இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்

1941 ஆம் வருடம் ஒற்றைக் காற்றாடி பொருத்தப்பட்ட சிறிய விமானத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார் அந்தப் புகழ்மிக்க எழுத்தாளர். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளரும் இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் கூட. வரலாற்றை நன்கறிந்தவர் என்ற வகையிலும் இலங்கையின் கள யதார்த்தத்தை புரிந்துகொண்டவர் என்ற முறையிலும் அவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கிறார். இந்தியாவில் (அன்றைய பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியா) முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படுமோ அதே தீர்வுக்கு இலங்கைத் தமிழர்களும் உரியவர்கள் என்றார். அவர் வேறுயாருமல்ல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் வலது கரம் என்று புகழப்பட்டவரும் இன்றுவரை தமிழர்களால் நேசிக்கப்படும் எழுத்தாளருமான பெருமதிப்புக்குரிய கல்கி.

srilanka-archaeological-centenaryஇந்தியாவை சுற்றியுள்ள பல்வேறு சமூகங்களுள் தீவிர இந்திய ஆதரவாளர்கள் என்று கூறப்படத்தக்கவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே. அவர்கள் இந்தியாவின் இயற்கையான நண்பர்கள். உலகின் சக்திவாய்ந்த நாடுகள் தமது நலன்களைப் பேணுவதற்கான ஆதரவுச் சமூகங்களை உலகெங்கும் உருவாக்குவதற்கு மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெரும் முயற்சிகள் எடுத்திருக்கின்றன. எடுத்து வருகின்றன. ஆனால் இந்திரா காந்திக்கு பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களும், அவர்களை வழிநடத்திய அதிகாரிகளும், ஆலோசகர்களும் இதற்கெதிரான முறையில் நடந்து, இயல்பான கூட்டாளிகளான இலங்கைத் தமிழர்களின் நலன்களை அழிவுக்குள்ளாக்கி, அவர்களை இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை இழக்கச்செய்து, இந்தியாவின் நலன்களையும் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்கள்.

தேநீர்க் கடைக்காரரின் மகனாகப் பிறந்து இன்று இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள  நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி  ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் என்பது தமிழ்மொழி மட்டும் சார்ந்ததல்ல. மொழி,மதம்,அது சார்ந்த பண்பாடு என்பவற்றை உள்ளடக்கிய இனத்தனித்துவத்தைக் காப்பதற்கானது. காலனிய ஆட்சிக்காலத்தில் தமது அனைத்து ஆலயங்களும் இடிக்கப்பட்டு பல்வேறு முனைகளில் மதமாற்றிகள் தீவிரமாகச் செயற்பட்டநிலையில் ஈழத்தமிழர்கள் மிகத்தீவிரமான எதிர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு  (கிறிஸ்தவ) மத மாற்றிகளுக்கு உங்களது அதிகபட்ச வெற்றி இவ்வளவுதான் என்று காட்டியவர்கள். அதற்குப் பின் வந்த காலங்களில்,  சைவ கிறீஸ்தவ நல்லிணக்கத்தையும் கட்டி எழுப்பியவர்கள். இன்று பாஜக இந்திய சிறுபான்மையினரிடம் எதிர்பார்க்கும் தமது மூதாதையரை அங்கீகரித்தல், அவர்களின் வழி வந்த பண்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியவர்களாக ஈழத்தமிழ்ச் சமூகம் விளங்குகின்றது. இவ்வாறு பார்க்கையில் ஈழத்தமிழர்களின் வீழ்ச்சி என்பது பாஜகவின் கோட்பாடுகளின் வீழ்ச்சியுமாகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் மோடிக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன.

1. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தமிழ் மாநிலம்

2. தமிழீழத் தனிநாடு

3. இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை இணைத்துக் கொள்ளல் அல்லது முழு இலங்கையையும் தமிழ், சிங்களம் என்ற இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளல்

இறுதித் தீர்வாக இவற்றில் ஒன்றை நோக்கிச் செல்வதற்கு முன், தேவைப்படக்கூடிய காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், எவ்வாறான தீர்வை நோக்கிச் செல்வது அதிக பொருத்தமுடையதாக இருக்கும் என்று கண்டறிவதற்குமான ஒரு சோதனையாக,  இலங்கையில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை திருப்புவதை மோடி அரசு உறுதிப் படுத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

1. இராணுவமயமாக்கப்பட்ட சூழல்

2. திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்

3. மதமாற்றம்

கட்டற்ற நிலையில் இந்த மூன்றும் தொடருமாயின், அவை ஈழத்தமிழர்களை தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற நிலையிலிருந்து வீழ்த்தி விடும். அதோடு,  சிறுபான்மை சமூகம் என்ற அளவுக்குள் குறுக்கிவிடுவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் முற்றுமுழுதாக அவர்களின் இன அடையாளத்தை அழித்து சிங்களவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாற்றிவிடும். இந்தியாவிற்கு இலங்கை மீதான பிடி தமிழர்கள் மூலமாகவே கிடைக்கின்றது. இலங்கையில் தமிழர்களின் வீழ்ச்சி, இலங்கைமீதான இந்தியாவின் கட்டுப்பாட்டை இல்லாதொழித்து, இந்தியாவின் பிராந்திய வல்லரசு என்ற  நிலையை சவாலுக்கு உள்ளாக்கி விடும்.ஜே.ஆர்.ஜெயவர்த்தனா – ராஜீவ் காந்தி உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தின் கீழான மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக அவற்றுக்கு வழங்கவேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு, வடக்குக் கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடிய நடவடிக்கையாகும். ஆயினும் 13 ஆவது சட்டத்திருத்தம் ஒரு நிலைமாறு கட்டமாகவே இருக்கமுடியுமே தவிர இறுதித்தீர்வாக இருக்கமுடியாது.

13 ஆவது சட்டத்திருத்தம் அடிப்படையிலேயே கொண்டிருக்கும் இரண்டு முக்கிய குறைபாடுகள் அதனை இறுதித்தீர்வுக்கு தகுதியிழக்கச் செய்கின்றன.

1. வடக்கு,கிழக்கு மாகாணங்களின் நிரந்தர இணைப்புக்கு கிழக்கில் ஒரு பொதுவாக்கெடுப்பு    நடத்தப்பட வேண்டும் என்றநிலை.

2. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை சமஷ்டி அரசியல் அமைப்பாக மாற்றாமல் அதன் கட்டமைப்புக்கு உள்ளேயே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முற்பட்டமை.

இந்த இரண்டு முக்கிய குறைபாடுகளே ஈழத்தமிழர்களின் மனதை 13 ஆவது திருத்தச்சட்டம் வெல்லமுடியாது போனமைக்கான காரணங்களாகும்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற முதலாவது விடயத்தைப் பார்ப்போம்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னர், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 60 சதவீதத்தினராகவும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் 40 சதவீதத்தினராகவும் இருந்தனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பின்படி தமிழர்கள் ஏறத்தாழ 40 சதவீதத்தினராக வீழ்ச்சியடைய, சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் சதவீதம் 60 ஆக மாறிவிட்டது. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணங்களுள் ஒன்று தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாகும். இந்த நிலையில், வடக்கு கிழக்கு இணைப்புக்கு கிழக்கில் பொது வாக்கெடுப்பு  நடத்தவேண்டும் என்ற நிலையானது தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையான வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதற்கு ஊறு விளைவிப்பதாகும். ஏனெனில், சிங்களவர்களும் தமிழர் எதிர்ப்பு மனநிலையுடைய முஸ்லிம்களும் வடக்குடன் இணைவதற்கு எதிராகவே வாக்களிப்பர். இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு தோல்வியடைந்து விடும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வரைந்த இந்தியத்தரப்பு அன்றைய இலங்கை அரசின் தந்திரத்தில் சிக்கி தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு ஊறு விளைவித்ததுமட்டுமன்றி இந்தியாவின் நலன்களுக்குமே தன்னையும் அறியாமல் தீங்கிழைத்துள்ளது.

srilanka-provinces-mapகிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய அளவிற்குக்கூடச் செல்லாமல் மிக இலகுவான நீதிமன்றத்தீர்ப்பொன்றினால் இன்றைய இலங்கை அரசு வடக்கில் இருந்து கிழக்கைப் பிரித்து விட்டது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்ப்பார்த்திராத நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணமானது முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. நீண்ட கடற்கரையையும், திருகோணமலை போன்ற இயற்கைத் துறைமுகத்தையும் உடைய அம்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களின் ஆதிக்கம், இந்தியாவுக்கு  எதிரான பாகிஸ்தான் போன்ற சக்திகளுக்கு குதூகலத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கிய இந்திய தரப்பில் இருந்தவர்களின் தூரநோக்கின்மை இந்தியாவின் எதிரிகளுக்கு அதன் தெற்கில் இயற்கையான கூட்டாளிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது;  உடன், எவ்வித கடின முயற்சியும் இன்றியே பின்னணித்தளம் ஒன்றையும் வழங்கியுள்ளது.

தமிழர்கள் இம்மாகாணத்தில் அதிகாரத்தை இழந்திருப்பதும், யுத்தத்தினால் பேரிழப்புகளை எதிர்கொண்டிருப்பதும், மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது அதிக வறுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதும்,  அவர்களை  மதம்மாற்றிகளின் இலகுவான இலக்காக்கியுள்ளது. யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் உழைப்பிலேயே பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பெண்களே தற்போது மதமாற்றிகள் வலைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இப்பெண்களை மதம் மாற்றுவதனூடாக, அவர்களில் தங்கியுள்ள ஏன் என்று எதிர்ப்புக்குரல் எழுப்பமுடியாத பிள்ளைகளும் வேற்று மதத்திற்கு மாற்றப் படுகிறார்கள். குடும்பம் குடும்பமாக இவ்வாறு மதம் மாற்றப்படுவது தற்போது அன்றாட செய்தியாகிவிட்டது.

தனியான கிழக்கு மாகாணமானது இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் தளமாக மட்டுமல்லாமல் மற்றுமொரு விதத்திலும் இந்தியாவின் கட்டமைப்பை பலவீனப் படுத்துவதற்கு காரணமாகலாம். இலங்கையில் எதிர்பாராத விதமாக உருவாகியுள்ள முஸ்லிம் ஆதிக்க மாகாணமானது, இந்தியாவிலும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிய மாநிலங்களை ஏற்படுத்துவதற்கான குரல்களை உருவாக்கக்கூடும். ஏற்கனவே ஹைதாராபாத், கேரளாவின் மலப்புரம் போன்ற பகுதிகளில் இவ்வாறான கோரிக்கைகள் இருந்துவருவது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்த நிலை இந்தியா எங்கிலும் துப்பாக்கிச் சன்னங்களால் பொத்தல் போட்டது போன்று இருபது இருபத்தைந்து சிறு முஸ்லிம் மாநிலங்களை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதறடித்துவிடும்.

அத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து கூட இந்தியாவுக்கு நல்ல செய்தி இல்லை. புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது என்ற பெயரில் இலங்கை அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தீவிர முனைப்புடன் மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதிலும் இந்தியாவுக்கு எதிரான நாடொன்றின் கை இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப் படுகின்றது. மன்னார் பிரதேசமானது இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளதாகும். இம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றங்கள் அதிகரிப்பது மன்னார்க் கரையோரத்தை கட்டிக்காக்கும் தமிழர்களை  பலவீனப்படுத்திவிடும். இதன் விளைவாக இந்தியாவின் கீழக்கரையில் இருக்கக்கூடிய  முஸ்லிம் கிராமங்களுடன் இந்தக்குடியேற்றங்களிலிருந்து எவ்வித தடையும் இன்றி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இந்தத் தொடர்பை பயன்படுத்தி ஊடுருவமுடியாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

********

இரண்டாவது முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை. ஒருகையால் கொடுப்பதுபோன்று கொடுத்து மறுகையால் எடுத்துவிடலாம்.

இந்தியாவிலேயே முழுமையான சமஷ்டி அமைப்பு இல்லையே என்ற கேள்வி எழலாம். இந்திய அரசியல் அமைப்பு ஒரு குறைச்சமஷ்டி அரசியல் அமைப்பாக இருந்தபோதிலும் மத்திய அரசின் பிடி அதிகமாகிவிடாமல் அதன் சமூக அமைப்பானது தாங்கிப்பிடிக்கிறது. தனிப்பெரும்பான்மையற்ற வகையிலான (50%க்கும் குறைவான) இனங்களின் பன்மைத்துவமும் அவற்றுக்கிடையிலான பொதுமதமான இந்துமதத்தின் இணைப்பும் இந்திய அரசியல் அமைப்பு வெற்றிகரமாக செயற்படுவதற்கான காரணங்களாகும். இலங்கையில் இந்த நிலை இல்லை. இலங்கையானது 75 சதவீதமான சிங்களப் பெரும்பான்மை உடையதாகவும், இணைப்பிற்கான பொதுமதத்தைக் கொண்டிருக்காததாகவும் உள்ளது (சிங்களவர்களில் இந்துக்களோ தமிழர்களில் பௌத்தர்களோ இல்லை).  இக்காரணங்களால், இந்தியாவைப் போன்று அரசியல் அமைப்புக்குப் புறம்பான ஒரு சமூகச்சமநிலை இலங்கையில் அமையவில்லை. இதனால் முழுமையான  சமஷ்டி அரசியல் அமைப்பொன்றினூடாகவே இலங்கையில் பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளமுடியும்.

இந்த இரண்டு காரணிகளால் 13 ஆவது சட்டத்திருத்தம் இறுதித்தீர்வாக முடியாதென்ற போதிலும் தற்போதைய சூழலில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது இந்தியாவின் பிடியை இறுக்கவும் இதனைப் பயன்படுத்தமுடியும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் அனைத்தையும் வழங்குமாறு இலங்கை அரசைக் கூறுவதுடன் நின்றுவிடாது வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்குமாறு இந்திய அரசு வலியுறுத்தவேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனையின் தீர்வுக்கு அணுகுமுறை மாற்றமும் அவசியம். இலங்கை இனப்பிரச்சனையை சிக்கலாக்கியதில் இந்திய அரசை தவறாக வழிநடத்திய அதிகாரிகள், ஆலோசகர்களின் பங்கு மிகப்பெரியது. இந்த நிலையை மாற்றுவதற்கு முயற்சி  எடுக்கவேண்டும். வினைதிறனான அணுகுமுறைகளில் ஈடுபாடுள்ள புதிய இந்தியப் பிரதமர் இந்தவிடயத்திலும் புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ளவேண்டும். இலங்கை இனப்பிரச்சனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதனைக் கையாளுவதற்கு தனிப்பொறுப்பிலான துணைவெளிவிவகார அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம். இவ்வாறு செய்தால் அது இலங்கை அரசுக்கு தெளிவான சமிஞ்ஞையை வழங்கும். இந்தியா இவ்விடயத்தில் தீவிரமாக உள்ளதென்ற புரிதல் இலங்கை அரசுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் ஏற்படுவது தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும்.

srilankan_tamil_camps

எண்பதுகளில் இலங்கை இனப்பிரச்சனை தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர், தமிழகத் தமிழர் என்று இருமுனைவுடையதாக இருந்தது. தற்போது ஈழத்தமிழர், தமிழகத் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர் என்று முக்கோணமாக மாறியுள்ளது. இனப்பிரச்சனை தொடர்பிலான எந்த நடவடிக்கையும் இந்த மூன்று முனைகளுக்கிடையிலான சமநிலையை சரியாகக் கையாளக் கூடியதாக அமைய வேண்டும். ஏனெனில் இதன் ஒருமுனையில் ஏற்படும் அதிருப்தியானது மற்றைய முனைகளிலும் தாக்கம் செலுத்த வல்லதாகும். இலங்கை தொடர்பிலான எந்த நடவடிக்கையிலும் தமிழ்நாடு மாநில அரசினை கலந்தாலோசிப்பதுடன் தமிழகத்தில் இயங்கும் ஈழத் தமிழர் நலம்  நாடும் அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளையும் உள்வாங்குதல் வேண்டும். இவர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை அமைப்பதனூடாக இதனை மேற்கொள்ளலாம். இவ்வாறு செயற்பட்டால், அது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தெளிவை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களை நடத்துவதாகக்கூறி தமிழகத்தில் பிரிவினைவாதப் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களின் வாய்களை அடைத்துவிடும்.

ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், யுத்தத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்த ஏறத்தாழ ஒரு மில்லியன் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். கடந்த முப்பத்தாண்டுகளாக கோயில்கள், கலைகள், மொழியும் மதமும் சார்ந்த நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டுவரும் அவர்கள் இந்தியப் பண்பாட்டின் வெற்றிகரமான தூதுவர்களாக மேற்குலகில் விளங்குகிறார்கள். தமிழர் நலன்களை விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டுவரும் அவர்களை மோடி அரசு தனது பக்கம் ஈர்ப்பதற்கு முயலவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சனையை மோடி அரசு வெற்றிகரமாகத் தீர்க்குமாயின், அவர்களை இந்தியாவின் நலங்களைப் பேணும் அழுத்தக் குழுக்களாக மேற்குலகில் செயற்படவைக்க முடியும். மேற்குலகில் செயற்படும் ஈழத்தமிழர் அமைப்புகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது இனப்பிரச்சனைக்கான தீர்வைக்காண்பதற்கு உதவுவதுடன் நின்றுவிடாது, இந்தியாவின் நலன்களுக்கும் பயனளிக்கக் கூடியது.

தமிழகத் தமிழர், புலம்பெயர்ந்ததமிழர் ஆகிய இரண்டு முனைகளிலும் நல்லுறவை வலுப்படுத்தினால் ஈழத்தமிழர்களுக்கான தீர்வை நோக்கி இலகுவாகச் செல்லமுடியும்.

********

முதன்மையான தீர்வு : இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மாற்றி சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை ஏற்படுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை பகிர்வதனூடாக தீர்வுகாண்பதற்கு இந்தியா நேரடியாக அழுத்தம் கொடுக்கவேண்டும். சமஷ்டி அமைப்பை நோக்கிய குறிப்பிடத்தக்க நகர்வாக, முந்தைய சந்திரிகா (குமாரதுங்க) அரசு உருவாக்கிய தீர்வுப்பொதியின் முதல் வரைபினை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் செய்ய முடியும்.

இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது  தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும்.

நேரடியாக தலையிட்டு பொதுவாக்கெடுப்பை நடத்தி தமிழீழத்தை உருவாக்கலாம். மிகப் பெரும்பான்மையுடன் ஈழத்தமிழர்கள் தமிழீழத்திற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்; எனவே,  வெளியுலகத்தில் இருந்து இது தொடர்பாக வரக்கூடிய அழுத்தங்களை இந்தியா எளிதில் சமாளித்து விடலாம். தமிழீழமானது இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் என்பது ஒரு உள்நோக்கமுடைய மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. என்ற போதிலும், அவ்வாறான சாத்தியக் கூறையும் கருத்திலெடுத்து, அச்சிறிய நாட்டின் பாதுகாப்புப்பற்றிய விவகாரங்களில் இந்தியா தனது நலன்களைப் பேணக்கூடியதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளலாம். இவ்வாறான ஒப்பந்தம் இது தொடர்பில் இந்தியாவின் கவலைகளைச் தீர்க்கக்கூடியதாக இருக்கும். இந்தியா இந்தத் தெரிவை நாடினால் அது ஈழத்தமிழர் பிரச்சனையில் தாக்கம் செலுத்தக்கூடிய மற்றைய இருமுனைகளான தமிழகத் தமிழர்களில் கணிசமானவர்களாலும்,  புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவராலும்  வரவேற்கப்படும்.  அத்துடன் பாஜகவுக்கு அரசியலடிப்படையில் பெரும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.  ஒரு வேளை இது நடக்குமானால், இதன் விளைவாகத் தமிழகத்தில் பாஜக மாநில ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால்கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.

இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை இந்தியாவின் மாநிலமாக பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் இணைத்துக் கொள்வது வேறொரு தெரிவாகும். இந்தியத் தேசியவாதிகளால் பெரிதும் வரவேற்கப்படக்கூடிய இந்த நடவடிக்கை நடைமுறையில் மிகவும் சிக்கலானதாகும். ஈழத்தமிழர்கள் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருப்பதைவிட இலங்கையில் ஒரு மாகாணமாக சமஷ்டி அமைப்புக்குள் இருப்பதையே விரும்புவார்கள். காஷ்மீருக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்துப் போன்று தமிழீழ மாநிலத்திற்கும் வழங்கி அவர்களின் மனதை வெற்றிகொள்ள முயலலாம். ஆனால், மோடி அரசானது காஷ்மீருக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்தையே நீக்குவதற்கு திட்டமிட்டிருக்கையில் ஈழத்தமிழருக்கு எதிர்காலத்தில் அதை அளிப்பது கடினம்தான். எனினும், காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டு 60 ஆண்டுகாலம் சிறப்புச்சட்டம் நீடித்திருப்பதால், ஈழத்தமிழருக்கும் வரையறுத்த ஒரு காலப்பகுதிவரை அவ்வாறான சிறப்புச் சட்டத்தை வழங்குவது அவசியம் என்று நியாயப்படுத்த முடியும்.

srilanka-flagஇலங்கையின் வடக்குக்கிழக்கை தமிழ் மாநிலமாகவும் மற்றைய பகுதியை சிங்கள மாநிலமாகவும் இந்தியாவுடன் இணைத்துக்கொள்வது முன்னர் கூறப்பட்ட தீர்வின் நீட்சியானதொரு தீர்வாகும். ஆனால் இது சர்வதேச சமூகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். இந்த நடவடிக்கை இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பொறுத்தே வெற்றியளிக்கக்கூடியது.  ஆனால், இது அதீதமான கற்பனை என்றெல்லாம் சொல்லி விட விடியாது.  இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து இரண்டாயிரம் கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்திய ஒன்றியத்தின் பங்காளிகளாக இருக்கையில், வெறும் முப்பத்தியிரண்டு கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள இலங்கைத்தீவானது தனியான நாடாக எப்படி வந்தது என்ற கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் எழுவதேயில்லை. தற்போதைய நிலையை மீறி சிந்திக்காத மனதுதான் இதற்குக் காரணம். இந்தியாவிலுள்ல பல்வேறு பிரதேசங்களைப்போன்று இலங்கையும் இந்திய உபகண்டத்தின் பொதுப் பண்பாட்டையே கொண்டிருக்கிறது. அது தனிநாடாக மாறியதற்குக் காரணம் பிரிட்டிஷார் எடுத்த நிர்வாக முடிவு என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைத் தீவின் மத்திய மலைநாட்டில் இருந்த கண்டி இராச்சியத்தை தவிர்த்து மற்றைய பிரதேசங்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் வந்திருந்த நிலையில், அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை (1793-1798),  சென்னை மாகாணத்தின் பகுதியாகவே நிர்வகிக்கப் பட்டன. நிர்வாக வசதிக்காகவே பின்னர் இது சென்னை மாகாணத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்தத் தனியான நிர்வாகத்தின் தொடர்ச்சியாகவே இலங்கை இந்தியாவிலிருந்து வேறான தனிநாடாக மாறியது.  “இந்திய ஒன்றியத்தின் மையப் பண்பாட்டுடன் வேறுபாடுகளற்ற இலங்கை, நேபாளம், பூட்டான், மொரிசியஸ், சீசெல்ஸ் போன்றவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்துக்கொள்வது, பிராந்திய வல்லரசு என்ற நிலையையும், இந்து மாகடலில் அதன் ஆளுமையையும் நிலைநாட்டும்”  என்று கருதக்கூடிய இந்தியத்தேசியவாதிகள் உள்ளனர். இதை நோக்கிய செயற்திட்டத்தில் முதற்கட்டமாக இருப்பதற்கு அதிக சாத்தியமுடைய நாடு இலங்கை என்பதில் ஐயமில்லை.

இலங்கை இனப்பிரச்சனை என்பது மோடிக்கு முன்னுள்ள சவாலாகும். மோடி இவற்றுள் ஒரு தெரிவை மேற்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பாரா அல்லது முன்னைய இந்திய ஆட்சியாளர்கள்போன்று சிங்கள அரசியல்வாதிகளின் காலநீடிப்பு போன்ற பல்வேறு தந்திரங்களுக்கு பலியாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(கட்டுரை ஆசிரியர்  நிலவேந்தி இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்ட ஈழத்தமிழர்)

23 Replies to “இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்”

  1. இலங்கையின் அரசியல் சூழலையும், பாரதத்தின் ராஜதந்திர தேவைகளையும் புரிந்துகொண்டு நன்கு சிந்தித்து எழுதப்பட்ட பதிவு இது.

    இலங்கை இந்தியதொடர்பை ரஷ்ய,உக்ரேனிய தொடர்போடு ஒப்பிடமுடியும் என எண்ணுகிறேன்.

    இந்திய ஒன்றியத்தின் மையப் பண்பாட்டுடன் வேறுபாடுகளற்ற நேபாளம், பூட்டான், மொரிசியஸ், சீசெல்ஸ் போன்றவற்றை அவ்வாறு இருப்பதால் மட்டுமே இந்திய அரசாட்சி வரம்புக்குள் கொண்டுவரவேண்டிய அவசியம் இருப்பதாக நாம் கருதவேண்டியதில்லை. மாறாக அவற்றை பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய வலிமையான கலாச்சார அடிப்படையிலான கூட்டுறவாக ஒருங்கிணைக்கலாம். மோதி அவர்களின் முதல் பயணமாக பூடான் அமைந்திருப்பது இந்த இலக்கை நோக்கிய நகர்தலாகக் கருதலாம்.

    இலங்கை சற்று வித்தியாசமானதேசம். இலங்கையின் அமைவிடம், சமூக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இன்றைய சர்வதேச அரசியல் போக்குகளை கவனிக்கும்போது, இலங்கையானது இந்தியாவுடன் கூட்டாச்சிமுறையில் தனி தமிழ்மாநிலம் மற்றும் சிங்கள மாநிலம் என்பதாக இணைவது இந்தியா, தமிழர், சிங்களர், இலங்கை முஸ்லிம்கள் என அனைவருக்குமே நல்லது. இலக்கு சிறப்பானது செயல்படுத்த தொலைநோக்குப் பார்வை, அரசியல் உறுதி, திறமை, பொறுமை, தொடர்ச்சியான செயல்பாடு,ஆகியன தேவை.

    முதலில் மோதி அவர்களின் ஆட்சி குறைந்தது 15 வருடங்களாவது நிலைத்திருக்க என்ன செய்யவேண்டுமோ அதைசெய்யவேண்டும். இந்த முயற்சியில் தமிழகத்தை சேர்ந்த நமக்கு அதிக பொறுப்பும் கடமையும் உள்ளது.

    முதலில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும். இரண்டாவதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களிடம் பா.ஜ.க. சார்பான,, செல்வாக்கு செலுத்தக்கூடிய,, ஆற்றல்வாய்த அமைப்பை உருவாக்க வேண்டும். சிங்களர்கள் மீதான வெறுப்புணர்வை துடைத்தெறிய வேண்டும், தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தை சுயலாப நாத்திக இனவெறி கும்பலிடமிருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கும்,சிங்கள மக்களுக்கும் இடையே, கலாச்சார தொடர்பை வலுப்படுத்த வேண்டும், இந்த செயல்பாடுகளில் புகுந்து குழப்பாத வகையில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ கும்பல்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. கொஞ்சம் பெட்டியைவிட்டு வெளியே வந்து யோசிக்க வேண்டும். OT- வேலை பார்த்தால் வருங்கால சந்ததி நன்றாக இருக்கும்.

  2. இலங்கை பிரச்சனை பற்றி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை இந்துக்களும் பவுத்தர்களும் ஒற்றுமையாக ஒன்றாகவே இலங்கையில் வாழ விரும்புகிறார்கள். இலங்கையில்; தீவிரமக நடைபெற்ற கொண்டிருப்பது மேற்கு வெளிநாநாட்டு கூலிகளால் நடத்தபடும் தீவிரமான கிறித்துவ மதமாற்றம். இவற்றுக்கு உதவியாக கண்டு பிடிக்கபட்டவை தமிழீழத் (கிறித்துவ )தனிநாடு வெளிநாடுகளில்வாழும் ஈழத்தமிழர்கள் எனற புலம்பெயர்ந்த புலிகள் தமிழர்கள் புலிகளின் பேச்சை கேட்டால் இந்திய தமிழ் பேசும் இந்துக்களையும் நாடுநாடாக அகதிகளாக அலையவிட்டுவிடுவார்கள்.

  3. அருமையான கட்டுரை. சிறந்த முறையில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. மோடி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவைக் கொண்டுவருவார் என்று எதிர்நோக்குவாமாக!

  4. வரவேற்கதக்க பதிவு இலங்கை தமிழர்கள் மதரீதியாக கிறிஸ்தவமோ புத்தமதமொ சிங்களவர்களுடன் இணைந்துள்ளனர். ஆனாலும் சிங்கள அரசியல் தலைவர்கள் இரு இனத்தையும் தங்கள் சுய நலத்திற்காக பிரித்து நிரந்தர வெறுப்பை எட்பசுதி விட்டனர்.வடக்கு கிழக்கை இணைக்காத தீர்வானது கிழக்கில் உள்ள இந்து தமிழர்களை முழுமையாக முஸ்லிம்களாக மாற வழிகோலும் என்பது திண்ணம். இது தவிர மலையக இந்திய வம்சாவளியினர் இலங்கையில் அடிமை போல் நடத்தப்படுகின்றனர் அங்கும் முஸ்லிம் மத மாற்றம் தீவிரமாக நடைபெறுகின்றது இதற்கு அன்றாடம் பத்திரிகைகளில் வரும் பெயர் மாற்ற அறிவித்தல் சான்று. இவை எல்லாவற்றிற்கும் மத்திய கிழக்கு நாடுகளும் பாகிஸ்தானும் பண உதவி செய்கின்றன .உடனடி தீவு இல்லாவிட்டால் எதிர்காலம் கிழக்கிஸ்தான் உருவாக வழிகோலும். கடந்த யுத்த காலத்தில் கிழக்கில் இலங்கை இராணுவத்தை விட தமிழர்களை அதிகம் கொலை செய்தவர்கள் முஸ்லிம்களே .

  5. =தமிழர்கள் இம்மாகாணத்தில் அதிகாரத்தை இழந்திருப்பதும், யுத்தத்தினால் பேரிழப்புகளை எதிர்கொண்டிருப்பதும், மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது அதிக வறுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களை மதம்மாற்றிகளின் இலகுவான இலக்காக்கியுள்ளது. யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் உழைப்பிலேயே பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பெண்களே தற்போது மதமாற்றிகள் வலைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இப்பெண்களை மதம் மாற்றுவதனூடாக, அவர்களில் தங்கியுள்ள ஏன் என்று எதிர்ப்புக்குரல் எழுப்பமுடியாத பிள்ளைகளும் வேற்று மதத்திற்கு மாற்றப் படுகிறார்கள். குடும்பம் குடும்பமாக இவ்வாறு மதம் மாற்றப்படுவது தற்போது அன்றாட செய்தியாகிவிட்டது.=

    கிறிஸ்தவ மேற்குலக சக்திகளுக்காக புலிகள் நடத்திய யுத்தத்தால் தமிழர்கள் பாதிப்படைந்ததையும் கணவனை பெண்கள் இழந்ததையும் அவர்கள் குடும்பங்கள் வறுமையால் வாடுவதையும் மதம் மாற்றம் எந்த மதத்திற்கு யாரால் நடத்தபடுகிறது என்பதையும் மதமாற்றிகள் பௌத்தர்கள் அல்லது முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்று இந்திய இந்துக்கள் நம்பி கொள்ளும்படியாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழரான கட்டுரை ஆசிரியர் தந்திரமாக தவிர்த்து இருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவ கும்பல்களினாயே இலங்கை தமிழர்கள்,இலங்கை சிங்களவர்கள் மீது தீவிர மதமாற்றம் நடத்தபடுகிறது.
    உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட இமானுவல் ஒரு பாதிரி. இலங்கையில் தமிழீழ பிரிவினை கேட்பதுவும் பாதிரிகள்.

  6. அதில் குறிப்பிடப்படும் மதமாற்றம் முஸ்லிம்களாக மதமாற்றப்படுவது பற்றியே.
    கட்டுரையாசிரியர் குறிப்பிடுவது இஸ்லாம் பற்றியதே.இலங்கை தமிழர் பிரதேசங்களில் அதிகரித்து வரும் இஸ்லாம் மதமாற்றமும் நிலஆக்கிரமிப்பு பற்றியும் இலங்கை பத்திரிகைகளில் வரும் செய்திகள்,விளம்பரங்களை பார்த்தாலே அனைவரும் புரிந்துகொள்ளமுடியும்.கட்டுரை ஆசிரியர் தன்னை புலம்பெயர் தமிழர் என்று எங்கும் குறிப்பிடவேயில்லை. மேற்குறிப்பிட்ட இலங்கை என்ற கூற்றை எழுதிய “புலம்பெயராத இலங்கையன்” என்பவர் தான் இலங்கையில் வசிக்காதவராக இருக்க வேண்டும்.உண்மையில் இலங்கை தமிழரின் இருப்புக்கு அதிக அச்சுறுத்தலாக சிங்களவருக்கு இணையாக இஸ்லாம் மதமும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

  7. \\\ இந்தியாவிலுள்ல பல்வேறு பிரதேசங்களைப்போன்று இலங்கையும் இந்திய உபகண்டத்தின் பொதுப் பண்பாட்டையே கொண்டிருக்கிறது. அது தனிநாடாக மாறியதற்குக் காரணம் பிரிட்டிஷார் எடுத்த நிர்வாக முடிவு என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது. \\\\

    பிரிவினைவாதத் தமிழர்கள் இந்த வாசகத்தை வாசித்தால் ஆசிரியருக்கு கொடுமையான அர்ச்சனைகளை அளிப்பார்கள். பின்னிட்டும் பல உண்மைகளுக்கு மத்தியில் துணிவுடன் இந்த ஒரு உண்மையையும் உரக்க உரைத்தமைக்கு பணிவார்ந்த வணக்கங்கள்.

    இந்த வ்யாசத்தின் ஆசிரியர் புலம் பெயர்ந்த தமிழரா எனத் தெரியவில்லை.

    ஆனால் ஹிந்துஸ்தானம் பற்றிய ஆழ்ந்த புரிதலைக் கொண்ட ஸ்ரீமான் என்பது மேற்கண்ட வாசகங்களிலிருந்து தெள்ளெனத் தெளிவாகத் துலங்குகிறது.

    \\ எண்பதுகளில் இலங்கை இனப்பிரச்சனை தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர், தமிழகத் தமிழர் என்று இருமுனைவுடையதாக இருந்தது. தற்போது ஈழத்தமிழர், தமிழகத் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர் என்று முக்கோணமாக மாறியுள்ளது. \\

    ஈழத் தமிழர்களுக்கு உதவுவது போன்ற போர்வையில் செயற்பட்டு — ஈழத்தில் சைவத்தையும் வைஷ்ணவத்தையும் அழித்து ஒழித்து சிலுவையை ஆழமாக நடும்படிக்குதமிழர்களின் அழிவுக்குக் காரணமாக உண்மையில் செயல்பட்ட, செயல்பட்டு வரும் தமிழ் பேசும் ஆப்ரஹாமிய மிஷநரிகள் என்ற நாலாவது கோணமும் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு போலி முதலைக்கண்ணீர்விட்டு ஆனால் ஈழத்தில் தமிழர்களது காணிகள், சிவாலயங்கள் மற்றும் க்ராமங்களை அபகரித்த ஈழத்தைச் சார்ந்த தமிழ் பேசும் முஸல்மாணிய பயங்கரவாதிகள் ஐநாவது கோணம். வ்யாசத்தின் ஆசிரியர் இந்த கடையிரண்டு கோணங்களை வெளிப்படையாகக் கோணங்களாகச் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் செயற்பாடுகளை தமிழகத்தில் ஆப்ரஹாமிய சக்திகளுடன் கரம் கோர்த்து செயற்படும் பிரிவினைவாதத் தமிழ்க்குழுக்கள் போன்று மூடி மறைக்கவும் இல்லை.

    \\\ தனிப்பெரும்பான்மையற்ற வகையிலான (50%க்கும் குறைவான) இனங்களின் பன்மைத்துவமும் அவற்றுக்கிடையிலான பொதுமதமான இந்துமதத்தின் இணைப்பும் இந்திய அரசியல் அமைப்பு வெற்றிகரமாக செயற்படுவதற்கான காரணங்களாகும். \\\\

    ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் இனங்களின் பன்மைத்துவம்.

    பல மொழி பேசுபவர்களை *இனம்* என்று சித்தரித்து ஒவ்வொரு இனமும் மற்ற இனத்துக்கு (=மொழி பேசுபவரும்) எதிரானவர் என்று சித்தரிக்க முனைந்தது, முனைவது — நேருவிய செக்யூலரிச சித்தாந்தத்தின் அடிப்படை. இதற்கு உரம் போட்டு வளர்த்தவர்கள் ஹிந்துஸ்தானத்தைப் பிளப்பதில் பேரார்வம் உடைய இடதுசாரி சக்திகள் மற்றும் ஆப்ரஹாமிய சக்திகள்.

    பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால் பேதம் இங்கில்லை

    என்பது சங்கம் முழங்கும் மந்திரம்.

    பேசும் மொழிகளால், உண்ணும் உணவு வகைகளால், உடுக்கும் உடைகளால் நம்மில் வேறுபாடுகள் உண்டு தான். ஆனால் பண்பாட்டு ரீதியாக கலாசார ரீதியாக அகண்ட ஹிந்துஸ்தானம் முழுவதும் ஒன்று என்பதே அழிக்க முடியாத மறுக்க முடியாத உண்மை. ஆப்ரஹாமிய சக்திகள் இந்த மறுக்க முடியாத ஒற்றுமையை தங்கள் போலி மதசார்பின்மை மற்றும் போலி இன (= இன த்வேஷ) வாதங்களால் சிதைக்க முயல்வது மட்டுமின்றி அதில் பெரு வெற்றிகளையும் பெற்றுள்ளார்கள் என்பது நிதர்சனம்.

    வேறுபாட்டை விதைப்பது என்பது ஆப்ரஹாமிய அறுவடைக்கு வழிசெய்யும் என்றால் தமிழகத்தையே கூட ஆப்ரஹாமிய மிஷ நரிகள் அதி செயற்கையாக கூறு கூறாகப் பிளந்து தள்ளும் என்பதில் சந்தேஹமே இல்லை. ஆப்ரஹாமிய சக்திகளின் முதல் இலக்கு ஆப்ரஹாமிய ஆட்சியை நிலை நாட்டுவது. மொழி மற்றும் இனம் போன்ற சொல்லாடல்கள் இந்த இலக்குகளை அடைவதற்கான சாதனங்களே. ஆந்த்ரப்ரதேசம் இரண்டாகப் பிளக்கப்பட்டது கூட ஆப்ரஹாமிய மத அறுவடைக்கு வழிவகுக்கும் படிக்கான வாடிகன் பரங்கிய க்றைஸ்தவ தேவாலயத்தின் அஜெண்டாப்படி என்பது சுடும் — ஆனால் பேசப்படாத விஷயமாயிற்றே.

    அன்பர் புலம்பெயராத இலங்கையன் அவர்கள் ஒரு விஷயத்தை சரியாகக் கவனிக்கவில்லை. தமிழ் பேசும் ஹிந்துக்களது நலன் களை — தமிழர் தம் தொல் சமயங்களான சைவத்தையும் வைஷ்ணவத்தையும் பௌத்தத்தையும் சமணத்தையும் — ஆப்ரஹாமியத்தில் அமிழச்செய்யும் — போலித்தமிழினவாதிகளின் செயல்பாட்டிலிருந்து விலகி —- நிதர்சனத்தை பிட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர்.

    கிழக்கு மாகாணத்தில் சிங்கள பௌத்தர்களுடன் கரம் கோர்த்து தமிழர்களின் காணிகளையும் ஆலயங்களையும் க்ராமங்களையும் ஆக்ரமிக்கும் தமிழ் பேசும் முஸல்மாணியர்கள் தமிழ் பேசும் ஹிந்துக்களது நலனுக்கு எதிராகச் செயல்படுவதை நேர்மையாகப் பகிர்ந்துள்ளார். அது போன்றே யுத்தத்தால் நிலைகுலைந்து போயுள்ள ஈழத்தில் — அமைதிப்பணி (=பிணி) என்ற போர்வையில் உலவி ஆனால் பிணந்தின்னிக் கழுகுகளாக அங்கிருக்கும் ஹிந்துக்களை க்றைஸ்தவர்களாக மாற்றும் மிஷ நரிகளின் செயல்பாட்டையும் தெளிவாகப் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் ஆப்ரஹாமியரின் காசில் தமிழீழ ப்ரசாரம் செய்யும் பிரிவினைவாதிகள் ஈழத்தில் தமிழ் ஹிந்துக்களுக்கு எதிரான ஆப்ரஹாமியச் செயல்பாடுகளை கபளச் சோற்றில் முழுப்பூசணிக்காயை மறைப்பது போல செயல்படுவது தொடரும் அவலம்.

    தமிழர்களின் தொல் சமயங்களான சைவத்தையும் வைஷ்ணவத்தையும் சமணத்தையும் பௌத்தத்தையும் சுவடில்லாமல் அழித்த பின் மிஞ்சும் தமிழ் என்பது உயிரற்ற உடலாக மட்டிலும் இருக்க முடியும்.

    தனித்தமிழ் பிரிவினைவாதத் தமிழர்கள் தெரிந்தோ தெரியாமலோ — ஆப்ரஹாமிய மிஷ நரிகள் பின்னணியில் இருக்கப் போராடுவது — ஈழத்தை ஆப்ரஹாமிய மயமாக்குவதற்குத் தான். தமிழகத்தில் சைவத்தையும் வைஷ்ணவத்தையும் அழித்தொழிக்கத் தான்.

    ஸ்ரீலங்காவில் தமிழ் ஹிந்துக்களுக்கும் அவர்களது உயிருக்கும் உடமைகளுக்கும் உடனடி உத்தரவாதம் அளிக்கும்படிக்கான செயற்பாடு — ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் மாகாணங்களில் இருக்கும் மாகாண அதிகாரப்பகிர்வு முறைப்படியான — மாகாண அதிகாரங்களை ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு அளிக்க விழைவது தான்.

    \\\ இலங்கையின் வடக்குக்கிழக்கை தமிழ் மாநிலமாகவும் மற்றைய பகுதியை சிங்கள மாநிலமாகவும் இந்தியாவுடன் இணைத்துக்கொள்வது முன்னர் கூறப்பட்ட தீர்வின் நீட்சியானதொரு தீர்வாகும். ஆனால் இது சர்வதேச சமூகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். இந்த நடவடிக்கை இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பொறுத்தே வெற்றியளிக்கக்கூடியது. ஆனால், இது அதீதமான கற்பனை என்றெல்லாம் சொல்லி விட விடியாது. \\\

    நேர்மையான மற்றும் நிதர்சனத்தின் பாற்பட்ட தீர்வு என்பது மேற்கண்ட தீர்வு தான். இத்தீர்வு அதீத கற்பனையின் பாற்பட்டு அல்ல என்று துணிந்து சொன்ன ஆசிரியரின் நேர்மை பாராட்டுக்கு உரியது.

    சைவமும் வைஷ்ணவமும் அழிந்தால் தமிழுக்கு எப்படிக் கேடு வரும் தமிழ் மொழி எப்படிப் பின்னடைவு கொள்ளும் என்று ஸ்ரீ பால கௌதமன் அவர்கள் உரையாற்றி இருக்கிறார்கள். அதன் ஒலி நாடாவோ அல்லது சாராம்சமோ இந்த தளத்திலோ அல்லது அன்னாரது தளத்திலோ தமிழ் பேசும் நல்லுலகத்திற்குப் படைக்கப்பட வேண்டியது அவச்யம்.

  8. இந்த ஒரு மிகவும் முக்கியமான கட்டுரை பற்றி நாம் கருத்து தெரிவிக்கும் போது சற்று பொது நலமும் கலந்து கூறவேண்டுமே அன்றி வெறும் உணர்வுகளுக்கு பலியாகி விமர்சனம் கூறுவது தவறு.இது ஒரு இராஜதந்திரத்தை இந்தியாவுக்கே எடுத்துக்கூறும் ஒரு ஆலோசகரின் தேவையை உணர்த்தி நிற்கிறது.இந்த ஆசிரியர் அதனை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார் “ஈழத்தமிழர்களின் வீழ்ச்சி என்பது பாஜகவின் கோட்பாடுகளின் வீழ்ச்சியுமாகின்றது” என்று கூறுவதனூடாக தான் ஒரு அரசியல்ஞானி என்பதனை கூறாமல் கூறுகிறார்.காரணம், இப்போது இந்தியாவை ஆள்வது பா.ஜ .க. எனவே அவர்களுக்கு கூறும் விதத்தில் கூறவேண்டும் என்று தெரிகிறது.குழந்தைக்கு மருந்தினை தேனுடன் அளிப்பதை ஒத்தது இது.இவர் ஒரு ஆழ்ந்த அரசியல் கண்ணோட்டம் உடையவராக காணப்படுகிறார்.அத்தனை தெளிவு,மற்றும் இலங்கை தமிழர் மீதான கரிசனையுடன் இந்துத்துவா எண்ணமும் பரிணமிக்கிறது.அடுத்தது, அவர் கூறும் விடயம் இஸ்லாம் அடிப்படை இந்துத்துவ எதிர்ப்பு மனோநிலையானது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் ஆபத்தானதே என்பதை இந்த கட்டுரை மூலம் ஒரு சிறு குழந்தையும் விளங்கிக்கொள்ளக்கூடிய விதத்தில் எழுதியுள்ளார். இலங்கையில் சிங்களவருக்கு இணையாக இஸ்லாமியரும் அங்கிருக்கும் பூர்வீக தமிழருக்கு எத்தனை ஆபத்தானவர்கள் என்பது புரிந்தும் நாம் வீணே கிறிஸ்தவர் மீது பழிபோட்டு அங்கு ஒற்றுமையாக வாழும் இந்து மற்றும் கிறிஸ்தவ தமிழரை பகையாளிகளாக்கும் செயலை செய்வதனை நிறுத்த வேண்டும்.இலங்கை தமிழர் விடயத்தில் முன்னைய தமிழர் விரோத காங்கிரஸ் அரசு கையாண்ட அதே போக்கினையே இப்போதைய அரசும் கைக்கொள்ளுமாயின் “இந்தியாவிற்கு இலங்கை மீதான பிடி தமிழர்கள் மூலமாகவே கிடைக்கின்றது. இலங்கையில் தமிழர்களின் வீழ்ச்சி, இலங்கைமீதான இந்தியாவின் கட்டுப்பாட்டை இல்லாதொழித்து, இந்தியாவின் பிராந்திய வல்லரசு என்ற நிலையை சவாலுக்கு உள்ளாக்கி விடும்” என்ற உண்மையை அடித்து உணர்த்துகிறார்.அவர்கூறுவது போல் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையினில் முஸ்லிம்களின் குடியேற்றத்தை சில முஸ்லிம் கடும் போக்குவாத நாடுகளின் அனுசரணையுடன் செய்வதானது ,திட்டமிட்டு இந்தியாவினை பேராபத்துக்குள் இட்டுச்செல்லும் செயலே.
    ஏற்கனவே சிங்களமானது சீனாவுடன்குடும்பம் நடாத்தி இந்தியாவின் பாதுகாப்பையே தெற்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது.இப்போது நடக்கும் முஸ்லிம் மதமாற்றமும் அவர்களின் ஆக்கிரமிப்பும் எதற்க்காக?இந்திய கொள்ளை வகுப்பாளர்களே ,உங்களின் கவனத்திற்கு!
    “இலங்கையை கையாளுவதற்கு தனிப்பொறுப்பிலான துணைவெளிவிவகார அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம்”என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒன்றே. இந்தியா இந்துத்துவா என்ற கொள்கைக்குள் அடங்கும் நாடல்ல எனவே அது எடுக்கப்போகும் நடவடிக்கைகளை ஏனைய மதங்களுக்கு எதிரானதாக யாரும் நினைக்க கூடாது.இந்தியாவின் புதிய பிரதமர் மோடி அவர்கள் முன்னிருக்கும் சவால்களை அவர் நிலவேந்தியின் கட்டுரையை வாசிப்பதனூடாகவெனும் தீர்க்க முற்படட்டும்.

  9. மிக அருமையான கட்டுரை. இல்லை இல்லை மிக ஆழமான ஆலோசனை. தெளிந்த பார்வை.சாத்தியமான தீர்கதரிசனம். ஏனைய இந்திய தளங்கள் இப்பேற்பட்ட கட்டுரைகளை வெளியிடாது என்பதனாலோ என்னவோ சிந்தனையாளர் எமது தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஆட்சியை பொறுத்தவரையில் இங்கு வெளியிட்டதும் ஏதாவது வகையில் கவனத்தை பெறலாம்.
    இது ஈழத்தமிழர் தொடர்பு பட்டதனால் கோடீஸ்வரர் பெயர் தாங்கிக்கொண்டு பராரிகளும் அறிவாளிகள் என்று பெயர்தாங்கிகொண்டு குறுகிய சிந்தனையாளர்களும் வந்து ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தையும் போராளிகளையும் போராளிகள் அமைப்பையும் கொச்சைப் போடுதுவதகேன்றே வரிந்து கட்டிக்கொண்டு.மறுமொழி இடுவார்கள்.
    பேரு மதிப்பிற்குரிய க்ருஷ்ணகுமார் அவர்களின் மணிப்பிரவாள மொழிநடையை ரசித்து அனுபவிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஈழத்தமிழர் தொடர்பாக அவர் வெளியிடும் கருத்துக்கள் அந்த மொழி நடையையே …… பண்ணிவிடும். ஏனெனில் பக்கசார்பான ஒரு சிலரின் கருத்துக்களை உள்வாங்கி சீர்தூக்கி பார்க்காமல் நடுநிலை நீதி நியாயம் கருதாமல் வெளியிடும் கருத்துக்கள் உண்மை தெரிந்தவனுக்கு அருவருப்பையே ஏற்படுத்தும். மேலே அனல் கொண்ட நுணல் என்பவர் எனது என்னத்தையும் பிரதிபலித்திருக்கின்றார்.
    ஈழத்தமிழர் என்றால் கிறிஸ்தவர்கள் என்கிற பார்வை இத்தளத்திற்கு வருகின்ற பலரிடம் உண்டு, தமிழர் அடக்குமுறையை பொருத்தமட்டில் கிறிஸ்தவ இந்து மத்பாகுபடில்லை. விடுதலை போராட்டத்திலும் மதப்பாகுபாடில்லை. ஆனால் இந்தியாக்கள் போல ஈழ தமிழ்ர்களிடம் ஆங்கில பாண்டித்தியம் இல்லை. இதனால் ஆங்கில மொழி தெரிந்த தமிழ் உணர்வுள்ள பாதிரிமார் அந்த கடமயை செய்தார்கள் செய்கின்றார்கள்.
    சர்வம் சிவமயம்
    சுப்ரமணியம் லோகன்

  10. இலங்கை பிரசினை குறித்து பல கோணங்களில் சிந்தித்து நிலவேந்தி அவர்கள் எழுதியிருக்கும் அருமையான கட்டுரை. வசவுகளோ வெறுப்பு சொல்லாடல்களோ இல்லாமல், தெளிவான சிந்தனையுடன் நோய்க்கூறுகளையும் தீர்வுகளையும் அலசுகிறார். தமிழர்களின் நலன், இந்தியாவின் ராஜதந்திர தேவைகள், இலங்கை அரசியல் யதார்த்தங்கள் என்ற மூன்று தரப்புகளையும் கணக்கில் கொண்டு பேசுகிறார். இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டு வெளியுறவு அமைச்சகத்துக்குத் தரப்பட வேண்டும்.

  11. வடக்கிலும், கிழக்கிலும் திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடியேறங்களால் தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கப்படும் வேளையில் நிலைமையை விளக்கி, இவ்வளவு தெளிவான கட்டுரையை வெளியிட்டமைக்கு ஈழத்தமிழர்களின் நன்றிகள்.

  12. அன்பார்ந்த ஸ்ரீ சுப்ரமண்யன் லோகன்,

    சம்வாதத்தின் பயன் விஷயத் தெளிவு.

    நான் பகிர்ந்த கருத்துக்களில் பிழை இருக்குமானால் அதைக் குறிப்பாகச் சுட்டிகாட்டி சரியான தகவல்கள் பகிரப்படுவது எனக்கும் கருத்துத் தெளிவு கொடுக்கும் வாசகர்களுக்கும் கருத்துத் தெளிவு கொடுக்கும். இயன்றவரை எனது கருத்துக்களை கருத்து வாரியாக பகிர்கிறேன். அவற்றில் குறிப்பாகப் பிழையானவற்றை சுட்டி அது ஏன் பிழையானது என்று விளக்க ப்ரயாசிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

    \\ ஈழத்தமிழர் என்றால் கிறிஸ்தவர்கள் என்கிற பார்வை இத்தளத்திற்கு வருகின்ற பலரிடம் உண்டு, \\

    இல்லை ஐயா. உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களானவர்கள் ஈழத்திலிருந்தாலும் சரி வேற்று நாடுகளில் இருந்தாலும் சரி சைவம் தழைக்க அயராது பாடுபடும் சான்றோர் என்று அளவுகடந்த மதிப்பு எனக்கு உண்டு. ஸ்ரீமான் மயூரகிரி ஷர்மா அவர்களது வ்யாசங்கள் மூலமாக போர்த்துகீசியர்களின் மதக்கலஹக் காலங்களில் க்றைஸ்தவத்தை வெளிப்போக்காகத் தழுவி ஆனால் ஹ்ருதயபூர்வமாக சைவப்படி ஒழுகும் க்றைஸ்தவர்களை பஞ்சாக்ஷர க்றைஸ்தவர்கள் என்று குறிக்கப்பட்டார்கள் என்பதையும் வாசித்துள்ளேன். சிவப்பரம்பொருளை வெளிப்படையாகவேனும் சரி ஹ்ருதயபூர்வாமாக மட்டிலும் சரி வழிபடுபவர்கள் அனைவரும் எனது வணக்கத்திற்குரியவர்களே.

    ஆனால் இன்று யுத்தத்திற்குப் பிறகு ஈழத்தில் சொல்லொணாத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழ் பேசும் ஹிந்துக்களை மிஷ நரிகள் க்றைஸ்தவர்களாக மதம் மாற்ற விழைவது எந்த தார்மீக அடிப்படையின் பாற்பட்டும் ஏற்கத் தக்கதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

    இதுவரை ஈழத்தில் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மற்றும் க்றைஸ்தவர்களது மத்தியில் பிணக்குகள் இல்லை என்பதனை மதிப்பிற்குரிய ஸ்ரீ வியாசன் அவர்களது தளத்தில் பகிரப்பட்ட பல வ்யாசங்கள் மூலம் வாசித்து அறிந்துள்ளேன். மிகவும் ஆறுதலான மற்றும் மிக உயர்ந்த செயல்பாடு. ஹிந்துத்வக் கருத்தில் ஈடுபாடு உள்ள அன்பர்கள் க்றைஸ்தவர்கள் எல்லோரும் ஹிந்துக்களகவே மாற வேண்டும் என்று நினைப்பதில்லை. மாறாக இன்று க்றைஸ்தவர்களாக இருக்கும் அவர்களது முன்னோர்களின் ஹிந்துப்பண்பாட்டைப் போற்றும் பாங்கும் ஹிந்துக்களொடு இணக்கமாக வாழ்வதையுமே எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனால் எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற பழமொழிக்கு ஏற்ப யுத்தத்திற்குப் பின் ஆழ்ந்த துன்பத்தில் உழலும் தமிழ் பேசும் ஹிந்துக்களை இந்த சமயம் தான் சாக்கு என்று உள்புகுந்து க்றைஸ்தவராக மதம் மாற்றும் முயற்சியானது எதிர்காலத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விவாதத்திற்கே உரியது.

    ஈழத்தில் தமிழ் பேசும் முஸல்மாணியர் குறிப்பாகத் கிழக்கு மாகாணப்பகுதிகளில் தமிழ் பேசும் ஹிந்துக்களது காணிகள், க்ராமங்கள், ஆலயங்கள் போன்றவற்றை அபகரித்தமை ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களுக்கும் மேலும் ஹிந்துக்களோடு ஒப்புறவாக வாழ விழையும் க்றைஸ்தவ முஸல்மாணியருக்கும் (தமிழர்களுக்குல் மட்டிலும் அல்ல) பதட்டத்தையும் தாபத்தையும் கொடுக்கிறது. மதங்கள் கடந்து மானுடத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இந்த செயல்பாடுகளை ஏற்க முடியாது. இதுவரை கருத்துப்பகிர்ந்த அன்பர்கள் யாரும் தமிழ் பேசும் ஈழத்து முஸல்மாணிய சஹோதரர்களின் செயல்பாடுகளை நேராகவோ மறைமுகமாகவோ ஆதரிக்காமை மனதிற்கு நிறைவைத் தருகிறது.

    தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் சக்திகளின் செயல்பாடுகளில் எனக்கு மிகுந்த ஆக்ஷேபங்கள் உண்டு. முக்யமான ஆக்ஷேபம் தமிழகத்தில் சைவத்தையும் வைஷ்ணவத்தையும் அடியோடு அழித்தொழித்து க்றைஸ்தவ இஸ்லாமிய மதங்களை வன்முறையாலும் பித்தலாட்ட முறைமைகளாலும் நிலைநாட்ட விரும்பும் ஆப்ரஹாமிய (= க்றைஸ்தவ இஸ்லாமிய) சக்திகளின் கையில் தமிழகத்து ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் இருக்கிறது.

    நிலைமை இப்படி இருப்பதால் கிழக்கு மாகாணத்து தமிழ் பேசும் முஸல்மாணியர் தமிழ் பேசும் ஹிந்துக்கள் பால் நிகழ்த்தும் கொடுமைகளைப் பற்றி இவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். ராஜபக்ஷே தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்பதில் எத்துணை ந்யாயம் இருக்கின்றதோ அத்துணை ந்யாயம் தமிழர்களது நிலம், நீச்சு, ஆலயங்கள், க்ராமங்கள் இவைகளை அபகரித்த தமிழ் பேசும் முஸல்மாணியர் தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பதிலும் இருக்கிறது. இதை இதுவரை யாரேனும் பெயரளவிற்காகவாவது முன்னெடுத்துள்ளார்களா? தெரியவில்லை

    ஆப்ரஹாமியரின் செயல்பாடுகள் பிரிவினைவாதத்தின் பாற்பட்டவை. ஹிந்துஸ்தானத்திலிருந்து தமிழகத்தைப் பிரிப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்படுகின்றனர் ஆப்ரஹாமியர். ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் சிஎஸ் ஐ சர்ச் மற்றும் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் கோவில் நிலங்களை முறைகேடாக அபகரித்து அடாவடி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தமிழகத்தை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிளக்க முனைவது ஏன் என்பதற்கு ராக்கெட் சயன்ஸ் எல்லாம் படிக்க வேண்டியதற்கு அவச்யம் இல்லை.

    மிகக் குறிப்பாக நாம் தமிழர் என்ற அமைப்பின் வாயிலாக செயல்படும் சீமான் என்ற அன்பர் சிவலிங்க வழிபாட்டை மிகவும் இழிவாகவும் தரக்குறைவாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார். இந்த அன்பர் ஈழத்தமிழர்களுக்காகவும் தமிழகத்தை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிளப்பதற்காகவும் ஆதரிக்க விழையும் அன்பர்கள் இவர் சிவலிங்க வழிபாட்டை இழிவு செய்ததைப்பற்றி வாயைத் திறவாவது சைவத்தையும் வைஷ்ணவத்தையும் என்னிரு கண்களாகப் போற்றும் எனக்கு ஏற்புடையதன்று. இந்த அன்பரின் செயல்பாட்டை சைவத்தில் நாட்டமுடைய தமிழகத்துத் தமிழர்களோ ஈழத்துத் தமிழன்பர்களோ கண்டித்ததாக நான் எங்கும் வாசித்ததில்லை.

    \\ ஆனால் இந்தியாக்கள் போல ஈழ தமிழ்ர்களிடம் ஆங்கில பாண்டித்தியம் இல்லை. இதனால் ஆங்கில மொழி தெரிந்த தமிழ் உணர்வுள்ள பாதிரிமார் அந்த கடமயை செய்தார்கள் செய்கின்றார்கள். \\

    ஒரே சமயத்தில் நாலு மொழிகளில் மாறி மாறி இயங்கும் எனக்கு எந்த மொழியினிடத்தும் த்வேஷம் கிடையாது. ஆங்க்லபாண்டித்யம் இல்லாமலும் தேசத்தை தலைமை தாங்க இயலும் என்று ஹிந்துஸ்தானத்தில் நிரூபித்தவர் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்கள். ரஷ்யர்களும் சீனர்களும் த்விபாஷிகளின் உதவி கொண்டே தங்களது மொழியிலேயே பேசிக்கொண்டே தான் உலகையே ஆள முயல்கிறார்கள்.

    \\ தமிழர் அடக்குமுறையை பொருத்தமட்டில் கிறிஸ்தவ இந்து மத்பாகுபடில்லை. விடுதலை போராட்டத்திலும் மதப்பாகுபாடில்லை. \\

    ஒரு மதத்தினர் அடுத்த மதத்தவர்களை நசுக்காத வரை மிகவும் ஏற்புடைய கருத்து. ஆனால் ஒரு மதத்தினர் அடுத்த மதத்தினரை நசுக்க விழைவது என்பது எந்த தார்மீக அடிப்படையின் பாற்பட்டும் எந்த காலத்திலும் ஏற்கக்கூடாத ஒன்று. ஹிந்துஸ்தானத்தின் சரித்ரம் இதற்கு மிகப்பெரும் சான்று.

    \\ இது ஈழத்தமிழர் தொடர்பு பட்டதனால் கோடீஸ்வரர் பெயர் தாங்கிக்கொண்டு பராரிகளும் அறிவாளிகள் என்று பெயர்தாங்கிகொண்டு குறுகிய சிந்தனையாளர்களும் வந்து ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தையும் போராளிகளையும் போராளிகள் அமைப்பையும் கொச்சைப் போடுதுவதகேன்றே வரிந்து கட்டிக்கொண்டு.மறுமொழி இடுவார்கள். \\

    ஐயா, ஈழத்தைப் பொறுத்தவரை ஈழத்தில் இருக்கும் தமிழர்களும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும் ஹிந்து, க்றைஸ்தவ, இஸ்லாமிய என்று எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் சரி நிலைமையை நேரடியாக உணர்ந்தவர்கள் என்றபடிக்கு எப்படிச் செயல்படினும் இயன்றவரை அதை ஆதரிப்பது என்பதில் எமக்கு எந்த சம்சயமும் இல்லை.

    ஆனால் இதை ஒரு சாக்காக வைத்து தமிழகத்தை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரிக்க முனையும் சக்திகள்……… முற்று முழுதாக தமிழகத்திலிருந்து சைவத்தையும் வைஷ்ணவத்தையும் அழித்தொழிக்க முனையும் ஆப்ரஹாமிய சக்திகளின் எடுப்பார்கைப்பிள்ளைகளாக செயற்பட்டு…… தமிழகத்தில் ஆப்ரஹாமியர், தமிழ் ஹிந்துக்களின் காணிகளையும் ஆலயங்களையும் அபகரிக்க முனைவதை கண்டும் காணாமலிருப்பதையும் எமது வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்துவதை கண்டும் காணாமலிருப்பதையும் எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

    தங்கள் மதப்படி ஒழுகி ஹிந்துக்களொடு இணக்கமாக வாழவிரும்பும் க்றைஸ்தவ இஸ்லாமிய அன்பர்கள் பால் ஹிந்துத்வக் கருத்தின் மீது ஈர்ப்பு உள்ள அன்பர்களுக்கு பெருமதிப்பு உண்டு. ஆனால் எமது சமயத்தை அழித்தொழித்து எமது தேசத்தை பிளக்க முனையும் சக்திகள் எவர்பாலும் எமக்கு மதிப்பு கிடையாது.

    எனது கருத்துக்களை இயன்றவரை தெளிவாகப் பகிர்ந்துள்ளேன் ஐயா. பிழைகள் இருக்குமானால் அவற்றைக் குறிப்பிட்டு அவை ஏன் பிழையானவை என்றும் சரியான கருத்துக்கள் யாவை என்பதனையும் பகிருமாறு அன்புடன் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  13. \\ நிலைமையை நேரடியாக உணர்ந்தவர்கள் என்றபடிக்கு எப்படிச் செயல்படினும் இயன்றவரை அதை ஆதரிப்பது என்பதில் எமக்கு எந்த சம்சயமும் இல்லை. \\

    ஈழத்தில் அமைதியையும் ஈழத்தமிழர்களின் வளமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடு என்பது சொல்ல விழைந்தது.

  14. ஐந்தரை வருஷ காலம் லே முதல் ஸ்ரீ நகர், டோடா, ஜம்மு வரை காஷ்மீர ப்ராந்தியத்தில் அபாயகர சூழ்நிலைகளில் பணிபுரிந்திருக்கிறேன்.

    1980களின் தசாப்தக்கடைசியில் காஷ்மீரத்தில் ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொலை செய்யப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்த துன்பங்களால் மனமுடைந்து ஹிந்துக்கள் காஷ்மீரத்திலிருந்து புலம் பெயர்ந்து ஹிந்துஸ்தானத்தில் ஜம்முவிற்கும் தில்லிக்கும் புலம் பெயர்ந்தார்கள். ஆனால் எத்துணை துன்பம் வரினும் சீக்கியர்களானவர்கள் புலம் பெயரவும் இல்லை மேலும் தங்களது நிலம் நீச்சுகளில் ஒரு அங்குலத்தைக் கூட வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்கவும் இல்லை.

    ஸ்ரீ நகர், பாராமுல்லா, கண்டாமுல்லா, ஸோபோர், ஸங்க்ராமா போன்ற பகுதிகளில் இன்றைய திகதிக்கு இப்பகுதிகளில் முஸல்மாணிய சஹோதரர்களைத் தவிர்த்து இப்பகுதிகளில் தென்படும் மாற்று சமய்த்தைச் சார்ந்த அன்பர்களாக சீக்கியர்கள் மட்டிலும் காணக்கிட்டுவார்கள். அவ்வளவு ஏன் ஹிந்துஸ்தானம் 1947ல் பிளக்கப்பட்ட பின்னும் மேற்கு பஞ்சாப், சிந்த், போன்ற பகுதிகளிலிருந்தும் லக்ஷக்கணக்கான சீக்கியர்கள் புலம் பெயரவே இல்லை. காபூலில் இருந்து கூட இன்னமும் புலம் பெயராது சீக்கியர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஹிந்துக்களும் கூட.

    காஷ்மீரத்தில் இணக்கமுள்ள எமது முஸல்மாணிய சஹோதரர்களிடம் காஷ்மீர நிலைமையப்பற்றிப் பேசும்போதெல்லாம் சீக்கியர்கள் தீரத்துடன் புலம் பெயராததையும் ஹிந்துக்கள் புலம் பெயர்ந்து சென்றதையும் குத்திக்காண்பிப்பார்கள்.

    இன்றளவுக்கும் நிலைமை அபாயகரமாகவே இருக்கும் இப்பகுதிகளில் தசாப்தங்களுக்கு முன் ஹிந்துக்கள் எடுத்த முடிவு எப்படி என்று விமர்சிப்பது சரியாகத் தோன்றவில்லை தான். ஆனால் காஷ்மீரப் ப்ரச்சினைக்குத் தீர்வு என்பது புலம் பெயர்ந்த காஷ்மீர ஹிந்துக்கள் அங்கு மீள் குடியேறுவதில் இருந்து தான் துவங்கவே முடியும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தும் கூடக் கிடையாது.

    அதையே எமது சஹோதரர்களான ஈழத்தமிழர்களிடமும் மிக உறுதியாக எதிர்பார்க்கிறேன். இதே தளத்தில் சஹோதரர் ஸ்ரீ ரிஷி அவர்களிடம் இதற்காக வெளிப்படையாக விக்ஞாபித்தும் உள்ளேன்.

    “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே”

    என்பது ஆன்றோர் வாக்காயிற்றே.

    மாதா ச பார்வதீ தேவி பிதா தேவோ மஹேச்வர:
    பாந்தவா: சிவ பக்தாஸ்ச் ஸ்வதேசோ புவனத்ரய:

    எமது அன்னை உமையாள் எமது தந்தை சிவபெருமான். எமது சொந்த பந்தங்கள் சிவ பக்தர்கள் என்று சொல்லிப்போகும் ச்லோகம்

    ஸ்வதேசம் (எம்முடைய நாடு) என்பது மூவலகிற்கும் பாற்பட்டது என்று சொல்கிறது.

    எங்கோ பரதேசத்தில் இருந்தாலும் எம்முடைய க்ராமம் தான் எமக்கு உயர்வானது.

    முருகப்பெருமான் உலகெங்குமேவிய தேவாலயந்தொரும் அருள்புரிந்தாலும் எல்லா ஸ்தலங்களும் எமக்குப் பழனியே. பழனியாண்டவானகவே எல்லா முருகப்பெருமானையும் பார்க்க விழைவேன்.

    ஈழம் தமிழர் கைவசப்படுவது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தீரத்துடன் தங்கள் நிலம் நீச்சுகளை மீட்டெடுக்க ஈழத்திற்கு மீள் குடியேற விழைவதிலிருந்தே துவங்க இயலும் என்பது எமது ஆழமான கருத்து. கதிர்காமத்துறை கதிர்வேலனாகிய எங்கள் பழனியாண்டவனிடம் இது விரைவில் நடக்க இறைஞ்சுகிறேன்.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  15. மஹா கனம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ க்ருஷ்ணகுமார் ஐயாவிற்கு என் ஸ்ரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களை மனதளவிலே ஸ்ரமபடுதிவிட்டேனோ என்று என் மனம் சஞ்சலம் கொள்கின்றது. மன்னித்தருளவும்.
    பிரிவினைவாதத் தமிழர்கள் ஆப்ரஹாமிய சக்திகளின் துணையுடன் செயல்படுபவர்கள் போன்ற சொல்லாடல்கள் தங்கள் கருத்துக்களை ஆழமாக சிந்த்க்குமுன்பு மறுமொழியிட தூண்டிவிட்டது. ஆனால் தாங்கள் அப்படி குறிப்பிட்டது தமிழ் நாடில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை என்பதனை மறுமொழி இட்டபின்பே புரிந்துகொண்டேன்.
    ஆனால் ஈழதமிழரகளாகிய நாம் சீமானையோ, வைகோவையோ அல்லது மற்றும் உணர்வாளர்களையோ நாமாக தெரிவு செய்யவில்லை. வாழ்வா சாவா என்கின்ற நிலையில் சாவின் விளிம்பில் நின்ற எமக்கு யார்கொளுகொம்பு தருகின்றார்களோ அதனை பற்றிபிடித்து கரைசேரவெ முயற்ற்சிதோம். இவர்களுக்குப் பதிலாக அல்லது இவர்களை மேவி ஒரு நாராயணனோ, ஒரு சிவசங்கரனோ, ஒரு ராமகொபாலனோ, ஒரு ஜெயேந்திரரோ எம்மை நோக்கி ஒரு குச்சியை நீட்டமுடியவில்லை?
    இந்து என்று வரும்பொழுது நான் உங்கள் அளவிற்கு சகிப்புத்தன்மை உடையவனோ சமரசம் செய்து கொள்ளுபவனோ கிடையாது. ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனை என்பது உரிமைப்பிரச்சனையாக வருவததற்கு முன்னால் நூற்றாண்டுகளாக வாள்வாதாரப்பிரச்சனையக இருந்தது. போராட்டம் நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டதெனினும் மாற்றுவழிகள் சாத்வீக வழிகள் பயனளிக்காத நிலையில் எதிரியின் பாணியில் வன்முறை சார்ந்த போராட்டமாக உருவெடுத்தது எண்பதுகளின் ஆரம்பத்தில்தான்.இதற்ற்கான நிதி ஆதாரம் அனைத்தும் சின்ஹல அரசிடமிருந்து பறித்து எடுத்தும் பின்பு புலம் பெயர்ந்த ஈழ தமிழகளினதுமே. ஆப்ரஹாமியரின் சக்தியும் செல்வாக்கும் எமக்கு இருந்திருக்குமேயானால் நாம் எப்பொழுதோ விடிவும் பெற்றிருப்போம் ஹிந்துஸ்தானமும் எம்மை அழித்திருக்கமுடியாது.
    பார்ப்போம் மோதி தலைமையில் ஹிந்துஸ்தானம் இருக்கும் காலத்திலேனும் காரணம் எதுவாக இருப்பினும் எமக்கான விடிவு பிறக்குமா என்று.
    சேவலும் மயிலும் போற்றி திருகைவேல் போற்றி போற்றி
    சர்வம் சிவமயம்
    சுப்ரமணியம் லோகன்.

  16. நினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்
    1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் பயங்கரவாத அமைப்பும் முஸ்லீம் காடையர்களும் நடத்திய கோரப்படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் நாளை தமிழின உயர்கொலைநாள் என பிரகடனப்படுத்தி வருடாந்தம் அதனை நினைவு கூர்ந்து வந்தனர். ஆனால் அது கூட தடைசெய்யப்பட்டு விட்டது.
    https://www.thinakkathir.com/?p=52335

    இனஐக்கியம் பேசுவதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை
    சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களை படுகொலை செய்து அழித்து நசுக்கி வருவது போல முஸ்லீம்களும் தமிழர்களை அழிப்பதிலும் அவர்களின் பண்பாடு கலாசாரங்களை அழிப்பதிலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னிற்கின்றனர்.
    https://www.thinakkathir.com/?p=49300

    ஒருபுறம் புத்த மத அடக்குமுறை; மறுபுறம் முஸ்லிம் மதமாற்றம்: திண்டாடும் ஈழத் தமிழர்கள்!
    மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
    https://www.dinamani.com/latest_news/article1324347.ece

  17. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுவதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன்.

  18. அன்பார்ந்த ஸ்ரீ சுப்ரமண்யன் லோகன்,

    இந்த வ்யாசம் ஈழத்தமிழர்கள் ஸ்ரீலங்காவில் அமைதியுடனும் வளமுடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வுகளை விசாரம் செய்கிறது.

    மூன்று வித தீர்வுகளை முன்வைக்கிறது.

    ஸ்ரீ லங்காவில் அதிகாரம் படைத்த ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணம்.
    தனித்தமிழீழம்
    ஹிந்துஸ்தானத்துடன் முழுதுமாக இணையும் ஸ்ரீலங்கா — பின்னர் அதில் வடகிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகள் இரண்டு மாகாணங்களாதல்

    வாஸ்தவத்தில் எந்தத் தீர்வு மேம்பட்டது என்பதனை முழுதாக தீர்மானம் செய்ய அமல் செய்ய உரிமை படைத்தவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டிலுமே.

    இன்றைய திகதியில் உலக அரங்கில் வேற்று நாடாக இருக்கும் ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அனைத்து ப்ரஜைகளும் முதல் தீர்வுக்கும் கடைத் தீர்வுக்கும் முழு ஆதரவு அளிப்பார்கள்.
    ஈழத்தில் தமிழ் ஹிந்துக்கள் தொல்லைக்குள்ளாவது என்பது ஹிந்துஸ்தானத்து தமிழர்களுக்கு மட்டிலும் தாபமளிக்கும் விஷயம் என்று எண்ணவும் வேண்டாம். நான் முன்னர் பகிர்ந்த படி மிகப்பெருமளவு ஹிந்துஸ்தானியரும் இந்த ப்ரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள்.

    ஈழ ப்ரச்சினையை தமிழரல்லாத மாற்று மொழியினரின் கவனத்துக்குத் தொடர்ந்து கொணரும் பணியை ஹிந்துத்வ இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.

    இது விஷயமாக ஹிந்துத்வ இயக்கத்தினரின் நிலைப்பாடுகளில் குறைகள் காணப்பட்டால் இயக்க செயல்வீரர்கள் வாய்மூடி மௌனியாக இருப்பதில்லை என்பதனையும் தாங்கள் அறிதல் நலம். சான்றுக்கு இந்த தளத்தில் ஸ்ரீ அ.நீ அவர்களால் பகிரப்பட்ட கீழ்க்கண்ட வ்யாசத்தையும் அது நிகழ்த்திய விளைவுகளையும் பார்த்தறியவும்

    https://tamilhindu.com/2012/03/rss-stand-on-us-resolution-against-lanka-wrong/

    \\ இவர்களை மேவி ஒரு நாராயணனோ, ஒரு சிவசங்கரனோ, ஒரு ராமகொபாலனோ, ஒரு ஜெயேந்திரரோ எம்மை நோக்கி ஒரு குச்சியை நீட்டமுடியவில்லை? \\

    நாராயணன் மற்றும் சிவசங்கரன் என்ற பெயர்கள் மூலம் தாங்கள் சுட்ட விழைவது என்ன என்று புரியவில்லை. ஜாதி சார்ந்த விஷயமாக ஏதும் கருத்துப் பகிர விழைகிறீர்களா? தெரியவில்லை. விஷயத் தெளிவில்லாமையால் இதற்கு மேற்கொண்டு பதிலளிக்கவில்லை.

    ஹிந்துத்வ இயக்க செயல்பாடுகளில் ஈடுபாடுடையவன் என்ற படிக்கு மேற்கொண்ட கருத்துப்பகிரல்கள் :-

    ஸ்ரீ ராமகோபாலன் தமிழக ஹிந்துத்வ இயக்க பிதாமஹர்களில் ஒருவர். தமிழகத்து மற்றும் ஹிந்துஸ்தானத்து ஹிந்துத்வ இயக்க செயல்பாடுகளில் பெரும் பங்களிக்கும் பெருந்தகை. அன்னாரது செயல்பாடுகளை தனித்ததாகப் பார்க்காமல் ஹிந்துத்வ இயக்க செயல்பாடுகளாகப் பார்த்தலே சரியானதாக இருக்கும்.

    ஈழ ப்ரச்சினையில் ஹிந்துத்வ இயக்கங்கள் அரசியல் தீர்வுகள் சார்ந்து மக்கள் மத்தியில் விவாதங்கள் எழவும் ஒருமித்த கருத்துக்கள் உருவாக்குவதிலும் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். அரசியல் ரீதியான செயல்பாடுகளில் பங்களிப்பை மேற்கண்ட சுட்டியில் பார்த்திருப்பீர்கள்.

    இது தவிர துயரத்தில் இருக்கும் ஈழ மக்களுக்கு ஹிந்து இயக்கங்கள் ஆன்மீக ரீதியான ஆதரவுக்கரமும் நல்கி வருகிறார்கள்.

    https://tamilhindu.com/2010/10/two-big-hindu-temples-retrieved-after-war-in-northern-srilanka/

    தமிழக வெகுஜன ஊடகங்களில் இலங்கைக் கோயில்கள், அவற்றின் தற்போதைய நிலை, புனருத்தாரணம் பற்றி விரிவான செய்திகள் இடம் பெறச் செய்யவேண்டும்.. கலாசார ரீதியாக தமிழகத்து பொது மக்கள் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களின் மீட்சியில் பங்களிப்பு செய்ய அது உதவும்.

    https://tamilhindu.com/2010/09/help-rebuild-srilankan-hindu-temples/

    https://tamilhindu.com/2010/03/thirumurai-veli-in-srilanka-tamil-areas/

    நல்லை ஆதீனம் புனரமைப்பிலும் ஹிந்துஸ்தான ஹிந்துக்கள் பங்களித்திருக்கிறோம்.

    மேற்கண்ட ஹிந்துஸ்தானியரது பங்களிப்பை குச்சி என்றளவுக்குத் தாங்கள் மதிப்பிடாவிடினும் ஒரு சிறு துரும்பு என்றாவது ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    நிற்க.

    த்ராவிட இயக்கங்களும் அவ்வப்போது கோஷ்டம் போடும் அமைப்புகளும் இலக்கில்லாது செயல்படும் அமைப்புகள் என்றே எமது புரிதல். இந்த அமைப்புகள் நேரடியாக ஈழத்தமிழர்களுக்கு எந்த விதத்தில் பங்களித்திருக்கிறார்கள் என்று அறியவும் விழைகிறேன். கோஷ்டம் போட்டு கல்லெறிந்து பஸ்களைக் கொளுத்துவதைத் தவிர உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு நேரடியாக இந்த அமைப்புகள் என்ன பங்களித்திருக்கிறார்கள் என்று (அப்படி ஏதும் இருந்தால் பகிரவும்). இவர்களால் ஈழத் தமிழர்களுக்கு ஏதும் பயனிருக்குமானால் மகிழ்ச்சியே.

    ஈழத்தமிழர் நலனில் வாஸ்தவத்தில் அக்கறை உள்ள தமிழ் ஹிந்துவாகிய எமக்கு ஹிந்துஸ்தானத்தில் செயல்படும் எமது இயக்கங்கள் செய்து வரும் பணி அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இன்னமும் பல மடங்கு விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று அவாவும் உண்டு. உங்களைப் போன்றோரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஆக்க பூர்வமான கருத்துக்களை. ஹிந்துத்வ இயக்கங்களின் செயல்பாடுகளில் தாங்கள் காணும் குறிப்பான குறைகள் யாவை குறைகள் களைய எடுக்க வேண்டிய விஷயங்களாகத் தாங்கள் கருதுபவை யாவை?

    தனித் தமிழீழம் என்ற ஒற்றைக் கொள்கையை அடுத்தும் இன்னமும் பல கோணங்களில் சஹோதரர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க முடியும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

    இந்த வ்யாசம் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டது. அப்படியிருக்க ஆன்மீக வாதியான பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடமிருந்து அரசியல் ரீதியான ஒரு தீர்வுக்கு பங்களிப்பை எதிர்பார்ப்பது சரியல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனால் ஆன்மீக ரீதியாக அவர் சார்ந்த அமைப்பிலிருந்து பங்களிப்புகள் உள்ளன என்பதை நான் மேம்போக்காக அறிவேன். ஆழ்ந்த தகவல்களை அன்னாரது அமைப்பைச் சார்ந்த சஹோதரர்கள் பகிர்வார்கள். எண்ணிறந்த ஆன்மீக மற்றும் சமூஹத் தொண்டுகளில் பங்காற்றிவரும் இவ்வமைப்பு ஈழத்தமிழர்களுக்காகத் தங்கள் பணிகளை விஸ்தரிப்பதில் உகப்பே கொள்ளும் என்பதிலும் எமக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

    இரு தமிழக அரசியல் வாதிகள் பற்றித் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

    அன்பர் வை. கோபால்சாமி என்ற அரசியல்வாதியின் பிரிவினைவாதக் கருத்துக்களில் எமக்கு கடும் வேறுபாடு உண்டு என்றாலும் நான் மிகவும் மதிக்கும் நேர்மையான அரசியல் வாதிகளுள் ஒருவர். மத் த்வேஷம் அற்றவர். கண்யமானவர். அன்னாரின் செயல்பாடுகள் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈழத்தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவிகரமாக இருந்தால் மகிழ்ச்சியே. நேரடியான செயல்பாடுகளில் முனைப்புடையவர். அமரர் ராஜீவ்காந்தி கொலையாளிகளின் தூக்குதண்டனை சம்பந்தமாக நேரடியாக ஸ்ரீ ராம்ஜெத்மலானி போன்ற தனது நண்பர்களின் உதவியை நாடியவர். எனக்கு இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆனால் வை.கோ அவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டிலும் அல்லர் என்பது என் கணிப்பு.

    அன்பர் சீமான் என்ற நபரின் செயல்பாடுகளை கொழுகொம்பிற்கு ஒப்பிட்டிருந்தீர்கள். அன்பர் சீமான் அவர்கள் மட்டற்ற சிவத்வேஷி. தன்னுடைய ப்ரசங்கங்களில் கண்யம் என்பதை லவலேசமும் கடை பிடிக்காதவர். ஹிந்து மத த்வேஷி. முழுமையான வாய்ச்சொல் வீரர். தமிழக பஸ் / லாரிகள் மீது கல்லெறியப்படுவதன் மூலமும் கோஷம் போடுவதன் மூலமும் ஈழப்ரச்சினை தீரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடைய அன்பர். துயரத்தில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட கோடரிக்காம்பு கூட கொழுகொம்பாக காட்சியளிக்கலாமே. மண்குதிரையில் ஏறி ஆற்றைத் (=ஹிந்து மஹாசமுத்ரத்தை) தாண்ட விழையாதீர் என்று நான் விக்ஞாபனம் மட்டிலும் தான் செய்ய முடியும்.

    \\ ஹிந்துஸ்தானமும் எம்மை அழித்திருக்கமுடியாது. பார்ப்போம் மோதி தலைமையில் ஹிந்துஸ்தானம் இருக்கும் காலத்திலேனும் காரணம் எதுவாக இருப்பினும் எமக்கான விடிவு பிறக்குமா என்று. \\

    ம்ஹும்………… புரியவே இல்லை.

    \\ உங்களை மனதளவிலே ஸ்ரமபடுதிவிட்டேனோ என்று என் மனம் சஞ்சலம் கொள்கின்றது. மன்னித்தருளவும். \\

    அறவே இல்லை ஐயா. மாறாக என்னுடைய கருத்துக்கள் என்னுடைய நிலைப்பாடுகளை முழுமையாக ப்ரதிபலிக்கவில்லை என்று தங்கள் வாயிலாக அறிந்த படிக்கு என் கருத்துக்களை இன்னமும் தெளிவாகப் பகிர வேண்டும் என புத்துணர்ச்சி பெறுகிறேன்.

    ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் கண்ணை மூடிக்கண்ணைத் திறப்பதற்குள் மாயாஜாலம் மூலம் அனைத்து ப்ரச்சினைகளையும் தீர்த்து விடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அனைத்து ஹிந்துத்வ இயக்க அன்பர்களுக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் குஜராத் மீனவர்கள் ஸ்ரீ லங்கா சர்க்காரால் மற்றும் எமது மேற்கெல்லையில் இருக்கும் சர்க்காரால் கைது செய்யப்படுவதற்கு முதலில் ஆவன செய்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அவ்வாறே ஈழத்தமிழர் ப்ரச்சினைக்கும் தீர்வளிக்க தமது முழுமையான பங்களிப்பார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  19. அய்யா வணக்கம்,

    //ஆனால் ஈழதமிழரகளாகிய நாம் சீமானையோ, வைகோவையோ அல்லது மற்றும் உணர்வாளர்களையோ நாமாக தெரிவு செய்யவில்லை. வாழ்வா சாவா என்கின்ற நிலையில் சாவின் விளிம்பில் நின்ற எமக்கு யார்கொளுகொம்பு தருகின்றார்களோ அதனை பற்றிபிடித்து கரைசேரவெ முயற்ற்சிதோம். இவர்களுக்குப் பதிலாக அல்லது இவர்களை மேவி ஒரு நாராயணனோ, ஒரு சிவசங்கரனோ, ஒரு ராமகொபாலனோ, ஒரு ஜெயேந்திரரோ எம்மை நோக்கி ஒரு குச்சியை நீட்டமுடியவில்லை?//

    என்று திரு.Subramaniam Logan on June 9, 2014 at 7:35 pm அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது முழுமையான கருத்து அல்ல என்பதை தெளிவாக்கவே இப்பதிவை இடுகின்றேன்.

    கண்டிப்பாக இப்பதிவு யாரையும் குறைகூறுவதற்க்கு அல்ல.

    பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும்கலை அமைப்புடன் இணைந்து பணியாற்றியவன் எனும்விதத்தில் இங்கு சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    இலங்கையில் கடுமையாக யுத்தம் நடந்துகொண்டிருந்தபொழுது இலங்கையின் வடபகுதிக்கு சென்று தமிழர் நல்வாழ்வுக்காக போர்நிறுத்தம் ஏற்பட ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பெருமுயற்சி செய்தார்கள்.

    இலங்கையிலிருந்து இந்தியாவந்து யுத்தத்தால் தமிழர் படும் இன்னல்களை தமிழகத்திலும், மத்தியிலும் இருந்த அரசியல் தலைவர்களிடம் எடுத்துரைத்து ஆக வேண்டியதை உடனே செய்யுமாறு வேண்டியது அனைவரும் அறிந்தது.

    ஒரு ஆன்மிக அமைப்பு எனும் அளவில் அதன் தொண்டர்கள் தங்களது சக்திக்கும் மீறி யுத்தத்தின்போதும்கூட உயிரைப்பணையம்வைத்து தமிழர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்துவந்தனர்.

    சுனாமியின்போது ஈழத்திற்க்கு உடனடியாக சென்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டது இவ்வமைப்பு.

    சமீபத்தில்கூட குருஜி அவர்கள், வட இலங்கை சென்று நேரடியாக தமிழரிடம், அவர்களுக்கு ஆறுதல்கூறி தனது ஆதரவை தெரிவித்துவந்தார்.

    அதுமட்டுமல்லாது தமிழக வாழும்கலை அமைப்பினர் இங்கு அகதிகளாக உள்ள தமிழருக்கும் நல்வாழ்வுகிடைக்க, அவர்களுக்கு குடியுரிமை கேட்டு மாபெரும் இயக்கத்தை நடத்தினர்.

    இவை அனைத்தும் அவர்கள் செய்தபணியில் எனக்கு தெரிந்த சிறு துளிகள். இப்பணிகள் யாவும் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி தொடர்ந்து நடந்து வருகின்றன.

  20. திரு கிருஷ்ணகுமார் “இன்றைய திகதியில் உலக அரங்கில் வேற்று நாடாக இருக்கும் ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் அனைத்து ப்ரஜைகளும் முதல் தீர்வுக்கும் கடைத் தீர்வுக்கும் முழு ஆதரவு அளிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏன் அவர்களுக்கு இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தெரிவை ஆதரிக்கமுடியாது?இந்துக்களைப் பெரும்பான்மையாக உடைய புதிய நாடு உருவாகுவதை ஏன் அவர்கள் விரும்பமாட்டார்கள்?இதுவே நாம் முஸ்லிம்களாக இருந்திருந்தால் முஸ்லிம்கள் இப்படியாக தந்திரமாக சுற்றிவளைத்துப் பேசாமல் நேரடியாகவே ஆதரிப்பார்கள்.இந்துக்கள் என்பது உதட்டளவில்தான் உள்ளே அந்த உணர்வு இல்லை.

  21. அன்பர்கள் கிருஷ்ணகுமார், தீரன் கருத்துக்கள் சிறப்பானவை.
    ஈராக் இனிமேலும் ஒன்றிணைந்த தேசமாக இருக்க சாத்தியமே இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க, மேற்குலகின் நோக்கங்கள் எதுவோ அது அங்கே நிறைவேற போகிறது.
    அமெரிக்க மேற்குலகின் கையாட்களாக புலம் பெயர் இலங்கை தமிழர்கள்.
    ஹிந்துக்கள் சிந்தித்து செயல்படுவார்களாக.

  22. இலங்கை பொது­ப­ல ­சே­னா மற்றும் அகில இலங்கை இந்து சம்­மே­ள­னம் இணைந்து இந்து பெளத்த மதங்­களை பாது­காக்க பெளத்த- இந்து தர்ம பாது­காப்பு சபை ஒன்றை நேற்று கொழும்பில் உரு­வாக்­கி­யுள்­ளது.இதற்­கான உடன்­படிக்கை பொது­ப­ல­சே­னா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் இந்து சம்­மே­ள­னத்தின் தலைவர் அருண் காந்­துக்­கு­மி­டையே கைசாத்திடப்பட்டுள்ளது.
    இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது.
    இதன்­போது கருத்து தெரி­வித்த ஞான­சார தேரர் மத மாற்­றத்தை எதிர்த்து தமிழ் இந்­துக்கள் எழுச்சி பெற வேண்­டிய காலம் வந்து விட்­டது. இனியும் பொறுமை காக்­காது இந்­துக்­களும் பெளத்­தர்­களும் ஒன்­று­பட வேண்டும். இன்று அதற்­கான பல­மான ஆரம்­பத்தை எடுத்து வைத்­துள்ளோம்.
    அதனை மேலும் பலப்­ப­டுத்தி மத­ மாற்­றத்­தி­லி­ருந்து அடிப்­ப­டை­வாத சக்­தி­க­ளி­ட­மி­ருந்து எமது மதங்­க­ளையும் கலா­சா­ரத்­தையும் பாது­காத்துக் கொள்வோம். பெளத்­தர்­களோ இந்­துக்­களோ தமது மதத்­திற்கு முஸ்­லிம்­க­ளையோ கிறிஸ்­த­வர்­க­ளைவோ மாற்­ற­வில்லை. மாறாக அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­க­ளுமே இந்­துக்­க­ளையும் பெளத்­தர்­க­ளையும் மத­மாற்றம் செய்­கின்­றனர்.
    வடக்கு கிழக்கில் மட்­டுல்ல தெற்கு, மேல் மாகாணம் என அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் எமது மக்கள் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணுவ முகாம்­களில் புத்தர் சிலைகள் வைக்­கப்­ப­டு­வதை எதிர்த்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுக்­கின்­றனர். ஆனால் யாழ்ப்­பா­ணத்தில் காளான்­க­ளைப்­போன்று உரு­வெ­டுக்கும் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் இவர்­களின் கண்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா?
    அது மட்­டுமா தமிழ் கிரா­மங்கள் பூண்­டோடு முஸ்லிம் மய­மாக்­கப்­ப­டு­கின்­றது. நாடு முழு­வதும் அடிப்­ப­டை­வாத கிறிஸ்­தவ சபைகள் தலை­தூக்­கி­யுள்­ளன. மக்­களின் வறு­மையை போக்கி அடிப்­படை வச­தி­களை வழங்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அமைப்­புக்­களால் அதனை செய்ய முடி­யாது.
    கல்­முனை அக்­க­ரைப்­பற்று தமிழ் மக்கள் தாம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக நேர­டி­யாக கண்­ட­றிய வரு­மாறு எமக்கு அழைப்பு விடுத்­துள்­ளனர். விரைவில் அங்கு செல்வோம்.
    அது மட்­டு­மல்­லாது பெளத்த இந்து மதங்­க­ளி­டையே ஒற்­று­மையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக வடக்­கிற்கும் விஜயம் செய்­ய­வுள்ளோம். யுத்­தத்தால் சிதைந்து போன தமிழ் மக்­களின் உள்­ளங்­களை ஆசு­வா­சப்­ப­டுத்தி மீண்டும் எமக்கிடையேயான நட்புறவை பலப்படுத்துவோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

    யாழ்ப்பாணத்தின் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் 27 புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பௌத்த சிங்கள சிப்பாய்கள் காவடி எடுக்கும் காட்சி.
    https://goo.gl/LHlfWl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *