தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில்  ‘சமஸ்கிருதம்’ என எழுதியிருக்கிறது.  modi_pt_cartoonஅதாவது மோதி அரசு சமஸ்கிருத வாரத்தை கொண்டாடச் சொல்லி சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விட்டதை கிண்டல் செய்கிறார்களாம். ஆனால்  இந்த கார்ட்டூன் படத்திற்கும் மத்திய அரசு சுற்றறிக்கைக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் கொதித்தெழுந்துவிட்டார்கள் திராவிட கொழுந்துகள்! எப்படி கொண்டாடலாம் சமஸ்கிருத வாரம்? அதனால் தமிழ் அழிந்துவிடும் அல்லவா? புரட்சிp புயல் வைகோ முதல் புரட்சித்தலைவி ஜெயலலிதா வரை தமிழ் உணர்வு சமஸ்கிருத வெறுப்பாக கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தப் புரட்சி தமிழ் ஜோதியில் கலக்காமல் இருந்தால் பிறகு தெய்வ குத்தம் ஆகிவிடுமென நினைத்ததோ என்னவோ ‘புதிய தலைமுறை’யும் இந்த கார்ட்டூனைப் போட்டு புண்ணியம் தேடிக் கொண்டது.

இந்த கார்ட்டூன் குறித்து தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினரும் வரலாற்றாராய்ச்சியாளரும், பாஜகவின் மாநில எஸ்.சி. பிரிவு செயற்குழு உறுப்பினருமான திரு. ம.வெங்கடேசன் கூறுகிறார்:

இந்த கார்ட்டூன் படத்திற்கும் மோடி அரசு சுற்றறிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. maveஇது மோடி அரசுக்கு அவப்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டிருக்கிறது. மோடி அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் ( படிக்கும் மாணவர்களுக்கு) சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது. மேலும் இது பல ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டு மக்கள் அனைவருமோ அல்லது  எல்லா மாநில அரசுகளுமோ சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி அரசு சொல்லவில்லை.

நரேந்திர மோதி அரசு சிபிஎஸ்இ  பள்ளிகளில் மட்டும் ( படிக்கும் மாணவர்களுக்கு) சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்றுதான் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் ஏதோ சமஸ்கிருதம் தமிழுக்கு விரோதம் என்பது போலவும், இது ஒரு சதித்திட்டம் போலவும், இதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது போலவும்,  இங்குள்ள தமிழ் ஆர்வலர் என்கிற பெயரில் செயல்படும் கும்பல் அலறுவது அருவருப்பாக உள்ளது.  ஆனால் ‘புதிய தலைமுறை’ இதழோ விஷமத்தனத்தின் எல்லைக்கும் நச்சுத்தனத்தின் சிகரத்துக்குமே போய்விட்டது.

உண்மை என்ன என்பதை பார்ப்போம்.

மோதி அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறியதா? இல்லை. உணவுப்பொருள் விலையேற்ற வேகத்தைக்  குறைந்திருக்கிறது;  கடந்த இரண்டரை ஆண்டுகளில் (30 மாதங்களில்) மிகக் குறைவான இலக்கத்தைத் தொட்டிருக்கிறது.  இதற்கு முக்கிய காரணம் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுதான் காரணம். ஆனால் உணவுப்பொருட்களின் விலை ஏறுகிறது. அவற்றை அடக்க நரேந்திர மோதி அரசு தீவிரமாக செயல்படுகிறது. உணவு விலையேற்ற வேகம் குறைந்ததற்கு காரணம் என்ன? முந்தைய அரசு தானியங்களை தேக்கி வைத்திருந்ததை மோதி அரசு திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல. பதுக்கி வைப்பவர்கள் இடைத்தரகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது.food_inflation

காய்கறிகள் விலை விஷயத்தில்  விவசாய விளைபொருட்கள் விற்பனை கமிட்டி சட்டம் (Agriculture Produce Marketing Committee (APMC) Act) என்கிற பழைய சட்டம் விவசாயிகளை இடைத்தரகர்கள் நிறைந்த சந்தைகளில் விற்க நிர்ப்பந்திக்கிறது.  பெரும் நிலச்சுவான்தார்கள்  பெரும் முதலாளிகளிடமிருந்து உழவர்களை பாதுகாக்க ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் விற்க விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் இந்த நேருவிய சட்டம் உண்மையில் சாதித்தது என்னவோ அடுக்கடுக்கான இடைத்தரகர்கள் நிறைந்து விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைக்காமல் செய்தது மட்டும்தான். அப்போது விவசாயிகள் அவர்கள்  தேர்ந்தெடுப்பவர்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் நேரடியாக விற்க முடியும்.

இடைத்தரகர்களின் கொடுங்கோல் அவர்களுக்கு கொடுக்கப்படும் தரகு விலைகள் அவற்றின் சுமைகள் இறுதியில் காய்கறி வாங்குவோர் மீது விலைச்சுமையாக ஏறுவது ஆகியவை தவிர்க்கப்பட்டு விடும்.  இறுதியாக இந்த இடைத்தரகு ஒரு இல்லத்தரசி வாங்கும் காய்கறியின் விலையில் ஏறக்குறைய 75 சதவிகிதம் இடைத்தரகர்களுக்குத் தான் போகிறது என்று சொல்கிறது  ஒரு பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு.

இந்த காலாவதியாகி இன்றைக்கு விவசாயிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாகிவிட்ட ஒரு சட்டத்தை அகற்ற இல்லாவிட்டால் நீர்த்து போக வைக்க  நரேந்திர மோதி அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் நேரடி விற்பனையில் விவசாயிகள் இறங்க முடியும். இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். பெரிய அளவில் காய்கறிகள் விலையை குறைக்க முடியும். (Govt targets middlemen in food chain as inflation bites, பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஜூலை 11, 2014). இத்தனைக்கும் இந்த இடைத்தரகர்கள் என்பது ஒரு வலுவான அணி. பொதுவாக பாஜகவின் வாக்கு வங்கி எனக் கூட கருதப்படும் அணி.

ஆனால் நரேந்திர மோதி அரசு எப்போதுமே இப்படித்தான். குஜராத்தில் மின் உற்பத்தி விநியோகத்தை சரி செய்ய மின்சாரத்தை கொள்ளை அடிப்பதில் கட்சி ஆட்களுக்கு தயவு காட்டாமல் இயங்கித்தான் சாதனையை செய்தது மோதி அரசு. இன்று பொதுவான உணவு விலையேற்ற வேகம் 9.56 இல் இருந்து 7.97 வந்துள்ளது.  பொதுவாகவே பாஜக அரசுகள் வாஜ்பாய், நரேந்திர மோதி) இடதுசாரி காங்கிரஸ் அரசைக் காட்டிலும் உணவு விலையேற்றத்தைத் தடுப்பதில் திறமையுடன் செயல்படுவதாக கூறுகிறார் ஜியா ஹக் என்கிற செய்தியாளர். (’NDA government manages food prices better’, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 16-ஜூலை-2014)

தற்போது உணவு விலையேற்ற வேகத்தை தடுக்க மோதி தலைமையிலான பாஜக மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

  • எலிகள் தின்று வீணாகும்படியாக காங்கிரஸ் அரசு ’சேமித்து’ வைத்திருந்த உணவு தானியங்களில் 50 லட்சம் டன் உணவு தானியங்கள் மக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
  • உருளை கிழங்கு வெங்காயம் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள்/சேவை சட்டத்தின் (ESMA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஏற்றுமதி விற்பனை விலை உயர்த்தப்பட்டு அவற்றின் ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது.

உணவின் விலை ஏற்ற வேகம் ஒரே மாதத்தில் 1.6 சதவிகிதம் கீழே வந்ததற்கு காரணம் இவைதான். ஒட்டுமொத்தமாக நரேந்திர மோதி அரசு ஏதோ உணவு விலையை கட்டுப்படுத்த ஏதும் செய்யாமல் இருப்பது போல குற்றம் சாட்டுகிறது ‘புதிய தலைமுறை’.

சரி…இனி சமஸ்கிருதத்துக்கு வருவோம்…

  • அப்படி சமஸ்கிருதம் என்ன ஒரு வெறுக்கத்தக்க மொழியா? இல்லை.
  • அல்லது வெறும் ஒரு தனி ஜாதியின் மொழியா? இல்லை.
  • அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் பேசப்படும் மொழியா? இல்லை.
  • அனைத்து சாதியினரும் அனைத்து பிரிவினரும் சமஸ்கிருதத்தில் பங்களித்திருக்கின்றனர்.
  • அனைத்து இந்திய பிரதேசங்களிலும் சமஸ்கிருத பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காவியங்களை எழுதியிருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகவும் தொன்மையான குடியினர் நாகர்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். shalivahana1சாலிவாகனனை மணந்த நாகர் இளவரசி மிக இயல்பாக சமஸ்கிருதம் பேசியிருக்கிறாள். ஆனால் சாலிவாகனனுக்கு சமஸ்கிருதம் தெரியாமல் இருந்து பிறகு படித்திருக்கிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது? சமஸ்கிருதம் அன்னிய மொழி அல்ல. இங்குள்ள பூர்விகவாசிகளின் மொழியாகத்தான் கருதப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தின் ஆதி காவியம் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ஆகும். வால்மீகி முனிவர் யார்? தலித் சமுதாயத்தைச் சார்ந்த வேடர்.

சமஸ்கிருத மொழியின் மிகச்சிறந்த கவி யார்? காளிதாசன். காளிதாசன் யார்? மாடு மேய்க்கும் சூத்திரராக இருந்தவர்.

vanmikiசமஸ்கிருதத்துக்கும் அடிப்படையாக விளங்கிய வேதங்களை வகுத்தளித்தவர் யார்? மகாபாரதம் எனும் அமர காவியத்தை அம்மொழியில் உருவாக்கியவர் யார்? மீனவப்பெண்ணின் மைந்தனான வியாசர். அப்படியானால் சமஸ்கிருதம் எப்படி மேல்சாதியினருக்கு மட்டும் உரிய மொழி எனக் கருத முடியும்?

சுவாமி விவேகானந்தர் நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அடைய சமஸ்கிருதம் ஒரு ஆயுதமாக இருக்கும் என்று கருதினார்.  அனைவருக்குமான மொழியாக இருந்த சமஸ்கிருதம் இடைப்பட்ட காலத்தில் சமுதாயத்தின் மேல்தட்டுகளில் இருந்த மக்களுக்கு மட்டுமான மொழியாக மாறிவிட்டது. இதனை மாற்ற வேண்டும். என்று விவேகானந்தர் கருதினார்.  அவர் சொன்னார்:

நம் பாரத தேசத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. stamp_svஎனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். …எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக சொத்துகள் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.

டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிக்காகப் போராடிய புரட்சியாளர். அவர் சமஸ்கிருதமே இந்த நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இது 11-செப்டம்பர்-1949 தேதியிட்ட ’ஸண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்’  இதழில் வந்திருக்கிறது. மேலும் 2001 இல் பாஜக அரசு ஆட்சியின் போது இதே போல ஒரு பிரச்சனையை போலி-மதச்சார்பின்மைவாதிகள் சமஸ்கிருதம் குறித்த பிரச்சனையை எழுப்பிய Ambedkar Among Sponsors()1 (1)போது திரு.B.P.மௌரியா எனும் தலைவர் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அவர் இளைஞராக இருந்த போது டாக்டர் அம்பேத்கருடன் இருந்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

10-செப்டம்பர் 1949 இல் அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் (All India Scheduled Caste Federation) எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி  கூடியது. அப்போது பேசிய டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டிய அவசியத்தைக் கூறினார். இதை சில தலைவர்கள் எதிர்த்த போது, அவர்கள் தம்மை விட்டுப் பிரிந்தாலும் கவலை இல்லை, தாம் சமஸ்கிருதத்தை ஆதரிப்பதாக டாக்டர அம்பேத்கர் கூறினார்.  இந்தச் சம்பவங்களை மௌரியா அவர்கள் 14-2-2001 அன்று அரசுக்கு கடிதமாக எழுதினார்.  babasheb_Sanskritஅது மட்டுமல்ல, அந்த காலகட்டத்தைச் சார்ந்த செய்தி தாள்களில் இந்த விஷயங்கள் எல்லாம் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்த மைத்ராவுடன் பாபா சாகேப் அம்பேத்கர்  சமஸ்கிருதத்தில் உரையாடினார்.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தால் சிறுவயதில் சமஸ்கிருதம் படிக்க ஆசை இருந்தும் பாரசீகம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பாபா சாகேப் அம்பேத்கருக்கு. ஆனால் அவரே சமஸ்கிருதம் கற்று அதில் உரையாடும் அளவு தேர்ச்சியும் பெற்றிருந்தார் என்பது எத்தனை முக்கியமான விஷயம்.

நேருவின் உதவியாளர் மத்தாயிடம் உரையாடும் போது இந்தி பேசும் சமவெளி மக்கள்  துளசிதாஸின் இந்தி ராமாயணத்துக்கு பதிலாக வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தை மதிக்கும் போதுதான் மக்கள் பிற்போக்குத்தன்மையிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றார் டாக்டர் அம்பேத்கர். (மத்தாய் நினைவுகள், பக்.24) சமஸ்கிருதம் குறித்து டாக்டர். அம்பேத்கர் என்ன கருத்து கொண்டிருந்தார்?  சமஸ்கிருதத்துக்கு முன்னால் பாரசீக மொழி நிற்க முடியாது என்கிறார் பாபா சாகேப்.

சமஸ்கிருதம் நம் காவியங்களின் பொற்பேழை. நம் இலக்கணமும், அரசியலும், தத்துவமும் தவழ்ந்த தொட்டில். நம் தர்க்க சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம், இலக்கிய விமர்சன மரபு ஆகியவற்றின் இல்லம். (நவ்யுக்-அம்பேத்கர் சிறப்பிதழ், 13-ஏப்ரல்-1947)

நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஒரு கருத்தை நூல் முகவுரை ஒன்றில் கையொப்பமுடன் வெளியிட்டார்.

பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன்.

இல்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்ல. இந்த கருத்தை வெளியிட்டவர்: கர்மவீரர் என நம் தமிழக மக்கள் அன்புடன் அழைக்கும் காமராஜர் அவர்கள். 1972 இல் திராவிட அலை அடித்த காலகட்டத்தில் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ‘முப்பது நாட்களில் சமஸ்கிருதம் கற்பது எப்படி?’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கர்மவீரர். அதில்தான் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழகம் இன்று மானுட வள மதிப்பீடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணமானவர் காமராஜர். kamaraj1அவரது மதிய உணவு திட்டம்தான் தமிழ்நாட்டின் கல்வியின் ஊற்றுகண்ணைத் திறந்தது. கல்விச்சாலைகளைத் திறந்த கர்மவீரர் காமராஜர்  ‘இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டும்’ என்று கூறிய சமஸ்கிருத மொழியை டாஸ்மார்க்குகளை திறந்து தமிழ்நாட்டைjk1 சீரழிக்கும் புரட்சி தலைமைகள் எதிர்ப்பதும் வெறுப்பதும் இயற்கை என்றுதான் சொல்ல வேண்டும். இடதுசாரி பாசறையில் வளர்ந்தவர். விவேக வேதாந்தத்தை மானுடத்துவத்துடன் பேசி ஒரு தலைமுறையை செதுக்கியவர் ஜெயகாந்தன். அவர் சொல்கிறார்:

சமஸ்கிருத மொழியைச் சகல சாமான்யரின் மொழியாக மாற்றும் உன்னதப் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது. சுவாமி விவேகானந்தரும் பாபா சாகேப் அம்பேத்கரும் கர்மவீரர் காமராஜரும் காட்டும் வழியில் சமஸ்கிருதத்தை போற்றும் நரேந்திர மோதியின் செயல்பாட்டை போற்றுவோம். போலி தமிழ் பற்றாளர்களின் அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நகைத்து புறந்தள்ளி முன்னகர்வோம்.

 

364 Replies to “தேவையா இந்த வடமொழி வாரம்?”

  1. “இந்த புரட்சி தமிழ் ஜோதியில் கலக்காமல் இருந்தால் பிறகு தெய்வ குத்தம் ஆகிவிடுமென நினைத்ததோ என்னவோ ‘புதிய தலைமுறையும்’ இந்த கார்ட்டூனை போட்டு புண்ணியம் தேடிக் கொண்டது.”

    இதாவது புதுசு, இன்னும் நிதானத்துக்கு வராமலிருக்கலாம்; பாரம்பர்யம் உள்ளது என்று சொல்லப்படுகின்ற கல்கி பத்திரிகையே இந்த லச்சனத்தில்தான் உள்ளது.

  2. கல்கி பத்திரிகை பாரம்பரியத்திலிருந்து விலகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. 🙂 சம்ஸ்கிருத வாரம் சில பள்ளிகளில் மட்டும் அதுவும் மத்திய அரசுப்பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கும் பள்ளிகளில் மட்டும் கொண்டாடினால் அழிந்துவிடும் அளவுக்குத் தமிழ் பலவீனமான நிலையில் இல்லை. 🙂

    அதோடு உலகத் தமிழ் மாநாடு உலகெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமை அடையும் நாம் அதைக் கொண்டாடும் குறிப்பிட்ட நாடு எதிர்த்தால் என்ன செய்ய முடியும்? அவர்களுடைய மொழி உணர்வுக்கு இது எதிர்ப்பு என்று சொன்னார்களெனில்? மொழி உணர்வு பாதிக்கப்படுகிறது என்று சொன்னால்? என்ன செய்வோம்? நம் மொழியை உலகநாடுகள் கொண்டாடுகையில் நம் நாட்டில் உள்ள ஒரு மொழியை ஏதோ சில பள்ளிகள் மட்டும் கொண்டாடுவதில் என்ன ஆகிவிடும்? புரியத் தான் இல்லை! 🙁

  3. திருவாளர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தரின் பத்திரிகை தான் புதிய தலைமுறை. அவர் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இருக்கிறார். ஆனால் அவரது பத்திரிகையும் டிவியும் அவ்வப்போது இப்படி உளறிக் கொட்டுகின்றனர்.

    புதிய தலைமுறை குழுமத்தில் உள்ள ’நச்சு’ பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு உடனடியாக நீக்குவது பாரிவேந்தரின் கடமை.

    -கே.செல்வேந்திரன்

  4. நம் தமிழ்நாட்டைப் பொருத்த வரை யார் முதலில் எதிர்ப்பது என்ற போட்டியில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளன. எந்தப் பிரச்னையானாலும் யார் முதலில் குரல் கொடுத்து மக்களிடம் பெயர் வாங்குவது என்ற நோக்கத்தில்தான் அனைவரும் களத்தில் உள்ளனர். (அது தமிழீழமோ, மொழியாதிக்கமோ, ஜாதி மத பிரச்னையோ, விலைவாசி ஏற்றமோ). அது மக்களுக்கு நல்லதா கெடுதலா? அதைப் பற்றி எந்த கட்சிக்கும் கவலை இல்லை. இது நம் தமிழ் மண்ணின் சாபக்கேடா? தெரியவில்லை…இந்த நிலை என்று மாறுமோ?

  5. மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவையே! எனவே மொழிகளுக்குள் பாகுபாடு காட்டாமல் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். கோவில்களிலும், திருமணத்திலும் சொல்லப்படும் சமஸ்கிரத மந்திரங்களின் அர்த்தங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவாவது தமிழ் இந்துக்கள் அவசியம் சமஸ்கிரதம் கற்க வேண்டும்.

  6. ” தமிழ் இந்துக்கள் அவசியம் சமஸ்கிரதம் கற்க வேண்டும்.”
    At last,( !!!) some sensible statement from Mr SP

  7. /” தமிழ் இந்துக்கள் அவசியம் சமஸ்கிரதம் கற்க வேண்டும்.”
    At last,( !!!) some sensible statement from Mr SP//

    He said only ‘Tamil Hindus’, not ‘Tamilarkal’. He is clever in using words. Perhaps you are calling it sensible that he does not include all Tamils.

  8. When people want Tamil in temples, all intelligent people used to dance/ jump. But those so called people need Samskrit.. funny. See, I come to this web site to know about Hinduism. But the comments and articles about Tamil nadu and Tamil language really force me not to visit this site. Now, it is up to the editor to decide whether this site is only for certain group people or for all Hindus who want to know about Hinduism.

  9. சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது. சுவாமி விவேகானந்தரும் பாபா சாகேப் அம்பேத்கரும் கர்மவீரர் காமராஜரும் காட்டும் வழியில் சமஸ்கிருதத்தை போற்றும் நரேந்திர மோதியின் செயல்பாட்டை போற்றுவோம். போலி தமிழ் பற்றாளர்களின் அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நகைத்து புறந்தள்ளி முன்னகர்வோம்.

  10. அஞ்சலா பேகம் என்ற DAV , முகபேர் பள்ளி மாணவி சமஸ்கிருதத்தில் 2012- பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றார். சமஸ்கிருதம் படித்த தமது சகோதரனை( மாநிலத்தில் இரண்டாம் இடம்-2008-ம் ஆண்டு) தாமும் பின்பற்றியதாக கூறுகிறார். மொழியை கற்பித்த ஆசிரியர் ஸ்ரீதர் வெங்கட்ரமணி என்பவருக்கு நன்றி தெரிவிக்கிறார். (ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தேதி 5.6.2012). பெமினா ஷிரின் ஷாஜஹான் என்ற மகாத்மா மாண்டிசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, அழகர் கோயில் மாணவி சமஸ்கிருதத்தில் 2010 +2 பொது தேர்வில் 197/200 மதிப்பெண் பெற்றார். இவர் தமிழ் அல்லாத (Non-Tamil Category) பிரிவில் மதுரை மாவட்டத்தில் அணைத்து பாடத்திலும் (overall topper) முதலிடம் பெற்றார். (ஆதாரம்: தி ஹிந்து தேதி 15.05.2010). சில அரசியல் நிபுணர்கள் சமஸ்கிருத வாரம் அனுசரிப்பது நம் நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரானது என்று சொல்கிறார்கள். அவர்களின் கூற்று சரியா? தவறா? பொய்யா?

  11. we tell children in tamil “Badram, pl go to school” thinking meaning as ” careful ” in tamil but this is a sanskrit word meaning ” mangalam” an auspicious way. Even in Hebrew language in persia believed to be the oldest language has lot of sanskrit word like ” serpam” meaning as snake similar to sanskrit word. There are many words of sanskrit in Hebrew was used by Jewish people. Even a chemial name ” sulphur ” is the derivative of sanskrit word. This has been in existence since the culture of hindu dharma exists in the world. western people realized the importance of this language. we tamils due to our mind boggled with dravidian parties ideology , become inert and sick . IT is pity c m of T N state has opposed this sanskrit week just to please some dravidian parties for vote bank. Modi must keep her in distance away from closeness as believed to be most undependable lady.

  12. மிகவும் தேவையான கட்டுரை இது… ஏதோ, சம்ஸ்கிருத வாரத்தால் பெரு நஷ்டம் உண்டாகி விடும் என்றும், சம்ஸ்கிருதம் சரஸ்வதி என்ற பிற்போக்கு வாதங்களை எல்லாம் விட்டு மக்கட்பணி செய்ய வேண்டும் என்று நிதி மீது கருணை மிகக் கொண்டவரும் அறிக்கை விட்டு ஓய்ந்திருக்கும் நிலையில் உண்மை நிலையை தெளிவுறுத்தி, சரியான பார்வையை அளித்திருக்கின்ற கட்டுரையாசிரியருக்கு மனப்பூர்வமான நன்றிகள் உரியதாகட்டும்…

  13. 1857ல் சமஸ்கிரத மொழி என்றோ மரணத்தை தழுவி விட்டது என்கிறார் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய்.

    All the feasts and great donations
    King Bhoja gave the Brahmans
    were obsequies he made on finding
    the language of the gods had died.
    Seated in state Bajirao performed
    its after-death rite with great pomp.
    And today, the best of kings across the land
    observe its yearly memorial

    குஜராத்திக் கவி தல்பத்ராம் :தாஹ்யாபாயின் கவிதையை தமிழில் இப்படி மொழி பெயர்க்கலாம்:

    “போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,
    பெருநிதிக் குவியங்கள் எல்லாமும்
    தேவ பாஷையின் சாவைக் கண்டு
    அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்…
    ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான்.
    இன்றும் கூட வழி வழி வரும் ஆட்சியாளர்கள்
    ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை..”

    இந்த கவியின் கூற்று தற்போது மெய்யாகியுள்ளது. ஆம்…. இப்போது மோடியின் பா.ஜ.க அரசு அந்த வருடாந்திரத் திவசத்தை துவக்கியுள்ளது.

    இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன். ஏன் இவ்வாறு ஒரு மொழியை இந்த அளவு வெறுக்கிறார்கள் என்று சிந்திப்பேன். உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கையை உடையவன் நான். இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு இழிநிலைகளை தாங்குவதற்கு காரணமே சமஸ்கிரத மொழிகளில் அமைந்த இந்து மதத்தின் ஸ்மிருதிகளே! அதனை எழுதியவர்கள் இன்று நம்மோடு இல்லை. எனவே குறைந்த பட்சம் அந்த மொழியையாவது வெறுப்போம் என்ற நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

    எனவேதான் பெரும்பான்மையான இந்து மக்களின் நினைப்பு இவ்வாறாக இருக்கிறது: ‘நீ உருது பேசுகிறாயா பேசிக் கொள்: ஆங்கிலம் பேசுகிறாயா பேசிக் கொள்: அரபியில் பேசிக் கொள்கிறாயா பேசிக் கொள்: ஹிந்தியில் பேசிக் கொள்கிறாயா… பேசிக் கொள் எனக்கு ஒரு இழிவோ பிரச்னையோ இல்லை: ஆனால் வழக்கொழிந்து போன சமஸ்கிரதத்தை மட்டும் மீண்டும் உயிர்ப்பித்து விடாதே! இப்பொழுதுதான் பல போராட்டங்களுக்குப் பிறகு வர்ணாசிரமம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. சமஸ்கிரதத்துக்கு உயிரூட்டினால் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும் வர்ணாசிரமம்’ என்ற நினைப்பே அந்த இந்து மக்களை சமஸ்கிரத மொழியைப் பார்த்து பயம் கொள்ள வைக்கிறதோ என்று நினைக்கிறேன்..

    https://www.columbia.edu/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf

  14. “ஸம்ஸ்க்ருதம்” என்றுதான் எழுத வேண்டும். கட்டுரை அருமை, க்ருதம் என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி என பொருள்

  15. ஸம்ஸ்க்ருதம் என்றுதான் எழுதவேண்டும். நல்ல கட்டுரை பாராட்டுக்கள். “க்ருதம்” என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி எனப்பொருள்

  16. Yes, Sarav! The same Aravindan has written articles in this same website and elsewhere vehemently demanding Tamil in temples, and against only brahmins as archakas. Here, he is for Sanskrit and against Tamil scholars. Because Tamil scholars too protest against Sanskrit week.

  17. Those who want to read Sanskrit or any other language they can learn. Government should not impose them. Still people are learning lot of foreign languages in our Tamilnadu.. For me I’m very comfortable with my mother tongue தமிழ் and English. I don’t want to go for Sanskrit because it is pretty much useless for me.

  18. கடைசியில் சுபி தன்னுடைய உட்கிடையை வெளிப்படுத்திவிட்டார். ஆங்கிலேயன் இந்தியர்களை பிரித்து ஆண்டான். அந்த வேலையை செய்ய இந்த வஹாபிக்கும்பல் ஆரம்பிக்கிறது. இந்த வஹாபிக்கும்பலுக்கு தெரியாது சமஸ்கிருதம் என்பது ஆன்மீக மொழி மட்டும் அல்ல. நாத்திகர்களின் சார்வாகம் முழுவதும் சமஸ்கிருத மொழியில் ஏராளம் உள்ளது என்பது. அரபியில் வழிபடும் நீங்கள் சமஸ்கிருதத்தைப் பற்றிப் பேச எவ்வித யோக்கியதையும் கிடையாது. பார்ப்பன எதிர்ப்பு என்பது வேறு, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது வேறு. அம்பேத்கார் சமஸ்கிருதம் ஆட்சிமொழி ஆக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்பது கூட இந்த ……….களுக்கு தெரியாது. இவனைப்போன்ற குழப்பவாதிகளின் கடிதங்களை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும். இவருடைய தளத்தில் என்னவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். இங்குவந்து குட்டையை குழப்ப அனுமதிக்க வேண்டாம் என்று தமிழ் இந்து குழுவை கேட்டுக்கொள்கிறேன் .

    வர்ணாசிரமத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு மொழியில் பலர் நல்ல காவியங்களையும் , நல்ல அறிவியல் நூல்களையும் படைக்கிறார்கள். அதே மொழியில் எவ்வளவோ பேர் மட்டமான பாலுணர்ச்சியை தூண்டும் நூல்களையும் எழுதுகிறார்கள். அதற்காக அந்த மொழியையே தடை செய்ய முடியுமா ? சில புனித நூல்கள் என்ற பெயரில் , பிற மதத்தினரையும், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களை கொல்லத்தூண்டும் வாசகங்கள் இருக்கின்றன என்பதற்காக ஆபிரகாமிய மொழிகளை யாரும் தடை செய்ய முயலவில்லை. அவற்றை திருத்த மட்டுமே பலரும் முயல்கிறார்கள். திருந்த மாட்டேன் என்போர் காலத்தால் திருத்தப்படுவார்கள். சுமார் 200- வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு ( மதம் மாற்றப்பட்ட கவிஞரா என்று பார்க்கவேண்டும்) கவிஞரின் கவிதையை இந்த தளத்தில் வெளியிட்டு ஆதரவு தேட நினைக்கும் இழிசெயல் -[edited] ? நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஒரு நல்ல வெள்ளித்தட்டில் ஒருவன் பல வகை இனிய உணவு வகைகளை பரிமாறி உண்டு மகிழ்கிறான். அதில் ஒரு குடிகாரன் குடித்து விட்டு வாந்தியும் கூட எடுப்பான். அது வெள்ளித்தட்டின் குற்றம் அல்ல. குணக்கேடர்களுக்கு உலகில் உள்ள கெடுதல்கள் மட்டுமே புரியும்/ தெரியும். நல்லவை அவர்கள் கண்களில் படாது. துரியோதனர்கள் மகாபாரத காலத்தில் மட்டும் வாழவில்லை. இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் பெயர்கள் மட்டுமே வேறு.

  19. //ஸம்ஸ்க்ருதம் என்றுதான் எழுதவேண்டும். நல்ல கட்டுரை பாராட்டுக்கள். “க்ருதம்” என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி எனப்பொருள்//

    சரி. ஆட்சேபணையில்லை.

    ஆனால், பழந்தமிழ் இலக்கியம் சம்சுகிருதத்தை ‘வடமொழி’ என்றே குறிப்பிட்டது.

    வடமாநிலங்களில் பல மொழிகள் பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும், தமிழைப்பொறுத்தவரை, உரையாடல்களில் வடமொழி என்பதே வசதி.

  20. //இந்த தளத்தில் வெளியிட்டு ஆதரவு தேட நினைக்கும் இழிசெயல் – என்ன பிறவியோ இது ? நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.//

    இத்தளத்து வாசகர்களை எல்லாம் பாப்பாக்கள் என்று நினைத்துவிட்டார் கதிரவன். எவரோ ஒருவர் சொல்வதையெல்லாம் தலையாட்டிக்கேட்டு ஒத்துக்கொள்வார்கள் என நினைப்பது அவ்வாசகர்களை சீப்பாக எடைபோடுவதாகும்.

    சுவனப்பிரியன் எழுதுவதை எழுதட்டும். உங்களால் முடிந்தால் எதிர்கருத்துக்களை வையுங்கள். பாப்பாக்கள் சுவனப்பிரியனால் ஏமாற்றப்படுவதை தடுக்கலாம். வாழ்க உமது தளத்தொண்டு.

    ஒருவேளை மாற்றுக்கருத்துக்களை இங்கு பதிவிடுவோரையெல்லாம், அவன் இவன் ஈன ஜென்மங்கள் என்றெல்லாம் இழித்துரைத்து விரட்டி விட்டால் மிஞ்சுவர் யார்? ஒருவர் எழுத அனைவரும் ஜால்ராத்தட்ட இந்த்தளம் தனது ஜனநாயக குணத்தையிழந்து, ஜிஹாதி கலாச்சாரத்தைத்தான் வைத்துக்கொள்ளும்.

    ’என்ன பிறவியோ இது ? ’ மட்டுறுத்தலில் தப்பிய இந்த வார்த்தையை சுட்டியமைக்கு நன்றி. அது நீக்கப்பட்டுவிட்டது. அந்த வார்த்தைக்காக சுவனப்பிரியனிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். பதிவிடும் நண்பர்கள் தயை செய்து பண்பட்ட வார்த்தைகளில் மட்டும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். – ஆசிரியர் குழு.

  21. //ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது. மேலும் இது பல ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. //

    ப. வெங்கடேசன் சிபிஎஸ்சி பள்ளியில் படித்தாரா இல்லை அப்பள்ளிகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தொடர்ந்து கவனித்தாரா என்பது தெரியவில்லை.

    இப்பள்ளிகள் என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே வடமொழியும் ஒரு பாடமாக வைக்கப்பட்டது. முதலில் வட மாநிலங்களில். அப்போது காங்கிரசுதான். இதற்கு காரணம் வடமொழி ஒரு பள்ளி மொழியாக இப்பள்ளிகள் தோன்றுவதற்கு முன்பே அரசுப்பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் போதிக்கப்பட்டுதான் வந்தது. படிப்போர் எண்ணிக்கை கணிசமாக இருந்ததால் தொடர்ந்தது.வடமொழி ஆசிரியர்கள் பெருகிக்கொண்டே இருந்ததால், ஆசிரியர்கள் நிறைய கிடைத்தார்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்பு.

    இன்னொன்றையும் பரப்பினார்கள். வடமொழி ஆழ்ந்த புலமையை மாணாக்கருக்கு ஊட்டிச் சங்கடப்படுத்தவில்லை. அப்புலமை கல்லூரிக்குச்சென்றபிந்தான். மாணாக்கருக்கு கணிசமாக மதிப்பெண்கள் போடப்பட்டதன‌. ஹிந்தியா வடமொழியா எதை எடுப்பது பத்தாம் வகுப்பில் என்ற கேள்வியெழும்போது, மாணாக்கர் வடமொழிக்கே சென்றனர். ஹிந்தியில் மதிப்பெண்கள் கிடைப்பது அபூர்வம். மேலும் பாடநூல்கள் தமிழைப்போல புலமையைத் திணிக்கின்றன். இன்றும் அப்படித்தான்.

    இதுதான் வடமொழி கல்வி பெருகியதற்கு காரணம். மற்றபடி அது இந்தியாவின் பாரம்பரிய மொழி; ஆன்மிக மொழி; சிற்ந்த இலக்கிய மொழி யென்று எவரும் பார்க்கவில்லை. இதனாலே வடமொழியைக்கற்றார் இசுலாமியரில் ஏராளம். பாட்ன பல்கலைக்கழகத்துக்குச் சென்று வடமொழித்துறையப்பார்த்தால், இசுலாமியர் பலர் ஆசிரியர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.

    வடமொழி வாரம் கொண்டாடப்படவே இல்லை. ஹிந்தி வாரமும் கொண்டாடப்படவில்லை. அதற்கு தேவையும் இல்லை. பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்றிருந்து விட்டார்கள்.

    இவ் வாரம் மோதி அரசு வந்தவுடந்தான் தொடங்கியது. திடீரென. ஏன்? வடமொழி கட்டாயப்பாடமில்லை சிபிஎஸ்சி பள்ளிகளில். ஆனால் ஹிந்தி கட்டாயம். பத்தாம் வகுப்பில் ஹிந்தி இல்லாவிட்டால் பிராந்திய மொழி ஒன்றை எழுதியே ஆகவேண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில். பல சிபி எஸ் சி பள்ளிகளில் தமிழ் எடுக்கலாம். உ.ம் (வைஷ்ணவா மேனிலைப்பள்ளி, அருமபாக்கம்). தமிழ்நாட்டில் மாணவர்கள் அவர்கள் பள்ளியில் தமிழ்ல்லாப்பட்சத்தில் ஹிந்தியத்தான் எடுப்பர். காரணம் ஹிந்திக்கு ட்யூசன் டீச்சர்கள் தாராளமாக கிடைப்பர். தமிழ்நாட்டில் மாணாக்க‌ரும் இல்லை. வடமொழி போதிக்கப்படவில்லை . மக்களுக்கோ வடமொழி என்றாலே தெரியாது. இங்கு போய் வடமொழி வாரம் என்பது சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல.

  22. அழியக் கூடிய நிலையில் இருக்கும் எந்த மொழியையும் மீட்டெடுப்பதற்காக அரசு முயற்சி செய்வது சரியானதே. ஆனால் அத்தகு நிலையில் ஸம்ஸ்க்ருதம் மட்டும்தான் இருக்கிறதா என்று அரசு விளக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் இங்லிஷ், ஹிந்தி தவிர மாநில மொழிகள் பலவும் போதிக்கப்படும்போது ஸம்ஸ்க்ருத மொழிக்கு மட்டும் வாரம் அனுசரிப்பது நம் நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரானதுதான். அடுத்தடுத்த வருடஙளில் மோதி அரசு அரபி மொழி வாரமோ, உருது மொழி வாரமோ, கொண்டாடச் சொல்லி சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும் என எதிர்பார்க்கலாமா? அவ்வாறு சுற்றறிக்கை அனுப்புவது அரசின் பணியா? ஹிந்து-ஹிந்தி-ஹிந்துஸ்தான் என்று ஒருமுகப்படுத்துவதுதான் பன்முகத்தன்மையா? அம்பேத்கரும், காமராஜரும், ஜெயகாந்தனும், விவேகானந்தரும் சமஸ்கிருத்திற்கு ஆதரவு தெரிவித்தது அம்மொழியின் பழமையான இலக்கியங்களை வாசித்தறியத்தான். இதற்கு மொழி பெயர்ப்பு போதுமானதல்லவா? அவ்வாறாயின் லத்தீன் அமெரிக்க மொழிகளையும் ரஷ்ய மொழியையும் கூடத்தான் நாம் கற்க வேண்டும். நம்மில் பலரும் தமிழ் இலக்கியங்களையே பதம் பிரித்து வாசிக்கத் தெரியாதவர்கள்தான். இணைய தளங்களில் ஹிந்தி………… பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதம்………. புரிந்து கொள்ளக் கடினமானதா இது?

  23. //இந்திய நாட்டு மக்கள் அனைவருமோ அல்லது எல்லா மாநில அரசுகளுமோ சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி அரசு சொல்லவில்லை.//

    ப வெங்கடேசன், அப்படிச்சொல்லத்தேவையில்லை சுற்றறிக்கை அனுப்பினால் போதும். இந்தியா நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை தேவையில்லை. கட்டாயமும் தேவையில்லை. catch them young என்ற ஃபார்முலாபடி, பள்ளிச்சிறார்களைப் பிடித்தால், வருங்காலத்தில் தமிழ் அழிக்கப்பட ஹேதுவாகும்.

    இங்கு கீதா சாம்பவசித்தின் பின்னூட்டத்தையும் சேர்க்கலாம்: அவர் எழுதுகிறார்: //…அழிந்துவிடும் அளவுக்குத் தமிழ் பலவீனமான நிலையில் இல்லை//

    மேடம்! ஒன்று புரிதல் நலம். பலவீனம் சக்தி எனபனவெல்லாம் ஒரு மனிதனுக்கோ ஒரு மொழிக்கோ பிறப்பில் தொடங்கி இறப்புவரைக்கும் நின்று நிலைத்து வருவதல்ல.

    மொழியைப் படிப்போர் பேசுவோர் குறையக்குறைய அம்மொழி தானாகவே காலாவதியாகி காணாமல் போகும். கடையில் வியாபாரமே ஆக வில்லையென்றால், மூடத்தானே செய்வார்கள்?

    இப்படி உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் அழிந்து பட்டன. தமிழ் ஆதிகாலத்திலிருந்து தன்னைத்தானாகவே காத்துக்கொள்ளவில்லை. அதற்கு பல இடர்கள் வநதன. அதிலும் குறிப்பாக வடமொழி லாபிக்களால். தமிழ்ச் சங்கத்திலேயே அமர்ந்து நக்கீரனை எதிர்த்தான் குயக்கோடன் என்ற வடமொழி லாபிக்காரன் என்று ரா. ராக்வையைங்கார் தன் கட்டுரையில் பலவிடங்களில் குறிப்பிடுவர். தமிழா வடமொழியா என்று ஆழ்வார்கள் காலத்திலே சண்டை.

    இது போக கன்னடம், தெலிங்காலும் இடர்கள் வந்தன. 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பெரும்பகுதி கன்னட மன்னர்கள் (ஹொசால்யர்கள்) கீழ் வர, தமிழ் ICU க்கு போய் படுத்துவிட்ட்து. தமிழ்ப்புலவர்கள் ஒழிந்துகொண்டார்கள். இலக்கியமே இல்லை. சிற்றிலக்கியங்கள் சில வந்தன. இருவர் மட்டுமே சிறந்தார்கள். அருணகிரியார், வில்லுபுத்தூரார். அருணகிரியார் பாடல்களில் தமிழ் குறைந்து வடமொழி மேலோங்கிய காரணத்தை ஆராய்ச்சியாளர்கள், தமிழின் அக்கால வீழ்ச்சியிலே தேடுகிறார்கள். நீங்கள் சதாவிச பண்டாரத்தார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றைப்படித்தால் நான் சொன்னவைக்கு ஆதாரங்களைப்பார்க்கலாம்.

    இப்படி தன் நீண்ட வரலாற்றில் பல சோதனைகளை தமிழ் எதிர்த்து மீண்டும் எழக்காரணம் தமிழ்ப்பற்றாளர்களாலே. நக்கீரன் குயக்கோடனை எதிர்த்திராவிட்டால் தமிழ் அன்றே மாண்டிருக்கும். மன்னர்கள் தொடர்ந்து கொடுத்த ஆதராவலே தமிழ் இலக்கியம் படைக்க புலவர்கள் முன் வந்தார்கள்.

    இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிற்து மேடம்? ஆம், மொழியென்றாலும் கூட ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் அதற்கு வந்த எதிரிகளை எதிர்க்கும் வல்லோர் இல்லாவிட்டாலும் தமிழ் அழிந்து விடும். இன்று அப்படிப்பட்ட காலக்கட்டத்திற்கு வந்துய்விட்டோமா என்ற அச்சம் இதுபோன்ற கட்டுரைகளைப்படிக்கும்போது வராமல் இல்லை. ‘மெல்லத்தமிழினி சாகும் என்றான் அப்பேதை’என்று 80 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் எழுதினார். இன்று அவரிருந்தால், ‘விரைவில் தமிழினி சாகும் என்றான் அவ்வறிவாளி!”என்றெழுதுவார்.

  24. நமது தளத்தினர் செய்த எடிட்டிங்- சரியானது. தவறுதலான சொற்பிரயோகத்துக்கு திரு சு பி அவர்களிடமும், சுட்டிக்காட்டிய திரு பாலசுந்தரம் கிருஷ்ண அவர்களிடமும் நமது தளத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இவரைப்போன்ற – என்பதற்குப் பதிலாக இவனைப்போன்ற என்று தட்டச்சுப்பிழை ஏற்பட்டது. அதே அடுத்த வரியில் னகரத்துக்கு பதிலாக ரகரம் சரியாக வந்துள்ளது. இந்த பிழையையும் பொறுத்தருளுமாறு திரு பாலசுந்தரம் கிருஷ்ண அவர்களை வேண்டுகிறேன்.

    இந்த சமஸ்கிருத வாரம் என்பது ஒவ்வொருவருடமும் கொண்டாடப்பட்டு , சுற்றறிக்கை அனுப்பும் வழக்கம் மத்திய அரசில் பல ஆண்டுகளாக இருந்த ஒன்றுதான். ஆனால் இந்த முறை பாஜக அரசு பதவி ஏற்றவுடன் நமது மீடியா இதனை தேவை இல்லாமல் ஏதோ ஒரு புதிய விஷயம் போல, project செய்துவிட்டது. மேலும் சமஸ்கிருத மொழிக்கு ஒரு வாரம் சிறப்பு விழா எடுப்பது என்பது பற்றி , அது புதியதாக இருந்தால் கூச்சல் இடுவது ஒரு பொருள் பொதிந்ததாக இருக்கும். இந்த தேவை இல்லாத கூச்சல் முற்றிலும் அர்த்தமற்றது.

    சமஸ்கிருதம் என்றால் செம்மையாக ஆக்கப்பட்டது, அல்லது செம்மையாக செய்யப்பட்டது என்றே பொருள். கிருதம் என்பது கிரியா என்று சொல்லும் சொல்லுடன் தொடர்புடையது.ஆகும். ஆங்கிலத்தில் made perfect, sanctified, refined என்று அகராதியில் சொல்லப்பட்டுள்ளது.

  25. தணிகை நாதன்

    எப்பேர்பட்ட அறிவு ஜீவி சார் நீங்கள். ஸமஸ்க்ருதம் இந்தியாவின் ஜீவ மொழி. இதற்கும் அரபு மொழிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எங்கே இந்த பதங்களை மொழி பெயருங்கள் பார்க்கலாம்

    பக்தி, தீர்த்தம், அபிஷேகம், பிரசாதம் , ஆத்மா

    சரி விடுங்கள். ஸமஸ்க்ருதம் அழியக்கூடிய நிலையில் இருக்கிறது என்று யார் சொன்னது. இந்தியா முழுவதும் குறைந்த பட்சம் நாற்பது லட்சம் பேர் ஸமஸ்க்ருதத்தில் பேச கூடியவர்கள். ஸமஸ்க்ருதம் பதினேழு நாடுகளில் பல்கலை கழகங்களி பயிற்றுவிக்கப் படுகிறது (சீனா உட்பட). சமஸ்க்ருதம், யோகா, ஆயுர் வேதம் இவை எல்லாம் ஒரு பில்லியன் டாலர் மார்கெட்.

    அரசு அரசு என்று நீங்கள் எம்புட்டு தரம் எழுடிநீர்கள், அது சம்ஸ்க்ருத பதத்தின் திரிபு. அமைச்சர் சமஸ்க்ருத பதம், தற்காலிகமாக, விபத்து, திராவிட, புரிதல், பம்பரம், சமத்து இதெல்லாம் ஸமஸ்க்ருத படங்கள். நீங்கள் பேசும் மொழியில் பெரும்பாலும் ஸமஸ்க்ருத பதங்கள் தான்.

    ஒரு மரத்தை வாழ வைக்க, கிளையில் தண்ணி ஊத்தக்கூடாது. வேரில் ஊற்ற வேண்டும். ஸமஸ்க்ருதம் என்பது பாரதத்தின் வேர். அதை வளர்த்தே தீர வேண்டும்.

    ஸமஸ்க்ருததத்தில் உள்ள கிரந்தங்களில் வெறும் ஐந்து விழுக்காடுகளே மத நம்பிக்கை சம்பந்த பட்ட விழயங்கள். மேலும் ஸமஸ்க்ருததத்தில் உள்ள கிரந்தங்களில் மூன்று விழுக்காடுகள் தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
    ஸமஸ்க்ரும் பிரெஞ்சு மொழி போன்றோ போர்டகீசிய மொழி போன்றோ வெறும் மொழி அல்ல. அதனுள் பொக்கிஷங்கள் ஏராளம் இருக்கின்றன. வெறும் காவியங்கள் படித்து அதை அனுபவிக்க மட்டும் சமஸ்க்ருதம் தேவை என்றா எண்ணுகிறீர்கள். ஸமஸ்க்ருத அறிவு இன்றி பாரத அறிவு பூர்த்தி பெறாது.

  26. //ஆனால், பழந்தமிழ் இலக்கியம் சம்சுகிருதத்தை ‘வடமொழி’ என்றே குறிப்பிட்டது. //

    அப்படி அல்ல. வட (ஆல) வ்ருக்ஷங்களின் அடியில் இம்மொழி பயிற்றுவிக்கப் பட்டதால் வட மொழி என்று பெயர் ஆயிற்று. இதை நான் சொல்லல, சாலமன் பாப்பையா அவர்களின் கருத்து. வட (வடக்கு) என்பதில் மூன்றாவது டகரம். வட ஆழத்தில் முதல் டகரம்.

  27. நல்ல நினைத்துகொள்ளும். உங்களுக்கு சிந்தனை திறனா குறைச்சல். எல்லா மொழியும் இறைவனால் படைக்கபட்ட்வை, எங்கே தமிழில் மொழி பெயர்த்து குரான் ஒதுங்களேன்.

  28. துக்ளக்ல் வந்த ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்ல் கீழ உள்ளதை தன் ப்லோக் இல் censor பண்ணிய சாத்தான் இங்கு வேதம் ஓதுவதை பாருங்கள் .

    “எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக விழு ந்து விழுந்து படித்தாலும், முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளை வாக, என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபா லனத்திற்கான, அவசியமான – முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்! “

  29. Sankrit is a language which has rich literature and influence on other Indian languages is visible.

    Majority of school students do not opt for higher studies in Tamil. or any other languages including Hindi. Those who have personal interest , career in teaching /reasearch and who have choice only opt for language studies. Simple issue is magnified due to timing.
    Needles to mention University of Madras and other universities in TN teach Sanskrit , through distance education also.

    organising the weeks are for awareness purpose but there is no use in reality. If there is real interest, government should make more researches and encourage literature related activities. Does any one watches DD sanskrit channel?

    I do not inderstand why few hindu groups always say that Sanskrit should be the only national language and start old glories. (as per constitution it is already one of the natonal language).

  30. தமிழ் மொழியை பொறுத்தவரை பி ஜ க மற்றும் காங்கிரஸ் ஒரே நிலையில் உள்ளனர். அது அவர்களின் அறியாமையை காட்டுகின்றது.
    வடமொழி தான் மிக பழமையானது, உயர்ந்தது என்ற மாயையில் உள்ளார்கள்.
    இதில் என்ன வருத்தம் என்றால் தமிழ் நாட்டில் உள்ள அவர்களது கட்சிகர்களும் இதை போல் கூறுவது.
    திரு பாலசுந்தரம் கூறுவது மிகவும் சரியானது. //இப்படி தன் நீண்ட வரலாற்றில் பல சோதனைகளை தமிழ் எதிர்த்து மீண்டும் எழக்காரணம் தமிழ்ப்பற்றாளர்களாலே. //

  31. //எங்கே தமிழில் மொழி பெயர்த்து குரான் ஒதுங்களேன்.//

    ஐந்து வேளை தொழுகைகளில் மாத்திரமே நான் குர்ஆனை அரபியில் ஓதுகிறேன். ஏனெனில் இஸ்லாம் ஒரு உலக மதம். ஜனகனமன தேசிய கீதத்தை வங்காள மொழியில் நாம் பாடுவது தேச ஒற்றுமைக்காக. வங்காள மொழி உயர்ந்த மொழி என்பதற்காக அல்ல.

    மற்றபடி தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனைத்தான் படிக்கிறேன். எனது தாய் மொழியான தமிழில் அந்த குர்ஆனின் விளக்கங்களை படிப்பதே எனக்கு எளிதாக இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழ் குர்ஆன்கள் தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறதே….

  32. Let us ignore SP and his taqqya. Seriously, Tamil does not need defenders especially from people like Vaiko, Karuna and JJ. It is a beautiful,classic ancient language, the younger sister of Sanskrit. Tamil and Sanskrit have been together in harmony and in close relationship from time immemorial. People who do not want to celebrate Sanskrit week are the brain washed DK wallahs. Is Tamil so weak that celebrating our ancient NATIONAL language, the root of all languages, somehow will make it disappear? It is not a disappearing language. Here is a link about 2 villages in Karnataka ( Dravidian land) who speak the language.
    https://www.sanskritimagazine.com/culture/the-two-sanskriti-speaking-vedic-villages-in-modern-india/

  33. /////ஐந்து வேளை தொழுகைகளில் மாத்திரமே நான் குர்ஆனை அரபியில் ஓதுகிறேன்/////. கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் கடவுளுக்கு தமிழ் தெரியாதோ? என்றும் தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ் நாட்டில் வேலை இல்லை என்றும் நீங்கள் அடிக்கடி “பெரியார் மண், பெரியார் மண்” என்று பெருமிதம் அடையும் அந்த பெரியாரின் தொண்டர்கள் இந்துக்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர்.ஆனால் அதே கேள்வியை உங்களிடம் கேட்பதில்லை. (அதற்கு காரணம் ஒட்டு என்பது யாவரும் அறிந்த உண்மை) அதனால் நான் கேட்கிறேன். அரபு மொழியில் 5 வேலை தொழுகை நடத்தினால்தான் கடவுள் புரிந்துகொள்ள முடியுமா? தமிழில் ஓதினால் புரியாதோ?

    தேசிய கீதம் வங்காள மொழியில் இயற்றப்பட்டது உண்மை. என்னுடைய கருத்து என்னவென்றால் தமிழ் நாட்டில் அதை பாடும்போது தமிழாக்கம் செய்து (கருத்து மாறாமல்) பாடினால் என்னாவாகிவிடும்? குடி மூழ்கிவிடுமா? பிரளயம் ஏற்படுமா?இதை மட்டும் எப்படி திகவினர் பேசாமல் ஏற்றுகொண்டனர்?

    இன்றைய உலக நடப்பை பார்க்கும்போது இஸ்லாம் ஒரு “உலக” மதம் என்று தோன்றவில்லை. “கலக” மதமாகத்தான் தோன்றுகிறது. (இன்றைய செய்திபடி:—-சீனாவில் xinjiang ல் முஸ்லிம் uighur மைனாரிட்யினர் நடத்திய கத்தி தாக்குதலில் dozen கணக்கில் கொல்லப்பட்டனர். ஏற்கனவே மார்ச்சில் 29 பெரும் மே மாதத்தில் 39 பெரும் இவ்வாறு கொல்லப்பட்டனர். (((2))) ஆப்கானில் அதன் அதிபரின் cousin ஐ ஒருவன் தன தலைப்பாகையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கசெஇது கொன்றிருக்கிறான்.)
    /////எனது தாய் மொழியான தமிழில்///////.என்று சொல்வதில் பெருமை படுகிறீர்கள்.
    நீங்கள் ஓதும்போது அரபியும் படிக்கும்போது தமிழும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டு இருக்கும் முஸ்லிம்கள் பேருந்தில், தொடர் வண்டியில் பயணம் செய்யும்போது உருதுவில்தான் பேசுவதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தமிழ் தெரியாதா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எண்ணுவதும் தமிழ் எழுதுவதும் தமிழ், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று பேசுவதெல்லாம் சும்மா மேடை பேச்சா?

  34. அப்படியென்றால் சைவப்பெருந்தகையான, வடமொழி மாயையைக் கடிந்த மறைமலை அடிகள் பற்றி தமிழ்ஹிந்து.காமின் நிலைப்பாடுதான் என்ன?

  35. சாரங்கன்

    நீங்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து சமஸ்கிருதத்தை “சமஸ்கிருதம்” என்றழைத்த வரியொன்றைக்காட்டுங்கள் போதும்.

  36. et us ignore SP and his taqqya. Seriously, Tamil does not need defenders especially from people like Vaiko, Karuna and JJ. It is a beautiful,classic ancient language, the younger sister of Sanskrit. Tamil and Sanskrit have been together in harmony and in close relationship from time immemorial. People who do not want to celebrate Sanskrit week are the brain washed DK wallahs. Is Tamil so weak that celebrating our ancient NATIONAL language, the root of all languages, somehow will make it disappear? It is not a disappearing language. Here is a link about 2 villages in Karnataka ( Dravidian land) who speak the language.https://www.sanskritimagazine.com/culture/the-two-sanskriti-speaking-vedic-villages-in-modern-india///

    இரு சிற்றூர்கள் மட்டுமே. திருப்பதியில் பிராமணர்களிடையே மட்டுமே. தமிழகத்தில் பிராமணர்களிடம் கூட இல்லை. இதுதான் வடமொழியில் இன்றைய நிலை.

    தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் உங்கள் ‘வடமொழியில் தங்கை தமிழ்” என்ற சொல்லாட்லைக் கடுமையாக எதிர்ப்பார்கள். இதை வெளியே பத்திரிக்கைகளில் எழுதிப்பாருங்கள் தெரியும். வடமொழியும் தமிழும் தனித்தனியான பாரம்பரியத்தை தொல் இலக்கியத்தையும் கொண்டவை. அவை ஒன்றின் கீழ் மற்றொன்று என்பது அம்மொழியை தம்மொழியாகக்கொண்டோரை அவமதிப்பதாகும்; புண்படுத்துவதாகும். தமிழ் எப்போது பிறந்தது? வடமொழி எப்போது தோன்றியது என்று உங்களால் அறுதியிட்டுக்கூறவியலுமா? தெரிந்தால்தானே அக்காவா தங்கையா என்று சொல்லவியலும். தமிழில் மீது உண்டான காழ்ப்புணர்வு உங்கள் எழுத்துக்களில் சீழாக வடிகிறது.

    அரசியல்வாதிகளுக்கும் தாய்மொழி தமிழே. தம் தாய்மொழி என்ற கணிப்பில்தான் அவர்களும் தமிழுக்காக போராடுகிறார்கள். 7 கோடி தமிழர்களும் பேசமுடியாது. பேசினால் கேட்பவர் யார்? எனவேதான் அவர்களுக்காக அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சினையில் தமிழுக்காக பேசுகிறார்கள். எல்லாருக்கும் உரிமை. அவர்களுக்கு மட்டும் கிடையாதெனபதும், அவர்களென்ன தமிழுக்குக் காவல்காரர்களா எனக்கேட்பதும் தமிழ்மீதுள்ள வெறுப்பின் வேறு அடையாளமே.

    வடமொழி வாரத்தை எதிர்ப்போர் தி ககாரர்கள் என்பது எம்மைப்போன்றோரை சிறுமைப்படுத்துவதாகும். நாங்கள் தி காகாரர்கள் அல்ல.

    நான் அரவிந்தன் நீலகண்டனுக்கு எழுதப்போகும் எதிர்வினையைப் படித்துப்பாருங்கள் புரியலாம். அவர் கட்டுரையே தமிழுக்கு எதிரானது. அதை அரசியல்வாதிகளுக்கெதிரானது போல பூசுகிறார்.

  37. இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ள விஞ்ஞானம் அனைத்திற்கும் தாய் வீடே சமஸ்கிருதம்தான்…உலகம் எவ்வாறு பஞ்சபூதத்தில் அடங்குகிறதோ அதுபோல் உலகத்தில் உள்ள விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் எந்த வகையில் பார்த்தாலும் அது சமஸ்கிருதத்தில் அடங்கும்…
    மொழிகளின் தாய் சமஸ்கிருதம்
    கலாச்சாரத்தின் தாய் சமஸ்கிருதம்
    பண்பாட்டின் தாய் சமஸ்கிருதம்
    கலைகளின் தாய் சமஸ்கிருதம்
    காவியங்களின் தாய் சமஸ்கிருதம்
    பாரம்பரியங்களின் தாய் சமஸ்கிருதம்
    பாரத திருநாட்டின் தாய் சமஸ்கிருதம்
    இதையும் மீறி போலியான வெற்றுக் காரணங்களுக்காக சமஸ்கிருதம் வேண்டாம் என்று சொன்னால் நமது கலை , பண்பாடு , கலாசாரம் , பாரம்பரியம் , எல்லாம் கண்முன்னே அளிப்பதற்குச் சமம்..வேலியே பயிரை மேய்வது போல் பாதுகாக்க வேண்டிய நமது தாயை நாமே விஷம் கொடுபதற்குச் சமம்..இது மெத்த படித்த மேதாவிகள் அனைவருக்கும் தெரியும்…போலியான வறட்டு அரசியல் கவுரவங்களுக்காக சமஸ்கிருத எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டு, கடினமான நிலையிலும் உண்மையை பேசவும்..

    நமஸ்தே..

    கா. வீர உமாசங்கர்
    நன்றி..
    pasuvaiuma@yahoo .com

  38. //ஐந்து வேளை தொழுகைகளில் மாத்திரமே நான் குர்ஆனை அரபியில் ஓதுகிறேன். ஏனெனில் இஸ்லாம் ஒரு உலக மதம். //

    அதான் சார் ஏன்னு கேக்குதோம். ராமாயனும் மகாபாரதமும் இந்தியாவின் அத்தனை மொழியிலும் மறு வடிவு கொடுக்கப்பட்டன (வெறும் மொழி பெயர்ப்பு மட்டும் அல்ல).
    பகவத் கீதை தான் உலகத்திலேயே அதிக மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத விஷயம்.

    நீங்கள் அரபு மொழி கற்றீர்களா இல்லையா. உங்கள் அன்னான் பீ ஜெ என்னத்துக்கு அரபு கற்றார். உங்க ஆசாமிங்க எதுக்கு தாய் மொழி உருதுன்னு எழுதி கொடுக்கறாங்க.
    எதுக்கு திருப்பதியில அரபிக் கல்லூரி கட்டுறீங்க
    இவை அனைத்தும் அந்நிய மொழி. இஸ்லாம் ஒரு அந்நிய அநியாய மதம். உலகில் ஒரு இடத்தில் கூட கத்தியின்றி ரத்தமின்றி கற்பழிப்பின்றி அது சென்றடையவில்லை.

    ரம்ஜான் தான் முடிந்துவிட்டதே. கொஞ்சம் புளுகை குறைத்துக் கொள்ளலாமே.

  39. சிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்
    ::தினமலர் செய்தி::
    (செப். 25, 2012 அன்று வெளிவந்த செய்தி)

    “”பஞ்ச தந்திர கதைகளில் உள்ள நீதிகளையும், செயல்பாடுகளையும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்,” என, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி தெரிவித்தார். பெசன்ட் நகர், “தமிழ் ஆர்ட்ஸ் அகடமி’ சார்பில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி “சிலப்பதிகாரம் ஒரு புதிய நோக்கு’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கூறியதாவது: ஐந்திணைகள்சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் என்று, உரை ஆசிரியர் குறிக்கின்றார். கதைப் போக்கில் ஆங்காங்கே இசை பாக்களையும், பல்வகை கூத்துக்களையும் பொருத்தி, அதன் வாயிலாக முக்கிய நீதிகளை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

    எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கண மரபுப்படி, ஐந்திணைகளை இந்நூலில் அமைத்து இயற்றி இருக்கிறார். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமய கருத்துகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் கதை அமைப்பில் ஏற்கனவே, வழக்கில் இருந்த பல கதைகளையும், நீதிகளையும் அடிப்படையாகக் கொண்டே, தன் இலக்கியத்தை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது. கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, “பஞ்ச தந்திரம்’ எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, “வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க’ என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு “கிரந்தம்’ என்று குறித்து, அதை, “அபரீக்ஷ்ய ந கர்த்தவ்யம் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷ்ய ச |
    ந சேத்₃ப₄வதி ஸந்தாபோ ப்₃ராஹ்மண்யா நகுலாத்₃யதா ||’ என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், “கவி’ என்றும் கூறுகிறார்.

    ஆகவே, இவ்வடமொழி வாசகம் பஞ்ச தந்திரத்தில் உள்ள பாடல் என்பதில் ஐயமில்லை. இதன் கருத்து, எந்தவொரு செயலையும் பரிசீலிக்காமல், ஆழ்ந்து எண்ணாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். துன்பத்தில் ஆழ்வர் என்பது தான். சிற்பங்களாக… கோவலன், பாண்டிய மன்னன் யோசிக்காமல் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார். சிலம்பின் காலம், கி.பி., 3ம் நூற்றாண்டு என்பர். அக்காலத்தில், பஞ்ச தந்திர நீதிக்கதைகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்த கதைகள், அரேபியம், பாரசீகம், ஹீப்ரு, செகோஸ்லோவேகியம், போலந்த், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், டேனிஷ் உள்ளிட்ட மொழிகளில், பதினாறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த சாளுக்கியர், இராட்டிர கூடர்கள் போன்ற கர்நாடகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சிற்பங்களாகவும், அந்த சிற்பங்களின் கீழ் பஞ்ச தந்திரக் கதையின் நீதி வாக்கியங்கள், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

    கொல்லன் கதை மற்றுமொரு பஞ்ச தந்திர கதையில், பாழ் கிணற்றில் வீழ்ந்த பொற்கொல்லன் ஒருவன், தன்னை காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வன் என, பொய் கூறி தண்டனை பெற்று தந்ததையும் குறிப்பிடுகிறது. அக்கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அக்காலத்தில் வழக்கில் இருந்த நீதிகளை எடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்துள்ளார். இவ்வாறு நாகசாமி கூறினார்.

  40. எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா
    டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார். எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும். … நன்றி: விஜயபாரதம் 7.9. 2012
    LikeLike · · Share

    [ஜனார்த்தன் ஷர்மா, முழு கட்டுரையை காபி-பேஸ்ட் செய்திருக்கிறீர்கள்… அதற்கு பதிலாக அந்த கட்டுரையின் சுட்டியை மட்டும் இங்கே அளிப்பது நல்லது.- ஆசிரியர் குழு.]’

  41. இக்கட்டுரையில் அரவிந்தன் சொல்வது இதுதான்:

    சமஸ்கிருதம் உயர்ஜாதிக்கு மட்டும் உரிய மொழியன்று. கீழ்ஜாதியினரும் போற்றிய மொழி. நாகர் இளவரசி, மீனவப்பெண்ணை மணந்த வியாசர், வேடனான வால்மீகி – இவர்களெல்லாரும் போற்றிய மொழி. தலித்து தலைவரான அம்பேத்கர் சமஸ்கிருதம் படியுங்கள் (ஜாதிகள் ஒழியும்) என்றார். இவர்கள் போக, நம் \தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், சுவாமி விவேகானந்தர், பாலாஜி பதிப்பகத்தாரின் 30 நாட்களில் சமஸ்கிருதம் நூலுக்கு முன்னுரையில் காமராஜர் இவர்களெல்லாம் சமஸ்கிருதம் உயர்ந்த மொழி எனறார்கள்.

    எனவே சமஸ்கிருதம் வாரம் கொண்டாடப்படவேண்டும் என்ற மோதி அரசின் சுற்றறிக்கை சரி. அதை எதிர்ப்போர் திராவிடக்குஞ்சுகள் மோசமான தண்டப்பேரவழிகள்.

    இப்போது கேள்வி:

    வரலாற்றின் ஆதிகாலத்தில் சில தலித்து இளவரசியோ, வேடனோ, சூத்திரனோ வடநாட்டில் இம்மொழியைப்பேசினார்கள் என்றால், தமிழர்களும் ஏன் பேசவேண்டும்? போற்ற வேண்டும்? ஜயகாந்தன் சொன்னாரென்று ஏன் சமஸ்கிருதத்தை ஏற்கவேண்டும்? அம்பேதகர் படியுங்கள் என்றால் ஏன் தமிழர்கள் கேடக வேண்டும்? இதுதான் எனக்குப் புரியவில்லை.

    தமிழக முதல்வர் ஜெ. அவர் தமிழக மக்கள் விருப்பத்தைதான் தன் விருப்பமாகக் கொள்ளவேண்டும். மக்கள் கொடுத்த வரிப்பணமும் போட்ட வாக்குகளும், அவர்தம் தாய்மொழியை வளர்க்க, போற்ற, சீராட்டத்தானே ஒழிய, இன்னொரு அந்நிய மொழியைத்தூக்கி அரியணையில் வைத்து அழகு பார்க்கன்று.

    தமிழ் வேண்டும். அந்நிய மொழி ஏன் வெறுக்கப்படவேண்டும் எனபதுதானே கேள்வி. தமிழர்கள் பல மொழிகளைபபடிக்கத் தயங்கவில்லை. ஆனால் படிப்பதற்கு தகுந்த காரணங்கள் வேண்டும். ரிட்டையர்டு ஆன பிறகு சீன மொழியையோ, ருசிய மொழியையோ படித்துக்கொள்வார் ஒருவர். அதே ஆள் வாலிபத்தில் ஆங்கிலம் போன்ற அயல்மொழியைத்தான் படிப்பார். வாழவழிவகுக்கும் மொழி சமஸ்கிருதமில்லை. எனவே தமிழர்களுக்கு அது வேண்டாம். அவர்களுக்குத் தேவைப்படா ஒன்றை ஏன் முதல்வர் தூக்கிவைத்துக்கெஞ்ச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்?

    சமஸ்கிருதம் மட்டும் சிபிஎஸ்சி பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படவில்லை. ஒன்றிலிருந்து ஒம்பது வரை ஹிந்தியும் ஆங்கிலமும் கட்டாயப்பாடமொழிகள். 10 ம் வகுப்பில் ஆங்கிலம் கட்டாயத்தாள். இன்னொரு மொழி இரண்டாம் கட்டாயத்தாள். அது சமஸ்கிருதமாக, ஹிந்தியாக, தமிழாக, தெலுங்காக, ஃப்ரெஞ்சாக, ஜெர்மனாக, வங்காளமாக இருக்கலாம். புதுச்சேரியில் ஃப்ரெஞ்சுதான் இரண்டாம் தாள், தில்லியில் டி பி எஸ்சில் ஜர்மன் எடுக்கலாம். தாகூரில், மான்ட்ஃபோர், மதர் இன்டர்னேசனில் ஃப்ரென்சு. இப்பள்ளிகளில்சமசுகிருதமும் ஹிந்தியும் எடுக்கலாம். தில்லியில் சர்தார் பட்டேல் வித்யாலாவில், தமிழ் (ஆம்…தமிழ்) எடுக்கலாம் (மேடம் பார்த்தசாரதி முதல்வராக இருந்த போது தன் தாய்மொழிக்கும் அவர் கொடுத்த மரியாதையது). இவ்வாறாக தமிழகத்திலும் பல பள்ளிகளில் சமஸ்கிருதம், தமிழ், ஃப்ரெஞ்சு, எனவிருக்க, ஏன் சமஸ்கிருத வாரம் மட்டும் எனப்துதான் என் கேள்வி.

    சுற்றரிக்கை எப்படி இருக்கவேண்டும்?

    அனைத்து பள்ளிகளும் எந்தெந்த மொழிகள் இரண்டாம் தாளாக வைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வம்மொழிகளின் மேல் மாணாக்கருக்கு ஆர்வமேற்பட் சிறப்புவாரங்களைக்கொண்டாடுங்கள் என்றிருக்க வேண்டும்/\.

    வெறும் சமஸ்கிருத வாரம் என்று மட்டுமிருக்க, சமஸ்கிருதமே சொல்லிக்கொடுக்கா புதுச்சேரி சிபிஎஸ் சி பள்ளிகள், ம்த்ரையில் நிறைய அப்பள்ளிகள், ஏன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தம்? அங்குதான், அரவிந்தன் நக்கலடித்த திராவிடக்குஞ்சுகளின் கொதிப்பு சரியாகப்படுகிறது. திணிப்பு ஏன்?

  42. February 01, 2007 17:14 IST

    Our former President A P J Abdul Kalam On Sanskrit

    Our former President A P J Abdul Kalam recalled the rich cultural heritage of Sanskrit in Indian history. Dr Kalam interacted with the students of Sree Guru Sarvabhouma Sanskrit Vidyapeetam at Mantralayam in Kurnool district. In his address he said,
    “Though I am not an expert in Sanskrit, I have many friends who are proficient in Sanskrit. Sanskrit is a beautiful language. It has enriched our society from time immemorial. Today many nations are trying to research Sanskrit writings which are there in our ancient scriptures. I understand that there is a wealth of knowledge available in Sanskrit which scientists and technologists are finding today,” he said.
    “There is a need to carry out research on our Vedas, particularly Atharvana Veda, for eliciting valuable information in science and technology relating to medicine, flight sciences, material sciences and many other related fields. Cryptology is another area where Sanskrit language is liberally used,” he added.
    He suggested that the Sanskrit Vidyapeetam, apart from their academic activity, should take up the task of locating missing literature in Sanskrit available on palm leaves spread in different parts of the country so that these could be documented and preserved. He suggested that they should avail the help of digital technology for documenting those scriptures both in audio and video form which can be preserved as long term wealth for use by many generations.
    He asked the Sanskrit Vidyapeetam to should go into details of lives of great scholars, poets, epic creators like Valmiki, Veda Vyasa, Kalidasa and Panini. He wanted the Vidyapeetam to invite well-known Sanskrit scholars so that they can stay and interact with the students for a certain period. “This will provide an opportunity for students to interact and get enriched in Sanskrit and Vedas,” he noted

  43. பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன். இந்த கருத்தை வெளியிட்டவர்: கர்மவீரர் என நம் தமிழக மக்கள் அன்புடன் அழைக்கும் காமராஜர் அவர்கள். 1972 இல் திராவிட அலை அடித்த காலகட்டத்தில் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ‘முப்பது நாட்களில் சமஸ்கிருதம் கற்பது எப்படி?’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கர்மவீரர். அதில்தான் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்

  44. First recording in the world
    Rig vedic verse by Maxmuler
    Great Sanskrit Grating Antogonists
    When Thomas Alwa Edison invented the gramophone record, which could record human voice for posterity, he wanted to record the voice of an eminent scholar on his first piece. Edison took a ship and went to England. He was introduced to the audience. All cheered Edison’s presence. Later at the request of Edison, Max Muller came on the stage and spoke in front of the instrument. Then Edison went back to his laboratory and by afternoon came back with a disc. He played the gramophone disc from his instrument. The audience was thrilled to hear the voice of Max Muller from the instrument. They were glad that voices of great persons like Max Muller could be stored for the benefit of posterity.

    After several rounds of applause and congratulations to Thomas Alva Edison, Max Muller came to the stage and addressed the scholars and asked them, “You heard my original voice in the morning. Then you heard the same voice coming out from this instrument in the afternoon. Did you understand what I said in the morning or what
    you heard this afternoon?” The audience fell silent because they could not understand the language in which Max Muller had spoken. It was `Greek and Latin’ to them as they say. But had it been Greek or Latin, they would have definitely understood because they were from various parts of Europe. It was in a language which the European scholars neverheard.

    Max Muller then explained what he had spoken. He said that the language he spoke was Sanskrit and it was the first sloka of Rig Veda, which says “Agni Meele Purohitam.” This was the first recorded public version on the gramophone plate.

    Why did Max Muller choose this? Addressing the audience he said,

    “Vedas are the oldest text of the human race. And Agni Meele Purohitam is the first verse of Rig Veda. In the most primordial time, when the people did not know how even to cover their bodies and lived by hunting and housed in caves, Indians had attained high civilization and they gave the world universal philosophies in the form of the Vedas.”

    Such is the illustrious legacy of our country!

    When “Agni Meele Purohitam” was replayed the entire audience stood up in silence as a mark of respect for the ancient Hindu sages.

    This verse means:

    “Oh Agni, You who gleam in the darkness, To You we come day by day, with devotion and bearing homage. So be of easy access to us, Agni, as a father to his son, abide with us for our well being.”

  45. anskrit the mother of many languages

    The perfection of the pronunciation (of the consonants and the vowels) and the uniqueness of the grammar that stays the same in all the ages from the very beginning of human civilization and up till today are such features which prove that Sanskrit is not manmade; …

    Dr.R.Thiagarajan
    Former Prof & H.O.D of Sanskrit,
    Presidency College

    [ஜனார்த்தன் ஷர்மா, முழு கட்டுரையை காபி-பேஸ்ட் செய்திருக்கிறீர்கள்… அதற்கு பதிலாக அந்த கட்டுரையின் சுட்டியை மட்டும் இங்கே அளிப்பது நல்லது.- ஆசிரியர் குழு.]

  46. //சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது//

    Pure optimism. Cannot be proved.

    ஏன்? தமிழகத்தைப்பொறுத்தவரை, எவ்வளவுதான் வரலாற்றுச்சான்றுகளை எடுத்துக்காட்டி, இது பேச்சுமொழி, இது கீழ்ஜாதியினரும் பேசியது என்றெல்லாம் சொன்னாலும், இன்றைய தமிழகத்தில் நிலையென்ன?

    கோயிலில் பூஜை பண்ணும்போது மட்டுமே இம்மொழி. கேடபவருக்கு வெறும் ஒலிமட்டுமே. பொருள் விளங்காது. தமிழர்களால் பேசப்படா, கேட்கப்படா (கோயிலுக்கு வெளியே), படிக்கப்படா மொழியிது.

    பிராமணர்கள் நிலையென்ன? அவர்களுள் சிலரைத்தவிர- அவர்களும் கூட போனதலைமுறை மட்டும்தான்- எவரும் இம்மொழியைக்கறகவில்லை. கற்க ஆசைப்படவுமில்லை.

    கீதா சாம்பசிவம் போன்ற பிராமணர்களுக்கு இம்மொழியின் மீது பாசம் வருவதன் காரணம், இம்மொழி பிராமணர்களுக்கு பாரம்பரியமாக கிடைத்த அடையாளங்களுள் ஒன்று. நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அவர்கள் மினாரிட்டி. இசுலாமியரப்போல தங்கள் தனித்தன்மை அபகரிக்கப்பட்டு வீசப்பட்டு விடுமோவென மிரண்டு அடையாளங்களை அழியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் ஜாதியினர என்டோகோமஸ் மேரேஜ் பணணுங்கள். நம் ஜாதி அழியாமலிருக்கும் என அவர்களுக்குள் பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.

    ஆக, இது ஆன்மிக மொழி மட்டுமே. பிராமணர்களிடையே கூட ஆர்வம் குறைந்து காணாமலே போய்விட்டது.

    இதுதான் நானறிந்த உண்மை நிலவரம். இப்படிப்பட்ட மொழிக்கு ஏன் உணர்ச்சிவ்சப்பட்டு ஒரு கட்டுரை இங்கே என்றால், அதற்கு ஒரு காரணம் ஆன்மிகம் மட்டுமே.

    இந்துமதத்துக்கே உரிய மொழிமட்டுமன்று; இந்துமதம் இம்மொழி தெய்வத்தன்மை கொண்டது என்றும் வேதமந்திரங்களுக்கு அச்சக்தி உண்டென்றும் ஓம் என்ற சொல் விண்ணை நோக்கி இறைவனை அடையும் சக்தி கொண்டதென்றும் மதத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றபடியாலே, இம்மொழி தாக்கப்பட்டால்,நீர்த்துவிட்டால், இந்துமதமே நீர்த்துப்போய்விடுமோ என்ற அச்சமே இப்படிப்பட்ட கட்டுரைகளுக்கு மூலகாரணம்.

    அந்த அச்சமெனக்கும் உண்டு.

  47. //பிராமணர்கள் நிலையென்ன? அவர்களுள் சிலரைத்தவிர- அவர்களும் கூட போனதலைமுறை மட்டும்தான்- எவரும் இம்மொழியைக்கறகவில்லை. கற்க ஆசைப்படவுமில்லை.//

    போன தலைமுறைககு முந்திய தலைமுறையைச்சேர்ந்த உவெசாவைப்பற்றிய செய்தி என்ன வியப்பில் ஆழ்த்தியது. தினமணி தமிழ் மணியில் சில வாரங்களுக்கு முன் கலாரசிகன் எழுதியது. அவர் ஐராவதம் மஹாதேவனிடம் பேசிக்கொண்டிருந்த போது ஐராவதம் சொன்னாராம்.

    உவேசாவுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலமும் சமஸகிருதமும் தெரியாது. //

    இதில் நாம் கவனிக்கவேண்டியது. உவேசா ஒரு ஆர்தோடாக்ஸ் பிராமணர். இவரின் நிலையே இப்படியென்றால், அடுத்தாத்து மாமி, மாமாவின் நிலையென்ன?

    சுலோகங்களை தமிழில் எழதி வைத்துக்கொண்டு உருப்போடுகிறார்கள் அவர்கள். Something is better than nothing.

  48. பால சுந்தரம் அவர்களே

    உங்களின் ஆராச்சி பூர்வமான எழுத்துக்கள் என்னை அசத்திவிட்டன.

    //
    ஆக, இது ஆன்மிக மொழி மட்டுமே. பிராமணர்களிடையே கூட ஆர்வம் குறைந்து காணாமலே போய்விட்டது.

    இதுதான் நானறிந்த உண்மை நிலவரம். இப்படிப்பட்ட மொழிக்கு ஏன் உணர்ச்சிவ்சப்பட்டு ஒரு கட்டுரை இங்கே என்றால், அதற்கு ஒரு காரணம் ஆன்மிகம் மட்டுமே.//

    எனக்கு தெரிந்து படுகர் என்று சொல்லப்படும் மலை ஜாதி மக்களில் சுமார் ஒரு 100 பேர் சமஸ்க்ருதம் நன்றாக பேசுவார்கள். தமிழ் நாட்டுலே தான்.

    பிராமணர் அல்லாதவர்கள் சுமார் ஒரு பத்தாயிரம் பேராவது தமிழ் நாட்டில் பேசும் திறன் படைத்துள்ளனர். அவர்கள் உம்மோட பேசமாட்டார்கள். உமக்கு தான் தெரியாதே.
    பிராமணர்கள் சுமார் ஒரு இருபதாயிரம் பேராவது பேச தெரிந்தவர்கள்.

    சென்னையில் மட்டுமே பத்தயிரத்திருக்கும் மேற்பட்டவர்கள் சமஸ்க்ருதத்தில் பேச தெரிந்தவர்கள். கோவையில் ஒரு இரண்டாயிரம், திருச்சியில் ஒரு இரண்டாயிரம் என்று நிறையப் பேர் கீறாங்க சார்.

    நாம பாக்குற பழுகுற மனுஷா பேசலென்ன, அதுக்கு சமஸ்க்ருதம் என்ன செய்யும். உங்களாலும் பேச முடியும் சின்ன முயற்சி செய்தால்.

    சமஸ்க்ருதத்தில் வெறும் ஐந்து விழுக்காடு தான் ஆன்மிகம். பாக்கி எல்லா அக்கப்போர் விஷயங்களும் இதில் உள்ளன. படித்தால் ரெம்ப நல்லா இருக்கும். மணி அடிக்க மட்டும் சமஸ்க்ருதம் இல்லை. money கிடைக்குவும் சமஸ்க்ருதம் உதவுகிறது.

  49. ஜனார்த்தன் ஷர்மா அவர்களே

    இந்த ரிக் வேதா பதிவு விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. இது உண்மை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது

  50. பாலா சார்

    //
    //சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது//

    Pure optimism. Cannot be proved.
    //

    இதற்கு தான் கொஞ்சம் புள்ளி விவரம் மேலே கொடுத்தேன். மெய்யாலுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. இதை செய்ய நிறைய குழுமங்கள் இன்று பாடு பட்டு கொண்டிருக்கின்றனர்.

  51. கபிலர் என்ற தமிழ் புலவர் ஒரு பிராமணர் ஆவார். சம்ஸ்க்ருதத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். குறிஞ்சிப்பாட்டு எழுதி அதை ஒரு வட நாட்டு மன்னருக்கு அனுப்பி தமிழ் மொழியின் சிறப்பை எடுத்து சொன்னார். அந்த மன்னர் தமிழ் மொழியை வெறுப்பவராக இருந்தவர். பிறகு அவர் தமிழ் மொழியை கற்று தமிழ் பாடல்கள் பலவற்றை எழுதினார். அது சங்க பாடல்களில் ஒரு பகுதியாக வருவதாக தெரிகிறது. சமஸ்கிருதம் அறிந்த ஒருவர் தமிழ் மொழியின் சிறப்பை பெருமையுடன் மற்றவருக்கு சொல்கிறார். ஆனால் தற்போது, தமிழ் அறிந்த நாம் சமஸ்கிருதத்தை உயிருடன் அல்லவா எரிக்கிறோம்.

  52. அடடே வியப்பான பல தகவல்களை அள்ளி வீசுகிறாரே சாரங்கன். நன்றி. ஆன்மிக ஐந்து விகிதாச்சாரமே !. மற்றபடி 95 விகிதாச்சாரம் மற்ற சமாச்சாரங்களாமே! காமசாஸ்திராவை படிக்கோணுமின்னா சமஸ்கிருதம் தெரிந்தால்தான் முடியும்.வாத்சாயனர் அதில்தானே எழுதியிருக்கிறார்!அதோடு போச்சா? இல்லை. பணமும் கிடைக்கும். அப்போ அரவிந்தன் நீலகண்டனின் உணர்ச்சிமிக்க உரை (கட்டுரை வடிவில்) சரிதான் போலும். ! பிராமணாள் 20 ஆயிரம் பேரும் அவாளுக்கு கீழேயுள்ள ஜாதிக்காரா 10 ஆயிரம் பேரும் பணத்துக்காக விழுந்து விழுந்து படித்திருக்கிறார்களே? காசு, பணம், துட்டு !

    அது கிடக்கட்டும். இம்மொழிக்கும் இந்து மதத்திற்கும் ஐந்தே விகிதம் மட்டும்தான் தொடர்பு இருக்க, ஆனால் தமிழுக்கும் இந்துமதத்திற்கும் அதற்கும் மேலிருக்க ஏன் அரவிந்தன் சமஸ்கிருதத்துக்கு உணர்ச்சிகரமாக கொடி பிடிக்கிறார்? ஏன் அவர் தமிழைப்பற்றி ஒரு உணர்ச்சிகரமான உரை எழுதவில்லை? பணமா? சாமியா? எது வேண்டும் தமிழ்.ஹிந்து எழுத்தாளர்களுக்கும் வாசகருக்கும்?

    இதுவும் போகட்டும். பிராமணர்களுக்கு வடமொழியில் அவ்வளோ பணம் கிடைக்குமென்றால் அவாள் சந்தோசத்தை நாம் கெடுக்க வேண்டாம்.. அவர்கள் பணத்தைப்பெருக்க, மற்றவர்கள் விடுவார்களா?அவர்களும் வடமொழியைப் படிக்க தமிழ்நாட்டின் பெயரை சமஸ்கிருத நாடு என்று மாற்றிவிடலாம். லடசக்கணக்கான தமிழர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள் என்ற மாபெரும் உண்மை தெரிந்த பிறகு நாம் நம் மாநிலத்தின் பெயரை மாற்றப்போராடுவது என்ன தவறு? இப்படி மாபெரும் எண்ணிக்கையில் சமஸ்கிருதம் பேசப்பட்டு ஆதரிக்கப்பட்டால், சாரங்கன்!, திராவிடக்குஞ்சுகள் கொதித்து தமிழ் வீழ்ந்து அழிந்துவிடாமலிருக்க போராடுவது சரிதானே?

    அரவிந்தனின் மகத்துவப்பூர்ண சேவையை – அதான் சார் பணம் கிடைக்கும் வழியைத்தமிழருக்கு காட்ட – சமஸ்கிருதம் படியுங்கள் என அவர் பலபல வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதியதை – சமஸ்கிருத ஆதரவாளர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  53. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    //“போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,//

    பார்ப்பனர்கள் என்று நீங்கள் மொழி பெயர்த்திருப்பது சரி அல்ல. பிராமணர்களுக்குப் பிறந்தவர்களை நீங்கள் “பார்ப்பனர்கள்” என்று குறிக்கிறீர்கள். பிராமணர்கள், அந்தணர்கள், மறையோர்கள், பார்ப்பனர்கள் என்று பல பிரிவுகள் உள்ளன.

    1. தனக்குள் இருக்கும் பிரம்மத்தை (கடவுளை)அறிய, உணர முற்படுபவன் பிராமணன்.
    2. மறை நூல்களைக் கற்று, ஓதி, ஓதுவித்து, அதன்படி ஒழுபவன் மறையவன்.
    3. அந்தணன் என்பவன் அறநெறிப்படி ஒழுகுபவன்.
    4. நாள்கள், கோள்கள் இவற்றின் ஓட்டத்தையும், நிலைகளையும் அறிந்து உரைப்பவன் (பஞ்சாங்க) பார்ப்பனன் (astronomer).

    தமிழ் சைவ குருமார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் “அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்” என்று ஓதிச் சென்றிருக்கிறார்.
    அதாவது, ஓதுதல், ஓதுவித்தல், வேட்டுதல், வேட்டுவித்தல், இரத்தல், ஈதல் என்ற ஆறு தொழில்களைச் செய்யதே அந்தணர்களுக்கு உரித்தானது என்று உரைத்திருக்கிறார்.
    இது இந்து சமயத்திற்கு மட்டும் அல்ல, மற்ற சமயங்களுக்கும் கூட, சில மாற்றத்துடன் பொருந்தும். அப்படி ஒழுகுபவர்கள், அவர்கள் எந்த சாதி, சமயத்தவராலும் வணங்கத் தக்கவர்கள்.

    எனவே, போஜ மன்னன் அந்தணர்களுக்கும், மறையோர்களுக்கும் விருந்து அளித்தான் எனக் கொள்ளலாம். பிரம்மத்தை அறிய முற்படும் பிராமணர்கள், அரசனின் விருந்தை உண்ண ஓடோடியும் வரமாட்டார்கள்.

    முதலில் பார்ப்பனர் என்று குறிப்பதை விட்டுவிடுங்கள். ஆப்பிரிக்கர்களை நீக்ரோ என்பதும், இஸ்லாமியர்களை துலுக்கர் என்பதும், பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என்பதும், அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதற்காகத்தான்.

    நாம் அனைவரையும் மரியாதையுடனும், மதிப்புடனும் அழைக்கவும், குறிப்பிடவும் பழகுவோமாக!.

  54. திரு கிருஷ்ணா பாலசுந்தரம் அவர்கள் புதன் கிழமை30-7-2014 தினமணியில் வந்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் எழுதியுள்ள ” மனிதன் செய்த குற்றமடி”- என்ற கட்டுரையைப் படித்துப்பார்க்க வேண்டுகிறேன். தனிப்பட்ட மனிதர்களும் , ஒரு சில குழுக்களும் செய்த அல்லது செய்யும் சில தவறுகளை பொதுவாக எல்லோர் மேலும் ஏற்றிக்கூறுவது முறையாகாது.

    தைத்திரீய சம்ஹிதை, பிருகதாரண்யக உபநிஷத் , நாரத ஸ்ம்ருதி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல், பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள மறுமண உரிமை இவற்றையெல்லாம் பார்க்க மறுத்து, இவை எல்லாம் நாம் ஏதோ புதியதாக கண்டுபிடித்தது போல சொல்லிக்கொண்டு திரிகிறோம். இவை அனைத்தும் நம் முன்னோர் அறிந்தவைகள் தான். காலப்போக்கில் நாம் பலவற்றை அதாவது நமது சமுதாயம் பல நல்ல விஷயங்களை விட்டுவிட்டது. அதற்கு சமூகம் பொறுப்பே தவிர, மதம் பொறுப்பு அல்ல. இந்த கட்டுரையை திரு கிருஷ்ணா பாலசுந்தரம் மட்டுமல்ல, நமது தளத்தில் அடிக்கடி கருத்துப் பகிர்ந்துவரும் பெரியவர் சுவனப்பிரியன் அவர்களும் அவசியம் படிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

  55. @BALA SUNDARAM KRISHNA
    Sorry Sir, your comments are getting rather irrelevant. First you accuse me of hatred for Tamil. Tamil is my mother tongue and I have almost zero knowledge of Sanskrit apart from reading articles on it. Example: how it is a perfect language and suitable for computer use ( NASA). Obviously,Tamil is not as developed as Sanskrit. Only the ignorant parochial DK kunchus will claim otherwise. It does not mean I despise (your word) Tamil. I was a Tamil fanatic once but I have changed my mind over the years after coming to know about the richness of Sanskrit. I love both the ancestral languages of India.
    Your comments also have the usual shades of Brahmin hatred and glee in mocking them. Thank you Sir, we all have heard it all before. Brahmin hatred now is passe.
    You have no sensible point to counter Jayashri Saranathna’s article because you have not even read it. Loud noise will not amount to objective debate.
    Now you are mocking Sarang and rubbishing Brahmins again. Can you please counter his points with some sensible arguments? Sorry, your mockery of Brahmins is not funny. You almost sound like MK.

  56. அன்பார்ந்த ஸ்ரீ சாரங்க்

    ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ @ காவ்யா @ Tamil @ திருவாழ்மார்பன் @IIM கணபதிராமன் என்று பல அவதாரம் எடுத்து………………

    தமிழில் ஆனா ஆவன்னாவையும் வேற்றுமை உருபுப் பாடங்களையும் உங்களிடமிருந்து கற்ற (மொத்து வாங்கிய) சிறுபிள்ளை புதிய அவதாரம் எடுத்து வழக்கம் போல் ஜாதிக்காழ்ப்பு ஹிந்துமதக்காழ்ப்பு முகமூடி சுவிசேஷ ப்ரசாரம் இத்யாதியெல்லாம் செய்து கலக்கி வருகிறது.

    வன்முறையே வரலாறாய் வாசித்து உச்சா கக்கா போன……………… முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கத்தை மாறா அடையாளமாகக் கொண்ட………. இந்த சிறுபிள்ளையின் அடுத்த இலக்கு சிரி வைணவ பேத்தல்களாக இருக்கும்.

    மலர் மன்னன் மஹாசயரிலிருந்து வெ சா மஹாசயரிலிருந்து நண்பர் ஒத்திசைவு ராமசாமி மஹாசயர் வரை நாகாக்காது…… நான் கடலை போடுவேன் நீ பொறுக்கு என்ற ரீதியில் கடலை போட்ட சிறுபிள்ளை…………… TAmil அவதாரத்தில் நீங்கள் போட்ட மொத்துக்கு பதில் தெரியாது “ஙே” விழித்து துண்டைக்காணோம் துணியைக்காணோம் ………….என்று புறமுதுகிட்டோடிய சிறு பிள்ளை…………….. புதிய அவதாரம் எடுத்து புத்துணர்வு கொண்டதாக நினைக்கிறது. திண்ணையில் TAmil அவதாரத்தில் தமிழ் ஹிந்து தளம் கல்லாதோர் சபை என்று பினாத்தி உங்களிடம் மொத்து வாங்கியது நினைவுக்கு வரலாம்.

    ம்………………….உங்களிடமிருந்து மண்டகப்படி வாங்காது மலையேறாது. இம்சை தாங்க முடியவில்லை. மண்டகப்படியை வயணமாகச் செய்து மலையேற்றவும்.

  57. சாரங்கன்!
    படுகர்களில் 100 பேர் + பிராமணர்களில் 20000 + பிராமணரல்லாதோரில் 10000 ஆக மொத்தம் 30100 பேர். இது போக, மீண்டும் சென்னையில் 10000 க்கு மேற்பட்டோர், கோவையில் 2000 திருச்சியில் 2000 மொததம் 14000 இந்த 14000 அந்த 30100 பேரில் சேர்த்தியா இல்லையா என்று தெரியவில்லை.

    தமிழ்ப்பிராமணர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில். முன்பு 3 சதவிகிதம் என்றார்கள். தற்போது 6 என்கிறார்கள். தமிழநாட்டில் ஜனத்தொகை 7 கோடிக்கும் மேல். அதில் இந்த 6 சத விகிதம் எத்தனை லட்சங்கள்! அதில் 20000 பேர் எத்தனை விகிதமாகும்?

    94 சதவிகிதம் பிராமணரல்லாதோர். அதில் இந்த 30000 பேர் எத்தனை விகிதம்?

    உம்மிடம் பேசமாட்டார்கள் எனவே உமக்குத் தெரியாது’என்ற சாரங்கனுக்கு சமஸ்கிருதம் தெரியும். இவரிடம் வந்து அந்த 30000 பேர்களும் வந்து சொன்னார்களா? எப்படி இந்த கணக்கு எடுத்தார்? ஆதாரத்தைச் சொல்லவும்.

    ஒரு பேச்சுக்கு நம்பினாலும், தமிழ்நாட்டில் தெலுங்கு பேசத்தெரிந்தோர், தாய்மொழியாகக்கொண்டோர் லட்சக்கணககையும் தாண்டி கோடிக்கணக்கிலே இருப்பார்கள். தமிழருக்கு அடுத்தபடி அவர்கள் வருகிறார்கள். பின்னர் மலையாளிகள். அதுவும் எல்லை மாவட்டங்களில்.

    இவர்கள் 30000, 40000 இல்லை சாரங்கள். பல லட்சங்கள். அதற்காக தமிழர்கள் தெலுங்கையும் மலையாளத்தையும் தமிழை விட உயர்ந்த மொழி. அலல்து அதைப் படித்தே தீரவேண்டும் என சுற்றறிக்கை விடலாமா? சமஸ்கிருதத்து ஒரு நியாயம்! பிறமொழிகள் – அவை சமஸ்கிருதத்தைவிட அதிக எண்ணிக்கையில் – பிறமொழிகளுக்கு ஒரு நியாயமா?

    படுகர்களில் 100 பேர். சாரங்கள், ஆதி ஆந்திரர்கள் எனனும் துப்புரத்தொழிலாளிகள் தமிழகம் முழுக்கப்பரந்து கிடக்கிறார்கள். கோடிக்கணக்கில். இவர்கள் எம்மொழி பேசுகிறார்கள்? தெலுங்கு.

    சாரங்கன்! உங்கள் பேச்சின்படி 5 விகிதமே ஆன்மிகம் சமஸ்கிருதம் என்றால், ஏன் தமிழ்.ஹிந்து. காம் சமஸ்கிருத்துக்காக அரவிந்தன் கட்டுரையும் ப. வெங்கடேசனின் உள்ளுரையையும் போடவேண்டும். நினைவில் கொள்க: காமசூத்திரா மொழிக்காக ஒரு வலைபதிவை நடாத்தவேண்டும்?

    20000 தமிழ்ப்பிராமணர்கள் காமசூத்திராவைப்படிப்பதற்காகவா சமஸ்கிருத்தைக்கற்றுக்கொண்டார்கள்? அதாவது 95 விகிதம் நான்-ஆன்மிக இன்பம் இருக்கிறது அவற்றை நுகர்ந்து அனுபவிப்போமென்றா? அல்லது பணம் கொட்டும் படிக்கலாமென்றா? பிராமணர்களை இப்படியா இழிவுபடுத்துவது?.

    10000 பிராமணரல்லாதோரில் இந்துக்கள் ஆன்மிகத்துக்காகவும், இந்து அல்லாதோர் இலக்கியத்துக்காகவும்தான் படித்தார்கள் எனப்தை நினைவில் கொள்க.

    சாலமொன் பப்பையா ஒரு தீவிர சி எஸ் ஐ கிருத்துவர். மதுரையில் சுவிசேச கூட்டங்களில் அவர் பட்டிமண்டபம் நடத்துவார். கிருஸ்துவின் வாழ்க்கையில் இதுவா, அதுவா? யோவான் சொன்னது இதுவா அதுவா? என்ற தலைப்புக்களில். அவர் சமஸ்கிருதத்தைப் படித்தது, அதன் இலக்கிய இன்பத்தை அனுபவிப்பதற்க்காகத்தான்.

    ஆக, இந்துக்களுக்கு ஆன்மிகம் (பேரின்பம்) மட்டுமே. மற்றவருக்கு இவ்வுலக இன்பத்தை (சிற்றின்பம்) அனுபவிக்க.

    இந்துக்களுக்காகத்தான் இத்தளம் இருக்கிறது. எனவே சமஸ்கிருதம் ஒரு ஆன்மிக மொழி என்பதற்காகத்தான் இக்க்ட்டுரை. திராவிடக்குஞ்சுகள் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் இந்துமதத்தை எதிர்க்கிறார்கள் என்ற எண்ண்த்தில்தான் அரவிந்தனுக்கும் பின்னூட்டக்காரர்களுக்கும் கோபம்?

    இது கூடத்தெரியவில்லையா?

    ஜே வெங்கட்!

    கபிலர் பிராமணர் என்பதற்கும் இக்கட்டுரைப்பொருளுக்கும் என்ன தொடர்பு?

    சமஸ்கிருத்ததை எவரும் தீ வைத்துக்கொழுத்துங்கள் எனச்சொல்லவில்லை.

    சமஸ்கிருதம் வாரம் ஏன்? என்றுதான் கேட்கிறார்கள். ஏன் தமிழ் வாரத்தைக்கொண்டாடு என மோதி அரசு சுற்றறிக்கை விடவில்லை? ஏன் சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனி மரியாதை? மற்ற மொழிகள் அதைவிட குறைச்சலா?
    (நான் சொன்னது: சமஸ்கிருதம் பாடம் மட்டும் இரண்டாம் தாளில்லை அங்கே. பிறமொழிகளும் உள; அவற்றை வாரவிழாவில் கொண்டாடு என்று ஏன் சுற்றறிக்கை விடவில்லை?)

    இதற்கு பதில் சொன்னால் போதும்.

  58. பாலா

    உங்களது அறியாமையை எப்படி போட்டு உடைக்கிறீர்கள் பார்த்தீர்களா. சமஸ்க்ருதத்தில் ஆன்மிகம் 5 % தான். முதலி 18 வித்யா ஸ்தானங்கள் உள்ளன அவற்றில் அல்லாமே ஆன்மீகம் இல்லை – உதாரணம் ஆயர் வேதம். இவை தவிர 64 கலைகள், நியாயம், வியாகரணம், காவ்யம், நீதி கதைகள், அறிவியல், கணிதம், ஜோதிஷம், இதெல்லாம் எத்தனையோ க்ரந்தங்கள். பல புத்த க்ரான்டங்கள், ஜைன க்ரந்தங்கள் சமஸ்க்ருதத்தில் உள்ளன. உங்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் காம சாஸ்திரம் தான் 🙂 என்ன செய்வது.

    உங்களது பாக்கி மறு மொழி – சமக்ஸ்ருதம், பிராமணர் என்று ஏதோ ஏதோ பிராந்தியில் உளறுகிறீர்கள். சமஸ்க்ருதத்தில் பிராந்தி என்றால் லக்ஷ்யே அலக்ஷ்ய தர்ஷனம் இல்லாங்காட்டி மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுவது மட்டுமே.

  59. திரு. சுவனப்ரியன் ……

    தாங்கள் அளித்த கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய்யின் கவிதை மிக அறுபுதமான ஒன்று … தெரிய படுத்தியதற்கு கோடி நன்றிகள்.

    //இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன்.//

    இதில் ஆச்சரியமுருவதர்க்கு என்ன இருக்கிறது சகோதரரே. அதை தான் நீங்களே கூறி விட்டீர்களே. மக்கள் விரோத கருத்துக்களை கொண்டிலங்கும் மனு தர்மம் என்னும் நஞ்சை தாங்கி வருவது இந்த தெய்வீக மொழி தானே. பலாயிரம் ஆண்டுகளாக சமர்க்ருதத்தை எதிர்த்து நின்ற ஒரே இந்திய மொழி நம் தமிழ் மட்டுமே. மதத்தால் வேறுபட்டிருப்பினும் மொழியால் தமிழராக உணரும் தங்களின் உணர்விற்கு தலை வணங்குகிறேன். தாங்கள் மற்றும் ரெபேக்கா மேரி போன்றவர்கள் மதம் கடந்து தங்களை தமிழர்களாக உணர்ந்து ஆரியத்தை வீழ்த்த முன் வந்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது.

  60. தெரியும் சாரங்கன்! காமசூத்திரா மட்டுமன்றி, காளிதாசன், பானபட்டர், பைரவர், தந்தினி, வால்மீகி, கவுடிலியர், விசாகதத்தர், பாஷர், சுத்ரகர், பவபூதி, ஹர்ஷர், பட்டநாராயணா, படரஹரி, கல்ஹணர், அனரூகர், ஜயதேவர் – இப்படைப்பாளிகளும் உண்டு. இவற்றுள் செகுலர் லிட்ரேசர் எழுதியவர்கள், ரிலிஜியஸ் லிட்டரேசர் எழுதியவர்கள் என்று இருபிரிவுகள். ஆனால், வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் படித்துவிட்டால் அதன் மதிப்பு படிப்பவருக்கு குறைத்து கிடைக்காது. இருடிகள் (அப்படித்தான் சார் நம்மாழ்வார் எழுதுகிறார்) படைத்த வேதங்களையும் தமிழில் படித்தால் பலனே இல்லை 🙁

    காரணம், அவை ஓதப்படும்போது அந்த ஒலிக்கே தெயவச்சக்தி உண்டு. அவ்வொலியைக்கூட தலித்துகள் கேட்கக்கூடாதென்பதுதான் அன்றைய வைதீக இந்துமதம். திருமழியிசையாழ்வார் சரிதம்தான் தெரியுமே சாரங்கனுக்கு? (எனக்கு வைக்கப்படும் எதிர்வினையில் அதை பூசி மாற்ற முயல்வார். அவ்வளவு ஜாதிப்பாசம்! எனக்கு ஆழ்வார்ப்பாசம், அவாளுக்கு ஜாதிப்பாசம். ரிடர்ன் அட்டாக வரும் பாருங்கள்).

    சொல்லிவைக்கிறேன். இவ்வாழ்வார் நால்வகை ஜாதிகளுப்பால் வைக்கப்பட்ட பஞ்சவர்ணத்தார். இவர் சுந்தரராஜப்பெருமாளைத் தரிசிக்கச்செல்லும்போது, ஒரு வீட்டுத்திண்ணையில் சில வைதீகர்கள், வேதம் ஓதிக்கொண்டிருந்தார்கள். இவர் வரும்போது நிறுத்திவிட்டார்கள். இவர் தலித்து, இவர் காதில் வேத ஒலி விழக்கூடாதென்பதற்காக. ஆழ்வார் //உறையில் அடங்காதவர்// என்ற பட்டப்பெயர் பெற்றவர். அதாவது கோபக்காரர். அப்பிராமணர்களுக்கு ஒரு சாபம் போட்டுவிட்டு தன் புனிதப்பயணத்தைத்தொடர்ந்தார். அவர் காதில் ஒலி கேளா தொலைவு சென்றவுடன் மீண்டும் வேதமோதலைத் தொடர்ந்தார்கள். அய்யகோ! முடியவில்லை. அவர்தம் நாவுகள் அவர்தம் மேலன்னங்களில் ஒட்டிக்கொண்டு வரமறுக்கின்றன !! அவர்களில் மூத்தோன் உணர்ந்துகொண்டான். ஓடிச்சென்று ஆழ்வார் காலில் விழ்ந்து தங்கள் பிழையை பொறுத்தருளுமாறு வேண்ட, ஆழ்வார் திரும்பிவ ந்தார். ஒரு கரிய நெல்மணியைத் தூக்கி மேலே எறிந்தவுடன், அவர்கள் விட்ட இடத்திலிருந்து மந்திரங்களைத்தொடர அவர்களால் முடிந்தது. பின்னர் அவர்கள் அவ்வாழ்வாரின் முதன்மைச்சீடர்களாக ஆனார்கள் எனபதுதான் திருமழிசையாழ்வாரின் திவ்ய சரிதம்.

    இக்கதை முக்கியமன்று. இக்கதையில் தெரியவருவது, வேதவொலிக்கு தெயவச்சக்தி உண்டு. நான்கு வேதங்களுக்கும் உண்டு. காயத்திரி மந்திரத்துக்கு உண்டு. ஓம் என்ற சமஸ்கிருதச்சொல்லுக்குண்டு. இப்படி வேறு எந்த மதத்திலும் இல்லை. அல்லாஹோ அக்பர் எனப்தை இறைவன் மிகப்பெரியவன் என்றெழதிக்கொண்டார்கள். அரபியில் ஓதினால்தான் அல்லாவை அடையமுடியும் என்றில்லை. விவிலியத்தை தமிழில்தான் படித்து தேவாயலங்களிலோ சுவிசேச கூடங்களில் பிரார்த்திக்கிறார்கள். போப் லத்தீனுக்கு அச்சக்தி உண்டு என்பார். தமிழர்கள் அப்படியில்லை. லத்தீன் என்ங்குமே தமிழ்நாட்டில் இந்தியாவில் ஓதப்படவில்லை. ஆனால், காயத்திரி மந்திரத்தையோ வேத மந்திரங்களையோ தமிழில் சொல்லக்கூடா. எனவேதான், தமிழில் அர்ச்சனைக்கு ஒரு பலனுமில்லை.

    இதைத்தான் நான் சமஸ்கிர்த மொழியின் ஆன்மிகம் என்கிறேன். ஆயுர்வேதத்து நூல்களையும் யோக சூத்திர நூலகளையும் அல்ல. இவை செகுலர் லிட்டரேசர் (மதமில்லா மற்ற உலக விசயங்களைப்பற்றி எழுதிய) கிடையா. சாரங்கன் கதைப்பது என்னவென்றால், செகுலர் லிட்டரேசர் ரொம்ப இருக்குங்கோ. அதுக்காக படியுங்கோ வடமொழியை.

    இஃதென்ன வாதம்? செகுலர் லிட்டரேசர் தமிழில் சூப்பரா இருக்கே. இல்லாத ஒன்றுக்குத்தானே எங்கே இருக்கின்றதோ அங்கு ஓடுகிறோம் ? சாலமோன் பப்பையா என்ன காயத்திரி மந்திரத்தைத் படிக்கவா வடமொழி பயின்றார்? அவர் செகுலர் லிட்டரேசருக்காகத்தான் போனார். ஜயகாந்தன் ஏன் படிக்கச்சொன்னார்? செகுலர் லிட்டரேக்குத்தான். நல்ல ஹிந்துவாக சமஸ்கிருதம் படியுங்கள் என்று காமராஜரோ, ஜயகாந்தனோ சொல்லவில்லையே? அவர்களுக்கு ஏன் அவ்வேலை? அவர் கள் மதவாதிகளா?

    உண்மையை மறைக்க முயல்வதுதான் பிராந்தி. தமிழ் ஹிந்து. காமும் அரவிந்தனுக்கும் ஏன் சமஸ்கிருத செகுலர் லிட்டரேசருக்கு வால் பிடிக்கவேண்டிய அவசியம்? அப்படிச்செய்ய வேண்டுமானால், அவர்கள் இலக்கிய வலைபதிவு அல்லவா நடாத்தவேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். ஏன் எழுதினார்கள் என்றால், வைதீக இந்துமதம் வேதங்கள், உபநிடத்துக்களிலிருந்தே வருகிறது. வாழ்கிறது. அம்மூச்சை எவரோ நிறுத்தப்பார்க்கிறார்கள் என அச்சப்பட்டு இக்கட்டுரையைப்போட்டிருக்கிறார். காமசூத்திரா படித்து தமிழ் ஹிந்து வாசகர்களே விதவிதமான பொஷிசன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது காளிதாசன் நாடகங்களைப்படித்து இலக்கிய இன்பம் நுகருங்கள் என்று போடவில்லை. 🙂

  61. ஜனார்தன் சர்மா …..

    தாங்கள் கூறிய தாமஸ் ஆல்வா எடிசன், மாக்ஸ் முல்லர் மோசடி கதைக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மாக்ஸ் முல்லர் எப்போது எந்த இடத்தில் இவ்வாறு கூறினார். அம்பேத்கர்,அப்துல் கலாம், விவேகானந்தர் போன்று சமற்க்ருத மொழியை “Promote” செய்வதற்கு “Brand Ambassdor” களாக வரிசை கட்டி நிற்கும் போது எதற்கு எடிசனை உங்களின் வடமொழி போதைக்கு உறுகாய் ஆக்கும் முயற்சிகள் ஏனோ? இந்த கயமை தனத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால் இதற்க்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். புத்தகம் அல்லது லிங்க் ஆதாரம் கொடுங்கள்.இணையத்தில் உலவும் குப்பை ப்ளாகுகளை எல்லாம் ஆதாரமாக வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அல்லது பொது தளத்தில் இப்படி ஒரு மோசடியான கருத்தை வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

  62. மனு தர்மம் என்பது நஞ்சு என்று கூறும் அதிமேதாவி தாயுமானவன் மனுதர்மத்தினைப் பற்றி எதுவும் படித்ததில்லை என்பதும், திராவிட மோசடிக்கும்பலின் பொய்யான பிரச்சாரங்களுக்கு மயங்கி உள்ளவர் என்பதும் தெரிகிறது.

    சமஸ்கிருதத்தில்தான் உலகிலேயே மிக அதிகமாக சார்வாகம் மற்றும் சாங்கியம் ஆகிய மிக துல்லியமான உண்மைப் பகுத்தறிவு கருத்துக்கள் உள்ளன. ஓ ! பகுத்தறிவு, மற்றும் மனுதர்மம் ஆகிய இரண்டும் நஞ்சு என்று தாயுமானவன் போன்ற மேதாவி கருதுவதில் வியப்படைய ஒன்றும் இல்லை.

    ஒரு மொழியில் பலர் எழுதுகிறார்கள் .

    ஒருவன் நெடுங்கதை எழுதுவான்,

    வேறு ஒரு எழுத்தாளன் சிறுகதை எழுதுவான்-

    மூன்றாமவன் ஒரு காவியம் படைப்பான்-

    நான்காமவன் ஒரு புதுக்கவிதை படைப்பான்.

    ஐந்தாமவன் ஒரு நாடகம் படைப்பான்.

    இதேபோல ஆன்மிகம், அரசியல், சமூக விழிப்புணர்வு என்று பலரும் எழுதுவது வழக்கம். எந்த மொழியிலும் யாரும் எதனை வேண்டுமானாலும் எழுதலாம். அது மொழியின் சிறப்போ, மொழியின் குற்றமோ அல்ல. எழுதுவோரின் சிறப்பு அல்லது குற்றம் தான்.

    வன்முறை, மோதல், குழப்பம் இவற்றை மனித சமூகத்தில் உருவாக்க கூட பல தீவிரவாத இயக்கங்கள் பல நூல்களை எழுதுகிறார்கள். அதற்கு மொழி எப்படி பொறுப்பாக முடியும் ?

    தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரின் பக்த கோடியான தாயுமானவனைப் போன்றவரிடம் எப்படி நல்ல கருத்துக்களை எதிர்பார்க்க முடியும் ? இணையத்தில் இவரைப்போன்ற போலிகள் ஏராளம்.

    . தாயுமானவனைப் போன்ற ஆங்கில அடிவருடிகள் தான் , ஆங்கிலம் என்ற கேடயம் கொண்டு , தமிழை காப்போம் என்று சொல்லி, இன்று தமிழைப் புதை குழிக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நபர்கள் ஆவார்கள். தமிழகத்தில் சிறிது சிறிதாக ஆங்கில வழி கல்வி அளிக்கும் கல்விக்கூடங்களை அதிகரித்து, தமிழ் வழிக்கல்விக்கு பாடை கட்டியவர்களை தலைவர் என்று சொல்லித்திரியும் இவரைப் போன்றவர்களை காலம் மன்னிக்காது.

    சமற்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ் என்று உளறுகிறார்- இவருக்கு தமிழும் தெரியாது- சமற்கிருதமும் தெரியாது என்று நன்றாக தெரிகிறது. பாவம்.
    ” வடமொழியும், தென்தமிழும் ஆயினான் காண் -” என்கிறது தேவாரம்.

    தேவாரம் அறியாதவர் தன்னை எல்லாம் அறிந்தவர் போல , பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.

    மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ” பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ” என்று சிவபிரானை விளிக்கிறார். ( சிவபுராணம்)- அந்த ஆரியத்தை – அதாவது மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட சிவனை வீழ்த்த வேண்டும் என்று கூறுகிறார்
    தாயுமானவன்.

    திராவிடம் என்பது இனம் அல்ல அது ஒரு நிலப்பரப்பின் பெயர் தான் என்று இவரைப் போன்ற மனநிலை பாதிக்கப்பட்டோரை தெளியவைப்பது சிறிது கடினமான பணி தான். என்ன செய்வது நமது சகோதரர்களில் சிலர் இப்படி இருந்தால் நாம் தான் பித்தம் தெளியவைக்க முயற்சி செய்ய வேண்டும். இறை அருளால், அதனை விடாது முயல்வோம்.

  63. துரியோதனனுக்கு உலகில் இருந்த நல்லது எதுவுமே தெரியவில்லை. தர்மனுக்கோ உலகில் இருந்த கெடுதல் எதுவுமே தெரியவில்லை. எல்லாமே அவரவர் பார்வைக்கோளாறு தான். தாயுமானவருக்கும் இதே பார்வைக் கோளாறுதான் . நல்ல மருத்துவரிடம் அனுப்பிவைக்கவேண்டும்.

  64. @RAMA

    Read your response. Your mother tongue is Tamil, you say. But why did you then hurt Tamilians saying Tamil is the younger sister of Sanskrit? I pointed out that. If you find Sanskrit a glorious language, say that only. After all it is in your personal view based on your own understanding. But don’t say Tamil is inferior to Sanskrit. That is insulting people who have Tamil as their mother tongue.

  65. //தைத்திரீய சம்ஹிதை, பிருகதாரண்யக உபநிஷத் , நாரத ஸ்ம்ருதி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல், பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள மறுமண உரிமை இவற்றையெல்லாம் பார்க்க மறுத்து, //

    //இந்த கட்டுரையை திரு கிருஷ்ணா பாலசுந்தரம் மட்டுமல்ல, நமது தளத்தில் அடிக்கடி கருத்துப் பகிர்ந்துவரும் பெரியவர் சுவனப்பிரியன் அவர்களும் அவசியம் படிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.//

    ஆம் திரு.பாலசுந்தரம் மற்றும் திரு. சுவனப்ரியன் அவர்களே அவசியம் நீங்கள் பிருகதாரண்யக உபநிஷத் படிக்க வேண்டும் அப்போது தான் மாட்டுக்கறி(கோ மாம்சம்) உண்டால் நல்ல அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்கிற உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நல்ல புகழ் பெற்ற அறிஞராகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் குறிப்பாக அனைத்து வேதங்களையும் கரைத்து குடித்த மகாஞாநியாகவும் இருக்கும் படியான ஒரு பிள்ளை பெற வேண்டுமானால் பிருகதாரண்யக உபநிஷத் கூறுவது போன்று கணவனும், மனைவியும் மாட்டிறைச்சி உண்ண வேண்டும். பெண்களின் மறுமணம், பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல் போன்றவற்றை மட்டும் கூறிய திரு.கதிரவன், ஏனோ இந்த அதி முக்கிய வேதாந்த ரகசியத்தை கூறாமல் விட்டு விட்டார்.. என் வேத முன்னோர்களின் பெருமையை கண்டு நான் வியக்கேன்:)

  66. திரு அரிசோனன்!

    //பார்ப்பனர்கள் என்று நீங்கள் மொழி பெயர்த்திருப்பது சரி அல்ல. பிராமணர்களுக்குப் பிறந்தவர்களை நீங்கள் “பார்ப்பனர்கள்” என்று குறிக்கிறீர்கள். பிராமணர்கள், அந்தணர்கள், மறையோர்கள், பார்ப்பனர்கள் என்று பல பிரிவுகள் உள்ளன.//

    நான் இழிவு படுத்தும் நோக்கில் மொழி பெயர்க்கவில்லை. ‘பிராமின்’ என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் அல்லாது மேலும் பல விளக்கங்களும் கிடைக்கின்றன.

    வேத காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு முக்குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
    • பிராமணர் – மிகு சத்துவ குணம்.
    • சத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக இராட்சத குணம், குறை தமாசீகம்.
    • வைசியர்-சாத்வீக குணமற்றவர், குறைவான இராட்சத குணம், அதிகமான தாமச குணம்.
    • சூத்திரர்- சாத்வீக குண மற்றவர், ராஜசீக குணமற்றவர், தாமசீகம் குணம் மட்டும்.
    • பிராமணர் தன்னில் தாழ்த்தப்பட்ட மூன்று வர்ணத்துப் பெண்களையும்,சத்திரியர் தன்னில் தாழ்ந்த இரண்டு வர்ணத்துப் பெண்களையும் வைசியர் தன்னில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்து பெற்ற குழந்தை கள் அறுவரும் “அநுலோமர்” எனப்பட்டனர்.
    • சத்திரியர் தன்னில் உயர்ந்த ஒரு வர்ணத்துப் பெண்ணையும் , வைசியர் தன்னில் உயர்ந்த இரு வர்ணத்துப் பெண்களையும்,சூத்திரர் தன்னில் உயர்ந்த மூன்று வர்ணத்துப் பெண்களையும் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறுவரும் “பிரதிலோமர்” எனப்பட்டனர்.
    • பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களும் பிறர் மனைவியுடன் தவறுதலாகச் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் “அந்தராளர்” என்று அழைக்கப்பட்டனர்.
    • அநுலோமர் முதலாயினர் நான்கு வர்ணத்துப் பெண்கள் முதலியவர்களோடு பெற்ற பிள்ளைகள் “விராத்தியர்” என்றழைக்கப்பட்டனர்

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    இது விக்கி பீடியா தரும் செய்தி. இந்து மத ஆதார நூல்களையும் வரிசையாக பட்டியலிடுகிறது. மனுஸ்மிருதி இதை விட மிக அதிர்ச்சிகரமான செய்திகளை பட்டியலிடுகிறது. நீங்கள் மனம் வேதனைப்படக் கூடாது என்பதற்காக அதனை பட்டியலிடவில்லை.

    ஒரு இஸ்லாமியன் பிறப்பினால் ஒரு சமூகத்து மக்களை உயர்வாக எண்ண மாட்டான். குர்ஆனின் கட்டளைக்கு அது மாற்றம். எனவே ‘பிராமிண்’ என்ற சொல்லுக்கு நீங்கள் சொல்லும் அர்த்தம்தான் வேறு அர்த்தங்கள் கிடையாது என்று எனக்கு தெளிவு கிடைக்கும் வரை நான் ‘பார்பனர்கள்’ என்றே கூறுவேன்.

    அல்லது மனுஸ்ருமிதி இந்து மத சட்டம் கிடையாது என்றும் அதனை கோவில்களிலோ வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். அவ்வாறு நடந்து விட்டால் நான் ‘பிராமிண்’ என்றே அழைக்கிறேன்.

    மற்றபடி என்னை யாராவது ‘துருக்கர்’ அல்லது ‘துலுக்கன்’ என்று சொன்னால் கோபப்பட மாட்டேன். அந்த காலத்தில் துருக்கி உலகை ஆண்டதால் உலக முஸ்லிம்கள் அனைவரையுமே ‘துருக்கியர்கள்’ என்று பலரும் குறிப்பிட்டனர். அது நாளடைவில் மருவி துருக்கர் அல்லது துலுக்கன் என்றாகி விட்டது. ஆனால் இந்தியாவில் உள்ளவர் யாரும் துருக்கியர் கிடையாது. இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறியவர்கள். என்னை யாராவது ‘துருக்கர்’ என்று கூறினால் இந்த உலகை ஆண்ட பரம்பரையை சேர்ந்தவன் என்று என்னை வாழ்த்துவதாகவே நினைத்துக் கொள்வேன். என்னை நீங்கள் ‘துருக்கர்’ என்றும் கூப்பிட்டுக் கொள்ளலாம். எனவே வரலாறு தெரியாத சில முஸ்லிம்கள் கோபப்படலாம். நான் கோபப்பட மாட்டேன்.

  67. திரு தாயுமானவன்!

    //தாங்கள் அளித்த கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய்யின் கவிதை மிக அறுபுதமான ஒன்று … தெரிய படுத்தியதற்கு கோடி நன்றிகள்.//

    பாராட்டுக்கு நன்றி. இதன் மூலம் பல உண்மைகளை நானும் தெரிந்து கொள்ள ஏதுவாகிறது.

    //மதம் கடந்து தங்களை தமிழர்களாக உணர்ந்து ஆரியத்தை வீழ்த்த முன் வந்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது.//

    ஆரியத்தை வீழ்த்துவது என்பதை விட என் தாய் மொழியான தமிழை நேசிப்பது என்பதே எனது முதல் இலக்கு. எனது பேச்சிலும், எழுத்திலும் ஆங்கிலமும், அரபியும், உருதும் கலப்பதை கூடிய வரை தவிர்த்து விடுவேன். எனது குழந்தைகளுக்கும் அதையேதான் சொல்கிறேன். தாய்மொழியான தமிழ்ப் பற்று சவுதி அரேபியா வந்தும் கொஞ்சம் கூட குறையவில்லை.

    மற்றபடி உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் அட்டகாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  68. எனது தமிழ் உடன்பிறப்புக்களே,

    தங்களது கருத்துக்களை நான் படித்து வந்தேனே தவிர, எனது கருத்தைப் பதியவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில், வெளிநாட்டில் இருக்கும் நான், இந்தியாவின் அரசியலில் கருத்துப் பதியக்கூடாது என்ற கட்டுப்பாடுதான். எனவேதான் ஜனாப் சுவனப்பிரியனின் ஒரு கருத்துக்குமட்டும் பதிலைப் பதிவு செய்தேன்.

    சமஸ்கிருத வாரம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி நான் கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை. ஆயினும், தமிழைப்பற்றியும், வடமொழி(சமஸ்கிருதம்)யைப் பற்றியும், நான் கொண்டுள்ள கருத்தினை என் உடன்பிறப்புகளான தங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
    ஒரு சமுதாயத்தைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்றால் அதன் மொழியைக் கசடறக் கற்கவேண்டும். மொழிதான் ஒரு சமுதாயத்தைப்பற்றி அறிந்துகொள்ள உதவும் ஊடகம். எவருக்கும் தனது தாய்மொழியின் மீது பற்று, அன்பு இருக்கவேண்டும். அவர் எந்த இனமாலும், சமயமானாலும், சாதியானாலும், சமய உட்பிரிவானாலும் சரி, தாய்மொழி, அச் சமுதாயத்தின் வாய்மொழி, அதன் குருதியில் இரண்டறக் கலந்திருக்கிறது. அந்தவகையில், தமிழர்கள் அனைவரும் தமிழைப் பிழையறப் பேசவாவது அறிந்திருக்க வேண்டும் என்பது எனது அவா.

    ஒரொரு தடவை நான் தமிழ் நாட்டிற்கு வந்து போகும்போதும், அமரகவி பாரதி (1930 என்று நினைக்கிறேன்) பாடிவிட்டுச் சென்ற ஒரு கவிதைதான் என் நினைவுக்கு வந்து என்னைச் சோர்வுறச் செய்கிறது.

    “மெல்லத் தமிழ் இனிச் சாகும், அந்த
    மேற்கு மொழிகள் இப் புவிமிசை மேவும்
    என்றந்தப் பேதை.உரைத்தான், ஆ!
    இந்த வசையெனக் கெய்திடலாமோ?”

    அந்த அளவுக்கு தமிழ், அது கோலோச்சி வரும் தமிழ்நாட்டிலேயே, நம் இளைஞர்களாலும், முதியவர்களாலும் புறக்கணிக்கப் படுகிறது. நான் நல்ல தமிழில் பேசினால், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்ற கேள்விதான் அனைவரிடமிருந்தும் எழுகிறது. கல்வி அறிவு அற்றவனைப்போல என்னைப் பார்க்கிறார்கள். அந்த அளவு தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்கள். இதற்கு எந்த மதத்தினரும், சாதியினரும் விலக்கல்ல. கிராமங்களில், தமிழைத் தவிரே வேறு எந்த மொழியையும் அறியாதவர்களிடம் பேசும்போதுதான், கொஞ்சு தமிழை என்னால் கேட்க முடிகிறது. மனமகிழ்ச்சியுடன் உரையாட இயலுகிறது.

    தமிழில் வடமொழியைக் கலக்கக்கூடாது என்று தனித்தமிழ் இயக்கம் துவங்கிய பரிமால் கலைஞர், மறைமலை அடிகள் போன்றானார் எங்கு போயினர் என்று என் உள்ளம் துடிக்கிறது. தமிழை பள்ளிகளில் இருந்தே விரட்டி விட்டார்கள். ஆங்கில மொழியில் கற்பிக்கப் படும் பள்ளிகளே சிறந்தவை என்ற தவறான எண்ணமே எல்லா மக்களிடமும் நிலவி வருகிறது. இங்கும், சமய, சாதி, உட்பிரிவு வேறுபாடு இல்லை. இக்கால இளைஞர்களுக்கு தமிழில் எழுதக்கூட, படிக்கக் கூட வருவதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பதைப் பெருமையுடன் சொல்வதைக் கேட்டல் நெஞ்சில் குருதி கசிகிறது.

    இப்படியிருக்க, நான் தமிழ் ஊடகங்களில் காண்பது என்ன? தமிழர்களுக்குள் பிரிவினை ஊட்டும், ஒருவரிடம் ஒருவர் வெறுப்பை ஏற்படுத்தும், நிகழ்சிகளும், மூளைச் சலவைகளும்தான். இதில் நாங்கள் மட்டுமே தமிழர்கள், நாங்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள், …..ஐ ஒழிக்க, ….ஐ நீக்க நாங்கள் பாடுபடுகிறோம் என்ற மார்தட்டல் வேறு! பொதுவாக தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்களே தவிர, அவரவர்களில் செயல் திட்டத்தை (agenda) முன்வைப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, தமிழில் யாருக்கும் அக்கறை இல்லை என்றுதான் வெளிநாட்டில் இருக்கும் தமிழனான எனக்குத் தோன்றுகிறது.

    இனி மற்ற மொழிகளைப்பற்றி, சமயம், இலக்கியம் நிறைந்துள்ள மொழிகளைப்பற்றி, நான் அறிந்ததை எழுதுகிறேன்.

    எந்த ஒரு மொழியின் உணர்ச்சியையும், அதன் உட்கருத்தையும், மற்ற மொழியில், மொழிபெயர்ப்பது என்பதே இயலாது. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருக்குறள், இவற்றை நன்கு அறிய தமிழை நன்கு கற்றால் மட்டுமே இயலும். சில தமிழ்ச் சொற்களுக்கு வேறு எந்த மொழியிலும் மாற்றுச் சொல் கிடையாது. சில தமிழ் சொற்றொடர்களை அது சுட்டியமாறு மொழிமாற்றம் செய்யவும் இயலாது. இது இந்த மொழிக்கும் பொருந்தும். மொழிகளின் வடிவமைப்பும் அப்படியே.

    எனவேதான், இலக்கியங்களையும், சமயநூல்களையும் அவை எழுதப்பட்ட மொழியிலேயே கற்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சனாதன சமயமான இந்து சமயம் நீங்கலாக, உலகத்தில் இருக்கும் அனைத்து சமய நூல்களுக்கும் ஒரு மொழியைக் கற்றாலே போதுமானது. அது அவசியமும்கூட.

    இஸ்லாமியர்கள் திருக்குரானை அரபு மொழியில்தான் ஓதவேண்டும் என்று சொல்வதும் அதனால்தான். ஒவ்வொரு இஸ்லாமியனும் அரபு மொழியைக் கற்கத்தான் வேண்டும். அப்பொழுதான் அவனது சமயம் அவனுக்குப் புரியும்.
    விவிலிய நூலை முறைப்படி கற்க கிரேக்க மொழி தெரிந்திருக்கவேண்டும். மொழி மாற்றம் செய்யும்போது உட்கருத்துகள் மாறிவிடுகின்றான், அல்லது மாற்றப்படுகின்றன.

    இந்து சமய தமிழ்மறைகளை அறியத் தமிழ் தெரிய வேண்டும். நான்மறைகளான வேதங்களுக்கும், உபநிஷதங்களுக்கும் வேதமொழியும் (சந்தஸ்), தெரிந்திருக்கவேண்டும். இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.
    இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும். எனவே, இந்துக்கள் அனைவரும் (வடவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்), தமிழும், வடமொழியும் கற்கவேண்டும் என்பது எனது கருத்து. தமிழைக் கற்றுக்கொள் என்று சொல்லாமல், வடமொழி வாரம் நடத்துவதோ, தமிழ் வாரம் வேண்டும் என்று சொல்லாமல், வடமொழி வாரத்தைச் சிறப்பாக நினைப்பதும், ஒருவரை (அதாவது இந்துக்களைப் பொருத்தமட்டில்) தாயோ, தந்தையோ ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்று சொல்வதற்கு நிகராகத்தான் தோன்றுகிறது.

    இது எனது இந்திய அரசியல் பற்றிய கருத்தல்ல. இந்து சமயத்தை அனுசரிக்கும், ஒரு இந்துவின் கருத்தே என்று கொள்ளவேண்டும்.

    நான் அன்னை தமிழுடன், ஆங்கிலம், வடமொழி, இந்தி, ஓரளவு மலையாளம், உருது, தெலுங்கு அறிந்தவன். எனக்கு எந்த மொழியின் மீதும் வெறுப்பு கிடையாது. மொழித் திணிப்பை நான் விரும்பாதவன். அமெரிக்க மண்ணில், தமிழ்ச் சங்கம் நிறுவி, இங்கு வளரும் சிறார்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தவன்.

    எனவே, எதிர்க் கருத்து எழுதும் தமிழ் நண்பர்கள், எனது கருத்துகளுக்கு மட்டுமே ஆதரவு/எதிர்க் கருத்துகளை எழுதுமாறு தாழ்மையுடன் கோருகிறேன். அதை விடுத்த, மாறான, தேவையில்லாத வன்கருத்துக்களைக் தவிர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    வணக்கம். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமச்சிவாய!!

  69. தமிழ்பால் அன்புகொண்ட என் உடன்பிறப்புக்களே,

    தமிழின், தமிழர்களின் பெருமையை விவரிக்கும், தமிழைக் கற்பதில் நாட்டம் குறைந்தால் எதிர்காலம் என்ன ஆகும்(what if) என்ற கருத்தை வைத்து நான் எழுதிய “தமிழ் இனி மெல்ல…” என்ற புதினம் தொடராக இணையவெளி என்ற வலையத்தில் வெளிவருகிறது. அதைப் படிக்க விருப்பம் கொண்ட தமிழ் அன்பர்கள் கீழ்க்கண்ட லின்க்குக்குச் சென்று படித்து, கருத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    வணக்கம்.

    https://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_5203.html

  70. திரு. ஒரு அரிசோனன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கீழ்கண்ட கருத்து விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக விசால மனப்பான்மையுடன் உள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி. உண்மையை தைரியமாக சொல்லி இருக்கிறீர். வாழ்க நீர் பல்லாண்டு.

    # இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும் #.

  71. //ஆரியத்தை வீழ்த்துவது என்பதை விட என் தாய் மொழியான தமிழை நேசிப்பது என்பதே எனது முதல் இலக்கு. //

    we do have so many people to save tamil. better you save our tamil people as below story has explain you lot. everyday I am reading 10 news like this. better you explain quran to your own people and ask them to treat others human well and give respect humans. all cheat fraud people in your work country only and you easily save our tamil people.
    here is the today news:-

    கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் சேரன், 48. பெற்றோருக்கு, இரண்டாவது மகன். தனக்கு தெரிந்த வர்கள் சிலர், வெளிநாடு சென்று, சொற்ப ஆண்டுகளில், அதிகளவில் சம்பாதித்து வீடு கட்டுவதையும், நிலம் வாங்குவதையும் பார்த்து, தானும் வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசைப்பட்டார்.பாஸ்போர்ட், விசா பறிமுதல்கைவசம் தையல் தொழில் இருந்ததால், நிச்சயம் வெற்றி என்ற எண்ணத்தில், 1995ல், சவுதி அரேபியாவுக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது, 29. ‘வாழ்க்கையில், ‘செட்டில்’ ஆகிவிடலாம்; இனிமேல், கஷ்டமில்லை’ என்ற கனவில் மிதந்தார்.ஏஜன்ட்கள் மூலம், சென்னையில் இருந்து, மும்பைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், ஒரு மாதம் அங்கு தங்க வைக்கப்பட்டார்.டெய்லர் என்பதால், அவருக்கு பயிற்சி யும், தகுதித் தேர்வும் நடத்தப்பட்டது. அவற்றில், தேர்ச்சி பெற்ற அவருக்கு, சவுதி அரேபியாவுக்கு விசா வழங்கி அனுப்பினர். மனசுக்குள், வளமான எதிர்காலத்தை சுமந்து, சவுதிக்கு சென்ற அவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ‘டெய்லர் வேலைக்கு நாங்கள் அழைத்து வரவில்லை. ஆடு மேய்க்கத் தான் அழைத்து வந்தோம்’ என, சவுதியில் வேலை கொடுத்தவர்கள் கூற, அதிர்ச்சி அடைந்தார்.அவரிடமிருந்த, பாஸ்போர்ட், விசா மற்றும் ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்ட, வேலை கொடுப்பவர், ‘ஆவணங்கள் இல்லாமல், என் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி னால், சவுதியில் சிறை தான் உனக்குக் கிடைக்கும்’ என, எச்சரித்துள்ளார். வேறு வழி தெரியாமல் விழித்த சேரனை, மலைப்பாங்கான பகுதியில் உள்ள, தோட்டத்தில் விட்டனர். மூன்றாண்டு கள் ஒப்பந்தப்படி, ஆடு மேய்த்து விட்டு, 1998ல் ஊர் திரும்பிஉள்ளார்.தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தை, வெளிநாடு செல்லும் மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக, ‘வெளிநாடு செல்லாதீர்கள். ஆடு தான் மேய்க்க வேண்டும்’ என, விழிப்புணர்வு பிரசாரத்தை, 16 ஆண்டுகளாக செய்து வருகிறார்.தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்து, சேரன் கூறியதாவது:டெய்லர் வேலைக்கு என சவுதி சென்ற எனக்கு, ஆடு மேய்க்கும் வேலை தான் கொடுத்தனர். ஏமாற்றி விட்டீர்கள் என, கோபமடைந்தபோது, அவர்களின் எச்சரிக்கை என்னை அடைக்கியது.காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஆடு மேய்க்க வேண்டும். காலையில், 5 லிட்டர் தண்ணீரும், ரொட்டியும் கொடுப்பார்கள். இரவில், காடுகளில் கிடைக்கும், சுள்ளிகளைப் பொறுக்கி, சமையல் செய்து கொள்வேன். இதற்கு, மாதம், 5,000 ரூபாய் சம்பளம்.ஆடுகள் அடைத்திருக்கும் பட்டிக்கு அருகே, தகர செட் அமைத்திருப்பார்கள். அதில், துாங்கிக் கொள்வேன். என்னைப் போல், அப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட, தமிழர்கள் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கும், தோட்ட வேலைக்கும் அமர்த்தப்பட்டு இருந்தனர். ஏதேதோ கனவுகளுடன் சவுதி வந்த எனக்கு, மிஞ்சியது ஏமாற்றமே. மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடியும் வரை, அங்கு இருந்துவிட்டு ஊர் திரும்பினேன்.இங்கு வந்ததும் நான் பட்ட துன்பத்தை யாரும் அனுபவித்து விடக்கூடாது என, கிராமங்கள் தோறும் பிரசாரத்தை செய்கிறேன்

  72. ஆம் திரு.பாலசுந்தரம் மற்றும் திரு. சுவனப்ரியன் அவர்களே அவசியம் நீங்கள் பிருகதாரண்யக உபநிஷத் படிக்க வேண்டும் அப்போது தான் மாட்டுக்கறி(கோ மாம்சம்) உண்டால் நல்ல அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்கிற உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நல்ல புகழ் பெற்ற அறிஞராகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் குறிப்பாக அனைத்து வேதங்களையும் கரைத்து குடித்த மகாஞாநியாகவும் இருக்கும் படியான ஒரு பிள்ளை பெற வேண்டுமானால் பிருகதாரண்யக உபநிஷத் கூறுவது போன்று கணவனும், மனைவியும் மாட்டிறைச்சி உண்ண வேண்டும். பெண்களின் மறுமணம், பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல் போன்றவற்றை மட்டும் கூறிய திரு.கதிரவன், ஏனோ இந்த அதி முக்கிய வேதாந்த ரகசியத்தை கூறாமல் விட்டு விட்டார்.. என் வேத முன்னோர்களின் பெருமையை கண்டு நான் வியக்கேன்:)

    ஆதாரம்:He who wishes that a son should be born to him who would be a reputed scholar, frequenting the assemblies and speaking delightful words, would study all the Vedas and attain a full term of life, should have rice cooked with the meat of a vigorous bull or one more advanced in years, and he and his wife should eat it with clarified butter. Then they would be able to produce such a son.(Brihadaranyka upanishad 6.4.18).

    தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு.. நான் எனது மறுமொழியை தங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே பதிவிடுகிறேன். என்னுடைய இந்த மறுமொழியில் எந்த அவதூறோ அல்லது சர்ச்சைக்குரிய விடயங்களையோ கூற வில்லை. மேலும் இங்கு வசவு சொற்களையோ அல்லது தனி நபர் தாக்குதலையோ கையில் எடுக்கவில்லை. மேலும் கட்டுரையின் பொருளை தாண்டியும் பதிவிடவில்லை என்பதையும் கூறுகிறேன். சம்ற்க்ருத மொழிக்கு ஆதரவாக வெளிவராத மிக சிறந்த அம்சங்களை தான் நான் வெளியிட்டது.

  73. திரு பாண்டியன் சார். நீங்கள் படித்த ஒரு செய்தியை இங்கே குறிப்பிடீர்கள் நான் ஒரு செய்தியை குறிப்பிடவா?

    வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு என்ற ஊரில் மல்லிகா என்ற விதவை பெண் சீட்டு நடத்தி வந்தார். அந்த ஊரில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும் உரிய நேர்வழியை மட்டுமே பின்பற்றும் (அலிஜனாப்) காதர் பாஷா என்ற மிக நல்லவரும் இந்த சீட்டில் சேர்ந்தார் பணம் கட்டினார். சில மாதங்கள் கழித்து சீட்டு எடுத்தார். அதன் பின்னர் மாதாந்திரம் கட்ட வேண்டிய சீட்டு பணத்தை கட்டவே இல்லை. பல முறை கேட்டும் பலனில்லை. போலீசில் புகார் கொடுத்தபோது மீண்டும் 2 மாதங்களுக்கு 10000 கட்டினார். மீண்டும் நிறுத்திவிட்டார். பணத்தை கட்டுமாறு அந்த விதவை பெண் கேட்டபோது “என் வீட்டை விலைக்கு எடுத்துகொள் அதற்கு 150000 பணம் கொடுத்துவிடு” என்று கூறினாராம் (குறிப்பு:– “அவர்” அந்த வீட்டை “புறம்போக்கில்” கட்டியிருக்கிறார்.) இவரும் (முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று) அவரை நம்பி பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு ஆனால் வீட்டை காலி செய்யமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார். இவர் கடந்த ஞாயிறு அன்று அவரிடம் சென்று வீட்டை ஒப்படைக்குமாறு கேட்டதற்கு அவரை (ஒரு பெண் அதிலும் விதவை என்றும் பாராமல்) அடித்திருக்கிறார். அவமானம் தாங்காமல் அந்த பெண் (வயது 50) மண் எண்ணெய் ஊற்றிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறந்தார். (ஆதாரம்:—இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 29-7-14)

    இஸ்லாம் என்றால் “நேர்வழி” முஸ்லிம் என்றால் (கடவுளுக்கு) பணிந்தவன் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்கள். இதுதான் நேர்வழியா? உங்க நேர்வழியை கொண்டுபோய் கூவத்தில் கொட்டுங்கள்.

    முஸ்லிம்கள் வெளிநாட்டில்தான் அயோக்கியர்கள் என்று நினைக்காதீர்கள் பாண்டியன். அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அயோக்கியர்களே. இந்துகளிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால் நேர்வழி என்று சொல்லி திரிந்துகொண்டு இப்படி அயோக்கியத்தனம் செய்கிறார்கள். சுவனபிரியன் ஆஹா! குரான் சொல்படி நடக்கும் எங்களை போன்று நல்லவர்கள் உண்டா? என்கிறார். இவரை நல்லவர் என்று திரு அரிசொனன் வேறு சான்று தருகிறார். அவர் பிராமணன் என்று கூறுங்கள் பார்ப்பான் என்று சொல்லாதீர்கள் என்று வேண்டி கேட்டால் “நான் அப்படித்தான் கூறுவேன்” என்று கூறுகிறார். அரிசொனனுக்கு இது வேண்டும் இன்னமும் வேண்டும். சுவனபிரியன் போன்றவர்களுக்கு இங்கே (தாயுமானவன் போன்ற) சிலர் ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அயோக்கியத்தனம் செய்து விட்டு தமிழ் என்ற முகமூடி போட்டுகொண்டால் அவர்களை நல்லவர்கள் என்று வெள்ளந்தியாக “சிலர்” நம்புகின்றனர். அவர்களை சொக்கநாதன் தான் காப்பாற்ற வேண்டும்.

  74. திரு பால சுந்தரம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே கடுமையாக குற்றம் சுமத்துவது வருத்தம் அளிக்கிறது. அந்தணர் சமூகம் செய்யும் சில தவறுகளை கண்டிக்க, திருத்த அதே சமூகத்தில் பலர் தோன்றி இருக்கிறார்கள். பல சான்றுகள் உள்ளன. இது போல் வேறு சமூகங்களிலும் மதத்திலும் (தம் சமூகம், மதத்தை சார்ந்தவர்கள் தவறு செய்யும் போது அதை வெளிப்டையாக கண்டிக்க) எவ்வளவு பேர் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்கள் என்னிடம் இல்லை.

    பண்டிட் மதன் மோகன் மாளவியா என்பவர் அந்தணர் சமூகத்தை சார்ந்தவர். அலஹாபாத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர். கோயில்களில் உள்ள சாதி தடைகளை களைவதில் பல போராட்டங்கள் நடத்தியவர். ஹரிஜன் தலைவர் பி. என். ராஜ்போஜ் என்பவர் தலைமையில் சுமார் 200 ஹரிஜனங்களை அழைத்து கொண்டு கோதாவரி புண்ணிய நதியில் குளித்து விட்டு காலாராம் கோயிலில் (நாசிக் நகர், மகாராஷ்டிரா மாநிலம்) ஆலய பிரவேசம் செய்தவர்.

    அந்தணர்களை காயப்படுத்த , குற்றம் சொல்ல, கீழ்மை படுத்த நாட்டில் பல இயக்கங்களும் வலை தளங்களும் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது; சோறு போட்டு வளர்க்கபடுகிறது.

    பொதுவாக அணைத்து (ஹிந்து) மக்களை – சாதிய இணக்கத்தை உருவாக்கி – ஒற்றுமை படுத்தி, ஹிந்து மதத்தில் கொட்டி கிடக்கும் அளப்பரிய ஆன்மிக செய்திகளை விவாதித்து (அரசியல் மற்றும் ஆன்மீக) விழிப்புணர்வு செய்ய வைக்கும் இந்த சுயநலம் இல்லா இணைய தளத்தின் நல் நோக்கம் நிறைவேற உதவிடுமாறு இரு கரம் கூப்பி மன்றாடி வேண்டுகிறேன்.

  75. அரசியல் சட்ட நிர்ணய சபையில் திரு.நசிருதின் அஹ்மத் சமஸ்கிருதம் பற்றிய ஒரு விவாதத்தில் பங்கு பெற்று 12.09.1949-ல் பேசினார். அது பற்றிய முழு விவரம் ஆங்கிலத்தில் கீழ்கண்ட விலாசத்தில் உள்ளது.

    https://nnavjeetmyblog.blogspot.in/2013/08/demand-of-making-sanskrit-as-national.html

  76. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் அரிசோனன்

    \\\\ இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.
    இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும். \\\\

    உசிதமான கருத்து. வாழ்க.

    \\\ தமிழில் வடமொழியைக் கலக்கக்கூடாது என்று தனித்தமிழ் இயக்கம் துவங்கிய பரிமால் கலைஞர், மறைமலை அடிகள் போன்றானார் எங்கு போயினர் என்று என் உள்ளம் துடிக்கிறது. \\\

    ஏன் கலக்கக்கூடாது. எந்தெந்த மொழி மிகப்பரவலாக பல மொழிகள் பேசும் ஸ்தலங்களில் பேசப்படுகிறதோ அது நிஸ்சம்சயமாக கலப்புக்கு உள்ளாகும் என்பது உலகியல்பாயிற்றே.

    தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்து காலத்தாலழியா படைப்புகள் படைத்தவர்கள் மூடர்களா?

    இன்று மறைமலையடிகளும் பரிதிமாற்கலைஞரும் இருந்தாலும் என்ன………. தமிழகத்தில் சூரிய நாராயணன் என்று பெயரில்லாமல் போகுமா அல்லது வேதாசலம் என்று பெயரில்லாமல் போகுமா?

    யாரிருந்தால் என்ன இல்லாவிடில் என்ன எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தால் ஆன திருப்புகழை ஓத யாரிடம் நாங்கள் அனுமதி பெறவேண்டும்? அல்லது மணிப்ரவாளத்திலான ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய வ்யாக்யானாதிகளை வாசிக்க யார் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அல்லது மணிப்ரவாளத்திலான ஸ்ரீ புராணம் என்ற ஜின காவ்யத்தையும் நீலகேசிக்கு எழுதப்பட்ட மணிப்ரவாள வ்ருத்தியையும் வாசிக்க யார் யாரிடம் அனுமதி பெற வேண்டும்? அல்லது தமிழக க்றைஸ்தவத்தில் எந்த சம்ப்ரதாயமாக இருப்பினும் சரி…………கத்தோலிக்கம்….சிஎஸ் ஐ…….. இத்யாதி இத்யாதி என்று எந்த சம்ப்ரதாயமாக இருந்தாலும் சரி வாசிக்கப்படும் விவிலியம் மணிப்ரவாளமாயிற்றே. இவர்கள் தொலைக்காட்சி தொலைக்காட்சியாக மணிப்ரவாளத்திலேயே விவிலியத்தை வாசிக்கிறார்களே? யாரிடமிருந்து அனுமதி பெற்று? வேதநாயகம் சாஸ்திரியார் என்ற க்றைஸ்த்வ பெருந்தகையின் கீர்த்தனைகள் (சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம், சர்வ லோகாதிப நமஸ்காரம்.) யார் அனுமதி பெற்று இன்றளவும் பாடப்படுகிறது? தமிழின் முதல் நாவல் என்று இன்றளவும் கொண்டாடப்படுவது ஸ்ரீமான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை என்ற க்றைஸ்தவப் பெருந்தகை படைத்த படைப்பு. அது மணிப்ரவாளத்திலானதே. அன்னார் சர்வ சமய சமரச கீர்த்தனைகளையும் படைத்திருக்கிறார்கள். இதுவும் மணிப்ரவாளமே. இவையெல்லாம் காலத்தாலழியாதவை.

    நிலைமை இப்படி சர்வ மத / சர்வ சமய / சர்வ ஜாதி ப்ரசலிதமான மணிப்ரவாள பாஷாசைலி என்றிருக்கையில் பார்ப்பன சதி என்று கூறுவது கூறில்லா சுவிசேஷ / முகமூடி சுவிசேஷ துஷ்ப்ரசாரகர்களின் செயல்பாடாக மட்டிலும் இருக்கும்.

    வாழ்ந்து கொண்டிருக்கும் எதையும் செத்து விட்டது என்று யார் சொன்னாலும்……. ஜீவிதமாக இருப்பது…… ஜீவிதமாக இருப்பதற்கு லாயக்கானது,.,……… ஜீவிதமாகத் தான் இருக்கும்.

    ஹிட்லரும் ஸ்டாலினும் போட்டி போட்டுக்கொண்டு யஹூதிகளை அழித்தொழித்தாலும் யஹூதிகள் வாழ வேண்டும் என்று நினைத்து வாழ உறுதியும் பூண்டால் வாழ்ந்தே தீருவார்கள்.

    தமிழாகட்டும் சம்ஸ்க்ருதமாகட்டும் மணிப்ரவாளமாகட்டும்………….. வாழத் தகுதியுள்ளது………. போஷிக்கப்படுவது வாழ்ந்தே தீரும். மொழிகளும் மொழிநடைகளும் வாழ்வதும் வழக்கொழிவதும் பேசுபவர்கள் நாவில். போஷிப்பவர்கள் செயல்பாடுகளில்.

    சம்ஸ்க்ருதம் மற்றும் மணிப்ரவாளம் சார்ந்து போலிச் சமூஹ அக்கறையாளர்கள் இரு நாக்கால் பேசுவார்கள். கற்றுத்தரப்படவில்லையென்றால் ஜாதி ப்ரச்னை. கற்றுத்தந்தாலும் ஜாதிப்ரச்னை.

    ப்ரச்னை ஜாதியில்லை.

    எந்த விஷயமாக இருந்தாலும் சரி………….. ஹிந்துஸ்தானத்தைச் சார்ந்த அறிவுக்கருவூலத்தை…………. அழித்தொழித்தே ஆக வேண்டும் என்ற நயவஞ்சக எண்ணத்துடன்……….. அந்த இழிவான இலக்குக்கு………மொழியை / மொழிநடையை ஒரு ஜாதி சார்ந்த ப்ரச்னையாக்கியே தீருவது என்ற மனப்போக்குத் தான் ப்ரச்னையே.

    நிதர்சனத்தில் எந்த மொழியும் / மொழிநடையும் எந்த ஜாதி / மதம் / சமயம் போன்ற சிறைகளில் அகப்பட்டவை இல்லை. மானுடர்கள் ஒருவருடன் ஒருவர் கருத்துப்பகிரவும் மானுடர்கள் இறைவனைத்துதிக்கவும் இயற்கையை விதந்தோதவும் மொழி ஒரு சாதனம்.

    சாதனமான மொழியை சாத்யமாகக் கருத விழைவது பேதமை. அறிவு பூர்வமான தர்க்கத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ளலாம். உள்ளீடற்ற வெற்று கோஷத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ள விழைவது அடிமுட்டாள் தனம்.

    இந்தத் திரியில் கோஷம் உரத்து ஒலிக்கிறது. துரத்ருஷ்டவசமாக தங்களுடைய மேற்கண்ட அனுசித வாசகம் கோஷ்டி கானத்தில் சம்மிலிதமாகிவிட்டது.

  77. திரு. கதிரவன்…

    கதிரவன் அண்ணன் அனைவரையும் போல வடமொழி,தென்மொழி சிக்கலுக்கு தீர்வு காண தேவாரத்தையும், திருவாசகத்தையும் வம்புகிழுக்கப் போய் விட்டார். எப்போதும் போல திராவிட கும்பல், பெரியார் என்று பிதற்ற தொடங்கி விட்டார்.

    //மனு தர்மம் என்பது நஞ்சு என்று கூறும் அதிமேதாவி தாயுமானவன் மனுதர்மத்தினைப் பற்றி எதுவும் படித்ததில்லை என்பதும், திராவிட மோசடிக்கும்பலின் பொய்யான பிரச்சாரங்களுக்கு மயங்கி உள்ளவர் என்பதும் தெரிகிறது.//

    அண்ணே,(உங்களை விட நான் வயதில் சிறியவன் தான் அதனால் அண்ணன் என்று கூப்பிடுவதில் தவறில்லை). அண்ணே, மனுதர்மத்த பத்தி தெரிஞ்சிக்க நான் ஏன் திராவிட கும்பல் கிட்டே போகணும். அத தான் புத்தகமா போட்டு விக்கிறாங்களே அப்புறம் என்ன. ஏற்கனவே மனுதருமத்த பத்தி பலர் கிழி கிழின்னு கிழிச்சு முடிச்சிடாங்க. நான் வேற எதுக்குன்னு தான் கம்முனு இருந்தேன். இருந்தாலும் உங்கள் அளவுக்கு எனக்கு தெரியிலனாலும் மனுதருமத்த பத்தி எனக்கு தெரிஞ்சத சொல்ல ஆசை படறேன். catch பண்ணிக்கோங்க.

    பெண்கள நாம்ம பாரத பண்பாட்டுப் படி தெய்வமா கும்பிடறோம், ஆறுகளுக்கு எல்லாம் கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரின்னு பேரு வச்சு அழகு பார்க்குறோம். இதுல தாய்நாடு, தாய்மொழின்னு வேறெல்லாம்!!! அப்படி பட்ட பாரத பூமில இருந்து கிட்டு மனுதர்மம் பெண்கள பத்தி என்ன சொல்லுதுன்னு சொல்லவா. சும்மா சொல்ல கூடாது தாலிபான்கள மிஞ்சிடிச்சு.

    மனுதர்மம் 9ஆம் அத்தியாயம்

    14. ஆடவரின் அழகினையும், வயதையும் பாராட்டாமல் அவர்தன் ஆண்மையை மட்டுமே பொருட்படுத்தி மாதர் ஆடவர்பால் மனம் பற்றிக் கலப்பர்.

    15. ஒழுக்கம் பிறழ்தலும், நிலை இல்லாத மனமும், நம்பகத்தன்மை இன்மையும் ஸ்த்ரீகளின் சுபவாம் ஆவதால், கணவனால் நன்கு போற்றி புரக்கப்பட்டாலும், அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை.

    16. இவ்வித சுபாவங்கள் ஸ்திரிகளுக்கு பிறப்புடன் வருவதாகையால், மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது.

    17. படுக்கை, ஆதனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம், இவ்வற்றை மாதரின் பொருட்டே மநு படைத்தார்.

    18. மாதர்க்கு பிறவியை தூயதாக்கும் சம்காரங்கள் மந்திர பூர்வமாக செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பொய்யை நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே, பொய்யை போல் மாசு வடுவினராக மாதர்கள் இருக்கின்றனர்.

    19. பெரும்பாலும் ஸ்திரீகள் கற்பு நெறி இல்லாதவர் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக.

    அண்ணே பெண்கள பத்தி இன்னும் நெறைய இருக்கு ஆனா அதையெல்லாம் என்னால தட்டச்சு பண்ணிக்கொண்டு இருக்க முடியாது. சொன்ன வரைக்கும் சரியா இருக்கானு check பண்ணி பாருங்க. அத்தோட பெண்கள பத்தி மநு தர்மர் சொன்னதயும் யோசிங்க. நம்ம வீட்லயும் பெண்கள் இருக்காங்க அத மனசுல வச்சிகிட்டு பெண்கள பத்தி மனு சொன்னத எட போடுங்க. அதுக்கு அப்புறம் நீங்களே காரி துப்பிடுவீங்க. இது தவிர 4ஆம் வருணத்தாரை பற்றி மனு கூறியதை நான் கூற வேண்டுமோ. தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே அம்பேத்கர் அதை தனது நூலான சூத்திரர்கள் யாரில் கிழித்து தொங்க விட்டுட்டார்.

    .
    //இதேபோல ஆன்மிகம், அரசியல், சமூக விழிப்புணர்வு என்று பலரும் எழுதுவது வழக்கம். எந்த மொழியிலும் யாரும் எதனை வேண்டுமானாலும் எழுதலாம். அது மொழியின் சிறப்போ, மொழியின் குற்றமோ அல்ல. எழுதுவோரின் சிறப்பு அல்லது குற்றம் தான்.//

    இதை ஏற்று கொள்கிறேன். ஒரு மொழியின் யோக்யதை இன்னதென்று அதன் இலக்கியத்தை வைத்து தான் முடிவு செய்ய முடியும். அந்த இலக்கியத்தை கொண்டு தான் அந்த மக்களின் யோக்யதை இன்னதென்று அறியலாம். மனுதர்மம் போன்ற மனித குல விரோத இலக்கியத்தை உலகின் வேறு எந்த மொழிகளில் தேடினாலும் கிடைக்காது. உலகை விடுங்கள் சமற்கருத்தத்திற்கு இணையான பழைமையும், மரபும் கொண்ட தமிழ் மொழியில் இது போன்ற மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும், பெண்களை இழிவு படுத்தும் கருத்துக்களை எங்காவது காண முடியுமா. அது தான் பெருமைக்குரிய எங்களின் தமிழ் மரபு.

    சமற்கருத மொழிக்கு உள்ள சிறப்பெல்லாம். தமிழர்களான ஆதி சங்கரர், ராமானுஜர், கூரத்தாழ்வார், பதஞ்சலி போன்றோர்களால் தான். இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள போவதில்லை. கொள்வதும், கொள்ளாமல் போவதும் தங்கள் விருப்பமே. ரொம்ப பேசினால் இருக்கவே இருக்கிறது உங்களின் பழைய பஞ்சாங்க “பஞ்ச்” டயலாகான. “எங்களிடம் உலகின் மிக பழமையான ஞான பொக்கிஷமான நால் வேதங்கள் இருக்கிறதென்று” கூறி வேதத் தாழிக்குள் சென்று முகம் புதைத்து கொள்வீர்கள். வேறு என்ன செய்ய.

    தொடரும்………………

  78. திரு.கதிரவன்

    //தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரின் பக்த கோடியான தாயுமானவனைப் போன்றவரிடம் எப்படி நல்ல கருத்துக்களை எதிர்பார்க்க முடியும் ? இணையத்தில் இவரைப்போன்ற போலிகள் ஏராளம்.//

    சரிங்க அசல் அண்ணே… நான் எங்காவது பெரியாரை பற்றி போற்றி துதித்து கருத்து கூறி இருந்தால் கூறவும். திராவிட இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் எங்குமே நான் வியந்தோதியதே இல்லை. சந்தேகம் இருந்தால் உயர்திரு.கிருஷ்ண குமார் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் என் மறுமொழிகளை தொடர்ந்து வாசித்து அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுபவர் போற்றுதலுக்குரிய திரு. கிருஷ்ண குமார் அவர்கள் தான்..

    //சமற்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ் என்று உளறுகிறார்- இவருக்கு தமிழும் தெரியாது- சமற்கிருதமும் தெரியாது என்று நன்றாக தெரிகிறது. பாவம்.
    ” வடமொழியும், தென்தமிழும் ஆயினான் காண் -” என்கிறது தேவாரம்.//

    இதற்க்கு எதற்காக தேவாரத்தையும் திருவாசகத்தையும் வம்புக்கிழுக்க வேண்டும். சமற்கருத்தை எதிர்த்து நின்றதென்றால் , இந்தியாவில் உள்ள மற்றைய மொழிகளை போன்று பாணினியத்திற்கு ஆட்ப்படாமல் தனக்கென்று தனி நெடுங்கணக்கு, எழுத்து முறை, இலக்கண, இலக்கிய வளங்களை கொண்டிலங்கும் காரணத்தினார் தான் என்று பொருள். இடையே மணிப்ராவளம் என்கிற ஒரு தீய நடையை புகுத்தி தமிழின் தனித்தன்மையை, இனிமையை குலைக்க நடந்த முயற்சியை கால்டுவெல், ஜி.யு.பொப் தொடங்கி மறைமலை அடிகள், திரு.வி.க, பாரதிதாசன், டாக்டர்.மூ.வ போன்ற அறிஞர் பெருமக்களால் முறியடிக்க பட்டது.

    நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும், மாணிக்கவாசகரும் வடமொழியை போற்றி இருக்கிறார்கள் என்றால். வடமொழியை வலிந்து திணிக்கும் மணிப்ரவாளம் போன்ற புல்லுருவி தனங்கள் அப்போது நடைபெறவில்லை. வடமொழி வடமொழியாக இருக்க வேண்டிய இடத்தில இருந்தது. தங்களின் பாசுரங்களில் சில இடங்களில் அவர்கள் வடமொழி சொற்களை கையாண்டிருந்தாலும் அவை 3 இல் இருந்து 4 விழுக்காடு என்கிற அளவிலேயே தான் இருந்தன. தங்களின் ஆசான் தொல்க்காப்பியரின் இலக்கண முறைப்படி வடமொழி உச்சரிப்புகளை தூர எறிந்து விட்டு சொல்லை மட்டுமே பயன்படுத்தினார்கள். சைவக்குரவர்கள் நால்வரும் வடமொழியின் மீது ஒரு மதிப்பு வைத்திருந்தார்கள் அவ்வளவே. மற்றப்படி யாரும் சமஸ்கிருத்தை தலைமேற் கொண்டு கொண்டாடவில்லை.

    மற்றப்படி…

    //மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ” பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ” அந்த ஆரியத்தை – அதாவது மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட சிவனை வீழ்த்த வேண்டும் என்று கூறுகிறார்//

    தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்க இது போன்ற மலினமான உத்திகளை எல்லாம் கையாள வேண்டாம்..

  79. திரு பாண்டியன்!

    //we do have so many people to save tamil. better you save our tamil people as below story has explain you lot. everyday I am reading 10 news like this. better you explain quran to your own people and ask them to treat others human well and give respect humans. all cheat fraud people in your work country only and you easily save our tamil people.//

    நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் உள்ளனர். வெளி நாடு செல்பவர்கள் ஏஜண்டுகளை பார்த்து நம்பிக்கையானவரிடம் தங்களின் வேலைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏமாறுவதற்கு யார் பொறுப்பாக முடியும்.

    இதே சவுதியில் 20 வருடத்துக்கும் மேலாக மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து வரும் இந்து நண்பர்களை நான் அறிவேன். லட்ச ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அது போல் திறமையை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

    காரைக்காலைச் சேர்ந்த ஒரு இந்து தமிழ் பட்டதாரி பெண் பேசிய வேலையை விடுத்து வீட்டு வேலை செய்ய பணிக்கப்பட்டார். அந்த வீட்டிலிருந்து தப்பி விட்டார். அது போலீஸ் கேஸாகவும் மாறி சிக்கலானது. ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அந்த பெண்ணை மீட்டு ஊருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

    அனாதையாக இறந்து கிடந்த ஒரு இந்து தமிழரை அடையாளங்கண்டு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். சம்பள பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் பல தமிழர்களுக்கு கோர்ட் வரை சென்று நியாயம் கிடைக்க பாடுபட்டுள்ளோம். இது தொடர்கிறது. இதை எல்லாம் விளம்பரப்படுத்துவதில்லை. ஆதாரம் வேண்டுமென்றால் சுட்டிகளோடு தருகிறேன்.

  80. வெறும் எதிர்ப்பவர்களை மட்டம் தட்டாமல் இம்மாதிரியான கட்டுரைகளைப் பொதுவான கருத்துக்கு விளக்கமாக எழுதியிருக்கலாம். எதிர்ப்பவர்களின் முக்கியமாக இரண்டு கருத்தை ஆழமாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
    1. அப்பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும் எனச் சொல்லுவது மொழி திணிப்பாக பார்க்கப்படுகிறது. இன்று பள்ளியில் கட்டாயம் என்பவர்கள் நாளை மாநிலத்திலும் கட்டாயம் என்று சொல்ல வாய்ப்புள்ளது.
    2. சமஸ்கிருதமே தாய் மொழி, இதுவே செம்மொழி என்று பல்வேறு தளங்களில் கூறிக்கொண்டிரும் வேளையில் தமிழின் தொன்மை மறைக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.

    தமிழும் சமஸ்கிருதமும் சகோதர மொழி(யாருக்கும் யாரும் தாய்மொழி அல்ல) என்பதையும், இரண்டும் வெவ்வேறு நிலைகளில் செம்மொழி என்பதை உணராதவரை இப்பிரச்சனை தொடரும்.

  81. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    //அல்லது மனுஸ்ருமிதி இந்து மத சட்டம் கிடையாது என்றும் அதனை கோவில்களிலோ வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். அவ்வாறு நடந்து விட்டால் நான் ‘பிராமிண்’ என்றே அழைக்கிறேன்.//

    நான் உங்களுக்குக் கொடுத்துவரும் அளவுகடந்த மதிப்பை, மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஒரு சமூகத்தைத் தரம்குரைந்த சொற்களால் சுட்டாதீர்கள் என்றால், உபதேசம் செய்யக் கிளம்பி இருக்கிறீர்கள். துலுக்கன் என்ற சொல் உங்களை உயர்படுத்தும் என்றுவேறு சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். இது உங்களுக்கான சொல் அல்ல. முஸ்லீம்களைக் கேவலமாகச் சுட்ட உபயோக்கிக்கும் சொல். இதை தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் விரும்பமாட்டார்கள். நீங்கள் செய்வது விதண்டாவாதம்.

    முஸ்லிம்களை வடநாட்டில் “லான்டியா” என்று கேவலமாக அழைப்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று நான் எழுத வேண்டியதில்லை. முஸ்லிம் சகோதரர்களை நான் “லான்டியா” என்று குறிப்பிட்டு எழுதி, அது நீங்கள் செய்யும் ஒரு சடங்கால் விளைவதுதானே என்றும் எழுதி, நீங்கள் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். அவ்வாறு நடந்து விட்டால் நான் “லான்டியா” என்று சுட்டுவதை விட்டுவிடுகிறேன் என்று சொல்வதைப்போல இருக்கிறது உங்கள் வாதம்.

    இஸ்லாமியப் படை எடுப்பின்போது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், எண்ணற்ற மறையோர்கள் தனிப்படுத்தப்பட்டுக் கொல்லப் பட்டார்கள். மாட்டிறைச்சி உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, மதமாற்றமும் செய்யப்பட்டார்கள். இதற்கு ஆதாரங்களும் இஸ்லாமிய வரலாற்றாலர்களிடமிருந்து என்னால் சுட்ட முடியும்.

    நான் உங்களை மதித்து, நட்புக்கரம் நீட்டினால், நீங்கள் அதைத் தட்டிவிட்டுக் கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவிட்டால், நானும், உங்களுக்கு உறைக்கும் வகையில் எழுத நேரிடும். அப்பொழுது வருந்த வேண்டாம்.

    வணக்கம். அமைதி ஓங்குக.

  82. //பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன். — காமராஜர் //

    தமிழ்நாட்டின் கல்வியின் ஊற்றுகண்ணைத் திறந்த காமராஜர், சம்ஸ்கிருத மொழியை கற்பது அவசியம் என்று உணர்ந்த காமராஜர் தமிழக கல்வி திட்டத்தில் புகுத்த முயற்சிக்கவில்லை என்பதில் இருந்தே அவரது முன்னுரை ஒரு அரசியல் நடுநிலையான முன்னுரை என்பது தெரியவில்லையா?

  83. சமஸ்கிருதவாரம் தேவையா என்ற இந்த அருமையானக்கட்டுரையை வழங்கிய அன்புக்குரிய ஸ்ரீ அ நீ பாராட்டுக்குரியவர். சமஸ்கிருதத்தினை எதிர்த்து சிலர் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். சமஸ்கிருதத்தினை ஆதரித்தும் எதிர்ப்பாளர்களை மறுத்தும் அருமையான கருத்துக்களை மஹாசயர்கள் பலர் வழங்கியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தினை ஆதரிப்போர் யார் என்றால் தெளிவாக சொல்லிவிடலாம் ஹிந்துத்துவர்கள் என்ற பதிலை. எதிர்ப்போர் யார் அவர்தம் கருத்தியல் பின்புலம் என்ன என்பதை புரிந்துகொள்ள யோசித்தல் அவசியம். அபிராஹாமியர்களும் அபிராஹாமிய சிந்தனையின் அடிவருடிகளுமே சமஸ்கிருத எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். உலகினை ஒருசமயவயமாக்க ஒரு ஆதிக்கத்தின் கீழ் கொணர முயன்ற இன்னும் முயலும் அபிராஹாமியத்தின் ஒரு கிளையான மார்க்சியர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    அபிராஹமிய் இவாஞ்சலிஸ்டான கால்டுவெல்லின் புனைவை நம்பும் திராவிட இயக்கத்தாரும் இதிலே இணைந்திருக்கிறார்கள். எல்லோருடைய நோக்கம் ஒரு புள்ளியில் நிலைக்கிறது. அது கிரேக்கம், ரோமானியம், மாயன் பேகன் பண்பாடுகளை அபிராஹாமியம் கொன்றும் எரித்தும் அழித்ததுபோல் இன்றும் நடைபெறவேண்டும் என்பதே அந்த நோக்கம். சமஸ்கிருதம் இந்தியத்திரு நாட்டின் பல்லாயிரமாண்டுகள் தோன்றிய ஆன்மிகம், சமயம், தத்துவம்,அறிவியல், கலைகள் போன்ற பல்வேறு துறை அறிவை ஞானத்தினை தாங்கும் கருவூலமாக இலங்குகிறது. சமஸ்க்ருதம் இல்லாவிட்டால் பாரத நாட்டின் பண்பாடு அழியும்.ஆகவே சமஸ்கிருத வளர்ச்சிக்கு இயன்றன அனைத்தினையும் மானனீய ஸ்ரீ நமோ ஜியின்.அரசு செய்யவேண்டும்.வெற்றி எப்போதும் பாரத அன்னைக்கே.

  84. சிவபெருமானைத் தொழுதெழும், அவரை நெஞ்சில் நிறுத்தி அவனை ஒத்த தெய்வம் இப்பாரினில் எவரும் இல்லை, திருநீற்றுக்குச் சமமாக வேறு ஓர் அருமருந்து எதுவும் இல்லை என்று போற்றும், என் பெருமதிப்புக்கு உரிய தாயுமானவன் அவர்களுக்கு,

    நீங்களும் நானும் வணங்கும் தெய்வம் ஒன்றே! பிரகதாரண்ணிய உபநிடதத்தில் இருந்து மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது அது! மனுஸ்ருதியை கலி யுகத்தில் கையாளக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை விட்டுவிடுவோம்.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் ஒப்புக்கொண்ட பலதாரத் திருமணங்களைக்கூட நாம் இப்பொழுது ஒப்புக்கொள்வதில்லை. அப்பொழுது அவர்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத திருமண முறிவை நாம் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிறோம்.

    ஆகவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டிய எதையும் வரிக்குவரி எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தாங்கள் அறியாத ஒன்றா? நாம் உட்பொருளைத்தான் உள்வாங்கவேண்டும்.

    தாங்கள் தேவாரம், திருவாசகம் இவற்றைத் தமிழ் மறைகளாக, நாம் பின்பற்றும் வழிமுறைகளாக ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

    தாங்கள் சில நாள்கள் முன்பு தரிசித்து வந்த ஆலவாய் அழகனை ஏத்திக் காழிப் பிள்ளையாரான திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் இரண்டைத் தருகிறேன்:

    காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
    நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
    வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
    ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.

    “வேட்டு வேள்வி செய்யா” என்று பகர்ந்திருக்கிறார். அதாவது வேள்விகள் செய்யாத… என்று சமணர்களைச் சுட்டுகிறார்.

    ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
    பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
    மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
    ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.

    “ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாம் அப்பாகதத்தொடு இடித்துரைத்த சனங்கள்”. அதாவது வேத ஆகமங்களையும் , மந்திரங்களையும் , நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை குறைகூறிப் பேசிய” என்று சமணர்களைப் பற்றிக் கூறுகிறார் காழிப்பிள்ளையார்.

    அன்பே சிவமாய் நின்ற அரனுக்கு, வேள்வி செய்வதும், வேதங்களையும், ஆகமங்களையும், மந்திரங்களையும் ஓதுவது அந்தணர்கள். அப்படி அவர்கள் ஓதும், சிவபெருமான் தந்த வேதங்களும், ஆகமங்களும் இயற்றப்பட்ட மொழியான வடமொழியை இடித்துப் பேசியவர்கள் என்று சாடி, சைவைத்தை நிலைநிறுத்தவே நான் ஆலவாய்க்கு எழுந்து அருளியதாகவும், ஆலவாய் அழகன் துணை இருப்பதால் அமணர்களுக்கு அஞ்சேன் என்றும் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியிடம் பகருகிறார்.

    எனவே, திருமறையை நமக்கு ஈந்துவிட்டுச் சென்ற திருஞான சம்பந்தரே வடமொழியில் உள்ள வேதங்களையும், சைவ ஆகமகங்களையும் தமிழ்நாட்டில் சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.

    நான் முன்பு எழுதியதையே திரும்பச் சொல்கிறேன். இந்து சமயத்தை அறிய தமிழ், வடமொழி என்ற இரு கண்கள் தேவை. நீங்கள் வடமொழியைக் கற்காவிட்டாலும் போகிறது. தூற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    “நமச்சிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரம், யஜூர் வேதத்தில், உருத்திரத்தில் செப்பப்படுகிறது. ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஓதிவரும் சிவபக்தர்களான நாம், ஐந்தெழுத்து ஓதப்படும், எழுதாக் கிளவியான வேதங்களையும், வேதமொழியையும் பழிப்பது, நாம் வணங்கும் இறைவனான் சிவபெருமானையே பழிப்பதற்கு நிகராகும் என்று சொல்லி நீங்குகிறேன்.
    திருச்சிற்றம்பலம்!
    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஓம் நமச்சிவாய!!!

  85. பால சுந்தரம்

    அச்சு பிச்சு பைத்தியகாரத்தனம் அப்பட்டமாக தெரிகிறது உங்கள் மறுமொழியில். என்ன எழுதுகிறீர்கள் எதற்கு பதில் தருகிறீர்கள் என்றே விளங்கவொன்னா விஷயமாக இருக்கிறது. நீங்கள் பிராந்தியில் உளறலாம். அடியேனால் முடியாது. அதற்காக அடியேனாலும் அப்படி செய்ய முடியாது.

    எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறீர்கள். சமஸ்க்ருத த்வேஷம், பிராமன த்வேஷம், திடீர் ஆழ்வார் பற்று, தமிழ் பற்று. சாரமே இல்லாத வாத போக்கு. பக்கவாதம் வந்தாற்போல இருக்கு

    முதலில் திருமழிசை ஆழ்வார். இந்த விசயங்களை எழுதி வைத்து போனதே பிராமணர்கள் தான் பாருங்கோ. குரு பரம்பரா பிரபாவம் என்றும் பிரபன்னாம்ருதம் அந்நூலுக்கு சமஸ்க்ருதத்தில் பெயர் வைத்துள்ளனர். திருமழிசை பிரானார் தமிழில பிறகு வேதத்தை எடுத்து கொடுத்தார். அது சமஸ்க்ருதத்தில் தானே.

    உச்சரிப்புக்கு சக்தி உண்டு என்று கூட அறியாத பேதையா நீங்கள். சமஸ்க்ருத உச்சாடனத்திற்கு சக்தி உண்டு என்று உதக ஷாந்தி மந்திர உச்சாடனத்தை வைத்து ஒரு அறிவியல் ஆய்வு நடத்தி முடித்துள்ளார்கள். சமஸ்க்ருத அக்ஷரங்களின் உச்சாடண விவஸ்தை சர்வ பிரசித்தி. கொஞ்சமேனும் படித்து தெரிந்து கொள்ளாதவரை உங்களுடன் இது பற்றி பேசுவது வ்யர்த்தம்.

    சமஸ்க்ருதம் என்றாலே வேடம் மட்டும் தான் என்று உங்களுக்கு ஒரு பிராந்தி. சமஸ்க்ருதம் செகூலர் மொழி அதனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் எங்கே சொன்னேன். செக்குலர் என்பது ஒரு கெட்ட வார்த்தை. முதலில் வேதம் இருப்பது சந்தசீ என்னும் பாஷையில் அது சமஸ்ச்க்ருதம் ஆகாது.

    தமிழிலேயே ஏராளமான விஷயங்கள் இருக்கு நான் ஏன் சமஸ்க்ருதம் படிக்க வேண்டும் என்ற வாதம் அல்ப சார வாதம். இட்லி இருக்கையில் இடியாப்பம் எதற்கு என்பது போல இருக்கு நீங்கள் பேசுவது. அது சரி இதை தாண்டி உங்களால் எதைத் தான் பேச முடியும்?

    ஒரு அறுபது ஆண்டு முன்வரை அனைத்து தமிழ் பண்டிதர்களும் சமஸ்க்ருத பண்டிதர்களாகவும் இருந்துள்ளார்கள். தமிழை கற்பவன் சமஸ்க்ருதத்தை நிச்சயம் கற்க வேண்டும் என்று சொல்வது நம்மாளுய்யா சாலமன் பாப்பையா.

    நான் ஒரு கிறிஸ்தவரை சந்தித்தேன் அவர் பெயர் அலெக்ஸ். அவரது நிஷ்டைகளை தெரிந்து கொண்டு ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவர் தினமும் அக்னி ஹோத்ரம் செய்கிறார். முக்கியமாக அவர் சமஸ்க்ருத பாரதி என்னும் சமஸ்ருத குழுமத்தின் president ஆக இருக்கிறார். அவர் சொல்கிறார் எல்லோரும் சமஸ்க்ருதம் படியுங்கோ என்று 🙂 அவரை பற்றி நீங்கள் கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பாருங்கள், சடக்கென்று பதில் தருவார்.

    ஆன்மிகம் என்பது கிறிஸ்தவத்தில், இஸ்லாமில் இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆன்மா சம்பந்தப்பட்டது ஆன்மிகம். நீங்களோ ஆன்மாவை ஒத்துக்கொள்ளாத கோஷ்டி.

    செமிட்டிக் மதங்கில் இரண்டே பக்ஷம் தான். ஒன்று நம்பு இல்லாங்காட்டி எம்பு. இஸ்லாம் என்றால் வஹாபி வழி தான் சால சிறந்தது. இறைவனை அடையும் மார்க்கம் ஒன்றே. இது கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும். எங்களது தர்மம் அப்படி இல்லை பாருங்கோ. எங்களுக்கு கர்ம, பக்தி, ஞான, பிரபத்தி, அபியாச, கர்ம சன்யாச மார்கங்கள் என்று பல மார்கங்கள் உண்டு.

    காயத்ரி மந்திரத்தின் (ஜெப) பலனை வேண்டுபவன் அதை சமஸ்க்ருத்தில் தான் உச்சரிக்க வேண்டும். அதன் அர்த்த விசேஷங்களை எம்மொழியில் வேண்டுமானாலும் த்யாநிக்கலாம். ஜபம் வேறு, தியானம் வேறு. ஜபம் செய்ய நினைப்பவன் ஜபத்தை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். மாமுனிகள் என்ற வைணவ ஆசாரியர் எப்போதும் த்வய மந்திர ஜபம் செய்து கொண்டே (சமஸ்க்ருதத்தில்) இருப்பார். அதனுடன் அர்த்த விசேஷங்களை தமிழிலே த்யானித்து கொண்டிருப்பார்.

    பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுப்போர் பாசுரம் படிக்கலாம், திருமறை படிக்கலாம் பாகவதம் படிக்கலாம், அரபு மொழியில் கூட ஒரு பாடல் எழுதி இன்புறலாம். அங்கே அனைத்தும் செல்லும், கர்ம மார்கத்தை தேர்ந்தெடுப்பவன் யாகதிகளை செய்ய வேண்டு அதற்க்கு சமஸ்க்ருதம் வேண்டும். இங்குள்ளோர் பலர் எல்லா மார்க்கங்களிருந்தும் சிலவற்றை எடுத்து அனுஷ்டிப்பார். அக்னி ஹோத்ரம் செய்வர், அப்புறம் திருவாராதனம் செய்வர், அங்கே மந்த்ரம் இருக்கும், பாசுரம் இருக்கும், ஜபம் இருக்கும் பக்தி இருக்கும்.

    நான் பொறாமை கொண்ட கடவுள், நான் ஒரு பயங்கரவாதி என்று கடவுள் எங்களுக்கு ஒரு நாளும் கட்டளை இடவில்லை. எங்களுக்கு பன்மை முக்கியம், அதைப் போற்றுவோம். தமிழ் படிப்போம், சமஸ்க்ருதம் படிப்போம், தெலுங்கு மொழியில், மராத்தியில் உள்ள சாராம்சங்களை அறிய அவற்றையும் படிப்போம்.

    விவிலியத்தை தமிழிலே சொல்கிறார்களாம். என்ன தமிழ் பற்று, என்ன தமிழ் பற்று? ஏசுவுக்கு கேக்கவேணும்னா நீங்கள் படிக்கீறீர்கள். அதான் ஜெஹோவா தெளிவா சொல்லிவிட்டு போந்தாரே. நான் இஸ்ரவேல் நாட்டு மக்களை உய்விக்கவே வந்தேன் என்று. அவர் தமிழெல்லாம் கேக்க மாட்டார் சார், ஹீப்ரு தான் அவருக்கு புரியும். நீங்கள் தமிழ் படுத்துவது, தெலுகு படுத்து வது எல்லாம் சுவிசேஷ கோட்டம் நடத்தி ஆட்டு மந்தைகளை பிடித்தது கணக்கு காட்டி வயிறு ரொப்ப தான்.

    எங்களுக்கு மொழிப் பற்றை பற்றி பாடம் நீங்கள் நடத்த வேண்டாம். தமிழை இறைவன் தேட வைத்து, சமக்ருதம் இறைவனை தேட நிற்கிறதை எல்லா புறப்பாடுகளின் போதும் காண வைத்துள்ளோம் நாங்கள். எங்களுக்கு இரண்டும் இரு கண்கள் போன்றன. இப்படி தமிழை முன்வைத்த ஆசார்யர்கள், அப்பொழுதும் சமஸ்க்ருதத்தை விடவில்லை. அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். உம்மை போல அற்ப புத்தி அவர்களுக்கு இல்லை பாரும். இதே ஆசாரியர்கள் தான் சாதித் தீங்கு ஒழிய அரும்பாடு பட்டவர்கள்.

    //
    வைதீக மதம் சமஸ்க்ருதத்தால் வாழ்கிறது அதன் மூச்சை நிறுத்தப் பார்க்கிறார்கள் என்ற அச்சம்.
    //

    என்ன ஒரு பிதற்றல். அரவிந்தனின் எந்த இடத்தில் இதை பிரபிபலிக்கிறார். அரவிந்தனின் ஏதாவது ஒரு எழுத்தில் இதை காட்டுங்களேன்.

    சரி நீங்கள் தலைகீழாக நிராலும் அதன் மூச்சை நிறுத்த முடியாது, ஆயிரத்து முன்னூறு ஆண்டு கால முயற்சியில் இன்னமும் இதை சாதிக்க முடியல. இப்போ என்னடான்னா, ஆஸ்திரேலிய காரன் அக்னி ஹோத்ரம் பண்றான் (ஒரு வலை தளம் கூட இருக்கு). லண்டன் பள்ளியில் தைத்ரிய உபநிஷத் வாசிக்கிறார்கள். (பாருங்கள் இவர்கள் கூட படிகிறார்கள் என்று நான் சொல்ல வரவில்லை மாறாக சிலரது மண்டைக்கு புரிய வேண்டுமென)

    வைதீக கார்யம் அது பாட்டுக்கு எல்லா இடத்துலேயும் நடந்து கிட்டே தான் இருக்கு. நீங்கள் இயேசு கடைசியில் புலம்பவுது போல புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு தான் மிச்சம்.

    சமஸ்க்ருதம் ஏன் படிக்க வேண்டும், யார் யார் அதை ஆதரித்துள்ளனர் என்று சுட்டிக் காட்டவே இக்கட்டுரை. உங்களது எழுத்தின் மூலமே நீங்கள் கட்டுரை சொல்ல வந்த விஷயத்தை ஒத்துக் கொண்டுளீர்கள். மறுபடியும் சமஸ்க்ருதத்தில் இறைவாதம் 5% தான். இறை மறுப்பு வாதம் மற்ற எல்லா மொழிகளையும் விட சமக்ஸ்ருத்ததில் தான் ஸ்பஷ்டமாக தெளிவாக உள்ளது. சாங்க்யம் என்ற matter is the cause of this world என்ற வாதம் சமக்ஸ்ருத்தில் தான் உள்ளது (இது இறைவனை மறுக்கிறது). சாருவாகம் என்ற economical view of the world என்பதும் சமஸ்க்ருதத்தில் தான் இருக்கு.

    நீங்கள் செய்ய நினைப்பது சமஸ்க்ருதத்தை ஒரு சிறு பொட்டிக்குள் அடைத்து அது பலனற்றது ஒரு சாரரைச் சேர்ந்தது என்று எப்படியாது நிறுவ நினைக்கும் துஷ் பிரசாரம்.

    அரவிந்தன் செய்ய நினைப்பது ஏற்கனவே செய்யப்பட துஷ்ப்ரசார தூளியை துணி கொண்டு துடைப்பது.

    என்ன இதுக்கு நீங்கள் கர்த்தர் என்று சமஸ்க்ருத பதம், செய்வோனே என்று அலறலாமே. எதற்கு தேவனே என்று புலம்பல் இறைவனே என்று சத்தம் போடலாமே. அதென்ன சுவிசேஷ கூட்டம். அதென்ன அமாவாசை ஜபம். அதென்ன கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் அதென்னங்க ரெவெரெண்டு என்ற பட்டம், அதை தமிழ் படுத்தலாமே, அதென்ன பாதர், ப்ரோ இத்யாதி. இயேசுவின் ரத்தம் ஜெயம் இதெல்லாம் தமிழான்னா.

    பாரதத்தில் சமநோக்கு பெருக வேண்டுமென்றால் சமஸ்க்ருதம் ஒரு சாராருடையது என்று உம்மை சார்ந்தவர் காலாகாலமாக பரப்பின துஷ்ப்ரயோகம் ஒழிய வேணும். அனைத்து மக்களும் சமக்ஸ்ருதம் பயில வேணும். இதை பயில் வதன் மூலம் சாத்தியப்படும்.

    “The very sound of Sanskrit words, gives a prestige, a power and a strength to the race. – Swami Vivekananda”

  86. ஜனாப் சுவனப்பிரியன்,

    நான் ஒரு இந்து. முஸ்லிம் அல்ல. எனவே, “குரான், ஷாரியா, ஹடித், முஸ்லிம் மத சட்டம் கிடையாது என்றும் அதனை மசூதிகளிலோ, வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள்!” என்று நான் கூற, அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்துவான எனக்கு எந்தவிதமான உரிமையும் இல்லையோ, அதேபோல தாங்கள் ஒரு முஸ்லிம். இந்து சமயத்தவர் அல்ல.

    எனவே //மனுஸ்ருமிதி இந்து மத சட்டம் கிடையாது என்றும் அதனை கோவில்களிலோ வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். // என்று சொல்ல, அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், இஸ்லாமியரான உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை.

    எல்லை மீறவேண்டாம். குதர்க்கமான, திசைதிருப்பும் பதிலையும் தவிர்க்கவும்.

    வணக்கம். அமைதி ஓங்குக.

  87. சு பி,

    செக்கு மாட்டை போல மனு ஸ்ம்ருதியை சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். இதை பற்றி தமிழ் ஹிந்துவில் மாங்கு மாங்கன எழுதி விட்டார்கள். இதில் கொஞ்சம் கூட சமாளிப்பை நீங்கள் பார்க்க முடியாது. மனு ஸ்ம்ருதி எரியக் கடவது என்பது தான் சாரம். நிற்க இதை முன்வைத்தாகி விட்டது.

    பாரத பரம்பரையில் மாறாதது என்பது சுருதி, மாறுவதென்பது ஸ்மிருதி. அதனால் தான் மனு ஸ்மிருதி சாண்டில்ய ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, யாஞவல்க ஸ்மிருதி நாரத ஸ்மிருதி என்று வளர்ந்து கொண்டே போகிறது. எப்படி வாழலாம் என்று கோடிட்டு காட்டுவதால் காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுகின்றன. நாம் இன்றுள்ள சூழலில் இந்த ஸ்ம்ருதிகளில் உள்ள அம்சங்கள் எல்லாமே ஏற்கக் கூடிவயாக இருக்காது. அதை விட்டுவிட வேண்டும். இது தான் பாரதீய தர்மம். இதை இன்றைய ஹிந்து விட்டு விட்டான். நீங்கள் மனு தர்மத்தில் சுட்டிக் காட்டும் அனர்த்தங்கள் (வர்ணாஸ்ரம ஜாதீய விஷயங்கள்) மனு ஸ்ம்ருதியின் ஒரு சிறிய பாகம். அதை வெட்டி எறிந்துவிட்டு மிச்சத்தை அனுஷ்டித்தால் நன்மையே கிடைக்கும்.

    உங்களால் குர்ஆனில் உள்ள அபத்தங்களை விட முடியுமா? அதில் உள்ள அனர்த்தங்களை, காம விசாரங்களை, வெறியாட்டங்களை கைவிட முடியுமா? உங்களால் இவைகளை வீசி எற்ய முடியுமா? வெட்டி எறிந்தால் குர்ஆனில் மீதி இருப்பது ஐந்து பக்கம் தேறுமா என்பதே சந்தேகம். உங்களது அனர்த்தங்களை ஆதலால் அடக்கிக் கொள்ளலாம்.

    சகோ. சுவனப்ரியனில் பிரியன் என்பது தமிழல்லவே. சுவனம் கூட தமிழ் இல்லை சார். சுவனத்தை சொர்க்கம் என்று நீங்கள் கூற காரணம் என்ன தெரியுமா சுவன என்றால் சமஸ்க்ருதத்தில் நிலா என்று அர்த்தம். வளர் பிறை அதன் மேல் நட்சத்திரம், எல்லாம் உங்களுக்கு இசைந்தது தானே. சந்திரலோகம் என்பது ஒரு விட சொர்க்கம். (சமஸ்கிருதத்தில் சந்திர லோகம் என்றால் நிலா என்ற உபக்ரகம் இல்லை).

  88. suvanappiriyan
    ஆனால் நான் சொல்ல வந்ததே வேறு. ஹஜ்ஜுக்கு போயி வந்த உங்க தாத்தா காலில் மறைந்த பெரியவர் டோண்டு காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணும்போது, என்னப்பா மனிதன் காலில் மனிதன் விழுவதா என்று உங்கள் தாத்தா சொன்னதாக பதிவு பண்ணியதே நீங்கள்தான் . அந்த மனிதாபிமானத்தை நீங்கள் என் உங்கள் அரபு முஸ்லிம்களுக்கு சொல்லித்தர கூடாது? உங்கள் குரானை நீங்கள் ஏன் அங்கு விளக்கக் கூடாது…….. அப்படி என்றால் முஸ்லிம் வேறு குரான் வேறா? மனிதன் பண்ணக்கூடியதா இது எல்லாம்:-

    “. ஏமாற்றி விட்டீர்கள் என, கோபமடைந்தபோது, அவர்களின் எச்சரிக்கை என்னை அடக்கியது.காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஆடு மேய்க்க வேண்டும். காலையில், 5 லிட்டர் தண்ணீரும், ரொட்டியும் கொடுப்பார்கள். இரவில், காடுகளில் கிடைக்கும், சுள்ளிகளைப் பொறுக்கி, சமையல் செய்து கொள்வேன். இதற்கு, மாதம், 5,000 ரூபாய் சம்பளம்.ஆடுகள் அடைத்திருக்கும் பட்டிக்கு அருகே, தகர செட் அமைத்திருப்பார்கள். அதில், துாங்கிக் கொள்வேன். என்னைப் போல், அப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட, தமிழர்கள் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கும், தோட்ட வேலைக்கும் அமர்த்தப்பட்டு இருந்தனர்””

  89. ராஜா
    //
    அப்பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும் எனச் சொல்லுவது மொழி திணிப்பாக பார்க்கப்படுகிறது. இன்று பள்ளியில் கட்டாயம் என்பவர்கள் நாளை மாநிலத்திலும் கட்டாயம் என்று சொல்ல வாய்ப்புள்ளது.
    2. சமஸ்கிருதமே தாய் மொழி, இதுவே செம்மொழி என்று பல்வேறு தளங்களில் கூறிக்கொண்டிரும் வேளையில் தமிழின் தொன்மை மறைக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.
    //
    எங்கே சார் திணிப்பு. நடப்பு விஷயம் வேறாக உள்ளது, இந்து அனைத்து பள்ளிகளிலும் நடத்த சொல்லவில்லை. CBSE பள்ளிகளில் மட்டுமே, அங்கு சமக்ஸ்ருதம் பயிலும் மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதனால் அங்கு சமஸ்க்ருத வாரம் கொண்டாட சொல்வதில் என்ன தவறு. மொழியை பயிலும் மாணவர்கள் அதை கொண்டாடினால் என்ன தவறு. வேண்டுமானால் தமிழ் மாதம் கொண்டாடட்டும் அதை வேண்டாம் என யார் சொல்லப் போகிறார்கள். சமஸ்ருத வாரம் கொண்டாடுங்கள் என்று இந்திய அரசு தான் சுற்றறிக்கை அனுப்பும், சைனாவில் இருந்தா அனுப்புவார்கள் இல்லை ஒரிசாவிளிருந்தா. பாரத கலாசாரத்தை பற்றி ஆழ்ந்த புரிதல் கொள்ள சமக்ஸ்ருத்த மொழி அறிவு ஓரளவாவது தேவை படுகிறது என்பது உண்மையே.

    பண்டைய பாரத்தில் பெண்களின் நிலையை பற்றி ஒருவர் அருமையான புத்தகத்தை வெளியிட்டுள்ளார், அவர் இதை செய்ய பல சமஸ்க்ருத நூல்களை படிக்க வேண்டி இருந்திருக்கிறது.

    உங்களுக்கு india’s contribution to analytical thinking என்பதை பற்றி அறிய வேண்டுமானால் ஆயிரக் கணக்கான நியாய வைசேசிக நூல்களை புர்ரட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

    text engineering என்று இன்று பிரத்திமாக மேற்கில் பலர் மண்டையை பியித்து கொள்கிறார்களே அதை அற்புதமாக ஸ்போட வாதம் என்பது விளக்குகிறது. இதற்க்கு சமஸ்க்ருத ஞானம் அவசியம்.

    இதையெல்லாம் மொழி பெயர்த்து நீங்கள் படித்தால் மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல இருக்கும் , கொஞ்சமேனும் சமஸ்க்ருத அறிவுடன் படித்தால் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

    தமிழ் நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. மத்திய அரசு பாரசீக மொழியா படிக்க சொல்கிறது, பாரத கலாசாரத்தின் ஆணி வேறான சமக்ஸ்ருத்தை தானே.

    இந்த விஷயத்தை பற்றி ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஏன் கூச்சல்கள் இல்லை என்று சற்று யோசித்தீர்களா. தமிழன் மட்டும் தான் விசேசமாக மொழி பற்று உள்ளவனா. தெலுங்கனுக்கு அது கிடையாதா.
    இந்த திணிப்பு மனப்பான்மை கழக விஷ செடியின் நிழலில் நாம் குளிர் காய்வதாலே தான் எழுகிறது.

    கேரளாவில் ஒன்றாம் வகுப்பு தொடங்க சம்ஸ்க்ருத பாட திட்டம் வேண்டும் என்று வலிந்து இரண்டு வருடம் முன்பு ஒரு சட்டம் கொண்டுவந்தள்ளது அங்குள்ள கிறிஸ்தவ அரசு. மலையாளிகளுக்கு மலையாள மொழிப்பற்று இல்லையா.

    ரஷியாவிற்கு வயிறு ரோப்புவதர்காக படிக்க செல்லும் நம்ம தமிழ்செல்வன் ரஷ்ஷிய மொழியை ஆர்வத்துடன் கற்பதில்லையா. கேஜியிலிருந்து சாகும் வரை ஆங்கிலம் கற்பிபப்தற்காக இந்திய அரசு செய்யும் செலவு என்ன என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு காபி டே கடைக்கு சென்று கடைக்கு செண்டு தமிழில் காபி கொடுங்கள் என்று கேட்டால் அவன் அமெரிக்க ஆங்கிலத்திலே பதில் தருகிறான். காபி கடை வெச்சவனுக்கு எதுக்கு ஆங்கில பயிற்சி. எங்கே பிரான்சு நாட்டுக்கு போய் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் பதிலே வராது.

    ஆங்கிலத்திற்கு வரிந்து கட்டி செலவிடும் நாம். நமது கலாசார அறிவிற்காக நமது மேன்மைக்காக கொஞ்சம் சமஸ்க்ருத்திர்காக செலவிடுவது தவறா.
    பள்ளி மாணவர்கள் சமஸ்க்ருதம் விரும்புகிறார்கள் சார். சோனியா தலைமையிலான கடந்த கிறிஸ்தவ அரசு சமஸ்க்ருதத்தை கேந்திரிய விடாலயத்திளிருந்து தூக்க அதை ஒரு option course ஆகா மாற்றியது. அதாவது மாணவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது சமஸ்க்ருதம் படிக்கலாமாம். இதில் வெக்கக் கேடு என்ன வென்றால், இன்றைய ஜெர்மன் மொழியை மாக்ஸ் முல்லர் என்றவன் சமக்ஸ்ருத்த மொழியின் ஆதாரத்தில் மாற்றி அமைத்தான். உலகிலேயே சமக்ஸ்ருதம் பயில அதில் ஆராய்ச்சி செய்ய அதிக பணம் செலவிடுவது ஜெர்மானியர்கள் தான்.

    நாம் பாருங்கள் சமஸ்க்ருதஹ்தின் வேணுமா வேண்டாமா என்று வெட்டி விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கொழிந்த மொழியாக இருந்த ஹீப்ரு மொழியை ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் பென் எஹுதா என்பவர் மீட்டெடுத்தார். இந்த மொழி பற்றால் இஸ்ரேல் எப்படி ஒன்றிணைந்தது அரேபியர்களையும் ஆங்கிலேயர்களையும் அதன் பின் எப்படி விரட்டி அடித்தார்கள் என்ற கடையை படித்தால் மட்டுமே புரியும்.
    இந்தியாவை போலவே இஸ்ரேலிய மக்கள் அடிமைகளாகவே தங்களை எண்ணினார். அவர்கள் தங்கள் பண்டைய கலாசாரத்தை எப்பொழுது மீட்டேடுதார்களோ அப்பொழுது இது மாறியது, இன்றைய இஸ்ரேலை பற்றி சொல்லவே வேண்டாம். தயவு செய்து கூகுல் செய்து இவரது மகன் இவரை பற்றி எழுதின புத்தகத்தை படித்து பாருங்கள். நிச்சயம் இந்த மகானின் தாகத்தை நினைத்து அழுது விடுவீர்கள். ஒரு மொழியை வர்த்தக பார்வையுடன் பார்க்கும் ஒவ்வொருவனும் இதை படிக்க வேண்டும் (இங்கு பின்னூட்டமிட்ட அந்த கோயம்புத்தூர் காரர் உட்பட)

    இப்போதைய பால சுந்தரம். ஹீப்ரு செக்குலர் மொழியா அல்லது விவில்ய மொழியா. என்ன இதுக்கு இட்டிஷ் மொழியை விட்டு விட்டு அதை மீட்டெடுத்தனர். அங்கேயும் அதே கதை தான் ஹீப்ரு ஒரு வர்கீய மொழி அதை சிலர் தான் சொல்ல வேண்டும் என்று இட்டுக் கட்டி கதை வளர்த்தனர். அவை அனைத்தும் எலிசர் என்ற மகாத்மாவால் கொன்றோழிக்கப்பட்டது.

  90. நமது பார்லிமெண்டில் போடப்பட்ட எத்தனையோ சட்டங்கள் பலமுறை திருத்தப்பட்டு விட்டன. நமது இந்திய அரசியல் அமைப்பு 98 தடவை திருத்தப்பட்டு விட்டது. இதுபோலத்தான் காலத்துக்கு ஏற்ப மனு, சாண்டில்ய, பராசர, யாக்ஞாவல்க்ய ,நாரத, என்று பலரும் தங்கள் தங்கள் காலத்தில் எழுதினர். இன்றும் நமது காலத்தில் கூட , சடங்குகள், சம்பிரதாயங்கள் ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறிது சிறிது வித்தியாசத்துடன் தான் செய்யப்படுகின்றன. ஏனெனில் இதில் வட்டார வழக்கு சிறிது மாறுபடும்.

    மேலும் சில விஷயங்களை பார்ப்போம், இந்திய அரசியல் அமைப்பில் , பார்லிமெண்டு இயற்றிய பல சட்டங்களுக்கு , சில மாநில அரசுகள் அந்த மாநிலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் சில திருத்தங்களை செய்துள்ளன. அந்த திருத்தங்கள் இந்தியா முழுவதற்கு பொருந்தாது. சம்பந்தப்பட்ட மாநில எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். இது போன்றவை தான் இந்த ஸ்மிருதிகள்.

    ஒரே புத்தகம், ஒரே சட்டம் என்பது உலகில் எங்குமே நடைமுறைக்கு வராது. ஏனெனில் ஒரு சட்டம் என்று எதனை எடுத்துப் பார்த்தாலும் ,அந்த சட்டத்திலேயே சில விதிவிலக்குகளை கொடுத்திருப்பார்கள். ஏனெனில் உலகில் விதிவிலக்குகள் ஏராளம் உள்ளன. விதி விலக்கு கொடுக்கப்படாத சட்டங்கள் நடைமுறைப் படுத்த முடியாமல், குப்பை தொட்டிக்கு தான் போய்ச்சேரும்.

    உலகம் முழுவதும் ஒரே வட்டாரமாக மாறுவது என்பது ஒரு நடைமுறை சாத்திய மில்லாத விஷயம். உலகம் ஒரே குடையின் கீழ் ஆளப்படும் நாள் என்றுமே வராது.

    தகுந்த விளக்கம் மற்றும் விரிவான விளக்கம் அளித்த திரு sarang -அவர்களுக்கு நமது நன்றிகள்.

  91. சூ பீ

    அண்டப்புளுகரே

    // இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
    //

    ராஜச குனமணா ராட்சச குணமா. பைத்தியகாரதனமா இல்லை. சாதிவக குணமென்றால் பிரம்ம த்யானத்தில் அதிகம் ஈடுபடுவோர்.
    ராஜச குணமென்றால் காரியத்தில் அதிகம் ஈடுபடுவோர். அவர்களால் ஒரு இடத்தில் சும்மா உட்கார முடியாது.
    தாமச குணம் மூர்க்க குணமில்லை. மந்தமான அதாவது மெதுவாக வேலைசெய்யும் புத்தியை உள்ள திறன் படைத்தவர்கள்.

    இந்த முக்குணங்கள் பிரகிருதி பூராவும் பரவி இருக்கிறது, யாவருக்கு யது அதிகமோ அதன்படி அவரது எண்ணமும் செயல்பாடும் இருக்கும். உதாரணமாக தாமசீக ராஜஸீக குண மிகுதியால், புரட்டு பேசுவது, மற்ற மதத்தை பொய்யால் தூஷிப்பது போன்ற கார்யம் சித்தமாகிறது.

    ராமர் ஷர்த்ரியன். அப்போ ஹிந்துக்கள் அவரை ராட்சதன் என்றார்களா. கிருஷ்ணன் OBC அப்போ மந்த புத்தி.

    ராம க்ரிஷ்ணாதிகளை விடுவோம். ஜனக ராஜா என்றொரு கர்ம ஞான யோசி இருந்தார். மற்றும் எவ்வளோவோ க்ஷத்ரியர்கள் சாத்விக குண மிகுதியுடன் வாழ்ந்தனர்.
    ஹரிச்சந்திரன் கதை படித்ததில்லையா. உண்மையை காக்க சக்கரவர்த்தி பட்டம் வரை இழந்து மயான பூமி கார்யம் வரை செய்யத் துணித சாத்வீக மா மேதை அவன்.

    சாத்வீகர்கள் என்றால் ஜபம் மட்டும் செய்வார்கள். சண்டை போட மாட்டார்கள் என்றில்லை. ராஜீக குணம் கொண்டவன் என்றால் ஜபம் பண்ண மாட்டான் என்றில்லை.

    குணத்திற்கும் வர்ணாஸ்ரம பேதத்திற்கும் எங்கே சம்பந்தம் இருக்கிறது. பக்கி பீடிய சொன்னால் அது உண்மையா.

    இதெல்லாம் பெரியார் புண்ணியம், அக்னிஹோத்ரம் நாயனார் புண்ணிய துஷ்ப்ரயோகங்கள். இதை வெள்ளை காரன் கூட நம்பரடில்லை. சாத்வீக குணம் தேடி இந்தியா வந்து யோகா பயின்று செல்கிறான். யோகா கலையின் நோக்கே ஒருவனை முழு தாமசீகத்திளிருந்து ராஜசீகமாய் மாற்றி பின் சத்வம் நோக்கி எடுத்து செல்வது தான். அதனால் தான் அதிக யோகாசனம் செய்வதால் ஷக்தி உண்டாகிறது, சக்தியை உடையவன் அதிக காரியத்தில் ஈடுபடுகிறான் அவை நல்ல காரியங்களாக இருந்தால் சத்வம் மிகுகிறது. கேட்ட காரியமாக இருந்தால் ராஜஸீக தாமசீகங்கள் மிகுகிறது.

    இது இருக்க. இதை ஏன் நீங்கள் இப்படி பார்க்கக் கூடாது. அனைவரும் தாமச குணத்தில் இருந்து மீண்டு சத்வ குணத்தை அடைய வேண்டும். அனைவரும் பிராமணராக வேண்டும் அதாவது பிரம்ம ஞானம் அடைய வேண்டும் என்பதே ஹிந்து மதத்தின் லட்சியம். அசதோ மா சத் கமய என்பது தான் எங்களது சாரம்.
    பிரம்ம ஞானம் என்ற உயர்ந்த லட்சியம் உடையவர்கள் சாத்விகர்கள். அவர்கள் பிரம்மத்தை வழிபடுகிறார்கள்.
    எப்போதும் அடுத்தவனை துன்புறுத்தி ஆக்கிரமித்து அடக்கி போர் புரிந்து, கற்பழிக்க துடிப்பவர்கள் நூறு சதவீதம் ராஜச குணம் கொண்டவர்கள். வாழை பழ சோம்பேறிகள் தாமசீக குணம் கொண்டவர்கள்.

    ஒரு முஸ்லிமு அடுத்தவனை பிறவி அடிப்படையில் பிரிப்பதில்லையா. என்ன அபாண்ட பொய். இஸ்லாமே உயர்ந்த மத அதில் பிறந்த முசுளிமே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன் மற்றவன் ஒரு கேவலமான காபிர் கற்பழித்து கொடூரமான முறையில் கொல்லத்தக்கவன் என்பது தான் குரானின் சாரம்.

  92. இப்போதைய பாலா

    //
    சாரங்கன்

    நீங்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து சமஸ்கிருதத்தை “சமஸ்கிருதம்” என்றழைத்த வரியொன்றைக்காட்டுங்கள் போது
    //

    ஏன் எதற்காக என்று சொல்லுமே

  93. சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகியவற்றை வடமொழி, வடசொல் என்றே பழந்தமிழ் நூல்கள் (பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கம்பராமாயணம் உள்பட) குறிப்பிடுகின்றன. இதற்கு ஆலமரத்தின் கீழ் கற்கப்பட்ட மொழி என்று திரித்து விளக்கம் கூறுவது சரியான மோசடி. சாலமன் பாப்பையாவை துணைக்கு அழைப்பது மிக மோசம். அந்தக்காலத்தில் வடஇந்தியாவில் வடமொழி (அல்லது வடமொழிகள்) கோலோச்சின. தென்னிந்தியாவில் ‘தென்மொழி’ எனப்படும் தமிழ் கோலோச்சியது. இது தான் உண்மை. ஆக சமஸ்கிருதம் வடஇந்தியாவின் மொழி தான். காளிதாசர் எழுதிய சாகுந்தலம் நூலில் அரசனும் மீனவப்பெண்ணும் உரையாடும் போது அரசன் சமஸ்கிருதத்தையும் மீனவப்பெண் பிராகிருதத்தையும் பயன்படுத்துவார்கள். சமஸ்கிருதம் எப்போதும் சாதாரண மக்களின் மொழியாக இருந்தது இல்லை. சாதாரண மக்கள் சமஸ்கிருதம் கற்பதற்கு கூட பழங்காலத்தில் தடை இருந்தது. இந்த நவீன காலத்தில் எதற்காக சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும். அதுவும் தமிழ்நாட்டில்!. அதை எதற்காக சாதாரண மக்கலின் மீது திணிக்க வேண்டும். லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளை அனைத்து ஐரோப்பியர்களும் (குறிப்பாக ஜெர்மன் மொழி பேசுவோர்) கற்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

  94. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

    \\\ /மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ” பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ” அந்த ஆரியத்தை – அதாவது மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட சிவனை வீழ்த்த வேண்டும் என்று கூறுகிறார்//தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்க இது போன்ற மலினமான உத்திகளை எல்லாம் கையாள வேண்டாம்.. \\\

    தமிழில் பிற மொழி கலத்தல் சரியல்ல என்று கூறிய போற்றத் தகுந்த உங்களது பக்ஷபாதமில்லா நிலைப்பாட்டுக்குப்பிறகு சஹோதரி ரெபெக்கா மேரியிடம் தாங்கள் பகிர்ந்த சில ( எல்லாக் கருத்துக்களும் இல்லை) கருத்துக்களில் ஆழ்ந்த சாரமிருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைவதற்கு முன்னரே உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நீங்கள் தர்க்கமாக இல்லாமல் வெற்று கோஷங்களாக முன்வைப்பது சலிப்பைத் தருகிறது.

    ஸ்ரீமான் கதிரவனை நீங்கள் மலினமான உத்திகளைக் கையாள வேண்டாம் என்று கூற உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று யோசனையாவது செய்து பார்த்தீர்களா? இந்தத் திரியில் மதிஹீனமாக மிக்க மலினமான உத்திகளை நீங்கள் கையாண்டது போக அவரை சினக்கிறீர்கள்? அவர் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? நான் இன்னமும் மிகக் கடுமையாகக் கேழ்க்க முனைந்த பல கேழ்விகளை ஒரே கேழ்வியாக அவர் சாதுவாகக் கேட்டிருக்கிறார்.

    ஆரியம் என்றால் என்ன என்று முதலில் ஆதார பூர்வமாகப் பகிரவும். தமிழ்ப்பண்பாடு என்று நீங்கள் பகிரவிழையும் ஒரு பண்பாட்டிலிருந்து ஆரியப்பண்பாடு என்பது எவ்வாறு வேறுவிதமாக வேறுபடுகிறது என்று பகிர முயல்வது அறிவு பூர்வமான செயல்பாடு. ஸ்ரீமான் ஜெயமோஹன் அவர்களது சமீபத்திய வ்யாசம் தமிழ் பற்றியும் தமிழகம் பற்றியும் பகிர்ந்த அறிவு பூர்வமான ஒரு கருத்து என் பார்வையை விசாலமாக்கியது. நான் கருத்தொற்றுமைகளைப் பற்றி மட்டிலும் பேசுகிறேன். நீங்கள் கருத்து பேதங்களைப் பற்றி மட்டிலும் பேசுகிறீர்கள். தத்யம் இவையிரண்டையும் சமன்வயித்து இருக்கிறது. அழகாக சங்க நூற்களிலிருந்து ஸ்ரீ ஜெயமோஹன் இதை விளக்கியிருந்தார்.

    என்னைப்போற்றுவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். என்னையும் உங்களையும் விட பன் மடங்கு வயதில் மூத்த…… கசடற சைவத்தையும் தமிழையும் முறையாகக்கற்று …………… உள்ளங்கை நெல்லிக்கனியாக……… திருப்புகழின் (ஓ உங்களுக்கு ஆகாதே) ——- திருமுறைகளின் சாரத்தை ஹ்ருதயத்தை தொடும்படிக்குப் பகிரும் ………முனைவர் ஐயாவை ……….. துடுக்கு மிகப்பேசியமைக்கு எங்காவது ஒரு சொல்லாவது பஸ்சாதாபம் கொண்டிருப்பீர்களா என்று பார்த்தேன். இல்லையே. மூத்தோரைச் சுடுசொல் பேச தமிழ்க்கலாசாரத்தில் மூதுரையில் சொல்லியிருக்கிறதா? இனியவை நாற்பதில் சொல்லியிருக்கிறதா? இன்னா நாற்பதில் சொல்லியிருக்கிறதா? தமிழறிஞர், சித்தாந்தவாதி என்றபடிக்கு நிச்சயமாக நான் அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றிருக்கிறேன். தளத்து மற்றைய சஹோதரர்களும் அன்னாரது தெளிவான எளிமையான கருத்துக்களிலிருந்து பல விஷயங்களைக் கற்றிருக்கிறார்கள் என்றும் அறிவேன்.

    அழிப்பதையே முனைப்பாகக் கொண்ட ம்லேச்ச சம்பந்தம் ஆக்க பூர்வமான செயல்பாடை எங்கு போதிக்கும் என்பது புரிகிறது?

    சம்ஸ்க்ருத நூற்களில் சொல்லப்பட்டிருப்பது இன்னதுதான் என்று நிர்த்தாரணம் செய்ய முதலில் சம்ஸ்க்ருதம் கற்றிருக்க வேண்டும். எங்கள் பழனியாண்டவன் மீது ஆணையாகச் சொல்லுங்கள் நீங்கள் சம்ஸ்க்ருதம் கற்றதுண்டா? அப்படி இல்லாமல் காமா சோமா என்று எத்தையாவது காபி பேஸ்ட் செய்து கருத்துப்பகிர்வது உங்களை நீங்கள் ஹாஸ்யப்பொருளாக்குவதற்கு சமம்.

    ஜெனாப் சுவனப்ரியன் செய்கிறார் என்றால் அவரது இலக்கு வஹாபியத்துக்கு பிள்ளை பிடிப்பது. புரிந்து கொள்ள முடிகிறது. இன்னிக்கு எத்தனை பிள்ளை பிடித்திருக்கிறோம். பலான நடிகன். பலான நடிகை. இன்றைய சரக்கு விபரம். என்ன கணக்கு வழக்கு. அழகு தான். தமிழ் ஹிந்துவில் அப்பப்போ க்ளோசிங்க் ஸ்டாக் அப்டேட்டும் செய்கிறார். புதுவரவு இத்யாதி வரவு செலவு….ம்………செலவு பற்றிப் பகிர மாட்டார்……. வ்யாபாரம் அப்புறம் போண்டியாகி விடுமே. கந்து வட்டி மூல்தானி படான் முஸல்மானின் கணக்கு வழக்கெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

    சைவ சமயம் என்ன பிள்ளை பிடிக்கும் கூட்டமா சொல்லுங்கள்.

    மனுதர்ம சாஸ்த்ரத்தை விமர்சிப்பதற்கு முன்னர் நீங்கள் மனுதர்ம சாஸ்த்ரத்தை முழுதும் வாசித்திருக்கிறீர்களா? அது இன்னது தான் சொல்ல வருகிறது என்று பகிர? மனுதர்ம சாஸ்தரம் பற்றி எங்கோ நாலுவரி படித்து மனுதர்ம சாஸ்த்ரத்தை குறை சொல்லுவதைக் கூட………… சரி மனுதர்மத்தில் பகிரப்பட்ட ஒரு விஷயமான ஜாதியத்தை எதிர்க்கும் அன்பர் ஒருவரின் செயல்பாடு என்று புறந்தள்ளிப்போகலாம் என்று பார்த்தால்………… முழு சம்ஸ்க்ருதமே மனுதர்ம சாஸ்த்ரம் …………. முழு சம்ஸ்க்ருதமே ஜாதியம்………..என்று கூறுவது உளறல் இல்லாமல் வேறு என்ன சொல்லுங்கள்? நான் அறவே ஏற்காத புறச்சமயமான பௌத்தத்தில் கூட சம்ஸ்க்ருத க்ரந்தங்கள் இருக்கின்றன. ஜைனத்திலும் சம்ஸ்க்ருத க்ரந்தங்கள் இருக்கின்றன. நானே இந்த தளத்திலேயே தமிழ் நூற்களிலும் பௌத்த சம்ஸ்க்ருத நூற்களிலும் உள்ள ஆச்சரியப்படத்தக்க இலக்கிய ஒற்றுமையை மிகக் குறிப்பாக நூலின் பெயர், அத்யாயம் ச்லோக சங்க்யை என்று முழு விபரங்களுடன் கருத்துப் பகிர்ந்திருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கேயாவது சம்ஸ்க்ருத வெறுப்பாளர்கள் இணையத்தில் பினாத்திய உளறல்களை முன்வைத்து முழு சம்ஸ்க்ருதமே இது தான்…………….. உலகமே சம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறது என்று பினாத்துவது மதிஹீனம். ஜெனாப் எம் ஏ கான் சாஹேப் அவர்கள் இஸ்லாத்தின் வன்முறையை வரலாறு மூலம் எழுதி விட்டதால் வன்முறை தவிர இஸ்லத்தில் வேறேதும் இல்லை என்று பினாத்துவது எப்படி பிழையாகுமோ அப்படியே பிழையானது ஹிந்துக்கள் எல்லோரும் சம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறார்கள் என்று பினாத்துவது.

    குறை காண்பதை குறையாகச் சொல்ல வரவில்லை. ஒரு முழுமையைக் கைக்கொள்ளுங்கள். வெற்று கோஷங்களாக இல்லாமல் ஆழ்ந்த தர்க்கமாக முழுமையுடன் உங்கள் கருத்துக்களை பகிர விழையுங்கள்.

    ம்லேச்சர்களுடன் கைகோர்த்து நீங்கள் தமிழை வாழவைக்கத் தோள் தட்டுவதும்………. ஆரியத்தை வீழ்த்தப் புறப்படுவதற்கு முன்னர் ……….ஆரியம் என்றால் என்ன என்றாவது அறியத் தலைப்படவும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டுவது மதிஹீனம்.

    தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் கலந்த ஒரு மொழிநடையில் பாரோர் நன்மைக்காக…….தமிழருடைய நன்மைக்காக மட்டிலும் அல்ல…….. பெருத்த பாருளீர் ………..என்று உலகோரை அழைத்து……….எங்கள் வள்ளல் பெருமான் பாடுகிறார்…………. திருப்புகழைப் பாட எங்கள் வள்ளல் பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்தவன் எங்கள் தமிழ்க்கடவுளான முருகப்பெருமான்.

    அருணகிரிப்பெருமான் உங்களுக்கு எதிரி ? உலகோர் உய்ய அவர் பாடியது கொடுந்தமிழ் இலக்கியம்? ஏன் சம்ஸ்க்ருதம் கலந்து விட்டது அதானால்?

    சற்போதகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப்பணிந்துருகு நேசத்தை இன்றுதர இனி வரவேணும்………. என எங்கள் பழனியாண்டவனை அருணகிரிப்பெருமான் இறைஞ்சுவது நாடகம்…………… புல்லுருவித்தனம்……….அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்?………….

    சரி அருணகிரிப்பெருமானுக்கு திருப்புகழ் பாட அடியெடுத்துகொடுத்த முருகப்பெருமானுக்கும் கூடவா மதிக்குறைவு இருக்கும்? இப்படி ஒரு பனுவலை இவர் படைப்பார் என்று அறியாது அடியெடுத்துக்கொடுக்க.

    மணிப்ரவாளம் புல்லுருவித்தனம் என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும்………. அதில் பார்ப்பனீயத்தைப் பார்க்க விழைவது பித்துக்குளித்தனமின்றி வேறென்ன…………. மணிப்ரவாளத்தில் என்னென்ன கருத்துக்கருவூலங்கள் இருக்கின்றன என்று ஸ்ரீமான் அரிசோனன் அவர்களுக்கு பட்டியலிட்டிருக்கிறேன்.

    எந்த மொழியும் மொழிநடையும் ஜாதி, சமயம், மதம் போன்ற சிறையில் அடங்காதவை என்ற அடிப்படை சமூஹ விஷயத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    மணிப்ரவாளத்தை ஒழிக்க நீங்கள் முனைவதாலெல்லாம் மணிப்ரவாளம் ஒழியாது.. திருப்புகழும்……ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய க்ரந்தங்களும்……… சமணக்காப்பியங்களும்……….. அவ்வளவு ஏன்……….. விவிலயமும் உலகில் உள்ள வரை மணிப்ரவாளம் நிச்சயம் இருக்கும். ப்யூர் தமிழ் பைபிள் என்றெல்லாம் தலைகீழாக முயன்றெல்லாம் பார்த்திருக்கிறார்கள். வேலையாகவில்லை. ஆதியிலிருந்தே ஆதியாகமம் என்று தானே பைபிளே துவங்குகிறது. சுவிசேஷம், ஜெபம், கனம், பெலன், பிதா, சுதன், பரிசுத்த ஆவி……….. விவிலியத்தில் தமிழை நிச்சயமாகத் தேடத் தான் வேண்டும் 🙂

    ஆனால் நீங்கள் க்றைஸ்தவர்களுடன் கை கோர்த்து தமிழைக்காத்து ஆரியத்தை அழிக்க முனைவது………. மண்குதிரையிலேறி ஆற்றைத்தாண்ட விழைவதல்லாமல் வேறென்ன 🙂

    ஆனால் தமிழை போஷிக்க வேண்டும் என்று முனைந்து நீங்கள் செயல்படும் ஒவ்வொரு அர்த்தமுள்ள செயற்பாடும் தமிழுக்கு உரம் சேர்க்கும். ஜனநாயகம் என்ற பதத்தை க்ருஷ்ணகுமார் சொல்லலாம். ஸ்ரீ தாயுமானவன் சொல்லலாமோ? மண்டையைக்குடைந்து மக்களாட்சி என்ற பதத்தை தாயுமானவனை இடித்துறைக்க மீட்டெடுத்தேன். சஹோதரி ரெபெக்கா மேரி அவர்களுக்கு சொன்ன அதே பாடம் உங்களுக்கும். நீங்கள் ப்ரயோகிக்கும் தமிழ் ஸ்வச்சமாக இருக்கிறதா என்று கவனமாகப்பாருங்கள். எனதன்பார்ந்த பாலா (இப்போது கருத்துப்பகிரும் ரெவரெண்டு BALA SUNDARAM KRISHNA இல்லை) கருத்துப்பகிரும் போதெல்லாம் கண்ணில் வெளக்கெண்ணெய் போட்டுப்பார்ப்பேன் இவர் தமிழைத் தவிர வேறு மொழி ஏதும் கையாள்கிறாரா என்று. சொன்ன வண்ணன் செயல்பாடுடைய தமிழன்பராயிற்றே அவர். பளிச் பளிச் சுத்த தமிழ். எடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டிய தமிழ். அதே அலகீடை நான் ஸ்ரீ தாயுமானவன் அவர்களிடம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு சொல்லுங்கள். உங்கள் உத்தரத்தில் என்னென்ன சம்ஸ்க்ருத பதங்கள் உள்ளன என்று உங்களை தர்ம சங்கடப்படுத்த விழையவில்லை. ஆனால் உங்கள் ஆக்ரஹத்தை செயலில் காட்டுங்கள். உங்களிலிருந்து துவங்குங்கள் என்று நிச்சயம் சொல்வேன்.

    அறிவு பூர்வமாக முழுமையாகக் கருத்துப் பகிருங்கள். காபி பேஸ்ட் கந்தறகோளங்கள்………… பார்ப்பனீய டர் புர் பேத்தல்கள் இதெல்லாம் இணைய விடலைகளுக்கு…………உங்களுக்கு உயர்ந்த தெய்வத்திருத்தமிழும் சைவமும் இருக்கையில்………அதில் ஆழ்ந்து அதன் சுவையை தளத்து வாசகர்களுடன் பகிர்வீர்களா? உங்களுக்குத் தெரியாத விஷயங்களை காபி பேஸ்ட் செய்து பாயிண்ட் ஸ்கோர் பண்ண விழைந்து ஆனால் பரிபவப்படும் விடலையாக ஆவீர்களா?

    சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா………..

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  95. \\\\\\\\\\\\ செமிட்டிக் மதங்கில் இரண்டே பக்ஷம் தான். ஒன்று நம்பு இல்லாங்காட்டி எம்பு.

    நான் பொறாமை கொண்ட கடவுள், நான் ஒரு பயங்கரவாதி என்று கடவுள் எங்களுக்கு ஒரு நாளும் கட்டளை இடவில்லை. எங்களுக்கு பன்மை முக்கியம், அதைப் போற்றுவோம். தமிழ் படிப்போம், சமஸ்க்ருதம் படிப்போம், தெலுங்கு மொழியில், மராத்தியில் உள்ள சாராம்சங்களை அறிய அவற்றையும் படிப்போம்.

    விவிலியத்தை தமிழிலே சொல்கிறார்களாம். என்ன தமிழ் பற்று, என்ன தமிழ் பற்று? ஏசுவுக்கு கேக்கவேணும்னா நீங்கள் படிக்கீறீர்கள். அதான் ஜெஹோவா தெளிவா சொல்லிவிட்டு போந்தாரே. நான் இஸ்ரவேல் நாட்டு மக்களை உய்விக்கவே வந்தேன் என்று. அவர் தமிழெல்லாம் கேக்க மாட்டார் சார், ஹீப்ரு தான் அவருக்கு புரியும். நீங்கள் தமிழ் படுத்துவது, தெலுகு படுத்து வது எல்லாம் சுவிசேஷ கோட்டம் நடத்தி ஆட்டு மந்தைகளை பிடித்தது கணக்கு காட்டி வயிறு ரொப்ப தான்.

    அதென்னங்க ரெவெரெண்டு என்ற பட்டம், அதை தமிழ் படுத்தலாமே, அதென்ன பாதர், ப்ரோ இத்யாதி. இயேசுவின் ரத்தம் ஜெயம் இதெல்லாம் தமிழான்னா.

    பாரதத்தில் சமநோக்கு பெருக வேண்டுமென்றால் சமஸ்க்ருதம் ஒரு சாராருடையது என்று உம்மை சார்ந்தவர் காலாகாலமாக பரப்பின துஷ்ப்ரயோகம் ஒழிய வேணும். அனைத்து மக்களும் சமக்ஸ்ருதம் பயில வேணும். இதை பயில் வதன் மூலம் சாத்தியப்படும். \\\\\\\\\

    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

  96. எல்லோரும் மனு எழுதிய நூலை பற்றி பேசுகிறார்கள். அதை யாரும் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிடுவது போல் தெரியவில்லை. அது ஒன்றும் இறை நூல் அல்லவே — அதாவது இராமாயணம் அல்லது மகாபாரதம் போல. பிறகு ஏன் அதை எல்லோரும் மிக அதிகமாக மேற்கோள் காட்டுகிறார்கள் என்று உண்மையிலேயே தெரியவில்லை.

  97. //இதை இன்றைய ஹிந்து விட்டு விட்டான். //

    அவர்களாகவே முன்வந்து விடவில்லை. பலர் – அவர்களும் இந்துக்களே என்று பூசமுடியாது – செய்த போராட்டங்களினால், இன்றைய உலகில் பிறமக்கள் தம்மை என்ன நினைப்பார்களோ என்று அச்சத்தினாலும்தான் – விட்டார்கள். Today if you practice untouchability, the adverse news will spread like wild fire. BBC will report it; NYT will publish photos as they did in r/o Uthapuram wall. BBC Tamil will run a docu on your acts as they did Ilavaran Divya episode. You will feel ashamed of all. You fear adverse publicity; so, you stopped harassing the Dalits in religion. Not only that. Your enemies the Xians and Muslims will attempt to bank upon that, in order to drag all dalits. If all circumstances are favourable, you will continue your acts on one side, and some of your religious leaders will continue to warn you.

    தலித்துகள் இன்றும் நடாத்தப்படும் இழிவைப்பற்றி தமிழ்.ஹிந்து.காமில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். படித்துக்கொண்டே இருக்கவும்.

    பிராமணர்கள் மாறிவிட்டார்கள் எனப்பூசுவீர்கள். இல்லையா? மற்றவர்களெல்லாம் இந்துக்களில்லையா?

    தலித்து சமையல்காரர் என்றார், பள்ளி மாணவர்கள் சாப்பிடமாட்டார்கள் பீஹாரில் தெரியுமா?

    தலித்து பையனென்றால், உங்கள் ஜாதிப்பெண் அவனோடு ஓடத்தான் செய்ய வேண்டும். ஏனெனில், கட்டிக்கொடுக்கமாட்டீர்கள். வன்னியரென்றாலோ, தேவரென்றாலோ, அடித்து கொன்று விடுவார்கள். நீங்கள் பரவாயில்லை. ரொம்ப மனிதாபிமானம். அடிக்கமாட்டீர்.

    தலித்து காதுகளில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்று என்று மனு எழுதியதால், தலித்துகள் அருகில் வந்தால் வேதமோதுவைதை நிறுத்தினார்கள். இன்று செய்யவில்லை என்பீர்கள்! இல்லையா? ஆனால் அதற்குப்பதிலாக என்னனென்னவெல்லாம் செய்கிறீர்கள்!

    மதுரை மீனாட்சி கோயிலுள் நீங்களாகவே மனமுவந்தா உள்ளே விட்டீர்கள்? போலீசையல்லவா அழைத்தீர்?

    இந்துக்களில் மனமாற்றம் இன்னும் முழுமையடையவில்லையென்று இங்கே கட்டுரைகள் சொல்கின்றன. என்னை மொத்தி மலையேறச்செய்யுங்கள் என உங்களுக்கு அன்புக்கட்டளையிட்ட க்ருஷ்ணகுமாரே எழுதியிருக்கிறார். படிக்கவில்லையா?

    இன்னும் மாறவேண்டும் என்றுதான் திரும்பதிரும்ப தெரிவிக்கிறார்கள். தமிழ்.ஹிந்து காம் என்னவென்னால் எழுதிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறீர்களே?

    Manu has not been completely thrown out by you. தலித்துக்கள் ஆயிரமாயிர ஆண்டு நடத்தப்பட்ட இழிநிலைக்கும் இன்றும் நடத்தப்படும் நிலைக்கும் கொளுத்திப்போட்டுவிட்டு போய் விட்டுப்போயிட்டார் அந்த ஆள். முழுவதையும் தூக்கியெறியப்பாருங்கள். ”அது மட்டும் விட்டுவிடுங்கள்; மற்றெல்லாவற்றையும் பிடித்துக்கொள்ளுங்கள்” என்கிறீர்கள்

    இசுலாத்திலும் சில பிடிக்கா விடயங்களைவிட்டுவிட்டு மற்றவைகளைப்பிடித்து இசுலாமியராகி விடலாமே சாரங்கன்?

    (Suvanappiriyan, take note. He wants to become a fellow Islamist. Why not welcome him? He is a very intelligent guy full of knowledge and skilled person. He will add value.)

  98. //அச்சு பிச்சு பைத்தியகாரத்தனம் அப்பட்டமாக தெரிகிறது உங்கள் மறுமொழியில். என்ன எழுதுகிறீர்கள் எதற்கு பதில் தருகிறீர்கள் என்றே விளங்கவொன்னா விஷயமாக இருக்கிறது. நீங்கள் பிராந்தியில் உளறலாம். அடியேனால் முடியாது. அதற்காக அடியேனாலும் அப்படி செய்ய முடியாது.//

    உங்கள் பதிலில் நீளத்தை முக்கால்வாசி குறைக்கலாம் அவ்வளவு தேவையில்லா விசயங்கள். இதுவா என்னை மலையேறச்செய்யும் உபாயம்?

    இந்துதாவாக் கொள்கையை விளக்குக என்று எவரேனும் கேட்டனரா? பன்முகத்தன்மை, பல பிரிவுகள், நாங்கள் ஒன்று என்று எவர் சொல்லச்சொன்னார்கள்?

    வடமொழி வாரம் கூடாது என்றுதான் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். அந்த எதிர்ப்புக்கும் எதிர்கட்டுரை வரையும் அரவிந்தன், அந்த வாரம் கொண்டாடப்படவேண்டும் என நேரடியாகசொல்லாமல், வடமொழி ஒரு பிராமணாள் பாஷையில்லை. அதை தலித்துக்களும் பேசினார்கள்; படித்தார்கள். இலக்கியம் கூட படைத்தார்கள். வியாசர் மீனவப்பெண்ணை மனைவியாக ஏற்றவர், வால்மீகி வேடன் (ST) என்று வரலாற்றைக்காட்டி எனவே வடமொழி தமிழர்களால் எதிர்க்கப்படக்கூடாது. அதாவது வடமொழி வாரம் கொண்டாடப்படவேண்டும்.

    அம்பேத்கர் சொன்னார், ஜயகாந்தன் சொன்னார், வால்மீகி தலித்து நாகர் இளவரசி பேசினாள் என்பதற்காக ஏன் தமிழர்கள் வடமொழியை ஏற்க வேண்டும்? அதனால் அவர்களுக்குப்பலனென்ன? ஹிந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை பார்க்க உதவும். வடமொழி பேசியா சந்தினி சவுக்கிலோ, கரோல் பாக்கிலோ, க்ராஃபோருட் மார்க்கெட்டிலோ வாங்க முடியும்? ஏன் படிக்கவேண்டும்?

    ஒன்றுக்கும் உதவா மொழியை அரவிந்தன் ஆதரிப்பதேன்?

    இதற்குப் பதில் கட்டுரையில் இல்லை. ஆனால் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

    பதில் ஏற்கனவே சொல்லி விட்டேன்: வடமொழி வைதீக இந்துமதத்தின் ஆணிவேர். அதை நீருற்றி வளர்க்க ஆசைப்படுகிறது மோதி அரசு. அதற்குத்தான் வடமொழிவாரம். இதை உணர்ந்தே திராவிடக்கட்சிகள் வடமொழி வாரத்தை எதிர்க்கிறார்கள். அந்த ஆணிவேரைப்பிடடுங்க முயற்சியோ இத்திராவிடக்கட்சிகள் செய்யும் எதிர்ப்பு என்ற் அச்சமே நேரடியாகச்சொல்லாமல், வடமொழியை நாமெல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்கிறார்.

    அவரை விடுவோம்; நீங்கள் சொல்லுங்கள்.

    1.வடமொழியே சொல்லித்தரா சிபிஎஸ்ஸீ பள்ளிகள் இந்தியா முழுவதும் உண்டு. அவர்கள் எல்லாரும் ஏன் கொண்டாட வேண்டும்? இது வடமொழிக்கு பிரச்சாமில்லையா?
    2. ஏன் அங்கு இரண்டாம் தாளாக இருக்கும் ஃப்ரென்சையோ, ஜர்மனையோ, தமிழையோ, வங்காளத்தையோ, மராட்டியையோ, தெலுங்கையோ, மலையாளத்தையோ, சிறப்பு வாரத்தில் கொண்டாடுங்கள் என சுற்றறிக்கை விட வில்லை மோதி?
    3. ஏன் வடமொழிக்கு மட்டும் தனி மரியாதை? தமிழோ, தெலுங்கோ எந்த விதத்தில் குறைந்துவிட்டது?
    4. தமிழர்கள் ஏன் வடமொழி வாரத்தை ஆதரிக்கவேண்டும்?

    பதில் சொல்லுங்கள்.

    These questions are for other supporters of Sanskrit like Geetha Sambasivam, Rama, J Venkat, Krishnakumar, Pandian. They may post their replies also.

  99. விவிலியத்தை தமிழிலே சொல்கிறார்களாம். என்ன தமிழ் பற்று//

    சாரங்கன்!

    தமிழில் அவர்கள் சொல்வதில்லை. படிக்கிறார்கள். ஓதுகிறார்கள். அவர்கள் வீடுகளில் எழுதித் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்தோர் வீடுகளில் சில குறிப்பிட்ட வாசங்கள் ஆங்கிலத்திலும் தொங்கும்.

    இதைச்சொல்லக்காரணம், கிட்டத்தட்ட சுவன்ப்பிரியன் சொன்னதுதான். அனைத்து மொழிகளுமே இறைவனால் படைக்கப்பட்டவை; எனவே வெறுக்கத்தகுந்தவையல்ல். எனவேதான், கிருத்துவரிம் இசுலாமியரும் அரபியையோ, ஆங்கிலத்தையோ தேவபாஷை எனப்தில்லை. வைதீக இந்துவான நீங்கள் மட்டும்தான் வடமொழியைத் தேவபாஷை என்றீர்கள். இங்கே காயத்திரிமந்திரந்தை தமிழில் எழுதினால் பலனில்லை என்றும் வடமொழி உச்சரிப்புக்கு சக்தி உண்டு என்றும் சொல்கிறீர்கள். தமிழ்க்கிருத்துவர்கள் உச்சரிப்புக்கோ, மொழிக்கோ தெய்வ சக்தி கொடுக்கவில்லை. எம்மொழியில் மனம் ஒன்றுமோ அம்மொழியில் விவிலியத்தை ஓதுகிறார்கள். தமிழருக்குத் தமிழ். அதே சமயம் பைபில் வாசகங்களுக்கு தெய்வச்சக்தி உண்டு என்று நம்புகிறார்கள். கவனிக்க உச்சரிப்புக்கன்று. மொழிக்கன்று.

    அவர்கள் விவிலியத்தில் ஏன் மணிப்பிரவாளம் என்பது உங்கள் கேள்வி. நல்ல அருமையான கேள்வி. என் சிறுவயதிலிருந்தே என்ன உறுத்திய வந்த கேள்வி. எவரிடமும் கேட்கவில்லை. நானேதான் யுகித்தேன்.

    விவிலியம் தமிழில் வெவ்வேறுவகையில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் ந்யூ அமெரிக்கன் பைபிள், மாடர்ன் பைபில், கிங் ஜேம்ஸ் வெர்சன் என்ற 17ம்நூற்றாண்டு பைபிள் என்று விதவிதமான மொழிபெயர்ப்புக்கள் இல்லை. தமிழில் ஒன்றே ஒன்றுதான். அதை மொழிபெயர்த்தவர் ஒரு இலங்கைத்தமிழர் என்று அறிகிறேன். பாதிரியார் இல்லை. இந்து. அவர்தான் மணிப்பிரவாளத்தைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார்.
    There may be some reasons for this which are mostly linguistic as I presently explain in the next post.

  100. I am very sorry to post this as it is irrelevant to the context of Aravindan’s essay. It is just an explanation to Sarangan. Before raising such queries, he will think twice, hereafter.

    I said ‘linguistic’

    பாமரர்களிடையே புழங்கும் மொழி; பண்டிதர்களிடையே புழங்கும் மொழி. அதாவது ஒரே மொழி இருவிதமாக இருவருக்கும்.

    இராபர்டு கால்டுவெல், தமிழர்கள் சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தமிழை இருவிதமாக பிரித்தே பார்த்தனர்; ஒன்று பேச்சு மொழி; மற்றொன்று இலக்கிய மொழி என்றார். அவர் சொன்ன பொருள் என்னவென்றால், சங்கப்பாடல்கள் என்கிறோம். அவற்றை புலவர்கள் இலக்கிய மொழி ஆர்வலருக்கும் இலக்கிய இரசனை உடைய்வருக்கும்தான் எழுதினார்கள். பாடினார்கள். பாமரமக்கள் படிக்கவில்லை. படிக்கவும் முடியாது. இன்றைய நிலையும் அதுதானே 🙂

    இப்படி ஆங்கிலத்திலும் உண்டு. தமிழில் இறைவனைப்பற்றி நூலென்றால் -பாடல்கள் அல்ல, விவிலியம் போன்று- அத்தமிழ் பாமரத்தமிழாக இருந்தால் அதன் ‘கவரும் தன்மை’ தனித்தன்மை இல்லாமல் போகும். மக்களை முதலில் மலைக்கவைக்க வேண்டும். அப்படியிருந்தால் மக்கள் தனிமதிப்பு தருவார். இறைப்பனுவல்களுக்கு அவ்சியமிது.

    இங்கே வைணவ உரைகாரகளையும் நினைவு கூறலாம். இவர்கள் கடுமையான மணிப்பிரவாளத்தில்தான் ‘படிகள்’எழுதினார்கள். படிகள் என்றால் ஆழவார் பாசுரங்களுக்கு விளக்கம். இதனைப்பற்றி, ஆராய்ச்சியாளர் சொல்வது, இவரக்ள் காலத்தில் ஜயினர்களும் எழுதினார்கள் மணிப்பிரவாளத்தில் அவர்கள் ம்தத்தைப்பற்றி, அதை மக்கள் வெகுவாக நினைத்தபடியாலேயே, அவர்களை மிஞ்ச இவர்களும் மணிப்பிரவாளத்தைத்தையே தேர்ந்தெடுத்தனர். சிவஞான போதம் எழுதியவரும் இப்படியே. சிவஞான போதத்தைப் படித்துப் புரிய எந்தத் தமிழராலும் முடியாது. அவ்வளவும் மணிப்பிரவாளம்; எழுதப்பட்ட எஞ்சிய தமிழும் கொடுந்தமிழ்.ன் மக்களை அண்டவிடாமல் செய்வதில் வைணவ ஆச்சாரியர்களையும் மிஞ்சியவர் இந்த சிவஞானபோதத்து ஆசிரியர். Please remember here, these erudite commentaros who were acharyas, were all great Tamil scholars also. They could have easily chosen Tamil.

    ஆங்கிலத்தில், Royal English. இதை வைத்துத்தான் ஆங்கிலச்சட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்றைய பெயர் லீகல் இங்கிலீஸ். விவிலியம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட போது இந்த வைணவ உரைகாரர்கள் செய்தது போல, அவர்களும் ஒரு பழங்காலத்து ஆங்கிலத்தில் எழுதினார். அதுதான் கிங் ஜேம்ஸ் வெர்சன். காரணம், மக்கள் புழங்கும் ஆங்கிலத்தில் இருந்தால் மக்கள் சீரியசாக எடுக்க மாட்டார்கள்.

    The same reason obtains here for Tamil version of the Bible. The style – Sanskritised Tamil – adopted by the Bible translator. He has, rightly or wrongly, thought it is better to imitate Tamil brahmins to attract people by striking with awe and wonder. People flock to temples to hear Sanskrit which they dont understand, and gave the language a special respect. The Bible Tamil used the same strategy.

    இசுலாமியர்கள் ஸ்டைல் வேற. பிராமணர்களின் சான்ஸ்கிரிட்டஸ்டு தமிழைக் காப்பியடிக்க மனமில்லை. சாரங்கனைப்போல பலர் கிண்டலடித்தால் என்று பயம். அவர்களும், பேசும்போது (மேடையில் மதப்பிர்சங்கம் பண்ணும்போது) மதததைப் பற்றி விளக்கங்கள் எழுதி வெளியிடும்போத், பேச்சுத்தமிழயோ, பாமரத்தமிழையும் விட்டார். செந்தமிழை எடுத்துக்கொண்டார். செந்தமிழ் என்றால் ப்ல்லுடைக்கும் பண்டிதர் தமிழன்று. வடமொழி கலக்கா தமிழ் மட்டுமே. இறைவன் மிகப்பெரியவன். எல்லாப்புகழும் இறைவனுக்கு – வேறுமாதிரியும் சொல்லலாம். இறைவன் எனபதை தெய்வமெனலாம். ஆனால் இறைவன் என்ற தூய தமிழ். இப்படி இசுலாம் போகிறது. பாராட்டுக்கள் இவர்களுக்கு மட்டும்.

    இந்துக்களுக்கும் கிருத்துவருக்கும் என்பாராட்டுக்கள் இல. In other words, the Muslims don’t want to cheat the people with clever use of language style, but by only meanings put in correct Tamil.

    இக்கூட்டத்திலிருந்து விலகி நின்றோர், கிட்டத்தட்ட இன்றைய இசுலாமியர்கள் போல – ஆழ்வார்கள் மட்டுமே.

    Mostly simple, simpler and simplest Tamil. Great service to Tamil people and their religion they happily rendered! That was why the brahmins did not accept Nammazhvaar poems. ஜே வெங்கட்டுக்காக இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

  101. //நான் முன்பு எழுதியதையே திரும்பச் சொல்கிறேன். இந்து சமயத்தை அறிய தமிழ், வடமொழி என்ற இரு கண்கள் தேவை. நீங்கள் வடமொழியைக் கற்காவிட்டாலும் போகிறது. தூற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

    நான் எங்கே வடமொழியை தூற்றினேன். தமிழ் மீதான வடமொழியின் ஆதிக்கத்தை தான் நான் எதிர்ப்பது. வடமொழி வடமொழியாய் இருப்பதில் தவறில்லை. ஆனால் வலிந்து அதன் ஆளுமையை தமிழின் மீது திணிக்குமானால், அதை என்ன செய்யலாம்? சமற்கருத்த வாரம் கொண்டாட வேண்டும் அதன் மூலம் செத்துப்போன வடமொழியை உயிர்பிக்க வேண்டும் என்கிற மட்டிலும் கூறி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மோடி அரசு வெளியிட்டிருக்கும் சுற்றறிகையில் கூறி இருக்கும் விஷமமான கருத்தினை பாருங்கள் ” வடமொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம், இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமாம்”. அரவிந்தன் நீலக்கண்டன் தன்னுடைய கட்டுரையில் ஏன் இந்த கருத்தை வெளியிடாமல் மறைத்தார் என்று தெரியவில்லை. தமிழும் தற்சமயம் இந்திய மொழி என்கிற பொழுது சமற்க்ருதம் தமிழ் மொழியின் தாய் என்று கூறினால் இந்த கேவலத்தை எதிர்த்து தமிழர்கள் போராட மாட்டார்களா. ஒரு வேளை சம்ம்பந்த பெருமான் இப்போது மட்டும் இருந்திருந்தால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட மோடியின் தலைமையிலான அரசை அறம் பாடியே அழித்திருப்பார்..

    //எனவே, திருமறையை நமக்கு ஈந்துவிட்டுச் சென்ற திருஞான சம்பந்தரே வடமொழியில் உள்ள வேதங்களையும், சைவ ஆகமகங்களையும் தமிழ்நாட்டில் சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.//

    அது அவரின் பெருந்தன்மையான குணம். ஒரு வேளை இப்போது நடப்பது போன்று வடமொழியை வைத்து இது போன்ற அய்யோக்கிய தனங்கள் அன்று நடந்திருந்தால் நிச்சயம் அவரின் நிலைப்பாடே வேறாக இருந்திருக்கும்.

  102. திரு அரிசோனன்!

    //எல்லை மீறவேண்டாம். குதர்க்கமான, திசைதிருப்பும் பதிலையும் தவிர்க்கவும்.
    வணக்கம். அமைதி ஓங்குக.//

    குர்ஆனில் இந்து மக்களைப் பற்றியோ அவர்களின் பிறப்பைப்பற்றியோ கேவலமாக எங்கும் எழுதப்படவில்லை. மனு ஸ்மிருதியில் உங்களை உயர்வாக்கி மட்டும் சொல்லியிருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் உங்களை உயர்வாக்கி மற்ற மூன்று வர்ணத்தாரையும் இழிவாக சொல்வது உங்களுக்கு பிரச்னையாக தெரியவில்லையா? அல்லது பிராமிண் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டால் பிரச்னையே இல்லையே. மேலும் எனது முன்னோர்கள் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியதால் அந்த இந்து மதத்தின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச எனக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறேன்.

    இன்று வரை உங்கள் வேதங்களையோ அல்லது உங்கள் கடவுள்களையோ எந்த இடத்திலும் தரக்குறைவாக விமரிசித்ததும் இல்லை. இஸ்லாம் எனக்கு அதனை போதிக்கவும் இல்லை. சாரங்கும், ஹானஸ்ட் மேனும் தொடர்ந்து கிண்டலாகவும் கேலியாகவும் பின்னுட்டங்களை இட்டாலும் நான் அமைதியே காக்கிறேன். உங்களைப் போன்றவர்களை மதிக்கவும் செய்கிறேன். அது தொடரும்.

  103. பெரியசாமி

    ப்ராக்ருதம் என்ன பஞ்சாபி பாஷையா. அது சமஸ்க்ருதத்தின் ஒரு திரிபு. மீனவ பெண் ப்ராக்ருதம் பேசினது அவலக்கு எது தெரியுமோ அதை தான். இப்பொழுது கூட மராட்டியை மெல்ல பேசினால் சமஸ்க்ருதம் அறிந்த எவரும் புரிந்து கொள்ள முடியும். அந்த காலத்தில் சமஸ்க்ருதம் படிக்க தடை யார் விதித்தார் எங்கு உள்ளது என்று ஒரு சான்று தர இயலுமா. இதற்கு மாற்றாக தான் சான்று நிறைய இருக்கு. ராஜ ராஜ சோழன் கல்வெட்டில், தச்சர்களுக்கான பாட திட்டம் என்ன என்பதை குறிப்பிட்டு, தமிழ், சமக்ஸ்ருதம், கணிதம், வானியல், மற்றும் தச்சு தொழில் என்று குறிப்பீடு உள்ளது.

    சமஸ்க்ருதத்தை யார் திணித்தார்கள். இது வெறும் கழக மனோபாவம். CBSE பள்ளிகளில், தமிழ், ஹிந்தி, சமஸ்க்ருதம் ஆங்கலம் என்ற நான்கு மொழிகளை பயிற்றுவிக்கிறார்கள். இதில் ஆங்கிலம் கட்டாயம் படிக்கவேண்டும். ஆங்கிலம் தான் திணிக்கப் படுகிறது. மூன்றாவது மொழியாக சமஸ்க்ருதாமோ ஹிந்தியோ படிக்கலாம். நீங்கள் வேண்டுமானால் போராடி இதற்க்கு பதில் அங்கே மாண்டரின் பாஷை சேர்த்து விடுங்கள்.
    திணிக்கப்படுவது சமஸ்க்ருதம் அல்ல. ஆங்கிலமே.

    நீங்கள் கேட்பதை போல பல அறிவு ஜீவிகள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா. தமிழ் எதற்கு நான் படிக்கணும். நானோ அறிவியல் பயின்று ஜி.ஆர். இ எழுதி டோபில் எழுதி அமெரிக்காவுக்கு ஜோய்யின்னு பரக்கபோறேன் அங்க ஆங்கிலம் தான் அதனால் நான் ஆங்கிலம் மட்டுமே படிக்கிறேனே. தமிழ் நாட்டில் நான் பிறந்ததால் எதற்கு தமிழ் படிக்க வேண்டும் என்று மக்காலே புத்திரர்கள் நிறைய பேர் கேட்கிறார்கள். விசயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

  104. பாலா சுந்தரம்

    மறுபடியும் பிதற்றல்கள்.

    ஆச்சார்யர்கள் வியாக்யானம் செய்ததது தமிழ் மறையின் அர்த்த விசேஷங்கள் உபநிஷ்த்திர்க்கு ஒத்தது என்று காட்டுவதற்கு. தமிழிலே இருக்கும் பாட்டுக்கு தமிழ் விளக்கம் எதற்கு. அப்படி உபநிஷத்தை பற்றி பேசவேண்டுமானால் மணிப்ரவாளம் தேவை படுகிறது. உபநிஷத்தின் பல பொருள்களை தமிழ் படுத்த முடியாது. உதாரணம் சமானாதி கரணம் என்ற ஒரு சொல் இதை தமிழ் படுத்துங்கள் பார்க்கலாம்.

    சுவிசேஷ கூட்டங்களில் தூய தமிழை சொல்லாமல் எதற்கு சமஸ்க்ருத படங்களின் பயன் பாடு என்று கேட்டால் ஏதோ உளறுகிறீர்கள்.

    நம்மாழ்வாரை தலை மேல் வைத்து கொண்டாடுபவர்கள் பிராமணர்கள் தான். அவரது பாதமாக அறியப்படுபவர் ராமானுஜர் (ஒரு பெரிய ப்ராஹ்மின் சார் இவர்). ஆழ்வாரின் மாற்றொரு பாதமாக அறியப்படுபவர் மதுர கவியார் ஐவரும் ஒரு ப்ராஹ்மின் சார்.

    உங்களது நோக்கம் என்ன பார்பனர்களை எப்படியாது கண்டபடி வெய்ய வேண்டும். இதற்கு தடையாயிருப்பது வைணவ ஆசாரியர்கள் தான். உண்டனே அவர்களை த்வேஷித்து அச்சு பிச்சு வார்த்தைகள் நான்கு ஏழு வேண்டும். அப்போதானே வயிற்று புண் ஆறும் உமக்கு.

    சார் முஸ்லிமுக்கு மொழி அறிவு கம்மி சார் அதான் சார் பீ ஜே ஏதோ மாதிரி பேசுறார். அவர் வழக்கில் உள்ள தமிழா பேசுறார். அத்தனையும் காயல்பட்டின பரிபாஷை. உண்மையாக பார்த்தால் தமிழை கொச்சிய படுத்தி பேசுகிறார் என்று சொல்ல வேண்டும், அது உங்களுக்கு இனிக்கிதோ.

    //
    1.வடமொழியே சொல்லித்தரா சிபிஎஸ்ஸீ பள்ளிகள் இந்தியா முழுவதும் உண்டு. அவர்கள் எல்லாரும் ஏன் கொண்டாட வேண்டும்? இது வடமொழிக்கு பிரச்சாமில்லையா?
    //
    இது கேள்வியா. எதற்கு ஆங்கிலம் கட்டாய மொழியாக எல்லா பள்ளிகளிலும் உள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரசாரம் இல்லையா.

    //
    2. ஏன் அங்கு இரண்டாம் தாளாக இருக்கும் ஃப்ரென்சையோ, ஜர்மனையோ, தமிழையோ, வங்காளத்தையோ, மராட்டியையோ, தெலுங்கையோ, மலையாளத்தையோ, சிறப்பு வாரத்தில் கொண்டாடுங்கள் என சுற்றறிக்கை விட வில்லை மோதி?
    //
    இது அந்தந்த பிராந்திய மாநிலங்கள் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து கொள்ளலாம். மத்திய அரசின் செயல் பாடுகள் பாரத்தை ஒருமை படுத்துவதாக இருக்க வேண்டும். அதை சமக்ஸ்ருதம் சாதிக்கும். இதை பாரத்தின் பல தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் (மக்களும் கூட). சில மாக்கள் தான் சவுண்டு விடுகிறார்கள்.

    //3. ஏன் வடமொழிக்கு மட்டும் தனி மரியாதை? தமிழோ, தெலுங்கோ எந்த விதத்தில் குறைந்துவிட்டது?
    //
    எவ்விதத்திலும் குறைவில்லை. தமிழ் மாநாடு நடத்த கூட தான் மத்திய அரசு காசு கொடுக்கிறது.
    அந்த அந்த பிராந்திய மொழியையும் கட்டாயமாக அவ்வப் பிராந்திய CBSE கல்லூரிகளில் படித்தே தீர வேண்டும்.
    சமஸ்க்ருத வார கொண்டாட்டம் என்பது ஒரு initiative. நீங்கள் கேட்பது எப்படி என்றால் அம்மா காண்டீனில் எதற்கு இட்லி போடுகிறார்கள் இடியாப்பத்திற்கு என்ன கேடு. இட்லி தமிழ் ஹிந்துவின் உணவு. ஏன் பிரியாணி போடா வேண்டியது தானே என்பது போல இருக்கு.

    //
    4. தமிழர்கள் ஏன் வடமொழி வாரத்தை ஆதரிக்கவேண்டும்?
    //
    ஆதரிக்க வேண்டும் என்று யாரவது அறிக்கை விட்டார்களா. தமிழர்கள் ஏற்கனவே சமஸ்க்ருதத்தை ஆதரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். despite galdwel and mccaulay. despite Kazhagams.

    தமிழாக CBSE பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சமஸ்க்ருதத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். படிப்பது மாணவர்கள், காசு கொடுப்பது பெற்றோர்கள். சரியா.

    மத்திய அரசு, சமஸ்க்ருதத்தை பற்றி பாரதத்தை பற்றி சரியான விழிப்புணர்வு ஏற்பட இதை செய்கிறது. சமஸ்க்ருதம் பயிலாத மாணவனை வலுக்கட்டாயமாக சமஸ்க்ருதத்தில் சேர்ப்பிக்க முயற்சி செய்ய வில்லையே.

    இது பாரத்தை உண்மையிலேயே ஒருமை படுத்தும் முயற்சி. உங்கள்ளுக்க் வயிறு பற்றி எரிகிறது, தமிழனும் விழித்திடுவானோ. நாம் அப்புறம் எப்படி அம்மாவாசை ஜபக் கூட்டம் நடத்தி காசு பார்ப்பது. அல்லாஹு அக்பர் சொல்ல, குண்டு வைக்க எப்படி ஆள் பிடிப்பது. கஷ்டம் தான் போங்கள்.

    ஹிந்துக்கள் சமஸ்க்ருதத்தை தேவ பாஷை என்பது அது திவ்யமான பாஷை என்பதால் தான். தேவர்கள் பேசும் பாஷை தேவ பாஷை. அது எல்லா மனிதர்கின் பாஷை கூடத்தான். இந்த புரட்டு பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்து போந்தது ஆங்கிலர்கள் தான்.

    சரி ஹீப்ரு லத்தீன் கதை என்ன. ஆங்கிலம் தேவ பாஷை என்று எதற்கு எவனேனும் சொல்ல வேண்டும். ஹீப்ருவை தேவ பாஷை என்று தானே அலும்புகிரீர்கள்.
    அராபிய மொழியை பற்றி ஸல் அவர்களின் அலம்பல் உங்களுக்கு தெரியாது. இந்த வாதத்தை கை விடும்.

    //ஒன்றுக்கும் உதவா மொழியை அரவிந்தன் ஆதரிப்பதேன்//
    இதை சொல்ல உமக்கென்ன தகுதி இருக்கு. இதே வாக்கில் போனால், தமிழ் படிப்பதாலோ தெலுங்கு படிப்பதாலோ என்ன பயன் இருக்கு. ஆங்கிலம் படித்தால் உலகெங்கும் வேலை. கரோல் பாகில் காபி கடைக்காரன் கூட ஆங்கிலம் பேசுகிறான்.

    மொழியை வர்த்தக நோக்கில் பார்ப்பவன் கேவலமாணன் தான். இதற்கு தான் எலிசரை பற்றி படியுங்கள் என்று சொன்னேன். மொழி நம்மை விட பெரியது. அதை வணங்கி ஆதரிக்க வேண்டும்.
    காசு பண்ண மொழி என்பது மேற்கத்திய சிந்தனை. எல்லா வற்றையும் ஒரு கருவியாக மட்டுமே காணும் உருப்படாத எண்ணம் அது. அதன் சாதக பாதகங்களுக்குள் இப்போ புக வேண்டாம்.

    “சம்ஸ்ரித் பாரத் கா ஆத்மா ஹை” சொன்னது மண் மோகன் சிங்கு. இது உண்மையும். உங்கள் பதில்களில் எத்தனை எத்தனை சமஸ்க்ருத சொற்கள் உள்ளன என்று ஒரு தபா கணக்கு கூட்டி பாருங்கள்.
    சங்கம், காரணம், இலக்கணம், மனம், படிப்பு, வாசம், வாரம்,

    என்ன தான் நீங்கள் தலை கீழாக நின்றாலும். வட மொழி வாரம் ஏன் கூடாது என்று அறிவு பூர்வமான வாதத்தை முன் வைக்கவே முடியாது. ஹை கோர்ட்டும் ஒருவர் போட்ட மனுவை தள்ளு படி செய்தாகிவிட்டது.

  105. //நீங்கள் வடமொழியைக் கற்காவிட்டாலும் போகிறது. தூற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

    வடமொழியை இங்கு எவரும் தூற்றவில்லை. சுவனப்பிரியன் சொன்னது போல அனைத்து மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவை. எனவே தூற்ற முடியாது. தமிழ் தாழ்ந்தது என்று ராமா என்பவர்தான் இங்கு எழுதுகிறார். இக்கட்டுரையோ தமிழப்பற்றி ஒரு வரி சொல்லாமல் வடமொழியைத தமிழர்கள் கற்கவேண்டும் என வரலாற்று ஆதாரங்களைச்சொல்லி சிபாரிசு செய்கிறது. தமிழைக் கற்போரே தமிழரில் அருகி நிலைமை மோசமாக இருக்க, இன்னொரு மொழி, அதுவும் அன்றாட வாழ்க்கைக்குப் பலனில்லா மொழியை ஆதரிக்கிறார்கள் இவர்கள். ஏன் என்று கேட்டவரெல்லாம் தி.க காரர்கள் எனச் சொல்லி வாயை அடைக்க முயல்கிறார்கள்.

    தமிழருக்குத் தமிழ் தாய்மொழி. அதாவது தாயைப்போன்றது. தமிழை வைத்தே தமிழருக்கு அடையாளம். தமிழ்நாட்டை வைத்தன்று. உலகமெங்குமுள்ள தமிழர், தாம் வாழும் நாட்டை வைத்து தம்மைத் தமிழர் எனவழைத்துக்கொள்ளவில்லை. தம் தாய்மொழியை வைத்தே.

    ஒருவனுக்கோ ஒருத்திக்கோ, ஒரே ஒரு தாய்தான் இருக்கமுடியும். அந்தத்தாய், எவ்வளவுதான் சமூகத்தில் இழிவு செய்யப்பட்டாலும், அவள் பிள்ளைக்கு சுபதேவதை. இன்னொரு தாயை எடுத்து தன் தாயைவிட மேலாக எவருமே வைக்கமாட்டார். தன் தாயே மேல். மற்ற பெண்கள் எவ்வளவுதான் நல்லோராயின், தன் தாய்க்கு ஈடாக மாட்டார். வானத்தில் ஒரு நிலவுதான் இருக்க முடியும். மற்றவையெல்லாம் நட்சத்திரங்களே. தாயிற்சிறந்ததொரு கோயிலில்லையென‌ தெய்வத்தைவிட மேலாக வைத்தார் பழந்தமிழர்.

    இப்படி பார்த்தால், எப்படி வடமொழியையும் தமிழையும் இரு கண்களாக வைக்கமுடியும் தமிழரால்? இரு கண்கள் என்றால் இரண்டும் ஒரேயிடத்திலல்லா? வடமொழியும் தமிழும் இருகண்கள் என்று சொல்லிக்கொண்டே எப்படி நாக்கூசாமல் தமிழ் என் தாய்மொழி என்று சொல்ல முடிகிறது உங்களால்?

    உங்களுக்கு அடையாளம் கொடுத்த தாயை, உங்களுக்குப் பாலூட்டியத் தாயை இப்படி இழிவு செய்யலாமா ? அடித்துச்சொல்வேன்: தமிழர் தமிழுக்கு முதல்மரியாதை செய்துவிட்டு பிறமொழிகளுக்குப் போகலாம். கட்டுரையாளருக்குச் சொல்வேன்: தமிழ்நாட்டில் தமிழுக்குத்தான் முதலிடம். ஒருவர்தான் அமரமுடியும். பங்குபோட முடியாது.

    வடமொழியே தெரியாமல் அம்மொழி தமிழைவிட உயர்ந்தது என்று சொன்னவர் (ராமா) மட்டும் தொட்ர்ந்து படிக்கவும்.

    பாரதியார் பலமொழிகள் தெரிந்தவர். ஆங்கிலம், தாய்மொழி தமிழ், ஹிந்தி, ஃப்ரெஞ்சு. என்று. என்னைவிட ஆங்கிலப்பிரியர். ஷெல்லியின் கட்டுரைத் தொகுப்பை தன் கோட்டுப்பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே கங்கைபடித்துறையில் சுற்றியவர். அவ்வப்போது மதுவை உறிஞ்சுவது போல, அக்கவிதைகளைப் படித்து உண்ர்ச்சிவேகம் கொள்வார். ஷெல்லிதாசன் எனவும் தன் பெயரை மாற்றிக்கொண்டவர். வடமொழியில் தேர்ச்சி பெற்றவ்ர். சென்னை பல்கலைக்கழகம் வடமொழி தேர்வுத்தாளில் ஏகப்பட்ட பிழைகள் போட்டு மாணாக்கருக்கு வழங்கியதை, ஒவ்வொரு பிழையையும் விளக்கி, நீண்ட கண்டன கட்டுரை வரைந்தவர். இப்படிப்பட்டவர் சொல்கிறார்:

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதானது எங்கும் காணவில்லை.

    என்ன இவர் உளறுகிறாரோ என நாம் நினைத்துவிடக்கூடாதென்று:

    இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை

    என்று நம்மைக் குட்டுகிறார்.

    தன் இரண்டாம் பெண்ணுக்கு இவர் சொன்னது. அவளுக்காகத்தான் அந்த பாட்டையே எழுதினார். ஏன் எப்போது எனப்து ஒரு துயரக்கதை. இப்போது வேண்டாம். வடமொழி புலமை பெற்ற பாரதி, தன் பாப்பாவுக்கு சொல்கிறார்:

    ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

    எனச்சொல்லி, அதை எப்படி படிக்கவேண்டுமெனவும் அறிவுறுத்துகிறார்:

    அதைத் தொழுது வணங்கி படிக்க வேண்டும் பாப்பா!

    இதே போல வடமொழிப்புலமை மிக்க கம்பன் சொல்கிறான்:

    //தன்னேரில்லாத் தமிழ்//

    மிகையோ நகையோ, உங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம், பாரதியாரும், கம்பனும் வடமொழிப்புலமை வாய்ந்தவர்கள். தமிழுக்கு ஈடாக எம்மொழியையும் வைத்துப்போற்றவில்லை. தமிழ்த்தாய் ஈன்றெடுத்த நல்ல குழந்தைகள். பாலூட்டிய தாயை எட்டி உதைக்கா பிள்ளைகள்.

  106. மதிப்பிற்குரிய. தாயுமானவன் அவர்களுக்கு……

    தாங்கள் கதிரவனுக்கு மிக அருமையாகவே பதில் அளித்துள்ளீர்கள். அதில் எவ்வித ஐயமும் தங்களுக்கு வேண்டாம். அவர் மனு தர்மம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டதற்கு தக்க பதிலை தாங்கள் அளித்து விட்டீர்கள். இதற்க்கு மேல் மனுதர்மத்தின் புனிதத்தை பற்றி அது சமுதாயத்திற்கு கூற வரும் நல்ல விடயங்களையும் க்ருஷ்ண குமார் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்று கூறட்டுமே.

    மற்ற எவரை காட்டிலும் தங்களின் பதில்களில் வடமொழியின் கலப்பு மிக மிக சொற்பமே. தாங்கள் “அர்தமற்ற கோஷத்தை” கூறுவதாக க்ருஷ்ண குமார் கூறுவதெல்லாம் அர்தமற்ற உளறல்களே, உண்மையான மதியீனர் அவர்தான். அதை கண்டு கொள்ள வேண்டாம். உபநிடதத்தில் மாட்டிறைச்சி உண்டால் அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்கிற உண்மையை போட்டுடைத்ததற்க்கு நன்றி. தங்கள் சாத்திர நூல்களிலேயே கோ மாமிசத்தை பற்றி கூறி இருப்பதை மறைத்து மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக, எதிராக என்பதை விட உண்பதை பாவமாக பேசும் ஆர்.எஸ்.எஸ் போன்ற மோசடி பேர்வழிகளை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.

  107. ////தன்னேரில்லாத் தமிழ்////

    The following is not relevant to the topic. Excuse me.

    இஃதொரு வெண்பாவின் கடைசி வரி. ஆசிரியர் எவரென்று போடாமல் மொட்டையாகத்தான் கிடைத்தது. இங்கு முதல் பின்னூட்டக்காரர் சொன்னது போல ஒரு புரட்சிப்புலியோ, அல்லது கட்டுரையாளார் சொன்னது போல, திராவிடக்குஞ்சுகளில் ஒன்றோ என நினைத்துவிட்டேன். பின்னர் இது கமப்னதான் எனக்கேட்டறிந்தவுடன் மலைத்துவிட்டேன். முதலிலேயே என் மூளை வேலைசெய்திருக்க வேண்டும் அந்த முதல் மூன்றடிகளைப்படித்தவுடன். அவ்வளவு சுவையானவை. ஒரு extra-ordinary கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டுமென.

    இதே போல இன்னொரு நிகழ்ச்சி:

    ஒரு பக்கோடா பொட்டலத்தாளில் இவ்வரிகளைப்படித்தேன்:

    இருந்தமிழே உன்னால் இருந்தேன். இமையோர்
    விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

    ஒரு புரட்சிப்புலியின் உளறல் இது என்று நினைக்கத்தோன்றியது. ஆனால் வடமொழி படிக்காமல், ஆங்கிலமும் படிக்காமல், தமிழே தன் வாழ்க்கை என தன் வாணாளைச் சிற்ப்பாகத் தமிழோடு கழித்த உ வே சா என்னைப்போல சின்னப்புத்திக்காரன்று. அவருக்கு இவ்வரிகளைப்படித்தவுடன், இதை எழுதியவனுக்கு இருக்கும் தமிழ்க்காதல் அலாதியானது. அவனின் பிறவரிகள் கிடைக்குமா என்றலைய,

    அடடே ! கிடைத்தே விட்டது. மதுரையில். அதுவும் எங்கே மதுரை அக்கிரஹாரத்தெருவில் (இன்னும் அதே பெயர்தான்).

    இது விடுதூது என்ற சிற்றிலக்கியம். அன்னத்தை விடுவார்கள். கிளியை விடுவார்கள். காளிதாசன் மேகத்தை விடுவார்.

    நம் ஆளோ, தமிழின் மீது தாளாக்காதல் மட்டுமன்று; தமிழ் தன்னைக் கைவிடாது என்ற் நம்பிக்கையோடு, தமிழையே தூதாக விடுகிறார். அவர் காதலனிடம். அக்காதலன் சொக்கநாதர் (அவருக்கு ஏற்கனவே கலியாணம் மீனாட்சியோடு ஆகிவிட்டது எனத் தெரிந்தும் அதாவது கள்ளக்காதல் :-))

    இனி தொடர்ந்து இத்தளத்து வடமொழிக்காதலர்கள் படிக்கவும்.

    தமிழ் விடுதூது என்ற இச்சிற்றிலக்கியத்தின் ஆசிரியர் யார்? அவர் பெயரைச்சொல்லவில்லை. நூலை முழுமையும் படித்தால், அவர் மீனாட்சி கோயில் குருக்களில் ஒருவர்தான். இன்னூல் அக்கோயிலைப்பற்றியும் பூஜை விடயங்களைப்பற்றியும் பகர்வதால். அக்கால குருக்கள் (14ம் நூற்றாண்டு) வடமொழிப்புலமை வாய்ந்தவர்கள். அவர்களுள்ளே ஒரு தமிழ்க்காதலன். வியப்பன்றோ!

    தாயுமானவன், இந்த நூலைத் தேடிப்படித்து தமிழ்.ஹிந்து வாசகருக்காக ஒரு கட்டுரை வரையவும். இந்நூல் சொக்கநாதரை வணங்குவோருக்காக எழுதப்பட்டது எனவே தாயுமானவன் பொருத்தமானவர். நான் படித்தேன், இரசித்தேன். ஆனால் எழுதுவதில்லை. எப்படி அரங்கனையில்லை; அரனைத்தான் என்று அவர் சொன்னாரோ, அப்படி அரனையில்லை; அரங்கனைத்தான் எனபது என்கட்சியாதலால். மன்னிக்கவும்.

  108. இப்போதைய பாலா

    //
    இசுலாத்திலும் சில பிடிக்கா விடயங்களைவிட்டுவிட்டு மற்றவைகளைப்பிடித்து இசுலாமியராகி விடலாமே சாரங்கன்?
    //

    உங்களுக்கு வேண்டுமானால் மதம் என்பது ஒரு வசதிக்காக சட்டை மாற்றுவது போல் இருக்குலாம். நாங்கெல்லாம் கொஞ்சம் சீரியசான ஆட்கள். சரியா.

    செமேடிக் மதங்கள் ஒரு மிருகம் போன்ற ஜந்துவை கொஞ்சம் எப்படி மனிதனாக மாற்றலாம் என்று முயற்சி செய்கின்றன. அதற்காக தான் இயேசு மீது அவ்வளவு இட்டுக் கட்டுகிறீர்கள், நீங்கள் இட்டுக்கட்டும் அவ்வளவும் பாரத்தில் ஒரு சாதாரண மனிதனும் அறிந்து பேணி வருவது. இங்கே அதற்கு அவசியம் இல்லை. அதனால் தான் நீங்கள் நேர் வழியில் பிரசாரம் செய்யாமல், தூஷனை செய்கிறீர்கள் அல்லது ஒரு மனிதனின் கஷ்ட காலத்தை பார்த்து அதை பயன் படுத்தி மதம் மாற்றுகிறீர்கள். லாட்டரி சீட்டு வாங்கு கொட்டும் என்பது போல, மதம் மாறும் துக்கம் சந்தோஷமா மாறும் என்கிறீர்கள். இத செய்ய திராணி இல்லாத சிலர் குண்டு வைத்து, கற்பழித்து பிரியாணி கொடுத்து மதம் மாற்றுகிறார்கள்.

    இஸ்லாத்தில் சில பிடிக்கா விஷயம் உள்ளன என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. பிரச்சனையை என்னான்னா கேவலமான விஷயங்களை நீக்கினால் தேறுவது நாளே பக்கம். அதுவும் இந்தியாவில் பாமரனும் அறியும் விஷயம்.

    ஒரு வெள்ளி கிழமை தொழுகைக்கு போய் வருபவன் முகம் கோவத்தில் பொங்குகிறது, வெறியுடன் தெரிகிறது, ஒரு ஞாயிற்று கிழமை கூட்டத்திற்கு போய் வருபவனின் முகம் பேய் அறைந்தது போல் செத்துக்கிடக்கிறது.

    என்னைக்கு வேன்ம்னாலும் கோவிலுக்கு போய் வரும் ஒருவனின் முகத்தில் ஆனந்த அலை தெரிகிறது.

    வெறிகொண்டவனுக்கு அரிவாள் ரத்தம். பேய் அறைந்தவனுக்கு கண்டேதேல்லாம் பயம். அனந்தம் கொண்டவனுக்கு அமைதி.

    //
    தலித்து பையனென்றால், உங்கள் ஜாதிப்பெண் அவனோடு ஓடத்தான் செய்ய வேண்டும். ஏனெனில், கட்டிக்கொடுக்கமாட்டீர்கள். வன்னியரென்றாலோ, தேவரென்றாலோ, அடித்து கொன்று விடுவார்கள். நீங்கள் பரவாயில்லை. ரொம்ப மனிதாபிமானம். அடிக்கமாட்டீர்.
    //
    christaim brahmins என்று ஒரு web site கூட இருக்கு போல. எங்க ஊர்ல கண்ணாலம் கட்டுவது புள்ள பெத்துக்க மட்டும் இல்ல. அத சீரியாசாக பார்க்கிறோம். இரு வரும் சேர்ந்து கர்மங்களை, கடமைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சம்ப்ரதாயம் இருக்கும். அதை சரி வர செய்ய ஒத்த ஜாதியில் திருமணம் செய்கிறார்கள். ஒரே தட்டில் இருக்கும் இரு வேறு சாதியினர் கூட மாற்று திருமணம் செய்வதில்லை என்பதற்கு இதுவே காரணம். ஆனால் இப்போதெல்லாம் கடமையாற்ற வேண்டும் என்று பலர் திருமணம் செய்வதில்லை. அதனால் இந்த கட்டுப்பாடு இப்பொழுது அவசியமற்றது.

    எத்தனை சவுதி ஆண்கள் இந்திய முஸ்லிமு பெண்களை உண்மையாக கல்யாணம் செய்வார்கள். எத்தனை ஜூ ஆண்கள் வேறு மத பெண்களை கண்ணாலம் கட்டுவான்.

    கிறித்தவ பெண்ணை கண்ணாலம் கட்ட எதற்கு மதம் மாற சொல்கிறீர்கள். முஸ்லிம்கள் கண்ணாலம் பண்ண ஏன் மதம் மாற வைக்கிறார்கள்.

    இதெல்லாம் சமூக வழக்குகள், இதை காலம் மற்றும், இதை வைத்துக் கொண்டு எதையோ எதனுடனோ கஷ்டப்பட்டு முடிச்சு போடுகிறீர்கள்.

    மேலும் எதோ தமிழக கழக கண்மணிகள் உத்தமர்கள் போல எதையோ தடுக்கிறார்களாம். அவர்கள் எதற்காக வாழ்கிறார்கள் என்பது இப்பொழுது உலக பிரசித்தம். அவுக c.i.t காலனி வீடலா சீக்ரெட்டா ஒரு யாக சாலை மட்டும் வைப்பார்கள். அவுக பத்தினிங்க கோவிலுக்கு போய் சாமி தமிழ்ல அர்ச்சனை வேண்டாம் நீங்க எப்போதும் செய்யற படியே செய்யுங்க என்பார்கள்.
    போயும் போயும் யார கூட்டணி சேர்கிறீர்கள் பார்த்தீர்களா. ஹிந்துக்கள் அனைவரும் அம்மாவுக்கு ஒட்டு என்றால் அம்மா உடனே அந்தர் பல்டி அடித்து சமஸ்க்ருத மாதமே கொண்டாடுவார்கள். இன்றைக்கு இஸ்லாமிய ஒட்டு வேண்டும், கிறிஸ்தவ ஒட்டு வேண்டும் அதற்காக ஒரு சால்ஜாப்பு கடிதம். ஆனால் மண்ணை கவ்வியாகிவிட்டது. இந்த போராட்டம் தமிழ்நாட்டில் எடுபடவே இல்லை. ரெம்ப பாவம்.

    அரவிந்தனின் இந்த கட்டுரை சமஸ்க்ருத வாரம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியதல்ல. அதல் அவருக்கு சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை, சில விஷக் கிருமிகள் இதை எதிர்த்து டுஷ்ப்ரசாரம் செய்யும். அதை எதிர்கொள்ள ஹிந்துக்கள் தக்க விதமாக தங்களை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

  109. “வடமொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம், இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமாம்” என்கிறது மோடியின் அறிக்கை ஆனால் அவரது ‘ராஜகுரு’ சமக்கிருதவாதி சோ ராமசாமி என்னடாவென்றால் சமக்கிருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம். இந்த மொழிக்கு ஒரு சிறப்புச் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு யாரோ ஸம்ஸ்க்ருத வாரம் கொண்டாடும் யோசனையை முன் வைத்திருக்கிறார்கள்” என்கிறார். சமஸ்கிருதம் சமைக்கப்பட்ட கிருதம், அதாவது உருவாக்கப்பட்ட மொழி என்றும் கூறுகின்றனர். வேறு மொழிகளிலிருந்து, குறிப்பாக தமிழிலிருந்து அதிகளவு வேர்ச்சொற்களை சொற்களை இரவல் வாங்கி உருவாக்கிய Refined மொழி தான் தமிழ் என்றும் பல தமிழர்கள் வாதாடுகின்றனர். “நன்றாகச் செய்யப்பட்ட மொழி” என்று சோ ராமசாமி கூறுவதன் படி பார்த்தால் சமஸ்கிருதம் original language அல்ல, அது ஒரு derivative language என்பது தெளிவாகிறது. ஆகவே உருவாக்கப்பட்ட மொழி எப்படி மற்ற மொழிகளுக்கெல்லாம் தாயாக இருக்க முடியும் என்பதை அறிக்கையை வெளியிட்டவர்கள் தான் விளக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் வடமொழியை வளர்த்தவர்கள் தமிழர்களும், தமிழ் மன்னர்களும் தான். அக்காலத்தில் சமக்கிருதத்தைத் உயர்வானதென்று கூறி தமிழை யாரும் இழிவுபடுத்தவில்லை. ஆனால் இன்று பல சமக்கிருதவாதிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழை இழிவுபடுத்துகிறார்கள், தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை எதிர்க்கிறார்கள். அதனால் தான் வடமொழியை எதிர்க்கும் நிலைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தள்ளப்பட்டார்கள். ஆனால் இலங்கையில் தமிழுக்கு சமவுரிமை வேண்டுமென்பதற்காக போரிட்டு தமதுயிர், உடமை எல்லாவற்றையும் இழந்த ஈழத்தமிழர்களிடம், தமிழ்நாட்டைப் போல் சமக்கிருத எதிர்ப்புக் கிடையாது அதற்குக் காரணம், இலங்கையில் சமக்கிருதவாதிகளும் கிடையாது, அங்குள்ள பார்ப்பனர்கள் தமிழை எதிர்க்கவில்லை, தமிழில் தேவாரம் பாடுவதைத் தடுக்கவில்லை, அல்லது சமஸ்கிருதம் தமிழுக்குத் தாய் என்றும் உளறவில்லை. அதனால் செத்துப்போன மொழியாகிய சமக்கிருதத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பதற்குக் காரணம் அந்தச்செத்துப் போன மொழியை தமிழுடன் ஒப்பிட்டு தமிழர்களின் தமிழுணர்வைச் சீண்டிப்பார்க்கும் தமிழ்நாட்டுச் சமக்கிருதவாதிகள் தான்.

  110. தாயுமானவன்

    உங்களத்து சமஸ்க்ருத வெறுப்புக்கு காரணம் தமிழ் மொழிப்பற்றல்ல உங்களது மதப்பற்று தானே. அதை வெளியில் சொல்ல முடியாமல் இப்படி காட்டுகிறீர்கள்.
    காழ்புணர்ச்சி இல்லை என்று சொல்லிவிட்டு அம்மொழியை செத்த மொழி என்று சொல்வது என்ன லட்சனத்திலோ.

    சம்பந்தர் பெருந்தன்மியா காட்டினார் என்று எதோ சிறுமை படுத்துகிறீர்கள். சமஸ்க்ருத மொழி உலகளவில் பல மொழிகளுக்கு தாய். இதை யோக்கியமான எந்த ஆராய்ச்சியாளனும் ஒத்துக் கொள்வான். அந்த அடிப்படையில் வந்த சுற்றறிக்கை, அதை பார்த்து வயிறு எறிவானேன். பாநியத்தை எதிர்க்கும் நீங்கள் தமிழிலும் எதற்காக ஏழே ஏழு வேற்றுமை உருபுகள் என்று கேக்கலாமே. தமிழிலிருந்து சமஸ்க்ருதம் காப்பி அடித்தது என்று வேறு சொல்வீர்கள். நேர்மையான மொழி ஆராச்சியாளன் எவனும் இதை ஒத்துக் கொள்ளமாட்டான்.

    தெலுங்கனிடம் போய் தெலுகுவிற்கு மூலம் தமிழ் என்றால் அவன் ஒத்துக் கொள்வானா, மாட்டான், ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளன் ஒத்துக் கொள்வான்.

    உலக அளவில் சமஸ்க்ருத்தின் தாக்கம் என்பதற்கு ஒரு சிறு உதாஹரணம். சுவீடன் என்ற நாட்டை அறிந்திருப்போம் எல்லாம் ராஜீவ் காந்தி புண்ணியம். அந்த நாட்டிற்கு ஸ்வீடிஷ் மொழியில் பெயர் sverige. அவர்கள் கால் பந்து விளையாடும் போது சட்டையில் தென்பெடும் பெயர் இதுதான். அவகளது மொழியில் இதற்க்கு அர்த்தம் சொந்த நாடு என்றதாம். அட ஸ்வராஜ் என்று நாம் அதை தான் சொல்லுகிறோம்.
    ராஜ என்றபது சமக்ஸ்ருத்த பதம் அதை நீங்கள் அரசன் என்று மாற்றி வைத்துக் கொண்டால் சமஸ்க்ருதம் செத்து விடுமா.
    சமஸ்க்ருதம் தமிழில் எவ்வளவு தூரம் கலந்துள்ளது என்று உங்களுக்கு புரிந்ததா (ஸ்புரதி) இல்லையா. பம்பரம் (பம்ப்ரமதி) மாதிரி நீங்கள் ஒரே இடத்தில் சுற்றுவது ஏனோ. தாகம் (தாஹ:) எடுத்தால் தண்ணி குடிப்பீர்களா மாட்டர்களா. தமிழகத்தில் மட்டும் பல பல லட்சம் (லக்ஷம்) மாணவர்கள் (மனவக:) சமஸ்க்ருதம் படிக்கிறார்கள் (படதி).

    தனி இலக்கணம் தனி இலக்கணம் என்று சொல்கிறீர்கள், அதையும் தொட்டுப் பார்ப்போமா.

    தமிழின் உயர்வே அதிலுள்ள இலக்கியத்தினால் தான். இதை யாரும் மறுக்க முடியாது. இதற்காக ஒவ்வொரு வடகத்தியனும் தமிழ் கற்றால் தப்பில்லை. கொஞ்சம் சிரமப்பட்டால் கர்ருவிடுவான், அவன் பேசும் பாஷையில் உள்ள 40 % சொற்கள் தமிழிலும் உள்ளதாம், ஆராய்ச்சி செய்து சொல்கிறார்கள்.

  111. உயர்திரு சாரங் அவர்களே,

    // வேதம் இருப்பது சந்தசீ என்னும் பாஷையில் அது சமஸ்ச்க்ருதம் ஆகாது.//
    இதை நான் பல வடமொழிப் பிரியர்களிடம் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறேன். வேதமொழியான “சந்தஸ்”தான், வடமொழியான சம்ச்கிருததிதிற்குத் தாய், பாணினி அமைத்த இலக்கணத்தை அடிப்படியாகக்கொண்டு, எழுந்த மொழிதான் சமஸ்கிருதம், அதாவது, நன்றாகச் செய்யப்பட்டது என்று சொன்னால், என்னை “பிரம்மத் துவேஷி” என்று திட்டவும் துவங்குகிறார்கள். உங்களிடமிருந்தே நான் சொல்லிவந்தது உறுதிப் படுத்தப்பட்டதைப் படிக்கும்போது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்ற விசுமாமித்திரருக்கு எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

    ஈஸ்வரோ ரக்ஷது!

  112. உயர்திரு தாயுமானவன் அவர்களே,

    // ” வடமொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம், இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமாம்”.//

    இது மாபெரும் அபத்தம் என்பது யாரும் அறியாததா? மோடி ஒரு மொழி ஆராய்வாளர் அல்லர். அவர் சொல்வதை நாம் காதிலேயே வாங்கக்கூடாது. ஆயிரம் ஆயிரம் ஆராய்ச்சிகள் தமிழ் மொழி தனிக் குடும்பம் என்று திட்டமாய்க் கூறிவிட்டன. வடமொழிக்கும், ஆங்கிலத்திற்கும்கூட மொழி உறவு இருக்கிறது. ஆனால் தமிழுக்கும், வடமொழிக்கும், மொழி உறவு இல்லை. இரண்டும் ஒரே காலத்தில் தோன்றியவைதான். வடமொழியிலும் தமிழ்ச் சொற்கள் உள்ளன.

    மோடியை விடுங்கள், நமது தென்னாட்டு மொழிக்காரர்களே (கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும்) அவர்கள் மொழி வடமொழியிலிருந்து வந்தது என்றே சொல்வார்கள். இங்கு என்னிடம் அப்படிச் சொல்லும்பொது, பொறுமையாக, அவர்களை மொழி வினைச் சொற்களும், தமிழ் வினைச் சொற்களும் ஒன்றாக இருப்பதைக் காட்டி, அவர்கள் மொழியில் வட சொற்கள் மிகுந்து இருப்பதால், அவை வடமொழியில் இருந்து வந்தவை என்று எடுத்துக்காட்டி, அவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறேன்.

    நீங்களும், அவ்வழியையே பின்பற்றுங்கள். மோடிக்குத் தெரியவில்லை என்றால், தமிழக பா.ஜ.க., ஆர்,எஸ்.எஸ். நண்பர்கள் மூலம், அரவிந்தன் நீலகண்டன் மூலம், அவரது தவறைச் சுட்டிக் காட்ட முனைவதே ஆக்கபூர்வமானது.

    // சமற்க்ருதம் தமிழ் மொழியின் தாய் என்று கூறினால் இந்த கேவலத்தை எதிர்த்து தமிழர்கள் போராட மாட்டார்களா//

    இது கேவலம் அல்ல. சொல்பவர்களின் அறியாமை. அறியாமை என்பது இருட்டுக்குச் சமமானது. இருளை அகற்ற ஒளிவிளக்கைத்தான் துணைக்கொள்ளவேண்டுமே தவிர, வெடிவைத்து இருட்டை நீக்க முயலலாமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
    அன்பே சிவம் என்று உணர்ந்த நீங்கள், முதலில் அன்புவழியைப் பின்பற்றிப் பாருங்கள்; அது பயன்தராது போனால், சிவனின் அம்சமான உருத்திரரைப் பின்பற்றலாம்.

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஓம் நமச்சிவாய!!!

  113. உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கும், அவருக்கு நான் கொடுத்த பதிலை படிக்கும் அன்பர்களுக்கும்,

    நான் உங்களுக்குக் கொடுத்த பதிலில் வலைஎற்றத்தில் ஒரு பிழை நேர்ந்துவிட்டது.

    // அவை வடமொழியில் இருந்து வந்தவை என்று எடுத்துக்காட்டி, அவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறேன்.// என்பதில் “அல்ல” என்ற சொல் விட்டுப்போய் இருக்கிறது.

    “அவை வடமொழியில் இருந்து வந்தவை அல்ல என்று எடுத்துக்காட்டி, அவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறேன்” என்று திருத்திப் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

  114. பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    //ஒரே புனைவில் சைவம் சமணம் என்ற இரண்டையும் நாசூக்காக இழிவு செய்யும்படிக்கு ஒரு புனைவு//
    இது உங்கள் வாதமே. எனது கருத்து அல்ல.

    \//சமணர்கள் அனைவரையும் அரக்கத்தனமாக கழுவேற்றிய மாபாதகர்கள் சைவர்கள் என்று ஒரு பக்ஷம். அப்படி கழுவேற்றத் தக்கவர்கள் சமணர்கள் என்பதாக சித்தரிக்க முனைந்தமை மற்றொரு பக்ஷம்.//
    தாங்களே இப்படிக்கூறினால் என் செய்வேன்? இருப்பினும் பதில் அளிக்கக் கடமைப்பட்டவன் ஆகிறேன்.

    சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரே தமது மூன்றாம் திருமுறையில் திரு ஆலவாய்ப்பதிகங்களில் பகர்ந்ததைத் தங்களுக்குக் கீழே தந்துள்ளேன்.

    1. மங்கையர்க்கரசியார் மதுரையில் காழிபில்லையாரைக்கண்டு, அவருக்குச் சமணர்களால் தீங்கு வருமோ, அவர்களை வாதில் வெல்ல இயலுமா என்று அஞ்சியபோது அருளிச் செய்தது:
    அத்தகுபொரு ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமா
    ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
    சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
    சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே. 3.39 .3.
    பொழிப்புரை :
    கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது , இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும் , ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று , எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர் . பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு , நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன் .
    பிள்ளையாருக்கு சமணர்மேல் உள்ள சீற்றம் “கவிப் பெயர்ச் சத்திரத்தின் (ஆயுதத்தின்) மடிந்தொடிந்து” என்பதிலும், “சித்திரர்க்கு எளியேன் அல்லேன்” என்பதிலும் புலப்படவில்லையா?
    2. காழிப்பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்கு எரியூட்ட முற்பட்ட சமணர்களின் தீ, பாண்டிய மன்னனைப் பற்றட்டும் என்று பணித்தார். சமயத்திற்குப் புறம்பான பொய்களைச் சொல்பவர்கள் சமணர்கள் என்றும் குறிப்பிட்டார். தமது இருப்பிடத்திற்கு எரியூட்டியவர்கள் சமணர்கள்தான் என்று அறிந்தும், அவர்கள் மீது காழ்ப்பு காட்டாது, மக்கள் செயலுக்கு மன்னனே பொறுப்பு, ஆயினும் தீ வேகத்தில் சென்று பாண்டிய மன்னனைப் பற்றினால், அவனால் தாங்க முடியாது இறந்துபோவான், மக்கள் மன்னனின்றி வருந்துவர் என்று, “எம்மிடத்திற்கு இட்ட தீ மன்னனைப் மெதுவாக அடையட்டும்” என்றார். சைவர்களின் பொறுமையை, உயர்வை இதைவிட எப்படி உயர்த்திக் காட்டிவிட முடியும்! இப்படிப்பட்ட சைவ குரவரைப் பின்பற்றுவோர் அரக்ககுணம் கொண்ட மாபாதகர்கள் என்று நான் மனதால் நினைத்தாலும் எனக்கு உய்வு கிடைக்குமா? அப்படி சுட்டத்தான் நான் விழைவேனா?

    செய்ய னேதிரு வாலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே. 3.51. 1.
    பொழிப்புரை :
    நடுநிலைமை உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .
    3. அனல்வாதம், புனல்வாதம் செய்து தோற்றால் நாங்கள் கழுவேற்றப் படுவோமாக என்று அவர்களே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றும்படி பாண்டிய மன்னன்தான் அமைச்சர் குலச்சிறையாருக்கு ஆணையிட்டான். இது மன்னன் இட்ட கட்டளை. இதற்கும் சைவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர்கள் அரக்கத்தனமான மாபாதகர்கள் என்று எங்கு என் கதையில் குறிப்பிட்டேன்? தாங்களாகவே அர்த்தம் செய்துகொண்டு, அப்படி நான் எழுதினேன் என்று குற்றம் .சாட்டுவது தகுமா? கன்றைத் தேரோட்டிக் கொல்ல முயன்ற மனுநீதிச் சோழனை நாம் இன்றும் போற்றி எழுதுகிறார்கள். அவர்களை,. “ஒரு சோழன் பிள்ளைக்கொலை செய்ய முயன்றான் என்று குற்றம் சட்டுகிறாயே!” என்று சாடுகிறோமா? மன்னர்கள் தத்தம் கடமையை விருப்பு வெறுப்பின்றிச் செய்தார்கள். அவர்கள் செயல்களைச் சைவர்கள் செயல்கள் என்று புனைந்தோதுவது நானல்ல. அப்படிப்பட்ட எண்ணமும் என் நெஞ்சில் ஒருபோதும் எழுந்ததில்லை.

    //வலதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் ஜடாயு பகிர்ந்த வரலாற்றாய்வும் இடதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் அனந்த க்ருஷ்ணன் பக்ஷிராஜன் பகிர்ந்த வரலாற்றாய்வும் சமணக்கழுவேற்றம் வெறும் கட்டுக்கதை என்று பகிர்ந்த பின்பும் //
    அது அவர்கள் ஆய்வு. அதை நான் நேரடியாக மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. அவர்கள் எழுதியது உண்மையா, அல்லவா என்று ஆராயும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை, தகுதியும் இல்லை. என் கதையின் புனைவுக்கு காழிபிள்ளையாரின் திருமுறையும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமுமே கரு. அதைத் தேவையில்லாத அளவுக்கு விமர்சிப்பது ஏனோ? அதுபோக, இந்துக்களையும், பிராமணர்களையும் தாக்குவதையே பொழுதாகக் கொண்ட நடிகன் ஒருவனுடன் ஒப்பிட்டதும் ஏனோ?

    4. //உங்களைப் போன்ற ஒருவர் “எந்த சமயத்து இறைவனாக இருந்தாலும் சரி, மாறாகப் பேசுவது மகாபாவம் ஆகும்” என்று ப்ரஹ்லாதனுக்குத் தெளிவாக உபதேசம் செய்திருந்தால்……………நரசிம்மருக்கும் வேலையிருந்திருக்காது……….ஹிரண்யனும் சிரஞ்சீவியாக இருந்திருப்பான் பாருங்கள்//

    ஜனாப் அவர்களின் காற்று உங்கள்மீது வீசியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், செல்வி ரெபேக்கா மேரிக்கு நான் எழுதிய பதிலைப் பாராட்டிய கையோடு இப்படி எழுதி இருப்பீர்களா?
    பிரகல்லாதன் திருமாலைத்தான் சிறந்த தெய்வம் என்றான். தானே தெய்வம் என்ற அரக்கனைத்தான் தெய்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் எந்த தெய்வத்தைப் பழித்தான்? தன்னையே தெய்வம் என்று சாதித்த தன தந்தையைக்கூடப் பழிக்கவில்லையே! திருஞான சம்பந்தர் சமணர், மற்றும் புத்த சமயத்தொரின் கொள்கைகளைத்தான் மறுத்து, சைவத்தை நிலைநாட்ட முயன்றார். மாற்று சமயத்திற்கு மாறிய சைவர்களைத் தாய் மதம் திருப்ப முயற்சித்தார். அவர் எந்த தெய்வத்தை நிந்தனை செய்தார்? அயனும், அரியும் முயன்று தேடியும் கண இயலா அடி முடி கொண்ட பெருந்தகையாகத்தானே அரனை ஏற்றினார்? திருமாலையும், பிரம்மனையும் அவர் தூற்றினாரா? அவர் தனது ஒவ்வொரு பதிகத்திலும், எட்டாம் செய்யுளில் இராவணனை சிவ பெருமான் கயிலைக்கடியில் கால்விரலால் அழுத்தியதைப் பற்றியும், ஒன்பதாம் செய்யுளில் திருமாலும், பிரம்மனும் பலவாறு தேடியும் சிவனாரின் அடி, முடி அறிய இயலா மகத்துவம் பற்றியும், பத்தாம் செய்யுளில் புத்தரும், சமணரும் புற சமயத்தவர் என்றும் எழுதியிருக்கிறார். என்றும் அவர் பர சமயக் கடவுள் நிந்தனை செய்ததில்லை. எந்த சைவ குரவர்களும், வைணவ ஆழ்வார்களும் அதைச் செய்ததில்லை. யதிராஜர் இராமானுஜாச்சாரியார், வைணவத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைத்தாரே தவிர, சிவ நிந்தனையை ஒருபொழுதும் செய்ததில்லை.

    நமது குருமார்கள் நமக்குக் காட்டிய அறிவுரையைத்தான் நான் தமிழ் இந்து சமய உடன்பிறப்புகளுக்குப் பகர்ந்தேன். அதற்காக, நமது சமயத்தோர் எவரையும் பழிப்பவரையும், நமது சமயத்தொரை தமது சமயத்திற்கு வஞ்சகமாக மாற்ற முயல்வோரையையும் என்றும் நான் பொறுத்ததில்லை. “அன்பே சிவம்” என்னும் நான், தேவைப்பட்டபோது சிவனாரின் உருத்திர உருவத்தையும் எடுக்கத் தயங்கமாட்டேன் என்று தங்களுக்குத் தாழ்மையுடன் அறிவித்துக்கொள்கிறேன். அதை நான் செல்வி ரெபேக்க மேரி, ஜனாப் இவர்களுக்கு பகர்ந்த கருத்துகளிலிருந்து அறிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

    வேலும், மயிலும் துணை. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நமச்சிவாய.

  115. //உங்களுக்கு வேண்டுமானால் மதம் என்பது ஒரு வசதிக்காக சட்டை மாற்றுவது போல் இருக்குலாம். நாங்கெல்லாம் கொஞ்சம் சீரியசான ஆட்கள். சரியா.//

    ஒருவிதத்தில் சரிதான். சிறுவயதில் முருகன் and pillaiyaar. கொஞ்சம் வளர்ந்தவுடன் அம்மன் and also pillaiyaar (பேச்சுலர் காலத்தில்) அதன்பிறகு பெருமாள் and Shree. இப்படி மூன்று சட்டைகள் மாற்றிவிட்டேன். I am permanently happy with the last shirt for the major reason that it told your caste men that they and the dalits are equal before the Lord; and if a dalit is a greater Vaishnava, the brahmin should accept even his saliva as holy. It treats all in the same manner.

    மனுவில் தலித்துகளில் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று அவனுக்கு கல்வி ஒலி கேட்டால் என்று சொன்னதாலேயே வைதீகர்கள் திருமழியிசையாழ்வாரைக் கண்டவுடன் நிறுத்தினார்கள். திருமழிசையாழ்வாரருக்கு எந்த மரியாதையும் எம்மிடம் இல்லை என்று ஊர்மண்டபத்திலிருந்தே விரட்டினார்கள். அன்று நடந்ததை இன்றும் மாற்ற மாட்டோமென எழுதிகிறீர்கள்.

    இந்தியா முழவதும் தலித்துக்களின் மீதான தீண்டாமை அவலம் இந்த மனுவாலேயே. ஆனால் சிலவற்றை விலக்கிவிட்டு மற்றவற்றை ஏற்கலாம் என்றால், நீங்கள் எதையும் எளிதில் ஏற்கும் சட்டை மாற்றிதானே. உங்களைப் பிற இந்துக்கள் எப்படி நம்புவது? Completely throw it out. If you accept the major part, naturally you will end up accepting the left out soon.

    //எங்க ஊர்ல கண்ணாலம் கட்டுவது புள்ள பெத்துக்க மட்டும் இல்ல. அத சீரியாசாக பார்க்கிறோம். இரு வரும் சேர்ந்து கர்மங்களை, கடமைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சம்ப்ரதாயம் இருக்கும். அதை சரி வர செய்ய ஒத்த ஜாதியில் திருமணம் செய்கிறார்கள். ஒரே தட்டில் இருக்கும் இரு வேறு சாதியினர் கூட மாற்று திருமணம் செய்வதில்லை என்பதற்கு இதுவே காரணம். ஆனால் இப்போதெல்லாம் கடமையாற்ற வேண்டும் என்று பலர் திருமணம் செய்வதில்லை. அதனால் இந்த கட்டுப்பாடு இப்பொழுது அவசியமற்றது.//

    நன்குசொன்னீர். கர்மங்கள்; சாதி சம்பிராதாயம்; ஒத்த ஜாதி; ஒரே தட்டில் கூட மாற்றுவதில்லை. அடடே சாரங்கன், அசத்திவிட்டீரையா? நீர்தான் நம்மாத்து ஆளு. இது திருவான்மியூர் ஆன்மிக கண்காட்சியைத்தான் நினைவு படுத்துகிறது. அங்கே அரவிந்தனின் அம்பேதகர் ஸடால் ஒரு மூலையில் அரங்கு நிறைய ஜாதிப்பெருமை பேசும் ஸ்டால்கள். அவுக நாங்கள் ஆண்ட பரம்பரை; தலித்து ராஸ்கல் நீ கழுவுகிற பரம்பரை என கொக்கரிக்க, சாரங்கள், அதே கொக்கரிப்பை, கர்மங்கள், ஒத்த ஜாதி, நெருங்க மாட்டோமென்கிறார்.

    எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. உங்களுக்கும் இந்துத்வாவுக்கும் ஏழாப்பொருத்தமிருக்க, எப்படி இங்கே உலாவுகிறீர்? மனுவை ஆதரிப்பது ஏன் என்பது இப்போது புரிகிறது. உங்கள் ஜாதியே என்ற பேச்சுக்கு வலிமை தேட மூசுலீம்களைப்பற்றி பேசுகிறீர்கள். அவாளைக் கட்டச்சொல்லு; நானும் எம் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிறேன். அதாவது நீராக வந்து எதையும் செய்ய மாட்டீர். தலித்துகளை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளா நீஙகள், இந்துமதவளர்ச்சிக்காக தன் ஜாதிவெறியைத் துறக்க இயலா நீங்கள் இசுலாமியரும் கிருத்துவர்களும் தலித்துக்களை ஏமாற்றுகிறார்கள் எனற கபட‌ நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். They are citing persons like you to dalits. உம்மைப்போன்ற பேர்வழிகள் இருக்கும்வரை எப்படி தலித்துகள் இந்துவாக இருப்பார்கள்? வடமொழி என் கண்; தலித்துகளிடம் நாங்கள் நெருங்க மாட்டோம் என்று சொல்பவர் எப்படியப்பா இந்துமதத்தை வளர்க்க முடியும்? மாறப்பாரும். இல்லாவிட்டால் இசுலாமியராகி அல்லது கிருத்துவ பிராமணனாக உம்வீட்டுப்பெண்களை இன்னொரு பிராமணனுக்கு கட்டி வையும்.

    பிராமணர்களைப் பற்றி எழுதினேன். அது ஒரு காரணமாகவே எழுதப்பட்டது. எத்தனை பெருச்சாளிகள் இந்துப்போர்வை போத்திக்கொண்டு ஜாதி வளர்க்கின்றன என்பதைக்காட்டத்தான்.

    //மேலும் எதோ தமிழக கழக கண்மணிகள் உத்தமர்கள் போல எதையோ தடுக்கிறார்களாம். //

    என்னிடம் பேசுங்கள். நான் கழகக்குஞ்சுகளை விட்டு என் கருத்துக்களையும் என் கேள்விகளையும் வைக்கிறேன். அக்கேள்விகளுக்குப் பதிலெங்கே?

    //அரவிந்தனின் இந்த கட்டுரை சமஸ்க்ருத வாரம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியதல்ல. அதல் அவருக்கு சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை, சில விஷக் கிருமிகள் இதை எதிர்த்து டுஷ்ப்ரசாரம் செய்யும். //

    கட்டுரையை நன்கு படியுங்கள். ஏன் அவர்கள் விஷக்கிருமிகளாகத் தோன்றுகிறார்கள்? அதைக்குறிப்பிட்டு நான் எழுதியதைப்படிக்கவில்லை?

    அவர்கள் நோக்கம்; வெறும் வடமொழி எதிர்ப்பன்று. இந்துமத எதிர்ப்பு என்று அவர் உணருகிறார். அந்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய கட்டுரையில் வடமொழிக்கும் ஆதரவு தேடுகிறார். He writes: //வடமொழி பிராமாணாளுக்கு மட்டுமன்று; எல்லாருக்கும் பொது; தலித்துகள் கூட பேசினார்கள்; எழுதினார்கள். அம்பேதகர் தலித்துகளைப்படிக்கச்சொன்னார்; அப்போதுதான் ஜாதிகள் ஓழீயுமென்றார். காமராஜர் முன்னுரையில் புகழந்தார்; ஜயகாந்தன் ஆதரித்தார்//

    வடமொழியை எனவே தமிழர்கள கற்கவேண்டும் என்று தமிழர்களுக்கு சிபாரிசு செய்கிறார். வெறும் கழககுஞ்சுகளை எதிர்க்க மட்டுமன்று.

  116. @sarang,

    //சமஸ்க்ருதம் தமிழில் எவ்வளவு தூரம் கலந்துள்ளது என்று உங்களுக்கு புரிந்ததா (ஸ்புரதி) இல்லையா. பம்பரம் (பம்ப்ரமதி) மாதிரி நீங்கள் ஒரே இடத்தில் சுற்றுவது ஏனோ//

    இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளை விட தமிழில் தான் சமஸ்கிருதம் மிகக் குறைவாகக் கலந்துள்ளது. சம்க்கிருதச் சொற்கள் இல்லாமலும் தமிழால் தனித்தியங்க முடியும், ஆனால் சமக்கிருதத்தால் தனித்தியங்க முடியாது. அது ஏற்கனவே செத்தும் போய் விட்டது. சமஸ்கிருதமும் தமிழிலிருந்து அதிகளவில் சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?? 🙂

  117. //அவன் பேசும் பாஷையில் உள்ள 40 % சொற்கள் தமிழிலும் உள்ளதாம், ஆராய்ச்சி செய்து சொல்கிறார்கள்.//

    இதில் எந்தளவுக்கு உண்மையுண்டு என்பது கடவுளுக்குத் தான் தெரியும் அல்லது திரு. Sarang தான் ஆதாரம் தர வேண்டும். ஆனால் இவர் கூறுவது உண்மையாகவிருந்தாலும் தமிழர்கள் அலட்டிக் கொள்ளவோ ஆச்சரியப்படவோ தேவையில்லை. இந்தியா முழுவதும் முற்காலத்தில் தமிழ்மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்காரே கூறுகிறார். அதனால் இன்று தமது சொந்த மொழியை இழந்து, அது திரிபடைந்து பல்வேறு மொழிக்குழுவினராக மாறியுள்ள உங்களின் வடக்கத்தை நண்பர்களின் முன்னோர்கள் கூட தமிழ் பேசியிருக்கலாம் அதனால் தான் இன்றும் அவர்களின் மொழிகளில் தமிழ்ச்சொற்கள் உண்டே தவிர, அதற்கு தமிழ் அவர்களிடமிருந்து இரவல் வாங்கியதாகக் கருத்தல்ல. 🙂

    “The word ‘Dravida’ is not an original word. It is the sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’ when imported into Sanskrit became ‘Damilla’ and later on ‘Damita’ became Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India, and was spoken from Kashmir to Cape Comorin. In fact, it was the language of the Nagas throughout India. The next thing to note is the contact between the Aryans and the Nagas and the effect it produced on the Nagas and their language.”

  118. வியாசன்

    தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வட மொழி வாதிகள் யார். இது நிதர்சனமா அல்லது உங்களது என்னமா. எவ்வளவு தமிழர்கள் சார் சமஸ்க்ருதத்தை எதிர்கிறார்கள். அண்ணா சமஸ்க்ருத எதிர்ப்பையும் ஹிந்தி எதிர்பையும் குழப்பிக் கொல்லாதீர்கள் :-). நீ தனி ஆளு நீ தனி ஆளு எத்தையும் உள்ளே விடாதே அன்று உங்களை வைத்து கல்லா கட்டி ஒரு கோஷ்டி ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டது. நாம இன்னும் தெருபுழுதியை கிளப்பி கொண்டிருக்கிறம். அந்த கோஷ்டியின் பய புள்ளிகள் எல்லாம் ஹிந்தி படிக்குமாம், தமிழே இல்லாத இன்டெர் நேஷனல் பள்ளிகளில் மினுக்குமாம். அவர்கள் கொள்ளு பேரர்களுக்கு சமஸ்க்ருத நாம கரணம், யாக சேவனம் இத்யாதி. நாம என்னடான்னா இன்னும் பார்ப்பான் ஒழிக, ஹிந்தி ஒழிக, சமஸ்க்ருதம் ஒழிக என்று வெற்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
    தமிழ் நாட்டில் இயங்கும் எந்த சமஸ்க்ருத சமஸ்தானமும் தமிழ் விரோதி இல்லை. அதில் இயங்கும் பலருக்கு உம்மை விட தமிழ் நன்றாக தெரிந்திருக்கிறது. சமஸ்க்ருத க்ஷேத்திரத்திலே இயங்கும் யாரும் தமிழ் மீதோ எம்மொழி மீதோ வெறுப்பு கிடையாது. உங்களுக்கு எவ்வளவு பேருடன் தொடர்பு இருக்கிறது. மாறாக எதோ சமஸ்க்ருதமானது தமிழ் விரோதி என்ற மாயையிலேயே நாம் உழல்கிறோம். விழித்துக் கொள்வோமாக.

    கடைசியாக ஒன்னும் கைவரவில்லை என்று இப்போதைய பாலா கெஞ்ச ஆரம்பித்து விட்டார். சுவிசெஷர்களின் பிரத்யேக பாணி இதுதான். தூஷனை எல்லாம் செயல் இழக்க. தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் படிக்க வேண்டாமோ என்கிறார். அரவிந்தன் அப்படி சொன்னாரா. தமிழ் மொழியை இனிய மொழி இல்லை என்றாரா. யாரும் தமிழ் படிக்கக் கூடாது என்றாரா. இங்கே தமிழுக்கும் சமஸ்க்ருததுக்கும் போட்டி என்றாரா.

    இந்த கற்பனை பிரச்சனைகளை எல்லாம் இருட்டு கொண்டு புழுதி கிளப்பியது மூவரே. இப்போ ரேபெக்காம்மனியும் சேர்ந்துள்ளார் கோஷ்டியுள். இவர்களின் எண்ணம் என்ன, தமிழன் கழக கைவரிசைகளை இன்னும் மறக்காகவோட்டில் அதையே கைகொண்டு அவனை சமஸ்க்ருத்திற்கு எதிரி செய்ய வேண்டுமென்பதே.

    இது கைவரபெராமல், பிராமன தூஷனை, ஹிந்து தூஷனை, அரவவிண்ட தூஷனை எல்லாம் செய்து புழுதி கிளப்பியும் எல்லோரும் மாஸ்க் அணித்து வருவதை பார்த்து நொந்து போய் கிடக்கிறார் இப்போதைய பாலா சுந்தரம் பெருந்தகை.

    ரொம்ப காலப் பழசு விஷயம் விடுங்கள் முந்தா நேத்து ஒரு மத்திய மந்திரி தமிழை எல்லா இந்தியனும் படிக்கவேணும் எனப் பணித்திருக்கிறார். இதை அறிந்து அரவிந்தன் என்ன வெகுண்டேழுவாரா. உண்மையான தமிழன் மகிழ்ச்சியே பெறுவான். வடக்கே இருக்கிற வாடா மொழி சாமி வைகுண்ட நாதன் வேண்டாம், தெற்கே இருக்கிற தமிழ் பேசுகிற தென்னரங்கன் போதும் என்றான் ஒரு பார்பன முன்குடுமி தொண்டரடிபொடி ஆழ்வான்.

    அரங்கனையும் அரனையும் இதில் இழுக்கிறார் ஒரு அரணை.

    எவ்வளவு காலம் தான் ஆரிய திராவிட பிராமன அப்ராஹ்மான மனு ஸ்ம்ருதி கதைகளை வைத்து கடை கட்டி வியாபாரம் செய்வீர்கள். கொஞ்சமேனும் வியாபார யுத்திகளையாவது மாற்றலாமே ஜோ ரெபெக்கா சூ பீ.

    தமிழன் மேல் திணிக்கப்பட்டது திராவிட மாயையும் ஆங்கிலமும் தானே ஒழிய சமஸ்க்ருதம் அல்ல. சமக்ஸ்ருதம் எவர் விரும்பி படிக்கிறார்களோ (பலர் ஜாதி வர்ண பேதங்கள் கடந்து) அவர்களை கொண்டு தான் சமக்ஸ்ருத்த வார ஆசரணம். தமிழனை ஏய்த்து திரட்டிய காசில் வயிர் வளர்த்து வாழும் வீர மணியையோ, அட்டாக் செய்து ஆள் சேர்த்து போஸ்டர் ஒட்டியும் ஒரு செட்டு பெறாமல் திரியும் தொல் திருமாவளவனையோ, கல்ல தோணி வைகோவையோ இறந்த பின் டாஸ்மாக் தொழிற்சாலைக்கு போகபோகும் சூ பீ யையோ, குழந்தை ஜோவையோ யாரும் கொண்டாட சொல்லவில்லை.

    தமிழ் நாட்டுல எக்க சக்க தெலுங்கர்கள் மலையாளிகள் வாழ்கிறார்கள், அவர்கள் வரிபனத்தில் எவ்வளவு தமிழ் மாநாடுகள் போட்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் போராடினார்களா, இல்லை அப்பீல் தான் செய்தார்களா. அடையார் ஆனந்த பவனில் வேலை செய்யும் நேபாளத்து காரன் தமிழ் கற்றுக் கொண்டு பேசவில்லையா. மொழியை வைத்துக்கொண்டும் தமிழனை பிரித்து குளிர் காய வேண்டாம். இது புளிச்ச சோறு. இது எடுபடாது, வாங்க ஆளில்லை.

  119. @BALA SUNDARAM KRISHNA,

    //இது கமப்னதான் எனக்கேட்டறிந்தவுடன் மலைத்துவிட்டேன். முதலிலேயே என் மூளை வேலைசெய்திருக்க வேண்டும் அந்த முதல் மூன்றடிகளைப்படித்தவுடன். அவ்வளவு சுவையானவை.///

    இதில் வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது கூட உங்களின் மூளை வேலைசெய்யவில்லை என்பது தான். இதைக் கம்பன் பாடவில்லை. 🙂

    “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்”

    (தண்டியலங்காரப் பாடல்)

  120. //நம்மாழ்வாரை தலை மேல் வைத்து கொண்டாடுபவர்கள் பிராமணர்கள் தான். அவரது பாதமாக அறியப்படுபவர் ராமானுஜர் (ஒரு பெரிய ப்ராஹ்மின் சார் இவர்). ஆழ்வாரின் மற்றொரு பாதமாக அறியப்படுபவர் மதுர கவியார் ஐவரும் ஒரு ப்ராஹ்மின் சார்.//

    Sarangan!

    ஜாதீய கொடுங்கரங்கள் இராமானுஜரையும் விட்டுவைக்கவில்லை. யார் யார் பிராமணாள் யார் யாரில்லை என்று நானே சொல்கிறேன். நானும் ஜாதி வெறியன் தான்.

    பொய்கையாழ்வார் – காஞ்சிபுரத்து ஐயங்கார்
    பூதத்தாழ்வார் – மஹாபலிபுரம் ஐயங்கார்
    பேயாழ்வார் – மயிலாப்பூர் ஐயங்கார்
    பேயாழ்வார் – பாண்டியன் பிரம‌தேயமாக அளித்த ஒரு காட்டுப்பூமியில் கோயில் கட்டி குருக்கள் வேலை பார்த்த ஐயங்கார். (அப்பூமியின் இன்றைய பெயர் திருவில்லிபுத்தூர்.
    ஆண்டாள் – அவர் வளர்ப்பு மகள். அக்ரஹாரத்திலேயே அனாதைக்குழந்தையாக கிடைத்ததால், அவரும் அப்படியே
    மதுரகவி – பாண்டியன் இராமநாதபுரத்திலிருந்து கொண்டமர்த்திய 200 பிராமணக்குடும்பங்களைச்சேர்ந்தவர். திருத்தொலைவில்லிமங்கலம் என்ற தூத்துக்குடி மாவட்டச் சிற்றூர்க்காரர்.
    தொண்டரடிப்பொடியாழ்வார் -முதுகுடுமி சோழிய (சோழநாட்டைச்சேர்ந்த) ஐயங்கார். தஞ்சாவுர்ப் பக்கம்.

    சந்தோஷமா சாரங்கன்? உங்க ஜாதிக்காரங்கதான்.

    அடுத்து:

    திருமங்கையாழ்வார் – வழிப்பறிக் கொள்ளையைக் குலத்தொழிலாகக் கொண்ட கள்ளர் (அவரும் மறக்காமல் பின்னாளில் செய்தவர்தான் – சீர்காழிப்பக்கம்)
    குலசேகராழ்வார் – சத்திரியர். ஆண்ட பரம்பரை. மலையாளி என்பதால் தேவர் என்று அழைக்கமுடியாது. அவர் காலத்தில் மலையாளம் மொழியாக இல்லை. கொச்சி.

    அடுத்து வருபவர்கள் பரிதாபம்:

    திருப்பாணாழ்வார் – பாணர். பறையரில் ஒரு சிறுபிரிவு. உறையூர்க்காரர். இன்று திருச்சிக்குள்; அன்று வெளியே இருந்தது. ஊருக்கு வெளியேதான் வாழ்ந்தார். ஊருக்குள் வராமல் இரங்கனைப்பாடியவர்.

    கீழே வருபவர் இன்னும் பரிதாபம்.

    பாசி மணி ஊசியெல்லாம் விப்போமுங்க; ஆனால் காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம் எனப்பாடும் குரவர் கூட்டம். இவரின் பெற்றோர் பிரம்பு முடைந்து ஊரூராக விற்பவர். காஞ்சிபுரத்துக்கிராமம். இவர்தான் மிகவும் தீண்டாமைக் கொடுமைக்காளாக்கப்பட்டவர். திருமழிசையாழ்வார். இறைவனுக்கே ஆணையிட்டு தன் ஆணைக்கு கீழ்ப்படிய வைத்தவர். உறையில் அடங்காதவர் எனப் பெயர்பெற்றவர். அதாவது கோபக்காரர். ஒப்பிலியப்பன் கோயிலுக்குச்சென்ற போது தம்மைப் பிராமணர்கள் ஏற்காததால் அங்கே எழுந்தருளி, ஒப்பிலியப்பனைப்பார்க்க, ஒப்பிலிய்ப்பன் விலகி தரிசனம் தர ஆழ்வாருக்குப் பின்னர் ஒப்பிலியப்பன் அப்படி சாய்ந்தே இருக்கிறார். போய் பாருங்கள். இப்படி இறைவனுக்கே ஆணையிட்டதால், இவரின் பெயர் திருமழியிசைப்பிரான். He threw off all his written work into the River Kaveri and what was left is what we read today: only two works. After throwing, he passed away there.

    சாரங்கன் மகிழ்வது அவாள் அதிகமாக இருக்காங்களே. ST and SC rendeethaanee.
    (Pl don’t remind me that it is sinful to refer to their caste and all of them are ascribed non-human birth. I am dealing with Sarangan. He needs different treatment)

    இராமானுஜரைப்பற்றியும் மதுரகவியைப்பற்றியும் குறிப்பிட்டதால் சொல்வேன்.

    இராமனுஜர் தலித்துக்களை இழுக்க தொண்டர்களைப் பணித்ததால், அவரை கங்கை நதியில் மூழ்கடித்துக்கொல்லப்பார்ததார்கள். திருக்குறுங்குடி அக்ராஹாரத்தில் அவர் பிட்சையெடுத்துச் செலகையில் விஷம் வைத்துக்கொல்லப்பார்த்தார்கள். பின்னர்தான், அவரின் தொண்டர் ஒருவர், இனி உமக்கு நாந்தான் சமையல்காரன். என்று அக்ரஹாரத்தில் பிட்சை எடுப்பதை நிறுத்தினார்.

    மதுரகவி – ஒரே தட்டில் மாற்றிக்கொள்ள மாட்டோம். கர்மங்கள். எங்கள் ஜாதிக்குத்தான் ஆன்மிகம் அத்துப்படி, மத்தவாளெல்லாம் ஊத்தக்காரங்க என்ற மமதை பிடித்த பிராமணாள். ஊர் ஊராக தனக்கு குருவைத் தேடி, அயோத்திவரைக்கும் சென்று ஏமாற்றம்தான் மிஞ்சியது. அயோத்தியில் அவருக்கு பெருமாள் காட்டியது உன் ஊரிலே ஒருவன் உனக்குக் குருவாக இருக்க, இங்கேன் வந்தாய்? என.

    தன் ஊருக்கு வந்தால், இங்குள்ள கிராமத்து ஆட்கள் எல்லாரும் ஒரு குட்டிச்சாமியாரைப்பற்றிப் பெருமையாகச் சொல்ல போய்ப்பார்ப்போமே என்றுதான் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். 8 மைல்தொலைவு இவரூரிலிருந்து. அங்கு ஒரு புளியமரத்துப்பொந்தில் அந்தப்பையன். அடடே அவன் நம்ம ஜாதியில்லையே! இவனா பெரியா ஆன்மிக கொக்கு? என நினைப்பில் தனக்கு ரொமப் ஞானம் என்னை மிஞ்சுவானா இவன்? சோதித்துதான் பார்ப்போமே! எனவே quiz contest குட்டிச்சாமியாரோடு இவர் கேள்விகள் வீச குட்டிச்சாமியார் ஒவ்வொன்றுக்கும் அழகாகப் பதில் சொன்னானர். விடக்கூடாது! இவனால் பதில் சொல்ல வியலா கேள்வியைக்கேட்க வேண்டும்

    //செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” .

    எனபது கேள்வி

    பதில் சொன்னார் குட்டிச்சாமியார். “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” .

    சரணாகதியடைந்தார் மதுரகவி. தன் ஈகோ எல்லாம் ஒழிய இவரன்றி எனக்கு வேறு தெய்வமே இல்லையென எடுத்தார். //தேவமற்றறியேன்//

    சாரங்கன்! இக்கதை அல்லது வரலாற்றின் நோக்கமே உம்மைப்போன்றவருக்குத்தான் சொல்லப்பட்டது. பிராமணன், எனக்குத்தான் ஆன்மிகம். எனக்குத்தான் எல்லா தெரியும். மத்த ஜாதிக்காரர்களுக்கு அத்தகுதியில்லை. தலித்துகளுக்கு கோயிலுக்குள்ளே நுழையக்கூடாது எனபவருக்கெல்லாம் வைணவம் வைத்த ஆப்பு இக்கதை.

    40 வயது பழுத்த பிராமணாள், 11 வயது சூத்திரப்பையன் காலில் விழுந்தார்.

    பிராமணர்கள்தான் எழுதினார்கள் எனாதீர். ஒன்றை புரியுங்கள். அவர்களில் சிறுபிரிவினரே இராமனுஜரின் தொண்டரானார்கள். மதுரகவி நம்மாழ்வாரின் பாசுரங்களை தெய்வத்தின் குரலாக எடுத்துச் சொல்ல பிராமணர்கள் ஒரு சூத்திரர் எழுதியதை அதுவும் தமிழில் எழுதியதை ஏற்க மாட்டோமென்றார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கப்பிராமணாட்கள், நம்மாழ்வார் பாசுர்ங்கள் இலக்கியாகா எனத் தூக்கியெறிந்தார். மதுரகவி எப்படி நம்மாழ்வாருக்காக மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் போராடி வெற்றிபெற்றார் எனபது தனிக்கதை. மதுரகவி பிராமணாள் என தற்பெருமையடிக்கிறீர்கள். அவர் தன் பிராமணன் என்ற் ஈகோவா ஓழித்ததனாலேயே ஆழ்வாரானார்.

    இராமானுஜர் தலித்துகள் கோயிலுக்குள் போகலாம் எனச் சொன்னபோது, பிராமணர்கள் கொதித்தெழுந்தார்கள். நாங்கள் நீர் கட்டிய கோயிலுக்குள் (திருநாராயண புரம் – மைசூருக்குப்பக்கத்தில்) வரமாட்டோம் என்றார்கள். அவர் சொன்னார்: அவாளுக்கு வாரத்தில் ஓரிரு நாட்கள் ஒதுக்கியிருக்கிறேன். அப்போ அவா வருவா. நீங்கள் வரவேண்டாம். நானும் என் தொண்டர்களும் அவர்களுக்காக கோயிலுள் இருப்போம். என்றார்.

    பெரிய நம்பியை ஜாதியை விட்டு ஒதுக்கிவைத்தார்கள். காரணம் அவர் ஒரு தலித்து ஆச்சாரியருக்கு ஈமக்கிரியை செய்ததால்.

    இப்படி நான் சொல்வது ஒரு ஜாதி மககளுக்கு எதிராக என்று எடுத்தால் நீர் இன்னும் ஜாதிப்பெருச்சாளியாகத்தான் இருக்கிறீர் எனறு பொருள். இது வைணவம் வளர்ந்த க‌தை. எப்படி இராமானுஜர் பிராமணர்களோடு போராடி தன் மதத்தை அனைத்துமக்களிடம் பரவச்செய்தார் என்பதைச்சொல்லவே. கர்மங்கள் கெட்டுப்போகும் என்று இன்று சொல்லும் உம்மைப்போன்றவர்கள்தான் இராமனுஜரை எதிர்த்தார்கள். உம்மைப்போன்றவருக்கு இராமானுஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    //எனக்கு நரகமே கிடைத்தாலும் கவலையில்லை. பிராமாணாலுக்கு மட்டும் தெய்வம் இல்லை. எல்லாருக்குமே தெய்வ்ம் போய்ச்சேரோணும்//

    அதுதான் திருக்கோஷ்டியுர் கதை. இன்றைக்கு வேண்டாம். வைணவனுக்கு ஜாதிகள் இல. ஆழ்வார் வேண்டுமா ஜாதி வேண்டுமா என்றால் ஆழ்வார்தான் என்பவனே வைணவன். உண்மையான இந்துத்வாவும் இதுவே. மதமே முதலும் கடைசியும் என்பவனே இந்துத்வா.

  121. சுபி

    //
    குர்ஆனில் இந்து மக்களைப் பற்றியோ அவர்களின் பிறப்பைப்பற்றியோ கேவலமாக எங்கும் எழுதப்படவில்லை. மனு ஸ்மிருதியில் உங்களை உயர்வாக்கி மட்டும் சொல்லியிருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் உங்களை உயர்வாக்கி மற்ற மூன்று வர்ணத்தாரையும் இழிவாக சொல்வது உங்களுக்கு பிரச்னையாக தெரியவில்லையா? அல்லது பிராமிண் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டால் பிரச்னையே இல்லையே. மேலும் எனது முன்னோர்கள் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியதால் அந்த இந்து மதத்தின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச எனக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறேன்.
    //

    இஸ்லாம் ஹிந்து மதத்தை இழிவு படுத்தவில்லையா. idol worshippers பற்றி என்ன சொல்கிறது இஸ்லாம். ஏன் இந்த புரட்டு.
    அதென்ன ஹிந்து மதஹ்தின் பெருமைகளையும் சிறுமைகளையும். எங்கே பெருமைகளை பேசி உள்ளீர்கள்.

    மனு ஸ்ருமிதியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் நோக்கம் எப்படியாவது எவனாவது அல்லாவுக்கு நேந்து விடனும் என்பது தான்.

    பிரம்ம அனுபவத்தை நேரில் காண்பவன் பிராமணன். விசுவாமித்ரர் ராஜ வாக இருந்து பிரம்ம ரிஷி ஆனது அவரது ப்ரம்ஹ ஞானத்தினால் தான்.

    இன்னும் பல பேர் இருக்கிறார்கள், செய்க்வா ரைக்யர். ஜட பரதன், என்று போற்றத்தக்க ப்ரம்ஹ ஞானிகள் பிறப்பால் அந்தனரள்ளதார்.

    சரி இப்படி பாப்போம்.
    மனு ஸ்ம்ருதி பல்லாயிரம் ஆண்டு கால சமூகத்தின் நிலையை கொண்டு இயற்றப்பட்டது. அது அநீதி இழைக்கிறது என்றால் அது உண்மையில் பஞ்சமர்களுக்கு. மகா அநீதிதான் அது. மனு ஸ்ம்ரிதி ஒரு வியாபரா கண்ணோட்டம் கொண்ட சமூகத்திற்கு ஒவ்வாது. கர்ம கண்ணோட்டம் கொண்ட சமூகத்திற்கு சரிப்படும். ப்ராமனாக இருப்பது பழைய காலத்தில் ஒரு பெரும் சாபம் மாதிரி. மூணு மணிக்கு விழிக்கனும், உடனே குளிர் நடுங்க குளிக்கணும். அப்புறம் ஆயிரத்தி எட்டு முறை ஜாயத்ரி ஜபம், அப்புறம் வீட்டில் மைக் செட் வைக்காமல் வேத பாராயணம், அவுபாசனம் அல்லது அக்னிஹோத்ரம், காலை பூஜை, வேதம் சொல்லிக் கொடுத்தல், யாகம், மதிய ஆராதனை, மதிய சந்த்யா, கொஞ்சம் சாத்வீக சோறு, த்யானம், பயிற்றுவித்தல், காலக்ஷேபம் , மாலை சந்த்யா, மாலை பூஜை, உபன்யாசம், இரவு த்யானம் முடித்து பதினோரு மணிக்கு தூக்கம்.
    ஒரு வேலை சாப்பாடு மத்ததெல்லாம் வேலை.

    இதெயெல்லாம் ஒரு வாரம் நீங்கள் ஆச்சரணம் செய்து பாருங்கள் பெண்டு நிமிந்திரும். ஓடி போய்விடுவீர்கள். க்ஷத்ரியனுக்கு நிறைய சுகம் உண்டு ஆனால் எக்கச்சக்க நித்யப்படி கடமைகள். வைச்யனுக்கு கடைமைகள் கம்மி ஏன் என்றால் அவர்கள் வியாபாரம் செய்ய அலைந்து கொண்டிருப்பார்கள். சூத்திரருக்கு கடமைகள் விதிக்கப் படவில்லை. சுகமாக வாழலாம் (சூத்ர சுகம் அவாப்னுயாத்).

    உங்களது கூற்றுப்படி பிராம்மணர்கள் அப்படியே குஜால்ஸ் செய்து கொண்டில்லை. தனக்காக வாழ அவனுக்கு தடை செய்யப்பட்டது. அவனுக்கும் சூத்திரனுக்கும் குடிசை தான் மிஞ்சியது. சௌக்யமாக வாழ்ந்தது என்னமோ வைச்யர்கள் தான். ராஜாவுக்கு அரண்மனை இருந்தாலும் எக்க சக்க டென்ஷன்.

    சோறு தண்ணி இல்லாமல் மூன்று நாள் அக்னி முன்னாடி நின்று யாகம் செய்து பாருங்கள் சார். காலையில புல்லா வயிறு ரொப்பி எட்டு மணிநேரம் அடையாள உண்ணாவிரதம் போல இல்லை சார் இது.

    உங்களது மேம்போக்கு பார்வையில் ஹிந்து தர்மத்தை இழிவு செய்து போக இயலாது. மனு தர்மம் பிராமணனுக்கு எதிராக எவ்வளவு கடுமையாக இருக்கிறது. அதுவும் அவன் யதியானால் இன்னும் தாங்க ஒண்ணா கடுமை.
    இப்படிதான் எம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்கின்றனர் சிலர், நாளையும் வாழ்வார்கள்.

    இந்த கடுமையை தாங்க யார் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு பிராமணத்வம் வந்து சேரும். அப்படி பட்டவர்கள் தான், ஜட பரதன், விஸ்வாமித்ரர், ஜனகன், சைக்வா ரைகர் இத்யாதிகள். உபநிஷதுகளில் எத்தனையோ பிறப்பால் சூத்திரர்கள் ப்ரம்ஹ ஞானிகளாக காட்டப்பட்டுள்ளனர். அவர்களை அண்டி அரசர்களும் பிராம்மணர்களும் ஞானம் பெற்றுள்ளனர். ச்வேதகேதுவின் தந்தை ஒரு ராஜாவிடம் சீடனாக சேர்ந்து தான் பஞ்சாக்னி வித்யை கற்கிறார்.

    இப்படி எல்லாம் காரணம் சொல்லி. அந்த காலத்திற்கு மனு தர்மம் சரி என்று சொல்லி நிறுத்தவில்லை ஒரு தமிழ் ஹிந்து. மனு சாஸ்திரம் தூக்கி எறியப் படவேண்டியது என்று அதை கண்டனம் செய்துள்ளான். எந்த வேத பாடசாலையில் மனு தர்மம் சொல்லி தரபடுகிறது. இன்று எவ்வளவு ப்ராம்கனர்கள் ப்ராம்ஹணர் அல்லாதவருக்கு வேதம், உபநிஷத் கீதை சொல்லி தருகின்றனர் என்ற கணக்கு உங்களுக்கு தெரியுமா. அநேகர்கள் உள்ளனர். நாங்கள் மாறுவோம், மாற்றத்தை என்கல்லுள்ளிருந்தே பெற எங்களது மதத்தில் இடம் இருக்கிறதும். மனு ஸ்ம்ருதி இல்லாவிடிலும் ஹிந்து மதம் வாழும் ஏன் நன்றாகவே வளர்ந்து வாழும்.

    உங்களால் இது முடியுமா, குர்ஆனில் உள்ள நீசமான விஷயங்கள் வேட்டுக் குத்துக்கள் விஞான பிதற்றல்கள், பிற மதத்தவனை நாயை போல பார்ப்பதும் நடத்துவதும், பெண் காழ்புணர்ச்சி போன்றவை ஒவ்வாதவை என்று உங்களால் ஒப்புக்கொண்டு மாற்றம் கொண்டுவர முடியுமா. மாறாக அப்படி மாற்றம் கொண்ட வர நினைக்கும், சுபி, ஷியாக்களை குண்டு வைத்து கொள்கிறீர்கள்.
    மனு ஸ்ம்ருதியை பற்றி வாய் திறக்க உமக்கு நிச்சயமாக கிஞ்சித்தும் அருகதை இல்லை.

    என்னது நீங்கள் நல்லவரா. கிண்டல் செய்ததில்லையா. அமைதியானவரா இஸ்லாம் அதை போதிக்கிக்குதா. சகோ நீங்க எங்கெங்கெல்லாம் பூந்து என்னென்ன பதில் எப்படி எப்படி தந்துள்ளீர்கள் என்று நாங்க மறந்து விடவில்லை. பல வருசமா பழகறோம் சகோ. உம்ம பத்தி உங்க உம்மாவ பத்தி எங்களுக்கு தெரியாதா.

  122. //வடமொழியே சொல்லித்தரா சிபிஎஸ்ஸீ பள்ளிகள் இந்தியா முழுவதும் உண்டு. அவர்கள் எல்லாரும் ஏன் கொண்டாட வேண்டும்? இது வடமொழிக்கு பிரச்சாமில்லையா?
    //
    இது கேள்வியா. எதற்கு ஆங்கிலம் கட்டாய மொழியாக எல்லா பள்ளிகளிலும் உள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரசாரம் இல்லையா.//

    ஆங்கில வாரம் வேண்டாம். ஏன் தமிழ் வாரமில்லை. தெலுங்கு வாரமில்லை, கன்னட வாரமில்லை. வங்காள வாரமில்லை? இவைகளெல்லாம் வெள்ளைக்காரன் பாஷைகளா? இவைகள் சி பி எஸ் சி பள்ளிகள் சொல்லித்தரவில்லையா?

    //இது அந்தந்த பிராந்திய மாநிலங்கள் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து கொள்ளலாம். மத்திய அரசின் செயல் பாடுகள் பாரத்தை ஒருமை படுத்துவதாக இருக்க வேண்டும். அதை சமக்ஸ்ருதம் சாதிக்கும். இதை பாரத்தின் பல தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் (மக்களும் கூட). சில மாக்கள் தான் சவுண்டு விடுகிறார்கள்.//

    ஏன் சுற்றறிக்கை விடவில்லை? வடமொழியை விட ஹிந்தி ஒருங்கிணைக்கும் தன்மையுண்டு. பல மாநிலங்களிலும் பெருநகரங்களில் மக்கள் பேசுகிறார்கள். புரிகிறார்கள். எங்குமே பேசப்படா கேடகப்படா வடமொழி ஏன்? 30000 பேர் பேசுகிறார்கள் என்று உட்டான்ஸ் வேண்டாம். சவுண்டு விடுவது சாரங்கன்.

    //எவ்விதத்திலும் குறைவில்லை. தமிழ் மாநாடு நடத்த கூட தான் மத்திய அரசு காசு கொடுக்கிறது.
    அந்த அந்த பிராந்திய மொழியையும் கட்டாயமாக அவ்வப் பிராந்திய CBSE கல்லூரிகளில் படித்தே தீர வேண்டும்.
    சமஸ்க்ருத வார கொண்டாட்டம் என்பது ஒரு initiative. நீங்கள் கேட்பது எப்படி என்றால் அம்மா காண்டீனில் எதற்கு இட்லி போடுகிறார்கள் இடியாப்பத்திற்கு என்ன கேடு. இட்லி தமிழ் ஹிந்துவின் உணவு. ஏன் பிரியாணி போடா வேண்டியது தானே என்பது போல இருக்கு.//

    அந்த இனியேட்டிவ் ஏன்? அதைத்தான் கேட்கிறார்கள். இடியாப்பம் இட்லி கதையெல்லாம் வேண்டாம். இனிஷியேட்டிவ் ஏன் இப்போது? ஒரு பலன் தரும் மொழிக்கென்றால் பரவாயில்லை. காளிதாசனின் நாடகத்தைப் படித்தால் வேலை கிடைக்குமா? பின் இனிஷியேட்டிவ் ஏன்? Why do encourage Sanskrit? You come to know the language only because you are brought up as a brahmin and taught to like the language as your religious tag. Not others. For them, it is just a language and they want to see whether it is useful to them in material sense. Finding that it is not, they don’t take it up. Even the students who take the subject in X and XII, forget it once they enter college to pursue professional courses or courses where second language is not compulsory.

    //ஆதரிக்க வேண்டும் என்று யாரவது அறிக்கை விட்டார்களா. தமிழர்கள் ஏற்கனவே சமஸ்க்ருதத்தை ஆதரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். despite galdwel and mccaulay. despite Kazhagams.

    தமிழாக CBSE பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சமஸ்க்ருதத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். படிப்பது மாணவர்கள், காசு கொடுப்பது பெற்றோர்கள். சரியா.

    மத்திய அரசு, சமஸ்க்ருதத்தை பற்றி பாரதத்தை பற்றி சரியான விழிப்புணர்வு ஏற்பட இதை செய்கிறது. சமஸ்க்ருதம் பயிலாத மாணவனை வலுக்கட்டாயமாக சமஸ்க்ருதத்தில் சேர்ப்பிக்க முயற்சி செய்ய வில்லையே.

    இது பாரத்தை உண்மையிலேயே ஒருமை படுத்தும் முயற்சி. உங்கள்ளுக்க் வயிறு பற்றி எரிகிறது, தமிழனும் விழித்திடுவானோ. நாம் அப்புறம் எப்படி அம்மாவாசை ஜபக் கூட்டம் நடத்தி காசு பார்ப்பது. அல்லாஹு அக்பர் சொல்ல, குண்டு வைக்க எப்படி ஆள் பிடிப்பது. கஷ்டம் தான் போங்கள்.//

    30000 ஆயிரம் தமிழர்களைச்சொல்கிறீர்கள். பப்பையா படித்தார் என்பீர்கள் இல்லையா? தமிழர்கள் அதிக அளவில் வடமொழி படித்து வடமொழி தமிழ்நாட்டில் பரவுகிறது என்பதை நம்பிவிடுவார்கள் படிப்பவர்கள். எங்கு வாழ்கிறீர்கள்? தமிழ்நாட்டில்தானே. உங்களுக்கு வடமொழி வெறி இருப்பதைப்போல அவர்களுக்குத் தமிழ்வெறி இருக்கிறது. மத்திய அரசு என்பதைவிட மோதி அரசு எனபதுதான் சரி. அவர் என் அரசு என்று வெப்சைட்டோ தொடங்கிவிட்டார். அறிக்கையை சிபிஎஸ்சிக்கு அனுப்பினாலே போதும் நிர்ப்பந்தம்தான். கட்டாயம்தான். நேரடியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை.

    பாரத்தை ஒருமைப்படுத்தும் முயற்சிக்கு ஹிந்திதான் சரி. கோடிக்கணக்கான மக்களுக்குத் தெரியும். வடமொழி அதற்கு இலாயக்கில்லை. முசுலீமைப்பற்றி எழுதி கவனததைத் திருப்ப முயல்கிறார். Sanskrit cannot unite Indians for the simple reason it is known only among a small portion of Indian population whereas Hindi can unite as many northern States have it as mother tongues; and where it is not mother tongue also, for e.g. Mumbai, it is popularly understood. But resistance is found in TN only because the language is forced, not because it should be hated. With persuasion and reasoning and proper method, Hindi can be spread here too. Because it is USEFUL. Sanskrit can never be spread because people wont want waste their time in learning a language which is useless to them. Sarangan, even Tamil brahmin youth are not studying it; they are forced by the elders only. Still, it is not popular.

  123. //ஒன்றுக்கும் உதவா மொழியை அரவிந்தன் ஆதரிப்பதேன்//
    இதை சொல்ல உமக்கென்ன தகுதி இருக்கு. இதே வாக்கில் போனால், தமிழ் படிப்பதாலோ தெலுங்கு படிப்பதாலோ என்ன பயன் இருக்கு. ஆங்கிலம் படித்தால் உலகெங்கும் வேலை. கரோல் பாகில் காபி கடைக்காரன் கூட ஆங்கிலம் பேசுகிறான்.
    மொழியை வர்த்தக நோக்கில் பார்ப்பவன் கேவலமாணன் தான். இதற்கு தான் எலிசரை பற்றி படியுங்கள் என்று சொன்னேன். மொழி நம்மை விட பெரியது. அதை வணங்கி ஆதரிக்க வேண்டும்.காசு பண்ண மொழி என்பது மேற்கத்திய சிந்தனை. எல்லா வற்றையும் ஒரு கருவியாக மட்டுமே காணும் உருப்படாத எண்ணம் அது. அதன் சாதக பாதகங்களுக்குள் இப்போ புக வேண்டாம்.//

    எல்லாருக்குமே தகுதி இருக்கிறது. தாய்மொழியைத்தவிர பிறமொழிகளை இலாப நோக்கில்தான் பாமர மக்கள் எடுப்பர். பப்பையா வயதானவர். ரிடையர்டு ஆசாமி. அவரைப்போன்றவருக்கு பொழுது போக்க இலக்கியம் வேண்டும். அது இன்னொரு மொழியிலும் சிறப்பாக இருந்தால் அதைப்படித்து தெரியலாமென அவர் வடமொழி படிக்கிறார்கள்.இப்படிப்பலருண்டு. அவரென்ன தன் வாலிபத்திலா படித்தார்.? அவர்களுக்கு இதைப்படி அதைப்படி என்று எவரும் சொல்வதில்லை. அவர் பெண்ணை வடமொழி படி என்றா சொன்னார். அவ்ர் படித்தது ஜப்பானிய மொழி. ஏன் ப்டித்தார் வேலைக்கு வாய்ப்புண்டு. கிடைத்தது. ஜே என் யூ வில் அவர் ஜப்பானிய் மொழி பேராசிரியர் போதுமா? ஜயகாந்தனின் மகனோ மகளோ வடமொழியா பள்ளியிலெடுத்த்ப்படித்தர் ? பேசலாம். ஆனால் தனக்கென்று வரும் போது வடமொழி அங்கில்லை என்பதுதான் உண்மை. காரணம் யூஸ்லெஸ்.

    பாமர மக்களைப்பற்றிதான் பேசவேண்டும். பாமர மக்கள் இலக்கியத்துக்காக அநநிய மொழியைப் படிக்கமாட்டார்கள். இலாபத்துக்குத்தான். இந்தியா முழுவதும் ஆங்கில மோஹம் அது வேலைக்கு உதவும் எனப்தால். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் ஆங்கில மோஹம் அமெரிக்காவில் வேலைக்குப்போகலாமென்பதற்காக.

    வடமொழி மக்கள் வாழ்க்கைக்கு உதவாது. ஆங்கிலம், ஹிந்தி உதவும். என்பதுதான் உண்மை. கேவலம். பாவம். புண்ணியம் – என்று வயிற்றெரிச்சலைக்கொடடுகிறீர்கள். நேரடியாக உண்மைகளை எதிர்நோக்கப்பயந்தவன் இப்படி பேசுவான்.வய்தான பிற்கு படித்துக்கொள்ளலாம் வடமொழியை. இப்போது தேவையில்லை.

    //என்ன தான் நீங்கள் தலை கீழாக நின்றாலும். வட மொழி வாரம் ஏன் கூடாது என்று அறிவு பூர்வமான வாதத்தை முன் வைக்கவே முடியாது. ஹை கோர்ட்டும் ஒருவர் போட்ட மனுவை தள்ளு படி செய்தாகிவிட்டது.//

    வடமொழி வாரம் கொண்டாடக்கூடாதென்று சொல்லவில்லை நான். ஆனால், அதனால் என்ன நன்மை மக்களுக்கு? ஏன் பிறமொழிவாரம் இல்லை? நீங்கள் ஆதரிக்கும் ஒரே காரணம் அது இந்துமதத்தோடு சம்பந்தப்பட்டது. தமிழ்ம்தான் சம்பந்தப்பட்டது. ஆனால் உங்களுக்கு அதன் வாரத்திற்காக போராட மனமில்லை. அதை மற்றவர்கள் செய்யும் போது வடமொழியின் மேல் வயிற்றெரிச்சல் என்கிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் வடமொழி மதமொழியாகவே தொடரும். மக்கள் மொழியாகாது. முடிந்தால் மோதி தன் ஐந்தாண்டுகளில் செய்யப்பார்க்கலாம். ஐந்தாண்டுகள் கழித்து நாம் ரிவ்யூ பண்ணும்போது 30000 ஆயிரம் தமிழர்கள் 35000 ஆகியிருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

  124. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழியை முதன்மைப் படுத்தும் விதமாக அந்த மொழி வாரம் கொண்டாடினால் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் அந்த மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியை நேசிக்க வாய்ப்பாகும். அதுவே இந்த தேசத்தின் ஒற்றுமையை பேண வழி. அது தவிர்த்து எவரொருவரும் பேசாத எவர் ஒருவருக்கும் சம்பந்தமில்லா செத்துப் போன ஒரு மொழிக்கு விழா கொண்டாடுவது அரசியலன்றி வேறல்ல. உயிர்ப்புடன் இன்றும் வாழும் மொழிகளுக்கு விழா எடுங்கள் அது அவசியம்.

  125. அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன்

    \\\ சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமுமே கரு. அதைத் தேவையில்லாத அளவுக்கு விமர்சிப்பது ஏனோ? \\\

    விமர்சனத்துக்கு உள்ளானது தங்களது புனைவு. ஒரு கழுவேற்ற சிற்பத்தில் காணப்படும் மனிதர்கள் சமணர்கள் என்ற கருதுகோளின் ஆதாரத்தில் படைக்கப்பட்ட புனைவு.

    புராணங்களில் அர்த்த வாதம் என்று உண்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே. அர்த்த வாதம் வ்யர்த்தவாதம் இல்லை தான். ஆனால் நேரடியான தத்யமும் இல்லை. உங்களது உத்தரத்தில் பெரிய புராண சாரத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

    புராணம் சொல்லும் விஷயம் ஒரு குறியீடாகக் கொள்ளலாமே அன்றி வரலாறு என்று சொல்ல வேண்டுமானால் அதற்கு முழு ஆதாரமும் முன்வைக்கப்பட வேண்டும். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயங்கள் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.

    துர்மத கண்டனம் என்றென்றும் சான்றோர்களின் செயல்பாடாக இருந்திருக்கிறது. ஆப்ரஹாமிய மதங்களில் சொல்லப்படும் இறைக்கோட்பாடு எந்த தர்க்கத்திற்கும் லாயக்கு கூட இல்லாத கோட்பாடு. உலக அமைதிக்கும் மானுட குலத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் ஒரு கோட்பாடு. இன்றைய திகதியில் எங்கெங்கெல்லாம் மனிதர்கள் இரக்கமின்றி ஒருவரை ஒருவர் லக்ஷக்கணக்கில் கோடிக்கணக்கில் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனரோ அதற்கு ஹேதுவான ஒரு கோட்பாடு. அந்த ரீதியில் அதை எதிர்ப்பதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை.

    இப்படிப்பட்ட அரக்கக்கோட்பாடுகள் ஹிந்துஸ்தானத்தில் புழங்குகையில் நமது கலாசாரத்தை உள்வாங்கி மானுடத்தையும் உள்வாங்கியிருக்கின்றன என்பதும் உண்மையே. ஹைந்தவமாகிய ஆப்ரஹாமியம் அரக்கத்தனம் கழுவப்பட்ட கலாசாரம் பேணும் ஆப்ரஹாமியம். மானுடம் போற்றும் கலாசாரம் போற்றும் இத்தகைய ஆப்ரஹாமியத்தில் எமக்கு பிணக்கில்லை. இதன் படி ஒழுகுபவர்களை நான் மனமாரப்போற்றியும் இருக்கிறேன்.

    அரக்கக்கோட்பாடுக்கு பரங்கிப்பணத்தில் பிள்ளை பிடிக்கும் செயல்பாடுடைய……. பரங்கியர் பெயரை சூட்டிக்கொண்டதில் ஆனந்தப்பட்டு ………தமிழுக்காக கண்ணீர் சொறிவது போல் நாடகமாடும் ரெ.மே அம்மணியை…… தாங்கள் அர்த்த பூர்வமாக ஹித பாஷணமாக சாடியமையில் எமக்குப் பெருமிதம் தானே. சம்வாதம் என்பது ஒத்த கருத்தை ச்லாகிப்பதும் பேதங்களை உள்ள படிப் பகிர்வதும் தானே.

  126. அந்தக் காலத்தில் போட்டிகளில் விவாதம் செய்வோர் அனைவரும் வென்றவர் கருத்தை, தோற்றவர் ஏற்றுக் கொள்வோம், இல்லையென்றால் தீயில் இறங்கி உயிர்துறப்போம் அல்லது கழுவில் ஏறுவோம் என்றெல்லாம் சபதம் எடுப்பது வழக்கம். நமக்கு இதைப் போன்ற சபதங்களில் உடன்பாடு இல்லை என்றாலும், இப்படி சபதம் செய்வோர் தோற்றபின்னர் உயிர்துறப்பதை பெருமையாகவும் தான் கொண்ட கொள்கைக்காக செய்த தியாகமாகவும் கருதினர்.

    பழைய தமிழ் இலக்கியங்களிலும் நம் மன்னர்கள் எதிரிகளுடன் போருக்கு புறப்படும் முன்னர் இதுபோன்ற சில சபதங்களை செய்துள்ளதாக தெரியவருகிறது. நம் மன்னர்கள் செய்த சபதன்களைப் பற்றி சங்க இலக்கியங்களிலும் சில பாடல்கள் உள்ளன.

    வாதங்களில் வெற்றி பெற்றோர், தோல்வி அடைந்தவர் உயிர் துறப்பதை விரும்பமாட்டார்கள். சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின் அடிப்படையிலேயே கழுவேறினார்கள். அதற்கு சைவர்கள் யாரும் பொறுப்பல்ல. திக ஆதரவாளர்கள் பல புத்தகங்களில் சைவர்கள் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதுபோல பொய்யாக எழுதி திரிகிறார்கள். சமணர்கள் கழுவில் ஏறினர் என்பதே சரி. கழுவில் ஏற்றப்பட்டனர் என்பது பொய். பெரியார் திடலில் பரிசுத்த ஆவியில் இட்டலி இடியாப்பம் சுடும் திகவிடம் என்ன எதிர்பார்க்க முடியும். ?

  127. சஹோதரி ரெபேக்கா மேரி

    என்னுடைய மொழிநடை தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ கலந்த கலப்பு மொழிநடை. இதை நேர்மையாக இந்த தளத்திலும் மற்றைய தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். என்னுடைய மொழிநடை என் இயல்பின் பாற்பட்டு கலப்பு மொழிநடையாக இருப்பினும் எந்த மொழியும் கலவா தூய தமிழின் மீது எனக்கு மிகுந்த காதல் உண்டு. ஸ்ரீ தாயுமானவன் இதைத் தெளிவாக அறிவார். என்னிடம் பரிச்சயமான ஒத்த கருத்துடைய பேதமான கருத்துடைய அன்பர்கள் பலரும் இதை அறிவர். ஆகையால் எம்முடைய மொழிநடையை விமர்சனம் செய்ய விழைபவர்கள் பால் எமக்கு எந்த பிணக்கும் கிடையாது. ஆனால் விமர்சனம் செய்பவர்கள் தூய தமிழை செயல்பாடாகக் கொண்ட அன்பர்களா அல்லது தூய தமிழ் என்று கோஷம் போடும்,,,,,, பரங்கியருக்குத் தொண்டூழியம் செய்யும் மாபாதகர்களா…….. நாடகமாடிகளா……. என்று நிச்சயம் பார்த்து தோலுரிக்கும் செயல்பாடும் உடையவன். தங்களுக்கும் தூய தமிழுக்கும் தங்களுக்கும் நேர்மைக்கும் பல்லாயிரம் காத தூரம் என்பதை தங்கள் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

    பரங்கியருக்குத் தொண்டூழியம் செய்ய எம்முடைய தேசத்தையும் தேசத்து கலாசாரத்தையும் விலைபேசும் உங்களுக்கு………… தமிழரின் தொல் சமயமான சைவத்தில் ஒழுகும் எமது சஹோதரரை அரக்கத்தனமான கோட்பாடுடைய உங்கள் பரங்கியர் மதத்திற்கு மதமாற்றம் செய்ய விழைந்த உங்களது இழிவான செயல்பாடையும் உலகம் அறியும்.

    பெயருக்கும் மொழி உணர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று வினவியிருந்தீர்கள்.

    வேதாசலம் என்ற பெயரை மறைமலை என்றும் சூரிய நாரயண சாஸ்த்ரி என்ற பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும் மாற்றிக்கொண்டவர்கள் மூடர்கள் என்று பரங்கிய அம்மணி நினைக்கலாம் தான்.

    உங்களது இலக்கு ஆப்ரஹாமியத்துக்கு பிள்ளை பிடிப்பது என்ற படியால் மொழி உணர்வு என்பது எப்படித் தெரிந்திருக்கும்.

    மொழி உணர்வு என்ற பெயரில் நாடகமாடுதல் மட்டும் தானே மிஷ நரிகளின் செயற்பாடு.

    எமது சமயம், கலாசாரம், மொழி, கோவில்கள், கலைக்கூறுகள் இவற்றை சுவடின்றி அழித்தொழிப்பது தானே உங்களது இலக்கு.

    \\\\ இதற்க்கு மேல் மனுதர்மத்தின் புனிதத்தை பற்றி அது சமுதாயத்திற்கு கூற வரும் நல்ல விடயங்களையும் க்ருஷ்ண குமார் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்று கூறட்டுமே. \\\\\

    அம்மணி, மேம்போக்காகத் தெரிந்த எந்த விஷயத்தைப் பற்றியும் முற்று முழுதாகத் தெரிந்தது போன்று நடிப்பது எமது செயற்பாடு இல்லை என்பதும் ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    விவாதம் மனுதர்மத்தை ஸ்ரீமான் தாயுமானவன் குறை கூறுவதைப்பற்றி இல்லை. ஒரு விஷயத்தைக் குறைகூறுவதன் முன்னர் அது பற்றிய முழுமைப்பார்வை உண்டா இல்லையா என்பது. மொழியாக்கங்களிலிருந்து என் நிலைப்பாடு பற்றி நிச்சயமாக அறிவேன்.

    மூல நூலை ஆராயாமல் மொழியாக்கத்தை மட்டிலும் ஆதாரமாகக் கொண்டு ஒரு கருத்தைப் பகிர்வதில் முழுமை இல்லை. இந்த வரைக்கும் நீங்கள் என்னை இடித்துறைப்பதை முழுமையாக ஏற்கிறேன்.

    இணையத்தில் உலா வரும் டுபாக்கூர் மொழியாக்கத்தில் ஆழ்ந்து……. இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு புளுகுக் கருத்துக்களை பரப்புரை செய்த…….. முழுமுட்டாள்களை பொது தளத்தில் தோலுரித்து துவைத்து வெளுத்திருக்கிறேன்.

    சமயம் கிடைக்கும் போது மனு தர்ம சாஸ்த்ர மூல நூலை வாசித்தறிந்து அது பகிரும் நல்ல விஷயங்களைப் பகிர முனைகிறேன். அது வரை தாங்கள் எம்மை இடித்துரைப்பதை சிரம் தாழ்ந்து ஏற்கிறேன்.

    ஸ்ரீமான் தாயுமானவனுக்கு ஒரு அலகீடு எமக்கு ஒரு அலகீடு என்று நிச்சயமாக இருக்கவியலாது.

    உங்களது விவிலியம் கூட முழுக்க முழுக்க பயங்கரவாதத்தையும் உலக அழிவையும் மூடத்தனங்களையும் ஆப்ரஹாமிய ஏகாதிபத்யத்தையும் மட்டிலும் பகிர்வதில்லை என்று நீங்கள் அறிவீர்களே. இந்த தளத்தில் கருத்துப் பதிந்த பல ஆப்ரஹாமிய அன்பர்கள் கூட விதிவிலக்காக விவிலியத்தில் உள்ள சொல்பமான நல்ல விஷயங்களையும் கூட பகிர்ந்திருக்கிறார்களே 🙂

    பரங்கியர் மதத்திற்காக பரங்கியருக்கு பிள்ளை பிடிக்க……. பரங்கிப்பிச்சைப்பணத்தில் தொண்டூழியம் செய்யும்………. தேசத்ரோஹத்தில் ஆழ்ந்து……. பித்தலாட்ட மதமாற்ற இழிவுச் செயல்பாடுகளில் ஈடுபடும்………..ஐந்தாம்படை பயங்கரவாத ஆப்ரஹாமியருக்கு தேசத்திற்குத் தொண்டு செய்யும் ஆர் எஸ் எஸ் பற்றிப்பேச எந்த அருகதையும் கிடையாது.

    மற்றபடி ஒத்த சமயத்தில் ஈடுபாடுடைய ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுக்கு தமிழர் தம் தொல் சமயத்திற்கு தமிழ் ஹிந்து தளமும் ஆர் எஸ் எஸ் ஸும் ஆற்றிய தொண்டுகளை குறிப்பாக முன்வைப்பேன்.

    விவிலியத்தில் தமிழைத் தேடிக்கண்டு பிடித்து விட்டீர்களா 🙂

  128. பாலா சுந்தரம்

    அப்பப்பா ரெம்ப கொதிகிறீங்க. யாருக்கு ராமானுஜர் கதை சொல்றீங்கன்னே நீங்க கொழம்பி போய் கிடக்கீங்க. இதுல ஒரே ஊகம் வேறு. எந்த பக்ஷம் பேசுகிறோம் என்றே தெரியாம ரொம்ப கொழம்பி போய் கிடக்கீங்க.

    நீங்கள் ரெண்டு வருஷம் நெட்டில் கிடைத்த வைணவ விசயங்களை படித்து விட்டு வந்து அலம்புவது ஹாஸ்யமாக இருக்கு 🙂 அதை எழுதுவதில் எத்தனை காழ்ப்புணர்ச்சி. நீங்கள் எப்படித்தான் எழுதினாலும், வைணவர் குல கூடஸ்தராக நாங்கள் கொண்டாடுவது நம்மாழ்வாரை தான். பாசி மணி ஊசி மணி வைப்பவரை சாமியாக்கி சாமியை ஆழ்வாராக்கியது நாங்கள் தான். எமக்கு நீர் சீர்திருத்தம் சொல்லி தர வேண்டாம். ராமானுஜர் வேற எந்த ஆழ்வாருக்கு தனியன் இடவில்லை, கள்ளனுக்கு தான் இட்டுருக்கிறார். இதை மனதில் வைத்தே இன்னமும் வாழ்கிறது வைணவ சமூஹம். திருப்பனனுக்கும் சந்நிதி எம்பெருமான் பக்கிலே தான் உறையூரிலே. ஒரு முறையேனும் அமலனாதிபிரானுக்கு பெரியாவாசான் பிள்ளை இட்ட வியாக்யானம் பாரும். மற்ற ஆழ்வார்களை நிந்தித்து இவரே ச்ரேஷ்டர் என்று ச்லாகிப்பார். இந்த பரம்பரை இன்னும் தொடருகிறது.
    நாங்கள் கடந்து வந்து விட்டோம். ஒரு வந்தேறிக் கூட்டம் வந்த கூட்டம் இங்குள்ளவரை குரங்காட்டம் காட்டி குரங்காக மாத்தியது. அந்த குரங்குகள் இன்னும் ஆதி இறைவனை நினைத்துக் கொண்டு விட்டெரிந்த காசுக்கு இன்று கத்தி கொண்டுள்ளது. கொஞ்ச நாள் கழித்து பார்த்தல் தெரியும் சமூஹம் இன்னும் முன்னே சென்றிருக்கும். குரங்கு கூட்டம் மட்டும் கூச்சலை நிறுத்தி இருக்காது.

  129. வியாசன்

    //
    இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளை விட தமிழில் தான் சமஸ்கிருதம் மிகக் குறைவாகக் கலந்துள்ளது. சம்க்கிருதச் சொற்கள் இல்லாமலும் தமிழால் தனித்தியங்க முடியும், ஆனால் சமக்கிருதத்தால் தனித்தியங்க முடியாது. அது ஏற்கனவே செத்தும் போய் விட்டது. சமஸ்கிருதமும் தமிழிலிருந்து அதிகளவில் சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?? 🙂
    //

    தமிழில் தான் சமஸ்ருத கலப்பு கம்மி. இது உண்மை. சமஸ்க்ருத கலப்பு இல்லாமல் தமிழால் தனித்து இயங்க முடியும். என்னை பொறுத்த வரை நடை முறை சாத்தியம் கிடையாது. உதாரணமாக விபத்து என்பதற்கு ஒரு தமிழ் சொல் கூறுங்கள். அமைச்சர் என்பதற்கு ஒன்று சொல்லுங்கள். அரசன், கோ என்பதற்கு ஒரு தமிழ் சொல். நீங்கள் சொல்லும் சொல்லீலாம் வழக்கில் உள்ளதா என்று பரீட்சித்து பாருங்கள். பரீட்சை என்பதற்கு தமிழ் சொல் தேர்வு அல்ல. பரீட்சைக்கு (பிரித: ஈக்ஷதே இதி பரீக்ஷா – சுற்றிலும் சரிதானா என்று நோக்குவது).

    //
    ஆனால் சமக்கிருதத்தால் தனித்தியங்க முடியாது
    //
    இது அபத்தம். எதை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள். ஒன்றிரண்டு உதாஹரணம் தர முடியுமா.
    மொழி இன்னொரு மொழியிலிருந்து வார்த்தைகளை வாங்கிக் கொள்வது சகஜம். ஆனால் சமஸ்ருததின் சொல்லாட்சிக்கு நிகரே கிடையாது. நான் தமிழன் தான் அதற்காக உண்மையை ஒத்துக் கொள்வதில் என்ன குறைச்சல். எனக்கு வெறி கிடையாது.
    மற்ற மொழிகளில் உள்ள ஒரு குறை என்ன வென்றால் ஒரு சொல் எப்பொழுதும் ஒரு பொருளை குறிக்கும். சமஸ்க்ருதத்தில் ஒரு சொல் என்றைக்குமே ஒரு பொருளை குறிக்காது. இதற்க்கு நிறைய உதாஹரனகள் இருக்கு. மேலே சொன்ன பரீக்ஷா இதற்கு ஒரு எடுத்துக் ட்டு. சங்கதம்.காம் இல் நிறைய இது போல் தந்துள்ளனர். படித்துக் கொள்ளலாம்.

    கருனாதிக் கூட்டம். Tablet computer என்பதை கஷ்டப்பட்டு குளிகை கணினி என்று மாற்றியது. குளிகை என்பது சமஸ்க்ருத சொல். குளிகா என்றால் tablet. ஏன் அப்படி கிலதி அதனால் குளிகா (முழுங்கப்படுவதால் குளிகா).
    சரி கணினியாவது தமிழா இல்லை. கணயதி இதி கணகம். கணிதம் என்பது சமஸ்க்ருத சொல். கணகம் என்றால் சமஸ்க்ருதத்தில் (கால்குலேடர்) சங்கனகம் (சம்யக் கணயதி நன்றாக கணிப்பதால்) அது கம்ப்யுடர்.

    இப்படி கதை நீண்டு கொண்டே போகும். சமஸ்க்ருதத்தில் பெயர் சொல் என்றும் தனியாக கிடையாது அதுவும் வினை சொல்லிலிருந்து தான் வரும். எல்லா வினைசொல்லிர்க்கும் ஒரு தாது இருக்கும். ரம் என்ற தாது என்றால் இன்பம் தருபவன் என்னு அர்த்தம். ரமயதி இதி ராம:, மற்றோருக்கும் இன்பம் தருபவன் ராமன்.

    உங்களை போன்றோர் திராவிட மாயையில் மூழ்கி எதை எதிர்க்கிறோம் என்று கூட விளங்காமல் நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டிக் கொண்டிருகிறீர்கள். உங்களை இந்த சுவி சேஷ கோஷ்டி முழுங்கிவிடும்.

  130. //நீங்கள் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் வடமொழி மதமொழியாகவே தொடரும். //

    திரு. BALA SUNDARAM KRISHNA,

    வடமொழி மதமொழியாக ஏன் தொடர வேண்டும். தமிழை மதமொழியாக்கினால் என்ன. தமிழர்கள் எதற்காக மதமொழியாக வடமொழியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். சமஸ்கிருதத்துக்கு அதிர்விருக்கிறது, குதிர்விருக்கிறது என்றார் வாதம் வேண்டாம். ஏனென்றால் தெய்வத்தமிழுக்கும் தமிழுக்கும் தெய்வீக சக்தியுண்டு என எங்களின் நாயன்மார்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

  131. //அதோடு உலகத் தமிழ் மாநாடு உலகெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமை அடையும் நாம் அதைக் கொண்டாடும் குறிப்பிட்ட நாடு எதிர்த்தால் என்ன செய்ய முடியும்? அவர்களுடைய மொழி உணர்வுக்கு இது எதிர்ப்பு என்று சொன்னார்களெனில்? மொழி உணர்வு பாதிக்கப்படுகிறது என்று சொன்னால்? என்ன செய்வோம்? நம் மொழியை உலகநாடுகள் கொண்டாடுகையில் நம் நாட்டில் உள்ள ஒரு மொழியை ஏதோ சில பள்ளிகள் மட்டும் கொண்டாடுவதில் என்ன ஆகிவிடும்? புரியத் தான் இல்லை! //

    கீதா சாம்பசிவம் !

    புரியவும் மனது வேண்டும். உலகத்தமிழ் மாநாடு எனபது ஒரு கொண்டாட்டமன்று. எனவே கொண்டாடப்படுகிறது என்பது பொருத்தமற்ற சொல். இம்மாநாடு பாமர மக்களுக்காக கூட்டப்படவில்லை. தமிழறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு கூடுமிடத்தையும் கதைக்குமிடத்தையும் ஏற்படுத்தித் தர. தமிழ் ஆர்வலர்கள் கலந்து இவ்ர்கள் பேச்சையும் விவாதத்தையும் கேட்பர். உலகமெங்குமிருந்து வரும் தமிழறிஞர்கள் தங்கள்தங்கள் கண்டுபிடிப்புக்களை சிறப்புத்தாட்களாக‌ மேடையில் வாசிப்பர். அவற்றுள் வைக்கப்பட்ட கருத்துக்கள் விவாத மேடையில் பேசப்படும்.

    தமிழின் தொன்மை; தமிழ் எதிர்நோக்கும் இன்றைய கேள்விகள்; எதிர்காலத்தை தமிழ் எப்படி எதிர்கொண்டு முன்னடை போடவேண்டும்? தமிழ்ப்புலவர்களின் படைப்புக்கள். புதிய படைப்புக்கள் பழைய படைப்புக்கள்; சமய இலக்கியம்; பொது இலக்கியம்; சிற்றிலக்கியங்கள்; பேரிலக்கியங்கள்; புலம்பெயர்தோரின் தமிழ்க்கொடை; இவை பற்றிய‌ அமர்வுகள் – இப்படி ஒரே தமிழறிஞர்கள்தான் சேரமுடியும். கேட்க முடியும்.

    தற்காலத்தில்தான் இம்மாநாடு அரசியல்வாதிகளால் கெடுக்கப்பட்டது. தங்கள்தங்கள் அரசியல் ஆதாயத்தை இம்மாநாட்டிலும் சேகரிக்க அவர்கள் முனைந்தார்கள்.

    இப்படி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மாநாட்டு மலர் ஏதாவது ஒன்றை படித்ததால் நான் சொல்வதெல்லாம் புரியும்.

    அடுத்து, உங்கள் அந்த நாடுகள் எதிர்த்தால் என்பது பற்றி….

  132. திரு. sarang,

    //தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வட மொழி வாதிகள் யார். இது நிதர்சனமா அல்லது உங்களது என்னமா. எவ்வளவு தமிழர்கள் சார் சமஸ்க்ருதத்தை எதிர்கிறார்கள். அண்ணா சமஸ்க்ருத எதிர்ப்பையும் ஹிந்தி எதிர்பையும் குழப்பிக் கொல்லாதீர்கள் //

    நீங்கள் தான் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொல்ல அல்லது கொள்ள முயற்சிக்கிறீர்கள் அம்பி. 🙂

    தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வடமொழிவாதிகள் யார் என்பது உங்களுக்கே தெரியும். எல்லோரும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் தான்.
    ஒவ்வொருமுறையும் தமிழில் தமிழ்நாட்டில் தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கோயிலகளில் மதமொழியாக ஆக்க முனையும் போது அதை எதிர்ப்பவர்கள் யார்? அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போவது யார்?

    சைவர்களாகிய பெரும்பான்மை உலகத்தமிழர்களின் மெக்காவாகிய சிதம்பரத்திலேயே தமிழர்களால தமிழில் பாட முடியவில்லை, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனது யார்?

    இந்தியாவின் மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் மொழி எல்லோருக்கும் கட்டாய பாடமாக இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தமிழை எல்லோரும் கற்க வேண்டுமென்பதை எதிர்ப்பவர்கள் யார்? அவரகள் தான் தமிழெதிரி வடமொழிவாதிகள். அதில் தமிழை நீசபாசை என்று இழிபடுத்தியவர்களும் அவர்களின் விசிறிகளும் அடங்குவர்,.

    தமது முன்னோர்களின் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தை மிகவும் போற்றும், அசைக்க முடியாத இந்துக்களாகிய இலங்கைத் தமிழர்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்படும் போது, அவர்களின் பழமை வாய்ந்த கோயில்கள் எல்லாம் அழிக்கபபடும் போது, சிங்களவர்களை இந்திய அரசு ஆதாரிக்க வேண்டும் என்று ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நேரடியாக தோன்றி வேண்டுகோள் விடுத்த தமிழெதிரிச் சமக்கிருதவாதிகளும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களும் இந்துக்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை, அவர்களுக்கு தமிழையும் தமிழர்களையும் எதிர்க்க வேண்டும் அவ்வளவு தான்.

    தமிழ்நாட்டுத் தமிழெதிரி வடமொழிவாதிகளுக்கு இன்னும் பல உதாரணங்களை என்னால் தரமுடியும். ஆனால் இந்த தளத்தில் அது வீண் வேலை. அவற்றை நான் எழுதினாலும் வெளியிடுவார்களோ தெரியாது. நீங்கள் விரும்பினால் எனது வலைப்பதிவில் எழுதுகிறேன்.

  133. பாலா

    //
    இந்தியா முழவதும் தலித்துக்களின் மீதான தீண்டாமை அவலம் இந்த மனுவாலேயே. ஆனால் சிலவற்றை விலக்கிவிட்டு மற்றவற்றை ஏற்கலாம் என்றால், நீங்கள் எதையும் எளிதில் ஏற்கும் சட்டை மாற்றிதானே. உங்களைப் பிற இந்துக்கள் எப்படி நம்புவது? Completely throw it out. If you accept the major part, naturally you will end up accepting the left out soon.
    //

    சார் உங்களுக்கு சுத்தாமா எதுவும் இல்லை. இப்படி மனு சாஸ்திரம் சிறந்தது என்று இட்டுக் கட்டும் வேலை எங்களுக்கு இல்லை. அதை தூக்கி போட்டது ஒரு தமிழ் ஹிந்து தான். இதையும் எழுதி இருக்கிறேன். காமாலை காரனுக்கு கண்ணு மட்டும் தான் சரியா தெரியாது என்று நினைத்தேன். உமக்கு பித்தம் தலையில் ஸ்வாமின்.

    ஜாதி திருமணம் பற்றி பேசினால். அதன் அர்த்தம் புரியாமல் அச்சு பிச்சு தனம். கர்ம செய்வதற்கு என்று மனம் முடித்தாள் ஜாதி கட்டுப்பாடு இருக்க தான் செய்யும். அழகை பார்த்து கன்னலம் கட்டுபவனுக்கு கர்ம என்ன வேண்டிகிடக்கு ஜாதி என்ன வேண்டிகிடக்கு. இதையும் தான் சொல்லி இருந்தேன். அதை படிக்காதே உம்ம கண்.

    திருவான்மியூர் ஸ்டால் சென்று நீங்கள் பார்துது சாதி தான். உங்கள் கண்ணில் தான்னே பிரச்சனையை. நான் அங்கு அத்தனை நாட்களும் இருந்தேன். எல்லா ஸ்டால்களுக்கும் சென்றேன் (ஜாதியா ஸ்டால் உட்பட). அங்கே பிணம் எரிப்பவர் ஸ்டால் முதல் வரை பிராமன சங்கம் வரை எல்லோரும் சம தளத்தில் இருந்தனர். ஒரு ஹிந்துத்வா ஐக்கியத்தை அங்கே காண முடிந்தது. உமக்கு என்னடா எல்லாரும் செர்ந்துடான்களா என்று வயித்தெரிச்சல் :-). நாடார் சங்கத்திற்கு மூணு ஸ்டால். பிராமன சங்கத்திற்கு தம்மை துண்டு ஸ்டால் பாத்தீங்களா 🙂 . இதை நிர்வாகம் செய்த கேடு கேட்ட பிராமணர்களை விடுங்கள்.

    நீங்க அங்க வந்து சுத்தி பாத்துட்டு மிளகா பஜ்ஜி சாப்டு சென்ற ஆளு தானே. ஒவ்வோர் இடத்திலும் நிற்று அவர்கள் என்ன காரியம் செய்கிறார்கள் என்று கேட்டேர்களா. அவர்களின் பரந்த ஐக்கிய நோக்கை பார்த்தீர்களா. நாட்டார் சங்கம் ஸ்டாலை பார்த்து ஐயோ நாட்டார் சங்கம். மறுத்து பாண்டியர் ஸ்டாலை பார்த்து ஐயோ இவன் அனைவரையும் ஆண்டானா என்று வயிறு நோகள்.
    முஹம்மது பின் துக்ளக், அவுரங்கசீப் ஸ்டால் போட்டாதான் உங்களுக்கு சந்தோசம் போல.

    //
    எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. உங்களுக்கும் இந்துத்வாவுக்கும் ஏழாப்பொருத்தமிருக்க, எப்படி இங்கே உலாவுகிறீர்? மனுவை ஆதரிப்பது ஏன் என்பது இப்போது புரிகிறது. உங்கள் ஜாதியே என்ற பேச்சுக்கு வலிமை தேட மூசுலீம்களைப்பற்றி பேசுகிறீர்கள். அவாளைக் கட்டச்சொல்லு; நானும் எம் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிறேன். அதாவது நீராக வந்து எதையும் செய்ய மாட்டீர். தலித்துகளை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளா நீஙகள், இந்துமதவளர்ச்சிக்காக தன் ஜாதிவெறியைத் துறக்க இயலா நீங்கள் இசுலாமியரும் கிருத்துவர்களும் தலித்துக்களை ஏமாற்றுகிறார்கள் எனற கபட‌ நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். They are citing persons like you to dalits. உம்மைப்போன்ற பேர்வழிகள் இருக்கும்வரை எப்படி தலித்துகள் இந்துவாக இருப்பார்கள்? வடமொழி என் கண்; தலித்துகளிடம் நாங்கள் நெருங்க மாட்டோம் என்று சொல்பவர் எப்படியப்பா இந்துமதத்தை வளர்க்க முடியும்? மாறப்பாரும். இல்லாவிட்டால் இசுலாமியராகி அல்லது கிருத்துவ பிராமணனாக உம்வீட்டுப்பெண்களை இன்னொரு பிராமணனுக்கு கட்டி வையும்.
    //

    அடடா என்ன புரட்சி என்ன புரட்சி. உங்க வீட்டு பொண்ண ஒரு சுடான் நாட்டுகாரனுக்கு கட்டி வைத்தா மகா புரட்சி. வெக்கமா இல்லை. மாற்றம் தன்னில் வர வேண்டும் சாமி. எங்கள் வீட்டில் நாங்கள் கம்மா ஜாதி பொன்னை கட்டிருக்கோம்.
    முஸ்லிம்களை கேள்வி கேட்பது நீ கேள்வி கேக்க உரிமை இல்லை என்பதற்கு. அவன் ஞாயமா கேள்வி கேட்டா பதில் தரும்வோமலா. உம்ம முயற்சி மத மாற்றம். அதான் வாய மூடு என்கிறோம்.

    //இந்துமதவளர்ச்சிக்காக தன் ஜாதிவெறியைத் துறக்க இயலா // இதை எப்படி நீர் முடிவு பண்ணலாம். உமக்கு என்னை பற்றி தெரியுமா. உங்களுக்கு உம்மை பற்றியே தெரியாதிருக்க ஏன் லவட் ச்பிகர் வைத்து கத்துகிறீர்கள். உங்களது அறியாமை அம்பலமாகிறதே. அடுத்தவனை பற்றி ஒரு கருத்து கூற உமக்கென்ன உரிமை.

    என்னை பற்றி இவ்வளவு கேவலமாக கருத்து கூறுகிறீர்களே அதன் அடிப்படை என்ன. அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று உமக்கு தெரியுமா. எதை வைத்து பேச்சு. நான் பிராமணனா இல்லையா என்று கூட உங்களால் நிர்ணயம் செய்ய முடியாதிருக்க ஏன் பிதற்றல்.

    நீங்கள் பொதுவான கருத்து பரிமாற்றத்தை விட்டு தனி மனித தூஷனையில் இறங்கி விட்டாயிற்று. கழக கண்மணிகள் எதை கய்யால்வார்களோ அதையே தான் நீரும் செய்கிறீர். தொடரட்டும் உங்கள் உபயம்.

    //உதாஹரணம்
    சரணாகதியடைந்தார் மதுரகவி. தன் ஈகோ எல்லாம் ஒழிய இவரன்றி எனக்கு வேறு தெய்வமே இல்லையென எடுத்தார். //தேவமற்றறியேன்//

    சாரங்கன்! இக்கதை அல்லது வரலாற்றின் நோக்கமே உம்மைப்போன்றவருக்குத்தான்
    //

    இது எனக்குதான் என்று எப்படி நிர்ணயம். நான் சாதியத்தை தொடாமல் இருக்க எனக்கு மதுரகவியார் கதை படிக்க அவசியப்படவில்லை. அதற்க்கு முன்னே எங்களுக்கு அந்த நோக்கம் தான்.

    நீங்கள் எங்கு ஆரம்பித்தீர் எங்கு வந்துள்ளீர் பார்த்தீர்களா. சமஸ்க்ருதத்தில் ஆரம்பித்து தனி மனித தூஷனை. உங்களது அழகு இது தான்.

    உமக்கு காமாலை என்ன சொல்கிறது. சமஸ்க்ருதத்தை ஆதரித்தால் அவன் அய்யரு. மோடி அய்யரா. சுத்த புத்தி குருடாக இருக்கிறீர்கள் சார் நீங்கள்.

  134. இன்னொரு நாட்டில் தமிழறிஞர்கள் கூடி விவாதிப்பதை அந்நாட்டினர் எதிர்க்க மாட்டார்கள். காரணம். தமிழர்கள் சிறுபான்மையினர். அவர்கள் மொழி பற்றிய ஆராய்ச்சிக்காகத்தான் கூடுகிறார்களே தவிர, அந்நாட்டு மதத்தைப்பற்றியோ அரசியலைப்பற்றியோ அல்ல. உண்மையில் இம்மாநாடுகள் தொடக்க விழாவை அந்நாட்டு ஆட்சியர் ஒருவர்தான் தொடங்கிவைப்பார். அவருக்கு கொடுக்கும் மரியாதையாக. அதன்பிறகு அந்நியருக்கும் இம்மாநாட்டுக்கும் தொடர்பில்லை. எங்கு தமிழ்பேசுவோர் மொதத ஜனத்தொகை கணிசமாக இருக்கிறார்களோ அங்குதான் இம்மாநாடு நடக்கும். தமிழரே இல்லாத நாட்டில் நடக்காது. எனவே, கனடாவில், மொரீஷியஸில், தில்லியில், மும்பாயில், சவுத் ஆஃபிரிக்காவில், இலங்கையில் – இப்படி நாடுகளில் நடக்கலாம்.

    ஒருவரின் மொழி உணர்வுக்கு எவருமே எங்கேயுமே எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது அவ்வுணர்வு அறிவு மட்டுமாக இருந்தால். அரசியல் கலக்கும்போது அங்கு மற்றவருக்குப் பிரச்சினை எழும். As long as it remains a forum for intellectual exchanges regarding Tamil language, her heritage and her legacy etc. it is an innocuous gathering of intellectuals. No outsider will bother about it. எடுத்துக்காட்டாக, உலகத்தமிழ் மாநாட்டில் தமிழைப்பற்றித்தான் பேசவேண்டும். தமிழர் பிரச்சினைபற்றி பேசக்கூடாது. அஃது அரசியலாகி விடும். அப்படி பேச வாய்ப்பு வேண்டுமென்றால், அதற்கென தனி மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. அங்கு பேசுவர்.

  135. தமிழில் பல பாடல்களை எழுதி புகழ் பெற்ற பாரதிக்கும் சமஸ்பிரத பற்று உண்டு என்பதை தெளிவாக்கும் ஒரு நிகழ்வு:

    பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல் – முரண்பாடு வந்தது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

    ஆனாலும் அப்படி ஒரு மோதல் நடந்தது என்பது மட்டும் உண்மையே!

    ஞானபாநு என்னும் ஓர் மாத இதழ் அதில் (1915 ஜூலை) சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளில் க,ச,ட,த,ப எனும் எழுத்துக்களில் நான்கு வகை ஒலி உண்டு; தமிழை எடுத்துக் கொண் டால் அவ்வாறு இல்லை. க என்ற ஒரே ஒலியுடைய ஒரு எழுத்துத்தான் உண்டு. க,ச,ட,த,ப எழுத்துக்களும் அப்படியே தமிழில் ஒரே ஒலி உடையன. இது தமிழில் உள்ள ஒரு குறைபாடு என்றும், இதனைப் போக்கிட சில குறியீடுகளைப் பயன் படுத்தலாம் என்றும் இதில் அரவிந்தரும் என்னோடு உடன்படுகிறார் என்றும் பாரதியார் ஞானபாநு வில் எழுதியிருந்தார்.

    அதே இதழில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நமது வ.உ. சிதம்பரனார் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தார்.

    தெய்வ பாஷை என்றும், பூரண பாஷை என்றும், சொல்லப்படுகிற சமஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும், பல புதுமை களையும், திருத்தங்களையும் கொண்டுள்ள பாஷை என்று சொல்லப்படுகின்ற வங்காளிப் பாஷை எழுத் துக்களோடும் ழ,ற,ன,தி.ஞீ. என்னும் எழுத்துக்களையாவது, அவற்றின் ஒலி களைக் குறிக்கும் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பர்கள் பாரதியார் அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்கள் ஆயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழி காட்டிகள் ஆவார்கள். பின்னர் நம் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள் என்று பளிச் சென்று பதில் அடி கொடுத்தார்.

    இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் ஆரிய – திராவிட உணர்வு இதற்குள் இழையோடுகிறது.

  136. பாலா

    //
    பாமர மக்களைப்பற்றிதான் பேசவேண்டும். பாமர மக்கள் இலக்கியத்துக்காக அநநிய மொழியைப் படிக்கமாட்டார்கள். இலாபத்துக்குத்தான். இந்தியா முழுவதும் ஆங்கில மோஹம் அது வேலைக்கு உதவும் எனப்தால். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் ஆங்கில மோஹம் அமெரிக்காவில் வேலைக்குப்போகலாமென்பதற்காக.
    //

    எவ்வளவு முரண் பாடுகள் பாருங்கள்.

    பாமரன் ஆங்கிலம் படிக்கிறானா சார். இல்லையே அப்புறம் எதுக்கு இந்திய அரசு ஆங்கிலம் கற்பிக்க அத்தனை பணத்தை கொட்டுகிறது.

    பாமரனை பிடித்து சமக்ஸ்ருத்த வாரம் கொண்டாட சொன்னார்களா. எங்கே சமஸ்க்ருதம் உள்ளதோ அவர்களை கொண்டாட சொன்னார்கள். இதை இன்னும் விளங்கிக் கொள்ள உங்களால் ஏன் முடியவில்லை. ஏன் என்றால் உங்களின் நோக்கம் சமஸ்க்ருத எதிர்பல்லா. உண்மையில்

    1) பிராமன த்வேஷம்
    2) ஹிந்து த்வேஷம்
    3) எப்படியாவது எத்த்யாவது முடிச்சுப் போட்டு கல்லா கட்டனும்

    //
    வடமொழி மக்கள் வாழ்க்கைக்கு உதவாது. ஆங்கிலம், ஹிந்தி உதவும். என்பதுதான் உண்மை. கேவலம். பாவம். புண்ணியம் – என்று வயிற்றெரிச்சலைக்கொடடுகிறீர்கள். நேரடியாக உண்மைகளை எதிர்நோக்கப்பயந்தவன் இப்படி பேசுவான்.வய்தான பிற்கு படித்துக்கொள்ளலாம் வடமொழியை. இப்போது தேவையில்லை.
    //
    என்னன்னா சொல்ல வாரீங்கோ. குழப்பல் திலகம்னா நீங்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையமா. நான் பலர் (அப்ராம்னர்கள் உட்பட) புலம்ப கேட்டுள்ளேன் ஐயோ சிறு வயதில் சமஸ்க்ருதம் படிக்காமல் விட்டு விட்டேனே பாழாப்போன கருணாநிதியால் எல்லாம் வந்தது இப்போதாவது படிக்கிறேன் என்று. அதை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். அடுத்தமுறை ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புறேன்.

    //
    வடமொழி வாரம் கொண்டாடக்கூடாதென்று சொல்லவில்லை நான். ஆனால், அதனால் என்ன நன்மை மக்களுக்கு? ஏன் பிறமொழிவாரம் இல்லை? நீங்கள் ஆதரிக்கும் ஒரே காரணம் அது இந்துமதத்தோடு சம்பந்தப்பட்டது. தமிழ்ம்தான் சம்பந்தப்பட்டது. ஆனால் உங்களுக்கு அதன் வாரத்திற்காக போராட மனமில்லை. அதை மற்றவர்கள் செய்யும் போது வடமொழியின் மேல் வயிற்றெரிச்சல் என்கிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் வடமொழி மதமொழியாகவே தொடரும். மக்கள் மொழியாகாது. முடிந்தால் மோதி தன் ஐந்தாண்டுகளில் செய்யப்பார்க்கலாம். ஐந்தாண்டுகள் கழித்து நாம் ரிவ்யூ பண்ணும்போது 30000 ஆயிரம் தமிழர்கள் 35000 ஆகியிருக்கிறார்களா என்று பார்க்கலாம்.
    //

    ஐயோ எதுக்குன்ன இப்படி அந்தர் பல்டி, கடசியா வேதாளம் இறங்கிருச்சு போல. தமிழ் மொழி வாரம் கொண்டாட தமிழ் நாடு முயல வேண்டும். அதை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். நீங்கள் நிறையா யோசனைகள் சொல்லலாம். மோடி அரசு எடுத்த ஒரு நல்ல முடிவு ஆங்கிலத்தை கை விட்டது. ஏன் ஆங்கிலத்தை கை விட்டார்கள் பஞ்சாபியை கைவிடலாமே என்பது போன்று இருக்கு உங்கள் வாதம்.
    தமிழ் வாரம் கொண்டாடினால் அதை கூறு கெட்டவர்கள் எதிர்த்தால் நானும் குரல் கொடுப்பேன். சும்மா எதுக்கு போராடனும். இப்படி எல்லாம் மாற வெட்டி ராமதாசு தான் செய்வார். நீங்களும் அப்படி தான் எதிர் பார்கிறீர்கள்.

    நான் சமஸ்க்ருத தளத்தில் இருக்கிறேன் அதனால் அதற்கு போராடுகிறேன், இங்கு மட்டும் அல்ல, களத்திலும் கூடத்தான். நீ எதுக்கு இந்த வேலை செய்யற ஒரு முதியோர் இல்லம் ஏன் நடத்தலாமே என்று நீங்கள் யோசனை சொல்கிறீர்கள். இது உங்களுக்கு இருக்கம் குழப்பத்தையே காட்டுகிறது

    அன்ன இந்த முப்பதாயிரம் நாற்பதாயிரமாக இந்தாண்டே மாரும்னா. ஐந்தாண்டுகள் பொறுக்க வேண்டாம். நான் சொன்ன முப்பதாயிரம் உங்களுக்கு புரிய வைக்க ஒரு கணக்கு. அதையும் தாண்டி இருக்கிறார்கள். இன்று இந்தியாவில் சமஸ்க்ருதம் பேசுபவர்கள் ஒரு கோடியை தொட்டுள்ளனர். அறிந்தவர்கள் பேசத் தெரியாதவர்கள் இதை விட அதிகம்.

    சமஸ்க்ருத்திற்கும் பாரதத்தின் ஒவ்வொரு ஒவ்வொரு மூலைக்கும் சம்பந்தம் உண்டு. அது மதத்தை கடந்த மொழி என்று அங்கீகாரம் அடைந்து ரொம்ப நாளாச்சு.
    st james school london. https://www.youtube.com/watch?v=jF3hXu2wH3g

    இந்த வீடியோ பாருங்கள் அங்குள்ள ஆயா புள்ளைங்க என்ன சொல்றாங்க பண்றாங்கன்னு பாருங்க
    அந்தம்மா சொல்லுது (நான் இல்லை) சமஸ்க்ருதம் படிச்சா ஆங்கில உச்சாரணம் நல்ல வருதாம்.

    எத்தனை கிறிஸ்தவ புள்ளைங்க, முஸ்லீம் புள்ளைங்க சமஸ்க்ருதம் படிக்கிறார்கள் தெரியுமா சார்.

    ஒரு அயர்லாந்து (ஒழுங்க படிங்க அய்யர்லாந்து இல்லை 🙂 ) சமஸ்க்ருத வாத்தியார் என்ன சொல்றாருன்னு பாருங்க (John Scottus School in Dublin )

    https://sanskrityoga.wordpress.com/453-2/

    சைட்டு கொஞ்சம் மெல்ல தான் வரும். அவரு சொல்வதிலிருந்தே சமக்ஸ்ருதம் சிறுவர்களுக்கு ஏன் முக்கியம் என்றும் நீங்கள் படித்துக் கொள்ளலாம்.

    சமஸ்க்ருதத்தில் உள்ள சுபாஷிதங்களுள் ஒரு ஐந்து % ஒருவன் படித்தாலே போதும் அந்த மாணவன் அப்புறம் தவறு செய்வது மிக கடினம். இதை சொன்னவர் ஒரு இசுலாமிய ப்ரொபசர். அவரது பெயரை மருந்து விட்டேன். ஊர் திரும்பியவுடன் புத்தகத்தை பார்த்து தருகிறேன்.

    நீங்கள் எவ்வளவு தான் சிண்டு முடிய நினைத்தாலும் அது நிறைவேறாது. மக்கள் தெளிவாகி விட்டார்கள். சிண்டு முடிந்த கழகங்களின் கதி என்ன என்று இன்று நாம் பார்க்கிறோம்.

  137. உயர்திரு. கிருஷ்ண குமார் ….

    பின்னூட்டம் மிக பெரிதாகவும், அதைவிட பயங்கர ஆத்திர ஆத்திரமாகவும் சொற்கள் தெறித்து விழுகின்றன.. ஒன்று மட்டும் தெரிகிறது கழகங்களின் மீதான பீதி இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பது அனைவரின் பின்னூட்டங்களில் நன்றாக புலனாகின்றது. ஏனென்றால், நான் கழகங்களையோ அல்லது அதன் தலைவர்களையோ எப்போதுமே ஆதரித்ததில்லை. ஆனால் நான் வடமொழி திணிப்பை எதிர்ப்பதை ஏதோ கலைஞரிடம் கற்று கொண்டதை நேரில் பார்த்தது போன்றே இங்கு பேசி கொண்டிருக்கிறார்கள். நான் கலைஞரிடம் தான் கற்றுக் கொண்டேன், அவரின் முழு பெயர் பரிதிமாற் கலைஞர் என்பதாகும். மற்றப்படி கழக கலைஞரிடம் அல்லவே அல்ல. அதிலும் சாரங் ஒருப்படி மேலே சென்று, எனக்கு இருப்பது மொழி மீதான பற்றுதல் அல்ல,மத வெறி என்கிறார்!! அதாவது அவரின் கணக்குப் படி சமற்க்ருத மொழியை எதிர்ப்பவர்கள் யாரும் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான். மிலேச்ச பதறுகளாகத் தான் இருக்கும் என்பது அவரின் கண்டுப்பிடிப்பு. வடமொழியையோ அல்லது இந்தியையோ ஒருவர் எதிர்க்கிறார் என்றால் , ஒன்று அவர் கழகக் கண்மணியாக இருக்க வேண்டும் அல்லது ஆபிரகாமிய மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ‘ஷாகா’வில் சொல்லிக் கொடுத்ததையே இன்னும் உளறி கொண்டிருப்பவர்களிடம் நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.. சரி உங்களின் மேலான வாதத்திற்கு வருகிறேன்.

    //உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நீங்கள் தர்க்கமாக இல்லாமல் வெற்று கோஷங்களாக முன்வைப்பது சலிப்பைத் தருகிறது.//

    இந்த உலகினில் எல்லாம் தெரிந்தவர் என்று யாருமில்லை ஐயா. ஏதோ எனக்கு தெரிந்ததை கூறினேன். நான் கூறியதில் எது உங்களுக்கு சலிப்பை கொடுத்தது என்று கூறினால் தகும்.

    //இந்தத் திரியில் மதிஹீனமாக மிக்க மலினமான உத்திகளை நீங்கள் கையாண்டது போக அவரை சினக்கிறீர்கள்? //

    எது மதியீனமானது?. பிருகதாரன்யக உபநிடதத்தில் உள்ள மாட்டு கறி உண்டால் அறிவுள்ள குழந்தை பிறக்கும் என்பதையா அல்லது மனு தர்மத்தின் வக்கிரத்தை எடுத்து கூறியதையா. இரண்டுமே ஆதாரங்கள் தான். சோதித்து பார்த்து புறம்பாக ஏதாவது இல்லாத ஒன்றை கூறி இருந்தால் ஒரு “Rebuttal” மறுமொழி ஒன்றை போடுங்கள். விவாதித்து கொள்வோம்.

    //ஆரியம் என்றால் என்ன என்று முதலில் ஆதார பூர்வமாகப் பகிரவும். //

    நீட்டி முழக்காமல் ஆதாரத்தோடு சொல்கிறேன்.. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் நானே தாய். என்னில் இருந்தே அனைத்தும் தோன்றின, நான் இல்லா விட்டால் இந்தியாவில் எந்த மொழியும் வாழ முடியாது, அனைத்தும் நானே என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியதைப் போன்று கொஞ்சமும் வரலாற்று அறிவில்லாமல் பிதற்றி கொண்டிருக்கும் பிதற்றலுக்கு பெயர் தான் ஆரியம் என்பது. ஐயம் இருந்தால் மோடியின் சுற்றறிக்கையை பார்க்கவும். நீங்கள் கொஞ்சம் சிந்தித்தால் நான் கூற வருவதன் மொத்த சாரமும் புரியும். புரியவில்லை என்றால் ஒன்றும் சிக்கலில்லை, தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மறைமலை அடிகள் அல்லது பரிதிமாற் கலைஞர் (இப்போதேல்லாம் மறைமலை அடிகள் மற்றும் பரிதிமாற் கலைஞரின் பெயர்களை அடிக்கடி தாங்கள் பயன்ப்படுத்துவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று) இவர்களின் நூலினை வாசிக்கவும், ஆரியம் என்றால் இன்னதென்று தெளிவாக கூறி இருப்பார்கள். இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் திரிகளில் விளக்க முயற்சிக்கிறேன்.

    //எங்கள் பழனியாண்டவன் மீது ஆணையாகச் சொல்லுங்கள் நீங்கள் சம்ஸ்க்ருதம் கற்றதுண்டா? //

    உங்கள் அளவிற்கு எனக்கு வடமொழி ஞானம் இல்லை. ஏதோ எழுத, படிக்க என்கிற அளவில் தெரியும் அவ்வளவே. என் தாய் கற்றுக் கொடுத்தார். வடமொழி என்பது நான் விரும்பாமல் என்னிடம் வந்த ஒன்று. அதனாலேயே அதன் மீது எனக்கு எந்த நாட்டமுமில்லை.

    //மனுதர்ம சாஸ்த்ரத்தை விமர்சிப்பதற்கு முன்னர் நீங்கள் மனுதர்ம சாஸ்த்ரத்தை முழுதும் வாசித்திருக்கிறீர்களா?//

    முழுமையாகப் படித்திருக்கிறேன், உங்கள் அளவிற்கு மனுவில் எனக்கு கருத்தாழம் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஒரு வேளை மனு தர்மத்தில் பெண்களை பற்றி கூறியிருப்பதாக நான் எடுத்து காட்டியது தவறாக இருக்கும் அளவில் அதன் உண்மையான பொருள் என்ன என்பதை தாங்கள் எனக்கு தெளிய வைக்கலாம்.

    //முழு சம்ஸ்க்ருதமே மனுதர்ம சாஸ்த்ரம் …………. முழு சம்ஸ்க்ருதமே ஜாதியம்………..என்று கூறுவது உளறல் இல்லாமல் வேறு என்ன சொல்லுங்கள்? //

    நீங்கள் கூறுவது உண்மை தான்.. ஆனால் சாதியத்திற்கு ஆதரவான கருத்துக்கள் அடங்கி இருக்கும் ஒரே மொழி சமற்கிருதம் மட்டும் தானே ஐயா? மனு தர்மம் போன்று மனிதர்களை நான்காக கூறுப்போட்டோ அல்லது பெண்களை இழிவு படுத்தும் முகமாகவோ தமிழிலோ அல்லது வேறெந்த இந்திய மொழிகளிலோ இருந்தால் எனக்கு கூறவும். முழு சமற்க்ருதமே சாதியத்தை கூறுபவையல்ல தான். ஆனால் சாதியத்தை கூறுபவை அனைத்தும் இருப்பது சமற்கிருதத்தில் தானே அன்பரே. இது அனைத்தும் மக்கள் கருத்து தான் என்னுடையதல்ல.

    //உலகமே சம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறது என்று பினாத்துவது மதிஹீனம்//

    அப்படி நான் எங்கும் கூறவில்லை மன்னிக்கவும்…..

    //மணிப்ரவாளம் புல்லுருவித்தனம் என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும்………. அதில் பார்ப்பனீயத்தைப் பார்க்க விழைவது பித்துக்குளித்தனமின்றி வேறென்ன…………. //

    கண்டிப்பாக மணிப்ரவாளம் புல்லுருவி தனம் தான். அதில் மாற்று கருத்தே இல்லை. ஏனென்றால் மணிப்ரவாளம் என்பது இயல்பான மொழி கலப்பு அல்ல. வலிந்து திணித்த கொடுஞ்செயலே. தமிழ் அழகான மணிபோன்ற மொழி தான். ஆனால் அதனுடன் இருப்பது பவழமல்ல, பச்சை மிளகாய் தான் என்பதை தாங்கள் உணரவும். அதில் நான் எப்போது பார்ப்பனியத்தை பார்த்தேன். அப்படி எந்த கருத்தையும் நான் முன்வைக்க வில்லையே.

    //ஆனால் உங்கள் ஆக்ரஹத்தை செயலில் காட்டுங்கள். //

    இனி வரும் காலங்களில் தங்களின் அறிவுரைப்படி நடக்கிறேன்.

    //மணிப்ரவாளத்தை ஒழிக்க நீங்கள் முனைவதாலெல்லாம் மணிப்ரவாளம் ஒழியாது.. திருப்புகழும்……//

    மணிப்ரவாளத்தை எப்பொழுதோ ஒழித்துப் பாடைக்கட்டியாகி விட்டதய்யா. நான் கதிரவனுக்கு அளித்த பதிலை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இனி தங்களின் முருகப் பெருமானே நினைத்தாலும் அதை உயிர்பிக்க முடியாது அன்பரே,ஐயம் இருப்பின் தாங்கள் பெரிதும் உவக்கும் ஜெயமோகனின் இணையத்திற்கு மீண்டும் சென்று அவரின் தெளிய தமிழ் நடையை பார்க்கவும்.

    //அறிவு பூர்வமாக முழுமையாகக் கருத்துப் பகிருங்கள். காபி பேஸ்ட் கந்தறகோளங்கள்………… //

    மன்னிக்கவும் நான் காபி பேஸ்ட் எல்லாம் செய்வது கிடையாது. உண்மையாக இருப்பின் அதை பகிர்வது. முடிந்தால் நான் கூறியதை பொய் என்று மெய்பித்து காட்டலாம். என்னையும் தாமஸ் ஆல்வா எடிசனை வடமொழி வியாபாரத்திற்கு “Brand Ambassador” ஆக்கி வம்புகிழுக்கும் ஜனார்தன் சர்மாவை போல் நினைத்து கொண்டால் எப்படி?

    மற்றபடி நீங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மஹாசயரை தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்..

    சிவனை யன்றி பிறிதோர் தெய்வத்தை வழிப்படுவது என்னை பொருத்தமட்டில் “சிவ பாதகமே”. இருந்தாலும்…..

    “சிவயநம நமசிவய கார ணன்சுரந்
    தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
    திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் …… புதல்வோனே”

    முருகப்பெருமான் உங்களை காத்தருள்வாராக….

  138. அண்ணா பாலா

    //
    ஆங்கில வாரம் வேண்டாம். ஏன் தமிழ் வாரமில்லை. தெலுங்கு வாரமில்லை, கன்னட வாரமில்லை. வங்காள வாரமில்லை? இவைகளெல்லாம் வெள்ளைக்காரன் பாஷைகளா? இவைகள் சி பி எஸ் சி பள்ளிகள் சொல்லித்தரவில்லையா?
    //

    கன்னட வாரம் எந்த மாநிலத்தில் கொண்டாடுவார்கள் கேரலாவிலா. ஒரியா வாரம் எங்கே பஞ்சாபிலா கொண்டாடுவார்கள். சுத்த பேத்தலாக இருக்கிறதே உங்கள் பேச்சு.

    தமிழ் மாடாடு போட மத்திய அரசு காசு கொடுத்ததே. நாளையே அம்மா ஏன் தமிழ் மாசம் கொண்டாட வேண்டும் என்று கடுதாசி போட்டு கேக்கலாமே. கேட்டால் மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கத்தான் போகிறது.
    இல்லவே இல்லாத ஒரு விஷயத்தை எப்படி இருப்பதுபோல பாவிக்கிறீர்கள்.

    சரி எல்லா இடத்திலும் ஒரு மொழியின் வாரம் கொண்டாட வேண்டும் என்றால் அது எந்த மொழியாக இருக்கும். அதை எப்படி தேர்வு செய்வது. alphabetical order கொண்டா. முதலில் அசாமீஸ் வரும். அசாமீஸ் வார கொண்டாட்டத்தை கேராள காரனை கொண்டு எப்படி கொண்டாடுவீர்கள். சரி கொண்டாட்டம் என்றால் மத்திய அரசு என்ன செய்ய சொல்லி உள்ளது என்று தெரியுமா உங்களுக்கு. ஆயிரம் பேர கூட்டி சோறு போட்டு, ரெண்டு பேர பேச வெச்சு கை தட்ட சொல்லிருக்கா இல்ல வேர ஏதாவதா.

    அந்த அந்த மாநிலத்தில் அவ்வவ் மொழியை கொண்டாட வேண்டும் என்றால் இதை மத்திய அறுசு செய்ய அதில் என்ன இருக்கு. அதை ஏற்கனவே அரசுகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன.
    இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிற்றுவிக்கப்படும் மொழியில் சமஸ்க்ருதம் ஒன்று. சமஸ்க்ருதம் தெரிவதால் பாரத ஐக்கியம் வரும் என்று மத்திய அரசு நம்புகிறது அதனால் சிறுவர்களை கொண்டு சில போட்டிகளை பேச்சு போட்டி இத்யாதி நடத்த சொல்கிறது. இதை என்ன மத்ரசாவிலா செய்ய சொன்னார்கள். ஓஹோ சுற்றறிக்கை பாதிரிகள் நடத்தும் CBSE பள்ளிக்கும் சென்றுள்ளதால் உங்களுக்கு எரிகிரதா. உங்களுக்கு இன்னும் விளங்கலையா. வெறி இன்னும் அடங்கலையா.

    அடுத்த வருஷமே மத்திய அரசும் ஒவ்வொரு பள்ளிக்கும் அம்மாநில மொழியை போற்றி ஒரு விழா நடத்துங்கள் என்ற சுற்றறிக்கை அனுப்பினால் உங்கள் மொகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள். உங்கள் காமாலை பார்வைலதான் பிரச்சனையை என்று இன்னுமா புரியல. ஒரு பெங்காளியனுக்கு மராட்டியனுக்கு இல்லாத மொழி பற்று உங்களுக்கு மட்டும் விசேசமா இருக்கா. அவர்கள் ஏன் கூச்சல் போடலை. கேரளாவில் ஏன் கூச்சல் போடலை.

    நமக்கு மட்டும் ஏன் காமால கண்ணு. ஆள் புடிக்கிற கோஷ்டிகளின் ஆற்பரிப்பு தானே இது. கானா போன கழக மனோபாவம் தானே இது.

  139. பாலா

    //
    அந்த இனியேட்டிவ் ஏன்? அதைத்தான் கேட்கிறார்கள். இடியாப்பம் இட்லி கதையெல்லாம் வேண்டாம். இனிஷியேட்டிவ் ஏன் இப்போது? ஒரு பலன் தரும் மொழிக்கென்றால் பரவாயில்லை. காளிதாசனின் நாடகத்தைப் படித்தால் வேலை கிடைக்குமா? பின் இனிஷியேட்டிவ் ஏன்? Why do encourage Sanskrit? You come to know the language only because you are brought up as a brahmin and taught to like the language as your religious tag. Not others. For them, it is just a language and they want to see whether it is useful to them in material sense.
    //

    இது ஒரு idiotic thinking. என் குடுபத்தில் யாருக்குமே சமஸ்க்ருதம் தெரியாது, என்னை தமிழ் தான் படிக்க வைத்தார்கள். ஏன் குடும்பத்தில் யாருக்கும் சமஸ்க்ருத வாசனை கூட கிடையாது. நான் சம்பாதிக்க ஆரம்பித்தப்புரம் நானாக தான் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டேன், சடங்குகள் செய்வதற்கல்ல. எனக்கு நன்றாக பேச வரும். பல தலித்துக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். எனது வகுப்பில் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் படித்துள்ளனர். ஊர் ஊராக சென்று சேரிகளில் மொழி பயிற்சி தந்துள்ளோம். அங்கே சென்று ராமாயணமா நாங்கள் கற்று தருகிறோம். என்னுடைய வகுப்புகளில் பிராமணர்களை விட பிராமணர் அல்லாதோர் தான் அதிகம் படிக்கின்றனர்.

    //Not others. For them, it is just a language and they want to see whether it is useful to them in material sense.
    //
    இது உங்களது கேடுகெட்ட வாதம். மக்கள் இப்படி நினைப்பதில்லை. there is life beyond economics. உங்கள் கூற்றின் படி பார்த்தால் மோடி அரசு ஆங்கில வாரம் கொண்டாட தான் சொல்லி இருக்க வேண்டும் அதற்க்கு தான் பாருங்கள் அதிக பணம் தரும் மகிமை இருக்கு. மற்ற மொழி வாரம் கொண்டாடினால் காசு வருமா. ஆகா உங்களின் பேச்சு படி தமிழ் மொழி வாரம் கொண்டாடும் என்று சொல்லி இருந்தாலும் நீங்கள் எதிர்பீர்கள்.

    இதெற்கெல்லாம் மாறாக சமஸ்க்ருதிற்கு மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. சமஸ்க்ருதம் பயிற்றுவிக்க கூடியவர்களுள் ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்கலாக உள்ளனர்.
    வரவேற்பு இருப்பதால் தான் அம்மாவின் கடுதாசி பிசுபிசுத்து போனது. இனிமே வன்முறையில் வேண்டுமானால் ஈடுபட்டு தடுக்கலாம். நேர் வழயில் மக்களை ஏமாற்ற இயலாது. பாமரன் உங்களை விட தெளிவாக உள்ளான் என்பதை மறந்து விடாதீர்கள் பாலா.

    ஹிந்திக்காக ஹிந்தி பயிற்றுவிக்க யாரவது ஒரு தமிழ் செல்வியோ, பூங்கொடியோ, வள்ளியோ தன் வாழ்வை அர்ப்பணம் செய்வாளா, இல்லை குப்புமனியும், மணிகண்டனும், சாமிநாதனும் தான் செய்வார்கள. சமஸ்க்ருதிர்காக காசு வாங்காமல் சொந்த பணத்தையும் செலவு செய்யும் மடச்சிகளும் மடையர்களும் இருக்கின்றனர் பாலா என்ன செய்ய. அவர்களுக்கு economics புரிய மாட்டேங்குது. காசு தான் வாழ்கை என்று நம்ப மறுக்கின்றனர். இந்தியன் காசுக்கு அடிமை இல்லை என்று நினைக்கும் ஒரு பேதை கூட்டம் இது பால விடுங்கள் இவர்கள் இப்படியே இருக்கட்டும். இவர்கள் மாற மாட்டார்கள். நீங்கள் கல்லா காட்டுங்கள்.

    ஒரு கூட்டம் வந்து பாலா நலந்தாவிற்கு நெருப்பு வெச்சது (காஸ் அடுப்பு வெடிச்சு தான நெருப்பு பரவலன்னா). அங்குள்ள புத்தங்கள் பலவற்றை படகில் ஏற்றி ஒரு பெரியவரும் இளையவனும் படகை ஓட்டுகிறார்கள், பாரம் தாங்காமல் படகு மூழ்க பார்க்க, பெரியவரும் சிறியவரும் ஒரு முறை பார்த்துக்கொள்கின்றனர். உடனே பெரியவர் தொபுக்குன்னு ஆற்றில் குதித்து உயிரை விடுகிறார். புத்தகங்கள் காப்பாற்ற படுகின்றன. என்ன செய்வது இந்த அறியாப் பெரியவரை. அவருக்கு economics புரிகிரதா.

  140. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //இசுலாமியராகி அல்லது கிருத்துவ பிராமணனாக உம்வீட்டுப்பெண்களை இன்னொரு பிராமணனுக்கு கட்டி வையும்.//

    செல்வி ரெபேக்கா மேரி அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். உங்களது கருத்துப் பரிமாறலுக்கு இது தேவையே இல்லாதது. அவராவது தனது கொள்கையான கிறித்த மதமாற்றுப் பிரச்சாரத்தைமட்டும்தான் செய்தார். நீங்கள் சாரங் அவர்கள் வீடு மங்கையரை அவமதிக்கும் வகையில் எழுதி உள்ளது எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாத ஒன்று. வெட்கப்படவேண்டிய செயல். எல்லை மீறாதீர்கள்.

    நீங்கள் இஸ்லாமிய நண்பர்களை உங்கள்பால் இழுக்க “இசுலமியராகி” என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்கிறீர்கள். மதச் சார்பற்றவர் என்று காட்டிக்கொள்ள முனைகிறீர்கள். (It is called pseudo-secularism). அது தேவையே இல்லாதது. ஜனாப்கள் சுவனப்பிரியனும், மீரான் ஸாஹாப்பும் அந்த அவலத்தைச் செய்வதில்லை. நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?

    வடமொழி எதிர்ப்புதான் உங்கள் கொள்கை என்றால் அதைமட்டுமே செய்யுங்கள். அதை விடுத்து மற்ற காழ்ப்புணர்ச்சிகளை கருத்தில் புகுத்தவேண்டாமே!

    இராமானுஜாச்சாரியார் காலத்தில் பிராமணர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கபடார்களா? “தீண்டத்தகாதவர்கள் என்று தவறாகக் கருதியவர்களைத் தவிர” மற்ற எல்லோரையும் அனுமதித்தார்கள். அப்படி இருக்க, நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைச் சாடுவதில் நியாயமில்லை. அப் பிரிவினர் மட்டற்ற பிரிவினர்களின் எண்ணத்தையும்தான் அக்காலத்தில் வெளிப்படுத்தினார்கள். தீண்டாமை என்னும் கொடிய நோய் அப்படி அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

    அவ்வமயம் ஒரு புரட்சியாளராக இயங்கினார் இராமானுஜாச்சாரியார். புரட்சியாளராக இருந்தும், ஒரு அந்தணர்க்குரிய எந்த நியமங்களையும் அவர் தவிர்க்கவில்லை. அவர் அனைவரையும் வைணவர்களாக, உயர்நிலைக்குக் கொண்டு சென்றார்.

    இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே, தமிழ்நாட்டுக் கோவில்களில் பூசை நடக்கும்போது எச்சமயத்தவர்களையும் இன்று அனுமதிக்கிறார்கள். ஒரு மசூதிக்குள், தொழுகை நடக்கும்பொது, இஸ்லாமியர்கள்தவிர, மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்களா? புனிதத்தலம் என்று கருதுகின்ற மெக்காவில்தான் மாற்றுச் சமயத்தார் நுழைந்துவிட இயலுமா? நான் இஸ்லாமியர்களை இதில் குறைகூறவில்லை. சில சமயம் நாம் மாற்றுச்சமயக் கொட்பாடுகளை மதிப்பதே நலமாகும். அதுபோல அவர்களும் நமது சமயக் கோட்பாடுகளை மதிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

    கருத்துப் பரிமாறலே போதுமானது. சமயப் பரிமாற்றக் கருத்தை, அருள்கூர்ந்து புகுத்தாமலிருப்பீர்களாக என்று தாழ்மையுடன் கோருகிறேன்.

    வணக்கம்.

    வணக்கம்.

  141. வியாசன்

    இப்படியே எழுதிக்கொண்டே போகட்டா என்று சொல்லும்

    கிராமம்,காரணம்,நாமம்,கரம்,சிரம்,புரம்,நகரம்,காகம்,நவீனம்,சர்ப்பம்,
    கிரி,கணிதம்,பாதம்,சூரியன்,சந்திரன்,கிரயம்,தேசம்,ப்ரியம்,வளையம்
    சக்கரம், புத்தகம், முகம், ஸ்தலம், தாகம், ஆதி, அந்தம், புரிதல்,
    குலம், மனித, நரன், மார்கம், சமயம், காலம், கடிகாரம், நதி, அகில
    உலகம், ரூபம், அகஸ்மாத்தா, அக்கிரமம், அங்கம், பத்தினி, புருசன்
    அக்கினி, தற்காலிக, அடம், கோனி, ஆணி, அந்நியன், துரோஹி, பாவி,
    மீன், அதிஷ்டம், அர்த்தம், அவகாசம், அவசரம், இதயம, ஆஸ்ரமம்,
    உன்னதம், உச்சி,ஊகம், கர்ப்பம், தளம், வனம், கலகம், கவசம், பட்சி, பதக்கம்,
    இஷ்டம், கஷ்டம் ,தரம், சகித்து, சாமி, தயவு, தாவி , தாமிரம், நாடி, ஆசை, நீல
    பதவி, கானம், நிலையம்

  142. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //பிராமணர்கள் ஒரு சூத்திரர் எழுதியதை அதுவும் தமிழில் எழுதியதை ஏற்க மாட்டோமென்றார்கள்.//

    வரலாறு தெரியவில்லையா உங்களுக்கு? நாவுக்கரசராம் அப்பர் பெருமானின் தமிழ்த் திருமுறையை போற்றவில்லையா பிராமணர்கள்? அவரை சமய குரவர்களில் ஒருவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லையா? அவரும், காழிப் பிள்ளையாரும் ஒன்றாக இணைந்து சைவப் பணி ஆற்றவில்லையா? அவரைத் தந்தையாக எண்ணி, “அப்பரே!” என்று அன்புடன் அழைக்கவில்லையா?

    இராமானுஜர் காலத்திற்கு பலகாலம் முன்பே சைவம் அனைவரையும் ஏற்றுக்கொண்டுவிட்டது, அய்யா!(இங்கு நான் அய்யா என்று விளிப்பது மரியாதைக்குரியதே) மூன்று அந்தண சைவ குரவர்களில் ஒருவரான சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் ஏத்திப்பாடிய அருபத்திமூவரில், திருநாளைப்போவார் நீங்கள் குறிப்பிட்ட “தீண்டத்தகாதவர்”தானே!

    இந்து சமயத்தோர் தம்மிடம் இருக்கும் குற்றம் குறைகளை மெல்ல மெல்ல நீக்கிகொண்டுதான் வருகிறார்கள். அதைக்கண்டு மகிழுமாறு வேண்டுகிறேன்.

  143. பெருமதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

    //புராணம் சொல்லும் விஷயம் ஒரு குறியீடாகக் கொள்ளலாமே அன்றி வரலாறு என்று சொல்ல வேண்டுமானால் அதற்கு முழு ஆதாரமும் முன்வைக்கப்பட வேண்டும். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயங்கள் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.//

    அந்தவகையில் பார்த்தால் இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆயினும் அவை உண்மையாக நிகழ்ந்தவை என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?

    கம்பநாட்டார் வால்மீகி இராமாயணத்தை மிகைப்படுத்தி எழுதிய வகையில் சேக்கிழார் மிகைப்படுத்தினார் எனலாமே தவிர, அவர் எழுதியது வரலாறல்ல என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.

    நீங்கள் தில்லைச் சிற்பத்தை பற்றி மட்டுமே எதிர்க்கருத்து எழுப்பலாம். அதற்கு எனது பதில், கம்பநாட்டார் அயோத்தியைக் காணாமலேயே, இலங்கையைக் காணாமலேயே வர்ணித்தவாறு, கிட்டத் தட்ட முன்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சிற்பிகளும், தில்லையில் கழுவேற்றிய சிற்பத்தைச் செதுக்கி இருக்கலாம் என்பதே!

  144. பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //பார[த]த்தை ஒருமைப்படுத்தும் முயற்சிக்கு ஹிந்திதான் சரி.//

    வடமொழி வேண்டாம், இந்திதான் ஏற்புடையதா? என்ன வாதம் ஐயா, இது?

    தமிழைக் கொன்றுவிட வேறு எந்த சொற்றொடரும் வேண்டாம். இது ஒன்றே போதும். இதை விடச் சிறந்த ஆயுதத்தை யாராலும் தமிழன்னையின் மார்பிலோ செலுத்திவிட முடியாது.

    தமிழுக்கு நீர் செய்த தொண்டில் இதுதான் தலையான தொண்டாக நிற்கிறது! (இதை வஞ்சப் புகழ்சியாகக் கொள்க!)

    இப்படிப்பட்ட கருத்தின் தாக்கத்தால் என்ன விளைவு ஏற்படலாம் என்று ஊகித்து, நான் எழுதிவரும் “தமிழ் இனி மெல்ல..” என்ற புதினத்தின் முதல் பகுதியை கீழ்க்கண்ட வலையத்தில் படித்துவிட்டு மீண்டும் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

    https://innaiyaveli.blogspot.in/2014/06/2.html

    வடமொழியால் தமிழை ஒன்றும் செய்துவிட முடியாது. இது பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கண்டறிந்த வரலாறு. இந்தி நாற்பது ஆண்டுகளுக்குள்ளாக தமிழ்நாட்டில் (1965-2014) என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நேரில் கண்டவன் ஐயா, நான். இந்த நிலை தொடர்ந்தால், நீங்கள் சொல்வதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டால், நானூறு ஆண்டுகளுக்குள் தமிழ் வழக்கொழிந்து அழிந்து போய்விடும் ஐயா! வடமொழியையாவது உயிரூட்டி நிறுத்திவைக்க ஆள்கள் இருக்கிறார்கள். என் அன்னையாம் தமிழுக்கு, அவள் பேரைச் சொல்லிப் போருளீட்டுபர்கள் உண்டே தவிர, உண்மையாக அவளுக்குக்காக உழைப்பவர்கள் இத் தமிழ் மண்ணில் விரல் விட்டு எண்ணப்படக் கூடியவர்களே!

  145. @Sarang,
    “உங்களால் குர்ஆனில் உள்ள அபத்தங்களை விட முடியுமா? அதில் உள்ள அனர்த்தங்களை, காம விசாரங்களை, வெறியாட்டங்களை கைவிட முடியுமா? உங்களால் இவைகளை வீசி எற்ய முடியுமா? வெட்டி எறிந்தால் குர்ஆனில் மீதி இருப்பது ஐந்து பக்கம் தேறுமா என்பதே சந்தேகம்.”
    Thank you very much. You have taken this Kazaga kunchus and Taqqya wallahas on and have given them a hiding. Here you are bit generous to the Muslims. 5 pages? If you take away the violent parts in Koran, what will be left can be fitted in a single A3 paper. Now we have more on the fray. We have the missionary Rebecca Mary trying to score from the side line with the help of local sepoy Mr தாயுமானவன். On top of this, we have two bit experts with zero knowledge of Sanskrit, passing comments that Sanskrit is a derivative language. The problem is the insecurity of Tamils for their own mother tongue against Sanskrit plus years of DK’s brain washed education. Bash anything that is connected with Sanskrit and Brahmins are the easy fodder. If NaMo had sent a circular asking schools to celebrate Gujarati week or Marathi week, the DK Kunchus would have kept quiet.
    @BALA SUNDARAM KRISHNA, You have 3 Sanskrit words in your name. You have not read Jayshre Saranathan’s article. The ancient, oldest Tamil work is Tholkapyam and apparently, the name itself is Sanskrit. It also mentions about Vedas and that re enforces the fact that Sanskrit is older than Tamil. Nothing wrong with that. I am proud that my mother tongue is the younger sister of such great language, Sanskrit.You are also warning me that if I say Tamil is the younger sister of Sanskrit elsewhere, the Tamil Talibans aka DK/DMK kunchus plus all the self appointed guardians of Tamil, will have my head. Thanks for the warning.

  146. வியாசன்

    வந்துகிட்டே இருக்கு சார், இதுவரைக்கும் ஒரு 250 இருக்கும்ல, சுலபமாக (சமஸ்க்ருத பதம்) ஒரு ஆயிரத்து ஐநூறு, இரண்டாயிரம் தேத்திடலாம். இரண்டாயிரம் என்பது சதரானமானது அல்ல. அத்தனையும் புழக்கத்தில் உள்ளவை. தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்தவை. எத்தனையோ (பழைய) சினிமா பாடல்களில் கையாளப் பட்டவை..

    தமிழில் தனி பதங்கள் இல்லை என்றில்லை. தமிழ் நிச்சயாமாக தனி மொழி. தமிழன் சமஸ்க்ருதம் தெரிந்து கொள்வதால் நன்மையே. தீமை ஒரு துளியும் இல்லை. எவ்வளவோ தமிழ் க்ரந்தங்கள் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வைணவ சம்பிரதாயத்தில் வந்த வடக்கத்தியர் இன்றளவும் பெருமளவில் தினமும் தமிழ் பாசுரங்கள் சொல்லி வருங்கிறனர்.
    இன்றைய நிதர்சனமான உண்மை என்ன என்றால் தமிழில் சமஸ்க்ருதம் பெருமளவில் கலந்துள்ளது என்பதே.

    முனீஸ்வரருக்கு சமஸ்க்ருதத்தில் ஒரு அஷ்டோத்தர நாமாவளி இருக்கு தெரியுமா.

    பாதிப்பு, விவசாயம், நாகம், நாணயம், ஞாயம், நீதி, வரம், பாலன், கதை, விஷம், விஷயம், அண்டம், பிண்டம், அகம், கல்யாணம், சுகம், துக்கம், சந்தோஷம்
    எகோபித்த, குணம், தெய்வம், கணம், வணிகம், கர்மம், தவம், கடி, சித்திரம், ரத்தம்,
    வஞ்சனை, வித்தை, ஜீரகம், கண்டம், திசை, த்ரவம், பூமி, காகிதம், மதி,விதி,
    விமானம், கந்தன், மூலம், நிர்மூலம், நிராகரிக்கிறேன், கஸ்மாலம், நாஸ்தி பண்ணுவது, நாகரீக வாழ்வு, பட்டு, தீவரமான, துலா, பாரம், துரித வண்டி,
    வாகனம், திதி, தாம்பூலம், பலன், பழம், ரகசியம், ராசி, உத்தம், யுவன், திரி, யோகம், சூட்சுமம், அறி, விரோதி, ராத்திரி, யாசிப்பது, நேசிப்பது, வருடம், வாத்தியம், வேஷம், ரோஷம், பரிதாபம், தீரன், வீரன், மந்தம், வேகம், அல்பம், பிரமாதம், ஸ்தம்பிச்சு, ஜுரம், ஜந்து, மிருகம், தேவன், தேவி, காளி, விசாலமான, வித்யாசமான, ஆச்சர்யம், முனிவர், அம்பா, மரணம், மணி, நவ, மடம், பிரேதம்,
    பிரயாணம், பத்தி, பக்தி, நிபுணன், நிர்வாகம், மண்டபம், சின்னம், மதம், சிந்தனை, சிரமம், சாந்தம், சொருபம், சங்கம், சமீப, சங்கமம், மோகம், காமம், குரோதம், சித்தம், திண்டிவனம் (திந்த்ரினி வனம்), கோபுரம், கோபம், மூர்தி, சக்தி, யுக்தி, முக்தி, விரக்தி, ராகம், ரீதி, பீதி, நேத்திரம், விதவை, லீலை, ருசி….

  147. //இப்படியே எழுதிக்கொண்டே போகட்டா என்று சொல்லும்//

    நீங்கள் கூறிய சொற்களில் அரைவாசிக்குமதிகமானவை தமிழிலிருந்து சமக்கிருதம் இரவல் வாங்கியவை. இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில் பேசப்படுகிறது, நேரமிருந்தால் போய்ப் பாருமையா? அண்மையில், சமக்கிருதவாதியான சோ ராமசாமியே “ஸம்ஸ்க்ருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரே சமஸ்கிருதம் ஒரு செயற்கையான (artificial language) மொழி என ஒப்புக் கொள்கிறார். நன்றாகச் செய்யப்பட்ட, refined language சமஸ்கிருதம் என்றால் அது எந்த மொழியிலிருந்து செய்யப்பட்டது அல்லது எந்தெந்த மொழிகளிலிருந்து இரவல் வாங்கிச் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இந்த “நன்றாகச் செய்யப்பட்ட”, தூய்மையான மொழி உருவாக்கப்பட முன்னர் பூமியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஊமையாக இருந்தார்களா அல்லது Sign language மூலம் பேசிக் கொண்டார்களா?

  148. //இதில் வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது கூட உங்களின் மூளை வேலைசெய்யவில்லை என்பது தான். இதைக் கம்பன் பாடவில்லை. 🙂

    “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்”

    (தண்டியலங்காரப் பாடல்)// This is Vyasan against me.

    மூளை வேலை செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை; மூளை \தவறாக வேலை செய்வதே ஆபத்து.

    Little knowledge is a dangerous thing. The readers will have to face the danger.

    தமிழில் தொலகாப்பியம் முதல் இலக்கணவிளக்கம் வரை பண்டை இலக்கண நூலகள் பல. இவ்விலக்கணங்களில் சில வடமொழி இலக்கண நூல்களைத்தழுவின. அவற்றுள் சமணமுனிவர் எழுதிய வீர்சோழியமும், தண்டி என்பவர் எழுதிய தண்டியலங்காரமும் ஆகும். இவ்விரண்டும் வடமொழி இலக்கண நூல்களுள் ஒன்றான காவ்யதர்ச்னததைத் தழுவியவை.

    காவ்யதர்சனம் ஒரு கவிதையிலுள்ள‌ அழகை இரசிக்கவகை செய்யும் அலங்காரத்தை விளக்குகிறது. அந்த அலங்காரம் தமிழில் அணி எனப்படும். அணி செய்தல் என்றால் அலங்காரம். அணி இலக்கணத்தை விளக்கும் நூல்களே வீர சோழியமும் தண்டியலங்காரமும். வீர சோழியம் சோழர் காலத்து நூல. தண்டியலங்காரம் 12ம் நூற்றாண்டு நூல். அணி இலக்கணம் தெரிந்தால்தான் ஒரு கவிதையின் அழகை இரசிக்கமுடியும். வெறும் கருத்துகளுக்காக மட்டுமே கவிதைகள் இல. கவிச்சுவைக்காகவும் கவியின்பத்துக்காகவும்தான்.

    தண்டியலங்காரம் பிற இலக்கண நூல்களைப்போல கவிதையில் அமைந்தது. அதுவும் பண்டைக்காலத்துத் தமிழில். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரை தேவரவர்கள் யாழ்ப்பாணத்துப்புலவர் குமாரசாமியவர்களை தண்டியலங்காரத்துக்கு விளக்கம் எழுதச்சொல்லிப் பணிக்க, அந்த அன்புக்கட்டளையை தம்ழுக்குச்செய்யும் நற்கடமையாக எடுத்து, குமாரசாமியவர்கள் விளக்கமெழுதினார்கள். ஆங்கில மேதை ஜாண்சனின் ஆங்கில அகராதியின் ஸ்டலை ஒத்தது இவர் விளக்கம்.

    ஜாண்சன் ஆங்கில அகராதியை முதலில் தொகுத்தவர். இவர் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறிய பின்னர் அச்சொல் எப்படி மாபெரும் புலவர்களால் எடுத்தாளப்பட்டது என்று அவர்தம் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டுவார். மில்டன், செகப்பிரியர், கீட்சு, செல்லி, போக சில உரையாசிரியர்களும் இதில் அடங்குவர். இதனாலே அவ்வகராதியைப் திரும்பத்திரும்ப படித்துக்கொண்டேயிருப்பவருக்கும் ஆங்கில இலக்கியத்தின் சிறபான பகுதிகள் அத்துப்படியாகும். சுருங்கச்சொலலின், அகராதி வெறும் பொருளை மட்டுமே சொல்லவில்லை.

    இதையே புலவர் குமாரசாமியவர்கள் செய்தார்கள். ஒரிஜனல் தண்டியலங்காரம் அணி இலக்கணத்தை பலபல தலைப்புகளில் வரிசைவரிசையாக வைக்கிறது.. 10ம் வகுப்பில் படித்தீர்களே அவைகளில் சில: தற்குறிப்பேற்ற அணி, வஞ்சப்புகழ்ச்சியணி என்று: இப்படியாக ஏகப்பட்ட அணிகள். ஒவ்வொன்றையும் சொல்லி, அவ்வணி எந்த புகழ்பெற்றப் பாவில் செரிந்துள்ளது என்பதை அப்-பாவைப் போட்டு அப்-பாவிற்கு விளக்கத்தையும் அளித்து அந்த அணியை நமக்கு விளக்குகிறார். அவ்விளக்கங்களுக்கு அவரெடுத்துக்கொண்ட கவிதைகள், கம்பராமாயாணம், கந்த புராணம், சேது புராணம், நாலாயிரப்பிரபந்தம் (பொய்கையாழ்வாரந்தாதி மட்டும்), நான்மணிக்கடிகை, நாலடியார், சீவகசிந்தாமணி. சில கவிதைகளுக்கு ஆசிரியர் பெயர் போடவில்லை. அப்படி பெயர் போடாக்கவிதைதான் நம் ‘தன்னேரி லாத்தமிழ்’ என ஈற்றடியாக வரும் வெண்பா. இது கம்பரால் எழுதப்பட்டதே. இல்லை வேறெவரோ என்றால் எனக்குக்காட்டுங்கள்.

    மதுரைத்தமிழ்ச்சங்கத்தார், தங்கள் பதிப்பை, ‘தண்டியலங்காரம்’ ஆசிரியர் புலவர் குமாரசுவாமி என்று போட்டுவிட்டார்கள். எனவே தண்டியலங்காரத்தின் ஆசிரியரோ இப்புலவர் என ஐயமேற்படுவது இய்றகை. வியாசனுக்கு அந்த ஐயமேற்படவில்லை. நூலைப்படித்து அதில் விளக்கவுரை எழுதிய புலவர் குமாரசுவாமி தம் விளக்கங்களுக்கு மேற்கோள் காட்டவே பல பாடலகளைச் சுட்டி அதில் எப்படி குறிப்பிட்ட அணி கையாளப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல்களில் கம்பரின் ‘தன்னேரிலா தமிழ்’ எனபதும் ஒன்று’ அது பொருள் வேற்றுமை’ என்ற அணிக்கு உதாரணமாகப் புலவர் குமாரசுவாமியவர்கள் காட்டியிருக்கின்றார்கள் என்று புரியாமல் தண்டியே தம் நூலுள் அனைத்துக்கவிதைகளையும் எழுதினார் என்று வியாசன் புரிந்துள்ளார். கொஞ்சம் நிதானம் தேவை வியாசன்!.

  149. //சமஸ்க்ருதிற்கு மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. சமஸ்க்ருதம் பயிற்றுவிக்க கூடியவர்களுள் ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்களாக உள்ளனர்//

    Sarangan!

    //சமஸ்க்ருதிற்கு மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. சமஸ்க்ருதம் பயிற்றுவிக்க கூடியவர்களுள் ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்களாக உள்ளனர்//

    ஆசைகள் உண்மையில்லையென்றால் கற்பனைகள் மன திருப்திக்கு உதவும். 30000 என்றீர்கள். எப்படிச் சொல்கிறீர்கள் என்றால் பேச்சைக் காணேம். தமிழலக்கியத்தில் சமஸ்கிருதம் என்ற சொல் இருக்கிறது என்றீர்கள். காட்டுங்கள் என்றால் பேச்சைக் காணேம். ஆயிரத்துக்கும் மேலான அபார்ப்பனர்கள் வடமொழி ஆசிரியர்களாக இலவசமாகச் சொல்லித்தருகிறார்கள் என்பதை நம்ப முடியாது. ஒருவேளை அவர்கள் இந்துத்வவினராக இருக்கலாமே ஒழிய பொதுமக்களிடமிருந்து இருக்கார். தமிழ்மக்களிடையே வடமொழி கோயில் மொழியாக இருப்பதால் மதிப்பும் மரியாதை இருக்கும். அஃது ஆயிரங்காலமாக‌ இருக்கினறதே. தனிமொழியாக இல்லை. நீங்கள் எவ்வளவுதான் அடுக்கினாலும் நம்பமுடியாது. ஏனென்றால், தமிழகத்தில் நடப்பதை நம்மால் தெரியவது என்ன கஸ்டமா?.

    தெலுங்கு ஒருவர், தமிழகத்தில் எங்கள் மொழிக்கு ஏகோபித்த ஆதரவு, மரியாதை இருக்கு எனச்சொல்லி, தமிழ்மக்களனிவரும் தமிழோடு சேர்த்து தெலுங்கைப்படிக்கோண்டும் என்று சொன்னாலும் சரிதானே? இப்படியே மலையாளமும். ஏனெனில் இவ்விரு மொழிகளும் வடமொழியைவிட தமிழ்ம்மக்களிடையே பரிச்சயமானவை. திராவிட மொழிகளும் கூட. மக்கள் தொகையில் கணிசமாக இவர்கள் இருக்கிறார்கள்.

    காசு வாங்காமல் சொல்லித்தருகிறோமென்றாலே வியாபாரமாகாத‌ பொருளை போனியாக்கிவிட முயறசி.

    நீங்கள் இங்கு வடமொழியைப்போனியாக்க என்னவெல்லோமோ பொய்கள் வீசுகிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் மட்டுமே என்னால் சொல்லவியலும். பொய் சொல்லி மார்க்கெட்டிங் செய்வதும் அவசியமே. மீண்டும்மீண்டும் தமிழ்நாட்டில் மக்களெல்லாரும் வடமொழியை விரும்புகிறார்கள். கறக ஆசைப்படுகிறார்கள். இந்த மோசடிக்கும்பல் திராவிட்க்குஞ்சுகள் மட்டுமில்லாவிட்டால் இரங்க நாதன் தெருவில் எல்லாரும் சமஸ்கிருத்த்திலேயே பேசி, வாங்குவார்கள். தமிழகம் முழுக்க வடமொழிப்பேச்சே அதிலும் தலித் சேரிகளில் எல்லாரும் சமஸ்கிருத்ததிலேயே பேசி சண்டை போட்டுக்கொள்வார்கள் என்ற உங்கள் கற்பனைகளை என் மேல் திணிக்க வேண்டாம்.

    தமிழ் மக்களுக்கு வடமொழி யூஸ்லெஸ்; தமிழ்ம க்களிடையே வடமொழி அறிவே இல்லை. அது தேவையுமில்லை. தமிழே தரிகனத்தான் போட இன்னொரு மொழிக்குத் தண்டோரா போட நான் தயாரில்லை. சாரங்கனின் அவர் ச்காக்களும் போட்டுக்கொண்டே இருங்கள். முதலில் உங்கள் ஜாதிப்பசங்களையே உங்களால் படிகக்வைக்கமுடியவில்லை. அவர்களிடையே படிப்போரும் வியாபார நோக்கில்தான் – தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற- படிக்கிறார்கள். வேலை பார்க்கவல்ல. ராமாவுக்குத் தெரியாது; உங்கள் வீட்டாள்களுக்குத் தெரியாது. பின்னென்ன?

    பணம் எங்களுக்குப்பெரியதன்று. நாங்கள் தியாகிகள் என்பதை வேறெவரிடமாவது சொல்லுங்கள். நான் எதார்த்தவாதி.எதிலும் சேராமால் எதார்த்தங்கள் எவை என்றறியும்போது மட்டுமே அவ்வெதார்த்தங்கள் நல்லதல்ல என்று தெரிந்தால் அவற்றை சோபிக்காமல் பண்ண வழிகளை ஆராய முடியும். உங்களுக்கு ஒரு அஜென்டா. அதை எதார்த்தங்களை எதிர்நோக்கித்தான் உள்ளே நுழைக்கமுடியும். இல்லையென்றால், இப்படியே கற்பனையுலகில் வாழத்தான் முடியும். நான் மேற்சொன்ன சமூகமே எதார்த்தமாகும்.

  150. சூ பீ

    //
    ழ,ற,ன,தி.ஞீ.
    //
    ற இல்லை சரி, ன இல்லை சரி. ஆய்த எழுத்து இல்லை தீ ஞீ இவற்றுக்கு என்ன.

    ழ ற ரீ யும் சந்தஸீ மொழியில் (வேத பாஷை) இருந்து விடப்பட்டுள்ளன.

    சமஸ்க்ருத வாரம் கொண்டாட வேண்டும் தமிழ் கொண்டாட படாது என்று கவர்மெண்டு சொன்னது போல இல்லாத பிரச்சனைய தமிழ் சமக்ஸ்ருத்த பிரச்சனையாக்கி குளிர் காயும் குள்ள நரிகள் குட்டிப் போட்டு கும்மி அடிக்கின்றன.

  151. வியாசன்

    விஷயம் புரியாமல் பிதற்றல் அம்பி என்ற கேவலமாக வேறு அழைத்தல்.

    //
    தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வடமொழிவாதிகள் யார் என்பது உங்களுக்கே தெரியும். எல்லோரும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் தான்.
    ஒவ்வொருமுறையும் தமிழில் தமிழ்நாட்டில் தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கோயிலகளில் மதமொழியாக ஆக்க முனையும் போது அதை எதிர்ப்பவர்கள் யார்? அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போவது யார்?
    //

    நாங்கள் தமிழுக்குத்தான் முன்னுரிமை தந்துள்ளோம். நாங்க செய்யும் கடவுள் ஆராதனத்தில் எழுபது விழுக்காடு தமிழ் 30 விஷுக்காடு சமஸ்க்ருதம்.
    எந்த வைணவ கோவிலில் வேண்டுமானால் சென்று பாருங்கள். காலை முதல் இரவு நடை சாரரும் வரை பகவானுக்கு தமிழ் அமுது ஊட்டப்பட்டுக் கொண்டே வரும். எத்தனையோ தமிழ் வைணவர்கள், வேதம் கற்க மாட்டேன், தமிழ் வேதமாம் ஆழ்வார்களின் திவ்ய பிரபான்களே போதும் என்று நிற்கிறார்கள்.

    நீங்கள் அரையர் சேவை என்று ஒன்றுண்டு கேட்டதுண்டோ. அத்தனையும் தெய்வத் தமிழ். ஒருமுறை மன்னார்குடி கோவிலில் அரையர் சேவை ஏற்பாடு, அரயராக சீரங்கத்திளிருந்து ஒரு என்பது வயது முதியவர். அவர் ஆனந்த கண்ணீருடன் திருவாய் மொழி பதிகம் பாடுகிறார். நடுவே ஒரு கழக கவுன்சிலர் வர்றார் அவருடன் வந்த ஒரு குண்டர் கோஷ்டி அறையறை ஏறி மித்துக் கொண்டு சாமி கும்பிட சென்றது. அரயருடன் அவருடைய தமிழ் நாதமும் நின்றது, அப்புறம் அந்த குண்டர்களுள் ஒருவன் அரையர் அருகில் வந்து வந்து இதை அப்படியே சொன்னான் “என்ன பெர்சு, உனகெதுக்கு இதெல்லாம்”. தமிழ் தாயின் மனம் எப்படி வெதும்பி இருக்கும். இவர்களை தானே நீங்கள் ஓட்டுப் போட்டு சோறு போட்டு தமிழ் காவலர்கள் என்று பாராட்டி தமிழ் தாய் கோவிலின் சாவியை ஒப்படைத்து உள்ளீர்கள்.

    தமிழ் அழிவது கோவிலில் மந்த்ரம் வேதம் ஓதுவதால் அல்ல இப்படி நீங்கள் எண்ணுவது உங்களது த்வேஷ உணர்வால் எழுவது. தமிழ் அழிவது கழக தர்கூரிகளால். இன்றைய தமிழ் காவலர்கள் கோஷ்டியில் யார் யார் இருக்கிறார்கள் பாருங்கள்.

    வைணவன் இத்தோடு நிற்கவில்லை, சாமி புறப்பாடு நடக்கும் போது தமிழ் வேடம் கூறுவோர் முன்னே செல்வர். இறைவன் தமிழை தேடி செல்வான். வேதம் கூறுவோர் சாமி பின்னே வருவர். தமிழை கடவுளுக்கும் முன்னே வைத்து அழகு பார்பவர்கள் நாங்கள். என்னை அம்பி என்று கூறுவதால் நான் வெம்பப் போவதில்லை. நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் தமிழ் காவலர்கள் தான் உங்களை நெம்பி எம்பப் போகிறார்கள். 🙂

    நீங்கள் செய்வதன் பேர் தான் stereotyping . அதாவது கண்ணை மூடிக்கொண்டு மற்றவனை குருடன் என்று சாடுவது. கண்ணை திறன்கள்.

    என்னை சார்தவர்கள் உங்களை விட தமிழுக்காக அதிக பனி செய்துள்ளனர். சிதம்பரம் கோவில் பிரச்சனையை அதை சார்ந்தவர்கள் தான் தீர்த்துவைக்க வேண்டும். அதன் பக்கலிலே கோவிந்தராஜன் சந்நிதி இருக்கு ,அங்கு போய் நின்றால் தமிழ் நன்றாக கேட்கும். சிங்களத்து பிரச்சனையை இதை கிண்டி விட்டு குளிர் காய்ந்தது காய்வது என்பது இங்கே தமிழ் தமிழ் என்று அளப்பும் கருணாநிதி ஆதிகள் தான். ஒரு சுப்பிரமணிய சாமிக்காக எல்லோரையும் சாடுவதும் stereotyping தான்.

    கோவில்லில் சொல்லப்படுவது சமஸ்க்ருதம் அதே மந்திரத்தை தமிழில் சொல்லலாம் என்றால் என்னால் உங்களுடன் வாதாட முடியாது. இன்றளவும் நீங்கள் கோவிலுக்கு போகலாம், அங்குள்ள அர்ச்சகர் தமிழில் அர்ச்சனை செய்தால், ஒரு பாமரன் கூட சாமி நீங்க முன்ன செய்வீங்களே அதையே செய்யுங்க என்று தான் சொல்கிறான். நான் சொல்வது நிதர்சனம். அங்குள்ள அர்ச்சகர் உங்களோடு சமஸ்க்ருதத்தில் தான் பேசுவேன் என்கிறாரா, அங்கே உங்களுக்கு புளியோதரைக்கு பதில் திந்த்ரினி அன்னமா துருகிரார்கள். பொங்கலுக்கு பதில் முக்தான்னமா தருகிறார்கள்.
    இறைவனுக்கு தீபம் காட்டி அவனின் மூர்த்தியை பற்றி விவரிப்பார்கள் அது எந்த மொழியில் செய்கிறார்கள். சமஸ்க்ருத்திலா. ஏன் குழப்பி கொள்கிறீர்கள்.

    ஆகம விதிப்படியே கோவில், அதை விடுத்து கோவில் கோவிலாகாது. மந்த்ரார்ச்சனை , வேத பாராயணம் எப்பொழுதும் சமஸ்க்ருதத்தில் தான் இருக்கும். அதன் சிறப்பை அறிய அம்மொழியை சிறிதேனும் கற்பேன் என்றில்லாமல். அதை தூஷனை செய்வதால் என்ன லாபம்.

    கோவிலில் தமிழ் வேண்டும் என்று ராமானுஜர் சொன்னார் சிலர் எதிர்த்தார்கள், பலர் ஏற்றுக் கொண்டார்கள். முடிவில் ராமானுஜர் வெற்றி பெற்றார்.

    கோவிலில் தமிழ் வேணும் என்று பெரியாரும் மஞ்ச துண்டும் சொன்னால் ஏன் சிதம்பரத்தில் பயப்படுகிறார்கள் என்று சொல்லியா புரிய வைக்க வேண்டும்.
    என்ன சொல்கிறோம் என்று முக்கியம் இல்லை, யார் சொல்கிறார் என்பது தான் முக்கியம். (இது கூட வேதம் சொல்கிறது வாசாரம்பம் விஜிஞாசஸ்வ).

  152. வியாசன்

    //
    திரு. BALA SUNDARAM KRISHNA,

    வடமொழி மதமொழியாக ஏன் தொடர வேண்டும். தமிழை மதமொழியாக்கினால் என்ன. தமிழர்கள் எதற்காக மதமொழியாக வடமொழியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். சமஸ்கிருதத்துக்கு அதிர்விருக்கிறது, குதிர்விருக்கிறது என்றார் வாதம் வேண்டாம். ஏனென்றால் தெய்வத்தமிழுக்கும் தமிழுக்கும் தெய்வீக சக்தியுண்டு என எங்களின் நாயன்மார்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
    //

    யார் சொல்கிறார் என்று பார்க்க வேண்டும் என்று எழுதி முடித்து பார்கிறேன் உங்களது இம்மருமொழி.

    இப்போதையா பாலா சுந்தரம் யார் என்று உங்களுக்கு தெரியுமா அஜ்ஜோ அஜ்ஜோ .

    தமிழுக்கும் தெய்வ சக்தி உண்டு, நாயன்மார்களும் செரி, ஆழ்வார்களும் சரி சொல்கிறார்கள். தமிழ் மத மொழி இல்லை என்று யார் சொன்னது. தமிழ் ஹிந்துவின் மொழி. இதை மறுக்க யாராலும் முடியாது. இந்தியாவில் இருக்கும் அத்தனை மொழிகளும் ஹிந்துக்களின் மொழியே. இதில் செகுலர் என்ன வேண்டி கிடக்கு.

    இது நிற்க. மந்திர சக்தி என்பது நிரூபணமான ஒன்று. தமிழுக்கு சக்தி பக்தியுடன் கலந்தால் தான் வரும். சமஸ்க்ருத (சந்தஸீ) அக்ஷர கூட்டங்களுக்கு அது தானே அமைந்துள்ளது. அப்படி பட்ட சப்த பிரயோகங்கள் அம்மொழியிலேயே இருக்கின்றன. இதை விளங்கிக் கொள்ள கொள்ள மந்தரகிரம சாஸ்திரங்களை படிக்க வேண்டும். frits staal என்பவர் மூன்று வருடம் முன்பு கேரளாவில் நடந்த அதிருத்ரம் என்ற ஒரு யாகத்தை முழுதுமாக ஆய்வு செய்துள்ளார். அவர் மற்றும் இன்னும் பலர் ஆதார பூர்வமாக மந்திரங்களுக்கு தானே சக்தி (vibration) உண்டு என்பதை கண்டறிந்து எழுதி உள்ளனர். frits staal என்பவர் இரண்டு வருடம் முன்பு மரணித்தார் (அவருடய . அடிருத்ரம் பற்றிய ஆராய்ச்சி பூர்த்தியடையும் முன்னே)

    https://www.thehindu.com/features/friday-review/religion/12day-athirathram-comes-to-an-end/article1701290.ece இதை படிக்கவும்.

    ஒரு பக்ஷமாக பேசும் நீங்கள். யாகத்தில் என்ன நடக்கிறது, மந்திரம் என்றால் என்ன அதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யலாம் அல்லவா. அதன் பின்பு உங்களது வாதம் நாடு நிலையுடன் தெளிவாக இருக்கும்.

  153. வியாசன்

    நாங்கள் குரானை தமிழ்ப்படுத்தி விட்டோம், விவிலியத்தை தமிழ்ப்படுத்தி விட்டோம் என்று கூச்சல் போடும் கூட்டம், ஓதுதல் என்று வரும்போது என்ன செய்கிறது?

    ஓதுதல் என்று வரும்போது உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் அரபிய மொழிலேயே ஓதுகிறார்கள். அஞ்சு முறை லவுடு ஸ்பீகர் அலறுமே கேக்கல்லை? இதே போல ஓதுதல் என்று வந்தால் உலகம் பூரா உள்ள ஜூஸ் ஹீப்ருவிலும், கிறித்தவர்கள் லத்தீனிலும் தான் ஓதுவார்கள்.

    ஹிந்து மட்டும் தான் இளிச்சவாயனா இருக்கணும்னு கிளப்பி விடுவாங்க. நீங்கள் கபாலீஸ்வரர் கோவிலுக்கோ பார்த்தசாரதி கோவிலுக்கோ போங்கள் அங்கே உபன்யாசம் நடக்கும், அது தமிழில் தான், பகவத்கீதை தமிழில் தான் சொல்லப்படும். கிறித்தவர்கள் விவிலிய அர்த்தம் படிப்பதும், குரான் அர்த்தம் முஸ்லிம்கள் படிப்பது ஒரு உபன்யாசம் கேட்பது போல தான்.

    பகவத்கீதை தமிழில் பாரதி செய்திருக்கிறான் டவுன்லோடாவது செய்துள்ளீர்களா.

  154. //வடமொழி எதிர்ப்புதான் உங்கள் கொள்கை என்றால் அதைமட்டுமே செய்யுங்கள். அதை விடுத்து மற்ற காழ்ப்புணர்ச்சிகளை கருத்தில் புகுத்தவேண்டாமே!//

    வடமொழி எதிர்ப்பு என் கொள்கையில்லவே இல்லை. அரைகுறைப்புரிதல் ஆபத்தானது. நான் மொழிகளின் காதலன். எல்லா மொழிகளையும் படிக்க இறைவன் எனக்கு வலிமை கொடுத்திருந்தால் அனைத்தையும் படிப்பவன். எனக்கு நான்கு மொழிகள். மூன்றில் விற்பன்னன். ஒரு மொழி வெறுப்பாளன் என்ற முத்திரை போலியானது. ஏன் வடமொழி வாரம்? ஏன் மோதி அரசு ஒரு மொழிக்காக மட்டும் மெனக்கிடுகிறது என்ற கேள்விகள்தான் என் வாதப்பொருள்.

    மதத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு வைணவ ஞானம் போதாது. நான் எழுதியவைகள் கற்பனைகள் அல்ல. அவை பிராமணர்களால் எழுதப்பட்டவை. திருமழிசையாழ்வாரைப்பற்றி எழுதியவை மயிலாப்பூர் இராமகிருஷ்ணமடத்தால் அச்ச்டிக்கப்பட்டு விநியோகிகப்பட்டது. I am ready to give the reference if asked for. ஒப்பிலியப்பன் கோயில் மடத்தலைவராலும் இலவசமாக விநியோகிக்கப்பட்ட வரலாறு. அதில் ஆழ்வாரை இழிவுபடுத்திய பிராமணர்களை ‘பார்ப்பன மூடனொருவன்’ என்று குறிப்பிடுகிறார். அதில்தான் காவேரியில் தன் பாசுரங்களையெல்லாம் ஆழ்வார் தூக்கியெறிந்தார் எனவெழுதுகிறார். நம்பிள்ளையைப்பற்றி எழுதியவை பேராசிரியர் புருடோத்தம நாயுடுவால் நம்பிள்ளையின் அவதாரிகையின் மொழியாக்கம் செயயப்பட்டதிலிருந்து. சென்னைப்பலகலைக்கழக நூலகத்தில் படிக்கலாம். Prof Purshothama Naidu is a great Vishnavite scholar. Now no more. He rendered Nambillai’s Padi in modern Tamil under the Title Bhagavat Vishayam. ten volumes.

    இராமானுஜருக்கும் பிராமணர்களுக்கும்தான் பிணக்கு. அவரை மற்ற ஜாதியினர் பெரிதும் போற்றினர். ஒரு கூலிக்காரப்பெண்ணுக்கும் ஒரு வண்ணானுக்கும் உள்ள ஆழ்வார் பக்தி எனக்கு இன்னும் வரவில்லையேனெ அழுதவர் அவர். பெரியநம்பி, தலித்து மாறனேரி நம்பிகளுக்கு ஈமக்கிரியை செய்தால் பகிஸ்ஹ்காரம் ப்ண்ணுவோம் என்று சொன்னது மற்ற ஜாதிக்காரர்களல்ல. பிராமணர்கள். நம்மாழ்வார் பாடல்களை அவர் சூத்திரர் என்பதால் அவரை ஏற்கமாட்டோம் எனச்சொன்னது பிராமணர்கள். மற்ற ஜாதிக்காரர்களல்ல. தலித்துக்களை திருநாராயணபுரம் கோயிலுள் நுழையவிட்டால் நாங்கள் வரமாட்டோம் எனச்சொன்னது பிராமணர்களே. அவர் காம்பரமைஸ் பண்ணியது அவர்களுடந்தான் என இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதத்தில் பிராமணர்களேலேயே எழுதப்பட்டது. திருக்கோஷ்டியூர் தலபுராணம் பிராமணார்களாலேயே எழுதப்பட்டது. அவருக்கும் திருக்கோட்டியூர் நம்பிக்கும் நடந்த பிணக்கையும் அக்கோயில் கோபுரத்தின் மீதேறி ‘ பிராமணல்லாதோருக்கு இறைவனின் திருமந்திரம் சொன்னால் எனக்கு நரகம் கிடைக்குமென்றால், எனக்கு நரகமே மேல் என்ச்சொல்லி ஊர்மக்களை உரக்க அழைத்துச்சொன்னது அத்தலவர்லாறு. இன்று நீங்கள் அங்கு சென்றாலும் கோபுரத்தில் மேல் ஏறி எங்கு நின்று அவர் ஊர்மக்களைக்கூவி அழைத்தாரோ அங்கு சென்று உங்களைக்காட்டி, இங்குதான் அச்சம்பவம் நடந்தது என்பார்கள். இச்சம்பவம் அக்கோயில் வரலாற்றில் புகழ்பெற்றது. தமிழ்கத்தில் எக்கோயிலிலும் கோபுரத்தில் ஏற அனுமதியில்லை. இங்கு அவர்களே அழைத்து காட்டுவார்கள். இப்படியாக அனைத்தும் பிராமணர்களாலேயே எழுதப்பட்டு சொல்லப்பட்டது. பிராமணர்களில் சிலர்தான் இராமானுஜர் தொண்டர்களானார்கள். பலர் அவரிடம் சேரவில்லை. பின்னர்தான் சேர்ந்தார்கள் என்பது வரலாறு.

    இவற்றை எழுதினால் உங்களுக்கு கசப்பதேன்? காரணம் ஜாதியை முன்னர் தள்ளி மதத்தையும் இராமானுஜரின் புகழையும் பின் தள்ளுகிறீர்கள். என்னைப்பொறுத்தவரை இது பெருங்குற்றம்.

    எந்த உண்மை வைணவனும் என் எழுத்துக்களை பார்ப்பன துவேசம் என மாட்டான். ஜாதியாளனுக்கு ஜாதியே வேண்டும். அவன் ஒருவனே என்னை எதிர்ப்பான். என்னால் இராமானுஜர், வைணவம், ஆழ்வார்கள் புக்ழ பரவும்/ இவர்களால் இழிவுபடுத்தப்படுகின்றன. பெரியாரால் சமூகத்தில்தான் பிராமணர்களை எதிர்க்க முடிந்தது. அது சுலபம். ம்தத்துக்குள்ளேயே எதிர்ப்பது என்பது இயலாக்காரியம். அதைச்செய்து காட்டி வெற்றி பெற்றவர் இராமானுஜர் in the sense that they accepted his reforms. .இவற்றையெல்லாம் இங்கெழுதாமல், முஸ்லீம் முரசிலா, அல்லது கிருத்துவ முரசிலா எழுதுவார்கள்?

    //புரட்சியாளராக இருந்தும், ஒரு அந்தணர்க்குரிய எந்த நியமங்களையும் அவர் தவிர்க்கவில்லை. அவர் அனைவரையும் வைணவர்களாக, உயர்நிலைக்குக் கொண்டு சென்றார்.//

    என்னையும் புரியவில்லை. இராமானுஜரையும் புரியவில்லை. நான் சொல்ல கேட்டறிந்து கொள்ளுங்கள். முதலில் புரட்சி என்றாலே என்னவென்று தெரியவைல்லை உங்களுக்கு. புரட்சி என்றால், இருப்பதையெல்லாம் தூக்கியெற் எனச் சொல்வதன்று. அவற்றில் எவை இன்றைக்கு இடரே அவற்றை எறிக எனபதுதான் புரட்சி. எனவே இராமனுஜருக்கு பிராமணர்கள் செய்வதில் எவை திருமால் பக்தியை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல இடர்களோ அவற்றை களைய முற்பட்டார். அவர்கள் குரங்குப்பிடியாக பிடிக்க இவர் அவர்களை மனமாற்றம் செய்து வென்றார். இராமானுஜர் பிராமணர்களில் எவர் தம் கொள்கைகளை ஏற்றாரோ அவர்களையே வைணவர் என்றார். அவர் கொள்கை என்னவென்று தெரியுமா? எவருக்கு சாத்தியமோ அவர் வைதீக வழியில் செல்லலாம். அதே சமயம் தான் செய்யும் இன்குலீசிவ் அஜன்டாவை அவர்கள் எதிர்க்கக்கூடாது. இதுதான் கொள்கை. இதை நான் எடுத்தியம்பினால், இராமானுஜரை வைதீகத்தை எதிர்த்தார் என்று பொருளெடுக்கலாமா? வைணவர்களை உயர்நிலைக்கு கொண்டு சென்றார் என்று நீங்கள் எழுதி உங்களுக்கு வைணவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியவிலலை எனக்காட்டுகிறீர்கள்.

    வைணவத்தில் உயர்நிலை தாழ்நிலை என்றெல்லாம் கிடையா. ஒரே நிலைதான். வைணவனாக ஆவதே அந்நிலை. அதற்கு ஜாதிகளை விடவேண்டும். உயர்வு தாழ்வு சொல்லக்கூடாது. இறைவன் ஒருவனே.அவனே திருமால். அவன் தன் பிராட்டியோடும் தன் நித்திய சூரிகளோடு திருப்பாற்கடலில் இருப்பவன். இவனையும் இவன் அவதாரங்களையும் ஏற்றுக்கொண்டு சமத்துவத்தை மதத்தில் நிலநாட்டுபவனே வைணவன. ஆழ்வார்களை ஏற்கவேண்டும். பர தெயங்களை ஏறெடுத்துப்பார்க்கவே கூடாது. தமிழ்பிரபந்தங்கள் பாடப்படவேண்டும் பூஜைகளிலும் கோயில்களிலும் வைணவர்களால். (உடனே வேதங்கள் வேண்டாவா என்று கேட்கவேண்டா. பிராமணர்கள் தமிழ்ப்பாசுர்ங்களைத்தான் எதிர்த்தார்கள். எனவேதான் அவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமென்றார்) இஃது உயர்நிலையும் தாழ்நிலையும் கிடையா. ஒரே நிலை.

    எனக்கு மற்ற சமயங்களையும் அவர்தம் சமயக்கொள்கைகளையும் பற்றி கிஞ்சித்தும் கவலை கிடையாது. அக்கறையும் கிடையாது. அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என் மதத்தை தெரிந்து வாழவே எனக்கு இன்னும் முடிந்தபாடில்லை. வேறுமத ஆராய்ச்சி எனக்கெதற்கு? I don’t want to deal with Rebecca or Suvanappiryan. Their religion is theis. Mine is mine. That’s why I don’t talk to Muslims or Xians in fora, including here, with rare interventions to clarify a point here and a point there. I keep my distance at a safer level always. Far from the madding crowd and its ignoble strife..

  155. பாலா சுந்தரம்

    //
    ஆசைகள் உண்மையில்லையென்றால் கற்பனைகள் மன திருப்திக்கு உதவும். 30000 என்றீர்கள். எப்படிச் சொல்கிறீர்கள் என்றால் பேச்சைக் காணேம். தமிழலக்கியத்தில் சமஸ்கிருதம் என்ற சொல் இருக்கிறது என்றீர்கள்
    //

    ஆசை இல்லை. அது நிதர்சனமான உண்மை, யார் யார் சொல்லித்தரா அவுக வீட்டு விலாசம் எல்லாம் தந்து ஜிஹாத் கோட்டத்திற்கு பலியாக்க நான் விரும்பவில்லை.
    உங்களை சமஸ்க்ருதம் ஒரு நாள் தொடும் பொது உங்களுக்கு இந்த கணக்கு உண்மை என்று தெரியவரும். முப்பதாயிரம் எப்படி என்றால் எனக்கு நேரே அது தெரியும். உங்க வீட்டில் எத்தனை பேர் என்று கேட்க ஐந்து பேர் என்று நான் சொன்னால். எப்படி என்று கேட்டால் என்ன அர்த்தம்.

    //
    தமிழலக்கியத்தில் சமஸ்கிருதம் என்ற சொல் இருக்கிறது என்றீர்கள்
    //
    இதை நான் எப்போ எங்கண்ணா சொன்னேன். ரெம்ப குழம்பிடீங்கோ.

    //
    காசு வாங்காமல் சொல்லித்தருகிறோமென்றாலே வியாபாரமாகாத‌ பொருளை போனியாக்கிவிட முயறசி.
    //

    காசு கொடுத்து டியூஷன் சேர எம்புட்டோ பேரு தயாரா கீறாங்க. கல்விக்கு காசு வாங்கபடாது என்பது இந்தியனின் கொள்கை அண்ணா. நீங்கள் தான் யதார்த்த வாதியாச்சே. சொல்லிகொள்வதில் ஒன்னும் குறைச்சல் இல்லை.

    நாங்கள் தியாகி என்று தம்பட்டம் அடிக்கவில்லை. காசுக்கு அலையும் இக்காலத்தில் மொழிக்காக த்யாகம் செய்ய தமிழச்சிகள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு
    காட்டினேன். காமாலை கன்வந்தால் சங்கும் மஞ்சள்தானோ.

    தமிழனுக்கு சமஸ்க்ருதம் அவசியம் தேவை. அவன் ததிங்கினத்தோம் போடுவது விஷமிகளின் வலையில் அவன் சிக்கி தவிப்பதால். தான் பிறந்த பூமி சிறந்த பூமி, தன்னுடைய மொழிகள் ஏற்றம் கொண்டவை, தன பண்பாடு சிறந்தது என்று அவன் புரிந்து கொண்டால் தப்புவான். அதற்கு அவனுக்கு மொழி அறிவு வேண்டும். மொழியின் மூலமாகவே ஞானத் தேடல் ஆரம்பிக்கிறது. அதை தடுப்பது மொழி அறிவின்மையே.

    எனக்கு ப்ரத்யக்ஷ அனுபவங்கள் உள்ளன.நான் களத்தில் பனி செய்கிறேன். சமஸ்க்ருதம் கற்க தமிழனுக்கு ஆவல் அதிகம். உங்களுக்கு இந்த அனுபவம் கிடையாது. நீங்கள் பேசுவதும் டில்லியில் அமர்ந்து கொண்டு ராஜ் தீப் சர்தேசையும், JNU ஞானிகளும் பேசுவதும் ஒன்று.

    உங்கள் கூற்று படியே போவோம். உங்கள் வாதப்படி தமிழனுக்கு தமிழே ததிகிங்கினத்தோம். தமிழ் வாரம் நடத்தி மட்டும் என்ன வாழப்போகிறது. தமிழன் உருப்படப் போவதில்லை. அவனை பேசமால் லண்டனுக்கு நாடு கடத்திடலாமா. இது தான் யதார்த்த வாதமா. நீங்கள் பார்த்த தமிழன் யார். உம்மை சுற்றி யார் யார் உலர் என்பது திண்ணமாக உங்களின் கூற்றுப்படி தெரிகிறது.

    //
    தலித் சேரிகளில் எல்லாரும் சமஸ்கிருத்ததிலேயே பேசி சண்டை போட்டுக்கொள்வார்கள் என்ற உங்கள் கற்பனைகளை என் மேல் திணிக்க வேண்டாம்.
    //
    அதீத கற்பனைகள் எனக்கல்ல. யதார்த்தமான, உண்மைகளை தான் நான் சொன்னேன். தமிழகத்தில் ஐம்பது லட்சம் பேர் என்று அவிழ்துவிடவில்லை. என்னிடம் நேரே கணக்கு இருக்கிறது அதை மட்டுமே தந்தேன். வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்களேன் அலக்ஸ் என்று ஒரு கேரளத்தவர் இருக்கிறார் தமிழ் நாட்டில் தான்.

    deccan chronicle பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி.

    //
    The occasion was the joint valedictory function on Sunday, of the over 60 Spoken Samskrit Shibirams (10-day classes) conducted simultaneously in Chennai city during the previous fortnight. Bhagawan Singh wanted each one teach Samskrit to 5 persons. He was the chief guest on the occasion. Over 50,000 people from all walks of life in Tamilnadu (Bharat) have learnt Samskrit over the last decade and many of them can even converse fluently in the language, said Shri. M. M. Alex speaking on the occasion.
    //

    இவர் மலையாள சினிமாவில் வில்லனாக அறுபது படங்களில் நடித்துள்ளார். இன்று அக்னிஹோத்ரம் முதல் செய்கிறார்.

    உங்களின் பாமரன் பார்வையில் கட்டிட தொழிலாளியும் கூலிவேலை செய்பவரும் இருந்து அவர்களுக்கு எதற்கு சமஸ்க்ருதம் என்றால், அவர்கள் எத்தையும் தான் படிப்பதில்லை. அவர்கள் படிப்பு பிடிக்காமல் வேறு தொழில் செய்கிறார்கள். ஒரு பெரிய காய்கறி கடை வைத்துள்ள ஒருத்தர் படிப்பு போர் சார் எவன் படிப்பான் என்கிறார்.

    இப்படிப்பட்டவர்களுக்கு எதற்க்கு சம்ஸ்க்ருதம் என்றா கேட்கிறீர்கள். அவர்களுக்கு நேர் நேர் தேமாயும் தான் வேண்டாம்.

    யதார்த்தமாக பார்க்கும் நீங்கள் சமஸ்க்ருதம் கொண்டாடுவதால் என்ன ஆகிவிடபோகிறது. தமிழன் தெரிடுவனா என்ன. அப்புறம் எதுக்கு சார் சமய விரயம். விடுங்க.

    நீங்கள் யதார்த்த வாதி இல்லை உங்கள் எழுத்திலிருந்து தெரிவது நீங்கள் ஒரு pessimist.

  156. திரு. BALA SUNDARAM KRISHNA அவர்கள் அந்தணர்கள் மேல் விஷத்தை உமிழ்கிறார். இல்லையேல் தூற்றுகிறார்.

    ##Manu has not been completely thrown out by you.## என்று எழுதுகிறார். பிறகு ஆழ்வார்களை பற்றி எழுதுகிறார்.

    63 நாயன்மார்கள் உள்ளனர். அதில் சுமார் 10 அல்லது 12 அந்தணர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள் ஹிந்து மதத்தில் உள்ள பல சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த சிலைகள் கோயில்களில் இல்லையா? அதற்கு பூசை செய்வது இல்லையா? நாம் வணங்குவது இல்லையா? அந்த குருமார்களை நாம் வணங்கும்போது சாதி பார்த்தா வணங்குகிறோம்? அல்லவே.

    நாயன்மார்களை பற்றிய விவரங்களுக்கு:
    https://en.wikipedia.org/wiki/Nayanars

    மேலும், திரு. BALA SUNDARAM KRISHNA அவர்கள் ஊடகங்களில் வந்து விடும் என்பதற்காக மனு தர்மத்தை யாரும் தொடரவில்லை என்று சொல்கிறார். அது முற்றிலும் தவறு.

    தற்போது அந்தணர் சமூகம் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது – சென்னை மாநகரை தவிர. எந்த சமூகமும் அல்லது குடும்பமும் கல்வி அறிவு பெறும்போது அச்சமூகத்தில் அல்லது தனிப்பட்ட குடும்பங்களில் மக்கள் தொகை குறைந்து விடும். தவிர, பகுத்தறிவும் வளரும். அனைவரும் ஒன்றே என்ற மனப்பான்மையும் வளரும். கல்வி அறிவு அறியாமையை போக்கும். இவைகள் எல்லாம் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே விஷத்தையே உமிழாதிர்கள் என்று வேண்டுகிறேன். அம்மக்கள் மாறினால் அதை மனமார ஆதரியுங்கள். அதை விட்டு குறையை மட்டும் நாடாதிர்கள்.

    மீண்டும் மீண்டும் யாம் சொல்வது யாதெனில் அந்தணர்களை காயப்படுத்த விரும்பினால் அதற்கென்று பல இயக்கங்கள் இருக்கிறது. இந்த வாராது வந்த மாமணிபோல் உள்ள இணையதளத்தை தயை செய்து பயன்படுத்தாதீர் – மீண்டும் வேண்டுகிறேன்.

  157. வியாசன்

    //
    நீங்கள் கூறிய சொற்களில் அரைவாசிக்குமதிகமானவை தமிழிலிருந்து சமஸ்கிருதம் இரவல் வாங்கியவை. இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில் பேசப்படுகிறது, நேரமிருந்தால் போய்ப் பாருமையா? அண்மையில், சமக்கிருதவாதியான சோ ராமசாமியே “ஸம்ஸ்க்ருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரே சமஸ்கிருதம் ஒரு செயற்கையான (artificial language) மொழி என ஒப்புக் கொள்கிறார். நன்றாகச் செய்யப்பட்ட, refined language சமஸ்கிருதம் என்றால் அது எந்த மொழியிலிருந்து செய்யப்பட்டது அல்லது எந்தெந்த மொழிகளிலிருந்து இரவல் வாங்கிச் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
    //
    சொப்பா. நினைத்தேன், வீரமணி மாதிரி பதில் வரும்னு. சோ ராமசாமி என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே தொபுகடீர்ன்னு ஒரு முடிவுக்கு வந்துட வேண்டியது. இதனால் தான் சொல்கிறேன், நீங்கள் சமஸ்க்ருதம் பற்றி சற்றும் புரிதல் இல்லாமல் கற்பனை மற்றும் கொண்டு பேசுகிறீர்கள்.

    பாணினீய சமஸ்க்ருதம் ஒரு செயற்கை மொழி தான். யார் இல்லை என்றால். நன்றாக செய்தது என்று தான் அதற்கு அர்த்தம் எதில் இருந்து என்றால் சந்தஸீ என்ற வேத மொழியிலிருந்தும் அவ்வேத மொழியின் பிரிவுகளாக நடைமுறையில் இருந்த வட்டார வேறுபாடுகளில் இருந்தும். இதை அவரே சொல்கிறார். அவர் தமிழை குறிப்பிட வில்லை. பதஞ்சலி என்று இதற்கு பாஷ்யம் எழுதியவரும் இதை நன்கு விளக்குகிறார். பாணினி செய்தது சந்தஸ் மற்றும் வாட்டார மொழிகளுக்கு ஒரு over arching தளம் தந்தது. உதாரணமாக சொல்லப் போனால் சமஸ்க்ருதத்தில் தாதுக்கள் நித்யம். அவைகளில் இருந்துதான் வினை சொற்கள் வரும். பூ என்ற தாதுவில் இருந்து பவதி (இருத்தல்). சுர என்ற தாதுவில் இருந்து சோரயதி (திருடுதல்). பூ மற்றும் சுர என்ற இவ்விரண்டு தாதுவுக்கும் எத்தனை வேறுபாடு உள்ளது பாருங்கள். இவ்விரண்டிலிருந்து ஒரே மாதிரி வினைச்சொல் எப்படி கொண்டு வருவது அதற்காக அவர் சில சட்டங்களை அமைக்கிறார், தாதுக்கள பத்து குழுக்களாக பிரிக்கிறார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சட்டம். கிட்டத்தட்ட கணிதம் போன்று இருக்கும்.
    பாணி செய்தது இந்த சட்டம் கொண்டது வந்தது தான். அப்படி சட்டத்திற்குள் அடக்கி பேசும் மொழி சமஸ்க்ருதம் அல்லது பாணினீய பத்ததி என்றாயிற்று. அதாவது முன்னே மொழி பேச்சு வழக்கில் இருந்தது அதை என்னும் சீர்திருத்தி சட்ட திடாம் கொண்டு வந்து மெருகேற்றப்பட்டது.

    இது தான் சமஸ்க்ருததின் கதை. நீங்கள் முடிவு செய்தது என்ன. ஓஹோ முன்னாடி எதுவும் இல்லை, சமஸ்க்ருதம் தமிழில் இருந்து வந்தது என்று.

    சமஸ்க்ருத பதங்கள் எந்நாளும் இடுகுரிபெயராக இரா. வேறு மொழியில் இருந்து கடன் வாங்கினால் இடுகுறி பெயாராக தான் அது வரும். அதை திடுதிடுப்புன்னு மூலத்தில் சேர்க்க முடியாது. நான் சுட்டிக் காட்டிய அத்தனை பதங்களும் ஒரிஜினல் சமஸ்க்ருத தாது கொண்ட பதங்கள்.

    உங்கள் சுட்டியை படித்தேன் ரொம்ப சிரிப்பு வருது சார். காயம் என்பதும் சமஸ்க்ருத சொல்லே. உடலை குறிக்கும். “காயென வாசா மனசா இந்த்ரியை: வா.”

    ஆகாசம் என்பது வேத காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ளது. “ஆகாசாத் வாயு: வாயோர் அக்னி, அக்னேர் ஆபஹ அத்ய ப்ருதுவீ” – தைத்ரியம்

    காசா என்றால் தோற்றமளிப்பது. ஆ என்பது சமஸ்க்ருதத்திலும் முன்னொட்டு எங்கும் அதிகம், என்ற அர்த்தங்களில் வரும். எங்கும் தோன்றுவது ஆகாசம்.
    சமஸ்க்ருதத்தில் வான் என்றால் த்யுஹு என்று நாம் சொல்லும் sky.

    sky வேறு ஆகாசம் (ether, plasma) வேறு.

    இல்லை என்றால் கஷதி என்றால் ஒலி எழுப்புவது என்று அர்த்தம். சப்தத்தை தன்மையாக கொண்டதால் ஆகாஷ: (இது சமஸ்க்ருதத்தில் ஆன் பால்)

    பக்திக்கு பற்றி என்று அர்த்தம் சொல்லும் ஒரே ஆள் நீங்கள் தான். பற்றுதல் என்பது பிரபத்தி. பக்திக்கு தமிழர்கள் (பரிப்பாடல், பாசுரங்கள்) தரும் அர்த்தம் வெறும்.
    முக்திக்கும் முற்றி என்கிறீர்கள்.

    (இது சமஸ்க்ருதத்தில் பெண் பால்)

    தரு தர்ம சம்பந்தமே இல்லை. சமஸ்க்ருதத்தில் அது நான்காவது த. தருணி என்பதும் சமஸ்க்ருதத்தில் உள்ளது அது முதல் த. சுட்டவர்கள் ஒன்றுக்கு முதல் தாவும் மற்றதுக்கு நான்காம் தாவும் இடுவார்களா. பாணினி வஞ்சகர்.

    தர்மத்திற்கும் தரு என்பதற்கும் என்ன அர்த்த சம்பந்தம் உள்ளது என்று சொல்லுங்கள். “தரு என்றால் மரம் கல்பதரு என்பதும் சமஸ்க்ருத பதம். கல்ப என்றால் உண்டுபண்ணுவது. கல்பதரு என்றால் நினைப்பதை உண்டுபண்ணும் மரம். தர்மம் என்றால் பிச்சைகாருனுக்கு தர்மம் (தானம்) பண்றது என்றா அர்த்தம்.

    பாணினியின் காலம் கிட்டத்தட்ட 1100 BCE to 800 BCE. அவர் காலத்திற்கு முன்னே பகவத் கீதை இருந்தது, அதன் முதல் ஸ்லோகம், “தர்ம க்ஷேத்ரே குறுக் க்ஷேத்ரே “. உங்களின்படி பார்த்தல் பிச்சை போடும் அல்லதும் கொடுக்கும் இடத்தில் குருவின் இடத்தில்.

    அஹா ஜாக்பாட் பாருங்கள். சேறு (சேறு நிரந்த இடம்) என்பதில் இருந்து தான் க்ஷேத்ரம் வந்தது.

    அரசன் கொஞ்சம் ஓவர் சார். ராஜன் முன்பு அ சேர்த்தது தமிழில் ரநாவில் பதம் ஆரம்பிக்காது என்று.
    அரவணைத்தல் என்பது அரசனா. ஏன் அப்படி என்றால் அம்மா கூடத்தான் சரியா வரும்.

    ராஜதே இதி ராஜன். சாசனம் செய்வதால் ராஜன். விராஜதே – வீற்று இருத்தல். ராஜ தமிழனா அராஜகமும் தமிழ் தானே. அராஜகம் என்றால் அரவனைபின்மயா அல்லது ஒழுங்கின்மையா. அ என்று முன் சேர்த்தல் தமிழில் எதிர்மறை அர்த்தம் வருமா சமஸ்க்ருதத்தில் வருமா.

    சபா , பவதீ என்றால் இருத்தல் ஸ என்ற உபசர்க்கம் (முன்னொட்டு) கூடி இருப்பது என்பது சபா. நீங்கள் தமிழில் உங்களுக்கு பிடித்தமாதிரி ஒரு derivation தந்துவிட்டு உண்மை என்றால் என்ன செய்ய.
    இதுவும் பெண் பால்

    உபாயம் சரி உபெயமும் தமிழில் இருந்து சுட்டார்களா.

    புத்தகத்திற்கும் நீங்கள் தரும் விளக்கம் அபாரம். பழைய விஷயம் கொண்ட நூலை என்ன சொல்வீர்கள். பழயதகம் என்றா.

    எழுதிக் கொண்டே போங்கள் வ்யாசன், இவை உண்மையிலேயே தமிழாக இருந்து அதை சமஸ்க்ருதம் ஏற்றுக் கொண்டிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

  158. hi all,

    no malyali,no telugu no kannda ask give only their respective lanaguages in Temples. All temples belongs to God not to tamils or kannda or hindi.
    Hence, sankrit is common language for all hindu religions(savia,vasinava,sikh,jain,buddha).Only sanskirt allowed in Temple. why wont people learn sanskrit. sanksrit is not language of brahmins. It is language of all hindu religions.

  159. @Bala Sundra krishna,

    your beloved Ramanuja wrote seven books . All seven books only in Sanskrit only. He never write any book in Tamil. why because he want to reach all his views to all people.At the time , sanskrit is link language throughout India(Including Tamilnadu) .Even, malayaali not accepting malayalam came from Tamil. but all people accept sanskrit is common lanugage in India. That’s why Modi announced Sanskrit week got my point.

  160. //சமஸ்க்ருத வாரம் கொண்டாட வேண்டும் தமிழ் கொண்டாட படாது என்று கவர்மெண்டு சொன்னது போல இல்லாத பிரச்சனைய தமிழ் சமக்ஸ்ருத்த பிரச்சனையாக்கி குளிர் காயும் குள்ள நரிகள் குட்டிப் போட்டு கும்மி அடிக்கின்றன.//

    Sarangan

    இதை சுவனப்பிரியனுக்குத்தான் எழுதியிருக்கிறீர்கள். எனினும் ஒரு பிழையான கருத்தை வைத்திருக்கின்றபடியால் அதை விளக்குவதை எவரும் செய்யலாமென்பதாலும் நான் எழுதுகிறேன்.

    வடமொழி வாரம் கொண்டாடவேண்டும் என மத்திய அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விட்டது மோதி அரசு. தமிழ் கொண்டாடப்படக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படித்தான் சொன்னது என்று இங்கு எவரும் எழுதவில்லை.

    மாறாக, ஏன் தமிழ்வாரமும் கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை என்பதுதான் கேள்வி. அதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள். அது மத்திய அரசின் கடமையில்லை. மாநில அரசின் கடமையே.

    மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு மத்திய அரசுதான் ஆணையிட வேண்டுமென்பது கூட தெரியவில்லை உங்களுக்கு. வடமொழிக்குப் பதிலாக ஹிந்தி வாரம் கொண்டாடுங்கள் என்றால் கூட சரியெனக்கு. வடமொழி என்பது கோயில் மொழி. அதை அரசு ஆதரிக்கக் காரணம் மோதியின் அரசு மெல்லமெல்ல இந்துத்வா அஜண்டாக்களை முன் தள்ளுகிறதோ என்ற அச்சத்தினால் திராவிடக்குஞ்சுகளும் ஏனையோரும் எதிர்க்கிறார்கள். நான் எதிர்க்க காரணம் வடமொழிக்கு வாரம் தேவையில்லை. அம்மொழியால் மக்களுக்கு பலனில்லை பணம் சம்பாதிக்க உதவாது என்பது மட்டுமே.

    ஒரு ஐயம்: ஏன் சாரங்கன். எப்போது எவருக்குப் பதில் எழுதினாலும் அடாவடித்தமிழையே பிடிக்கிறீர்கள். இங்கு எழுத வருபவர்களெல்லாம் பேட்டை ரவுடிகள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்களும் கற்றோர். சமூகத்தில் நல்லிடங்களில்தான் இருப்பவர்கள். நாகரிக மனிதர்களிடையே நடக்கும் உரையாடல் பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இத்தனைக்கும் ஆசிரியத்தொழில் பார்ப்பதாகச் சொல்கிறீர்கள். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்று தமிழ்ப்புலவர் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

  161. திரு. BALA SUNDARAM KRISHNA,
    //ஒரு பக்ஷமாக பேசும் நீங்கள். யாகத்தில் என்ன நடக்கிறது, மந்திரம் என்றால் என்ன அதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யலாம் அல்லவா.///

    உங்களின் மறுமொழிக்கு நன்றி. நானும் சமக்கிருததுக்கு மந்திரமுண்டு, தந்திரமுண்டு என்ற வாதங்களை எல்லாம் கேட்டிருக்கிறேன். அதை நான் நம்பவில்லை. அதில் எனக்கு ஆர்வமுமில்லை. . உலகில் பல கோடி மக்கள் மந்திரங்கள் கொண்ட சமக்கிருதம் இல்லாமல் கடவுளை வணங்குகிறார்கள். அதனால் தமிழர்களுக்கும் அந்த மந்திர, தந்திரம் கொண்ட சமக்கிருதம் தேவையில்லை, அவர்களின் தெய்வத்தமிழ் ஒன்றே போதுமானது என்பது தான் எனது நிலைப்பாடு.

    உதாரணமாக ஈழத்தில் உலகப்புகழ் பெற்ற கதிர்காமத்திலும் செல்வச் சன்னதியிலும் “மந்திரங்கள் கொண்ட” சமக்கிருதம் இல்லை, பார்ப்பனர்களும் கிடையாது. அதனால் முருகன் எழுந்தோடி விடவில்லை. சமக்கிருத மந்திரங்கள் இல்லாமலே தமிழால் எங்களின் விருப்பத்துக்கேற்றவாறு சிவனை ஆட்டி வைக்கலாம், ஏன் பெண்களிடம் தூது கூட அனுப்பலாம், பிரம்படி வாங்க வைக்கலாம், பிள்ளைப்பேறு பார்க்க வைக்கலாம் இன்னும் என்னவென்னவோ எல்லாம் செய்யலாம் என்பதை, தமிழின் மகிமையை எங்களின் நாயன்மார்கள் எடுத்துக் காட்டிச் சென்றுள்ளார்கள். அப்படியிருக்க, எதற்காக ஐயா, தமிழர்களுக்கு இந்த “மந்திர, தந்திரங்கள் கொண்ட’ சமக்கிருதம்?

  162. Sarang,

    இஸ்லாம் தனது இன, மொழி, பாரம்பரியத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, அவர்களின் மதச் சகோதரர்கள் வேற்று மொழி, இனத்தினராக இருந்தாலும் மத அடிப்படையில் ஒன்றுபடுவதை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஈழத்தில் கொல்லப்படும் தமிழர்களை விட, பலத்தீனத்தில் சாகும் முஸ்லீம்களுக்காக, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் துடித்தெழுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு பொதுவான மொழி தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாம் தனது தமிழ்ச் சகோதர்களின் நலன்களில் அக்கறை காட்டாமல், உலக முஸ்லீம்களிடம் அதிகளவில் அக்கறை காட்டியதாலோ என்னவோ, இத்தனை நூற்றாண்டுகள் இஸ்லாம் தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்தும் மிகவும் குறைந்தளவிலான தமிழர்களையே அவர்களின் மதத்தின் பால் ஈர்க்க முடிந்திருக்கிறது போல் தெரிகிறது. அதனால் இஸ்லாமியர்கள் அரபு மொழிக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பற்றிப் பேசுவது வீண் வேலை.

    ஆனால் தமிழ்க் கிறித்தவர்கள் முழுமையாக தமிழில் தான் வணங்குகிறார்கள். அவர்கள் தமிழைத் தவிர வேறெந்த மொழியையும் வழிபாட்டுக்குப் பயன்படுத்துவதில்லை. அவர்களின் யேசுவுக்குக் கூட தமிழ் புரிகிறது ஆனால் தமிழ் முருகனுக்கும், தமிழ்நாட்டில் இவ்வளவு காலமிருந்து கொண்டு, ஞானசம்பந்தரின் தமிழ் தேவாரத்தைக் கேட்டுருகி, அதைப் புரிந்து கொண்டு, செத்துப்போன பெண்ணையே உயிர்த்தெழச் செய்த கபாலீச்சரருக்கு மட்டும் தான் இன்னும் சமக்கிருதம் தேவை என்கிறார்கள் உங்களைப் போன்ற சமக்கிருதவாதிகள். அந்த பம்மாத்தைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 🙂

  163. சாரங்கன்,

    //காயம் என்பதும் சமஸ்க்ருத சொல்லே. உடலை குறிக்கும். “காயென வாசா மனசா இந்த்ரியை: வா.//

    காயம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும் என்பதற்கு தொல்காப்பியத்திலிருந்து ஆதாரம் காட்டிய பின்பும், அது சமக்கிருதச் சொல் என்று பிதற்றும் உங்களைப் பார்க்க எனக்கும் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை. 🙂

    பூசை என்பது சமக்கிருதச் சொல்லா அல்லது தமிழிலிருந்து இரவல் வாங்கியதா என்பதற்கும் விளக்கம் கூறுங்கள் பார்ப்போம். சும்மா வெறும் சுலோகங்களை அள்ளி விடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. உங்களைப் போன்ற சமக்கிருதவாதிகள் சமக்கிருதம் தமிழிலிருந்து பெருமளவில் சொற்களை இரவல் வாங்கியதை ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, வடமொழிக்கு எழுத்தே கிடையாது, கிரந்தம் தமிழ்நாட்டில் வடமொழிக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்டது. வடமொழியை ஆதரித்து, வளர்த்து விட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களின் ஆதரவில் வளர்ந்து விட்டு, தமிழை விட சமக்கிருதம் உயர்ந்தது என்று கூறும், உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்க்கிறார்கள். என்னைப் போன்று எந்த மொழியையும் எதிர்க்காத தமிழர்களும் சமக்கிருதவாதிகளின் தமிழெதிர்ப்பை கண்டு சமக்கிருதத்தை எதிர்க்க வேண்டிய தேவையை உணர்கிறோம். தமிழ்நாட்டில் தமிழை விட எந்தமொழியும் உயர்ந்ததுமல்ல, தமிழைத் தவிர எந்த மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது.

  164. சாரங்கன்,

    // மந்த்ரார்ச்சனை , வேத பாராயணம் எப்பொழுதும் சமஸ்க்ருதத்தில் தான் இருக்கும். அதன் சிறப்பை அறிய அம்மொழியை சிறிதேனும் கற்பேன் என்றில்லாமல். அதை தூஷனை செய்வதால் என்ன லாபம்.///

    தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கட்டிய கோயில்களில் எதற்காக சமஸ்க்ருதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எதற்காக சமஸ்கிருதத்தில் வழிபட வேண்டும், எதற்காக அதைக் கற்க வேண்டும் என்பது தான் இங்குள்ள கேள்வி. தமிழ்மண்ணில் தமிழர்களின் கடவுள்களைத் தமிழர்கள் வணங்குவதற்கு சமஸ்கிருதம் தேவையா?

    திருநாவுக்கரச நாயனார் தனது தேவாரத்தில் “போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்கிறார். இந்த வரிகளிலிருந்து நாங்கள் அறியக் கூடியதென்னவென்றால், நாவுக்கரசர் காலத்தில் தமிழர்கள் அனைவரும் சாதி வேறுபாடன்றி (நாவுக்கரசர் பார்ப்பனரல்ல) கருவறைக்குள் புகுந்து சிவனை திருமுழுக்காட்டி, அதாவது நீரும், பூவும் சொரிந்து வழிபட்டனர் என்பது தெரிகிறது. நிச்சயமாக, ‘போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவோர்’ எல்லோரும் சமக்கிருதத்தில் திருவையாற்றுச் சிவனை வழிபட்டிருக்க மாட்டார்கள். தமிழில் தான் வழிபட்டிருப்பார்கள் அல்லவா. அதனால் எங்களின் முன்னோர்களுக்குத் தேவைப்படாத சமக்கிருதம் இப்பொழுது எங்களுக்கு எதற்கு. சிவனுக்குத் தமிழ் புரியும் என்பது மட்டுமல்ல, தமிழ் என்றால் மிகவும் பிரியம் என்கிறது சைவத்தின் வரலாறு. அதனால் சிவனியத்தையும் மாலியத்தையும் கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு சமக்கிருதமும் பார்ப்பன பூசாரிகளும் தேவையில்லை, தமிழே போதுமானது.

    “மாதர்ப் பிறைக் கண்ணியானை
    மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர் சுமந்து ஏத்திப்
    புகுவார் அவர் பின்புகுவேன்
    யாதும் சுவடு படாமல்
    ஐயாறு அடைகின்ற போது
    காதல் மடப்பிடியோடும்
    களிறு வருவன கண்டேன்”

    -நாவுக்கரசர்-

  165. உயர்திரு வியாசன் அவர்களே,

    // உலகில் பல கோடி மக்கள் மந்திரங்கள் கொண்ட சமக்கிருதம் இல்லாமல் கடவுளை வணங்குகிறார்கள். அதனால் தமிழர்களுக்கும் அந்த மந்திர, தந்திரம் கொண்ட சமக்கிருதம் தேவையில்லை, அவர்களின் தெய்வத்தமிழ் ஒன்றே போதுமானது என்பது தான் எனது நிலைப்பாடு.//

    உங்களது இந்தக் கருத்துக்கு நான் எதிர்க்கருத்து கூறப் போவதில்லை. ஏனெனில், கடவுளர்களை தனி மனிதர்களாக எப்படி வேண்டுமானாலும் தொழலாம். அதர்வ வேதமும், “தாய் மொழியிலேயே கடவுளை வணங்கவேண்டும், தாய்மொழி ஒருவரின் குருதியோடு கலந்திருக்கிறது, தாய்மொழி ஒருவரின் மூச்சுக் காற்று” என்று ஓதா நிற்கிறது. எந்த ஒரு மொழியும் தேவை என்பதும், தேவை இல்லை என்பதும் அவரவர் கருத்து. இங்கு என் வீட்டிலும், என் நண்பர்கள் அனைவரும் என் தமிழ்ப் பற்றைக் கண்டு, என்னைத் “தமிழ் வெறியன்” என்றே அழைப்பார்கள்,

    இருப்பினும், உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லாத கருத்து ஒன்றும் எனக்கு இருக்கிறது. //தமிழர்களுக்கும் அந்த // என்ற இரு சொற்கள்தான். தமிழர்கள் இந்துக்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, கிறித்தவர்களாவோ, சமனார்களாகவே, புத்தர்களாகவோ, நாத்திகர்களாகவோ இருக்கலாம். எனவே நீங்கள் “தமிழ் இந்துக்கள்” என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல, எந்தமொழியைத் தாமிமொழியாகக் கொண்டவரும், நமது இந்து சமயத்தை நன்கு அறிய விரும்பினால், நான் முன்பு சுட்டிய ஒரு கருத்தை மீண்டும் உங்களுக்குச் சுட்ட விரும்புகிறேன். //இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும்//

    மந்திரம் என்பது ஒரு கருவியாகும். அவருக்கு அக்கருவி தேவையோ, அவர்கள் அதை உபயோகிக்கலாம். மந்திரம் மனதை ஒருநிலைப்படுத்தும்.

    எடுத்துக்காட்டாக, சைவர்கள் “நமச்சிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தில் ஓதி, மனத்தை ஒருநிலைப்படுத்துகிரார்கள். அங்கனமே, வைணவர்கள் “நாராயணாய” என்ற மந்திரத்தையும், குமரக் கடவுளைப் போற்றுவோர் “சரவணபவ” என்றும், ஆனைமுகனத் துதிப்போர், “ஓம் கம் கணபதியே” என்றும், மற்ற சமயத்தோரில் இஸ்லாமியர்கள். “அல்லாஹு அக்பர்” என்றும், “இன்ஷா அல்லா” என்றும், கிறித்தவர், “ஜீசஸ் சேவ்ஸ்” என்றும், “ப்ரேயிஸ் த லார்ட்” என்றும் ஓதுகிறார்கள்.

    மனதுள் ஓதுவதே மந்திரம். வடமொழித் தோத்திரங்களை மட்டுமே மந்திரம் என்று என்னும் தவறான கருத்தும் பலரிடம் பரவி நிற்கிறது. திருமூலர் எழுதிய பத்தாம் திருமுறை “திருமந்திரம்” என்றே சுட்டப்படுகிறது.

    பலரிடம் விடுத்த வேண்டுகோளை உங்களிடமும் விடுக்கிறேன். “பார்ப்பனர்” என்ற இழித்துரைக்கக் கையாளும் சொல்லை, அருள்கூர்ந்து, ஒரு குறிப்பிட்ட இந்து சமூகத்தவரைச் சுட்டக் கையாலாதீர்கள். நீங்கள் சுட்ட வந்தவர்களுக்குச் சரியான சொல் “பிராமணஅ ர்ச்சகர்கள்” என்பதே. வேதம் ஓதும் பிராமணர்களை “மறையவர்கள்” என்று சுட்டவேண்டும். இவர்களில் மாறுபாடு தெரியாவிட்டால் “பிராமணர்கள்” என்று சுட்டுவதே சிறப்பாகும். நாம் மதிக்கப்பட வேண்டும் என்றால், நமது சொற்கள் சரியாக மதிக்கப்படவேண்டும் என்றால், நாமும் மற்றவர்களை மதிப்போடு சுட்டவேண்டும், இந்துக்களாகிய நாம், நமது உட்பிரிவினர்களையும், ஒருவரை ஒருவர் மட்டுமல்ல, மற்ற சமயத்தாரையும் மத நல்லிணக்கம் கொண்டு ஒழுக, தகுந்த சொற்களாலேய சுட்டவேண்டும்,

    நான் கூறி இருப்பதை நல்லமுறையில் எடுத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    வணக்கம்.

  166. பாலா

    CBSE பள்ளிகள் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் அல்ல. அது ப்ரைவேட்டு பள்ளிகள். CBSE என்பது பாட திட்ட முறை சான்றிதழ் தான்.

    மத்திய அரசு சமஸ்க்ருத வாரம் கொண்டாட சுற்றறிக்கை விடலாம் வற்புறுத்த முடியாது ஏன் என்றால் இது பாட திட்டத்தில் வராது. இதே போல தமிழ் நாட்டு பள்ளிகள் அனைத்தும் தமிழ் வாரம் கொண்டாட வேண்டும் தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை விடலாம். அதை ஏற்று CBSE பள்ளிகள் கொண்டாடலாம்.

    மேலும் என்னுடைய மறு மொழியில் ஏன் தமிழக முதல்வர் தமிழ் மாதம் வேண்டும் நடத்த சொல்லுங்கள் என்று கடுதாசி போடலாமே என்று கேட்டிருந்தேன். நீங்கள் கூட போடலாம். மத்திய அரசு இதை ஏற்று சுற்றறிக்கையும் விடலாம். இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. நான் முன்பு இட்ட இந்த மறுமொழியை எல்லாம் நீங்கள் படிக்க வில்லை பரவா இல்லை.

    இதை எல்லாம் விடுங்கள். நீதி மன்றமே இந்த எதிர்ப்பை ஆதாரமே இல்லது என்று தீர்பளித்து புறம் தள்ளியாயிற்று. அமையுங்கள்.

    நான் அடாவடியா. சார் இதற்கு பெயர் தான் குழந்தையையும் கிள்ளி விட்டு குழந்தை கிள்ளியது என்று அலறுவது. உங்களின் மறுமொழிகளை ஒரு முறை படியும். எத்தனை பிராமன,ஜாதி, ஹிந்துத்வா த்வேஷம். என்னை பற்றி தனி மனித த்வேஷம். எல்லாம் செய்துவிட்டு சாரங்கனை பார் அவன் சின்னப் பயல் என்பது.
    உங்களோடு கொஞ்சு தமிழிலா பேச முடியும். யாரோடு எப்படி பேசணுமோ அப்படிதான் பேசணும். you are trying to play victim very typical of losers and JNU intellectuals.

    நான் ஆசிரியர் தொழில் பார்கிறேன் என்று எங்கே கூறினேன். இதுவும் உங்களது தவறான ஊகம்.

  167. வியாசன்

    பக்தியால் இறைவனை கட்டுன்ன செய்யலாம். அதில் சந்தேகமே இல்லை. அதனால் கோவில்களில் சமஸ்க்ருதம் கூடாது என்று சொல்ல நீங்கள் திடீர் என உங்களை ராஜ ராஜ சோழன் என்று நினைத்து கொண்டுவிடீர் போல. ஒரு ரூபாய் உண்டியலில் போட்டதால் கேட்கிறீர்களா. தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று எல்லாவிடத்திலும் இருக்கு, யாரவது செய்கிறார்களா. மக்கள் எதை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். நீங்கள் ஒரு கோவில் கட்டி அந்து தமிழ் மட்டுமே என்று சொல்லுங்கள் அங்கும் மக்கள் வருவார்கள், ஒருவர் மூலையில் ஒக்காந்து கந்த சஷ்டி படிப்பார் நல்லது, இன்னொருவர் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பார். நீங்கள் வேண்டுமேன்றால் இது என் கோவில் இங்கு சமச்க்ருதத்திற்கு இடமில்லை என்று அவரை வெளியே துரத்துங்கள்.

    இறைவனுக்கு பிரம்படி வாங்கித்தர முடியும் என்பதை நீங்கள் நம்பலாம், மந்தர சக்தி உள்ளதை மற்றவர் நம்பக் கூடாது. நல்லா இருக்கு அய்யா உங்கள் நியாயம்

    பக்தி என்று ஒன்று வேலை செய்யும் என்றால் மந்திர சக்தியும் வேலை செய்யும். மந்திர சக்தியை அனுபவத்தில் நிரூபிக்கலாம் [அதற்கு தான் அதிருத்ரம் பற்றி செய்தியை கொடுத்தேன் படித்தீர்களா] , பக்தியை நிரூபிக்கவே முடியாது.
    மந்தர, க்ரியா, தந்தர, பக்தி, ஞான, தான, அப்யாச என்று பல யோகங்கள் உள்ளன என்று விளங்கிக் கொள்ளுங்கள், நீங்கள் சொல்வதை ஏற்று சமஸ்க்ருதத்தை விரட்டி அடித்து தான் தீர வேண்டிய அவசியம் இருக்கிறது என்று எப்படி நினைக்கிறீர்கள். என்னை சாடுகிறீர்கள், அஹங்காரம் எங்கே இருக்கு என்று பார்த்தீர்களா.

    //
    அதனால் தமிழர்களுக்கும் அந்த மந்திர, தந்திரம் கொண்ட சமக்கிருதம் தேவையில்லை, அவர்களின் தெய்வத்தமிழ் ஒன்றே போதுமானது என்பது தான் எனது நிலைப்பாடு.
    //

    உங்கள் நிலைப்பாடு சரி. இது தான் எல்லா தமிழனும் நிலைபாடா அது உங்களுக்கு எப்படி தெரியும். எது திணிப்பு. கோவில் திறந்த காலம் முதல் வரும் சம்பிரதாயத்தை மாற்றுவேன் என்கிறீர்களே அதில் என்ன சிறப்பை கண்டீர்கள். சமஸ்க்ருதம் ஒன்றும் வேதாளங்களின் மொழி அல்லவே, அதை ஒழித்துகட்ட.
    ஆயிரம் ஆயிரம் காலமாக ஆலயங்களில் சமஸ்க்ருதம் இருந்துள்ளது அதனால் தமிழுக்கு என்ன பாதிப்பு வந்தது. பரிபாடல்கள் காலம் முதல் தமிழன் இப்படி தான் சாமி கும்பிட்டான். எந்த ஒரு பண்டைய நல்ல தமிழ் புலவனாவது சமஸ்க்ருதம் தூக்கி எறியப்பட வேண்டும் என்று சொன்னாரா.

    உங்களின் பேச்சுக்கும் பிராமன த்வேஷம் ஒன்றே மூலம் போல் தெரிகிறது. உங்களுக்கு சமஸ்க்ருதம், மந்த்ரம் பற்றி கிஞ்சித்தும் தெரியாதிருக்க hear say என்ற ரீதியில் பேசுகிறீர்கள். மற்ற பக்ஷம் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாமே. முயற்சி செய்ய மாட்டேன் என்றால் உங்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று தமிழனுக்கு சொல்லவும் உரிமை உண்டு.

    நீங்கள் வைப்பது அனைத்தும் நம்பிக்கை சார்ந்த வாதம். துளியும் விவரங்கள் சார்ந்தது இல்லை.

  168. வியாசன்,

    உங்கள் கருத்து எங்கு போணியாகாதோ அங்கு அரபியைப் பற்றிப் பேசி புண்ணியமில்லை என்கிறீர்கள். தமிழ் பைபிளில் பார்த்தால், எல்லாம் ஏராளமான சமஸ்கிருதக் கலப்பு உள்ளது. தமிழகத்தில் கோயில்களில் இறைவனுக்கு 16- வகை உபசாரம் செய்யும்போது, திராவிட வேதம் என்று சொல்லி, தேவார திருவாசகம் திருப்பல்லாண்டு என்று ஐந்து தமிழ் வேதநூல்களை தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து திருமறைகள் ஓதப்படுகின்றன. நீங்கள் கோயிலில் சென்று , அங்கு செய்யப்படும் பூசை முறைகளை கவனித்ததில்லை என்று தெரிகிறது.

    sarang – அவர்களின் இடுகைகளையும், மறுமொழிகளையும் நான் தொடர்ந்து கண்ணுற்று வருகிறேன். அவர் சமஸ்கிருதவாதியும் அல்ல. அவரிடம் எவ்வித பம்மாத்தும் இல்லை. அவர் சமஸ்கிருதம் பயின்றவர் அவ்வளவுதான்.நமது திருக்கோயில்களில் ஆகம சாத்திரங்களின் படி, பூஜை முறைகள் நடைபெறுகின்றன. அங்கு தமிழுக்கு இடம் இல்லை என்று தாங்கள் கருதுவது தவறு. வைணவக் கோயில்களில் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஓதப்படுவது நான் தினசரி கேட்கிறேன். சைவக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் போது, கோயில் தூணிலே இங்கு தமிழ் அர்ச்சனையும் செய்யப்படும் என்று விளம்பர அறிவிப்பு பலகை உள்ளது. தாங்கள் இவற்றை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. சமஸ்கிருதம் நம் முன்னோரால் நிறைமாந்தர் மொழியாக கண்டுபிடிக்கப்பட்டு செம்மைப் படுத்தப்பட்ட ஒரு மொழியே. மந்திரம் என்ப நிறைமாந்தரின் மொழியே- என்று தமிழ் மூதுரை தாங்கள் படித்ததில்லையா ? அதன் மீது வெறுப்புடன் நீங்கள் அணுகுவதால், தங்களுக்கு இந்த குரோத உணர்ச்சி உள்ளது.

    தங்களுக்கு இன்னுமொரு விஷயத்தை கூறுகிறேன். நமது திருக்கோயில்களில் இப்போது வேதம் படித்த, ஆகம சாஸ்திரம் பயின்ற மாணாக்கர்கள் புதியதாக கிடைப்பதில்லை. தங்களைப் போன்றோர் இவ்வளவு ஆர்வமாக கேட்பதால், நம் தமிழக கோயில்களில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, இன்னமும் நியமனம் வழங்கப்படாமல் உள்ள நிலையை மாற்ற ஏதாவது செய்யுங்கள்/ நடவடிக்கை எடுத்து அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் செயலை செய்யுங்கள். அதனை விடுத்து, சிறிதாவது நாம் சிந்தித்தால், நமது சென்னை நகரத்தை மெட்ராஸ் என்று சொல்வதற்கு பதிலாக சென்னை என்று 1996-லேயே மாற்றினோமே, ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் இன்னமும் அதாவது சுமார் 20 வருடம் ஆகியும் நமது உயர்நீதிமன்றத்தின் பெயர் மெட்ராஸ் என்றே உள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை எடுங்கள் தம்பி. இப்படி சிறிது சிறிதாக மாற்றங்கள் , நாளடைவில் நீங்கள் விரும்பும் பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.

    நீங்கள் இன்னொரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். மற்ற மதங்களை சேர்ந்தோர் ஒரே புத்தகம், ஒரே தலைவர் என்று யாரோ சொல்லும் ஒன்றை கேட்கக்கூடியவர்கள்.

    ஆனால் இந்துக்களுக்கு எவனும் தலைவனும் இல்லை, எந்த புத்தகத்தையும் கட்டிக்கொண்டு அழுபவர்களும் அல்ல. சுயமாக சிந்திக்க கூடியவர்கள். ஆட்டு மந்தைகள் அல்ல. இப்படி இருப்பவர்களிடம் மாறுதல்கள் சிறிது சிறிதாக வரும். ஆனால் அந்த மாறுதல்கள் எக்காலத்திற்கும் நிலையாக நிற்கும். சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் இந்த மூன்றுமே இந்து மதத்தின் அடிப்படை ஆகும்.

  169. <>

    ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தேவைகளைச் சொல்லி அவர்கள் மொழியில் தான் வழிபடுகிறார்கள். கோவில் சர்ச் கிடையாது.

    குருக்கள் வந்து சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்யுன்னு சொல்வதில்லை. அங்கே நோக்கம் சர்ச் போன்ற பாதிரியார் பிரார்த்திக்க மற்றோர் பின்தொடரும் முறையல்ல.

    அதோடு அங்கே சன்னிதியில் ஒருவருக்கு கிடைக்கும் நேரமே ரெண்டு நிமிஷமோ மூன்று நிமிஷமோ! பெரிய கோவில்களில் பதினைந்த நொடியோ – இருபது நொடியோ.

    இது இன்னும் சுதந்திரமான முறைதான். எல்லாருக்குமாக குருக்கள் வேண்டிக்கொள்ளாது அவரவர் குறையை அவரவரே மனதுக்குள் சொல்லி நிறைவேறினால இன்ன காணிக்கை என்று சொல்லும் முறை.

    அதே போன்ற முறைகளும் இந்து சமுதாயத்தில் – தமிழ்ச் சமுயதாயத்தில் உண்டுதானே?

    ஆலயத்தில் இருக்கும் பூஜை முறைகள் சமுதாயத்தின் அனைத்து தரப்பாரும் – பாண்டிய சோழ மன்னர்கள் போன்றோரின் இசைவோடு ஏற்படுத்தப்பட்டது தான்.

  170. திரு. BALA SUNDARAM KRISHNA,

    //அணிக்கு உதாரணமாகப் புலவர் குமாரசுவாமியவர்கள் காட்டியிருக்கின்றார்கள் என்று புரியாமல் தண்டியே தம் நூலுள் அனைத்துக்கவிதைகளையும் எழுதினார் என்று வியாசன் புரிந்துள்ளார். //

    இதுநாள் வரை எனக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியரோ அல்லது வேறு எவரோ அந்தச் செய்யுளைப் பாடியது கம்பன் என்று கூறியதாக எனக்கு நினைவில்லை, அப்படி எதையும் நான் கேள்விப்பட்டதுமில்லை. அதன் பின்னால் இவ்வளவு விடயங்கள் இருப்பதும் நீங்கள் சொல்லித் தான் தெரியும். உங்களுடைய ஏனைய வாதங்களைப் போலவே, இதையும் தீர ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும், உங்களின் எழுத்துக்களிலிருந்து நீங்கள் தமிழில் புலமையுள்ளவர் என்பது தெரிகிறது. அதனால் ‘நான் உங்களின் மூளை வேலை செய்யவில்லை’ என்று கூறியது உங்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

  171. திரு பிரதாப் அவர்களின் கூற்று உண்மை.

    # தமிழகத்தில் கோயில்களில் இறைவனுக்கு 16- வகை உபசாரம் செய்யும்போது, திராவிட வேதம் என்று சொல்லி, தேவார திருவாசகம் திருப்பல்லாண்டு என்று ஐந்து தமிழ் வேதநூல்களை தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து திருமறைகள் ஓதப்படுகின்றன.#

  172. வியசான்

    காயம் என்றால் தொல்காப்பியம் சொல்வது வானம்.

    நான் கொடுத்தது ச்லோககங்கள் இல்லை. வ்யுத்பத்தி. சம்ஸ்க்ருத அகாச பதம் எப்படி வந்தது. அம்மூலமே ஆகாச சப்தத்திற்கு நன்கு பொருந்துகிறது. அதாவது எங்கும் இருப்பது.
    வானம் என்பது எங்கும் இருப்பதன்று. இதை விளங்கிக் கொள்ளுங்கள்.

    தொல்காப்பியம் சமஸ்க்ருத பதம் தமிழில் இருந்து காப்பி என்றா சொல்கிறது. தொல்காப்பிய கால நிர்ணயத்துற்குள் நாம் அப்புறம் இறங்க வேண்டும், அதிலும் குதர்க்கம் செய்வீர்கள். அதற்காகத்தான் பாணினியின் காலத்தை தந்தேன். விட்டால் பாணினி தொல்காப்பியரின் பேர சீடர். தொல்காப்பியர் தக்ஷஷிலாவில் ஒரு ஆச்சார்யராக தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்று சொல்வீர்கள்.

    நீங்கள் கொடுத்த தொல்காப்பிய விவரத்தை நான் படித்து நன்கு க்ரஹித்து கொண்டு பதில் தந்தேன். ஆகாசம் எப்படி உருவாகிறது என்று. அதை படித்து பார்க்க கூட உங்களுக்கு நேரமில்லை. ஆகாசம் = sky என்பது தவறு. ether என்பது தான் சரி. இதற்க்கு சமஸ்க்ருத மூலம் என்ன என்றும் சொல்லியாகிவிட்டது.

    பூஜை என்றால் தமியன் பூவினால் செய்தது அதனால் பூசை மருவி பூஜை ஆனது என்று அக்னிஹோத்ர அய்யங்கார் கதை இருக்கட்டும். புஜயதி என்ற சமஸ்க்ருத படத்திற்கு பூவினால் அர்ச்சனை செய்வது என்று அர்த்தம் இல்லை. மதிப்பு தருவது, மரியாதை தருவது என்று அர்த்தம்.

    பூ இல்லாமல் கூட பூஜை செய்யலாம். நீங்கள் coincidences வைத்துக் கொண்டு கற்பனை வளை பின்னுகிறீர்கள். அது தான் உண்மை என்று வேறு நம்புகிறீர்கள்.

    புத்தகம் தமிழ் என்கிறீர்கள். புடம் அஸ்தி இதி புஸ்தகம் (பக்கங்களை கொண்டதால் புஸ்தகம்) சம்புடம் என்றும் இதற்க்கு இன்னொரு பெயர். ட எப்படி ஸ் ஆகிறது என்றால் சந்திகார்யத்தால்.

    காய என்றால் சமஸ்க்ருதத்தில் trunk of a tree என்று அர்த்தம். அதனால் தான் அதே சொல்லை உடம்பிற்கும் பொருத்துகிறார்கள்.

    நீங்கள் தொல்காப்பிய அதாரம் தந்தாள் அதையும் விட மிக பழைய ஸ்லோக ஆதாரம் தந்தேன் அவ்வளவு தான்.

    இதுபோன்று வீரமணி கதைகளை நாமும் தான் நிறைய கேட்டிருக்கிறோம். நீங்கள் தலை கீழ் பிரயத்தனமாக நின்றாலும் உங்களுக்கு பெருசா எதுவும் சிக்காது.

    இதை எல்லாம் விடுங்கள். எத்தனை எத்தனை நடுநிலையாளர்களின் ஆராச்சி உள்ளது. கொஞ்சமேனும் வாசியுங்கள்.

    //
    வடமொழியை ஆதரித்து, வளர்த்து விட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களின் ஆதரவில் வளர்ந்து விட்டு, தமிழை விட சமக்கிருதம் உயர்ந்தது என்று கூறும், உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்க்கிறார்கள்.
    //

    வட மொழியை தமிழன் நிச்சயமாக ஆதரித்துள்ளான். அவன் தான் அதை வளர்த்தான் என்பதற்கு சான்றே கிடையாது. வியாகரண ரீதியாக வளர்த்தவர் பலர் ஒரிசா பீகார் காசி பிரதேசத்தை சேர்ந்தோரே.

    தமிழர்கள் சமஸ்க்ருதத்தை எதிர்கவில்ல. வியாசன் எதிர்த்தால் அனைவரும் எதிர்த்தார் போல ஆகிவிடுமா. தமிழருக்கு எப்போது நீங்கள் தலைவர் ஆனீர்கள்.

    உங்களது பிரச்சனையை பிராமன த்வேஷம் அதை எதிலோ ஏறிட்டு சமஸ்க்ருதத்தை அடிகிப்பது சரியல்ல.

  173. Shri Sarang
    You have answered patiently to Vyasan but he keeps changing topics and insists that Sanskrit borrowed these words. Vyasan reminds me of Mr SP. (” All the scientific findings are there already in Koran ” )

  174. வியாசன்

    முருகனுக்கு தமிழ் தெரியாதா, சிதம்பரத்தில் தமிழ் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.
    இது எனது பிரச்சனையை இல்லை.

    பெருமாள் கோவில்கள் அனைத்திலும் தமிழ் தான் கொலோச்சிகிறது என்று தெள்வாக எடுத்து கூறிவிட்டேன். இதை செய்து காட்டியவர்களும் பாழா போன பிராமணர்கள் தான்.
    பாரா முகமாக இதை விட்டு விட்டு, மறுபடியும் ரீவைண்டு பொத்தானை அழுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சாதிக்க நினைப்பது பிராமன தேவ்ஷம் தான். அதனால் தான் கண்டியில் சமஸ்க்ருதம் இல்லை, பிராமணனும் இல்லை என்று சேர்த்து சொல்கிறீர்கள்.
    இது ஒரு கேவலமான வாதம் என்பதை காட்டவே வைணவ கோவில்களை பற்றி சுட்டிக் காட்டினேன். இங்கென்ன, தெலுங்கு நாட்டில் திருப்பதியிலும் சாமிக்கு தமிழில் தான் துவக்கம். சாதித்து அருள என்று அர்ச்சகர் கேட்க, தமிழ் பாசுர பிரவாகம் எடுக்கு, அதை லவுடு ச்பீகர் போட்டு எல்லோரும் கேட்கும்படி செய்வார்கள்.

    வைணவ பரிபாஷை சுவைத்த துண்டோ. நீங்கள் எல்லாம் ரசம் என்ற சமஸ்க்ருத பத பிரயோகம் செய்வீர்கள். சாறு அமுது சாற்றமது. பாயசம் – கன்னமது. எழுந்து அருளப்பன்னுதல். திருகாப்பு நீக்குதல் திருகாப்பு அடைதத்ல், அடியேன், திருமடப்பள்ளி என்று பிராமணர்கள் சுத்த தமிழில் பேசுவார்கள்.

    வெறுமனே பிராமன துவேஷத்தை உடல் பூர பரப்பிக்கொண்டு வாய்க்கு வந்ததை பேசுகிறீர்கள்.

    தமிழன் கட்டின கோவிலில் சமஸ்க்ருதம் எதற்கு. அதே தமிழன் தான் சமஸ்க்ருத ஆகம விதிப்படி கோவில் கட்டி சமஸ்க்ருத மந்திரம் கொண்டு மூர்த்தி பிரதிச்தை பண்ணி சமஸ்க்ருத மந்திரம் வேண்டும் என்று நிர்வஹித்தான். அவனை விடுங்கள் அவனுக்கு என்ன தெரியும் அவன் மடையன். நீங்கள் தான் புரட்சியாளர், மாமேதை.

    தமிழின் ஆதி கவிதைகள் பரிபாடல்களை வாசித்ததுண்டா. தமிழன் வேத மார்கத்தை போற்றி பேணி வந்துள்ளான் என்பது திண்ணமாகும்.

    நீங்கள் தந்த திருநாவுக்கரசர் பாடலின் அர்த்த விசேஷங்கள் (வாக்யானங்கள்) எனக்கு தெரியாது. அதை பற்றி என்னால் கருத்து கூற இயலாது. எனக்கு திருமறையில் பரிச்சயம் கிடையாது. அறிந்தவர்கள் விளக்கலாம். நீங்கள் சொன்ன பாடலில் இருந்து சமஸ்க்ருதம் திருவையாற்றில் இல்லை என்பது நிச்சயமாக நிருபிக்காது என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

    இஸ்லாமியர் அரபு மொழிக்கு முன்னுரிமை தருகிராரல் என்ற கருத்திலா நான் சொன்னேன். ஓதுதல் என்று வரும்போது அனைத்து மதத்தவரும் மூல மத மொழியையே எடுக்கிறார்கள் என்று தான் என் கருத்து, கிறித்தவர்களும் ஓதுதல் என்று வரும் போது இலத்தீன் தான் எடுக்கிறார்கள். தமிழனும் உபன்யாசம் செய்யும் போதோ தீபாராதனை செய்யும் போது தமிழில் தான் செய்கிறான். இதை விளங்கிக் கொள்ளுங்கள். கிறித்தவர்களின் வழிபாட்டு முறை வெறும் ஹிந்துத்தவ வழிபாட்டு முறை வேறு என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

    மூல விஷயமே இரு மதங்களுக்கும் வேறு வேறு. இவ்வளவு பேசும் நீங்கள் கோவில்கள் எதற்கு வழிபாடு எதற்கு என்று போகலாமே. சோதிமயாமான கடவுளை வள்ளலார் போல வணங்கலாமே. சமஸ்க்ருத ஆகம மூல கோவில்கள் உங்களுக்கு எதுக்கு தேவை.

    உங்கள் பேச்சில் உள்ள முரண்பாடுகளை காண்கிறீர்களா வியாசரே.

  175. உங்களிடம் எப்படி கருத்து பகிர்வது என்று எனக்கு தெரியவில்லை.. திடிரென்று கழகம் என்று குதிக்கிறீர்கள், அதை விட்டால் பரங்கி பாதிரிகளின் சூழ்ச்சி என்கிறீர்கள். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சில சொற்களை கொண்டு வந்து கொட்டி விட்டு இதெல்லாம் சமஸ்க்ருத சொற்கள் இவைகள் இல்லை என்றால் தமிழால் இயங்க முடியாது என்று “குயக்கோடனாக” அலறுகிறீர்கள். கிட்ட தட்ட ஒரு வெறி பிடித்த மனநிலையில் இங்கு மறுமொழிகளை பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    வியாசன் உங்களுக்கு தெளிவான பார்வையை முன்வைத்திருக்கிறார். சமற்க்ருதம் என்றால் நன்கு செய்யப்பட்ட மொழி என்கிறபொழுது எதில் இருந்து எடுத்து நன்கு செய்யப்பட்டது. திருந்தாத மொழியாக இருக்கும் சந்தசி என்பதில் இருந்து தான் என்கிறீர்கள். அது உண்மை தான் சம்ற்க்ருதம் திருந்தாத ஒரு நாடோடி மொழியாக தான் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்தது. சந்தசி என்பதே ஒரு திருந்தாத மொழியாக இருக்கும் பட்சத்தில் அதில் வட்டார வழக்குகள் எப்படி உண்டானது. இப்போது தமிழில் வட்டார வழுக்குகள் இருக்கிறது என்று கூறினால் தமிழ் என்கிற திருந்திய மொழி என ஒன்று இருப்பதால் தான் அதனின்று வட்டார வழக்குகள் ஏற்படுகின்றன. அதே போன்று தெலுங்கிலும் அப்படியே தான், அவ்வளவு ஏன் உலக மொழியாக போற்றப்படும் ஆங்கிலத்தில் வட்டார வழக்கு இருக்கிறதென்றால் அதற்க்கு காரணம் உலகில் இருக்கும் அனைத்து மொழிகளில் இருந்தும் சொற்களை கடன் வாங்கி தன்னை முழும்மைப் படுத்திக் கொண்டது தான். ஒரு வேளை, தாங்கள் குறிப்பிடும் சந்தசி என்கிற மொழி திருந்திய பக்குவப்பட்ட மொழியாக இருந்திருந்தால் பாணினிக்கு தனியாக ஒன்றை நன்கு செய்ய வேண்டும் என்கிற தேவை ஏற்பட்டிருக்காது. திருந்தாத மொழி ஒன்றில் இருந்து வட்டார வேறுப்பாடுகளும், பிரிவுகளும் தோன்றாது என்பதை உணர்ந்து தெளியவும். நன்கு பக்குவப்பட்ட திருந்திய மொழி ஒன்றின் உதவிக் கொண்டு தான் ஒரு மொழியை வளப்படுத்த முடியும்.

    வியாசன் கொடுத்த சான்றுகளை ரொம்பவே பகடி செய்திருக்கிறீர்கள். போகட்டும் அது தங்களுக்கே உரித்தான குணம். தமிழில் இருந்து வடமொழிக்கு சென்ற சொற்கள் ஏராளம். நீங்கள் கூறும் மணி, நிலையம், பாதிப்பு, புறம், அகம் ,நகரம், உலகம்,கணம், ரூபம் ,கோணி, ஆணி, நாடி,ஆசை,நீலம்,தளம்,கழகம்,நாகம்,படம்,பாடம்,பழம்,நாகரீகம் இன்னும் இதுப்போன்ற பல நூறு சொற்களை அடுக்கலாம். இப்படி பல சொற்கள் வடமொழியில் இருப்பதை மெய்ப்பித்தவர்கள் அனைவரும் பானினியத்தை அச்சு பிசகாமல் கற்றவர்களே. அதை உலகிற்கு உணர்த்தியது கால்ட்வெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் தான். சரி எங்கிருந்தோ இங்கு வந்த பரங்கி பரதேசி பயல் இவன் பேச்சை நான் ஏன் நம்ப வேண்டும் என நீங்கள் நினைத்தால், இருக்கவே இருக்கிறார்கள் மறைமலை அடிகளும், தேவநேய பாவாணரும். தமிழில் இருந்து போன ஒவ்வொரு சொல்லுக்கும் அவை எப்படி தமிழில் இருந்து போன சொல் என்று தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் அவர்களின் நூல்களை கண்டுக்கொள்ளலாம். இவர்கள் மட்டும் தான் என்றில்லை வடமொழியில் தங்களை விட நன்கு புலமை பெற்ற, தமிழை உயர்தனி செம்மொழி என்று அறிவித்த சூர்ய நாராயண சாஸ்த்ரி(பரிதிமாற் கலைஞர்) என்னும் வைணவ பிராமணரின் தமிழ் மொழி வரலாறு என்னும் நூலில் தங்களின் சமற்க்ருதம் தமிழிற்கு எவ்வாறெல்லாம் கடன்ப் பட்டு இருக்கிறதென்று பார்க்கலாம். இவ்வளவு கொடுத்த பின்னரும் ஏற்றுக்கொள்ள மறுத்தால் இழப்பு எங்களுக்கோ அல்லது தமிழுக்கோ அல்ல.

    பாணினி மிகச் சிறந்த இலக்கண ஆசான் தான், அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அவரின் சிறப்பு என்பது வடமொழிக்கான சொற்களில் அல்ல. ஓசைகளில் தான் இருக்கிறது. எந்த ஓசைகளையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் உள்ளடக்கியது தான் அவரின் பெருமை. க.ச,ட,த,ப என்னும் 4 எழுத்துக்களையும் முறையே நான்கு வர்க்கங்களாக பிரித்து அனைத்து ஓசைகளையும்(த்வனி) அடக்கியது, மற்றும் ஷ.க்ஷ,ஹ,ஸ ஆகிவவை தான் அவரின் ஆக சிறந்த ஒலிப்பியல் சார்ந்த அறிவியல் நெறி. அவர் எடுத்தாண்ட சொற்கள் அனைத்தையும் இந்த வர்க்கங்களில் சேர்பித்தார். இப்போது மலையாளிகளை பாருங்கள் மழை என்பது தூய தமிழ் சொல் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அவன் தன்னுடைய இலக்கணத்தின் படி “மழ” என்றே தான் அழைப்பான். அதே போன்று தான் கடை என்பதை கடா என்பான். அவனிடம் போய் கேட்டுப்பாருங்கள் என்ன மழ என்று கூறாமல் தப்பாக மழை என்று கூறுகிறீர்கள் என்பான். பழம் என்கிற சொல்லை பலம் என்று நீங்கள் கூறினாலும் அதில் தமிழில் இருந்து சென்ற பழம் தான். சொல்லை கடன் வாங்க முடிந்தது ஆனால் உச்சரிப்பை? பூசெய் என்னும் தமிழ் சொல்லை என்னதான் பூஜா என்று சமற்க்ருத ஒலிப்புகளுடன் கூறினாலும் அது வடமொழிக்கு சொந்தமாகி விடாது.

    இந்த அழகில் இந்த சிக்கல் தொடர்பாக மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பிசு பிசுத்து விட்டது என்று வேறு ஜம்பம் அடிக்கிறீர்கள்..

    //ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்கலாக உள்ளனர்.
    வரவேற்பு இருப்பதால் தான் அம்மாவின் கடுதாசி பிசுபிசுத்து போனது//

    இந்த கடுதாசி மட்டும் இல்ல சார்… காவேரி நீர் பங்கீடு தொடர்பாக, முல்லை பெரியாறு பிரச்சனை, தமிழ் மீனவர்கள் சிங்கள கடற் படையால் தாக்கபடுவது, ஈழ தமிழர் சிக்கலில் பன்னாட்டு நெருக்கடியை ஏற்படுத்த இந்திய அரசை வலியுறுத்துவது போன்ற எங்களின் தலையாய பிரச்சனைகள் தொடர்பாக அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் பிசு பிசுத்து மோடியின் கழிவறை பயன்ப்பாட்டுக்கு சென்றதை உலகமே அறியும். இந்த கடித அற்பத் தனங்களை எல்லாம் வைத்து வடமொழியின் எற்றதிற்க்காக நீங்கள் சுய இன்பம் தேடிக்கொள்வது தான் அறுவெறுப்பாக இருக்கிறது.

    இது போதாதென்று வடமொழியின் மந்திர சக்தியை பற்றி வேறு கூறி எங்களை பயமுறுத்துகிறீர்கள். கோபத்தில் எங்கள் மீது எந்த மந்திர சக்தியையும் ஏவி விட்டுவிடாதீர்கள். எதையும் பேசித் தீர்த்து கொள்ளலாம்.

  176. அன்பின் ஸ்ரீ சாரங்க்

    hats off!

    For the quality and depth of interactions. For the measured and requisite rebukes. And not least……………. for immeasurable patience.

    முகமூடி சுவிசேஷ ப்ரசாரகருக்கான வயணமான கருத்தாழம் மிகுந்த மண்டகப்படியாகப்பட்டது வெறும் மண்டகப்படியாக மட்டிலும் இல்லாது விஷய காம்பீர்யம் பொருந்தியதாக இருந்தது.

    பஹுரூபி அன்பர் தன் முந்தைய அவதாராதிகளில் எப்போதும் செய்வது போன்று cheapest tactics எவ்வளவு உண்டோ அத்தனையும் ……………இம்முறையும் கைக்கொண்டிருக்கிறார்.

    \\\\ you are trying to play victim very typical of losers and JNU intellectuals. \\\\

    loser is a proper description

    Rev. Joe Fernando, an intellectual??????……………… thats insulting the term intellectual………….

    Indulging in google search and vomitting up urls…………….. yardstick for intellectualism?

    தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

  177. //மீண்டும் மீண்டும் யாம் சொல்வது யாதெனில் அந்தணர்களை காயப்படுத்த விரும்பினால் அதற்கென்று பல இயக்கங்கள் இருக்கிறது. இந்த வாராது வந்த மாமணிபோல் உள்ள இணையதளத்தை தயை செய்து பயன்படுத்தாதீர் – மீண்டும் வேண்டுகிறேன்.//

    வெங்கட்!

    உங்க ஜாதிக்காராள காயப்படுத்துதல் என்றால், இன்று வாழ்வோரைப்பற்றிப்பேசுதலே. 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் பற்றி பேசுதல் அப்படி ஆகாது. அப்படி ஆகுமென்று நினைத்தால், உங்களுக்கு இருப்பது ஜாதி வெறி. அதைப்போக்க முயற்சி பண்ணுங்கள். இணைய தளம் வர்லாற்று நிகழ்ச்சிகளை எடுத்துப் பேசத்தான். வரலாற்றை ஒழித்து வைக்க முடியாது. குறிப்பாக நான் எழுதும் வரலாறு ஏற்கனவே எழுதப்பட்டு அனைவருக்கும் தெரிந்ததே. அதையும் உணருங்கள்.

    இந்து மதத்தில் பிராமணர்கள் சிறிது விட்டுக்கொடுத்திருந்தால் அந்நிய மதங்கள் இவ்வளவு வளர்ச்சிபெற்றிருக்கா. விட்டுக்கொடுங்கள் என்றுதான் இராமானுஜர் கேட்டார். வரலாற்றுப்பிராமணர்கள் செயல்பாடுகள் வருந்தத்தக்கன. அப்படிச்சொன்னால் இன்றைய பிராமணர்களைச் சொன்னதாக எப்படி பொருள் எடுக்கிறீர்கள்? கொஞ்சம் விளக்க முடியுமா?

    மாற நேரி நம்பிகள் ஆச்சாரிய வரிசையில் வைக்கப்பட்டு இன்று போற்றப்படுகிறார். அவர் ஒரு தலித்து. அவர், தான் ஒரு தலித்து என்று சொன்னபோது, ஆளவந்தார், ‘பரமஞானிகளுக்கு ஜாதிகள் கிடையா. என்னுடன் வாரும் என்று சிரிரங்கத்துக்கு அழைத்துச்சென்றார். ஆயினும் அவரை அவ்வூர்ப்பிராமணர்கள் ஏற்கவில்லை. அவருக்கு ஈமக்கிரியை செய்ய எவரும் முன் வரவில்லை. இராமானுஜரின் சீடர் பெரியநம்பி முன்வந்த போது தடுத்தார்கள். இது நடந்த காலம் 10ஆம் நூற்றாண்டு. அதே நம்பிகளை இன்றைய் பிராமணர்கள் ஆச்சாரிய வரிசையில் வைத்து பூசிக்கிறார்கள்.

    இதே போல அனைத்தாழ்வார்களுக்கும் மூத்த ஆழ்வாரான நம்பாடுவான் கதையும் ஆழ்வார் ஊருக்குள் நுழைய முடியா பறையர். அவர் ஊர் உறங்கியபின் இரகசியமாக உள்ளுழைந்து வடிவழகிய நம்பியைப்பாடி பாசுரமழை பொழிந்து ஊர் விழிப்பதற்கு முன் ஓடிவிடுவார். ஓரு ஏகாதசி இரவு, இவ்வாறே அவர் நம்பியை பாடிவிட்டு, விரைவாக காட்டுப்பாதையில் செல்ல, ஒரு பிராமண ராட்சதன், வழி மறித்து, உன்னை நான் இன்று புசிக்கப்போகிறேன். அவ்வளவு பசியெனக்கு! என்றான். அவன் ஒரு பிராமணன். தன் ஒழுக்கத்தில் தவறியதால் கொடிய சாபத்துக்கு ஆளாகி காண்பதையெல்லாம் கொன்று தின்பான். ஆழ்வார், உனக்கு நான் இரையாகிறேன். ஆனால் நம்பியைப் பாடிவிட்டு திரும்பி வருவேன். அப்போது என்னை நீ எடுத்துக்கொள்ளலாம் என்றார். ராட்சதன் முதலில் நம்பவில்லையெனினும், பின்னர் ஆழ்வாரை நம்பி வழிவிட்டான். திரும்பி வந்த போது அவருக்கும் பிராமண ராட்சததனுக்கும் ச்மபாஷனை நடக்கிறது. அந்த சம்பாஷனையில் ராட்சதன், ஆழ்வாரே தமக்கு மோட்சத்தை தரவிய்லும் என அவரிடம் என் பாவத்தைப்போக்குங்கள் என காலில் விழ, ஆழ்வார் தன் புண்ணியத்தையெல்லாம் அவனுக்குக் கொடுத்து அவன் சாபத்தை போக்குகிறார். இது நடந்த நாள் இன்று கைசிய ஏகாதசி எனவழைக்கப்படுகிற்து. காரணம். கைசிகம் என்பது ஒரு தமிழ்ப்பண். அதை இசைத்து ஆழ்வார் பாடியதால் கைசிய ஏகாதசி.

    இக்கதை அனிதா ரத்தினம் (டி வி எஸ் குடும்பம்) மற்றும் பேராசியர் இராமனுஜம் (நான்கு நேரி) இருவராலும் நாடகமாக்கப்பட்டு ஆண்டு தோறும் கைசிக ஏகாதசி இரவு நடித்துக்காட்டப்படுகிறது. எங்கே. கதை நடந்த ஊரான திருக்குறுங்குடியில்தான். அன்றிரவு அந்நாடகம் 10 மணிக்குத் தொடங்கி, விடிகாலை 4 மணிக்கு நிறைவு பெரும். அதன் பின்னர் ஏகாதசி விரத்ததை முடிப்பார்கள். போனவாண்டு நான் சென்ற போது அந்நாடகத்தைக்கண்டோர் சிரிபெரும்புதூர் ஜீயரும் திருக்குறுங்குடி ஜீயரும். பாரவையாளர்கள் அனைவருமே பிராமணர்கள். திருக்குறுங்குட அக்ராஹாரமே அங்குதான் இருக்கும். வெளியூர், மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள். நாடகம் முடிந்தவுடன் அரையர் சேவை நட்க்கும். பின்னர் ஜீயர் முன்னிலையில் எங்கள் ஏகாதசி விரதம் முடிந்தது.

    இதையே நீங்கள் பார்த்தால் என்ன சொல்வீர்கள்: அந்தணர்களைக் காயப்படுத்தாதிர்கள் என்றுதான். ஏனென்றால் ஒரு பிராமணன் ஒரு வைணவரை கொன்று தின்ன வருகிறான். ஒரு தலித்தால் அவன் சாபம் நீக்கப்படுகிறது.

    ஆனால் அங்கு கூடியிருந்த பிராமணர்களும், அந்நாடகத்தை புதுப்பித்த பிராமணர்களும் அப்படி நினைக்கவில்லை. ஒரு ஆழ்வாரின் திவ்ய சரிதத்தை அன்று கேட்டோம். எமக்கு கைசிய ஏகாதசி விரத்ததின் புண்ணியம் கிடைத்தது என்றுதான் நினைப்பார்கள். ஜீயரும் தன்னுரையில் அதைத்தான் குறிப்பிட்டார்.

    இன்றைய பிராமணர்களுக்கும் அன்றைய பிராமணர்களுக்கும் அடிப்படை வேறுபாடு இவ்வாறு இருக்க, நான் வரலாற்றைச் சொல்வது எப்படி உங்களை வருத்துகிறது என்று கொஞ்சம் விளக்க முடியுமா? மற்றவர்களுக்கும் ‘வெங்கட் என்ன அந்த பிராமணாளை இன்றைய பிராமணாளை இணைக்கிறார். அப்படியென்றால் இன்றைய பிராமணாளும் மோசமே என்று சொல்கிறாரா? அப்படியென்றால், அவர் ஜாதிக்காரரகளை அவரே தூடணை பண்ணவேண்டிய அவசியம்? என்று கேட்பார்கள். கொஞ்சம் சிந்தித்து சீர்தூக்கி பின்னர் எழுதவும்.

  178. ஸ்ரீ வியாசன் — சாரங்க் அவர்களுடனான விவாதத்திலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. நன்றி. சார்புடைய சில விஷயங்கள். ஒரு சில கருப்பொருளிலிருந்து விலகுவதற்கு எமது க்ஷமாயாசனங்கள்.

    ஸ்ரீ வியாசன் அவர்களது தளம் வாயிலாக ஈழத்தமிழர் பற்றிய தெரிந்துகொள்ள வேண்டிய பல செய்திகளை அறிய முடிகிறது. நன்றிகள் பல.

    அவர் பகிர்ந்த மற்றும் பகிரும் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாச் செய்திகள் காணொளிகள் எமக்கு மிகவும் பயனுள்ள மேலும் திருப்புகழ்ப் பனுவல்களில் மிகவும் மீண்டும் ஆழ்ந்தமிழ உத்சாஹம் தரும்படிக்கானவை. எங்கள் உளத்தில் உறையும் …………….. எங்கள் குலதெய்வம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானது……….இப்படிப்பட்ட அருமையான திருவிழாக்காட்சிகளை பகிர்ந்து கொள்ளும் அடியார்கள் அனைவருடைய திருவடித்தூளி எம் சென்னியதே.

    ஸ்ரீ வியாசன் அவர்கள் த்ராவிட குப்பை கும்பல்களிலிருந்து வேறுபட்ட கருத்துக்கொண்டவர் என்பது அறிந்ததே.

    பின்னும்…………

    அவரது தளத்தை வாசிக்கையில் பெயரளவில் ஜாதிய மறுப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் வேளாளா ஜாதி மேட்டிமையும் மட்டில்லா பார்ப்பன த்வேஷமும் கூடவே வெளிப்படுகிறது. இங்கு பகிர்ந்த கருத்துக்களிலும் அது தொடர்கிறது.

    ஈழத்தமிழர் ஆலயங்களை தகர்த்து நொறுக்கிய ஈழத்து முஸல்மாணிய சஹோதரர்களது செய்கைக்கு முன்னர் கண்டனம் தெரிவித்திருந்தாலும் இப்போதெல்லாம் போலி மதசார்பின்மை என்ற விஷக்கடியால் பீடிக்கப்பட்ட அன்பர் அவர்கள் ………….. போலி மத நல்லிணக்கக் கருத்துக்களை முன்வைப்பதும் தெரிகிறது.

    ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களும் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் மத நல்லிணக்கத்துக்கு பாடுபடுவதும்……….. பெரும் அளவில் முஸல்மாணிய சஹோதரர்கள்………… ஹிந்துக்களுடன் எமது தேச வளர்ச்சியின் பாற்பட்டு எமது பண்பாடு காக்கும் பணியின் பாற்பட்டு கரம் கோர்ப்பதையும் அன்பர் அறியாதிருக்கலாம்.

    ஈழத்தில் க்றைஸ்தவ சஹோதரிகள் நெற்றியில் பொட்டிடல் என்ற தமிழ்க் கலாசாரத்தை ( ஒட்டு மொத்த ஹிந்துஸ்தான கலாசாரமும் கூட) மதம் மாறிய பின்பும் இன்றும் பேணும் பாங்கு அன்பர் அவர்களால் விதந்தோதப்பட்டமையை உள்வாங்கியிருக்கிறேன். உண்மையில் விதந்தோதப்பட வேண்டிய விஷயம். ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் தன்னுடைய வ்யாசத்தில் சைவ சமயத்தை பேண வேண்டி போர்த்துகீசியரின் கெடுபிடிக்கு மேலோட்டமாக இணங்கி வெளிப்படையாக க்றைஸ்தவத்தையும் மறைமுகமாக சைவத்தையும் பேணும் அன்பர்களை பஞ்சாக்ஷர க்றைஸ்தவர் என்று பகிர்ந்த செய்தியும் நினைவுக்கு வருகிறது.

    மதமாற்றம் என்பது கலாசார மாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடாது. இன்றைய திகதியில் க்றைஸ்தவ மிஷ நரிகள் தமிழகத்திலும் ஹிந்துஸ்தானத்தின் மற்றைய பகுதிகளிலும் பித்தலாட்ட முறையில் மதம் மாற்றப்பட்ட க்றைஸ்தவ சஹோதரிகளின் நெற்றிப்பொட்டழிக்கும் தலையில் பூச்சூடும் வழக்கத்தை அழித்தொழிக்கும் அவலத்தை மதத்தின் பெயரால் நிகழ்த்தும் அடாவடி நிகழ்ந்து வருகிறது.

    முஸல்மாணியர் அராபியர்களை நகலெடுக்கும் அவலம் ஹிந்துஸ்தானமுழுதும் வஹாபிய நடவடிக்கைகளால் பெருகி வருகிறது. தமிழகத்தில் ஒரு பத்து இருபது வருஷ முன்னர் முஸல்மாணிய பெண்டிர் தங்கள் சேலை மீது முழு உடலையும் மறைக்கும் வெள்ளையான ஒரு மேலங்கியை அணியும் வழக்கம் இருந்தது. அது மாறி அராபியர் போன்று கருப்பு நிற புர்க்கா அணிவது இன்று கட்டாயமாக்கப்பட்டமை தெரிகிறது. பின்னிட்டும் இன்னமும் பல முஸல்மாணிய பெண்டிர் மாரியம்மன் கோவில்களில் உப்பு வெங்காயம் படைக்கும் போற்றத்தகுந்த கலாசார மாண்பினையும் அறிவேன்.

    உத்தரபாரதத்து முஸல்மாணிய பெண்டிர் நெற்றியில் பொட்டும் நடுவகிட்டில் சிந்தூரமும் இடும் வழக்கம் இன்னமும் தொடர்கிறது. குறிப்பாக உ.பி. மற்றும் பீஹாரில். ஆந்தி எனும் பேய்க்காற்று அடித்த ஒரு சமயத்தில் ஒரு முஸ்லீம் பெண்டிர் குழாத்தினர் புர்க்கா விலகுகையில் நெற்றியில் பொட்டும் சிந்தூரமும் பார்க்க நேர்ந்து என் மித்ரர்களிடம் விசாரித்ததில் இது மிகவும் பொதுவான வழக்கம் என்று அவர்கள் கருத்துப்பகிர்ந்தனர்.

    ஆஸாமின் பேகம் பர்வீன் சுல்தானா, கிழக்கு வங்காளத்தின் (பாங்க்ளாதேஷ்) பேகம் ரூனா லைலா போன்ற முஸ்லீம் பெண் பாடகர்கள் மற்றும் மேடம் மார்கரெட் ஆல்வா மற்றும் மேடம் அம்பிகா சோனி போன்ற மாற்று மதத்து க்றைஸ்த்வ பெண் காங்க்ரஸ் அரசியல் வாதிகள் நெற்றியில் பொட்டிட்டுக்கொள்ளும் தேசத்தின் கலாசாரத்தை மாறிய மதத்திலும் தொடர்வது விதந்தோதப்பட வேண்டிய செயற்பாடு.

  179. //CBSE பள்ளிகள் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் அல்ல. அது ப்ரைவேட்டு பள்ளிகள். CBSE என்பது பாட திட்ட முறை சான்றிதழ் தான்.//

    சாரங்கன்

    இப்பள்ளிகளில் இருவகை. ஒன்று நீங்கள் சொல்லும் தனியார்ப்பள்ளிகள். மற்றொன்று, கேந்திரிய வித்யாலாக்கள்.

    சுற்றறிக்கை கே. வி பள்ளிகளைக்கட்டாயப்படுத்தும். மற்ற பள்ளிகளை அப்படிச்செய்யாவிட்டாலும், அரசின் அறிக்கையை உதாசீனப்படுத்த முடியாது.

    கே.வி பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணையிட முடியாது.

    தமிழ் வாரம் தமிழத்தில் கொண்டாடும் நிலைக்கு தமிழ் இன்னும் தள்ளப்படவில்லை. அதனால் அவசியமில்லை. வடமொழிக்குத்தான் ஆளில்லை. அதனால் விளம்பரப்படுத்துகிறார். இரண்டாவது இது இன்றைய அரசின் இந்துத்வா அஜன்டா. ஆர் எஸ் எஸ் யை மகிழ்விக்கும் என்று செய்யப்படுகிறது.

    வடமொழியை தலித்துகளுக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கிறேன் எனறால் ஆசிரியர்தான். ஆசிரியருக்கென்று ஒரு கண்ணியமான பேச்சு உண்டு. //உங்களோடு கொஞ்சு தமிழிலா பேச முடியும். யாரோடு எப்படி பேசணுமோ அப்படிதான் பேசணும். // எனபது ரவுடியின் மிரட்டல். எனக்கு மட்டுமன்றி; உங்களுக்கு மாறுகருத்து வைப்போரையெல்லாம் அடாவடித்தமிழில்தான் பதில் எழுதுகிறீர்கள்.

    உங்கள் வீட்டுப்பெண்ணை ஒரு தலித்துக்கு கெட்டிவைப்பீர்களா என்ற கேள்வி எடுக்கும் விதத்தில்தான் உங்கள் பண்பு வெளிப்படுகிறது. அக்கேள்வி, இன்றைய தலித்தை எல்லா ஜாதிக்காரர்களும் வெறுக்கிறார்கள் இன்றைய தமிழகத்தில். நீங்கள் எப்படி என்று வெளிப்படுத்த. அதை வெளிப்படுத்தி விட்டீர்களலலவா? நான் கேட்காமலிருந்தால்? இதே கேள்வியை என்னிடம் கேட்டால், நான் அதை தனிநபர் தாக்குதலாக எடுக்க மாட்டேன். என் சமூகப்பண்பை அறிய விழையும் முயற்சி என்றுதான் நினைப்பேன். நினைப்பே பொழைப்பை கெடுக்கும். நினைப்பே பொழைப்பை வாழவும் வைக்கும்.

    உங்கள் ஆசை ஒருவேளை உங்கள் வாணாளிலேயே நிறைவேறலாம். தமிழக பட்டி தொட்டிகளிலெல்லாம் சமச்கிருத ஒலி கேட்க தமிழ் ஒலி கேட்காமல் தமிழே அழியும் நான் வரும். ஒரு வேளை நீஙகள் செய்யும் இன்றைய களப்பணி உங்கள் கால்த்திற்கு அப்புறமாவது நிறைவேறலாம். புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ் இருக்கும். இன்று தமிழுக்காக குரல் கொடுப்போர், கொடியவர்கள், மோசடிக்கும்பல், பித்தலாட்டக்காரர்கள் என்ற வசைவுக்கு ஆளாகலாம். ஆனால் அவர்கள் காலம் முடிந்தபின், இப்ப்டிக்குரல் கொடுப்போரே இருக்காது. எங்கும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் என்றான பின்னர், தமிழ் விரைவில் சாகும். ஒரு சிலர், தண்ணீர்விட்டா வளர்த்தோம் சர்வேசா; கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ என்று அரற்றி விரைவில அடங்கிப்போவார்கள். Perhaps Tamil will go to Xians and Muslims for safety when all Tamil Hindus are sankritised. Already Muslim theologians are adopting chaste Tamil i.e. Tamil w/o mixture of Sanskrit and their importance will increase when the Hindus discard Tamil. The more you drive Tamil and replace it with Sanskrit, the more you strengthen Xians and Muslims.

    முன்பே சொன்னது போல உங்கள் தெய்வப்பணிக்கு என்னால் வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்ல முடியும்.

    சமஸ்கிருதம் வாழ்க! தமிழ் ஒரேயடியாக ஒழிக!!

  180. மனுவைப்பற்றி:

    இங்கு கிருஷ்ணகுமார், தான் மனுவைப்படிக்கவில்லை என்று சொல்லி அதிலுள்ள சிலவாசங்களை எடுத்துப்போட்டு இந்துமதத்தை இழிவுபடுத்துகிறார்கள் எனச்சொல்கிறார். அவ்வாசகங்கள் இடைச்செருகல்கள் என்று சொல்கிறார். மனுவையே படிக்கவில்லை. ஆனால் இடைச்செருகல்கள என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.

    இதைப்போலவே சாரங்கனும், மனுவில் ஒரு சிலவற்றைத்தவிர அது மிகவும் போற்றத்தகுந்த பொத்தகம்; அவசியம் இந்துக்களுக்கு என்கிறார்.

    இவர்கள் இருவரும் மனுவைத் தூக்கிவீசுங்கள் ஒரேயடியாக எனச்சொன்னதன் எதிர்வினையாக இப்படி எழுதியிருக்கிறார்கள்.

    மாயாவாதி தீண்டாமையை தலித்துக்கெதிராக செய்வ்வோரையும் அதற்கு காரணகர்த்தாக்களையும் மனுவாடிகள் என்றுதான் குறிப்பிடுவார்.

    மனு நிறையச் சொல்லியிருக்கலாம். இடைச்செருகல்களை வெள்ளைக்கார ஆசிர்யரும், இந்துமதத்தை வெறுப்போரும் எடுத்துக்காட்டியிருக்கலாம்; எனினும், அவை, இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இருப்பவை. அவை இருந்ததே தீண்டாமைக்கு காரணம் என தலித்துக்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மனு என்றாலே கோபம். அதை ஆதரிப்போரை தீண்டாமையை ஆதரிப்போர் என நினைக்கிறார்கள்.

    இந்த லட்சணத்தில் மனு என்ன சொன்னாலென்ன? தலித்துகள் இந்துமதத்தில் இருக்க விழைவீராயின், மனுவை ஒரேயடியாக முழுககடிக்க வைப்பதில் கிருஸ்ணகுமார், சாரங்கன் போன்ற இந்துத்வாவினருக்கு என்னதயக்கம்? இந்துத்வா சாதிகள் இல்லையென்று சொல்லி தலித்துக்களை தக்க வைக்க இவர்கள் ஏன் உள்ளுக்குள் இருந்தே குழி வெட்டுகிறார்கள்? இவர்கள் யார் என்பது மர்மமாகத்தான் இருக்கின்றது?

  181. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\\\ எப்போது எவருக்குப் பதில் எழுதினாலும் அடாவடித்தமிழையே பிடிக்கிறீர்கள். இங்கு எழுத வருபவர்களெல்லாம் பேட்டை ரவுடிகள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்களும் கற்றோர். சமூகத்தில் நல்லிடங்களில்தான் இருப்பவர்கள். நாகரிக மனிதர்களிடையே நடக்கும் உரையாடல் பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இத்தனைக்கும் ஆசிரியத்தொழில் பார்ப்பதாகச் சொல்கிறீர்கள். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்று தமிழ்ப்புலவர் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். \\\\

    ஹிந்து மதக்காழ்ப்பு, பார்ப்பன த்வேஷம்,விவாதத்தை தடம் புரள வைத்தல், ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை இழிவு செய்தல் இதெல்லாம் பழசு என்று

    ஸ்ரீ வைஷ்ணவர்களை மாற்று மதத்திற்கு விலை பேசும் கீழ்மை………

    என அதளபாதாளத்துக்கு விழைகிறீர்கள்.

    கூகுள் சர்ச் காபி பேஸ்ட் கந்தறகோள கண்றாவியிலிருந்து இந்த அவதாரம் விலகியமைக்கு ஒரு சபாஷ்.

    இந்த அவதாரம் போரடித்து விட்டது.

    வழக்கம் போல அசுபம் என்று கார்டு போட்டோ போடாமலோ ……………. எல்லா வாசகர்களையும் ஹிந்துக்களையும் ஹிந்து இயக்கங்களையும் வைதோ வையாமலோ………. இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு நாமம் சார்த்தி விட்டோ சாற்றாமலோ…………….. முகமூடி சுவிசேஷத்துக்கு ஒரு “ஜோ” …………. ச ச ஒரு “ஜே” போட்டு……………

    வழக்கம் போல இந்த அவதாரத்தை மலையேற்றி…………..

    விரைவில் புதிய அவதாரம் எடுத்து………….

    வழக்கம் போல சுண்டைக்காய் துவையல் பற்றிய வ்யாசமாக இருந்தாலும் சரி சுக்குக்காபி பற்றிய வ்யாசமாக இருந்தாலும் சரி, தேவரீர் அதில் தடாலடியாக நுழைந்து ஹிந்து மதத்வேஷம், பார்ப்பன த்வேஷம், சம்ஸ்க்ருத த்வேஷம் முகமூடி சுவிசேஷ ப்ரசாரம் …………. இத்யாதி வைபவங்களுடன்……… பல்லாண்டு பல்லாண்டு தமிழ் வாசிக்கும் வாசகர்களை பிச்சுப் பிறாண்டி நொந்து நூலெடுத்தல் …….. பரலோகத்தில் இருக்கும் பரமபதாவிடம் ரெவ ரெண்டு அவர்கள் செய்திருக்கும் வாக்கு தத்தப்படி வெளங்குவதாக.

    இணைய தள ஜாம்பவான்கள் பலர் தேவரீரை மங்களாசாசனம் செய்ததை அடியேன் காபி பேஸ்ட் செய்து நினைவுறுத்தியதற்குப் பிறகே அவதார பூர்த்தி நிகழ்வது வழக்கம்.

    இந்த தபா சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம் என்று மங்களம் பாடி விட்டேன். அத்துடனேயே அவதாரம் மலையேறுவதாக. ஆமீன். ஆமீன். ஆமீன்.

  182. //your beloved Ramanuja wrote seven books . All seven books only in Sanskrit only. He never write any book in Tamil. why because he want to reach all his views to all people.At the time , sanskrit is link language throughout India(Including Tamilnadu) .Even, malayaali not accepting malayalam came from Tamil. but all people accept sanskrit is common lanugage in India. That’s why Modi announced Sanskrit week got my point.
    //
    He is not my beloved Ramanuja only. He is beloved even of you and many atheists too. Because of his religious reforms by which the general society too got benefited, the atheists adore him. It is a pity that after he was gone, the Brahmins reverted to their age-old practices of seclusion and agraharaising the religion, and now and here, too, you can see them writing that they don’t accept Dalits. Sarangan wrote he cannot share anything that is dear to him and his family with them; Krishnakumar, without reading Manu, says Manu should not be given up.

    When myself being a post-graduate in Vaishnavism, it is too presumptuous of you to teach me all that. Ok. He wrote in Sanskrit. For that matter, Kulasekara azhwaar and Periyaazhwar also wrote in Sanskrit. Except the low caste Azhwaars, other Azhwaars knew Sanskrit. They were masters in both Tamil and Sanskrit. If Sanskrit was so popular in Azhwar’s time, they could have stuck to that language only. Why did they sing his passurams in Tamil?

    On the other hand, it was the practice with Acharyaas to adopt Sanskrit only when they explicated and expatiated on the intricacies of Vaishnavite theology as so many words and ideas come from Sanskrit religious lit for which there are no equivalents in Tamil, as they thought. Synonyms may be there; but they would mislead, rather than be exact. Not because Sanskrit was popular among Tamils. Further, their theological discourses were targeted for the readership of people who want to go deep into the religion in all its intricacies and, needless to say, they were brahmins who had acquired knowledge of Sanskrit. Common masses had/have no such knowledge, then and now. Neither do they have time and inclination. The gnana maarkam was for select people i.e. mostly the Brahimins as they were learned at the time and it was possible for them, as they knew Sanskrit. The Bhakti margam was for common masses. Ramanujar understood that if his religion was to be brought to the masses, the Bhakti maargam should be pushed up as Tamil only is ok for that, and the Azhvaars, who advocated such margam unambiguously, should be upheld to the masses as their light. When he attempted to do that, the Brahmins thought that his effort would overwhelm their maragam and all their hard work for that and they were afraid the soulful songs of Azhwaar in Tamil would encourage people to move to Tamil style of worship; their Vedas would be neglected, they feared.

    Don’t argue Bhakti margam is for all, including Brahmins. Those among the Brahmins who wanted, chose the Bhakti margam; Others remained rooted in orthodoxy. Ramanujar did not neglect nor discourage the gnana margam. All that he wanted was the other path as it would attract all simple and common folk among whom persons like Saranagan and Krishnakumar are not counted as they are very learned and great scholars, and, hopefully, you will be counted and therefore, request you to study this religion and join with us.

    It appears from your message that you came to know about Vaishnavam and Ramanujar as an outsider. You may go to a learned Vaishnavite scholar and ask him why Ramanujar did not write his own Padi to Thiruvaimozhi in Tamil or Manipravalam as other great stalwarts like Nambillai, Nanjiyar, Periyavachan Pillai et al had done. The scholar will tell you that indeed the same question was posed to Ramanujar by his close disciple and the answer the master gave shows how humble he was. I wont tell the answer. Try yourself.

    Modi announced the Sanskrit as it is one of the agenda points to carry out during his 5 year tenure sooner than later. He is being truthful to that. The agenda is rooted in RSS ideology of promoting Sanskrit it being the language of Hinduism much like Urdu and Arabic for Muslims in India. I wouldn’t like to buy the theory advanced by Aravindan and others here, that it was the language of the masses. Suppose it was i.e a religion of the masses and Indianness, there still is no reason why a Hindu organisation should bother about that language. Sarangan and others are paranoid in promoting a language which is not understood by masses. Tirupathi is the seat of Sanskrit learning today, just as Kanchi was when Yuan Sung visited the city. But go to a shopkeeper or a passer-by in Triupathi street and speak Sanskrit, he will wonder whether a zombie has come down to meet him.

    However much Sarangan tries to paint it as a language of masses, however much he attempts to show news item and all that, the fact remains that it is not the language of the masses. The cat is out of the bag: he is paranoid only because it is closely associated with Hindu religion much as Arabic with Islam.

  183. //தமிழ் எதற்கு நான் படிக்கணும். நானோ அறிவியல் பயின்று ஜி.ஆர். இ எழுதி டோபில் எழுதி அமெரிக்காவுக்கு ஜோய்யின்னு பரக்கபோறேன் அங்க ஆங்கிலம் தான் அதனால் நான் ஆங்கிலம் மட்டுமே படிக்கிறேனே. தமிழ் நாட்டில் நான் பிறந்ததால் எதற்கு தமிழ் படிக்க வேண்டும் என்று மக்காலே புத்திரர்கள் நிறைய பேர் கேட்கிறார்கள். விசயத்தை புரிந்து கொள்ளுங்கள்.//

    Correctly said. எனவே தமிழைத்தான் தமிழர்களிடையே பரப்ப வேண்டும். பின் என்ன சமஸ்கிருதத்தைப் பரப்பவேண்டுமென்கிறார் சாரங்கன். ஏற்கனவே நான் சொன்ன கருத்துதான். தமிழர்கள் தமிழை விட்டு ஆங்கிலமோகத்தில் அலைய, அவர்களிடயே தமிழ் படித்தலைத்தான் எடுத்துச்சொல்லவேண்டும். சமஸ்கிருதம் பின்ன்ர் பார்த்துக்கொள்ளலாம் சாரங்கன்.

  184. //கர்ம என்ன வேண்டிகிடக்கு ஜாதி என்ன வேண்டிகிடக்கு. இதையும் தான் சொல்லி இருந்தேன். அதை படிக்காதே உம்ம கண்.//

    ஆபத்தான கருத்து. இந்து என்று சொல்லிக்கொள்கிறீர்கள். ஜாதிகள் வேண்டுமென்கிறீர்கள். ஜாதிகள் இருந்தால் தலித்து இருப்பான். தலித்து இருந்தால் அவர்களை உயர்ஜாதிக்காரகள் தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்ப்பார்கள்.

    ஆன்மிகக் கண்காட்சியை நடத்தியோர் தங்கள் கொள்கை என்னவென்று பரப்பிவிட்டார்கள். ஒவ்வொரு ஜாதியையும் ஸ்டால் பரப்பி, ஒவ்வொருவர் மனத்திலும் ஜாதி உணர்வை ஏற்படுத்தி, ஜாதிகள் உண்டடி பாப்பா என்று பாடவைத்துவிட்டார்கள்.

    நான் சென்னையில் இல்லை. இருந்தாலும் இப்படியான ஆன்மிக கண்காட்சிகளுக்குப்போவது கிடையாது. இது ஆன்மிகக்கண்காட்சியன்று. ஜாதியணர்வைத் கண்காட்சி.

    இப்படி ஜாதிகளைத்தூண்டிவிட்டு தலித்துக்களை தீண்டாமைக்கொடுமைக்காளாக்குவதே நோக்கமென்றால் பின் ஏன் தலித்துகள் உங்கள் மதத்துக்கு வரவேண்டும்?

    சாரங்கனின் கொள்கை, மறைந்த மலர்மன்னனின் கொள்கையோடு ஒத்தது. ஜாதிகள் உண்டு மட்டுமன்று, இருக்க வேண்டும் என்பதுதான் அது. இக்கொள்கை மதத்தையே குழிதோண்டி புதைத்துவிடுமெனறு எச்சரிக்கிறேன். ஒருவேளை தலித்தல்லா மற்றவர்கள் போதும் என்றால் சரி. சாரங்கந்தான் சொல்லிவிட்டாரே, தலித்துகளோடு நெருங்க மாட்டோம் என்று. அப்ப சரி.

    எனக்கு தெரியவேண்டியது என்னவென்றால், மற்றவர்களுக்கும்தான், இக்கொள்கையா இந்துதவாவின் கொள்கை; அல்லது இத்தளத்தாரின் கொள்கை? அதாவது தலித்தல்லா இந்துமதமா நோக்கம்?

    அறிய விழைகிறேன்.

  185. Krishnakumar writes தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் கலந்த ஒரு மொழிநடையில் பாரோர் நன்மைக்காக…….தமிழருடைய நன்மைக்காக மட்டிலும் அல்ல…….. பெருத்த பாருளீர் ………..என்று உலகோரை அழைத்து……….எங்கள் வள்ளல் பெருமான் பாடுகிறார்…………. திருப்புகழைப் பாட எங்கள் வள்ளல் பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்தவன் எங்கள் தமிழ்க்கடவுளான முருகப்பெருமான்.//

    அருணகிரிநாதர் இப்படி தமிழையும் வடமொழியையும் விரவி பாடல்கள் எழுதியதற்கு காரணம் அக்காலத்தாக்கமே. அக்காலத்தில் 17 ம் நூற்றாண்டு, ஹசால்யர்கள் தமிழகத்தில் பெரும்பகுதியை தங்கள் ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவந்து கன்னடமொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும்மே இடம் கொடுக்க, தமிழ்ப்புலவர்கள் மறைந்து கொண்டார்கள். எஞ்சியோர், சமஸ்கிருதத்தை தமிழில் விரவித்தான் எழுதினார்கள். அவர்களுள் ஒருவர்தான் அருணகிரியார். அவர் பாடலகள் பிரபலமாகா காரணமும் இதேதான். கொடுந்தமிழாக அது போய்விட்டது. முருகபக்தி அவருக்கு மட்டும் இருந்தால் போதுமா? பிற தமிழர்களுக்கும் போய்ச்சேரவேண்டாவா? என்றவரைச்சிந்திக்காமல் செய்தது அவர் காலம்.

    இன்று முருகன் கோயில் விழாவுக்கு மக்கள் திரண்டால் அங்கு விநியோக்கப்படும் இலவச முருகன் நூல் கந்தசஸ்டி கவசமே. காரணம் ஹைக்கூ ஸ்டைல், மற்றும் எளிமை. இன்னொரு காரணம் அது ‘கவசம்” படிப்பின் காப்பது.

    விராலி மலையிலிலும் கழுகாசலமூர்த்தி கோயிலிலும் வயலூரிலும் தவிர நானெங்கும் அருண்கிரியாரின் பாடல்கள் சுவற்றில் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கவில்லை. அவரின் பாடலகள் வெகு சிறப்பான பக்தியை வெளியிட்டாலும், சமஸ்கிருத கலப்பால், அப்பக்தியை மக்களிடம் போய்ச்சேராதபடி பண்ணிவிட்டார். His early life and education are shrouded in mystery. However, from what we came to know, he was from Devadasi kulam. His mother was doing the service in the Thiruvannaamali. She was kept by a rich chettiar to whom he and his sister was born. After the death of his mother, his sister couldn’t control him. He went to prostitutes of the temple city and developed serious type of VD. Luckily his sister was virtuous and, more than that, a deep devotee of Murugan. She prayed to her Lord to save her brother. So, as the story goes, when he was almost dying of the VD, unable to bear further agony, he climbed up a hill and jumped to commit suicide. Lord Murugan came and cupped the floating body of the patient. That was the turning point which made him a devotee of Lord Murugan and the sister’s prayers were answered at the appropriate time.

    The story is largely accepted by all, except for the part that he was born to a devadasi. The devotees changed the story to say that he was born to a brahmin woman. In Hinduism, people don’t bear to hear that their saints were born to a lower caste woman or a prostitute. If we accept that he was born to a low woman and roamed around the temple city, his Tamil was picked up, or he attempted hard to learn and won it. The brand of Tamil he picked up was colored by the fashion of the age Pandaraththaar is referring. He is an interesting saint: from prostitutes, VD and then, ascending the zenith of sainthood ! Great. Congradulations to Krishnakumar for choosing him as his guiding spirit. I would have if he had worshipped Perumal. However, I narrated all about him, his books, and explained the songs to my wife, a famatic Muruga devottee, much to my dismay, and for her sake visited Viraali Malai, Vayaloor (both near Tiruchi – you can travel by city buses); Kazhugu Malai, Pazhani where the famous saints stayed and sang on his Lord. Indeed, it was in Viraali Malar that Lord Muruga gave his darshan to him. We had taken a photo at the exact spot where the incident said to have occurred. Whatever said or not said, you cannot call yourself a Muruga devotee if you neglect the work of this saint or not learnt his life and bhakti. Bhakti is infectious; get infected.

    முதல் பத்தியில் சொல்லப்பட்ட கருத்து அண்ணாமலைப்பலகலைக்கழக தமிழ்ப் பேராசிரியரும் பெரும் தமிழறிஞருமான சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 17ம் நூற்றாண்டு தமிழக இலக்கிய வரலாறு என்ற நூலிலிருந்து. Every creative work is a product of its age. No writer can escape the impact, either negative or positive, of its historical impact. The impact on Arunagirinathar is negative so far as language style is concerned. Pandaaraththaar says 17th century is poor in producing good creative work in Tamil mainly due to lack of patronage for Tamil pulavars. The invasion of Hoshalyas extended up to Thiruvannamalai, the birth place of Arunagiri Nathar.

    A few messages ought to be posted tomorrow. Thereafter, I will hang my boots.

  186. திரு.சுவனப்ரியன்………

    தங்களின் பாரதி-வ.உ.சி.செய்தி மிக அற்புதம். சரியான நேரத்தில் பகிரப்பட்ட மிக அரிய தகவல். தமிழுக்கான தங்களின் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.

  187. தாயுமானவன்

    பட்டய கிளப்புறீங்க சார். வாழ்த்துக்கள்.

    //
    நிலையம், பாதிப்பு, புறம், அகம் ,நகரம், உலகம்,கணம், ரூபம் ,கோணி
    //

    புருஷன் தமிழ் பதமா ஆம் உங்கள் கூற்று படி. புறம் தமிழ் என்றால், புருஷனும் தமிழே. புரே திஷ்டதி இதி புருஷ:

    இந்த சமஸ்க்ருத பதங்கள் எலாம் ஒரிஜினல் தமிழ் பதங்கள் என்று ரியர்ச்சு செய்பவர்களின் பின்புலம் அனைவரும் அறிந்ததே.

    சமஸ்க்ருத்தின் சொல்லாட்சி எப்படி உண்டாகிறது என்று பல முறை சொல்லிவிட்டேன். வேறு மொழியில் இருந்து கடன் வாங்கினால் இடுகுறு பெயராக தான் இருக்கும்.

    பாதிப்பு என்ற சொல்லுக்கு நீங்கள் தலை கீழ் நின்றாலும் இச்சொல் எப்படி உருவானது என்று சொல்ல முடியாது.

    பாததே என்பதில் இருந்து பாதிப்பு. நத்வம் பாததே என்று அப்பையா தீட்சிதரின் புகழ்பெற்ற வாக்கியம் நினைவில் உள்ளதா.

    உலகம். லோக என்ற பதம் ரிக் வேத ஆரம்பமாக உள்ளது. நீங்கள் வேண்டுமானால் தமிழ் ரிக் வேதத்தையும் விட பழையது என்று வைத்துக் கொள்ளுங்களேன். லோகதே பார்ப்பது. பார்ப்பது தான் உலகம். பார்வையையும் தாண்டி இருப்பது அகிலம்.

    லோகதே என்ற பதத்தில் இருந்து தான் look என்ற ஆங்கில பதம்.

    உலகம் என்ற தமிழ் பதத்தை எடுத்து லோக: என்று ஆண்பாலில் சமஸ்ருத்தில் ஏன் கஷ்டப்பட்டு மாற்ற வேண்டும். தமிழுக்கு தான் லாவுக்கு முன்னாடி ஏதாவது வேண்டும்.

    நீங்கள் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள ஒருமையை வைத்து சமஸ்க்ருத்துடன் அதை ஒப்பிடாதீர். மலையாளம் என்பது தமிழின் ஒரு வட்டார மொழியாக இருந்து பின் தனி மொழியாயிற்று.

    சமஸ்க்ருதம் அப்படி இல்லை. யாராவது முதல் த நாவை வழிய நான்காவது தா நாவாக மாற்றுவார்களா.

    உண்மை கசந்தால் நான் என்ன செய்ய. வியாசன் கொடுத்த ஒரு ஆதாரமும் நாடு நிலையுடன் இல்லை. அவர் பூசைக்கும் அகாசத்திர்க்கும் கொடுக்கும் காரணம் பாருங்கள். அவர் சொல்வதை படிக்க நல்லா இருக்கும், நான் சொன்னதையும் சேர்த்து படித்தால் மறு பக்கமும் என்ன என்று புரியும். உண்மைக்கு பல முகங்கள் உண்டு சார்.
    வியாசன் எதோ விவரம் தந்துவிட்டால் அது தான் சாமி சத்தியமா. அவர் வியாசன் தானே வேத வ்யாசரா என்ன.

    நான் சுவனப்ரியனுடன் கூட பேசுவேன், அவராவது அவர் மதம் வளர்க்க பொய் சொல்கிறார். உங்களுடன் பேச மிக கடினமாக இருக்கு. ப்ருஹுதாரன்யாக உபநிஷத்தில் எருதை யாகம் செய்தால் அழகிய பிள்ளை பிறக்கும் என்றுள்ளதை சொல்கிறீர்கள். கொஞ்சமேனும் அதை ஆரயுவோம் அப்புறம் சொல்லுவோம் என்று கூட உங்களுக்கு தோன வில்லையே. சுவனத்துடன் கட்சி சேர்ந்து கொண்டு புழுதி வாருகிறீர்கள். உங்கள் மதத்தில் உள்ள உண்மை சொல்ல கூட உங்களுக்கு தெரியவில்லையே. இந்த உபநிஷத் விஷயம் நெட்டில் தானே படித்தீர்கள். அந்த உபநிஷத்தின் ஆழம் ஹிந்து மதத்திற்கு சைவ மத அடித்தளத்திற்கு அதன் உதவி என்ன என்று நீங்கள் அறிந்திருகிரீர்களா.

    நானும் உங்களை போல தான் சார் தமிழ் பிரபந்தம் போதும் இந்த உபநிஷத் எதுக்கு என்றிருந்தேன். அனால் அந்த அடிப்படை உண்மைகள் தெரியாமல் உங்களால் உங்கள் மதத்தை விளங்கிக் கொள்ளவே முடியாது. உங்களை போன்றோருக்கு பக்தி மட்டுமே முக்கியம், நானும் அப்படி இருந்து அப்புறம் தான் விளங்கிக் கொண்டேன், நாம் இன்று இருக்கும் நிலைமையில் ஞான மார்கம் ஆழமாக தெரிந்திருக்க வேண்டும். முன்னாளில் இரண்டும் கைவர பெற்றிருந்தனர் ஆனால் இன்று ஞானம் இல்லாமலேயே பக்தியில் ஒழுகுகிறேன் என்ற எண்ணம் மிஞ்சுகிறது. இது மிகவும் ஆபத்தானது.

    ஸ்ரீ கண்ட பாஷ்யம் நான் வாசித்ததில்லை. ஆனால் எனக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கை உண்டு, அவர் அத்வைதத்தை போல அல்லாமல் கர்ம செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார் என்று (முதல் அதிகரணம், முதல் சூத்ரமாவது படியுங்கள்). அப்பொழுது தான் வேதத்தில் ஏன் இந்த யாகங்கள் சொல்லபடுகின்றன, பின்பு அவை நிராகரிக்கப்பட்டு ஞானம் பக்தி வலியுறுத்தப் படுகிறது என்று விளங்கும். அந்த கண்ணோட்டத்தில் ப்ருஹுதா உபநிஷத் முழுதும் படித்தால் உங்களுக்கு விஷயம் விளங்கும். இவ்வுபநிஷத் இல்லாமல் உங்களால் சைவ மத்தத்தின் தத்துவங்களை ஸ்திரமாக நிலை நிறுத்த முடியாது.

    ஹிந்து மத கொள்கைகளுக்கு ஆதாரமாக சாந்தோக்யமும் ப்ருஹத் ஆரண்யகமும் இரு தூண்கள். கண்டனுக்கு வள்ளி தெய்வானையை போல.
    நான் சொல்லவருவதை நீங்கள் விளங்கி கொள்வீர்களா என்று எனக்கு தெரியவில்லை.

    ஒன்று மட்டும் சொல்லுவேன், உங்கள் ஆழ்மனதில் சமஸ்க்ருத த்வேஷத்திர்கான காரணம் எனக்கு புரிகிறது. நத்வம் பாததே.

  188. தாயுமானவன்

    நான் சமஸ்க்ருத பதங்கள் இல்லாமல் தமிழ் இருக்காது என்று எங்கே சொன்னேன். அது உங்களது கற்பனை மட்டுமே. தமிழில் செழுமையான தனிச் சொற்கள் நிறய உள்ளன, ஆனால் தமிழில் இன்று நிறைய சமஸ்க்ருத பதங்கள் கலந்துள்ளன என்பதுவும் உண்மையே. நீங்கள் என்னதான் உல்டா செய்ய நினைத்தாலும். நம் சிறுவர்கள் விளையாடும் பம்பரம் (பம்பிரமதி) என்பது கூட சமஸ்க்ருத பதம் தான். அதனால் சமஸ்க்ருதம் தமிழுக்கு எதிரியாகாது என்பது தான் என் வாதம். தமிழ் தாய் வாழ்த்தையே எடுத்துக் கொள்ளுங்கள். வதனம், பரத, கண்ட, திசை போன்று.

    இதற்க்கு அர்த்தம் தமிழுக்கு வக்கில்லை என்பதில்லை. நிச்சயமாக அற்புதமான பதங்கள் கொண்டு செய்யுள் செய்யலாம். ஆனால் தமிழர்கள் பரவலாக சமஸ்க்ருதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் எதிர்த்ததில்லை. திருமறையிலும், பிரபந்தளிலும் எத்தனையோ சமஸ்க்ருத பதங்கள்.

    ஈசன் அடி போற்றி, நிமலனடி போற்றி , மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி, …

    அமலன் ஆதிபிரான் அடியார்கென்னை ஆட்படுத்த, விமலன் விண்ணவர் கோன், நின்மலன் நீதிவாணன் …

    நீங்கள் என்னை புரிந்துகொண்டே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. எதோ என்னால் இயன்றது எழுதிவிட்டேன்.

  189. உயர்திரு தாயுமானவன் அவர்களே,

    // சூர்ய நாராயண சாஸ்த்ரி(பரிதிமாற் கலைஞர்) என்னும் வைணவ பிராமணரின்//

    பரிதிமால் கலைஞர் வைணவர் அல்லர். அவர் சிவனைக் கும்பிடும் ஐயர் ஆவார்.

  190. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,
    //பிராமண ராட்சதன்//
    தாங்கள் குறிப்பிட்டு இருப்பது “பிரம்ம ராட்சதன்” ஆகும். தான் கற்ற கல்வியை, அதாவது “பிரம்ம ஞானத்தை”, மற்றவருக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கும் ஒருவனே, பிரம்ம ராட்சதன் ஆகிறான்.
    தங்களுக்கு ஏற்கனேவே தெரிந்திருந்தால், தெரியாமல் எழுதியிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

  191. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //ஏனென்றால் ஒரு பிராமணன் ஒரு வைணவரை கொன்று தின்ன வருகிறான். ஒரு தலித்தால் அவன் சாபம் நீக்கப்படுகிறது.//

    இதுவும் தவறானதே, ஒரு பிராமணன் ஒரு வைணவரைக் கொன்று தின்ன வருகிறான் என்பது தவறான கருத்து விளக்கமாகும். இங்கு கொல்ல வருபவன் தான் கற்ற அறிவை மற்றவருக்குக் கற்றுத்தராததால், அரக்க வடிவை அடைந்தவன். அவனது பிறப்பு முக்கியமல்ல. அவன் செய்த தீவினை அவனை மனிதரைத் தின்று வாழும் அரக்கனாகியது. அவன் யாரை வேண்டுமானாலும் கொன்று தின்பான். இங்கு அவன் வைணவ ஆச்சாரியார் மாற நேர நம்பியினால் முக்தி அடைந்திருக்கிறான். ஆழ்வார்களும், நாயன்மாரும் இறை அடியார்கள். எனவே, அவர்களின் பிறப்பு மூலத்தை கண்ணுறக்கூடாது. அவர்களின் மேன்மையையே கண்ணுறவேண்டும். இதுவே சரியான கருத்து விளக்கம் ஆகும் என்று என் சிறுமதிக்குப் புலப்படுகிறது.

    நதிமூலம், ரிஷிமூலம் காணக்கூடாது.

    கட்டுரை வடமொழி வாரம் வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றியது. நாம் அதை விட்டு விலகிச் சென்று, நமது மொழி வெறியையும், இனவெறியையும், சமயவெறியையும் இங்கு சலவை செய்து கொள்வது எனக்கு — தமிழனான எனக்குத் தாங்கொணா மனவலியை அளிக்கிறது. வந்தோரை வாழவைப்பவன் தமிழன்.

    இன்னும் ஒன்று. பிராமணர்கள் செய்த தவறுகளை வரலாறாக எழுதவேண்டும் என்றால், தனியாக ஒரு கட்டுரைகள், தகுந்த சான்றுகளுடன், எழுதலாமே. அதைப் படித்து, தீண்டத்தகாமையை மனதிலிருந்து நீக்க அனைவரும் முயல்வார்களே!

    அதே சமயம், தீண்டாமையை ஒழிக்கப் போராடிய பல பிராமணர்களைப் பற்றியும் (இராமானுஜாச்சரியார், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞான சம்பந்தர், இராஜாஜி) கட்டுரைகள், தக்க சான்றுடன் எழுதலாமே!

    இந்த இணையதளத்தின் குறிக்கோள், இந்து ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் வளர்ப்பதாகும். எனவே, வரலா\றுகளிருந்து நமது தவறுகளைக் கண்ணுற்று அது மீண்டும் நிகழாதவாறு நடந்து கொள்வோம். தேவை இல்லாத சச்சரவுகள் மேண்டாமே!

  192. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //தமிழ் ஒரேயடியாக ஒழிக!!//

    இனி கனவிலும் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கூறாதீர்கள், எண்ணாதீர்கள்! என் நெஞ்சு வலிக்கிறது.

    உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வீர்! — மகாகவி பாரதி

  193. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //தமிழ் ஒரேயடியாக ஒழிக!!//

    இனி கனவிலும் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கூறாதீர்கள், எண்ணாதீர்கள்! என் நெஞ்சு வலிக்கிறது.

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இந்தாவதேங்கும் காணோம்
    உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை!
    கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்,
    உன் உதரத்தே உதித்தவை ஆயினும்
    ஆரியம்போல் வழக்கொழிந்து …..
    உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வீர்!” — மகாகவி பாரதி

  194. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //தமிழ் ஒரேயடியாக ஒழிக!!//

    இனி கனவிலும் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கூறாதீர்கள், எண்ணாதீர்கள்! என் நெஞ்சு வலிக்கிறது.

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்
    உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை!
    கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்,
    உன் உதரத்தே உதித்தவை ஆயினும்
    ஆரியம்போல் வழக்கொழிந்து …..
    உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வீர்!” — மகாகவி பாரதி

  195. பாலா தான் வைணவ குல விளக்கு. அவர் வெறுமே படித்தது மட்டும் தான் என்பது விளங்குகிறது. ஆச்சரணம் இருந்தால் அடக்கம் இருக்கும்.

    என்னோவோ உலகுக்கு ராமானுஜரை பற்றி தெரியாதது போலவும், இவர் தான் விளக்கேற்றி வைக்கிறார் போலே பேசுகிறார். சுவிசெர்களின் எத்தனை எத்தனையோ விஷ்மங்களில் இதுவும் ஒன்று. ஒரு பக்கம் சாய்ந்து எத்தி விட்டு அடுத்தவன அடிப்பது. பிரிப்பது ஆள் பிடிப்பது. நோட்டு எண்ணுவது

    ரெண்டு நாளைக்கு முன்னே பிராமன ஆசார்யர்கள் ஆழ்வார்கள் இட்ட தமிழ் பாசுரத்தில் சமஸ்க்ருதம் கலந்து வ்யாகரணம் செய்து தங்கள் புத்தியை காட்டிவிட்டனர் என்று சாடினார். இன்று அப்படியே தட்டை திருப்பியாச்சு. ஆசார்யர்கள் நல்லவர்கள், அப்புறம் வந்தோர் கெட்டவர்கள். சாரங்கன் கெட்டவன்.

    //இப்பள்ளிகளில் இருவகை. ஒன்று நீங்கள் சொல்லும் தனியார்ப்பள்ளிகள். மற்றொன்று, கேந்திரிய வித்யாலாக்கள்.
    சுற்றறிக்கை கே. வி பள்ளிகளைக்கட்டாயப்படுத்தும். மற்ற பள்ளிகளை அப்படிச்செய்யாவிட்டாலும், அரசின் அறிக்கையை உதாசீனப்படுத்த முடியாது.
    கே.வி பள்ளிகளுக்கு தமிழக அரசு ஆணையிட முடியாது.
    //

    அப்படியா எனக்கு இதை சொன்ன உமக்கு தலை அல்லால் கைமாரிளேன். சென்னையில் கேந்த்ரிய பள்ளிகள் மொத்தம் பத்தி நான்கு CBSE தெருவுக்கு தெரு. Kendriya Vidyaas are negligible when compared to private CBSE schools.
    உங்களின் புள்ளி விவரம் வெறுமனே எதோ பதில் தரவேண்டுமே என்பதற்காக தான் இருக்கிறது. இதற்கு மேல் நீங்கள் பொய் புரட்டு பித்தலாட்டம் செய்கிறீர் என்றெல்லாம் நான் சொல்ல போவதில்லை.
    //
    தமிழ் வாரம் தமிழத்தில் கொண்டாடும் நிலைக்கு தமிழ் இன்னும் தள்ளப்படவில்லை. அதனால் அவசியமில்லை. வடமொழிக்குத்தான் ஆளில்லை. அதனால் விளம்பரப்படுத்துகிறார். இரண்டாவது இது இன்றைய அரசின் இந்துத்வா அஜன்டா. ஆர் எஸ் எஸ் யை மகிழ்விக்கும் என்று செய்யப்படுகிறது.
    //
    அப்புறம் எதற்கு இவ்வளவு அலும்பல் செய்தீர்கள். தமிழ் கொண்டாட கட்டுரை ஏன் அனுப்பலை என்று. சமஸ்க்ருத மொழி பயில இன்று அதிக அளவில் ஆள் இல்லை என்பது உண்மை. அதனால் தான் இந்த முயற்சி என்பதும் உண்மையே. சரி தமிழ் நாட்டுல துளு படிங்கன்னு சர்குலர் அனுப்பலாமா.
    ஏற்கனவே சமஸ்க்ருதம் படிப்போரை சமஸ்க்ருதத்தில் ஐந்து நிமிடம் பேச சொன்ன ஹிந்துத்வ அஜெண்டா. இது தான் ஹிந்துத்வா அகண்டா என்றால் இருந்துட்டு தான் போகட்டுமே. பேத்தல்களுக்கு அளவே இல்லை. மோடிக்கு வேற வேலை இல்லை சங்கத்தை சந்தோஷ படுத்துவதை விட. அவர் தினமும் சாப்பிடுவது சங்கத்தை சந்தோஷ படுத்தத்தான்.

    //வடமொழியை தலித்துகளுக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கிறேன் எனறால் ஆசிரியர்தான். //
    நீங்கள் சொன்னது நான் ஆசிரியர் தொழில் பார்கிறேன் என்று. தலித்துக்கு சொல்லி கொடுப்பது தொழிலா. உடனே தமிழில் தொழில் என்றால் கடமையை செய்வது என்று பரிபாடல் சான்று காட்டி கடுபேத்த வேண்டாம்.
    ரொம்ப பரோட்டா பிரட்டாதிங்க சார்
    //
    ஆசிரியருக்கென்று ஒரு கண்ணியமான பேச்சு உண்டு. //உங்களோடு கொஞ்சு தமிழிலா பேச முடியும். யாரோடு எப்படி பேசணுமோ அப்படிதான் பேசணும். // எனபது ரவுடியின் மிரட்டல். எனக்கு மட்டுமன்றி; உங்களுக்கு மாறுகருத்து வைப்போரையெல்லாம் அடாவடித்தமிழில்தான் பதில் எழுதுகிறீர்கள்.
    //
    This is called playing victim. உங்கள் எழுத்தை மீண்டும் படித்து பாருங்கள். கொமட்டிக் கொண்டு வரும். வரிக்கு வரி சாதி, பார்பான் என்று த்வேஷம் கக்கும் வார்த்தைகள்.
    முகம் வைத்து மான் பிடிக்குமா போலே (பெரிவாச்சான் பிள்ளை, திருப்பல்லாண்டு அவதாரிகை) உங்களிடம் இப்படி தான் பேச வேண்டும் என்று முடிவு செய்து தான் பேசுகிறேன்
    //
    உங்கள் வீட்டுப்பெண்ணை ஒரு தலித்துக்கு கெட்டிவைப்பீர்களா என்ற கேள்வி எடுக்கும் விதத்தில்தான் உங்கள் பண்பு வெளிப்படுகிறது. அக்கேள்வி, இன்றைய தலித்தை எல்லா ஜாதிக்காரர்களும் வெறுக்கிறார்கள் இன்றைய தமிழகத்தில். நீங்கள் எப்படி என்று வெளிப்படுத்த. அதை வெளிப்படுத்தி விட்டீர்களலலவா? நான் கேட்காமலிருந்தால்? இதே கேள்வியை என்னிடம் கேட்டால், நான் அதை தனிநபர் தாக்குதலாக எடுக்க மாட்டேன். என் சமூகப்பண்பை அறிய விழையும் முயற்சி என்றுதான் நினைப்பேன். நினைப்பே பொழைப்பை கெடுக்கும். நினைப்பே பொழைப்பை வாழவும் வைக்கும்.
    //
    இதை தனி நபர் விமர்சனம் என்று நான் சொல்லவில்லை வேறு ஒருவர் உங்களிடம் சொல்லி உள்ளார். குழம்பி கிடக்கீங்க. அஸ்ஸோ அஸ்ஸோ. போங்கண்ணே படக்கு படக்குன்னு குப்புற விளுகிறீங்க.
    குப்பையான நினைப்பே ஆப்பை வைக்கும்.
    //
    உங்கள் ஆசை ஒருவேளை உங்கள் வாணாளிலேயே நிறைவேறலாம். தமிழக பட்டி தொட்டிகளிலெல்லாம் சமச்கிருத ஒலி கேட்க தமிழ் ஒலி கேட்காமல் தமிழே அழியும் நான் வரும்
    //
    தமிழ் அழிய வேண்டும் என்று நாங்கள் யாரும் பணி செய்யவில்லை. சமஸ்க்ருதம் வளர வேண்டும் என்பது தான் எங்களது வேலை. எவ்வளவு தான் பாசுரம் படிச்சாலும் மூல புத்தி மறையுமா. செமிடிக் காரண் தான் ஒன்று வளர்ந்தா ஒன்று அழியும் என்று நினைப்பான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சமஸ்க்ருதம் தமிழ் நாட்டில் இருந்துள்ளது ஆனால் தமிழ் நன்றாக தான் வளர்ந்தது. ஆங்கிலம் வந்தது, கழக பொற்காலம் மலர்ந்தது தமிழ் அழிந்தது.

    //
    . ஒரு வேளை நீஙகள் செய்யும் இன்றைய களப்பணி உங்கள் கால்த்திற்கு அப்புறமாவது நிறைவேறலாம். புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ் இருக்கும். இன்று தமிழுக்காக குரல் கொடுப்போர், கொடியவர்கள், மோசடிக்கும்பல், பித்தலாட்டக்காரர்கள் என்ற வசைவுக்கு ஆளாகலாம். ஆனால் அவர்கள் காலம் முடிந்தபின், இப்ப்டிக்குரல் கொடுப்போரே இருக்காது. எங்கும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் என்றான பின்னர், தமிழ் விரைவில் சாகும். ஒரு சிலர், தண்ணீர்விட்டா வளர்த்தோம் சர்வேசா; கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ என்று அரற்றி விரைவில அடங்கிப்போவார்கள்.
    //
    அந்த யோக்கியர் நீங்க தானே பாலா. இப்படி கூட தற்பெருமை தேடிக் கொள்ளலாமோ. தமிழை ஒழித்ததே ஆங்கிலமும் கழகங்களும் தான். பாதிரிகள் ஒப்போது கிறித்தவ பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்கிறார்கள். ரொனால்டு, ஷரோன், டோனி, இதெல்லாம் தான் ஒரிஜினல் கிறித்தவ பெயர்கலாம் நாம எல்லாம் அமெரிக்கர் மாதிரி இருக்கோனுமாம்.
    //
    Perhaps Tamil will go to Xians and Muslims for safety when all Tamil Hindus are sankritised. Already Muslim theologians are adopting chaste Tamil i.e. Tamil w/o mixture of Sanskrit and their importance will increase when the Hindus discard Tamil. The more you drive Tamil and replace it with Sanskrit, the more you strengthen Xians and Muslims.
    //
    அப்பப்பா எப்பேர்பட்ட லாஜிக். தமிழை வைத்துதான் நீங்க ஆள் புடிகிரீன்களா. காசு, சோறு போடறது, பேனா, நோட்டு புக்கு கொடுப்பதை நிறுத்திப்புட்டு இனிமே தமிழ பாதிரி நோட்ஸ் போட்டு ஆள் பிடிகபோரீன்களா. கோனாரே உஷாரு.
    //
    முன்பே சொன்னது போல உங்கள் தெய்வப்பணிக்கு என்னால் வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்ல முடியும்.
    சமஸ்கிருதம் வாழ்க! தமிழ் ஒரேயடியாக ஒழிக!!
    //

    சமஸ்கிருதம் வாழ்க தமிழ் வாழ்க வளர்க. பாலாவின் குதர்க்கம் அடங்குக

    எப்பொழுதும் optimist ஆகா இருங்கள் பாலா. உங்களிடம் தோல்வி குணம் மிகுதியாக இருக்கு.

  196. சாரங்கன்,

    //பக்தியால் இறைவனை கட்டுன்ன செய்யலாம். அதில் சந்தேகமே இல்லை. அதனால் கோவில்களில் சமஸ்க்ருதம் கூடாது என்று சொல்ல நீங்கள் திடீர் என உங்களை ராஜ ராஜ சோழன் என்று நினைத்து கொண்டுவிடீர் போல. ///

    நாயன்மார்கள் செய்த அத்தனை அற்புதங்களும் தெய்வத்தமிழில் பாடித் தான் செய்யப்பட்டவையேயல்லாமல் சமக்கிருதத்தில் அல்ல. அதனால் தமிழ்நாட்டில் இறைவனை வழிபட தமிழர்களுக்கு, தமிழிருக்க சமக்கிருதம் எதற்கு என்பது தான் என்னுடைய கேள்வி. தமிழ்நாட்டுக் கோயில்கள், வரலாற்றுச சின்னங்கள் அனைத்தும் தமிழர்களின் சொத்துக்கள். அவற்றைப் பற்றிக் கருத்துக் கூற, ராஜராஜ சோழனாக இருக்கத் தேவையில்லை, தமிழனாக இருந்தால் மட்டுமே போதுமானது.

    //ஒரு ரூபாய் உண்டியலில் போட்டதால் கேட்கிறீர்களா. தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று எல்லாவிடத்திலும் இருக்கு, யாரவது செய்கிறார்களா. மக்கள் எதை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். அஹங்காரம் எங்கே இருக்கு என்று பார்த்தீர்களா///

    ‘அஹங்காரத்தைப்’ பற்றி நீங்கள் பேசுவது தான் வேடிக்கை. ஏனென்றால் நான் ஒரு ரூபாய் உண்டியலில் போட்டதால் தான் பேசுவதாக நீங்கள் கூறுவதை, நான் அப்படியே திருப்பி, தட்டில் போடுவதைப் பொறுக்கிக் கொள்கிறவர்களை விட தட்டில் காசு போடுகிறவர்களுக்கு எவ்வளவு அகங்காரம் இருக்கும் என்று கேட்பதற்கு எனக்கு எவ்வளவு நேரமெடுக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தீர்களா சாரங்கன். 🙂

    ஒரு தமிழனுக்கு, அவன் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில் தனது முன்னோர்களின் கோயில்களைப் பற்றி பேசுவதற்கும் , அங்கு தமிழில் பூசை நடைபெற வேண்டும் என்று கருத்துக் கூறுவதற்கும் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் சமக்கிருதத்துக்கா அல்லது தமிழுக்கா தமிழ்நாட்டுக் கோயில்களில் முன்னுரிமை கொடுக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தினால், உண்மையான தமிழர்கள் அனைவரும் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதைத் தான் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இப்பொழுதுள்ள “தமிழிலும் பூசை செய்யப்படும் என்பதை நடைமுறைப்படுத்த பார்ப்பன அர்ச்சகர்கள் ஒத்துழைப்பதில்லை, அவர்கள் அதை விரும்புவதில்லை என்பதை பலமுறை நேரில் அனுபவித்தவன் நான், ஆனாலும் அவர்களை வற்புறுத்தி தமிழில் அர்ச்சனை செய்வித்துமிருக்கிறேன். அதனால் ‘சமக்கிருத்திலும் இங்கு பூசை செய்யப்படும்’ என்று தான் தமிழ்நாட்டுக் கோயில்களில் இருக்க வேண்டுமே தவிர, இப்போதுள்ள மாதிரி ‘தமிழிலும் பூசை செய்யப்படும்’ என்றல்ல.

    //இறைவனுக்கு பிரம்படி வாங்கித்தர முடியும் என்பதை நீங்கள் நம்பலாம், மந்தர சக்தி உள்ளதை மற்றவர் நம்பக் கூடாது. நல்லா இருக்கு அய்யா உங்கள் நியாயம்///

    நான் கூறியதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைப் போல் தெரிகிறது. மதுரையில் சிவபெருமான் பிரம்படி பட்டது தமிழ் கேட்கும் ஆவலினால் தான். சிவனுக்கு தமிழில் அவ்வளவு பிரியம் என்கிறது சைவத்தின் வரலாறு. அதனால் சிவனை வழிபடத் தெய்வத்தமிழ் போதும்,வேறெதுவும் தேவையில்லை எனபது தான் எனது கருத்து, அது தான் எனது நம்பிக்கை. . சமக்கிருதத்துக்கு மட்டும் தான் மந்திரசக்தியுண்டேன்று நம்புகிறவர்கள் நம்பி விட்டுப் போகட்டும். ஆனால் அதைத் தமிழர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் சமக்கிருதத்தைத் தமிழை விட உயர்ந்ததாக மதிக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கவோ அல்லது கனவு காணவோ கூடாது என்பது தான் எனது கருத்தாகும்.

    //உங்கள் நிலைப்பாடு சரி. இது தான் எல்லா தமிழனும் நிலைபாடா அது உங்களுக்கு எப்படி தெரியும். ///

    தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பாருங்கள். அப்பொழுது தெரியும்.

    //எது திணிப்பு. கோவில் திறந்த காலம் முதல் வரும் சம்பிரதாயத்தை மாற்றுவேன் என்கிறீர்களே அதில் என்ன சிறப்பை கண்டீர்கள்.///

    தமிழ்நாட்டில் கோயில் திறந்த காலம் முதல் சமக்கிருதம் இருக்கவில்லை, தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழோடிசை பாடித் தான் கடவுளை வழிபட்டனர் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. தமிழர்களின் கோயில்களில் சமக்கிருத ஆதிக்கம் பின்னால் ஏற்பட்டது, பழந்தமிழர்கள் சமக்கிருதத்தில் வழிபாட்டை மேற்கொள்ளவில்லை.

    //சமஸ்க்ருதம் ஒன்றும் வேதாளங்களின் மொழி அல்லவே, அதை ஒழித்துகட்ட.
    ஆயிரம் ஆயிரம் காலமாக ஆலயங்களில் சமஸ்க்ருதம் இருந்துள்ளது அதனால் தமிழுக்கு என்ன பாதிப்பு வந்தது. ///

    சமக்கிருதம் வேதாளங்களின் மொழியோ என்னவோ எனக்குத் தெரியாது ஆனால் நிச்சயமாக அது தமிழர்களின் மொழி அல்ல. சமக்கிருதவாதிகள் சமக்கிருதத்தை உயர்த்தி, தமிழை தாழ்த்துவதால் தமிழுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, அதனால் தான் தமிழ்நாட்டில் இந்த சமக்கிருத வார விழாவுக்கு எதிர்ப்புக் காணபடுகிறது.

    //உங்களின் பேச்சுக்கும் பிராமன த்வேஷம் ஒன்றே மூலம் போல் தெரிகிறது.///

    எனக்குப் பிராமணர்களிடம் எந்த துவேசமும் கிடையாது. நான் பல இடங்களில் பிராமணர்களுக்காக வாதடியிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் தன்னைத் தமிழனாக அடையாளப்படுத்தும் பிராமணர்கள் அனைவரும் தமிழர்களே. இங்கு தமிழைத் தாழ்த்தி சமக்கிருதத்தை உயர்த்தும் சமக்கிருதவாதிகளை மட்டும் தான் நான் எதிர்க்கிறேன்.

    //உங்களுக்கு சமஸ்க்ருதம், மந்த்ரம் பற்றி கிஞ்சித்தும் தெரியாதிருக்க hear say என்ற ரீதியில் பேசுகிறீர்கள். மற்ற பக்ஷம் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாமே..///

    உண்மையில் சமக்கிருதத்தை மட்டுமல்ல எந்த மொழியையும் அறிய எனக்கு விருப்பம் தான். சமக்கிருதத்தை நான் வெறுக்கவில்லை, ஆனால் என்னுடைய தாய்மொழியாகிய தெய்வத் தமிழ் இருக்க தமிழர்கள் தமிழ்நாட்டில் எதற்காக வழிபாட்டு மொழியாக புரியாத வேற்று மொழியாகிய வடமொழியைப் பாவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி.

    //முயற்சி செய்ய மாட்டேன் என்றால் உங்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று தமிழனுக்கு சொல்லவும் உரிமை உண்டு.//

    இப்பொழுது நீங்கள் தமிழர்கள் அனைவரையும் குத்தகை எடுத்திருப்பது போல் எல்லாத் தமிழர்களின் சார்பிலும் கருத்துத் தெரிவிக்கிறீர்கள்.

    //நீங்கள் வைப்பது அனைத்தும் நம்பிக்கை சார்ந்த வாதம்.///

    மதமென்பதே நம்பிக்கை தான்.

  197. பெருமதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    //பார்ப்பன த்வேஷம்,//
    உங்களுக்கும் தனியாகச் சொல்லவேண்டுமா? “பார்ப்பன” என்ற சொல்லை பாலா சுந்தரம் கிருஷ்ணா கூட விட்டுவிட்டார்.

    ஈஸ்வரோ ரக்ஷது!

  198. திரு.அரிசோனன்,

    //இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்///

    தமிழை வேண்டுமானால் இந்துசமயம் தோன்றிய காலத்திலிருந்து வரும் மொழி என்று கூறினால் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கி.மு 350 க்குப் பின்பு தான் வேதங்கள் சமக்கிருத்ததுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. மாகாவீரரும், கெளதம புத்தரும் சமக்கிருதம் பேசவில்லை ஏனென்றால் அவர்கள் காலத்தில் சமக்கிருதம் கிடையாது ஆனால் தமிழ்மொழி வழக்கில் இருந்தது.

    //மந்திரம் என்பது ஒரு கருவியாகும். அவருக்கு அக்கருவி தேவையோ, அவர்கள் அதை உபயோகிக்கலாம். மந்திரம் மனதை ஒருநிலைப்படுத்தும்.///

    அந்த மந்திரம் சமக்கிருதத்தில் தான் இருக்க வேண்டுமென்றில்லை, உதாரணமாக பெளத்தர்கள் பாலியில் ஓதுகிறார்கள்,. முஸ்லீம்கள் அரபு மொழியில் ஓதுகிறார்கள். தமிழர்கள் மந்திரங்களை தமிழிலும் ஓதலாம் அல்லவா? நமச்சிவாயம், நாராயணம் சரவணம் எல்லாமே தமிழ் வேர்ச்சொற்கள் என்றுபல தமிழ் மொழியிலக்கண ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். ஆனால் சமக்கிருதவாதிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் அவை எல்லாம் தமிழ் அல்ல என்றாகி விடாது, இஸ்லாமியர்கள் அல்லாஹு அக்பர்” என்றும், “இன்ஷா அல்லா” என்பதற்குக் காரணம் கடவுளிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்டதாக அவர்கள் நம்பும் குரான் அரபு மொழியில் உள்ளது. அவர்களின் மதத்தின் அடிப்படையே அந்தக் குரான் தான். தமிழர்களுக்கு அப்படி எந்த மதப்புத்தகமும் கிடையாது. இந்துமதத்தின் சிறப்பே அந்த சுதந்திரம் தான். முஸ்லீம்கள், குரானுக்கும், கிறித்தவரகள் பைபிளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழர்கள் சமக்கிருத பகவத்கீதைக்கோ அல்லது சமக்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேதங்களுக்கோ கொடுப்பதில்லை. தமிழர்கள் போற்றப்பட வேண்டியவை தேவார திருமுறைகளும், ஆழ்வார்களின் திருவாய்மொழியும் அதன் பாசுரங்களும் தான். அவை தமிழில் தான் உள்ளன. ஆகவே முஸ்லீம்கள் அரபு மொழிக்கு முன்னுரிமை கொடுப்பது போல் சிவனிய, விண்ணவ நெறிகளைக் கடைப்பிடிக்கும் தமிழர்கள் தமிழுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர வடமொழிக்கல்ல.

    //மனதுள் ஓதுவதே மந்திரம். வடமொழித் தோத்திரங்களை மட்டுமே மந்திரம் என்று என்னும் தவறான கருத்தும் பலரிடம் பரவி நிற்கிறது. திருமூலர் எழுதிய பத்தாம் திருமுறை “திருமந்திரம்” என்றே சுட்டப்படுகிறது.///

    தமிழில் உள்ள பாடல்களையும் மந்திரங்கள் என்று சைவர்கள் அழைக்கின்றனர். அதனால் சமக்கிருத மந்திரங்களுக்கு மட்டும் சக்தியுண்டு தமிழ் மந்திரங்களுக்கு சக்தியில்லை என்று வாதாடுவது முட்டாள் தனம் என்பதை நீங்களே எடுத்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி.

    //பலரிடம் விடுத்த வேண்டுகோளை உங்களிடமும் விடுக்கிறேன். “பார்ப்பனர்” என்ற இழித்துரைக்கக் கையாளும் சொல்லை, அருள்கூர்ந்து, ஒரு குறிப்பிட்ட இந்து சமூகத்தவரைச் சுட்டக் கையாலாதீர்கள். ///

    உண்மையில் பார்ப்பனர் என்பது தான் முறையான பழந்தமிழ்ச் சொல், அது இழிவான சொல் அல்ல. அதை இழிவான சொல்லாக்கிய்வர்கள் திராவிட வீரர்களும் பெரியாரிஸ்டுக்களும் தான். பிராமணர் என்பது தமிழ்ச் சொல்லேயல்ல. பிராமணர்கள் என்பது ‘பிறமண்ணர்கள்’, அதாவது கங்கைக் கரையிலிருந்தும், துங்கபத்ரா நதிக்கரை ஊர்களிலிருந்தும் தமிழ்மண்ணுக்கு பிழைப்புத் தேடி வந்தவர்களைப் பிறமண்ணர்கள் எனப் பழந்தமிழர்கள் அழைத்தனர். அது தான் திரிபடைந்து பிராமணர்கள் ஆகியது எனக் கூறுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களை பிராமணர்கள் அதாவது பிறமண்ணர்கள் என அழைப்பது சரியானதாக எனக்குப் படவில்லை.

    //நான் கூறி இருப்பதை நல்லமுறையில் எடுத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.///

    எதையும் நல்ல முறையில் எடுத்துக் கொள்வது தான் என்னுடைய வழக்கம். நன்றி.

  199. திரு. க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    இம்முறை நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நல்லூர் முருகன் கோயில் வருடாந்த திருவிழாவின் காணொளிகளை இணைக்க முடியவில்லை, கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு உடனடியாக நல்லூர் இணையத் தளத்தில் காணொளிகள் இல்லை. வெறும் படங்கள் மட்டும் தான் உள்ளன.

    நான் ‘தமிழெதிரி’ப் பார்ப்பனர்களின் கடந்த கால/இக்கால நடவடிக்கைகளை எனது எழுத்துக்களில் சுட்டிக் காட்டுவதால், நான் பார்ப்பனர்கள் அனைவரிடமும் வெறுப்புக் கொண்டிருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் எனது கருத்தைக் கூறுகிறேன் அவ்வளவு தான். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் எந்தவொரு இன, மதக்குழுவினரையும் வெறுக்கவில்லை.

    இலங்கையில் முஸ்லீம்கள் தமிழர்களின் முதுகில் குத்தியதை கிழக்கு மாகாணத்தில் கோயில்களை அழித்ததை அடிக்கடி சுட்டிக் காட்ட நான் தயங்கியதில்லை. அதே வேளையில் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்களாக, தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்தால் அதை மனப்பூர்வமாக வரவேற்கவும் நான் தயங்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு என்னுடைய மத அடையாளத்தை விட மொழி, இன அடையாளம் முக்கியமானது, முதன்மையானது, அதனால் தான் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தும், தமிழ்ப் பேசும் பார்ப்பனர்கள் அனைவரும் தமிழர்களே தவிர ஆரியர்கள் அல்ல என, ‘யார் தமிழர்கள்’ என்ற விவாதம் வரும் போது நான் திராவிட மாயையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குச் சுட்டிக் காட்டத் தயங்கியதில்லை. ஏனைய கருத்துக்களில் என்ன தான் மதவேறுபாடிருந்தாலும் தமிழர்களின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமெனும் உங்களது கருத்து தான் என்னுடைய கருத்தும், நன்றி.

  200. வியாசன்

    கடைசியில் நீங்கள் சொன்ன வரி ஒன்றே போதும். எல்லாம் நம்பிக்கை தான் என்றால். மந்திரமும் நம்பிக்கை சார்ந்தது என்று விட்டு விடலாமே.

    மலை மகளை பதம் வந்த திருமுறை சொன்னீர்கள். இந்த விசயங்களை எல்லாம் நாயன்மார்கள் புராணங்களில் இருந்து தெரிந்து கொண்டனரா இல்லை புராணங்களுக்கு முன்னாள் எல்லாம் தமிழில் இருந்ததா.

    மலைக்கு மகள் இருக்கலாம், கடலுக்கு மகள் இருக்கலாம். ஆனால் மந்திரத்துக்கு மட்டும் சக்தி கிடையாது. கலி காலம் இதுதான். ப்ரத்யக்ஷமான ஒன்றை விடுத்து அறிய முடியாத ஒன்றின் பின் செல்வது.

    உங்களுக்கி பக்தி கை கூடாலாம், அதனால் திருமறைகள் போதும். ஆனால் ஒட்டு மொத்த ஹிந்துவும் பக்தி யோகத்திலே நிக்க வேணும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்கிறீர்கள். நீங்கள் திருமறைகளில் படிப்பது பக்தி யோகமே.

    எனக்கு பக்தி யோகம் கை கூடாது நான் என்ன செய்ய. என்னால் ஆழ்வார்கள் பக்தியில் புரண்டழுததை போல அழ முடியவில்லை, கண்ணன் கட்டுண்டதை நினைத்து நினைத்து மூர்சித்தனர், அது எனக்கு வரவில்லை. நான் ஒரு கடை நிலை ஆத்திகன். நான் எல்லாம் மந்திரம் கற்று, கர்மம் கற்று மனதை கட்டுபடுத்தி பின்னர் ஏதாவது ஒரு சென்மத்தில் பக்தி மார்கத்தில் நிலை பெறலாம். இப்போ என்ன செய்ய.

    //
    இப்பொழுது நீங்கள் தமிழர்கள் அனைவரையும் குத்தகை எடுத்திருப்பது போல் எல்லாத் தமிழர்களின் சார்பிலும் கருத்துத் தெரிவிக்கிறீர்கள்.
    //
    நான் பேசுவதில்லை, உங்களை போல பேச விழைகிறேன். உங்களுக்கு பாராத்தில் உள்ள தமிழ் நாட்டு தமிழனை தெரியுமோ இல்லையோ. எனக்கு கொஞ்சம் தெரியும் நான் தெரு தெருவாக அலைந்து வேலை செய்வதால்.என் சொந்த ஊரு மட்டும் அல்லாது பல ஊர்களில் திரிந்துள்ளேன் (உங்கள் பாஷையில் வேண்டுமானால் என்னை திருவோட்டுப்பண்டாரம் என்று வைத்துக் கொள்ளுங்கள்)

    உங்களின் எழுத்துகளில் இருந்து நீங்கள் ஆரிய திராவிட வாதி என்பது தெளிவாக தெரிகிறது. இன்னமும் ஆரிய படையெடுப்பு நடந்தது முன்பு தமிழ் தான் இருந்தது, பிராமணர்கள் ஜெர்மனியில் இருந்து வந்தார்கள் இங்கு கோவிலில் இருந்து வந்த தமிழை விரட்டி விட்டு சமஸ்க்ருதத்தை புகுத்தினார்கள் தானே.

    பிராமன த்வேஷம் இல்லை ஆனால் பிராமன த்வேஷம். மொழி த்வேஷம் இல்லை ஆனால் மொழி த்வேஷம். இல்லை இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் டன் கணக்கில் வைத்துள்ளீர்கள்.

    கோவில் என்ற கான்செப்ட்டே வேதத்தின் யாக சாலையிலிருந்து வருகிறது. வேத, ஆகமங்கள் இல்லாமல் கோவில்களின் மூலமே இல்லை. நீங்கள் புரட்சியாளர்களாக இருக்கலாம், ஆனால் இதெல்லாம் பொய் என்று புது ரூட்டு போடுவது நீங்கள் எப்போதும் வித்யாசமானவராக இருக்க ஆசைபடுவதை மட்டுமே காட்டுகிறது.
    நானும் நீங்கள் சொல்கின்ற ஆராய்சிகளை படித்துள்ளேன், எங்களது இல்லம் வந்தால் கட்டு கட்டாக இதை போல இன்னும் புத்தகப்கள் தருகிறேன், அனால் இதில் எல்லாம் பல குலரபடிகள். அவர்களும் ஆசை மிகுதியால் எழுதியது தானே தவிர முற்றிலும் ஆதார பூர்வம் என்பதில்லை. தமிழன் தான் கோவில் கட்டினான் என்றால் வடக்கில் பாதாரிகா ஆஸ்ரமம் கோவிலும் அவன் தான் கட்டி இருப்பான். அப்படி என்றால் பாரதம் பூர தமிழ் தான் இருந்தது. ஆரியன் வந்தான் திராவிடனை கொன்றான் சரி தானே.

    //
    என்னுடைய தாய்மொழியாகிய தெய்வத் தமிழ் இருக்க தமிழர்கள் தமிழ்நாட்டில் எதற்காக வழிபாட்டு மொழியாக புரியாத வேற்று மொழியாகிய வடமொழியைப் பாவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி
    //
    கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. அதற்காக சமஸ்க்ருதத்தை தமிழன் தூக்கி எரிய வேண்டும் என்ற உங்கள் பேச்சு தான் சரி எல்லை என்பது என் வாதம். உங்களுக்கு கேள்வி இருந்தால் பதில்களும் இருக்கும், அதையும் தமிழனும் சொல்வான். என்னை தமிழன் இல்லை தட்டில் பணம் பொறுக்கும் பிராமன பண்டாரம் என்றால் நான் என்ன செய்ய முடியும். நீங்கள் நினைப்பவர்களை மட்டுமே தமிழர்களாக வைத்து கொள்ள நினைப்பது சூரியனை கையால் மறைப்பது போல.

    //
    தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பாருங்கள். அப்பொழுது தெரியும்.
    //
    இன்னும் தமிழன் ஆரியர்கள் பிடியில் சிக்கி தவிக்கிரானா ஆச்சர்யமாக இருக்கு. பிராமணனை கண்டால் அடி என்று பெரியவர் வந்து ஆட்டம் போட்டு முடிந்து அவரது அடுவருடி கழகங்கள் விஷக்கொடி வளர்த்த தமிழ் நாடு இப்படியா ஆகி விட்டது. நான் மங்கோலியாவில் இருப்பதால் தமிழ் நாட்டில் என்ன நடக்குதேன்றே எனக்கு தெரிவதில்லை.

    வியாசன் வில்யாடாதீர்கள் பிராமணர்கள் தமிழா அழித்தனர் என்று ஆரம்பித்து, கோவில் தமிழ் இல்லை என்று சாதித்து சமஸ்க்ருதம் தமிழ் தான் என்று நிரூபித்து காட்ட நீங்கள் செய்த அத்தனை முயற்சிகளுக்கும் மாற்று வாதம் தரப் பட்டுள்ளது. நான் சும்மாவேனும் தமிழனுக்கு ஒரு வாய்ப்பு (நீங்கள் எடுத்தது சந்தர்பம் என்ற பதம்) தாருங்கள் என்பது போல் சொல்லாமல். நிறைய நிகழ்வாதாரங்கள் தந்துள்ளேன்,

    நீங்கள் சமஸ்க்ருதத்தை வெறுப்பதில்லை இல்லையா. நானும் வெறுப்பதில்லை. நீங்கள் தமிழை விரும்புகிறீர்கள், நானும் தான். அதே போல தான் தமிழனும் சமஸ்க்ருத்தையும் வெறுக்க மாட்டான், தமிழையும் விரும்புவான்.

    சமஸ்க்ருததால் தமிழுக்கு குறை வந்தது என்று நீங்கள் ஒரு நாலாம் சொல்லிவிட முடியாது. தமிழை நிலை நிறுத்த வேண்டுமானால், ஆங்கில மோகத்தை விரட்டுங்கள். நான் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்கிறேன், எனது அலுவலக மேலனங்களில் எல்லாம் தமிழையே பயன் படுத்துகிறேன். மாற்று மாநிலத்தவர் இருந்தால் மட்டுமே ஆங்கிலம். என்னை பொருத்தவரை எனது அலுவலக மொழி தமிழ் தான்.

    உங்களுக்கு தமிழ் ஆர்வம் இருக்கிறது. களப்பணி செய்யலாமே. உங்களுக்கு உண்மையிலேயே சமஸ்க்ருத்தால் தமிழுக்கு பாதகம் வரும் என்ற எண்ணம் இல்லை. உங்கள் பேச்சுக்கு மூல காரணம் நிச்சயமாக பிராமன த்வேஷம், ஆரிய திராவிட நம்பிக்கை. இதனாலேயே நீங்கள் அது சார்ந்த புத்தகங்களை, அது சார்ந்த ஆராச்சிகளை விரும்பி படிகிறீர்கள். இன்னொரு பக்கமும் இருக்கிறது நண்பரே.
    நான் இருபக்கமும் வாசிப்பேன். God Delusion ஒரு முறை படியுங்கள். Breaking India ஒரு முறை வாசியுங்கள். Being Different ஒருமுறை படியுங்கள்.

  201. வியாசன்

    //
    அதே வேளையில் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்களாக, தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்தால் அதை மனப்பூர்வமாக வரவேற்கவும் நான் தயங்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு என்னுடைய மத அடையாளத்தை விட மொழி, இன அடையாளம் முக்கியமானது
    //

    இப்பொழுது புரிகிறது பாரத்தின் ஒருங்கிணைப்பில் உங்களுக்கு கிஞ்சித்தும் ஆசை இராதது ஏன் என்பது. உங்களது பின் புலம் உங்களை மொழி இன அடிப்படையில் ஒன்றுபட வைக்கிறது. பாரத்தை மையப் படுத்து பார்க்கும் பொழுது அந்த இனம் வெறும் தமிழினாமாக மட்டும் இராது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
    பாரதீயனுக்கு பாராதே நாடே பிரதானமாக இருக்க வேண்டும். இது தான் யதார்த்தம்.

  202. வியாசன்

    //
    ஆனால் கி.மு 350 க்குப் பின்பு தான் வேதங்கள் சமக்கிருத்ததுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. மாகாவீரரும், கெளதம புத்தரும் சமக்கிருதம் பேசவில்லை ஏனென்றால் அவர்கள் காலத்தில் சமக்கிருதம் கிடையாது ஆனால் தமிழ்மொழி வழக்கில் இருந்தது
    //

    சரி புரிஞ்சு போச்சு.

    //360 க்கு பின் மொழி பெயர்க்கப்பட்டது. // அருமை அருமை. இதை சுவனப்ரியன் கூட தனது மத பிரசாரம் செய்ய எடுத்தக்க மாட்டார்.

    புத்தம் சரணம் கச்சாமி , தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்பது மலையாளமா.

    புத்தர் பேசியது பாலி, பாலி ப்ராக்ருதத்தின் மருவல், ப்ராகருதம் சமஸ்க்ருத்தின் மருவல். புத்த மதத்தின் ஆதி நூல்கள் அனைத்து பாலி அல்லது சமஸ்க்ருதத்தில் தான் உள்ளன. புத்தர் தமிழ் பேசினார் என்பது கிறிஸ்தவர்கள் சொல்லும், ஏசுவும் புத்தரும் சேர்ந்து மத பிரசாரம் செய்தார்கள் என்பது போல இருக்கு. சொல்ல முடியாது ஏசுவும் தமிழ் பேசி இருப்பார்.

    நீங்கள் வியாசன் இல்லை வித்யாசன்

    ஜைனமும் இதே கதி தான். ஜைன சன்யாசிகளுள் ஒரு இளைய சந்நியாசிநி தனது கிரந்தங்களை படிக்க வேண்டும் என்பதனால் சமஸ்க்ருதம் கற்க வேண்டும் என்றார்கள். அவர்களுக்காக படாத பாட்டு சொல்லிக் கொடுத்தேன். படாத பாடு ஜைன ஆஷ்ரம கட்டுப்பாடுகளினால். கூட்டிக்கொண்டு இருக்க வேண்டும், முகத்தில் பட்டி போட்டு பேச வேண்டும் என்பது போல.

  203. பாலா

    //
    //கர்ம என்ன வேண்டிகிடக்கு ஜாதி என்ன வேண்டிகிடக்கு. இதையும் தான் சொல்லி இருந்தேன். அதை படிக்காதே உம்ம கண்.//

    ஆபத்தான கருத்து. இந்து என்று சொல்லிக்கொள்கிறீர்கள். ஜாதிகள் வேண்டுமென்கிறீர்கள். ஜாதிகள் இருந்தால் தலித்து இருப்பான். தலித்து இருந்தால் அவர்களை உயர்ஜாதிக்காரகள் தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்ப்பார்கள்.
    //

    செமேடிக் சிந்தனை. நான் ஒன்னும் ஜாதிஜனித பேதங்கள் வேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது ஜாதியால் விழையும் ஏற்றதாழ்வுகள் வேண்டுமென்று சொல்லவில்லை.

    ஒரு செருப்பு கடித்தால், செருப்பு கடையே கொளுத்தும் கோஷ்டி நீங்கள் போல. வேற்றுமையில் நிறைய நிறைவு இருக்கிறது ஜோ. இதை செமேடிக் சிந்தனையாளன் அறிய மாட்டான். அவனுக்கு ஒன்று ஒரே உம்மா வேண்டும் அல்லது அனைத்தும் அழிய வேண்டும்.

    ஜாதியை ஒழிகாமலேயே ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கலாம். அது நடந்து கொண்டுதான் இருக்கிறது நிறைய முன்னேற்றம். தர்கூரிகள் கொஞ்சம் கழகம் மூட்டாமல் இருந்தால் சீக்கிரம் சாதிக்கலாம்.

    //
    சாரங்கந்தான் சொல்லிவிட்டாரே, தலித்துகளோடு நெருங்க மாட்டோம் என்று
    //
    இதை எப்போ சொன்னேன். உங்களின் ஊகம், ஊகத்தின் மேல் ஒரு கோட்டை, கோட்டை மேல் கொடி, கொடி மேல் காக்காய். கடைசியில் அந்த கற்பனை காக்கை உங்கள் மேல் தான் உச்சா போகிறது என்பது மட்டும் நிதர்சனமாக தெரிகிறது

  204. பாலா

    //
    Correctly said. எனவே தமிழைத்தான் தமிழர்களிடையே பரப்ப வேண்டும். பின் என்ன சமஸ்கிருதத்தைப் பரப்பவேண்டுமென்கிறார் சாரங்கன். ஏற்கனவே நான் சொன்ன கருத்துதான். தமிழர்கள் தமிழை விட்டு ஆங்கிலமோகத்தில் அலைய, அவர்களிடயே தமிழ் படித்தலைத்தான் எடுத்துச்சொல்லவேண்டும். சமஸ்கிருதம் பின்ன்ர் பார்த்துக்கொள்ளலாம் சாரங்கன்.
    //

    இருக்கட்டும், தமிழ் வளர்ச்சி ப்பணியை சிரமேற்கொண்டு தமிழக அரசு செய்யட்டும். பாரத ஐக்கியம் என்ற கண்ணோட்டத்தில் சமஸ்க்ருத பணியை மத்திய அரசு செய்யட்டும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

  205. வியாசன்

    //
    சமக்கிருதத்துக்கு மட்டும் தான் மந்திரசக்தியுண்டேன்று நம்புகிறவர்கள் நம்பி விட்டுப் போகட்டும். ஆனால் அதைத் தமிழர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் சமக்கிருதத்தைத் தமிழை விட உயர்ந்ததாக மதிக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கவோ அல்லது கனவு காணவோ கூடாது என்பது தான் எனது கருத்தாகும்.
    //

    இது தவறான வாதம். சமஸ்க்ருத்ததை தமிழை விட உயர்ந்த மொழி என்று எண்ணியே ஆக வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமஸ்க்ருத அபிமானிகள் எல்லோருக்கும் இந்த எண்ணம் கிடையாது, எனக்கு நிச்சயமாக கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால் தமிழ் சமஸ்க்ருதத்தை விட சிறந்த மொழி என்று மற்றவர் என்ன வேண்டுமென்ற எண்ணம் இருக்கலாம். எனக்கு சமஸ்க்ருத மொழியின் கட்டமைப்பு, அலங்கார சாஸ்திரங்கள், அதன் உச்சரிப்பு, இலக்கண ஒழிங்கின் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. கொஞ்சம் வரலாற்றிலும் ஆர்வம் உண்டு.

    நீங்கள் சமஸ்க்ருத அபிமானி என்றால் உடனே கட்டம் கட்டி விடுகிறீர்கள் “தமிழ் எதிரியானா ஆரிய பார்பன அடிவருடி” என்று.

    மந்திரம் என்பது ஐந்து எழுத்து மந்திரம், எட்டெழுத்து மந்திரம் என்பவை தான் என்று தப்பாக விளங்கிக்கொண்டு விட்டீர்கள். அந்த மந்திரம் தினத்திற்கு உதவுவது. தினத்திற்கு மொழி தடை இல்லை.
    நான் சொல்ல வருவதெல்லாம், யாக வழிகள், அதில் பயன்படும் பிரயோகங்கள். இதற்காக தான் அதிருத்ர யாக விளக்கத்தை தந்தேன். இதையும் தமிழ் சாதிக்கும் என்றால் நீங்கள் ஒரு சின்ன யாகம் செய்து நிரூபணம் பண்ணலாம் (விளையாட்டுக்கு நான் சொல்லவில்லை, ஆர்வத்தினால் தான் கேட்கிறேன்). வேத உச்சாரணம் செய்து அதன் மந்திர சக்தியை இந்த கால சோதனை முறைகளை கொண்டு நிரூபணம் செய்துள்ளார்கள்.

  206. வியசான்

    //
    பிறமண்ணர்கள்’, அதாவது கங்கைக் கரையிலிருந்தும், துங்கபத்ரா நதிக்கரை ஊர்களிலிருந்தும் தமிழ்மண்ணுக்கு பிழைப்புத் தேடி வந்தவர்களைப் பிறமண்ணர்கள் எனப் பழந்தமிழர்கள் அழைத்தனர். அது தான் திரிபடைந்து பிராமணர்கள் ஆகியது எனக் கூறுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களை பிராமணர்கள் அதாவது பிறமண்ணர்கள் என அழைப்பது சரியானதாக எனக்குப் படவில்லை.
    //

    பிறமண்ணர்கள் 🙂 🙂 🙂

    அப்போ உபநிஷத் கூறும் பிரம்மம் என்பது தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஒரு மமதையுடன் இருந்த சாமி. பிற மமத என்பது மருவி பிரம என்றானது. பிரமனுக்கு மமதை இருந்தது என்று திருமுறைகளில் அடிக்கடி காணலாம். இதை நீங்கள் உங்கள் அடுத்த ஆராய்ச்சி கட்டுராயக்கிக் கொள்ளலாம்.

    பிரம்ம என்பது சமஸ்க்ருத பதம், ப்ருஹதி (எப்பொழுதும் வளர்வது அல்லது அனைத்தையும் கடந்த பெரியது ) பிரம்மம் என்று எதோ சில சில்வண்டுகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன பாவம்.

  207. /////பெளத்தர்கள் பாலியில் ஓதுகிறார்கள்,. முஸ்லீம்கள் அரபு மொழியில் ஓதுகிறார்கள். தமிழர்கள் மந்திரங்களை தமிழிலும் ஓதலாம் அல்லவா? /////

    என்ன ஒரு அர்த்தமற்ற வாதம் இது? பௌத்தர்கள் என்பவர்கள் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். தமிழர்கள் என்பவர்கள் ஒரு மதத்தை சேர்ந்தவர்களா? இல்லையே!. அவர்கள் ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழை தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்கள் நாட்டில் இல்லையா? அவர்கள் மட்டும் அரபு மொழியில் ஓதலாம். ஆனால் தமிழ் தெரிந்த இந்துக்கள் மட்டும் மந்திரங்களை சமஸ்கிரதத்தில் ஓதக்கூடாது. அப்படிதானே? ஆந்திராவில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அரபு மொழியில் மசூதியில் ஒதுவான். ஒரியாவில் இருக்கும் முஸ்லிம் அரபு மொழியில் ஒதுவான். காஷ்மீரில் இருக்கும் முஸ்லிம் அரபு மொழியில் ஓதலாம். கேரளத்தில் வசிக்கும் முஸ்லிம் அரபு மொழியில் ஓதலாம். ஆனால் ஒரு இந்து மட்டும் தமிழ் நாட்டில் தமிழிலும் கேரளாவில் மலையாளத்திலும் கர்நாடாகாவில் கன்னடத்தில் ஓதவேண்டுமா? “கடவுள் இல்லை இல்லவே இல்லை” என்று மேடை தோறும் முழங்கும் கருணாநிதி போன்ற (ஒருதலைபட்சமான) நாத்திகவாதிகள் தங்கள் அரசியல் பிழைபிற்காக தமிழை கையில் எடுத்துகொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தனது initial ஆக C N என்று போட்டுகொண்டாரே! அதுதான் அவரது தமிழ் பற்றா? கா. ந. அண்ணாதுரை என்று எப்போதாவது யாராவது பேசியிருக்கிறார்களா? கருணாநிதியும் அதே பாணியில் தனது மகனுக்கு அழகிரி என்று””பாதி தமிழ் பாதி வடமொழி”” என்று பெயர் வைத்துள்ளார். சம்ஸ்கிருத வார்த்தையான “தலித்” ஐ பயன்படுத்தலாமா?அந்த ஏமாற்று ஆளை பின்பற்றி இங்கே சிலர் வீண் வீம்பிற்காக வாதாடி கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த தளத்தை ஒரு time pass க்காக பயன்படுத்தி வாதாடி கொண்டிருக்கின்றனர்.

    இங்கே மல்லு கட்டி வாதாடுபவர்கள் ” அடுத்த மாதம் ஜாவா போகிறாயா?” என்பதை சுத்த தமிழ் மொழியில் (Chaste Tamil ) எப்படி சொல்வார்கள்.? (குறிப்பு:— ஜா என்பது வடமொழி)

  208. அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன்,

    வாரணமாயிரம் பல நுறு முறையாவது கேட்டிருப்பீர்களே

    நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி

    பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி

    பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை

    காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

    சம்ப்ரதாய க்ரந்தங்களில், இன்னமும் “பார்ப்பன” என்ற பதம் வெகுவாகக் காணக்கிட்டும். இது ஒரு உதாஹரணம் மட்டிலுமே.

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளே “பார்ப்பன” என்ற பத ப்ரயோகம் செய்திருக்கிறாள்.

    சொல்லில் இழிவு ஏதும் இல்லை.

    த்ராவிடக் குப்பைகளின் ரேஸிஸம் சார்ந்த ஜாதி த்வேஷத்திலே தான் இழிவு.

  209. //தான் கற்ற கல்வியை, அதாவது “பிரம்ம ஞானத்தை”, மற்றவருக்குக் கற்றுக்கொடுக்காமல் இருக்கும் ஒருவனே, பிரம்ம ராட்சதன் ஆகிறான்.//

    அரிசோனன்!

    அக்கதையின்படி, ஒரு பிராமணன் தன் ஒழுக்கத்திலிருந்து தவறுகிறான். இன்னொரு வெர்சனில் தான் செய்த யாகமொன்றில் செய்யக்கூடாத தவறொன்றைச் செய்தான் என்று போடப்பட்டிருக்கிறது. எனவே சபிக்கப்பட்டான் ஒரு முனிவரால். அச்சாபத்தின்படி அடங்காப்பசிகொண்டலைவான்; தன் கண்ணின் எஃது எதிர்ப்பட்டதோ, மனிதனோ, விலங்கோ, அதையடித்துப் புசித்துவுடனே மீண்டும் பசிகொண்டலைவான். எப்படியிருந்தாலும், தன் பிரம்ம ஞானத்தை மற்றவருக்குக் கற்றுக்கொடுக்க மறுத்தான் அல்லது இல்லை என்று போடப்படவில்லை. இருப்பினும், பிராமணன்+ராட்சதன் = பிரம்ம ராக்ஷதன் என்றாகும். பிராமண ராட்சதன் என்பதை விட பிரம்ம ராக்ஷ்தன் என்பதே சரியான கூட்டு.

    இக்கதை வராஹ புராணத்தில் வருகிறது. எழுதியவர் பராசரபட்டர். (சாரங்கன் அவர் ஒரு பிராமணர் எனபதைக்குறித்துவைத்துக்கொள்ளலாம். வாதப்போர் புரிந்து பிராமணத்துவேஷிகளை எதிர்க்க உதவும். ஜாதிதானே மூச்சைத்தருகிறது !. பராசரபட்டர், ஆளவந்தாரின் திருக்குமாரர் எனப்தையும் குறிச்சுவைச்சுக்கோங்க. அவாளும் நம்ம் ஜாதிதான். எண்ணிக்கை கூடுகிறது பார்த்தேளா?) வைகுண்டத்தில் பிராட்டிக்கு நம்பாடுவான் புராணத்தைச்சொல்வதாக அமைகிறது. பிராட்டி அப்பிராமணன் என்ன் ஆவான்? இப்படி அலைகிறானே? என்று கேட்டதற்கு அவனின் சாபம் நம்பாடுவன் என்னும் என் பக்தனின் மூலமாக நீக்கப்படும் என்பார்.

    கதையெனப்து பொய்யோ புனைவோ என்ற சங்கைக்கு இடம் கொடுக்கும். வைணவர் வருந்துவார்கள். அவர்களை நாம் வருத்தினால், நாமும் பசிகொண்டலையவேண்டியதிருக்கும். காய்கறிகள் விற்கிற விலையில் இது நமக்குத்தேவையா? தக்காளி இங்கே ஒரு கிலோ 70 ஆக் எகிறிவிட்டது:-) திருக்குறுங்குடியில் நடந்த உண்மைச்சம்பவம் என்றுதான் அவர்கள் நம்பிக்கை. அக்கோயிலில் கொடிமரம் ஒரு பக்கமாக விலகி நிற்கும். நம்பாடுவான் காலத்தில் கோயிலுக்கு வெளிப்பிரகாரம் இல்லையெனலாம். ஒருவர அக்காலத்தில் டைரக்டா கொடிமரம் அருகில் நின்றே மூலவரைத் தரிசனம் செய்யலாம். இன்று அப்படியில்லை. It is a very big temple now with sprawling complex. You enter from the main gate, walk a furlough to reach the Gopuram proper. Because the main gate itself is not the Gopuram. The gopuram is inside the complex invisible from outside. பல படி நிலைகளைக்கடந்தே செல்லமுடியும்.

    கொடிமரம் விலகி நிற்க‌ காரணம் வடவழகிய நம்பியைக் கண்ணால் கண்டு மகிழ கொடிமரம் தடுக்கிறதே என்று நம்படுவான் ஆழ்வார் மனம் வருந்த நம்பி அம்மரத்தை விலக்கித் தன்னைக்காட்டினார். இன்றும் அஃது அப்படியே இருக்கிறது. இதுவே வைணவர் நம்பிக்கை. நந்தன் என்ற புலையனுக்கு நந்தி விலகியது போல.

    இக்கதையினாலேயே திருக்குறுங்குடி ஒரு வராஹ சேத்திரமென்றுமழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் திருவரங்க்த்திலிருந்தே திருநாடு செல்ல அனுமதிக்கவேண்டுமென்று கேட்டதற்கு. இத்திறுக்குங்குடிக்கே போய் திருநாடு அடைவாய் என திருமங்கையாழ்வாருக்கு இரங்கன் சொன்னார். ஆதலால், திருமங்கையாழ்வார், திருக்குறுங்குடி சென்று திருநாடு அலங்கரித்தார். அவரின் சமாதி அங்குள்ளது சன்னிதியாக. (திருநாடு அலங்கரித்தல் = passing away or left for hevenly abode). In those days, all achaaryaas came to Shrirangam to end the last days. Thirumangai was not only a simple Azhwaar, but also a Jeeyar.

    நம்மாழ்வாரோடு நீககமற இணைந்த் சேத்திரம். வடிவழகிய நம்பியை காதலிக்கவே பராங்குச நாயகியாக வேடம் போட்டார் அவர். ப்ராங்குச நாயகி வடிவகிய நம்பியைக் காண விரைந்து செல்லும் போது அவள் ஒரு சேரியைக்கடக்கவேண்டியதிருந்தது. அப்போது அவளைப்பார்த்து சேரிப்பெண்கள் கிண்டலடித்தார்களாம். ஏன்? ‘அடியே பார் இவளை! நம்பியைக்காதலிக்க விரைகிறாளாம். இவளுக்கு இப்போதுதான் இப்ப்டியொரு நாயகன் இருக்கிறான் என்று தெரிகிறாம். நாமெல்லோரும் காலம்காலமாக நம்பியைக்காத்லித்துவருகிறொம் இவள் என்ன செய்துகொண்டிருந்தாள்” என்று நகைத்தனர்.

    இதன் உட்பொருள்: இக்கோயில் தலித்து மக்களோடு இணைக்கப்பட்டது. அது நம்பாடுவான் புராணத்திலிருந்தும் நம்மாழ்வார் பாசுரத்திலிருந்தும் வெளியாகிறதாகச் சொல்லலாம். நம்பியின் முதல் பக்தர்கள் இவர்க்ள் என்கிறார் நம்மாழ்வார். It is also the birth place of Manavala Mamunigal from whom originates Thenkalai. Ramanujar founded the Thirukkurunguid Mutt.

  210. ரெவ ரெண்டு பால சுந்தரம் க்ருஷ்ணா…………

    ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ @ காவ்யா @ Tamil @ திருவாழ்மார்பன் @ அய் அய் எம் கணபதிராமன்…………………………

    இத்யாதி பேர்களில் முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கம் செய்து போரடித்து ………………

    இப்போது பால சுந்தரம் க்ருஷ்ணா என்ற பெயரில்……………………….

    வீர தீர சூர ப்ரதாபம் மிக சுவிசேஷ முக்காடிட்டு ஒளிந்து கொண்டு

    முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கம் செய்யும்……… ஆள்மாறாட்டம் செய்யும்……… அன்பருக்கு……………..

    பரங்கிய மதத்தைச் சார்ந்த க்றைஸ்தவ தேவாலயங்களில் போனால் உங்களுக்கு அல்லேலூயா தான் கேழ்க்கும். திருப்புகழ் எப்படிக்கேழ்க்கும். திருப்புகழ் தமிழ் மக்களுக்குத் தெரியாதாம். க்றைஸ்தவ தேவாலயத்துக்குப் போய் விட்டு முருகன் கோவிலுக்குப் போனது மாதிரி ………………… சுவிசேஷிகளிடன் செய்த வாக்கு தத்தத்துக்காக கூசாது பொய் சொல்லும் இழிவை என்னென்று சொல்வது?

    தமிழகத்தில் எத்தனையெத்தனை…….. எங்களது தமிழ்க்கடவுள்…….. எங்களது குலதெய்வம்…………….. முருகப்பெருமானது படிவிழாக்களுக்குப் போயிருக்கிறோம். அங்கெல்லாம் குழுக்குழுவாக லக்ஷோப லக்ஷ மக்கள் சபை சபைகளாக ஒவ்வொரு படிவிழாவின் போதும் திருப்புகழை ஓதியே குன்று தோறும் குடியிருக்கும் குமரனைக் காணச் செல்கிறார்கள் என்பது…….. சுவிசேஷிகளுக்காக கூலிக்கு மாரடிக்கும்………சுவிசேஷ அதிக ப்ரசங்கம் செய்யும் ஆள் மாறாட்டப் பேர்வழிக்கு எப்படித் தெரியும்?

    பித்தலாட்டத்தின் மூலம் உங்களது பரங்கி மதத்துக்கு ஆள் பிடித்து………….. தமிழகத்தின் தொல் சமயங்களை தமிழ் மொழியை தமிழ்க் கலாசாரத்தை சுவடின்றி அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் உங்களைப் போன்றோருக்கு……………… மாற்று மதத்தினருக்கு ஆள் பிடிக்க பொது தளத்தில் அறைகூவல் விடும் ஐந்தாம்படைகளுக்கு …………………….. திருப்புகழ் என்றால் என்ன என்று எப்படித் தெரியும். ……………………..க்கு கற்பூர வாசனை நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.

    எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானை…… கூலி கொடுக்கும் பரங்கிய ஆப்ரஹாமிய எஜமானர்களின் மொழியான ஆங்க்லத்தில்……………. ஆள்மாறாட்ட முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கிகள் இழித்துப்பழிப்பதை…………….. தமிழுக்குச் செய்யும் தொண்டு………. என்று போலித் தமிழ் ஈன வாதிகளால் மட்டிலும் பறை சாற்ற முடியும்.

    உங்களைப் போன்ற எத்தனை முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கிகள்…………நாடகமாடிகள்………… தமிழையோ சம்ஸ்க்ருதத்தையோ அல்லது இவையிரண்டும் இணைந்த மணிப்ரவாளத்தையோ அழிக்க முனைந்தாலும் ……………. இந்த தேசத்தின் தொல் மொழிகளான இவையும்……………… எமது தொல் சமயங்களும்…………………. எமது கலாசாரமும்……………இவை அனைத்தும் அழியவே அழியாது.

  211. சரி, இந்த வைணவப்பேத்தல்களுக்கும் (அப்படித்தான் மஹாசயர் கிருஸ்ணகுமார் என் எழுத்துக்களை குறிப்பிட்டிருக்கிறார் மேலே!) அரவிந்தன் கட்டுரைப்பொருளுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?

    இருக்கும். கடைசிவரியில் மணவாளமாமுனிகள் என்றேன். தென்கலை என்றேன். அங்குதான் தொடர்பு இருக்கிறது. தென்கலை சொல்வது: நம்மாழ் பாசுரங்கள் நான்கு வேதசாரங்கள். திருமங்கையாழ்வார் பாசுரங்கள் ஆறு அங்கங்கள். அதாவது, ஒரு வைணவன் இவற்றைப்படித்தாலே போதும். வடமொழிவேதங்களுக்குப் போக வேண்டியதில்லை. அல்லது அவை கட்டாயமில்லை. வடகலை இதை ஏற்பதில்லை. வடமொழி வேதங்கள் கட்டாயம்.

    தென்கலை இவ்வாறு தமிழுக்கு முதலிடம் கொடுத்தது. இதை அவர்கள் மதத்தில் சொல்ல, நாம் சமூகத்தில் சொல்லலாம்.

    தமிழிலேயே எல்லாமிருக்க வடமொழி எமக்குத் தேவையில்லை எனப்துதான். இல்லாதவனுக்கு கொடுப்ப‌துதான் நீதி. இருப்பவனுக்கே கொடுப்பது வீண்வேலை! எனவே அரவிந்தன், சாரங்கன், கிருஸ்ணகுமார் மற்றும் அவர் சகாக்கள் தம் வடமொழி வணிகத்தை வேறுமொழியைத்தாய்மொழியாகக் கொண்டோரிடம் போனியாககலாம் என்பது இதனால் பெறப்படும்.

  212. அன்பின் ஸ்ரீ வியாசன்,

    \\\\ இலங்கையில் முஸ்லீம்கள் தமிழர்களின் முதுகில் குத்தியதை கிழக்கு மாகாணத்தில் கோயில்களை அழித்ததை அடிக்கடி சுட்டிக் காட்ட நான் தயங்கியதில்லை. \\\\\

    தமிழகத்தில் தமிழ்ப்பிரிவினைவாதத்தைச் செயல்பாடாக உடைய அன்பர்கள் ஈழத்தில் தமிழர் ஆலயங்கள் தகர்த்து நொறுக்கப்பட்டதைப் பற்றி வாயையும் திறந்ததில்லை. போலி மதசார்பின்மையும் பரங்கிப்பணமும் த்ராவிடக்குப்பை இயக்கங்களின் தினசரி நாடகங்களும் தானே தமிழ்ப்பிரிவினை வாதம் என்ற இயக்கத்தையே இயக்கி வருகிறது தமிழகத்தில். ஈழத்தில் ஆலயங்கள் தகர்த்து நொறுக்கப்படுதல் என்பது த்ராவிட மாயையிலும் போலி மதசார்பின்மையிலும் ஆழ்ந்து அமிழ்ந்து போயிருக்கும் பரங்கிப்பணத்தால் இயங்கும் தமிழ்ப்பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

    தமிழர் தம் தொல்சமயங்களையும் தமிழர் தம் கலாசாரத்தையும் சுவடின்றி அழித்தொழிப்பதில் கங்கணம் கட்டி வேலை செய்து வருகின்றன ஆப்ரஹாமிய பயங்கரவாதக் கூட்டங்கள். ஈழத்தில் மட்டுமென்ன தமிழக்த்தில் எத்தனையெத்தனை ஆலயக்காணிகளை குளங்களை தோப்பு துரவுகளை பயங்கரவாத ஆப்ரஹாமியர் கபளீகரம் செய்து வருகின்றனர்.

    \\\\ அதே வேளையில் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்களாக, தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்தால் அதை மனப்பூர்வமாக வரவேற்கவும் நான் தயங்க மாட்டேன். \\\\

    அதாவது இன்றைய திகதியில் அப்படி இல்லை என்று நேர்மையாகக் கருத்துப் பகிர்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

    அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா கூட ஆகிவிடலாம்………………..

    சொந்த மதத்து அடிமட்ட மக்களது தர்க்காஹ் வழிபாடுகளையே இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறி உலகமெங்கும் சொந்த மதத்து மக்களது வழிபாட்டு ஸ்தலங்களை – தர்காஹ் ஷெரீஃபுகளை………குண்டு வைத்து தகர்த்து வருவது வஹாபியம். மற்றைய இஸ்லாமியப் பிரிவுகளையே கபளீகரம் செய்ய அரபிப்பணத்தில் புழங்கி வரும் ஒரு இயக்கத்தின் சுவடுகளில் செல்ல விழையும் ஒரு கூட்டத்தை மாற்றி விட முடியுமா தெரியவில்லை…… ஆனால் அந்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.

    உலகமுழுதும் கலாசாரப்பன்மையை அறவே அழித்தொழிக்க கங்கணம் கட்டியுள்ளது வஹாபியம்.

    ஈழத்தில் தமிழ் க்றைஸ்தவ பெண்டிர் நெற்றியில் பொட்டிட்டு வருவதாகக் கூறியிருந்தீர்கள். எவ்வளவு பெருமிதமாக இருந்தது தெரியுமா? பஞ்சாக்ஷர க்றைஸ்தவர்களைப் பற்றி அறிவதில் பெருமிதம் இருந்தது. அங்கு அப்படி முஸ்லீம் பெண்டிர் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்? இங்கு கருத்துப்பதியும் ஜெனாபுகள் அதை வழி மொழிவார்கள் என்று நினைக்கிறீர்கள்? இதைப்பற்றி பரங்கிப்பணத்தில் செயல்படும் தமிழகத்துப் பிரிவினை வாதத் தமிழ்க்குழுக்கள் இது பற்றி வாயையாவது திறக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    \\\\ ஏனென்றால் எனக்கு என்னுடைய மத அடையாளத்தை விட மொழி, இன அடையாளம் முக்கியமானது, முதன்மையானது, \\\\

    க்ஷமிக்கவும். சைவமில்லாத தமிழ் வைஷ்ணவமில்லாத தமிழ் என்ற ஒன்றை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எமது சமயமும் எமது மொழியும் எமக்கு பிரிக்க முடியாக் கூறுகள். தமிழையும் சுவையையும் நீங்கள் பிரிக்க முடியும் என்று நினைத்தால் தமிழையும் தமிழர் தம் தொல் சமயங்களையும் பிரிக்க முடியும் என்று நினைக்கலாம்.

    தமிழகத்தில் த்ராவிட மாயையில் மூழ்கியுள்ள பிரிவினைவாதத் தமிழ்க்குழுக்களுக்கு மதம் என்பது — ஹிந்து மதம் என்பது — குறிப்பாக சைவமும் வைஷ்ணவமும் சுவடின்றி அழித்தொழிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

  213. //“பார்ப்பனர்” என்ற இழித்துரைக்கக் கையாளும் சொல்லை, அருள்கூர்ந்து, ஒரு குறிப்பிட்ட இந்து சமூகத்தவரைச் சுட்டக் கையாலாதீர்கள். //

    வியாசனின் அரிசோனனின் மேற்கண்ட விண்ணப்பத்திற்கு கூறிய பதில் சரி. பிராமணஹ என்பது வடமொழியில். பிராமணர் என்பது வடமொழி தமிழாக்கப்பட்டு. கொச்சையில் பிராமணாள் which is also plural of Brahmanar; also once used as adjective in hotel names.

    பார்ப்பனர் என்பது தூய தமிழ்ச்சொல். பால்போன்ற மென்மையானவர் என்று அவரின் வெளிர்நிறத்தோடு கூடிய காரணப்பெயராக வந்திருக்கலாம்.

    தமிழறிஞர்கள் அன்று தொட்டு இன்றுவரை பார்ப்பனர் என்றே எழுதிவருகின்றனர். அவ்வறிஞர்கள் பார்ப்பனராக‌ இருந்தாலும் கூட. வைதீக இந்து மதம் வடமொழியொட்டி வருவதால் அங்கு பிராமணர் என்ற சொல்லே. மறந்தும் பார்ப்பனர் எனச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு ஜாதியைக்குறிப்பிடுவதாக தவறாக, அல்லது வசதியாக எடுத்துக்கொண்டார்கள் மற்றவர்கள்.

    பார்ப்பான் குலவொழுக்கம் கெடும் என்றுதான் வள்ளுவர் எழுதுகிறார். அரிசோனன அவர் எம்மை இழித்துரைக்கிறார் எனச்சொல்வாரா?

    பார்ப்பனர்களை வந்தேறிகள் என இழிவுபடுத்துகிறதைப்பற்றி எழுதும் கட்டுரையில் கல்விக்கடல் கோபாலையர் (புதுச்சேரி பலகலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர்) பார்ப்பனர்கள் என்ற சொல்லை மட்டும் எழுதுகிறார். கட்டுரையின் தலைப்பே அதுதான் அரிசோனன்!

    ரா.ராகவையங்காரின் பழந்தமிழகத்தைப்பற்றிய கட்டுரைகளிலும், மு. ராகவையங்காரின் சங்க இலக்கியக் கட்டுரைகளிலும் பார்ப்பனர் என்ற சொல்லே. முன்னவர் அண்ணமலைப்பலகலைக்கழகம் (also functioned as the Diwan of Ramanathapuram kingdom), பின்னவர் திருவிதாங்கூர் பலகலைக்கழகம். சொல்லக்காரணம் தமிழ்க்கட்டுரையில் தூய தமிழ்ச்சொல் வேண்டுமென்பதால். பார்ப்பனர் என்பதே பழந்தமிழகத்தில் ஜாதிப்பெயர். சிலப்பதிகாரத்தில் பல பார்ப்பனர் கதா மாந்தர்களாக வருவர். பண்டைத்தமிழகத்தில் இஜ்ஜாதியார் ஆறு வகைத் தொழிலகளைச் செய்ப்வ்ர்கள். அதில் ஒன்றே ஒன்றுதான் புரோஹிதர். ஊர் ஊராகச் சுற்றும் – அதாவது கோயில்கள் இருக்கும் தலங்கள் – பார்பனரும் உண்டு. They led a nomadic life like our kurvas. But kuravas’nomadism is not far flung i.e their circumference is limited to State or neighbouring State. But the parppnar nomad went even upto Himalayas. முன்கூட்டியதை தன் அறிவால் காணும் வலிமையடையோன். அவந்தான் மாடல மறையோன். பாரதியார் தன்னுடைய கட்டுரையொன்றில் பார்ப்பனர்களில் தொழிலில் ஒன்று யானைப்பாகன் தொழிலும் ஆகும். சங்கரன் கோயில் யானைப்பாகன் தன்னை ஒன்னும் தெரியாதவன் என்று நிறையச்சொன்னதாக நக்கலடிக்கும் அக்கட்டுரையை படித்து மகிழுங்கள். இன்னொரு தொழிலும் உண்டு. அரிசோனன் நொந்துவிடுவார். எஸ் வி சேகர் அதைச்சொன்னதற்காக பிராமணர்களால் சொல்லால் தாக்கப்பட்டார்.

    பார்ப்பனர் என்ற சொல்லை விடாமல் வைத்திருந்தால் பழந்தமிழர்கள் எனச்சொல்ல ஹேதுவாகும். விட்டதால் அங்கிருந்து வந்தார்கள்; இங்கிருந்து வ்ந்தார்கள் என்ற் பேச்சே வந்தது. பார்ப்ப்னர் என்போர் ஆதி தமிழர்களில் ஒருவர். அவர்களில் சைவ்ர்கள் தங்களை ஆதிசைவர் என்றழைப்பர். திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வர்லாறு சொல்லும் சைவசித்தந்தக்கழக நூலில், அவர் ஆதிசைவர் குலத்தவர் எனக்குறிப்பிடுவர்.

    பிராமணர் என்பது தங்களுக்குத்தாங்களே இவர்கள் சூட்டிக்கொண்ட பட்டப்பெயர். நிறைய ஆசாமிகள் தங்களுக்குத்தாங்களே சாமியார் என்று சொல்லிக்கொளவதைப்போல. அப்பட்டம் பின்னர் ஜாதிபெயராகி விட்டது. பிராமண எதிர்ப்பாளர்கள் வியாசன் குறிப்பிட்டதைப்போல இச்சொல்லை கேலித்தொனியில் பயன்படித்தியதால் ஒரு நல்ல தூய சொல் இன்று அவச்சொல்லாக கூனிக்குறுகி நிற்கிறது.

    பார்ப்பனன் என்பது துலுக்கன், சாணான், இடையன் என்று முஸ்லீம், நாடார், கோனார் என்னும் சாதிப்பெயர்களுக்கு மாற்றான புழங்கும் அவச்சொற்களைப்போல என்பது போல என்று வருத்தப்படுகிறார் அரிசோனன். இது தவறான வாதமாகும். ஏனென்றால், நாடார், கோனார், முதலியார், வன்னியர், செட்டியார் என்பனவெல்லாம் ஜாதிப்பெயர்கள். அதற்கு ஈடான பெயர் ஜாதிப்பெயர் பார்ப்பனரே. பிராமணன என்பது கிடையாது. பிராமண்ன் என்பது ஒரு பொதுவான இந்துச்சொல். அஃது எவரையும் குறிக்கும். அது ஒரு கான்செப்ட் என்று இந்துமதம் சொல்கிறது. எத்தனை எத்தனையோ திரிபுகளை தங்கள் வசதிக்காக பலர் செய்துகொண்டார்கள். அப்படி தங்கள் குழு மக்களை பிராமணர் என்ற அடையாளத்தை வைத்து கீதையில் சொல்லப்பட்ட நான்கு குலங்களில் நாங்களே அந்த முதற்குலம் பகவான் தலையிலிருந்து வந்தோம் எனச்சொல்ல வசதிபண்ணிக்கொண்டார்கள். இப்படிப்பண்ணாமல் பார்ப்பனர் என்ற சொல்லையே அரசுப்பெயராகவும், சமூகப்பெயராகவும் வைத்திருந்தால், பார்ப்பனத்துவேசம் ஒரு இயக்கமாக உருவெடுத்திருக்கது. அரசும் பிராமணர் என்ற சொல்லையே பள்ளியிறுதிவகுப்புச்சான்றிதழில் குறீப்பிடுகிறது. ஒரு பக்கா நாத்திகன் கூட அவன் பெற்றொர் அஜ்ஜாதியைச்சேர்ந்தவர்களென்றால், பிராமணன் ஆகிவிடுகிறான்.

    என்றைக்கு இவர்கள் தங்களை பிராமணர்கள் என்றழைப்பதை நிறுத்துகிறார்களோ, அன்றுதான் இவர்கள் உண்மையான இந்துக்கள். அதாவது அம்மதத்தை மதிக்கிறார்கள் என்று பொருள். இல்லாவிட்டால் அம்மதத்தை தங்கள் வசதிக்காக பயன்படுத்துகிறார்கள் என்றுதான் வரும். பிறமக்களையும் நம்ப வைத்துவிடுகிறார்கள்.

    அப்படி பார்ப்பனர் என்ற சொல் இழிவாக உணரப்படுகிறது என்றால்,,அதற்கு ஒரு நல்ல வேற்றுச்சொல்லை எடுத்தாள வேண்டுமே தவிர, பிராமணன் என்ற சொல்லைத் திருடக்கூடாது. ஆதிசைவர், ஐயர், ஐயங்கார், அந்தணர் எல்லாம் ஓகே. தமிழ் நடிகை ஒருவர் பெயர் ஜனனி ஐயர் நாட் ஜனனி பிராமணர். She is a very beautiful actress, wide lotus eyes and slim body with adequate height – only from the images I say. Yet to see her performance on silver screen. ஜாதியைத்தவிர வேறெத்தனையோ விசயஙகள் மகிழ்வுக்கும் என்று காட்டத்தான் ஜனனி ஐயரைப்பற்றி எழுதுகிறேன்.

    இன்னொன்றையும் சொல்லி முடிக்கலாமெனப்தை படியுங்கள் என முடிக்கிறேன். ஆண்டாளில் திருமணம் வைதீக மணம் கண்ண்கியிதைப்போல. புரோஹித்ர்க்ள் வேதமந்திரமோதி தாலியை கொடுக்கிறார்கள். கெட்டிமேளம் முழங்க, நல்லோர் வாழ்த்த மனம் நிறைந்த மணாளனோடு மணம் இனிதே நடந்தேறுகிறது. Just dream!

    அரிசோனன் பாசுரத்தைக் கவனமாகப் படிக்கவும்.

    நால்திசைத்தீர்த்தம் கொணர்ந்துநனிநல்கிப்
    பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்திப்
    பூப்புனைகண்ணிப் புனிதனோடென்தன்னைக்
    காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

    பார்ப்பனச்சிட்டர்கள் = Professional priests who solemnize Hindu marriages.
    Chittars mean experts in their profession.

  214. Persons managing — manager

    Person supervises- supervisor— ie paarpavargal- paarpanargal…

    since many were doing supervisory jobs they were called paarpanargal..

    is it ok?

  215. உயர்திரு வியாசன் அவர்களுக்கு,

    //இழிவான சொல்லாக்கிய்வர்கள் திராவிட வீரர்களும் பெரியாரிஸ்டுக்களும் தான். பிராமணர் என்பது தமிழ்ச் சொல்லேயல்ல. பிராமணர்கள் என்பது ‘பிறமண்ணர்கள்’, அதாவது கங்கைக் கரையிலிருந்தும், துங்கபத்ரா நதிக்கரை ஊர்களிலிருந்தும் தமிழ்மண்ணுக்கு பிழைப்புத் தேடி வந்தவர்களைப் பிறமண்ணர்கள் எனப் பழந்தமிழர்கள் அழைத்தனர். அது தான் திரிபடைந்து பிராமணர்கள் ஆகியது எனக் கூறுவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்//

    சரியான கட்டுக்கதை இது. இதில் கடுகளவும் உண்மை இல்லை. தனக்குள் இருக்கும் பிரம்மத்தை (படைக்கும் கடவுள் பிரம்மா அல்ல; சைவர்கள் பிரம்மத்தைப் பரசிவம், அல்லது சிவபெருமான, என்பார்கள்; வைணவர்கள் பிரம்மத்தை, விஷ்ணு அல்லது நாராயணன் என்பார்கள்) உணர முற்படுபவனை, அந்த நன்நெறியாளனை “பிராமணன்” என்பார்கள். பிராமணன் ஆவதற்கு ஒரு பிராமண வகுப்பில்தான் பிறக்கவேண்டியதில்லை. இறையருள் பெற்ற சைவ நாயன்மார், வைணவ ஆழ்வார்கள் அனைவரும், எவ்வகுப்பில் பிறந்து இருப்பினும் பிராமணர்களே! இதையே நான் இறையருள் பெற்ற மற்றவர்களையும் சுட்ட விரும்புகிறேன்.

    இதுபோன்றே, மற்றவரைக் காக்க அரணாக நிற்கும் மனமுடையோர் சத்திரியர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

    ஆயினும், காலம் செல்லச், செல்ல, பிறப்பே வகுப்பை (அதாவது சாதியை) உறுதிப்படுத்துவதாக அமைந்து விட்டது.

    எனவே, அந்தண வகுப்பில் பிறந்தவர்களைப் பிராமணர்கள் என்று தொன்றுதொட்டு வழங்கி வந்தார்கள். அவ்வகுப்பிலேயே, வானியலும், சோதிடமும் கற்றவர்களைப் “பார்ப்பனர்” என்று செய்யும் தொழிலைச் சுட்டினார்கள். அவ்வளவே.

    . //இத்தனை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களை பிராமணர்கள் அதாவது பிறமண்ணர்கள் என அழைப்பது சரியானதாக எனக்குப் படவில்லை.//

    மிக்க நன்றி. உங்கள் உள்ளத்தில் இருக்கும் இந்த உணர்வு அனைவர் உள்ளத்திலும் இழையோடினால், தமிழ் இனத்தை பிரித்துக் குளிர் காய இடைவிடாது முயன்றுகொண்டிருக்கும் கயவர்கள் ஒடுங்கி, அழிந்து போய்விடுவார்கள்.

    நான் எனது நிலையை விளக்குகிறேன்.

    ஸ்பானிஷ் மொழியில், “நீக்ரோ” என்றால் “கருப்பு” என்றே பொருள். ஆப்ரிக்காவிலிருந்து அடிமைப்படுத்திக் கொண்டுவரப்பட்டவர்களை. அவர்களின் நிறத்தைச் சுட்டுமாறு, “நீக்ரோ” என்றே அழைத்தார்கள். அவர்களின் உரிமைக்குப் போராடிய, அமெரிக்கக் காந்தி என்று அழைக்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அவர்களும் தங்கள் இனத்தை “நீக்ரோ” என்றே சுட்டினார்.

    ஆயினும், வெள்ளையர் ஏளனமாக, “நிக்கர்” என்று சுட்டியதால், “ஸ்பானிஷ் மொழியில் உள்ள ‘நீக்ரோ” என்ற சொல்லைக் கையாளாதீர்கள், ஆங்கிலச் சொல்லான, “ப்ளாக்” என்னும் சொல்லைக் கையாளுங்கள்” என்று கோரிக்கை எழுந்தது,

    ஆப்பிரிக்க இனத்தவரை “ப்ளாக்” என்று அழைக்கத் துவங்கினார்கள்.

    இபொழுது, நிறவேற்றுமையைக் குறிக்கும் “ப்ளாக்” என்ற சொல்லும்கூட வேண்டியதில்லை என்று, “ஆப்பிரிக்க அமெரிக்கர்” என்றே அழைக்கிறார்கள்.

    வடமொழியில் “கிருஷ்ணன்” என்பதும், தமிழில் “கருப்பன்” என்பது ஒன்றையே குறிக்கிறது. தமிழராகிய நம்மில் எத்தனை பேர் “கருப்பன்” என்ற பெயரை விரும்பி வைத்துக் கொள்கிறோம்? கருப்பன் என்ற சொல் இழிவாகக் கருதப் படுவதால்தானே?

    இந்து, சமண, புத்த சமயத்தோருக்குப் புனிதமான சுவஸ்திகா, லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரால் கையாளப்பட்டதால்தானே, யூதர்கள் சுவஸ்திகாவை இன்றும் வெறுத்து வருகிறார்கள்!

    அதுபோன்றே, விரும்பியோ, விரும்பாமலோ, “பார்ப்பனர்” என்று செய்யும் தொழிலையும், கற்ற அறிவையும் சுட்டும் ஒரு நல்ல சொல், ஒரு சமூகத்தினரை, இழிவு படுத்துவதற்காக, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கையாளப்பட்டது, கையாளப்பட்டும் வருகிறது. எனவேதான் அந்தச் சொல்லைக் கையாலாதீர்கள் என்று சமய, இன, மொழி நல் இணக்கத்தை விரும்பும் நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.

    தமிழரான நீங்கள், இன்னொரு தமிழனின் வேண்டுகோளை ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்.

    வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்!

  216. Mr. KMV,

    Your interpretation is partially correct. But, the conclusion is incorrect. You know that we have Panchangams, which are nothing but Hindu calander. It has five essential items or “angams” called thithi (lunar day), day (vaaram), nakshathram (or star), yogam (angular relationship between the Sun and the Moon), and Karanam (six degree difference between the Sun and the Moon) . These five items (panchangam) that indicate the position of celestial bodies with respect to earth require astronomical knowledge. Your initial interpration paarppavarkal is correct. They see the position of various celestial bodies with respect to earth. Hence they are “paarppavarkal” or “paarppanarkal”. They called called so because of the work they did(like engineers, masons, carpenters, etc.)

    I hope this clarifies what you were asking for.

    The link given below explains in detail about Panchangam or Hindu Calender.

    https://en.wikipedia.org/wiki/Panchangam

  217. ஐயா பாலா சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    பழங்காலத்து மேற்கோள்கள் வேண்டாம். நான் “பார்ப்பனர்கள்” என்ற சொல் எப்படிக் கையாளப்படுகிறது என்று சொல்லிவிட்டுச் சலித்து விட்டேன். நாம் இப்பொழுது திருவள்ளுவர் காலத்திலும், ஆண்டாள் காலத்திலும், திருமூலர் காலத்திலும் இல்லை.

    //ஆதிசைவர், ஐயர், ஐயங்கார், அந்தணர் எல்லாம் ஓகே//
    நீங்கள் அனைவரையும் சேர்த்துதான் பார்ப்பனர் என்று குறிப்பிடுகிறீர்கள். பார்ப்பனரும் நீங்கள் குறிப்பிட்ட “ஆதிசைவர், ஐயர், ஐயங்கார், அந்தணர்” இவர்களோடு சேர்த்து இன்னொரு பிரிவுதான்.

    இந்திய அரசே ஆயிரக்கணக்கான சாதிகளைப் பட்டியலிட்டு அவர்களில் பலரை, பிற்பட்டோர், அட்டணையிடப்பட்ட சாதிகள், பழங்குடி இனம் என்று பிரித்திருக்கிறார்கள். இவர்களை ஹரிஜனங்கள், ஆதி திராவிடர், என்று அழைத்தார்கள். அண்ணல் காந்தி கொடுத்த “ஹரிஜனங்கள்” என்ற சொல்லே வேண்டாம் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இப்பொழுது அப்படியெல்லாம் அழைக்கவேண்டாம், எங்களை தலித் என்று அழையுங்கள் என்றதால், அப்படி அழைக்கிறோம். ஏன்? அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்பதற்காகத்தான். அதுபோலத்தான் நான் “பார்ப்பனர்கள்” என்று சொல்லாதீர்கள் என்று சொல்வதும்.

    சாதி ஒழியவேண்டும் என்னும் நீங்கள் சாதியின் பெயரால் சலுகை பெறக்கூடாது என்று சொல்வதுதானே?சாதியை ஒழிக்க முற்படும் நீங்கள் அதை எதிர்த்துப் போராடுவதுதானே? அதற்கு மட்டும் சாதி வேண்டுமா?

    ஒருகாலத்தில் பிராமணர்கள் உள்பட பலஆதிக்க சாதியினரும் செய்த தீண்டாமையைக் கண்டித்தோம். இப்பொழுது அனைவரையும் விட்டுவிட்டு , பிராமணர்களை மட்டும் ஒருமைப்படுத்தி, தனிமைப்படுத்தி, எதிராகப் பார்க்கிறோம். இப்பொழுது யார் தாழ்த்தப்பட்டோர்? பிராமணர்கள்தான்!

    அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் இல்லை, வேலை கிடைப்பதிலும் கட்சி இடம். “பாம்பையும், பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பனனை அடி” என்ற வெறுப்பு வன்முறைப் பிரச்சாரம் வேறு. பல தலைமுறைகளுக்கு முன்னர் செய்த பிழைக்காக, ஒரு சமுகத்தை மட்டும் தனிப்படுத்தி, தண்டிக்க முற்படுகிறீர்கள்! பாருங்கள், இந்த வலையத்தில் கருத்துத் தெரிவிக்கும் பிராமணர்கள்கூட, அவர்களது உரிமையை முன்னிறுத்த அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறார்கள்.

    இது நான் சாதி உணர்வை, வெறியை உண்டு பண்ணுவதற்காகச் சொல்லவில்லை. சாதி ஒழியவேண்டும் என்று சொல்பவர்கள், ஒரு சாதியைத் தரக்குறைவாகக் குறிப்பிட்டு, சாதி உணர்வைத் தூண்டவேண்டாம் என்பதற்காகவே எழுதுகிறேன்.

    குறைந்தபட்சம், வெறுப்பூட்டும், கேவலப்படுத்தும் சொல்லைக் கையாளாதீர்கள் என்றால் மறுப்புத் தெரிவிக்க, திருவள்ளுவரையும், ஆண்டாளையும், துணைக்கு அழிக்கிறீர்கள்.

    உயர்திரு கிருஷ்ணகுமார் சொல்வதுபோல நீவிர் ஒரு கிறித்தவராக இருந்தால், இந்தமாதிரி இந்துமத நூல்களில் இருந்து விளக்கம் கொடுக்க உமக்கு உரிமையே இல்லை. சாத்தான் வேதம் ஓதுவது போல, எமக்கு ஒதுகிறீர். நான் விவிலியத்தைப் படித்திருக்கிறேன். ஏராளமான மேற்கோள்களை என்னாலும் எடுத்தக் காட்ட இயலும்

    இஸ்லாமிய நண்பர்கள் எனது கோரிக்கையைச் செவி மடுத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தி, அதற்கு மேற்கோள் காட்டும் நீர் — குறைந்த அளவு இணக்க நயப்பண்பு (courtesy) இல்லாத நீர் சொல்வதைப்பற்றி ஏன் பொருட்படுத்தவேண்டும்? உம்மிடம் வாதிட்டு எனது நேரத்தை வீணடிப்பது கட்டாந்தரையில் நீர் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

    ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ @ காவ்யா @ Tamil @ திருவாழ்மார்பன் @ அய் அய் எம் கணபதிராமன் என்பது நீர்தான் என்றால் உம்மைக் கர்த்தர் காப்பாற்றுவாராக!

  218. மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

    //சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளே “பார்ப்பன” என்ற பத ப்ரயோகம் செய்திருக்கிறாள்.
    சொல்லில் இழிவு ஏதும் இல்லை.//

    இதை நான் மறுக்கவில்லை. சொல்லில் இழிவு இல்லை என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். சொல்லைக் கையாலும் முறையில்தான் இழிவு வெளிப்படுத்தப்படுகிறது. இதுவே எனது மறுப்புக்குக் காரணம். எப்பொழுது இழிவுச் சுட்டல் நீங்குகிறதோ, அப்பொழுது அனைவரும் பார்ப்பனர் என்று அழைக்கலாம். தடையில்லை.

  219. //உம்மைக் கர்த்தர் காப்பாற்றுவாராக//

    ஏன் பெருமாளின் மேல், முருகனின் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லை. ஏன் கர்த்தரின் மேல் மட்டும் நம்பிக்கை? கொஞ்சம் விளக்குங்கள்.

    தலித்துகள். ‘ஹரிஜனங்கள்’என்ற பெயரை வெறுத்ததாகத் தெரியவில்லை. மதுரையில் அமிர்த்ம் தியேட்டருக்கருகில் உள்ள தலித்துகள் வசிக்கும் காலனிக்கு இன்றும் ஹரிஜனக்காலனிகள் என்றுதான் பெயர். மாற்றவேண்டும் என்று எவரும் கேட்டதில்லை.

    ஆதிதிராவிடர்கள் என்று அனைத்து தலித்துக்களையும் குறிப்பிட பயனப்டுத்தும் சொல், ஒரு அட்மினிஸ்ட்ரேட்டிவ் கன்வீனியஸ் காக, காமராஜர் காலத்தில் செய்யப்பட்டது. தனித்தனியாக எஸ்.ஸி சர்டிபிகேட் கொடுப்பதைத் தவிர்க்கவும், அவர்கள் அனைவரிடையே ஒற்றுமை உண்டாக்கவும் செய்யப்பட்டது. எனினும், பள்ளர்கள் என்னும் எஸ். சிக்கள், தங்களைத் தேவேந்திர குல வேளாளர்கள் எனவழைத்துக்கொண்டு, நாங்கள் இவர்களுக்கும் மேலே, சத்திரிய குலம், எனவே ஆதிதிராவிடர் குரூப்பில் எங்களைச்சேர்க்காதீர்கள் என்று போராடி வருகிறார்கள். தலித்து என்பது மராட்டி. அங்கு புத்தமத்ததைச்சேர்ந்த பட்டியல் இனத்தார், ஹரிஜன் என்றால் நாங்கள் இந்து என்று வருகிறது. எனவே ஒடுக்கப்பட்டவர் என்ற பொருள் தரும் மராட்டியான தலித் என்ற பெயரை பயனப்டுத்தத்தொடங்கி அது எல்லா மாநிலங்களுக்கும் தற்போது பரவிவிட்டது. இதற்கு மிசுநோர்களும் காரணம் என அறீவீராக.

    நீக்ரோவை ‘கறுப்பர்கள்’ என்று அழைக்கிறார்கள். காரணம், நீக்ரோ என்பது அடிமை வியாபார காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட சொல். அது அவர்களையும் மற்றவரையும் அடிமை நிலையை நினைவுபடுத்தியதால், இச்சொல் பொலிட்டிக்கலி இன்கரெக்ட் சொல்லாக இப்போது மாறிவிட்டது.

    மேற்சொன்னவை, பொலிட்டிக்கல் கரெக்டனஸ் பேராமீட்டர்களில் வரும்.

    பிராமணன் என்ற சொல் எந்த பாராமீட்டரில் வரும்? மதம் என்ற பாராமீட்டரில் மட்டுமே ம்வரும். அதை சமூகத்தில் வரும் சொல்லாகச் செய்தது ஜாதிப்பிராமணர்கள். அவன் நாத்திகனாக இருந்தாலும். அசைவப்பிரியானாக இருந்தாலும், மேலும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையாளனாக இருந்தாலும் அவனைப் பிராமணன் என்னும்போது, இந்துமதம் தன்னையே அழிக்கிறது. இம்மதத்தின்படி, பிராமணன் என்பவன் எவருமே ஆகலாம். அது ஒரு வாழ்க்கை முறை; பிறப்பினால் வருவதன்று என்று ஆதிகாலத்திலிருந்தே இந்துமதம் சொல்ல அதை மீறிய்வர்கள் இன்று நாமழைக்கும் பிராமணர்கள்.

    எனவேதான் சொன்னேன்: பிராமணன் என்ற சொல்லை வைத்துக்கொள்ளாதீர். பார்ப்பனர் என்ற் சொல் பொலிட்டிக்கலி இன்கரெக்ட் என்று உணர்வீர்களானால், வேறெந்த பெயராவது வைத்துக்கொள்ளுங்க்ள்.

    இங்கே ‘சாணார்’என்ற பெயரை நினைவு கூறலாம். சாணார் என்பது நாடார்களின் ஆதிப்பெயர். வெள்ளைக்காரன் இருக்கும்வரை அப்பெயர்தான். அன்று திருவாங்கூர் சம்ஸ்தானத்தில் தலித்துக்களைப்போலவே பார்க்கப்பட்டனர். நாடார் பெண்களும் தம் மார்பை மூட முடியாத். மதுரை மீனாட்சி கோயிலுக்குள் செல்வதற்கு அவர்களுக்கும் தடையுண்டு. வைத்தியநாதர், தலித்து இளைஞர்களை மட்டும் ஆலயப்பிரவேசத்துக்கு கூட்டிச் செல்லவில்லை. நாடார் இளைனர்களையும் கூட்டிச்சென்றார்.

    ஆனால், தற்போது, சாணார் என்ற சொல் பொலிட்டிக்கலி இன்கரெக்ட். நாடார்கள் தங்கள் சமூக அந்தஸ்தை தேவர்களுக்கு இணையாகக் கொண்டுவந்து நாங்கள் ஜாதி இந்துக்கள். நாடார்கள் என்ப்தே எங்கள் ஜாதிப்பெயர் என்று நிருவிக்கொண்டார்கள்.

    எனினும் இச்சொல்லும் மதம் சார்ந்த்தன்று. பிராமணன் மட்டுமே மதம் சார்ந்தது. எல்லாமே ஜாதிப்பெயர்கள். பிராமணன் மட்டுமே கிடையாது. அப்படியிருக்க ஏன் அதை ஜாதிப்பெயராக வேண்டுமுங்களுக்கு?

    பார்ப்ப்னர் என்பது ஆண்டாள் சொன்னார். அது பண்டைக்காலம் என்றால் கல்விக்கடல் கோபாலையரும், [பரிதிமாற்கலைஞரும்., உவேசாவும் எந்தக்காலம்.

    There is no change in my position. However much you attempt to abuse me, like Krishnakumar, when I point out bitter truths, I stand by what I hold. Don’t follow his example. He abuses all all who differ from him.

    If you are really concerned for Hindu religion, start a movement against the abuse of the religious concept Brahmin. Encourage any other word if you feel paarppanar is pejorative. Demand your caste socieity to change their name Tamilnadu Brahmanaar Sangam to Tamilnadu Paarppnar sangam or Andhanar Sangam.

    As long as you tage the name Brahmin, so long as you are digging a hole under the feet of Hindu religion. Stop it please.

  220. சாரங்கன்,

    //கடைசியில் நீங்கள் சொன்ன வரி ஒன்றே போதும். எல்லாம் நம்பிக்கை தான் என்றால். மந்திரமும் நம்பிக்கை சார்ந்தது என்று விட்டு விடலாமே.///

    நான் அதை முன்பே கூறி விட்டேனே. சிவனையும் , திருமாலையும் விண்ணை விட்டு மண்ணுக்கு வரச் செய்த தெய்வத்தமிழ் தமிழர்களிடம் இருக்கும் போது, சிவனையும், திருமாலையும் முருகனையும், ஏனைய கடவுளர்களையும் வணங்க அவர்களுக்குத் “மந்திரங்கள் நிறைந்த” சமக்கிருதம் தேவையில்லை. சமக்கிருதத்துக்கு மந்திரம் உண்டு என்று நம்புகிறவர்கள் அதைப் போற்றட்டும், புகழட்டும், சமக்கிருதத்தில் பாடட்டும் ஆனால், அது தமிழ்நாட்டில் தமிழின் செலவில் நடைபெறக் கூடாது. அதைத் தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்தாகும். . இப்பொழுதே பலர் தமிழுக்குப் பதிலாக சமக்கிருதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் முழுத் தமிழினமும் விழித்துக் கொள்ளும்.

    //மலை மகளை பதம் வந்த திருமுறை சொன்னீர்கள். இந்த விசயங்களை எல்லாம் நாயன்மார்கள் புராணங்களில் இருந்து தெரிந்து கொண்டனரா இல்லை புராணங்களுக்கு முன்னாள் எல்லாம் தமிழில் இருந்ததா.///

    பார்ப்பனர்கள் பழந்தமிழர்களின் தெய்வங்களாகிய, கொற்றவை, சேயோன், மாயோன், வேங்கடத்து நெடியோனை எல்லாம் அவர்களின் வேதக்கடவுளர்களுடன் இணைத்து புராணக் கதைகளைப் புனைந்து விட்டனர். அவற்றை நாயன்மார்கள் தேவாரங்களில் குறிப்பிடுகின்றனர். அதனால் தமிழர்களுக்கென தனியான தெய்வங்கள் இருக்கவில்லை என்று கருத்தல்ல. சிவன் ஒரு தமிழ்ச்சித்தர், சிவ வழிபாடு தமிழ்நாட்டில் தான் உருவாகியது என்ற கருத்துமுண்டு. இலக்குமி, சரசுவதி, மலைமகள் கூட தமிழ்நாட்டுத் தெய்வங்கள் அவற்றைப் பார்ப்பனர்கள் அவர்களின் புராணக் கதைகளுடன் இணைந்தது விட்டனர் என்றும் சிலர் வாதாடுகின்றனர். அதனால், இந்தக் கதைகள் எல்லாம் தமிழர்களுக்குப் புதிதல்ல, வெளியிலிருந்து வந்தவர்கள் தமிழர்களிடமிருந்தே கதைகளைப் பெற்று, தமது மொழியில் புராணக் கதைகளாக்கிக் கொண்டனர் என்று கூடக் கூறலாம். வியாசர் கூட ஒரு தமிழனே தவிர ஆரியர் அல்ல.

    நமசிவாய என்பதும் தமிழ்ச்சொல்லே.

    நமசிவாய என்றால் கருத்து: நாம் + சிவ + ஆயம் = நாங்கள் சிவனின் மக்கள்/குடிகள்/அடியார்கள் – We belong to Saivite Clan

    //மலைக்கு மகள் இருக்கலாம், கடலுக்கு மகள் இருக்கலாம். ஆனால் மந்திரத்துக்கு மட்டும் சக்தி கிடையாது.///

    நாவுக்கரசர் பாடியது மலையின் மகள் என்றல்ல, மலையான் மகள். மந்திரம் என்றால் எந்த மொழியில் இருந்தாலும் சக்தி இருக்க வேண்டுமே தவிர, சமக்கிருத் மந்திரங்களுக்கு மட்டும் தான் சக்தி இருக்கிறது என்பது வெறும் பம்மாத்து என்று நான் நினைக்கிறேன். மந்திரங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, ஆபிரிக்காவிலும் தான் உண்டு. அவர்கள் எல்லாம் சமக்கிருத மந்திரங்களை உச்சரிப்பதில்லை.

    //உங்களுக்கி பக்தி கை கூடாலாம், அதனால் திருமறைகள் போதும். ஆனால் ஒட்டு மொத்த ஹிந்துவும் பக்தி யோகத்திலே நிக்க வேணும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்கிறீர்கள். நீங்கள் திருமறைகளில் படிப்பது பக்தி யோகமே.///

    தமிழர்களுக்குத் தமது தாய் மொழியில் தேவாரங்கள் பாடி வழிபடும்போது வராத பக்தி அவனைத் தீண்டத்தகாதவனாகக் கருதி, அவனது கைகளில் பட்டு விடாமல், திருநீற்றைத் தூக்கிப் போடும் ஒருவர் வேறு ஏதோ ஒரு புரியாத மொழியில் முணுமுணுப்பதால் மட்டும் வந்து விடப்போவதில்லை.

    //. நான் எல்லாம் மந்திரம் கற்று, கர்மம் கற்று மனதை கட்டுபடுத்தி பின்னர் ஏதாவது ஒரு சென்மத்தில் பக்தி மார்கத்தில் நிலை பெறலாம். ///

    நீங்கள ஒரு பிராமண குலத்தில் பிறந்ததால் மந்திரம், கற்று, கர்மம் கற்றுப் பூசை செய்யலாம். ஒழுங்காக மந்திரமும், கர்மமும் கற்ற பார்ப்பனரல்லாத தமிழர்களையே கோயிலகளில் பூசை செய்ய அனுமதிப்பதைத் தடுக்க நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததொன்றல்ல. இப்பொழுது சிலர் எல்லோரும் பூணூல் அணியலாம், எல்லோரும் சமக்கிருதம் கற்கலாம் என்று தொடங்கியிருக்கிறார்கள் ஆனால் அது முழுப் பார்ப்பன சமூகத்தால் அங்கீகரிக்கபட்ட செயல் என நான் நம்பவில்லை. அதை உண்மையில் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் இந்து பிராமணர்கள் எல்லோரும் மனுதர்மத்தை முற்றாக ஒதுக்க வேண்டும். அது நடக்கக் கூடிய காரியமாக எனக்குத் தெரியவில்லை.

    //உங்களின் எழுத்துகளில் இருந்து நீங்கள் ஆரிய திராவிட வாதி என்பது தெளிவாக தெரிகிறது. ///

    எனக்கு ஏதாவது லேபலைக் குத்துவதிலேயே நீங்கள் குறியாக இருக்கிறீர்கள். எத்தனை மறுப்புக் கட்டுரைகளை எழுதினாலும் ஆரியர்கள் எங்கிருந்தோ இந்தியாவுக்குள் வந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.

    //, பிராமணர்கள் ஜெர்மனியில் இருந்து வந்தார்கள் ///

    அப்படிக் கூறுவதில் சில தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பெருமைபப்டலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை, தெலுங்கரல்லாத, இன்றும் ஆந்திர, கர்நடகா போன்ற இடங்களில் தமது வேர்களை கொண்டிராத தமிழ்நாட்டுப் பிராமணர்களின் முன்னோர்கள் எல்லோரும் பெருமானார்கள் என்றழைக்கபப்ட்ட. மொழி, கலை, மதம் என்பவற்றைக் கற்றுத் தேர்ந்த தமிழ்ச் சூத்திரர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னால் வைதீக சமயத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, ஏனைய பிராமணர்களுடன் மணவுறவுகளை ஏற்படுத்திக் கொண்டு நாளடைவில் பிராமணர்களாகியவர்கள். இந்த சமக்கிருதமயமாக்கல் இலங்கையிலும் நடந்தது. பல யாழ்ப்பாணச் சைவவெள்ளாளர்கள் முதலில் பூசாரிகளாகி/ குருக்களாகி, பின்னர் இந்தியாவில் பிராமணக் குடும்பங்களில் மணவுறவை ஏற்படுத்திய பின்னர், ஒன்றிரண்டு தலைமுறைகளில் தம்மைப் பிராமணர் என அழைத்துக் கொண்டனர். அது இன்றும் நடைபெறுகிறது.

    //இங்கு கோவிலில் இருந்து வந்த தமிழை விரட்டி விட்டு சமஸ்க்ருதத்தை புகுத்தினார்கள் தானே.///

    அதனால் தான் தமிழ் வெளியில் நிற்கிறது. தில்லையில் தீட்சிதர்கள் நடத்திய கூத்தைப் பார்த்த பின்னர், தமிழுக்கு தமிழ்நாட்டுக் கோயில்களில் என்ன நடந்திருக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

    //கோவில் என்ற கான்செப்ட்டே வேதத்தின் யாக சாலையிலிருந்து வருகிறது. ///

    சங்க காலத்தில் தமிழர்களின் கடவுள்களும் வழிபாடும், வழிபாட்டு முறைகளும் வேத வழிபாடுகளிலிருந்து வேறுபட்டது. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் தமிழர்களின் தெய்வங்கள் எல்லாம் வைதீக கடவுள்களுடனும் சடங்குகளுடனும் இணைக்கப்பட்டன். தமிழ்ச் சமயத்தின் தடயங்களை நாம் இன்றும் கிராமப் புறங்களில் காணலாம். ஆனால் சங்க காலத்திலேயே தமிழைப் பழித்த வடவர்களின் தலைகளில் கற்களை சுமந்து வந்து கண்ணகிக்குக் கோயில் கட்டினான் சேரன் செங்குட்டுவன் என்கிறது வரலாறு. அதனால் கோயில் கட்டும் வழக்கத்தைத் தமிழர்கள் வேதத்தின் யாகசாலையிலிருந்து பெற்றுக் கொண்டார்கள் என்பது உங்களின் வெறும் கற்பனையே தவிர உண்மையில்லை.

    //அப்படி என்றால் பாரதம் பூர தமிழ் தான் இருந்தது. ஆரியன் வந்தான் திராவிடனை கொன்றான் சரி தானே.///

    கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குப் புரிகிறது. உண்மை அதுதான்., பாரதம் முழுவதும் தமிழர்கள் தான் இருந்தார்கள் எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அண்ணல் அம்பேத்கார் கூட அதை ஒப்புக் கொள்கிறார். ஒருகாலத்தில் தமிழ் இந்தியா முழுவதிலும் பேசப்பட்ட மொழி என்கிறார்.

  221. Mr. Honest man,

    நான் கூறியதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள முடியாமல் நீங்கள் தான் அர்த்தமற்ற வாதம் செய்கிறீர்களென நினைக்கிறேன்.

    முஸ்லீம்கள் தமிழையோ, சுவாஹிலியையோ அல்லது மலையாளத்தையோ தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் கூ, அவர்களின் இன அடையாளத்தை விட மத அடையாளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக முஸ்லீம்களுடன் சகோதரர்களாக- ‘உம்மத்துக்களாக’ – இணைய வேண்டியது அவர்களின் கடமை. உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் இன்னும் தம்மைத் தமிழர்கள் என்று வாதாடினாலும் கூட இலங்கை முஸ்லீம்கள் தமிழைத் தாய் மொழியாகப் பேசினாலும் அவர்களில் பெரும்பான்மையானோரின் முன்னோர்கள் தமிழ்/மலையாள முஸ்லீம்களாக இருந்தாலும் கூட அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. மத அடிப்படையில் முஸ்லீம்கள் என தம்மைத் தனிப்பட்ட இனமாகத் தான் அடையாளப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வரும் அரபு மயமாக்கலும், வஹாபி இஸ்லாமும் அப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தலாம், என்பதை நான் பலமுறை தெரிவித்துள்ளேன்.

    ஆனால் அப்படி மத அடிப்படையில் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும், அல்லது குரான் போன்ற ஒரே புத்தகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இந்துக்களுக்குக் கிடையாது. உதாரணமாக, இலங்கைத் தமிழர்கள் தம்மை இந்துக்கள் என்று அடையாளப்படுத்துவதே குறைவு. உங்களின் சமயம் என்ன என்று ஒரு இலங்கைத் தமிழரைக் கேட்டால் நாங்கள் சைவம் என்பார் (அவர் பெருமாளையும் வணங்குவார்). இலங்கையில் சைவத்தில் வைணவமும் அடக்கம். நான் கூட இந்து என்று என்னை அடையாளப்படுத்துவதை விரும்புவதில்லை. சைவம் என்னும் போது “தென்னாடுடைய சிவனே என்பது போல், கூடுதலாக அது தமிழைக் குறிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழ் பேசும் சிவமத்தவனாகிய எனக்கும் ஹிந்தி பேசும் இன்னொரு இந்துவுக்குமுள்ள நெருக்கத்தை விட தமிழ் பேசும் ஒரு கிறித்தவனுக்கும் எனக்கும் நிறைய பொதுவான தொடர்புகளும், நெருக்கமும் இருப்பதாக நான் உணர்கிறேன். ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது துடிக்காத தமிழ்நாட்டு முஸ்லீமகளின் இதயம் பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டால் துடியாய்த் துடிக்கும். அந்த மதவுணர்வு தமிழர்களிடம் இல்லை அபப்டியிருக்க வேண்டுமென இந்துமதம் வற்புறுத்தவுமில்லை. அதனால் முஸ்லீம்களுக்கு பொதுவான மொழியாக அரபுமொழி இருப்பது போன்று சமஸ்கிருதம் தமிழர்களுக்குத் தேவையில்லை.

    “When it comes to religion – Hinduism – the religion of most Tamils, there has been a conscious effort ever since the time of Arumuga Navalar (1822 – 1879) to uphold Saivite traditions that highlight non-Brahminic Saiva Sitthanda approaches, in preference to the Brahminic Vedanta traditions. Even today, the Sri Lankan Tamil Hindus want to call their religion Saivism, and not Hinduism.” – Prof. Karthigesu Sivathamby-(The Making of a Sri Lankan Tamil)

    அதிலும் தமிழில் தேவாரங்களைப் பாடி எமது சொந்த மொழியில் வணங்கும் போது ஏற்படும் பக்தியும், திருப்தியும், புரியாத மொழியில் ஒருவர் புலம்பும் போது ஏற்படுவதில்லை என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். பூசை முடிய ஓதுவார்கள் தேவாரங்கள் பாடும் போது ஏறபடும் பக்தியும், புல்லரிப்பும் ஐயர் என்னவோ முணுமுணுக்கும் போது ஏற்படுவதில்லை. அவர் சரியாகத் தான் முணுமுணுக்கிறாரா என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்பது தான் உண்மை.

    //இங்கே மல்லு கட்டி வாதாடுபவர்கள் ” அடுத்த மாதம் ஜாவா போகிறாயா?” என்பதை சுத்த தமிழ் மொழியில் (Chaste Tamil ) எப்படி சொல்வார்கள்.? (குறிப்பு:— ஜா என்பது வடமொழி)//

    அப்பனே, உங்களுக்கு நக்கல் விடத் தெரிந்தளவுக்கு வரலாறு தெரியவில்லை. அப்படிச் சுத்த தமிழ் மொழியில் தான் பேசவேண்டுமென்ற நிலை வந்தால் ஜாவா என்பதற்கு சாவகம் என்ற தமிழ்ச் சொல் உண்டு. சாவகத் தீவுகள் எல்லாம் தமிழர்கள் ஆண்ட நிலங்கள் தான். 🙂

  222. சாரங்கன்,

    //பாலி ப்ராக்ருதத்தின் மருவல், ப்ராகருதம் சமஸ்க்ருத்தின் மருவல். புத்த மதத்தின் ஆதி நூல்கள் அனைத்து பாலி அல்லது சமஸ்க்ருதத்தில் தான் உள்ளன.///

    பிராகிருதம் சமஸ்கிருத்தின் மருவல் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா சாரங்கன். முதல் முறையாக இதைக் கேள்விப்படுகிறேன். அதனால் தான் கேட்கிறேன். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். நான் புத்தர் தமிழ் பேசியதாகக் கூறவில்லை. புத்தர் காலத்திலேயே தமிழ் நன்றாக வளர்ச்சியடைந்த மொழி, தமிழ் பரவலாகப் பேசப்பட்ட மொழி என்கிறேன்.

    //பாரத ஐக்கியம் என்ற கண்ணோட்டத்தில் சமஸ்க்ருத பணியை மத்திய அரசு செய்யட்டும்///

    சமக்கிருத்தினால் எப்படி பாரதத்தை ஐக்கியப்படுத்த முடியும் என்பதை சாரங்கன் விளக்கினார் என்றால் நல்லது. சமக்கிருதம் யாராலும் பேசப்படாத ஏற்கனவே செத்துப்போன மொழி. அது இந்துக் கோயில்களின் மட்டும் தான் இன்னும் உபயோகத்திலுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஏற்கனவே இந்தியாவில் வடக்கு- தெற்கு, உயர்ந்தா சாதி- தாழ்ந்தசாதி, இந்து-முஸ்லீம் பிரச்சனைகள் இருக்கும் போது சமக்கிருத்த்துக்கும் முன்னுரிமை கொடுத்தால், அது இன்னொரு பிரிவினையை உண்டாக்குமே தவிர தீர்த்து வைக்காது.

    //சமஸ்க்ருத்ததை தமிழை விட உயர்ந்த மொழி என்று எண்ணியே ஆக வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமஸ்க்ருத அபிமானிகள் எல்லோருக்கும் இந்த எண்ணம் கிடையாது.///

    நான் எதிர்ப்பதெல்லாம் “சமஸ்க்ருத்ததை தமிழை விட உயர்ந்த மொழி என்று எண்ணியே எண்ணியே ஆக வேண்டும் என்ற கொள்கை உடையவர்களை” மட்டும் தான். தமிழை இழிவு படுத்தாத வரை அதிலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழ்நாட்டில் தமிழை இழிவு படுத்தாதவரை, சமக்கிருதத்தை தமிழர்கள் மீது திணிக்காத வரை நீங்கள் சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, ஆபிரிக்காவின் சம்சம் குடியினரின் ஜம்ஜம் மொழியின் அபிமானியாகக் கூட இருக்கலாம். அதில் எனக்கெந்த ஆட்சேபனையுமில்லை.

    //இதையும் தமிழ் சாதிக்கும் என்றால் நீங்கள் ஒரு சின்ன யாகம் செய்து நிரூபணம் பண்ணலாம்.///

    தமிழிலும் யாகம் பண்ணலாம். முதலில் சமக்கிருதத்தில் அதிருத்ர யாகம் செய்து நீங்கள் இறந்த ஒருவரை உயிர்ப்பித்துக் காட்டினால்\, அதே யாகத்தை தமிழில் செய்து இறந்த இன்னொருவர் உயிர்த்தெழவில்லையேயானால், சமக்கிருத மந்திரங்களுக்கு தான் சக்தியுண்டு என்ற முடிவுக்கு நாங்கள் வரலாம். அது தான் உண்மையான நிரூபணமாக இருக்க முடியும்.

    //பிறமண்ணர்கள் //

    பிராமணன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. பெருமானார் என்று கற்றுணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். ஆனால் அவர்களில் சாதி வேறுபாடிருக்கவில்லை. அந்தப் பெருமானார்களே இக்காலப் பிராமணர்கள் என அழைக்கப்படுவோர் என்றும் சிலர் கூறுவர். பிறமண்ணர்கள் அல்லது பெருமானார் என்பது தான் சரியான தமிழ்ச் சொல்லே அல்லாமல் பிராமணர் அல்ல.

  223. //பிரம்ம என்பது சமஸ்க்ருத பதம், ப்ருஹதி (எப்பொழுதும் வளர்வது அல்லது அனைத்தையும் கடந்த பெரியது) பிரம்மம் என்று எதோ சில சில்வண்டுகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன பாவம்.///

    அநேகமான சமக்கிருத சொற்களின் தொடக்கத்தின் வேர்கள் ‘பிரம்’ PIRAM என்ற சொல்லில் இருப்பதைக் காணலாம்.

    பிரம் என்பது தமிழ் வேர்ச்சொல் ‘பரம்’ Param என்பதன் திரிபு – பரம்பொருள் = இறைவன்

    தமிழிலிருந்து > பிராகிருதமும் > சமக்கிருதமும் உருவாக்கப்பட்டன. தமிழ் மன்னர்கள் சமக்கிருதத்தை ஆதரித்ததற்கும், ஏற்றுக் கொண்டதற்கும் இது தான் காரணம்.

    பரமம் (தமிழ்) > பிரமம் (சமக்கிருதம்)

    சில உதாரணங்கள்:

    பிரசன்னம் = பரம் + சன்னம் – நுண்ணிய, அழகிய
    பிரசன்னம் என்றால் தெளிவாக, அழகாக காட்சியளித்த கடவுள்

    பிரசண்டம் = பரம் + சண்டம் (சண்டை) – கொடுமை அல்லது கடுமை

    பிரசாதம் = பரம் + சாதம் > சாதம் உருவானது தமிழ் வேர்ச்சொல் ‘சத்து’ என்பதிலிருந்து > மென்மையானது. சாதம், சோறு இரண்டுமே தமிழ்ச் சொற்கள்.

    பிரசாபதி = பிரம் + அரசு + அதி + பதி > கடவுளின் பெயர்

  224. உயர்திரு அரிசோனன்,

    //எனவே, அந்தண வகுப்பில் பிறந்தவர்களைப் பிராமணர்கள் என்று தொன்றுதொட்டு வழங்கி வந்தார்கள். அவ்வகுப்பிலேயே, வானியலும், சோதிடமும் கற்றவர்களைப் “பார்ப்பனர்” என்று செய்யும் தொழிலைச் சுட்டினார்கள். அவ்வளவே.///

    பிராமணர்கள் தமிழ்ச் சொல் அல்லவே. பார்ப்பனர்கள் என்பது பழந்தமிழ்ச் சொல். அக்காலத்தில் கோயில் கருமங்களையும், பூசாரி வேலை, வானியல், சோதிடம் முதலியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித் தமிழர்களாகிய வள்ளுவர்/பறையர் குலத்தினரைத் தான் பார்ப்பான் என்று பழந்தமிழர்கள் அழைத்தனர். இக்காலப் பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்கள் வருமுன்னர் பார்ப்பனத் தொழிலை, அதாவது பூசாரி வேலையைப் பார்த்தவர்கள் பறையர்கள், அதைத் தான் “பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன் அவன் கேட்பாரற்றுக் கீழ்சாதியானான்” என்ற பழமொழி சுட்டிக் காட்டுகிறது.

    . //மிக்க நன்றி. உங்கள் உள்ளத்தில் இருக்கும் இந்த உணர்வு அனைவர் உள்ளத்திலும் இழையோடினால், தமிழ் இனத்தை பிரித்துக் குளிர் காய இடைவிடாது முயன்றுகொண்டிருக்கும் கயவர்கள் ஒடுங்கி, அழிந்து போய்விடுவார்கள்.///

    பிராமணர்கள் அனைவரையும் தமிழர்கள் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழைத், தமிழர்களை இழிவு படுத்தும், தமிழர்களின் நலன்களுக்கெதிராக இயங்கும் சு.சுவாமி போன்ற பிராமணர்களைத் தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.

    எனக்கு இக்காலப் பிராமணர்களை பிராமணர் என்றழைப்பது தவறு என்று தான் தோன்றுகிறது. பிராமணன் என்பதற்கு தமிழில் ‘நன்நெறியாளன்’ என்ற கருத்தென்றால் நிச்சயமாக இக்காலப் பிராமணர்கள் அனைவரையும் அப்படி அழைப்பது தவறு என்று தான் படுகிறது. உங்களின் வேண்டுகோளின்படி பார்த்தால், தில்லையில் தமிழில் தேவாரம்பாட முயற்சித்த ஆறுமுகசுவாமி என்ற முதியவரை மூர்க்கத்தனமாக கீழே தள்ளியவர்களையும் (காணொளியில் பார்த்தேன்) பிராமணர்கள் அதாவது நன்னெறியாளர்கள் என்று அழைக்க வேண்டும். எனக்கு அதில் உடன்பாடில்லை. நீங்களே “பிராமணன் ஆவதற்கு ஒரு பிராமண வகுப்பில்தான் பிறக்கவேண்டியதில்லை” என்று கூறி விட்டு, ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் பிராமணர்கள் என்று அழைக்குமாறு கேட்பதில் நியாயமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் நீங்கள் வேறொரு மாற்றுப் பெயரைக் குறிப்பிடும் வரையில் பார்ப்பனர் என்பது தான் பொருத்தமான பெயராக எனக்குப் படுகிறது. . உங்களின் அன்பான கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

  225. ரெவ ரெண்டு பாசுக்……… @ ஜோ அமலன் ஃபெர்னாண்டோ

    \\\\ பிராமணர் என்பது தங்களுக்குத்தாங்களே இவர்கள் சூட்டிக்கொண்ட பட்டப்பெயர். \\\

    முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கம் செய்ய வேண்டி உளறிக்கொட்டுவது………………

    விவாதத்தை முனைந்து…………… ஜாதிக்காழ்ப்பு ஹிந்துமதக்காழ்ப்பு வைஷ்ணவக்காழ்ப்பு என்றெல்லாம் தடம் புரளச் செய்வது என்பதெல்லாம்…….

    ஒவ்வொரு அவதாரத்திலும் உங்களால் செயப்படும் கீழ்மையான செயற்பாடுகள்.

    இந்த அவதாரத்தில் வைஷ்ணவர்களை மாற்று மதத்துக்கு மதம் மாற்றும் ஏஜெண்டு வேலையையும்

    பொது தளத்தின் வாயிலாகச் செய்யும் கீழ்மையின் வாயிலாக உங்களது கீழ்மைச் செயல்பாட்டை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

    ப்ராம்ஹண என்பது சம்ஸ்க்ருத சொல். நீங்கள் அறவே —– கூகுள் சர்ச் அல்லால் —- அறியாத சமாசாரம். எதற்காகப் பேத்த வேண்டும்?

    கூகுள் சர்ச் வாயிலாக வாசித்து வாந்தியெடுப்பதே உங்களுக்கு அறிவுப்பகிரல்.

    வால்மீகி ராமாயணம் என்ற தலைப்பை மட்டிலும் படித்து விட்டு கண்ட கண்ட இணைய கந்தறகோளங்களில் வாசித்த பேத்தல்களை ………….

    வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டது என்று கூசாது பொது தளத்தில் புளுகித் தள்ளியிருக்கிறீர்கள் முந்தைய அவதாராதிகளில்.

    அது போன்ற பேத்தல் இது.

    உங்களைக் குறை கூறி ப்ரயோஜனமில்லை. இன்னமும் மலையேறாத இந்த முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கியின் பேத்தல்களை ஏதோ புதிய நபர் என்று நினைத்து விவாதிக்க முனையும் தளத்து வாசகர்களையே குறை கூற வேண்டும்.

    தமிழை இழித்துப்பழிப்பதற்காகவே Tamil என்று அவதாரமெடுத்து தமிழைப்பற்றிப் பேத்திப் பினாத்திய போது ஸ்ரீ சாரங்க் அவர்கள் கேட்ட கேழ்விகளுக்கு பதில் தெரியாது துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று புறமுதுகிட்டோடி…………… அது தெரியக்கூடாது என்று இப்போது புதிய அவதாரம் எடுத்து வயணமாக மொத்து வாங்கியது போதாதா?

    பேத்தல் இம்சைகள் தாளவில்லை.

    .எத்தனை அவதாரம் எடுத்தாலும் மொந்தை மட்டிலும் புதுசு அதே நாற்றமெடுத்த கள்ளு என்று செயல்படுவதால்……………

    நாலு வாசகம் எழுதிய உடனேயே ஆசாமி யார் என்று தெரிந்து முகமூடியைக் கிழித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

    சட்டுப்புட்டுன்னு வேற அவதாரத்துக்கு மாறுங்கள். இனிமேல இங்க கடை கட்ட முடியாது.

    புதிய பெயர் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டாலும் செய்வது மறைமுக சுவிசேஷ ப்ரசங்கம் தான் என்பது தான் எல்லோருக்கும் தெரிந்து தொலைத்து விட்டதே

  226. வியாசன்

    //
    பிரம் என்பது தமிழ் வேர்ச்சொல் ‘பரம்’ Param என்பதன் திரிபு – பரம்பொருள் = இறைவன்

    தமிழிலிருந்து > பிராகிருதமும் > சமக்கிருதமும் உருவாக்கப்பட்டன. தமிழ் மன்னர்கள் சமக்கிருதத்தை ஆதரித்ததற்கும், ஏற்றுக் கொண்டதற்கும் இது தான் காரணம்.
    //

    நிஜம்மா சொல்றீன் நான் இதை படித்து அத்வைத ஞானம் பெற்றேன். அபரோக்ஷ ஞானம் பெற்று கிட்டத்தட்ட சித்தி நிலையில் இருக்கிறேன்.

    நீங்கள் சொல்வதை சூ பீ கூட நம்ப மாட்டார்.
    ஆதாரமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் கட்டுகதையாக அடுக்கலாம் என்பதற்கும். ஒர்வரால் எப்படி மாயில் சிக்கி இருக்க முடியும் என்பதற்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

    இதோ பாருங்கள்

    //
    பெருமானார் என்று கற்றுணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். ஆனால் அவர்களில் சாதி வேறுபாடிருக்கவில்லை. அந்தப் பெருமானார்களே இக்காலப் பிராமணர்கள் என அழைக்கப்படுவோர் என்றும் சிலர் கூறுவர்.
    //
    க்ஷத்திரிய பதம் எப்படி வந்ததேன்னு கூறுகிறேன் பாருங்கள்.

    சேறு உடைய இடம் க்ஷேத்திரம் அந்த சேத்திரைத்தை ஆளுபவர்கள் க்ஷத்திரியர்கள்.

    வைஷ்ய பதம்
    இவர்களுக்கு தொழில பற்றி விடயம் தெரிந்ததால் விடையார் என்றும் விசயர் என்றும் பின்னர் வைசியர் என்றும் மருவியது.

    சமஸ்க்ருதத்தில் இருந்து சயுத்தாக்ரங்களை தவிர்த்து உருவானதே ப்ராக்ருதம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட மெய்யெழுத்து சேர்கைய சய்யுத்தாக்ஷரம்.

    தத்த்வம் என்பதில் சய்யுத்தாக்ஷரம் இருப்பதை பார்க்கலாம், இது உச்சரிப்பு கஷ்டம் என்பதால் தத்துவம் என்றோ தத்வ என்றோ மாறி ப்ராக்ருதம் ஆகும்.
    க்ஷமா என்பது ஷமா என்றாகும்.

    மகாராஷ்ட்ரீ என்ற இன்றைய மராட்டி, ப்ராக்ருதத்தின் ஒரு உதாஹரணம்.

    கல்வெட்டு ஆதாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று தெரியாது. எண்ணற்ற கல்வெட்டுக்கள் காட்டும் உண்மை எப்படி சமஸ்க்ருதத்தில் இருந்து ப்ராக்ருதம் வந்ததடைன்தது என்பதை. இது வரைக்கும் ஒரு தமிழ் கல்வெட்டு கூட இல்லை நீங்கள் கூறு அபத்த தமிழ் ப்ராக்ருத சமஸ்க்ருத கதை பாட.

    பிரத்யக்ஷமாக தெரிவதை கூட உல்டா செய்து மறுக்கும் நீங்கள் அசமானியர்.

    பிரஜாபதிக்கு நீங்கள் தரும் அசத்தல் அர்த்தத்தை பாருங்கள்.

    ஜா என்றால் சமஸ்க்ருதத்தில் பிறப்பை குறிக்கும்., பிரகர்ஷனே ஜா என்றால் பிரஜா நன்கு பிறந்தவன் ஏன்னு அர்த்தம். அப்படிப்பட்ட பிறந்தவர்களின் பதி: தலைவர் பிரஜாபதி. எதை எப்படியாவது தமிழிலிருந்து தொர்டியதாக காட்ட வேண்டும் என்று. பிர அரசு படி என்று எதோ பிதற்றல்.
    பர என்பதும் ப்ர என்பதும் வேற வேற முன்னொட்டுக்கள். நீங்கள் ப்ர என்பதை எடுத்து பரவில் புகுத்தி அசத்துகிறீர்கள்.

    பரம் என்பது ப வர்க்கம் முதல் அக்ஷரம். அதற்கு கடந்தது என்று பொருள். பிரம்மம் என்பது ப வர்க்கம் மூணாவது அக்ஷரம் அதற்க்கு வளர்வது என்று பொருள். இது இரண்டும் தமிழில் பிர என்று நீங்கள் எழுதி பார்த்து நியூடனுக்கு ஆப்பிள் விழுந்த கதை மாதிரி உங்களுக்கு யோசனை அடித்துள்ளது.

    நீங்கள் கொடுத்த அத்தனை எடுத்துக் காட்டுகளும், ப்ர (பிரகர்ஷென) என்ற முன்னொட்டு. அதற்கும் பிராமத்திர்க்கும் சம்பந்தமே இல்லை. ப்ருஹதி பிரமம் என்றே தாது.

    ப்ரஹ்மம், ப்ருஹத் ஆரண்யக உபநிஷத், ப்ரஹன் நலா (அர்ஜுனனின் பெயர்), ப்ருஹத் டிகா (பெரிய குறிப்பு), இதெல்லாம் வேறு (இதில் முன்னோட்டே இல்லை)
    ப்ரவீன், ப்ரமாணம், ப்ரசாதம், ப்ரக்ருதி, ப்ரவேஷம், ப்ரமாதம் (உணகளுக்கு இருப்பது), ப்ராசீனம் இதெல்லாம் வேறு

    பரமாத்மா, பரதன்றம், பராமர்ஷம், பரமார்த்தம், அபாராம், இதெல்லாம் வேறு.

    இது ஒன்றே போதும் நீங்கள் செய்ய நினைப்பது மாயாஜாலம் தான் என்று விளங்கிக் கொள்ள.

    //
    நமசிவாய என்றால் கருத்து: நாம் + சிவ + ஆயம் = நாங்கள் சிவனின் மக்கள்/குடிகள்/அடியார்கள் – We belong to Saivite கலன்
    //
    அடிச்சு நொறுக்கு கிறீர்கள் பார்த்தீர்களா.

    அது நமசிவாய அல்ல. நமச்சிவாயம் நடுவில் ஒரு இச்சை விட்டுவிட்டீர்கள்.

    சிவாய என்பது சிவ: சப்தத்தின் நாற்றாம் வேற்றுமை உருபு . எதற்கு நான்காம் வேற்றுமை உருபு என்றால் அது சமஸ்க்ருத இலக்கணம்.

    நம ப் பிரயோகே சதுர்த்தி என்று (நம: வந்தால் நான்காம் வேற்றுமை உருபு தான் எடுக்கணும் என்னு, அக்னேயே நம:, லக்ஷ்ம்யை நம:) . நம: என்றால் என்னை சார்த்து இல்லை நம: சிவாவ என்றால் என்னை சார்ந்தது அல்ல சிவனை சார்ந்தது என்னு அர்த்தம்.
    நம: என்பதில் விசர்க்கம் இருக்கிறது அது ஸ காரமாக மாறும் அதை தமிஹில் ச என்றாகும் அதனால் நமச்சிவாய.

    நீங்கள் செய்வது தங்கப்ப தக்கம் அல்லது சுக்குமி லகுதி இப்பிலி காரியம். 🙂 ஆனால் இன்னுறீங்க சார். நான் ஒரு creative researcher. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்கள் செய்வது heights of creativity.

    மற்றபடி சமஸ்க்ருத இலக்கண முறைக்கும் கட்டமைப்புக்கும் தமிழுக்கும் உள்ள சம்பந்தம் அமாவாசைக்கும் சுவன பிரியனுக்கும் உள்ள சம்பந்தம் தான்.

    அமாவாசை. அம்மா ஆசையுடன் இருக்கும் நாள் இல்ல. ஏன் ஆசையுடன் இருக்கிறாள், அமாவாசைக்கு அப்புறம், வளர்பிறை வரும். இல்லன்ன அம்மா பௌர்ணமி நிலாவ காட்டி தோசை ஊட்டுவா அந்த தோசை கொஞ்சமா தீர்ந்து தீர்ந்து கொழந்தை முழுசா சாப்டதுன்னா ஒண்ணுமே இருக்காது அது அமாவாசையின் ஒரு குறியீடு இல்ல.

  227. வியாசன்

    ஆரியன், தமிழிலிருந்து வேதத்தை மொழி பெயர்தான், தமிழ் சடங்குளில் இருந்து காப்பி அடித்து பதினெட்டு புராணங்கள் செய்தான். இதிகாசம் செய்தான். அப்புறம் தமிழன் செய்த நூல்கலஎல்லாம் கப்பல் எத்தி குமரிக் கண்டம் புதைந்த இடத்துள் ஒரு பெரிய குழி தோண்டி புதைத்து விட்டான். அங்கிருந்து இவள் மீலாது என்று எண்ணி அந்த இடத்திற்கு மீலாது இவை என்று பெயர் வைத்தேன், அது தான் மருவி. மீலாதவு, மீலாதீவு, மாலத்தீவு என்று மாறியது.

    கிருஷ்ணரும் தமிழ் திராவிட கடவுளே. அவர் வாடிபட்டியிளிருந்து மாடு ஒட்டிக்கொண்டு போகும் பொது தொலைந்து போய் ட்வாரகவுக்கு போய்விட்டார். கயிலாய மலை உண்மையில் இலங்கைக்கு பக்கம் இருந்தது அதை ராவண அப்படியே எடுத்து வடக்கே வைத்து விட்டான், தமிழ் திராவிட கடவுள் சிவனை ஆரிய கயவர்கள் இப்படிதான் கபளீகரம் செய்தனர்.

    உணமையிலேயே ஸ்ரீ ருத்ரம் என்பது, தேவாலாப் பாரியார் என்ற தமிழர் எழுதியது. அவரது குரவளியை நெரித்து சமஸ்க்ருதப்படுத்திய கத்தை உலகமே அறியுமே.

    சிவ என்பது ஒரு சித்தரின் பெயர். வேண்டுமானால் கூகிள் செய்து பாருங்கள், எத்தனை சித்தர்களின் பெயர்கள் சிவ என்று இருக்கும், எவ்வளவு ஆரிய கடவுள்களின் பெயர்கள் சிவ என்று உள்ளது. சித்தர்கள் தான் ஜாஸ்தி என்பதால் சிவ என்பது சித்தரையே குறிக்கும்.

    ஸ்ரீ என்பதும் தமிழ் பதமே. சிர்த்து கொண்டே இருப்பதால் சிரி என்பது ஸ்ரீ ஆனது. வேண்டுமானால் எந்த சாமி படத்தையும் பாருங்கள். எல்லா சாமியும் சிரிச்சிகிட்டே தான் இருக்கும்.

    இலக்குமி தமிழ் கடவுள் தான், உண்மையில் பாற்கடல் என்பது தமிழ் நாட்டிலே தான் உள்ளது. பாலாறு தான் பாற்கடல், அதை தூர் வாரும் பொது கிடைத்தவள் தான் இலக்குமி, இலையின் மீது அவள் கிடந்ததால் இல்லை மேல் என்று அவளுக்கு பெயர். காலப் போக்கில் அது இலக்குமீ என்று மாறியது. வட நாட்டில் பாலாறு எங்கே இருக்கு.

    மலை மகள் உண்மையில் பிராங்கி மலைக்கு பிறந்தவள் தான். ஹிமவான் புத்ரி இல்லை அவள். பிராங்கி தான் திரிந்து கிரி ஆனது. மகள் திரிந்து ஜா ஆனது அதுவே கிரிஜா ஆனது. (பிராங்கி என்பது கிரி என்று எப்படி திரிந்தது, எல்லாம் வியாச பத்தத்தி தான், பிற மன்னர் பிராமணன் ஆகும் போது இது ஆகாது என்று யார் சொல்லுவது).

    ராமன் தமிழ் பெயர், ராவா மண்ணெடுத்து சேது அமைத்ததால் ராமண் ஆனான். அனுமன் தமிழ் பெயர், அணுவாக இருந்து பெரிய உருவம் எடுத்து கடலை தாண்டியதால் அனுமன். கடலை தானே தாண்டினான் அனுமன் என்று எப்படி ஆனது அனுகடல் என்று எப்படி ஆனதென்றால் கடலுக்கடியில் மண் இருப்பதால் தோஷமில்லை என்றாவது.

    வேடத கால 320 BCE. அலெக்ஸ்சாண்டர் இந்தியா வந்தது 526 BCE. அவன் வரும்போது கூட இந்தியா முழுவதும் எல்லோரும் தமிழ் பேசிக் கொண்டிருந்தனர். எப்படி நாம் தெரிந்து கொள்வது. அவனை எதிர்த்த அரசன் யார் புருஷோத்தமன். இது தமிழ் பெயர். புறம் என்பதில் இருந்து தான் புருஷ என்பது வந்தது என்று ஏற்கனவே பார்த்தோம். ஆகா தமிழ் பெயரை கொண்ட ஒரு அரசனை அலெக்ஸ்சாண்டர் எதிர்த்தார். அலெக்ஸ்சாண்டர் ஒரு விநோதமானாக் மொழியை அவனுடன் கொண்டு வந்தான் (கிரேக்கம்) அவன் தமிழ் வேதங்களின் திருமறைகளின் நேர்த்தியை பார்த்து அசந்து போய் அதை அப்படியே கிரக்கத்தில் மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் சிக்கல் ஏற்படவே கிரகத்தை மாற்றி தமிழை அதில் சேர்த்தான். கிரக்கம் என்ற மொழியை பெயர் மாற்றி கிருத்தம் என்று வைத்தான். இந்த கிருத்தம் தான் சமஸ்கிருத்தம் என்றானது அப்புறம் சமஸ்க்ருதம் என்றானது.
    புருஷோத்தமின் சபையில் ரேணு என்று ஒரு அமைச்சர் இருந்தார் (நேருவின் முன்னவதாரம்) , அவரது மனைவியை அலேக்ஸ்சு அபஹரித்தான், மனைவி மீது தீராத காதல் கொண்ட ரேணு அலெக்ஸ்சை கெஞ்ச, அலேச்சு அவனுக்கு ஒரு நிபந்தனை வைத்தார். நீ என்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் தமிழ் பாரத மொழி இல்லை கிருத்தாம் இந்திய மொழி என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். அத்தனை தமிழ் கடவுள்களையும் கிராக்க சாமியாக்க வேண்டும் அப்படி செய்தால் உன் மனைவி உனக்கு இல்லையேல் அவள் எனக்கு என்றான்.
    நிபந்தனையை ஒப்புக்கொண்ட கொண்ட ரேணு அதை செய்து காட்டினார். அசந்து போன அலெக்ஸ்சு உனக்கு வரம் தருகிறேன் என்ன வரம் வேண்டும் என்றால். ரேணு சொன்னார் நான் ஒரு நாள் நிருவாக பிறப்பேன் அப்போ நீ மவுண்டாக பிறந்து உன் மனைவியை நான் தூக்கிக் கொண்டு போவேன் என்றான். அப்படியே ஆகட்டும் என்றான் அலெக்ஸ்சசு மேலே எல்லாம் நாம் அறிந்த வரலாறு.

    நான் துக்ளக்கு படித்து சத்தியமாக ரொம்ப நாள் ஆகிவிட்ட போதிலும் வாசனை இன்னும் போகவில்லை.

    இந்தியா முழுவதும் தமிழ் தான் பேசினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம். இதுவரை தமிழ் நாடு ஆந்திரா கர்நாடகாவில் தான் தமிழ் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. வட இந்தியாவில் எங்குமே கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா பூராவும், சமஸ்க்ருத கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்த ஒரு ஆதாரமே போதாத தமிழ் தான் இந்தியா முழுதும் கிடைத்தது என்று.

  228. வியாசன்

    செத்தவன் உயிர் பொழைத்தது. பிரம்படி பட்டது எதெல்லாம் புராணம் (நம்பலாம் நம்பாமலும் இருக்கலாம்). யாகம் என்பது செய்து நேரே அதன் பலனை பார்க்கலாம்.

    முடிந்தால் நீங்கள் இறந்த ஒருவனுக்கு உயிர் கொண்டுங்களேன். என்னால் அதிருத்ர யாகம் செய முடியாது பல கோடிகள் செலவாகும். அக்னி ஹோத்திரம் செய்து அச்சூழலில் விளையும் மன சுற்றுப்புற மாற்றத்தை என்னால் நிரூபித்து காட்ட முடியும்.

    நான் உங்கள் நம்பிக்கையை சிதைக்க வில்லை. இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை காட்ட விழைகிறேன்.

    மற்றபடி 360 இல் தான் வேதம் மொழி பெயர்க்கப்பட்டது என்பது நமக்குள்ள சர்வ வித பிரமானங்களுக்கும் புறம்பானது, மொழிவியல், ஆகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆதாரங்கள், literary evidences, பாரதம் முழுவதும் பறந்து கிடக்கும் பாரம்பரிய சம்பிரதாய ஆதாரங்கள் அனைத்திற்கும் புறம்பானது.
    இந்தியனை கொள்ள மாக்ஸ் முல்லர் வேண்டாம், நீங்களே போதும்.

    உங்களுக்கு பாரத ஐக்கியம் என்றால் என்ன என்று விளங்காது உங்களுக்கு மொழி வெறி தான் முக்கியம் (நீங்களே சொல்லி விடீர்கள்). இஸ்லாமிஸ்டு தமிழ் பேசினால் அவன் தான் உயர்ந்தவன் உங்களுக்கு.

  229. அன்பின் ஸ்ரீ வியாசன்,

    நான் எனக்குத் தெரியாத விஷயங்களை விவாதிப்பதில்லை.

    உதாஹரணத்துக்கு எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியும். ஆனால் ஆழ்ந்து இலக்கண சுத்தத்துடன் தெரியாது.

    சம்ஸ்க்ருதத்தில் ஒரு பதத்திற்கு வேர் இன்னது என்று புரிந்துகொள்ள தாதுரூப நிர்ணயம் போன்ற க்ரந்தங்கள் உதவுகின்றன என்று அறிவேன். முறையாக முழுமையாக சம்ஸ்க்ருதம் பயின்ற எனது மித்ரர்களிடம் இருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்.

    தமிழ் பற்றியும் செறிவான தமிழ் இலக்கணம் பற்றியும் உங்களிடம் அறிவது மகிழ்ச்சியே.

    சம்ஸ்க்ருத பதங்களுடைய தாதுக்களை ( வேர்களைப் ) பற்றி நீங்கள் தாதுரூப நிர்ணயம் அல்லது சமானமான சம்ஸ்க்ருத க்ரந்தங்கள் வாசித்து அதன்பாற்பட்டு உங்கள் கருத்துக்களை சொல்வதாக மேலோட்டமாகத் தெரியவில்லை.

    வாதங்களை முன்வைப்பதற்கு குத்துமதிப்பான விஷய ஞானம் போதுமானதில்லை.

    முழு விஷய காம்பீர்யம் இல்லாத ஒரு சம்வாதம் பயனற்றதாகும்.

    நிற்க.

    \\\\\ முஸ்லீம்கள் தமிழையோ, சுவாஹிலியையோ அல்லது மலையாளத்தையோ தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் கூ, அவர்களின் இன அடையாளத்தை விட மத அடையாளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக முஸ்லீம்களுடன் சகோதரர்களாக- ‘உம்மத்துக்களாக’ – இணைய வேண்டியது அவர்களின் கடமை. \\\\

    எப்படி த்ராவிட இனம் (த்ராவிடம் என்பது சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ஒரு நிலப்பரப்பாகவே சொல்லப்பட்டுள்ளது) என்பது மாயையோ அப்படிப்பட்ட மாயை உலகளாவிய முஸ்லீம் உம்மா என்பது. அது வெறும் சும்மா.

    1947ல் ஹிந்துஸ்தானத்தை மதவெறியால் பிளந்த முஸல்மாணியர் தாருல் இஸ்லாம் என்ற ஒரு நிலப்பரப்பை படைத்ததாக நினைத்தது வெறும் பகற்கனவு மட்டிலுமே.

    எப்படி ஒரு வெறியால் (மத வெறி) பாகிஸ்தானம் (pakistan) என்ற நிலப்பரப்பு உருவாக்கப்பட்டதோ அப்படியே இன்னொரு வெறியால் (மொழி வெறி) அந்த வெறி நிலப்பரப்பு மீண்டும் இரண்டாகப் பிளக்கப்பட்டு கருவறுக்கப்பட்டு Baqi Sthan (மிச்சம் மிஞ்சிய மீதி ஸ்தான்) என்றும் பாங்க்ளாதேஷ் என்றும் நிலைகுலைந்தது.

    இஸ்லாத்தில் இருக்கும் பன்முகத்துடன் உங்களுக்கு பரிச்சயம் கூட இருந்திருக்காது.

    மதக்கலவரம் என்றால் ஹிந்துக்கள் மற்றும் முஸல்மாணியரிடையே நடக்கும் கலவரம் மட்டிலும் தான் என்று நினைப்பவருக்கு இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாது.

    ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லையில் பல பகுதிகளில் கடந்த இரண்டரை தசாப்தங்களாகப் பழகியுள்ள எனக்கு இஸ்லாத்தின் பன்முகம் சமூஹ ரீதியில் நன்றாக பரிச்சயம். சித்தாந்த ரீதியில் இறையியல் கோட்பாடு என்ற பெயரில் ஒரு அரக்கக் கோட்பாட்டை அறிந்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

    லக்னௌ மற்றும் கான்பூர் பகுதிகளில் எத்துணை முறை ஷியா மற்றும் சுன்னி முஸ்லீம்களுக்கிடையில் மதக்கலஹங்கள் நிகழ்ந்துள்ளன என்று உங்களுக்குத் தெரிந்தால் இப்படி ஒரு மாயையில் உழலமாட்டீர்கள்.

    அது மட்டிலும் என்ன சுன்னி முஸலமாணியரிடையேயும் மிகப்பெரும் பிளவு இஸ்லாத்தில் உண்டு.

    உத்தர பாரதத்தின் பல பகுதிகளில் பரேல்வி சுன்னி காஜி நடத்தி வைக்கும் நிக்காஹ்நாமா தேவ்பந்தி சுன்னி முஸல்மாணியரிடையே செல்லுபடியாகாது என்ற கூத்தெல்லாம் நடந்திருக்கிறது. அதுக்கு வைஸ் வெர்ஸாவாகவும் உண்டு.

    காஸா பட்டியில் யஹூதிய இஸ்ரேலி சர்க்கார் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப் போராடும் போரில் அப்பாவி முஸல்மாணியர் மாண்டுபோவதற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஹிந்துஸ்தான சுன்னி முஸல்மாணியர் ஐ எஸ் ஐ எஸ் என்ற உலகளாவிய பயங்கரவாத வஹாபிய இயக்கத்துக்கு ஆட்களை அனுப்பி ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளில் ஷியா முஸல்மாணியரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடில்லாது கொன்று வருகின்றனர். அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களை குண்டு வைத்து தகர்த்து வருகின்றனர். யூனிஸ் என்ற க்றைஸ்தவ போதகரின் சமாதி க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமியரின் வழிபாட்டு ஸ்தலமாக பன்னூற்றாண்டுகளாக இருந்து வந்தது. இதை வஹாபிய பயங்கரவாத இயக்கமான ஐ எஸ் ஐ எஸ் குண்டு வைத்து தகர்த்துள்ளது.

    அடித்தள உழைக்கும் மக்களது இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலம் தர்காஹ் ஷெரீஃபுகள். இவற்றை குண்டு வைத்து தகர்க்கின்றர் வஹாபிய பயங்கரவாதிகள். அதை எதிர்க்கின்றனர் எமது பரேல்வி சுன்னி மற்றும் ஷியா சமூஹத்து முஸல்மாணிய சஹோதரர்கள் என்று அறியக்கடவீர்.

    Baqi Sthan என்று இன்று நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானத்துக்கு ஹிந்துஸ்தான பட்டுவாடாவின் போது சென்ற ஹிந்துஸ்தான முஸல்மாணியரை இன்னமும் மொஹாஜிர் (சரணார்த்தி) என்றே அழைக்கின்றனர் அந்த நிலப்பரப்பில். அவர்கள் அங்குள்ள பஞ்சாபி மற்றும் சிந்தி முஸல்மாணியரால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். முட்டாஹிடா க்வாமி மூவ்மெண்ட் ( முன்னர் மொஜாஹிர் க்வாமி மூவ்மெண்ட்) என்ற இயக்கத்தின் அத்யக்ஷகரான ஜெனாப் அல்டாஃப் ஹுஸைன் சாஹேப் (லண்டன் மாநகரத்தில் சரணார்த்தியாக வசித்து வருகிறார்) அவர்கள் 1947ல் ஹிந்துஸ்தானம் பிளக்கப்பட்டது 20 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த பயங்கரமான பெரும் தவறு என்று பொது தளத்தில் கருத்து வைத்துள்ளார். பஞ்சாபிகளால் ஆன baqi sthani ராணுவம் சிந்திகளுக்கெதிரானது என்று சிந்திகள் கடுப்பில் இருக்கின்றனர். பலோசிகளை பஞ்சாபிகளால் ஆன ராணுவம் பல முறை படுகொலை செய்துள்ளது. பஷ்டூ மொழி பேசும் பக்டூன் க்வா @ வடமேற்கு மாகாணத்தில் இந்த இழிந்த நிலப்பரப்பின் ராணுவத்திற்கு அதிகாரம் கூட கிடையாது என்பது உலகறிந்த ரகசியம்.

    காதியானி (Qadiyani) எனப்படும் அஹ்மதியாக்கள் Baqi Sthan என்ற நிலப்பரப்பில் வெகு காலமாக இஸ்லாத்தின் ஒரு பிரிவாகவே புழங்கி வந்தனர். ஆனால் சமீபத்தில் இஸ்லாமிய மதவெறி பொங்கும் அந்த நிலப்பரப்பில் அஹ்மதியாக்கள் இஸ்லாமியர் இல்லை என்று சட்டமே இயற்றப்பட்டு உள்ளது. ஹிந்துஸ்தானத்தில் அஹ்மதியாக்கள் சட்டரீதியாக இஸ்லாமியரே.

    ஹிந்துஸ்தானம் முழுதும் ஷியா முஸல்மாணியர் இருந்தாலும் குஜராத்திய தாவூதி போஹ்ரா முஸல்மாணியர் வேறு. மற்றைய ஷியா முஸல்மாணியர் வேறு.

    முத்தலாக் சொல்லி நொடிப்பொழுதில் நிக்காஹ் செய்த பெண்ணை விவாஹ ரத்து செய்ய முடிகின்ற அதே இஸ்லாத்தின் ஒரு பிரிவில் விவாஹ ரத்து என்பதே அவர்களது பிரிவின் படி ஹராம் (பாப கார்யம்)

    எனவே உலகளாவிய முஸ்லீம் உம்மா என்பது சும்மா.

    ஏகம் சத் விப்ரா: பஹுதா வதந்தி.

    ஒன்றே ஒன்றான உண்மைப் பொருளானது சான்றோர்களால் பலவாக விளக்கப்படுகிறது என்பது பரத கண்டத்து சான்றோர் பெருமக்களின் முடிந்த முடிபு. வழிபடு முறைகள் எப்படி இருப்பினும் அனைத்தும் இறைவன் திருவடியையே அடைய அடிகோலும் என்பது தத்துவங்களில் ஆழ்ந்த சான்றோர்களின் முடிபு.

    பன்மை என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த வரப்ரசாதம்.

    அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்பதே உலக நடப்புகள் மானுடத்திற்குத் தெரிவிக்கும் செய்தி.

  230. கிருஷ்ணகுமாருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. அவர் ஜாதியினரை, பிராமணர் என்ற பெயரை விட்டுவிட்டு வேறேதாவது பெயரை வைத்துக்கொள்ளுங்கள். பிராமணர் என்பது ஜாதிப்பெயராகாது. அப்படி வைத்தால் இந்துமதத்தின் அடிப்படைக்கொள்கையை தமக்கு வசதிக்காக மாற்றி சமூகத்தை நம்பவைப்பதாகும் என்று சொன்னது கிருஷ்ணகுமாரின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.

    சொல்லுங்கள் நீங்கள் எப்படி பிராமணர் ஆனீர்கள்? ஆவிர்கள்? உங்களுக்கு மட்டும் தகுதி இருக்கிறதாக‌ எப்படி கறபனை பண்ணுகிறீர்கள் ? ஏமாற்றுவேலையா இல்லையா? எவனாவது தன்னை நல்லவன் என்று விளம்பரப்படுத்திக்கொண்டலைவானா? அவன் நல்லவனா இல்லையா என்பது அவன் நடத்தை வைத்துதானே கணிப்பார்கள்? அதே போல, பிராமணனா இல்லையா என்பது ஒருவன் வாழ்க்கை நடத்தை என்று தானே இந்துமதம் சொல்கிறது? அப்படி இருக்க எப்ப்டி கிருஷ்ண்குமாரும் அவர் ஆட்களும் தங்களுக்குத்தானே பிராமணப்பட்டம் சூட்டிக்கொள்கிறார்கள்? வானத்திலிருந்து குதித்துவிட்டீர்களா? பெண்ணின் வழியாகத்தான் பிறந்தீர்கள்? மற்றவர்களைப்போல. அவர்கள் ஏன் பிராமணரில்லை? நீங்கள் எப்படி ஆனீர்கள்?

    வைணவத்தின் மீது ஏன் கோபம்? அதுபாட்டுக்கு அது இருந்து விட்டுப்போகட்டுமே. அது உங்களை கடித்ததா? உங்களைத் திருப்பதிக்குப்போகத்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லையே? பின் என்ன கோபம் அதன் மேல்? ஃபட்வாவை வைத்துக்கொண்டலையக்காரணம்?

    தலித்துக்களை சகோதரர்கள் என்று இந்த வலைபதிவிலேயே எழுதிக்கொண்டு, மனு இருக்கட்டும், சாதிகளும் வேண்டுமென்பது எப்படி சரியாகும்? மனுவாலேயே தலித்துக்கள் இந்துமதத்தில் தீண்டாமைக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். எனவே அது தேவையில்லை என்றால், தான் அதைப்படிக்கவே இல்லை. ஆனால் அதில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன எனச்சொல்லும் கிருஷ்ணகுமார். எப்படி படிக்காமலேயே தெரிகிறது? மனுவேண்டும் என்று தலித்துக்களிடம் போய்ச்சொல்ல முடியுமா?

    அதே நல்ல கருத்துக்களை இந்துமதத்திலேயே வேறிடத்தில் தேட முடியாதா? மனுவின் மேல் கிருஷ்ணகுமாரின் காதல் எதிலிருந்து வருகிறது? மனுவால் அவாள் ஜாதிக்காரகள் உயரத்தில் தூக்கிவைக்கப்பட்டார்கள்; தலித்துகள் தூக்கியெறியப்ப்ட்டார்கள் என்பதிலிருந்துதானே? மனசாட்சியில் கை வைத்துச் சொல்லும்: ஏன் மனு, ஏன் ஜாதிகள் வேண்டும்?

    நேரடியாகப்பதிலைச்சொல்லுங்கள்.

    பிராமணன் என்ற சொல்லே பிரச்சினை. அஃது ஒரு ஜாதியைக்குறிப்பிடுவது அன்று. பின் ஏன் உங்கள் ஜாதி அதை வைத்துக்கொண்டிருக்கிறது? சொல்லுங்கள். உங்கள் பதில் உங்களைக்காட்டும். பார்ப்போம்.

    அரிசோனன், பார்ப்பனர் என்ற சொல் கசக்கிறதென்றால் வேறெந்த பெயரையாவது வைத்துக்கொள்ளலாமே என்றுதானே சொல்லப்படுகிறது இங்கே? பிராமணன் என்ற பெயரேன் நகட்டப்படுகிறது என்பதுதான் கேள்வி. கிருஷ்ணகுமாரின் டயாலாக்கைப் பிடித்து நைசாக விலகாமல் நேரடியாக என் பதிலை எதிர்நோக்குங்கள். சொல்க. எப்படி நீங்கள் பிராமணன்?

  231. நம்பாடுவான் கதை துளைத்துவிட்டது உயர்ஜாதித்திமிரை. எனவே கிருஷ்ணகுமார் கொதிக்கிறார்; துடிக்கிறார்; அழுது புரள்கிறார்! சாரங்கனை விட்டு என்னை மொத்தச்சொல்கிறார் !

    எவ்வளவு திமிர் பாரசர பட்டருக்கு? ஒரு பிராமணனுக்கு ஒரு கீழ்ஜாதிக்காரனான நம்பாடுவான் மோட்சம் அருளுகிறானாம்? உலகத்தில் நடக்குமா சார்? நாங்கள் யார்? கடவுளின் தலையிலிருந்து வந்தோமல்ல! கீழ்சாதிக்காரப்பயலுக காலிலிருந்து கூட வரவில்லை? அவனுக நம்மை விட உசத்தியா ? நடக்க விடுவோமா? அப்படி ஒரு நாடகம் எழுதலாமா?

    சென்னை உயர்நீதிமனறத்தில், ”எங்கள் ஜாதிமக்களுக்கெதிரான இந்த நாடகத்தைத் தடை செய்யவேண்டும்’ என்று மனுப்போடுங்கள். உங்கள் ஆட்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, கைதிச ஏகாதசியன்று திருக்குறுங்குடி போய‌ நாடகத்தை நிறுத்து என்று போராட்டம் நடத்துங்கள். இந்த நாடகம் அதே இரவன்று திருவரங்கத்திலும் மேடையேறும். அங்கு இன்னொரு பேட்சை அனுப்[பலாம்

    கிருஷணகுமாருக்கு வைணவம் பிடிக்காத காரணம் சமத்துவமே. சமத்துவம் இருக்கக்கூடாது. எனவே ஜாதிகள் வேண்டும். ஜாதிகள் இருந்தால் உயர்வு தாழ்வு வரும். That is why he likes Manu 🙂

  232. அன்பின் ஸ்ரீ வியாசன்,

    \\\\ சமக்கிருதம் யாராலும் பேசப்படாத ஏற்கனவே செத்துப்போன மொழி. \\\

    தமிழில் யாப்பிலக்கணப்படி மரபுக்கவிதைகள் இயற்றப்படுவது அருகிப்போய் விட்டதால் மரபுத் தமிழ் என்பது செத்துப்போய் விட்டது என்பது எப்படி அறியாமையோ அப்படியே அறியாமை சம்ஸ்க்ருதம் யாராலும் பேசப்படாத ………………………. இத்யாதி இத்யாதி…….. அறியாமை.

    தற்போது சமீபத்தில் மட்டிலும் தமிழகத்து சான்றோரால் சுத்தமான மரபிலக்கணப்படி தமிழகத்தில் மட்டிலும் ஒரு லக்ஷம் க்ரந்தம் ( அதாவது ஒரு க்ரந்தம் = 32 அக்ஷரமான அனுஷ்டுப் சந்தஸிலான பா — என்ற சம்ஸ்க்ருத பா அலகீட்டு முறை — நாலு பாதங்களும் ஒவ்வொரு பாதமும் முறையே 8 அக்ஷரங்கள் கொண்டு) சம்ஸ்க்ருத பாக்கள் இறைவனைப்பற்றி யாக்கப்பட்டுள்ளன.

    அதுவும் காளிதாஸன், பாரவி, தண்டி போன்ற மஹாகவிகள் கையாண்ட மிகவும் அபூர்வமான …….. கிட்டத்தட்ட வ்ருத்த ரத்னாகரம் போன்ற க்ரந்தங்களில் சொல்லப்படும் அனைத்து வ்ருத்தங்களிலும் (பா முறைகளில்) ………….. மாலினி, சாலினி, வஸந்ததிலகா, இந்த்ரவஜ்ரா, உபேந்த்ர வஜ்ரா, ரதோத்ததம்…………. இத்யாதி………( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா…….. போன்ற தமிழ்ப்பாக்கள் போல) என்று சொல்லி விடலாம். கத்யம், பத்யம் போன்ற நளினமான பாமுறைகளில். கத்யம் மற்றும் பத்யங்கள் இணைந்த சம்பூ எனப்படும் அபூர்வமான படைப்புகள் சம்ஸ்க்ருத பாஷையில் தமிழகத்தில் படைக்கப்பட்டுள்ளன என்பது மட்டிலுமல்ல. இலக்கணப்படி அமைந்த வஸந்தோத்ஸவம் போன்ற நாடகங்கள். அந்த அருமையான படைப்புகள் தமிழில் ஹிந்தியில் மற்றும் ஆங்க்ல பாஷையில் அனுவாதமும் செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள பக்தியில் ஈடுபாடுள்ள ஆயிரக்கணக்கான மக்களால் பாராயணமும் செய்யப்பட்டு வருகின்றன.

    பாரத ஐக்யம் பற்றிப் பேசுகிறீர்கள் அல்லவா?

    நான் சொன்ன இந்த சம்ஸ்க்ருத படைப்புகளில் பாடப்படுபவை ராம, க்ருஷ்ணர்கள் மட்டிலும் இல்லை.

    ஆஸேது ஹிமாசலம் பாரத வர்ஷம் முழுதும் இருந்த வைஷ்ணவ ச்ரேஷ்டர்களும் கூட.

    ஆதிசங்கரர் முதல் ராமானுஜர், மத்வர் போன்ற பெரியோர்கள் மட்டிலுமின்றி…………பன்னிரு ஆழ்வார்கள் மற்றிலும் வடகலை மற்றும் தென் கலை சம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஆசார்ய வர்யர்களான நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள்…………மற்றும் எண்ணிறந்த சம்ப்ரதாய ஆசார்ய வர்யர்கள்………

    கர்நாடகத்தில் இருந்த அஷ்டதாசர்களான புரந்தரதாசர், கனகதாசர் போன்ற தாசர்கள்…………

    ஆந்த்ரத்தில் இருந்த ராம பக்தர்களான் பத்ராசல ராமதாஸர், அன்னமய்யா போன்ற சான்றோர்கள்,

    மலயாளத்தில் இருந்த குருவாயுரப்பன் பக்தர்களான, நாராயணீயம் பாடிய நாராயண பட்டாத்ரி, ஞானப்பான பாடிய பூந்தானம், மஞ்சுளா என்ற பக்தை……….. பட்டாத்ரியின் சம்பந்தத்தால் மட்டிலும் ஒரே முறை குருவாயுரப்பனை தர்சித்து மோக்ஷாதிகாரியான சாலப்பிரம்பு……………..

    மஹாராஷ்ட்ரத்தில் அனைத்து ஜாதிகளிலும் இருந்த பாண்டுரங்கனின் வாரகரி சம்ப்ரதாயத்தில் இருந்த பக்தர்களான……….
    நிவ்ருத்திதேவர், ஞானதேவர், சோபானதேவர், முக்தாபாயி, சக்குபாயி, துகாராம், ஏகநாதர், சேனாநாயி என்ற நாவிதர் தொழில் செய்த பக்த ச்ரேஷ்டர்………….

    வைஷ்ணவ ஜனதோ தேணேரே கஹி யே ஜே என்ற பாடலை அளித்த நர்ஸி மேத்த போன்ற குஜராதி சாதுக்கள்………..

    மீராபாய், ஊனக்கண்ணின்றி ஞானக்கண்ணால் மட்டிலும் கண்ணனைக்கண்டு பாடிய பக்த சூர்தாஸ் போன்ற ராஜபுதனத்து பக்தர்கள்,

    வடமதுரையை அடுத்த ஸ்ரீ வனம் ப்ருந்தாவனம் என்றெல்லாம் அறியப்படும் ஆய்ப்பாடியில் விளையாடிய கருமாணிக்கப்பெருமானான கண்கவர் கள்வனான கண்ணனின் பக்தர்களான அஷ்டசாப் கவிகள்………

    பாத்ஷா அக்பர் தனது ராஜசபையின் ரத்னமான மியான் தான்ஸேனுடன் மறைவாக இருந்து அவனது குருவான ஸ்வாமி ஹரிதாஸர் என்ற சங்கீதத்தைக் கேட்டு அவருக்கு வணக்கமும் செய்த காம்பீர்யம் பொருந்திய ………. யமுனைக்கரையில் ஒரு குடிலில் வசித்த ……….. கண்ணனை சங்கீதத்தால் ஆராதித்த ஸ்வாமி ஹரிதாஸர்

    ஹித ஹரி வம்சர், ………. பாரசீகத்திலிருந்து கண்ணனின் சரிதத்தில் மனதைப் பறிகொடுத்து அங்கிருந்து ஸ்ரீவனத்துக்கு அவனைக்காண வந்து அவன் பக்தியில் ஐக்யமான ஹமீதா ஹஸீனா சஹோதரிகள்…………….

    ராம பக்தர்களான பக்த கபீர் தாஸர் அவர்தம் திருமகனாகிய பக்த கமால், ரஹீம், ரஸ்கான் போன்ற வணக்கத்திற்குரிய ……… இஸ்லாம் சமயத்தில் பிறந்து ஆனால் ராமபிரான் மற்றும் கண்கவர் கள்வனான கண்ணனின் பக்தர்களான பக்த ச்ரேஷ்டர்கள்……….

    கௌட தேசம் என்று சொல்லப்படும் வங்காளம் மற்றும் ஒடிஸா ப்ராந்தியத்தை ம்லேச்சர்களின் பிடியிலிருந்தும் கட்டுப்பட்டி ஆசாரவாதங்களிலிருந்தும் உத்தாரணம் செய்த சைதன்ய மஹாப்ரபு அவர் தம் சிஷ்ய ச்ரேஷ்டர்களான ஆறு கோஸ்வாமிகளான

    ரூப கோஸ்வாமி, சனாதன கோஸ்வாமி, ஜீவ கோஸ்வாமி, ரகுநாத தாஸ கோஸ்வாமி, ரகுநாத பட்ட கோஸ்வாமி, கோபால பட்ட கோஸ்வாமி போன்றோரும்…………ச்ருங்காரரஸ பூரித காவ்யமான கீதகோவிந்தம் படைத்த பத்மாவதீ ரமண ஜெயதேவ கவி, அத்வைதாசார்யர், ப்ரதாபசிம்ஹன், நித்யானந்தர், ஜகாயி மதாயி……….உத்தாரணம் செய்யப்பட்ட வங்காள காஜி, ஹரிதாஸர்…………

    அதற்கும் கிழக்கே ஆஸாமிலும் வடகிழக்கு மாகாணமான மணிப்பூர் ப்ரதேசங்களிலும் வைஷ்ணவம் வளர்த்த ஹொங்கொர் தேப் (சங்கர தேவர்) என்று அஹோமிய (அஸாமிய) ப்ராந்தியத்து சாதுக்கள்………..

    நான் பகிர்ந்தது என் நினைவை விட்டு அகலவே அகலாத நான் நித்ய ஸ்மரணம் செய்யும் வைஷ்ணவோத்தமர்கள். இந்த சம்ஸ்க்ருத க்ரந்தத்தில் பேசப்படும் சரிதங்களுக்குடைய வைஷ்ணவோத்தமர்களில் ஒரு பத்து சதமானத்தினர் தான்……….

    நூறு சதமானத்தினரையும் பாரத தேசத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நூலில் சொல்லப்படும் எளிமையான ( நான் வாசித்திருக்கிறேன். எளிமை என்றும் அறிவேன்) சம்ஸ்க்ருதத்தில் யாக்கப்பட்ட மரபு பிறழாத பாக்களில் வாசிக்கும் போது……… த்வீபாந்தரங்களில் இருக்கும் பாரதீயர்களும் இதை ஆயிரக்கணக்கில் வாசிக்கும் போது (வாசிக்கின்றனர் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்) பாரத ஐக்யதை என்பது எப்படி இல்லாமற் போகும்?????????????????????????????

    வடக்கே ஊனக்கண்ணில்லாது ஞானக்கண் மட்டிலும் பெற்ற ஸ்ரீ ராமபத்ராசார்யர் என்ற மஹான் எழுதிய ராமபிரானைப்பற்றிய சம்ஸ்க்ருத க்ரந்தங்களும் பக்தர்களது ரஸிகோத்தமர்களது உளத்தைக்கொள்ளை கொண்ட க்ரந்தங்களே.

    எல்லோரும் நம்மிடையே வாழும் சான்றோர்கள்………

    மார்ஜாலம் (பூனை) கண்ணை மூடிக்கொண்டால் லோகம் அஸ்தமித்து விடாது ஸ்ரீ வியாசன் 🙂

    இத்தனை பக்தர்களது பெயரை வாசிக்கும் பாக்யம் பெற்று……… ஒரு க்ஷண நேரமேனும் மனம் பக்தி என்ற உயர்வான சிந்தனையில் ஒன்றியபடிக்கு பக்தியில் திளைக்க முடிந்தவர்களான ……….. ஆகையால் திருவடி தொழத்தக்கவர்களான ………..இந்த தளத்து வாசகர்களையும் பக்த லிஸ்டில் சேர்த்தி விட்டேன் ………… ஸ்ரீ வியாசனுக்கு விவாதார்த்தமாகப் பகிரப்போக இப்பிடி ஒரு லிஸ்டு………..

    ம்…………. இதையெல்லாம் வாசித்தால் ஸ்ரீ வியாசன் அவர்கள் இதெல்லாம் ஒரே வைஷ்ணவ மயமான சம்ஸ்க்ருத க்ரந்தம் போலே என்று நினைத்து விடலாம்……………

    இன்னொரு………… சான்றோர்கள் போற்றும்…………. சைவ பக்ஷமான………. அபூர்வ சம்ஸ்க்ருத க்ரந்தமாகிய சிவலீலார்ணவம் (ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் என்று இன்னொரு க்ரந்தமும் உண்டு)……… அறுபத்து நாலு திருவிளையாடல்களையும்………. மனம் குளிர லலிதாதி லலிதமான சம்ஸ்க்ருத பாக்களில் விவரிக்கும்………. ஸ்ரீ நீல கண்ட தீக்ஷிதர் அருளிய க்ரந்தம்………….

    இந்த செய்தி நிச்சயம் ஸ்ரீ வியாசனுக்கு த்ருப்தியைத் தரும் என்று நினைக்கிறேன் 🙂 🙂 🙂

    சிவ பெருமானை சான்றோர்கள் தமிழில் மட்டிலும் பாடியதில்லை. சம்ஸ்க்ருதம் போன்ற தொல் மொழி மட்டுமின்றி அனைத்து பாரத மொழிகளிலும் சிவபெருமான் பாடப்படுகிறார். சிவுடு என்றோ போலேநாத் என்றோ சொல்லிவிட்டதால் சிவப்பரம்பொருள் சிதைந்து விடுவதில்லை………….. பக்தியில் வித்யாசமும் வருவதில்லை……………..சிவபெருமான் பக்தி செய்யும் பக்தனுக்கு அருளுவதில் குறையும் வைப்பதில்லை………….. 🙂 🙂 🙂

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  233. //இந்த அவதாரத்தில் வைஷ்ணவர்களை மாற்று மதத்துக்கு மதம் மாற்றும் ஏஜெண்டு வேலையையும்//

    As for as I have read in this website and understand, Vaishnavas are not reading this website. They don’t read about other Gods (Read; https://vainavam.wordpress.com/2009/05/06/ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவஸ்யம்.)

    But this site writes about Vaishanva God also. Look at the current masthead. As you can see from the website I have quoted above, Vaishnavas should not, and do not worship other Gods. Non-Vaishnavite Hindus worship Gods which include Perumal, His 10 avatars and Shree. Hence, I think, the essays on Vaishnavism appear here to cater to their needs. Like Muslims, Vaishnavas are deeply attached to their religion; and they are au fait with the religion right from childhood. They are almost fanatical as you can read from the website, for example; hence, it is not necessary to tell them about their religion. The essays in this website are therefore for the reading of others. So, Krishnakumar need not fear that I will be read by them. When they are not here, and when they have already know all that I am writing, where is the question of they reading me ? Suppose there are some here, too, they would have quickly pointed out some minor errors in my representations I have committed. From the silence, I presume they are not here. Others are totally ignorant. I am sorry for such errors. Don’t worry they are minor only. Will take care in future.

    My stories are for persons like Krishnakumar with the intention of bringing that unless the theory of inclusion is widely spread and practiced, for which each one of us should contribute their mite, big or small, Hinduism will see more and more dalits leaving. So, my stories are for the people who are ignorantly digging the ground under the feet of Hindu religion with their shovels of anti-inclusion. I feel all Vaishnavas should come here and tell others about the samathuvam and how their acharyaas fought tooth and nail to achieve that. I am only a student whose learning is still inchoate, not an erudite scholar at all. I have written not only here, but in the blogosphere wherever I can, in Tamil and English. Given speeches too. If I were in any other religion, the higher up would have written to me encouraging me or called me to share encouraging words. But here, I face opposition. Although I am disappointed that there is no fervor at all, to know about Vaishnavism and Acharyaas, but to make use of it for argument purposes as Sarangan does, I won’t leave. If I leave, who will tell about samathuvam? Who will write for lower classes of people? I bear all arrows from Krishnakumar only for the sake of these low people who are kept outside the religion for long. I am here to tell that the anmeeka kankatchi is basically ill-conceived as it has exiled the lowest caste, the dalits by allowing the haters of dalits to set up their stalls and encourage casteism. I am here to tell that resurrecting manu will be counter-productive.

    It is not to mistake that the Vaishnavas are not in the Hindutva movement. There are many, many. After all, the movement is for all denominations within Hindu religion. Still, they are wise enough to keep politics and the religion clearly apart as sometimes some conflicts may occur which may interfere with their religion. Just as marrying a woman who worships different gods and the husband ought to accompany her and make a pretension of worshiping the same God; or like an atheist husband accepting vibuthi from his believer wife just to appease her. Such compromises are unavoidable in life. It is the end-result that matters.

  234. @bala kirshna saranga,

    you said you are post graduate in vasinavam. Ok , tell me ever say Ramnuja said all rituals contact in tamil?. Next thing, you said telugus not speaking in sanskrit at Thirupathi. I agreed. But, he ever oppose sanskrit? . no telugu no malayai opposing sanskrit. In Andra pradesh, sanskrit given due respect. kannda is equal antiquity with tamil. No kannda oppose sanskrit. There no tamil vishnu, andra vishnu. only one vishnu(all pervading) . .
    you know one thing. Many muslim scholars welcome sanskrit learning. Even, Solomon pappiya himself tamil christian regret not to learn sanskirt. Sansrkit is heritage of all hindu religions. In varaga avatra, clearly vishnu saying whoever dispersing vedas , He is not belongs to me. All vedas only in sanskirt. If you reject sanskrit , then u reject also Vaishnavam.
    you try to to understand the context of debate . Here, argument not sanskrit speaking by tamils or telugu and anydboy. Here debate is whether accept or not.
    you said during vijayanagara period, kannada and sanskrit given importance in Tamil Nadu. but, in vijaynagara empire, all languages are supported. only in nayaka period telugu and sanskirt given important. In 17 the centuary ,nayaka period in TamilNadu. You didn’t know even this history. Tell me whether cholas and pandiyas are tamil or non-tamil. Then, why should they support sanskrit? From sangam period, sanskrit given support in Tamil nadu. only from mid of 1850, fringe of Tamil group started to oppose sanskirt.
    I come to conclude you got post -grudation in Vaishnavam in order to oppose it self but not supporting from heart.
    This is also opt for viyasan. Ironically both Viyasan and Bala krishna Saranga are Sanskrit names. all Shavia agamas(authenticated one) supported sanskrit. Gnana sambatha Nayanar(himself brahmin) clearly praising about vedas, Tamil and sanskirt both are two eyes of all Tamil Hindus. Because, Lord shive abode is kailasa where is it. It is in Himalaya . Kasi number one holy place for all shavias. where is it ? It is in North India.
    @Viyasan & Bala Saranga , if you really true shavia or vaishanva, then try to recover holy sites from those encroached.it. Instead not do this, you are all trying to pluck out one eye.

  235. //ப்ராம்ஹண என்பது சம்ஸ்க்ருத சொல்//

    அது சமஸ்கிருத் பெயரா இல்லை தமிழா எனப்தா இங்கு பிரச்சினை? அது ஏன் ஜாதிப்பெயராகிறது என்பதுதானே பிரச்சினை?

    கூகுலை வைத்துக்கொண்டு, திருக்குறுங்குடியில் எங்கு அந்த நாடகம் நடக்கிறது என்றறிய முடியுமா? ரயிலிலோ, விமானத்திலோ பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு வள்ளியூர் சென்றிறங்கி, அங்கிருந்து டெம்போவில் போய், நேரில்தான் பார்க்கமுடியும். லைவ் டெலகாஸ்டு உண்டு. அது கோயிலில் கூட்டம் நிறைய இருப்பதால் இன்னொரு இடத்தில் பெரிய திரையில் காட்டப்படும். அமர்ந்து பார்க்கலாம்.

    அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு கூகுலில் பார்க்க முடியாது. எதிர்காலத்தில் வரவாய்ப்புண்டு.

    இரவில் முழவதும் வயதானவர் கால்களை நீட்டிக்கொண்டு, வெற்றிய்லையைக்குதப்பிக்கொண்டு பார்ப்பதும், உணர்ச்சிகரமான கட்டம் – பிரம்மராக்ஷதன் கடிக்கவரும்போது, கூட்டம் பதைபதைப்பதைப் பார்க்கும்போது, you will get a catharsis. When you return home that early in the morning, you will be a changed person, Mr Krishnakumar. Your ego will have been drained out completely. Go once.

  236. வியாசன் ,

    நீங்க சிடிசன் தனி ஆளுன்னு நினைச்சேன் ஒரு கூட்டமே இருக்கு போல. அவர்கள் நெட்டில் வேதம் சமஸ்க்ருதம் தெரியாத ஹிந்துக்களை சித்திரவதை செய்வதை பார்க்க பாவமா இருக்கு. இதில் நிறைய பேரு கிறிஸ்தவ கூட்டம் தான். இந்த திராவிட ஆரிய மாயையை எப்படியாது ஊதி பெருசாக்கி வெடிச்சிரனும்னு அலையது இந்த கூட்டம்.
    தமிழர்களே முழிச்சுகோங்கப்பா ஒரு எஜ்ஜாம்பளுக்கு இத படிச்சு பாருங்களேன் ஜேக்கப்பு சொல்றததான் அப்படியே வியாசனும் சொல்றாரு
    https://www.topix.com/forum/topstories/TFP3S689VPPI1U6IN/ப்33

    சமஸ்க்ருதம்ன சமைத்த க்ரந்தம் ப்ராக்ருதம் பிறந்த க்ரந்தம். காசி என்றால் காசு இருப்பவர்கள் வாழும் ஊர். மதுரா என்றால் மது ரீங்காரம் பாடும் ஊர். அயோத்யா என்றால் ஒன்னும் தோன மாட்டேங்குதே அடுத்த தபா சொல்றேன். ஜனகர் என்பது சனகர் அதாவது சனங்களின் அரசர். தசரதர் தசையால் ரதம் ஓட்டுபவர். இந்திரன் இடம் என்பதை திறன்பட ஆள்பவன். வாயு – வாயை திறந்து கொண்டே செல்பவர் (வாய திறந்தா காத்து வருதா இல்லையா). அக்னி – ஒன்னும் தோனல (சமஸ்க்ருதத்துல அக்ரே நயதி முன்னடத்தி செல்பவர் அதனால் அக்னி). ஆகாசம் – இதை பத்தி சொல்லவே வேண்டாம். ப்ருத்வீ – பிற த்வீபம் அதாவது வானத்தை விட வேறான தீவு.

    வியாசன் பாத்தீங்களா நான் தான் உங்களுடைய மேலான சிஷ்யனாக இருப்பேன். நீங்கள் கொடு போட்ட six lane road போடுகிறேன் பாருங்கள்.

    வ்யாசாய குரவே நம: அப்படின்னா வ்யாசராகிய குருவே நாம் என்று தானே அர்த்தம்.

    முன் தமிழன் இருந்தான் அவன் மட்டுமே இருந்தான் முழு உலகிலும் அப்புறம் தமிழன் கெட்டிகாரனா இருக்கானே அவன் இந்திரா பதவியை பிடித்து விடுவானோ என்று பயந்து இந்திரன் பல மொழிகளை உருவாக்கினான்.(இந்த கதையா தான் விவில்யத்தில் சுட்டுவிட்டார்கள்) அதில் அரபு, லத்தீன், கிரேக்கம், போர்டுகீசு, ஜேர்மன், சைனீஸ், மங்கோலியன் எல்லாம் அடக்கம். மங்கோலியா பாஷை தான் மருவி ப்ராக்ருதமாகி தமிழுடன் சேர்ந்து சமஸ்க்ருதமாச்சு.

  237. திரு வியாசன்!

    //உதாரணமாக, தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் இன்னும் தம்மைத் தமிழர்கள் என்று வாதாடினாலும் கூட இலங்கை முஸ்லீம்கள் தமிழைத் தாய் மொழியாகப் பேசினாலும் அவர்களில் பெரும்பான்மையானோரின் முன்னோர்கள் தமிழ்/மலையாள முஸ்லீம்களாக இருந்தாலும் கூட அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. மத அடிப்படையில் முஸ்லீம்கள் என தம்மைத் தனிப்பட்ட இனமாகத் தான் அடையாளப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வரும் அரபு மயமாக்கலும், வஹாபி இஸ்லாமும் அப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தலாம், என்பதை நான் பலமுறை தெரிவித்துள்ளேன்.//

    உங்களின் கூற்று தவறானது. 20 வருடங்களுக்கு முன்னால் அரபு மொழியை தேவ மொழியாக நான் நினைத்திருந்தேன். அவ்வாறுதான் எனக்கும் முன்பு சொல்லப்பட்டிருந்தது. தமிழ் மொழி இந்துக்கள் மொழி என்ற தவறான எண்ணமும் எனக்குள் இருந்தது. நாமெல்லாம் வட நாட்டிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் என்றே ரொம்ப காலம் நினைத்திருந்தேன். தவ்ஹீத்(ஓரிறை சிந்தனை) உங்களின் பார்வையில் வஹாபிய சிந்தனை வந்த பிறகுதான் உலக மொழிகள் அனைத்துமே சம தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டும். அதைத்தான் குர்ஆனும் சொல்கிறது என்ற எண்ணமே வர ஆரம்பித்தது. அதன் பிறகுதான் நான் தமிழை இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்கினேன்.

    தாய் நாட்டுப் பற்றும், தாய் மொழிப் பற்றும் எனக்குள் அதிகம் ஏற்பட்டதே வஹாபிய சிந்தனை எனக்குள் ஏற்பட்டப் பிறகுதான்.

    இந்து மக்களையும் கிறித்தவ மக்களையும் விரோதியாக பார்த்த பார்வை போய் அவர்களும் நமது சகோதரர்களே! அவர்களில் ஒரு சிலர் அறியாமல் தவறிழைத்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் நாம் வெறுக்கலாகாது என்ற எண்ணம் ஏற்பட்டதும் இந்த வஹாபிய சிந்தனை வந்தவுடன்தான்.

    முன்பு இஸ்லாமிய வீடுகளில் அரபு குர்ஆன் மாத்திரமே இருக்கும். அதனை அர்த்தம் புரியாமல் பய பக்கதியோடு முஸ்லிம்கள் ஓதுவார்கள். அந்த குர்ஆனுக்கு மரியாதை செய்யவும் தவற மாட்டார்கள். இந்துக்கள் மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தல் பாவம் என்று மார்க்க கட்டளைகளை வேறு அன்று போட்டு வைத்தார்கள். ஆனால் வஹாபிய சிந்தனை வந்தவுடன் குர்ஆனை தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தனர். குர்ஆன் மனிதர்களோடு என்ன பேசுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய முற்பட்டான். ரஜினிக்கும் கமலுக்கும் ரசிகர் மன்றங்களை வைத்த இஸ்லாமிய இளைஞர்கள் மன்றங்களைக் களைத்து விட்டு குர்ஆனை ஆராய புகுந்தது இந்த வஹாபிய சிந்தனை வந்த பிறகுதான். இன்று ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் தமிழ் குர்ஆனை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் வஹாபியம் வந்ததனால் தமிழுக்கு கிடைத்த பெருமை இது.

    எனது திருமணத்துக்காக நான் தமிழகம் வந்த போது எனது தாயார் ‘நல்ல வேளை ! நீ சவுதி போயிட்டே! இங்கே உன் வயசு பசங்களெல்லாம் பிஜேயின் பின்னால் நின்று கொண்டு ஊரை பகைத்துக் கொண்டுள்ளார்கள். நீ அந்த மாதிரி எல்லாம் போய் விடாதே’ என்று அறிவுறுத்தினார். ஆனால் சிடிக்களாகவும், ஆடியோ கேசட்களாகவும் தினமும் ஒரு மணி நேரம் சவுதியில் எனது பொழுது கழிந்ததே பிஜேயின் பேச்சுக்களால் என்பதையும் வஹாபிய சிந்தனை முழுவதுமாக எனது சிந்தையில் ஏறியுள்ளதையும் பாவம் எனது தாயார் அறிந்திருக்கவில்லை. 🙂

    வரதட்சணை வாங்கக் கூடாது, திருமணத்துக்கான மாலைகளை நான் போட்டுக் கொள்ள மாட்டேன், திருமண விருந்து நம் வீட்டில்தான் நடக்க வேண்டும், திருமண ஊர்வலங்கள், மருதாணி இடுதல், பாத்திஹா ஓதுதல் என்ற மூடப்பழக்கங்கள் எல்லாம் எனது திருமணத்தில் இருக்கக் கூடாது என்று தகராறு செய்ய ஆரம்பித்தேன். எனது சொந்தக்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். எப்படி இருந்தவன் எப்படி மாறி விட்டான் என்று அதிசயத்தோடு பார்த்தார்கள். திருமண பத்திரிக்கையிலும் பின் பக்கம் வஹாபிய சிந்தனை உடைய வசனங்களையும் நபி மொழிகளையும் பதிந்தேன்.

    இங்கும் நமது தமிழரின் பண்பாடுதான் கொண்டு வரப்பட்டது. பெண்ணிடம் சீதனம் கேட்கும் இந்த வரதட்சணைக் கொடுமையே நமது தமிழர்களின் பழக்கமல்ல. பெண்ணிடம் வரதட்சணை கேட்கும் வழக்கம் ஆரியர்களின் பழக்கமாகும். அது பிற்காலத்தில் தமிழர்களிடமும் தொற்றிக் கொண்டது.

    பெண்ணுக்கு ஆண் மகன் சீதனம் கொடுத்ததாகத்தான் நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதாவது அன்றைய தமிழர்கள் பெண்ணுக்கு மஹர் கொடுத்துள்ளார்கள்.

    ‘தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மனம் பேசுவார்: பொருள் தந்து விலை பேசுவார்: மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்….. உலகை விலை பேசுவார்……….’

    என்று கண்ணதாசன் பாடியதும் அதனால்தான்.

    எனவே இங்கும் வஹாபியம் வந்து தமிழனின் ஆதி பழக்கத்தை நடைமுறைபடுத்தியுள்ளது.

    எனவே ஒருவன் தமிழனாக பிறந்து விட்டால் அவன் எந்த மார்க்கத்துக்கு சென்றாலும் அவன் தமிழன் என்ற இனமாகத்தான் பார்க்கப்படுவான். இன்று வரை எங்கள் வீடுகளில் ஆங்கிலம் கலக்காத அழகிய தமிழைத்தான் பேசுகிறோம்.

    பாலஸ்தீனில் கொடுமை நிகழ்த்தப்படுவதால் அதற்காக இங்குள்ள முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில் என்ன தவறு? ‘வாசுதேவக குடும்பம்’ என்று பண்டைய இலக்கியங்கள் கூறுவது முழு உலக மக்களையும் சேர்த்துதானே! ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று சொன்னதும் இதே தமிழ் காப்பியங்கள் தானே!

    இங்கும் பண்டைய தமிழ் நூல்களின் செயல்பாட்டினையே வஹாபியமும் பேசுகிறது.

    இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை என்று கேட்கலாம். தமிழில் பெயர் வைக்க குர்ஆன் தடை போடவில்லை. தமிழகத்தில் வைக்காததற்கு காரணம் இங்கு நிலவும் சாதி முறையே. மதம் மாறியவன் அதே பெயரில் தொடர்ந்தால் ‘என்ன சாதி’ என்ற அடுத்த கேள்வி வரும். பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் அரபிய பெயரை வைத்ததால் அவரது சாதி என்னவென்பதே மறக்கடிக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை சுத்தமாக மறந்து உலக முஸ்லிம்களில் ஐக்கியமாகி விடும். இன்று என்னுடைய பழைய சாதி என்ன என்பதே எனக்கு தெரியவில்லையே! அத்தகைய சாதிகள் அற்ற சமூகமாக தமிழகம் மாறும் போது எனது பெயரையும் தமிழிலேயே வைத்துக் கொள்வேன்.

    எனவே தமிழகத்தில் வஹாபியம் அதிகரித்திருப்பதால் தமிழுக்கோ தமிழ் நாட்டுக்கோ தமிழர்களுக்கோ எந்த இடைஞ்சலும் வந்து விடாது. மாறாக அழிந்த தமிழனின் பழைய வரலாறு புதுப்பிக்கப்படுவதாகவே சொல்லலாம்.

  238. உயர்திரு வியாசன், பாலா சுந்தரம் கிருஷ்ணா,

    நீங்கள் “அந்தணர்” என்று குறிப்பிடலாம். எனக்கு அதில் உடன்பாடே!

    //பிராமணர்கள் அனைவரையும் தமிழர்கள் எதிர்க்கவில்லை. //
    அந்தணர்களையும், தமிழர்களையும் தனிப்படுத்தாதீர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும், தமிழர்களே. இதற்கு அந்தணர்களும் விதிவிலக்கல்ல.

    சுப்பிரமணிய சுவாமி என்ற தனி மனிதரின் கருத்துக்களை நீங்கள் எதிர்ப்பது உங்கள் விருப்பம். கருத்துகளை எதிர்க்கும்போது எவரது பிறப்பு வகுப்பையும், இனத்தையும், சமயத்தையும், அவரது அடையாளமாகக் காட்டவேண்டாமே! சு.சுவாமி அந்தண வகுப்பின் பிரதிநிதி அல்ல.

  239. பாவம்.. அவர் சொன்னவுடன் எகிரி குதித்தார்கள் , இப்போ நம்ப பின்னூட்டம் மாதிரி. வேண்டுமானால் தன்னை தான நக்கி கொள்ளும் சிங்கம் என்று வைத்துகொள்ளுங்கள் என்றும் சொல்லி பார்த்தார்…
    /..ஒரு ஜோக் என்ன என்றால் அதுவும் ஒரு ஸமஸ்கிருத function தான்../

  240. சுபி அண்ணே

    சென்சஸ் எடுக்குதாகள்ள அங்கனகுள்ள உங்காலுக தாய் மொழி தழின்னு என்னே குடுக்க மாட்டிக. உருதுன்னு எதுக்கண்ணே குடுக்குதீக. எம்புட்டு பேரு உருதுழு பேசிக்கிட்டு திரீயுராவ.

    வகாபி வந்தா இந்தியாவின் ரிஷி பரம்பரையை மீட்டெடுத்து கொடுக்கு. வஹாபி வந்தா காந்தி மீண்டும் உயிருடன் வருவார். வஹாபி தமிழ் நாட்டில் வந்தால் தமிழகத்தில் திரவியம் ஆறாக ஓடும். பாலாற்றில் தண்ணி வரும், கூவம் மணக்கும், நம்ம பாக்கெட்டு கனக்கும்,. தமிழகத்தில் தண்ணி பஞ்சம் தீரும், இப்போதல்ல அம்மா ஆட்சி அடச்சீ உம்மா ஆட்சி தொடரும், எல்லாவிடமும் ஊட்டி போல குழு குளுன்னு ஆகும்.

    எதோ நீங்க மட்டும் தான் வரதட்சினை வாங்கலையோ. எம்புட்டு பயலுவ இருக்காக. எங்க ஊட்ல எல்லாம் இந்த பழக்கமே கிடயாதுங்கனா.

    எ ஆர் ரகுமான் அரபு பெயர் வெச்சதால சாதி ஒழிந்ததாம்ல.
    சரி ரஜினி காந்த் ஒரு தீவிர ஹிந்து அவரது ஜாதி என்னன்னு தான் மக்கள் தினசரி சர்ச்சை பன்றாங்கலான்னா. இளையராஜாவின் ஜாதிய வெச்சா தினமும் சண்ட நடக்குது. என்ன சுத்த பேத்தலா இருக்கு.

    மக்களே கேட்டுகோங்க அரபு பெய வெச்சா ஜாதி ஒழியும் அரபு மொழிக்கு அப்படிப்பட்ட மந்தர சக்தி இருக்கு.

  241. சுபி

    //
    பெண்ணுக்கு ஆண் மகன் சீதனம் கொடுத்ததாகத்தான் நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதாவது அன்றைய தமிழர்கள் பெண்ணுக்கு மஹர் கொடுத்துள்ளார்கள்.
    //

    இஸ்லாத்தில் இருக்கும் ஒரு கேடு கட்ட பழக்கம் இதும். காசு கொடுத்து பொன்னை தூக்கரதுனால தான் பெண் அடிமைத்தனம் இஸ்லாத்தில் தலை விரித்தாடுகிறது. காசு கொடுத்து பெண் எடுத்தால் அவளை எடுத்தவன் மனப் போக்கு எப்படி இருக்கும் யோசியுங்களேன். நாங்கெல்லாம் என்ன மன்கோளியாவிலையா இருக்கோம் சூ பீ. இங்கனக்குள்ள இருதோம்ல. எங்களுகெல்லாம் முசுலீமு சகவாசமே இல்லையா. ஏதோ கரடி கத சொல்லுதீக.
    உடனே பெண் விடுதலை வஹாபியால் தான் கிடக்கும் ஏன்னு கட்ட ஆரம்பிக்காதீங்க. ஏற்கனவே மூக்குல சுண்ணாம்பு வெச்சமாதிரி இருக்கு.

  242. சுபி

    இமயம் பார்த்தேன்.

    சமஸ்க்ருத வாரம் என்ற பேரில் பணத்தை கொட்டி கொடுகிரார்களாம் – மஞ்ச துண்டு குடும்ப விழாவை செம்மொழி விழா என்ற பெயரில் நடத்த வரிபணத்தை கொட்டி யார் கொடுத்தது.

    உத்தராகாண்டில் சமஸ்க்ருதம் மட்டும் இல்லை, சம்ஸ்க்ருதமும் கூட என்பது தான் உண்மை. சுபாவின் பிதற்றல்.

    பாக்கி மொழிக்கு கொடுக்கலை என்கிறார் சு பா, எதோ அறுவது வருஷம் பீ ஜி பீ ஆட்சி இருந்த மாதிரி பேசுகிறார்.

    பவுத்தம் மதம் இல்லையா என்றெல்லாம் பிதற்றுகிறார். பவுத்தத்தின் அதிக க்ரந்தங்கள் தான் சமஸ்க்ருதிதில் தான் இருக்கின்றனம். சாருவாகம், சாணக்கியம் எல்லாம் சமஸ்க்ருதத்தில் தான்.

    ஷவநவாஸ் கான் தான் பிதர்ரத்தின் உச்சம். ஆயிரம் வருஷம்

    சம்ஸ்க்ருதமும் இந்திய மொழி என்றால் யாருடைய தாய் மொழி என்கிறார் சுப 🙂
    அவரும் ப்ராம்கன வாதத்தில் புகுகிறார். குறிப்பிட்ட வர்க்க மொழி.

    சுபாவே சொல்கிறார் காங்கிரஸ் ஆட்சியில் சமஸ்க்ருத்திர்க்கு அதிக பணம் தந்தது, தமிழுக்கில்லை என்கிறார். தமிழுக்கு ஏன் நாலு கோடி சமஸ்க்ருத்திர்க்கு ஏன் நாற்பது கோடி என்றார் சுப. பதில் இந்தியா முழுவதும் சமஸ்க்ருததிர்காக செலவு. தமிழ் நாட்டில் மட்டும் தமிழ்க்கு நாலு கோடி.

    தமிழ் கோவில்களில் திருமறை இருக்கு, மச்சொதியில் ஏன் தமிழ் இல்லை இதை ஏன் எதிர்க்கவில்லை என்று வினவ, சுப வழ வழ கொழ கொழ.

    மணலி முஸ்தபா செய்த முயற்சிக்கு, வாஜ்பாயே, இல கணேசன் ஆதரவு கொடுத்தார் என்பதையும் சொல்றார். நம்ம சானவாசு பாரதிய ஜனதா கட்சி ஒன்னும் செய்யவில்லை என்றார். ஜோஷி மணலி கொடுத்த பத்திரத்தை குப்பையில் போட்டார் என்றார். அப்புறம் பாத்தா இது நடந்த வருஷம் 2004 என்று தெரிந்தவுடன் கப் சிப். அப்போ காங்கிரஸ் ஆட்சி.

    எல்லா கோவிலிலும் தமிழ் இருக்கிறது என்றால் சிதம்பரத்தில் உண்டா என்கிறார். சிதம்பரத்தில் மட்டும் தான் இல்லை என்றால் தமிழ் நாட்டில் எங்கும் இல்லை என்றா அர்த்தம். மாட்டிக் கொண்டு முழித்தார் சுப

    சுப ஒரு நல்ல கேள்வி கேட்டார். மராட்டியர்கள் அனைவரும் சமஸ்க்ருதம் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்களா என்று கேட்டார். அதுக்கு பதில் தரவில்லை.

    ஷவனாவாஸ் தமிழை பற்றி பேசவில்லை, எவ்வளவு இஸ்லாமிச்டுக்கள் தமிழுக்காக வாதம் செய்தார்கள் என்பதை மட்டுமே பேசினார் இதனால் தான் சூ பீக்கு இந்த விவாதம் ரெம்ப பிடிச்சிருக்கு.

    நடுவரே சொன்னார் இந்தியாவின் ஒற்றுமையை அதிகம் விரும்பாது பீ ஜி பீ என்றார்.

    சுப வீர பாண்டியன் வைத்த ஒரு நல்ல விஷயம். இங்கே வட மொழியை படிக்கலாம். வட இந்தியாவில் அதுபோல ஒரு தென் மொழியை படிக்க வேண்டும். இதை ராகவனும் சரி என்றார்.

    கடைசி வரை சமஸ்க்ருத வாரம் ஏன் கூடாது என்று வாதங்கள் எடுபடவே இல்லை. ஆனால் சூ பீக்கு இது பிடித்திருப்பதுக்கு ஒரே காரணம், ஷாநவாஸ், மணலி முஸ்தபா

    விவாத அரங்கத்தில் எங்குமே மோடி அரசு சமஸ்க்ருதத்தை திணிக்கிறது என்ற வாதம் எடுபடவில்லை 69 முதல் நிலுவையில் உள்ளது என்று தெளிவாக சொல்லப் பட்டது. ஆனால் நமது சகோ விவாதத்திற்கு கொடுக்கும் தலைப்பு சமஸ்க்ருத திணிப்பு பலே

    இமயம் தொலை காட்சி , நிகழ்ச்சி விவாத அரங்கம், அதை நடத்தியவிரின் பெயர் ஜீவா சகா. அற்புதம் அற்புதம்.

  243. சாரங்கன்,

    “சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வருமென்பார்கள்” அது உங்களின் விடயத்தில் சரியாகத் தான் இருக்கிறது. அதனால் தான் சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்கள். ஏதோ கெட்டித்தனமாக நக்கலடிப்பதாக நினைத்துக் கொண்டு உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக் கொண்டது தான் மிச்சம், உங்களின் அறியாமையை மட்டுமல்ல, நீங்கள் தமிழிலும், தமிழர் மீதும் துவேசம் கொண்ட சமக்கிருதவாதி என்பதையும் காட்டி விட்டீர்கள். நீங்கள் எந்த வகை என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால் தான் உங்களுடன் பேச்சுக் கொடுத்தேன், உங்களைப் போன்ற சமக்கிருதவாதிப் பார்ப்பனர்களைத் தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை உங்களைப் போன்றவர்களால் தாங்க முடியவில்லை,. தமிழ்நாட்டிலும் கூட செத்துப் போனசமக்கிருதத்தை தமிழர் தாங்கிப் படிக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். ஏனென்றால் சமக்கிருதத்தை நீங்கள் உங்களுடனும் ,உங்களின் சாதித்திமிருடனும் அடையாளப்படுத்துகிறீர்கள். சமக்கிருதத்தை மற்றவர்கள் போற்றினால், அதற்கு முன்னுரிமை கொடுத்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட உங்களையும் தமிழர்கள் மதிப்பதாக, தமிழர்களை விட நீங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பில் ஒரு குட்டிப்புளுகு உங்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் நான் உங்களின் சம்பந்தமில்லாத சமக்கிருத சுலோகங்களையும், தேவையற்ற சமக்கிருதச் சொற்களையும் கணக்கிலெடுக்கவில்லை, ஏனென்றால் உங்களின் அந்த உளறல்களின் பின்னால் உருப்படியாக எதுவுமில்லை என்று எனக்குத் தெரியும்,. உண்மையைச் சொல்லப் போனால் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழிலும் உங்களுக்கு அறிவு மட்டு, என்பது உங்களின் பதில்களிலிருந்து தெரிகிறது. இப்படி எத்தனையோ ஆரியக் கூத்துக்களை நான் பார்த்திருக்கிறேன். 🙂

    //இந்தியா முழுவதும் தமிழ் தான் பேசினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்.///

    இந்தியா முழுவதும் தமிழ் தான் பேசினார்கள் என்று அண்ணல் அம்பேத்காரின் கருத்தை நான் முன்பே குறிப்பிட்ட பின்னரும் ஆதாரம் கேட்பதற்குக் காரணம், அவர் தாழ்ந்த்தப்பட்டவர் என்பதால் அவரது கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? உங்களின் பிதற்றலை விட அண்ணல் அம்பேத்காரின் கருத்தை கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

    “The word ‘Dravida’ is not an original word. It is the sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’ when imported into Sanskrit became ‘Damilla’ and later on ‘Damita’ became Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India, and was spoken from Kashmir to Cape Comorin. In fact, it was the language of the Nagas throughout India. The next thing to note is the contact between the Aryans and the Nagas and the effect it produced on the Nagas and their language.”

    // இதுவரை தமிழ் நாடு ஆந்திரா கர்நாடகாவில் தான் தமிழ் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. வட இந்தியாவில் எங்குமே கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா பூராவும், சமஸ்க்ருத கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்த ஒரு ஆதாரமே போதாத தமிழ் தான் இந்தியா முழுதும் கிடைத்தது என்று.///

    சாரங்கன் இந்தப் பொய்களை எல்லாம் எங்கிருந்து எடுத்து விடுகிறாரோ எனக்குத் தெரியாது,. ஆனால் இவர் கூறுவதில் உண்மை எதுவும் கிடையாது. தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனக் கருத்துக் கூறியவரே சுப்பிரமணிய ஐயர் என்ற பார்ப்பன ஆராய்ச்சியாளர் தான். இந்தியா முழுவதிலும் கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்திலும் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன. வெறும் 5 வீதமானவை மட்டும் தான் சமக்கிருதம், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் உள்ளன. அதற்கு ஆதராமாக கீழேயுள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

    தமிழ்நாட்டில் கிடைத்த சமக்கிருதக் கல்வெட்டுகள் கூட தமிழரசர்கள் தமது வரலாற்றை வடமொழியிலும் எழுதி வைத்தவை தானே தவிர சமக்கிருதம் பேசுகிற யாரோ சமக்கிருதவாதிகளுடையதல்ல. உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் பல நினைவுக் கற்களில் ஆங்கிலம் உண்டு. இன்னும் ஆயிரம் வருடங்களில் ஒரு அரைவேக்காடு வந்து தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்தார்கள், ஆங்கிலத்தைத் தான் அங்குள்ள மக்கள் பேசினார்களே தவிர தமிழை அல்ல என்று கூறுவது போன்றது தான் சாரங்கனின் வாதமும்.

    Of the one-lakh odd inscriptions in India, about 60,000 were in Tamil Nadu. And of the 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi; the rest were in Tamil, T. Sathyamurthy, Superintending Archaeologist of ASI, Southern India, said. To create an interest among students in inscriptions, their richness, value and messages, the ASI would be conducting summer training programmes from 2006 onwards, Dr. Sathyamurthy said.

    https://www.thehindu.com/2005/11/22/stories/2005112215970400.htm

    Indian inscriptions:

    Inscriptions represent the earliest written forms of Indian languages and are evidence that these written forms were already well-developed by the time the inscriptions were made. By studying the vocabulary, syntax, and forms of the inscriptions linguists have been able to advance their understanding of how languages developed and where they were used. More than 55% of the epigraphical inscriptions found by the Archaeological Survey of India in India are in Tamil language.

    https://www.newworldencyclopedia.org/entry/indian_inscriptions

    South India’s rich epigraphic sources form nearly 70 per cent of the total number of inscriptions in India, and the “Tamil-Brahmi” inscriptions represent their beginnings in Tamil Nadu in a language (Tamil) other than Prakrit.

    https://www.frontline.in/static/html/fl2013/stories/20030704000207100.htm

    Since the vast majority of inscriptions are in Tamil and in Tamil Nadu, the Epigraphy Branch of the ASI should have remained in Tamil Nadu. The State government did nothing to retain the office in Tamil Nadu. We can at least think of digitising the ink impressions available in Mysore and store them in Chennai, Tiruchi and Madurai for easy access to local scholars. There is very little coordination between the Archaeology Department and the universities, especially in Tamil Nadu.

    https://www.frontline.in/static/html/fl2614/stories/20090717261407000.htm

  244. Mani!

    (Take it in good spirits. Why not attempt to write in Tamil? You could express yourself better)
    A person learns a subject, either out of love for that subject or out of curiosity. If one studies English literature, it does not mean he should become an Anglophile i.e.. worshippers of English culture and people. If a Malayalee learns Tamil literature, it does not mean that he has great regard for it. It may be just out of thirst for knowledge. Similarly, I have read English Bible umpteen times,have the Holy Koran with me and read it, and about it also, whenever I want; have Dhammapada in my shelf and read it ofen although I don’t like that religion. Similarly I learnt about Vaishanavism. In Annamalai University, they have a diploma in Saiva Sithantham. I am going to join. Afterwards I will write about it here like Vyasan or Dr Muthukumarasamy here. Will you say that I have become a Saivite?

    All learning come under the category of curiosity or acquiring knowledge. No one gives me job on the certificate or degree got in Vaishnavism or Saiva Sithandtham. So, it is out of curiosity only. I don’t deny there are so many studying BA Vaishanavism in Madras University today and, talking to them, I understood that they regretted lack of knowledge on their own religion although they were born in Vaishnava families. It is also true in many cases that a study, if done passionately, may sometimes turn a person to have a life of everlasting love and devotion to that subject.

    Religion is a personal matter. It should remain so. When it is exhibited, all problems are let loose upon society. It is bad if you become a Vaishnava only after getting a degree in it. I agree with you that in some cases, certain persons like to get a knowledge on a particular matter to use the same later as a stick to beat his opponents with. The Muslim scholar Zakir is a great scholar in Vedas just to argue that the Vedas are referring to One God, their Allah. Roberto D Nobili was a great scholar in Hindu scriptures also, and he even practised Brhaminism in his daily life; and why i.e. you know his purpose.

    //you try to to understand the context of debate . Here, argument not sanskrit speaking by tamils or telugu and anydboy. Here debate is whether accept or not.//

    மணி!

    இங்கு சமஸ்கிருதம் எதிர்க்கப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை. ஏன் சம்ஸ்கிருத வாரம் ? ஏன் மற்றமொழிகளையும் மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது? அதாவது தமிழ் வாரம் கொண்டாடுங்கள் என்று ஏன் சொல்லவில்லை? சமஸ்கிருத வாரம் மட்டுமே ஏன் எனப்துதான் என் கேள்வி. மத்திய அரசு இப்படித் தமிழையும் சேர்த்துச்சொல்லியிருந்தால், பிரச்சினையே வந்திருக்காது என்று சிந்தித்தீர்களா?

    தமிழக அரசுப்பள்ளிகளுக்கு தமிழ்நாட்டரசுதான் கட்டளையிட வேண்டும். கே.வி பள்ளிகளுக்கு மத்திய அரசுப்பள்ளிகளுக்கு இடவேண்டும். இடுகிறது. தமிழ்நாட்டில் கே.வி பள்ளிகளில் தமிழும் சொல்லித்தரப் படும்போது ஏன் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது மத்திய அரசால் ?

    அரவிந்தன் கட்டுரைப்பொருள் வடமொழியை ஆதரியுங்கள் என்றும் அம்மொழியை இவர் படிக்கச்சொன்னார் அவர் படிக்கச்சொன்னார்; மேலும் அது பார்ப்பனர் பாஷையில்லை என்றும் ஆதர்வு தேடுகிறதே ஒழிய, ஏன் தமிழைப்பற்றி அக்கறை அவருக்கில்லை? மற்றவருக்கு அக்கறை வந்தால் ஏன் அவர்கள் ‘குஞ்சுகள்’ ‘புரட்சிப்புலிகள்” ‘ அவர்கள் என்ன தமிழின் பிரதிநிதிகளா? என்று திட்டப்படுவதேன்? நீங்கள் தமிழைப்புறக்கணித்தால்தானே அவர்களாவது பண்ணுகிறார்களே எனப் பார்க்கிறார்கள்?

    வடமொழி இருக்கிறது தமிழகத்திலும் கோயில் மொழியாக. எவரும் மறுக்கவில்லை. கோயிலில் சமஸகிருத அர்ச்சனை இருக்கிறது. கூடாது எனறு எவரும் சொல்லவில்லை. ஏன் தமிழ்நாட்டில் தமிழிலும் இல்லை என்று கேட்டபின்னரே தமிழிலும் அர்ச்சனை பண்ணலாமென்றார்கள். கேட்காமலிருந்தால்?

    அதே போல தமிழ் வாரமும் கொண்டாடச்சொல்லுங்கள் என்றிருந்தால் ஏன் எதிர்க்கிறார்கள் வடமொழியை. எதிர்க்கவே மாட்டார்கள். வடமொழி அர்ச்சனை, தமிழ்மொழி அர்ச்சனை என்றிருப்பதைப்போல இப்பிர்ச்சினையும் முடிந்திருக்குமே?

    நினைவில் கொளக: தமிழரின் மொழியைப் பின் தள்ளி பிறமொழியைமட்டும் முன்வைக்கும்போது எதிர்ப்பது இயற்கை. அது சரியே.

    இராமானுஜரைப்பற்றி எழுதுகிறீர்கள். அவர்தான் தமிழ்ப்பாசுரங்கள் இல்லாமல் வைணவ ஆராதனை கூடாது என்று சொன்னார். உடனே அவர் சமஸ்கிருதத்திலும் எழுதினாரே என்று வாதிடாதீர்கள். தமிழ்ப்பாசுரங்கள் பாடப்படக்கூடா என்று பிராமணர்கள் எதிர்த்தார்கள். அவர்கள் தமிழுக்கு மரியாதை கொடுத்திருந்தால், இராமனுஜர் புரட்சி பண்ணவேண்டிய அவசியமில்லை.

    உங்களிடமிருந்து தமிழுக்கு ஆதரவு இல்லை. சமஸ்கிருதத்துக்கு மட்டுமே ஆதரவு இருப்பதால் எதிர்க்கிறார்கள். ஆந்திராவில் எதிர்க்கவில்லை; கர்நாடகாவில் எதிர்க்கவில்லை. கேரளாவில் எதிர்க்கவில்லை. எனவே தமிழ்நாட்டிலும் எதிர்க்கக்கூடாதென்று சொல்வது வாதமன்று. தமிழர்களுக்கு அவர்தம் தாய்மொழிக்கு ஈடாக எம்மொழியும் இல்லை. நானறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் இல்லை என்று பாரதியார் சொன்னதைத் தமிழர்கள் ஏற்கிறார்கள். எனவே அவர்தம் மொழிக்கு இடர் வரும்போதும், பின் தள்ள முயறசி நடைபெறும்போதும் அவர் குரலெழுப்பவது நீதியே. சரியே. எம்மொழியும் இங்கு பேசலாம்; படிக்க, கற்கப்படலாம். ஆனால் அவை இரண்டாம் மொழியாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழே முதல்மொழி என்று சொன்னால் வடமொழியை எதிர்ப்பதாகாது. பாப்பையா படிக்க ஆசைப்பட்டாரென்றால், சமஸ்கிருதமே தமிழை விட உயர்ந்தது என்று சொல்லிப்படிக்கச்சொல்லவில்லை. தெரிந்து கொள்ளுங்க்ள்.

  245. ஜனாப் . சுவனப்பிரியன்,

    நான் வேறு இணையத்தளத்திலும் எனது வலைப்பதிவிலும் கூட ஈழத்தில் முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும், அவர்கள் தமிழர்களல்ல என்றும், இலங்கையில் அவர்கள் தனிப்பட்ட முஸ்லீம் அடையாளத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அவர்களின் மொழிவழிச் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களின் முதுகிலும் குத்தினார்கள் எனப் பலமுறை எனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நீங்கள் இந்த இணையத்தளத்தை என்னுடன் பேசத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அதற்கு என்ன காரணமென்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நீங்கள் என்மூலமாக உங்களின் நிலைப்பாட்டை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த விழைகிறீர்கள் போல் தெரிகிறது.

    உங்களின் நீண்ட மறுமொழிக்கு நான் சுருக்கமாகப் பதிலளிப்பதாக இருந்தால். என்னுடைய செலவில் உங்களின் வஹாபி பிரச்சாரத்தை நடத்தி முடித்து விட்டீர்கள் என்று தான் கூறவேண்டும். இருந்தாலும் முடிந்தவரை உங்களின் விளக்கங்களுக்கு எனது கருத்தை தெரிவிக்க முயற்சிக்கிறேன்.

    1. இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்கள் அல்ல என்று தனி முஸ்லீம் அடையாளத்தை வலியுறுத்தியதற்குக் காரணம் வஹாபி இஸ்லாம் அல்ல. அது வஹாபியத்துக்கும், சவுதி அரேபியாவுக்கு தமிழ் முஸ்லீம்கள் பிழைப்புத்தேடிப் போவதற்கும் முந்தியது. அதற்கு முழுக்காரணம் இலங்கை முஸ்லீம் தலைவர்களின் சுயநல அரசியல்.

    2. இலங்கையில் ஏற்கனவே பிளவுண்டு கிடந்த தமிழர்களுக்கும் –தமிழ் பேசும் முஸ்லீம்களுக்குமிடையில் கலாச்சார, மொழி, நடையுடை பாவனையில் நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தியது தீவிரவாத வஹாபியம் தான். நீங்கள் எப்படி மறுத்தாலும், தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் அரபுமயமாக்கத்தை ஊக்குவித்ததும், நடைமுறைப்படுத்துவதும் தீவிரவாத வஹாபியம் தான்.

    3. பல நூற்றாண்டுகளாக தாய் பிள்ளையாக, தமிழர்களோடு தமிழர்களாக வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் அரேபிய ஆடையணிகளை அறிமுகப்படுத்தி, தமிழ் முஸ்லீம்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே மற்றவர்களைத் திரும்பிப் பார்க்கவும், பயப்படும் வகையிலும் alien கள் ஆக்கியதும் வஹாபி இஸ்லாம் தான்.

    4. உதாரணமாக பாலைவனத்துக் காலநிலைக்கேற்ற கறுப்பு ஆடைகளைப் பெண்கள் அணிவது தான் இஸ்லாம் என்பது போன்றும் அல்லாது விட்டல் அவர்கள் இஸ்லாத்தின் படி ஒழுகவில்லை என்பது போன்ற ஒரு நிலையையும் தமிழ்முஸ்லீம்களின் மனதில் விதைத்ததும் வஹாபியம் தான். இந்த அரேபிய ஆடை முறை தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் வருமுன்னர், உங்களின் முன்னோர்கள், இஸ்லாமியத் தாய்மார்கள், தமிழ்ப் பெண்களைப் போலவே சேலையணிந்து முக்காடிட்டுக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் உண்மையான, ஒழுக்கமான முஸ்லீம்கள் இல்லையா? இதில் வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம்கள் அனைவரும் அரபுக் கலாச்சாரத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டுமென்றோ அல்லது ஒரே சீருடையைத் தான் அணியவேண்டுமென்றோ முகம்மது நபி அவரகள் எந்த இடத்திலும் முஸ்லீம்களுக்குக் கூறவில்லையாம். இந்த வஹாபியத்தின் அடையாளமாகிய இந்த அரபு மயமாக்கலும், அரேபிய நடையுடை பாவனைகளும் தமிழர்களையும் அவர்களின் இஸ்லாமிய சகோதரர்களையும் இலங்கையில் வேறுபடுத்துகிறது .அதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படலாம் என்பது தான்.

    5. நீங்கள் முன்பு “வடநாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்” என்று நினைத்திருந்தால் நீங்கள் தமிழ் முஸ்லீம் அல்ல, தமிழ்நாட்டில் வாழும் உருது முஸ்லீம்களில் ஒருவராக இருக்கலாமோ என்னவோ. அவரகள் உண்மையில் வடநாட்டிலிருந்து வந்தவர்கள் தானே தவிர தமிழ்முஸ்லீம்கள் அல்ல, தமிழ்நாட்டில் வாழும் முஸ்லீம்கள், அவ்வளவு தான்.

    6. தமிழ்நாட்டுத் தமிழ்முஸ்லீம்கள் என்று நான் குறிப்பிடுவதும், பேசுவதும், வீட்டிலும் வெளியிலும் தமிழில் பேசும், தமிழ் முன்னோர்களைக் கொண்ட, தமிழ்நாட்டில், குறிப்பாக இராமநாதபுரம், காயல்பட்டினம், தொண்டி, ராமேஸ்வரம், சாயல்குடி, நாகூர் போன்ற கடலோர நகரங்களிலும், ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ் முஸ்லீம்களையே தவிர, வீட்டில் உருது பேசும் முஸ்லீம்களை அல்ல. என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தமிழை வெளியில் பேசினாலும், எத்தனை தலைமுறைகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அல்ல.

    7. நான் கூறும் தமிழ் முஸ்லீம்கள் யாரென்றால், உதாரணமாக ‘யாதும் Yaadhum’ என்ற இணையத்தளத்தில் தமது தமிழ் வேர்களைத் தேடுவது மட்டுமல்ல, தமது தமிழ் வேர்களைப் பெருமையுடன் பேசும் அந்த தமிழ் முஸ்லீம்கள். அவர்கள் ஒருபோதும் தமிழை இந்துக்களின் மொழி என்றோ அல்லது அவர்களின் முன்னோர்கள் வடநாட்டிலிருந்து வந்ததாகவோ நினைத்ததில்லை.

    8. நீங்கள் கூறுவதைப் பார்த்தால், இன்று கூடத் தமிழை நீங்கள் உங்களின் தாய்மொழியாக, உங்களின் முன்னோர்களின் மொழியாக எண்ணி நேசிக்கவில்லை, மாறாக வஹாபிய சிந்தனை வழியில் எல்லா உலகமொழிகளும் சமம் என்ற வகையில் நேசிக்கிறீர்கள். அந்த வழியில் பார்த்தால் நீங்கள் உண்மையில் தமிழனே அல்ல என்பது தான் எனது கருத்து, ஒருவர் தனது தாயை நேசிப்பதற்கு மதபோதனை தேவைப்பட்டதென்றால், அந்த தாய், அவரது உண்மையான தாயாக இருக்க முடியாது, உண்மையான தமிழர்கள் தமிழை நேசிப்பதும் தாயை நேசிப்பது போன்றது தான்.

    9. வஹாபிய சிந்தனை உண்மையில் அரபு விசுவாசத்தை அதிகரிக்கிறது, ஊக்குவிக்கிறது என்பது தான் பலரின் கருத்தாகும். உண்மையில் அது தான் அந்த மதப்பிரிவைத் தோற்றுவித்தவரின் நோக்கமும் என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் வஹாபியம் இந்தியாவிலும், தமிழிலும் பற்றை ஏற்படுத்தியது என்கிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது.

    10. ஒசாமா பின்லாடன் மட்டுமல்ல ISIS உம் கூட வஹாபிகள் தான், நீங்கள் கூறுவதைப் போல அவர்களும் கூட கிறித்தவரகளை விரோதியாகப் பார்க்கவில்லை என்பதை அண்மையில் சிரியாவில் கிறித்தவ புனிதர்களின் கல்லறைகளை உடைக்கும் போது பார்த்தோம். அதை விட இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அண்மையில்கூட வஹாபிகள் இந்துக் கோயில்களின் சிலைகளை நொருக்கினார்கள்.

    11. வஹாபிஸ்டுகள் தான் குரானை முதலில் தமிழில் மொழிபெயர்த்தார்கள் என்பதையும் அதிலும் இந்துக்களின் மொழியில் குரானை மொழிபெயர்த்தல் பாவம் என்று தமிழ்நாட்டு தமிழ் முஸ்லீம்கள் நினைத்துக் கொண்டதால் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை, நீங்கள் இதற்கு ஆதாரம் காட்டுங்கள். ஏனென்றால், தமிழர்களின் பிள்ளைத் தமிழ் பாடும் மரபில், முகம்மது நபிகளுக்கே அழகு தமிழில் பிள்ளைத்தமிழும், சீறாப்புராணமும் பாடிய தமிழ் முஸ்லீம்கள், தமிழில் குரானை மொழி பெயர்த்தல் பாவம் என்று நினைத்தவர்கள் என்பது தமிழ் முஸ்லீம் சமூகத்தின் தமிழ்ப்பற்றை இழிவு படுத்துவதாகும், இலங்கையில் எண்பதுகளின் முற்பகுதிகளில் கூட, முஸ்லீம்கள் தமிழ்ப்பற்றுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். ஊருக்கு நடுவில் பந்தல் போட்டு, விடிய விடிய சீறாப்புராணம் பாடிக் கதை கேட்குமளவுக்கு தமிழ்ப்பற்றுள்ளவர்களாக இருந்தனர், எல்லாவற்றையும் கெடுத்தது தீவிரவாத வகாபியம் தான். சவூதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகத் தொடங்கியதும் தமிழ்ப்பற்றும் காணாமல் போகத் தொடங்கியது.

    12. பி.ஜே வின் சிந்தனை எப்படிப்பட்டது என்பது அவரது ஈழத்தமிழர் எதிர்ப்புக் காணொளிகளிலிளிருந்தும், அவரது தமிழர் எதிர்ப்பை ஐ. நா. மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறியதிலிருந்தும் அறியலாம். “உல‌க‌ வ‌ரலாற்றில் முல்லா முகம்ம‌து உம‌ர் போன்ற‌ உறுதியான‌வ‌ர்க‌ளை ச‌ரித்திர‌த்தில் பார்த்த‌தில்லை. அமெரிக்காவை எதிர்ப்ப‌தில் காம்ப்ர‌மைஸ் ப‌ண்ண‌க் கூடாது. அமெரிக்காவை எதிர்த்த‌ வ‌கையிலே முல்லா ஒம‌ர் செய்த‌தும், ஒசாமா பின்லாட‌னும் செய்த‌தும் 100% ச‌ரி. அல்லாஹீ அக்ப‌ர்.” என்று கூறிய அதே பி.ஜே தான் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பிரச்சாரம் செய்தவர். அந்தக் காணொளிகள் எல்லாம் எனது வலைப்பதிவில் உண்டு.

    13. வரதட்சணை வாங்கும் பழக்கம் தமிழர்களுடையதாக அல்லாது விட்டாலும், நீங்கள் அதைக் கடைப்பிடித்ததுது அரேபிய கலாச்சாரத்தின் அடிப்படையிலே தவிர தமிழர் பண்பாடு என்பதற்காக அல்ல. நல்லது, தமிழர் பண்பாட்டுக்காக வரதட்சனை வாங்கமல் திருமணம் செய்த நீங்கள் திருமணத்தில் பெண்ணுக்கு முக்காடிட்டு அறைக்குள் பூட்டி வைக்காமல், தமிழ்ப்பண்பாட்டின் படி பெண்ணை எல்லோரும் பார்க்கும் வகையில் திருமணம் செய்தீர்களா? மாலை மாற்றுவது தமிழர் கலாச்சாரத்தின் முக்கிய அங்கம், ஆனால் அதை ஏன் நீங்கள் செய்யவில்லை. அரேபியக் கலாச்சாரத்தின்படி, வாஹபியத்தின் அடிப்படையில் திருமணம் செய்து விட்டு, இப்பொழுது தமிழரின் பண்பாடு என்று பம்மாத்து விடுவதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் நானோ அல்லது இந்த இணையத்தள வாசகர்களோ இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    14. ‘தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து மனம் பேசுவார்: பொருள் தந்து விலை பேசுவார்: மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்….. உலகை விலை பேசுவார்……….’

    உங்களுக்குத் தமிழ் சரியாகத் தெரியாது போலிருக்கிறது,. இந்தப் பாட்டில் பெண்ணின் தாய்மாமன் அதாவது பெண் வீட்டார் இப்படியெல்லாம் சீதனம் கொடுப்பார் என்று தான் கண்ணதாசான் கூறுகிறார். இதற்கும் நீங்கள் கூறும் மஹருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
    .
    //எனவே ஒருவன் தமிழனாக பிறந்து விட்டால் அவன் எந்த மார்க்கத்துக்கு சென்றாலும் அவன் தமிழன் என்ற இனமாகத்தான் பார்க்கப்படுவான். இன்று வரை எங்கள் வீடுகளில் ஆங்கிலம் கலக்காத அழகிய தமிழைத்தான் பேசுகிறோம்.///

    கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் ஈழத்தில் இந்த நிலையில்லை, முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை.

    //பாலஸ்தீனில் கொடுமை நிகழ்த்தப்படுவதால் அதற்காக இங்குள்ள முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில் என்ன தவறு? ‘வாசுதேவக குடும்பம்’ என்று பண்டைய இலக்கியங்கள் கூறுவது முழு உலக மக்களையும் சேர்த்துதானே! ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று சொன்னதும் இதே தமிழ் காப்பியங்கள் தானே!//

    அந்த சகோதரத்துவத்தை ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்த்தாகக் கொல்லப்படும் போது ஏன் காட்டவில்லை, உங்களின் குருவானவர் பி.ஜே கூட ஈழத்தமிழர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்தார். இன்று பாலஸ்தீனர்களுக்காக கதறி அழும் முஸ்லீம்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித ஆணையத்தை எதிர்த்து, தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை எதிர்த்து, வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முஸ்லீம் நாடுகளை ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    //தமிழகத்தில் வைக்காததற்கு காரணம் இங்கு நிலவும் சாதி முறையே. மதம் மாறியவன் அதே பெயரில் தொடர்ந்தால் ‘என்ன சாதி’ என்ற அடுத்த கேள்வி வரும். //

    இது வெறும் சப்பைக்கட்டு தான். தமிழர்கள் எல்லோரும் இன்றும் சாதிப் பெயரை வைப்பதில்லை, சாதி இல்லாத தமிழ்ப் பெயர்களும் உண்டு,

    //எனவே தமிழகத்தில் வஹாபியம் அதிகரித்திருப்பதால் தமிழுக்கோ தமிழ் நாட்டுக்கோ தமிழர்களுக்கோ எந்த இடைஞ்சலும் வந்து விடாது. மாறாக அழிந்த தமிழனின் பழைய வரலாறு புதுப்பிக்கப்படுவதாகவே சொல்லலாம்.///

    வஹாபியம் வந்து தமிழனின் பழைய வரலாற்றைப் புதுப்பிக்கும் நிலை வரும் என ஒரு வஹாபிஸ்டு இவ்வளவு வெளிப்படையாகச் சொல்வதைப் பார்க்கத் தான் எனக்கு நெஞ்சு திக் திக்கென்று அடிக்கிறது. 🙂

  246. பா சு க் என்ற ஹிந்துப்பெயரில் ஒளிந்து கொண்டு

    முகமூடி சுவிசேஷ ப்ரசாரம் செய்யும் மிஷ நரியான

    ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களுக்கு

    \\\\ வைணவத்தின் மீது ஏன் கோபம்? அதுபாட்டுக்கு அது இருந்து விட்டுப்போகட்டுமே. அது உங்களை கடித்ததா? \\\\

    இது உங்களைத் தான் கேழ்க்க வேண்டும்? தேவரீர் எதற்காக வைஷ்ணவர்களை மாற்று மதத்துக்கு மாத்தும் ஏஜெண்டாக செயல்படுகிறீர்? இதுக்கு பதிலே இருக்காதே

    \\\ மனு இருக்கட்டும், சாதிகளும் வேண்டுமென்பது எப்படி சரியாகும்? \\\\

    முகமூடி போட்டு சுவிசேஷ குதர்க்க அதிக ப்ரசங்கிக்கு க்ருஷ்ணகுமார் எங்கே மனு இருக்க வேண்டும் என்று சொல்லியதாகக் காண்பிக்க முடியுமோ? மனு தர்ம சாஸ்த்ரம் என்பது கலி பிறப்பதற்கு முன்னமேயே காலாவதியான சாஸ்த்ரம் என்று பல முறை உம்முடைய பூர்வ அவதாராதிகளில் எழுதியிருக்கிறேன். ஸ்ம்ருதிகள் என்பது குறிப்பிட்ட கால வரையறைக்கு வரை தான் என்று சாரங்கனும் உங்களுக்கு சொன்ன பின்னும் சொன்னதையே திருப்பித் திருப்பி பேத்துவீர்கள்?

    வைஷ்ணவர்களில் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு எல்லா ஜாதியைச் சார்ந்த வைஷ்ணவர்களையும் ஸ்மரித்து ………….. ஒரு தடவை ப்ரபன்னர்களின் பெயரை வாசிக்க நேர்பவர்களும் கூட ப்ரபன்னர்கள் என்ற படிக்கு………………….. எல்லோரையும் வணங்குகிறேன் என்பது …………………… சமத்துவம் ஆகாது……………….. வைஷ்ணவத்தின் மீது எனக்கு கோபம்?????

    ம்…………… பட்டைய கிளப்புங்க…………. இப்படி பேத்துவதெல்லாம் வாதம் 🙂

    \\\\ பிராமணன் என்ற சொல்லே பிரச்சினை. அஃது ஒரு ஜாதியைக்குறிப்பிடுவது அன்று \\\\

    பின் ஏன் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ மலர் மன்னன் முதல் கீதா சாம்பசிவம் வரை பலரை ப்ராம்மணர் என்று இந்த அவதாரத்திலும் முந்தைய அவதாரத்திலும் பேத்து பேத்தென்று பேத்தியிருக்கிறார்?

    \\\\ சொல்லுங்கள் நீங்கள் எப்படி பிராமணர் ஆனீர்கள்? \\\

    இங்கு இந்த தளத்தில் கருத்துப்பகிரும் நானோ அல்லது சாரங்கனோ அல்லது வேறு யாருமோ நாங்கள் இன்ன ஜாதி என்று எங்கு சொல்லியிருக்கிறோம் சொல்லுங்கள்?

    சொல்ல முடியாவிட்டால் மலையேறி வேறு அவதாரத்துக்கு மாறி விடுங்கள்.

    ஸ்ரீமான் மலர் மன்னன் மஹாசயரிலிருந்து கீதா சாம்பசிவத்திலிருந்து சாரங்கனிலிருந்து யார் யார் ப்ராம்மணர் என்று எப்படி நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்? யாருடைய ஜாதி சான்றிதழையாவது பார்த்தீர்களா? யாருடைய முகத்தையாவது பார்த்தீர்களா?

    ஏசு சபையில் எழுதிக்கொடுத்தார்களா 🙂

    ஆர் எஸ் எஸ்ஸில் யாரும் எங்களது இன்ன ஜாதி என்றெல்லாம் சொல்லிக்கொள்வதில்லை. கூலிக்கு மாரடிக்கும் உங்களைப் போன்ற மலையேறாத சுவிசேஷ மிஷ நரிகளே ஹிந்துக்களை ஜாதி வழியாகப் பிளவு படுத்தி மத வ்யாபாரம் செய்கின்றன.

    அப்போ இணைய ஜாம்பவான் கள் உங்களுக்கு செய்த மங்களாசாஸனத்தை பகிர்ந்தே ஆக வேண்டும் என்று ஹடம் பிடிக்கிறீர்கள் 🙂 🙂

  247. வியாசன்,

    ஆரம்பிச்சாச்சு உங்கள் பார்பன த்வேஷம். கோபம் பொத்திக்கிட்டு வருது போல உங்களுக்கு.

    நீங்கள் காட்டின அகழ்வாராச்சி எல்லாம் தமிழ் நாடு சம்பந்தப் பட்டவை. அதையும் நான் முன்னாடியே சொல்லிட்டேன். இந்தியா பூராவும் தமிழ் கல்வெட்டுக்கள் இருந்தன என்பதற்கு ஆதாரம் இல்லை. இந்தியா பூராவும் சமஸ்க்ருத கல்வெட்டுக்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் இருக்கு.

    நான் சமஸ்க்ரித்த வாதியா இல்லையா என்பது இல்லை விஷயம், உங்களுக்கு இருப்பது புரட்டை கிளப்பும் வியாதி.

    என்னால் தமிழ் ஒரு அற்புதமான மொழி அதை விட சிறந்த மொழி இல்லை என்றும், சமஸ்க்ருதம் ஒரு அற்புதமான மொழி அதை விட சிறந்த மொழி இல்லை என்றும் ஒரே சமயத்தில் முரண்பாடுகள் இல்லாமல் இயங்க முடியும். அது எப்படி சாத்தியம் என்று உங்களுக்கு விளக்க ஒரு தமிழ் பாசுரம் தருகிறேன்

    உண்டோ வைகாசி விசாகத்திற்கு ஒப்பொரு நாள் உண்டோ சடகோபருக்கு ஒப்போருவர் உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்கு உண்டோ ஒரு பாரிலும் ஒக்கும் ஊர்

    உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்போதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்போருவர் …

    ஆண்டாள் பிறந்த திருவாடி பூரத்தின் சீர்மை ஒருநாளுக்கும் உண்டோ பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

    இப்படி தான் சார். உங்களுக்கு உள்ள த்வேஷ பாவனை மொழிகளை பற்றி தவறான புரிதல்களால் உங்களால் ஸ்திர மதியுடன் இயங்க முடியவில்லை.

    அம்பேத்காரை நான் பெரிதும் மதிக்கிறேன். எங்களது சமஸ்க்ருத பாடத்திட்டத்தில் அவரது விஷயமாக பல அம்சங்கள் நாங்கள் சேர்த்துள்ளோம், அவரை பற்றின ஒரு முழு சமஸ்க்ருத நூலும் இயற்றி உள்ளோம்.

    நீங்கள் எனக்கு சான்றிதழ் தர தேவை இல்லை. நிற்க. மதிர்ப்பு இருந்த போதிலும் ஆதார பூர்வமாக எவ்விஷயமும் இல்லாவிடில் அதை ஏற்க தேவை இல்லை. அதை ஒரு பார்பனர் சொன்னாலும் சரி. பார்பன ஆசாரியர்கள் ஆழ்வார்கள் காலம் கீ பீயில் என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் நான் சுத்தமாக நம்புவதில்லை.

    ஆரிய திராவிட வாதம் என்பது தகர்த்தெறியப்பட்டு பல பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக துல்லியமான அகழ்வாராய்ச்சி literary ஆதாரங்கள் அடுக்கடுக்காக தரப் பட்டுள்ளன. இதை எல்லாம் பார்க்காமலேயே படிக்கமலீயெ குருட்டுத்தனமாக இன்னும் ஆரிய திராவிட பல்லவி பாடும் கூடத்தை ஒன்னும் செய்ய முடியாது. இவர்களுக்கு பாரதம் முக்கியமில்லை, மொழியின் பெயரால் அந்நியனிடம் நாட்டை அடகு வைத்து விடுவார்கள். இந்த ஆரிய திராவிட மாய புரட்டை கிளப்பி விட்ட மாச்ஸ் முல்லரே அவனது செயலுக்கு வருந்தி மறுப்பு தந்து விட்டான். அவன் வாந்தி எடுத்த பொய்யை இன்னும் நாம் முகர்ந்து கொண்டிருக்கிறோம். சபாஷ்.

    உங்கள் தகடுதிதத்திர்க்கு ஒரு சான்று இதோ

    //
    இந்தியா முழுவதிலும் கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்திலும் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன. வெறும் 5 வீதமானவை மட்டும் தான் சமக்கிருதம், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் உள்ளன. அதற்கு ஆதராமாக கீழேயுள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.
    //
    இது தமிழ் நாட்டில் கிடைத்த கல் வேட்டை பற்றி பேசுகிறது. நீங்கள் இந்தியா முழுக்க அதை விரிகிரீர்கள். தமிழ் கல்வெட்டுக்கள் இந்தியா தவிர கம்போடியா, இந்தோனேசியாவிலும் உண்டு.

    எனக்கு தமிழில் மிக்க அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் சமஸ்க்ருத சூன்யம். இப்படி இருக்கையில் நீங்கள் சமஸ்க்ருதத்தை பற்றி கதை கட்டுகிறீர்கள்.
    உங்களால் நான் சொல்வதை மறுக்க உருப்படியாக எதையும் சொல்ல முடியவில்லை, உங்களுக்கு கை வந்ததெல்லாம் பார்பன வாதம், ஜாதி வெறி, மத வெறி என்று பழி போடுதல் தான்.

    நானும் தான் உங்கள் மேல் சும்மாவேனும் பழி போடலாம். உங்களுக்கு சிங்கள தேசம் மேல் உள்ள பற்று அங்குள்ள தமிழ் அடையாளங்கள் உங்களுக்கு முக்கியம் அதனால் பாரத ஐக்கியத்தை விட உங்களுக்கு பிராந்திய ஐக்கியம் தேவை படுகிறது. இதனாலேயே நீங்கள் இஸ்லாமிஸ்டு தமிழ் பேசினால் அவனை ஏற்பேன் என்கிறீர்கள். உங்களடுயது ஆபாயகரமான போக்கு. இந்த அடையாளங்களை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் செய்யும் திருப்புகள் தான் இந்த தமிழிலிருந்து சம்ஸ்க்ருத கதை எல்லாம். உங்களது தளத்தில் பிராமணர்கள மட்டம் தட்டி வெள்ளாளர்களை தூக்கி பிடிபதாக ஒருவர் சொன்னார்.

    இதை எல்லாம் நான் மறுபடியும் மறுபடியும் எழுத மாட்டேன். விஷயத்துடன் வாதம் செய்யுங்கள். நீங்கள் 1 % விஷயம் வைத்தால் 99% த்வேஷம் வைக்கிறீர்கள்.

    எதோ எல்லா பார்பனர்களின் பல்லை பிடுங்கி பார்த்தார் போலே. நீங்கள் வரலாற்றிலே ரொம்ப strong தான் சார். ஏன் என்றால் உங்களால் ஒரு புது வரலாற்றையே படைக்க முடிகிறது.

    ரெண்டு நாள் பிரயாணம் முடித்து உங்களை மீண்டும் சந்திக்கிறேன். கல்வெட்டுக்களை பற்றி பேசுவோம். இன்னும் மொழியளுக்குள் புகுவோம்.

    கல்வெட்டு என்று வரும்போது நீங்கள் சிக்கிகொள்வீர்கள். ஏன் என்றால் நீங்கள் எடுக்கும் எண்ணிக்கை என்பது கால வரையறைக்கு உட்பட்டது. மத்திய காலம் வரை சமஸ்க்ருத கல்வெட்டுக்களின் ஆதிக்கம் அதன் பின் தமிழ் கல்வெட்டுக்களின் ஆதிக்கம். தமிழ் மன்னர்கள் வலுபெற்ற காலத்திற்கு பிற்பாடு தான் தமிழ் கல்வெட்டுக்கள் அதிகமடைந்தன. இந்த கால நிர்ணயம் தெளிவாகவே ஆரபட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

    நீங்கள் நீ பாப்பான் அப்படி தான் பேசுவே, நீ குடுமி வெச்சவன் உனக்கு சாதி தான் முக்கியம் என்று வேண்டுமானால் பேசலாம் அல்லது வாதத்தை விஷயத்தோடு வைத்துக் கொள்ளலாம். உங்கள் இஷ்டம். நான் ஜாதியை இழுக்க மாட்டேன்.

  248. வேதங்களை படிப்பித்து சமஸ்கிரத மொழியை வளர்க்க அதன் நிர்வாகிகள் பாடுபடும் லட்சணத்தை இந்த யுட்யூபில் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்த பதிலுடன் ஒரு வேத பாடசாலையில் நடப்பதாக ஒரு தெலுங்கு சானலில் வந்த ஓரினச் சேர்க்கை செய்தி காணொளிக்கான சுட்டியை இணைத்துள்ளார் திரு.சுவனப்பிரியன். அப்படி என்றால் ஒரு மதரஸாவில் ஓரினச்சேர்க்கை நடைபெற்றதென்றால் அதை ‘இஸ்லாமை வளர்ப்பதற்காக’ என கூறுவதை சுவனப்பிரியன் ஏற்பாரா? சுவனப்பிரியன் எனும் பெயரில் எழுதுகிற நபர் எப்போதுமே பொய்களையும் புளுகுகளையும் தமது மதவெறியால் பரப்பி வருபவர் என அறிவோம். இருப்பினும் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் எனும் உயரிய பண்புகளுக்காக இவரது பொய்கள் இங்கே பதிப்பிக்கப்பட்டு அவற்றுக்கு தகுந்த பதிலடிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஜனநாயகம் கருத்துரிமை எனும் பண்புகள் கார்ட்டூனுக்காக கழுத்தை வெட்டும் அமைதி மார்க்க ஈமானியர்களுக்கு புரியப் போவதில்லை என்பதை இந்த தளம் அறிந்தே உள்ளது. ஜனநாயகம் கருத்துரிமை ஆகியவை கற்பூர வாசனைகள். – ஆசிரியர் குழு.

  249. வியாசன்

    ஒரு தமிழ் பாப்பாச்சீ லோக்சபாவுல தமிழ்ல பதில் தந்துள்ளர்களாம் முதல் முறையாக.

    உங்களுக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்குமே.

  250. வியாசன்

    நீங்கள் இதை நிரூபணம் செய்ய வேண்டும்.

    புராணங்களை தமிழிலிருந்து சமஸ்க்ருதத்தில் சுட்டனர். யார், எந்த காலத்தில்
    வேதம் 340 கீ முவில் தான் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. யார் மொழி பெயர்த்தார்
    இந்தியா முழுவதும் தமிழ் தான் இருந்தது. ஒருவர் சொன்னார் என்பது ஆதாரமாகத்து. ஒருவர் எதனால் சொன்னார் அதன் சாராம்சம் எல்லாத்தையும் பார்க்கணும்
    செத்த ஒருவரை நீங்கள் உயிர்பிக்கணும்
    சமஸ்க்ருத்தின் தாய் தமிழே. வெறும் பத நிர்மாணங்களை விடுத்து இன்னும் உள்ளே புகவேண்டும். எந்த காலகட்டத்தில் சமஸ்க்ருதம் தோன்றியது
    இவை எல்லத்ததும் வெறும் ஹேஷ்யங்களை கொண்டு நிறுவாமல் ஆதாரம் தாருங்கள்
    பழம் தமிழன் வேதத்தை [கர்ம மார்கத்தை] ஆதரிக்க வில்லை. என்பதற்கு சான்று
    ஆரிய திராவிட வாதம் உண்மை. எப்படி, கிடைத்த சாண்டுகள் எல்லாம் ஏன் பொய்

    ஒரு ரெண்டு மூணு நாட்கள் கழித்து சந்திப்போம் நண்பரே. நேர்மையாக வாதிடுவோம்.

  251. //பக்தியில் வித்யாசமும் வருவதில்லை……………..சிவபெருமான் பக்தி செய்யும் பக்தனுக்கு அருளுவதில் குறையும் வைப்பதில்லை//

    ஒன்றே சொன்னீர்; நன்றே சொன்னீர்!

    சிவபெருமானை எம்மொழியில் வணங்கினாலும் அருளுவதில் குறையில்லையென்றால், தமிழையே தாய்மொழியாககொண்ட மக்களுக்கு ஏன் சமஸ்கிருதம்? தமிழ் மட்டும் போதுமே ?

    இப்படி இங்கு வாதம் முடிந்து போச்சு. கிருஷ்ணகுமாருக்கு எல்லாரும் ஜோரா கைதட்டலாம்.

    சமஸ்கிருதம் கோயில் மொழியாகவே இருக்கட்டும். திணிக்கப்பட்டால், தமிழர்களை பிளவுபடுத்தும். ஏற்கனவே அன்டி பிராமனீசம் இருக்கு. இன்னும் அது வளரும். அதைத்தடுக்க பிராமணல்லாதோரின் பெரும்புள்ளிகளை சமஸ்கிருத லாபி வ்வ்ளைத்துப்போடும். பிளவும் பிரிவும் சண்டையும் சச்சரவும் தொடர்கதையாகப்போகும். தமிழர்கள் தமிழுக்காக போராடிக்கொண்டே இருப்பார்கள். மொத்ததில் சமஸ்கிருதம் அமைதியைக் கெடுக்கும்.

  252. //நீங்கள் தமிழிலும், தமிழர் மீதும் துவேசம் கொண்ட சமக்கிருதவாதி என்பதையும் காட்டி விட்டீர்கள்//

    இதைப்படித்தவுடன் ஏன் சொல்கிறார் என்று பார்த்தால் சாரங்கனின் கீழ்க்கண்ட பதிவு அவரை தமிழரையும் தமிழையும் வெறுப்பவராகத்தான் காட்டுகிறது.

    //மஸ்க்ருதம்ன சமைத்த க்ரந்தம் ப்ராக்ருதம் பிறந்த க்ரந்தம். காசி என்றால் காசு இருப்பவர்கள் வாழும் ஊர். மதுரா என்றால் மது ரீங்காரம் பாடும் ஊர். அயோத்யா என்றால் ஒன்னும் தோன மாட்டேங்குதே அடுத்த தபா சொல்றேன். ஜனகர் என்பது சனகர் அதாவது சனங்களின் அரசர். தசரதர் தசையால் ரதம் ஓட்டுபவர். இந்திரன் இடம் என்பதை திறன்பட ஆள்பவன். வாயு – வாயை திறந்து கொண்டே செல்பவர் (வாய திறந்தா காத்து வருதா இல்லையா). அக்னி – ஒன்னும் தோனல (சமஸ்க்ருதத்துல அக்ரே நயதி முன்னடத்தி செல்பவர் அதனால் அக்னி). ஆகாசம் – இதை பத்தி சொல்லவே வேண்டாம். ப்ருத்வீ – பிற த்வீபம் அதாவது வானத்தை விட வேறான தீவு.

    வியாசன் பாத்தீங்களா நான் தான் உங்களுடைய மேலான சிஷ்யனாக இருப்பேன். நீங்கள் கொடு போட்ட six lane road போடுகிறேன் பாருங்கள்.

    வ்யாசாய குரவே நம: அப்படின்னா வ்யாசராகிய குருவே நாம் என்று தானே அர்த்தம்.

    முன் தமிழன் இருந்தான் அவன் மட்டுமே இருந்தான் முழு உலகிலும் அப்புறம் தமிழன் கெட்டிகாரனா இருக்கானே அவன் இந்திரா பதவியை பிடித்து விடுவானோ என்று பயந்து இந்திரன் பல மொழிகளை உருவாக்கினான்.(இந்த கதையா தான் விவில்யத்தில் சுட்டுவிட்டார்கள்) அதில் அரபு, லத்தீன், கிரேக்கம், போர்டுகீசு, ஜேர்மன், சைனீஸ், மங்கோலியன் எல்லாம் அடக்கம். மங்கோலியா பாஷை தான் மருவி ப்ராக்ருதமாகி தமிழுடன் சேர்ந்து சமஸ்க்ருதமாச்சு.//

    என்ன கிண்டல் தமிழை !

    //சரி ரஜினி காந்த் ஒரு தீவிர ஹிந்து அவரது ஜாதி என்னன்னு தான் மக்கள் தினசரி சர்ச்சை பன்றாங்கலான்னா. இளையராஜாவின் ஜாதிய வெச்சா தினமும் சண்ட நடக்குது. என்ன சுத்த பேத்தலா இருக்கு.//

    சாரங்கன்!

    மக்கள் சினிமாக்காரர்களின் ஜாதிகளைத்தேடமாட்டார்கள். அதே சமயம், அவர்கள் சினிமாவிட்டு அரசியலில் வரும்போது தேடப்படும். இரஜனி அரசியலில் வந்து சமஸ்கிருதம், தேசியம் என்று பேச ஆரம்பித்தால் ஏன் இவருக்குத் தமிழர் மேல் பற்றில்லை என்று தேட ஆரம்பித்துவிடுவார்கள். தீவிர ஹிந்து என்ற அப்போது அவர் சொல்லமுடியாது. ஹிந்து என்று சொல்லலாம். இளைய ராஜாவின் ஜாதியை வைத்துச்சண்டை போடுவார்கள்? அவரை வைத்துப்பணம்பண்ணமுடிகிறது என்றால் எல்லாரும் நாய் வித்த பணம் குரைக்காது என்று அவரைப்பயன்படுத்துவார்கள். காசு, பணம், துட்டு.

    பேத்தலா இல்லையா என்பது அவர்கள் சினிமாத்துறையை விட்டுவிலகினால் மட்டுமே தெரியும். இரஜனி அரசியலுக்கு வரப் பயப்படும் காரணமே அவர் தமிழர் இல்லை; மற்றும் பல அவரின் அன்டி தமிழ் காரணங்களும் வெளிப்படும் எனப்ப்யப்படுவதால் மட்டுமே. அவருக்கு வேண்டியது கோடிகோடியாக பணம். அஃது இருக்கும் துறையிலே பவ்யமாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

    ஏன், சுவனப்பிரியனை, சூ. பீ என்று எழுதுகிறீர்கள்? குழந்தைகள் சண்டை போடும்; பெயரைத்தான் அசிங்கமாகத் திரித்து எதிராளியைச் சீண்டி விரட்டப்பார்க்கும். குழந்தை விளையாட்டை வளர்ந்தவுடன் விட்டுவிடுவார்க்ள். சு.பி என்றால் சரி. ரொம்பவும் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் எழுதித்தள்ளுகிறீர்கள். சாந்தமாக எழுதினால் நம்பமாட்டார்கள் என்ற கற்பனையைக்குப்பையில் போடவும். If you trust your points, you need not outshout. Good and fair minded people will accept you. Trust yourself.

    பொதுவாகவே அனைத்து பதிவுகளிலும் சாரங்க் எனும் பெயரில் எழுதுகிறவர் இப்படித்தான் சுவனப்பிரியனை விளித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஆசிரியர் குழு அதனை மட்டுறுத்தியுள்ளது. எனினும் அதையும் மீறி இந்த தவறு வந்துள்ளது. சாரங்க் என்பவர் இப்படி தொடர்ந்து சிறுபிள்ளைத்தனமான அசிங்கமான தாக்குதல்களை கைவிட வேண்டுமென மீண்டும் ஆசிரியர் குழு எச்சரிக்கிறது. உங்கள் கருத்துகளை விவாதிக்க மட்டுமே இந்த தளத்தை பயன்படுத்துங்கள் – உங்கள் வசைகளை அல்ல. -ஆசிரியர் குழு.

  253. தீவிர என்றால் என்ன தெரியுமா? ஃப்னேட்டிக் என்று பொருள். தீவிர முசுலீம் குண்டு வைப்பான். இல்லையா? அதைப்போலவே தீவிர ஹிந்துவும். மற்றவர்களிடையே அவனால் வாழமுடியாது. சொற்களை புரிந்து எழதவும். ஹிந்து என்றால் போதும்.

  254. சென்னை தி.நகரில் சாரதா வித்யாலயாவில் 3ம் திகதி ஆகஸ்ட் நடந்த ஸம்ஸ்க்ருத வகுப்பிற்கு 100 இல் இருந்து 150 பேர்கள் எதிர்ப் பார்க்கப் பட்டனர். ஆனால் வந்ததோ 293 பேர்கள்

    ஏற்ப்பாடு செய்யப்பட்ட இரண்டு வகுப்பறைகள் சேர்ந்த ஒரு பெரிய வகுப்பறை போக மேலும் இரண்டு இடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டிய நிலை உருவானது.

    தமிழர்கள் யாரும் ஸம்ஸ்கிருததை விரும்புவது இல்லையாம்.

  255. சாரங்கன்………..

    காலம் தாழ்த்தி பதில் எழுதியமைக்கு மன்னிக்கவும்…

    //இந்த சமஸ்க்ருத பதங்கள் எலாம் ஒரிஜினல் தமிழ் பதங்கள் என்று ரியர்ச்சு செய்பவர்களின் பின்புலம் அனைவரும் அறிந்ததே.//

    நகரம்= நகர் என்னும் தமிழ் வேர்சொல்லில் இருந்தே நகரம் என்னும் சொல் உருவானது. மக்கள் ஓரிடம் விட்டு வேறு இடத்திற்கு ‘நகர்’ந்து சென்று மேற்கொள்ளும் நாகரிக வாழ்க்கை முறையே நகரம் ஆகும்.

    நாகரிகம்= மக்கள் ஓரிடத்தில் நிலையாக தங்கி நகர வாழ்கையை மேற்கொள்ளலே நாகரிகம் எனப்படும். திருந்திய நகர வாழ்கையே நாகரிகம் எனப்படும். எடுத்துக்காட்டாக, சிந்து சமவெளி மக்களை கூறலாம்.

    மேற்கண்ட இரண்டு சொற்களும் தமிழ் சொற்களே என்று கூறியவர்கள் யாரும் பரங்கிப் பாதிரிகளோ அல்லது கழகக் கண்மணிகளோ அல்ல. அர்த்தமுள்ள இந்து மதம் 11 பாகங்கள் எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மேற்சொன்ன நூலில் கூறியவை தான். ஆக, இவரின் பின்புலத்தையும் அறிந்து கொள்வது நலம்.

    கண்ணதாசன் தான் என்றில்லை, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல மொழியியல் அறிஞரான சுனிதி குமார் சாட்டர்ஜி என்பார் தம்முடைய நூலான “The Origin and development of Bengali Language” என்னும் நூலில் கீழக்கண்டவாறு கூறிகிறார்.

    ” It is regarded as certain That DRAVIDIAN speakers were at one time spread over the whole of Northern India as well from balochistan to bengali”. pg.no.28.

    மேலும் ஆரியர்கள் திராவிடர்களின் மொழியை அறிந்து அதன் போக்கை ஒட்டியே தம் மொழியையும் எளிமையாக்கி கொண்டனர் என்று கூறுகிறார்.

    “The whole system of vedic has been simplified to that of the modern vernaculars and this simplification has been carried out to a great extent along the line of dravidian-ibid’ pages 38-39.

    ஆக, ஆரிய மொழி தன்னை வளப்படுத்தி கொண்டதே பழம் திராவிட மொழியாம் தமிழின் மூலமாக தான் என்பதை திரு. சட்டர்ஜி அவர்கள் நிறுவுகிறார். எதற்காக நிறுவுகிறார், கழகத்தின் மீதுள்ள பற்றாலா அல்லது கால்ட்வெல்லின் மீதான பாசத்தாலா. அல்லது திராவிடம் என்று முழங்கி ஆட்சியை பிடிப்பதற்க்கா. வங்காள மொழியின் பழமையை அறிந்து கொள்ள மொழியியல் அறிஞர்கள் இவரின் நூலினை தான் துணைக் கொள்வார்கள்.

    //ப்ருஹுதாரன்யாக உபநிஷத்தில் எருதை யாகம் செய்தால் அழகிய பிள்ளை பிறக்கும் என்றுள்ளதை சொல்கிறீர்கள். கொஞ்சமேனும் அதை ஆரயுவோம் அப்புறம் சொல்லுவோம் என்று கூட உங்களுக்கு தோன வில்லையே. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………. இந்த உபநிஷத் விஷயம் நெட்டில் தானே படித்தீர்கள். அந்த உபநிஷத்தின் ஆழம் ஹிந்து மதத்திற்கு சைவ மத அடித்தளத்திற்கு அதன் உதவி என்ன என்று நீங்கள் அறிந்திருகிரீர்களா.//

    ப்ருஹுதாரன்யக உபநிஷதத்தை முழுமையாக படித்திருக்கிறேன். உள்ளது எதுவோ அதை தான் நான் கூறினேன். அதை நெட்டில் இருந்தெல்லாம் எடுக்கவில்லை. ராமகிருஷ்ண மடம் அச்சிட்டு வெளியிட்ட நூல் தான். அதில் நான் மேற்சொன்ன மாட்டுக்கறி விடயத்திற்கு ஸ்லோகத்தில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான பதவுரைகளை கொடுத்து இருக்கிறார்கள். எருமை யாகம் என்றெல்லாம் கூறவில்லை. மாட்டுக்கறி உண்டால் நீண்ட ஆயுளுடன் கூடிய அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்று தான் கூறி இருக்கிறது. இன்னும் அதில் இருந்து கூறுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. இப்போது அது வேண்டாத வேலை என்பதால் அதில் கவனம் போகவில்லை.

    என்னுடைய ஊன கண்களுக்கு அதன் தத்துவார்த்தம் தெரியவில்லை. நீங்கள் தான் யகவல்கியரிடம் நேரடியாக உபதேசம் கேட்டு ஞான கண் பெற்றவர் ஆயிற்றே. அதில் கூறியிருப்பது மாம்சம் இல்லை அது வேறு என்று நிருபிக்கலாமே. என்ன இருந்தாலும் விலை போகாத தசாவதார கோட்பாட்டை உயிர்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுடன் இணைத்து கடை சரக்காக்கிய சாணக்கியர்கள் தானே நாம். இதற்கும் ஒரு கடை சரக்கு வைத்திருப்பீர்கள் கூறுங்கள் கேட்போம்…

    வியசானுக்கு நீங்கள் கொடுத்த பதிலினையும் பார்த்தேன்.. நம்முடைய தொன்மையான பாரதிய தேஷ்ஷிய சொத்தான ரிக் வேதத்திற்கு சொந்தமான தேன் மதுவையே(மது மத்ய) கொஞ்சம் alcohol கலந்து லிதுவேனியா போன்ற வெள்ளைகார கிறித்துவ நாடுகள் நம் பாரதீய கலாசாரத்திற்கு சொந்தமான ஒன்றை தனக்கு சொந்தமானதாக copy rights பெற்று கொள்ளும் அயோக்கிய தனத்தை பார்க்கும் பொழுது. ஆகாசதிற்க்கு “ஆகாசாத் வாயு: வாயோர் அக்னி, அக்னேர் ஆபஹ அத்ய ப்ருதுவீ” – தைத்ரியம் என்று நீங்கள் ஒவ்வொரு திராவிட(தமிழ்) சொல்லுக்கும் தைத்ரிய alcoholலை காட்டி காப்புரிமை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ,அவர்களாவது நேர்மையாக ஒத்துக்கொண்டார்கள், நம்மிடம் அதெல்லாம் எது?

    நான் மீண்டும் சொல்கிறேன் பாணினியின் சிறப்பு என்பது அவர் கண்டுணர்ந்த ஒலிகளில் தானே தவிர சொற்களில் அல்ல.. வடமொழியில் இருக்கும் பல ஆயிர கணக்கான சொற்களை உருவாக்கியது பானினியல்ல. அந்த அந்த கால கட்டங்களில் உள்ள வடமொழி வித்வான்களால் வெவ்வேறு மொழிகளில் இருந்து எடுத்து கொள்ளப் பட்டது தான் இவ்வளவு சொற்களும். தமிழர்களின் தோல் தெய்வமான சிவ பெருமானையே சமற்க்ருத(Sanskritized)மயமாக்கும் பொழுது. திராவிட சொல் எம்மட்டும்.

    //யாகம் என்பது செய்து நேரே அதன் பலனை பார்க்கலாம்…//

    //அக்னி ஹோத்திரம் செய்து அச்சூழலில் விளையும் மன சுற்றுப்புற மாற்றத்தை என்னால் நிரூபித்து காட்ட முடியும்.//

    இப்படி எல்லாம் பேசி வடமொழியின் தரத்தை இன்னும் தாழ்த்தி விடாதீர்கள். ஏற்கனவே நாறிக்கொண்டு இருப்பதே போதும்…. இப்படி ஜல்லி அடிப்பதை எல்லாம் “சமஸ்க்ருத பாரதி”க்கு வந்து “படத சமஸ்க்ருதம், வதத சம்ஸ்க்ருதம் ” என்கிற பாடலை பாடி அப்பாவியாக அமர்ந்திருக்கும் மாணவர்களிடம் போய் செய்யுங்கள்.

  256. திரு. க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    தமிழர்கள் பங்குபற்றும் இந்த தமிழ் இணையத்தளத்தில் உங்களின் சமக்கிருதம் கலந்த எழுத்து நடையின் மூலம் நீங்கள் கூற முனையும் செய்தி என்ன என்பதைக் கேட்க வேண்டுமென பல முறை நினைத்தும், கேட்க மறந்து விட்டேன். அதைத் தயவுசெய்து விளக்கவும்.

    //உலகளாவிய முஸ்லீம் உம்மா என்பது. அது வெறும் சும்மா.///

    எல்லா முஸ்லீம்களும் இன, மொழி, நாடு வேறுபாடின்றி ஒரே முஸ்லீம்களாக இணைய வேண்டுமென்பது இஸ்லாத்தின் கட்டளை. ஆனால் பல அரபு/முஸ்லீம் நாடுகளில் பல்வேறு காரணங்களால் அந்த ஒற்றுமை கிடையாது. லக்னோ, கான்பூர் பகுதிகளில் நடந்த கலவரங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ் முஸ்லீம்களிடம் அந்த இன, மொழி கடந்த இஸ்லாமியப் பற்று உண்டு, உதாரணமாக இலங்கையிலும் சூஃபி முஸ்லீம்களுக்கும், வஹாபிகளுக்கும் பிரச்சனை இருந்தாலும் கூட , ஈராக்கிலோ அல்லது பலஸ்தீனத்திலோ முஸ்லீம்கள் கொல்லப்படும் போது, ஒற்றுமையுடன் இணைந்து அதற்கெதிராகக் குரல் கொடுப்பார்கள். அந்த நல்லிணக்கத்தை தமிழ்நாட்டு முஸ்லீம்களிடமும் நான் கண்டிருக்கிறேன். சதாம் ஹுசையினுக்காகவும், தலிபான்களுக்காகவும் கூட Facebook இலும் தமது வலைப்பதிவுகளிலும் அழுத தமிழ் முஸ்லீம்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அதே வேளையில் அவர்களின் இனத்தினரும், மொழி வழிச் சகோதரர்களுமாகிய ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை முஸ்லீம்கள் அப்படித் துடிக்கவில்லை, என்பது தான் என்னுடைய கருத்தாகும். சியா – சுன்னி பிரச்சனையைப் பற்றி நானும் அறிந்துள்ளேன். அதன் பின்னணியில் இஸ்லாம் இருப்பதாக கூறுவதை விட அரசியலும், பொருளாதாரமும், எல்லைப்பிரச்சனையும், அந்தந்த நாட்டுச் சர்வாதிகாரிகளின் சுயநலமும் தானுள்ளன என்பது தான் உண்மையாகும்.
    .

    //. யூனிஸ் என்ற க்றைஸ்தவ போதகரின் சமாதி க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமியரின் வழிபாட்டு ஸ்தலமாக பன்னூற்றாண்டுகளாக இருந்து வந்தது. இதை வஹாபிய பயங்கரவாத இயக்கமான ஐ எஸ் ஐ எஸ் குண்டு வைத்து தகர்த்துள்ளது.///

    இதைப்பற்றி ஏற்கனவே நான் எனது வலைப்பதிவில் ஒரு பதிவையிட்டுள்ளேன்.

    //பன்மை என்பது இயற்கை மனிதனுக்கு அளித்த வரப்ரசாதம். அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்பதே உலக நடப்புகள் மானுடத்திற்குத் தெரிவிக்கும் செய்தி.///

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இந்த உண்மை நிலை தெரியாத ஆர் எஸ் எஸ் காரர்கள் இந்துத்துவாக் கொள்கைகளால் முழு இந்தியாவை மட்டுமல்ல, இலங்கையில் இந்துக்களை வெறுத்தும், இந்துக் கோயில்களை அழித்தும், ஆக்கிரமிக்கும் சிங்களப் பெளத்தர்களையும் இணைக்கலாம் எனக் கனவு காண்கிறார்கள். ஆர் எஸ் எஸ் தலைவர்களினூடாக, மோடியின் அரசை ஈழத்தமிழ் இந்துக்களுக்கேதிராகத் திருப்பி சிங்களவர்கள் மேலும் அழிவை உண்டாக்கப் போகிறார்கள்,. ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு உங்களைப் போன்ற, சிங்கள பெளத்தர்களின் இந்து எதிர்ப்புத் தன்மையை அறிந்தவர்கள் விளக்கிக் கூறினால் நல்லது. ஆர் எஸ் எஸ் காரர்களும், சுப்பிரமணிய சுவாமியும் இந்து-பெளத்த உறவு என்ற கனவை நனவாக்க ஈழத்தமிழ் இந்துக்களைப் பலியாக்கப் போகிறார்கள் போல் தெரிகிறது. எப்படி உலகளாவிய முஸ்லீம் உம்மா என்பது. வெறும் சும்மாவோ அது போன்றது தான் உலகளாவிய இந்து – பெளத்த உம்மாவும் வெறும் சும்மா தான்.

    தயவு செய்து இந்த கட்டுரையை படித்துப் பார்க்கவும்.

    ‘INDIA’S SRI LANKA POLICY MUST INCLUDE CAUTION’
    https://www.indiafacts.co.in/indias-sri-lanka-policy-must-include-caution/

    ///தமிழில் யாப்பிலக்கணப்படி மரபுக்கவிதைகள் இயற்றப்படுவது அருகிப்போய் விட்டதால் மரபுத் தமிழ் என்பது செத்துப்போய் விட்டது என்பது எப்படி அறியாமையோ அப்படியே அறியாமை சம்ஸ்க்ருதம் யாராலும் பேசப்படாத …………///

    மன்னிக்கவும் இது உருப்படாத ஒப்பீடு. சமக்கிருதம் செத்த மொழி என்று நான் மட்டும் கூறவில்லை, உலக மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள். சமக்கிருதம் சாகவில்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டியவர்கள் அவர்கள் தான். தமிழில் மரபுக்கவிதைகள் இன்றும் இயற்றப்படுவது மட்டுமல்ல, வித விதமான புதுக்கவிதைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. வாழும் மொழியாகிய தமிழையும், “செத்துப் போன” மொழியையும் ஒப்பிடுவது தான் அறியாமை என்று எனக்குப் படுகிறது. சமக்கிருதம் இன்னும் வழிபாட்டு மொழியாக இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை.

    //பாரத ஐக்யம் பற்றிப் பேசுகிறீர்கள் அல்லவா?///

    நீங்கள் கூறியவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். நான் ஒரு இந்துவாக இருந்தும் கூட இவர்களுக்கும் எனக்கும் எந்த வித தொடர்புமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை,. அப்படியிருக்க எப்படி, சமக்கிருதமும், இவர்களின் சமக்கிருத இலக்கியங்களும் பாடல்களும் சாதி, மொழி, மத, இன, நிற வேறுபாடுகளுடன் பன்முகப்பட்ட இந்தியாவை இணைக்க முடியும். சமக்கிருத திணிப்பை இந்துக்களாகிய தமிழர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது, முஸ்லீம்களும் கிரித்தவர்களும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். இந்த சமக்கிருத திணிப்பு இந்தியாவின் 3% பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்துமே தவிர, பாரதத்தை ஐக்கியப் படுத்தாது, மேலும் பிளவடையச் செய்யும்.

  257. @ mani

    // Ironically both Viyasan and Bala krishna Saranga are Sanskrit names.//

    ,தமிழில் வி என்றால் உயர்ந்த அல்லது மேலான என்ற கருத்து

    வி > உயர்ந்த/ மேலான/ மதிப்புக்குரிய

    ஆசான் > ஆசிரியர்/ குரு

    வி + ஆசான் > வியாசன் = உயர்ந்த /கற்றறிந்த ஆசிரியர் அல்லது குரு

    ஆகவே ‘வியாசன்’ – தூய தமிழ்ப்பெயரேயல்லாமல் வடமொழிப்பெயர் அல்ல.

  258. சாரங்கன்,

    எதைப் பற்றியும் உங்களிடம் விவாதிப்பது வீண் வேலை என்பதை ஒரு சில நாட்களிலேயே எல்லோரும் புரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலுமுள்ள கல்வெட்டுக்களிலும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

    ஐரோப்பாவில் எவ்வாறு அந்தந்த நாட்டு மக்களின் மொழி, பொது மக்களின் மொழியாகவும், லத்தீன் மொழி, சட்டம், வரலாறு, மருத்துவம்,தத்துவம், மதக்கல்வி போன்ற மேல்மட்ட, படித்தவர்களின் தேவைகளுக்காக உபயோக்கப்படுத்தப் பட்டதோ, அதே போன்று தான் இந்தியாவிலும் சமக்கிருதம் பயன்படுத்தப்பட்டது, சமக்கிருதம் அந்த தேவைகளுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி என்ற கருத்தும் உண்டு. சமக்கிருதம் ஒருபோதுமே சாதாரண மக்களின் பேச்சு மொழியாக இருந்ததில்லை. அதனால் தான் இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், தாய்லாந்து, கம்பொடியா போன்ற நாடுகளிலும் சமக்கிருதக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அதை வைத்து இந்தியா முழுவதும் முற்காலத்தில் சமக்கிருதம் தான் பேச்சு மொழியாக இருந்தது, அங்கு வாழ்ந்தவர்கள் எல்லாம் ஆரியர்கள் என எந்த முட்டாளும் வாதாட மாட்டான்.

    அண்ணல் அம்பேத்கார் மட்டுமல்ல, நானும் கூறுவதென்னவென்றால் ஆரியரின் வருகையின் முன்னர் இந்தியா முழுவதும் தமிழ் பேச்சு மொழியாக இருந்தது என்பது தான். அதையே சில ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும் முன்னொரு காலத்தில் தமிழ் பேசப்பட்டது என்கின்றனர், அந்தளவுக்குப் பின்னோக்கிப் போய் ஏற்கனவே குழம்பிப் போயுள்ள உங்களை மேலும் குழப்புவதல்ல என்னுடைய நோக்கம்.

    ஆனால் இந்தக் காணொளியைப் பார்க்கவும்.
    Alex Collier – We all spoke the same language and the language is “TAMIL”

    https://www.youtube.com/watch?v=cYdxQHgYEDA

    https://www.alexcollier.org/

    உங்களின் சமக்கிருத கல்வெட்டுக்களுக்குப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே வடக்கில் தமிழ் கல்வெட்டுகள் இருந்தன, அதைப்பற்றி நான் பேசுகிறேன். நீங்கள் என்னடாவென்றால் அதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் ஒரு சில வட இந்திய அரசர்களின் சமக்கிருத கல்வெட்டுக்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் நான் சுல்தான் என்கிறேன், நீங்கள் பக்கிரி என்கிறீர்கள், இரண்டு பேருக்கும் பெரிய வேறுபாடுண்டு. 🙂

    ” The Indus Valley inscriptions were
    written in Tamil. It was a syllabic writing
    system related to linear Elamite writing
    and Proto-Sumerian seals21,22. The Indus
    Valley writing was probably not used to
    write the Indo-Aryan language because
    the Aryan speakers did not arrive in
    India until after 1600 BC (refs 40 and 41).’

    https://www.academia.edu/5407547/Dravidian_is_the_language_of_the_Indus_writing

    தமிழ்நாட்டுக்கு வெளியேயும் சில தமிழ்க்கல்வெட்டுக்களை நீங்கள் பார்க்க ஆசைப்பட்டால் கங்கைக் கரையிலும் ராஜேந்திர சோழனின் படையெடுப்பைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இருக்கிறதென்று கூறுகின்றனர். எவ்வாறு ராஜ ராஜ சோழனினதும் அவனது தேவியின் சிலையும் கேட்பாரற்று குஜராத் அருங்காட்சியகத்தில் இன்றும் கிடக்கின்றனவோ, எவ்வாறு தமிழ்க்கல்வெட்டுக்கள் எல்லாம் திட்டமிட்டு, ஆராய்ச்சி செய்யப்படாமல், கவனிப்பாரின்றி, வெய்யிலிலும் மழையிலும் பெங்களூரில் அழிந்து போக விடப்பட்டிருக்கின்றனவோ, அதே போன்று, இந்திய, அகழ்வாராய்ச்சித் துறை தமிழெதிரிப் பார்ப்பனர்களாலும், தமிழரல்லாதாரின் கட்டுப்பாட்டிலும் காலங்காலமாக இருந்து வருவதால் தமிழ்நாட்டுக்கு வெளியே காணப்பட்ட பல தமிழ்க் கல்வெட்டுக்களும் தடயங்களும் கைவிடப்பட்டிருக்கலாம், அல்லது திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கலாம். இப்படி இன்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் தமிழர்களுக்கு ஆறுதல் என்னவென்றால் எத்தனை பார்ப்பனர்கள் தமிழை எதிர்க்கிறார்களோ அந்தளவுக்கு தமிழை நேசிக்கும் பலரையும் பார்ப்பன சமூகம் தமிழுக்குத் தந்துள்ளது, அப்படியான ஒரு சில ஆரய்ச்சியாளர்கள் தான் இன்றும் தமிழின் தொன்மையை, எவ்வளவோ எதிர்ப்புகளின் மத்தியில் துணிச்சலுடன், நடுநிலையுடன் கூறிக் கொண்டிருக்கிறார்கள். சேற்றில் தானே செந்தாமரைகளும் முளைக்கின்றன.

    இருந்தாலும் உங்களின் ஆசையைத் தீர்க்கும் வகையில் தமிழ்க் கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக்கு வெளியே கர்நாடகாவில் ‘சமண வெள்ளைக் குளத்திலும்’ காணப்படுகிறதாம்.

    கர்நாடாகாவில் சமண வெள்ளைக்குளம் (சிரவண பெலகோலா) என்ற இடத்திலும் தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    சமண > சிரமண >சிரவண

    வெள்ளை > பெல்லே > பெலே

    குளம் > கொளம் >கொல > கோலா

    தமிழ்ச் சமணர்கள் வாழ்ந்த இடம் சமண வெள்ளைக் குளம் – SHRAVANABELAGOLA

    https://www.jainheritagecentres.com/heritageofshravanabelagola/inscriptionsatshravanabelagola.htm

    //ஒரு தமிழ் பாப்பாச்சீ லோக்சபாவுல தமிழ்ல பதில் தந்துள்ளர்களாம் முதல் முறையாக. உங்களுக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்குமே.//

    நானும் பார்த்தேன். மகிழ்ச்சியடைந்தேன், தன்னைத் தமிழனாக அடையாள்ப்படுத்தும், வீட்டிலும் வெளியிலும் தமிழைப் பேசும் அல்லது தமது முன்னோர்களின் மொழியாக தமிழைக் கொண்ட, தமிழைத் தவிர வேறு மொழியைத் தமது தாய் மொழியாகக் கொண்டிராத அனைவரும் தமிழர்களே. அதனால் என்னைப் பொறுத்தவரையில் அந்தப் பாப்பாத்தியும் ஒரு தமிழச்சி தான். அதனால் அவருக்கு எனது பாராட்டுகள். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தமிழைப் பேசிக் கொண்டே, தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே இன்னொரு மொழியுடன் தமிழை ஒப்பிட்டு இழிவு படுத்துகிறீர்கள் .

    இந்த விடயத்தில் பரிதாபத்துக்குரிய விடயம் என்னவென்றால், இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு தமிழன் தமிழில், தனது தாய்மொழியில் பேசுவதற்கு முதலில் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும் ஆனால் இந்தியிலும்,ஆங்கிலத்திலும் இட்டம் போல் பேசலாம்.

  259. ஆசிரியர் குழுவுக்கும் மறுமொழி எழுதுபவர்களுக்கும் வணக்கம்.

    விவாதம் சாதியை பற்றி போகிறது. இங்கே சிலர் நாத்திக கட்சிகளை விட மிக அருமையாக பேசுகிறார்கள். அவர்கள் அதை சார்ந்தவர்களாக இருக்க கூடும் என்று கருத முகாந்திரம் prima facie இருக்கிறது. எல்லாம் வல்ல அந்த முருகபெருமான் அருள்புரிவதாக. அந்தணர்கள் மீது கடுமையான தாக்குதல், காழ்புணர்ச்சி – பயன்படுத்தும் சொற்களில் தெரிகிறது. ஒரு சில தமிழ் ஆர்வலர்கள் அந்தணர்களை தாக்குவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம். நம் தமிழக பூமி இத்தகைய தாக்குதல்களை எல்லாம் பற்பல ஆண்டுகளாக பார்த்துவிட்டது.

    இவர்கள் எல்லாம் நாட்டில் பிறக்கவில்லை என்றால் நம் தமிழகத்தில் யாருக்குமே வேட்டி, பேன்ட் சட்டை கூட போடத்தெரியாது என்று நினைப்பவர்கள். அந்த நாகரிகத்தை இவர்கள் தான் கற்று கொடுத்தது போல் பேசுபவர்கள்.

    சமஸ்கிருதத்தை படித்து என்ன செய்வது. இந்த காலத்தில் அந்தணர்களே அந்த மொழியை படிப்பது குறைந்து விட்டது. பூசாரி வேலைக்கும் கோயில் அய்யர், குருக்கள் வேலைக்கும் தான் அது சரிபட்டு வரும். அதை வைத்து வேறு வேலைக்கு போக முடியாது. இது அந்தணர்களை அடிமைபடுத்தி “நீங்கள் பழைய காலத்திற்கே போங்கள், வேறு வேலைக்கு எல்லாம் போய் விடாதிர்கள், அரசியல் அதிகாரத்திற்கு வந்து விடாதிர்கள் என்று சொல்வது போல் உள்ளது”. எனவே மத்திய அரசின் செயல்பாட்டை எதிர்க்கதான் வேண்டும். அந்தணர்கள் நலத்தை முன்னிட்டு நம் அரசியல் தலைவர்கள் செயல்படுகிறார்கள். இதை அந்தணர்கள் உணரவேண்டும் என்பதுதான் என் பணிவான வேண்டுகோள்.

    VIYASAN கூறுகிறார்.

    #இந்த சமக்கிருத திணிப்பு இந்தியாவின் 3% பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்துமே தவிர, பாரதத்தை ஐக்கியப் படுத்தாது, மேலும் பிளவடையச் செய்யும்.#

    எவ்வளவு தவறான புரிதல். மேலே அம்பேத்கர் மற்றும் காமராஜ் சொன்னவைகளுக்கு நேர் மாறான கருத்து. அப்பெரியவர்கள் நம் தேசத்தை ஒன்றுபடுத்தும் என்று சொன்னவர்கள். மறுமொழி எழுதுபவர்கள் இப்படி சொல்கிறார்கள். இது தவறான புரிதல் அல்ல – வெற்று காழ்புணர்ச்சி/பகைமை உணர்ச்சி.

    இவர்களுக்கு பதில் சொல்லி krishnakumar sarang போன்றவர்கள் நேரத்தை செலவு செய்யாதிர்கள். உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் அதில் ஈடுபாடு இருக்கும்போது அதை செவ்வன ஆற்றுங்கள் என்று தாழ்மையுடன் விழைகிறேன்.

  260. உயர்திரு வியாசன் அவர்களே,

    //உங்களின் நீண்ட மறுமொழிக்கு நான் சுருக்கமாகப் பதிலளிப்பதாக இருந்தால். என்னுடைய செலவில் உங்களின் வஹாபி பிரச்சாரத்தை நடத்தி முடித்து விட்டீர்கள் என்று தான் கூறவேண்டும். இருந்தாலும் முடிந்தவரை உங்களின் விளக்கங்களுக்கு எனது கருத்தை தெரிவிக்க முயற்சிக்கிறேன்.//

    உங்கள் கருத்தை மிகவும் அழகாக விளக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    //வஹாபியம் வந்து தமிழனின் பழைய வரலாற்றைப் புதுப்பிக்கும் நிலை வரும் என ஒரு வஹாபிஸ்டு இவ்வளவு வெளிப்படையாகச் சொல்வதைப் பார்க்கத் தான் எனக்கு நெஞ்சு திக் திக்கென்று அடிக்கிறது. //

    ஈராக்கில் நடக்கும் “காலிபேட்” நிலைநிறுத்தல் எப்படி நடக்கிறது என்பதற்கு நான் இணையத் தொடர்புகள் என்னுடைய வேறு கருத்துப் பதிவில் கொடுத்திருக்கிறேன். அதைச் செய்பவர்கள் “வஹாபிய” இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றுதான் எல்லா ஊடகங்களும் சொல்கின்றன.

    அதைக் கண்டித்துப் பதிவு செய்த ஒரு இஸ்லாமிய நண்பரும், அமெரிக்காவைச் சாடுகிறார். ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு முந்தைய இந்திய அரசு துணைபோனது. அதைத் தடுக்க முயன்ற பல நாடுகளையும் (அமெரிக்கா உள்பட) தடுத்து விட்டது. அதை எண்ணி நான் எப்படித் தெரியுமா ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன்? இங்கு இருக்கும் ஈழத் தமிழ் நண்பர்கள் சொல்லிய கொடுமைகளை நினைத்தால், தற்போழுது ஈராக்கில் நடக்கும் வன்முறைக்கும், இலங்கையில் நடந்த படுகொலைக்கும் வேறுபாடே இல்லை.

    ஈராக்கில் தனியாக்கப்பட்டுத் தவிக்கும் கிறித்தவர்களுக்கு ஆதரவாக அமேரிக்கா உணவுப்பொருள்களை விமான மூலம் போட்டு, வன்முறையாளர்கள்மீதும், விமானத் தாக்குதலை நடத்துகிறது. சிங்களவர்களின் வெறித்தாக்குதல்களுக்கு இரையான தமிழ் உடன்பிறப்புகளுக்கு யார் உதவி செய்தார்கள்? Anti-Hindu நாளிதழ் ராஜபக்சேக்குத்தானே வால்பிடித்தது!

    நீங்கள் சொல்லியபடி, தமிழ் முஸ்லீம்கள், அரபுமயமாக்கப் படுவதைக்கண்டு நானும் அஞ்சத்தான் செய்கிறேன். அவர்கள் தமிழர்களாக, சமய நல்லிணக்கத்துடன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை ஏத்துகிறேன்.

    வணக்கம்.

  261. ஆசிரிய குழுவினருக்கு!

    //ஒரு மதரஸாவில் ஓரினச்சேர்க்கை நடைபெற்றதென்றால் அதை ‘இஸ்லாமை வளர்ப்பதற்காக’ என கூறுவதை சுவனப்பிரியன் ஏற்பாரா?//

    இதே போன்று சில மதரஸாக்களிலும் நடந்து அந்த நபர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதனை எனது பதிவுகளிலும் குறிப்பிட்டுள்ளேன். தவறு யார் செய்தாலும் அதனை கண்டிக்க வேண்டும். அதனை குறிப்பிட்டது உங்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

    மற்றபடி இந்தியாவில் உள்ள மதரஸாக்கள் அனைத்தையும் டுடோரியல் கல்லூரிகளாக மாற்றி விடலாம் என்பேன். மதரஸாக்கள்தான் இந்திய முஸ்லிம்கள் முன்னேறாததற்கு முழு காரணமே. இஸ்லாத்துக்கும் தற்போது மதரஸாக்களில் சொல்லித் தரப்படும் பாடங்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. பல மதரஸாக்கள் நவீன கல்விக்கு மாறி விட்டது.

  262. //எவ்வளவு தவறான புரிதல். மேலே அம்பேத்கர் மற்றும் காமராஜ் சொன்னவைகளுக்கு நேர் மாறான கருத்து. அப்பெரியவர்கள் நம் தேசத்தை ஒன்றுபடுத்தும் என்று சொன்னவர்கள். மறுமொழி எழுதுபவர்கள் இப்படி சொல்கிறார்கள். இது தவறான புரிதல் அல்ல – வெற்று காழ்புணர்ச்சி/பகைமை உணர்ச்சி.//

    Venkat

    தவறான புரிதல் உங்களிடமே. அம்பேத்கர் சொன்னதைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். காமராஜர் ஒரு நூலுக்கு எழுதிய வாழ்த்துரை அதுவும் 30 நாட்களில் வடமொழி தெரியவேண்டுமா? என்று லிஃப்கோ பதிப்பகத்தார் கேட்டதற்கிணங்க.

    எவருமே வாழ்த்துரையில் அந்நூலைத் தூற்றமாட்டார்கள். மரியாதை நிமித்தம் புக்ழவார்கள். அஃது ஒரு பண்பாடு. அதைத்தான் காமராஜர் செய்ததாகக் கொள்ளவேண்டும். காரணம். அவருக்கு ஆங்கிலம், ஹிந்து, தமிழ் இலக்கியம் தெரியாது. அதே போல வடமொழி அறவே தெரியாது. ஒன்றுமே தெரியாத அவர், அம்மொழியைப்பற்றிச்சொன்னது hearsay படிதான் என்று எடுக்கவேண்டும். அதற்கு மேல் அவரின் அவ்வாழ்த்துரைக்கு முக்கிய்த்துவம் கொடுத்தது, வல்லவனுக்கு புல்லும் ஆயதம் போல அரவிந்தனுக்கு காமராஜரின் வாழ்த்துரையும் ஆயுதம்.

    அம்பேத்கருக்கு வருவோம். அவர் ஏன் சமஸ்கிருத்ததை எல்லாரும் படிக்கவேண்டுமென்று சொன்னார்? அவர் பிராமணர்களை வெறுத்தார். தூடணை செய்து நூலக்ள் எழுதினார். அவரின் கருத்துப்படி, ஹிந்துமதத்தில் பிராமணர்கள் பலபல வழிகளைப்பயன்படுத்தித் தங்களை உயர்த்திக்கொண்டார்கள். அவ்வழிகளில் ஒன்றுதான் வடமொழிப் புலமை. முற்காலத்தை தலித்துகளை அதைப்படிக்ககூடாதென்று சொன்னவர்கள் அவர்கள். இந்து மதத்தில் நுழைய விடாமல் தலித்துகளைத் தடுத்தார்கள். எனவே வடமொழி என்ற ஆயத்த்தையும் தலித்துக்கள் எடுத்துக்கொண்டால் அவர்களைப்பிராமணர்களால் ஒன்று செய்ய முடியாது. எனவே தலித்துக்களே வடமொழி படியுங்கள் என்பதே அவரின் எண்ணம் என்பது என் கருத்து. தலித்துக்களிடையே இந்தியா முழுவதும் ஒரு சாலிடாரிட்டை உருவாக்கலாம் வடமொழியால் எனப்தும் அவர் எண்ணம். இன்று தலித்து தலைவர்கள் ஆங்கிலத்தில் புலமை கொள்க என தலித்துக்களுக்குச் சொல்கிறார்கள்.

    இங்கு ஐரோப்பிய சீர்திருத்த ( REFORMATION) இயக்கத்தை நினைவு கூறவும். போப்புகள் மன்னரகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு பலநாடுகளில் மறைமுக கோலோச்சினார்கள். மக்கள் விவிலியத்தை தங்களிடம் கேட்டுத்தான் தெரிய வேண்டும் என இலத்தீனிலேயே வைத்து மறைத்துக் கொண்டார்கள். தேவாலயத்திலும் இலத்தீன் மொழியில்தான். இலத்தீன் தெரியா மக்களை இவர்கள் நன்கு ஏமாற்றினார்கள்; பாவமன்னிப்புச் சீட்டுகளை விலைகொடுத்து வாங்கவேண்டும் என்று விவிலியம் சொல்கிறது என்று பணத்தைச் சுரண்டினார்க்ள். இவர்களின் கொட்டத்தை அடக்கவே, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில மொழியில் பிரசுரிக்கப்பட்டு மக்களிடையே விவிலியம் தாராளமாக புழங்க பாதிர்களின் ஏமாற்றுவேலைகள் தெரிய ஆரம்பிக்க சீர்திருதத‌ இயக்கம் தோன்றி ஜர்மனி, நெதர்லான்ட்ஸ், இங்கிலாந்து நாடுகள் கத்தோலிக்கத்திலிருந்து விலகி தனியாகவே புதுமதப்பிரிவை உண்டாகினார்கள். இவ்வாறு எதிர்ப்பிலிருந்து வந்ததால் அப்புதுமதத்துக்குப்பெயரே புரொட்டஸ்டாண்டு.

    அம்பேதகர் உணர்ந்தார் வடமொழியை நம்மிடம் இருந்து மறைத்துக்கொணடு நம்மை ஏமாற்றி அடிமை கொள்கிறார்கள் பிராமணர்கள் என்று உறுதியாக நம்பினார். இதைத்தடுக்க வழி வடமொழி நமது மக்களும் படிப்பதே எனச் சொன்னார். விசுவாமித்திரர் என்ற சத்திரியர் எப்படி வசிட்டர் என்ற பிராமண ரிஷியை எதிர்க்க தானும் பெரிய ரிஷியானால்தான் முடியும் என்று நினைத்துச் செய்தாரோ, அப்படி அம்பேத்கரும்.

    நாராயணகுருவும் அவ்வாறே. நம்பூதிரிகள் நம்மை கீழாகப்பார்பபவர்கள். அவர்களிடம் நாம் போக வேண்டாம். நாமே நம் கோயில்களைக்கட்டிக்கொள்வோம். அவ்ர்களுக்குத்தான் வட்மொழி தெரிகிறது. நமக்கும் தெரிந்தால் நம்பூதிர்களிடம் நாம் போகத்தேவையில்லை என்று மற்ற் மலையாளிகளுக்குச் சொல்லி, நெயாட்டின்கரையில் ஒரு சிவன் கோயில் கட்டினார்.

    From the above, it is easy for you to understand that learning Sanskrit is not simply for being more Indian; but for the politial reason of making the Brahmans aware that their days of hegemony in Hindu religion has come to an end. As a brahmin, you will not like this. But, as a good human, you will support Ambedkar and Narayana guru. You should come out of the shell of your caste loyalty and affection; and see social and poltical views from the view point of Non brahmins and dalits. Or, as an objective scholar. It is a pity that you are still rooted at the same spot.

    You praise both Krishnakumar and Sarangan w/o being aware that they are now asking others to read Sanskrit as they are aware that the hegemony of Brahmins is long over, and they have to fall in line. We are referring to religious hegemony. However, the victory is not complete, witness the Brahmins’ fierce reaction against letting other interested people to become priests. They have gone to court. Hopefully, that hegemony will also be soon over removing the last stumbling block in making the religion as a common property of all Hindus

    Think dispassionately standing outside your caste.

  263. //சென்னை தி.நகரில் சாரதா வித்யாலயாவில் 3ம் திகதி ஆகஸ்ட் நடந்த ஸம்ஸ்க்ருத வகுப்பிற்கு 100 இல் இருந்து 150 பேர்கள் எதிர்ப் பார்க்கப் பட்டனர். ஆனால் வந்ததோ 293 பேர்கள். ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு வகுப்பறைகள் சேர்ந்த ஒரு பெரிய வகுப்பறை போக மேலும் இரண்டு இடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டிய நிலை உருவானது.

    தமிழர்கள் யாரும் ஸம்ஸ்கிருததை விரும்புவது இல்லையாம்.//

    முதலில் நடந்த இடம் தி. நகர். பள்ளி இராமகிருஸ்ணமடத்தால் நடத்தப்படுமொன்று. அவர்கள் கடமைக்காகச் செய்தார்கள். அவர்கள் செய்யவில்லையெனறால் பின் எவர் செய்வாரென எதிர்பார்க்கமுடியும்?

    வேறோரிடம் – பிராமணர்களும் உயர்ஜாதியினரும் இல்லா திருவொற்றியூர், காசிமேடு போன்ற இடங்களில் இப்படி நடந்தால், கிருஸ்ணகுமார் மகிழலாம். இங்கொன்றும் வியப்பில்லை.

    வடமொழி கறக விழைவோரையும் வகைப்படுத்தலாம்;

    1. தமிழ்ப்பிராமணர்கள். நாஸ்டால்ஜியா. தன் முன்னோர்கள் கற்ற மொழி என்ற பாசமும். மேலும் வைதீக மதம் நமது. வடமொழியைத்தெரிந்தால் நன்கு தெரியலாம்.
    2. மாணவர்கள். பள்ளிகளில் மதிப்பெண்களுக்காக. இவர்கள் இசுலாமியரும் கிருத்த்வருமாகவும் இருக்கலாம். மதிப்பெண்கள் பெற்றால் நல்ல கல்லூரியில் இடம்கிடைக்கும்.
    3. பாப்பையா போன்ற மொழிக்காதலர்கள். இலக்கியத்துக்காக.
    4. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ போன்ற தமிழறிஞரகள். ஆராய்ச்சியாளர்கள். தமிழின் தொன்மையையும் வடமொழியின் தாக்கததையும் அறிய.
    5. வைணவர்கள். ஆச்சாரியர்களின் படிகளைத்தெரிய. வேதங்களையும் உபநிடத்துக்களையும் படிக்க.
    5. வைணவ அறிஞர்கள். இவர்கள் சைவர்களாகவும் இருக்கலாம். பேராசிரியர் புருடோத்த நாயுடு நம்பிள்ளையின் திருவாய்மொழி வியாக்யானத்தை அறிந்து புரிந்து தமிழில் தர. அறிதலும் புரிதலும் வடமொழி தெரியாமல் முடியா.
    சைவர் பேரா மீனாட்சி சுந்தரம் (நந்தனம் ஆடவ்ர் கல்லூரி; பின்னர் தஞ்சைத்தமிழ்ப்பலகலைக்கழகம்) திருமங்கையாழ்வாரின் திருமொழியின் விளக்கத்தையும் ஆச்சாரிகளின் படிகளின் விளக்கங்களையொட்டி எழுதி தஞ்சைப்பல்கலைகழகம் வெளியிட்டிருக்கிறது. வடமொழி தெரியாமல் இவ்வேலையைச்செய்ய முடியாது என்றறிந்து தான் அதற்காகவே வடமொழியில் பட்டய வகுப்பில் தேர்ந்ததாக, தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
    6. ஓயுவு வர்க்கம். அடுத்த வேலை சாப்பாடு தன் முன்னே அழகாக விரித்துவைக்கப்படும் என்று உறுதி இருப்பதால் இன்பத்திற்காக பிறமொழி படிக்கிறார்கள். வடமொழியேன் என்றால், அதைப்பற்றிப் பெருமையாக சொல்லக்கேட்டதால்.
    7. இந்துத்வா உறுப்பினர்கள் படிப்பது கடப்பாடு அல்லது கொள்கையென்பதால்.
    8. இவர்கள் போக, மற்றவர்கள் – இவர்களுள் மேக்ஸ் முல்லர் போன்ற ஆராய்ச்சியாளர்களும், டி எஸ் எலியட் போன்ற ஆங்கிலக்கவிஞர்களும் உண்டு. எலியட்டில் கவிதை ‘வேஸ்ட் லேன்ட்’ வடமொழிப் புலமை உடையோரே, உடைத்து பொருள் காணமுடியும். It is so tough poem that w/o knowledge of Sanskrit, impossible to interpret. கவிதை இறுதிவரிகள்: தத்தா, தமயத்தா, தயாதவம். சாந்தி, சாந்தி என்று முடியும். ஆங்கிலக்கவிதைகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்.
    அறிவுத்தாகத்தினால் இவர்கள் படிக்கிறார்கள்.Out of curiosity and acquisition of knowledge of India’s heritage tongue.

    293 பேர் இவர்களில் எவர்? ஏன் படிக்க வந்தார்கள்? ஏன் விரும்பி வந்தார்கள்? Krishnakumarji?

  264. Mani writes: Ironically both Viyasan and Bala krishna Saranga are Sanskrit names.

    Sarangan is not against Sanskrit. So also me.

    I am a lover of languages and literatures. I have never said that Sanskrit is not in Tamil. Its impact is humongous since time immemorial. I also don’t belong to the group of Anti’Hindi and Anti’Sanskrit. I can enjoy reading Hindu poems. I am of the view, which already was expressed here, and countered by Arizonan, that Hindi is more suitable to unite Indians.

    I hate the manipulators of all kinds, including the Brahmins, who manipulated the Sanskrit to suit their ends historically, as Ambedkar pointed out.

    Vyasan has explained to you his stand. I need not because I don’t bother which language a person names is written or called.

    BTW: Mani is a pure Tamil name and it comes from the author of Thiruvasagam. Why haven’t Vyasan, not me, congratulate you still ! He is a lover of both Tamil language and the greatest Saint of Savism and about his great work it is said: திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்.

  265. \\\\ ஒன்றே சொன்னீர்; நன்றே சொன்னீர்!

    சிவபெருமானை எம்மொழியில் வணங்கினாலும் அருளுவதில் குறையில்லையென்றால், தமிழையே தாய்மொழியாககொண்ட மக்களுக்கு ஏன் சமஸ்கிருதம்? தமிழ் மட்டும் போதுமே ?\\\

    எப்போது தர்க்கத்துடன் பேசக்கற்றுக்கொள்வீர்?

    தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட அன்பர்கள் சம்ஸ்க்ருதத்தில் தொழுதாலும் சிவபெருமான் அருளுவதில் குறையேதுமிருக்காது. கன்னடத்தில் தொழுதாலும் அருளில் குறையிருக்காது. தெலுகு மொழியில் தொழுதாலும் அருளுவதில் குறையேதுமிருக்காது.

    அருள் என்பது தொழுதல் என்ற உளமுருகலை ஒட்டியதேயன்றி மொழியை ஒட்டியதன்று.

    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாளனாகிய…………

    எம்பெருமான் எந்த மொழியையும் பேச இயலாத மூகர்களுக்கும் கூட அருள்வான் என்பதை அறிய விழையவும்.

    மொழி என்பது சாதனமேயன்றி சாத்ய வஸ்து இல்லை. இல்லவே இல்லை.

  266. அன்பின் ஸ்ரீ வியாசன்,

    உங்கள் கருத்துக்களில் பல எமது கருத்துடன் ஆழமாக ஒத்துப்போகிறது. சிலவற்றில் வேறுபாடும் இருக்கிறது.

    எனது கலப்பு மொழிநடையில் சம்ஸ்க்ருதம் மட்டிலும் இல்லை உர்தூவும் உள்ளது. அது உங்கள் கண்ணில் தென்படவில்லை.

    எந்த மொழியும் கலப்படமில்லாத தூய தமிழ் என்ற அலகீட்டை எமக்கு ஆதர்சமாகப் பகிர்ந்தவர் எனதன்பார்ந்த சஹோதரரான ஸ்ரீ தாயுமானவன். ஆனால் அந்த அன்பர் அவர்களிடம் காணப்படும் ஆப்ரஹாமியத்திடம் அடிமைப்பட்ட தமிழ்க்கலாசாரம் என்ற கருதுகோள் தங்களிடம் காணப்படவில்லை. நான் எழுப்பிய தமிழ்க்கலாசாரம் சார்ந்த ந்யாயமான பல விஷயங்கள் இங்கு எதிரொலித்தது மட்டுமின்றி தூய தமிழில் ஆர்ஜவம் உள்ள வேறு பல இடங்களிலும் எதிரொலித்துள்ளது என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

    எனது உத்தரங்களைப் பகிர விழைந்ததில் அது நீண்டு செல்கிறது. கருத்துக்களில் ஒற்றுமையையும் வேறுபாடுகளையும் விரிவாகப் பகிர விழைகிறேன்.

    பல கருத்துக்கள் இந்த வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலகவும் செய்யும். ஆகவே என்னுடைய கருத்துக்களை ஒரு குறு வ்யாசமாகவே சமர்ப்பிக்கிறேன். விரைவில்.

    ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு எமக்கு ஏற்புடையதன்று. ஆயினும் அதன் படி ஒழுகும் இஸ்லாமியரும் க்றைஸ்தவரும் எமது சஹோதரர்களே. மாற்று மதத்தை ஒழுகுபவர்கள் நரகம் போவார் என்று எம்மதம் எமக்குபோதிப்பதில்லை. மாறாக அவர்களை எமது சஹோதரர்களாகக் கருதவே எமது மதம் எமக்கு போதிக்கிறது.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  267. \\\\\\\\ மதிர்ப்பு இருந்த போதிலும் ஆதார பூர்வமாக எவ்விஷயமும் இல்லாவிடில் அதை ஏற்க தேவை இல்லை. அதை ஒரு பார்பனர் சொன்னாலும் சரி. பார்பன ஆசாரியர்கள் ஆழ்வார்கள் காலம் கீ பீயில் என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் நான் சுத்தமாக நம்புவதில்லை. \\\\\

    அறிவு பூர்வமான கருத்துக்கள்.

    ம்………….. பெருமிதம் கொள்கிறேன்.

    ஆரா அமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே
    நீராய் அலைந்து கரையவுருக்கின்ற நெடுமாலே!
    சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்ந்திருக்குடந்தை
    ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே!

  268. //மொழி என்பது சாதனமேயன்றி சாத்ய வஸ்து இல்லை. இல்லவே இல்லை.//

    Well done.

    எனினும் என்னால், மொழி ”வெறும் சாதனம்” என்று ஒத்துக்கொள்ளமுடியாது. உணர்வற்ற மரங்களைப்போலுள்ள மனிதர்களுக்கு அது வெறும் சாதனம். மற்றவருக்கில்லை.

    இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

    என்றெழுதியவர் மதுரை மீனாட்சி கோயில் குருக்கள். வெறும் சாதனமாகவா தன் மொழியைப் பார்த்தார்? இவர் சொக்கநாதர் மேல் மையல் கொண்டு அன்னத்தையா தூது விட்டார்? தத்தையையா தூது விட்டார்? மேகத்தையா தூது விட்டார்? இல்லை! தமிழை அல்லவா தூது விட்டார்! ஏன்? தமிழுக்கு சொக்கநாதரை ஈர்க்கும் வலிமை உண்டு; தமிழை வைத்து சொக்கநாதரைக் காதலிக்கலாமென்றுதானே? வெறும் சாதனம் என்றால் அன்னம், கிளி, மேகம் இவைகளைத்தூது விட்டிருக்கலாம். அல்லது தனக்குத் தெரிந்த வடமொழியை விட்டிருக்கலாம்.

    மொழி உணரப்படுவது. அதன் ஒலிகள் நம்முள் செல்லும் போது எவ்வித உணர்வுகள் அதற்கில. ஆனால், வெளிவரும் போது அவை நம் உணர்வுகளைச் சுமந்து இறைவனிடம் கொண்டு செல்கின்றன. ஒருவனின் தாய்மொழி அவன் உணர்வுகளோடும் உள்ளத்தோடும் இணைந்து வருவதால் இறைவணக்கத்துக்கு உகந்தது.

    இறைவனைத் தொழ மொழியும் இசையும் அவசியம். அம்மொழி தாய்மொழியாக இருப்பதால் வணங்குபவனுக்கு. இசையும் இப்படித்தான். வெறும் சொற்களும் வாத்தியமும் இல்லை. ஒலிப்பேழையில் போட்டுக்கேட்டுக்கொண்டு பூஜை செய்வது இக்காலம். தாமே பாடுவதுதான் பூஜை.

    ஒரு மொழி அதைத்தாய்மொழியாகக் கொண்டவனுக்கு வெறும் சாதனம் மட்டுமன்று. எனக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். ஆனால் ஆங்கிலத்தில் என்னால் இறைவணக்கம் பண்ணமுடியாது. காரணம்; அஃது எனக்கு ஒரு ஒன்றிய உணர்வைத்தராது. எனவே தாய்மொழிதான். வெறும் சாதனம் மட்டுமே என்றால், நான் ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ வணங்கலாமே?

    ஆழ்வார்களும் தமிழை வெறும் சாதனமாக மட்டுமே பார்க்கவில்லை. தமிழ்ச்சொற்களுக்கு பெருமாளை ஈர்க்கும் வலிமை உண்டென்று நம்பித்தான் பாடினார்கள். தங்கள் பாசுரங்களிலும் பலவிடங்களில் சுட்டிக்காட்டுகிறார்கள். இன் தமிழால் பாமாலை சூடினேன். கோதை செய்த சங்கத்தமிழ். நம்மாழ்வார் பலவிடங்களில். பூதத்தாழ்வார் தன்னைப்பற்றிச் சொல்வது:

    ‘தமிழ்நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
    பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

    தன்னைப்பெருந்தமிழன் என்று சொல்லிக்கொண்டார்.

    வடமொழிப்புலமை மிக்க முதலாழ்வார்கள், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் – இவர்கள் இறைவனை வணஙக தமிழையே எடுத்தனர். வெறும் சாதனம் என்றால் வடமொழியிலேயே பாசுரங்கள் எழுதியிருக்கலாமே?

    Language is just a medium of communication. ”
    Its only purpose is to communicate with clarity.”

    This theroy is applicable to secular matters: i.e. in our common life. In religion, just a medium of communication theroy is inappropriate. Rather, insulting.

    Western Philosophers have written a lot about Language theory. Please read them, if you can. No one has dismissed the language as just a tool of communication.

    இறைவணக்கத்தில் தாய்மொழியில் செய்தாலே இயற்கை. பிறமொழிகள் செயற்கை.

  269. //\\\\\\\\ மதிப்பு இருந்த போதிலும் ஆதார பூர்வமாக எவ்விஷயமும் இல்லாவிடில் அதை ஏற்க தேவை இல்லை. அதை ஒரு பார்ப்பனர் சொன்னாலும் சரி. பார்ப்பன ஆசாரியர்கள் ஆழ்வார்கள் காலம் கி.பி-யில் என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் நான் சுத்தமாக நம்புவதில்லை. \\\\\/

    Who wrote this? Krishnakumar you are responding to the above. May I know who is the writer?

  270. பாலா சுந்தரம்

    தீ நகர் சாராத வித்யாலய என்பது பார்பனர்கள் படிக்கும் பள்ளி கூடம் அல்ல. பர்கிட் ரோட்டில் இருக்கும் அது மிக எளிய மற்றும் ஏழை மாணர்வர்கள் படிக்கும் இடம்.

    சமஸ்க்ருத கார்யக்ரமத்தை அவர்கள் நடத்தவில்லை நடத்தியது சமாஜ மக்கள். இதில் செர்த்திருந்தவர்களுள் ஆறும் பேர் திருவெற்றியூரில் இருந்து சேர்ந்தவர்கள். காசிமேட்டிலிருந்து யாரும் இல்லை, ஒருவர் மணலியில் இருந்து ஒருவர் வியாசர்பாடியில் இருந்து.

    தீ நகரில் நடத்துவது நகரின் மையப் பகுதி அங்கு வர பேருந்து வசதி இருக்கிறது.

    பழவேற்காட்டில் 2011 இல் ஒரு கோட்டம் அதற்க்கு 75 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். (கவனிக்க பழவேற்காடு என்பது சுனாமிக்கு அப்புறம் மக்களை பயமுறுத்தி அதிக அளவில் கிரிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள் வாழும் இடம்). 75 பெரும் அங்கிருந்து தான் வந்தார்கள் என்று சொலல்வில்லை.

    பாலா சுந்ததரத்திற்கு உள்ள பிரச்சனையை. எங்கே 30000 காட்டு என்றார், நான் கொடுத்த சுட்டியில் அலெக்ஸ் அவர்கள் 50000 என்றார் அது நாளேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் 293 என்றார், அதையும் போருக்க மாட்டாமல், உடனே, பிராமணர் வந்திருப்பாகா, பாப்பா வந்திருப்பாக (அலேச்ஸ் எதற்கு சார், பாப்பையா வருகை இன்னமும் யாருக்கோ நெருடுகிறது) , மார்க்கு வாங்க சீறார்கள் வந்திருப்பாக (இந்த கர்யக்ரமம் சிருவருக்கானதல்ல), மற்றும் எல்லாரும் வந்திருப்பாகா, வைணவர், சைவர், நாடார், நாயுடு, கம்மா, வன்னியர் என்று இப்படி சாதியாக அடுக்குகிறார். இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லை போலும்.

    பாலா நீங்கள் நம்ப வேண்டும் என்று இதெல்லாம் சொல்லவில்லை, இதெல்லாம் உண்மை.

    இன்று சமஸ்க்ருதம் படிக்கும் தலித்துக்கள் கம்மிதான், ஆனால் படிக்கிறார்கள், நீங்கள் சொல்லும் காரணங்களுள் எத்தையும் பொருட்படுத்தாமல். பிராமணர்களை தாண்டி அப்ராமினர்களும் அதிக அளவில் படிக்கிறார்கள். இதுவும் உண்மை. இதற்க்கு சாத்திய சாயம் நீங்கள் பூசிக்கொண்டே இருங்கள், ஒரு நாள் பெருமழை பெய்யும் நரி வேஷம் களையும்.

  271. பேரு மதிப்பிற்குரிய பாலா அவர்களே

    பாருங்கள் சாரங்கன் ஒரு சமஸ்க்ருத வெறியன், தமிழ் பிடிக்காதவன் என்று காட்ட நீங்கள் நான் எழுதியவற்றுலிருந்து ஒற்றை விஷயத்தை தேர்தெடுத்து எதோ சொல்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒரு பதில் முழுக்க என் மேல் புழுதி வாரி இறைக்க மட்டும் பயன் செய்துள்ளீர்கள். விஷயத்திற்கு பதில் தராமல் இப்படி characterization செய்து என்ன பயன்.

    நான் வியாசனுக்கு அப்படி எழுதியது அவர் மட்டும் அவரை போன்றவர்கள் நெட்டில் என்ன என்ன கதை கட்டுகிறார்கள், சம்பந்தமே இல்லாத விஷயத்தை எப்படி சம்பந்த படுத்துகிறார்கள் என்பதை கட்டவே. உங்களுக்கு கிண்டலாக இருக்கலாம், ஆனால் இவர்கள் செய்வது உண்மையிலேயே வலிக்கிறது. ஆரிய திரரவிட வாதம் பேசி பாரதத்தை பிளந்த ஆங்கிலேஎன் அமைந்துவிட்டான், நாம் இன்னும் தூபம் போட்டு முகர்ந்து கொண்டிருக்கிறோம்.

    நான் சுவனப்ரியன் என்ற பெயரில் உள்ளவரை அப்பெயர் கொண்டு அழைக்க விரும்பவில்லை. அவருக்கு சுவனத்தில் இச்சை இருப்பதால் அதன் பின்புலத்தில் இந்த இச்சையினால் அவர் என்னென்ன செயிகிறார் அவரை அம்மதம் என்னென்ன செய்ய தூண்டுகிறது என்பதை அறிந்தும் அப்பெயரை பயன் படுத்த கஷ்டமாக உள்ளது. நீங்கள் அதற்க்கு சின்ன பிள்ளைகளின் சூபி என்று எப்படி எப்படியோ கற்பனை செய்து கொள்ளலாம். நான் அவ்வர்தத்தில் சொல்லவில்லை என்று மட்டும் தான் என்னால் சொல்ல முடியும், உங்களை நம்ப வைக்க முடியாது.
    சுவனப்ரியன் என்று பெயர்வைப்பதர்க்கும் காபிர் எதிரி என்று பெயர் வைப்பதற்கும், வஹாபி பிரியன் என்று பெயர் வைத்து எழுடுவதற்கும் பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மதிர்ப்பிற்குரிய ஆசிரியர் குழுவினர் சொல்கிறார்கள் அதனால் சூ பீ என்பதை கைவிட்டு வேறு எப்படி விளிக்கலாம் என்று முடிவு செய்ய வேண்டும்.

    நீங்கள் ஆரவாத்துடன் ஆரம்பித்தால் நானும் அப்படிதான் ஆரம்பிப்பேன். முன்பு உங்களுடன் சாந்தமாக பலமுறை வாதம் செய்துள்ளேன் என்பதை நினைவில் கொள்ளவும். எல்லோருடமும் அமைதியாக வாதிட வேண்டிய அவசியம் இல்லை. ஜல்பம் செய்வோரிடம் ஜல்பமு, விதண்டாவாதிகளிடம் விதண்டாவாதமும் தான் செய்ய வேண்டி இருக்கிறது.

  272. பாலா

    //
    முன் தமிழன் இருந்தான் அவன் மட்டுமே இருந்தான் முழு உலகிலும் அப்புறம் தமிழன் கெட்டிகாரனா இருக்கானே அவன் இந்திரா பதவியை பிடித்து விடுவானோ என்று பயந்து இந்திரன் பல மொழிகளை உருவாக்கினான்.(இந்த கதையா தான் விவில்யத்தில் சுட்டுவிட்டார்கள்) அதில் அரபு, லத்தீன், கிரேக்கம், போர்டுகீசு, ஜேர்மன், சைனீஸ், மங்கோலியன் எல்லாம் அடக்கம். மங்கோலியா பாஷை தான் மருவி ப்ராக்ருதமாகி தமிழுடன் சேர்ந்து சமஸ்க்ருதமாச்சு.//
    //

    இதை நான் சொல்லவில்லை. இப்படிதான் ஒரு கானொளியில் பிரசாரம் செய்கிறார்கள். யார் எதற்கு என்று நீங்கள் தெரிந்து கொள்ளளாம். இப்பொழுதான் பாரத மக்கள் கொஞ்சமாவது விழித்தேந்து வருகிறார்கள் அதை சிதைக்க அத்தனை முயற்சிகளும் நடக்கின்ன்றன. உங்களுக்கே இது கிண்டலாக தோன்றுகிறதே, இதை பற்றி மொரு முழு நீல கானோளியே இருக்கு. அதை வியாசன் அவர்கள் அவரது மறு மொழியில் தந்திருக்கக் கூடும். இதை தான் நான் இங்கு வைத்துள்ளேன்.

    கிரேக்கத்தில் இருந்து கிருதம் அதிலிருந்து சமஸ்க்ருதம் என்று சொன்னதெல்லாம் எப்படி ஒரு கூட்டம் தமிழிலிருந்து சமஸ்க்ருதம் வந்தது என்று சொல்கிறது, அதன் சாயலில் தான் எழுதியுள்ளேன்

    எனக்கு தமிழ் வெறுப்பு இருந்தால் என்னால் காலை எழுந்து திருவாராதனம் செய்ய இயலாது, அதில் 80 % தமிழ் 20 % சமஸ்க்ருதம். என்னால் பக்தி மார்கத்தில் இருந்து கொண்டு அதில் முன்னும் செல்லவேண்டுமென்றால் தமிழ் மொழியால் மட்டுமே அது சாத்தியப்படும். இதற்காக நான் இல்லத்தையும் பொல்லாததையும் தமிழின் மேல் ஏற்றி அதற்கு தேவை இல்லாத அலங்காரத்தை செய்ய எனக்கு அவசியமில்லை. இதே நிலைதான் சமஸ்க்ருத மொழியின் பாலும் கொள்வேன்.
    அலங்காரம் செய்தால் அதை கலைப்பது எளிது. அறிபூர்வமான விஷயங்களில் அலங்காரம் செய்வது அழகல்ல. இதற்கு பிரமாணங்கள் தான் முக்கியம்.

  273. வியாசன்,

    உங்களது மறுமொழிக்கு நன்றி. மற்றவைக்கெல்லாம் பதில் அப்புறம்.

    முதலிலேயே சிக்கல். நீங்கள் வைக்கும் அத்தனை வாதத்திற்கும் ஹேது என்ற மூலகாரணம் ஆரிய திராவிட மாயை. இது மாயையே, ஆரியன் வந்தான் கொண்டான் என்பது அத்துப் போன ஒரு வாதம்.
    உங்களுக்கு காநோளிகளில் நம்பிக்கை உள்ளதால் இதை தருகிறேன் – https://www.youtube.com/watch?v=KiBfnS5N7jI

    மற்றும், நீங்கள் தரும் சுட்டிகள், கூகிள் ஆண்டவிரம் நாம் கேட்க அவர் தரும் முதல் பதில்கள். இவைகளை எத்தனை முறை நான் முன்னே படித்திருப்பேன் என்று நான் உங்களுக்கு சொல்லியா புரிய வைக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் இதையும் தாண்டி கொஞ்சம் ஆழம் பார்கவேனுமாய் வேண்டுகிறேன்.

  274. /அவரைப் பற்றி நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல அவர் நம்மிடையே இல்லை. அவர் எழுத்துக்கள் அவரது கருத்துக்கள் பற்றி ஏதாவது குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அவர் எழுதிய விஷயங்களை மிகக் குறிப்பாக அவரது புத்தகத் தலைப்பு, பக்க எண், வாசகங்கள் அல்லது குறிப்பிட்ட உரல் ……… வாசகங்கள் சார்ந்து பகிர முனையவும்.//

    திண்ணைகள் ‘சாதிகள்’ என்று அவர் எழுதிய கட்டுரை இன்றும் இருக்கிறது. அதற்கு வந்த பின்னூட்டங்கள் நிறைய. அவரில்லையென்றால் நீங்கள் இருக்கிறீர்களே? நீங்கள் சொல்லலாமே அவரின் அக்கட்டுரையப்படித்து.

    கட்டுரையாளர் இல்லையென்றாலும் கட்டுரை மறைந்து போவதில்லை.

    ஆன்மிக விழா நடத்தி சாதி அமைப்புக்களை தங்கள் சாதிக்காக விளம்பரம் செய்யவைத்திருக்கும் பந்தலில் தான் பல நாட்கள் அமர்ந்தேன் என சாரங்கன் எழுதியிருக்கிறார். எங்கள் ஆச்சாரம் கெடாமலிருக்க தலித்துகளிடன் தட்டைப் ப்ரிமாறமட்டோமென்றும் எழுதியிருக்கிறார்.

    என் கேள்வியும் சாரங்கன் பதிலும்:

    தலித்து பையனென்றால், உங்கள் ஜாதிப்பெண் அவனோடு ஓடத்தான் செய்ய வேண்டும். ஏனெனில், கட்டிக்கொடுக்கமாட்டீர்கள். வன்னியரென்றாலோ, தேவரென்றாலோ, அடித்து கொன்று விடுவார்கள். நீங்கள் பரவாயில்லை. ரொம்ப மனிதாபிமானம். அடிக்கமாட்டீர்.
    //
    christaim brahmins என்று ஒரு web site கூட இருக்கு போல. எங்க ஊர்ல கண்ணாலம் கட்டுவது புள்ள பெத்துக்க மட்டும் இல்ல. அத சீரியாசாக பார்க்கிறோம். இரு வரும் சேர்ந்து கர்மங்களை, கடமைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சம்ப்ரதாயம் இருக்கும். அதை சரி வர செய்ய ஒத்த ஜாதியில் திருமணம் செய்கிறார்கள். ஒரே தட்டில் இருக்கும் இரு வேறு சாதியினர் கூட மாற்று திருமணம் செய்வதில்லை என்பதற்கு இதுவே காரணம். ஆனால் இப்போதெல்லாம் கடமையாற்ற வேண்டும் என்று பலர் திருமணம் செய்வதில்லை. அதனால் இந்த கட்டுப்பாடு இப்பொழுது அவசியமற்றது.//

    ஆக, திண்ணையில் மலர்மன்னனின் கட்டுரை ‘சாதிகளின் அவசியம்’, இங்கே சாரங்கனின் சாதிகள் தவிர்க்கமுடியாதவை என்ற பதில்.

    இனி உங்களுக்கு வருவோம்.

    மீண்டும் எழுதுகிறீர்கள். மனுவேண்டும் இங்கேயே. ஆங்கிலத்தில் படித்த்தாக. அதுவும் முழமையாகப்படிக்கவில்லை. முதலில் நன்றாகப்படித்துவிட்டு மனுவுக்கு சப்போர்ட் பண்ணலாம்.

    இப்படி முழுமையாகப்படிக்காமல் மனுவேண்டும்; அதில் தலித்துகளுக்கெதிராக சொல்லப்பட்ட வாசங்கள் சிலவே; அதுவும் இடைச்செருகல்கள் என்பது பற்றி ஏற்கன்வே கிருஸ்ணகுமாருக்குச் சொல்லியாயிற்று. பார்க்க மறுக்கிறார்.

    அப்போது தமிழில் இப்போது ஆங்கிலத்தில் கிருஸ்ணகுமாருக்கு. In next mge.

  275. //பாலா சுந்தரம்//

    பால சுந்தர விநாயகம் என்பதுதான் ஜாதகப்பெயர். விநாயகம் என்பது நீக்கப்பட்ட காரணம் நான் விநாயகரைத் தொழுவதில்லையாதாலால்.

    பாலா என்றால் பொருள் மாறிவிடும். எப்படி நான் சாரங்கன் என்ற பெயரைச் சாரங்க் என்று அழைக்க‌ அருவருப்படைகிறோனோ அப்படி நீங்களும் செய்தால் நன்று. வெள்ளைக்காரன் தன் வாயில் இந்தியப்பெயர்கள் நுழையாததால், நாராயணனை நாராயன் என்று சுருக்கினான். முத்துவை, முட்டு என்றழைத்தான். இங்கு வெள்ளைக்காரர்கள் இல்லை. ஏன் பெருமாள் நாமத்தை இப்படி சுருக்கவேண்டும்?

    //இன்று சமஸ்க்ருதம் படிக்கும் தலித்துக்கள் கம்மிதான், ஆனால் படிக்கிறார்கள், நீங்கள் சொல்லும் காரணங்களுள் எத்தையும் பொருட்படுத்தாமல். பிராமணர்களை தாண்டி அப்ராமினர்களும் அதிக அளவில் படிக்கிறார்கள். இதுவும் உண்மை. இதற்க்கு சாத்திய சாயம் நீங்கள் பூசிக்கொண்டே இருங்கள், ஒரு நாள் பெருமழை பெய்யும் நரி வேஷம் களையும்.//

    தப்பாக புரிந்து எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். முதலில் கொஞ்சம் நிதானித்து எழதப்பழகவும். எனக்கு வடமொழியில் எந்த காழ்ப்பும் கிடையாது. நான் தி கவோ, தி மு கவோ கிடையாது. என் கருத்துக்கள்; என் விருப்பு வெறுப்புகள் என்னவையே. அவைகளுக்கு நானே பொறுப்பு. என் சிந்தனை என்னுள் எழுந்தவை. நான் நேரில் பார்த்தவைகளின் அடிப்படையில் அமைந்தவை.

    நீங்கள் என்னதான் சொன்னாலும் – அதாவது, உங்கள் பரிபாஷையில் – //பூசினாலும்//, தமிழ்மக்களிடையே வடமொழி புழக்கம் வரவே வராது. படிப்பவர்கள் ஏன் வந்தார்கள் என்று கேட்டேன். உங்கள் பரிபாஷையில் பழவேற்காட்டுக்காரர்கள் எதற்கு வந்தாக? திருவொற்றியூர் காரர்கள் எதற்கு வந்தாக? பழவேற்காடு மீனவர்கள் வடமொழி இலக்கியத்தை நுகர ஆசைப்பட்டா? இல்லை, பாப்பையாவைப்போல் அஃது ஒரு தொன்மொழி என்றா? இல்லை, பிராமணர்கள் போல, வேதங்கள், உபநிடத்துக்களைப் படிக்கவேண்டுமென்றா? இதைத்தான் அறிய விழைகிறேன். எனக்கு வியப்பாக இருக்கிறது. வந்தவர்களெல்லாம் தமிழை கசடற கற்றுத்துறை போகியவர்கள் இனி நாம் வடமொழி கற்கலாம் என்று வந்தார்களோ?

    இப்படி நான் கேட்க காரணம் வடமொழிமீது எந்த காழ்ப்பினாலன்று. ஒரே காரணம் இப்படிப்பட்ட உழைக்கும் வர்க்கத்துக்கு எவ்வழியிலும் உதவா ஒரு செயலை செய்ய வேறேதாவது காரணம் இருக்கும். அதைச்சொல்லுங்கள் சாரங்கன்.

    முதலில் நீங்களும் தமிழைப்பிழைபோடாமல் எழுதவேண்டும். அதன் பின்னர்தான் வடமொழிக்கு ஆவேசமாக பிரச்சாரம் பண்ணலாம். தாய்மொழியையே மதிக்காதவர் பிறமொழியையும் மதிக்க மாட்டார் என்பது பொதுவான கருத்து.

    கம்மிதான் – குறைவுதான்
    எத்தையும் பொருட்படுத்தாமல் – எதையும் பொருட்படுத்தாமல்
    அபிராமணர்கள் – பிராமணரல்லாதோர்; அல்லது அபார்ப்பனர்கள்
    இதற்க்கு சாத்திய சாயம் – இதற்கு சாற்றிய சாயம்
    வேஷம் களையும் – வேடம் கலையும். வேஷம் என்றாலும் ஏற்கலாம். நான் தூய தமிழ் புரட்சிப்புலியன்று.

    வெட்டி ஒட்டிய உங்கள் சிறு பத்தியில் இருந்து இவ்வளவு பிழைகள் ! எழுதிய மொத்தத்திலும் ஏராளமான பிழைகள்.

    ஆக, சாரங்கன், முதலில் ஒவ்வொருவரும் தன் தாய்மொழி ஓரளவுக்குப் பிழை போடாமல் வடமொழி கற்கப்போகலாம். உங்களைப்பொறுத்தவரை, முதலில் அவர்களுக்குத் தமிழைக்கற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் வடமொழி கற்றுக்கொடுக்கலாம். அதற்கு நீங்கள் முதலில் தமிழை நன்கு கற்கவும்.

    நீங்கள் வேண்டுமென்றே இப்பிழைகளைப் போட்டிருந்தால், வியாசன் வைத்த குற்றச்சாட்டு சரியென்றாகும்: அவர் சொன்னார்: உங்களுக்குத் தமிழ்மேல் வெறுப்பு.

  276. //நீங்கள் ஆரவாத்துடன் ஆரம்பித்தால் நானும் அப்படிதான் ஆரம்பிப்பேன். முன்பு உங்களுடன் சாந்தமாக பலமுறை வாதம் செய்துள்ளேன் என்பதை நினைவில் கொள்ளவும். எல்லோருடமும் அமைதியாக வாதிட வேண்டிய அவசியம் இல்லை. ஜல்பம் செய்வோரிடம் ஜல்பமு, விதண்டாவாதிகளிடம் விதண்டாவாதமும் தான் செய்ய வேண்டி இருக்கிறது.
    //

    சாரங்கன்!

    அமைதியாக வாதிட்டாலும் ஆவேசமாக வாதிட்டாலும் கண்ணியமிக்க சொற்களை பயன்படுத்துக என்பதே என் வேண்டுகோள். நீங்கள் விதண்டவாதத்துக்கு விதண்டவாதத்தை வைத்தாலும் அதையும் கண்ணியமிக்க சொற்களில் வைக்கமுடியும். இதில் ஒரு நன்மையும் உங்களுக்கு உண்டு. தாறுமாறாக அவச்சொற்களால் அர்ச்சனை செய்து நம் கருத்தைக்கூறும்போது படிப்பவர் ‘இவருக்கே இவர் கருத்துக்களில் நம்பிக்கை இல்லை போலும்’ என்று நினைக்கத்தூண்டும். Empty vessel makes much noise எனபது பழமொழி. உங்கள் எண்ணம் பிறரை நம்ப வைப்பது. அதற்குத்தான் எழுதுகிறீர்கள் இல்லையா? கண்ணியமிக்க சொற்கள், உங்கள் கருத்தை ஆழ்ந்து படிக்கத் தூண்டும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

  277. //மிழின் மேல் ஏற்றி அதற்கு தேவை இல்லாத அலங்காரத்தை செய்ய எனக்கு அவசியமில்லை. இதே நிலைதான் சமஸ்க்ருத மொழியின் பாலும் கொள்வேன்.
    அலங்காரம் செய்தால் அதை கலைப்பது எளிது. அறிபூர்வமான விஷயங்களில் அலங்காரம் செய்வது அழகல்ல. இதற்கு பிரமாணங்கள் தான் முக்கியம்.//

    ஏற்க முடியா கருத்து.

    தமிழைப்பிழையில்லாமல் எழுதுக என்றால் மறைமலையைப்போல, வையாபுரிப்பிள்ளையைப்போல, உவேசாவைப்போல என்று நினைக்கக்கூடாது. பேச்சுத்தமிழ் இருவகையாகக் காணலாம்: ஒன்று கற்றவர்களிடையே நாகரிகச்சொற்களில். மற்றொன்று, கீழ்த்தட்டு மக்களிடம் – தமிழைக் குரூரமாகச் சிதைத்து.

    நீங்கள் எழுதும் தமிழ் அடிக்கடி இரண்டாவதை நினைவுபடுத்துகிறது. ஒருவேளை அப்படி வேண்டுமென்றே எழுதுகிறீர்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது. அடுத்தவரை மனம் நோகச்செய்ய நல்ல உபாயம் என்று கருதுகிறீர்கள் போல.

    கூடியவரைக்கும் நல்லதமிழில் எழுதுக. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். திருவாராதனம் செய்பவர் நாள்தோறும் பிரபந்தம் ஓதுவாரே? அத்தமிழ் அவரை மாற்றுமே?

    கண்ணதாசன் சொன்னார்: எனக்குக் கவிதை எழுத வைத்ததே ஆழ்வார்களின் பாசுரங்களே. பாசுரவரிகளை அவர் கவிதைகளில் காணலாம்.

  278. ஹிந்துக்களை மதமாற்ற விழையும் ரெவ ரெண்டு பா சு க் எழுதியது :-

    \\\ மீண்டும் எழுதுகிறீர்கள். மனுவேண்டும் இங்கேயே. \\\\\

    நான் எழுதியுள்ளது :-

    \\\\ மனு தர்ம சாஸ்த்ரம் என்பது கலி பிறப்பதற்கு முன்னமேயே காலாவதியான சாஸ்த்ரம் என்று பல முறை உம்முடைய பூர்வ அவதாராதிகளில் எழுதியிருக்கிறேன். \\\

    இன்னும் எத்தனை முறை புளுகியே தீருவீர்கள். மனு தர்ம சாஸ்த்ரத்தில் ஜாதிகள் பற்றியல்லாமல் பொது சட்டங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன என்று இரு உதாஹரணம் கொடுத்திருந்தேன். அதில் என்ன ஆக்ஷேபத்தை தாங்கள் கண்டு விட்டீர்கள் என்று சொல்லலாமே.

  279. @BALA SUNDARAM KRISHNA

    //?? If a Malayalee learns Tamil literature, it does not mean that he has great regard for it. It may be just out of thirst for knowledge. Similarly, I have read English Bible umpteen times,have the Holy Koran with me and read it, and about it also, whenever I want; have Dhammapada in my shelf and read it ofen although I don’t like that religion. Similarly I learnt about Vaishanavism. In Annamalai University, they have a diploma in Saiva Sithantham. I am going to join. Afterwards I will write about it here like Vyasan or Dr Muthukumarasamy here. Will you say that I have become a Saivite? //

    That’ s what I am also expecting. Because, no true vaishanva or Shavia never opposing Sanskrit.
    No authentic Shiva Adeetinams like maduari Adheenam or Thiruvaduthurai Adheenam never opposing Sankrit. Because, I read their publishings. what Savvite agamas or vaishanva agamas said that must be accept by all shavias all vaishanvas.
    Hence, I conclude you either belongs to D.K or communists. Then, why donot come on that idenitty? I knew very will here you and viyasan both belongs either. But coming in disgust names.
    you saying one time that I am not against Sanskrit. and other time you oppopsing Sanskrit week. what a logic you had? Since you are hater of Hindusiam, oppose sanskrit week as Hindu hater but not as Hindu because all hindus has one of the eye is sanskrit.
    Even you can criticise Hindusam no problem we are ready give befitting reply but not as hindu ideintity bus as hindu hater.

  280. @ பா சு

    \\ வெறும் சாதனமாகவா தன் மொழியைப் பார்த்தார்? இவர் சொக்கநாதர் மேல் மையல் கொண்டு அன்னத்தையா தூது விட்டார்? தத்தையையா தூது விட்டார்? மேகத்தையா தூது விட்டார்? இல்லை! தமிழை அல்லவா தூது விட்டார்! ஏன்? \\\

    நான் சொல்ல வந்ததையே நீங்கள் சொல்லிவிட்டு இதில் கேள்வி வேறா?

    ஐயன்மீர் அடைய வேண்டிய இலக்கு இறைவனடி நீழல். அதை அடைய மொழி ஒரு சாதனம். சொக்கநாதர் மீது மையல் கொண்டதை தெரிவிக்க சாதனமாகத் தமிழை தூது விட்டார். அவர் அடைய விழையும் இலக்கு —— அதாவது சாத்யம் —– சொக்கநாதப்பெருமான். இறைவனடி நீழல்.

    ம்…………புரிந்ததா?

    குதர்க்க வாதம் மட்டற்ற சலிப்பைத் தருகிறது.

  281. \\\\\ Who wrote this? Krishnakumar you are responding to the above. May I know who is the writer? \\\\

    நீங்கள் பிடித்ததாக நாடகமாடும் மொழியில் ஆராவமுதன். நீங்கள் மட்டற்ற காழ்ப்புக்கொண்டுள்ள சம்ஸ்க்ருதத்தில் ஸ்ரீமான் சார்ங்கன்

    யாரையுமே படிக்காமலே இவ்வளவு நாளாக உங்களது உத்தரங்களை பகிர்ந்துள்ளீர்கள் என்று தெரிந்தால் எல்லோரும் நொந்தே போய் விடுவார்கள் 🙂

    அதான் ஆராவமுதனைக்கொண்டாடும் பாசுரத்தை சேவித்து அவருக்கு எமது அன்பையும் க்ருதக்ஞதையையும் பகிர்ந்திருக்கின்றேனே. தெரியவில்லை. ம்………மண்டகப்படியை வயணமாக வாங்கி ஜீரணித்து ஏப்பம் விட்டு விட்டு நான் எப்போது சாப்பிட்டேன் என்று கேழ்வி கேழ்க்கலாமோ? 🙂

    உங்களது சம்வாதங்கள் வசவுகளாக இல்லாமல் புளுகுமூட்டைகளாக இல்லாமல் நேர்மையுடனானதாகக் கருத்துப் பகிர முயற்சியாவது செய்யலாமே.

  282. இன்னொன்றையும் சாரங்கனுக்குச் சொல்லி முடித்துவிடலாம்.

    விதண்டவாதத்துக்கு விதண்டவாதம் பற்றித்தான் அது.

    சாரங்கன் சொல்வது: “30000 ஆயிரம் படிக்கிறார்கள். நிருபர் படிக்கிறார் அங்கு ஆயிரம் பேர்வந்தார்கள். சாரதா பள்ளி வகுப்புக்கு 300 பேர் வந்தார்கள். வடமொழி கற்க தமிழ்நாட்டில் ஆர்வம் ஓங்குகிறது”

    நான் சொல்வது: “என்ன எடுத்துக்காட்டினாலும், வடமொழி தமிழ்மக்களிடையே பரவாது. பரவும் என்று நான் நம்பப்போவதில்லை”.

    இவ்விருவாதங்களும் அவரவர் நிலைப்பாடுகள். நான் சொல்வது அவருக்கு விதண்டவாதமாகத் தோன்றும். ஆனால் அவர் சொல்வது எனக்கு விதண்டவாதமாகவே தோன்றும் என்று ஏற்க மறுப்பதேன்?

    இப்படிப்பட்ட விடாப்பிடியான நிலைப்பாடுகள் இருக்கும் நேரத்தில் இருவரும் செய்ய வேண்டியதென்ன? We agree to disagree என்று முடிப்பதுவே சபை நாகரிகம்.

    மாறாக, //இதற்க்கு சாத்திய சாயம் நீங்கள் பூசிக்கொண்டே இருங்கள், ஒரு நாள் பெருமழை பெய்யும் நரி வேஷம் களையும்.// என்று எழுதுவது ஏன்? அதாவது நான் நரியாம்! ப்ரி போல வேடம் கட்டிக்கொண்டு ஏமாற்றிக்கொண்டலைகிறேனாம் எனறுதானே பொருள்? நான் கவலைப்படவில்லை. ஆனால், ஒரு எடுத்துக்காட்டாகவே இதைச்சுட்டிக்காட்டுகிறேன் சபை நாகரிமாகாது என்று சொல்ல‌.

    We agree to disagree என்பதுவே சரி. இது ஒரு கற்றோர் வழக்காடு மன்றம். உளறுகிறார். அவிழ்த்துவிடுகிறார். அடிச்சு விடுகிறார். என்று எழுதுவது இம்மன்றத்தின் தரத்தைக் குறைக்கும். அவரவருக்குத் தெரிந்ததைத்தான் சொல்லமுடியும். வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்பது தவறு. அவர் கருத்து சரியில்லையென்றால,. மாற்று கருத்தை சொன்னால் போதும்.

  283. வியாசன் அவர்களே

    alex collier என்பவற்றின் காணொளியை நான் முன்பே பார்த்திருக்கிறேன். இதை மையப் படுத்தியே நான் எனது மறுமொழியில் இந்திரனை பற்றி ஒரு கதை எழுதினேன்.

    அவரது எல்லா சுட்டிகளையும் பாருங்கள், அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும்.

    அவர் யார் என்பது இங்கே – இது கூகிள் ஆண்டவர் கொடுத்ததுதான். இது உண்மையும் கூட, அவரை பற்றி நிறைய விஷயங்கள் நெட்டிலே உள்ளன.


    Alex Collier is an American citizen who claimed to be a contactee. He alleged that he has been in contact with inhabitants of the Andromeda constellation and purported to have messages to relay from these supposed visitors

    ஆவி அமுதாவை நாம் கிண்டல் செய்கிறோம். ஆனால் இவருக்கு. இவர் ஒரு UFO காரர். சரி இவர் ஒரு மேதயாகவே இருக்கட்டும், இவர் சொல்வதற்கு ஆதாரமே இல்லாமல் விஷயத்தை முன்வைக்கிறார். இவரது மற்ற தகவல்களையும் பார்த்தல் இது தெரியவரும்.

    இது மாதிரி நிறைய காநோளிகளை பார்த்துள்ளேன். பல காணொளிகள் சிங்கள தேசத்தவர்களின் குரல்களில் மிளிரும். எல்லாம் ஊஹத்தின் அடிப்படையில் தான் நிற்கின்றன.

    அவர் சொல்கிறார், இயேசு கிறிஸ்து சிலுவையில் அரயபட்டவுடன் தமிழ் பேசினார் என்று கூட ஒரு காணொளி இருக்கிறது.

    இண்டஸ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் பல இன்று வரை மொழி பெயர்க்கப்படவில்லை. அவை என்ன என்று புரியவில்லை என்பதனால். இதைக் கொண்டு இது தமிழாக இருக்குமோ என்ற சிலர் ஊஹம் தான் செய்கிறார்களே தவிர இது தமிழ் என்று நிறுவவில்லை. இதை ப்ராஹ்மிக்கு முன் உள்ள எழுத்து முறை என்றும் சிலரின் கருத்து.

    நீங்கள் இன்னும் sarasvathi sivilaization பற்றி படித்ததில்லை என்று நினைக்கிறேன். இந்திய தொன்மையான பண்பாடு சரஸ்வதி நதி கரையை சார்ந்தது. Lost River என்ற புத்தகம் வாசியுங்கள் (விலை 399). எண்ணற்ற அகழ்வாராய்ச்சி தரவுகள் கொண்ட அற்புதமான புத்தகம். அதை பற்றி சுருக்கமாக அரவிந்தன் இந்த தளத்திலேயே எழுதி இருக்கிறார். ஹரப்பா பண்பாட்டிற்கும், சரஸ்வதி பண்பட்டிருக்கும் தொடர்சிகள் ரீதியான சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதாவது ஹரப்பர்கள் இடம் பெயர்ந்து சரஸ்வதியை நிறுவினார்கள் என்பது நிச்சமாக இல்லை என்பது இதன் அர்த்தம்.

    ஆரிய வாதத்தை முதிலில் முன் வைத்த மா மேதை மாக்ஸ் முல்ளீர் தான். இதற்க்கு மொழி இயல், அகழ்வாராய்ச்சி, பூர்வமான தரவுகள் இந்தியாவில் ஒரு இடத்திலும் கிடையாது. இந்த ஆரிய திராவிட மாயை என்பதை முன் வைப்பதே சில புத்தி சாலி மொழி இயல் ஆர்வலர்கள் வெறும் ஹேஷ்யங்களை மட்டும் கொண்டு முன் வைக்கும் வாதம். எந்த தொல்பொருள் ஆராச்சியாலனும், வரலாற்றை ஆதாரமாக குரிப்பவனும் இதை ஒப்புக்கொள்வதில்லை.

    இதற்க்கான தரவுகளை பினான் தருகிறேன், முதில் சொல்ல நினைப்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்

    //
    உங்களின் சமக்கிருத கல்வெட்டுக்களுக்குப் பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே வடக்கில் தமிழ் கல்வெட்டுகள் இருந்தன, அதைப்பற்றி நான் பேசுகிறேன். நீங்கள் என்னடாவென்றால் அதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் ஒரு சில வட இந்திய அரசர்களின் சமக்கிருத கல்வெட்டுக்களைப் பற்றிப் பேசுகிறீர்கள்
    //
    இதை பற்றி நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லையே. நான் கூறிய ஒரே விஷயம், கல்வெட்டுக்களின் ஆராய்ச்சியால் புகுந்தால் உங்களுக்கு பிரச்சனையை வரும் என்பதை மட்டும். இதன் சம்பந்தமாக நான் ஒரு தரவுகளையும் தரவில்லை.

    இதில் நீங்கள் புகுவதால். நீங்கள் செய்யும் கால நிர்ணயம் என்ன என்பதை நீங்கள் தந்தாள் நன்றாக இருக்கும்.

    மேலும் ஒரு விஷயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் செய்ய நினைப்பது சமஸ்க்ருதத்தை தமிழுக்கு பேரனாகவோ பேத்தியாகவோ பார்க்க நினைப்பது. நான் இதனின் உல்டாவை செய்ய நினைக்கவில்லை. அதாவது சமஸ்க்ருதத்தில் இருந்து தமிழ் உருவானது என்பது எனது வாதம் இல்லை. நான் கொடுத்த பதங்களின் நோக்கும், இன்று தமிழில் சமஸ்க்ருத பதங்கள் வழக்கில் உள்ளன என்பதை மட்டும் தான். அதே பதங்கள் இந்தியாவின் மற்ற மொழிகளிலும் உள்ளன என்பதை மட்டும் தான்.

    தொடருவோம்…

  284. திரு பாலா அவர்களே

    //
    ஆக, திண்ணையில் மலர்மன்னனின் கட்டுரை ‘சாதிகளின் அவசியம்’, இங்கே சாரங்கனின் சாதிகள் தவிர்க்கமுடியாதவை என்ற பதில்.
    //

    பாலா என்று பெயர் வைத்துகொண்டுதால் குழந்தையை போல பேசுகிறீர்கள் அல்லது புரிந்து திரிக்கிறீர்கள்.

    நாம் ஒழிக்க வேண்டியாது ஏற்ற தாழ்வு மனப் பான்மையை. ஒரு உதாஹரணம் பார்த்தோமானால் தெரியும். இன்னும் பல நாடுகளில் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மேல் நிலையில் உள்ள ஊழியர்களை சார் மேடம் போட்டு கூப்பிடுகிறார்கள்.இதை நீங்கள் அமெரிக்காவில் பெருவாரியாக பார்க்க முடியாது. பேதங்கள் இருக்கும் அதை நாம் கையாளும் விதத்தில் தான் இருக்கு.

    இதை வைத்துக் கொண்டு சாதி இருந்தால் மேல் சாதி இருக்கும், கீழ் சாதி இருக்கும் அது இருக்கும் இது இருக்கும் என்று பேசுவது பக்க கம்முனிஸ்டு பேச்சு. எல்லாரையும் ஒழிச்சிட்டு அவன் மட்டும் குளிர் காயனும். பெருவாரியான ஆள் பிடிக்கும் கூட்டத்தின் நினைப்பும் இதுதான், இப்படியே பேசி பேசியே குட்டையை குழப்பி ஆள் பிடிப்பது தான்.

    சரி உங்களுக்கு நன்கு உரைக்க ஒரு நிகழ்வு.

    முதளியாண்டானும், ராமானுசரும் பேசுகிறார்கள். முதலியாண்டான் கேட்கிறார் சாற்றின (பூணூல் தரித்த) ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் சாற்றாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் என்ன வித்யாசம். ராமானுஜர் சொன்ன பதில், சாற்றின வைஷ்ணவர்களுக்கு ஒரு கஷ்டம் இருக்கு, வேத விஹிதமாக எண்ணற்ற கர்மங்களை செய்துகொண்டு விஞ்சிய பொழுதில் பகவானை பற்றி சிந்திக்க வேண்டும், சாற்றாத வைஷ்ணவர்களுக்கு இக்கவலை இல்லை அவர்கள் சதா எம்பெருமானின் த்யானத்திலேயே இருப்பார்கள்.

    இப்படி இருப்பது தான் பேதங்கள் இருப்பினும் அதை எப்படி எதிர் கொள்வது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு.

    பேதங்கள் என்பதை (நான் ஜாதிய பேதங்களை மட்டும் சொல்லவில்லை), தாரதம்யம் என்பதை உலகிலிருது ஒருக்காலும் நீக்க முடியாது, ஒரு விதமான பேதத்தை நான் அழித்தேன் என்று எண்ணினால் இன்னொன்று நிற்கும்.

    ஆளும் ஒருவன், ஆளப்படுபவன், பாலாவின் கருத்து, சாரங்கனின் கருத்து, பணமுடயவன், அதில்லாதாவன், நிலமுடையோன், நிலமில்லாதவன், ஞானம் உடையோன், அதிலாதவன், கொடுப்பவன், வாங்குபவன், என்பது போன்று ஏதாவது ஒன்று எஞ்சியே இருக்கும். இவ்வுலகத்தின் ஒரு மாறா இயல்பு இது. மாற்றம் உலகில் வாராது நமது எண்ணத்தில் தான் வரவழைத்து கொள்ள வேண்டும்.

    நான் மனிதன் அது ஆடு என்ற வேறுபாட்டை உங்களால் விட முடியுமா. எப்படி சாத்தியப்படுமென்றால் சர்வம் கல்விதம் பிரம்மா சாந்த உபாசீத (இக்தனைத்தும் பிரம்மம்) என்று உபசணையால் விளைந்த மனபக்குவத்தால் தான் முடியும்.

    ஆகா சம்பிரதாய பூர்வகமாக கர்மாவை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரைக்கும் ஜாதி பேதங்கள் இருக்கும். கர்மாவை விட்டுவிட்டால் ஜாதி ஆஷ்ரம பேதங்கள் நாளடைவில் நின்று போகும். ஆனால் வேறு விதமான பேதங்கள் முளைக்கும். இது இந்தியனுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. உலகம் முற்றிலும் இது நிதர்சனம்

  285. In The Hindu an essay titled Where are the Sanskrit Speakers ? appeared yesterday. I have put up the Tamil version for the benefit of readers here:

    100 கோடிகளுக்கு மேலாக மக்கட்தொகை உள்ள நம்நாட்டில், ஏறக்குறைய 14000 ஆயிரம்பேரே சமஸ்கிரும் தங்கள் தாய்மொழி என்று அறிவித்ததாக மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாடத்தொடங்கும் இந்த தருணத்தில், 2001 ம ஆண்டு நடந்த மாவட்ட வாரியாக மக்கட்தொகை கணக்கெடுப்பு விவரங்களின்ப‌டி, ‘தேவ பாஷை’ யைத் தாய்மொழியாக அறிவித்துக்கொண்டோர், உத்தரபிரதேசம், வட தெலுங்கானா, தென் இராஜஸ்தான், நாக்பூர், ஹரித்வார் இம்மாவட்டங்களில் மட்டுமே. இவற்றுள், சித்தாப்பூர் (உ.பி) யில் அதிகம்பேர் (550) சமஸ்கிருதம் பேசுவோர்.

    இந்தியாவில் வடகிழக்குப்பகுதி, மத்திய பிரதேசத்துக்கு மேல் கிழக்கு, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, குஜராத் மாநிலங்களில் சமஸ்கிருதம் பேசுவோரில்லை என்று 2001 ஆண்டு மக்கட்தொகை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 1921 ஆண்டு மக்கட்தொகை கணக்கின்படி, சென்னை மாகாணத்தில் 315 பேரே சமஸ்கிருதம் பேசுவோர். இப்படிப்பட்ட ஏற்ற இறக்கம் சமஸ்கிருதம் பேசுவோர்களிலேதான் அதிகமாகக் காணப்படுகிறது. 1981ம் ஆண்டு 6106 பேர் 1991ல் 49736 பேர்களாகினர். மீண்டும் 2001ல் 14135 ஆக குறைந்தனர்.

    இப்படி சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கையில் ஏற்றம் இறக்கமிருப்பது மக்கட்தொகை கணக்கெடுப்பு முறையில் உள்ள தவறே காரணமெனக் கருதக்கூடாது. மக்கள் தாங்கள் வாழுமிடத்தில் நிலவும் அரசியல் சமூகக்காரணங்களினால், தங்கள் தாய்மொழியை மாற்றிச்சொல்கின்றனர். அவர்களின் அரசியல் முன்னேற்ற அபிலாசைகளையே இம்மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கு மாநிலங்களில் வனவாசிகள் பேசும் பில் என்ற மொழியைப் பார்க்கலாம். 1991 லிருந்ததைக் காட்டிலும் 2001 இம்மொழி பேசுவோர் தொகை இருமடங்காகியது. ஜார்கெண்ட் வனவாசிகள் தங்களுக்கென்று தனிமாநிலம் அடைந்ததைப் பார்த்து தமக்கும் தனிமாநிலம் வேண்டும் என்ற அரசியலாசையே இவர்கள் தங்கள் தாய்மொழி பில் என அறிவிக்கக்காரணம். எனவே, மக்கள், அரசியல் ஆதாயங்களுக்காகவும் தங்கள் தாய்மொழியை அடிக்கடி மாற்றிக்கொள்கின்றனர். முன்பு சமஸ்கிருததை அவ்வாறு சொல்வர் காரணம் அம்மொழிக்கு இருக்கும் மதிப்பும் அரசியல் சாசனத்தால் அம்மொழி அங்கீகரிக்கப்பட்டிருப்பதானாலும். வங்காளம் பேசுவோர் எண்ணிக்கை இந்தியா முழவதும் வங்காள மாநில மொத்த மக்கட் தொகையைவிட அதிகமாக கடந்த 30 ஆண்டுகளில் மாறக்காரணம், பங்களாதேசிலிருந்து வந்தவர்களால். இவர்களுக்கு உருது தாய்மொழியென்றாலும், வங்காளத்தை தாய்மொழியாக அறிவிக்கக்காரணம் இந்தியக்குடியுரிமை பெறுவதற்கே. இவ்வாறு மக்கட்தொகை கணக்கெடுப்பு, மக்களின் அரசியல் ஆதாய ஆசைகளைக் காட்டுகிறது என்று சொல்கிறார் மொழிவாரிய கணக்கெடுப்பு நிருவனத்தைச் சேர்ந்த பேரா. கணேஷ் டெவி.

    மத்திய செம்மொழிகள் கழகத்தைச்சேர்ந்த மல்லிகார்ஜுன், மக்கள் சமஸ்கிருதத்தை, அதன் மதிப்புக்காகவும், அரசியல் சாசன அங்கீகரிப்புக்காகவும் தங்கள் தாய்மொழி என பொய் சொல்லிக்கொள்கின்றனர்; கணக்கெடுப்பும் யாருமே பேசாத சமஸ்கிருதத்தை இந்தியாவின் தொன்மொழி என்ற நினைப்பை உருவாக்க வைக்கிறது. இதனால் சமஸ்கிருதம் பேசுவோர் தொகையைச் சரியாகக் காட்ட முடியாமல் போகிறது என்கிறார்.

    சமஸ்கிருதம் காணப்படவில்லையாயினும் அதன் தாக்கம் காணப்படுகிறது. எங்கோ ஒரு மூலையில் அது பேசப்படத்தான் செய்கிறது என்று நாம் உணருகிறோம்” என்கிறார் பேரா. கணேஷ் டெவி.

    ஆனால், இந்தியாவில் சமஸ்கிருத கிராமம் என பிரபலமான கருநாடக மாநிலக்கிராமமான புத்தூரில் கூட சிலர் மட்டுமே அம்மொழியை தங்கள் தாய்மொழியெனக் கூறிக்கொள்கின்றனர்.

    இறுதியாக சமஸ்கிருதம் இல்லை; ஆனால் இருக்கிறது எனலாம் என்கிறார் பேரா கணேஷ் டெவி. இம்மொழி நம் சிந்தனையை ஆக்கிரமிக்கும் ஒரு பரவலான தாக்கம். இம்மொழியை நீக்க வேண்டுமென்றால், அது நம் இந்துமத வாழ்க்கை முறைகளைத் தந்த‌ புராண இதிகாசங்களை இம்மொழியிலிருந்து நீக்கினாலே சாத்தியம் என்கிறார் டெவி.

  286. Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely. Sanskrit therefore need not borrow words from other languages. Inserting other language words into Sanskrit will stick out like a sore thumb. I also recommend video speech Maha Periyaval of Kanchi on the question of antiquity of Tamil and Sanskrit.His final conclusion? Veda Bhasa is the mother of ALL LANGUAGES.
    I do not think anyone here is more qualified than His Holiness, both in Tamil and Sanskrit.
    The following links give simple lessons in Sanskrit for the ignorant but also for parochial Tamils with their collective head stuck in mud. Very basic lessons here
    https://www.hitxp.com/articles/sanskrit-lessons/sanskrit-lesson-1-secret-science-sacred-sanskrit/
    https://www.hitxp.com/articles/sanskrit-lessons/dhatu-root-verbs-samskrit-grammar-dictionary/
    https://www.hitxp.com/articles/sanskrit-lessons/science-alphabet-devanagari-script/

  287. //மக்களே கேட்டுகோங்க அரபு பெய வெச்சா ஜாதி ஒழியும் அரபு மொழிக்கு அப்படிப்பட்ட மந்தர சக்தி இருக்கு.//

    500 யாஸிதி சிறுபான்மையினரைக் கொன்று குவித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
    பாக்தாத்: ஈராக்கின் மதச் சிறுபான்மையினரான யாஸிதி இனத்தவரை வேட்டையாடி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இதுவரை 500 பேரைக் கொன்றுள்ளதாகவும், பலரை உயிரோடு புதைத்து விட்டதாகவும் ஈராக் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஈராக்கின் மனித உரிமைகள் துறை அமைச்சர் முகம்மது ஷியா அல் சுடானி கூறுகையில், சன்னி தீவிரவாதிகள் இதுவரை 500 பேர் வரை கொன்றுள்ளனர். பலரை உயிருடன் புதைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்

    300க்கும் மேற்பட்ட பெண்களை அவர்கள் அடிமைகளாக கடத்திக் கொண்டு போயுள்ளனர். சிஞ்சார் பகுதியில் உள்ள மலையில் தற்போது யாஸிதி இனத்தவர் அடைக்கலம் புகுந்துள்ளனர்.அங்கிருந்து சிலர் தீவிரவாதிகளிடம் சிக்காமல் உயிர் பிழைத்து அரசுத் தரப்பு வசம் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் யாஸிதி இனத்தவர் சந்தித்து வரும் அபாயங்களை விளக்கிக் கூறியுள்ளனர்.சிஞ்சார் தற்போது முழுமையாக தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. தீவிரவாதிகள் யாஸிதி இனத்தவர்களில் பலரை உயிருடன் புதைத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். சிஞ்சார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உடல்களாக கிடக்கின்றன என்றார் அவர்.

  288. பாலா

    //
    இப்படிப்பட்ட விடாப்பிடியான நிலைப்பாடுகள் இருக்கும் நேரத்தில் இருவரும் செய்ய வேண்டியதென்ன? We agree to disagree என்று முடிப்பதுவே சபை நாகரிகம்.
    //

    ஒருவரும் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு பெயர் ஜல்பம். விதண்டாவாதம் என்பது ஆதாரமில்லாமல் நீ சொல்வதனால் நீ சொல்வதெல்லாம் தவறு என்னும் நோக்கம்.

    நான் கொடுத்த கணக்கில் நிச்சயமாக தவறில்லை. நான் கொடுத்தது பேச தெரிந்தவர்களின் conservative கணக்கு. எழுத படிக்க தெரிந்தவர் அதிகம். ஒரு பத்திரிகை ஆதாரமும் தந்தேன். இன்னமும் வேண்டுமென்றால் உங்கள் கையை பிடித்து கூட்டிச்சென்று காட்டுகிறேன். யாரும் வேண்டுமென்றே குழிதோண்டி கெடுக்காத வரை தென்னகத்தில் தமிழும் தழைக்கும் சமஸ்ருதமும் வளரும்.

    காந்திஜி அழைத்தார் மக்களே வாருங்கள் என்று. ப்ரௌக்கிகல் என்ன நினைத்தார்கள் காந்திஜி நம்மளை கூப்பிடலை ஏன்னு. நல்லவர்கள் காந்திஜி நம்மை தான் கூப்பிடுகிறார் என்னு போராட்டத்தில் சேர்ந்தார்கள்.

    மஞ்ச துண்டு கூப்பிட்டார் தம்பிகளே வாருங்கள் என்று, நல்லோர் நினைத்தனர் இவர் நம்மளை கூப்பிடலேன்னு, அயோக்கியர்கள் நினைத்தார்கள் தலைவர் நம்மளையே கூப்பிடுகிறார் என்று. இந்த கோஷ்டி தமிழை தூக்கிப் பிடிபதால் த்னான் என்னவோ தமிழன் தமிழ் படிக்க பயப்படுகிறான். இவர்களை கொஞ்சம் அகற்றி வைத்தால் தமிழ் நன்கு கற்க பன்மடங்கு மக்கள் கூடுவர்.

    ஒரு பெரியவர் வெள்ளை சொக்கா சட்டை போட்டுக்கொண்டு ஒருமுறை நாங்கள் இருக்கும் இடம் வந்தார். தான் ஒரு அத்வைத சித்தி அடைந்தவர் என்றும் நீங்கள் எல்லாம் என்ன சமஸ்க்ருத காரியம் செய்து சாதித்து விட்டீர்கள் என்று ரெம்ப கோவத்தோட கேட்டார். எனது பக்கத்தில் ஒரு ஏழு வயது சிறுவனையும் மற்றும் ஒரு எழுவது வயது முதிர்ந்த வரையும் சமஸ்க்ருதத்தில் பேசுங்கள் என்றேன். பேசினார்கள். வெல்ல சொக்கா நடைய கட்டினார். இது போல பாலா நீங்களும் பிரத்யக்ஷமாக காணும் போது ஒத்துக் கொள்வீர்கள் அதுவரை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. யாரும் உங்களை நிர்பந்தப் படுத்தபோவதும் இல்லை. இது ஒன்றும் பந்தல் கட்டி பிரியாணி கொடுத்து ஆள் கூட்டி கணக்கு காட்டும் வேலை அன்று.

    இந்தியாவில் இன்று 5.5 கிராமங்கள் சமஸ்க்ருத கிராமங்களாக உள்ளன. கர்நாடகாவில் இரண்டு, மத்ய பிரதேசத்தில் மூன்று அசாமில் (கமிரீ கிராமம்) அரை. மத்ய பிரதேசத்திலும் அசாமிலும் ஹோசஹல்லியிலும் பெரும்பாலும் அப்ராமனர்கள் தான் வசிக்கின்றனர், மத்தூரில் மட்டும் தான் ப்ராமனாதிகள் அதிகம். இவற்றுக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை தான். ஆனால் பாருங்கள் திடீர் என்று தமிழகத்தில் ஒரு கிராமம் இப்படி முளைக்கலாம். வாய்ப்பு இருக்கிறது இல்லையா. நீங்கள் வேண்டுமானால் இல்லை இல்லை என்று தலையை ஆட்டுங்கல் பரவாஇல்லை. தமிழகத்தில் வேலூர் பக்கலில் ஒரு அரபி உருது கிராமம் இருக்கு. திருநெல்வேலி பக்கலில் உருது கிராமங்கள் இருக்கின்றன. சமஸ்க்ருத கிராமம் இருக்கக் கூடாத.

  289. பாலா

    //
    நீங்கள் எழுதும் தமிழ் அடிக்கடி இரண்டாவதை நினைவுபடுத்துகிறது. ஒருவேளை அப்படி வேண்டுமென்றே எழுதுகிறீர்கள் என்று நினைக்கத்தோன்றுகிறது. அடுத்தவரை மனம் நோகச்செய்ய நல்ல உபாயம் என்று கருதுகிறீர்கள் போல.
    //

    எனக்கு transliteration software ஒழுங்காக பயன்படுத்த தெரியாது. இதெற்கெல்லாம் காரணிகளை ஏன் ஆரோபித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி விட்டு மறுபடியும் அது பிழை இல்லாமல் இருக்கா என்று பார்த்து பார்த்து செய்ய கொஞ்சம் அவகாசம் தேவை. காலப்போக்கில் இது சரியாகலாம்.

    எனக்கு ஒழுங்காக பேச வரும். உபதேச மணி மாலையை சுருட்டி உங்கள் வீட்டு லாக்கரில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு தான் பாசுரம் படித்தாலும், நீங்கள் புரட்டு புழுதியில் உழல்வதை விடவில்லையே. இதெல்லாம் ஜன்மாந்தர வாசனை என்பர்.

    நீங்கள் இங்கு வைணவத்தை பற்றி எழுதிவிட்டதால் உபதேச சஹஸ்ரீ செய்யமலவுக்கு உயர்ந்து விட்டதாக positioning வேறு செய்து கொண்டுள்ளீர்கள்

  290. //ஆனால், இந்தியாவில் சமஸ்கிருத கிராமம் என பிரபலமான கருநாடக மாநிலக்கிராமமான புத்தூரில் கூட//

    மாத்தூர் என வாசிக்கவும்.

    இங்குள்ள தமிழ் மொழியாக்கத்தில் குழப்பம் அறியப்பட்டால், ஆங்கிலக்கட்டுரையையே நேரடியாக வாசிக்க இங்கே அழுத்தவும். https://www.thehindu.com/news/national/where-are-the-sanskrit-speakers/article6299433.ece

  291. பாலா

    தமிழன் எதற்காக சமஸ்க்ருதம் படிக்க வருகிறான் என்று கேட்கிறீர்கள். எல்லோருக்கும் ஒரே காரணம் இருக்குமா என்ன. படிக்க வருபவர்களிடம் நீ எதற்காக படிக்கிறாய் என்று கேட்டு ஆராய்ச்சி செய்வது ஆள் பிடிக்கும் கூட்டத்தினர் செய்வதே.

    எதற்காக படிக்கிறார்கள் என்று எனக்கு மெய்யாலுமே தெரியாது. இது ஒருவன் எதற்காக சாமி கும்பிடுகிறான் என்ற கேள்வியை போல.

    பழகிப்போச்சு
    வீட்ல அம்மா அப்பா கேள்வி கேப்பாங்க
    ஒரு மன நிம்மதிக்காக
    வேண்டுதலுக்காக
    கைங்கர்யத்துகாக
    பக்திகாக
    உபசனைகாக
    கடமைக்காக

    இப்படி சொல்லும் ஒருவனை பார்த்து முதல்ல ஒழுங்க வெட்டி கட்டுடா, கரை சரியா தெரிய மாட்டேங்குது. சாமி கும்பட்ரானாம் சாமி என்னுமாப்போலே நீங்கள் பேசும் பேச்சு இருக்கு.
    தமிழை தெள்ளத் தெளிவாக கற்ற பின் தான் மற்றவை எல்லாம் என்றால். அக் கூட்டத்தில் நீரும் இல்லை. நீங்கள் எழுதியவைகளுள் பிழை காண முயன்றால் நிறைய சிக்கும்.

    விதண்டாவாதமே ஆகிலூம் கண்ணியம் வேண்டும் என்கிறீர்கள். எதற்கு இந்த உபதேசம், நீங்கள் எழுதியவற்றை ஒரு முறை மறுபடியும் படித்துப் பாரும். இந்த உபதேசத்த்தை நீர் முதில் கடைபிடியும்.

    இப்படி தனி மனித தாக்குதல்களை விடுத்து விஷய சம்பந்தமாக ஏதேனும் எழுத முயற்சி செய்யும். நீங்கள் இக்கட்டுரைக்கு அளித்த பதில்களை முதலில் இருந்து ஒரு முறை வாசித்து பாருங்கள். எத்தனை எத்தனை முரண்பாடுகள் என்று உங்களுக்கே தெரியவரும்.

  292. //Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely. Sanskrit therefore need not borrow words from other languages. Inserting other language words into Sanskrit will stick out like a sore thumb. I also recommend video speech Maha Periyaval of Kanchi on the question of antiquity of Tamil and Sanskrit.His final conclusion? Veda Bhasa is the mother of ALL LANGUAGES.
    I do not think anyone here is more qualified than His Holiness, both in Tamil and Sanskrit.
    The following links give simple lessons in Sanskrit for the ignorant but also for parochial Tamils with their collective head stuck in mud.//

    RAMA

    Persons like Sarangan writing here more passionately than you, in favour of Sanskrit have objected to the term ‘deva basha’ to describe Sanskrit. They say it is the machination of the missionaries and westerner to call so. The fact is, according to them, only one of the dimensions of Sanskrit is its religious affiliation. Otherwise, it is all secular. Aren’t you contradicting them ?.

    //I do not think anyone here is more qualified than His Holiness, both in Tamil and Sanskrit.//

    Don’t think. Just say. //There is no one here…etc. //. Writers here, for and against, express their own opinions, and, some based on data. By saying they don’t know as much as Maha Periyavaal, you want to gag them. Let them speak. If you want, you can quote from Maha Periyval and add your views also.

    You are on record here that you don’t know Sanskrit. However, you dare to write as follows:

    //Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely. Sanskrit therefore need not borrow words from other languages. Inserting other language words into Sanskrit will stick out like a sore thumb//

    Unless you know Sanskrit, not as an ordinary person, but as an erudite scholar, you cannot say Sanskrit did this and that. First learn it. Then research in it. Become a linguist scholar and then, put up your categorical statements.You will be convincing. If not, you will be tilting at the windmills and your comments on Sanskrit, are quixotic.

    //or the ignorant but also for parochial Tamils with their collective head stuck in mud.//

    Self-description as you yourself is not a scholar, and don’t possess knowledge of Sanskrit. In my opinion, if an arguer is not a scholar, he can rely upon scholars for arguments. Vyasan and others are doing that and so, we must respect them.

    I would have liked you to have relied upon any other scholar except Maha Periyavaal because he was duty bound to support Sanskrit and call it Deva Bhasha. Others would be more qualified to get quoted in our debate. To help you, I would suggest you go to Vyapuri Pillai. He was a great scholar in Sanskrit and held the same opinion as Maha Periyavaal, and for that, he was harshly criticised by the Tamil lobbyists, or to use your words, ignorant parochial Tamils with their heads in the mud 🙂

  293. பாலா

    நீங்கள் முன் கேட்டது. அரவிந்தன் சொல்லும் சமத்துவம் சமஸ்க்ருத்தால் சாத்தியமா என்று. அது ஒருக்காலும் நடக்காது, அது ஆகாயக் கோட்டை என்றெல்லாம் சொன்னீர்கள்.

    இந்த NDTV news bit பார்கவும் : https://www.youtube.com/watch?v=lHLIy-WHDew

    இது ஜிரி கிராமத்தை பற்றியது. இந்த கிராமத்தவர்கள் சொல்கிறார்கள் ஆம் சமத்துவம் சாத்தியம் என்று.

    இதை எதோ இப்பொழுதுதான் கண்டுபிடித்து உங்களுக்கு சொல்வதாக நினைக்கவேண்டாம். நீங்கள் எவ்வளவு தூரம் செல்கிறீர்கள் என்ன தான் செய்கிறீர்கள் என்று பார்க்க எண்ணி தான் பொறுத்திருந்தேன். நீங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம், இக்க்ராமத்தை நேரே சென்று பார்த்து உண்மைகளை அறிந்துகொள்ளலாம். இங்கு இன்னும் பஞ்சம் பட்டினி போகவில்லை ஆனால் இவ்வூர் மக்கள் தங்கள் தண்ணி பிரச்சனையும் விவசாய பிரச்சனையும் தீர கண்டுள்ளனர். எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  294. Responding to Sarangan’s latest:

    எனக்கு மனித வாழ்க்கையின் அடிப்படைகள் நன்கு புரியும். அதாவது மனிதர்களுக்கிடையே ஏற்ற தாழ்வுகள் பல இயற்கையாகவும், சில மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையாலும் வருவ்ன. இயற்கையால் உருவாக்கப்பட்டவைகளைத் தவிர்க்க முடியா. ஆனால், நாம் நினைத்தால், அவற்றால் வரும் வேண்டா விளைவுகளை பாதிக்கப்பட்டோருக்க வாராதபடி பார்த்துக்கொள்ள முடியும். உடற்குறையுள்ளோரை ம்னித நேயமில்லா அக்காலம் தள்ளி வைத்தது. இன்றைய உலகம் ஏற்று அவர்களையும் நன்கு வாழவைக்கிறது. எய்ட்ஸ் குழந்தைகளைப்பள்ளியில் இருந்து நீக்கினால் பள்ளிகளுக்குத் தண்டனை தரப்படும் என்பது இன்றைய அரசு செய்தி. இதே போல மனிதன் செய்த பிரிவினைச்செயல்களால் வரும் விளைவுகளால் பாதிக்கப்பட்டோரை அவ்விளைவுகள் இனிவாராதபடி காத்து அச்செய்லக்ளையும் அழிக்க முடியும். மனமிருதந்தால் மார்க்கமுண்டு.

    நான் எழுதிய்வற்றைக்கூர்ந்து படிக்குங்கால் புலனாவது: விளைவுகள் வாராவண்ணம் செய்தல் போன்றவையே.

    இராமானுஜர் சொன்னதில் விளைவுகள் இல்லை. ஒருவன் ஞான மார்க்கத்தில் ஒழுக, இன்னொருவன் பக்தி மார்க்கத்தில் ஒழுகுகிறான். இம்மார்க்கம் சிறந்ததா? அம்மார்கக்மா என்ற கேள்வியில்லை. எவருக்கு ஏம்மார்க்கம் உகந்ததோ, அதுவே அவருக்கு சரி என்று விடப்படுகிறது. ஆனால், இதுதான் உயர்ந்தது; அது தாழ்ந்தது என்று அங்கீகாரம் கொடுக்கும் போது, வேண்டா விளைவுகள் ஏற்பட்டு ஒருவர் பாதிக்கப்படுகிறார். இன்னொருவர் மகிழ்கிறார். ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கபபடுகின்றன. இராமானுஜர் சொன்னது, இருவரும் தத்தம் வழியில் ஒழுகும்போது விளைவுகள் இல்லை எனபதுதான். விளைவுகள் ஏற்படும் இடங்கள் வந்த போது அவர் நுழைந்து தீர்த்தார் எனப்து திருநாராயணபுரம் காட்டுகிறது. எனவே உங்கள் எடுத்துக்காட்டு இங்கு செல்லாது.

    நாம் பேசுவது சாதிகள் மட்டுமல்ல. இந்த சாதிக்காரனுக்கு இந்த ஒழுக்கம்; அந்த சாதிக்காரனுக்கு அந்த ஒழுக்கம். இன்னொரு சாதிக்காரனுக்கு ஏனில்லை என்ற கேள்விகளுக்கும் இங்கிடமில்லை. விளைவுகளே நாம் கதைப்பது. இவ்வொழுக்கங்கள் அவர்களூக்குள்ளேயே இருக்கும் போது சமூகத்தில் விளைவுகள் இல்லை. ஆனால், இவ்வொழுக்கங்கள ச‌மூகத்தில் முன் வைக்கப்பட்டு ஒருவர் ஒழுக்கம் உயர்ந்தது’ இன்னொருவரது தாழ்ந்தது என்று மக்களை நினைக்கவைத்தால் பாதிக்குள்ளாக்கப்படுவோர் மன்ம் நொந்துதான் போவர்.
    .
    பிராமணர்கள் ஆச்சாரம் கோயில் வரை பாய்ந்தபடியால், அக்கோயில்கள் பொதுவிடங்களாகப்போனதால், விளைவுகள் ஏற்பட்டன. தலித்துகளைக்கண்டாலே தீட்டு; அவர்கள் காலடிகள் பட்டால் கொயில்கள் புனிதத்தன்மை இழக்கின்றன என்று சொல்லப்பட்டு அவர்கள் கோயில்களில் நுழையவிடாமல் செய்யப்பட்டது. தீண்டாமை கொடூரமாக இருந்த காலத்தில் ஊருக்குள்ளேயே நுழைய மறுக்கப்பட்டார்கள் என்னும் கொடுமையை திருப்பாணராற்றாழ்வார், நம்பாடுவான் ஆழ்வார் திவ்ய சரிதங்கள் மூலம்றியலாம். திருக்கட்சி நம்பிகள் காலடி பட்டதால் வீட்டைக் கழுவி விட்டு குளித்துக்கொண்டிருந்த தம் மனைவியின் செயலைக்கண்டு கொதித்த இராமானுஜ்ர் அன்றே இல்லற வாழ்க்கையை நீத்து துறவியானார். சாரங்கன் சொன்னது போலத்தான், தஞ்சம்மாளும் வாதாடியிருப்பார். இல்லையா? தஞ்சம்மாள் செய்தது வியப்பொன்றுமில்லை. வியப்பென்னவென்றால், திருக்கச்சி நம்பிகளைவிட தங்கள் ஆச்சாரங்கள், கர்மங்கள் புனிதமானவை. அவை காக்கப்படவேண்டும். மாற நேரி நம்பிகளுக்கு ஈமக்கிரியை செய்தால் பெரிய நம்பி தன் பிராமணுத்த்வத்தை இழந்துவிட்டார் என்பது தெய்வத்தன்மையன்று; தெய்வநிந்தனையாகும். காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது என்று வட்கலை சொல்வது அப்படிப்பட்டதே. சாரங்கன் இதைத்தான் சொல்கிறார். எங்கள் ஆச்சாரம் எமக்கு. விட்டுக்கொடுக்கமாட்டோம்.

    சாதி அமைப்பால் வன்கொடுமைக்கு சமூகத்தில் ஆளாக்கப்பட்டோர்; ஊருக்கு வெளியே வைக்கப்பட்டதால், சமூகத்தில் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டதால், அவர்கள் முன்னேறவே முடியவில்லை. இன்று அதன் தாக்கமும் அவர்கள் சிந்தனையில் வேர் விட்டது. அதாவது அவர்களை அறிவில்லாதவர்கள் எனச் சொல்லவைக்கிறது. ஆக, மதத்தால் வந்த கொடுமை அவர்கள் பொதுவாழ்விலும் அனுபவிக்க வேண்டிய்தாயிருக்கிறது.

    அரவிந்தன் உரையாடிய தலித்து இளைஞர எங்களூரில் கோயில் சப்பரம் வரும்போது நாங்கள் அங்கே வரக்கூடாதென்பது ஊர்க்கட்டுப்பாடு என்றார். அதற்கு இவர் கொடுத்த பதில் அதை எதிர்த்து நீங்கள் போர்ராடுங்கள் எனபதுதான். எளியோர் எப்படி போராடமுடியும்? ஆதிக்கசக்திகள் ஆள்பவ்ர்களாக இருக்கும்போது எப்படி முடியும்? குடிசைகளையும் குழந்தைகளையும் இழக்கவேண்டுமே? இதை அரவிந்தன் சிந்திக்கவே இல்லை. அவர்களுக்காக மற்றவர்களும் சேர்ந்து போராடவேண்டும். உத்தபுரத்தில் இன்னும் சுவர் எழுப்பப்படுகிறது. மதுரை கிராமங்களில் இன்னும் செருப்பணிந்து போக முடியாது. போராடமுடியுமா? தலித்துகள் கூலி உயர்வு கேட்காமலிருந்தால் எரித்துக்கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். கேட்டபடியால், எங்களிடமா பேசவந்தாய் என 40க்கும் மேல் ஓரிடத்தில் வைத்து எரித்துக்கொல்லப்பட்டார்கள். (கீழவெண்மணி) எனவே போராடினால் உயிரை இழக்க வேண்டும்.

    சாரங்கன் சிந்திக்கவேண்டியது: இவற்றை இந்துமதத்துரோஹிகள் தங்கள் ஆதாயத்துக்குப் பயனப்டுத்துகிறார்கள் என்று மூடிமறைக்காமல், இவற்றை நீக்கத்தடைக்கறகள் எவை என்று ஆராய்ந்து அவற்றை நீக்கப்பாடுபடவேண்டும். அத்தடைக்கற்களில் ஒன்று ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஆதிக்கசக்திகள் கூடுமிடமாக்கி இந்துமதத்தின் பெயரைக் கெடுப்பதும் தலித்துகளின் மீதுபாயும் தீண்டாமையையும் செய்வதும் ஆகும்.

    சாதிகளின் அவசியம் என்று கட்டுரை வரைந்த மறைந்த மலர்மன்னனின் ஒரே சிந்தனை. சாதிகள் காலங்காலமாக வ்ருகின்றன. அவைகளினால் தீவிளைவுகள் வரவில்லை. அவரவர் சாதிகளில் இருந்து ஒருவருக்கொருவர் மதித்துவாழலாம் எனப்துதான். ஆனால், விளைவுகளால் பாதிப்புக்குள்ளாகினர் இன்றும் தொடர்கின்றனர் எனப்து வர்லாறு. History clearly shows, if there are castes, there will be higher castes and lower castes and the lowest will face unfair and unjust treatment of losing their rights and dignity. If they demand the right to dignity, they will be killed. When explained thus, Malarmannan did not like to change his position. பார்க்க மறுத்துவிட்டார். ஒருவேளை தலித்தாகப் பிறந்திருந்தால் அவர் எண்ணம் வேறாக் ஆகியிருக்கும். அல்லது தலித்துகளோடு ஐக்கிய வாழ்வு வாழ்ந்திருந்தால் புரிந்திருக்கும். பாரதியார் தமிழ்நாட்ட்டில் இருக்கும் வரை மலர்மன்னனைப்போலதான். புதுச்சேரி வாழ்க்கையே அவரை மாற்றியது. வரலாறு என்பது ஒரு ஆனை. நம் வீட்டில் நம் முன்னே உடகார்ந்திருக்கிறது. இல்லை என்று சொல்வது மனசாட்சியே தனக்கு இல்லையெனப்தாகும். இந்துமதம் இன்னும் சாதி அமைப்பபிடித்துவைத்துக்கொண்டிருக்ககூடாது. ஆனால் மதத்தலைவர்கள் வேண்டுமென்கிறார். ம்ஹாப்பெரியவாள் அவர்களில் ஒருவர்.

    மனு வேண்டாம் என்றால், அஃதில் ஒன்றே ஓன்றுதான் சாதியைப்பற்றி என்கிறார் Krishnakumar, இதையறியாதது மதிஹீனமென்கிறார். இந்த பருப்பு மற்றவர்களிடம் வேகும்; தலித்துகளிடம் வேகாது. இதைச்சொல்வது மதிஹீனமன்று. உண்மை விளம்பல். மனு நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கிறது என்றால், அக்கருத்துக்களை பிறநூல்களும் சொல்லியிருக்கும். தேடுங்க்ள். நீவிர் இந்து மதத்தில் உண்மையான தொண்டராயிருப்பின்.

  295. ராமா ராமா

    /// Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely. ///

    இந்தக் கூற்றுக்கு என்ன ஆதாரம்?

    உலகில் மொழி மட்டும் அல்ல, மனிதன், உயிரினம், பொருளாதாரச் சந்தை, அரசியல், விஞ்ஞானம் என்று எதுவுமே முழுமையானதாக அதாவது perfect ஆக இருக்க முடியாது, இல்லை என்பதை அனைவரும் ஏற்பர். Nothing can be perfect or pure. There will always be imperfection or impurity to some extent.

    மொழியியல் வேறு, ஆன்மிகம் வேறு. உணர்ச்சி/ ஆர்வம்/ பக்தி மிகுதியால் எதையும் சொல்வது சொல்ல வரும் கருத்துக்கே எதிராகத் திரும்பி விடும் என்பது வரலாறு.

    1920 களில் இப்படித்தான் தீவிர சைவரான மறை மலை அடிகளிடம் வாதம் செய்துகொண்டிருந்த ஒரு வைணவப் பெரியவர் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்ல, அவரும் ‘அப்படியானால் தமிழ்?’ என்று வினவ, ‘நீச்ச பாஷை’ என்று அந்த வைணவப் பெரியவர் பதிலிறுக்க, இன்று தமிழ் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பிற மதத்துத் தீவிரவாதிகள், மதமாற்றிகள் என்று போகிற வருகிறவர்கள் எல்லாம் எல்லாரையும், குறிப்பாக பிராமணர்களை, அதிலும் சங்கர மடத்தை அதற்காகப் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மறை மலை அடிகள் அந்த வைஷ்ணவரிடம் தேவ பாஷை என்பதற்கு ஆதாரம் கேட்க, அவரும் கம்ப ராமாயணத்தில் ஒரு செய்யுளைச் சொல்லி இருக்கிறார். பிடித்தது கேடு. அண்ணாத்துரை கம்பராமாயணத்தை கம்பரசம் என்ற பெயரில் ஒரு அபவாதக் குப்பையை எழுதித் தள்ள இப்போது கூட ஒரு கிறிஸ்தவ விஷமி இன்னொரு அபவாதக் குப்பையை எழுதி இருக்கிறான். அதே செய்யுளை இதே தளத்திலேயே சிலர் மறுமொழியில் எழுதியதும் நடந்தது.

    எனவே தேவை இல்லாமல் நீங்கள் மகாபெரியவரை இதற்குள் இழுக்கவேண்டாம் என்பது எனது தாழ்மையான விண்ணப்பம். ஏற்கனவே அவரைப் பற்றிப் பொய்யாகவே அவர்தான் இப்படி நீச்ச பாஷை என்று சொல்லி விட்டார் என்று ஒரு மதமாற்றிக் கும்பல் விஷத்தைப் பரப்புகிறது.

  296. தமிழ்தான் எனது தாய் மொழி, சமஸ்கிருதம் நல்ல ஆன்மீக இலக்கியங்கள் அடங்கிய மொழி. இரண்டும் நமது தாய் மதமான இந்து மதத்துக்கு அவசியம்.

    சமஸ்கிருத வாரம் இப்போதுதானா கொண்டாடப்படுகிறது? பல ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. சம்ஸ்கிருத பாரதி பல ஆண்டுகளாகச் சென்னை உள்படப் பல இடங்களில் வகுப்பு நடத்துகிறது. அதில் சில நூறு பேர் படிப்பது என்ன பெரிய விஷயம்? தேவையானால் ராய்ப்பூரிலும், பூரி, புவனேஶ்வரிலும், ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் தமிழ் வகுப்புக்களை தமிழ்நாடு அரசோ, தமிழ் விரும்பும் ஆர்வலர் கட்சிகளோ, குழுக்களோ நடத்தட்டுமே ?

    தமிழ் தொன்மையானதா, சமஸ்கிருதம் தொன்மையானதா? என்ற கேள்விக்கான விடை எளிதில் காண முடியாதது. மொழியியல் வல்லுனர்கள் காணவேண்டிய விடை அது.

    சுமேரு என்ற மொழியில் இருந்து தமிழும் சமஸ்கிருதமும் பிறந்ததாக ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளர் – லோக நாதன் என்ற 74 வயது மலேசியத் தமிழர் – பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காக அவர் பயன்படுத்தி இருக்கிறார். அவரைப் படிப்பது – இங்கு விவாதம் செய்யும் நேரத்தில் அவரைப் படிப்பது – மேலானது. அவரது கட்டுரைகளைப் படிக்க மிகவும் ஈடுபாடும் பொறுமையும் வேண்டும். இங்கே மாற்றி மாற்றி விவாதம் செய்ய அவை தேவை இல்லை.

    ஒரு மாதிரிக் கட்டுரை இதோ:

    https://www.heritagewiki.org/index.php?title=Sumerian:TAMIL_of_the_First_CaGkam

    “மெய்க்கண்டார்” என்ற பெயரில் ஒரு யாகூ குழுவும் அவர் நடத்துகிறார். அவர் தீவிரத் தமிழ்ச் சைவர் என்றாலும் பிற கருத்துக்களை மிகவும் மதிப்பவர். விவாதத்துக்குப் பின்னர் தம் கருத்துக்களில் மாற்றம் இருப்பின் அதை வெளிப்படுத்தத் தயங்காத பக்குவமும் பெருந்தன்மையும் உடையவர். அவரிடம் மாற்றுக் கருத்தை நான் வைத்து அவர் ஏற்ற நிகழ்வால் கொண்ட அனுபவத்தால் அவரது பெருந்தன்மையை இங்கே பதிகிறேன். மேற்கூறிய இந்தக் கட்டுரையின் முன்னுரையில் கூட அவர் சொல்வது : /// Please discard my comments between Aryan and Dravidian family of languages. Now I think there is no substance for this distinction ///

  297. திரு இராமா,

    ” Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely ‘-

    மேலே உள்ள தங்கள் வாக்கியத்தில்” a perfect language ” என இருக்கவேண்டும். தட்டச்சுப் பிழை என்று கருதுகிறேன். சிவபிரானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து வேதமாகிய சந்தசும், மறுபக்கத்திலிருந்து தமிழும் வெளிப்பட்டன. முற்காலத்தில் நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட தமிழ் லெக்சிகன்கள் இருந்தன. தமிழில் வழங்கப்பட்ட பழைய அகராதிகள் ஏராளம் திசைச் சொற்களை கொண்டு இருந்தன. அதாவது சமஸ்கிருதத்தில் எப்படி புதிய சொற்களை முடிவில்லாமல் உருவாக்க முடியுமோ , அதே போல தமிழிலும் உருவாக்கமுடியும்.

    2. எந்த மொழியும் பிற மொழிக்காரனுக்கு அடிமையாகும் போது, மற்றும் பிற மொழிகள் பேசும் மக்களுடன் வணிகத்தொடர்பு வளரும்போது, பிற மொழிச்சொற்கள் அந்த மொழியில் சேருவது இயல்பான ஒரு விஷயம் தான். பிற மொழிச் சொற்கள் சேர்வது எந்த மொழிக்கும் வலிமை சேர்க்கும்/ வளம் பேருக்கும். எனவே தான் உலகெங்கும் நாடு பிடித்த மன்னர்களும், ஆங்கிலேயப் பேரரசும் தங்கள் சாம்ராஜ்யம் மறைந்தாலும் தங்கள் மொழி மறையாமல் இருக்கும் பொருட்டு, தங்கள் அகராதிகளில் ஏராளம் பிறமொழி சொற்களை சேர்த்தனர். நம் தமிழ் மன்னர்களும், வடஇந்திய மன்னர்களும் தாங்கள் சென்ற நாடுகளில் தங்கள் மொழிக் கல்வெட்டுக்களை நிறுவினர். ஏனெனில் அந்த காலத்தில் காகிதம் கண்டுபிடிக்கப்படாத நாட்கள் ஆகும்.

    இன்றைய உலகில் எங்குமே ஆதிக்கம் இல்லாத , ஒரு பிச்சைக்கார நாடாக இங்கிலாந்து ஆகிவிட்டபோதிலும் , ஆங்கில மொழியின் ஆதிக்கம் குறையாமல் உள்ளதன் காரணம் , அவர்கள் தங்கள் ஜன்மப்பகைவர்களாகக் கருதி , விரோதம் பாராட்டி நூறு வருடப் போர் புரிந்த பிரஞ்சுக் காரர்களின் பிரஞ்சு மொழியில் இருந்து கூட ஏராளம் சொற்களை தங்கள் ஆக்ஸ்போர்ட் மற்றும் பிற ஆங்கில டிக்ஷனரிகளில் கணக்கு வழக்கு இல்லாமல் சேர்த்து விட்டனர். எதிர்காலத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரே நாடாகும் காலம் வந்துவிடும். அப்போதும் ஆங்கிலம் அழியாது.

    இணைப்பவன் வாழ்வான்- பிரிப்பவன் அழிவான். மொழிகளையும், மக்களையும் இணைக்க வேண்டும். பிரிக்கக் கூடாது. DIVIDE AND RULE- என்ற ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் மக்களைப் பிரித்து ஆண்ட அவர்கள் மக்களின் மத்தியில் செல்வாக்கை இழந்து, அரசியல் அதிகாரத்தை இழந்து, நாட்டை விட்டு ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல, ஏராளமான நாடுகளை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டனர். ஆனால் பிற மொழி சொற்களை ஏராளம் தங்கள் மொழியில் சேர்த்துக்கொண்டதால், அவர்கள் மொழி என்றுமே அழியாத ஒரு சூழலை அவர்கள் உருவாக்கி விட்டனர்.

    அதேபோல, இன்றைய உலகில் தமிழாயினும், சமஸ்கிருதம் ஆயினும் மேலும் நீடித்த ஆயுள் பெறவேண்டுமானால், பிறமொழி சொற்களை இணைத்துக்கொள்ள சிறிதும் தயங்கக் கூடாது. இணைப்பு மட்டுமே வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் உதவும். அது நாடானாலும் சரி, மொழி ஆனாலும் சரி, மக்கள் ஆனாலும் சரி. இந்தியா பல சிற்றரசர்களின் இடையே ஒற்றுமை இல்லாமல் பிரிந்து சண்டை இட்டதால், வெளிநாட்டு ஆபிரகாமியர் இங்கே புகுந்து கொள்ளை இட்டு சென்றதுடன், ஒரு காலக் கட்டத்தில் நாட்டையே அடிமை ஆக்கிக் கொண்டார்கள். தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது அல்ல. சமஸ்கிருதத்தைவிட முன்னர் பிறந்தது தமிழ் ஆகும். சிவபிரானின் உடுக்கையில் இருந்து பிறந்த செந்தமிழும், வேத மொழியாம் சந்தசும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.

    சமஸ்கிருதம் என்பது வேதமொழியாம் சந்தசின் பிற்கால வளர்ச்சி ஆகும். எனவே அது தமிழுக்கு மூத்ததாக ஆகவே முடியாது. வேதமொழி பல மொழிகளுக்கு தாய் என்பது ஒரு உண்மை தான். ஆனால் தமிழுக்கு மட்டும் வேதமொழி தாய் அல்ல. – vedha basha is the mother of all languages other than tamil- என்று கூறுவது தான் சரியாகும். வேதமொழி , தமிழ் இரண்டிலும் உயர்வு தாழ்வு கிடையாது. சமஸ்கிருதம் என்பது கிறித்து பிறப்பதற்கு 3000- ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்ட மொழி ஆகும். தமிழும்,வேதமொழியும் அதற்கு மிக மூத்தவை ஆகும்.

    ஞானியாம் திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதியை கேவலப் படுத்துவதுபோல இருக்கிறது உங்கள் கடிதத்தின் சில வாசகங்கள். மொழிகள் வாழவேண்டுமானால் இணைப்பு மட்டுமே உதவும். பிரிவினை அழிவுக்கே வழிவகுக்கும்.

    தமிழகத்தில் பிறமொழியில் உள்ள ஒலிகளை ஏற்காத சிலரால், கடந்த நூறு வருடங்களுக்குள் தமிழ் அழிவுப் பாதையில் சென்று வருகிறது. அந்த கும்பல் – தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொல்லி, தமிழா, தமிழ் படிக்காதே, தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய், தமிழா , ஆங்கிலம் படி, உன் வீட்டு வேலைக்காரியுடன் கூட ஆங்கிலத்திலேயே பேசு – வேலைக்காரிக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் அவளுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடு என்று சொல்லி, இன்று தமிழகப் பள்ளிகளில் தமிழே இல்லை எங்கு நோக்கினும் ஆங்கிலம் என்று தமிழகத்தை இன்னொரு இங்கிலாந்து ஆக்கி விட்டனர் . இந்த மோசடிக் கும்பலை நாட்டு மக்களே அடித்து விரட்டும் நாள் நிச்சயம் வரும்.

    திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி தமிழ் நாட்டில் இருந்த எவ்வளவோ ஆன்மீக வாதிகளில் ஒருவர். அவரை உயர்த்திப் பிடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர் அளவுக்கு மட்டுமல்ல அவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று சொல்வது தவறு. ஏனெனில் அவரே தன்னை விட திருவண்ணாமலை இரமண மகரிஷி உயர்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார். எனவே இங்கு ஒப்புநோக்கல், தேவை இல்லாதது. கருத்தை மட்டுமே சொல்வது நல்லது. மொழி என்பது ஒரு கருவி தான். ஊமைக்கு என்ன மொழி ? அவன் பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்கமாட்டாரா ? கடவுளுக்கு ஒரு மொழியும் கிடையாது. எல்லாமொழியும் இறைவனின் மொழிகளே ஆகும்.

  298. ////“ஸம்ஸ்க்ருதம்” என்றுதான் எழுத வேண்டும். கட்டுரை அருமை, க்ருதம் என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி என பொருள்////

    அடடா , முன்னாலேயே தெரியாமல் போச்சே ….

    அப்போ, தமிழை ‘சம்ஸ்க்ருதம்” அதாவது “செம்மொழி” என்று அறிவிக்கத்தான் கருணாநிதி அத்தனைப் பாடு பட்டாரா?

    அவர் கிட்டே உடனே இதைச் சொல்லணுமே !!!

  299. திரு மந்திரத்தில்,

    1) வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
    ஓதத்தகும் அறம் எல்லாம் உலா தர்க்க
    வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
    வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

    2) வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
    வேதம் உரைத்தானும் வேதம் விளங்கிட
    வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
    வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.- என்கிறார் திருமூலர்.

    3. நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு – என்கிறது தொல்காப்பிய சிறப்பு பாயிரம்.

    4. நா வல் அந்தணர் அருமறை பொருளே – என்கிறது பரிபாடல் கடவுள் வாழ்த்து.

    5. அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம்புரி கொள்கை அந்தணர் – என்கிறது ஐங்குறுநூறு

    6. அருமறை – என்கிறது சிறுபாணாற்றுப்படை மூன்றாவது பாடல்.

    7. அருமறை- என்கிறது திரிகடுகம் 55- ஆம் பாடல்.

    8. அருமறை – என்கிறது சிலப்பதிகார மதுரைக் காண்டம்.

    9. அருமறை – என்கிறது மணிமேகலை பாத்திரம் பெற்ற காதையும், ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையும்.

    10. நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப- என்கிறது தொல்காப்பிய பொருளதிகார செய்யுள்.

    11. வேத முதல்வன் – என்கிறது நற்றிணை கடவுள் வாழ்த்து.

    12. பார்ப்பார் ஓதுக- என்கிறது ஐங்குறு நூறு

    13. வேதவேள்வித் தொழில் முடித்ததூ உம்- என்கிறது புறநானூறு 224- ஆம் பாடல்.

    14-ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியே- என்கிறது திருமந்திரம் 55- ஆம் பாடல்.

    15. வேதத்தில் உள்ளது நீறு- என்கிறார் தேவாரம் பாடிய ஞானசம்பந்தப் பெருமான்.

    16. நாவுக்கரசரோ ” சொற்றுணை வேதியன்’- என்கிறார்

    17. வேதம் அங்கமும் ஆறினர்- ஆறு இடு சடையர் – என்று சிவபிரானை பாடுகிறார் நாவுக்கரசர்.

    18. அதைவிட மிக முக்கியம் திருச்சிவபுரம் திருப்பதிகத்தில்

    “வடமொழியும், தென் தமிழும், மறைகள் நான்கும், ஆனவன் காண் –

    என்கிறார் திருநாவுக்கரசர்.

    19. தமிழ் சைவ வேதமாம் திருவாசகம் , சிவபுராணத்தை துவங்கும் போதே ,
    ” நமச்சிவாய வாழ்க” என்று கிருட்டிண யஜுர் வேதத்தின் நடுநாயகமான
    உருத்திரத்தின் நமச்சிவாய மந்திரத்துடனே ஆரம்பிக்கிறது.

    20.நம்மாழ்வாரின் திருவாய்மொழி சிறப்பை திராவிட உபநிஷத் சங்கதி, திராவிட உபநிஷத் தாத்பர்யம் என்று இரண்டு சமஸ்கிருத நூல்கள் பாராட்டியுள்ளன.

    வடமொழியும், தென்தமிழும் ஆனவன் சிவபிரான் என்கிறது நாவுக்கரசரின் தேவாரம். எனவே செந்தமிழும், வேதமொழியாம் சந்தசும் இறைவனின் அம்சமே ஆகும். அப்படி இருக்க காலத்தால் பிற்பட்ட சமஸ்கிருதத்தை தமிழுக்கு முந்தியது என்று சொல்வது ஒரு அறிவீனமே. அது யார் சொல்லினாலும் சரி. தமிழும், வடமொழியும் இறையனாரின் இரு கண்கள். இதில் உயர்வு தாழ்வு, மற்றும் காலத்தால் அது முந்தியது, இது முந்தியது என்று வாதம் செய்தல் தேவை இல்லாததும், முற்றிலும் பொருளற்றதும் ஆகும். தமிழ் நூல்கள் வேத மொழியாம் சந்தசை ஏற்றிப் புகழ்கின்றன. தமிழும், வடமொழியும் சிவனாரின் உடுக்கை வழிப் பிறந்த இரட்டை சகோதரிகளே. எனவே சந்தசுடன், சமஸ்கிருதத்தைப் போட்டு குழப்புவோருக்கு என்றுமே குழப்பம் தீராது. சந்தஸ் பல மொழிகளின் தாய். ஆனால் தமிழுக்கு உடன் பிறந்த சகோதரியே ஆகும். தமிழுக்கும் , சந்தசுக்கும் சிவனே தாயும் தந்தையும் ஆனான் என்பதை உணர்க.

  300. Is sanskrit mother of arabic/latin/english/Tamil? Please Come out of syndrome of language superirity.

    As per legend tamil and sanskrit were born from left and right sounds from the drum of Lord siva. Hence both are born together simultaneously.

  301. //எனக்கு transliteration software ஒழுங்காக பயன்படுத்த தெரியாது. இதெற்கெல்லாம் காரணிகளை ஏன் ஆரோபித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி விட்டு மறுபடியும் அது பிழை இல்லாமல் இருக்கா என்று பார்த்து பார்த்து செய்ய கொஞ்சம் அவகாசம் தேவை. காலப்போக்கில் இது சரியாகலாம்.

    எனக்கு ஒழுங்காக பேச வரும். உபதேச மணி மாலையை சுருட்டி உங்கள் வீட்டு லாக்கரில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு தான் பாசுரம் படித்தாலும், நீங்கள் புரட்டு புழுதியில் உழல்வதை விடவில்லையே. இதெல்லாம் ஜன்மாந்தர வாசனை என்பர்.

    நீங்கள் இங்கு வைணவத்தை பற்றி எழுதிவிட்டதால் உபதேச சஹஸ்ரீ செய்யமலவுக்கு உயர்ந்து விட்டதாக positioning வேறு செய்து கொண்டுள்ளீர்கள்//

    வைணவத்தைப்பற்றித் தெரியும் முன்பே எனக்குத் தமிழ் எழுதத் தெரியும். வைண‌வம் வாலிபத்தில் வந்தது; தமிழ் குழந்தைப்பருவத்தில் வந்தது. வைணவத்தால் என் தமிழ் மிளிர்ந்ததே தவிர என் தமிழையே அதுதான் உருவாக்கியது எனபது கிடையாது.

    உங்கள் எழுத்துக்களில் உள்ள பிழை வகைகள் இரண்டு:

    ஒன்று; அறியாமல் போடுவது. ஒரு எ.கா: இதற்க்கு என்ற சொல்லில் உள்ள சந்திப்பிழை. இஃதொன்றும் பெரிய பிழை கிடையாது. ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு வந்த போது சொன்னாள்: தமிழில் நான் 90 மதிப்பெண்கள். நன்று பாராட்டுக்கள் என்றேன். இரவு அவள் பெற்றோருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள். அன்புள்ள அப்பாவிற்க்கு என்று தொடங்கியிருந்தாள். இப்பிழை இணைய முழுவதுமே எல்லாரும் போடுகிறார்கள். எனவே இதைப்பெரிதாக்கிக் காட்டவிரும்ப‌வில்லை. காரணம் நம் தமிழாசிரியர்களே நம்மைக்கோட்டை விட்டுவிட்டார்கள். வல்லெழுத்து மிகுமிடங்கள்; மிகா இடங்கள் தெரியாமல் பள்ளியிலிந்து வெளியேறியதற்கு அவர்களே காரணம். நீங்களல்ல. இப்படி அறியாமல் போடும் பிழைகள்.

    2. அறிந்தே போடும் பிழைகள் உங்கள் எழுத்துக்களில் நிறைய; அதன் காரணம் அப்பிழைகளைப் போடுவது எவரைத்தாக்க விரும்புகிறீர்களோ, அவர் மனத்தைக் காயப்படுத்தும் என்று தப்புக்கணக்கு போடுவதாக எனக்குப்படுகிறது. தமிழை வைத்தா அதைச் செய்ய வேண்டும் ? கிருஷ்ணகுமாரைப்போல நேரடியாகவே சொல்லிவிடலாமே?

    இவ்விரு வகைப்பிழைகளைதயும் தவிர்க்கலாமே என்றால் கூகுள் ட்ரான்ச்லிட்டரேஷன் என்று ஏதோ சொல்லி சமாளிக்கிறீர்கள். இது தனிமனித தாக்குதலன்று; ஒரு விண்ணப்பமே. பல்லுடைக்கும் பண்டிதர் தமிழ் வேண்டாம். நல்ல தமிழே போதும். சித்திரமும் கைப்பழக்கம்; இஃதை ஒரு உபதேசமாக எடுத்தால் அஃது உங்கள் தவறேயோழிய என் தவறு கிடையாது. இங்கு ஒருவர் மணிப்பிரவாளம் எழுதுகிறார். அவர் பரவாயில்லை. எவ்வளவு முயன்றாலும் தனக்குத் தமிழ் வராதென்று கை விரித்துவிட்டார். திருப்புகழே மணிப்பிரவாளம்தான். அதை நான் காதலிக்கிறேன் என்கிறார். ஆனால் நீங்களே பிரபந்தம் ஓதுவீர்கள்; தமிழ்த்தலைவனையும் பெருந்தமிழனையும் அன்றாடம் படிப்பவர் கண்டிப்பாகத் தமிழை மதிக்க வேண்டும். (தமிழ்த்தலைவன் = பேயாழ்வார்; பெருந்தமிழன் = பூதத்தாழ்வார்)

    நல்ல தமிழ் ஒரு நல்ல பழக்கம்.

    தமிழரின் தாய்மதம் என்கிறார்கள். அத்தாய்மதமே அவர்தம் தாயமொழியிலிருந்தே தொட்ங்கியது. இந்துமதத்துக்கும் தமிழுக்கும்தான் நெருங்கிய தொடர்பு. இசுலாத்துக்கும் கிருத்துவத்துமல்ல. அதை தமிழ் இந்துக்களாகிய உங்களைப்போன்றோர் உணர்ந்தால் நன்று.

    மலையாளிகள் திருவாசகத்தைப்படிக்க தம் இறுதிக்காலத்திலாவது முடியுமாவென விழுந்துவிழுந்து படிக்கிறார்கள். காரணம் அவர்கள் மொழியில் சைவ இலக்கியம் இல்லை. தமிழ் மொழியிலேயேதான் உலகில் சிறந்த சமய இலக்கியமுண்டு. Although I knew that, it came as a pleasant surprise to me when I read Prof R.K.Dasgupta referring to Tamil devotional literature of Alvaars and Nayanmaars. His essay appeared in the now defunct magazine LINK .

  302. //நீங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம், இக்க்ராமத்தை நேரே சென்று பார்த்து உண்மைகளை அறிந்துகொள்ளலாம். இங்கு இன்னும் பஞ்சம் பட்டினி போகவில்லை ஆனால் இவ்வூர் மக்கள் தங்கள் தண்ணி பிரச்சனையும் விவசாய பிரச்சனையும் தீர கண்டுள்ளனர். எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.//

    சாரங்கன்!

    நான் ஏற்கனவே முdiத்துவிட்டேன்: We agree to disagree. தி ஹிந்து கட்டுரையை மொழிபெயர்த்துப்போட்டது ஒரு பொதுப்பார்வைக்குத்தான்.

  303. எதற்காக படிக்க வந்தார்கள் என்றால பல விடைகள் கொடுக்கலாம். ஒன்றைக்கூட கொடுக்காமல் எதையெதையோ எழுதுகிறீர்கள் சாரங்கன்.

    சமஸ்கிருதம் பொது தமிழர்கள் படிக்கக் காரணங்களே இல்லை என்பதுதான் என் கருத்து. எனவேதான் 325 பேரும் (அவர்கள் பொதுமக்களென்றால்) ஏன் வந்தார்கள் என்பது வியப்பே. கண்டுபிடியுங்கள்.

  304. உயர்திரு பிரதாப்,

    //சந்தசுக்கும் சிவனே தாயும் தந்தையும் ஆனான் என்பதை உணர்க.//

    நன்கு உரைத்தீர்கள், உணர்த்தினீர்கள்.

    வணக்கம், நன்றி.

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! நமச்சிவாய!

  305. ஹிந்துக்கள் தமது சமயக்கொட்படுகளை நன்கு அறிய வடமொழி அறிவு இன்றியமையாதது . வடமொழி அறிவு இல்லாததால் தான் மேலைநாட்டு மொழி(ஏ) மாற்று பேர்வழிகளால் இங்குள்ளவர்கள் மனங்கள் நஞ்சூட்டப்படுகின்றன. குரு மரபு வழி சமயம் பயிலாதவர்களால் எப்படி சமய நூல்களை மொழி மாற்றம் செய்ய முடியும் ? அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சிக்குபிறகு தமிழ் நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை. இதில் ஒரு வாரம் வடமொழி வாரமாக கொண்டாடுவதில் என்ன கேடு இருக்க முடியும். தமிழ் நாட்டில்/ தங்கள் குடும்பங்களில் தமிழ் வளர்க்க முடியாதவர்கள் வடமொழியை பற்றி கவலை ஏன் ? ஒரு வருடத்தில் 51 வாரங்களில் தமிழர்களால் அழியாத தமிழா ஒரு வாரத்தில் ஒரு சிலரால் அழிந்து விடும். பகுத்தறிவை விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் தான் தாய் மொழி , தந்தை மொழி , அத்தை மொழி , மாமன் மொழி என்று பேசிக்கொண்டிருப்பார்கள். மொழி வகுப்புவாத அரசியலுக்கு ஒரு கருவியாக ஐரோப் பியரை பின்பற்றி இங்கு ஆக்கப்பட்டதன் விளைவே இது. தாய்மொழி/வீட்டு மொழி தான் குழந்தைக்கு ஏற்ற பாடமொழி என்று வைத்துக்கொண்டால் பாரதத்தில் எண்ணற்ற மொழிகளில் கல்வி தரவேண்டியிருக்கும், இங்கு பெரும்பான்மை பிராந்திய மொழி ஆதிக்கமும் ஒரு fascism தான். பெரும்பாண்மை விருப்பப்படி சிறுபான்மைகள் வாழவேண்டும் என்ற fascism தான் பாரத விடுதலைக்குப்பிறகு பல மொழிகள் அழிவதற்கு காரணம். இங்கு இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஹிந்து மதத்தை விமர்சிப்பது வேடிக்கை. இவர்கள் தங்கள் ஆதார நூல்களில் உள்ளவற்றின் தவறுகளை என்றாவது ஏற்றதுண்டா/ விவாதிப்பதுண்டா ? சமத்துவ சமூகமாக அரேபியா இருக்கிறதா ? இல்லை மறுமலர்ச்சிக்கு முந்தய ஐரோப்பா இருந்ததா ?

  306. @பிரதாப்
    Thank you Sir,it was a typo. Intended statement is ” Only Sanskrit is the perfect language”
    “சிவபிரானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து வேதமாகிய சந்தசும், மறுபக்கத்திலிருந்து தமிழும் வெளிப்பட்டன
    செந்தமிழும், வேதமொழியாம் சந்தசும் இறைவனின் அம்சமே ஆகும்”
    You need to verify it with HISTORICAL, VERIFIABLE sources. Example: Give me a Tamil classical literature which is AT LEAST as old as Bhagavt Gita.
    “திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி தமிழ் நாட்டில் இருந்த எவ்வளவோ ஆன்மீக வாதிகளில் ஒருவர். அவரை உயர்த்திப் பிடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர் அளவுக்கு மட்டுமல்ல அவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று சொல்வது தவறு”
    I never said this. There is no one IN THIS forum more qualified than HH.
    “பிற மொழிச் சொற்கள் சேர்வது எந்த மொழிக்கும் வலிமை சேர்க்கும்/ வளம் பேருக்கும். ”
    Absolutely not in the case of Sanskrit, as it is a PERFECT language and it need not borrow words from other languages.
    Sorry Sir, I am not a paranoid, one eyed parochial Tamilian. Tamil is my mother tongue. I was listening to Bharathiar songs this morning. Earlier, I was listening to Dhivya Prabhandam. Tears were rolling from my eyes.

  307. Shri “அடியவன்
    “Nothing can be perfect or pure. There will always be imperfection or impurity to some extent”
    Response: I respect your opinion Sir but I disagree. As the story goes,Sanskrit was given to Panini by Lord Shiva himself. Now, do not ask me for proof on this! Just kidding Sir) NASA apparently found Sanskrit to be the perfect language for computer. I have given this link earlier https://www.hitxp.com/articles/sanskrit-lessons/dhatu-root-verbs-samskrit-grammar-dictionary/
    Sir, I have given below another link. You can disagree with the author but you must admit that he is talking sense.Finally I am not” dragging” HH Maha Periyaval here.I am insignificant in the scheme of things and who am I to drag HH? I am merely quoting his words and it is all there in the public domain.
    https://tamilfromsanskrit.blogspot.com.au/2013/01/there-have-been-many-blogs-and-debates.html

  308. பால சுந்தர கிருஷ்ணா

    தமிழ் குறித்த உங்கள் பார்வையில் எனக்கும் உடன்பாடே.

    //ஒருவர் மணிப்பிரவாளம் எழுதுகிறார். அவர் பரவாயில்லை. எவ்வளவு முயன்றாலும் தனக்குத் தமிழ் வராதென்று கை விரித்துவிட்டார். ////

    இங்கே உங்களுக்குச் சில தகவல்கள் தேவை. கிருஷ்ணகுமார் முதலில் இருந்தே மணிப்பிரவாக நடையில் எழுதுபவர் அல்லர்!

    எப்படி இடைக்காலத்தில் தமிழுக்குள் சமஸ்கிருதம் புகுந்து மணிப்பிரவாக நடை உருவானதோ அது போலவே, ஆரம்பத்தில் நல்ல தமிழில் எழுதிக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் இடையில் மணிப்பிரவாக நடையில் எழுத ஆரம்பித்து எழுதி வருகிறார். அவருக்குத் தனித் தமிழில் எழுதவராது என்பது சரியல்ல. அவரும் அப்படி எங்கும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

    பிற வலைத் தளங்களில் நல்ல அழகிய தமிழில் கிருஷ்ணகுமார் எழுதியவற்றை நான் படித்திருக்கிறேன்.

  309. பாலா

    அது மாத்தூரும் இல்லை. மத்தூர். எமாத்தூர் என்பதற்காக மாத்தூர் என்று எழுதுகிறீர்களா. வேண்டுமென்றே தானே தாக்குகிறீர்கள். இது போல தான் இருக்கு நீங்கள் என்னை சாடுவது. வியாசனுக்கு கொள்ளலாம் என்பதற்கு பதில் கொல்லலாம் என்று ஒரு முறை மட்டுமே வேண்டுமென்றே மாற்றி எழுதினேன். மற்றவை எல்லாம் நான் அவசரம் அவசரமாக அடிப்பதால் வரும் பிழைகள்.
    அதற்காக நான் பிழையுடன் தான் எழுதுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கவில்லை, நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன், பிழைகளை திருத்திக் கொள்வது நல்லதே. ஆனால் அதற்க்கு நீங்கள் முன் வைக்கும் காரணம் குழந்தை தனமாக உள்ளது.

    you can agree to disagree this also. நீங்கள் தான் மனோவியலில் நிபுணர் ஆயிற்றே.

    ஏன் படிக்க வருகிறார்கள் என்பதற்கு காரணம் உங்களக்கு தான் ஆச்சர்யமாக இருக்கும். ஏன் என்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை root cause என்ற ஆராச்சியில் புகுகிரீர்கள். எனக்கு தமிழன் சமஸ்க்ருதம் படிப்பது ஆஸ்சர்யம் இல்லை. அது சஹஜமான விஷயம். இனிமேல் வேண்டுமானால் corporates பாணியில் ஒரு சர்வே செய்துவிடுகிறேன்.

  310. @BALA SUNDARAM KRISHNA
    I tried not to respond to your comments Sir, as most of them are pompous, patronizing and to boot, unsolicited. Shri Sarang had taken you apart and your response so far at the best has been waffling.
    ” Otherwise, it is all secular. Aren’t you contradicting them ?.”
    Secular is a Western construct and I do not subscribe to it.
    “Unless you know Sanskrit, not as an ordinary person, but as an erudite scholar, you cannot say Sanskrit did this and that. First learn it. Then research in it. Become a linguist scholar and then, put up your categorical statements.You will be convincing.”
    Ironic, this is from someone who has zilt, zero, zip knowledge of Sanskrit and as usual offering unsolicited advise. Thanks, but no thanks. You are the last person I need to take advise.
    At least I have been learning Sanskrit for the last 3 months or so. My father was a Sanskrit scholar and ran a free Sanskrit school in his time. My father in law is a Sanskrit scholar( irrelevant here but his father was the first person who translated Valmiki Ramayana in Malayalam) and I have had exposure to Sanskrit a fair bit . The more I read about Sanskrit, the more I marvel at it’s richness and beauty. This is my heritage Sir.
    “I would have liked you to have relied upon any other scholar except Maha Periyavaal because he was duty bound to support Sanskrit and call it Deva Bhasha.”
    Another pompous waffle and arrogant assumption.

  311. பாலா

    //
    தி ஹிந்து கட்டுரையை மொழிபெயர்த்துப்போட்டது ஒரு பொதுப்பார்வைக்குத்தான்
    //

    அது ஒரு பெட்டி, கட்டுரை கூட அல்ல. பேட்டி கொடுப்பவர் யார், அவர் எத்தை வைத்து சொல்கிறார் என்பதெல்லாம் சரி பார்க்க வேண்டுமே.

    நான் உங்களுக்கு செய்திகளை தந்துள்ளேன், செய்தியை நம்பமாட்டேன் பேட்டியை நம்புவேன் என்றால்.

    எனது குரு ஒரு மா பெரும் சமஸ்க்ருத வியாகரண பண்டிதர், மீமாம்சை, அத்வைதம், தர்க்கம், ஸ்ரீ வித்யா இத்யாதிகள் அவரது நாவில் நிரந்தராமாக இருக்கும்.

    அவரிடம் போய் பேட்டி எடுத்தால் அவர் என்ன சொல்வார், சமஸ்க்ருதம் தெரிந்தவர்கள் தமிழ்க் நாட்டில் ஒரு இருவது பேர், ஆந்திராவில் ஒரு முப்பது பேர், காசியில் ஒரு நூறு பேர், இப்படி ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என்பார்.

    அவரது தளம் மொழி பயிற்சியோ, மொழி சேவையோ அல்ல, அவரது தளம் வேதாந்தம், அதனால் அவருக்கு புள்ளி விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    இதை எல்லாம் விடுங்கள் இந்த செய்தி வந்தது என்ற ஒரு காரணத்திற்காகவே கைவிடப்பட வேண்டும்.

  312. பிரதாப் அவர்களே

    நீங்கள் அளித்த தகவல்கள் அருமை

    //
    வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
    ஓதத்தகும் அறம் எல்லாம் உலா தர்க்க
    வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
    வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
    //

    இதுக்கு தான் வியாசன் அவர்கள் என்ன சொல்கிறார் என்றால், வேதம் என்பது தமிழில் இருந்தது அதை ஆரியர்யர் கீ மு 350 வாக்கில் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்து விட்டார்கள் என்கிறார். அவரிடம் எப்படி வாதிடுவது என்று எனக்கு தெரியவில்லை.

    கால ஆராய்ச்சி செய்யலாம் வாருங்கள் என்று சில கேள்விகளை கேட்டிருந்தேன், உடனே அவர் ஹரப்பா பண்பாடு தமிழர் பண்பாடு அதுதான் தொன்மையான பண்பாடு என்றார். அவருக்கு இந்திய பண்பாட்டின் ஆரம்பம் சரஸ்வதியில் இருந்து என்று இன்னும் விளங்கவில்லை. என்னுடன் பேசி பிரயோஜனம் இல்லை என்று சென்று விட்டார்.

  313. அடியவன்!

    தமிழ் தொன்மையானதா வடமொழி தொன்மையானதா என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.
    வடமொழியும் தமிழும் இந்துமதத்துக்குத் தேவை என்பது நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. சிவபெருமானின் உடுக்கையில் இருமொழிகளும் வந்தன என்றும் உங்களிடம் விளக்கம் எவரும் கேட்டவில்லை.

    கேட்கப்பட்டது: ஏன் வடமொழிக்கு மட்டுமே வாரம் ?

    அதற்கு அடியவனின் பதில்: அஃது ஏற்கனவே கொண்டாடப்பட்டுதான் வருகிறது. இருக்கலாம். ஆனால் அது பிறரால் கொண்டாடப்படுகிறது. இப்போது மத்திய அரசே கொண்டாடுகிறது. அதனால்தான் பிர்ச்சினை. வடமொழிக்கு ஆதரவு தரக்கூடாதென்று எவரும் சொல்லவில்லை. மத்திய அரசு அனைத்து இந்தியருக்கும் பொதுவானது. ஏன் அது பிறமொழிகளை உதாசீனம் செய்து வடமொழியை மட்டுமே ஆதரிக்கிறது? என்று கேட்டால், தமிழ் எனது தாய்மொழி என்று சொல்லிக்கொண்டே அடியவன் “தமிழ் வாரத்தை புவனேஷ்வரில் தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடுங்க்ளேன் “? இந்த நையாண்டியா நீங்கள் தாய்மொழிக்குச் செய்யும் மரியாதை ? தமிழ்நாட்டில் ஏன் கொண்டாடக்கூடாது மத்திய அரசு? தமிழருகளுக்கு மத்திய அரசு இல்லையா? ஹிந்திக்காரர்களுக்கும் வடமொழிக்காரகளுக்கும்தானா?

    தமிழ்நாடு அரசு தமிழைப்பரப்ப நீங்கள் சொல்லவேண்டியதில்லை. தமிழ் ஆர்வலருக்கும் நீங்கள் சொல்லவேண்டியதில்லை. இங்கே. நீங்கள் சொல்லவேண்டியது எல்லாம், ஏன் மத்திய அரசு வடமொழியை மட்டும் ஆதரித்து தமிழைப்புறக்கணிக்கிறது என்ற கேள்விக்குப்பதிலே.

    (கட்டுரையாளரும் மற்றவர்களும் தமிழ் வாரம் ஏன் மோதி அரசு கொண்டாடவில்லை என்பதற்கு அதை மாநில அரசு செய்தாலென்ன? தமிழ் ஆர்வலர்கள் செய்தாலென்ன? மேலும் , இக்கேள்வியை எழுப்புவர்களை ‘தமிழ்ப்புரட்சிப்புலிகள்’ குஞ்சுகள் என்றும் கிண்டலடிக்கிறார்கள். உங்கள் தாய்மொழி தமிழ்தானே? அது மட்டுமே: சிவபெருமானிடமிருந்து வந்த மொழி. இல்லையா? பிற்ருக்கு மட்டும்தான் அக்கறையா தமிழில் மேல்? உங்களுக்கு இருக்கக்கூடாதா? நீங்களேன் மத்திய அரசைத் தமிழுக்கும் சேர்த்து ஒரு வாரம் கொண்டாட சுற்றறிக்கை அனுப்பியிருக்கலாமே என்று கூட சொல்ல முடியவில்லையென்றால் எப்படி தமிழ் உங்க்ள் தாய்மொழியாகும்?)

  314. @ பா சு……….. ஸ்தோத்திரம்.

    \\\ சமஸ்கிருதம் பொது தமிழர்கள் படிக்கக் காரணங்களே இல்லை என்பதுதான் என் கருத்து. எனவேதான் 325 பேரும் (அவர்கள் பொதுமக்களென்றால்) ஏன் வந்தார்கள் என்பது வியப்பே. கண்டுபிடியுங்கள். \\\\

    தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் படிப்பதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது என்பது தான் விஷயம்.

    படிக்க வருபவர்களிடம் நீ எதற்காகப் படிக்க வருகிறாய் என்று கேழ்க்கச் சொல்கிறீர்கள்?

    ம்……………….. எல்லாம் ஜோ அவதாரத்தில் சில் சாமிடம் பண்ணிய வாக்கு தத்தம் அப்படிப் பரிமிளிக்கிறது.

    ஷலோம்

  315. பாலா

    //
    காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது என்று வட்கலை சொல்வது அப்படிப்பட்டதே. சாரங்கன் இதைத்தான் சொல்கிறார். எங்கள் ஆச்சாரம் எமக்கு. விட்டுக்கொடுக்கமாட்டோம்.
    //
    நீங்கள் நிறைய ஊகிக்கிரீர். நான் வடகலையாக தான் இருக்க வேண்டும் என்று. நான் உண்மையில் எச்சைகளை போங்கள். சாரங்கபாணி கோவில் வடகலை கோவில் என்பதால் தானே இந்த தெளிவு உங்களுக்கு 🙂 சுப்பர் சார்.
    you are reading too much in to the lines.

    ராமானுஜர் சொன்னதில் எங்கே இரண்டு மார்கத்தை கண்டீர், முதலியாண்டான் கேட்ட கேள்வியே இருவருக்கும் பக்தியில் என்ன வேறுபாடு இருக்கிறது என்பது தான். ராமானுஜர் சொன்ன பதிலும் இருவருக்கும் பக்தியில் என்ன வேறுபாடு என்பது தான். உங்கள் ஸ்ரீ வைஷ்ணவ course plan மத்தியில் பிரபன்னாம்ருதம் இல்லையா.

    அக்காலத்தில் பக்தியில் கூட ஜாதி வித்யாசம் பார்த்தல் இருந்தது. கோவில் பக்தர்களுக்கு பக்தி செய்யும் இடமா கர்ம செய்யும் இடமா. பக்தி செய்யவும் ரஹஸ்ய ர்த்தங்கள் தெரியவேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன், ஒரு நிமிட மனக்குவியல் பாக்தியாகத்து என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பக்தி என்றால் என்ன என்பதற்கு சமஸ்க்ருதத்தில் விவரணம் இருக்கிறது.

    இன்று இந்தியாவில் பெரிய நகரங்களில் டவுன்களில் ஜாதி பேதம் தலை விரித்து ஆடுகிறது என்று எங்கே கூறுவீர்கள். ஜாதி இருக்கிறது ஆனால் பேதம் பார்ப்பதில்லை ஒரு apartment இருந்தால் அங்கே ஒவ்வோவருவரும் அவர்கள் சம்ப்ராதயத்திற்கு ஏற்றவாறு நடப்பார்கள். பேதமில்லாமல் பழகுவார்கள். எவ்வளவு பஜனை கோஷ்டிகள் ஜாதி பேதம் இல்லாமல் வாரம் ஒவ்வொரு வீட்டில் நடக்கின்றன.

    நீங்கள் பேசுவது ஜாதி இருந்தால் வெட்டிகிட்டு சாவார்கள், குறைகள் இருக்கும், ஏற்றத்தாழ்வு இருக்கும். பிரச்சனையை ஜாதியில் இல்லை மனதில் தான் இருக்கு,. ஜாதியை ஒழித்தால் மனம் வேறொரு ஏற்றத்தாழ்வை உருவாக்கிக்கொள்ளும். ஜாதிகள் இருந்தாலும் மனத்தால் ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொள்ள முடியும். இது சாத்தியப்பட்டிருக்கிறது. ராமானுஜர் ஜாதியை ஒழிக்கவில்லை, பேத மனப்பான்மையை ஒழித்தார். கம்மா ஜாதியை ஒழிக்க நீங்களா நானோ யார்.

    நீங்கள் சொல்வது ஜாதி ஒழிக. நான் சொல்வது பேதம் ஒழிக. the former is not in your control, the later is possible and practical also.

    இந்தியாவில் ஜாதிகளால் என்ன லாபம் என்று உங்களால் அறிந்து கொள்ள முடியாது. ஜாதியை ஒரு பெரிய குடும்பமாக பாருங்கள். திருப்பூர் பனியன் கம்பெனி வைத்துள்ளவர்களுக்கு எப்படி முதலீட்டிற்கு பணம் கிடைக்கிறது. அரசாங்கம் தருகிறது அல்லது anjel investors உள்ளனரா. எப்படி இஸ்லாமிய சமயத்தினர் மட்டும் தையல் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்கள். எப்படி ராம் கடிய சமூஹத்தினர் spares industry என்பதில் முதலிடத்தில் உள்ளார்கள். எப்படி நாமகள்ளை சேர்ந்தவர்கள் oli tanker business மொத்தத்தையும் ஆள்கிறார்கள். hero bikes என்பது முன்ஜால்களின் சொத்து. எப்படி ஷில்பா சாஸ்திரத்தில் ஒரு சிலரால் மிளிர முடிகிறது.

    ஆதாலால் நான் சொல்ல வருவது என்னவென்றால் சாதி வேண்டும் வேண்டும் வேண்டும் என்றில்லை.

    நான் சொல்வது ஜாதிய அமைப்பு வேண்டும் அதன் மூலமே நிர்வாகனம் செய்யப்படவேண்டும் என்பதும் அல்ல. இதை ஒரு அகண்ட குடும்பமாக பார்த்தால் அதில் நன்மைகளும் இருக்கின்றன. இந்தியாவில் பல தொழில் முனைவோர் இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பு இருப்பதால் தான் முன்னுக்கே வந்துள்ளனர்.

    இதை சட்டு புட்டுன்னு மாத்திட முடியாது. எனவே சாதிகள் ஒழிக என்பதை விட பேதங்கள் நீங்குக என்பது யதார்த்தமானது.

    இதில் கூட you can agree to disagree 🙂

  316. திரு. BALA SUNDARAM KRISHNA அவர்களே.

    அம்பேத்கரும், காமராஜரும் ஏன் சமஸ்க்ருதத்தை படிக்க சொன்னார்கள் என்று அறிவாய்ந்து கூறி இருக்கிறிர்கள். மிக நல்ல ஒரு interpretation .

    திரு. நசிருதின் அஹ்மத் அவர்கள் அரசியல் சட்ட நிர்ணய சபையில் பேசிய கருத்துகளுக்கு உங்கள் பதில் என்ன? திரு நசிருதின் அஹ்மத் 12.09.1949 அன்று பேசிய பதிவு உங்களுக்காக மீண்டும் இங்கே :

    https://nnavjeetmyblog.blogspot.in/2013/08/demand-of-making-sanskrit-as-national.html

    BALA SUNDARAM KRISHNA கூறுகிறார்.

    #என்றைக்கு இவர்கள் தங்களை பிராமணர்கள் என்றழைப்பதை நிறுத்துகிறார்களோ, அன்றுதான் இவர்கள் உண்மையான இந்துக்கள்.#

    பிராமணன் என்ற சொல் சம்ஸ்கிருத ஸ்லோகங்களிலும் வேதத்திலும் நிறைந்து காணபடுகிறது. அவர்கள் # பிற மன்னர்கள் # என்று சொல்வது சரி அல்ல. அது பொய்யுரை. இருப்பினும், “அந்தணர் என்போர்…” எனவே,தமிழில் அந்தணர் என்ற சொல் தான் சரி என்று நம்புகிறேன். அதற்காக “உண்மையான இந்துக்கள்” போன்ற வசைபாடுகள். என்ன கொடுமை!

    #Think dispassionately standing outside your caste.# என்றும் கூறுகிறார்.

    அந்தணர்கள் செய்யும் பல நித்திய கர்மாக்கள் முதல் தனக்காக செய்யும் ஹோமங்கள் வரை அனைத்திலும் இவ்வுலகம் நன்மை பெற வாசகங்கள் இடம்பெறுகிறது. இரண்டு கால் உயிர்கள் வாழ்க, நான்கு கால் பிராணிகள் வாழ்க, மழை பெய்க…….., என்று நிறைய வாசகங்கள் காணப்படுகிறது. அவைகளை தெரிந்து கொள்ள இப்பிறப்பு காணாது – நான் என்னை பற்றி சொல்கிறேன்.

    சாந்தனு என்ற அரசரின் மைந்தன் பீஷ்மர் தன்னுடைய நடத்தையால் உன்னத நிலையை அடைந்தவர். அவர் அந்தணர் அல்லர். பீஷ்மருக்கு அனைத்து அந்தணர்களும் தை மாதத்தில் வரும் ஒரு அழ்டமி திதி (பீஷ்மாஷ்டமி) அன்று தர்ப்பணம் செய்கிறார்கள். இந்த கர்மாவில் அந்தணர்கள் சாதியா பார்கிறார்கள்?

    நான் ஏற்கனவே இங்கு மொழிந்தது போல் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல சமூகத்தை சார்ந்தவர்கள். உங்களுக்கு நன்கு தெரியும். அவர்களை அந்தணர்கள் சாதி பார்த்தா வணங்குகிறார்கள்?

    பீஷ்மர் பற்றியும் ஆழ்வார்-நாயன்மார்கள் பற்றியும் மேற்கண்ட வாக்கியங்களை இங்கு தட்டச்சு செய்யும்போது என் கைகள் நடுங்குகிறது. கண்கள் குளமாகிறது. அவர்கள் மேல் எனக்கு அளப்பறிய பற்று பாசம். அந்த மஹான்கள் என்ன சாதி என்றெல்லாம் ஆராயும் துர்பாக்கியம் ஏற்பட்டமைக்கு அவர்கள் தான் என்னை மன்னிக்க வேணும்.

    சமஸ்கிருதத்தை பற்றி பேசினால் தமிழை அவமதிப்பதாக அர்த்தமா? இது தான் தவறான புரிதல் என்கிறேன். இத்தகைய வாதம் தான் தற்போது நம் தமிழகத்தில் கொடிகட்டி பறக்கிறது. தவறான பிரசாரம் மேற்கொள்ள பட்டு வருகிறது.

    இங்கு மொழி பற்றி விவாதிக்காமல் சாதி பற்றி எழுத நேரிட்டமைக்கு ஆசிரியர் குழுவிற்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  317. அடியவன்

    //
    சுமேரு என்ற மொழியில் இருந்து தமிழும் சமஸ்கிருதமும் பிறந்ததாக ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளர் – லோக நாதன் என்ற 74 வயது மலேசியத் தமிழர்
    //

    நீங்கள் தந்த தகவலுக்கு நன்றி. லோகநாதன் அவர்களின் தளத்தை படிக்க ஆவல் இருக்கிறது.
    சுமேரியாவின் (mesopotamia) தொடர்ச்சி தான் ஹரப்பா பண்பாடு என்பது முடியடிக்கப்பட்ட ஒரு வாதம். இதை பற்றி பிரிட்ஸ் ஸ்டால் கூட எழுதி இருக்கிறார். இது ஒரு proto indo european வாதமாகும் . ஒருவாரியாக பார்த்தல் இது உண்மை போல தோன்றும் அனால் உண்மை இதுவல்ல.

    இதையும் படித்துப் பாருங்கள் : https://www.wired.com/2009/04/indusscript/

    இதை பற்றி மேலும் விஷயங்கள் அப்புறம் எழுதுகிறேன்

  318. @Mr BSK
    HH Maha Periyaval said that Veda Bhasa is the mother of all languages.Read my post carefully.
    But, as usual, you have waffled lyrics on Deva Bhasa and on missionaries. Plus unsolicited advise galore on what I should do!
    Here is a teacher from Ireland on why children should learn Sanskrit.
    https://sanskrityoga.wordpress.com/453-2/

  319. வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை சற்று சுருக்கி எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அவ்வளவுமே மிகவும் முக்கியமாக இருப்பதால், மற்றும் அந்த கருத்து எனக்கு 100 விழுக்காடு உடன்பாடாக இருப்பதாலும் அப்படியே ஒட்டியுள்ளேன்.( pasted )

    மூத்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன் அவர்கள், “சம்ஸ்க்ருத வாரம் என்னும் சம்பிரதாயமானது 2001லிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கு முன்பாக 1969லிருந்து சம்ஸ்க்ருத தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 1969-ல் சம்ஸ்க்ருத தினம் கொண்டாட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு தொடங்கியது. ஆடி மாதத்து பௌர்ணமி (ஸ்ரவண பூர்ணிமா) தினத்தைத் தேர்ந்தெடுத்து அதை சம்ஸ்க்ருத தினமாக அறிவித்தது காங்கிரஸ் அரசு. அனைத்து மாநில அரசுகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் சம்ஸ்க்ருத தினம் கொண்டாடப்படவேண்டும் என்றும், அப்போது சம்ஸ்க்ருத நாடகங்கள், சம்ஸ்க்ருத பண்டிதர்களைக் கொண்ட கூட்டங்கள், சொற்பொழிவுகள், ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும், அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அது தொடர்ந்து கொண்டாடப்பட்டும் வந்தது.

    பின்னர் 2001-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (அப்போது அவ்வரசில் தி,மு.கவும் அங்கம் வகித்தது) அதை “சம்ஸ்க்ருத வாரம்” கொண்டாட்டமாக மாற்றியது. அதாவது ஆடி பௌர்ணமி தினத்துக்கு முன்பு வரும் 3 நாட்களையும் அத்தினத்தைத் தொடர்ந்து பின்வரும் 3 நாட்களையும் சேர்த்து மொத்தம் 7 நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று வாஜ்பாய் அரசு உத்தரவிட்டது” என்று தெளிவாக விளக்கியுள்ளார். “கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் தலைமையிலான தி.மு.கவை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சம்ஸ்க்ருத வாரத்தைக் கொண்டாடவே செய்தது. தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு அதைத் தொடர்கிறது, அவ்வளவுதான்” என்று கூறிய பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன், “தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குதிக்கிறார்கள்? தமிழகப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் கூட ஏன் பூமிக்கும் வானத்திற்குமாக குதிக்கிறார்கள்? இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் சாதித்தார்கள்?

    கடந்த 40 ஆண்டுகளாக அனைத்து அரசு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், ஹிந்தி தினம் கூட கொண்டாடப்படுகின்றது என்கிற உண்மை இந்தத் தலைவர்களுக்கும் ஊடகத்தினருக்கும் தெரியுமா?” என்று கேள்விகளை எடுத்து வைக்கிறார்.

    சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடப்படுவது சம்ஸ்க்ருத மொழியை தமிழ் மாநிலத்தில் திணிக்கும் செயல் என்றும், அதனால் தமிழ் கலாச்சாரம் கெட்டுப்போகும் என்றும் பொங்கிக் குமுறும் இந்தத் தமிழ் பாதுகாவலர்கள் இதுவரை தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்கவும் வளர்க்கவும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வெறும் “பூஜ்யம்” தான் நம் முன் தெரியும். தமிழகத்துப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தமிழ் படுகின்ற பாட்டைப் பார்த்தாலே தெரியும் இவர்கள் தமிழ் மொழியை வளர்த்திருக்கின்ற லட்சணம். இத்தனைக்கும் இந்தத் தலைவர்களின் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கென்று சொந்தமாகப் பத்திரிகையும் தொலைக்காட்சி சானலும் நடத்துகின்றன.

    அதோடு மட்டுமல்லாமல், 1967லிருந்து தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாற்றி மாற்றி அரசாண்டு வருகின்றன. இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதே தமிழ் மொழியை அரசியல் வியாபாரத்திற்குப் பயன்படுத்தித்தானே! திரைப்படத்தின் மூலமாகத்தானே தங்களுடைய தமிழ் வியாபாரத்தை செய்து ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்தார்கள். தற்போது திரைப்படங்களில் தமிழ் எவ்வாறு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டுமா? இவ்விரண்டு அரசாங்கங்களும் இதுவரை தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளன? இன்று அரசு பள்ளிகளில் தமிழ் கல்வியின் தரம் எப்படி உள்ளது? தமிழ் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தரம் எப்படி உள்ளது? இங்கே பயிலும் மாணாக்கர்கள் எப்படி இருக்கிறார்கள்? பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பேசும் தமிழ் எப்படி இருக்கிறது? எத்தனை பேருக்குப் பிழையில்லாமல் தமிழ் படிக்கவோ பேசவோ எழுதவோ வருகிறது? சட்டமன்றத்தில் சம்ஸ்க்ருதத்திற்கு எதிராக முழங்கிய உறுப்பினர்கள் எத்தனை பேர் தமிழ் எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்கின்றனர்? ’ல’வுக்கும் ‘ள’வுக்கும் வேறுபாடு தெரியாத, ‘ழ’வை உச்சரிக்க முடியாத இவர்கள் தமிழை வளர்க்க இதுவரை என்ன செய்துள்ளார்கள்? இவர்களுடைய வீடுகளில் தமிழ் கலாச்சாரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? அரசு நிறுவனங்கள் தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியில் ஏதாவது உருப்படியாக செய்திருக்கின்றனவா? இதுவரை என்ன சாதனை நிகழ்த்தியிடுக்கிறார்கள்? இதுவரை இவர்கள் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து நடத்திய உலகத் தமிழ் மாநாடுகளால் ஏதாவது பயன் ஏற்பட்டுள்ளதா? இவர்களின் தமிழ் கலாச்சரப் பாதுகாப்பின் லக்ஷணத்திற்கு நமது ஆலயங்களே சிறந்த உதாரணம்.

    ஆலயங்கள் கலாச்சாரத்தின் சின்னங்களாகப் போற்றப்படுபவை. மாபெரும் ஆலயங்களை நிர்மாணித்த தமிழ் மன்னர்கள், அவ்வாலயங்களில் பல கல்வெட்டுக்களையும் பதித்தார்கள். அவற்றில் பிராம்மி வடிவிலான தமிழ் மட்டுமல்லாமல் கிரந்த வடிவிலான சம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியுள்ளனர். கல்வெட்டுக்கள் மட்டுமல்லாமல் தமிழ் மன்னர்களின் செப்பேடுகளிலும் தமிழினூடே ஆங்காங்கே சம்ஸ்க்ருத வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ் கலாச்சாரத்தைக் காப்பதாகப் பீற்றிக்கொள்ளும் திராவிட இனவெறியாளர்கள் ஆலயங்களைப் பாதுகாக்கிறார்களா? இவர்கள் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஆலயங்களை எவ்வாறு நிர்வாகம் செய்கின்றது? தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான ஆலயங்கள் பல நூற்றாண்டுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை. அவற்றில் உள்ள சிற்பங்களும், ஓவியங்களும், கல்வெட்டுக்களும் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?

    ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் 2008-ல் தன்னுடைய ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடியது. அப்போது அக்கோவிலை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி அதன் சிற்பங்களையும், ஓவியங்களையும், கல்வெட்டுக்களையும் மிகவும் அஜாக்கிரதையாகக் கையாண்டு அவற்றில் சிலவற்றை அழிக்கவும் செய்தனர். Diravida-Naattil-Samskrutha-Ethirppum-Thamizh-Kalaachara-Paathukaappum-8 சமீபத்தில் (2011-12) புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோவிலிலும் புனர் நிர்மாணம் என்கிற பெயரில் பல கல்வெட்டுக்களை நாசம் செய்துள்ளனர். பழவேற்காட்டில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு கோவிலை முற்றிலுமாக அழித்து விட்டனர். வெகு சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலை, கோபுரம் முதற்கொண்டு அனைத்தையும் அழித்துவிட்டு, சிமெண்டும் கான்கிரீட்டும் வைத்து புதியதாகக் கட்டியுள்ளனர். அக்கோவிலின் தல விருக்ஷத்தையும் வெட்டிச் சாய்த்துள்ளனர். இதுதான் இந்தத் திராவிட இனவெறியாளர்கள் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வளர்க்கும் லட்சணம். Diravida-Naattil-Samskrutha-Ethirppum-Thamizh-Kalaachara-Paathukaappum-6 சம்ஸ்க்ருதம் உலகளாவிய ஒரு மொழி. அனைத்து மொழிகளுடனும் தொடர்பு கொண்டது. சம்ஸ்க்ருதம் நமது பாரத தேசத்தின் கலாச்சார, தத்துவ, ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பழம்பெருமை வாய்ந்த மொழியாகும். சம்ஸ்க்ருத மொழியின் அழிவு பாரதத்தின் அழிவில்தான் முடியும். எனவே சம்ஸ்க்ருத மொழியைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். தமிழ், தமிழ் என்று தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாகக் கூறி, மக்களிடையே மொழி வெறியையும், பிரிவினைவாதத்தையும் தூண்டி, அரசியல் வியாபாரம் செய்யும் இனவெறியாளர்களுக்குத் தமிழ் ஹிந்துக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். – VSRC notification .

  320. //ஏன் படிக்க வருகிறார்கள் என்பதற்கு காரணம் உங்களக்கு தான் ஆச்சர்யமாக இருக்கும். ஏன் என்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை root cause என்ற ஆராச்சியில் புகுகிரீர்கள். எனக்கு தமிழன் சமஸ்க்ருதம் படிப்பது ஆஸ்சர்யம் இல்லை. அது சஹஜமான விஷயம். இனிமேல் வேண்டுமானால் corporates பாணியில் ஒரு சர்வே செய்துவிடுகிறேன்.
    //

    செய்யுங்கள். பின்னர் இங்கெழுதுங்கள். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏன் படிக்கவருகிறார்கள்?

  321. //Secular is a Western construct and I do not subscribe to it.//

    RAMA!

    Then, the argument is over, Sir.

  322. //வெறும் சாதனமாகவா தன் மொழியைப் பார்த்தார்? இவர் சொக்கநாதர் மேல் மையல் கொண்டு அன்னத்தையா தூது விட்டார்? தத்தையையா தூது விட்டார்? மேகத்தையா தூது விட்டார்? இல்லை! தமிழை அல்லவா தூது விட்டார்! ஏன்? \\\

    நான் சொல்ல வந்ததையே நீங்கள் சொல்லிவிட்டு இதில் கேள்வி வேறா?

    ஐயன்மீர் அடைய வேண்டிய இலக்கு இறைவனடி நீழல். அதை அடைய மொழி ஒரு சாதனம். சொக்கநாதர் மீது மையல் கொண்டதை தெரிவிக்க சாதனமாகத் தமிழை தூது விட்டார். அவர் அடைய விழையும் இலக்கு —— அதாவது சாத்யம் —– சொக்கநாதப்பெருமான். இறைவனடி நீழல்.

    ம்…………புரிந்ததா?

    குதர்க்க வாதம் மட்டற்ற சலிப்பைத் தருகிறது.//

    நான் எழுதும் விளக்கங்களை மூடிய மனதோடு படிக்குங்கால், குதர்க்கம் என்று சொல்ல மனது துடிக்கும். துடித்தே விட்டது. When truths are bitter, don’t read them.

    தமிழ் விடுதூது என்பதுதான் அந்த நூல். தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. .மேலோர் விருந்தமிழ்தம் என்றாலும் .வேண்டேன். தமிழே எனக்குப்போதும்’ என்ற அவ்வரிகளைப்படித்து உவேச இப்படியும் ஒரு தமிழ்க்காதலனா? இவ்வரிகளோடு பலவரிகள் இருக்கும். கண்டுபிடித்தே தீரவேண்டுமென்றலைந்தார். இறுதியில் மதுரையில் கிடைத்தது. எழுதியர் மீனாட்சி கோயில் குருக்கள். இந்நூலில் கோயிலின் சில உள்விஷயங்கள் சொல்ல்ப்பட்டதால் அப்படி ஊகிக்கிறார்கள்.

    தமிழையே தூதாக விட்டது ஒரு புரட்சி தமிழலக்கியத்தில். ஏனென்றால் எவரும் ஒரு மொழியைத் தூதாக விட மாட்டார்கள். இவர் செய்ததற்கு காரணம் இவரின் நம்பிக்கை; அதாவது தமிழுக்கு சொக்கநாதரை ஈர்க்கும் வலிமை உண்டு என்பதுதான். வடமொழி தெரிந்தும் தமிழைத் தேர்ந்தெடுத்தார். எப்படி ஆழ்வார்கள் வடமொழி தெரிந்தும் தமிழிலேயே பாடினார்கள் அப்படி.

    எனவே தமிழின் மகத்துவததை இந்த ஆசிரியர் காட்டியது என்னால் இத்தளவாசகர்களிடமிருந்து பகிரப்பட்டது. ஆனால் இங்கு கிருஸ்ணகுமார் போன்றவர்களுக்கு தமிழின் மகத்துவம் பொறுக்காது எனறு முதலிலேயெ தெரியவில்லை.

    மன்னிக்கவும் குமார். தெரியாமல் தமிழால் சொக்கநாதரை வலைக்கலாமென்று எழதி உங்கள் மனதை புண்படுத்திவிட்டேன். வடமொழியால்தால், அல்லது மணிபிரவாளத்தால்தான் முடியுமென்று தமிழ்விடுதூது ஆசிரியர் கருதினார். தமிழை விட்டதெல்லாம் சும்மா 🙂 என்றல்லவா நான் எழுதியிருக்கவேண்டும்?

  323. //@Mr BSK
    HH Maha Periyaval said that Veda Bhasa is the mother of all languages.Read my post carefully.
    But, as usual, you have waffled lyrics on Deva Bhasa and on missionaries. Plus unsolicited advise galore on what I should do!//

    Mr Rama
    You have been responded to sharply by others. Hopefully you will read them and get benefited.
    Whether it is deva basha or veda basha, Maha peiyaval links it to religion and no one can deny that link in his observation. You cannot disown your baby if you find it is ugly. Dragging Maha Periyaval into this discussion itself has been condemned. You also don’t understand that Sanskrit and its uses, benefits, its heritage etc. are not at all under debate here. Tamil v Sanskrit question is also not under question at all. What is your aim in putting up links here then ? Why don’t u face the core question of the debate here, namely, if there is a celebration and encouragement for Sanskrit, which is not a language of any State in our country, given by the Central Government, why can’t celebrations and encouragement be given to other Indian languages also, by the same Government which is expected to treat all languages fairly and common to all people of all States, not only to Sanskrit lovers like you? Isn’t Modi PM to TN also or not?

    Answer this question, enough !

  324. //Hence, I conclude you either belongs to D.K or communists. Then, why donot come on that idenitty? I knew very will here you and viyasan both belongs either. But coming in disgust names.
    you saying one time that I am not against Sanskrit. and other time you oppopsing Sanskrit week. what a logic you had? Since you are hater of Hindusiam, oppose sanskrit week as Hindu hater but not as Hindu because all hindus has one of the eye is sanskrit.
    Even you can criticise Hindusam no problem we are ready give befitting reply but not as hindu ideintity bus as hindu hater.//

    The ‘we’ in your message is inappropriate. It equates you to an ISIS or a Wahabi. I never accept that such terrorists exist in Hindu religion. I don’t know your age. It appears you are getting emotional. You ought to know some clear facts as follows.

    Nowhere is it said that a Hindu should know Sanskrit.
    He may just ignore the language and worship his God in his own mother tongue.
    Sanskrit was, in fact, a hindrance to the spread of the religion among common masses in TN: a bitter fact that was understood by great people like Ramanujar and that way why, he thought that Tamil should be given equal importance so that people won’t go to other religions feeling ashamed of lack of Sanskrit knowledge.

    Sanskrit may remain in temple rituals; among Brahmins more in their daily rituals; among interpreters of Hindu scriptures like Acharyas.

    In short, it need not dragged to open spaces occupied by common masses because people don’t take interest to learn a language in order to understand their religion better. They don’t have time and inclination. But they don’t object to Sanskrit.
    Tamil and Sanskrit each has its own spaces in Tamil Hindu society.
    Controversy and heart burning arises only when attempts are made to occupy all spaces for Sanskrit by calling it mother of Tamil, more glorious than Tamil, far greater than Tamil etc.
    By calling attention to that wrong act – i.e Sanskrit lovers trying to overwhelm Tamil – is not to hate Sanskrit or being against Sanskrit, but to raise voice for dignity of Tamil.
    By all means the Sanskrit week may be there; But Tamil should also be celebrated by the same people who order for Sanskrit celebration: this is our only demand.
    If such a demand is raised by anyone here, calling him a DKist of DKMist, or a Muslim or a Xian for that, is an indirect attempt to ridicule Tamil.

    என் உடன்பிறவா சஹோதரி மஹா பெரியாவாளால் சைவமதத்தொண்டிற்காக நாவுக்கரசி enru பாரட்டப்பட்டவர். ஆண்டு தோறும் கிருஷ்ணா சுவீட்ஸாரால் நடாத்தப்படும் in Madra Narada gana saba பத்துநாள் விழாவில் ஒரு நாள் இந்துமதத்தில் உள்ள சிற்ப்பான நிகழ்வுகளையும் இதிகாசங்களையும் தேவாரம் திருவாசக்ம் பற்றியும் பேருரை செய்ய அழைக்கப்படுவ்ர். வெளிநாடுகளிலும் அவர் தொண்டு. மதுரையில் இன்மையில் நன்மை செய்வார் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற சிவன் கோயிலில் பத்துநாட்கள் சிற்ப்பு பூஜை செய்வார் அவர். அதற்கான விளம்பர சுவரோட்டிகள் மதுரையில் பலவிடங்களில் ஒட்டப்படும். She is aging. Still she comes to Madurai every year for that. மதுரை இராமகிருஸ்ணம்டத்தில் அவர் சொற்பொழிவுகள் அடிக்கடி நடக்கும். நங்க நல்லூர் வாசிகள் அவரை அழைத்து in Nanganallur பேசவைப்பர். ஒரேயொரு குறை அவர் வைணவம் பற்றிய ஞானத்தை வளர்க்கவில்லை. She is rooted in Saivam steadfast. When she was young, she spoke on the same stage where Jayalalitha also spoke before, in front of MGR. MGR was attracted to the speech of my sister. I was in North. My younger bro went and told me afterwards that J was visibly angry with MGR. It was my sister who fought for the Memorial for Subramania Bharati and iniiated Bharati vizha every year at Ettayapuram. It went on for years. Not Government is conducting that. Love for Tamil and Tamil poet.

    வியாசன் இலங்கைத்தமிழர். இலங்கைத்தமிழரிடையே வைணவம் ஊற்றம் குறைந்தளவே. ஆனால் சைவ்ம ஊற்றுப்பெருக்காக ஓடுவது. தூத்துக்குடியில் ஆண்டு தோறும் நட்க்கும் பத்துநாட்கள் சைவ சித்தாந்த மாநாடு சிற்ப்பு வாயந்தது. அதில் ஒரு நாள் யாழ்ப்பாண சைவ மங்கையர்கள் தினமென்றே அனுசரிக்கப்படும். அன்று இலங்கையிலிருந்து பெண்கள் குடும்பங்களோடு வருவர். வியாசன் அந்தப்பரம்பரையில் வந்தவர். அவர் வலைபதிவுகளில் திராவிட கட்சிகளின் இந்துமத எதிர்ப்பைப்பற்றி விமர்சனம் ப்ண்ணி எழுதுபவர்.

    மணி, எதையுமே தெரியாமல், இங்கு வாதத்தில் தமிழுக்கு ஏன் சிறப்பில்லை என்று பேசுபவர்களையெல்லாம் இசுலாமியர்கள், கிருத்துவர்கள், தி க காரகள், தி மு காரர்கள் என்பது அவரின் முதிர்ச்சியற்ற் தன்மையைத்தான் காட்டுகிறது.

    தான் மட்tuமே இந்து; மற்றவர்கள் தி ககாரகள் எனப்து வஹாபித்தனம்.

  325. //தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் படிப்பதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது என்பது தான் விஷயம். படிக்க வருபவர்களிடம் நீ எதற்காகப் படிக்க வருகிறாய் என்று கேழ்க்கச் சொல்கிறீர்கள்?//

    Krishna Kumar!

    கேட்கச் சொல்லவில்லை. அறியச்சொல்கிறேன்.

    300 பேருக்குமதிகமானோர் 6 month course ஃப்ரென்சு மொழி பயில்கிறார்கள் அதுவும் பெரும்தொகையை கட்டி. அல்லையன்ஸ் ஃபரான்சைஸ் அவ்வகுப்புகளைத் தில்லி, மும்பாய், கலகத்தா, சென்னையில் நடாத்துகிறார்கள். அம்மொழி பயில்வதற்கு இருக்கும் வரவேற்பு வடமொழியைக்காட்டிலும் பனமடங்கு.

    ஒரு அந்நிய மொழி வகுப்பு நடத்தப்பட்டால் அதுவும் பிரபலமானதாக் இருந்துவிட்டால், வரவேறபு இருக்கத்தான் செய்யும். உடனே அம்மொழிக்கு ஒரு மாநிலத்தில் பிரமாண்ட வரவேற்பு என்று வாதிட முடியாது.

    அந்நிய மொழியப்படிப்பவர்கள் பல காரணங்களால் படிக்கின்றார்கள். அக்காரணங்கள் எல்லாம் மேல், மற்றும் இடைத்தட்டு மக்களுக்குத்தான். பொதுவாகச்சொன்னால், ஒரு ஆவ்ரேஜ தமிழனுக்கு எந்தவித காரணமும் இருக்காது. English is the only exception here. வடமொழி கண்டிப்பாகத் தெரியவேண்டுமென்று இந்துமதம் கட்டளையிடவில்லை. எனவே எல்லா இந்துக்களும் படிப்பதில்லை. அவசியமும் இல்லை. ஆர்வமும் இருக்காது. ஆங்கிலக் கல்விக்கு எவ்வளவு மோஹம் கொண்டலைகின்றார்களோ அதில் ஒரு சிறிதளவு இருந்தால் போதும். தமிழகத்தில் வரவேற்பு வடமொழிக்கு மக்களிடையே காணப்படுகிறது. இந்தக்கேடுகெட்ட திராவிட கட்சிச் சைத்தான்கள் மட்டும் இல்லை என்று பொய் சொல்கிறார்கள் எனச்சொல்லுங்கள்; நம்பலாம்.

    சென்சஸைப்பற்றி தி ஹிந்து கட்டுரை இருக்கிறது. அதை மறுக்க செனசசைக்காட்டித்தான் செய்ய வேண்டும். வெறும் பேட்டிகள் என்று உதாசீனம் செய்யமுடியாது. சென்சஸ் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட ஒன்று. பொய் சொல்லமாட்டார்கள். அதன்படி, இந்தியா முழுவதிலுமே 20000 ஆயிரம்பேருக்கதிகமாக வடமொழி தெரிந்தோர் இல்லாதிருக்கும்போது 30000 ஆயிரம் பேருக்கு தமிழகத்தில் தெரிகின்றது என்பதை நம்ப முடியமா? தமிழகத்தில் வடமொழி வேகமாகப்பரவுகிறது. மக்களிடையே வரவேற்பு பெருகிறது எனபனவெல்லாம் fantasies. Wish-fulfilment.:-(

  326. //நீங்கள் சொல்வது ஜாதி ஒழிக. நான் சொல்வது பேதம் ஒழிக. the former is not in your control, the later is possible and practical also.//

    Sorry, I differ. If there are castes, there will be caste differences. The lowest in the hierachy will be trampled upon under feet of others. ஜாதிகள் இருக்க! பேதம் ஒழிக!! எனத்தாராளமாகச் சொல்லலாம்.

    ஜாதிகள் இருக்க, பேதம் ஒழிக எனத்தாராளமாகச் சொல்லலாம். ஆனால் வாழும் வாழ்க்கை வேறு; நினைப்பில் கொள்ள்வது வேறு.

    எந்தச் சான்றோருமே பேதம் பார்க்க என மக்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் மக்கள் பார்க்கிறார்கள். இலட்சுமணனைப்போல மக்களைத் திருத்த இராமன் இல்லை.
    இருந்தாலும் கேட்பார்களா என்பது ஐயமே.

    சபரி கதை:

    இராமன் வருவானென்று ஒரு காட்டுவாசிக் கிழவி ஒருத்தி காத்துக்கிடந்தாள். அவளுக்கு இறுதிச்ச்டங்குகள் செய்ய மகன் இல்லை. இராமன் வருவான்; அவனே என் மகனாவான்; என் இறுதிச்ச்டங்குகளைச் செய்வான் என்று நித்தம் நிததம் வேண்டி நின்றாள். ஒரு நாள் இராம்னும் அவன் தம்பியும் காட்டு வழியில் செல்லும் போது ஒரு குடிசையைக்கண்டனர். இளைப்பாறலாமெனச்சென்ற போது அங்கு ஒரு கிழவி இருந்தாள். அந்த மூதாட்டி நம் கதை நாயகி. இராமனைக்கண்டதுமே புரிந்துவிட்டது. இவன் தான் நான் காத்துக்கிடந்த மகன் என்று இருவரையும் உபசரித்து அமர வைத்து விட்டு, நான் உங்களுக்குப் புசிக்க உண்வு கொண்டுவருகிறேன் என்று சொல்லி சிறிது நேரத்தில் ஒரு கூடைநிறைய நாவல்பழங்களைக் கொண்டு அவர்க்ள் முன் வைத்தான். இராமன் அவற்றை ஆசையாக எடுத்து வாயில் போடப்போனான். அவன் தம்பி அதைக்கண்டு முகஞ்சுழித்தான். எடுக்க வில்லை. ஒரு கீழ்ச்சாதிப்பெண் வீட்டிற்கே வர அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது அவள் தீண்டிய உணவைத் தொடவேண்டுமா?

    இராமன் அவனுக்கு நல்ல அறிவுரை கொடுத்து, இவள் நம் தாய்க்கு ஈடானவன். பேத் பாவ் (discrimination) செய்வது மாபாவம் ஏன்றுசொல்லி தம்பியைத் திருத்தினான். அம்மூதாட்டியின் வேண்டியது: தான் இராமனின் கால்களில் உயிரை விட வேண்டும்; இராமனே எனக்கு ஈயமக்கிரியைகள் பண்ணவேண்டும் என்பதுதான்.

    அதன்படியே இராமனைதொழும்போது அவன் காலடியில் அவள் உயிர் நீங்கியது. இராமன் ‘தன் நினைப்புத்தாய்க்கு’ ஈமச்சடங்குகளை செய்துவிட்டுத்தான் போனான். Her name is Sabari. It is one of the famous episodes in the Ramayana.

    இக்கதை மக்களுக்குத்தான் வைக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் வரலாறு. எனவே கதை வேறு. வாழ்க்கை வேறாகிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் இராமன் செய்ததைப்போல மககளும் செய்யவேண்டுமென (i.e. don’t ever discriminate. Value humans for their goodness only, not on the bases of artificial and fictional labels or by their humble circumstances of birth and life) நாம் விழைந்தால் அதைச்செய்ய முயற்சிககலாம்.

    Don’t worry. I do discriminate. I hate the lower castes and the poor. I don’t share anything with them. Like you, I just read the Ramayana and forget.

    Finished. No argument with me please, Sarangan.
    I am taking leave from this topic.

  327. Instead of depending on the government to celeberate week with cosmetic functions, individuals can promote the language. those who want to promote tamil, can teach tamil read and write to few people…. those who want to promote sanskrit, can first learn sanskrit, start enjoying all the sanskrit literature find the deep meanings of vedas and share their experience with others…

  328. @BSK
    “why can’t celebrations and encouragement be given to other Indian languages also”
    The answer is simple. All Indian languages have their origin in Sanskrit. Period. Sanskrit is the uniting force in India, whether the Tamils like it or not.
    All the DK/DMK wallhas,self appointed guardians of Tamil would not have lost their sleep if the government had declared a Gujarati or Bengali language week. Sanskrit=Brahminism= Need to be bashed!!! Plus Tamils are insecure and paranoid about their own mother tongue. You can love your mother tongue but you do not have to be an one eyed Tamil zealot.

  329. ” You need to verify it with HISTORICAL, VERIFIABLE sources. Example: Give me a Tamil classical literature which is AT LEAST as old as Bhagavat Gita. “-

    திரு இராமா,

    காகிதம் கண்டு பிடிக்கப்பட்டபின்னரே வரலாறு அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் பனை ஓலைச்சுவடிகளிலும் , கல்வெட்டுக்களிலும், காய்ந்த இலைச்சுருளிலும் தான் எழுதிவந்தனர்.இவற்றில் பலவும் நீர் நெருப்பு பகைவர்களின் படை எடுப்பு என்று பல வழிகளிலும் அழிந்தன. எஞ்சிய பல கல்வெட்டுக்களிலும் அவற்றின் முக்கியத்துவம் தெரியாத நம் மக்கள் அவற்றை சிதைத்து நாசமாக்கி விட்டனர். பல கோயில்களிலும் திருப்பணி நடந்தபோது, கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் புரியாமல் , கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை சிதைத்து வண்ணம் பூசி, உதவாமல் ஆக்கிவிட்டனர்.

    மேலும் நீங்கள் சொல்லும் பகவத் கீதைக்கு கூட வரலாற்றுப் பின்னணி கிடையாது. ஆன்மீகப் பின்னணி மட்டுமே உண்டு. பகவத் கீதை பிற்காலத்தில் எழுதப்பட்டு , மகா பாரதத்தில் சேர்க்கப்பட்ட ஒரு இடைச்செருகல் என்பதே உண்மை என்று எல்லோரும் கூறுகிறார்கள். எனவே தமிழும், சந்தசும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதே உண்மை. சமஸ்கிருதம் என்பது பிற்காலத்ததே. தெய்வத்தின் குரலை மீண்டும் படித்துப் பார்க்கவும். வேத மொழி சந்தஸ் என்பதை பாகம் 2- பக்கம் 468- 469- ( 18த் edition )பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

    “வார்த்தையின் சப்தமே அதன் அர்த்தத்தை காட்டும்படியாக அநேக பதங்கள் , சந்தஸ் என்ற வேதபாஷையிலும் , அதை வைத்தே உருவாக்கிய சமஸ்கிருதத்திலும் இருக்கின்றன. ” சமஸ்கிருதம் தான் ஆதிபாஷை என்று சொல்லும்போது, வேதமொழியாகிய சந்தஸ்- ஐயும் சேர்த்துத்தான் சொல்கிறேன் என்று கூறுகிறார்.

    சமஸ்கிருதம், க்ரீக், லத்தீன், ட்யூடானிக், செல்டிக் ஆகிய இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருதமே காலத்தால் மூத்தது என்பது திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் தெளிவான கருத்து. தமிழ் மொழி மேற்சொன்ன குழுவில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். எனவே, தமிழும், சந்தசும் மட்டுமே உடன் பிறந்த சகோதரிகள். சமஸ்கிருதம் பிற்கால நவீன வளர்ச்சி பெற்ற புதிய ஒரு மொழியே. அதனை தமிழுக்கு தாய் என்று அவர் சொல்லவில்லை.

  330. பால சுந்தரம் கிருஷ்ணா

    ///சிவபெருமானின் உடுக்கையில் இருமொழிகளும் வந்தன என்றும் உங்களிடம் விளக்கம் எவரும் கேட்டவில்லை.///

    இதை நீங்கள் என்னிடம் சொல்ல அவசியம் என்ன? நான் எப்போதும் உங்களிடம் அப்படி ஒரு விளக்கத்தைச் சொல்லவே இல்லையே? நல்ல வேடிக்கை!

    ////தமிழ் வாரத்தை புவனேஷ்வரில் தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடுங்க்ளேன் “? இந்த நையாண்டியா நீங்கள் தாய்மொழிக்குச் செய்யும் மரியாதை ?|////

    இது நையாண்டியா? நீங்கள் என்ன மன நிலையில் இருந்து யோசிக்கிறீர்கள் என்றே புரியவில்லை. ஓர் ஆக்க பூர்வமான யோசனையை நையாண்டி என்றா பார்ப்பீர்கள்?

    ///தமிழ்நாடு அரசு தமிழைப்பரப்ப நீங்கள் சொல்லவேண்டியதில்லை. ///

    நான் இப்போது உங்களிடம் முன்வைத்த இந்தக் கருத்து சுமார் பதினெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களிடமும், சில சமயம் அமைச்சரிடமும் கூட முன் வைத்த கருத்து ஆகும் . இந்தி பிரசார சபா போல தமிழ் வளர்ச்சி சங்கம் வேண்டும் என்பதே எனது கோரிக்கை,

    நல்ல வேளை அவர்கள் எவரும் இதை நையாண்டி என்றும் பார்க்க வில்லை.
    நீ யார் இதைச் சொல்ல என்று என்னை கேட்கவும் இல்லை.

    ஆக நாமெல்லாம் தினமும் திட்டும் அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல்.

    எதுவும் செய்யாவிட்டாலும் கூட நல்லதைச் சொல்பவனைப் பார்த்து “ஊசி மூஞ்சி மூடா, நீயா எனக்குப் புத்தி சொல்வது” என்று கூறிக் குருவியின் கூட்டைப் பிய்த்துப் போட்ட குரங்கின் கதை நினைவுக்கு வருகிறது.

  331. பால சுந்தரம் கிருஷ்ணா

    நீருள்ள குளத்தில் மீன் பிடிப்பது போல புவனேஷ்வரில் அலுவலகம் அமைத்து அலுவலர் நியமித்து தமது பொறியியல் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கும் இந்தக் காலத்தில் புவனேஷ்வரில் தமிழ் பரப்புதல் தமிழுக்குச் செய்யும் தொண்டே ஆகும்.

  332. பால சுந்தரம் கிருஷ்ணா

    இன்னொரு கட்டுரையில் உங்களுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் உதாசீனம் செய்வது சரியல்ல. ஏனெனில் நீங்கள் கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து, அதை எழுதியவரது நற்பண்பு குறித்துப் பதிந்த தவறான தகவலை நீங்கள் சரி செய்தாக வேண்டும். அந்த பதில் இதோ:

    https://tamilhindu.com/2014/08/violence28/

    ///பால சுந்தரம் கிருஷ்ணா தாம் மட்டுமே அன்பு வடிவானவர் போலவும் முருக பக்தரான தேவராய சுவாமிகள் வெறி பிடித்தவர் போலவும் உரைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அதே கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் வரிகள் இதோ:

    /// புலியும் , நரியும், புன்னரி நாயும்
    எலியும் , கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,

    தேளும், பாம்பும், செய்யான் பூரான்,
    கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,
    ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்
    வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

    சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
    பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,
    கடுவன் , படுவன், கைதாள் சிலந்தி,
    பற்குத்து , அரணை, பரு அரையாப்பும்,

    எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்
    நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!
    ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
    மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,///

    மனிதர்கள் அமைதியாக வாழ்வதற்கு இடைஞ்சலாக இருக்கும் மிருகங்கள் ஓடவேண்டும்” என்று நினைப்பதில் பாடுவதில் என்ன தவறு?

    அவர் என்ன காபிர்களைக் கொல் என்று சொன்ன குரான் போலவா எழுதி விட்டார்?
    ஒருவேளை பால சுந்தரம் கிருஷ்ணா பார்வையில் அதுதான் நன்முறையோ?

    இல்லை தொன்றுதொட்டு இதே மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் “பார்ப்பனக் கூட்டம் பயந்து நடுங்கி ஓடவேண்டும்” என்று சுதந்திர இந்தியாவில் முதலமைச்சராக இருந்துகொண்டே சொன்ன கருணா நிதி போலப் பேசினாரா?

    ஒருவேளை பால சுந்தரம் கிருஷ்ணா பார்வையில் அதுதான் நன்முறையோ?

    அது தவிரவும், சமுதாயத்தில் வாழும் அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்ற தேவராயரின் ஆசையும் அன்பும்தான் தவறா?

    அறியாமையால் எழுதினால் அதை ஒப்புக் கொண்டு அடுத்த விஷயத்துக்குச் செல்வதே பொது இடத்தில் வாதம் செய்ய வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம். அதைப் பால சுந்தரம் கிருஷ்ணா கடைப்பிடிக்க வேண்டும்.//

  333. பாலா

    பரவலாக தவறான ஆதாரங்களுடனும் புரிதல்களுடனும் மறுபடியும் நிறைய எழுதுகிறீர்.

    சபரி மரகபட்ட கதை அல்ல. யா ப்ரீதிர் விதுராரர்பிதே குந்த்யார்பிதே என்று தொடங்கும் ஸ்லோகத்தை தினமும் பெருமாள் கோவில்களிலும் வைஷ்ணவ கிருஹங்களிலும் பகவானுக்கு பிரசாதம் கண்டருளப் பண்ணும் பொழுது சொல்ல படுகிறது. இதில் விதுரர், குந்தி, சபரி என்று இவர்கள் எல்லோரும் உனக்கு எப்படி ப்ரீதி பாவனையுடன் அமுதளிதார்களோ அதே பாவனையில் இந்த பிரசாதத்தையும் எடுத்துக்கொள் என்னு அர்த்தம்.

    நீங்கள் சொல்கிற ஜாதி விஷயத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் எல்லோரையும் ceo ஆக்கிவிடலாம் அல்லது designation என்பதையே எடுத்து விடலாம். நீங்கள் செல்வது விதண்டாவாத மார்கத்தில். இத்துடன் அமைவோம். நன்றி.

  334. பாலா

    //
    சென்சஸ் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட ஒன்று. பொய் சொல்லமாட்டார்கள். அதன்படி, இந்தியா முழுவதிலுமே 20000 ஆயிரம்பேருக்கதிகமாக வடமொழி தெரிந்தோர் இல்லாதிருக்கும்போது 30000 ஆயிரம் பேருக்கு தமிழகத்தில் தெரிகின்றது என்பதை நம்ப முடியமா?
    //

    எப்பொழுதான் விளங்கிக் கொள்வீர்கள். பிரெஞ்சு படிக்க பேச தெரிந்தவன் தனது தாய் மொழியை பிரெஞ்சு என்றா சென்செஸ்சில் கொடுப்பான்.

    20000 பேர் தங்களது தாய் மொழியை சமஸ்க்ருதம் என்று கொடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் தமிழன் தனது தாய் மொழியை தமிழ் என்று தான் கொடுப்பான். நானும் சென்செஸ்சில் அப்படிதான் கொடுத்துள்ளேன். எனது எண்ணிக்கை மேலே சொன்ன 20000 பெயர்களுக்குள் அடக்கம் கிடையாது. இப்படிதான் தமிழ் நாட்டில் 300000 பெரும். இதே கதி தான் இந்தியா முழுக்க, இன்று கிட்டத்தட்ட 80 லட்சம் பேருக்கு சமஸ்க்ருதத்தில் சாதாரணமாக பேசத்தெரியும். இவர்கள் பண்டிதர்கள் இல்லை. சாமானியர்கள்.

  335. ஹிந்தி தேர்வு நடக்கும் மையங்களில் பார்த்தால் தேர்வு எழுத எத்தனை எத்தனை ஆயிரம்பேர் ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி ஹிந்தி கற்கிறார்கள்.

    அன்று ஹிந்தி எழுத்துகளின் மீது தார் பூசியவர்கள் முகத்தின் மீது இன்று இவர்கள் தாரும் கரியும் கலந்து பூசிவிட்டதாகவே தோன்றுகிறது. த்ராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கான சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது.. பிராமண எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, சம்ஸ்கிருத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, தனித்தமிழ் நாடு என கிளம்பிய ஒரு கூட்டம், ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியதும் போலீஸ் சிலர் உயிர் இழந்ததும், எதிர்ப்பு முனையில் சிலர் உயிர் துறந்ததும் பின் அவர்கள் மொழிப்போர் தியாகியானதும் வரலாறு.

    திருச்சியில் அரசியல் மேடை ஒன்றில் முன்னாள் இந்தியப் பிரதமர் புனிதர் திரு மொராஜி தேசாய் அவர்கள் பேசும்போது, தமிழ்நாட்டில் இரு விஷயங்கள் விசித்திரமாக உள்ளது.

    ஒன்று “கடவுள் எதிர்ப்பு”

    மற்றொன்று “ஹிந்தி எதிர்ப்பு” –

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் வழியில் வாழ்வதற்கு ஏன் இந்த எதிர்ப்பு ?நம்பிக்கையுள்ளவர்கள் அவர்கள் வழியில் செல்வதும், நம்பிக்கை இல்லாதவர்கள் நாத்திக வழி நிற்பதும் அவர்களுடைய நம்பிக்கையை பொறுத்தது. இதற்காக ஏன் சண்டை சச்சரவு.?

    இரண்டாவது – “ஹிந்தி எதிர்ப்பு”, ஒரு மொழியை ஒருவன் கற்றுக் கொள்வதால் என்ன ஆகி விடப்போகிறது? பல மொழி உள்ள பாரத தேசத்தில் பணி புரிய அவர்களுக்கு உதவும் மொழி ஹிந்தி, இதோ எனக்கு உதவியாளராக என்னிடம் பணியாற்றுபவர் இருக்கிறார், அவர் தமிழ்நாட்டுக்காரர். அவர் என்னிடம் பணியாற்றுவதற்கு முக்கியகாரணம் அவருக்கு ஹிந்தி தெரிந்திருப்பதால் தான். வெறுப்புணர்ச்சியை விட்டுவிட்டு அவரவர் விருப்பத்தினை ஒட்டி கடவுளையும், ஹிந்தியையும் ஏற்பதும், கற்காததும் அமைய வேண்டும். இதற்காக இத்தனை கலவரங்கள், சண்டைகள், சச்சரவுகள், வசவுகள்… என்ன பழக்கம் இது? என்றார்.

    மொரார்ஜி அவர்கள் சொன்னதை சிந்திப்போமா ?

    தமிழ்குடிதாங்கிகள்,தமிழ் இனத்தலைவர்கள் வீட்டு குழந்தைகள் ஹிந்தி படிக்கும் போது சாமான்யர்கள் வீட்டு குழந்தைகள் படிக்க கூடாதா?

    மக்களின் இந்த ஹிந்தி ஆதரவு நிலை பல வருடமாக தொடர்கிறது. ஆனாலும் இந்த பத்திரிக்கைகள் ஏன் இதைப்போன்ற முக்கிய விஷயங்களை செய்தி ஆக்குவதில்லை ?

    வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு என ஹிந்தி இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது… யதார்தத்தினை உணர்ந்துவிட்ட மக்கள் அரசியல்வாதிகள் சொல்வதை புறக்கணிக்கத் துவங்கி விட்டனர்.

    கழகங்கள் எப்படியெல்லாம் ஹிந்தியை வைத்துக்கொண்டு வளர்ந்தது என்பதை அறிய வேண்டுமானால் “ஹிந்தி எதிர்ப்பு அன்றும், இன்றும்” – ஈழத்து அடிகள் (1965). நாவலர் நெடுஞ்செழியன் அணிந்துரையுடன்…. உள்ள நூலினைப் படிக்கவேண்டும்.

    1-6-1938இல் முதலமைச்சர் இல்லத்தின் முன் மறியல் பற்றிய செய்தி… மறியல் தொடங்கிய மூன்றாம் நாள், அதாவது 60 பேர் வரை மறியலில் ஈடுபட்டு சிறை போன பின், ஈ.வே.ராமசாமி அவர்கள் தாமாகவே ஹிந்தி எதிர்ப்பு நிலையத்துக்கு வந்து, மறியல் செய்வதற்காக வந்திருந்த தொண்டர்களை நோக்கி,…. ”இப்படி நீங்கள் செய்வது பயன்தாராத முறையாகும் சண்டித்தனமாகும். இதில் நீங்கள் ஈடுபடவேண்டியதில்லை என்றும் வந்தவர்கள் தங்கள் ஊருக்கு போக வழிச்செலவு தருவதாகவும்” கூறினாராம். ஹிந்தி எதிர்ப்பு விஷயமாக ஈழத்து அடிகள் தயாரித்த அறிக்கையைக் கூட விடுதலை, குடியரசு இதழ்களில் வெளியிட ஈவே.ரா மறுத்துவிட்டாராம்.

    பின்னாட்களில் அதே ஹிந்தி எதிர்ப்பை அரசியல் வாழ்க்கைக்கு அடிக்கல்லாக்கிக்கொண்டு மொழியின் பெயரால் அரசியல் பிழைப்பு கண்ட கழக கண்மணிகளின் பற்றியும், ஹிந்தி எப்படி இவர்களது வளர்ச்சிக்கு உதவியது என்பதை தெளிவாக்கும் நூல்…

    மறைமலை அடிகள் புதல்வர் “மறைமலை திருநாவுக்கரசு” போன்ற காங்கிரசார் பலர் ஹிந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதையும், “பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார்” என்ற வைஷ்ணவ பெரியார் ஒருவர் ஹிந்தி எதிர்ப்பின் போது சர்வாதிகாரியாக இருந்து சிறை சென்றதையும், ஈவேரா “ஹிந்தி எதிர்ப்பை கையில் எடுத்துக்கொண்டதை” கரையான் புற்று எடுக்க பாம்பு குடி கொண்ட கதையாகிவிட்டது என பதிவு செய்கிறார் ஈழத்து அடிகள்.

    1939இல் வெளியான ஈவேராவின் அறிக்கை “இந்தி எதிர்ப்பு தீவிரக் கிளர்ச்சி தற்கால சாந்தியாகச் சிறிது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது….“

    கட்டாய ஹிந்தி இன்னமும் நீங்காத போது ஏன் போராட்டம் நிறுத்தப்படுகிறது? என்று கேட்டபோது ஈவேரா பதில்…. ”நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கிரஸ் மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அது போல் பயன்படுத்திக் கொண்டேனே தவிர உண்மையில் எனக்கு ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதைப் பற்றியோ அதனால் தமிழ் அழிந்து விடும் என்பது பற்றியோ கவலை இல்லை”.

    ஈ.வே.ரா.வின் அறிக்கையை தொடர்ந்து… ஈழத்து அடிகள் ”ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினை நிறுத்த ஈ.வே.ராமசாமி அவர்களுக்கு உரிமை கிடையாது” என வெளியிட்ட அறிக்கை ஹிந்து, மெயில் இரு இதழ்களிலும் 4/11/39 இல் வெளியானது.

    ஹிந்தியில் அன்றாடம் பயன்படும் சுமார் 100 வாக்கியங்களை தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது …. சட்டம் சாதிக்கமுடியாததை காலம் சாதித்துவிட்டது… சுமார் 10- நாட்கள் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பிய என் நண்பர் கூறுகிறார்.” என் குடும்பத்தில் என்னை தவிர யாருக்கும் இந்தி தெரியாது. அந்தக் காலத்தில் நான் பிரைவேட்டாக இந்தி கற்றது எவ்வளவு நல்லதாகப் போயிற்று . நான் கற்ற இந்தியை வைத்துக்கொண்டு, பத்து நாளும் மிக எளிதாக எங்கள் புனித சுற்றுலாவில் அனைத்து இடங்களிலும் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணிக்கவும், தேவையானதை கேட்டுப்பெறவும் முடிந்தது.”- என்கிறார்.

    “வாழிய செந்தமிழ்…வாழிய நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு….”

    “செப்புமொழி பதினெட்டுடையாளாம் பாரததேவி வாழிய …வாழியவே…”

    மொழிகள் கருவிகளே என்பதை உணர்வோம். பல கருவிகளையும் பயன்படுத்தி முன்னேறுவோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் தமிழினத்தின் கண்டுபிடிப்பு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது தான் தமிழினத்தின் அடுத்த கண்டுபிடிப்பு . இந்த இரண்டுமே உலகில் பல நாடுகளும் இன்று ஏற்கத்தொடங்கிவிட்ட விஷயம். எந்த மொழியும் எந்த மொழிக்கும் எதிரி அல்ல.மனிதர்கள் புரியாததால் பல குழப்பங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயங்களுக்கு மொழி சண்டையை உருவாக்குகிறார்கள். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

    தாய் மொழியாம் தமிழைக் கற்போம். தேவையான பிற மொழிகளையும் தேவையான அளவு கற்போம் என்ற உறுதியை இந்த சுதந்திர நாளில் ஏற்க எல்லாம் வல்ல முருகப்பெருமான் தமிழ் மக்களுக்கு நல் வழி காட்டுவானாக.

    வையகம் வளமுடன் வாழ்க.

    மனித இனம் அனைத்து இன்பங்களும் பெற்று உயர்க.

    பிரபஞ்சம் முழுமையும் உள்ள அனைத்து உயிர்களும் , அனைத்து இன்பங்களும் பெற்று உயர்க.

  336. பாலச்சந்திரன்

    ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது வேறு. ஹிந்தி எதிர்ப்பு என்பது வேறு. இங்கு எவரும் ஹிந்தியை எதிர்க்க வில்லை. ஹிந்தித் தினிப்பையே எதிர்க்கின்றனர்.

    ஹிந்தி படிப்பது அவரவர் தனிப்பட்ட விஷயமாக இருக்கும் வரை எந்த எதிர்ப்பும் இல்லை.

    ஆனால் அதுவே மூன்றாவது மொழியாகக் கண்டிப்பாகப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று அரசு ஆணையிடும்போது, திணிப்பாக ஆகிறது., அதைத்தான் தமிழ் நாட்டில் எதிர்க்கிறோம். ஹிந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது என்பது மாயை, வெறும் அரசியலுக்குச் சொல்லப்படும் சாக்கு. உணமையில் ஹிந்தியின் தாக்கம் இல்லாததால்தான் தமிழ்நாட்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்வி வளமை பெற்று, அதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பல ஹிந்தி மொழிவாரி மாநிலத்தவரை விடவும் ஆங்கிலத்தில் வலுவாக இருக்கின்றனர். அதன் விளைவே கடந்த பத்து ஆண்டுகளில் ஹிந்தி மாநிலத்தவரை விடவும் அதிக அளவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் கணிணித் துறையில் முன்னேற முடிந்தது.

    ராமா
    கணினிக்கு சமஸ்கிருதம் தோதான மொழி, நாசா சொல்கிறது என்பதெல்லாம் புருடா. அதைப் போன்ற செய்திகளை ஆராயாமல் சொல்வதும் வலியுறுத்துவதும் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூடு. ஒரு தவறான தகவலைத் தந்து அது பொய் என்றி நிரூபணம் ஆகும்போது, நம் மீதுள்ள நம்பகத்தன்மை அடிபட்டுப் போகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  337. ////“செப்புமொழி பதினெட்டுடையாளாம் பாரததேவி வாழிய …வாழியவே…”

    மொழிகள் கருவிகளே என்பதை உணர்வோம். பல கருவிகளையும் பயன்படுத்தி முன்னேறுவோம். ///

    அந்தப் பதினெட்டு இப்போது அதிகமாகக் கூட இருக்கலாம்.

    சரி செப்புமொழி பதினெட்டுடைய பாரதமாதா என்றால் அந்தப் பாரத மாதா இயங்குவது யார் மூலம் ? மத்திய அரசின் மூலம்தானே?

    அப்படியானால் அரசு அலுவல் மொழி என்று ஆங்கிலம், ஹிந்தி என இரண்டே இரண்டின் மூலம் இயங்குவது சரியில்லையே.

    அந்தப் பாரத மாதா எனது மொழியான தமிழில் என்னுடன் எப்போது உரையாடுவார்?

    அந்தப் பாரத மாதா கன்னடனிடம் கன்னட மொழியில் உரையாடுவாரா?
    தெலுங்கனிடம் தெலுங்கிலும் மராத்தியனிடம் மராத்தியிலும் மலையாளியிடம் மலையாளத்திலும், பெங்காலியிடம் பெங்காலியிலும் போஜ்புரியிடம் போஜ்பூரியிலும் முதாலான படிக்கு அவரவர் மொழியில் உரையாடுவாரா?

    அப்படி உரையாடும்போதுதான் உண்மையான ஜனநாயகம் பிறக்கும். தழைக்கும்.

    மிகப்பெரிய வழிய அரசு – இன்று உள்ள கணினிக் காலத்தில் மொழியாக்கம் செய்து அப்படி குடிமகனின் மொழியில் அவனுடன் அலுவல் கொள்வது எளிதே. அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.

  338. நான் முன்னரே குறிப்பிட்டபடி நான் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கை, அரசு மக்களுடன் அவரவர் மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது. நமது பிரதமர் மோடி அவர்கள் அந்த நல்ல பழக்கத்தை இப்போது துவக்கி வைத்திருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது.

    https://pib.nic.in/newsite/pmmessage.aspx

    இதில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தமிழ், உருது, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், கொங்கணி, அஸ்ஸாமிஸ், டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, நேபாலி, காஷ்மீரி ஆகிய 17 மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

    நமது பிரதமர் ஒருவர் நம் நாட்டு மக்கள் அனைவரின் தாய்மொழியிலும் செய்தி வெளியிட்டமை மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வைக்கும் நிகழ்வு ஆகும்.

  339. உயர்திரு அடியவன் அவர்களே,

    இந்தித் திணிப்பு, ஆங்கிலத் திணிப்பை எல்லாம் விட்டு விடுங்கள். இப்பொழுது தமிழ் நாட்டில் தமிழ்த்திணிப்பு கட்டாயம் தேவை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பு படித்த அனைவருக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். தமிழில் நன்கு உரையாடத் தெரியும். இப்பொழுது தமிழ்க் கல்வியே மிகவும் அரிதாகிவிட்டது.

    இப்பொழுது நாம் எந்தத் திணிப்பைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவை இல்லை. தமிழ் நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் (கேந்திரீய வித்தியாலயங்கள், ஆங்கில மொழிப் பயிற்ச்சிப் பள்ளிகள் உள்பட) தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்பட வேண்டும். விதிவிலக்கு என்பதே அளிக்கக்கூடாது.

    தமிழ் நாட்டில் கல்வி கற்கவேண்டும் என்றாலோ, கல்விக்கூடங்கள் நிறுவவேண்டும் என்றாலோ, தமிழுக்கு இடம் அளித்துத்தான் ஆகவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும். அதற்கு ஒப்புக்கொள்ளாத பள்ளிகளுக்கு அனுமதி (கேந்திரீய வித்தியாலயங்கள், ஆங்கில மொழி பயிற்சிப்பள்ளிகள்) மறுக்கப் படவேண்டும்.

    இது நடந்துவிட்டால், எந்த மொழித் திணிப்பும் தமிழை ஒன்றும் செய்துவிட முடியாது.

  340. தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலங்களில் அதாவது சுதந்திரத்திற்கு பின்னர் இந்தி எப்போதுமே விருப்பப் பாடமாக தான் இருந்துவந்துள்ளது. 1965- ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, திணிப்பை எதிர்க்கவில்லை. இந்தியைத்தான் எதிர்க்கிறோம் என்று முழங்கினார்கள். இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று அப்போது சொல்லவில்லை. இப்போது புரட்டிப் பேசுகிறார்கள். இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்பது தான் நேரு சொன்ன கருத்து.

    ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளில் ஆங்கிலம் படிக்கும் போதே , கட்டாயமாக இந்தியும் சேர்த்துப் படிக்கிறார்கள் அந்த மாநில மாணவர்கள். நம் தமிழக மாணவர்கள் விருப்பப் பாடமாக இந்தியைப் படிக்கும் வாய்ப்பு 1969-க்கு முன்னர் இருந்தது. ஆனால் , 1969- முதல் அந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டு விட்டது.

    மூத்த அரசியல்வாதிகளின் பேரன் பேத்திகள் இந்தி படித்து மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிவிடுகிறார்கள். அடியவன் போன்றோர் ஒரு விஷயத்தை மனதில் கொள்ளவேண்டும். இன்றைக்கு பீகார், தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய 3 மாநிலத்தவரும் ,மத்திய அரசின் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் ஆகிய பணியிடங்களில் தங்கள் மாநில மாணவர்கள் அதிகம் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் , எட்டாம் வகுப்பு முதலே சிறப்பு கவனம் எடுத்து பயிற்சி அளிக்கிறார்கள்.

    அடியவன் கூறிய கம்ப்யூட்டர் வேலைவாய்ப்பு தேக்க நிலையை அடைந்துள்ளது. இப்போது கம்ப்யூட்டர் துறையில் பல ஆயிரம் பொறியாளர்கள் வேலையை இழந்துள்ளனர். மேலும் இழக்க உள்ளனர். சம்பளமும், இன்க்ரிமெண்டும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு போல ஆகி விட்டது. தமிழர்கள் மட்டும் ஆங்கிலப்புலமையால் உயர்ந்தனர் என்பது ஒரு கட்டுக்கதை. இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில பூர்வீகம் கொண்ட இந்திய வம்சாவளி மாணவர் கணிதத்தின் நோபல் பரிசு போன்ற ஒரு பரிசினை தட்டி சென்றுள்ளார். அவரும் ஆங்கிலப் புலமையால் உயர்ந்தவர் தான். நம் தமிழர்களுக்கு மட்டும் தனி லாபம் எதுவும் கிடையாது.

    மூன்றாவது மொழியாக கட்டாயமாக மற்ற தென்னிந்தியா மாநில மாணவர்கள் இந்தியைப் படிக்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் கட்டாயம் எதுவும் கிடையாது. விருப்பப் பாடமாக கூட படிக்காவிட்டால், நஷ்டம் நமக்குத் தான். மொழியைப் படிக்க வேண்டாம், அந்த மொழியில் அன்றாடம் பயன்படும் சுமார் 100- வாக்கியங்களை பேச, எழுத படிக்க கற்றால் நல்லது. இந்தியாவுக்குள் வாழாமல் , வெளிநாடுகளுக்கு தொழில், வேலைவாய்ப்பு என்று செல்லும் சூழல் ஒரு ஐந்து சதவீதம் பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. இன்று ஆங்கிலத்துக்கு வேலை வாய்ப்பு எதுவும் கிடையாது. மந்தாரின், காண்டநீசு, இந்தி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளே இன்று மார்க்கெட் மொழிகள்.

    அமெரிக்காவிலேயே ஆங்கிலம் சுமார் 14- மாநிலங்களில் தான் உள்ளது. எஞ்சிய 38 மாநிலங்களில் ஆங்கிலம் கிடையாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தவிர வேறு எங்கும் ஆங்கிலம் செல்லாது.

    அடியவனின் மறுமொழியில் சொல்லப்பட்டுள்ள கட்டாய இந்தி திணிப்பு என்பது எப்போதும் நடைபெறவில்லை. அது ஒரு தவறான கூற்று. திராவிட இயக்கங்கள் செய்த பொய்ப் பிரச்சாரம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று யாரும் கூறவில்லை. அன்றாட வாழ்க்கையில் இன்று தமிழகத்தில் பலரும் இந்தியா முழுவதும் அடிக்கடி பயணிக்க வேண்டியுள்ளது. அப்போது தொடர்பு மொழியாக ஆங்கிலம் செல்லுபடியாகவில்லை. வட இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்த படித்தவர்கள் கூட , நாம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், இந்தியில் மட்டுமே பதில் சொல்கிறார்கள். இதில் மதம், சாதி என்ற வேறுபாடே கிடையாது. வட இந்தியாவில் நான் நாற்பது வருடம் சுற்றியுள்ளேன். ஆயிரம் பேர் கூடும் பொது நிகழ்ச்சிகளில், இரண்டு மலையாளி மலையாளத்திலும், இரண்டு தெலுங்கர்கள் தெலுங்கிலும் , இரண்டு கன்னடர்கள் கன்னடத்திலும் , இரண்டு குஜராத்திகள் குஜராத்திலும் கலந்துரையாடுகிறார்கள். ஆனால் இரண்டு தமிழர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் கலந்துரையாடுகிறார்கள்.

    இந்தியை தூக்கிப் பிடிக்க இங்கு யாரும் சொல்லவில்லை. ஆங்கிலத்தை தூக்கி வைத்துக் கொண்டு, தமிழை கீழே போட்டு மிதிப்பவன் தமிழன் மட்டுமே. இந்த நிலை மாறவேண்டும். எதிர்காலத்தமிழன் ஆங்கிலத்தை தவிர, சீனம், இந்தி, ஸ்பானிஷ் ஆகிய மூன்று மொழிகளிலும் அன்றாடம் உபயோகப்படும் சுமார் 100- வாக்கியங்களை பேச தெரிந்துகொள்தல் நன்று.

    இந்த யுகத்தில், தமிழன் என்று அல்ல, யாருமே தனித் தீவாக இருக்க முடியாது. தமிழனை அழிக்க சதி செய்தவர்களும், சதி செய்துகொண்டிருப்போரும் தான் , தமிழனுக்கு வெளி உலக தொடர்பு இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சி படுதோல்வியில் தான் முடியும்.

  341. உயர்திரு ஒரு அரிசோனன் அவர்களே,

    //// இப்பொழுது தமிழ் நாட்டில் தமிழ்த்திணிப்பு கட்டாயம் தேவை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பு படித்த அனைவருக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். தமிழில் நன்கு உரையாடத் தெரியும். இப்பொழுது தமிழ்க் கல்வியே மிகவும் அரிதாகிவிட்டது. ///

    மிக மிகச் சரியான கருத்து !

  342. தமிழகத்தில் திரு சி சுப்பிரமணியம் அவர்கள் காங்கிரஸ் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தபோது தான், தமிழ் வழிக்கல்வியை கல்லூரி அளவுக்கு எடுத்து சென்று ,தமிழில் கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் என்று அறிவியல் பாடங்கள் உட்பட தமிழில் பாடநூல் வெளியிட்டு புரட்சி செய்தார்.

    பின்னர் வந்த 1967- கழகங்கள் தமிழ்நாடு கல்லூரி பாடநூல் பிரிவினை காணாமல் போக செய்து புதிய வரலாறு படைத்தன. அதன்பின்னர், எம் ஜி ஆர் ஆட்சியில், சட்டம் சம்பந்தமான நூல்கள் திரு அரங்கநாயகம் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபோது , சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதமாக தமிழில் வெளியிடப்பட்டன.அந்த நூல்களை இங்கு எங்குமே காணோம். ஏனெனில் மறுபதிப்பு செய்யப்படவில்லை.

    தற்பொழுது அம்பேத்கார் சட்டப் பல்கலை சில சட்ட பாட நூல்களை தமிழாக்கம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி மோகம் குறைந்தபாடில்லை. கல்லூரிகளில் கேட்கவே வேண்டாம். தமிழ்த் துறை பக்கமே போக நம் மாணவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் காரணம் தமிழுக்கு எதிராக செய்யப்பட்ட பொய்ப் பிரச்சாரங்கள் ஆகும். தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழா , தமிழ் படிக்காதே , தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய் என்ற வெற்றுக்கூச்சல் இட்டவர்களும் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

    திரு சி சுப்பிரமணியம் செய்த புரட்சியைக் கூட , அன்றைய காங்கிரஸ் காரர்களும் சரி, இன்றைய காங்கிரஸ் காரர்களும் சரி பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல தவறியதன் காரணமாகவே , தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. தாய் மொழி என்பது ஒவ்வொருவருக்கும் புனிதமானது. தாய் மொழி வழிக் கல்வி மாணவர்களின் கற்கும் திறனை எளிதாக்கும், மேலும் அவர்களின் புத்திக்கூர்மையையும் அதிகரிக்க செய்யும். அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் வளர்ச்சியை சிலர் பலி கொடுத்தனர் என்பதே உண்மை.

    நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் அரசு 1956- ஆம் ஆண்டு மொழி வாரி மாநில சீரமைப்பு செய்தபோது, மாநில மொழி வளர்ச்சிக்கென்று , ஆண்டு தோறும் நிதி ஒதுக்கி , மாணவர்களின் கல்வி, உயர்கல்வி ஆகியவற்றில் மாநிலமொழியில் மலிவு விலையில் பாடப்புத்தகங்களை வெளியிட நிதி உதவி செய்தது. தமிழகத்தில் இருந்த கழக அரசுகள் இந்த நிதியை சில வருடங்கள் மட்டுமே பயன்படுத்தின. பல ஆண்டுகள் இந்த நிதி பயன்படுத்தப்படாமல், நிதி ஆண்டின் முடிவில் மத்திய அரசுக்கே திரும்ப ஒப்படைக்கப் பட்டது என்று செய்தி முன்னரே பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. துக்ளக்கில் கூட இதுபற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.

    மொழி வளர்ச்சிக்கு அரசியல் ஆதாயம் பார்க்காமல் செயல்படும் நிலை வந்தால், எந்த மாநில மொழியும் நல்ல வளர்ச்சி பெறும். அதனை செய்யாமல் மத்திய அரசை குற்றம் சாடுவதை மட்டுமே சிலர் செய்துவந்தால் ஒரு பலனும் இல்லை.

  343. @அடியவன்
    “கணினிக்கு சமஸ்கிருதம் தோதான மொழி, நாசா சொல்கிறது என்பதெல்லாம் புருடா.”
    Sir, this will throw some light on your ” புருடா”
    https://sanskritdocuments.org/news/subnews/NASASanskrit.txt
    But wait Sir, there is more
    https://uttishthabharata.wordpress.com/2011/04/20/sanskrit/
    An intelligent analysis on Sanskrit as a computer LANGUAGE. Please read ALL THE ARTICLES in the link, specifically the 3rd one on ” Similarities between Sanskrit and programming languages.”
    For the uninitiated, this is fantastic site to learn the basics of Sanskrit plus other interesting articles. The more you learn about Sanskrit, the more you will be in amazement and in awe! Enjoy.

  344. சமஸ்க்ருத வாரம் இனிதே முடிந்துள்ளது. கிட்ட தட்ட அனைத்து பள்ளிகளும் இதை ஆசரித்துள்ளனர். திராவிடன் என்ற ஒரு மர்ம கும்பலிடமிருந்து ஒரு பள்ளிக்கு நாங்கள் குண்டு வைப்போம் என்ற மிரட்டல் வந்ததாம் (கடுதாசி, மற்றும் தொலைபேசி அழைப்பு) இதையும் மீறி அப்பள்ளியில் சமஸ்க்ருத வார ஆச்சரணம் செய்து முடித்தார்கள்.

    சமஸ்க்ருத வாரத்தின் நிகழ்வுரை ஆற்றுகையில் ஜோ டீ குருஸ் அவர்கள் பேசிய விஷயத்தின் சுருக்கம்

    * சமஸ்க்ருத மொழியை அழித்துவிட்டுத்தான் ஆங்கிலேஎன் பாரத்ததி முழுவதுமாக அடிமை படுத்தினான் அது வரை அவனுக்கு அடிமை படுத்துதல் சிரமமாகவே இருந்தது
    * நீக்ரோக்கள் விடுதலை அடைந்த பொழுது அப்போதைய ஆங்கிலேயே திருநெல்வேலி கலக்டர் சக ஆங்கிலேயனை பார்த்து சொன்னார், நீக்ரோக்கள் விடுதலை பெற்றார்கள் என்று ஏன் வருந்துகிறீர்கள், நான் இங்கே குறைவாக சாப்பிட்டு, குறைவாக தூங்கி நிறைய வேலை செய்யும் ஒரு கூட்டத்தை பாரதீயனில் பார்கிறேன் வருந்தாதீகள் என்று. நமது அடிமை தனம் ஆங்கில மோகத்தால் இன்றும் தொடருகிறது. இன்றும் நாம் குறைவாக தூங்கி, நிறைவாக வேலை செய்து நோக்கியாக்களையும், மைக்ரோ சாப்டுகளையும் வாழ வைக்கிறோம்.
    * சமஸ்க்ருதத்தில் நமது பண்பாடு, கவி இயல் , வராலாறு, தொழில் நுட்பம், ஆன்மிகம் எல்லாம் உள்ளது இதை கார்காமல் எப்படி வாழ்வது
    * சமஸ்க்ருதம் கலக்காத தமிழை என்னால் பேச முடியாது. சம்ஸ்க்ருதமும் தமிழும் அப்படி ஒன்றர கலந்து விட்டன
    * உண்மையான தமிழர்களான கம்பனும் வள்ளுவனும் சமஸ்க்ர்டுத்தை தமிழில் கலந்து பேசவில்லையா, இரண்டு குறள்களை சுட்டிக் காட்டுகிறார்.
    * இது வேற்று மொழி என்று இதை ஏன் வெறுக்க வேண்டும், இதை எதிர்த்து பிரசாரம் செய்பவர்கள் இதை தங்களது பேர குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். (முன்னாள் கழக அமைச்சர் நடத்தும் ஒரு பள்ளியில் கூட இந்த சமஸ்க்ருத வார கொண்டாட்டம் இருந்திருக்கு`) இவர்களுக்கு ஓட்டலிப்பவர்களை ஏமாற்றி கீழ் மட்டில் வைக்கவே இந்த நாடகம்.
    * நான் பாரத பண்பாட்டிற்கு சொந்தக்காரன் என்று ஒருவன் சமஸ்க்ருதத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஒருக்காலும் சொல்லிக் கொள்ள முடியாது
    * ஒரு கதை சொன்னார்
    * முடிவில் காயத்ரி மந்திரத்தை உரக்க ஓதி (அனைவரும் ஞானம் பெறுவீர் என்று சொல்லாமல் சொல்லி) நிறைவு செய்தார்.

  345. உயர்திரு பிரதாப் அவர்களே,

    1. //மூன்றாவது மொழியாக கட்டாயமாக மற்ற தென்னிந்தியா மாநில மாணவர்கள் இந்தியைப் படிக்கிறார்கள்//

    வட இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி, இந்தி, இந்தி என்று ஒரே மொழிதான் படிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆங்கிலமோ, மேலும் ஒரு தென்னிந்திய மொழியையோ கற்றுக்கொள்வதில்லை. அங்கு யாரும் அவர்களை மற்ற மொழியைக் கற்றுக்கொள் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தியியே பேசலாம். தமிழில் பேச அனுமதி இல்லை. இந்தக் கொள்கை ஒரு கண்ணில் வெண்ணை, இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இல்லையா?

    2. //எதிர்காலத்தமிழன் ஆங்கிலத்தை தவிர, சீனம், இந்தி, ஸ்பானிஷ் ஆகிய மூன்று மொழிகளிலும் அன்றாடம் உபயோகப்படும் சுமார் 100- வாக்கியங்களை பேச தெரிந்துகொள்தல் நன்று.//

    யார் வேண்டாம் என்றது? தமிழர்கள் முதலில் தாய் மொழியான தமிழைக் கற்றுக்கொள்ளுங்கள், குடிபுகுந்தவர்கள் தமிழ் நாட்டின் வழக்கு மொழியான தமிழைக் கற்றுக்கொல்ல்லுங்கள் என்றுதானே சொல்கிறோம். அதை ஆதரித்து எழுதிவிட்டுப் பின்னர் உங்கள் கருத்துக்களை எழுதலாமே!

    3. //அமெரிக்காவிலேயே ஆங்கிலம் சுமார் 14- மாநிலங்களில் தான் உள்ளது. எஞ்சிய 38 மாநிலங்களில் ஆங்கிலம் கிடையாது.//

    நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்களா, அல்லது கனவு உலகத்தில் இருக்கிறீர்களா? எங்கு இருந்தாலும் சரி, நீங்கள் எழுதி இருப்பதில் கடுகளவுகூட உண்மை இல்லை. அமெரிக்கக் குடிமகனான நான் உண்மையை உரைக்கிறேன்.

    அமெரிக்காவில் எந்த மூலை-முடுக்கிலும் ஆங்கிலம் அறியப்படுகிறது, பேசப்படுகிறது. அமெரிக்கக் குடிமகன்/ள் ஆவதற்கு குறைந்த பட்ச (எட்டாம் வகுப்புக்கு இணையான) ஆங்கில அறிவு தேவை. அமெரிக்க வரலாறு, அரசு பற்றிய அறிவும் தேவை. இதைச் சோதித்து அறிந்த பின்னரே குடி உரிமை தரப்படுகிறது.

    இந்திய ஊடகங்களில்தான் அமெரிக்காவைப் பற்றி தவறான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் என்றால் நீங்களுமா அப்படி???

    4. //வட இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்த படித்தவர்கள் கூட , நாம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், இந்தியில் மட்டுமே பதில் சொல்கிறார்கள். இதில் மதம், சாதி என்ற வேறுபாடே கிடையாது//

    உண்மை. நானும் அனுபவித்து அறிந்திருக்கிறேன். ஆங்கிலம் தெரிந்தாலும் இப்படிச் செய்யும் செயலை — மற்றவர்கள் இந்தி கற்றே ஆகவேண்டும் என்ற எந்தத் திமிரை — இதை இந்தி வெறி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
    இந்த இந்தி வெறியை நான் அமெரிக்காவில்கூட, இந்தி வெறியர்களிடம் அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்குத் தக்க பாடமும் புகட்டி இருக்கிறேன். இப்படிப் பட்டவர்களின் மொழியை நாம் கற்றுக் கொள்வதில் தவறில்லை. வட இந்தியாவில் அது நமக்குத் தேவை. ஆனால், தமிழ்நாட்டில், இப்படிப்பட்ட வெறியர்களிடம் தமிழில் பேசினால்தான் அந்த வெறி அடங்கும். தாங்கள் ஆளப் பிறந்தவர்கள், மற்றவர்கள் தங்களுக்கு அடங்கியவர்கள் என்ற தினவு நீங்கும். புந்த பூமியான பாரதம் இந்தியாவே தவிர, “ஹிந்தியா” அல்ல என்று உணர்வார்கள்.

    அதனால்தான் இந்தியாவில் பலராலும் பேசப்படாத ஒரு மொழியே இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி அந்த இடத்தை அலங்கரித்தது.. அந்த இடத்தில் தற்போழுது ஆங்கிலம் அமர்ந்திருக்கிறது.

    ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழி என்பதை மறந்து, தமிழைத் துறப்பதைத்தான் தாயுமானவன், அடியவன் போன்றோர்கள் எதிர்க்கிறோம்.

    நான்கு மொழிகளை (தமிழ், ஆங்கிலம், இந்தி, ஸமஸ்கிருதம்) அறிந்தவன், தெலுங்கு, மலையாளம் இவற்றைச் சிறிது அறிந்தவன் என்ற முறையில் எழுதுகிறேன்.

    தமிழ் நாட்டில் இருந்துகொண்டு, தமிழ் தெரியாமல் இருப்பது, அதற்கு ஆதரவாக மற்ற மொழிகளுக்குக் கொடி பிடிப்பது, தமிழுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

    இதைத் தென்னாடுடைய என் இறைவன் மீது ஆணைஇ ட்டுச் சொல்கிறேன்!

    “உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வீர்!” — அமரகவி பாரதி

  346. அன்புள்ள திரு அரி சோனன்,

    1. ஒரு வட இந்திய பாஜக எம் பி , சென்னையில் இருக்கும் தமிழ் நாட்டு உயர்நீதிமன்றத்திலும், அதன் மதுரை அமர்வு உட்பட , தமிழை பயன்பாட்டு மொழியாக ஆக்க வேண்டும் என்று நேற்று இந்திய குடியரசுத் தலைவர் திரு பிரணவ குமார் முகர்ஜி அவர்களிடம் மனுக்கொடுத்துள்ளார். மெட்ராஸ் என்பதை சென்னை என்று 1996- ஆம் ஆண்டிலேயே பெயர் மாற்றம் செய்த கழகம் , உயர்நீதிமன்றத்தின் பெயரை மட்டும் இன்னமும் மெட்ராஸ் என்றே வைத்துள்ளது. பதினெட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

    2. சென்னையில் வேலை பார்க்கும் அல்லது தொழில் புரியும் வட இந்திய நண்பர்கள் பலரும் நம் சென்னை தமிழரை விட , சிறப்பாக தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் பள்ளியில் தாய் மொழி தவிர பிற மொழிகளை கற்பதில்லை என்பது அவர்களுக்குத்தான் நட்டம். நமக்கு என்ன.?

    3.1977- 78ஆம் ஆண்டு பார்லிமெண்டில் திரு குமரி அனந்தன் அவர்கள் , ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் ஆகிய அகில இந்திய தேர்வுகளை தமிழிலும், இதர மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது, அப்போது பிரதமராக இருந்த திரு மொரார்ஜி தேசாய் அவர்கள் , உடனே அனுமதித்தார். 1947- முதல் 1977- வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் துரோகிகள் காலத்தில் அது நடக்கவில்லை. மொரார்ஜி காலத்தில் தான் நடந்தது என்பதை தயவு செய்து நினைப்போம்.

    4. பார்லிமெண்டில் கேட்கப்பட்ட தமிழக அதிமுக எம்பிக்களின் வினாக்களுக்கு தமிழில் பதில் அளிக்கிறார் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன். நமது எம்பிக்கள் தமிழில் பேசுவதை யாரும் தடுக்க முடியாது.

    ” In addition, the constitution permits a person who is unable to express himself in either Hindi or English to, with the permission of the Speaker of the relevant House, address the House in his mother tongue.”( விக்கி )- எனவே தமிழில் பார்லிமெண்டில் பேச அரசியல் சட்டத்தை திருத்துங்கள் யார் வேண்டாம் என்றது. திமுக, அதிமுக ஆகிய கோஷ்டிகள் என்ன கிழிக்கின்றன ? ஒரு அரசியல் சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முயற்சிக்கலாமே ? யாரும் எதிர்க்கமாட்டார்கள். தமிழகத்தை 1947- முதல் 1967- வரை ஆண்ட காங்கிரஸ்காரன் தான் துரோகி என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் . 1967- முதல் 2014-வரை தமிழகத்தை ஆண்ட கழகங்கள் இதில் ஏதாவது செய்திருக்க முடியாதா ? சூட்கேசை வாங்குவதிலே மட்டும் குறியாய் இருப்பவர்களுக்கு, தமிழைப் பற்றி என்ன கவலை ?

    5. அமெரிக்காவில் 28 மாநிலங்களில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி மொழி என்று விக்கி கூறுகிறது. நான் எழுதிய 13 என்பதை 28- என்று திருத்திக் கொள்கிறேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஞ்சிய 23 மாநிலங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழி அல்ல. தமிழகத்தில் எல்லோருக்கும் ஆங்கிலம் புரிவது போல, அங்கும் ஆங்கிலம் அதிக மக்களுக்கு தெரிகிறது. அவ்வளவு தான். 23 மாநிலங்களில் ஆங்கிலம் அவர்களின் தாய்மொழி அல்ல. எனவே ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை நான் குறைவாகத் தெரிவித்திருந்தால், அதனை தற்பொழுது மேலும் கூட்டிக்கொள்ளத் தயாராக உள்ளேன்.

    தாய் மொழி தமிழில் கல்லூரிப் படிப்பில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புப் வரை கொண்டு வந்தவர் காங்கிரஸ் காரரான திரு சி சுப்பிரமணியம் அவர்கள். ஆனால் உயர்கல்வியில் சில உதவாத பாடங்கள் தவிர , அதிகம் பயன்படும் அறிவியல் பாடங்களில் தமிழைக் கைவிட்டவர்கள் கழக ஆட்சிகளே ஆகும்.

    தமிழ் நாட்டில் பிழைப்புக்காக வந்த வட நாட்டான் அனைவரும் மிக எளிதாக தமிழ் பேசுகிறார்கள். நான் நேரிலேயே பார்க்கிறேன். ஆனால் தமிழ் நாட்டுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் , தமிழுக்கு இடம் இல்லாது, ஆங்கில மோகம் , ஆங்கில வெறி பிடித்து அலைகிறார்கள். ஆங்கிலத்தால் மட்டுமே தமிழ், குற்றுயிரும் கொலை உயிரும் ஆகியுள்ளது. பெரியார் போன்ற சிலர் செய்த துர்ப்போதனையால் , ஆங்கிலமும் படி என்பதற்கு பதிலாக , ஆங்கிலம் மட்டுமே படி என்று தமிழன் எடுத்துக்கொண்டான். இதுதான் நடந்தது.

    தமிழக அரசியல் தலைவர்கள் மொழி விவகாரத்தில், நம் மக்களை தவறான பாதைக்கு இட்டு சென்றுள்ளனர் என்பதே உண்மை. இதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். பள்ளியில் நம் மக்கள் தமிழ் படிப்பதை வெளியார் யாரும் தடுக்கவில்லை. ஆங்கில ஊடகங்களும், நம் தமிழரில் பெரும்பாலோருக்கு இன்றும் இருக்கும் ஆங்கிலேய அடிமைப் புத்தியும் தான் தமிழின் இன்றைய நிலைக்கு உண்மைக் காரணம்.

    ” கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து

    பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்

    மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

    எண்ணிடைப்படக் கிடந்ததாய் எண்ணவும் படுமோ “

  347. ராமா

    தொடுப்புக்களுக்கு நன்றி. இது குறித்துப் பல Blog -குகள் நம்மவர்கள் எழுதித் தள்ளி இருக்கிறார்கள். எத்தனைப் பேர் மூலக் கட்டுரையைப் படித்தவர்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    நாசா சொல்கிறது என்பது வேறு.

    அமெரிக்க விஞ்ஞான சஞ்சிகை ஒன்றில் ரிக் பிரிக்ஸ் என்ற நாசாவில் வேலை செய்யும் விஞ்ஞானி இது தொடர்பான ஒரு கட்டுரையை வெளியிட்டிடுக்கிறார் என்பது வேறு.

    எனவே நாசா சொல்கிறது என்று கூறுவது பிழை. தவறு. Misrepresentation of fact so as to derive an undue advantage. அதை நாம் செய்யலாகாது என்பதே எனது கருத்து.

    ரிக் பிரிக்ஸ் அப்படி ஒரு கட்டுரையை அமெரிக்க ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (உருவாக்கிய ஞானம் – என்று மொழி பெயர்ப்புச் செய்யலாமா ?! ) சங்கம் வெளியிடும் சஞ்சிகையில் வெளியிட்டிருக்கிறார்.

    Association for the Advancement of Artificial Intelligence
    http://www.aaai.org/

    அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்திருக்கிறேன்.
    கட்டுரைக்கான தொடுப்பு இதோ:
    https://www.aaai.org/ojs/index.php/aimagazine/article/view/466

    இது விரிவான கட்டுரை. அவரது கருத்து வேறெந்த மொழியிலும் இல்லாதவாறு சமஸ்கிருதம் ஒரு பொருளைச் சுட்டும் விதம் “Artificial Intelligence ” வகையினதாக இருக்கிறது என்பது ஆகும். Artificial Intelligence கணினிக்கான மொழியாக்கக் கருதுகோள் என்று கருதலாம். ஆங்கிலத்தில் கூகிள் கூறுவது: the theory and development of computer systems able to perform tasks normally requiring human intelligence, such as visual perception, speech recognition, decision-making, and translation between languages.

    அந்தக் கட்டுரையில் முடியும் வரிகள் இதோ:
    ///As has been shown, the main point in which t,he two
    lines of thought have converged is that the decomposition
    of each prose sentence into karalca-representations of action
    and focal verbal-action, yields the same set of triples
    as those which result from the decomposition of a semantic
    net into nodes, arcs, and labels. It is interesting to
    speculate as to why the Indians found it worthwhile to
    pursue studies into unambiguous coding of natural language
    into semantic elements. It is tempting to think of
    them as computer scientists without the hardware, but a
    possible explanation is that a search for clear, unambiguous
    understanding is inherent in the human being. Let
    us not forget that among the great accomplishments of
    the Indian thinkers were the invention of zero, and of the
    binary number system a thousand years before the West
    re-invented them. Their analysis of language casts doubt
    on the humanistic distinction between natural and artificial
    intelligence, and may throw light on how research in
    AI may finally solve the natural language understanding
    and machine translation problems..///

    நாசா நடத்தும்

  348. அன்பின் ஸ்ரீ சாரங்க்

    கலாசார தேசிய ஒற்றுமையைக் காப்பதில் ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு மொழிக்கும் பங்கிருக்கிறது. இந்த இலக்கு சார்ந்து தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தின் பங்கு அளவிடற்கரியது.

    ஸ்தாபன ரீதியாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் செயல்பாடுகளில் மொழிவழியான ஒற்றுமை…… மிக அழுத்தமாக….. ஹிந்துஸ்தானமுழுதும் இளம் சிறார்களிலிருந்து பெரியோர்கள் வரை போதிக்கப்பட்டு வருகிறது.

    மொழிவழி ஒற்றுமைக்காக சங்கம் தேசம் முழுதும் பாடுபட்டு வருகையிலேயே……. மொழி வெறியை தூபம் போட்டு வளர்ப்பதற்கும்……. ஹிந்துஸ்தானமுழுதும் மதவெறியை உள்ளடக்கி மொழிப்பற்று கொண்டது போல நடிக்கும்………. ஒரு மொழிக்காரர்களை மற்றொரு மொழிக்காரர்களுடன் மொழியின் அடிப்படையில் வெறித்தனமாக மோத விட்டு அதன் மூலம் மத அறுவடை செய்வதைக் குறியாகக்கொண்ட………..பயங்கரவாத ஆப்ரஹாமிய இயக்கங்களும் ஓய்ச்சல் ஒழிச்சலில்லாது செயல்பட்டு வருகின்றன.

    ஏகாதிபத்ய ஆப்ரஹாமியத்தைக் குறியாகக்கொண்ட ஆப்ரஹாமிய ஸ்தாபனங்கள் தங்கள் மொழிவெறிச் செயல்பாடுகளை அரங்கேற்றும் அதே வேளையில்

    வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே

    என்ற கருத்தைக்கொண்ட சங்கப் பாடல் வெவ்வேறு மொழிகளில் ஹிந்துஸ்தானமுழுதும் சங்க நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. தூபம் போட்டு மொழிவெறியாகப்பட்டது கொழுந்து விட்டு எரிக்கப்படும் தற்போதைய சூழலிலும்………. மொழிவழி ஒற்றுமை என்பது சங்கச் செயல்பாடுகளால் மட்டிலும் நிலைநாட்டப்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.

    குதர்க்கமே குறி என்று செயல்படுபவர்கள் இந்த பாடலில் சம்ஸ்க்ருதம் இல்லையே என்று கூட விதண்டாவாதம் செய்ய முயலலாம்.

    சமயம் சார்ந்து மாற்று மொழி பேசுபவர்களிடம் தமிழ்மொழி பரிச்சயம் மற்றிம் பரவலாக்கல் எப்படி நிகழ்கிறது என்பது விரிவாகப் பேசப்பட வேண்டிய விஷயம்.

    \\\\\\ சமஸ்க்ருதத்தில் நமது பண்பாடு, கவி இயல் , வராலாறு, தொழில் நுட்பம், ஆன்மிகம் எல்லாம் உள்ளது இதை கார்காமல் எப்படி வாழ்வது
    * சமஸ்க்ருதம் கலக்காத தமிழை என்னால் பேச முடியாது. சம்ஸ்க்ருதமும் தமிழும் அப்படி ஒன்றர கலந்து விட்டன
    * உண்மையான தமிழர்களான கம்பனும் வள்ளுவனும் சமஸ்க்ர்டுத்தை தமிழில் கலந்து பேசவில்லையா, இரண்டு குறள்களை சுட்டிக் காட்டுகிறார்.
    * இது வேற்று மொழி என்று இதை ஏன் வெறுக்க வேண்டும், இதை எதிர்த்து பிரசாரம் செய்பவர்கள் இதை தங்களது பேர குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். (முன்னாள் கழக அமைச்சர் நடத்தும் ஒரு பள்ளியில் கூட இந்த சமஸ்க்ருத வார கொண்டாட்டம் இருந்திருக்கு`) இவர்களுக்கு ஓட்டலிப்பவர்களை ஏமாற்றி கீழ் மட்டில் வைக்கவே இந்த நாடகம். \\\\\

    ஸ்ரீ ஜோ டி குரூஸ் அவர்களது நிரைவுரையில் பகிரப்பட்ட உளமார்ந்த மேற்கண்ட வாசகங்கள் நிதர்சனத்தை பிட்டுப்பிட்டு வைக்கின்றன என்றால் மிகையாகாது.

    இந்த வ்யாசத்தின் கருப்பொருள் தேவையா இந்த வடமொழி வாரம்…………..

    என்ற கேழ்விக்கு……….

    தமிழக மக்களும் ஹிந்துஸ்தானத்தின் மற்ற ப்ரதேசத்து மக்களும் இந்த முயற்சிக்குத் தங்கள் பேராதரவினை நல்கியதின் மூலம் தெரிவிக்கும் செய்தி……………

    ஆம் தேவை. நிச்சயமாகத் தேவை.

    இந்த முயற்சியில் ஈடுபட்ட…………… தேச ஒற்றுமையில் நாட்டமுள்ள……… அனைத்து மொழி பேசும் அன்பர்களுக்கும் அனைத்து மதங்களைச் சார்ந்த அன்பர்களுக்கும்…… நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  349. அந்தக் கட்டுரையின் துவக்க வரிகள் இதோ :
    ///In the past twenty years, much time, effort, and money has
    been expended on designing an unambiguous representation of
    natural languages to make them accessible to computer processing
    These efforts have centered around creating schemata
    designed to parallel logical relations with relations expressed
    by the syntax and semantics of natural languages, which are
    clearly cumbersome and ambiguous in their function as vehicles
    for the transmission of logical data. Understandably, there is a
    widespread belief that natural languages arc unsuitable for the
    transmission of many ideas that artificial languages can render
    with great precision and mathematical rigor.
    But this dichotomy, which has served as a premise underlying
    much work in the areas of linguistics and artificial intelligence,
    is a false one There is at least one language, Sanskrit, which
    for the duration of almost 1000 years was a living spoken language
    with a considerable literature of its own Besides works
    of literary value, there was a long philosophical and grammatical
    tradition that has continued to exist with undiminished
    vigor until the present century. Among the accomplishments
    of the grammarians can be reckoned a method for paraphrasing
    Sanskrit in a manner that is identical not only in essence but in
    form with current work in Artificial Intelligence This article
    demonstrates that a natural language can serve as an artificial
    language also, ////

    ஆனால் எழுதப்பட்ட blog – கள் நாசா தொடர்ந்து கணினிக்கான மொழித் தேடல் குறித்த ஆய்வுகளை (ஆய்வுகள் அப்படிச் செய்யப்படுகின்றனவா என்பதே கேள்வி) நிறுத்தி விட வேண்டும் என்று ரிக் பிரிக்ஸ் சொன்னதாக எழுதுகின்றன!

  350. //வட இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்த படித்தவர்கள் கூட , நாம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், இந்தியில் மட்டுமே பதில் சொல்கிறார்கள். இதில் மதம், சாதி என்ற வேறுபாடே கிடையாது//

    ///உண்மை. நானும் அனுபவித்து அறிந்திருக்கிறேன். ஆங்கிலம் தெரிந்தாலும் இப்படிச் செய்யும் செயலை — மற்றவர்கள் இந்தி கற்றே ஆகவேண்டும் என்ற எந்தத் திமிரை — இதை இந்தி வெறி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?///

    மும்பையில் உடைந்த இந்தியில் வினவிய போது ஒரு மராத்தியர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ஹம கோ ஹிந்தி nai மாலும் என்றார். இன்னொரு முறை பரோடாவில் ஒரு ரிக்ஷாக்காரன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்! தாய் மொழிப் பற்று என்பது எங்கும் பரவலானதுதான். அது வெறியாகாதவரை இன்பமே. வெறியானால் அனைவருக்கும் துன்பமே.

    துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை செய்யும் இந்தியக் காவலர்கள் என்னிடம் ஆங்கிலத்தில் பேச மறுத்து நான் இந்தி தெரியாது என்று சொன்ன போது, மீண்டும் இந்தியில்தான் பேசவேண்டும் என்று வெறித்தனக்கக் கூறியதும் நடந்தது!

  351. // அமெரிக்காவிலேயே ஆங்கிலம் சுமார் 14- மாநிலங்களில் தான் உள்ளது. எஞ்சிய 38 மாநிலங்களில் ஆங்கிலம் கிடையாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தவிர வேறு எங்கும் ஆங்கிலம் செல்லாது. //

    பிரதாப், எந்த ஆதாரத்தில் இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா ? ஆங்கிலமே இல்லாத அந்த 38 அமெரிக்க மாநிலங்களை குறிப்பிட்டால் உண்மை அறிய ஏதுவாக இருக்கும்.

  352. Sanskrit is the best programming language—- This news is being spread from 1980s …Did any computer uses the sanskrit as programming language now? Let us come out of the bogus claims. Sanskrit does not need any certifcate from NASA,

    BTW, why there is no google translator for sanskrit & Malayalam?

  353. ஈழத்து எழுத்தாளர் திரு சிவேந்திரன் அவர்களுக்கு , திரு ஜெயமோகன் அவர்கள் அளித்த விரிவான பதில் கடிதம் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதே பதில், குஜராத்தி கவிஞரின் எழுத்தை உதாரணம் காட்டி எழுதிய, திரு சுவனப்பிரியன் அவர்களுக்கும் பொருந்தும்:-

    https://www.jeyamohan.in/?p=60337

  354. உயர்திரு பொன்.முத்துக்குமார் அவர்களே,

    அமெரிக்காவில் (யு.எஸ்.ஏ)வில் மொத்தம் ஐம்பது மாநிலங்களே உள்ளன. ஆகவே உயர்திரு பிரதாப்பின் கணக்கின்படி (14+38=52) என்பது சரியல்ல. அவர் பாவம் ஏதோ எழுதிவிட்டார், விட்டுவிடுங்கள்.

    விக்கிபீடியாவில் கொடுத்துள்ள விவரம் கீழே:

    The United States of America (USA or U.S.A.), commonly referred to as the United States (US or U.S.), America, and sometimes the States, is a federal republic[16][17] consisting of 50 states and a federal district. The 48 contiguous states and Washington, D.C., are in central North America between Canada and Mexico.
    Official languages None at federal level
    National language English

    நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்றால் கீழ்க்கண்ட லிங்கிற்குச் செல்லுங்கள்.
    https://en.wikipedia.org/wiki/United_States
    வணக்கம்.

  355. அன்புள்ள திரு பொன். முத்துக்குமார்,

    என் முந்தைய மறுமொழியில் திருத்தம் செய்து புதிய திருத்த மறுமொழி பதிவு செய்துள்ளேன். அது இன்னமும் தளத்தில் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அதன் பகுதியை மீண்டும் பதிவு செய்கிறேன்.

    ” 5. அமெரிக்காவில் 28 மாநிலங்களில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி மொழி என்று விக்கி கூறுகிறது. நான் எழுதிய 13 என்பதை 28- என்று திருத்திக் கொள்கிறேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”-

  356. @KMV
    It is a good idea to do some research rather than coming out with opinions as facts.
    Your quote”Did any computer uses the Sanskrit as programming language now? Let us come out of the bogus claims.”
    Please visit the following site. Please take time and go through various articles. Amazing!
    https://www.sanskritacademy.org/Research.htm
    I do agree that Sanskrit does not need any certificate from NASA. BTW,you need to ask Google the reason for the non existence of translator for Sanskrit and Malayalam.

  357. உயர்திருவாளர்கள் பிரதாப், பொன்.முத்துக்குமார், மற்றும் தமிழ் இந்து நண்பர்களே

    அமெரிக்காவின் அலுவலக மொழி (official language) பற்றி தவறான புரிதல் நிலவி வருகிறது என்று தோன்றுகிறது. எனவே, என்னால் இயன்ற அளவுக்கு விளக்குகிறேன்.

    அமெரிக்காவில் ஒன்றிணைந்த அரசு (Federal government) இந்தியாவின் மத்திய அரசுக்கு ஈடானது. ஆயினும் இந்திய மத்திய அரசுக்கு இருக்கும் பல அதிகாரங்கள் அதற்கு இல்லை. ஒன்றிணைந்த அரசு, அமெரிக்க அரசியல் அமைப்புக்கு இணங்கிச் செயல் படுகிறது. அரசியல் அமைப்பு ஒன்றிணைந்த அரசுக்குப் பல அதிகாரங்களை வழங்கி உள்ளது.

    ஒன்றிணைந்த அரசு எந்த ஒரு மொழியையும் அலுவலக மொழியாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அது ஆங்கிலத்தையே கையாளுகிறது. ஆங்கிலமே தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல தடவை அரசியல் அமைப்பை மாற்றி ஆங்கிலத்தை அலுவலக மொழி ஆக்கவேண்டும் என்று முயன்றபோதும், இந்த முயற்சி கைகூடவில்லை. அமெரிக்க அரசியல் அமைப்பை மாற்றுவது மிகவும் கடினமானது.

    https://www.wsws.org/en/articles/2006/05/engl-m20.html
    https://www.english.illinois.edu/-people-/faculty/debaron/essays/legend.htm

    “Many people are surprised to learn that the United States has no official language. As one of the major centers of commerce and trade, and a major English-speaking country, many assume that English is the country’s official language. But despite efforts over the years, the United States has no official language.
    Almost every session of Congress, an amendment to the Constitution is proposed in Congress to adopt English as the official language of the United States. Other efforts have attempted to take the easier route of changing the U.S. Code to make English the official language. As of this writing, the efforts have not been successful.”

    அதே சமயம் அரசியல் அமைப்பு, “ஒருங்கிணைந்த அரசுக்கு வழங்கப்படாத அதிகாரங்கள் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் சேர்ந்தவை” என்றும் சொல்லி இருக்கிறது.

    எனவே, பல மாநிலங்கள் (31) ஆங்கிலத்தை அலுவலக மொழியாக (official language) அறிவித்துள்ளன. சில மாநிலங்கள்(ஹவாய், நியூ மெக்சிகோ, லூசியானா) ஆங்கிலத்துடன், மற்ற மொழிகளையும் அலுவலக மொழியாக ஆகி உள்ளன. மற்றவை அலுவலக மொழி பற்றி அறிவிக்காவிட்டாலும் ஆங்கிலத்தையே கையாளுகின்றன.

    “Both Hawaiian and English are official languages in Hawaii, by state law.[196] While neither has an official language, New Mexico has laws providing for the use of both English and Spanish, as Louisiana does for English and French.[197] Other states, such as California, mandate the publication of Spanish versions of certain government documents including court forms.[198]”

    “Indeed, we have seen a number of calls for English language legislation in recent years, which are often tied to issues of immigration and immigration reform. Yet, such legislation is quite common in the United States. Thirty-one states have adopted English as their official language, since the 1980s…”
    https://www.washingtonpost.com/blogs/monkey-cage/wp/2014/06/18/when-and-why-do-u-s-states-make-english-their-official-language/

    இங்கு அமெரிக்கவைப் பற்றி நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆட்சி மொழி (reigning or ruling language) என்று குறிப்பிடுவதை இங்கு யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், ஆண்டான், அடிமை என்ற உணர்வை அது உண்டு பண்ணுகிறது., அலுவலக மொழி (official language) என்றால், அத்தகைய உணர்வு தோன்றுவதில்லை என்று நம்புகிறார்கள்.

    எனவே, பாரத பூமியில் இருக்கும் நமது தமிழ் உடன்பிறப்புக்களும், இந்த நல்ல விஷயத்தில் அமெரிக்கர்களைப் பின்பற்றி, அலுவலக மொழி என்னும் சொல்லைத் தமிழில் கையாளுவதே சாலச் சிறந்தது என்று படுகிறது.

    நன்றி. வணக்கம்.

  358. ஒரு தகவல். பாலா வருத்தப்படுவதற்கு

    நேற்று ஒருத்தர் (அவர் ஆசாரியாக இருக்கிறார் , அவரது தந்தை ஏழை விவசாயி, அவரது தாத்தாவும் விவசாயி). ஒரு பிரபல வேத பாடசாலைக்கு சென்று அங்குள்ள வேதம் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்க்ருதம் பேச சொல்லி கொடுத்துவிட்டு வந்தார்.
    பிராமணர் அல்லாதவர்கள் சமஸ்க்ருதம் படிப்பது சமூக மாற்றமோ ஆச்சரியமோ இல்லை. நேற்று நடந்தது தான் மாற்றம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் ஒரு விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *