முதல் நவம்பர் 1989- முடியவும் எந்த கட்சியும் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை பெறவும் இல்லை. காங்கிரஸ் கட்சியும் விதிகளை தளர்த்தி, எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை அன்றைய எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவும் இல்லை.

  முதல் முதலாக புனிதன் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதுதான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவராக திரு ஒய் பி சவான் அவர்கள் பணியாற்றினார். ஏனெனில் அப்போது காங்கிரஸ் கும்பலுக்கு சுமார் 150 எம் பிக்கள் இருந்தனர் . எனவே அங்கீகாரம் கிடைத்தது.

  அதன் பின்னர் 12- வருடம் கழித்து , வி பி சிங்கு காலத்தில் ஆரம்பித்து , அதாவது 1989- முதல் 1991- வரை காங்கிரசும், 1991- முதல் 1998-வரை பாஜகவும் , 1998-2004 காலக்கட்டத்தில் காங்கிரசும், 2004- 2014 காலக்கட்டத்தில் பாஜகவும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருந்தன. அந்த காலக் கட்டங்களில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசும், பாஜகவும் அங்கீகாரம் பெறத்தேவையான 55- எம்பிக்களுக்கு அதிகமான எம் பி க்களைப் பெற்றிருந்ததால் , அங்கீகாரம் கிடைத்தது.அதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

  சுதந்திரம் அடைந்து 67- ஆம் ஆண்டில், முதல்முறையாக காங்கிரசு கும்பல் , ஆளுங்கட்சியாகவும் இல்லாமல், எதிர்க்கட்சிக்கு தேவையான 55 இடங்களைப் பெறவும் முடியாமல் போனது நம் நாட்டுக்கு ஏதோ நல்ல காலம் பிறந்து விட்டது என்று பொருள். மகாத்மா காங்கிரசை 1947-லே சுதந்திரம் அடைந்தவுடனேயே கலைக்க சொன்னார். ஆனால் காங்கிரஸ் துரோகிகள் அவர் பேச்சை கேட்கவில்லை. எனவே மக்களே காங்கிரசை ஒழித்துக் கட்டிவிட்டனர்.

  உண்மையான காங்கிரஸ் காரர்கள் எவராவது இருந்தால், காங்கிரசை கலைத்துவிட்டு , வேறு பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. இப்போது காங்கிரஸ் என்ற பெயரில் உலவிவரும் கும்பல், நாட்டைப் பிடித்த வியாதி. வியாதி ஒழிக்கப்படவேண்டும்.

  போதுமான எம் பிக்கள் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி அங்கீகாரம் தாருங்கள் என்று பிச்சை எடுப்பதை விட, வேறு ஏதாவது தொழில் செய்து பிழைப்பது காங்கிரசாருக்கு நல்லது.

 14. முதலில் மோடி யார் என்றனர் . பிறகு டீக்கடைக்காரன் முதல்வர் ஆகலாம் பிரதமர் ஆகமுடியுமா என்றனர் , அதன் பின்னர் பாஜகவுக்கு ம பி, குஜராத் , ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் வெற்றி கிடைக்காது, இந்த மூணு மாநிலத்திலும் சேர்ந்து மொத்த இடமே 79 தான் என்றனர். பின்னர் மோடிக்கு திருமணம் ஆகிவிட்டது என்றனர். கருத்துக்கணிப்பு மற்றும் எக்சிட் போல் என்ற பெயர்களிலும் மூன்றாவது அணியும் காங்கிரசும் சேர்ந்து ஆம் ஆத்மி உதவியுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றனர். அலையாவது , அதுவும் மோடி அலையாவது, ஒரு அலையும் இல்லை. சும்மா பாஜகவினர் புளுகுகிறார்கள் என்றனர்.

  தேர்தல் முடிந்தவுடன் இப்போது எல்லா கட்சியினரும் ஒத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். மோடி அலை இருந்தது என்று வி சி , முஸ்லீம் லீக் கட்சி திரு காதர் மொய்தீன் என்று எல்லாமே கூற ஆரம்பித்து விட்டனர். மோடி அலையால் ஜெயலலிதாவுக்கு பெரு வெற்றி கிடைத்தது என்று சொல்லி, திருமா பேட்டியில் அதிமுகவை மோடியின் இன்னொரு முகம் என்று உளறி உள்ளார். ஒரே குழப்பம் போங்கள்.

  டீக்கடை காரர் பிரதமர் ஆகிவிட்டார். காங்கிரஸ் அளவு கடந்த ஊழல் செய்து, எதிர்க்கட்சி கூட ஆக முடியவில்லை. மோடி பிரதமர் ஆகிவிட்டால் நம் நாட்டை விட்டு ஓடுவேன் என்று சபதம் செய்த பெரியவர்கள் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு, மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு, விருந்திலும் பங்கேற்றனர். எல்லாமே பிரமாதம் போங்கள்.

  மோடி அலையைப் பற்றி யாரும் கம்யூனிஸ்டுகளை பேட்டி கூட எடுக்க செல்லவில்லை.

  தமிழகத்திலோ, திமுகவின் ஸ்டாலின் அவர்கள், மின்வாக்கு பேட்டியில் தில்லுமுல்லு என்று கூறி உள்ளார். காங்கிரஸ் காரர்கள் மத்திய ஆட்சியில் இருந்து கொண்டு, தேர்தல் நடந்தபோது பதவியில் இருந்த காரணத்தால், கூட்டணி சேர மறுத்த திமுகவை , வாக்கு இயந்திரத்தில் , தில்லு முல்லு செய்து ,சைபர் ஆக்கிவிட்டனர் என்று சொல்லவருகிறாரா ? அப்படி என்றால், காங்கிரஸ் காரர்கள் இதே தில்லுமுல்லு செய்து பாஜக வெற்றிபெறமுடியாமல் செய்திருக்க முடியுமே ?

  திமுகவினருக்கு சித்தம் கலங்கி விட்டதுபோலத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *