தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில்  ‘சமஸ்கிருதம்’ என எழுதியிருக்கிறது.  modi_pt_cartoonஅதாவது மோதி அரசு சமஸ்கிருத வாரத்தை கொண்டாடச் சொல்லி சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விட்டதை கிண்டல் செய்கிறார்களாம். ஆனால்  இந்த கார்ட்டூன் படத்திற்கும் மத்திய அரசு சுற்றறிக்கைக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் கொதித்தெழுந்துவிட்டார்கள் திராவிட கொழுந்துகள்! எப்படி கொண்டாடலாம் சமஸ்கிருத வாரம்? அதனால் தமிழ் அழிந்துவிடும் அல்லவா? புரட்சிp புயல் வைகோ முதல் புரட்சித்தலைவி ஜெயலலிதா வரை தமிழ் உணர்வு சமஸ்கிருத வெறுப்பாக கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தப் புரட்சி தமிழ் ஜோதியில் கலக்காமல் இருந்தால் பிறகு தெய்வ குத்தம் ஆகிவிடுமென நினைத்ததோ என்னவோ ‘புதிய தலைமுறை’யும் இந்த கார்ட்டூனைப் போட்டு புண்ணியம் தேடிக் கொண்டது.

இந்த கார்ட்டூன் குறித்து தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினரும் வரலாற்றாராய்ச்சியாளரும், பாஜகவின் மாநில எஸ்.சி. பிரிவு செயற்குழு உறுப்பினருமான திரு. ம.வெங்கடேசன் கூறுகிறார்:

இந்த கார்ட்டூன் படத்திற்கும் மோடி அரசு சுற்றறிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. maveஇது மோடி அரசுக்கு அவப்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டிருக்கிறது. மோடி அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் ( படிக்கும் மாணவர்களுக்கு) சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது. மேலும் இது பல ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டு மக்கள் அனைவருமோ அல்லது  எல்லா மாநில அரசுகளுமோ சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி அரசு சொல்லவில்லை.

நரேந்திர மோதி அரசு சிபிஎஸ்இ  பள்ளிகளில் மட்டும் ( படிக்கும் மாணவர்களுக்கு) சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்றுதான் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் ஏதோ சமஸ்கிருதம் தமிழுக்கு விரோதம் என்பது போலவும், இது ஒரு சதித்திட்டம் போலவும், இதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது போலவும்,  இங்குள்ள தமிழ் ஆர்வலர் என்கிற பெயரில் செயல்படும் கும்பல் அலறுவது அருவருப்பாக உள்ளது.  ஆனால் ‘புதிய தலைமுறை’ இதழோ விஷமத்தனத்தின் எல்லைக்கும் நச்சுத்தனத்தின் சிகரத்துக்குமே போய்விட்டது.

உண்மை என்ன என்பதை பார்ப்போம்.

மோதி அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறியதா? இல்லை. உணவுப்பொருள் விலையேற்ற வேகத்தைக்  குறைந்திருக்கிறது;  கடந்த இரண்டரை ஆண்டுகளில் (30 மாதங்களில்) மிகக் குறைவான இலக்கத்தைத் தொட்டிருக்கிறது.  இதற்கு முக்கிய காரணம் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுதான் காரணம். ஆனால் உணவுப்பொருட்களின் விலை ஏறுகிறது. அவற்றை அடக்க நரேந்திர மோதி அரசு தீவிரமாக செயல்படுகிறது. உணவு விலையேற்ற வேகம் குறைந்ததற்கு காரணம் என்ன? முந்தைய அரசு தானியங்களை தேக்கி வைத்திருந்ததை மோதி அரசு திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல. பதுக்கி வைப்பவர்கள் இடைத்தரகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது.food_inflation

காய்கறிகள் விலை விஷயத்தில்  விவசாய விளைபொருட்கள் விற்பனை கமிட்டி சட்டம் (Agriculture Produce Marketing Committee (APMC) Act) என்கிற பழைய சட்டம் விவசாயிகளை இடைத்தரகர்கள் நிறைந்த சந்தைகளில் விற்க நிர்ப்பந்திக்கிறது.  பெரும் நிலச்சுவான்தார்கள்  பெரும் முதலாளிகளிடமிருந்து உழவர்களை பாதுகாக்க ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் விற்க விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் இந்த நேருவிய சட்டம் உண்மையில் சாதித்தது என்னவோ அடுக்கடுக்கான இடைத்தரகர்கள் நிறைந்து விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைக்காமல் செய்தது மட்டும்தான். அப்போது விவசாயிகள் அவர்கள்  தேர்ந்தெடுப்பவர்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் நேரடியாக விற்க முடியும்.

இடைத்தரகர்களின் கொடுங்கோல் அவர்களுக்கு கொடுக்கப்படும் தரகு விலைகள் அவற்றின் சுமைகள் இறுதியில் காய்கறி வாங்குவோர் மீது விலைச்சுமையாக ஏறுவது ஆகியவை தவிர்க்கப்பட்டு விடும்.  இறுதியாக இந்த இடைத்தரகு ஒரு இல்லத்தரசி வாங்கும் காய்கறியின் விலையில் ஏறக்குறைய 75 சதவிகிதம் இடைத்தரகர்களுக்குத் தான் போகிறது என்று சொல்கிறது  ஒரு பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு.

இந்த காலாவதியாகி இன்றைக்கு விவசாயிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாகிவிட்ட ஒரு சட்டத்தை அகற்ற இல்லாவிட்டால் நீர்த்து போக வைக்க  நரேந்திர மோதி அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் நேரடி விற்பனையில் விவசாயிகள் இறங்க முடியும். இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். பெரிய அளவில் காய்கறிகள் விலையை குறைக்க முடியும். (Govt targets middlemen in food chain as inflation bites, பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஜூலை 11, 2014). இத்தனைக்கும் இந்த இடைத்தரகர்கள் என்பது ஒரு வலுவான அணி. பொதுவாக பாஜகவின் வாக்கு வங்கி எனக் கூட கருதப்படும் அணி.

ஆனால் நரேந்திர மோதி அரசு எப்போதுமே இப்படித்தான். குஜராத்தில் மின் உற்பத்தி விநியோகத்தை சரி செய்ய மின்சாரத்தை கொள்ளை அடிப்பதில் கட்சி ஆட்களுக்கு தயவு காட்டாமல் இயங்கித்தான் சாதனையை செய்தது மோதி அரசு. இன்று பொதுவான உணவு விலையேற்ற வேகம் 9.56 இல் இருந்து 7.97 வந்துள்ளது.  பொதுவாகவே பாஜக அரசுகள் வாஜ்பாய், நரேந்திர மோதி) இடதுசாரி காங்கிரஸ் அரசைக் காட்டிலும் உணவு விலையேற்றத்தைத் தடுப்பதில் திறமையுடன் செயல்படுவதாக கூறுகிறார் ஜியா ஹக் என்கிற செய்தியாளர். (’NDA government manages food prices better’, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 16-ஜூலை-2014)

தற்போது உணவு விலையேற்ற வேகத்தை தடுக்க மோதி தலைமையிலான பாஜக மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

  • எலிகள் தின்று வீணாகும்படியாக காங்கிரஸ் அரசு ’சேமித்து’ வைத்திருந்த உணவு தானியங்களில் 50 லட்சம் டன் உணவு தானியங்கள் மக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
  • உருளை கிழங்கு வெங்காயம் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள்/சேவை சட்டத்தின் (ESMA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஏற்றுமதி விற்பனை விலை உயர்த்தப்பட்டு அவற்றின் ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது.

உணவின் விலை ஏற்ற வேகம் ஒரே மாதத்தில் 1.6 சதவிகிதம் கீழே வந்ததற்கு காரணம் இவைதான். ஒட்டுமொத்தமாக நரேந்திர மோதி அரசு ஏதோ உணவு விலையை கட்டுப்படுத்த ஏதும் செய்யாமல் இருப்பது போல குற்றம் சாட்டுகிறது ‘புதிய தலைமுறை’.

சரி…இனி சமஸ்கிருதத்துக்கு வருவோம்…

  • அப்படி சமஸ்கிருதம் என்ன ஒரு வெறுக்கத்தக்க மொழியா? இல்லை.
  • அல்லது வெறும் ஒரு தனி ஜாதியின் மொழியா? இல்லை.
  • அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் பேசப்படும் மொழியா? இல்லை.
  • அனைத்து சாதியினரும் அனைத்து பிரிவினரும் சமஸ்கிருதத்தில் பங்களித்திருக்கின்றனர்.
  • அனைத்து இந்திய பிரதேசங்களிலும் சமஸ்கிருத பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காவியங்களை எழுதியிருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகவும் தொன்மையான குடியினர் நாகர்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். shalivahana1சாலிவாகனனை மணந்த நாகர் இளவரசி மிக இயல்பாக சமஸ்கிருதம் பேசியிருக்கிறாள். ஆனால் சாலிவாகனனுக்கு சமஸ்கிருதம் தெரியாமல் இருந்து பிறகு படித்திருக்கிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது? சமஸ்கிருதம் அன்னிய மொழி அல்ல. இங்குள்ள பூர்விகவாசிகளின் மொழியாகத்தான் கருதப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தின் ஆதி காவியம் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ஆகும். வால்மீகி முனிவர் யார்? தலித் சமுதாயத்தைச் சார்ந்த வேடர்.

சமஸ்கிருத மொழியின் மிகச்சிறந்த கவி யார்? காளிதாசன். காளிதாசன் யார்? மாடு மேய்க்கும் சூத்திரராக இருந்தவர்.

vanmikiசமஸ்கிருதத்துக்கும் அடிப்படையாக விளங்கிய வேதங்களை வகுத்தளித்தவர் யார்? மகாபாரதம் எனும் அமர காவியத்தை அம்மொழியில் உருவாக்கியவர் யார்? மீனவப்பெண்ணின் மைந்தனான வியாசர். அப்படியானால் சமஸ்கிருதம் எப்படி மேல்சாதியினருக்கு மட்டும் உரிய மொழி எனக் கருத முடியும்?

சுவாமி விவேகானந்தர் நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அடைய சமஸ்கிருதம் ஒரு ஆயுதமாக இருக்கும் என்று கருதினார்.  அனைவருக்குமான மொழியாக இருந்த சமஸ்கிருதம் இடைப்பட்ட காலத்தில் சமுதாயத்தின் மேல்தட்டுகளில் இருந்த மக்களுக்கு மட்டுமான மொழியாக மாறிவிட்டது. இதனை மாற்ற வேண்டும். என்று விவேகானந்தர் கருதினார்.  அவர் சொன்னார்:

நம் பாரத தேசத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. stamp_svஎனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். …எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக சொத்துகள் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.

டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிக்காகப் போராடிய புரட்சியாளர். அவர் சமஸ்கிருதமே இந்த நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இது 11-செப்டம்பர்-1949 தேதியிட்ட ’ஸண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்’  இதழில் வந்திருக்கிறது. மேலும் 2001 இல் பாஜக அரசு ஆட்சியின் போது இதே போல ஒரு பிரச்சனையை போலி-மதச்சார்பின்மைவாதிகள் சமஸ்கிருதம் குறித்த பிரச்சனையை எழுப்பிய Ambedkar Among Sponsors()1 (1)போது திரு.B.P.மௌரியா எனும் தலைவர் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அவர் இளைஞராக இருந்த போது டாக்டர் அம்பேத்கருடன் இருந்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

10-செப்டம்பர் 1949 இல் அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் (All India Scheduled Caste Federation) எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி  கூடியது. அப்போது பேசிய டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டிய அவசியத்தைக் கூறினார். இதை சில தலைவர்கள் எதிர்த்த போது, அவர்கள் தம்மை விட்டுப் பிரிந்தாலும் கவலை இல்லை, தாம் சமஸ்கிருதத்தை ஆதரிப்பதாக டாக்டர அம்பேத்கர் கூறினார்.  இந்தச் சம்பவங்களை மௌரியா அவர்கள் 14-2-2001 அன்று அரசுக்கு கடிதமாக எழுதினார்.  babasheb_Sanskritஅது மட்டுமல்ல, அந்த காலகட்டத்தைச் சார்ந்த செய்தி தாள்களில் இந்த விஷயங்கள் எல்லாம் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்த மைத்ராவுடன் பாபா சாகேப் அம்பேத்கர்  சமஸ்கிருதத்தில் உரையாடினார்.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தால் சிறுவயதில் சமஸ்கிருதம் படிக்க ஆசை இருந்தும் பாரசீகம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பாபா சாகேப் அம்பேத்கருக்கு. ஆனால் அவரே சமஸ்கிருதம் கற்று அதில் உரையாடும் அளவு தேர்ச்சியும் பெற்றிருந்தார் என்பது எத்தனை முக்கியமான விஷயம்.

நேருவின் உதவியாளர் மத்தாயிடம் உரையாடும் போது இந்தி பேசும் சமவெளி மக்கள்  துளசிதாஸின் இந்தி ராமாயணத்துக்கு பதிலாக வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தை மதிக்கும் போதுதான் மக்கள் பிற்போக்குத்தன்மையிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றார் டாக்டர் அம்பேத்கர். (மத்தாய் நினைவுகள், பக்.24) சமஸ்கிருதம் குறித்து டாக்டர். அம்பேத்கர் என்ன கருத்து கொண்டிருந்தார்?  சமஸ்கிருதத்துக்கு முன்னால் பாரசீக மொழி நிற்க முடியாது என்கிறார் பாபா சாகேப்.

சமஸ்கிருதம் நம் காவியங்களின் பொற்பேழை. நம் இலக்கணமும், அரசியலும், தத்துவமும் தவழ்ந்த தொட்டில். நம் தர்க்க சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம், இலக்கிய விமர்சன மரபு ஆகியவற்றின் இல்லம். (நவ்யுக்-அம்பேத்கர் சிறப்பிதழ், 13-ஏப்ரல்-1947)

நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஒரு கருத்தை நூல் முகவுரை ஒன்றில் கையொப்பமுடன் வெளியிட்டார்.

பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன்.

இல்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்ல. இந்த கருத்தை வெளியிட்டவர்: கர்மவீரர் என நம் தமிழக மக்கள் அன்புடன் அழைக்கும் காமராஜர் அவர்கள். 1972 இல் திராவிட அலை அடித்த காலகட்டத்தில் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ‘முப்பது நாட்களில் சமஸ்கிருதம் கற்பது எப்படி?’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கர்மவீரர். அதில்தான் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழகம் இன்று மானுட வள மதிப்பீடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணமானவர் காமராஜர். kamaraj1அவரது மதிய உணவு திட்டம்தான் தமிழ்நாட்டின் கல்வியின் ஊற்றுகண்ணைத் திறந்தது. கல்விச்சாலைகளைத் திறந்த கர்மவீரர் காமராஜர்  ‘இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டும்’ என்று கூறிய சமஸ்கிருத மொழியை டாஸ்மார்க்குகளை திறந்து தமிழ்நாட்டைjk1 சீரழிக்கும் புரட்சி தலைமைகள் எதிர்ப்பதும் வெறுப்பதும் இயற்கை என்றுதான் சொல்ல வேண்டும். இடதுசாரி பாசறையில் வளர்ந்தவர். விவேக வேதாந்தத்தை மானுடத்துவத்துடன் பேசி ஒரு தலைமுறையை செதுக்கியவர் ஜெயகாந்தன். அவர் சொல்கிறார்:

சமஸ்கிருத மொழியைச் சகல சாமான்யரின் மொழியாக மாற்றும் உன்னதப் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது. சுவாமி விவேகானந்தரும் பாபா சாகேப் அம்பேத்கரும் கர்மவீரர் காமராஜரும் காட்டும் வழியில் சமஸ்கிருதத்தை போற்றும் நரேந்திர மோதியின் செயல்பாட்டை போற்றுவோம். போலி தமிழ் பற்றாளர்களின் அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நகைத்து புறந்தள்ளி முன்னகர்வோம்.

 

364 Replies to “தேவையா இந்த வடமொழி வாரம்?”

  1. “இந்த புரட்சி தமிழ் ஜோதியில் கலக்காமல் இருந்தால் பிறகு தெய்வ குத்தம் ஆகிவிடுமென நினைத்ததோ என்னவோ ‘புதிய தலைமுறையும்’ இந்த கார்ட்டூனை போட்டு புண்ணியம் தேடிக் கொண்டது.”

    இதாவது புதுசு, இன்னும் நிதானத்துக்கு வராமலிருக்கலாம்; பாரம்பர்யம் உள்ளது என்று சொல்லப்படுகின்ற கல்கி பத்திரிகையே இந்த லச்சனத்தில்தான் உள்ளது.

  2. கல்கி பத்திரிகை பாரம்பரியத்திலிருந்து விலகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. 🙂 சம்ஸ்கிருத வாரம் சில பள்ளிகளில் மட்டும் அதுவும் மத்திய அரசுப்பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கும் பள்ளிகளில் மட்டும் கொண்டாடினால் அழிந்துவிடும் அளவுக்குத் தமிழ் பலவீனமான நிலையில் இல்லை. 🙂

    அதோடு உலகத் தமிழ் மாநாடு உலகெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமை அடையும் நாம் அதைக் கொண்டாடும் குறிப்பிட்ட நாடு எதிர்த்தால் என்ன செய்ய முடியும்? அவர்களுடைய மொழி உணர்வுக்கு இது எதிர்ப்பு என்று சொன்னார்களெனில்? மொழி உணர்வு பாதிக்கப்படுகிறது என்று சொன்னால்? என்ன செய்வோம்? நம் மொழியை உலகநாடுகள் கொண்டாடுகையில் நம் நாட்டில் உள்ள ஒரு மொழியை ஏதோ சில பள்ளிகள் மட்டும் கொண்டாடுவதில் என்ன ஆகிவிடும்? புரியத் தான் இல்லை! 🙁

  3. திருவாளர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தரின் பத்திரிகை தான் புதிய தலைமுறை. அவர் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இருக்கிறார். ஆனால் அவரது பத்திரிகையும் டிவியும் அவ்வப்போது இப்படி உளறிக் கொட்டுகின்றனர்.

    புதிய தலைமுறை குழுமத்தில் உள்ள ’நச்சு’ பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு உடனடியாக நீக்குவது பாரிவேந்தரின் கடமை.

    -கே.செல்வேந்திரன்

  4. நம் தமிழ்நாட்டைப் பொருத்த வரை யார் முதலில் எதிர்ப்பது என்ற போட்டியில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளன. எந்தப் பிரச்னையானாலும் யார் முதலில் குரல் கொடுத்து மக்களிடம் பெயர் வாங்குவது என்ற நோக்கத்தில்தான் அனைவரும் களத்தில் உள்ளனர். (அது தமிழீழமோ, மொழியாதிக்கமோ, ஜாதி மத பிரச்னையோ, விலைவாசி ஏற்றமோ). அது மக்களுக்கு நல்லதா கெடுதலா? அதைப் பற்றி எந்த கட்சிக்கும் கவலை இல்லை. இது நம் தமிழ் மண்ணின் சாபக்கேடா? தெரியவில்லை…இந்த நிலை என்று மாறுமோ?

  5. மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவையே! எனவே மொழிகளுக்குள் பாகுபாடு காட்டாமல் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். கோவில்களிலும், திருமணத்திலும் சொல்லப்படும் சமஸ்கிரத மந்திரங்களின் அர்த்தங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவாவது தமிழ் இந்துக்கள் அவசியம் சமஸ்கிரதம் கற்க வேண்டும்.

  6. ” தமிழ் இந்துக்கள் அவசியம் சமஸ்கிரதம் கற்க வேண்டும்.”
    At last,( !!!) some sensible statement from Mr SP

  7. /” தமிழ் இந்துக்கள் அவசியம் சமஸ்கிரதம் கற்க வேண்டும்.”
    At last,( !!!) some sensible statement from Mr SP//

    He said only ‘Tamil Hindus’, not ‘Tamilarkal’. He is clever in using words. Perhaps you are calling it sensible that he does not include all Tamils.

  8. When people want Tamil in temples, all intelligent people used to dance/ jump. But those so called people need Samskrit.. funny. See, I come to this web site to know about Hinduism. But the comments and articles about Tamil nadu and Tamil language really force me not to visit this site. Now, it is up to the editor to decide whether this site is only for certain group people or for all Hindus who want to know about Hinduism.

  9. சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது. சுவாமி விவேகானந்தரும் பாபா சாகேப் அம்பேத்கரும் கர்மவீரர் காமராஜரும் காட்டும் வழியில் சமஸ்கிருதத்தை போற்றும் நரேந்திர மோதியின் செயல்பாட்டை போற்றுவோம். போலி தமிழ் பற்றாளர்களின் அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நகைத்து புறந்தள்ளி முன்னகர்வோம்.

  10. அஞ்சலா பேகம் என்ற DAV , முகபேர் பள்ளி மாணவி சமஸ்கிருதத்தில் 2012- பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்றார். சமஸ்கிருதம் படித்த தமது சகோதரனை( மாநிலத்தில் இரண்டாம் இடம்-2008-ம் ஆண்டு) தாமும் பின்பற்றியதாக கூறுகிறார். மொழியை கற்பித்த ஆசிரியர் ஸ்ரீதர் வெங்கட்ரமணி என்பவருக்கு நன்றி தெரிவிக்கிறார். (ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தேதி 5.6.2012). பெமினா ஷிரின் ஷாஜஹான் என்ற மகாத்மா மாண்டிசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, அழகர் கோயில் மாணவி சமஸ்கிருதத்தில் 2010 +2 பொது தேர்வில் 197/200 மதிப்பெண் பெற்றார். இவர் தமிழ் அல்லாத (Non-Tamil Category) பிரிவில் மதுரை மாவட்டத்தில் அணைத்து பாடத்திலும் (overall topper) முதலிடம் பெற்றார். (ஆதாரம்: தி ஹிந்து தேதி 15.05.2010). சில அரசியல் நிபுணர்கள் சமஸ்கிருத வாரம் அனுசரிப்பது நம் நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரானது என்று சொல்கிறார்கள். அவர்களின் கூற்று சரியா? தவறா? பொய்யா?

  11. we tell children in tamil “Badram, pl go to school” thinking meaning as ” careful ” in tamil but this is a sanskrit word meaning ” mangalam” an auspicious way. Even in Hebrew language in persia believed to be the oldest language has lot of sanskrit word like ” serpam” meaning as snake similar to sanskrit word. There are many words of sanskrit in Hebrew was used by Jewish people. Even a chemial name ” sulphur ” is the derivative of sanskrit word. This has been in existence since the culture of hindu dharma exists in the world. western people realized the importance of this language. we tamils due to our mind boggled with dravidian parties ideology , become inert and sick . IT is pity c m of T N state has opposed this sanskrit week just to please some dravidian parties for vote bank. Modi must keep her in distance away from closeness as believed to be most undependable lady.

  12. மிகவும் தேவையான கட்டுரை இது… ஏதோ, சம்ஸ்கிருத வாரத்தால் பெரு நஷ்டம் உண்டாகி விடும் என்றும், சம்ஸ்கிருதம் சரஸ்வதி என்ற பிற்போக்கு வாதங்களை எல்லாம் விட்டு மக்கட்பணி செய்ய வேண்டும் என்று நிதி மீது கருணை மிகக் கொண்டவரும் அறிக்கை விட்டு ஓய்ந்திருக்கும் நிலையில் உண்மை நிலையை தெளிவுறுத்தி, சரியான பார்வையை அளித்திருக்கின்ற கட்டுரையாசிரியருக்கு மனப்பூர்வமான நன்றிகள் உரியதாகட்டும்…

  13. 1857ல் சமஸ்கிரத மொழி என்றோ மரணத்தை தழுவி விட்டது என்கிறார் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய்.

    All the feasts and great donations
    King Bhoja gave the Brahmans
    were obsequies he made on finding
    the language of the gods had died.
    Seated in state Bajirao performed
    its after-death rite with great pomp.
    And today, the best of kings across the land
    observe its yearly memorial

    குஜராத்திக் கவி தல்பத்ராம் :தாஹ்யாபாயின் கவிதையை தமிழில் இப்படி மொழி பெயர்க்கலாம்:

    “போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,
    பெருநிதிக் குவியங்கள் எல்லாமும்
    தேவ பாஷையின் சாவைக் கண்டு
    அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்…
    ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான்.
    இன்றும் கூட வழி வழி வரும் ஆட்சியாளர்கள்
    ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை..”

    இந்த கவியின் கூற்று தற்போது மெய்யாகியுள்ளது. ஆம்…. இப்போது மோடியின் பா.ஜ.க அரசு அந்த வருடாந்திரத் திவசத்தை துவக்கியுள்ளது.

    இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன். ஏன் இவ்வாறு ஒரு மொழியை இந்த அளவு வெறுக்கிறார்கள் என்று சிந்திப்பேன். உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்ற நம்பிக்கையை உடையவன் நான். இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு இழிநிலைகளை தாங்குவதற்கு காரணமே சமஸ்கிரத மொழிகளில் அமைந்த இந்து மதத்தின் ஸ்மிருதிகளே! அதனை எழுதியவர்கள் இன்று நம்மோடு இல்லை. எனவே குறைந்த பட்சம் அந்த மொழியையாவது வெறுப்போம் என்ற நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

    எனவேதான் பெரும்பான்மையான இந்து மக்களின் நினைப்பு இவ்வாறாக இருக்கிறது: ‘நீ உருது பேசுகிறாயா பேசிக் கொள்: ஆங்கிலம் பேசுகிறாயா பேசிக் கொள்: அரபியில் பேசிக் கொள்கிறாயா பேசிக் கொள்: ஹிந்தியில் பேசிக் கொள்கிறாயா… பேசிக் கொள் எனக்கு ஒரு இழிவோ பிரச்னையோ இல்லை: ஆனால் வழக்கொழிந்து போன சமஸ்கிரதத்தை மட்டும் மீண்டும் உயிர்ப்பித்து விடாதே! இப்பொழுதுதான் பல போராட்டங்களுக்குப் பிறகு வர்ணாசிரமம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. சமஸ்கிரதத்துக்கு உயிரூட்டினால் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும் வர்ணாசிரமம்’ என்ற நினைப்பே அந்த இந்து மக்களை சமஸ்கிரத மொழியைப் பார்த்து பயம் கொள்ள வைக்கிறதோ என்று நினைக்கிறேன்..

    https://www.columbia.edu/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf

  14. “ஸம்ஸ்க்ருதம்” என்றுதான் எழுத வேண்டும். கட்டுரை அருமை, க்ருதம் என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி என பொருள்

  15. ஸம்ஸ்க்ருதம் என்றுதான் எழுதவேண்டும். நல்ல கட்டுரை பாராட்டுக்கள். “க்ருதம்” என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி எனப்பொருள்

  16. Yes, Sarav! The same Aravindan has written articles in this same website and elsewhere vehemently demanding Tamil in temples, and against only brahmins as archakas. Here, he is for Sanskrit and against Tamil scholars. Because Tamil scholars too protest against Sanskrit week.

  17. Those who want to read Sanskrit or any other language they can learn. Government should not impose them. Still people are learning lot of foreign languages in our Tamilnadu.. For me I’m very comfortable with my mother tongue தமிழ் and English. I don’t want to go for Sanskrit because it is pretty much useless for me.

  18. கடைசியில் சுபி தன்னுடைய உட்கிடையை வெளிப்படுத்திவிட்டார். ஆங்கிலேயன் இந்தியர்களை பிரித்து ஆண்டான். அந்த வேலையை செய்ய இந்த வஹாபிக்கும்பல் ஆரம்பிக்கிறது. இந்த வஹாபிக்கும்பலுக்கு தெரியாது சமஸ்கிருதம் என்பது ஆன்மீக மொழி மட்டும் அல்ல. நாத்திகர்களின் சார்வாகம் முழுவதும் சமஸ்கிருத மொழியில் ஏராளம் உள்ளது என்பது. அரபியில் வழிபடும் நீங்கள் சமஸ்கிருதத்தைப் பற்றிப் பேச எவ்வித யோக்கியதையும் கிடையாது. பார்ப்பன எதிர்ப்பு என்பது வேறு, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது வேறு. அம்பேத்கார் சமஸ்கிருதம் ஆட்சிமொழி ஆக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்பது கூட இந்த ……….களுக்கு தெரியாது. இவனைப்போன்ற குழப்பவாதிகளின் கடிதங்களை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும். இவருடைய தளத்தில் என்னவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். இங்குவந்து குட்டையை குழப்ப அனுமதிக்க வேண்டாம் என்று தமிழ் இந்து குழுவை கேட்டுக்கொள்கிறேன் .

    வர்ணாசிரமத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு மொழியில் பலர் நல்ல காவியங்களையும் , நல்ல அறிவியல் நூல்களையும் படைக்கிறார்கள். அதே மொழியில் எவ்வளவோ பேர் மட்டமான பாலுணர்ச்சியை தூண்டும் நூல்களையும் எழுதுகிறார்கள். அதற்காக அந்த மொழியையே தடை செய்ய முடியுமா ? சில புனித நூல்கள் என்ற பெயரில் , பிற மதத்தினரையும், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களை கொல்லத்தூண்டும் வாசகங்கள் இருக்கின்றன என்பதற்காக ஆபிரகாமிய மொழிகளை யாரும் தடை செய்ய முயலவில்லை. அவற்றை திருத்த மட்டுமே பலரும் முயல்கிறார்கள். திருந்த மாட்டேன் என்போர் காலத்தால் திருத்தப்படுவார்கள். சுமார் 200- வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு ( மதம் மாற்றப்பட்ட கவிஞரா என்று பார்க்கவேண்டும்) கவிஞரின் கவிதையை இந்த தளத்தில் வெளியிட்டு ஆதரவு தேட நினைக்கும் இழிசெயல் -[edited] ? நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஒரு நல்ல வெள்ளித்தட்டில் ஒருவன் பல வகை இனிய உணவு வகைகளை பரிமாறி உண்டு மகிழ்கிறான். அதில் ஒரு குடிகாரன் குடித்து விட்டு வாந்தியும் கூட எடுப்பான். அது வெள்ளித்தட்டின் குற்றம் அல்ல. குணக்கேடர்களுக்கு உலகில் உள்ள கெடுதல்கள் மட்டுமே புரியும்/ தெரியும். நல்லவை அவர்கள் கண்களில் படாது. துரியோதனர்கள் மகாபாரத காலத்தில் மட்டும் வாழவில்லை. இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் பெயர்கள் மட்டுமே வேறு.

  19. //ஸம்ஸ்க்ருதம் என்றுதான் எழுதவேண்டும். நல்ல கட்டுரை பாராட்டுக்கள். “க்ருதம்” என்றால் மொழி ஸம்ஸ்க்ருதம் என்றால் செம்மொழி எனப்பொருள்//

    சரி. ஆட்சேபணையில்லை.

    ஆனால், பழந்தமிழ் இலக்கியம் சம்சுகிருதத்தை ‘வடமொழி’ என்றே குறிப்பிட்டது.

    வடமாநிலங்களில் பல மொழிகள் பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும், தமிழைப்பொறுத்தவரை, உரையாடல்களில் வடமொழி என்பதே வசதி.

  20. //இந்த தளத்தில் வெளியிட்டு ஆதரவு தேட நினைக்கும் இழிசெயல் – என்ன பிறவியோ இது ? நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.//

    இத்தளத்து வாசகர்களை எல்லாம் பாப்பாக்கள் என்று நினைத்துவிட்டார் கதிரவன். எவரோ ஒருவர் சொல்வதையெல்லாம் தலையாட்டிக்கேட்டு ஒத்துக்கொள்வார்கள் என நினைப்பது அவ்வாசகர்களை சீப்பாக எடைபோடுவதாகும்.

    சுவனப்பிரியன் எழுதுவதை எழுதட்டும். உங்களால் முடிந்தால் எதிர்கருத்துக்களை வையுங்கள். பாப்பாக்கள் சுவனப்பிரியனால் ஏமாற்றப்படுவதை தடுக்கலாம். வாழ்க உமது தளத்தொண்டு.

    ஒருவேளை மாற்றுக்கருத்துக்களை இங்கு பதிவிடுவோரையெல்லாம், அவன் இவன் ஈன ஜென்மங்கள் என்றெல்லாம் இழித்துரைத்து விரட்டி விட்டால் மிஞ்சுவர் யார்? ஒருவர் எழுத அனைவரும் ஜால்ராத்தட்ட இந்த்தளம் தனது ஜனநாயக குணத்தையிழந்து, ஜிஹாதி கலாச்சாரத்தைத்தான் வைத்துக்கொள்ளும்.

    ’என்ன பிறவியோ இது ? ’ மட்டுறுத்தலில் தப்பிய இந்த வார்த்தையை சுட்டியமைக்கு நன்றி. அது நீக்கப்பட்டுவிட்டது. அந்த வார்த்தைக்காக சுவனப்பிரியனிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். பதிவிடும் நண்பர்கள் தயை செய்து பண்பட்ட வார்த்தைகளில் மட்டும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். – ஆசிரியர் குழு.

  21. //ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது. மேலும் இது பல ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. //

    ப. வெங்கடேசன் சிபிஎஸ்சி பள்ளியில் படித்தாரா இல்லை அப்பள்ளிகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தொடர்ந்து கவனித்தாரா என்பது தெரியவில்லை.

    இப்பள்ளிகள் என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே வடமொழியும் ஒரு பாடமாக வைக்கப்பட்டது. முதலில் வட மாநிலங்களில். அப்போது காங்கிரசுதான். இதற்கு காரணம் வடமொழி ஒரு பள்ளி மொழியாக இப்பள்ளிகள் தோன்றுவதற்கு முன்பே அரசுப்பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் போதிக்கப்பட்டுதான் வந்தது. படிப்போர் எண்ணிக்கை கணிசமாக இருந்ததால் தொடர்ந்தது.வடமொழி ஆசிரியர்கள் பெருகிக்கொண்டே இருந்ததால், ஆசிரியர்கள் நிறைய கிடைத்தார்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்பு.

    இன்னொன்றையும் பரப்பினார்கள். வடமொழி ஆழ்ந்த புலமையை மாணாக்கருக்கு ஊட்டிச் சங்கடப்படுத்தவில்லை. அப்புலமை கல்லூரிக்குச்சென்றபிந்தான். மாணாக்கருக்கு கணிசமாக மதிப்பெண்கள் போடப்பட்டதன‌. ஹிந்தியா வடமொழியா எதை எடுப்பது பத்தாம் வகுப்பில் என்ற கேள்வியெழும்போது, மாணாக்கர் வடமொழிக்கே சென்றனர். ஹிந்தியில் மதிப்பெண்கள் கிடைப்பது அபூர்வம். மேலும் பாடநூல்கள் தமிழைப்போல புலமையைத் திணிக்கின்றன். இன்றும் அப்படித்தான்.

    இதுதான் வடமொழி கல்வி பெருகியதற்கு காரணம். மற்றபடி அது இந்தியாவின் பாரம்பரிய மொழி; ஆன்மிக மொழி; சிற்ந்த இலக்கிய மொழி யென்று எவரும் பார்க்கவில்லை. இதனாலே வடமொழியைக்கற்றார் இசுலாமியரில் ஏராளம். பாட்ன பல்கலைக்கழகத்துக்குச் சென்று வடமொழித்துறையப்பார்த்தால், இசுலாமியர் பலர் ஆசிரியர்களாக இருப்பதைப் பார்க்கலாம்.

    வடமொழி வாரம் கொண்டாடப்படவே இல்லை. ஹிந்தி வாரமும் கொண்டாடப்படவில்லை. அதற்கு தேவையும் இல்லை. பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்றிருந்து விட்டார்கள்.

    இவ் வாரம் மோதி அரசு வந்தவுடந்தான் தொடங்கியது. திடீரென. ஏன்? வடமொழி கட்டாயப்பாடமில்லை சிபிஎஸ்சி பள்ளிகளில். ஆனால் ஹிந்தி கட்டாயம். பத்தாம் வகுப்பில் ஹிந்தி இல்லாவிட்டால் பிராந்திய மொழி ஒன்றை எழுதியே ஆகவேண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில். பல சிபி எஸ் சி பள்ளிகளில் தமிழ் எடுக்கலாம். உ.ம் (வைஷ்ணவா மேனிலைப்பள்ளி, அருமபாக்கம்). தமிழ்நாட்டில் மாணவர்கள் அவர்கள் பள்ளியில் தமிழ்ல்லாப்பட்சத்தில் ஹிந்தியத்தான் எடுப்பர். காரணம் ஹிந்திக்கு ட்யூசன் டீச்சர்கள் தாராளமாக கிடைப்பர். தமிழ்நாட்டில் மாணாக்க‌ரும் இல்லை. வடமொழி போதிக்கப்படவில்லை . மக்களுக்கோ வடமொழி என்றாலே தெரியாது. இங்கு போய் வடமொழி வாரம் என்பது சும்மாகிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல.

  22. அழியக் கூடிய நிலையில் இருக்கும் எந்த மொழியையும் மீட்டெடுப்பதற்காக அரசு முயற்சி செய்வது சரியானதே. ஆனால் அத்தகு நிலையில் ஸம்ஸ்க்ருதம் மட்டும்தான் இருக்கிறதா என்று அரசு விளக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் இங்லிஷ், ஹிந்தி தவிர மாநில மொழிகள் பலவும் போதிக்கப்படும்போது ஸம்ஸ்க்ருத மொழிக்கு மட்டும் வாரம் அனுசரிப்பது நம் நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரானதுதான். அடுத்தடுத்த வருடஙளில் மோதி அரசு அரபி மொழி வாரமோ, உருது மொழி வாரமோ, கொண்டாடச் சொல்லி சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும் என எதிர்பார்க்கலாமா? அவ்வாறு சுற்றறிக்கை அனுப்புவது அரசின் பணியா? ஹிந்து-ஹிந்தி-ஹிந்துஸ்தான் என்று ஒருமுகப்படுத்துவதுதான் பன்முகத்தன்மையா? அம்பேத்கரும், காமராஜரும், ஜெயகாந்தனும், விவேகானந்தரும் சமஸ்கிருத்திற்கு ஆதரவு தெரிவித்தது அம்மொழியின் பழமையான இலக்கியங்களை வாசித்தறியத்தான். இதற்கு மொழி பெயர்ப்பு போதுமானதல்லவா? அவ்வாறாயின் லத்தீன் அமெரிக்க மொழிகளையும் ரஷ்ய மொழியையும் கூடத்தான் நாம் கற்க வேண்டும். நம்மில் பலரும் தமிழ் இலக்கியங்களையே பதம் பிரித்து வாசிக்கத் தெரியாதவர்கள்தான். இணைய தளங்களில் ஹிந்தி………… பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதம்………. புரிந்து கொள்ளக் கடினமானதா இது?

  23. //இந்திய நாட்டு மக்கள் அனைவருமோ அல்லது எல்லா மாநில அரசுகளுமோ சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி அரசு சொல்லவில்லை.//

    ப வெங்கடேசன், அப்படிச்சொல்லத்தேவையில்லை சுற்றறிக்கை அனுப்பினால் போதும். இந்தியா நாட்டு மக்கள் அனைவரும், அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை தேவையில்லை. கட்டாயமும் தேவையில்லை. catch them young என்ற ஃபார்முலாபடி, பள்ளிச்சிறார்களைப் பிடித்தால், வருங்காலத்தில் தமிழ் அழிக்கப்பட ஹேதுவாகும்.

    இங்கு கீதா சாம்பவசித்தின் பின்னூட்டத்தையும் சேர்க்கலாம்: அவர் எழுதுகிறார்: //…அழிந்துவிடும் அளவுக்குத் தமிழ் பலவீனமான நிலையில் இல்லை//

    மேடம்! ஒன்று புரிதல் நலம். பலவீனம் சக்தி எனபனவெல்லாம் ஒரு மனிதனுக்கோ ஒரு மொழிக்கோ பிறப்பில் தொடங்கி இறப்புவரைக்கும் நின்று நிலைத்து வருவதல்ல.

    மொழியைப் படிப்போர் பேசுவோர் குறையக்குறைய அம்மொழி தானாகவே காலாவதியாகி காணாமல் போகும். கடையில் வியாபாரமே ஆக வில்லையென்றால், மூடத்தானே செய்வார்கள்?

    இப்படி உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் அழிந்து பட்டன. தமிழ் ஆதிகாலத்திலிருந்து தன்னைத்தானாகவே காத்துக்கொள்ளவில்லை. அதற்கு பல இடர்கள் வநதன. அதிலும் குறிப்பாக வடமொழி லாபிக்களால். தமிழ்ச் சங்கத்திலேயே அமர்ந்து நக்கீரனை எதிர்த்தான் குயக்கோடன் என்ற வடமொழி லாபிக்காரன் என்று ரா. ராக்வையைங்கார் தன் கட்டுரையில் பலவிடங்களில் குறிப்பிடுவர். தமிழா வடமொழியா என்று ஆழ்வார்கள் காலத்திலே சண்டை.

    இது போக கன்னடம், தெலிங்காலும் இடர்கள் வந்தன. 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பெரும்பகுதி கன்னட மன்னர்கள் (ஹொசால்யர்கள்) கீழ் வர, தமிழ் ICU க்கு போய் படுத்துவிட்ட்து. தமிழ்ப்புலவர்கள் ஒழிந்துகொண்டார்கள். இலக்கியமே இல்லை. சிற்றிலக்கியங்கள் சில வந்தன. இருவர் மட்டுமே சிறந்தார்கள். அருணகிரியார், வில்லுபுத்தூரார். அருணகிரியார் பாடல்களில் தமிழ் குறைந்து வடமொழி மேலோங்கிய காரணத்தை ஆராய்ச்சியாளர்கள், தமிழின் அக்கால வீழ்ச்சியிலே தேடுகிறார்கள். நீங்கள் சதாவிச பண்டாரத்தார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றைப்படித்தால் நான் சொன்னவைக்கு ஆதாரங்களைப்பார்க்கலாம்.

    இப்படி தன் நீண்ட வரலாற்றில் பல சோதனைகளை தமிழ் எதிர்த்து மீண்டும் எழக்காரணம் தமிழ்ப்பற்றாளர்களாலே. நக்கீரன் குயக்கோடனை எதிர்த்திராவிட்டால் தமிழ் அன்றே மாண்டிருக்கும். மன்னர்கள் தொடர்ந்து கொடுத்த ஆதராவலே தமிழ் இலக்கியம் படைக்க புலவர்கள் முன் வந்தார்கள்.

    இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிற்து மேடம்? ஆம், மொழியென்றாலும் கூட ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் அதற்கு வந்த எதிரிகளை எதிர்க்கும் வல்லோர் இல்லாவிட்டாலும் தமிழ் அழிந்து விடும். இன்று அப்படிப்பட்ட காலக்கட்டத்திற்கு வந்துய்விட்டோமா என்ற அச்சம் இதுபோன்ற கட்டுரைகளைப்படிக்கும்போது வராமல் இல்லை. ‘மெல்லத்தமிழினி சாகும் என்றான் அப்பேதை’என்று 80 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் எழுதினார். இன்று அவரிருந்தால், ‘விரைவில் தமிழினி சாகும் என்றான் அவ்வறிவாளி!”என்றெழுதுவார்.

  24. நமது தளத்தினர் செய்த எடிட்டிங்- சரியானது. தவறுதலான சொற்பிரயோகத்துக்கு திரு சு பி அவர்களிடமும், சுட்டிக்காட்டிய திரு பாலசுந்தரம் கிருஷ்ண அவர்களிடமும் நமது தளத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இவரைப்போன்ற – என்பதற்குப் பதிலாக இவனைப்போன்ற என்று தட்டச்சுப்பிழை ஏற்பட்டது. அதே அடுத்த வரியில் னகரத்துக்கு பதிலாக ரகரம் சரியாக வந்துள்ளது. இந்த பிழையையும் பொறுத்தருளுமாறு திரு பாலசுந்தரம் கிருஷ்ண அவர்களை வேண்டுகிறேன்.

    இந்த சமஸ்கிருத வாரம் என்பது ஒவ்வொருவருடமும் கொண்டாடப்பட்டு , சுற்றறிக்கை அனுப்பும் வழக்கம் மத்திய அரசில் பல ஆண்டுகளாக இருந்த ஒன்றுதான். ஆனால் இந்த முறை பாஜக அரசு பதவி ஏற்றவுடன் நமது மீடியா இதனை தேவை இல்லாமல் ஏதோ ஒரு புதிய விஷயம் போல, project செய்துவிட்டது. மேலும் சமஸ்கிருத மொழிக்கு ஒரு வாரம் சிறப்பு விழா எடுப்பது என்பது பற்றி , அது புதியதாக இருந்தால் கூச்சல் இடுவது ஒரு பொருள் பொதிந்ததாக இருக்கும். இந்த தேவை இல்லாத கூச்சல் முற்றிலும் அர்த்தமற்றது.

    சமஸ்கிருதம் என்றால் செம்மையாக ஆக்கப்பட்டது, அல்லது செம்மையாக செய்யப்பட்டது என்றே பொருள். கிருதம் என்பது கிரியா என்று சொல்லும் சொல்லுடன் தொடர்புடையது.ஆகும். ஆங்கிலத்தில் made perfect, sanctified, refined என்று அகராதியில் சொல்லப்பட்டுள்ளது.

  25. தணிகை நாதன்

    எப்பேர்பட்ட அறிவு ஜீவி சார் நீங்கள். ஸமஸ்க்ருதம் இந்தியாவின் ஜீவ மொழி. இதற்கும் அரபு மொழிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எங்கே இந்த பதங்களை மொழி பெயருங்கள் பார்க்கலாம்

    பக்தி, தீர்த்தம், அபிஷேகம், பிரசாதம் , ஆத்மா

    சரி விடுங்கள். ஸமஸ்க்ருதம் அழியக்கூடிய நிலையில் இருக்கிறது என்று யார் சொன்னது. இந்தியா முழுவதும் குறைந்த பட்சம் நாற்பது லட்சம் பேர் ஸமஸ்க்ருதத்தில் பேச கூடியவர்கள். ஸமஸ்க்ருதம் பதினேழு நாடுகளில் பல்கலை கழகங்களி பயிற்றுவிக்கப் படுகிறது (சீனா உட்பட). சமஸ்க்ருதம், யோகா, ஆயுர் வேதம் இவை எல்லாம் ஒரு பில்லியன் டாலர் மார்கெட்.

    அரசு அரசு என்று நீங்கள் எம்புட்டு தரம் எழுடிநீர்கள், அது சம்ஸ்க்ருத பதத்தின் திரிபு. அமைச்சர் சமஸ்க்ருத பதம், தற்காலிகமாக, விபத்து, திராவிட, புரிதல், பம்பரம், சமத்து இதெல்லாம் ஸமஸ்க்ருத படங்கள். நீங்கள் பேசும் மொழியில் பெரும்பாலும் ஸமஸ்க்ருத பதங்கள் தான்.

    ஒரு மரத்தை வாழ வைக்க, கிளையில் தண்ணி ஊத்தக்கூடாது. வேரில் ஊற்ற வேண்டும். ஸமஸ்க்ருதம் என்பது பாரதத்தின் வேர். அதை வளர்த்தே தீர வேண்டும்.

    ஸமஸ்க்ருததத்தில் உள்ள கிரந்தங்களில் வெறும் ஐந்து விழுக்காடுகளே மத நம்பிக்கை சம்பந்த பட்ட விழயங்கள். மேலும் ஸமஸ்க்ருததத்தில் உள்ள கிரந்தங்களில் மூன்று விழுக்காடுகள் தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
    ஸமஸ்க்ரும் பிரெஞ்சு மொழி போன்றோ போர்டகீசிய மொழி போன்றோ வெறும் மொழி அல்ல. அதனுள் பொக்கிஷங்கள் ஏராளம் இருக்கின்றன. வெறும் காவியங்கள் படித்து அதை அனுபவிக்க மட்டும் சமஸ்க்ருதம் தேவை என்றா எண்ணுகிறீர்கள். ஸமஸ்க்ருத அறிவு இன்றி பாரத அறிவு பூர்த்தி பெறாது.

  26. //ஆனால், பழந்தமிழ் இலக்கியம் சம்சுகிருதத்தை ‘வடமொழி’ என்றே குறிப்பிட்டது. //

    அப்படி அல்ல. வட (ஆல) வ்ருக்ஷங்களின் அடியில் இம்மொழி பயிற்றுவிக்கப் பட்டதால் வட மொழி என்று பெயர் ஆயிற்று. இதை நான் சொல்லல, சாலமன் பாப்பையா அவர்களின் கருத்து. வட (வடக்கு) என்பதில் மூன்றாவது டகரம். வட ஆழத்தில் முதல் டகரம்.

  27. நல்ல நினைத்துகொள்ளும். உங்களுக்கு சிந்தனை திறனா குறைச்சல். எல்லா மொழியும் இறைவனால் படைக்கபட்ட்வை, எங்கே தமிழில் மொழி பெயர்த்து குரான் ஒதுங்களேன்.

  28. துக்ளக்ல் வந்த ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்ல் கீழ உள்ளதை தன் ப்லோக் இல் censor பண்ணிய சாத்தான் இங்கு வேதம் ஓதுவதை பாருங்கள் .

    “எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக விழு ந்து விழுந்து படித்தாலும், முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளை வாக, என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபா லனத்திற்கான, அவசியமான – முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்! “

  29. Sankrit is a language which has rich literature and influence on other Indian languages is visible.

    Majority of school students do not opt for higher studies in Tamil. or any other languages including Hindi. Those who have personal interest , career in teaching /reasearch and who have choice only opt for language studies. Simple issue is magnified due to timing.
    Needles to mention University of Madras and other universities in TN teach Sanskrit , through distance education also.

    organising the weeks are for awareness purpose but there is no use in reality. If there is real interest, government should make more researches and encourage literature related activities. Does any one watches DD sanskrit channel?

    I do not inderstand why few hindu groups always say that Sanskrit should be the only national language and start old glories. (as per constitution it is already one of the natonal language).

  30. தமிழ் மொழியை பொறுத்தவரை பி ஜ க மற்றும் காங்கிரஸ் ஒரே நிலையில் உள்ளனர். அது அவர்களின் அறியாமையை காட்டுகின்றது.
    வடமொழி தான் மிக பழமையானது, உயர்ந்தது என்ற மாயையில் உள்ளார்கள்.
    இதில் என்ன வருத்தம் என்றால் தமிழ் நாட்டில் உள்ள அவர்களது கட்சிகர்களும் இதை போல் கூறுவது.
    திரு பாலசுந்தரம் கூறுவது மிகவும் சரியானது. //இப்படி தன் நீண்ட வரலாற்றில் பல சோதனைகளை தமிழ் எதிர்த்து மீண்டும் எழக்காரணம் தமிழ்ப்பற்றாளர்களாலே. //

  31. //எங்கே தமிழில் மொழி பெயர்த்து குரான் ஒதுங்களேன்.//

    ஐந்து வேளை தொழுகைகளில் மாத்திரமே நான் குர்ஆனை அரபியில் ஓதுகிறேன். ஏனெனில் இஸ்லாம் ஒரு உலக மதம். ஜனகனமன தேசிய கீதத்தை வங்காள மொழியில் நாம் பாடுவது தேச ஒற்றுமைக்காக. வங்காள மொழி உயர்ந்த மொழி என்பதற்காக அல்ல.

    மற்றபடி தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனைத்தான் படிக்கிறேன். எனது தாய் மொழியான தமிழில் அந்த குர்ஆனின் விளக்கங்களை படிப்பதே எனக்கு எளிதாக இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழ் குர்ஆன்கள் தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறதே….

  32. Let us ignore SP and his taqqya. Seriously, Tamil does not need defenders especially from people like Vaiko, Karuna and JJ. It is a beautiful,classic ancient language, the younger sister of Sanskrit. Tamil and Sanskrit have been together in harmony and in close relationship from time immemorial. People who do not want to celebrate Sanskrit week are the brain washed DK wallahs. Is Tamil so weak that celebrating our ancient NATIONAL language, the root of all languages, somehow will make it disappear? It is not a disappearing language. Here is a link about 2 villages in Karnataka ( Dravidian land) who speak the language.
    https://www.sanskritimagazine.com/culture/the-two-sanskriti-speaking-vedic-villages-in-modern-india/

  33. /////ஐந்து வேளை தொழுகைகளில் மாத்திரமே நான் குர்ஆனை அரபியில் ஓதுகிறேன்/////. கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதினால் கடவுளுக்கு தமிழ் தெரியாதோ? என்றும் தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ் நாட்டில் வேலை இல்லை என்றும் நீங்கள் அடிக்கடி “பெரியார் மண், பெரியார் மண்” என்று பெருமிதம் அடையும் அந்த பெரியாரின் தொண்டர்கள் இந்துக்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர்.ஆனால் அதே கேள்வியை உங்களிடம் கேட்பதில்லை. (அதற்கு காரணம் ஒட்டு என்பது யாவரும் அறிந்த உண்மை) அதனால் நான் கேட்கிறேன். அரபு மொழியில் 5 வேலை தொழுகை நடத்தினால்தான் கடவுள் புரிந்துகொள்ள முடியுமா? தமிழில் ஓதினால் புரியாதோ?

    தேசிய கீதம் வங்காள மொழியில் இயற்றப்பட்டது உண்மை. என்னுடைய கருத்து என்னவென்றால் தமிழ் நாட்டில் அதை பாடும்போது தமிழாக்கம் செய்து (கருத்து மாறாமல்) பாடினால் என்னாவாகிவிடும்? குடி மூழ்கிவிடுமா? பிரளயம் ஏற்படுமா?இதை மட்டும் எப்படி திகவினர் பேசாமல் ஏற்றுகொண்டனர்?

    இன்றைய உலக நடப்பை பார்க்கும்போது இஸ்லாம் ஒரு “உலக” மதம் என்று தோன்றவில்லை. “கலக” மதமாகத்தான் தோன்றுகிறது. (இன்றைய செய்திபடி:—-சீனாவில் xinjiang ல் முஸ்லிம் uighur மைனாரிட்யினர் நடத்திய கத்தி தாக்குதலில் dozen கணக்கில் கொல்லப்பட்டனர். ஏற்கனவே மார்ச்சில் 29 பெரும் மே மாதத்தில் 39 பெரும் இவ்வாறு கொல்லப்பட்டனர். (((2))) ஆப்கானில் அதன் அதிபரின் cousin ஐ ஒருவன் தன தலைப்பாகையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கசெஇது கொன்றிருக்கிறான்.)
    /////எனது தாய் மொழியான தமிழில்///////.என்று சொல்வதில் பெருமை படுகிறீர்கள்.
    நீங்கள் ஓதும்போது அரபியும் படிக்கும்போது தமிழும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டு இருக்கும் முஸ்லிம்கள் பேருந்தில், தொடர் வண்டியில் பயணம் செய்யும்போது உருதுவில்தான் பேசுவதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தமிழ் தெரியாதா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எண்ணுவதும் தமிழ் எழுதுவதும் தமிழ், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று பேசுவதெல்லாம் சும்மா மேடை பேச்சா?

  34. அப்படியென்றால் சைவப்பெருந்தகையான, வடமொழி மாயையைக் கடிந்த மறைமலை அடிகள் பற்றி தமிழ்ஹிந்து.காமின் நிலைப்பாடுதான் என்ன?

  35. சாரங்கன்

    நீங்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து சமஸ்கிருதத்தை “சமஸ்கிருதம்” என்றழைத்த வரியொன்றைக்காட்டுங்கள் போதும்.

  36. et us ignore SP and his taqqya. Seriously, Tamil does not need defenders especially from people like Vaiko, Karuna and JJ. It is a beautiful,classic ancient language, the younger sister of Sanskrit. Tamil and Sanskrit have been together in harmony and in close relationship from time immemorial. People who do not want to celebrate Sanskrit week are the brain washed DK wallahs. Is Tamil so weak that celebrating our ancient NATIONAL language, the root of all languages, somehow will make it disappear? It is not a disappearing language. Here is a link about 2 villages in Karnataka ( Dravidian land) who speak the language.https://www.sanskritimagazine.com/culture/the-two-sanskriti-speaking-vedic-villages-in-modern-india///

    இரு சிற்றூர்கள் மட்டுமே. திருப்பதியில் பிராமணர்களிடையே மட்டுமே. தமிழகத்தில் பிராமணர்களிடம் கூட இல்லை. இதுதான் வடமொழியில் இன்றைய நிலை.

    தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் உங்கள் ‘வடமொழியில் தங்கை தமிழ்” என்ற சொல்லாட்லைக் கடுமையாக எதிர்ப்பார்கள். இதை வெளியே பத்திரிக்கைகளில் எழுதிப்பாருங்கள் தெரியும். வடமொழியும் தமிழும் தனித்தனியான பாரம்பரியத்தை தொல் இலக்கியத்தையும் கொண்டவை. அவை ஒன்றின் கீழ் மற்றொன்று என்பது அம்மொழியை தம்மொழியாகக்கொண்டோரை அவமதிப்பதாகும்; புண்படுத்துவதாகும். தமிழ் எப்போது பிறந்தது? வடமொழி எப்போது தோன்றியது என்று உங்களால் அறுதியிட்டுக்கூறவியலுமா? தெரிந்தால்தானே அக்காவா தங்கையா என்று சொல்லவியலும். தமிழில் மீது உண்டான காழ்ப்புணர்வு உங்கள் எழுத்துக்களில் சீழாக வடிகிறது.

    அரசியல்வாதிகளுக்கும் தாய்மொழி தமிழே. தம் தாய்மொழி என்ற கணிப்பில்தான் அவர்களும் தமிழுக்காக போராடுகிறார்கள். 7 கோடி தமிழர்களும் பேசமுடியாது. பேசினால் கேட்பவர் யார்? எனவேதான் அவர்களுக்காக அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சினையில் தமிழுக்காக பேசுகிறார்கள். எல்லாருக்கும் உரிமை. அவர்களுக்கு மட்டும் கிடையாதெனபதும், அவர்களென்ன தமிழுக்குக் காவல்காரர்களா எனக்கேட்பதும் தமிழ்மீதுள்ள வெறுப்பின் வேறு அடையாளமே.

    வடமொழி வாரத்தை எதிர்ப்போர் தி ககாரர்கள் என்பது எம்மைப்போன்றோரை சிறுமைப்படுத்துவதாகும். நாங்கள் தி காகாரர்கள் அல்ல.

    நான் அரவிந்தன் நீலகண்டனுக்கு எழுதப்போகும் எதிர்வினையைப் படித்துப்பாருங்கள் புரியலாம். அவர் கட்டுரையே தமிழுக்கு எதிரானது. அதை அரசியல்வாதிகளுக்கெதிரானது போல பூசுகிறார்.

  37. இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ள விஞ்ஞானம் அனைத்திற்கும் தாய் வீடே சமஸ்கிருதம்தான்…உலகம் எவ்வாறு பஞ்சபூதத்தில் அடங்குகிறதோ அதுபோல் உலகத்தில் உள்ள விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் எந்த வகையில் பார்த்தாலும் அது சமஸ்கிருதத்தில் அடங்கும்…
    மொழிகளின் தாய் சமஸ்கிருதம்
    கலாச்சாரத்தின் தாய் சமஸ்கிருதம்
    பண்பாட்டின் தாய் சமஸ்கிருதம்
    கலைகளின் தாய் சமஸ்கிருதம்
    காவியங்களின் தாய் சமஸ்கிருதம்
    பாரம்பரியங்களின் தாய் சமஸ்கிருதம்
    பாரத திருநாட்டின் தாய் சமஸ்கிருதம்
    இதையும் மீறி போலியான வெற்றுக் காரணங்களுக்காக சமஸ்கிருதம் வேண்டாம் என்று சொன்னால் நமது கலை , பண்பாடு , கலாசாரம் , பாரம்பரியம் , எல்லாம் கண்முன்னே அளிப்பதற்குச் சமம்..வேலியே பயிரை மேய்வது போல் பாதுகாக்க வேண்டிய நமது தாயை நாமே விஷம் கொடுபதற்குச் சமம்..இது மெத்த படித்த மேதாவிகள் அனைவருக்கும் தெரியும்…போலியான வறட்டு அரசியல் கவுரவங்களுக்காக சமஸ்கிருத எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டு, கடினமான நிலையிலும் உண்மையை பேசவும்..

    நமஸ்தே..

    கா. வீர உமாசங்கர்
    நன்றி..
    pasuvaiuma@yahoo .com

  38. //ஐந்து வேளை தொழுகைகளில் மாத்திரமே நான் குர்ஆனை அரபியில் ஓதுகிறேன். ஏனெனில் இஸ்லாம் ஒரு உலக மதம். //

    அதான் சார் ஏன்னு கேக்குதோம். ராமாயனும் மகாபாரதமும் இந்தியாவின் அத்தனை மொழியிலும் மறு வடிவு கொடுக்கப்பட்டன (வெறும் மொழி பெயர்ப்பு மட்டும் அல்ல).
    பகவத் கீதை தான் உலகத்திலேயே அதிக மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத விஷயம்.

    நீங்கள் அரபு மொழி கற்றீர்களா இல்லையா. உங்கள் அன்னான் பீ ஜெ என்னத்துக்கு அரபு கற்றார். உங்க ஆசாமிங்க எதுக்கு தாய் மொழி உருதுன்னு எழுதி கொடுக்கறாங்க.
    எதுக்கு திருப்பதியில அரபிக் கல்லூரி கட்டுறீங்க
    இவை அனைத்தும் அந்நிய மொழி. இஸ்லாம் ஒரு அந்நிய அநியாய மதம். உலகில் ஒரு இடத்தில் கூட கத்தியின்றி ரத்தமின்றி கற்பழிப்பின்றி அது சென்றடையவில்லை.

    ரம்ஜான் தான் முடிந்துவிட்டதே. கொஞ்சம் புளுகை குறைத்துக் கொள்ளலாமே.

  39. சிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்
    ::தினமலர் செய்தி::
    (செப். 25, 2012 அன்று வெளிவந்த செய்தி)

    “”பஞ்ச தந்திர கதைகளில் உள்ள நீதிகளையும், செயல்பாடுகளையும், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்,” என, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி தெரிவித்தார். பெசன்ட் நகர், “தமிழ் ஆர்ட்ஸ் அகடமி’ சார்பில், ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி “சிலப்பதிகாரம் ஒரு புதிய நோக்கு’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் கூறியதாவது: ஐந்திணைகள்சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் என்று, உரை ஆசிரியர் குறிக்கின்றார். கதைப் போக்கில் ஆங்காங்கே இசை பாக்களையும், பல்வகை கூத்துக்களையும் பொருத்தி, அதன் வாயிலாக முக்கிய நீதிகளை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

    எடுத்துக்காட்டாக, தமிழ் இலக்கண மரபுப்படி, ஐந்திணைகளை இந்நூலில் அமைத்து இயற்றி இருக்கிறார். சைவம், வைணவம், சாக்தம், பவுத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமய கருத்துகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் கதை அமைப்பில் ஏற்கனவே, வழக்கில் இருந்த பல கதைகளையும், நீதிகளையும் அடிப்படையாகக் கொண்டே, தன் இலக்கியத்தை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது. கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, “பஞ்ச தந்திரம்’ எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, “வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க’ என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு “கிரந்தம்’ என்று குறித்து, அதை, “அபரீக்ஷ்ய ந கர்த்தவ்யம் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷ்ய ச |
    ந சேத்₃ப₄வதி ஸந்தாபோ ப்₃ராஹ்மண்யா நகுலாத்₃யதா ||’ என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், “கவி’ என்றும் கூறுகிறார்.

    ஆகவே, இவ்வடமொழி வாசகம் பஞ்ச தந்திரத்தில் உள்ள பாடல் என்பதில் ஐயமில்லை. இதன் கருத்து, எந்தவொரு செயலையும் பரிசீலிக்காமல், ஆழ்ந்து எண்ணாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் மிகவும் கொடுமையானவர்கள். துன்பத்தில் ஆழ்வர் என்பது தான். சிற்பங்களாக… கோவலன், பாண்டிய மன்னன் யோசிக்காமல் செய்த செயல்களால் ஏற்பட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார். சிலம்பின் காலம், கி.பி., 3ம் நூற்றாண்டு என்பர். அக்காலத்தில், பஞ்ச தந்திர நீதிக்கதைகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்தன. இந்த கதைகள், அரேபியம், பாரசீகம், ஹீப்ரு, செகோஸ்லோவேகியம், போலந்த், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம், டேனிஷ் உள்ளிட்ட மொழிகளில், பதினாறாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த சாளுக்கியர், இராட்டிர கூடர்கள் போன்ற கர்நாடகத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சிற்பங்களாகவும், அந்த சிற்பங்களின் கீழ் பஞ்ச தந்திரக் கதையின் நீதி வாக்கியங்கள், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

    கொல்லன் கதை மற்றுமொரு பஞ்ச தந்திர கதையில், பாழ் கிணற்றில் வீழ்ந்த பொற்கொல்லன் ஒருவன், தன்னை காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வன் என, பொய் கூறி தண்டனை பெற்று தந்ததையும் குறிப்பிடுகிறது. அக்கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அக்காலத்தில் வழக்கில் இருந்த நீதிகளை எடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்துள்ளார். இவ்வாறு நாகசாமி கூறினார்.

  40. எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா
    டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார். எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும். … நன்றி: விஜயபாரதம் 7.9. 2012
    LikeLike · · Share

    [ஜனார்த்தன் ஷர்மா, முழு கட்டுரையை காபி-பேஸ்ட் செய்திருக்கிறீர்கள்… அதற்கு பதிலாக அந்த கட்டுரையின் சுட்டியை மட்டும் இங்கே அளிப்பது நல்லது.- ஆசிரியர் குழு.]’

  41. இக்கட்டுரையில் அரவிந்தன் சொல்வது இதுதான்:

    சமஸ்கிருதம் உயர்ஜாதிக்கு மட்டும் உரிய மொழியன்று. கீழ்ஜாதியினரும் போற்றிய மொழி. நாகர் இளவரசி, மீனவப்பெண்ணை மணந்த வியாசர், வேடனான வால்மீகி – இவர்களெல்லாரும் போற்றிய மொழி. தலித்து தலைவரான அம்பேத்கர் சமஸ்கிருதம் படியுங்கள் (ஜாதிகள் ஒழியும்) என்றார். இவர்கள் போக, நம் \தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், சுவாமி விவேகானந்தர், பாலாஜி பதிப்பகத்தாரின் 30 நாட்களில் சமஸ்கிருதம் நூலுக்கு முன்னுரையில் காமராஜர் இவர்களெல்லாம் சமஸ்கிருதம் உயர்ந்த மொழி எனறார்கள்.

    எனவே சமஸ்கிருதம் வாரம் கொண்டாடப்படவேண்டும் என்ற மோதி அரசின் சுற்றறிக்கை சரி. அதை எதிர்ப்போர் திராவிடக்குஞ்சுகள் மோசமான தண்டப்பேரவழிகள்.

    இப்போது கேள்வி:

    வரலாற்றின் ஆதிகாலத்தில் சில தலித்து இளவரசியோ, வேடனோ, சூத்திரனோ வடநாட்டில் இம்மொழியைப்பேசினார்கள் என்றால், தமிழர்களும் ஏன் பேசவேண்டும்? போற்ற வேண்டும்? ஜயகாந்தன் சொன்னாரென்று ஏன் சமஸ்கிருதத்தை ஏற்கவேண்டும்? அம்பேதகர் படியுங்கள் என்றால் ஏன் தமிழர்கள் கேடக வேண்டும்? இதுதான் எனக்குப் புரியவில்லை.

    தமிழக முதல்வர் ஜெ. அவர் தமிழக மக்கள் விருப்பத்தைதான் தன் விருப்பமாகக் கொள்ளவேண்டும். மக்கள் கொடுத்த வரிப்பணமும் போட்ட வாக்குகளும், அவர்தம் தாய்மொழியை வளர்க்க, போற்ற, சீராட்டத்தானே ஒழிய, இன்னொரு அந்நிய மொழியைத்தூக்கி அரியணையில் வைத்து அழகு பார்க்கன்று.

    தமிழ் வேண்டும். அந்நிய மொழி ஏன் வெறுக்கப்படவேண்டும் எனபதுதானே கேள்வி. தமிழர்கள் பல மொழிகளைபபடிக்கத் தயங்கவில்லை. ஆனால் படிப்பதற்கு தகுந்த காரணங்கள் வேண்டும். ரிட்டையர்டு ஆன பிறகு சீன மொழியையோ, ருசிய மொழியையோ படித்துக்கொள்வார் ஒருவர். அதே ஆள் வாலிபத்தில் ஆங்கிலம் போன்ற அயல்மொழியைத்தான் படிப்பார். வாழவழிவகுக்கும் மொழி சமஸ்கிருதமில்லை. எனவே தமிழர்களுக்கு அது வேண்டாம். அவர்களுக்குத் தேவைப்படா ஒன்றை ஏன் முதல்வர் தூக்கிவைத்துக்கெஞ்ச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்?

    சமஸ்கிருதம் மட்டும் சிபிஎஸ்சி பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படவில்லை. ஒன்றிலிருந்து ஒம்பது வரை ஹிந்தியும் ஆங்கிலமும் கட்டாயப்பாடமொழிகள். 10 ம் வகுப்பில் ஆங்கிலம் கட்டாயத்தாள். இன்னொரு மொழி இரண்டாம் கட்டாயத்தாள். அது சமஸ்கிருதமாக, ஹிந்தியாக, தமிழாக, தெலுங்காக, ஃப்ரெஞ்சாக, ஜெர்மனாக, வங்காளமாக இருக்கலாம். புதுச்சேரியில் ஃப்ரெஞ்சுதான் இரண்டாம் தாள், தில்லியில் டி பி எஸ்சில் ஜர்மன் எடுக்கலாம். தாகூரில், மான்ட்ஃபோர், மதர் இன்டர்னேசனில் ஃப்ரென்சு. இப்பள்ளிகளில்சமசுகிருதமும் ஹிந்தியும் எடுக்கலாம். தில்லியில் சர்தார் பட்டேல் வித்யாலாவில், தமிழ் (ஆம்…தமிழ்) எடுக்கலாம் (மேடம் பார்த்தசாரதி முதல்வராக இருந்த போது தன் தாய்மொழிக்கும் அவர் கொடுத்த மரியாதையது). இவ்வாறாக தமிழகத்திலும் பல பள்ளிகளில் சமஸ்கிருதம், தமிழ், ஃப்ரெஞ்சு, எனவிருக்க, ஏன் சமஸ்கிருத வாரம் மட்டும் எனப்துதான் என் கேள்வி.

    சுற்றரிக்கை எப்படி இருக்கவேண்டும்?

    அனைத்து பள்ளிகளும் எந்தெந்த மொழிகள் இரண்டாம் தாளாக வைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வம்மொழிகளின் மேல் மாணாக்கருக்கு ஆர்வமேற்பட் சிறப்புவாரங்களைக்கொண்டாடுங்கள் என்றிருக்க வேண்டும்/\.

    வெறும் சமஸ்கிருத வாரம் என்று மட்டுமிருக்க, சமஸ்கிருதமே சொல்லிக்கொடுக்கா புதுச்சேரி சிபிஎஸ் சி பள்ளிகள், ம்த்ரையில் நிறைய அப்பள்ளிகள், ஏன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தம்? அங்குதான், அரவிந்தன் நக்கலடித்த திராவிடக்குஞ்சுகளின் கொதிப்பு சரியாகப்படுகிறது. திணிப்பு ஏன்?

  42. February 01, 2007 17:14 IST

    Our former President A P J Abdul Kalam On Sanskrit

    Our former President A P J Abdul Kalam recalled the rich cultural heritage of Sanskrit in Indian history. Dr Kalam interacted with the students of Sree Guru Sarvabhouma Sanskrit Vidyapeetam at Mantralayam in Kurnool district. In his address he said,
    “Though I am not an expert in Sanskrit, I have many friends who are proficient in Sanskrit. Sanskrit is a beautiful language. It has enriched our society from time immemorial. Today many nations are trying to research Sanskrit writings which are there in our ancient scriptures. I understand that there is a wealth of knowledge available in Sanskrit which scientists and technologists are finding today,” he said.
    “There is a need to carry out research on our Vedas, particularly Atharvana Veda, for eliciting valuable information in science and technology relating to medicine, flight sciences, material sciences and many other related fields. Cryptology is another area where Sanskrit language is liberally used,” he added.
    He suggested that the Sanskrit Vidyapeetam, apart from their academic activity, should take up the task of locating missing literature in Sanskrit available on palm leaves spread in different parts of the country so that these could be documented and preserved. He suggested that they should avail the help of digital technology for documenting those scriptures both in audio and video form which can be preserved as long term wealth for use by many generations.
    He asked the Sanskrit Vidyapeetam to should go into details of lives of great scholars, poets, epic creators like Valmiki, Veda Vyasa, Kalidasa and Panini. He wanted the Vidyapeetam to invite well-known Sanskrit scholars so that they can stay and interact with the students for a certain period. “This will provide an opportunity for students to interact and get enriched in Sanskrit and Vedas,” he noted

  43. பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன். இந்த கருத்தை வெளியிட்டவர்: கர்மவீரர் என நம் தமிழக மக்கள் அன்புடன் அழைக்கும் காமராஜர் அவர்கள். 1972 இல் திராவிட அலை அடித்த காலகட்டத்தில் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ‘முப்பது நாட்களில் சமஸ்கிருதம் கற்பது எப்படி?’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கர்மவீரர். அதில்தான் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்

  44. First recording in the world
    Rig vedic verse by Maxmuler
    Great Sanskrit Grating Antogonists
    When Thomas Alwa Edison invented the gramophone record, which could record human voice for posterity, he wanted to record the voice of an eminent scholar on his first piece. Edison took a ship and went to England. He was introduced to the audience. All cheered Edison’s presence. Later at the request of Edison, Max Muller came on the stage and spoke in front of the instrument. Then Edison went back to his laboratory and by afternoon came back with a disc. He played the gramophone disc from his instrument. The audience was thrilled to hear the voice of Max Muller from the instrument. They were glad that voices of great persons like Max Muller could be stored for the benefit of posterity.

    After several rounds of applause and congratulations to Thomas Alva Edison, Max Muller came to the stage and addressed the scholars and asked them, “You heard my original voice in the morning. Then you heard the same voice coming out from this instrument in the afternoon. Did you understand what I said in the morning or what
    you heard this afternoon?” The audience fell silent because they could not understand the language in which Max Muller had spoken. It was `Greek and Latin’ to them as they say. But had it been Greek or Latin, they would have definitely understood because they were from various parts of Europe. It was in a language which the European scholars neverheard.

    Max Muller then explained what he had spoken. He said that the language he spoke was Sanskrit and it was the first sloka of Rig Veda, which says “Agni Meele Purohitam.” This was the first recorded public version on the gramophone plate.

    Why did Max Muller choose this? Addressing the audience he said,

    “Vedas are the oldest text of the human race. And Agni Meele Purohitam is the first verse of Rig Veda. In the most primordial time, when the people did not know how even to cover their bodies and lived by hunting and housed in caves, Indians had attained high civilization and they gave the world universal philosophies in the form of the Vedas.”

    Such is the illustrious legacy of our country!

    When “Agni Meele Purohitam” was replayed the entire audience stood up in silence as a mark of respect for the ancient Hindu sages.

    This verse means:

    “Oh Agni, You who gleam in the darkness, To You we come day by day, with devotion and bearing homage. So be of easy access to us, Agni, as a father to his son, abide with us for our well being.”

  45. anskrit the mother of many languages

    The perfection of the pronunciation (of the consonants and the vowels) and the uniqueness of the grammar that stays the same in all the ages from the very beginning of human civilization and up till today are such features which prove that Sanskrit is not manmade; …

    Dr.R.Thiagarajan
    Former Prof & H.O.D of Sanskrit,
    Presidency College

    [ஜனார்த்தன் ஷர்மா, முழு கட்டுரையை காபி-பேஸ்ட் செய்திருக்கிறீர்கள்… அதற்கு பதிலாக அந்த கட்டுரையின் சுட்டியை மட்டும் இங்கே அளிப்பது நல்லது.- ஆசிரியர் குழு.]

  46. //சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது//

    Pure optimism. Cannot be proved.

    ஏன்? தமிழகத்தைப்பொறுத்தவரை, எவ்வளவுதான் வரலாற்றுச்சான்றுகளை எடுத்துக்காட்டி, இது பேச்சுமொழி, இது கீழ்ஜாதியினரும் பேசியது என்றெல்லாம் சொன்னாலும், இன்றைய தமிழகத்தில் நிலையென்ன?

    கோயிலில் பூஜை பண்ணும்போது மட்டுமே இம்மொழி. கேடபவருக்கு வெறும் ஒலிமட்டுமே. பொருள் விளங்காது. தமிழர்களால் பேசப்படா, கேட்கப்படா (கோயிலுக்கு வெளியே), படிக்கப்படா மொழியிது.

    பிராமணர்கள் நிலையென்ன? அவர்களுள் சிலரைத்தவிர- அவர்களும் கூட போனதலைமுறை மட்டும்தான்- எவரும் இம்மொழியைக்கறகவில்லை. கற்க ஆசைப்படவுமில்லை.

    கீதா சாம்பசிவம் போன்ற பிராமணர்களுக்கு இம்மொழியின் மீது பாசம் வருவதன் காரணம், இம்மொழி பிராமணர்களுக்கு பாரம்பரியமாக கிடைத்த அடையாளங்களுள் ஒன்று. நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அவர்கள் மினாரிட்டி. இசுலாமியரப்போல தங்கள் தனித்தன்மை அபகரிக்கப்பட்டு வீசப்பட்டு விடுமோவென மிரண்டு அடையாளங்களை அழியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் ஜாதியினர என்டோகோமஸ் மேரேஜ் பணணுங்கள். நம் ஜாதி அழியாமலிருக்கும் என அவர்களுக்குள் பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.

    ஆக, இது ஆன்மிக மொழி மட்டுமே. பிராமணர்களிடையே கூட ஆர்வம் குறைந்து காணாமலே போய்விட்டது.

    இதுதான் நானறிந்த உண்மை நிலவரம். இப்படிப்பட்ட மொழிக்கு ஏன் உணர்ச்சிவ்சப்பட்டு ஒரு கட்டுரை இங்கே என்றால், அதற்கு ஒரு காரணம் ஆன்மிகம் மட்டுமே.

    இந்துமதத்துக்கே உரிய மொழிமட்டுமன்று; இந்துமதம் இம்மொழி தெய்வத்தன்மை கொண்டது என்றும் வேதமந்திரங்களுக்கு அச்சக்தி உண்டென்றும் ஓம் என்ற சொல் விண்ணை நோக்கி இறைவனை அடையும் சக்தி கொண்டதென்றும் மதத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றபடியாலே, இம்மொழி தாக்கப்பட்டால்,நீர்த்துவிட்டால், இந்துமதமே நீர்த்துப்போய்விடுமோ என்ற அச்சமே இப்படிப்பட்ட கட்டுரைகளுக்கு மூலகாரணம்.

    அந்த அச்சமெனக்கும் உண்டு.

  47. //பிராமணர்கள் நிலையென்ன? அவர்களுள் சிலரைத்தவிர- அவர்களும் கூட போனதலைமுறை மட்டும்தான்- எவரும் இம்மொழியைக்கறகவில்லை. கற்க ஆசைப்படவுமில்லை.//

    போன தலைமுறைககு முந்திய தலைமுறையைச்சேர்ந்த உவெசாவைப்பற்றிய செய்தி என்ன வியப்பில் ஆழ்த்தியது. தினமணி தமிழ் மணியில் சில வாரங்களுக்கு முன் கலாரசிகன் எழுதியது. அவர் ஐராவதம் மஹாதேவனிடம் பேசிக்கொண்டிருந்த போது ஐராவதம் சொன்னாராம்.

    உவேசாவுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலமும் சமஸகிருதமும் தெரியாது. //

    இதில் நாம் கவனிக்கவேண்டியது. உவேசா ஒரு ஆர்தோடாக்ஸ் பிராமணர். இவரின் நிலையே இப்படியென்றால், அடுத்தாத்து மாமி, மாமாவின் நிலையென்ன?

    சுலோகங்களை தமிழில் எழதி வைத்துக்கொண்டு உருப்போடுகிறார்கள் அவர்கள். Something is better than nothing.

  48. பால சுந்தரம் அவர்களே

    உங்களின் ஆராச்சி பூர்வமான எழுத்துக்கள் என்னை அசத்திவிட்டன.

    //
    ஆக, இது ஆன்மிக மொழி மட்டுமே. பிராமணர்களிடையே கூட ஆர்வம் குறைந்து காணாமலே போய்விட்டது.

    இதுதான் நானறிந்த உண்மை நிலவரம். இப்படிப்பட்ட மொழிக்கு ஏன் உணர்ச்சிவ்சப்பட்டு ஒரு கட்டுரை இங்கே என்றால், அதற்கு ஒரு காரணம் ஆன்மிகம் மட்டுமே.//

    எனக்கு தெரிந்து படுகர் என்று சொல்லப்படும் மலை ஜாதி மக்களில் சுமார் ஒரு 100 பேர் சமஸ்க்ருதம் நன்றாக பேசுவார்கள். தமிழ் நாட்டுலே தான்.

    பிராமணர் அல்லாதவர்கள் சுமார் ஒரு பத்தாயிரம் பேராவது தமிழ் நாட்டில் பேசும் திறன் படைத்துள்ளனர். அவர்கள் உம்மோட பேசமாட்டார்கள். உமக்கு தான் தெரியாதே.
    பிராமணர்கள் சுமார் ஒரு இருபதாயிரம் பேராவது பேச தெரிந்தவர்கள்.

    சென்னையில் மட்டுமே பத்தயிரத்திருக்கும் மேற்பட்டவர்கள் சமஸ்க்ருதத்தில் பேச தெரிந்தவர்கள். கோவையில் ஒரு இரண்டாயிரம், திருச்சியில் ஒரு இரண்டாயிரம் என்று நிறையப் பேர் கீறாங்க சார்.

    நாம பாக்குற பழுகுற மனுஷா பேசலென்ன, அதுக்கு சமஸ்க்ருதம் என்ன செய்யும். உங்களாலும் பேச முடியும் சின்ன முயற்சி செய்தால்.

    சமஸ்க்ருதத்தில் வெறும் ஐந்து விழுக்காடு தான் ஆன்மிகம். பாக்கி எல்லா அக்கப்போர் விஷயங்களும் இதில் உள்ளன. படித்தால் ரெம்ப நல்லா இருக்கும். மணி அடிக்க மட்டும் சமஸ்க்ருதம் இல்லை. money கிடைக்குவும் சமஸ்க்ருதம் உதவுகிறது.

  49. ஜனார்த்தன் ஷர்மா அவர்களே

    இந்த ரிக் வேதா பதிவு விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. இது உண்மை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது

  50. பாலா சார்

    //
    //சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது//

    Pure optimism. Cannot be proved.
    //

    இதற்கு தான் கொஞ்சம் புள்ளி விவரம் மேலே கொடுத்தேன். மெய்யாலுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. இதை செய்ய நிறைய குழுமங்கள் இன்று பாடு பட்டு கொண்டிருக்கின்றனர்.

  51. கபிலர் என்ற தமிழ் புலவர் ஒரு பிராமணர் ஆவார். சம்ஸ்க்ருதத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். குறிஞ்சிப்பாட்டு எழுதி அதை ஒரு வட நாட்டு மன்னருக்கு அனுப்பி தமிழ் மொழியின் சிறப்பை எடுத்து சொன்னார். அந்த மன்னர் தமிழ் மொழியை வெறுப்பவராக இருந்தவர். பிறகு அவர் தமிழ் மொழியை கற்று தமிழ் பாடல்கள் பலவற்றை எழுதினார். அது சங்க பாடல்களில் ஒரு பகுதியாக வருவதாக தெரிகிறது. சமஸ்கிருதம் அறிந்த ஒருவர் தமிழ் மொழியின் சிறப்பை பெருமையுடன் மற்றவருக்கு சொல்கிறார். ஆனால் தற்போது, தமிழ் அறிந்த நாம் சமஸ்கிருதத்தை உயிருடன் அல்லவா எரிக்கிறோம்.

  52. அடடே வியப்பான பல தகவல்களை அள்ளி வீசுகிறாரே சாரங்கன். நன்றி. ஆன்மிக ஐந்து விகிதாச்சாரமே !. மற்றபடி 95 விகிதாச்சாரம் மற்ற சமாச்சாரங்களாமே! காமசாஸ்திராவை படிக்கோணுமின்னா சமஸ்கிருதம் தெரிந்தால்தான் முடியும்.வாத்சாயனர் அதில்தானே எழுதியிருக்கிறார்!அதோடு போச்சா? இல்லை. பணமும் கிடைக்கும். அப்போ அரவிந்தன் நீலகண்டனின் உணர்ச்சிமிக்க உரை (கட்டுரை வடிவில்) சரிதான் போலும். ! பிராமணாள் 20 ஆயிரம் பேரும் அவாளுக்கு கீழேயுள்ள ஜாதிக்காரா 10 ஆயிரம் பேரும் பணத்துக்காக விழுந்து விழுந்து படித்திருக்கிறார்களே? காசு, பணம், துட்டு !

    அது கிடக்கட்டும். இம்மொழிக்கும் இந்து மதத்திற்கும் ஐந்தே விகிதம் மட்டும்தான் தொடர்பு இருக்க, ஆனால் தமிழுக்கும் இந்துமதத்திற்கும் அதற்கும் மேலிருக்க ஏன் அரவிந்தன் சமஸ்கிருதத்துக்கு உணர்ச்சிகரமாக கொடி பிடிக்கிறார்? ஏன் அவர் தமிழைப்பற்றி ஒரு உணர்ச்சிகரமான உரை எழுதவில்லை? பணமா? சாமியா? எது வேண்டும் தமிழ்.ஹிந்து எழுத்தாளர்களுக்கும் வாசகருக்கும்?

    இதுவும் போகட்டும். பிராமணர்களுக்கு வடமொழியில் அவ்வளோ பணம் கிடைக்குமென்றால் அவாள் சந்தோசத்தை நாம் கெடுக்க வேண்டாம்.. அவர்கள் பணத்தைப்பெருக்க, மற்றவர்கள் விடுவார்களா?அவர்களும் வடமொழியைப் படிக்க தமிழ்நாட்டின் பெயரை சமஸ்கிருத நாடு என்று மாற்றிவிடலாம். லடசக்கணக்கான தமிழர்கள் சமஸ்கிருதம் படிக்கிறார்கள் என்ற மாபெரும் உண்மை தெரிந்த பிறகு நாம் நம் மாநிலத்தின் பெயரை மாற்றப்போராடுவது என்ன தவறு? இப்படி மாபெரும் எண்ணிக்கையில் சமஸ்கிருதம் பேசப்பட்டு ஆதரிக்கப்பட்டால், சாரங்கன்!, திராவிடக்குஞ்சுகள் கொதித்து தமிழ் வீழ்ந்து அழிந்துவிடாமலிருக்க போராடுவது சரிதானே?

    அரவிந்தனின் மகத்துவப்பூர்ண சேவையை – அதான் சார் பணம் கிடைக்கும் வழியைத்தமிழருக்கு காட்ட – சமஸ்கிருதம் படியுங்கள் என அவர் பலபல வரலாற்று ஆதாரங்களை வைத்து எழுதியதை – சமஸ்கிருத ஆதரவாளர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  53. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    //“போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகள்,//

    பார்ப்பனர்கள் என்று நீங்கள் மொழி பெயர்த்திருப்பது சரி அல்ல. பிராமணர்களுக்குப் பிறந்தவர்களை நீங்கள் “பார்ப்பனர்கள்” என்று குறிக்கிறீர்கள். பிராமணர்கள், அந்தணர்கள், மறையோர்கள், பார்ப்பனர்கள் என்று பல பிரிவுகள் உள்ளன.

    1. தனக்குள் இருக்கும் பிரம்மத்தை (கடவுளை)அறிய, உணர முற்படுபவன் பிராமணன்.
    2. மறை நூல்களைக் கற்று, ஓதி, ஓதுவித்து, அதன்படி ஒழுபவன் மறையவன்.
    3. அந்தணன் என்பவன் அறநெறிப்படி ஒழுகுபவன்.
    4. நாள்கள், கோள்கள் இவற்றின் ஓட்டத்தையும், நிலைகளையும் அறிந்து உரைப்பவன் (பஞ்சாங்க) பார்ப்பனன் (astronomer).

    தமிழ் சைவ குருமார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் “அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்” என்று ஓதிச் சென்றிருக்கிறார்.
    அதாவது, ஓதுதல், ஓதுவித்தல், வேட்டுதல், வேட்டுவித்தல், இரத்தல், ஈதல் என்ற ஆறு தொழில்களைச் செய்யதே அந்தணர்களுக்கு உரித்தானது என்று உரைத்திருக்கிறார்.
    இது இந்து சமயத்திற்கு மட்டும் அல்ல, மற்ற சமயங்களுக்கும் கூட, சில மாற்றத்துடன் பொருந்தும். அப்படி ஒழுகுபவர்கள், அவர்கள் எந்த சாதி, சமயத்தவராலும் வணங்கத் தக்கவர்கள்.

    எனவே, போஜ மன்னன் அந்தணர்களுக்கும், மறையோர்களுக்கும் விருந்து அளித்தான் எனக் கொள்ளலாம். பிரம்மத்தை அறிய முற்படும் பிராமணர்கள், அரசனின் விருந்தை உண்ண ஓடோடியும் வரமாட்டார்கள்.

    முதலில் பார்ப்பனர் என்று குறிப்பதை விட்டுவிடுங்கள். ஆப்பிரிக்கர்களை நீக்ரோ என்பதும், இஸ்லாமியர்களை துலுக்கர் என்பதும், பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என்பதும், அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதற்காகத்தான்.

    நாம் அனைவரையும் மரியாதையுடனும், மதிப்புடனும் அழைக்கவும், குறிப்பிடவும் பழகுவோமாக!.

  54. திரு கிருஷ்ணா பாலசுந்தரம் அவர்கள் புதன் கிழமை30-7-2014 தினமணியில் வந்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் எழுதியுள்ள ” மனிதன் செய்த குற்றமடி”- என்ற கட்டுரையைப் படித்துப்பார்க்க வேண்டுகிறேன். தனிப்பட்ட மனிதர்களும் , ஒரு சில குழுக்களும் செய்த அல்லது செய்யும் சில தவறுகளை பொதுவாக எல்லோர் மேலும் ஏற்றிக்கூறுவது முறையாகாது.

    தைத்திரீய சம்ஹிதை, பிருகதாரண்யக உபநிஷத் , நாரத ஸ்ம்ருதி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல், பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள மறுமண உரிமை இவற்றையெல்லாம் பார்க்க மறுத்து, இவை எல்லாம் நாம் ஏதோ புதியதாக கண்டுபிடித்தது போல சொல்லிக்கொண்டு திரிகிறோம். இவை அனைத்தும் நம் முன்னோர் அறிந்தவைகள் தான். காலப்போக்கில் நாம் பலவற்றை அதாவது நமது சமுதாயம் பல நல்ல விஷயங்களை விட்டுவிட்டது. அதற்கு சமூகம் பொறுப்பே தவிர, மதம் பொறுப்பு அல்ல. இந்த கட்டுரையை திரு கிருஷ்ணா பாலசுந்தரம் மட்டுமல்ல, நமது தளத்தில் அடிக்கடி கருத்துப் பகிர்ந்துவரும் பெரியவர் சுவனப்பிரியன் அவர்களும் அவசியம் படிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

  55. @BALA SUNDARAM KRISHNA
    Sorry Sir, your comments are getting rather irrelevant. First you accuse me of hatred for Tamil. Tamil is my mother tongue and I have almost zero knowledge of Sanskrit apart from reading articles on it. Example: how it is a perfect language and suitable for computer use ( NASA). Obviously,Tamil is not as developed as Sanskrit. Only the ignorant parochial DK kunchus will claim otherwise. It does not mean I despise (your word) Tamil. I was a Tamil fanatic once but I have changed my mind over the years after coming to know about the richness of Sanskrit. I love both the ancestral languages of India.
    Your comments also have the usual shades of Brahmin hatred and glee in mocking them. Thank you Sir, we all have heard it all before. Brahmin hatred now is passe.
    You have no sensible point to counter Jayashri Saranathna’s article because you have not even read it. Loud noise will not amount to objective debate.
    Now you are mocking Sarang and rubbishing Brahmins again. Can you please counter his points with some sensible arguments? Sorry, your mockery of Brahmins is not funny. You almost sound like MK.

  56. அன்பார்ந்த ஸ்ரீ சாரங்க்

    ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ @ காவ்யா @ Tamil @ திருவாழ்மார்பன் @IIM கணபதிராமன் என்று பல அவதாரம் எடுத்து………………

    தமிழில் ஆனா ஆவன்னாவையும் வேற்றுமை உருபுப் பாடங்களையும் உங்களிடமிருந்து கற்ற (மொத்து வாங்கிய) சிறுபிள்ளை புதிய அவதாரம் எடுத்து வழக்கம் போல் ஜாதிக்காழ்ப்பு ஹிந்துமதக்காழ்ப்பு முகமூடி சுவிசேஷ ப்ரசாரம் இத்யாதியெல்லாம் செய்து கலக்கி வருகிறது.

    வன்முறையே வரலாறாய் வாசித்து உச்சா கக்கா போன……………… முகமூடி சுவிசேஷ அதிகப்ரசங்கத்தை மாறா அடையாளமாகக் கொண்ட………. இந்த சிறுபிள்ளையின் அடுத்த இலக்கு சிரி வைணவ பேத்தல்களாக இருக்கும்.

    மலர் மன்னன் மஹாசயரிலிருந்து வெ சா மஹாசயரிலிருந்து நண்பர் ஒத்திசைவு ராமசாமி மஹாசயர் வரை நாகாக்காது…… நான் கடலை போடுவேன் நீ பொறுக்கு என்ற ரீதியில் கடலை போட்ட சிறுபிள்ளை…………… TAmil அவதாரத்தில் நீங்கள் போட்ட மொத்துக்கு பதில் தெரியாது “ஙே” விழித்து துண்டைக்காணோம் துணியைக்காணோம் ………….என்று புறமுதுகிட்டோடிய சிறு பிள்ளை…………….. புதிய அவதாரம் எடுத்து புத்துணர்வு கொண்டதாக நினைக்கிறது. திண்ணையில் TAmil அவதாரத்தில் தமிழ் ஹிந்து தளம் கல்லாதோர் சபை என்று பினாத்தி உங்களிடம் மொத்து வாங்கியது நினைவுக்கு வரலாம்.

    ம்………………….உங்களிடமிருந்து மண்டகப்படி வாங்காது மலையேறாது. இம்சை தாங்க முடியவில்லை. மண்டகப்படியை வயணமாகச் செய்து மலையேற்றவும்.

  57. சாரங்கன்!
    படுகர்களில் 100 பேர் + பிராமணர்களில் 20000 + பிராமணரல்லாதோரில் 10000 ஆக மொத்தம் 30100 பேர். இது போக, மீண்டும் சென்னையில் 10000 க்கு மேற்பட்டோர், கோவையில் 2000 திருச்சியில் 2000 மொததம் 14000 இந்த 14000 அந்த 30100 பேரில் சேர்த்தியா இல்லையா என்று தெரியவில்லை.

    தமிழ்ப்பிராமணர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில். முன்பு 3 சதவிகிதம் என்றார்கள். தற்போது 6 என்கிறார்கள். தமிழநாட்டில் ஜனத்தொகை 7 கோடிக்கும் மேல். அதில் இந்த 6 சத விகிதம் எத்தனை லட்சங்கள்! அதில் 20000 பேர் எத்தனை விகிதமாகும்?

    94 சதவிகிதம் பிராமணரல்லாதோர். அதில் இந்த 30000 பேர் எத்தனை விகிதம்?

    உம்மிடம் பேசமாட்டார்கள் எனவே உமக்குத் தெரியாது’என்ற சாரங்கனுக்கு சமஸ்கிருதம் தெரியும். இவரிடம் வந்து அந்த 30000 பேர்களும் வந்து சொன்னார்களா? எப்படி இந்த கணக்கு எடுத்தார்? ஆதாரத்தைச் சொல்லவும்.

    ஒரு பேச்சுக்கு நம்பினாலும், தமிழ்நாட்டில் தெலுங்கு பேசத்தெரிந்தோர், தாய்மொழியாகக்கொண்டோர் லட்சக்கணககையும் தாண்டி கோடிக்கணக்கிலே இருப்பார்கள். தமிழருக்கு அடுத்தபடி அவர்கள் வருகிறார்கள். பின்னர் மலையாளிகள். அதுவும் எல்லை மாவட்டங்களில்.

    இவர்கள் 30000, 40000 இல்லை சாரங்கள். பல லட்சங்கள். அதற்காக தமிழர்கள் தெலுங்கையும் மலையாளத்தையும் தமிழை விட உயர்ந்த மொழி. அலல்து அதைப் படித்தே தீரவேண்டும் என சுற்றறிக்கை விடலாமா? சமஸ்கிருதத்து ஒரு நியாயம்! பிறமொழிகள் – அவை சமஸ்கிருதத்தைவிட அதிக எண்ணிக்கையில் – பிறமொழிகளுக்கு ஒரு நியாயமா?

    படுகர்களில் 100 பேர். சாரங்கள், ஆதி ஆந்திரர்கள் எனனும் துப்புரத்தொழிலாளிகள் தமிழகம் முழுக்கப்பரந்து கிடக்கிறார்கள். கோடிக்கணக்கில். இவர்கள் எம்மொழி பேசுகிறார்கள்? தெலுங்கு.

    சாரங்கன்! உங்கள் பேச்சின்படி 5 விகிதமே ஆன்மிகம் சமஸ்கிருதம் என்றால், ஏன் தமிழ்.ஹிந்து. காம் சமஸ்கிருத்துக்காக அரவிந்தன் கட்டுரையும் ப. வெங்கடேசனின் உள்ளுரையையும் போடவேண்டும். நினைவில் கொள்க: காமசூத்திரா மொழிக்காக ஒரு வலைபதிவை நடாத்தவேண்டும்?

    20000 தமிழ்ப்பிராமணர்கள் காமசூத்திராவைப்படிப்பதற்காகவா சமஸ்கிருத்தைக்கற்றுக்கொண்டார்கள்? அதாவது 95 விகிதம் நான்-ஆன்மிக இன்பம் இருக்கிறது அவற்றை நுகர்ந்து அனுபவிப்போமென்றா? அல்லது பணம் கொட்டும் படிக்கலாமென்றா? பிராமணர்களை இப்படியா இழிவுபடுத்துவது?.

    10000 பிராமணரல்லாதோரில் இந்துக்கள் ஆன்மிகத்துக்காகவும், இந்து அல்லாதோர் இலக்கியத்துக்காகவும்தான் படித்தார்கள் எனப்தை நினைவில் கொள்க.

    சாலமொன் பப்பையா ஒரு தீவிர சி எஸ் ஐ கிருத்துவர். மதுரையில் சுவிசேச கூட்டங்களில் அவர் பட்டிமண்டபம் நடத்துவார். கிருஸ்துவின் வாழ்க்கையில் இதுவா, அதுவா? யோவான் சொன்னது இதுவா அதுவா? என்ற தலைப்புக்களில். அவர் சமஸ்கிருதத்தைப் படித்தது, அதன் இலக்கிய இன்பத்தை அனுபவிப்பதற்க்காகத்தான்.

    ஆக, இந்துக்களுக்கு ஆன்மிகம் (பேரின்பம்) மட்டுமே. மற்றவருக்கு இவ்வுலக இன்பத்தை (சிற்றின்பம்) அனுபவிக்க.

    இந்துக்களுக்காகத்தான் இத்தளம் இருக்கிறது. எனவே சமஸ்கிருதம் ஒரு ஆன்மிக மொழி என்பதற்காகத்தான் இக்க்ட்டுரை. திராவிடக்குஞ்சுகள் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் இந்துமதத்தை எதிர்க்கிறார்கள் என்ற எண்ண்த்தில்தான் அரவிந்தனுக்கும் பின்னூட்டக்காரர்களுக்கும் கோபம்?

    இது கூடத்தெரியவில்லையா?

    ஜே வெங்கட்!

    கபிலர் பிராமணர் என்பதற்கும் இக்கட்டுரைப்பொருளுக்கும் என்ன தொடர்பு?

    சமஸ்கிருத்ததை எவரும் தீ வைத்துக்கொழுத்துங்கள் எனச்சொல்லவில்லை.

    சமஸ்கிருதம் வாரம் ஏன்? என்றுதான் கேட்கிறார்கள். ஏன் தமிழ் வாரத்தைக்கொண்டாடு என மோதி அரசு சுற்றறிக்கை விடவில்லை? ஏன் சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனி மரியாதை? மற்ற மொழிகள் அதைவிட குறைச்சலா?
    (நான் சொன்னது: சமஸ்கிருதம் பாடம் மட்டும் இரண்டாம் தாளில்லை அங்கே. பிறமொழிகளும் உள; அவற்றை வாரவிழாவில் கொண்டாடு என்று ஏன் சுற்றறிக்கை விடவில்லை?)

    இதற்கு பதில் சொன்னால் போதும்.

  58. பாலா

    உங்களது அறியாமையை எப்படி போட்டு உடைக்கிறீர்கள் பார்த்தீர்களா. சமஸ்க்ருதத்தில் ஆன்மிகம் 5 % தான். முதலி 18 வித்யா ஸ்தானங்கள் உள்ளன அவற்றில் அல்லாமே ஆன்மீகம் இல்லை – உதாரணம் ஆயர் வேதம். இவை தவிர 64 கலைகள், நியாயம், வியாகரணம், காவ்யம், நீதி கதைகள், அறிவியல், கணிதம், ஜோதிஷம், இதெல்லாம் எத்தனையோ க்ரந்தங்கள். பல புத்த க்ரான்டங்கள், ஜைன க்ரந்தங்கள் சமஸ்க்ருதத்தில் உள்ளன. உங்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் காம சாஸ்திரம் தான் 🙂 என்ன செய்வது.

    உங்களது பாக்கி மறு மொழி – சமக்ஸ்ருதம், பிராமணர் என்று ஏதோ ஏதோ பிராந்தியில் உளறுகிறீர்கள். சமஸ்க்ருதத்தில் பிராந்தி என்றால் லக்ஷ்யே அலக்ஷ்ய தர்ஷனம் இல்லாங்காட்டி மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுவது மட்டுமே.

  59. திரு. சுவனப்ரியன் ……

    தாங்கள் அளித்த கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய்யின் கவிதை மிக அறுபுதமான ஒன்று … தெரிய படுத்தியதற்கு கோடி நன்றிகள்.

    //இப்படியாக இந்தியாவில் ஒரு பெரும் கூட்டமே சமஸ்கிரத மொழிக்கு எதிராக அதுவும் இந்துக்களிலேயே எழுவது கண்டு நான் ஆச்சரியமுறுவேன்.//

    இதில் ஆச்சரியமுருவதர்க்கு என்ன இருக்கிறது சகோதரரே. அதை தான் நீங்களே கூறி விட்டீர்களே. மக்கள் விரோத கருத்துக்களை கொண்டிலங்கும் மனு தர்மம் என்னும் நஞ்சை தாங்கி வருவது இந்த தெய்வீக மொழி தானே. பலாயிரம் ஆண்டுகளாக சமர்க்ருதத்தை எதிர்த்து நின்ற ஒரே இந்திய மொழி நம் தமிழ் மட்டுமே. மதத்தால் வேறுபட்டிருப்பினும் மொழியால் தமிழராக உணரும் தங்களின் உணர்விற்கு தலை வணங்குகிறேன். தாங்கள் மற்றும் ரெபேக்கா மேரி போன்றவர்கள் மதம் கடந்து தங்களை தமிழர்களாக உணர்ந்து ஆரியத்தை வீழ்த்த முன் வந்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது.

  60. தெரியும் சாரங்கன்! காமசூத்திரா மட்டுமன்றி, காளிதாசன், பானபட்டர், பைரவர், தந்தினி, வால்மீகி, கவுடிலியர், விசாகதத்தர், பாஷர், சுத்ரகர், பவபூதி, ஹர்ஷர், பட்டநாராயணா, படரஹரி, கல்ஹணர், அனரூகர், ஜயதேவர் – இப்படைப்பாளிகளும் உண்டு. இவற்றுள் செகுலர் லிட்ரேசர் எழுதியவர்கள், ரிலிஜியஸ் லிட்டரேசர் எழுதியவர்கள் என்று இருபிரிவுகள். ஆனால், வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் படித்துவிட்டால் அதன் மதிப்பு படிப்பவருக்கு குறைத்து கிடைக்காது. இருடிகள் (அப்படித்தான் சார் நம்மாழ்வார் எழுதுகிறார்) படைத்த வேதங்களையும் தமிழில் படித்தால் பலனே இல்லை 🙁

    காரணம், அவை ஓதப்படும்போது அந்த ஒலிக்கே தெயவச்சக்தி உண்டு. அவ்வொலியைக்கூட தலித்துகள் கேட்கக்கூடாதென்பதுதான் அன்றைய வைதீக இந்துமதம். திருமழியிசையாழ்வார் சரிதம்தான் தெரியுமே சாரங்கனுக்கு? (எனக்கு வைக்கப்படும் எதிர்வினையில் அதை பூசி மாற்ற முயல்வார். அவ்வளவு ஜாதிப்பாசம்! எனக்கு ஆழ்வார்ப்பாசம், அவாளுக்கு ஜாதிப்பாசம். ரிடர்ன் அட்டாக வரும் பாருங்கள்).

    சொல்லிவைக்கிறேன். இவ்வாழ்வார் நால்வகை ஜாதிகளுப்பால் வைக்கப்பட்ட பஞ்சவர்ணத்தார். இவர் சுந்தரராஜப்பெருமாளைத் தரிசிக்கச்செல்லும்போது, ஒரு வீட்டுத்திண்ணையில் சில வைதீகர்கள், வேதம் ஓதிக்கொண்டிருந்தார்கள். இவர் வரும்போது நிறுத்திவிட்டார்கள். இவர் தலித்து, இவர் காதில் வேத ஒலி விழக்கூடாதென்பதற்காக. ஆழ்வார் //உறையில் அடங்காதவர்// என்ற பட்டப்பெயர் பெற்றவர். அதாவது கோபக்காரர். அப்பிராமணர்களுக்கு ஒரு சாபம் போட்டுவிட்டு தன் புனிதப்பயணத்தைத்தொடர்ந்தார். அவர் காதில் ஒலி கேளா தொலைவு சென்றவுடன் மீண்டும் வேதமோதலைத் தொடர்ந்தார்கள். அய்யகோ! முடியவில்லை. அவர்தம் நாவுகள் அவர்தம் மேலன்னங்களில் ஒட்டிக்கொண்டு வரமறுக்கின்றன !! அவர்களில் மூத்தோன் உணர்ந்துகொண்டான். ஓடிச்சென்று ஆழ்வார் காலில் விழ்ந்து தங்கள் பிழையை பொறுத்தருளுமாறு வேண்ட, ஆழ்வார் திரும்பிவ ந்தார். ஒரு கரிய நெல்மணியைத் தூக்கி மேலே எறிந்தவுடன், அவர்கள் விட்ட இடத்திலிருந்து மந்திரங்களைத்தொடர அவர்களால் முடிந்தது. பின்னர் அவர்கள் அவ்வாழ்வாரின் முதன்மைச்சீடர்களாக ஆனார்கள் எனபதுதான் திருமழிசையாழ்வாரின் திவ்ய சரிதம்.

    இக்கதை முக்கியமன்று. இக்கதையில் தெரியவருவது, வேதவொலிக்கு தெயவச்சக்தி உண்டு. நான்கு வேதங்களுக்கும் உண்டு. காயத்திரி மந்திரத்துக்கு உண்டு. ஓம் என்ற சமஸ்கிருதச்சொல்லுக்குண்டு. இப்படி வேறு எந்த மதத்திலும் இல்லை. அல்லாஹோ அக்பர் எனப்தை இறைவன் மிகப்பெரியவன் என்றெழதிக்கொண்டார்கள். அரபியில் ஓதினால்தான் அல்லாவை அடையமுடியும் என்றில்லை. விவிலியத்தை தமிழில்தான் படித்து தேவாயலங்களிலோ சுவிசேச கூடங்களில் பிரார்த்திக்கிறார்கள். போப் லத்தீனுக்கு அச்சக்தி உண்டு என்பார். தமிழர்கள் அப்படியில்லை. லத்தீன் என்ங்குமே தமிழ்நாட்டில் இந்தியாவில் ஓதப்படவில்லை. ஆனால், காயத்திரி மந்திரத்தையோ வேத மந்திரங்களையோ தமிழில் சொல்லக்கூடா. எனவேதான், தமிழில் அர்ச்சனைக்கு ஒரு பலனுமில்லை.

    இதைத்தான் நான் சமஸ்கிர்த மொழியின் ஆன்மிகம் என்கிறேன். ஆயுர்வேதத்து நூல்களையும் யோக சூத்திர நூலகளையும் அல்ல. இவை செகுலர் லிட்டரேசர் (மதமில்லா மற்ற உலக விசயங்களைப்பற்றி எழுதிய) கிடையா. சாரங்கன் கதைப்பது என்னவென்றால், செகுலர் லிட்டரேசர் ரொம்ப இருக்குங்கோ. அதுக்காக படியுங்கோ வடமொழியை.

    இஃதென்ன வாதம்? செகுலர் லிட்டரேசர் தமிழில் சூப்பரா இருக்கே. இல்லாத ஒன்றுக்குத்தானே எங்கே இருக்கின்றதோ அங்கு ஓடுகிறோம் ? சாலமோன் பப்பையா என்ன காயத்திரி மந்திரத்தைத் படிக்கவா வடமொழி பயின்றார்? அவர் செகுலர் லிட்டரேசருக்காகத்தான் போனார். ஜயகாந்தன் ஏன் படிக்கச்சொன்னார்? செகுலர் லிட்டரேக்குத்தான். நல்ல ஹிந்துவாக சமஸ்கிருதம் படியுங்கள் என்று காமராஜரோ, ஜயகாந்தனோ சொல்லவில்லையே? அவர்களுக்கு ஏன் அவ்வேலை? அவர் கள் மதவாதிகளா?

    உண்மையை மறைக்க முயல்வதுதான் பிராந்தி. தமிழ் ஹிந்து. காமும் அரவிந்தனுக்கும் ஏன் சமஸ்கிருத செகுலர் லிட்டரேசருக்கு வால் பிடிக்கவேண்டிய அவசியம்? அப்படிச்செய்ய வேண்டுமானால், அவர்கள் இலக்கிய வலைபதிவு அல்லவா நடாத்தவேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். ஏன் எழுதினார்கள் என்றால், வைதீக இந்துமதம் வேதங்கள், உபநிடத்துக்களிலிருந்தே வருகிறது. வாழ்கிறது. அம்மூச்சை எவரோ நிறுத்தப்பார்க்கிறார்கள் என அச்சப்பட்டு இக்கட்டுரையைப்போட்டிருக்கிறார். காமசூத்திரா படித்து தமிழ் ஹிந்து வாசகர்களே விதவிதமான பொஷிசன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது காளிதாசன் நாடகங்களைப்படித்து இலக்கிய இன்பம் நுகருங்கள் என்று போடவில்லை. 🙂

  61. ஜனார்தன் சர்மா …..

    தாங்கள் கூறிய தாமஸ் ஆல்வா எடிசன், மாக்ஸ் முல்லர் மோசடி கதைக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மாக்ஸ் முல்லர் எப்போது எந்த இடத்தில் இவ்வாறு கூறினார். அம்பேத்கர்,அப்துல் கலாம், விவேகானந்தர் போன்று சமற்க்ருத மொழியை “Promote” செய்வதற்கு “Brand Ambassdor” களாக வரிசை கட்டி நிற்கும் போது எதற்கு எடிசனை உங்களின் வடமொழி போதைக்கு உறுகாய் ஆக்கும் முயற்சிகள் ஏனோ? இந்த கயமை தனத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால் இதற்க்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். புத்தகம் அல்லது லிங்க் ஆதாரம் கொடுங்கள்.இணையத்தில் உலவும் குப்பை ப்ளாகுகளை எல்லாம் ஆதாரமாக வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அல்லது பொது தளத்தில் இப்படி ஒரு மோசடியான கருத்தை வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

  62. மனு தர்மம் என்பது நஞ்சு என்று கூறும் அதிமேதாவி தாயுமானவன் மனுதர்மத்தினைப் பற்றி எதுவும் படித்ததில்லை என்பதும், திராவிட மோசடிக்கும்பலின் பொய்யான பிரச்சாரங்களுக்கு மயங்கி உள்ளவர் என்பதும் தெரிகிறது.

    சமஸ்கிருதத்தில்தான் உலகிலேயே மிக அதிகமாக சார்வாகம் மற்றும் சாங்கியம் ஆகிய மிக துல்லியமான உண்மைப் பகுத்தறிவு கருத்துக்கள் உள்ளன. ஓ ! பகுத்தறிவு, மற்றும் மனுதர்மம் ஆகிய இரண்டும் நஞ்சு என்று தாயுமானவன் போன்ற மேதாவி கருதுவதில் வியப்படைய ஒன்றும் இல்லை.

    ஒரு மொழியில் பலர் எழுதுகிறார்கள் .

    ஒருவன் நெடுங்கதை எழுதுவான்,

    வேறு ஒரு எழுத்தாளன் சிறுகதை எழுதுவான்-

    மூன்றாமவன் ஒரு காவியம் படைப்பான்-

    நான்காமவன் ஒரு புதுக்கவிதை படைப்பான்.

    ஐந்தாமவன் ஒரு நாடகம் படைப்பான்.

    இதேபோல ஆன்மிகம், அரசியல், சமூக விழிப்புணர்வு என்று பலரும் எழுதுவது வழக்கம். எந்த மொழியிலும் யாரும் எதனை வேண்டுமானாலும் எழுதலாம். அது மொழியின் சிறப்போ, மொழியின் குற்றமோ அல்ல. எழுதுவோரின் சிறப்பு அல்லது குற்றம் தான்.

    வன்முறை, மோதல், குழப்பம் இவற்றை மனித சமூகத்தில் உருவாக்க கூட பல தீவிரவாத இயக்கங்கள் பல நூல்களை எழுதுகிறார்கள். அதற்கு மொழி எப்படி பொறுப்பாக முடியும் ?

    தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரின் பக்த கோடியான தாயுமானவனைப் போன்றவரிடம் எப்படி நல்ல கருத்துக்களை எதிர்பார்க்க முடியும் ? இணையத்தில் இவரைப்போன்ற போலிகள் ஏராளம்.

    . தாயுமானவனைப் போன்ற ஆங்கில அடிவருடிகள் தான் , ஆங்கிலம் என்ற கேடயம் கொண்டு , தமிழை காப்போம் என்று சொல்லி, இன்று தமிழைப் புதை குழிக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நபர்கள் ஆவார்கள். தமிழகத்தில் சிறிது சிறிதாக ஆங்கில வழி கல்வி அளிக்கும் கல்விக்கூடங்களை அதிகரித்து, தமிழ் வழிக்கல்விக்கு பாடை கட்டியவர்களை தலைவர் என்று சொல்லித்திரியும் இவரைப் போன்றவர்களை காலம் மன்னிக்காது.

    சமற்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ் என்று உளறுகிறார்- இவருக்கு தமிழும் தெரியாது- சமற்கிருதமும் தெரியாது என்று நன்றாக தெரிகிறது. பாவம்.
    ” வடமொழியும், தென்தமிழும் ஆயினான் காண் -” என்கிறது தேவாரம்.

    தேவாரம் அறியாதவர் தன்னை எல்லாம் அறிந்தவர் போல , பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.

    மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ” பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ” என்று சிவபிரானை விளிக்கிறார். ( சிவபுராணம்)- அந்த ஆரியத்தை – அதாவது மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட சிவனை வீழ்த்த வேண்டும் என்று கூறுகிறார்
    தாயுமானவன்.

    திராவிடம் என்பது இனம் அல்ல அது ஒரு நிலப்பரப்பின் பெயர் தான் என்று இவரைப் போன்ற மனநிலை பாதிக்கப்பட்டோரை தெளியவைப்பது சிறிது கடினமான பணி தான். என்ன செய்வது நமது சகோதரர்களில் சிலர் இப்படி இருந்தால் நாம் தான் பித்தம் தெளியவைக்க முயற்சி செய்ய வேண்டும். இறை அருளால், அதனை விடாது முயல்வோம்.

  63. துரியோதனனுக்கு உலகில் இருந்த நல்லது எதுவுமே தெரியவில்லை. தர்மனுக்கோ உலகில் இருந்த கெடுதல் எதுவுமே தெரியவில்லை. எல்லாமே அவரவர் பார்வைக்கோளாறு தான். தாயுமானவருக்கும் இதே பார்வைக் கோளாறுதான் . நல்ல மருத்துவரிடம் அனுப்பிவைக்கவேண்டும்.

  64. @RAMA

    Read your response. Your mother tongue is Tamil, you say. But why did you then hurt Tamilians saying Tamil is the younger sister of Sanskrit? I pointed out that. If you find Sanskrit a glorious language, say that only. After all it is in your personal view based on your own understanding. But don’t say Tamil is inferior to Sanskrit. That is insulting people who have Tamil as their mother tongue.

  65. //தைத்திரீய சம்ஹிதை, பிருகதாரண்யக உபநிஷத் , நாரத ஸ்ம்ருதி ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல், பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள மறுமண உரிமை இவற்றையெல்லாம் பார்க்க மறுத்து, //

    //இந்த கட்டுரையை திரு கிருஷ்ணா பாலசுந்தரம் மட்டுமல்ல, நமது தளத்தில் அடிக்கடி கருத்துப் பகிர்ந்துவரும் பெரியவர் சுவனப்பிரியன் அவர்களும் அவசியம் படிக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.//

    ஆம் திரு.பாலசுந்தரம் மற்றும் திரு. சுவனப்ரியன் அவர்களே அவசியம் நீங்கள் பிருகதாரண்யக உபநிஷத் படிக்க வேண்டும் அப்போது தான் மாட்டுக்கறி(கோ மாம்சம்) உண்டால் நல்ல அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்கிற உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நல்ல புகழ் பெற்ற அறிஞராகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் குறிப்பாக அனைத்து வேதங்களையும் கரைத்து குடித்த மகாஞாநியாகவும் இருக்கும் படியான ஒரு பிள்ளை பெற வேண்டுமானால் பிருகதாரண்யக உபநிஷத் கூறுவது போன்று கணவனும், மனைவியும் மாட்டிறைச்சி உண்ண வேண்டும். பெண்களின் மறுமணம், பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல் போன்றவற்றை மட்டும் கூறிய திரு.கதிரவன், ஏனோ இந்த அதி முக்கிய வேதாந்த ரகசியத்தை கூறாமல் விட்டு விட்டார்.. என் வேத முன்னோர்களின் பெருமையை கண்டு நான் வியக்கேன்:)

  66. திரு அரிசோனன்!

    //பார்ப்பனர்கள் என்று நீங்கள் மொழி பெயர்த்திருப்பது சரி அல்ல. பிராமணர்களுக்குப் பிறந்தவர்களை நீங்கள் “பார்ப்பனர்கள்” என்று குறிக்கிறீர்கள். பிராமணர்கள், அந்தணர்கள், மறையோர்கள், பார்ப்பனர்கள் என்று பல பிரிவுகள் உள்ளன.//

    நான் இழிவு படுத்தும் நோக்கில் மொழி பெயர்க்கவில்லை. ‘பிராமின்’ என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் அல்லாது மேலும் பல விளக்கங்களும் கிடைக்கின்றன.

    வேத காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு முக்குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
    • பிராமணர் – மிகு சத்துவ குணம்.
    • சத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக இராட்சத குணம், குறை தமாசீகம்.
    • வைசியர்-சாத்வீக குணமற்றவர், குறைவான இராட்சத குணம், அதிகமான தாமச குணம்.
    • சூத்திரர்- சாத்வீக குண மற்றவர், ராஜசீக குணமற்றவர், தாமசீகம் குணம் மட்டும்.
    • பிராமணர் தன்னில் தாழ்த்தப்பட்ட மூன்று வர்ணத்துப் பெண்களையும்,சத்திரியர் தன்னில் தாழ்ந்த இரண்டு வர்ணத்துப் பெண்களையும் வைசியர் தன்னில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்து பெற்ற குழந்தை கள் அறுவரும் “அநுலோமர்” எனப்பட்டனர்.
    • சத்திரியர் தன்னில் உயர்ந்த ஒரு வர்ணத்துப் பெண்ணையும் , வைசியர் தன்னில் உயர்ந்த இரு வர்ணத்துப் பெண்களையும்,சூத்திரர் தன்னில் உயர்ந்த மூன்று வர்ணத்துப் பெண்களையும் கூடிப் பெற்ற பிள்ளைகள் அறுவரும் “பிரதிலோமர்” எனப்பட்டனர்.
    • பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களும் பிறர் மனைவியுடன் தவறுதலாகச் சேர்ந்து பெற்ற பிள்ளைகள் “அந்தராளர்” என்று அழைக்கப்பட்டனர்.
    • அநுலோமர் முதலாயினர் நான்கு வர்ணத்துப் பெண்கள் முதலியவர்களோடு பெற்ற பிள்ளைகள் “விராத்தியர்” என்றழைக்கப்பட்டனர்

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    இது விக்கி பீடியா தரும் செய்தி. இந்து மத ஆதார நூல்களையும் வரிசையாக பட்டியலிடுகிறது. மனுஸ்மிருதி இதை விட மிக அதிர்ச்சிகரமான செய்திகளை பட்டியலிடுகிறது. நீங்கள் மனம் வேதனைப்படக் கூடாது என்பதற்காக அதனை பட்டியலிடவில்லை.

    ஒரு இஸ்லாமியன் பிறப்பினால் ஒரு சமூகத்து மக்களை உயர்வாக எண்ண மாட்டான். குர்ஆனின் கட்டளைக்கு அது மாற்றம். எனவே ‘பிராமிண்’ என்ற சொல்லுக்கு நீங்கள் சொல்லும் அர்த்தம்தான் வேறு அர்த்தங்கள் கிடையாது என்று எனக்கு தெளிவு கிடைக்கும் வரை நான் ‘பார்பனர்கள்’ என்றே கூறுவேன்.

    அல்லது மனுஸ்ருமிதி இந்து மத சட்டம் கிடையாது என்றும் அதனை கோவில்களிலோ வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். அவ்வாறு நடந்து விட்டால் நான் ‘பிராமிண்’ என்றே அழைக்கிறேன்.

    மற்றபடி என்னை யாராவது ‘துருக்கர்’ அல்லது ‘துலுக்கன்’ என்று சொன்னால் கோபப்பட மாட்டேன். அந்த காலத்தில் துருக்கி உலகை ஆண்டதால் உலக முஸ்லிம்கள் அனைவரையுமே ‘துருக்கியர்கள்’ என்று பலரும் குறிப்பிட்டனர். அது நாளடைவில் மருவி துருக்கர் அல்லது துலுக்கன் என்றாகி விட்டது. ஆனால் இந்தியாவில் உள்ளவர் யாரும் துருக்கியர் கிடையாது. இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறியவர்கள். என்னை யாராவது ‘துருக்கர்’ என்று கூறினால் இந்த உலகை ஆண்ட பரம்பரையை சேர்ந்தவன் என்று என்னை வாழ்த்துவதாகவே நினைத்துக் கொள்வேன். என்னை நீங்கள் ‘துருக்கர்’ என்றும் கூப்பிட்டுக் கொள்ளலாம். எனவே வரலாறு தெரியாத சில முஸ்லிம்கள் கோபப்படலாம். நான் கோபப்பட மாட்டேன்.

  67. திரு தாயுமானவன்!

    //தாங்கள் அளித்த கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய்யின் கவிதை மிக அறுபுதமான ஒன்று … தெரிய படுத்தியதற்கு கோடி நன்றிகள்.//

    பாராட்டுக்கு நன்றி. இதன் மூலம் பல உண்மைகளை நானும் தெரிந்து கொள்ள ஏதுவாகிறது.

    //மதம் கடந்து தங்களை தமிழர்களாக உணர்ந்து ஆரியத்தை வீழ்த்த முன் வந்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது.//

    ஆரியத்தை வீழ்த்துவது என்பதை விட என் தாய் மொழியான தமிழை நேசிப்பது என்பதே எனது முதல் இலக்கு. எனது பேச்சிலும், எழுத்திலும் ஆங்கிலமும், அரபியும், உருதும் கலப்பதை கூடிய வரை தவிர்த்து விடுவேன். எனது குழந்தைகளுக்கும் அதையேதான் சொல்கிறேன். தாய்மொழியான தமிழ்ப் பற்று சவுதி அரேபியா வந்தும் கொஞ்சம் கூட குறையவில்லை.

    மற்றபடி உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் அட்டகாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  68. எனது தமிழ் உடன்பிறப்புக்களே,

    தங்களது கருத்துக்களை நான் படித்து வந்தேனே தவிர, எனது கருத்தைப் பதியவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில், வெளிநாட்டில் இருக்கும் நான், இந்தியாவின் அரசியலில் கருத்துப் பதியக்கூடாது என்ற கட்டுப்பாடுதான். எனவேதான் ஜனாப் சுவனப்பிரியனின் ஒரு கருத்துக்குமட்டும் பதிலைப் பதிவு செய்தேன்.

    சமஸ்கிருத வாரம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி நான் கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை. ஆயினும், தமிழைப்பற்றியும், வடமொழி(சமஸ்கிருதம்)யைப் பற்றியும், நான் கொண்டுள்ள கருத்தினை என் உடன்பிறப்புகளான தங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
    ஒரு சமுதாயத்தைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்றால் அதன் மொழியைக் கசடறக் கற்கவேண்டும். மொழிதான் ஒரு சமுதாயத்தைப்பற்றி அறிந்துகொள்ள உதவும் ஊடகம். எவருக்கும் தனது தாய்மொழியின் மீது பற்று, அன்பு இருக்கவேண்டும். அவர் எந்த இனமாலும், சமயமானாலும், சாதியானாலும், சமய உட்பிரிவானாலும் சரி, தாய்மொழி, அச் சமுதாயத்தின் வாய்மொழி, அதன் குருதியில் இரண்டறக் கலந்திருக்கிறது. அந்தவகையில், தமிழர்கள் அனைவரும் தமிழைப் பிழையறப் பேசவாவது அறிந்திருக்க வேண்டும் என்பது எனது அவா.

    ஒரொரு தடவை நான் தமிழ் நாட்டிற்கு வந்து போகும்போதும், அமரகவி பாரதி (1930 என்று நினைக்கிறேன்) பாடிவிட்டுச் சென்ற ஒரு கவிதைதான் என் நினைவுக்கு வந்து என்னைச் சோர்வுறச் செய்கிறது.

    “மெல்லத் தமிழ் இனிச் சாகும், அந்த
    மேற்கு மொழிகள் இப் புவிமிசை மேவும்
    என்றந்தப் பேதை.உரைத்தான், ஆ!
    இந்த வசையெனக் கெய்திடலாமோ?”

    அந்த அளவுக்கு தமிழ், அது கோலோச்சி வரும் தமிழ்நாட்டிலேயே, நம் இளைஞர்களாலும், முதியவர்களாலும் புறக்கணிக்கப் படுகிறது. நான் நல்ல தமிழில் பேசினால், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்ற கேள்விதான் அனைவரிடமிருந்தும் எழுகிறது. கல்வி அறிவு அற்றவனைப்போல என்னைப் பார்க்கிறார்கள். அந்த அளவு தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்கள். இதற்கு எந்த மதத்தினரும், சாதியினரும் விலக்கல்ல. கிராமங்களில், தமிழைத் தவிரே வேறு எந்த மொழியையும் அறியாதவர்களிடம் பேசும்போதுதான், கொஞ்சு தமிழை என்னால் கேட்க முடிகிறது. மனமகிழ்ச்சியுடன் உரையாட இயலுகிறது.

    தமிழில் வடமொழியைக் கலக்கக்கூடாது என்று தனித்தமிழ் இயக்கம் துவங்கிய பரிமால் கலைஞர், மறைமலை அடிகள் போன்றானார் எங்கு போயினர் என்று என் உள்ளம் துடிக்கிறது. தமிழை பள்ளிகளில் இருந்தே விரட்டி விட்டார்கள். ஆங்கில மொழியில் கற்பிக்கப் படும் பள்ளிகளே சிறந்தவை என்ற தவறான எண்ணமே எல்லா மக்களிடமும் நிலவி வருகிறது. இங்கும், சமய, சாதி, உட்பிரிவு வேறுபாடு இல்லை. இக்கால இளைஞர்களுக்கு தமிழில் எழுதக்கூட, படிக்கக் கூட வருவதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பதைப் பெருமையுடன் சொல்வதைக் கேட்டல் நெஞ்சில் குருதி கசிகிறது.

    இப்படியிருக்க, நான் தமிழ் ஊடகங்களில் காண்பது என்ன? தமிழர்களுக்குள் பிரிவினை ஊட்டும், ஒருவரிடம் ஒருவர் வெறுப்பை ஏற்படுத்தும், நிகழ்சிகளும், மூளைச் சலவைகளும்தான். இதில் நாங்கள் மட்டுமே தமிழர்கள், நாங்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள், …..ஐ ஒழிக்க, ….ஐ நீக்க நாங்கள் பாடுபடுகிறோம் என்ற மார்தட்டல் வேறு! பொதுவாக தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்களே தவிர, அவரவர்களில் செயல் திட்டத்தை (agenda) முன்வைப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, தமிழில் யாருக்கும் அக்கறை இல்லை என்றுதான் வெளிநாட்டில் இருக்கும் தமிழனான எனக்குத் தோன்றுகிறது.

    இனி மற்ற மொழிகளைப்பற்றி, சமயம், இலக்கியம் நிறைந்துள்ள மொழிகளைப்பற்றி, நான் அறிந்ததை எழுதுகிறேன்.

    எந்த ஒரு மொழியின் உணர்ச்சியையும், அதன் உட்கருத்தையும், மற்ற மொழியில், மொழிபெயர்ப்பது என்பதே இயலாது. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருக்குறள், இவற்றை நன்கு அறிய தமிழை நன்கு கற்றால் மட்டுமே இயலும். சில தமிழ்ச் சொற்களுக்கு வேறு எந்த மொழியிலும் மாற்றுச் சொல் கிடையாது. சில தமிழ் சொற்றொடர்களை அது சுட்டியமாறு மொழிமாற்றம் செய்யவும் இயலாது. இது இந்த மொழிக்கும் பொருந்தும். மொழிகளின் வடிவமைப்பும் அப்படியே.

    எனவேதான், இலக்கியங்களையும், சமயநூல்களையும் அவை எழுதப்பட்ட மொழியிலேயே கற்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சனாதன சமயமான இந்து சமயம் நீங்கலாக, உலகத்தில் இருக்கும் அனைத்து சமய நூல்களுக்கும் ஒரு மொழியைக் கற்றாலே போதுமானது. அது அவசியமும்கூட.

    இஸ்லாமியர்கள் திருக்குரானை அரபு மொழியில்தான் ஓதவேண்டும் என்று சொல்வதும் அதனால்தான். ஒவ்வொரு இஸ்லாமியனும் அரபு மொழியைக் கற்கத்தான் வேண்டும். அப்பொழுதான் அவனது சமயம் அவனுக்குப் புரியும்.
    விவிலிய நூலை முறைப்படி கற்க கிரேக்க மொழி தெரிந்திருக்கவேண்டும். மொழி மாற்றம் செய்யும்போது உட்கருத்துகள் மாறிவிடுகின்றான், அல்லது மாற்றப்படுகின்றன.

    இந்து சமய தமிழ்மறைகளை அறியத் தமிழ் தெரிய வேண்டும். நான்மறைகளான வேதங்களுக்கும், உபநிஷதங்களுக்கும் வேதமொழியும் (சந்தஸ்), தெரிந்திருக்கவேண்டும். இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.
    இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும். எனவே, இந்துக்கள் அனைவரும் (வடவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்), தமிழும், வடமொழியும் கற்கவேண்டும் என்பது எனது கருத்து. தமிழைக் கற்றுக்கொள் என்று சொல்லாமல், வடமொழி வாரம் நடத்துவதோ, தமிழ் வாரம் வேண்டும் என்று சொல்லாமல், வடமொழி வாரத்தைச் சிறப்பாக நினைப்பதும், ஒருவரை (அதாவது இந்துக்களைப் பொருத்தமட்டில்) தாயோ, தந்தையோ ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்று சொல்வதற்கு நிகராகத்தான் தோன்றுகிறது.

    இது எனது இந்திய அரசியல் பற்றிய கருத்தல்ல. இந்து சமயத்தை அனுசரிக்கும், ஒரு இந்துவின் கருத்தே என்று கொள்ளவேண்டும்.

    நான் அன்னை தமிழுடன், ஆங்கிலம், வடமொழி, இந்தி, ஓரளவு மலையாளம், உருது, தெலுங்கு அறிந்தவன். எனக்கு எந்த மொழியின் மீதும் வெறுப்பு கிடையாது. மொழித் திணிப்பை நான் விரும்பாதவன். அமெரிக்க மண்ணில், தமிழ்ச் சங்கம் நிறுவி, இங்கு வளரும் சிறார்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தவன்.

    எனவே, எதிர்க் கருத்து எழுதும் தமிழ் நண்பர்கள், எனது கருத்துகளுக்கு மட்டுமே ஆதரவு/எதிர்க் கருத்துகளை எழுதுமாறு தாழ்மையுடன் கோருகிறேன். அதை விடுத்த, மாறான, தேவையில்லாத வன்கருத்துக்களைக் தவிர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    வணக்கம். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமச்சிவாய!!

  69. தமிழ்பால் அன்புகொண்ட என் உடன்பிறப்புக்களே,

    தமிழின், தமிழர்களின் பெருமையை விவரிக்கும், தமிழைக் கற்பதில் நாட்டம் குறைந்தால் எதிர்காலம் என்ன ஆகும்(what if) என்ற கருத்தை வைத்து நான் எழுதிய “தமிழ் இனி மெல்ல…” என்ற புதினம் தொடராக இணையவெளி என்ற வலையத்தில் வெளிவருகிறது. அதைப் படிக்க விருப்பம் கொண்ட தமிழ் அன்பர்கள் கீழ்க்கண்ட லின்க்குக்குச் சென்று படித்து, கருத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    வணக்கம்.

    https://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_5203.html

  70. திரு. ஒரு அரிசோனன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கீழ்கண்ட கருத்து விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக விசால மனப்பான்மையுடன் உள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி. உண்மையை தைரியமாக சொல்லி இருக்கிறீர். வாழ்க நீர் பல்லாண்டு.

    # இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும் #.

  71. //ஆரியத்தை வீழ்த்துவது என்பதை விட என் தாய் மொழியான தமிழை நேசிப்பது என்பதே எனது முதல் இலக்கு. //

    we do have so many people to save tamil. better you save our tamil people as below story has explain you lot. everyday I am reading 10 news like this. better you explain quran to your own people and ask them to treat others human well and give respect humans. all cheat fraud people in your work country only and you easily save our tamil people.
    here is the today news:-

    கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் சேரன், 48. பெற்றோருக்கு, இரண்டாவது மகன். தனக்கு தெரிந்த வர்கள் சிலர், வெளிநாடு சென்று, சொற்ப ஆண்டுகளில், அதிகளவில் சம்பாதித்து வீடு கட்டுவதையும், நிலம் வாங்குவதையும் பார்த்து, தானும் வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசைப்பட்டார்.பாஸ்போர்ட், விசா பறிமுதல்கைவசம் தையல் தொழில் இருந்ததால், நிச்சயம் வெற்றி என்ற எண்ணத்தில், 1995ல், சவுதி அரேபியாவுக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது, 29. ‘வாழ்க்கையில், ‘செட்டில்’ ஆகிவிடலாம்; இனிமேல், கஷ்டமில்லை’ என்ற கனவில் மிதந்தார்.ஏஜன்ட்கள் மூலம், சென்னையில் இருந்து, மும்பைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், ஒரு மாதம் அங்கு தங்க வைக்கப்பட்டார்.டெய்லர் என்பதால், அவருக்கு பயிற்சி யும், தகுதித் தேர்வும் நடத்தப்பட்டது. அவற்றில், தேர்ச்சி பெற்ற அவருக்கு, சவுதி அரேபியாவுக்கு விசா வழங்கி அனுப்பினர். மனசுக்குள், வளமான எதிர்காலத்தை சுமந்து, சவுதிக்கு சென்ற அவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ‘டெய்லர் வேலைக்கு நாங்கள் அழைத்து வரவில்லை. ஆடு மேய்க்கத் தான் அழைத்து வந்தோம்’ என, சவுதியில் வேலை கொடுத்தவர்கள் கூற, அதிர்ச்சி அடைந்தார்.அவரிடமிருந்த, பாஸ்போர்ட், விசா மற்றும் ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்ட, வேலை கொடுப்பவர், ‘ஆவணங்கள் இல்லாமல், என் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி னால், சவுதியில் சிறை தான் உனக்குக் கிடைக்கும்’ என, எச்சரித்துள்ளார். வேறு வழி தெரியாமல் விழித்த சேரனை, மலைப்பாங்கான பகுதியில் உள்ள, தோட்டத்தில் விட்டனர். மூன்றாண்டு கள் ஒப்பந்தப்படி, ஆடு மேய்த்து விட்டு, 1998ல் ஊர் திரும்பிஉள்ளார்.தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தை, வெளிநாடு செல்லும் மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக, ‘வெளிநாடு செல்லாதீர்கள். ஆடு தான் மேய்க்க வேண்டும்’ என, விழிப்புணர்வு பிரசாரத்தை, 16 ஆண்டுகளாக செய்து வருகிறார்.தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்து, சேரன் கூறியதாவது:டெய்லர் வேலைக்கு என சவுதி சென்ற எனக்கு, ஆடு மேய்க்கும் வேலை தான் கொடுத்தனர். ஏமாற்றி விட்டீர்கள் என, கோபமடைந்தபோது, அவர்களின் எச்சரிக்கை என்னை அடைக்கியது.காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஆடு மேய்க்க வேண்டும். காலையில், 5 லிட்டர் தண்ணீரும், ரொட்டியும் கொடுப்பார்கள். இரவில், காடுகளில் கிடைக்கும், சுள்ளிகளைப் பொறுக்கி, சமையல் செய்து கொள்வேன். இதற்கு, மாதம், 5,000 ரூபாய் சம்பளம்.ஆடுகள் அடைத்திருக்கும் பட்டிக்கு அருகே, தகர செட் அமைத்திருப்பார்கள். அதில், துாங்கிக் கொள்வேன். என்னைப் போல், அப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட, தமிழர்கள் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கும், தோட்ட வேலைக்கும் அமர்த்தப்பட்டு இருந்தனர். ஏதேதோ கனவுகளுடன் சவுதி வந்த எனக்கு, மிஞ்சியது ஏமாற்றமே. மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடியும் வரை, அங்கு இருந்துவிட்டு ஊர் திரும்பினேன்.இங்கு வந்ததும் நான் பட்ட துன்பத்தை யாரும் அனுபவித்து விடக்கூடாது என, கிராமங்கள் தோறும் பிரசாரத்தை செய்கிறேன்

  72. ஆம் திரு.பாலசுந்தரம் மற்றும் திரு. சுவனப்ரியன் அவர்களே அவசியம் நீங்கள் பிருகதாரண்யக உபநிஷத் படிக்க வேண்டும் அப்போது தான் மாட்டுக்கறி(கோ மாம்சம்) உண்டால் நல்ல அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்கிற உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நல்ல புகழ் பெற்ற அறிஞராகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும் குறிப்பாக அனைத்து வேதங்களையும் கரைத்து குடித்த மகாஞாநியாகவும் இருக்கும் படியான ஒரு பிள்ளை பெற வேண்டுமானால் பிருகதாரண்யக உபநிஷத் கூறுவது போன்று கணவனும், மனைவியும் மாட்டிறைச்சி உண்ண வேண்டும். பெண்களின் மறுமணம், பெண்ணுரிமைகள், எளிமையாக திருமணத்தை நடத்தல் போன்றவற்றை மட்டும் கூறிய திரு.கதிரவன், ஏனோ இந்த அதி முக்கிய வேதாந்த ரகசியத்தை கூறாமல் விட்டு விட்டார்.. என் வேத முன்னோர்களின் பெருமையை கண்டு நான் வியக்கேன்:)

    ஆதாரம்:He who wishes that a son should be born to him who would be a reputed scholar, frequenting the assemblies and speaking delightful words, would study all the Vedas and attain a full term of life, should have rice cooked with the meat of a vigorous bull or one more advanced in years, and he and his wife should eat it with clarified butter. Then they would be able to produce such a son.(Brihadaranyka upanishad 6.4.18).

    தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு.. நான் எனது மறுமொழியை தங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே பதிவிடுகிறேன். என்னுடைய இந்த மறுமொழியில் எந்த அவதூறோ அல்லது சர்ச்சைக்குரிய விடயங்களையோ கூற வில்லை. மேலும் இங்கு வசவு சொற்களையோ அல்லது தனி நபர் தாக்குதலையோ கையில் எடுக்கவில்லை. மேலும் கட்டுரையின் பொருளை தாண்டியும் பதிவிடவில்லை என்பதையும் கூறுகிறேன். சம்ற்க்ருத மொழிக்கு ஆதரவாக வெளிவராத மிக சிறந்த அம்சங்களை தான் நான் வெளியிட்டது.

  73. திரு பாண்டியன் சார். நீங்கள் படித்த ஒரு செய்தியை இங்கே குறிப்பிடீர்கள் நான் ஒரு செய்தியை குறிப்பிடவா?

    வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு என்ற ஊரில் மல்லிகா என்ற விதவை பெண் சீட்டு நடத்தி வந்தார். அந்த ஊரில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும் உரிய நேர்வழியை மட்டுமே பின்பற்றும் (அலிஜனாப்) காதர் பாஷா என்ற மிக நல்லவரும் இந்த சீட்டில் சேர்ந்தார் பணம் கட்டினார். சில மாதங்கள் கழித்து சீட்டு எடுத்தார். அதன் பின்னர் மாதாந்திரம் கட்ட வேண்டிய சீட்டு பணத்தை கட்டவே இல்லை. பல முறை கேட்டும் பலனில்லை. போலீசில் புகார் கொடுத்தபோது மீண்டும் 2 மாதங்களுக்கு 10000 கட்டினார். மீண்டும் நிறுத்திவிட்டார். பணத்தை கட்டுமாறு அந்த விதவை பெண் கேட்டபோது “என் வீட்டை விலைக்கு எடுத்துகொள் அதற்கு 150000 பணம் கொடுத்துவிடு” என்று கூறினாராம் (குறிப்பு:– “அவர்” அந்த வீட்டை “புறம்போக்கில்” கட்டியிருக்கிறார்.) இவரும் (முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று) அவரை நம்பி பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு ஆனால் வீட்டை காலி செய்யமாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறார். இவர் கடந்த ஞாயிறு அன்று அவரிடம் சென்று வீட்டை ஒப்படைக்குமாறு கேட்டதற்கு அவரை (ஒரு பெண் அதிலும் விதவை என்றும் பாராமல்) அடித்திருக்கிறார். அவமானம் தாங்காமல் அந்த பெண் (வயது 50) மண் எண்ணெய் ஊற்றிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறந்தார். (ஆதாரம்:—இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 29-7-14)

    இஸ்லாம் என்றால் “நேர்வழி” முஸ்லிம் என்றால் (கடவுளுக்கு) பணிந்தவன் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்கள். இதுதான் நேர்வழியா? உங்க நேர்வழியை கொண்டுபோய் கூவத்தில் கொட்டுங்கள்.

    முஸ்லிம்கள் வெளிநாட்டில்தான் அயோக்கியர்கள் என்று நினைக்காதீர்கள் பாண்டியன். அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அயோக்கியர்களே. இந்துகளிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால் நேர்வழி என்று சொல்லி திரிந்துகொண்டு இப்படி அயோக்கியத்தனம் செய்கிறார்கள். சுவனபிரியன் ஆஹா! குரான் சொல்படி நடக்கும் எங்களை போன்று நல்லவர்கள் உண்டா? என்கிறார். இவரை நல்லவர் என்று திரு அரிசொனன் வேறு சான்று தருகிறார். அவர் பிராமணன் என்று கூறுங்கள் பார்ப்பான் என்று சொல்லாதீர்கள் என்று வேண்டி கேட்டால் “நான் அப்படித்தான் கூறுவேன்” என்று கூறுகிறார். அரிசொனனுக்கு இது வேண்டும் இன்னமும் வேண்டும். சுவனபிரியன் போன்றவர்களுக்கு இங்கே (தாயுமானவன் போன்ற) சிலர் ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அயோக்கியத்தனம் செய்து விட்டு தமிழ் என்ற முகமூடி போட்டுகொண்டால் அவர்களை நல்லவர்கள் என்று வெள்ளந்தியாக “சிலர்” நம்புகின்றனர். அவர்களை சொக்கநாதன் தான் காப்பாற்ற வேண்டும்.

  74. திரு பால சுந்தரம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே கடுமையாக குற்றம் சுமத்துவது வருத்தம் அளிக்கிறது. அந்தணர் சமூகம் செய்யும் சில தவறுகளை கண்டிக்க, திருத்த அதே சமூகத்தில் பலர் தோன்றி இருக்கிறார்கள். பல சான்றுகள் உள்ளன. இது போல் வேறு சமூகங்களிலும் மதத்திலும் (தம் சமூகம், மதத்தை சார்ந்தவர்கள் தவறு செய்யும் போது அதை வெளிப்டையாக கண்டிக்க) எவ்வளவு பேர் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்கள் என்னிடம் இல்லை.

    பண்டிட் மதன் மோகன் மாளவியா என்பவர் அந்தணர் சமூகத்தை சார்ந்தவர். அலஹாபாத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர். கோயில்களில் உள்ள சாதி தடைகளை களைவதில் பல போராட்டங்கள் நடத்தியவர். ஹரிஜன் தலைவர் பி. என். ராஜ்போஜ் என்பவர் தலைமையில் சுமார் 200 ஹரிஜனங்களை அழைத்து கொண்டு கோதாவரி புண்ணிய நதியில் குளித்து விட்டு காலாராம் கோயிலில் (நாசிக் நகர், மகாராஷ்டிரா மாநிலம்) ஆலய பிரவேசம் செய்தவர்.

    அந்தணர்களை காயப்படுத்த , குற்றம் சொல்ல, கீழ்மை படுத்த நாட்டில் பல இயக்கங்களும் வலை தளங்களும் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது; சோறு போட்டு வளர்க்கபடுகிறது.

    பொதுவாக அணைத்து (ஹிந்து) மக்களை – சாதிய இணக்கத்தை உருவாக்கி – ஒற்றுமை படுத்தி, ஹிந்து மதத்தில் கொட்டி கிடக்கும் அளப்பரிய ஆன்மிக செய்திகளை விவாதித்து (அரசியல் மற்றும் ஆன்மீக) விழிப்புணர்வு செய்ய வைக்கும் இந்த சுயநலம் இல்லா இணைய தளத்தின் நல் நோக்கம் நிறைவேற உதவிடுமாறு இரு கரம் கூப்பி மன்றாடி வேண்டுகிறேன்.

  75. அரசியல் சட்ட நிர்ணய சபையில் திரு.நசிருதின் அஹ்மத் சமஸ்கிருதம் பற்றிய ஒரு விவாதத்தில் பங்கு பெற்று 12.09.1949-ல் பேசினார். அது பற்றிய முழு விவரம் ஆங்கிலத்தில் கீழ்கண்ட விலாசத்தில் உள்ளது.

    https://nnavjeetmyblog.blogspot.in/2013/08/demand-of-making-sanskrit-as-national.html

  76. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் அரிசோனன்

    \\\\ இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.
    இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும். \\\\

    உசிதமான கருத்து. வாழ்க.

    \\\ தமிழில் வடமொழியைக் கலக்கக்கூடாது என்று தனித்தமிழ் இயக்கம் துவங்கிய பரிமால் கலைஞர், மறைமலை அடிகள் போன்றானார் எங்கு போயினர் என்று என் உள்ளம் துடிக்கிறது. \\\

    ஏன் கலக்கக்கூடாது. எந்தெந்த மொழி மிகப்பரவலாக பல மொழிகள் பேசும் ஸ்தலங்களில் பேசப்படுகிறதோ அது நிஸ்சம்சயமாக கலப்புக்கு உள்ளாகும் என்பது உலகியல்பாயிற்றே.

    தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்து காலத்தாலழியா படைப்புகள் படைத்தவர்கள் மூடர்களா?

    இன்று மறைமலையடிகளும் பரிதிமாற்கலைஞரும் இருந்தாலும் என்ன………. தமிழகத்தில் சூரிய நாராயணன் என்று பெயரில்லாமல் போகுமா அல்லது வேதாசலம் என்று பெயரில்லாமல் போகுமா?

    யாரிருந்தால் என்ன இல்லாவிடில் என்ன எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தால் ஆன திருப்புகழை ஓத யாரிடம் நாங்கள் அனுமதி பெறவேண்டும்? அல்லது மணிப்ரவாளத்திலான ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய வ்யாக்யானாதிகளை வாசிக்க யார் யாரிடம் அனுமதி பெறவேண்டும்? அல்லது மணிப்ரவாளத்திலான ஸ்ரீ புராணம் என்ற ஜின காவ்யத்தையும் நீலகேசிக்கு எழுதப்பட்ட மணிப்ரவாள வ்ருத்தியையும் வாசிக்க யார் யாரிடம் அனுமதி பெற வேண்டும்? அல்லது தமிழக க்றைஸ்தவத்தில் எந்த சம்ப்ரதாயமாக இருப்பினும் சரி…………கத்தோலிக்கம்….சிஎஸ் ஐ…….. இத்யாதி இத்யாதி என்று எந்த சம்ப்ரதாயமாக இருந்தாலும் சரி வாசிக்கப்படும் விவிலியம் மணிப்ரவாளமாயிற்றே. இவர்கள் தொலைக்காட்சி தொலைக்காட்சியாக மணிப்ரவாளத்திலேயே விவிலியத்தை வாசிக்கிறார்களே? யாரிடமிருந்து அனுமதி பெற்று? வேதநாயகம் சாஸ்திரியார் என்ற க்றைஸ்த்வ பெருந்தகையின் கீர்த்தனைகள் (சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம், சர்வ லோகாதிப நமஸ்காரம்.) யார் அனுமதி பெற்று இன்றளவும் பாடப்படுகிறது? தமிழின் முதல் நாவல் என்று இன்றளவும் கொண்டாடப்படுவது ஸ்ரீமான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை என்ற க்றைஸ்தவப் பெருந்தகை படைத்த படைப்பு. அது மணிப்ரவாளத்திலானதே. அன்னார் சர்வ சமய சமரச கீர்த்தனைகளையும் படைத்திருக்கிறார்கள். இதுவும் மணிப்ரவாளமே. இவையெல்லாம் காலத்தாலழியாதவை.

    நிலைமை இப்படி சர்வ மத / சர்வ சமய / சர்வ ஜாதி ப்ரசலிதமான மணிப்ரவாள பாஷாசைலி என்றிருக்கையில் பார்ப்பன சதி என்று கூறுவது கூறில்லா சுவிசேஷ / முகமூடி சுவிசேஷ துஷ்ப்ரசாரகர்களின் செயல்பாடாக மட்டிலும் இருக்கும்.

    வாழ்ந்து கொண்டிருக்கும் எதையும் செத்து விட்டது என்று யார் சொன்னாலும்……. ஜீவிதமாக இருப்பது…… ஜீவிதமாக இருப்பதற்கு லாயக்கானது,.,……… ஜீவிதமாகத் தான் இருக்கும்.

    ஹிட்லரும் ஸ்டாலினும் போட்டி போட்டுக்கொண்டு யஹூதிகளை அழித்தொழித்தாலும் யஹூதிகள் வாழ வேண்டும் என்று நினைத்து வாழ உறுதியும் பூண்டால் வாழ்ந்தே தீருவார்கள்.

    தமிழாகட்டும் சம்ஸ்க்ருதமாகட்டும் மணிப்ரவாளமாகட்டும்………….. வாழத் தகுதியுள்ளது………. போஷிக்கப்படுவது வாழ்ந்தே தீரும். மொழிகளும் மொழிநடைகளும் வாழ்வதும் வழக்கொழிவதும் பேசுபவர்கள் நாவில். போஷிப்பவர்கள் செயல்பாடுகளில்.

    சம்ஸ்க்ருதம் மற்றும் மணிப்ரவாளம் சார்ந்து போலிச் சமூஹ அக்கறையாளர்கள் இரு நாக்கால் பேசுவார்கள். கற்றுத்தரப்படவில்லையென்றால் ஜாதி ப்ரச்னை. கற்றுத்தந்தாலும் ஜாதிப்ரச்னை.

    ப்ரச்னை ஜாதியில்லை.

    எந்த விஷயமாக இருந்தாலும் சரி………….. ஹிந்துஸ்தானத்தைச் சார்ந்த அறிவுக்கருவூலத்தை…………. அழித்தொழித்தே ஆக வேண்டும் என்ற நயவஞ்சக எண்ணத்துடன்……….. அந்த இழிவான இலக்குக்கு………மொழியை / மொழிநடையை ஒரு ஜாதி சார்ந்த ப்ரச்னையாக்கியே தீருவது என்ற மனப்போக்குத் தான் ப்ரச்னையே.

    நிதர்சனத்தில் எந்த மொழியும் / மொழிநடையும் எந்த ஜாதி / மதம் / சமயம் போன்ற சிறைகளில் அகப்பட்டவை இல்லை. மானுடர்கள் ஒருவருடன் ஒருவர் கருத்துப்பகிரவும் மானுடர்கள் இறைவனைத்துதிக்கவும் இயற்கையை விதந்தோதவும் மொழி ஒரு சாதனம்.

    சாதனமான மொழியை சாத்யமாகக் கருத விழைவது பேதமை. அறிவு பூர்வமான தர்க்கத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ளலாம். உள்ளீடற்ற வெற்று கோஷத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ள விழைவது அடிமுட்டாள் தனம்.

    இந்தத் திரியில் கோஷம் உரத்து ஒலிக்கிறது. துரத்ருஷ்டவசமாக தங்களுடைய மேற்கண்ட அனுசித வாசகம் கோஷ்டி கானத்தில் சம்மிலிதமாகிவிட்டது.

  77. திரு. கதிரவன்…

    கதிரவன் அண்ணன் அனைவரையும் போல வடமொழி,தென்மொழி சிக்கலுக்கு தீர்வு காண தேவாரத்தையும், திருவாசகத்தையும் வம்புகிழுக்கப் போய் விட்டார். எப்போதும் போல திராவிட கும்பல், பெரியார் என்று பிதற்ற தொடங்கி விட்டார்.

    //மனு தர்மம் என்பது நஞ்சு என்று கூறும் அதிமேதாவி தாயுமானவன் மனுதர்மத்தினைப் பற்றி எதுவும் படித்ததில்லை என்பதும், திராவிட மோசடிக்கும்பலின் பொய்யான பிரச்சாரங்களுக்கு மயங்கி உள்ளவர் என்பதும் தெரிகிறது.//

    அண்ணே,(உங்களை விட நான் வயதில் சிறியவன் தான் அதனால் அண்ணன் என்று கூப்பிடுவதில் தவறில்லை). அண்ணே, மனுதர்மத்த பத்தி தெரிஞ்சிக்க நான் ஏன் திராவிட கும்பல் கிட்டே போகணும். அத தான் புத்தகமா போட்டு விக்கிறாங்களே அப்புறம் என்ன. ஏற்கனவே மனுதருமத்த பத்தி பலர் கிழி கிழின்னு கிழிச்சு முடிச்சிடாங்க. நான் வேற எதுக்குன்னு தான் கம்முனு இருந்தேன். இருந்தாலும் உங்கள் அளவுக்கு எனக்கு தெரியிலனாலும் மனுதருமத்த பத்தி எனக்கு தெரிஞ்சத சொல்ல ஆசை படறேன். catch பண்ணிக்கோங்க.

    பெண்கள நாம்ம பாரத பண்பாட்டுப் படி தெய்வமா கும்பிடறோம், ஆறுகளுக்கு எல்லாம் கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரின்னு பேரு வச்சு அழகு பார்க்குறோம். இதுல தாய்நாடு, தாய்மொழின்னு வேறெல்லாம்!!! அப்படி பட்ட பாரத பூமில இருந்து கிட்டு மனுதர்மம் பெண்கள பத்தி என்ன சொல்லுதுன்னு சொல்லவா. சும்மா சொல்ல கூடாது தாலிபான்கள மிஞ்சிடிச்சு.

    மனுதர்மம் 9ஆம் அத்தியாயம்

    14. ஆடவரின் அழகினையும், வயதையும் பாராட்டாமல் அவர்தன் ஆண்மையை மட்டுமே பொருட்படுத்தி மாதர் ஆடவர்பால் மனம் பற்றிக் கலப்பர்.

    15. ஒழுக்கம் பிறழ்தலும், நிலை இல்லாத மனமும், நம்பகத்தன்மை இன்மையும் ஸ்த்ரீகளின் சுபவாம் ஆவதால், கணவனால் நன்கு போற்றி புரக்கப்பட்டாலும், அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை.

    16. இவ்வித சுபாவங்கள் ஸ்திரிகளுக்கு பிறப்புடன் வருவதாகையால், மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது.

    17. படுக்கை, ஆதனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம், இவ்வற்றை மாதரின் பொருட்டே மநு படைத்தார்.

    18. மாதர்க்கு பிறவியை தூயதாக்கும் சம்காரங்கள் மந்திர பூர்வமாக செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பொய்யை நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே, பொய்யை போல் மாசு வடுவினராக மாதர்கள் இருக்கின்றனர்.

    19. பெரும்பாலும் ஸ்திரீகள் கற்பு நெறி இல்லாதவர் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக.

    அண்ணே பெண்கள பத்தி இன்னும் நெறைய இருக்கு ஆனா அதையெல்லாம் என்னால தட்டச்சு பண்ணிக்கொண்டு இருக்க முடியாது. சொன்ன வரைக்கும் சரியா இருக்கானு check பண்ணி பாருங்க. அத்தோட பெண்கள பத்தி மநு தர்மர் சொன்னதயும் யோசிங்க. நம்ம வீட்லயும் பெண்கள் இருக்காங்க அத மனசுல வச்சிகிட்டு பெண்கள பத்தி மனு சொன்னத எட போடுங்க. அதுக்கு அப்புறம் நீங்களே காரி துப்பிடுவீங்க. இது தவிர 4ஆம் வருணத்தாரை பற்றி மனு கூறியதை நான் கூற வேண்டுமோ. தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே அம்பேத்கர் அதை தனது நூலான சூத்திரர்கள் யாரில் கிழித்து தொங்க விட்டுட்டார்.

    .
    //இதேபோல ஆன்மிகம், அரசியல், சமூக விழிப்புணர்வு என்று பலரும் எழுதுவது வழக்கம். எந்த மொழியிலும் யாரும் எதனை வேண்டுமானாலும் எழுதலாம். அது மொழியின் சிறப்போ, மொழியின் குற்றமோ அல்ல. எழுதுவோரின் சிறப்பு அல்லது குற்றம் தான்.//

    இதை ஏற்று கொள்கிறேன். ஒரு மொழியின் யோக்யதை இன்னதென்று அதன் இலக்கியத்தை வைத்து தான் முடிவு செய்ய முடியும். அந்த இலக்கியத்தை கொண்டு தான் அந்த மக்களின் யோக்யதை இன்னதென்று அறியலாம். மனுதர்மம் போன்ற மனித குல விரோத இலக்கியத்தை உலகின் வேறு எந்த மொழிகளில் தேடினாலும் கிடைக்காது. உலகை விடுங்கள் சமற்கருத்தத்திற்கு இணையான பழைமையும், மரபும் கொண்ட தமிழ் மொழியில் இது போன்ற மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும், பெண்களை இழிவு படுத்தும் கருத்துக்களை எங்காவது காண முடியுமா. அது தான் பெருமைக்குரிய எங்களின் தமிழ் மரபு.

    சமற்கருத மொழிக்கு உள்ள சிறப்பெல்லாம். தமிழர்களான ஆதி சங்கரர், ராமானுஜர், கூரத்தாழ்வார், பதஞ்சலி போன்றோர்களால் தான். இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள போவதில்லை. கொள்வதும், கொள்ளாமல் போவதும் தங்கள் விருப்பமே. ரொம்ப பேசினால் இருக்கவே இருக்கிறது உங்களின் பழைய பஞ்சாங்க “பஞ்ச்” டயலாகான. “எங்களிடம் உலகின் மிக பழமையான ஞான பொக்கிஷமான நால் வேதங்கள் இருக்கிறதென்று” கூறி வேதத் தாழிக்குள் சென்று முகம் புதைத்து கொள்வீர்கள். வேறு என்ன செய்ய.

    தொடரும்………………

  78. திரு.கதிரவன்

    //தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரின் பக்த கோடியான தாயுமானவனைப் போன்றவரிடம் எப்படி நல்ல கருத்துக்களை எதிர்பார்க்க முடியும் ? இணையத்தில் இவரைப்போன்ற போலிகள் ஏராளம்.//

    சரிங்க அசல் அண்ணே… நான் எங்காவது பெரியாரை பற்றி போற்றி துதித்து கருத்து கூறி இருந்தால் கூறவும். திராவிட இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் எங்குமே நான் வியந்தோதியதே இல்லை. சந்தேகம் இருந்தால் உயர்திரு.கிருஷ்ண குமார் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் என் மறுமொழிகளை தொடர்ந்து வாசித்து அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுபவர் போற்றுதலுக்குரிய திரு. கிருஷ்ண குமார் அவர்கள் தான்..

    //சமற்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ் என்று உளறுகிறார்- இவருக்கு தமிழும் தெரியாது- சமற்கிருதமும் தெரியாது என்று நன்றாக தெரிகிறது. பாவம்.
    ” வடமொழியும், தென்தமிழும் ஆயினான் காண் -” என்கிறது தேவாரம்.//

    இதற்க்கு எதற்காக தேவாரத்தையும் திருவாசகத்தையும் வம்புக்கிழுக்க வேண்டும். சமற்கருத்தை எதிர்த்து நின்றதென்றால் , இந்தியாவில் உள்ள மற்றைய மொழிகளை போன்று பாணினியத்திற்கு ஆட்ப்படாமல் தனக்கென்று தனி நெடுங்கணக்கு, எழுத்து முறை, இலக்கண, இலக்கிய வளங்களை கொண்டிலங்கும் காரணத்தினார் தான் என்று பொருள். இடையே மணிப்ராவளம் என்கிற ஒரு தீய நடையை புகுத்தி தமிழின் தனித்தன்மையை, இனிமையை குலைக்க நடந்த முயற்சியை கால்டுவெல், ஜி.யு.பொப் தொடங்கி மறைமலை அடிகள், திரு.வி.க, பாரதிதாசன், டாக்டர்.மூ.வ போன்ற அறிஞர் பெருமக்களால் முறியடிக்க பட்டது.

    நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும், மாணிக்கவாசகரும் வடமொழியை போற்றி இருக்கிறார்கள் என்றால். வடமொழியை வலிந்து திணிக்கும் மணிப்ரவாளம் போன்ற புல்லுருவி தனங்கள் அப்போது நடைபெறவில்லை. வடமொழி வடமொழியாக இருக்க வேண்டிய இடத்தில இருந்தது. தங்களின் பாசுரங்களில் சில இடங்களில் அவர்கள் வடமொழி சொற்களை கையாண்டிருந்தாலும் அவை 3 இல் இருந்து 4 விழுக்காடு என்கிற அளவிலேயே தான் இருந்தன. தங்களின் ஆசான் தொல்க்காப்பியரின் இலக்கண முறைப்படி வடமொழி உச்சரிப்புகளை தூர எறிந்து விட்டு சொல்லை மட்டுமே பயன்படுத்தினார்கள். சைவக்குரவர்கள் நால்வரும் வடமொழியின் மீது ஒரு மதிப்பு வைத்திருந்தார்கள் அவ்வளவே. மற்றப்படி யாரும் சமஸ்கிருத்தை தலைமேற் கொண்டு கொண்டாடவில்லை.

    மற்றப்படி…

    //மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ” பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ” அந்த ஆரியத்தை – அதாவது மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட சிவனை வீழ்த்த வேண்டும் என்று கூறுகிறார்//

    தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்க இது போன்ற மலினமான உத்திகளை எல்லாம் கையாள வேண்டாம்..

  79. திரு பாண்டியன்!

    //we do have so many people to save tamil. better you save our tamil people as below story has explain you lot. everyday I am reading 10 news like this. better you explain quran to your own people and ask them to treat others human well and give respect humans. all cheat fraud people in your work country only and you easily save our tamil people.//

    நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் உள்ளனர். வெளி நாடு செல்பவர்கள் ஏஜண்டுகளை பார்த்து நம்பிக்கையானவரிடம் தங்களின் வேலைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏமாறுவதற்கு யார் பொறுப்பாக முடியும்.

    இதே சவுதியில் 20 வருடத்துக்கும் மேலாக மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து வரும் இந்து நண்பர்களை நான் அறிவேன். லட்ச ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அது போல் திறமையை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

    காரைக்காலைச் சேர்ந்த ஒரு இந்து தமிழ் பட்டதாரி பெண் பேசிய வேலையை விடுத்து வீட்டு வேலை செய்ய பணிக்கப்பட்டார். அந்த வீட்டிலிருந்து தப்பி விட்டார். அது போலீஸ் கேஸாகவும் மாறி சிக்கலானது. ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அந்த பெண்ணை மீட்டு ஊருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

    அனாதையாக இறந்து கிடந்த ஒரு இந்து தமிழரை அடையாளங்கண்டு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். சம்பள பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் பல தமிழர்களுக்கு கோர்ட் வரை சென்று நியாயம் கிடைக்க பாடுபட்டுள்ளோம். இது தொடர்கிறது. இதை எல்லாம் விளம்பரப்படுத்துவதில்லை. ஆதாரம் வேண்டுமென்றால் சுட்டிகளோடு தருகிறேன்.

  80. வெறும் எதிர்ப்பவர்களை மட்டம் தட்டாமல் இம்மாதிரியான கட்டுரைகளைப் பொதுவான கருத்துக்கு விளக்கமாக எழுதியிருக்கலாம். எதிர்ப்பவர்களின் முக்கியமாக இரண்டு கருத்தை ஆழமாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
    1. அப்பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும் எனச் சொல்லுவது மொழி திணிப்பாக பார்க்கப்படுகிறது. இன்று பள்ளியில் கட்டாயம் என்பவர்கள் நாளை மாநிலத்திலும் கட்டாயம் என்று சொல்ல வாய்ப்புள்ளது.
    2. சமஸ்கிருதமே தாய் மொழி, இதுவே செம்மொழி என்று பல்வேறு தளங்களில் கூறிக்கொண்டிரும் வேளையில் தமிழின் தொன்மை மறைக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.

    தமிழும் சமஸ்கிருதமும் சகோதர மொழி(யாருக்கும் யாரும் தாய்மொழி அல்ல) என்பதையும், இரண்டும் வெவ்வேறு நிலைகளில் செம்மொழி என்பதை உணராதவரை இப்பிரச்சனை தொடரும்.

  81. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    //அல்லது மனுஸ்ருமிதி இந்து மத சட்டம் கிடையாது என்றும் அதனை கோவில்களிலோ வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். அவ்வாறு நடந்து விட்டால் நான் ‘பிராமிண்’ என்றே அழைக்கிறேன்.//

    நான் உங்களுக்குக் கொடுத்துவரும் அளவுகடந்த மதிப்பை, மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஒரு சமூகத்தைத் தரம்குரைந்த சொற்களால் சுட்டாதீர்கள் என்றால், உபதேசம் செய்யக் கிளம்பி இருக்கிறீர்கள். துலுக்கன் என்ற சொல் உங்களை உயர்படுத்தும் என்றுவேறு சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். இது உங்களுக்கான சொல் அல்ல. முஸ்லீம்களைக் கேவலமாகச் சுட்ட உபயோக்கிக்கும் சொல். இதை தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் விரும்பமாட்டார்கள். நீங்கள் செய்வது விதண்டாவாதம்.

    முஸ்லிம்களை வடநாட்டில் “லான்டியா” என்று கேவலமாக அழைப்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்று நான் எழுத வேண்டியதில்லை. முஸ்லிம் சகோதரர்களை நான் “லான்டியா” என்று குறிப்பிட்டு எழுதி, அது நீங்கள் செய்யும் ஒரு சடங்கால் விளைவதுதானே என்றும் எழுதி, நீங்கள் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். அவ்வாறு நடந்து விட்டால் நான் “லான்டியா” என்று சுட்டுவதை விட்டுவிடுகிறேன் என்று சொல்வதைப்போல இருக்கிறது உங்கள் வாதம்.

    இஸ்லாமியப் படை எடுப்பின்போது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், எண்ணற்ற மறையோர்கள் தனிப்படுத்தப்பட்டுக் கொல்லப் பட்டார்கள். மாட்டிறைச்சி உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, மதமாற்றமும் செய்யப்பட்டார்கள். இதற்கு ஆதாரங்களும் இஸ்லாமிய வரலாற்றாலர்களிடமிருந்து என்னால் சுட்ட முடியும்.

    நான் உங்களை மதித்து, நட்புக்கரம் நீட்டினால், நீங்கள் அதைத் தட்டிவிட்டுக் கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவிட்டால், நானும், உங்களுக்கு உறைக்கும் வகையில் எழுத நேரிடும். அப்பொழுது வருந்த வேண்டாம்.

    வணக்கம். அமைதி ஓங்குக.

  82. //பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன். — காமராஜர் //

    தமிழ்நாட்டின் கல்வியின் ஊற்றுகண்ணைத் திறந்த காமராஜர், சம்ஸ்கிருத மொழியை கற்பது அவசியம் என்று உணர்ந்த காமராஜர் தமிழக கல்வி திட்டத்தில் புகுத்த முயற்சிக்கவில்லை என்பதில் இருந்தே அவரது முன்னுரை ஒரு அரசியல் நடுநிலையான முன்னுரை என்பது தெரியவில்லையா?

  83. சமஸ்கிருதவாரம் தேவையா என்ற இந்த அருமையானக்கட்டுரையை வழங்கிய அன்புக்குரிய ஸ்ரீ அ நீ பாராட்டுக்குரியவர். சமஸ்கிருதத்தினை எதிர்த்து சிலர் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். சமஸ்கிருதத்தினை ஆதரித்தும் எதிர்ப்பாளர்களை மறுத்தும் அருமையான கருத்துக்களை மஹாசயர்கள் பலர் வழங்கியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தினை ஆதரிப்போர் யார் என்றால் தெளிவாக சொல்லிவிடலாம் ஹிந்துத்துவர்கள் என்ற பதிலை. எதிர்ப்போர் யார் அவர்தம் கருத்தியல் பின்புலம் என்ன என்பதை புரிந்துகொள்ள யோசித்தல் அவசியம். அபிராஹாமியர்களும் அபிராஹாமிய சிந்தனையின் அடிவருடிகளுமே சமஸ்கிருத எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். உலகினை ஒருசமயவயமாக்க ஒரு ஆதிக்கத்தின் கீழ் கொணர முயன்ற இன்னும் முயலும் அபிராஹாமியத்தின் ஒரு கிளையான மார்க்சியர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    அபிராஹமிய் இவாஞ்சலிஸ்டான கால்டுவெல்லின் புனைவை நம்பும் திராவிட இயக்கத்தாரும் இதிலே இணைந்திருக்கிறார்கள். எல்லோருடைய நோக்கம் ஒரு புள்ளியில் நிலைக்கிறது. அது கிரேக்கம், ரோமானியம், மாயன் பேகன் பண்பாடுகளை அபிராஹாமியம் கொன்றும் எரித்தும் அழித்ததுபோல் இன்றும் நடைபெறவேண்டும் என்பதே அந்த நோக்கம். சமஸ்கிருதம் இந்தியத்திரு நாட்டின் பல்லாயிரமாண்டுகள் தோன்றிய ஆன்மிகம், சமயம், தத்துவம்,அறிவியல், கலைகள் போன்ற பல்வேறு துறை அறிவை ஞானத்தினை தாங்கும் கருவூலமாக இலங்குகிறது. சமஸ்க்ருதம் இல்லாவிட்டால் பாரத நாட்டின் பண்பாடு அழியும்.ஆகவே சமஸ்கிருத வளர்ச்சிக்கு இயன்றன அனைத்தினையும் மானனீய ஸ்ரீ நமோ ஜியின்.அரசு செய்யவேண்டும்.வெற்றி எப்போதும் பாரத அன்னைக்கே.

  84. சிவபெருமானைத் தொழுதெழும், அவரை நெஞ்சில் நிறுத்தி அவனை ஒத்த தெய்வம் இப்பாரினில் எவரும் இல்லை, திருநீற்றுக்குச் சமமாக வேறு ஓர் அருமருந்து எதுவும் இல்லை என்று போற்றும், என் பெருமதிப்புக்கு உரிய தாயுமானவன் அவர்களுக்கு,

    நீங்களும் நானும் வணங்கும் தெய்வம் ஒன்றே! பிரகதாரண்ணிய உபநிடதத்தில் இருந்து மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். அதை நான் மறுக்கவில்லை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது அது! மனுஸ்ருதியை கலி யுகத்தில் கையாளக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை விட்டுவிடுவோம்.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் ஒப்புக்கொண்ட பலதாரத் திருமணங்களைக்கூட நாம் இப்பொழுது ஒப்புக்கொள்வதில்லை. அப்பொழுது அவர்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத திருமண முறிவை நாம் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்கிறோம்.

    ஆகவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டிய எதையும் வரிக்குவரி எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது தாங்கள் அறியாத ஒன்றா? நாம் உட்பொருளைத்தான் உள்வாங்கவேண்டும்.

    தாங்கள் தேவாரம், திருவாசகம் இவற்றைத் தமிழ் மறைகளாக, நாம் பின்பற்றும் வழிமுறைகளாக ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

    தாங்கள் சில நாள்கள் முன்பு தரிசித்து வந்த ஆலவாய் அழகனை ஏத்திக் காழிப் பிள்ளையாரான திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் இரண்டைத் தருகிறேன்:

    காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
    நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
    வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
    ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.

    “வேட்டு வேள்வி செய்யா” என்று பகர்ந்திருக்கிறார். அதாவது வேள்விகள் செய்யாத… என்று சமணர்களைச் சுட்டுகிறார்.

    ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
    பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
    மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
    ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.

    “ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாம் அப்பாகதத்தொடு இடித்துரைத்த சனங்கள்”. அதாவது வேத ஆகமங்களையும் , மந்திரங்களையும் , நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை குறைகூறிப் பேசிய” என்று சமணர்களைப் பற்றிக் கூறுகிறார் காழிப்பிள்ளையார்.

    அன்பே சிவமாய் நின்ற அரனுக்கு, வேள்வி செய்வதும், வேதங்களையும், ஆகமங்களையும், மந்திரங்களையும் ஓதுவது அந்தணர்கள். அப்படி அவர்கள் ஓதும், சிவபெருமான் தந்த வேதங்களும், ஆகமங்களும் இயற்றப்பட்ட மொழியான வடமொழியை இடித்துப் பேசியவர்கள் என்று சாடி, சைவைத்தை நிலைநிறுத்தவே நான் ஆலவாய்க்கு எழுந்து அருளியதாகவும், ஆலவாய் அழகன் துணை இருப்பதால் அமணர்களுக்கு அஞ்சேன் என்றும் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியிடம் பகருகிறார்.

    எனவே, திருமறையை நமக்கு ஈந்துவிட்டுச் சென்ற திருஞான சம்பந்தரே வடமொழியில் உள்ள வேதங்களையும், சைவ ஆகமகங்களையும் தமிழ்நாட்டில் சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.

    நான் முன்பு எழுதியதையே திரும்பச் சொல்கிறேன். இந்து சமயத்தை அறிய தமிழ், வடமொழி என்ற இரு கண்கள் தேவை. நீங்கள் வடமொழியைக் கற்காவிட்டாலும் போகிறது. தூற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    “நமச்சிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரம், யஜூர் வேதத்தில், உருத்திரத்தில் செப்பப்படுகிறது. ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஓதிவரும் சிவபக்தர்களான நாம், ஐந்தெழுத்து ஓதப்படும், எழுதாக் கிளவியான வேதங்களையும், வேதமொழியையும் பழிப்பது, நாம் வணங்கும் இறைவனான் சிவபெருமானையே பழிப்பதற்கு நிகராகும் என்று சொல்லி நீங்குகிறேன்.
    திருச்சிற்றம்பலம்!
    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஓம் நமச்சிவாய!!!

  85. பால சுந்தரம்

    அச்சு பிச்சு பைத்தியகாரத்தனம் அப்பட்டமாக தெரிகிறது உங்கள் மறுமொழியில். என்ன எழுதுகிறீர்கள் எதற்கு பதில் தருகிறீர்கள் என்றே விளங்கவொன்னா விஷயமாக இருக்கிறது. நீங்கள் பிராந்தியில் உளறலாம். அடியேனால் முடியாது. அதற்காக அடியேனாலும் அப்படி செய்ய முடியாது.

    எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறீர்கள். சமஸ்க்ருத த்வேஷம், பிராமன த்வேஷம், திடீர் ஆழ்வார் பற்று, தமிழ் பற்று. சாரமே இல்லாத வாத போக்கு. பக்கவாதம் வந்தாற்போல இருக்கு

    முதலில் திருமழிசை ஆழ்வார். இந்த விசயங்களை எழுதி வைத்து போனதே பிராமணர்கள் தான் பாருங்கோ. குரு பரம்பரா பிரபாவம் என்றும் பிரபன்னாம்ருதம் அந்நூலுக்கு சமஸ்க்ருதத்தில் பெயர் வைத்துள்ளனர். திருமழிசை பிரானார் தமிழில பிறகு வேதத்தை எடுத்து கொடுத்தார். அது சமஸ்க்ருதத்தில் தானே.

    உச்சரிப்புக்கு சக்தி உண்டு என்று கூட அறியாத பேதையா நீங்கள். சமஸ்க்ருத உச்சாடனத்திற்கு சக்தி உண்டு என்று உதக ஷாந்தி மந்திர உச்சாடனத்தை வைத்து ஒரு அறிவியல் ஆய்வு நடத்தி முடித்துள்ளார்கள். சமஸ்க்ருத அக்ஷரங்களின் உச்சாடண விவஸ்தை சர்வ பிரசித்தி. கொஞ்சமேனும் படித்து தெரிந்து கொள்ளாதவரை உங்களுடன் இது பற்றி பேசுவது வ்யர்த்தம்.

    சமஸ்க்ருதம் என்றாலே வேடம் மட்டும் தான் என்று உங்களுக்கு ஒரு பிராந்தி. சமஸ்க்ருதம் செகூலர் மொழி அதனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் எங்கே சொன்னேன். செக்குலர் என்பது ஒரு கெட்ட வார்த்தை. முதலில் வேதம் இருப்பது சந்தசீ என்னும் பாஷையில் அது சமஸ்ச்க்ருதம் ஆகாது.

    தமிழிலேயே ஏராளமான விஷயங்கள் இருக்கு நான் ஏன் சமஸ்க்ருதம் படிக்க வேண்டும் என்ற வாதம் அல்ப சார வாதம். இட்லி இருக்கையில் இடியாப்பம் எதற்கு என்பது போல இருக்கு நீங்கள் பேசுவது. அது சரி இதை தாண்டி உங்களால் எதைத் தான் பேச முடியும்?

    ஒரு அறுபது ஆண்டு முன்வரை அனைத்து தமிழ் பண்டிதர்களும் சமஸ்க்ருத பண்டிதர்களாகவும் இருந்துள்ளார்கள். தமிழை கற்பவன் சமஸ்க்ருதத்தை நிச்சயம் கற்க வேண்டும் என்று சொல்வது நம்மாளுய்யா சாலமன் பாப்பையா.

    நான் ஒரு கிறிஸ்தவரை சந்தித்தேன் அவர் பெயர் அலெக்ஸ். அவரது நிஷ்டைகளை தெரிந்து கொண்டு ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவர் தினமும் அக்னி ஹோத்ரம் செய்கிறார். முக்கியமாக அவர் சமஸ்க்ருத பாரதி என்னும் சமஸ்ருத குழுமத்தின் president ஆக இருக்கிறார். அவர் சொல்கிறார் எல்லோரும் சமஸ்க்ருதம் படியுங்கோ என்று 🙂 அவரை பற்றி நீங்கள் கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பாருங்கள், சடக்கென்று பதில் தருவார்.

    ஆன்மிகம் என்பது கிறிஸ்தவத்தில், இஸ்லாமில் இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆன்மா சம்பந்தப்பட்டது ஆன்மிகம். நீங்களோ ஆன்மாவை ஒத்துக்கொள்ளாத கோஷ்டி.

    செமிட்டிக் மதங்கில் இரண்டே பக்ஷம் தான். ஒன்று நம்பு இல்லாங்காட்டி எம்பு. இஸ்லாம் என்றால் வஹாபி வழி தான் சால சிறந்தது. இறைவனை அடையும் மார்க்கம் ஒன்றே. இது கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும். எங்களது தர்மம் அப்படி இல்லை பாருங்கோ. எங்களுக்கு கர்ம, பக்தி, ஞான, பிரபத்தி, அபியாச, கர்ம சன்யாச மார்கங்கள் என்று பல மார்கங்கள் உண்டு.

    காயத்ரி மந்திரத்தின் (ஜெப) பலனை வேண்டுபவன் அதை சமஸ்க்ருத்தில் தான் உச்சரிக்க வேண்டும். அதன் அர்த்த விசேஷங்களை எம்மொழியில் வேண்டுமானாலும் த்யாநிக்கலாம். ஜபம் வேறு, தியானம் வேறு. ஜபம் செய்ய நினைப்பவன் ஜபத்தை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். மாமுனிகள் என்ற வைணவ ஆசாரியர் எப்போதும் த்வய மந்திர ஜபம் செய்து கொண்டே (சமஸ்க்ருதத்தில்) இருப்பார். அதனுடன் அர்த்த விசேஷங்களை தமிழிலே த்யானித்து கொண்டிருப்பார்.

    பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுப்போர் பாசுரம் படிக்கலாம், திருமறை படிக்கலாம் பாகவதம் படிக்கலாம், அரபு மொழியில் கூட ஒரு பாடல் எழுதி இன்புறலாம். அங்கே அனைத்தும் செல்லும், கர்ம மார்கத்தை தேர்ந்தெடுப்பவன் யாகதிகளை செய்ய வேண்டு அதற்க்கு சமஸ்க்ருதம் வேண்டும். இங்குள்ளோர் பலர் எல்லா மார்க்கங்களிருந்தும் சிலவற்றை எடுத்து அனுஷ்டிப்பார். அக்னி ஹோத்ரம் செய்வர், அப்புறம் திருவாராதனம் செய்வர், அங்கே மந்த்ரம் இருக்கும், பாசுரம் இருக்கும், ஜபம் இருக்கும் பக்தி இருக்கும்.

    நான் பொறாமை கொண்ட கடவுள், நான் ஒரு பயங்கரவாதி என்று கடவுள் எங்களுக்கு ஒரு நாளும் கட்டளை இடவில்லை. எங்களுக்கு பன்மை முக்கியம், அதைப் போற்றுவோம். தமிழ் படிப்போம், சமஸ்க்ருதம் படிப்போம், தெலுங்கு மொழியில், மராத்தியில் உள்ள சாராம்சங்களை அறிய அவற்றையும் படிப்போம்.

    விவிலியத்தை தமிழிலே சொல்கிறார்களாம். என்ன தமிழ் பற்று, என்ன தமிழ் பற்று? ஏசுவுக்கு கேக்கவேணும்னா நீங்கள் படிக்கீறீர்கள். அதான் ஜெஹோவா தெளிவா சொல்லிவிட்டு போந்தாரே. நான் இஸ்ரவேல் நாட்டு மக்களை உய்விக்கவே வந்தேன் என்று. அவர் தமிழெல்லாம் கேக்க மாட்டார் சார், ஹீப்ரு தான் அவருக்கு புரியும். நீங்கள் தமிழ் படுத்துவது, தெலுகு படுத்து வது எல்லாம் சுவிசேஷ கோட்டம் நடத்தி ஆட்டு மந்தைகளை பிடித்தது கணக்கு காட்டி வயிறு ரொப்ப தான்.

    எங்களுக்கு மொழிப் பற்றை பற்றி பாடம் நீங்கள் நடத்த வேண்டாம். தமிழை இறைவன் தேட வைத்து, சமக்ருதம் இறைவனை தேட நிற்கிறதை எல்லா புறப்பாடுகளின் போதும் காண வைத்துள்ளோம் நாங்கள். எங்களுக்கு இரண்டும் இரு கண்கள் போன்றன. இப்படி தமிழை முன்வைத்த ஆசார்யர்கள், அப்பொழுதும் சமஸ்க்ருதத்தை விடவில்லை. அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். உம்மை போல அற்ப புத்தி அவர்களுக்கு இல்லை பாரும். இதே ஆசாரியர்கள் தான் சாதித் தீங்கு ஒழிய அரும்பாடு பட்டவர்கள்.

    //
    வைதீக மதம் சமஸ்க்ருதத்தால் வாழ்கிறது அதன் மூச்சை நிறுத்தப் பார்க்கிறார்கள் என்ற அச்சம்.
    //

    என்ன ஒரு பிதற்றல். அரவிந்தனின் எந்த இடத்தில் இதை பிரபிபலிக்கிறார். அரவிந்தனின் ஏதாவது ஒரு எழுத்தில் இதை காட்டுங்களேன்.

    சரி நீங்கள் தலைகீழாக நிராலும் அதன் மூச்சை நிறுத்த முடியாது, ஆயிரத்து முன்னூறு ஆண்டு கால முயற்சியில் இன்னமும் இதை சாதிக்க முடியல. இப்போ என்னடான்னா, ஆஸ்திரேலிய காரன் அக்னி ஹோத்ரம் பண்றான் (ஒரு வலை தளம் கூட இருக்கு). லண்டன் பள்ளியில் தைத்ரிய உபநிஷத் வாசிக்கிறார்கள். (பாருங்கள் இவர்கள் கூட படிகிறார்கள் என்று நான் சொல்ல வரவில்லை மாறாக சிலரது மண்டைக்கு புரிய வேண்டுமென)

    வைதீக கார்யம் அது பாட்டுக்கு எல்லா இடத்துலேயும் நடந்து கிட்டே தான் இருக்கு. நீங்கள் இயேசு கடைசியில் புலம்பவுது போல புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு தான் மிச்சம்.

    சமஸ்க்ருதம் ஏன் படிக்க வேண்டும், யார் யார் அதை ஆதரித்துள்ளனர் என்று சுட்டிக் காட்டவே இக்கட்டுரை. உங்களது எழுத்தின் மூலமே நீங்கள் கட்டுரை சொல்ல வந்த விஷயத்தை ஒத்துக் கொண்டுளீர்கள். மறுபடியும் சமஸ்க்ருதத்தில் இறைவாதம் 5% தான். இறை மறுப்பு வாதம் மற்ற எல்லா மொழிகளையும் விட சமக்ஸ்ருத்ததில் தான் ஸ்பஷ்டமாக தெளிவாக உள்ளது. சாங்க்யம் என்ற matter is the cause of this world என்ற வாதம் சமக்ஸ்ருத்தில் தான் உள்ளது (இது இறைவனை மறுக்கிறது). சாருவாகம் என்ற economical view of the world என்பதும் சமஸ்க்ருதத்தில் தான் இருக்கு.

    நீங்கள் செய்ய நினைப்பது சமஸ்க்ருதத்தை ஒரு சிறு பொட்டிக்குள் அடைத்து அது பலனற்றது ஒரு சாரரைச் சேர்ந்தது என்று எப்படியாது நிறுவ நினைக்கும் துஷ் பிரசாரம்.

    அரவிந்தன் செய்ய நினைப்பது ஏற்கனவே செய்யப்பட துஷ்ப்ரசார தூளியை துணி கொண்டு துடைப்பது.

    என்ன இதுக்கு நீங்கள் கர்த்தர் என்று சமஸ்க்ருத பதம், செய்வோனே என்று அலறலாமே. எதற்கு தேவனே என்று புலம்பல் இறைவனே என்று சத்தம் போடலாமே. அதென்ன சுவிசேஷ கூட்டம். அதென்ன அமாவாசை ஜபம். அதென்ன கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் அதென்னங்க ரெவெரெண்டு என்ற பட்டம், அதை தமிழ் படுத்தலாமே, அதென்ன பாதர், ப்ரோ இத்யாதி. இயேசுவின் ரத்தம் ஜெயம் இதெல்லாம் தமிழான்னா.

    பாரதத்தில் சமநோக்கு பெருக வேண்டுமென்றால் சமஸ்க்ருதம் ஒரு சாராருடையது என்று உம்மை சார்ந்தவர் காலாகாலமாக பரப்பின துஷ்ப்ரயோகம் ஒழிய வேணும். அனைத்து மக்களும் சமக்ஸ்ருதம் பயில வேணும். இதை பயில் வதன் மூலம் சாத்தியப்படும்.

    “The very sound of Sanskrit words, gives a prestige, a power and a strength to the race. – Swami Vivekananda”

  86. ஜனாப் சுவனப்பிரியன்,

    நான் ஒரு இந்து. முஸ்லிம் அல்ல. எனவே, “குரான், ஷாரியா, ஹடித், முஸ்லிம் மத சட்டம் கிடையாது என்றும் அதனை மசூதிகளிலோ, வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள்!” என்று நான் கூற, அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்துவான எனக்கு எந்தவிதமான உரிமையும் இல்லையோ, அதேபோல தாங்கள் ஒரு முஸ்லிம். இந்து சமயத்தவர் அல்ல.

    எனவே //மனுஸ்ருமிதி இந்து மத சட்டம் கிடையாது என்றும் அதனை கோவில்களிலோ வீடுகளிலோ படிக்கும் இடங்களிலோ யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் மூலம் தடை ஆணையை வாங்குங்கள். // என்று சொல்ல, அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், இஸ்லாமியரான உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை.

    எல்லை மீறவேண்டாம். குதர்க்கமான, திசைதிருப்பும் பதிலையும் தவிர்க்கவும்.

    வணக்கம். அமைதி ஓங்குக.

  87. சு பி,

    செக்கு மாட்டை போல மனு ஸ்ம்ருதியை சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். இதை பற்றி தமிழ் ஹிந்துவில் மாங்கு மாங்கன எழுதி விட்டார்கள். இதில் கொஞ்சம் கூட சமாளிப்பை நீங்கள் பார்க்க முடியாது. மனு ஸ்ம்ருதி எரியக் கடவது என்பது தான் சாரம். நிற்க இதை முன்வைத்தாகி விட்டது.

    பாரத பரம்பரையில் மாறாதது என்பது சுருதி, மாறுவதென்பது ஸ்மிருதி. அதனால் தான் மனு ஸ்மிருதி சாண்டில்ய ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, யாஞவல்க ஸ்மிருதி நாரத ஸ்மிருதி என்று வளர்ந்து கொண்டே போகிறது. எப்படி வாழலாம் என்று கோடிட்டு காட்டுவதால் காலத்திற்கேற்ப ஸ்மிருதிகள் மாறுகின்றன. நாம் இன்றுள்ள சூழலில் இந்த ஸ்ம்ருதிகளில் உள்ள அம்சங்கள் எல்லாமே ஏற்கக் கூடிவயாக இருக்காது. அதை விட்டுவிட வேண்டும். இது தான் பாரதீய தர்மம். இதை இன்றைய ஹிந்து விட்டு விட்டான். நீங்கள் மனு தர்மத்தில் சுட்டிக் காட்டும் அனர்த்தங்கள் (வர்ணாஸ்ரம ஜாதீய விஷயங்கள்) மனு ஸ்ம்ருதியின் ஒரு சிறிய பாகம். அதை வெட்டி எறிந்துவிட்டு மிச்சத்தை அனுஷ்டித்தால் நன்மையே கிடைக்கும்.

    உங்களால் குர்ஆனில் உள்ள அபத்தங்களை விட முடியுமா? அதில் உள்ள அனர்த்தங்களை, காம விசாரங்களை, வெறியாட்டங்களை கைவிட முடியுமா? உங்களால் இவைகளை வீசி எற்ய முடியுமா? வெட்டி எறிந்தால் குர்ஆனில் மீதி இருப்பது ஐந்து பக்கம் தேறுமா என்பதே சந்தேகம். உங்களது அனர்த்தங்களை ஆதலால் அடக்கிக் கொள்ளலாம்.

    சகோ. சுவனப்ரியனில் பிரியன் என்பது தமிழல்லவே. சுவனம் கூட தமிழ் இல்லை சார். சுவனத்தை சொர்க்கம் என்று நீங்கள் கூற காரணம் என்ன தெரியுமா சுவன என்றால் சமஸ்க்ருதத்தில் நிலா என்று அர்த்தம். வளர் பிறை அதன் மேல் நட்சத்திரம், எல்லாம் உங்களுக்கு இசைந்தது தானே. சந்திரலோகம் என்பது ஒரு விட சொர்க்கம். (சமஸ்கிருதத்தில் சந்திர லோகம் என்றால் நிலா என்ற உபக்ரகம் இல்லை).

  88. suvanappiriyan
    ஆனால் நான் சொல்ல வந்ததே வேறு. ஹஜ்ஜுக்கு போயி வந்த உங்க தாத்தா காலில் மறைந்த பெரியவர் டோண்டு காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணும்போது, என்னப்பா மனிதன் காலில் மனிதன் விழுவதா என்று உங்கள் தாத்தா சொன்னதாக பதிவு பண்ணியதே நீங்கள்தான் . அந்த மனிதாபிமானத்தை நீங்கள் என் உங்கள் அரபு முஸ்லிம்களுக்கு சொல்லித்தர கூடாது? உங்கள் குரானை நீங்கள் ஏன் அங்கு விளக்கக் கூடாது…….. அப்படி என்றால் முஸ்லிம் வேறு குரான் வேறா? மனிதன் பண்ணக்கூடியதா இது எல்லாம்:-

    “. ஏமாற்றி விட்டீர்கள் என, கோபமடைந்தபோது, அவர்களின் எச்சரிக்கை என்னை அடக்கியது.காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஆடு மேய்க்க வேண்டும். காலையில், 5 லிட்டர் தண்ணீரும், ரொட்டியும் கொடுப்பார்கள். இரவில், காடுகளில் கிடைக்கும், சுள்ளிகளைப் பொறுக்கி, சமையல் செய்து கொள்வேன். இதற்கு, மாதம், 5,000 ரூபாய் சம்பளம்.ஆடுகள் அடைத்திருக்கும் பட்டிக்கு அருகே, தகர செட் அமைத்திருப்பார்கள். அதில், துாங்கிக் கொள்வேன். என்னைப் போல், அப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட, தமிழர்கள் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கும், தோட்ட வேலைக்கும் அமர்த்தப்பட்டு இருந்தனர்””

  89. ராஜா
    //
    அப்பள்ளிகளில் கொண்டாடப்படவேண்டும் எனச் சொல்லுவது மொழி திணிப்பாக பார்க்கப்படுகிறது. இன்று பள்ளியில் கட்டாயம் என்பவர்கள் நாளை மாநிலத்திலும் கட்டாயம் என்று சொல்ல வாய்ப்புள்ளது.
    2. சமஸ்கிருதமே தாய் மொழி, இதுவே செம்மொழி என்று பல்வேறு தளங்களில் கூறிக்கொண்டிரும் வேளையில் தமிழின் தொன்மை மறைக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது.
    //
    எங்கே சார் திணிப்பு. நடப்பு விஷயம் வேறாக உள்ளது, இந்து அனைத்து பள்ளிகளிலும் நடத்த சொல்லவில்லை. CBSE பள்ளிகளில் மட்டுமே, அங்கு சமக்ஸ்ருதம் பயிலும் மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதனால் அங்கு சமஸ்க்ருத வாரம் கொண்டாட சொல்வதில் என்ன தவறு. மொழியை பயிலும் மாணவர்கள் அதை கொண்டாடினால் என்ன தவறு. வேண்டுமானால் தமிழ் மாதம் கொண்டாடட்டும் அதை வேண்டாம் என யார் சொல்லப் போகிறார்கள். சமஸ்ருத வாரம் கொண்டாடுங்கள் என்று இந்திய அரசு தான் சுற்றறிக்கை அனுப்பும், சைனாவில் இருந்தா அனுப்புவார்கள் இல்லை ஒரிசாவிளிருந்தா. பாரத கலாசாரத்தை பற்றி ஆழ்ந்த புரிதல் கொள்ள சமக்ஸ்ருத்த மொழி அறிவு ஓரளவாவது தேவை படுகிறது என்பது உண்மையே.

    பண்டைய பாரத்தில் பெண்களின் நிலையை பற்றி ஒருவர் அருமையான புத்தகத்தை வெளியிட்டுள்ளார், அவர் இதை செய்ய பல சமஸ்க்ருத நூல்களை படிக்க வேண்டி இருந்திருக்கிறது.

    உங்களுக்கு india’s contribution to analytical thinking என்பதை பற்றி அறிய வேண்டுமானால் ஆயிரக் கணக்கான நியாய வைசேசிக நூல்களை புர்ரட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

    text engineering என்று இன்று பிரத்திமாக மேற்கில் பலர் மண்டையை பியித்து கொள்கிறார்களே அதை அற்புதமாக ஸ்போட வாதம் என்பது விளக்குகிறது. இதற்க்கு சமஸ்க்ருத ஞானம் அவசியம்.

    இதையெல்லாம் மொழி பெயர்த்து நீங்கள் படித்தால் மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல இருக்கும் , கொஞ்சமேனும் சமஸ்க்ருத அறிவுடன் படித்தால் எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

    தமிழ் நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. மத்திய அரசு பாரசீக மொழியா படிக்க சொல்கிறது, பாரத கலாசாரத்தின் ஆணி வேறான சமக்ஸ்ருத்தை தானே.

    இந்த விஷயத்தை பற்றி ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஏன் கூச்சல்கள் இல்லை என்று சற்று யோசித்தீர்களா. தமிழன் மட்டும் தான் விசேசமாக மொழி பற்று உள்ளவனா. தெலுங்கனுக்கு அது கிடையாதா.
    இந்த திணிப்பு மனப்பான்மை கழக விஷ செடியின் நிழலில் நாம் குளிர் காய்வதாலே தான் எழுகிறது.

    கேரளாவில் ஒன்றாம் வகுப்பு தொடங்க சம்ஸ்க்ருத பாட திட்டம் வேண்டும் என்று வலிந்து இரண்டு வருடம் முன்பு ஒரு சட்டம் கொண்டுவந்தள்ளது அங்குள்ள கிறிஸ்தவ அரசு. மலையாளிகளுக்கு மலையாள மொழிப்பற்று இல்லையா.

    ரஷியாவிற்கு வயிறு ரோப்புவதர்காக படிக்க செல்லும் நம்ம தமிழ்செல்வன் ரஷ்ஷிய மொழியை ஆர்வத்துடன் கற்பதில்லையா. கேஜியிலிருந்து சாகும் வரை ஆங்கிலம் கற்பிபப்தற்காக இந்திய அரசு செய்யும் செலவு என்ன என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு காபி டே கடைக்கு சென்று கடைக்கு செண்டு தமிழில் காபி கொடுங்கள் என்று கேட்டால் அவன் அமெரிக்க ஆங்கிலத்திலே பதில் தருகிறான். காபி கடை வெச்சவனுக்கு எதுக்கு ஆங்கில பயிற்சி. எங்கே பிரான்சு நாட்டுக்கு போய் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் பதிலே வராது.

    ஆங்கிலத்திற்கு வரிந்து கட்டி செலவிடும் நாம். நமது கலாசார அறிவிற்காக நமது மேன்மைக்காக கொஞ்சம் சமஸ்க்ருத்திர்காக செலவிடுவது தவறா.
    பள்ளி மாணவர்கள் சமஸ்க்ருதம் விரும்புகிறார்கள் சார். சோனியா தலைமையிலான கடந்த கிறிஸ்தவ அரசு சமஸ்க்ருதத்தை கேந்திரிய விடாலயத்திளிருந்து தூக்க அதை ஒரு option course ஆகா மாற்றியது. அதாவது மாணவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது சமஸ்க்ருதம் படிக்கலாமாம். இதில் வெக்கக் கேடு என்ன வென்றால், இன்றைய ஜெர்மன் மொழியை மாக்ஸ் முல்லர் என்றவன் சமக்ஸ்ருத்த மொழியின் ஆதாரத்தில் மாற்றி அமைத்தான். உலகிலேயே சமக்ஸ்ருதம் பயில அதில் ஆராய்ச்சி செய்ய அதிக பணம் செலவிடுவது ஜெர்மானியர்கள் தான்.

    நாம் பாருங்கள் சமஸ்க்ருதஹ்தின் வேணுமா வேண்டாமா என்று வெட்டி விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கொழிந்த மொழியாக இருந்த ஹீப்ரு மொழியை ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் பென் எஹுதா என்பவர் மீட்டெடுத்தார். இந்த மொழி பற்றால் இஸ்ரேல் எப்படி ஒன்றிணைந்தது அரேபியர்களையும் ஆங்கிலேயர்களையும் அதன் பின் எப்படி விரட்டி அடித்தார்கள் என்ற கடையை படித்தால் மட்டுமே புரியும்.
    இந்தியாவை போலவே இஸ்ரேலிய மக்கள் அடிமைகளாகவே தங்களை எண்ணினார். அவர்கள் தங்கள் பண்டைய கலாசாரத்தை எப்பொழுது மீட்டேடுதார்களோ அப்பொழுது இது மாறியது, இன்றைய இஸ்ரேலை பற்றி சொல்லவே வேண்டாம். தயவு செய்து கூகுல் செய்து இவரது மகன் இவரை பற்றி எழுதின புத்தகத்தை படித்து பாருங்கள். நிச்சயம் இந்த மகானின் தாகத்தை நினைத்து அழுது விடுவீர்கள். ஒரு மொழியை வர்த்தக பார்வையுடன் பார்க்கும் ஒவ்வொருவனும் இதை படிக்க வேண்டும் (இங்கு பின்னூட்டமிட்ட அந்த கோயம்புத்தூர் காரர் உட்பட)

    இப்போதைய பால சுந்தரம். ஹீப்ரு செக்குலர் மொழியா அல்லது விவில்ய மொழியா. என்ன இதுக்கு இட்டிஷ் மொழியை விட்டு விட்டு அதை மீட்டெடுத்தனர். அங்கேயும் அதே கதை தான் ஹீப்ரு ஒரு வர்கீய மொழி அதை சிலர் தான் சொல்ல வேண்டும் என்று இட்டுக் கட்டி கதை வளர்த்தனர். அவை அனைத்தும் எலிசர் என்ற மகாத்மாவால் கொன்றோழிக்கப்பட்டது.

  90. நமது பார்லிமெண்டில் போடப்பட்ட எத்தனையோ சட்டங்கள் பலமுறை திருத்தப்பட்டு விட்டன. நமது இந்திய அரசியல் அமைப்பு 98 தடவை திருத்தப்பட்டு விட்டது. இதுபோலத்தான் காலத்துக்கு ஏற்ப மனு, சாண்டில்ய, பராசர, யாக்ஞாவல்க்ய ,நாரத, என்று பலரும் தங்கள் தங்கள் காலத்தில் எழுதினர். இன்றும் நமது காலத்தில் கூட , சடங்குகள், சம்பிரதாயங்கள் ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறிது சிறிது வித்தியாசத்துடன் தான் செய்யப்படுகின்றன. ஏனெனில் இதில் வட்டார வழக்கு சிறிது மாறுபடும்.

    மேலும் சில விஷயங்களை பார்ப்போம், இந்திய அரசியல் அமைப்பில் , பார்லிமெண்டு இயற்றிய பல சட்டங்களுக்கு , சில மாநில அரசுகள் அந்த மாநிலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் சில திருத்தங்களை செய்துள்ளன. அந்த திருத்தங்கள் இந்தியா முழுவதற்கு பொருந்தாது. சம்பந்தப்பட்ட மாநில எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். இது போன்றவை தான் இந்த ஸ்மிருதிகள்.

    ஒரே புத்தகம், ஒரே சட்டம் என்பது உலகில் எங்குமே நடைமுறைக்கு வராது. ஏனெனில் ஒரு சட்டம் என்று எதனை எடுத்துப் பார்த்தாலும் ,அந்த சட்டத்திலேயே சில விதிவிலக்குகளை கொடுத்திருப்பார்கள். ஏனெனில் உலகில் விதிவிலக்குகள் ஏராளம் உள்ளன. விதி விலக்கு கொடுக்கப்படாத சட்டங்கள் நடைமுறைப் படுத்த முடியாமல், குப்பை தொட்டிக்கு தான் போய்ச்சேரும்.

    உலகம் முழுவதும் ஒரே வட்டாரமாக மாறுவது என்பது ஒரு நடைமுறை சாத்திய மில்லாத விஷயம். உலகம் ஒரே குடையின் கீழ் ஆளப்படும் நாள் என்றுமே வராது.

    தகுந்த விளக்கம் மற்றும் விரிவான விளக்கம் அளித்த திரு sarang -அவர்களுக்கு நமது நன்றிகள்.

  91. சூ பீ

    அண்டப்புளுகரே

    // இதன்படி சத்துவ குணம்- அமைதி, இராட்சத குணம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
    //

    ராஜச குனமணா ராட்சச குணமா. பைத்தியகாரதனமா இல்லை. சாதிவக குணமென்றால் பிரம்ம த்யானத்தில் அதிகம் ஈடுபடுவோர்.
    ராஜச குணமென்றால் காரியத்தில் அதிகம் ஈடுபடுவோர். அவர்களால் ஒரு இடத்தில் சும்மா உட்கார முடியாது.
    தாமச குணம் மூர்க்க குணமில்லை. மந்தமான அதாவது மெதுவாக வேலைசெய்யும் புத்தியை உள்ள திறன் படைத்தவர்கள்.

    இந்த முக்குணங்கள் பிரகிருதி பூராவும் பரவி இருக்கிறது, யாவருக்கு யது அதிகமோ அதன்படி அவரது எண்ணமும் செயல்பாடும் இருக்கும். உதாரணமாக தாமசீக ராஜஸீக குண மிகுதியால், புரட்டு பேசுவது, மற்ற மதத்தை பொய்யால் தூஷிப்பது போன்ற கார்யம் சித்தமாகிறது.

    ராமர் ஷர்த்ரியன். அப்போ ஹிந்துக்கள் அவரை ராட்சதன் என்றார்களா. கிருஷ்ணன் OBC அப்போ மந்த புத்தி.

    ராம க்ரிஷ்ணாதிகளை விடுவோம். ஜனக ராஜா என்றொரு கர்ம ஞான யோசி இருந்தார். மற்றும் எவ்வளோவோ க்ஷத்ரியர்கள் சாத்விக குண மிகுதியுடன் வாழ்ந்தனர்.
    ஹரிச்சந்திரன் கதை படித்ததில்லையா. உண்மையை காக்க சக்கரவர்த்தி பட்டம் வரை இழந்து மயான பூமி கார்யம் வரை செய்யத் துணித சாத்வீக மா மேதை அவன்.

    சாத்வீகர்கள் என்றால் ஜபம் மட்டும் செய்வார்கள். சண்டை போட மாட்டார்கள் என்றில்லை. ராஜீக குணம் கொண்டவன் என்றால் ஜபம் பண்ண மாட்டான் என்றில்லை.

    குணத்திற்கும் வர்ணாஸ்ரம பேதத்திற்கும் எங்கே சம்பந்தம் இருக்கிறது. பக்கி பீடிய சொன்னால் அது உண்மையா.

    இதெல்லாம் பெரியார் புண்ணியம், அக்னிஹோத்ரம் நாயனார் புண்ணிய துஷ்ப்ரயோகங்கள். இதை வெள்ளை காரன் கூட நம்பரடில்லை. சாத்வீக குணம் தேடி இந்தியா வந்து யோகா பயின்று செல்கிறான். யோகா கலையின் நோக்கே ஒருவனை முழு தாமசீகத்திளிருந்து ராஜசீகமாய் மாற்றி பின் சத்வம் நோக்கி எடுத்து செல்வது தான். அதனால் தான் அதிக யோகாசனம் செய்வதால் ஷக்தி உண்டாகிறது, சக்தியை உடையவன் அதிக காரியத்தில் ஈடுபடுகிறான் அவை நல்ல காரியங்களாக இருந்தால் சத்வம் மிகுகிறது. கேட்ட காரியமாக இருந்தால் ராஜஸீக தாமசீகங்கள் மிகுகிறது.

    இது இருக்க. இதை ஏன் நீங்கள் இப்படி பார்க்கக் கூடாது. அனைவரும் தாமச குணத்தில் இருந்து மீண்டு சத்வ குணத்தை அடைய வேண்டும். அனைவரும் பிராமணராக வேண்டும் அதாவது பிரம்ம ஞானம் அடைய வேண்டும் என்பதே ஹிந்து மதத்தின் லட்சியம். அசதோ மா சத் கமய என்பது தான் எங்களது சாரம்.
    பிரம்ம ஞானம் என்ற உயர்ந்த லட்சியம் உடையவர்கள் சாத்விகர்கள். அவர்கள் பிரம்மத்தை வழிபடுகிறார்கள்.
    எப்போதும் அடுத்தவனை துன்புறுத்தி ஆக்கிரமித்து அடக்கி போர் புரிந்து, கற்பழிக்க துடிப்பவர்கள் நூறு சதவீதம் ராஜச குணம் கொண்டவர்கள். வாழை பழ சோம்பேறிகள் தாமசீக குணம் கொண்டவர்கள்.

    ஒரு முஸ்லிமு அடுத்தவனை பிறவி அடிப்படையில் பிரிப்பதில்லையா. என்ன அபாண்ட பொய். இஸ்லாமே உயர்ந்த மத அதில் பிறந்த முசுளிமே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன் மற்றவன் ஒரு கேவலமான காபிர் கற்பழித்து கொடூரமான முறையில் கொல்லத்தக்கவன் என்பது தான் குரானின் சாரம்.

  92. இப்போதைய பாலா

    //
    சாரங்கன்

    நீங்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து சமஸ்கிருதத்தை “சமஸ்கிருதம்” என்றழைத்த வரியொன்றைக்காட்டுங்கள் போது
    //

    ஏன் எதற்காக என்று சொல்லுமே

  93. சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகியவற்றை வடமொழி, வடசொல் என்றே பழந்தமிழ் நூல்கள் (பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கம்பராமாயணம் உள்பட) குறிப்பிடுகின்றன. இதற்கு ஆலமரத்தின் கீழ் கற்கப்பட்ட மொழி என்று திரித்து விளக்கம் கூறுவது சரியான மோசடி. சாலமன் பாப்பையாவை துணைக்கு அழைப்பது மிக மோசம். அந்தக்காலத்தில் வடஇந்தியாவில் வடமொழி (அல்லது வடமொழிகள்) கோலோச்சின. தென்னிந்தியாவில் ‘தென்மொழி’ எனப்படும் தமிழ் கோலோச்சியது. இது தான் உண்மை. ஆக சமஸ்கிருதம் வடஇந்தியாவின் மொழி தான். காளிதாசர் எழுதிய சாகுந்தலம் நூலில் அரசனும் மீனவப்பெண்ணும் உரையாடும் போது அரசன் சமஸ்கிருதத்தையும் மீனவப்பெண் பிராகிருதத்தையும் பயன்படுத்துவார்கள். சமஸ்கிருதம் எப்போதும் சாதாரண மக்களின் மொழியாக இருந்தது இல்லை. சாதாரண மக்கள் சமஸ்கிருதம் கற்பதற்கு கூட பழங்காலத்தில் தடை இருந்தது. இந்த நவீன காலத்தில் எதற்காக சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும். அதுவும் தமிழ்நாட்டில்!. அதை எதற்காக சாதாரண மக்கலின் மீது திணிக்க வேண்டும். லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளை அனைத்து ஐரோப்பியர்களும் (குறிப்பாக ஜெர்மன் மொழி பேசுவோர்) கற்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

  94. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

    \\\ /மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ” பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே ” அந்த ஆரியத்தை – அதாவது மாணிக்கவாசகரால் போற்றப்பட்ட சிவனை வீழ்த்த வேண்டும் என்று கூறுகிறார்//தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்க இது போன்ற மலினமான உத்திகளை எல்லாம் கையாள வேண்டாம்.. \\\

    தமிழில் பிற மொழி கலத்தல் சரியல்ல என்று கூறிய போற்றத் தகுந்த உங்களது பக்ஷபாதமில்லா நிலைப்பாட்டுக்குப்பிறகு சஹோதரி ரெபெக்கா மேரியிடம் தாங்கள் பகிர்ந்த சில ( எல்லாக் கருத்துக்களும் இல்லை) கருத்துக்களில் ஆழ்ந்த சாரமிருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைவதற்கு முன்னரே உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நீங்கள் தர்க்கமாக இல்லாமல் வெற்று கோஷங்களாக முன்வைப்பது சலிப்பைத் தருகிறது.

    ஸ்ரீமான் கதிரவனை நீங்கள் மலினமான உத்திகளைக் கையாள வேண்டாம் என்று கூற உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று யோசனையாவது செய்து பார்த்தீர்களா? இந்தத் திரியில் மதிஹீனமாக மிக்க மலினமான உத்திகளை நீங்கள் கையாண்டது போக அவரை சினக்கிறீர்கள்? அவர் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? நான் இன்னமும் மிகக் கடுமையாகக் கேழ்க்க முனைந்த பல கேழ்விகளை ஒரே கேழ்வியாக அவர் சாதுவாகக் கேட்டிருக்கிறார்.

    ஆரியம் என்றால் என்ன என்று முதலில் ஆதார பூர்வமாகப் பகிரவும். தமிழ்ப்பண்பாடு என்று நீங்கள் பகிரவிழையும் ஒரு பண்பாட்டிலிருந்து ஆரியப்பண்பாடு என்பது எவ்வாறு வேறுவிதமாக வேறுபடுகிறது என்று பகிர முயல்வது அறிவு பூர்வமான செயல்பாடு. ஸ்ரீமான் ஜெயமோஹன் அவர்களது சமீபத்திய வ்யாசம் தமிழ் பற்றியும் தமிழகம் பற்றியும் பகிர்ந்த அறிவு பூர்வமான ஒரு கருத்து என் பார்வையை விசாலமாக்கியது. நான் கருத்தொற்றுமைகளைப் பற்றி மட்டிலும் பேசுகிறேன். நீங்கள் கருத்து பேதங்களைப் பற்றி மட்டிலும் பேசுகிறீர்கள். தத்யம் இவையிரண்டையும் சமன்வயித்து இருக்கிறது. அழகாக சங்க நூற்களிலிருந்து ஸ்ரீ ஜெயமோஹன் இதை விளக்கியிருந்தார்.

    என்னைப்போற்றுவதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். என்னையும் உங்களையும் விட பன் மடங்கு வயதில் மூத்த…… கசடற சைவத்தையும் தமிழையும் முறையாகக்கற்று …………… உள்ளங்கை நெல்லிக்கனியாக……… திருப்புகழின் (ஓ உங்களுக்கு ஆகாதே) ——- திருமுறைகளின் சாரத்தை ஹ்ருதயத்தை தொடும்படிக்குப் பகிரும் ………முனைவர் ஐயாவை ……….. துடுக்கு மிகப்பேசியமைக்கு எங்காவது ஒரு சொல்லாவது பஸ்சாதாபம் கொண்டிருப்பீர்களா என்று பார்த்தேன். இல்லையே. மூத்தோரைச் சுடுசொல் பேச தமிழ்க்கலாசாரத்தில் மூதுரையில் சொல்லியிருக்கிறதா? இனியவை நாற்பதில் சொல்லியிருக்கிறதா? இன்னா நாற்பதில் சொல்லியிருக்கிறதா? தமிழறிஞர், சித்தாந்தவாதி என்றபடிக்கு நிச்சயமாக நான் அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றிருக்கிறேன். தளத்து மற்றைய சஹோதரர்களும் அன்னாரது தெளிவான எளிமையான கருத்துக்களிலிருந்து பல விஷயங்களைக் கற்றிருக்கிறார்கள் என்றும் அறிவேன்.

    அழிப்பதையே முனைப்பாகக் கொண்ட ம்லேச்ச சம்பந்தம் ஆக்க பூர்வமான செயல்பாடை எங்கு போதிக்கும் என்பது புரிகிறது?

    சம்ஸ்க்ருத நூற்களில் சொல்லப்பட்டிருப்பது இன்னதுதான் என்று நிர்த்தாரணம் செய்ய முதலில் சம்ஸ்க்ருதம் கற்றிருக்க வேண்டும். எங்கள் பழனியாண்டவன் மீது ஆணையாகச் சொல்லுங்கள் நீங்கள் சம்ஸ்க்ருதம் கற்றதுண்டா? அப்படி இல்லாமல் காமா சோமா என்று எத்தையாவது காபி பேஸ்ட் செய்து கருத்துப்பகிர்வது உங்களை நீங்கள் ஹாஸ்யப்பொருளாக்குவதற்கு சமம்.

    ஜெனாப் சுவனப்ரியன் செய்கிறார் என்றால் அவரது இலக்கு வஹாபியத்துக்கு பிள்ளை பிடிப்பது. புரிந்து கொள்ள முடிகிறது. இன்னிக்கு எத்தனை பிள்ளை பிடித்திருக்கிறோம். பலான நடிகன். பலான நடிகை. இன்றைய சரக்கு விபரம். என்ன கணக்கு வழக்கு. அழகு தான். தமிழ் ஹிந்துவில் அப்பப்போ க்ளோசிங்க் ஸ்டாக் அப்டேட்டும் செய்கிறார். புதுவரவு இத்யாதி வரவு செலவு….ம்………செலவு பற்றிப் பகிர மாட்டார்……. வ்யாபாரம் அப்புறம் போண்டியாகி விடுமே. கந்து வட்டி மூல்தானி படான் முஸல்மானின் கணக்கு வழக்கெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

    சைவ சமயம் என்ன பிள்ளை பிடிக்கும் கூட்டமா சொல்லுங்கள்.

    மனுதர்ம சாஸ்த்ரத்தை விமர்சிப்பதற்கு முன்னர் நீங்கள் மனுதர்ம சாஸ்த்ரத்தை முழுதும் வாசித்திருக்கிறீர்களா? அது இன்னது தான் சொல்ல வருகிறது என்று பகிர? மனுதர்ம சாஸ்தரம் பற்றி எங்கோ நாலுவரி படித்து மனுதர்ம சாஸ்த்ரத்தை குறை சொல்லுவதைக் கூட………… சரி மனுதர்மத்தில் பகிரப்பட்ட ஒரு விஷயமான ஜாதியத்தை எதிர்க்கும் அன்பர் ஒருவரின் செயல்பாடு என்று புறந்தள்ளிப்போகலாம் என்று பார்த்தால்………… முழு சம்ஸ்க்ருதமே மனுதர்ம சாஸ்த்ரம் …………. முழு சம்ஸ்க்ருதமே ஜாதியம்………..என்று கூறுவது உளறல் இல்லாமல் வேறு என்ன சொல்லுங்கள்? நான் அறவே ஏற்காத புறச்சமயமான பௌத்தத்தில் கூட சம்ஸ்க்ருத க்ரந்தங்கள் இருக்கின்றன. ஜைனத்திலும் சம்ஸ்க்ருத க்ரந்தங்கள் இருக்கின்றன. நானே இந்த தளத்திலேயே தமிழ் நூற்களிலும் பௌத்த சம்ஸ்க்ருத நூற்களிலும் உள்ள ஆச்சரியப்படத்தக்க இலக்கிய ஒற்றுமையை மிகக் குறிப்பாக நூலின் பெயர், அத்யாயம் ச்லோக சங்க்யை என்று முழு விபரங்களுடன் கருத்துப் பகிர்ந்திருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கேயாவது சம்ஸ்க்ருத வெறுப்பாளர்கள் இணையத்தில் பினாத்திய உளறல்களை முன்வைத்து முழு சம்ஸ்க்ருதமே இது தான்…………….. உலகமே சம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறது என்று பினாத்துவது மதிஹீனம். ஜெனாப் எம் ஏ கான் சாஹேப் அவர்கள் இஸ்லாத்தின் வன்முறையை வரலாறு மூலம் எழுதி விட்டதால் வன்முறை தவிர இஸ்லத்தில் வேறேதும் இல்லை என்று பினாத்துவது எப்படி பிழையாகுமோ அப்படியே பிழையானது ஹிந்துக்கள் எல்லோரும் சம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறார்கள் என்று பினாத்துவது.

    குறை காண்பதை குறையாகச் சொல்ல வரவில்லை. ஒரு முழுமையைக் கைக்கொள்ளுங்கள். வெற்று கோஷங்களாக இல்லாமல் ஆழ்ந்த தர்க்கமாக முழுமையுடன் உங்கள் கருத்துக்களை பகிர விழையுங்கள்.

    ம்லேச்சர்களுடன் கைகோர்த்து நீங்கள் தமிழை வாழவைக்கத் தோள் தட்டுவதும்………. ஆரியத்தை வீழ்த்தப் புறப்படுவதற்கு முன்னர் ……….ஆரியம் என்றால் என்ன என்றாவது அறியத் தலைப்படவும். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டுவது மதிஹீனம்.

    தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் கலந்த ஒரு மொழிநடையில் பாரோர் நன்மைக்காக…….தமிழருடைய நன்மைக்காக மட்டிலும் அல்ல…….. பெருத்த பாருளீர் ………..என்று உலகோரை அழைத்து……….எங்கள் வள்ளல் பெருமான் பாடுகிறார்…………. திருப்புகழைப் பாட எங்கள் வள்ளல் பெருமானுக்கு அடியெடுத்துக்கொடுத்தவன் எங்கள் தமிழ்க்கடவுளான முருகப்பெருமான்.

    அருணகிரிப்பெருமான் உங்களுக்கு எதிரி ? உலகோர் உய்ய அவர் பாடியது கொடுந்தமிழ் இலக்கியம்? ஏன் சம்ஸ்க்ருதம் கலந்து விட்டது அதானால்?

    சற்போதகப்பதும முற்றே தமிழ்க்கவிதை பேசிப்பணிந்துருகு நேசத்தை இன்றுதர இனி வரவேணும்………. என எங்கள் பழனியாண்டவனை அருணகிரிப்பெருமான் இறைஞ்சுவது நாடகம்…………… புல்லுருவித்தனம்……….அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்?………….

    சரி அருணகிரிப்பெருமானுக்கு திருப்புகழ் பாட அடியெடுத்துகொடுத்த முருகப்பெருமானுக்கும் கூடவா மதிக்குறைவு இருக்கும்? இப்படி ஒரு பனுவலை இவர் படைப்பார் என்று அறியாது அடியெடுத்துக்கொடுக்க.

    மணிப்ரவாளம் புல்லுருவித்தனம் என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும்………. அதில் பார்ப்பனீயத்தைப் பார்க்க விழைவது பித்துக்குளித்தனமின்றி வேறென்ன…………. மணிப்ரவாளத்தில் என்னென்ன கருத்துக்கருவூலங்கள் இருக்கின்றன என்று ஸ்ரீமான் அரிசோனன் அவர்களுக்கு பட்டியலிட்டிருக்கிறேன்.

    எந்த மொழியும் மொழிநடையும் ஜாதி, சமயம், மதம் போன்ற சிறையில் அடங்காதவை என்ற அடிப்படை சமூஹ விஷயத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    மணிப்ரவாளத்தை ஒழிக்க நீங்கள் முனைவதாலெல்லாம் மணிப்ரவாளம் ஒழியாது.. திருப்புகழும்……ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய க்ரந்தங்களும்……… சமணக்காப்பியங்களும்……….. அவ்வளவு ஏன்……….. விவிலயமும் உலகில் உள்ள வரை மணிப்ரவாளம் நிச்சயம் இருக்கும். ப்யூர் தமிழ் பைபிள் என்றெல்லாம் தலைகீழாக முயன்றெல்லாம் பார்த்திருக்கிறார்கள். வேலையாகவில்லை. ஆதியிலிருந்தே ஆதியாகமம் என்று தானே பைபிளே துவங்குகிறது. சுவிசேஷம், ஜெபம், கனம், பெலன், பிதா, சுதன், பரிசுத்த ஆவி……….. விவிலியத்தில் தமிழை நிச்சயமாகத் தேடத் தான் வேண்டும் 🙂

    ஆனால் நீங்கள் க்றைஸ்தவர்களுடன் கை கோர்த்து தமிழைக்காத்து ஆரியத்தை அழிக்க முனைவது………. மண்குதிரையிலேறி ஆற்றைத்தாண்ட விழைவதல்லாமல் வேறென்ன 🙂

    ஆனால் தமிழை போஷிக்க வேண்டும் என்று முனைந்து நீங்கள் செயல்படும் ஒவ்வொரு அர்த்தமுள்ள செயற்பாடும் தமிழுக்கு உரம் சேர்க்கும். ஜனநாயகம் என்ற பதத்தை க்ருஷ்ணகுமார் சொல்லலாம். ஸ்ரீ தாயுமானவன் சொல்லலாமோ? மண்டையைக்குடைந்து மக்களாட்சி என்ற பதத்தை தாயுமானவனை இடித்துறைக்க மீட்டெடுத்தேன். சஹோதரி ரெபெக்கா மேரி அவர்களுக்கு சொன்ன அதே பாடம் உங்களுக்கும். நீங்கள் ப்ரயோகிக்கும் தமிழ் ஸ்வச்சமாக இருக்கிறதா என்று கவனமாகப்பாருங்கள். எனதன்பார்ந்த பாலா (இப்போது கருத்துப்பகிரும் ரெவரெண்டு BALA SUNDARAM KRISHNA இல்லை) கருத்துப்பகிரும் போதெல்லாம் கண்ணில் வெளக்கெண்ணெய் போட்டுப்பார்ப்பேன் இவர் தமிழைத் தவிர வேறு மொழி ஏதும் கையாள்கிறாரா என்று. சொன்ன வண்ணன் செயல்பாடுடைய தமிழன்பராயிற்றே அவர். பளிச் பளிச் சுத்த தமிழ். எடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டிய தமிழ். அதே அலகீடை நான் ஸ்ரீ தாயுமானவன் அவர்களிடம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு சொல்லுங்கள். உங்கள் உத்தரத்தில் என்னென்ன சம்ஸ்க்ருத பதங்கள் உள்ளன என்று உங்களை தர்ம சங்கடப்படுத்த விழையவில்லை. ஆனால் உங்கள் ஆக்ரஹத்தை செயலில் காட்டுங்கள். உங்களிலிருந்து துவங்குங்கள் என்று நிச்சயம் சொல்வேன்.

    அறிவு பூர்வமாக முழுமையாகக் கருத்துப் பகிருங்கள். காபி பேஸ்ட் கந்தறகோளங்கள்………… பார்ப்பனீய டர் புர் பேத்தல்கள் இதெல்லாம் இணைய விடலைகளுக்கு…………உங்களுக்கு உயர்ந்த தெய்வத்திருத்தமிழும் சைவமும் இருக்கையில்………அதில் ஆழ்ந்து அதன் சுவையை தளத்து வாசகர்களுடன் பகிர்வீர்களா? உங்களுக்குத் தெரியாத விஷயங்களை காபி பேஸ்ட் செய்து பாயிண்ட் ஸ்கோர் பண்ண விழைந்து ஆனால் பரிபவப்படும் விடலையாக ஆவீர்களா?

    சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா………..

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  95. \\\\\\\\\\\\ செமிட்டிக் மதங்கில் இரண்டே பக்ஷம் தான். ஒன்று நம்பு இல்லாங்காட்டி எம்பு.

    நான் பொறாமை கொண்ட கடவுள், நான் ஒரு பயங்கரவாதி என்று கடவுள் எங்களுக்கு ஒரு நாளும் கட்டளை இடவில்லை. எங்களுக்கு பன்மை முக்கியம், அதைப் போற்றுவோம். தமிழ் படிப்போம், சமஸ்க்ருதம் படிப்போம், தெலுங்கு மொழியில், மராத்தியில் உள்ள சாராம்சங்களை அறிய அவற்றையும் படிப்போம்.

    விவிலியத்தை தமிழிலே சொல்கிறார்களாம். என்ன தமிழ் பற்று, என்ன தமிழ் பற்று? ஏசுவுக்கு கேக்கவேணும்னா நீங்கள் படிக்கீறீர்கள். அதான் ஜெஹோவா தெளிவா சொல்லிவிட்டு போந்தாரே. நான் இஸ்ரவேல் நாட்டு மக்களை உய்விக்கவே வந்தேன் என்று. அவர் தமிழெல்லாம் கேக்க மாட்டார் சார், ஹீப்ரு தான் அவருக்கு புரியும். நீங்கள் தமிழ் படுத்துவது, தெலுகு படுத்து வது எல்லாம் சுவிசேஷ கோட்டம் நடத்தி ஆட்டு மந்தைகளை பிடித்தது கணக்கு காட்டி வயிறு ரொப்ப தான்.

    அதென்னங்க ரெவெரெண்டு என்ற பட்டம், அதை தமிழ் படுத்தலாமே, அதென்ன பாதர், ப்ரோ இத்யாதி. இயேசுவின் ரத்தம் ஜெயம் இதெல்லாம் தமிழான்னா.

    பாரதத்தில் சமநோக்கு பெருக வேண்டுமென்றால் சமஸ்க்ருதம் ஒரு சாராருடையது என்று உம்மை சார்ந்தவர் காலாகாலமாக பரப்பின துஷ்ப்ரயோகம் ஒழிய வேணும். அனைத்து மக்களும் சமக்ஸ்ருதம் பயில வேணும். இதை பயில் வதன் மூலம் சாத்தியப்படும். \\\\\\\\\

    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

  96. எல்லோரும் மனு எழுதிய நூலை பற்றி பேசுகிறார்கள். அதை யாரும் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிடுவது போல் தெரியவில்லை. அது ஒன்றும் இறை நூல் அல்லவே — அதாவது இராமாயணம் அல்லது மகாபாரதம் போல. பிறகு ஏன் அதை எல்லோரும் மிக அதிகமாக மேற்கோள் காட்டுகிறார்கள் என்று உண்மையிலேயே தெரியவில்லை.

  97. //இதை இன்றைய ஹிந்து விட்டு விட்டான். //

    அவர்களாகவே முன்வந்து விடவில்லை. பலர் – அவர்களும் இந்துக்களே என்று பூசமுடியாது – செய்த போராட்டங்களினால், இன்றைய உலகில் பிறமக்கள் தம்மை என்ன நினைப்பார்களோ என்று அச்சத்தினாலும்தான் – விட்டார்கள். Today if you practice untouchability, the adverse news will spread like wild fire. BBC will report it; NYT will publish photos as they did in r/o Uthapuram wall. BBC Tamil will run a docu on your acts as they did Ilavaran Divya episode. You will feel ashamed of all. You fear adverse publicity; so, you stopped harassing the Dalits in religion. Not only that. Your enemies the Xians and Muslims will attempt to bank upon that, in order to drag all dalits. If all circumstances are favourable, you will continue your acts on one side, and some of your religious leaders will continue to warn you.

    தலித்துகள் இன்றும் நடாத்தப்படும் இழிவைப்பற்றி தமிழ்.ஹிந்து.காமில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். படித்துக்கொண்டே இருக்கவும்.

    பிராமணர்கள் மாறிவிட்டார்கள் எனப்பூசுவீர்கள். இல்லையா? மற்றவர்களெல்லாம் இந்துக்களில்லையா?

    தலித்து சமையல்காரர் என்றார், பள்ளி மாணவர்கள் சாப்பிடமாட்டார்கள் பீஹாரில் தெரியுமா?

    தலித்து பையனென்றால், உங்கள் ஜாதிப்பெண் அவனோடு ஓடத்தான் செய்ய வேண்டும். ஏனெனில், கட்டிக்கொடுக்கமாட்டீர்கள். வன்னியரென்றாலோ, தேவரென்றாலோ, அடித்து கொன்று விடுவார்கள். நீங்கள் பரவாயில்லை. ரொம்ப மனிதாபிமானம். அடிக்கமாட்டீர்.

    தலித்து காதுகளில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்று என்று மனு எழுதியதால், தலித்துகள் அருகில் வந்தால் வேதமோதுவைதை நிறுத்தினார்கள். இன்று செய்யவில்லை என்பீர்கள்! இல்லையா? ஆனால் அதற்குப்பதிலாக என்னனென்னவெல்லாம் செய்கிறீர்கள்!

    மதுரை மீனாட்சி கோயிலுள் நீங்களாகவே மனமுவந்தா உள்ளே விட்டீர்கள்? போலீசையல்லவா அழைத்தீர்?

    இந்துக்களில் மனமாற்றம் இன்னும் முழுமையடையவில்லையென்று இங்கே கட்டுரைகள் சொல்கின்றன. என்னை மொத்தி மலையேறச்செய்யுங்கள் என உங்களுக்கு அன்புக்கட்டளையிட்ட க்ருஷ்ணகுமாரே எழுதியிருக்கிறார். படிக்கவில்லையா?

    இன்னும் மாறவேண்டும் என்றுதான் திரும்பதிரும்ப தெரிவிக்கிறார்கள். தமிழ்.ஹிந்து காம் என்னவென்னால் எழுதிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறீர்களே?

    Manu has not been completely thrown out by you. தலித்துக்கள் ஆயிரமாயிர ஆண்டு நடத்தப்பட்ட இழிநிலைக்கும் இன்றும் நடத்தப்படும் நிலைக்கும் கொளுத்திப்போட்டுவிட்டு போய் விட்டுப்போயிட்டார் அந்த ஆள். முழுவதையும் தூக்கியெறியப்பாருங்கள். ”அது மட்டும் விட்டுவிடுங்கள்; மற்றெல்லாவற்றையும் பிடித்துக்கொள்ளுங்கள்” என்கிறீர்கள்

    இசுலாத்திலும் சில பிடிக்கா விடயங்களைவிட்டுவிட்டு மற்றவைகளைப்பிடித்து இசுலாமியராகி விடலாமே சாரங்கன்?

    (Suvanappiriyan, take note. He wants to become a fellow Islamist. Why not welcome him? He is a very intelligent guy full of knowledge and skilled person. He will add value.)

  98. //அச்சு பிச்சு பைத்தியகாரத்தனம் அப்பட்டமாக தெரிகிறது உங்கள் மறுமொழியில். என்ன எழுதுகிறீர்கள் எதற்கு பதில் தருகிறீர்கள் என்றே விளங்கவொன்னா விஷயமாக இருக்கிறது. நீங்கள் பிராந்தியில் உளறலாம். அடியேனால் முடியாது. அதற்காக அடியேனாலும் அப்படி செய்ய முடியாது.//

    உங்கள் பதிலில் நீளத்தை முக்கால்வாசி குறைக்கலாம் அவ்வளவு தேவையில்லா விசயங்கள். இதுவா என்னை மலையேறச்செய்யும் உபாயம்?

    இந்துதாவாக் கொள்கையை விளக்குக என்று எவரேனும் கேட்டனரா? பன்முகத்தன்மை, பல பிரிவுகள், நாங்கள் ஒன்று என்று எவர் சொல்லச்சொன்னார்கள்?

    வடமொழி வாரம் கூடாது என்றுதான் எதிர்ப்பாளர்கள் சொன்னார்கள். அந்த எதிர்ப்புக்கும் எதிர்கட்டுரை வரையும் அரவிந்தன், அந்த வாரம் கொண்டாடப்படவேண்டும் என நேரடியாகசொல்லாமல், வடமொழி ஒரு பிராமணாள் பாஷையில்லை. அதை தலித்துக்களும் பேசினார்கள்; படித்தார்கள். இலக்கியம் கூட படைத்தார்கள். வியாசர் மீனவப்பெண்ணை மனைவியாக ஏற்றவர், வால்மீகி வேடன் (ST) என்று வரலாற்றைக்காட்டி எனவே வடமொழி தமிழர்களால் எதிர்க்கப்படக்கூடாது. அதாவது வடமொழி வாரம் கொண்டாடப்படவேண்டும்.

    அம்பேத்கர் சொன்னார், ஜயகாந்தன் சொன்னார், வால்மீகி தலித்து நாகர் இளவரசி பேசினாள் என்பதற்காக ஏன் தமிழர்கள் வடமொழியை ஏற்க வேண்டும்? அதனால் அவர்களுக்குப்பலனென்ன? ஹிந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலை பார்க்க உதவும். வடமொழி பேசியா சந்தினி சவுக்கிலோ, கரோல் பாக்கிலோ, க்ராஃபோருட் மார்க்கெட்டிலோ வாங்க முடியும்? ஏன் படிக்கவேண்டும்?

    ஒன்றுக்கும் உதவா மொழியை அரவிந்தன் ஆதரிப்பதேன்?

    இதற்குப் பதில் கட்டுரையில் இல்லை. ஆனால் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

    பதில் ஏற்கனவே சொல்லி விட்டேன்: வடமொழி வைதீக இந்துமதத்தின் ஆணிவேர். அதை நீருற்றி வளர்க்க ஆசைப்படுகிறது மோதி அரசு. அதற்குத்தான் வடமொழிவாரம். இதை உணர்ந்தே திராவிடக்கட்சிகள் வடமொழி வாரத்தை எதிர்க்கிறார்கள். அந்த ஆணிவேரைப்பிடடுங்க முயற்சியோ இத்திராவிடக்கட்சிகள் செய்யும் எதிர்ப்பு என்ற் அச்சமே நேரடியாகச்சொல்லாமல், வடமொழியை நாமெல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்கிறார்.

    அவரை விடுவோம்; நீங்கள் சொல்லுங்கள்.

    1.வடமொழியே சொல்லித்தரா சிபிஎஸ்ஸீ பள்ளிகள் இந்தியா முழுவதும் உண்டு. அவர்கள் எல்லாரும் ஏன் கொண்டாட வேண்டும்? இது வடமொழிக்கு பிரச்சாமில்லையா?
    2. ஏன் அங்கு இரண்டாம் தாளாக இருக்கும் ஃப்ரென்சையோ, ஜர்மனையோ, தமிழையோ, வங்காளத்தையோ, மராட்டியையோ, தெலுங்கையோ, மலையாளத்தையோ, சிறப்பு வாரத்தில் கொண்டாடுங்கள் என சுற்றறிக்கை விட வில்லை மோதி?
    3. ஏன் வடமொழிக்கு மட்டும் தனி மரியாதை? தமிழோ, தெலுங்கோ எந்த விதத்தில் குறைந்துவிட்டது?
    4. தமிழர்கள் ஏன் வடமொழி வாரத்தை ஆதரிக்கவேண்டும்?

    பதில் சொல்லுங்கள்.

    These questions are for other supporters of Sanskrit like Geetha Sambasivam, Rama, J Venkat, Krishnakumar, Pandian. They may post their replies also.

  99. விவிலியத்தை தமிழிலே சொல்கிறார்களாம். என்ன தமிழ் பற்று//

    சாரங்கன்!

    தமிழில் அவர்கள் சொல்வதில்லை. படிக்கிறார்கள். ஓதுகிறார்கள். அவர்கள் வீடுகளில் எழுதித் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்தோர் வீடுகளில் சில குறிப்பிட்ட வாசங்கள் ஆங்கிலத்திலும் தொங்கும்.

    இதைச்சொல்லக்காரணம், கிட்டத்தட்ட சுவன்ப்பிரியன் சொன்னதுதான். அனைத்து மொழிகளுமே இறைவனால் படைக்கப்பட்டவை; எனவே வெறுக்கத்தகுந்தவையல்ல். எனவேதான், கிருத்துவரிம் இசுலாமியரும் அரபியையோ, ஆங்கிலத்தையோ தேவபாஷை எனப்தில்லை. வைதீக இந்துவான நீங்கள் மட்டும்தான் வடமொழியைத் தேவபாஷை என்றீர்கள். இங்கே காயத்திரிமந்திரந்தை தமிழில் எழுதினால் பலனில்லை என்றும் வடமொழி உச்சரிப்புக்கு சக்தி உண்டு என்றும் சொல்கிறீர்கள். தமிழ்க்கிருத்துவர்கள் உச்சரிப்புக்கோ, மொழிக்கோ தெய்வ சக்தி கொடுக்கவில்லை. எம்மொழியில் மனம் ஒன்றுமோ அம்மொழியில் விவிலியத்தை ஓதுகிறார்கள். தமிழருக்குத் தமிழ். அதே சமயம் பைபில் வாசகங்களுக்கு தெய்வச்சக்தி உண்டு என்று நம்புகிறார்கள். கவனிக்க உச்சரிப்புக்கன்று. மொழிக்கன்று.

    அவர்கள் விவிலியத்தில் ஏன் மணிப்பிரவாளம் என்பது உங்கள் கேள்வி. நல்ல அருமையான கேள்வி. என் சிறுவயதிலிருந்தே என்ன உறுத்திய வந்த கேள்வி. எவரிடமும் கேட்கவில்லை. நானேதான் யுகித்தேன்.

    விவிலியம் தமிழில் வெவ்வேறுவகையில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் ந்யூ அமெரிக்கன் பைபிள், மாடர்ன் பைபில், கிங் ஜேம்ஸ் வெர்சன் என்ற 17ம்நூற்றாண்டு பைபிள் என்று விதவிதமான மொழிபெயர்ப்புக்கள் இல்லை. தமிழில் ஒன்றே ஒன்றுதான். அதை மொழிபெயர்த்தவர் ஒரு இலங்கைத்தமிழர் என்று அறிகிறேன். பாதிரியார் இல்லை. இந்து. அவர்தான் மணிப்பிரவாளத்தைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார்.
    There may be some reasons for this which are mostly linguistic as I presently explain in the next post.

  100. I am very sorry to post this as it is irrelevant to the context of Aravindan’s essay. It is just an explanation to Sarangan. Before raising such queries, he will think twice, hereafter.

    I said ‘linguistic’

    பாமரர்களிடையே புழங்கும் மொழி; பண்டிதர்களிடையே புழங்கும் மொழி. அதாவது ஒரே மொழி இருவிதமாக இருவருக்கும்.

    இராபர்டு கால்டுவெல், தமிழர்கள் சங்ககாலத்துக்கு முன்பிருந்தே தமிழை இருவிதமாக பிரித்தே பார்த்தனர்; ஒன்று பேச்சு மொழி; மற்றொன்று இலக்கிய மொழி என்றார். அவர் சொன்ன பொருள் என்னவென்றால், சங்கப்பாடல்கள் என்கிறோம். அவற்றை புலவர்கள் இலக்கிய மொழி ஆர்வலருக்கும் இலக்கிய இரசனை உடைய்வருக்கும்தான் எழுதினார்கள். பாடினார்கள். பாமரமக்கள் படிக்கவில்லை. படிக்கவும் முடியாது. இன்றைய நிலையும் அதுதானே 🙂

    இப்படி ஆங்கிலத்திலும் உண்டு. தமிழில் இறைவனைப்பற்றி நூலென்றால் -பாடல்கள் அல்ல, விவிலியம் போன்று- அத்தமிழ் பாமரத்தமிழாக இருந்தால் அதன் ‘கவரும் தன்மை’ தனித்தன்மை இல்லாமல் போகும். மக்களை முதலில் மலைக்கவைக்க வேண்டும். அப்படியிருந்தால் மக்கள் தனிமதிப்பு தருவார். இறைப்பனுவல்களுக்கு அவ்சியமிது.

    இங்கே வைணவ உரைகாரகளையும் நினைவு கூறலாம். இவர்கள் கடுமையான மணிப்பிரவாளத்தில்தான் ‘படிகள்’எழுதினார்கள். படிகள் என்றால் ஆழவார் பாசுரங்களுக்கு விளக்கம். இதனைப்பற்றி, ஆராய்ச்சியாளர் சொல்வது, இவரக்ள் காலத்தில் ஜயினர்களும் எழுதினார்கள் மணிப்பிரவாளத்தில் அவர்கள் ம்தத்தைப்பற்றி, அதை மக்கள் வெகுவாக நினைத்தபடியாலேயே, அவர்களை மிஞ்ச இவர்களும் மணிப்பிரவாளத்தைத்தையே தேர்ந்தெடுத்தனர். சிவஞான போதம் எழுதியவரும் இப்படியே. சிவஞான போதத்தைப் படித்துப் புரிய எந்தத் தமிழராலும் முடியாது. அவ்வளவும் மணிப்பிரவாளம்; எழுதப்பட்ட எஞ்சிய தமிழும் கொடுந்தமிழ்.ன் மக்களை அண்டவிடாமல் செய்வதில் வைணவ ஆச்சாரியர்களையும் மிஞ்சியவர் இந்த சிவஞானபோதத்து ஆசிரியர். Please remember here, these erudite commentaros who were acharyas, were all great Tamil scholars also. They could have easily chosen Tamil.

    ஆங்கிலத்தில், Royal English. இதை வைத்துத்தான் ஆங்கிலச்சட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்றைய பெயர் லீகல் இங்கிலீஸ். விவிலியம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட போது இந்த வைணவ உரைகாரர்கள் செய்தது போல, அவர்களும் ஒரு பழங்காலத்து ஆங்கிலத்தில் எழுதினார். அதுதான் கிங் ஜேம்ஸ் வெர்சன். காரணம், மக்கள் புழங்கும் ஆங்கிலத்தில் இருந்தால் மக்கள் சீரியசாக எடுக்க மாட்டார்கள்.

    The same reason obtains here for Tamil version of the Bible. The style – Sanskritised Tamil – adopted by the Bible translator. He has, rightly or wrongly, thought it is better to imitate Tamil brahmins to attract people by striking with awe and wonder. People flock to temples to hear Sanskrit which they dont understand, and gave the language a special respect. The Bible Tamil used the same strategy.

    இசுலாமியர்கள் ஸ்டைல் வேற. பிராமணர்களின் சான்ஸ்கிரிட்டஸ்டு தமிழைக் காப்பியடிக்க மனமில்லை. சாரங்கனைப்போல பலர் கிண்டலடித்தால் என்று பயம். அவர்களும், பேசும்போது (மேடையில் மதப்பிர்சங்கம் பண்ணும்போது) மதததைப் பற்றி விளக்கங்கள் எழுதி வெளியிடும்போத், பேச்சுத்தமிழயோ, பாமரத்தமிழையும் விட்டார். செந்தமிழை எடுத்துக்கொண்டார். செந்தமிழ் என்றால் ப்ல்லுடைக்கும் பண்டிதர் தமிழன்று. வடமொழி கலக்கா தமிழ் மட்டுமே. இறைவன் மிகப்பெரியவன். எல்லாப்புகழும் இறைவனுக்கு – வேறுமாதிரியும் சொல்லலாம். இறைவன் எனபதை தெய்வமெனலாம். ஆனால் இறைவன் என்ற தூய தமிழ். இப்படி இசுலாம் போகிறது. பாராட்டுக்கள் இவர்களுக்கு மட்டும்.

    இந்துக்களுக்கும் கிருத்துவருக்கும் என்பாராட்டுக்கள் இல. In other words, the Muslims don’t want to cheat the people with clever use of language style, but by only meanings put in correct Tamil.

    இக்கூட்டத்திலிருந்து விலகி நின்றோர், கிட்டத்தட்ட இன்றைய இசுலாமியர்கள் போல – ஆழ்வார்கள் மட்டுமே.

    Mostly simple, simpler and simplest Tamil. Great service to Tamil people and their religion they happily rendered! That was why the brahmins did not accept Nammazhvaar poems. ஜே வெங்கட்டுக்காக இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

  101. //நான் முன்பு எழுதியதையே திரும்பச் சொல்கிறேன். இந்து சமயத்தை அறிய தமிழ், வடமொழி என்ற இரு கண்கள் தேவை. நீங்கள் வடமொழியைக் கற்காவிட்டாலும் போகிறது. தூற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

    நான் எங்கே வடமொழியை தூற்றினேன். தமிழ் மீதான வடமொழியின் ஆதிக்கத்தை தான் நான் எதிர்ப்பது. வடமொழி வடமொழியாய் இருப்பதில் தவறில்லை. ஆனால் வலிந்து அதன் ஆளுமையை தமிழின் மீது திணிக்குமானால், அதை என்ன செய்யலாம்? சமற்கருத்த வாரம் கொண்டாட வேண்டும் அதன் மூலம் செத்துப்போன வடமொழியை உயிர்பிக்க வேண்டும் என்கிற மட்டிலும் கூறி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மோடி அரசு வெளியிட்டிருக்கும் சுற்றறிகையில் கூறி இருக்கும் விஷமமான கருத்தினை பாருங்கள் ” வடமொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம், இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமாம்”. அரவிந்தன் நீலக்கண்டன் தன்னுடைய கட்டுரையில் ஏன் இந்த கருத்தை வெளியிடாமல் மறைத்தார் என்று தெரியவில்லை. தமிழும் தற்சமயம் இந்திய மொழி என்கிற பொழுது சமற்க்ருதம் தமிழ் மொழியின் தாய் என்று கூறினால் இந்த கேவலத்தை எதிர்த்து தமிழர்கள் போராட மாட்டார்களா. ஒரு வேளை சம்ம்பந்த பெருமான் இப்போது மட்டும் இருந்திருந்தால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட மோடியின் தலைமையிலான அரசை அறம் பாடியே அழித்திருப்பார்..

    //எனவே, திருமறையை நமக்கு ஈந்துவிட்டுச் சென்ற திருஞான சம்பந்தரே வடமொழியில் உள்ள வேதங்களையும், சைவ ஆகமகங்களையும் தமிழ்நாட்டில் சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.//

    அது அவரின் பெருந்தன்மையான குணம். ஒரு வேளை இப்போது நடப்பது போன்று வடமொழியை வைத்து இது போன்ற அய்யோக்கிய தனங்கள் அன்று நடந்திருந்தால் நிச்சயம் அவரின் நிலைப்பாடே வேறாக இருந்திருக்கும்.

  102. திரு அரிசோனன்!

    //எல்லை மீறவேண்டாம். குதர்க்கமான, திசைதிருப்பும் பதிலையும் தவிர்க்கவும்.
    வணக்கம். அமைதி ஓங்குக.//

    குர்ஆனில் இந்து மக்களைப் பற்றியோ அவர்களின் பிறப்பைப்பற்றியோ கேவலமாக எங்கும் எழுதப்படவில்லை. மனு ஸ்மிருதியில் உங்களை உயர்வாக்கி மட்டும் சொல்லியிருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் உங்களை உயர்வாக்கி மற்ற மூன்று வர்ணத்தாரையும் இழிவாக சொல்வது உங்களுக்கு பிரச்னையாக தெரியவில்லையா? அல்லது பிராமிண் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டால் பிரச்னையே இல்லையே. மேலும் எனது முன்னோர்கள் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியதால் அந்த இந்து மதத்தின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச எனக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறேன்.

    இன்று வரை உங்கள் வேதங்களையோ அல்லது உங்கள் கடவுள்களையோ எந்த இடத்திலும் தரக்குறைவாக விமரிசித்ததும் இல்லை. இஸ்லாம் எனக்கு அதனை போதிக்கவும் இல்லை. சாரங்கும், ஹானஸ்ட் மேனும் தொடர்ந்து கிண்டலாகவும் கேலியாகவும் பின்னுட்டங்களை இட்டாலும் நான் அமைதியே காக்கிறேன். உங்களைப் போன்றவர்களை மதிக்கவும் செய்கிறேன். அது தொடரும்.

  103. பெரியசாமி

    ப்ராக்ருதம் என்ன பஞ்சாபி பாஷையா. அது சமஸ்க்ருதத்தின் ஒரு திரிபு. மீனவ பெண் ப்ராக்ருதம் பேசினது அவலக்கு எது தெரியுமோ அதை தான். இப்பொழுது கூட மராட்டியை மெல்ல பேசினால் சமஸ்க்ருதம் அறிந்த எவரும் புரிந்து கொள்ள முடியும். அந்த காலத்தில் சமஸ்க்ருதம் படிக்க தடை யார் விதித்தார் எங்கு உள்ளது என்று ஒரு சான்று தர இயலுமா. இதற்கு மாற்றாக தான் சான்று நிறைய இருக்கு. ராஜ ராஜ சோழன் கல்வெட்டில், தச்சர்களுக்கான பாட திட்டம் என்ன என்பதை குறிப்பிட்டு, தமிழ், சமக்ஸ்ருதம், கணிதம், வானியல், மற்றும் தச்சு தொழில் என்று குறிப்பீடு உள்ளது.

    சமஸ்க்ருதத்தை யார் திணித்தார்கள். இது வெறும் கழக மனோபாவம். CBSE பள்ளிகளில், தமிழ், ஹிந்தி, சமஸ்க்ருதம் ஆங்கலம் என்ற நான்கு மொழிகளை பயிற்றுவிக்கிறார்கள். இதில் ஆங்கிலம் கட்டாயம் படிக்கவேண்டும். ஆங்கிலம் தான் திணிக்கப் படுகிறது. மூன்றாவது மொழியாக சமஸ்க்ருதாமோ ஹிந்தியோ படிக்கலாம். நீங்கள் வேண்டுமானால் போராடி இதற்க்கு பதில் அங்கே மாண்டரின் பாஷை சேர்த்து விடுங்கள்.
    திணிக்கப்படுவது சமஸ்க்ருதம் அல்ல. ஆங்கிலமே.

    நீங்கள் கேட்பதை போல பல அறிவு ஜீவிகள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா. தமிழ் எதற்கு நான் படிக்கணும். நானோ அறிவியல் பயின்று ஜி.ஆர். இ எழுதி டோபில் எழுதி அமெரிக்காவுக்கு ஜோய்யின்னு பரக்கபோறேன் அங்க ஆங்கிலம் தான் அதனால் நான் ஆங்கிலம் மட்டுமே படிக்கிறேனே. தமிழ் நாட்டில் நான் பிறந்ததால் எதற்கு தமிழ் படிக்க வேண்டும் என்று மக்காலே புத்திரர்கள் நிறைய பேர் கேட்கிறார்கள். விசயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

  104. பாலா சுந்தரம்

    மறுபடியும் பிதற்றல்கள்.

    ஆச்சார்யர்கள் வியாக்யானம் செய்ததது தமிழ் மறையின் அர்த்த விசேஷங்கள் உபநிஷ்த்திர்க்கு ஒத்தது என்று காட்டுவதற்கு. தமிழிலே இருக்கும் பாட்டுக்கு தமிழ் விளக்கம் எதற்கு. அப்படி உபநிஷத்தை பற்றி பேசவேண்டுமானால் மணிப்ரவாளம் தேவை படுகிறது. உபநிஷத்தின் பல பொருள்களை தமிழ் படுத்த முடியாது. உதாரணம் சமானாதி கரணம் என்ற ஒரு சொல் இதை தமிழ் படுத்துங்கள் பார்க்கலாம்.

    சுவிசேஷ கூட்டங்களில் தூய தமிழை சொல்லாமல் எதற்கு சமஸ்க்ருத படங்களின் பயன் பாடு என்று கேட்டால் ஏதோ உளறுகிறீர்கள்.

    நம்மாழ்வாரை தலை மேல் வைத்து கொண்டாடுபவர்கள் பிராமணர்கள் தான். அவரது பாதமாக அறியப்படுபவர் ராமானுஜர் (ஒரு பெரிய ப்ராஹ்மின் சார் இவர்). ஆழ்வாரின் மாற்றொரு பாதமாக அறியப்படுபவர் மதுர கவியார் ஐவரும் ஒரு ப்ராஹ்மின் சார்.

    உங்களது நோக்கம் என்ன பார்பனர்களை எப்படியாது கண்டபடி வெய்ய வேண்டும். இதற்கு தடையாயிருப்பது வைணவ ஆசாரியர்கள் தான். உண்டனே அவர்களை த்வேஷித்து அச்சு பிச்சு வார்த்தைகள் நான்கு ஏழு வேண்டும். அப்போதானே வயிற்று புண் ஆறும் உமக்கு.

    சார் முஸ்லிமுக்கு மொழி அறிவு கம்மி சார் அதான் சார் பீ ஜே ஏதோ மாதிரி பேசுறார். அவர் வழக்கில் உள்ள தமிழா பேசுறார். அத்தனையும் காயல்பட்டின பரிபாஷை. உண்மையாக பார்த்தால் தமிழை கொச்சிய படுத்தி பேசுகிறார் என்று சொல்ல வேண்டும், அது உங்களுக்கு இனிக்கிதோ.

    //
    1.வடமொழியே சொல்லித்தரா சிபிஎஸ்ஸீ பள்ளிகள் இந்தியா முழுவதும் உண்டு. அவர்கள் எல்லாரும் ஏன் கொண்டாட வேண்டும்? இது வடமொழிக்கு பிரச்சாமில்லையா?
    //
    இது கேள்வியா. எதற்கு ஆங்கிலம் கட்டாய மொழியாக எல்லா பள்ளிகளிலும் உள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரசாரம் இல்லையா.

    //
    2. ஏன் அங்கு இரண்டாம் தாளாக இருக்கும் ஃப்ரென்சையோ, ஜர்மனையோ, தமிழையோ, வங்காளத்தையோ, மராட்டியையோ, தெலுங்கையோ, மலையாளத்தையோ, சிறப்பு வாரத்தில் கொண்டாடுங்கள் என சுற்றறிக்கை விட வில்லை மோதி?
    //
    இது அந்தந்த பிராந்திய மாநிலங்கள் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து கொள்ளலாம். மத்திய அரசின் செயல் பாடுகள் பாரத்தை ஒருமை படுத்துவதாக இருக்க வேண்டும். அதை சமக்ஸ்ருதம் சாதிக்கும். இதை பாரத்தின் பல தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் (மக்களும் கூட). சில மாக்கள் தான் சவுண்டு விடுகிறார்கள்.

    //3. ஏன் வடமொழிக்கு மட்டும் தனி மரியாதை? தமிழோ, தெலுங்கோ எந்த விதத்தில் குறைந்துவிட்டது?
    //
    எவ்விதத்திலும் குறைவில்லை. தமிழ் மாநாடு நடத்த கூட தான் மத்திய அரசு காசு கொடுக்கிறது.
    அந்த அந்த பிராந்திய மொழியையும் கட்டாயமாக அவ்வப் பிராந்திய CBSE கல்லூரிகளில் படித்தே தீர வேண்டும்.
    சமஸ்க்ருத வார கொண்டாட்டம் என்பது ஒரு initiative. நீங்கள் கேட்பது எப்படி என்றால் அம்மா காண்டீனில் எதற்கு இட்லி போடுகிறார்கள் இடியாப்பத்திற்கு என்ன கேடு. இட்லி தமிழ் ஹிந்துவின் உணவு. ஏன் பிரியாணி போடா வேண்டியது தானே என்பது போல இருக்கு.

    //
    4. தமிழர்கள் ஏன் வடமொழி வாரத்தை ஆதரிக்கவேண்டும்?
    //
    ஆதரிக்க வேண்டும் என்று யாரவது அறிக்கை விட்டார்களா. தமிழர்கள் ஏற்கனவே சமஸ்க்ருதத்தை ஆதரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். despite galdwel and mccaulay. despite Kazhagams.

    தமிழாக CBSE பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சமஸ்க்ருதத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். படிப்பது மாணவர்கள், காசு கொடுப்பது பெற்றோர்கள். சரியா.

    மத்திய அரசு, சமஸ்க்ருதத்தை பற்றி பாரதத்தை பற்றி சரியான விழிப்புணர்வு ஏற்பட இதை செய்கிறது. சமஸ்க்ருதம் பயிலாத மாணவனை வலுக்கட்டாயமாக சமஸ்க்ருதத்தில் சேர்ப்பிக்க முயற்சி செய்ய வில்லையே.

    இது பாரத்தை உண்மையிலேயே ஒருமை படுத்தும் முயற்சி. உங்கள்ளுக்க் வயிறு பற்றி எரிகிறது, தமிழனும் விழித்திடுவானோ. நாம் அப்புறம் எப்படி அம்மாவாசை ஜபக் கூட்டம் நடத்தி காசு பார்ப்பது. அல்லாஹு அக்பர் சொல்ல, குண்டு வைக்க எப்படி ஆள் பிடிப்பது. கஷ்டம் தான் போங்கள்.

    ஹிந்துக்கள் சமஸ்க்ருதத்தை தேவ பாஷை என்பது அது திவ்யமான பாஷை என்பதால் தான். தேவர்கள் பேசும் பாஷை தேவ பாஷை. அது எல்லா மனிதர்கின் பாஷை கூடத்தான். இந்த புரட்டு பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்து போந்தது ஆங்கிலர்கள் தான்.

    சரி ஹீப்ரு லத்தீன் கதை என்ன. ஆங்கிலம் தேவ பாஷை என்று எதற்கு எவனேனும் சொல்ல வேண்டும். ஹீப்ருவை தேவ பாஷை என்று தானே அலும்புகிரீர்கள்.
    அராபிய மொழியை பற்றி ஸல் அவர்களின் அலம்பல் உங்களுக்கு தெரியாது. இந்த வாதத்தை கை விடும்.

    //ஒன்றுக்கும் உதவா மொழியை அரவிந்தன் ஆதரிப்பதேன்//
    இதை சொல்ல உமக்கென்ன தகுதி இருக்கு. இதே வாக்கில் போனால், தமிழ் படிப்பதாலோ தெலுங்கு படிப்பதாலோ என்ன பயன் இருக்கு. ஆங்கிலம் படித்தால் உலகெங்கும் வேலை. கரோல் பாகில் காபி கடைக்காரன் கூட ஆங்கிலம் பேசுகிறான்.

    மொழியை வர்த்தக நோக்கில் பார்ப்பவன் கேவலமாணன் தான். இதற்கு தான் எலிசரை பற்றி படியுங்கள் என்று சொன்னேன். மொழி நம்மை விட பெரியது. அதை வணங்கி ஆதரிக்க வேண்டும்.
    காசு பண்ண மொழி என்பது மேற்கத்திய சிந்தனை. எல்லா வற்றையும் ஒரு கருவியாக மட்டுமே காணும் உருப்படாத எண்ணம் அது. அதன் சாதக பாதகங்களுக்குள் இப்போ புக வேண்டாம்.

    “சம்ஸ்ரித் பாரத் கா ஆத்மா ஹை” சொன்னது மண் மோகன் சிங்கு. இது உண்மையும். உங்கள் பதில்களில் எத்தனை எத்தனை சமஸ்க்ருத சொற்கள் உள்ளன என்று ஒரு தபா கணக்கு கூட்டி பாருங்கள்.
    சங்கம், காரணம், இலக்கணம், மனம், படிப்பு, வாசம், வாரம்,

    என்ன தான் நீங்கள் தலை கீழாக நின்றாலும். வட மொழி வாரம் ஏன் கூடாது என்று அறிவு பூர்வமான வாதத்தை முன் வைக்கவே முடியாது. ஹை கோர்ட்டும் ஒருவர் போட்ட மனுவை தள்ளு படி செய்தாகிவிட்டது.

  105. //நீங்கள் வடமொழியைக் கற்காவிட்டாலும் போகிறது. தூற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்//

    வடமொழியை இங்கு எவரும் தூற்றவில்லை. சுவனப்பிரியன் சொன்னது போல அனைத்து மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவை. எனவே தூற்ற முடியாது. தமிழ் தாழ்ந்தது என்று ராமா என்பவர்தான் இங்கு எழுதுகிறார். இக்கட்டுரையோ தமிழப்பற்றி ஒரு வரி சொல்லாமல் வடமொழியைத தமிழர்கள் கற்கவேண்டும் என வரலாற்று ஆதாரங்களைச்சொல்லி சிபாரிசு செய்கிறது. தமிழைக் கற்போரே தமிழரில் அருகி நிலைமை மோசமாக இருக்க, இன்னொரு மொழி, அதுவும் அன்றாட வாழ்க்கைக்குப் பலனில்லா மொழியை ஆதரிக்கிறார்கள் இவர்கள். ஏன் என்று கேட்டவரெல்லாம் தி.க காரர்கள் எனச் சொல்லி வாயை அடைக்க முயல்கிறார்கள்.

    தமிழருக்குத் தமிழ் தாய்மொழி. அதாவது தாயைப்போன்றது. தமிழை வைத்தே தமிழருக்கு அடையாளம். தமிழ்நாட்டை வைத்தன்று. உலகமெங்குமுள்ள தமிழர், தாம் வாழும் நாட்டை வைத்து தம்மைத் தமிழர் எனவழைத்துக்கொள்ளவில்லை. தம் தாய்மொழியை வைத்தே.

    ஒருவனுக்கோ ஒருத்திக்கோ, ஒரே ஒரு தாய்தான் இருக்கமுடியும். அந்தத்தாய், எவ்வளவுதான் சமூகத்தில் இழிவு செய்யப்பட்டாலும், அவள் பிள்ளைக்கு சுபதேவதை. இன்னொரு தாயை எடுத்து தன் தாயைவிட மேலாக எவருமே வைக்கமாட்டார். தன் தாயே மேல். மற்ற பெண்கள் எவ்வளவுதான் நல்லோராயின், தன் தாய்க்கு ஈடாக மாட்டார். வானத்தில் ஒரு நிலவுதான் இருக்க முடியும். மற்றவையெல்லாம் நட்சத்திரங்களே. தாயிற்சிறந்ததொரு கோயிலில்லையென‌ தெய்வத்தைவிட மேலாக வைத்தார் பழந்தமிழர்.

    இப்படி பார்த்தால், எப்படி வடமொழியையும் தமிழையும் இரு கண்களாக வைக்கமுடியும் தமிழரால்? இரு கண்கள் என்றால் இரண்டும் ஒரேயிடத்திலல்லா? வடமொழியும் தமிழும் இருகண்கள் என்று சொல்லிக்கொண்டே எப்படி நாக்கூசாமல் தமிழ் என் தாய்மொழி என்று சொல்ல முடிகிறது உங்களால்?

    உங்களுக்கு அடையாளம் கொடுத்த தாயை, உங்களுக்குப் பாலூட்டியத் தாயை இப்படி இழிவு செய்யலாமா ? அடித்துச்சொல்வேன்: தமிழர் தமிழுக்கு முதல்மரியாதை செய்துவிட்டு பிறமொழிகளுக்குப் போகலாம். கட்டுரையாளருக்குச் சொல்வேன்: தமிழ்நாட்டில் தமிழுக்குத்தான் முதலிடம். ஒருவர்தான் அமரமுடியும். பங்குபோட முடியாது.

    வடமொழியே தெரியாமல் அம்மொழி தமிழைவிட உயர்ந்தது என்று சொன்னவர் (ராமா) மட்டும் தொட்ர்ந்து படிக்கவும்.

    பாரதியார் பலமொழிகள் தெரிந்தவர். ஆங்கிலம், தாய்மொழி தமிழ், ஹிந்தி, ஃப்ரெஞ்சு. என்று. என்னைவிட ஆங்கிலப்பிரியர். ஷெல்லியின் கட்டுரைத் தொகுப்பை தன் கோட்டுப்பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே கங்கைபடித்துறையில் சுற்றியவர். அவ்வப்போது மதுவை உறிஞ்சுவது போல, அக்கவிதைகளைப் படித்து உண்ர்ச்சிவேகம் கொள்வார். ஷெல்லிதாசன் எனவும் தன் பெயரை மாற்றிக்கொண்டவர். வடமொழியில் தேர்ச்சி பெற்றவ்ர். சென்னை பல்கலைக்கழகம் வடமொழி தேர்வுத்தாளில் ஏகப்பட்ட பிழைகள் போட்டு மாணாக்கருக்கு வழங்கியதை, ஒவ்வொரு பிழையையும் விளக்கி, நீண்ட கண்டன கட்டுரை வரைந்தவர். இப்படிப்பட்டவர் சொல்கிறார்:

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதானது எங்கும் காணவில்லை.

    என்ன இவர் உளறுகிறாரோ என நாம் நினைத்துவிடக்கூடாதென்று:

    இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை

    என்று நம்மைக் குட்டுகிறார்.

    தன் இரண்டாம் பெண்ணுக்கு இவர் சொன்னது. அவளுக்காகத்தான் அந்த பாட்டையே எழுதினார். ஏன் எப்போது எனப்து ஒரு துயரக்கதை. இப்போது வேண்டாம். வடமொழி புலமை பெற்ற பாரதி, தன் பாப்பாவுக்கு சொல்கிறார்:

    ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

    எனச்சொல்லி, அதை எப்படி படிக்கவேண்டுமெனவும் அறிவுறுத்துகிறார்:

    அதைத் தொழுது வணங்கி படிக்க வேண்டும் பாப்பா!

    இதே போல வடமொழிப்புலமை மிக்க கம்பன் சொல்கிறான்:

    //தன்னேரில்லாத் தமிழ்//

    மிகையோ நகையோ, உங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம், பாரதியாரும், கம்பனும் வடமொழிப்புலமை வாய்ந்தவர்கள். தமிழுக்கு ஈடாக எம்மொழியையும் வைத்துப்போற்றவில்லை. தமிழ்த்தாய் ஈன்றெடுத்த நல்ல குழந்தைகள். பாலூட்டிய தாயை எட்டி உதைக்கா பிள்ளைகள்.

  106. மதிப்பிற்குரிய. தாயுமானவன் அவர்களுக்கு……

    தாங்கள் கதிரவனுக்கு மிக அருமையாகவே பதில் அளித்துள்ளீர்கள். அதில் எவ்வித ஐயமும் தங்களுக்கு வேண்டாம். அவர் மனு தர்மம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டதற்கு தக்க பதிலை தாங்கள் அளித்து விட்டீர்கள். இதற்க்கு மேல் மனுதர்மத்தின் புனிதத்தை பற்றி அது சமுதாயத்திற்கு கூற வரும் நல்ல விடயங்களையும் க்ருஷ்ண குமார் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்று கூறட்டுமே.

    மற்ற எவரை காட்டிலும் தங்களின் பதில்களில் வடமொழியின் கலப்பு மிக மிக சொற்பமே. தாங்கள் “அர்தமற்ற கோஷத்தை” கூறுவதாக க்ருஷ்ண குமார் கூறுவதெல்லாம் அர்தமற்ற உளறல்களே, உண்மையான மதியீனர் அவர்தான். அதை கண்டு கொள்ள வேண்டாம். உபநிடதத்தில் மாட்டிறைச்சி உண்டால் அறிவுள்ள பிள்ளை பிறக்கும் என்கிற உண்மையை போட்டுடைத்ததற்க்கு நன்றி. தங்கள் சாத்திர நூல்களிலேயே கோ மாமிசத்தை பற்றி கூறி இருப்பதை மறைத்து மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக, எதிராக என்பதை விட உண்பதை பாவமாக பேசும் ஆர்.எஸ்.எஸ் போன்ற மோசடி பேர்வழிகளை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.

  107. ////தன்னேரில்லாத் தமிழ்////

    The following is not relevant to the topic. Excuse me.

    இஃதொரு வெண்பாவின் கடைசி வரி. ஆசிரியர் எவரென்று போடாமல் மொட்டையாகத்தான் கிடைத்தது. இங்கு முதல் பின்னூட்டக்காரர் சொன்னது போல ஒரு புரட்சிப்புலியோ, அல்லது கட்டுரையாளார் சொன்னது போல, திராவிடக்குஞ்சுகளில் ஒன்றோ என நினைத்துவிட்டேன். பின்னர் இது கமப்னதான் எனக்கேட்டறிந்தவுடன் மலைத்துவிட்டேன். முதலிலேயே என் மூளை வேலைசெய்திருக்க வேண்டும் அந்த முதல் மூன்றடிகளைப்படித்தவுடன். அவ்வளவு சுவையானவை. ஒரு extra-ordinary கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டுமென.

    இதே போல இன்னொரு நிகழ்ச்சி:

    ஒரு பக்கோடா பொட்டலத்தாளில் இவ்வரிகளைப்படித்தேன்:

    இருந்தமிழே உன்னால் இருந்தேன். இமையோர்
    விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

    ஒரு புரட்சிப்புலியின் உளறல் இது என்று நினைக்கத்தோன்றியது. ஆனால் வடமொழி படிக்காமல், ஆங்கிலமும் படிக்காமல், தமிழே தன் வாழ்க்கை என தன் வாணாளைச் சிற்ப்பாகத் தமிழோடு கழித்த உ வே சா என்னைப்போல சின்னப்புத்திக்காரன்று. அவருக்கு இவ்வரிகளைப்படித்தவுடன், இதை எழுதியவனுக்கு இருக்கும் தமிழ்க்காதல் அலாதியானது. அவனின் பிறவரிகள் கிடைக்குமா என்றலைய,

    அடடே ! கிடைத்தே விட்டது. மதுரையில். அதுவும் எங்கே மதுரை அக்கிரஹாரத்தெருவில் (இன்னும் அதே பெயர்தான்).

    இது விடுதூது என்ற சிற்றிலக்கியம். அன்னத்தை விடுவார்கள். கிளியை விடுவார்கள். காளிதாசன் மேகத்தை விடுவார்.

    நம் ஆளோ, தமிழின் மீது தாளாக்காதல் மட்டுமன்று; தமிழ் தன்னைக் கைவிடாது என்ற் நம்பிக்கையோடு, தமிழையே தூதாக விடுகிறார். அவர் காதலனிடம். அக்காதலன் சொக்கநாதர் (அவருக்கு ஏற்கனவே கலியாணம் மீனாட்சியோடு ஆகிவிட்டது எனத் தெரிந்தும் அதாவது கள்ளக்காதல் :-))

    இனி தொடர்ந்து இத்தளத்து வடமொழிக்காதலர்கள் படிக்கவும்.

    தமிழ் விடுதூது என்ற இச்சிற்றிலக்கியத்தின் ஆசிரியர் யார்? அவர் பெயரைச்சொல்லவில்லை. நூலை முழுமையும் படித்தால், அவர் மீனாட்சி கோயில் குருக்களில் ஒருவர்தான். இன்னூல் அக்கோயிலைப்பற்றியும் பூஜை விடயங்களைப்பற்றியும் பகர்வதால். அக்கால குருக்கள் (14ம் நூற்றாண்டு) வடமொழிப்புலமை வாய்ந்தவர்கள். அவர்களுள்ளே ஒரு தமிழ்க்காதலன். வியப்பன்றோ!

    தாயுமானவன், இந்த நூலைத் தேடிப்படித்து தமிழ்.ஹிந்து வாசகருக்காக ஒரு கட்டுரை வரையவும். இந்நூல் சொக்கநாதரை வணங்குவோருக்காக எழுதப்பட்டது எனவே தாயுமானவன் பொருத்தமானவர். நான் படித்தேன், இரசித்தேன். ஆனால் எழுதுவதில்லை. எப்படி அரங்கனையில்லை; அரனைத்தான் என்று அவர் சொன்னாரோ, அப்படி அரனையில்லை; அரங்கனைத்தான் எனபது என்கட்சியாதலால். மன்னிக்கவும்.

  108. இப்போதைய பாலா

    //
    இசுலாத்திலும் சில பிடிக்கா விடயங்களைவிட்டுவிட்டு மற்றவைகளைப்பிடித்து இசுலாமியராகி விடலாமே சாரங்கன்?
    //

    உங்களுக்கு வேண்டுமானால் மதம் என்பது ஒரு வசதிக்காக சட்டை மாற்றுவது போல் இருக்குலாம். நாங்கெல்லாம் கொஞ்சம் சீரியசான ஆட்கள். சரியா.

    செமேடிக் மதங்கள் ஒரு மிருகம் போன்ற ஜந்துவை கொஞ்சம் எப்படி மனிதனாக மாற்றலாம் என்று முயற்சி செய்கின்றன. அதற்காக தான் இயேசு மீது அவ்வளவு இட்டுக் கட்டுகிறீர்கள், நீங்கள் இட்டுக்கட்டும் அவ்வளவும் பாரத்தில் ஒரு சாதாரண மனிதனும் அறிந்து பேணி வருவது. இங்கே அதற்கு அவசியம் இல்லை. அதனால் தான் நீங்கள் நேர் வழியில் பிரசாரம் செய்யாமல், தூஷனை செய்கிறீர்கள் அல்லது ஒரு மனிதனின் கஷ்ட காலத்தை பார்த்து அதை பயன் படுத்தி மதம் மாற்றுகிறீர்கள். லாட்டரி சீட்டு வாங்கு கொட்டும் என்பது போல, மதம் மாறும் துக்கம் சந்தோஷமா மாறும் என்கிறீர்கள். இத செய்ய திராணி இல்லாத சிலர் குண்டு வைத்து, கற்பழித்து பிரியாணி கொடுத்து மதம் மாற்றுகிறார்கள்.

    இஸ்லாத்தில் சில பிடிக்கா விஷயம் உள்ளன என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. பிரச்சனையை என்னான்னா கேவலமான விஷயங்களை நீக்கினால் தேறுவது நாளே பக்கம். அதுவும் இந்தியாவில் பாமரனும் அறியும் விஷயம்.

    ஒரு வெள்ளி கிழமை தொழுகைக்கு போய் வருபவன் முகம் கோவத்தில் பொங்குகிறது, வெறியுடன் தெரிகிறது, ஒரு ஞாயிற்று கிழமை கூட்டத்திற்கு போய் வருபவனின் முகம் பேய் அறைந்தது போல் செத்துக்கிடக்கிறது.

    என்னைக்கு வேன்ம்னாலும் கோவிலுக்கு போய் வரும் ஒருவனின் முகத்தில் ஆனந்த அலை தெரிகிறது.

    வெறிகொண்டவனுக்கு அரிவாள் ரத்தம். பேய் அறைந்தவனுக்கு கண்டேதேல்லாம் பயம். அனந்தம் கொண்டவனுக்கு அமைதி.

    //
    தலித்து பையனென்றால், உங்கள் ஜாதிப்பெண் அவனோடு ஓடத்தான் செய்ய வேண்டும். ஏனெனில், கட்டிக்கொடுக்கமாட்டீர்கள். வன்னியரென்றாலோ, தேவரென்றாலோ, அடித்து கொன்று விடுவார்கள். நீங்கள் பரவாயில்லை. ரொம்ப மனிதாபிமானம். அடிக்கமாட்டீர்.
    //
    christaim brahmins என்று ஒரு web site கூட இருக்கு போல. எங்க ஊர்ல கண்ணாலம் கட்டுவது புள்ள பெத்துக்க மட்டும் இல்ல. அத சீரியாசாக பார்க்கிறோம். இரு வரும் சேர்ந்து கர்மங்களை, கடமைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சம்ப்ரதாயம் இருக்கும். அதை சரி வர செய்ய ஒத்த ஜாதியில் திருமணம் செய்கிறார்கள். ஒரே தட்டில் இருக்கும் இரு வேறு சாதியினர் கூட மாற்று திருமணம் செய்வதில்லை என்பதற்கு இதுவே காரணம். ஆனால் இப்போதெல்லாம் கடமையாற்ற வேண்டும் என்று பலர் திருமணம் செய்வதில்லை. அதனால் இந்த கட்டுப்பாடு இப்பொழுது அவசியமற்றது.

    எத்தனை சவுதி ஆண்கள் இந்திய முஸ்லிமு பெண்களை உண்மையாக கல்யாணம் செய்வார்கள். எத்தனை ஜூ ஆண்கள் வேறு மத பெண்களை கண்ணாலம் கட்டுவான்.

    கிறித்தவ பெண்ணை கண்ணாலம் கட்ட எதற்கு மதம் மாற சொல்கிறீர்கள். முஸ்லிம்கள் கண்ணாலம் பண்ண ஏன் மதம் மாற வைக்கிறார்கள்.

    இதெல்லாம் சமூக வழக்குகள், இதை காலம் மற்றும், இதை வைத்துக் கொண்டு எதையோ எதனுடனோ கஷ்டப்பட்டு முடிச்சு போடுகிறீர்கள்.

    மேலும் எதோ தமிழக கழக கண்மணிகள் உத்தமர்கள் போல எதையோ தடுக்கிறார்களாம். அவர்கள் எதற்காக வாழ்கிறார்கள் என்பது இப்பொழுது உலக பிரசித்தம். அவுக c.i.t காலனி வீடலா சீக்ரெட்டா ஒரு யாக சாலை மட்டும் வைப்பார்கள். அவுக பத்தினிங்க கோவிலுக்கு போய் சாமி தமிழ்ல அர்ச்சனை வேண்டாம் நீங்க எப்போதும் செய்யற படியே செய்யுங்க என்பார்கள்.
    போயும் போயும் யார கூட்டணி சேர்கிறீர்கள் பார்த்தீர்களா. ஹிந்துக்கள் அனைவரும் அம்மாவுக்கு ஒட்டு என்றால் அம்மா உடனே அந்தர் பல்டி அடித்து சமஸ்க்ருத மாதமே கொண்டாடுவார்கள். இன்றைக்கு இஸ்லாமிய ஒட்டு வேண்டும், கிறிஸ்தவ ஒட்டு வேண்டும் அதற்காக ஒரு சால்ஜாப்பு கடிதம். ஆனால் மண்ணை கவ்வியாகிவிட்டது. இந்த போராட்டம் தமிழ்நாட்டில் எடுபடவே இல்லை. ரெம்ப பாவம்.

    அரவிந்தனின் இந்த கட்டுரை சமஸ்க்ருத வாரம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியதல்ல. அதல் அவருக்கு சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை, சில விஷக் கிருமிகள் இதை எதிர்த்து டுஷ்ப்ரசாரம் செய்யும். அதை எதிர்கொள்ள ஹிந்துக்கள் தக்க விதமாக தங்களை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

  109. “வடமொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம், இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமாம்” என்கிறது மோடியின் அறிக்கை ஆனால் அவரது ‘ராஜகுரு’ சமக்கிருதவாதி சோ ராமசாமி என்னடாவென்றால் சமக்கிருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம். இந்த மொழிக்கு ஒரு சிறப்புச் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு யாரோ ஸம்ஸ்க்ருத வாரம் கொண்டாடும் யோசனையை முன் வைத்திருக்கிறார்கள்” என்கிறார். சமஸ்கிருதம் சமைக்கப்பட்ட கிருதம், அதாவது உருவாக்கப்பட்ட மொழி என்றும் கூறுகின்றனர். வேறு மொழிகளிலிருந்து, குறிப்பாக தமிழிலிருந்து அதிகளவு வேர்ச்சொற்களை சொற்களை இரவல் வாங்கி உருவாக்கிய Refined மொழி தான் தமிழ் என்றும் பல தமிழர்கள் வாதாடுகின்றனர். “நன்றாகச் செய்யப்பட்ட மொழி” என்று சோ ராமசாமி கூறுவதன் படி பார்த்தால் சமஸ்கிருதம் original language அல்ல, அது ஒரு derivative language என்பது தெளிவாகிறது. ஆகவே உருவாக்கப்பட்ட மொழி எப்படி மற்ற மொழிகளுக்கெல்லாம் தாயாக இருக்க முடியும் என்பதை அறிக்கையை வெளியிட்டவர்கள் தான் விளக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் வடமொழியை வளர்த்தவர்கள் தமிழர்களும், தமிழ் மன்னர்களும் தான். அக்காலத்தில் சமக்கிருதத்தைத் உயர்வானதென்று கூறி தமிழை யாரும் இழிவுபடுத்தவில்லை. ஆனால் இன்று பல சமக்கிருதவாதிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழை இழிவுபடுத்துகிறார்கள், தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை எதிர்க்கிறார்கள். அதனால் தான் வடமொழியை எதிர்க்கும் நிலைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தள்ளப்பட்டார்கள். ஆனால் இலங்கையில் தமிழுக்கு சமவுரிமை வேண்டுமென்பதற்காக போரிட்டு தமதுயிர், உடமை எல்லாவற்றையும் இழந்த ஈழத்தமிழர்களிடம், தமிழ்நாட்டைப் போல் சமக்கிருத எதிர்ப்புக் கிடையாது அதற்குக் காரணம், இலங்கையில் சமக்கிருதவாதிகளும் கிடையாது, அங்குள்ள பார்ப்பனர்கள் தமிழை எதிர்க்கவில்லை, தமிழில் தேவாரம் பாடுவதைத் தடுக்கவில்லை, அல்லது சமஸ்கிருதம் தமிழுக்குத் தாய் என்றும் உளறவில்லை. அதனால் செத்துப்போன மொழியாகிய சமக்கிருதத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பதற்குக் காரணம் அந்தச்செத்துப் போன மொழியை தமிழுடன் ஒப்பிட்டு தமிழர்களின் தமிழுணர்வைச் சீண்டிப்பார்க்கும் தமிழ்நாட்டுச் சமக்கிருதவாதிகள் தான்.

  110. தாயுமானவன்

    உங்களத்து சமஸ்க்ருத வெறுப்புக்கு காரணம் தமிழ் மொழிப்பற்றல்ல உங்களது மதப்பற்று தானே. அதை வெளியில் சொல்ல முடியாமல் இப்படி காட்டுகிறீர்கள்.
    காழ்புணர்ச்சி இல்லை என்று சொல்லிவிட்டு அம்மொழியை செத்த மொழி என்று சொல்வது என்ன லட்சனத்திலோ.

    சம்பந்தர் பெருந்தன்மியா காட்டினார் என்று எதோ சிறுமை படுத்துகிறீர்கள். சமஸ்க்ருத மொழி உலகளவில் பல மொழிகளுக்கு தாய். இதை யோக்கியமான எந்த ஆராய்ச்சியாளனும் ஒத்துக் கொள்வான். அந்த அடிப்படையில் வந்த சுற்றறிக்கை, அதை பார்த்து வயிறு எறிவானேன். பாநியத்தை எதிர்க்கும் நீங்கள் தமிழிலும் எதற்காக ஏழே ஏழு வேற்றுமை உருபுகள் என்று கேக்கலாமே. தமிழிலிருந்து சமஸ்க்ருதம் காப்பி அடித்தது என்று வேறு சொல்வீர்கள். நேர்மையான மொழி ஆராச்சியாளன் எவனும் இதை ஒத்துக் கொள்ளமாட்டான்.

    தெலுங்கனிடம் போய் தெலுகுவிற்கு மூலம் தமிழ் என்றால் அவன் ஒத்துக் கொள்வானா, மாட்டான், ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளன் ஒத்துக் கொள்வான்.

    உலக அளவில் சமஸ்க்ருத்தின் தாக்கம் என்பதற்கு ஒரு சிறு உதாஹரணம். சுவீடன் என்ற நாட்டை அறிந்திருப்போம் எல்லாம் ராஜீவ் காந்தி புண்ணியம். அந்த நாட்டிற்கு ஸ்வீடிஷ் மொழியில் பெயர் sverige. அவர்கள் கால் பந்து விளையாடும் போது சட்டையில் தென்பெடும் பெயர் இதுதான். அவகளது மொழியில் இதற்க்கு அர்த்தம் சொந்த நாடு என்றதாம். அட ஸ்வராஜ் என்று நாம் அதை தான் சொல்லுகிறோம்.
    ராஜ என்றபது சமக்ஸ்ருத்த பதம் அதை நீங்கள் அரசன் என்று மாற்றி வைத்துக் கொண்டால் சமஸ்க்ருதம் செத்து விடுமா.
    சமஸ்க்ருதம் தமிழில் எவ்வளவு தூரம் கலந்துள்ளது என்று உங்களுக்கு புரிந்ததா (ஸ்புரதி) இல்லையா. பம்பரம் (பம்ப்ரமதி) மாதிரி நீங்கள் ஒரே இடத்தில் சுற்றுவது ஏனோ. தாகம் (தாஹ:) எடுத்தால் தண்ணி குடிப்பீர்களா மாட்டர்களா. தமிழகத்தில் மட்டும் பல பல லட்சம் (லக்ஷம்) மாணவர்கள் (மனவக:) சமஸ்க்ருதம் படிக்கிறார்கள் (படதி).

    தனி இலக்கணம் தனி இலக்கணம் என்று சொல்கிறீர்கள், அதையும் தொட்டுப் பார்ப்போமா.

    தமிழின் உயர்வே அதிலுள்ள இலக்கியத்தினால் தான். இதை யாரும் மறுக்க முடியாது. இதற்காக ஒவ்வொரு வடகத்தியனும் தமிழ் கற்றால் தப்பில்லை. கொஞ்சம் சிரமப்பட்டால் கர்ருவிடுவான், அவன் பேசும் பாஷையில் உள்ள 40 % சொற்கள் தமிழிலும் உள்ளதாம், ஆராய்ச்சி செய்து சொல்கிறார்கள்.

  111. உயர்திரு சாரங் அவர்களே,

    // வேதம் இருப்பது சந்தசீ என்னும் பாஷையில் அது சமஸ்ச்க்ருதம் ஆகாது.//
    இதை நான் பல வடமொழிப் பிரியர்களிடம் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறேன். வேதமொழியான “சந்தஸ்”தான், வடமொழியான சம்ச்கிருததிதிற்குத் தாய், பாணினி அமைத்த இலக்கணத்தை அடிப்படியாகக்கொண்டு, எழுந்த மொழிதான் சமஸ்கிருதம், அதாவது, நன்றாகச் செய்யப்பட்டது என்று சொன்னால், என்னை “பிரம்மத் துவேஷி” என்று திட்டவும் துவங்குகிறார்கள். உங்களிடமிருந்தே நான் சொல்லிவந்தது உறுதிப் படுத்தப்பட்டதைப் படிக்கும்போது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்ற விசுமாமித்திரருக்கு எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

    ஈஸ்வரோ ரக்ஷது!

  112. உயர்திரு தாயுமானவன் அவர்களே,

    // ” வடமொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாம், இந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமாம்”.//

    இது மாபெரும் அபத்தம் என்பது யாரும் அறியாததா? மோடி ஒரு மொழி ஆராய்வாளர் அல்லர். அவர் சொல்வதை நாம் காதிலேயே வாங்கக்கூடாது. ஆயிரம் ஆயிரம் ஆராய்ச்சிகள் தமிழ் மொழி தனிக் குடும்பம் என்று திட்டமாய்க் கூறிவிட்டன. வடமொழிக்கும், ஆங்கிலத்திற்கும்கூட மொழி உறவு இருக்கிறது. ஆனால் தமிழுக்கும், வடமொழிக்கும், மொழி உறவு இல்லை. இரண்டும் ஒரே காலத்தில் தோன்றியவைதான். வடமொழியிலும் தமிழ்ச் சொற்கள் உள்ளன.

    மோடியை விடுங்கள், நமது தென்னாட்டு மொழிக்காரர்களே (கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும்) அவர்கள் மொழி வடமொழியிலிருந்து வந்தது என்றே சொல்வார்கள். இங்கு என்னிடம் அப்படிச் சொல்லும்பொது, பொறுமையாக, அவர்களை மொழி வினைச் சொற்களும், தமிழ் வினைச் சொற்களும் ஒன்றாக இருப்பதைக் காட்டி, அவர்கள் மொழியில் வட சொற்கள் மிகுந்து இருப்பதால், அவை வடமொழியில் இருந்து வந்தவை என்று எடுத்துக்காட்டி, அவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறேன்.

    நீங்களும், அவ்வழியையே பின்பற்றுங்கள். மோடிக்குத் தெரியவில்லை என்றால், தமிழக பா.ஜ.க., ஆர்,எஸ்.எஸ். நண்பர்கள் மூலம், அரவிந்தன் நீலகண்டன் மூலம், அவரது தவறைச் சுட்டிக் காட்ட முனைவதே ஆக்கபூர்வமானது.

    // சமற்க்ருதம் தமிழ் மொழியின் தாய் என்று கூறினால் இந்த கேவலத்தை எதிர்த்து தமிழர்கள் போராட மாட்டார்களா//

    இது கேவலம் அல்ல. சொல்பவர்களின் அறியாமை. அறியாமை என்பது இருட்டுக்குச் சமமானது. இருளை அகற்ற ஒளிவிளக்கைத்தான் துணைக்கொள்ளவேண்டுமே தவிர, வெடிவைத்து இருட்டை நீக்க முயலலாமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
    அன்பே சிவம் என்று உணர்ந்த நீங்கள், முதலில் அன்புவழியைப் பின்பற்றிப் பாருங்கள்; அது பயன்தராது போனால், சிவனின் அம்சமான உருத்திரரைப் பின்பற்றலாம்.

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஓம் நமச்சிவாய!!!

  113. உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கும், அவருக்கு நான் கொடுத்த பதிலை படிக்கும் அன்பர்களுக்கும்,

    நான் உங்களுக்குக் கொடுத்த பதிலில் வலைஎற்றத்தில் ஒரு பிழை நேர்ந்துவிட்டது.

    // அவை வடமொழியில் இருந்து வந்தவை என்று எடுத்துக்காட்டி, அவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறேன்.// என்பதில் “அல்ல” என்ற சொல் விட்டுப்போய் இருக்கிறது.

    “அவை வடமொழியில் இருந்து வந்தவை அல்ல என்று எடுத்துக்காட்டி, அவர்களையே சிந்திக்க வைத்திருக்கிறேன்” என்று திருத்திப் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

  114. பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    //ஒரே புனைவில் சைவம் சமணம் என்ற இரண்டையும் நாசூக்காக இழிவு செய்யும்படிக்கு ஒரு புனைவு//
    இது உங்கள் வாதமே. எனது கருத்து அல்ல.

    \//சமணர்கள் அனைவரையும் அரக்கத்தனமாக கழுவேற்றிய மாபாதகர்கள் சைவர்கள் என்று ஒரு பக்ஷம். அப்படி கழுவேற்றத் தக்கவர்கள் சமணர்கள் என்பதாக சித்தரிக்க முனைந்தமை மற்றொரு பக்ஷம்.//
    தாங்களே இப்படிக்கூறினால் என் செய்வேன்? இருப்பினும் பதில் அளிக்கக் கடமைப்பட்டவன் ஆகிறேன்.

    சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரே தமது மூன்றாம் திருமுறையில் திரு ஆலவாய்ப்பதிகங்களில் பகர்ந்ததைத் தங்களுக்குக் கீழே தந்துள்ளேன்.

    1. மங்கையர்க்கரசியார் மதுரையில் காழிபில்லையாரைக்கண்டு, அவருக்குச் சமணர்களால் தீங்கு வருமோ, அவர்களை வாதில் வெல்ல இயலுமா என்று அஞ்சியபோது அருளிச் செய்தது:
    அத்தகுபொரு ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமா
    ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
    சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
    சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே. 3.39 .3.
    பொழிப்புரை :
    கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது , இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும் , ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று , எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர் . பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு , நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன் .
    பிள்ளையாருக்கு சமணர்மேல் உள்ள சீற்றம் “கவிப் பெயர்ச் சத்திரத்தின் (ஆயுதத்தின்) மடிந்தொடிந்து” என்பதிலும், “சித்திரர்க்கு எளியேன் அல்லேன்” என்பதிலும் புலப்படவில்லையா?
    2. காழிப்பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்கு எரியூட்ட முற்பட்ட சமணர்களின் தீ, பாண்டிய மன்னனைப் பற்றட்டும் என்று பணித்தார். சமயத்திற்குப் புறம்பான பொய்களைச் சொல்பவர்கள் சமணர்கள் என்றும் குறிப்பிட்டார். தமது இருப்பிடத்திற்கு எரியூட்டியவர்கள் சமணர்கள்தான் என்று அறிந்தும், அவர்கள் மீது காழ்ப்பு காட்டாது, மக்கள் செயலுக்கு மன்னனே பொறுப்பு, ஆயினும் தீ வேகத்தில் சென்று பாண்டிய மன்னனைப் பற்றினால், அவனால் தாங்க முடியாது இறந்துபோவான், மக்கள் மன்னனின்றி வருந்துவர் என்று, “எம்மிடத்திற்கு இட்ட தீ மன்னனைப் மெதுவாக அடையட்டும்” என்றார். சைவர்களின் பொறுமையை, உயர்வை இதைவிட எப்படி உயர்த்திக் காட்டிவிட முடியும்! இப்படிப்பட்ட சைவ குரவரைப் பின்பற்றுவோர் அரக்ககுணம் கொண்ட மாபாதகர்கள் என்று நான் மனதால் நினைத்தாலும் எனக்கு உய்வு கிடைக்குமா? அப்படி சுட்டத்தான் நான் விழைவேனா?

    செய்ய னேதிரு வாலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே. 3.51. 1.
    பொழிப்புரை :
    நடுநிலைமை உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .
    3. அனல்வாதம், புனல்வாதம் செய்து தோற்றால் நாங்கள் கழுவேற்றப் படுவோமாக என்று அவர்களே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றும்படி பாண்டிய மன்னன்தான் அமைச்சர் குலச்சிறையாருக்கு ஆணையிட்டான். இது மன்னன் இட்ட கட்டளை. இதற்கும் சைவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர்கள் அரக்கத்தனமான மாபாதகர்கள் என்று எங்கு என் கதையில் குறிப்பிட்டேன்? தாங்களாகவே அர்த்தம் செய்துகொண்டு, அப்படி நான் எழுதினேன் என்று குற்றம் .சாட்டுவது தகுமா? கன்றைத் தேரோட்டிக் கொல்ல முயன்ற மனுநீதிச் சோழனை நாம் இன்றும் போற்றி எழுதுகிறார்கள். அவர்களை,. “ஒரு சோழன் பிள்ளைக்கொலை செய்ய முயன்றான் என்று குற்றம் சட்டுகிறாயே!” என்று சாடுகிறோமா? மன்னர்கள் தத்தம் கடமையை விருப்பு வெறுப்பின்றிச் செய்தார்கள். அவர்கள் செயல்களைச் சைவர்கள் செயல்கள் என்று புனைந்தோதுவது நானல்ல. அப்படிப்பட்ட எண்ணமும் என் நெஞ்சில் ஒருபோதும் எழுந்ததில்லை.

    //வலதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் ஜடாயு பகிர்ந்த வரலாற்றாய்வும் இடதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் அனந்த க்ருஷ்ணன் பக்ஷிராஜன் பகிர்ந்த வரலாற்றாய்வும் சமணக்கழுவேற்றம் வெறும் கட்டுக்கதை என்று பகிர்ந்த பின்பும் //
    அது அவர்கள் ஆய்வு. அதை நான் நேரடியாக மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. அவர்கள் எழுதியது உண்மையா, அல்லவா என்று ஆராயும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை, தகுதியும் இல்லை. என் கதையின் புனைவுக்கு காழிபிள்ளையாரின் திருமுறையும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமுமே கரு. அதைத் தேவையில்லாத அளவுக்கு விமர்சிப்பது ஏனோ? அதுபோக, இந்துக்களையும், பிராமணர்களையும் தாக்குவதையே பொழுதாகக் கொண்ட நடிகன் ஒருவனுடன் ஒப்பிட்டதும் ஏனோ?

    4. //உங்களைப் போன்ற ஒருவர் “எந்த சமயத்து இறைவனாக இருந்தாலும் சரி, மாறாகப் பேசுவது மகாபாவம் ஆகும்” என்று ப்ரஹ்லாதனுக்குத் தெளிவாக உபதேசம் செய்திருந்தால்……………நரசிம்மருக்கும் வேலையிருந்திருக்காது……….ஹிரண்யனும் சிரஞ்சீவியாக இருந்திருப்பான் பாருங்கள்//

    ஜனாப் அவர்களின் காற்று உங்கள்மீது வீசியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், செல்வி ரெபேக்கா மேரிக்கு நான் எழுதிய பதிலைப் பாராட்டிய கையோடு இப்படி எழுதி இருப்பீர்களா?
    பிரகல்லாதன் திருமாலைத்தான் சிறந்த தெய்வம் என்றான். தானே தெய்வம் என்ற அரக்கனைத்தான் தெய்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் எந்த தெய்வத்தைப் பழித்தான்? தன்னையே தெய்வம் என்று சாதித்த தன தந்தையைக்கூடப் பழிக்கவில்லையே! திருஞான சம்பந்தர் சமணர், மற்றும் புத்த சமயத்தொரின் கொள்கைகளைத்தான் மறுத்து, சைவத்தை நிலைநாட்ட முயன்றார். மாற்று சமயத்திற்கு மாறிய சைவர்களைத் தாய் மதம் திருப்ப முயற்சித்தார். அவர் எந்த தெய்வத்தை நிந்தனை செய்தார்? அயனும், அரியும் முயன்று தேடியும் கண இயலா அடி முடி கொண்ட பெருந்தகையாகத்தானே அரனை ஏற்றினார்? திருமாலையும், பிரம்மனையும் அவர் தூற்றினாரா? அவர் தனது ஒவ்வொரு பதிகத்திலும், எட்டாம் செய்யுளில் இராவணனை சிவ பெருமான் கயிலைக்கடியில் கால்விரலால் அழுத்தியதைப் பற்றியும், ஒன்பதாம் செய்யுளில் திருமாலும், பிரம்மனும் பலவாறு தேடியும் சிவனாரின் அடி, முடி அறிய இயலா மகத்துவம் பற்றியும், பத்தாம் செய்யுளில் புத்தரும், சமணரும் புற சமயத்தவர் என்றும் எழுதியிருக்கிறார். என்றும் அவர் பர சமயக் கடவுள் நிந்தனை செய்ததில்லை. எந்த சைவ குரவர்களும், வைணவ ஆழ்வார்களும் அதைச் செய்ததில்லை. யதிராஜர் இராமானுஜாச்சாரியார், வைணவத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைத்தாரே தவிர, சிவ நிந்தனையை ஒருபொழுதும் செய்ததில்லை.

    நமது குருமார்கள் நமக்குக் காட்டிய அறிவுரையைத்தான் நான் தமிழ் இந்து சமய உடன்பிறப்புகளுக்குப் பகர்ந்தேன். அதற்காக, நமது சமயத்தோர் எவரையும் பழிப்பவரையும், நமது சமயத்தொரை தமது சமயத்திற்கு வஞ்சகமாக மாற்ற முயல்வோரையையும் என்றும் நான் பொறுத்ததில்லை. “அன்பே சிவம்” என்னும் நான், தேவைப்பட்டபோது சிவனாரின் உருத்திர உருவத்தையும் எடுக்கத் தயங்கமாட்டேன் என்று தங்களுக்குத் தாழ்மையுடன் அறிவித்துக்கொள்கிறேன். அதை நான் செல்வி ரெபேக்க மேரி, ஜனாப் இவர்களுக்கு பகர்ந்த கருத்துகளிலிருந்து அறிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

    வேலும், மயிலும் துணை. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நமச்சிவாய.

  115. //உங்களுக்கு வேண்டுமானால் மதம் என்பது ஒரு வசதிக்காக சட்டை மாற்றுவது போல் இருக்குலாம். நாங்கெல்லாம் கொஞ்சம் சீரியசான ஆட்கள். சரியா.//

    ஒருவிதத்தில் சரிதான். சிறுவயதில் முருகன் and pillaiyaar. கொஞ்சம் வளர்ந்தவுடன் அம்மன் and also pillaiyaar (பேச்சுலர் காலத்தில்) அதன்பிறகு பெருமாள் and Shree. இப்படி மூன்று சட்டைகள் மாற்றிவிட்டேன். I am permanently happy with the last shirt for the major reason that it told your caste men that they and the dalits are equal before the Lord; and if a dalit is a greater Vaishnava, the brahmin should accept even his saliva as holy. It treats all in the same manner.

    மனுவில் தலித்துகளில் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று அவனுக்கு கல்வி ஒலி கேட்டால் என்று சொன்னதாலேயே வைதீகர்கள் திருமழியிசையாழ்வாரைக் கண்டவுடன் நிறுத்தினார்கள். திருமழிசையாழ்வாரருக்கு எந்த மரியாதையும் எம்மிடம் இல்லை என்று ஊர்மண்டபத்திலிருந்தே விரட்டினார்கள். அன்று நடந்ததை இன்றும் மாற்ற மாட்டோமென எழுதிகிறீர்கள்.

    இந்தியா முழவதும் தலித்துக்களின் மீதான தீண்டாமை அவலம் இந்த மனுவாலேயே. ஆனால் சிலவற்றை விலக்கிவிட்டு மற்றவற்றை ஏற்கலாம் என்றால், நீங்கள் எதையும் எளிதில் ஏற்கும் சட்டை மாற்றிதானே. உங்களைப் பிற இந்துக்கள் எப்படி நம்புவது? Completely throw it out. If you accept the major part, naturally you will end up accepting the left out soon.

    //எங்க ஊர்ல கண்ணாலம் கட்டுவது புள்ள பெத்துக்க மட்டும் இல்ல. அத சீரியாசாக பார்க்கிறோம். இரு வரும் சேர்ந்து கர்மங்களை, கடமைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சம்ப்ரதாயம் இருக்கும். அதை சரி வர செய்ய ஒத்த ஜாதியில் திருமணம் செய்கிறார்கள். ஒரே தட்டில் இருக்கும் இரு வேறு சாதியினர் கூட மாற்று திருமணம் செய்வதில்லை என்பதற்கு இதுவே காரணம். ஆனால் இப்போதெல்லாம் கடமையாற்ற வேண்டும் என்று பலர் திருமணம் செய்வதில்லை. அதனால் இந்த கட்டுப்பாடு இப்பொழுது அவசியமற்றது.//

    நன்குசொன்னீர். கர்மங்கள்; சாதி சம்பிராதாயம்; ஒத்த ஜாதி; ஒரே தட்டில் கூட மாற்றுவதில்லை. அடடே சாரங்கன், அசத்திவிட்டீரையா? நீர்தான் நம்மாத்து ஆளு. இது திருவான்மியூர் ஆன்மிக கண்காட்சியைத்தான் நினைவு படுத்துகிறது. அங்கே அரவிந்தனின் அம்பேதகர் ஸடால் ஒரு மூலையில் அரங்கு நிறைய ஜாதிப்பெருமை பேசும் ஸ்டால்கள். அவுக நாங்கள் ஆண்ட பரம்பரை; தலித்து ராஸ்கல் நீ கழுவுகிற பரம்பரை என கொக்கரிக்க, சாரங்கள், அதே கொக்கரிப்பை, கர்மங்கள், ஒத்த ஜாதி, நெருங்க மாட்டோமென்கிறார்.

    எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. உங்களுக்கும் இந்துத்வாவுக்கும் ஏழாப்பொருத்தமிருக்க, எப்படி இங்கே உலாவுகிறீர்? மனுவை ஆதரிப்பது ஏன் என்பது இப்போது புரிகிறது. உங்கள் ஜாதியே என்ற பேச்சுக்கு வலிமை தேட மூசுலீம்களைப்பற்றி பேசுகிறீர்கள். அவாளைக் கட்டச்சொல்லு; நானும் எம் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிறேன். அதாவது நீராக வந்து எதையும் செய்ய மாட்டீர். தலித்துகளை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளா நீஙகள், இந்துமதவளர்ச்சிக்காக தன் ஜாதிவெறியைத் துறக்க இயலா நீங்கள் இசுலாமியரும் கிருத்துவர்களும் தலித்துக்களை ஏமாற்றுகிறார்கள் எனற கபட‌ நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். They are citing persons like you to dalits. உம்மைப்போன்ற பேர்வழிகள் இருக்கும்வரை எப்படி தலித்துகள் இந்துவாக இருப்பார்கள்? வடமொழி என் கண்; தலித்துகளிடம் நாங்கள் நெருங்க மாட்டோம் என்று சொல்பவர் எப்படியப்பா இந்துமதத்தை வளர்க்க முடியும்? மாறப்பாரும். இல்லாவிட்டால் இசுலாமியராகி அல்லது கிருத்துவ பிராமணனாக உம்வீட்டுப்பெண்களை இன்னொரு பிராமணனுக்கு கட்டி வையும்.

    பிராமணர்களைப் பற்றி எழுதினேன். அது ஒரு காரணமாகவே எழுதப்பட்டது. எத்தனை பெருச்சாளிகள் இந்துப்போர்வை போத்திக்கொண்டு ஜாதி வளர்க்கின்றன என்பதைக்காட்டத்தான்.

    //மேலும் எதோ தமிழக கழக கண்மணிகள் உத்தமர்கள் போல எதையோ தடுக்கிறார்களாம். //

    என்னிடம் பேசுங்கள். நான் கழகக்குஞ்சுகளை விட்டு என் கருத்துக்களையும் என் கேள்விகளையும் வைக்கிறேன். அக்கேள்விகளுக்குப் பதிலெங்கே?

    //அரவிந்தனின் இந்த கட்டுரை சமஸ்க்ருத வாரம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியதல்ல. அதல் அவருக்கு சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை, சில விஷக் கிருமிகள் இதை எதிர்த்து டுஷ்ப்ரசாரம் செய்யும். //

    கட்டுரையை நன்கு படியுங்கள். ஏன் அவர்கள் விஷக்கிருமிகளாகத் தோன்றுகிறார்கள்? அதைக்குறிப்பிட்டு நான் எழுதியதைப்படிக்கவில்லை?

    அவர்கள் நோக்கம்; வெறும் வடமொழி எதிர்ப்பன்று. இந்துமத எதிர்ப்பு என்று அவர் உணருகிறார். அந்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய கட்டுரையில் வடமொழிக்கும் ஆதரவு தேடுகிறார். He writes: //வடமொழி பிராமாணாளுக்கு மட்டுமன்று; எல்லாருக்கும் பொது; தலித்துகள் கூட பேசினார்கள்; எழுதினார்கள். அம்பேதகர் தலித்துகளைப்படிக்கச்சொன்னார்; அப்போதுதான் ஜாதிகள் ஓழீயுமென்றார். காமராஜர் முன்னுரையில் புகழந்தார்; ஜயகாந்தன் ஆதரித்தார்//

    வடமொழியை எனவே தமிழர்கள கற்கவேண்டும் என்று தமிழர்களுக்கு சிபாரிசு செய்கிறார். வெறும் கழககுஞ்சுகளை எதிர்க்க மட்டுமன்று.

  116. @sarang,

    //சமஸ்க்ருதம் தமிழில் எவ்வளவு தூரம் கலந்துள்ளது என்று உங்களுக்கு புரிந்ததா (ஸ்புரதி) இல்லையா. பம்பரம் (பம்ப்ரமதி) மாதிரி நீங்கள் ஒரே இடத்தில் சுற்றுவது ஏனோ//

    இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளை விட தமிழில் தான் சமஸ்கிருதம் மிகக் குறைவாகக் கலந்துள்ளது. சம்க்கிருதச் சொற்கள் இல்லாமலும் தமிழால் தனித்தியங்க முடியும், ஆனால் சமக்கிருதத்தால் தனித்தியங்க முடியாது. அது ஏற்கனவே செத்தும் போய் விட்டது. சமஸ்கிருதமும் தமிழிலிருந்து அதிகளவில் சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?? 🙂

  117. //அவன் பேசும் பாஷையில் உள்ள 40 % சொற்கள் தமிழிலும் உள்ளதாம், ஆராய்ச்சி செய்து சொல்கிறார்கள்.//

    இதில் எந்தளவுக்கு உண்மையுண்டு என்பது கடவுளுக்குத் தான் தெரியும் அல்லது திரு. Sarang தான் ஆதாரம் தர வேண்டும். ஆனால் இவர் கூறுவது உண்மையாகவிருந்தாலும் தமிழர்கள் அலட்டிக் கொள்ளவோ ஆச்சரியப்படவோ தேவையில்லை. இந்தியா முழுவதும் முற்காலத்தில் தமிழ்மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்காரே கூறுகிறார். அதனால் இன்று தமது சொந்த மொழியை இழந்து, அது திரிபடைந்து பல்வேறு மொழிக்குழுவினராக மாறியுள்ள உங்களின் வடக்கத்தை நண்பர்களின் முன்னோர்கள் கூட தமிழ் பேசியிருக்கலாம் அதனால் தான் இன்றும் அவர்களின் மொழிகளில் தமிழ்ச்சொற்கள் உண்டே தவிர, அதற்கு தமிழ் அவர்களிடமிருந்து இரவல் வாங்கியதாகக் கருத்தல்ல. 🙂

    “The word ‘Dravida’ is not an original word. It is the sanskritized form of the word ‘Tamil’. The original word ‘Tamil’ when imported into Sanskrit became ‘Damilla’ and later on ‘Damita’ became Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India, and was spoken from Kashmir to Cape Comorin. In fact, it was the language of the Nagas throughout India. The next thing to note is the contact between the Aryans and the Nagas and the effect it produced on the Nagas and their language.”

  118. வியாசன்

    தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வட மொழி வாதிகள் யார். இது நிதர்சனமா அல்லது உங்களது என்னமா. எவ்வளவு தமிழர்கள் சார் சமஸ்க்ருதத்தை எதிர்கிறார்கள். அண்ணா சமஸ்க்ருத எதிர்ப்பையும் ஹிந்தி எதிர்பையும் குழப்பிக் கொல்லாதீர்கள் :-). நீ தனி ஆளு நீ தனி ஆளு எத்தையும் உள்ளே விடாதே அன்று உங்களை வைத்து கல்லா கட்டி ஒரு கோஷ்டி ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டது. நாம இன்னும் தெருபுழுதியை கிளப்பி கொண்டிருக்கிறம். அந்த கோஷ்டியின் பய புள்ளிகள் எல்லாம் ஹிந்தி படிக்குமாம், தமிழே இல்லாத இன்டெர் நேஷனல் பள்ளிகளில் மினுக்குமாம். அவர்கள் கொள்ளு பேரர்களுக்கு சமஸ்க்ருத நாம கரணம், யாக சேவனம் இத்யாதி. நாம என்னடான்னா இன்னும் பார்ப்பான் ஒழிக, ஹிந்தி ஒழிக, சமஸ்க்ருதம் ஒழிக என்று வெற்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
    தமிழ் நாட்டில் இயங்கும் எந்த சமஸ்க்ருத சமஸ்தானமும் தமிழ் விரோதி இல்லை. அதில் இயங்கும் பலருக்கு உம்மை விட தமிழ் நன்றாக தெரிந்திருக்கிறது. சமஸ்க்ருத க்ஷேத்திரத்திலே இயங்கும் யாரும் தமிழ் மீதோ எம்மொழி மீதோ வெறுப்பு கிடையாது. உங்களுக்கு எவ்வளவு பேருடன் தொடர்பு இருக்கிறது. மாறாக எதோ சமஸ்க்ருதமானது தமிழ் விரோதி என்ற மாயையிலேயே நாம் உழல்கிறோம். விழித்துக் கொள்வோமாக.

    கடைசியாக ஒன்னும் கைவரவில்லை என்று இப்போதைய பாலா கெஞ்ச ஆரம்பித்து விட்டார். சுவிசெஷர்களின் பிரத்யேக பாணி இதுதான். தூஷனை எல்லாம் செயல் இழக்க. தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் படிக்க வேண்டாமோ என்கிறார். அரவிந்தன் அப்படி சொன்னாரா. தமிழ் மொழியை இனிய மொழி இல்லை என்றாரா. யாரும் தமிழ் படிக்கக் கூடாது என்றாரா. இங்கே தமிழுக்கும் சமஸ்க்ருததுக்கும் போட்டி என்றாரா.

    இந்த கற்பனை பிரச்சனைகளை எல்லாம் இருட்டு கொண்டு புழுதி கிளப்பியது மூவரே. இப்போ ரேபெக்காம்மனியும் சேர்ந்துள்ளார் கோஷ்டியுள். இவர்களின் எண்ணம் என்ன, தமிழன் கழக கைவரிசைகளை இன்னும் மறக்காகவோட்டில் அதையே கைகொண்டு அவனை சமஸ்க்ருத்திற்கு எதிரி செய்ய வேண்டுமென்பதே.

    இது கைவரபெராமல், பிராமன தூஷனை, ஹிந்து தூஷனை, அரவவிண்ட தூஷனை எல்லாம் செய்து புழுதி கிளப்பியும் எல்லோரும் மாஸ்க் அணித்து வருவதை பார்த்து நொந்து போய் கிடக்கிறார் இப்போதைய பாலா சுந்தரம் பெருந்தகை.

    ரொம்ப காலப் பழசு விஷயம் விடுங்கள் முந்தா நேத்து ஒரு மத்திய மந்திரி தமிழை எல்லா இந்தியனும் படிக்கவேணும் எனப் பணித்திருக்கிறார். இதை அறிந்து அரவிந்தன் என்ன வெகுண்டேழுவாரா. உண்மையான தமிழன் மகிழ்ச்சியே பெறுவான். வடக்கே இருக்கிற வாடா மொழி சாமி வைகுண்ட நாதன் வேண்டாம், தெற்கே இருக்கிற தமிழ் பேசுகிற தென்னரங்கன் போதும் என்றான் ஒரு பார்பன முன்குடுமி தொண்டரடிபொடி ஆழ்வான்.

    அரங்கனையும் அரனையும் இதில் இழுக்கிறார் ஒரு அரணை.

    எவ்வளவு காலம் தான் ஆரிய திராவிட பிராமன அப்ராஹ்மான மனு ஸ்ம்ருதி கதைகளை வைத்து கடை கட்டி வியாபாரம் செய்வீர்கள். கொஞ்சமேனும் வியாபார யுத்திகளையாவது மாற்றலாமே ஜோ ரெபெக்கா சூ பீ.

    தமிழன் மேல் திணிக்கப்பட்டது திராவிட மாயையும் ஆங்கிலமும் தானே ஒழிய சமஸ்க்ருதம் அல்ல. சமக்ஸ்ருதம் எவர் விரும்பி படிக்கிறார்களோ (பலர் ஜாதி வர்ண பேதங்கள் கடந்து) அவர்களை கொண்டு தான் சமக்ஸ்ருத்த வார ஆசரணம். தமிழனை ஏய்த்து திரட்டிய காசில் வயிர் வளர்த்து வாழும் வீர மணியையோ, அட்டாக் செய்து ஆள் சேர்த்து போஸ்டர் ஒட்டியும் ஒரு செட்டு பெறாமல் திரியும் தொல் திருமாவளவனையோ, கல்ல தோணி வைகோவையோ இறந்த பின் டாஸ்மாக் தொழிற்சாலைக்கு போகபோகும் சூ பீ யையோ, குழந்தை ஜோவையோ யாரும் கொண்டாட சொல்லவில்லை.

    தமிழ் நாட்டுல எக்க சக்க தெலுங்கர்கள் மலையாளிகள் வாழ்கிறார்கள், அவர்கள் வரிபனத்தில் எவ்வளவு தமிழ் மாநாடுகள் போட்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் போராடினார்களா, இல்லை அப்பீல் தான் செய்தார்களா. அடையார் ஆனந்த பவனில் வேலை செய்யும் நேபாளத்து காரன் தமிழ் கற்றுக் கொண்டு பேசவில்லையா. மொழியை வைத்துக்கொண்டும் தமிழனை பிரித்து குளிர் காய வேண்டாம். இது புளிச்ச சோறு. இது எடுபடாது, வாங்க ஆளில்லை.

  119. @BALA SUNDARAM KRISHNA,

    //இது கமப்னதான் எனக்கேட்டறிந்தவுடன் மலைத்துவிட்டேன். முதலிலேயே என் மூளை வேலைசெய்திருக்க வேண்டும் அந்த முதல் மூன்றடிகளைப்படித்தவுடன். அவ்வளவு சுவையானவை.///

    இதில் வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது கூட உங்களின் மூளை வேலைசெய்யவில்லை என்பது தான். இதைக் கம்பன் பாடவில்லை. 🙂

    “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்”

    (தண்டியலங்காரப் பாடல்)

  120. //நம்மாழ்வாரை தலை மேல் வைத்து கொண்டாடுபவர்கள் பிராமணர்கள் தான். அவரது பாதமாக அறியப்படுபவர் ராமானுஜர் (ஒரு பெரிய ப்ராஹ்மின் சார் இவர்). ஆழ்வாரின் மற்றொரு பாதமாக அறியப்படுபவர் மதுர கவியார் ஐவரும் ஒரு ப்ராஹ்மின் சார்.//

    Sarangan!

    ஜாதீய கொடுங்கரங்கள் இராமானுஜரையும் விட்டுவைக்கவில்லை. யார் யார் பிராமணாள் யார் யாரில்லை என்று நானே சொல்கிறேன். நானும் ஜாதி வெறியன் தான்.

    பொய்கையாழ்வார் – காஞ்சிபுரத்து ஐயங்கார்
    பூதத்தாழ்வார் – மஹாபலிபுரம் ஐயங்கார்
    பேயாழ்வார் – மயிலாப்பூர் ஐயங்கார்
    பேயாழ்வார் – பாண்டியன் பிரம‌தேயமாக அளித்த ஒரு காட்டுப்பூமியில் கோயில் கட்டி குருக்கள் வேலை பார்த்த ஐயங்கார். (அப்பூமியின் இன்றைய பெயர் திருவில்லிபுத்தூர்.
    ஆண்டாள் – அவர் வளர்ப்பு மகள். அக்ரஹாரத்திலேயே அனாதைக்குழந்தையாக கிடைத்ததால், அவரும் அப்படியே
    மதுரகவி – பாண்டியன் இராமநாதபுரத்திலிருந்து கொண்டமர்த்திய 200 பிராமணக்குடும்பங்களைச்சேர்ந்தவர். திருத்தொலைவில்லிமங்கலம் என்ற தூத்துக்குடி மாவட்டச் சிற்றூர்க்காரர்.
    தொண்டரடிப்பொடியாழ்வார் -முதுகுடுமி சோழிய (சோழநாட்டைச்சேர்ந்த) ஐயங்கார். தஞ்சாவுர்ப் பக்கம்.

    சந்தோஷமா சாரங்கன்? உங்க ஜாதிக்காரங்கதான்.

    அடுத்து:

    திருமங்கையாழ்வார் – வழிப்பறிக் கொள்ளையைக் குலத்தொழிலாகக் கொண்ட கள்ளர் (அவரும் மறக்காமல் பின்னாளில் செய்தவர்தான் – சீர்காழிப்பக்கம்)
    குலசேகராழ்வார் – சத்திரியர். ஆண்ட பரம்பரை. மலையாளி என்பதால் தேவர் என்று அழைக்கமுடியாது. அவர் காலத்தில் மலையாளம் மொழியாக இல்லை. கொச்சி.

    அடுத்து வருபவர்கள் பரிதாபம்:

    திருப்பாணாழ்வார் – பாணர். பறையரில் ஒரு சிறுபிரிவு. உறையூர்க்காரர். இன்று திருச்சிக்குள்; அன்று வெளியே இருந்தது. ஊருக்கு வெளியேதான் வாழ்ந்தார். ஊருக்குள் வராமல் இரங்கனைப்பாடியவர்.

    கீழே வருபவர் இன்னும் பரிதாபம்.

    பாசி மணி ஊசியெல்லாம் விப்போமுங்க; ஆனால் காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம் எனப்பாடும் குரவர் கூட்டம். இவரின் பெற்றோர் பிரம்பு முடைந்து ஊரூராக விற்பவர். காஞ்சிபுரத்துக்கிராமம். இவர்தான் மிகவும் தீண்டாமைக் கொடுமைக்காளாக்கப்பட்டவர். திருமழிசையாழ்வார். இறைவனுக்கே ஆணையிட்டு தன் ஆணைக்கு கீழ்ப்படிய வைத்தவர். உறையில் அடங்காதவர் எனப் பெயர்பெற்றவர். அதாவது கோபக்காரர். ஒப்பிலியப்பன் கோயிலுக்குச்சென்ற போது தம்மைப் பிராமணர்கள் ஏற்காததால் அங்கே எழுந்தருளி, ஒப்பிலியப்பனைப்பார்க்க, ஒப்பிலிய்ப்பன் விலகி தரிசனம் தர ஆழ்வாருக்குப் பின்னர் ஒப்பிலியப்பன் அப்படி சாய்ந்தே இருக்கிறார். போய் பாருங்கள். இப்படி இறைவனுக்கே ஆணையிட்டதால், இவரின் பெயர் திருமழியிசைப்பிரான். He threw off all his written work into the River Kaveri and what was left is what we read today: only two works. After throwing, he passed away there.

    சாரங்கன் மகிழ்வது அவாள் அதிகமாக இருக்காங்களே. ST and SC rendeethaanee.
    (Pl don’t remind me that it is sinful to refer to their caste and all of them are ascribed non-human birth. I am dealing with Sarangan. He needs different treatment)

    இராமானுஜரைப்பற்றியும் மதுரகவியைப்பற்றியும் குறிப்பிட்டதால் சொல்வேன்.

    இராமனுஜர் தலித்துக்களை இழுக்க தொண்டர்களைப் பணித்ததால், அவரை கங்கை நதியில் மூழ்கடித்துக்கொல்லப்பார்ததார்கள். திருக்குறுங்குடி அக்ராஹாரத்தில் அவர் பிட்சையெடுத்துச் செலகையில் விஷம் வைத்துக்கொல்லப்பார்த்தார்கள். பின்னர்தான், அவரின் தொண்டர் ஒருவர், இனி உமக்கு நாந்தான் சமையல்காரன். என்று அக்ரஹாரத்தில் பிட்சை எடுப்பதை நிறுத்தினார்.

    மதுரகவி – ஒரே தட்டில் மாற்றிக்கொள்ள மாட்டோம். கர்மங்கள். எங்கள் ஜாதிக்குத்தான் ஆன்மிகம் அத்துப்படி, மத்தவாளெல்லாம் ஊத்தக்காரங்க என்ற மமதை பிடித்த பிராமணாள். ஊர் ஊராக தனக்கு குருவைத் தேடி, அயோத்திவரைக்கும் சென்று ஏமாற்றம்தான் மிஞ்சியது. அயோத்தியில் அவருக்கு பெருமாள் காட்டியது உன் ஊரிலே ஒருவன் உனக்குக் குருவாக இருக்க, இங்கேன் வந்தாய்? என.

    தன் ஊருக்கு வந்தால், இங்குள்ள கிராமத்து ஆட்கள் எல்லாரும் ஒரு குட்டிச்சாமியாரைப்பற்றிப் பெருமையாகச் சொல்ல போய்ப்பார்ப்போமே என்றுதான் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். 8 மைல்தொலைவு இவரூரிலிருந்து. அங்கு ஒரு புளியமரத்துப்பொந்தில் அந்தப்பையன். அடடே அவன் நம்ம ஜாதியில்லையே! இவனா பெரியா ஆன்மிக கொக்கு? என நினைப்பில் தனக்கு ரொமப் ஞானம் என்னை மிஞ்சுவானா இவன்? சோதித்துதான் பார்ப்போமே! எனவே quiz contest குட்டிச்சாமியாரோடு இவர் கேள்விகள் வீச குட்டிச்சாமியார் ஒவ்வொன்றுக்கும் அழகாகப் பதில் சொன்னானர். விடக்கூடாது! இவனால் பதில் சொல்ல வியலா கேள்வியைக்கேட்க வேண்டும்

    //செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” .

    எனபது கேள்வி

    பதில் சொன்னார் குட்டிச்சாமியார். “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” .

    சரணாகதியடைந்தார் மதுரகவி. தன் ஈகோ எல்லாம் ஒழிய இவரன்றி எனக்கு வேறு தெய்வமே இல்லையென எடுத்தார். //தேவமற்றறியேன்//

    சாரங்கன்! இக்கதை அல்லது வரலாற்றின் நோக்கமே உம்மைப்போன்றவருக்குத்தான் சொல்லப்பட்டது. பிராமணன், எனக்குத்தான் ஆன்மிகம். எனக்குத்தான் எல்லா தெரியும். மத்த ஜாதிக்காரர்களுக்கு அத்தகுதியில்லை. தலித்துகளுக்கு கோயிலுக்குள்ளே நுழையக்கூடாது எனபவருக்கெல்லாம் வைணவம் வைத்த ஆப்பு இக்கதை.

    40 வயது பழுத்த பிராமணாள், 11 வயது சூத்திரப்பையன் காலில் விழுந்தார்.

    பிராமணர்கள்தான் எழுதினார்கள் எனாதீர். ஒன்றை புரியுங்கள். அவர்களில் சிறுபிரிவினரே இராமனுஜரின் தொண்டரானார்கள். மதுரகவி நம்மாழ்வாரின் பாசுரங்களை தெய்வத்தின் குரலாக எடுத்துச் சொல்ல பிராமணர்கள் ஒரு சூத்திரர் எழுதியதை அதுவும் தமிழில் எழுதியதை ஏற்க மாட்டோமென்றார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கப்பிராமணாட்கள், நம்மாழ்வார் பாசுர்ங்கள் இலக்கியாகா எனத் தூக்கியெறிந்தார். மதுரகவி எப்படி நம்மாழ்வாருக்காக மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் போராடி வெற்றிபெற்றார் எனபது தனிக்கதை. மதுரகவி பிராமணாள் என தற்பெருமையடிக்கிறீர்கள். அவர் தன் பிராமணன் என்ற் ஈகோவா ஓழித்ததனாலேயே ஆழ்வாரானார்.

    இராமானுஜர் தலித்துகள் கோயிலுக்குள் போகலாம் எனச் சொன்னபோது, பிராமணர்கள் கொதித்தெழுந்தார்கள். நாங்கள் நீர் கட்டிய கோயிலுக்குள் (திருநாராயண புரம் – மைசூருக்குப்பக்கத்தில்) வரமாட்டோம் என்றார்கள். அவர் சொன்னார்: அவாளுக்கு வாரத்தில் ஓரிரு நாட்கள் ஒதுக்கியிருக்கிறேன். அப்போ அவா வருவா. நீங்கள் வரவேண்டாம். நானும் என் தொண்டர்களும் அவர்களுக்காக கோயிலுள் இருப்போம். என்றார்.

    பெரிய நம்பியை ஜாதியை விட்டு ஒதுக்கிவைத்தார்கள். காரணம் அவர் ஒரு தலித்து ஆச்சாரியருக்கு ஈமக்கிரியை செய்ததால்.

    இப்படி நான் சொல்வது ஒரு ஜாதி மககளுக்கு எதிராக என்று எடுத்தால் நீர் இன்னும் ஜாதிப்பெருச்சாளியாகத்தான் இருக்கிறீர் எனறு பொருள். இது வைணவம் வளர்ந்த க‌தை. எப்படி இராமானுஜர் பிராமணர்களோடு போராடி தன் மதத்தை அனைத்துமக்களிடம் பரவச்செய்தார் என்பதைச்சொல்லவே. கர்மங்கள் கெட்டுப்போகும் என்று இன்று சொல்லும் உம்மைப்போன்றவர்கள்தான் இராமனுஜரை எதிர்த்தார்கள். உம்மைப்போன்றவருக்கு இராமானுஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    //எனக்கு நரகமே கிடைத்தாலும் கவலையில்லை. பிராமாணாலுக்கு மட்டும் தெய்வம் இல்லை. எல்லாருக்குமே தெய்வ்ம் போய்ச்சேரோணும்//

    அதுதான் திருக்கோஷ்டியுர் கதை. இன்றைக்கு வேண்டாம். வைணவனுக்கு ஜாதிகள் இல. ஆழ்வார் வேண்டுமா ஜாதி வேண்டுமா என்றால் ஆழ்வார்தான் என்பவனே வைணவன். உண்மையான இந்துத்வாவும் இதுவே. மதமே முதலும் கடைசியும் என்பவனே இந்துத்வா.

  121. சுபி

    //
    குர்ஆனில் இந்து மக்களைப் பற்றியோ அவர்களின் பிறப்பைப்பற்றியோ கேவலமாக எங்கும் எழுதப்படவில்லை. மனு ஸ்மிருதியில் உங்களை உயர்வாக்கி மட்டும் சொல்லியிருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் உங்களை உயர்வாக்கி மற்ற மூன்று வர்ணத்தாரையும் இழிவாக சொல்வது உங்களுக்கு பிரச்னையாக தெரியவில்லையா? அல்லது பிராமிண் என்பதற்கு வேறு அர்த்தங்கள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டால் பிரச்னையே இல்லையே. மேலும் எனது முன்னோர்கள் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியதால் அந்த இந்து மதத்தின் பெருமைகளையும் சிறுமைகளையும் பேச எனக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறேன்.
    //

    இஸ்லாம் ஹிந்து மதத்தை இழிவு படுத்தவில்லையா. idol worshippers பற்றி என்ன சொல்கிறது இஸ்லாம். ஏன் இந்த புரட்டு.
    அதென்ன ஹிந்து மதஹ்தின் பெருமைகளையும் சிறுமைகளையும். எங்கே பெருமைகளை பேசி உள்ளீர்கள்.

    மனு ஸ்ருமிதியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் நோக்கம் எப்படியாவது எவனாவது அல்லாவுக்கு நேந்து விடனும் என்பது தான்.

    பிரம்ம அனுபவத்தை நேரில் காண்பவன் பிராமணன். விசுவாமித்ரர் ராஜ வாக இருந்து பிரம்ம ரிஷி ஆனது அவரது ப்ரம்ஹ ஞானத்தினால் தான்.

    இன்னும் பல பேர் இருக்கிறார்கள், செய்க்வா ரைக்யர். ஜட பரதன், என்று போற்றத்தக்க ப்ரம்ஹ ஞானிகள் பிறப்பால் அந்தனரள்ளதார்.

    சரி இப்படி பாப்போம்.
    மனு ஸ்ம்ருதி பல்லாயிரம் ஆண்டு கால சமூகத்தின் நிலையை கொண்டு இயற்றப்பட்டது. அது அநீதி இழைக்கிறது என்றால் அது உண்மையில் பஞ்சமர்களுக்கு. மகா அநீதிதான் அது. மனு ஸ்ம்ரிதி ஒரு வியாபரா கண்ணோட்டம் கொண்ட சமூகத்திற்கு ஒவ்வாது. கர்ம கண்ணோட்டம் கொண்ட சமூகத்திற்கு சரிப்படும். ப்ராமனாக இருப்பது பழைய காலத்தில் ஒரு பெரும் சாபம் மாதிரி. மூணு மணிக்கு விழிக்கனும், உடனே குளிர் நடுங்க குளிக்கணும். அப்புறம் ஆயிரத்தி எட்டு முறை ஜாயத்ரி ஜபம், அப்புறம் வீட்டில் மைக் செட் வைக்காமல் வேத பாராயணம், அவுபாசனம் அல்லது அக்னிஹோத்ரம், காலை பூஜை, வேதம் சொல்லிக் கொடுத்தல், யாகம், மதிய ஆராதனை, மதிய சந்த்யா, கொஞ்சம் சாத்வீக சோறு, த்யானம், பயிற்றுவித்தல், காலக்ஷேபம் , மாலை சந்த்யா, மாலை பூஜை, உபன்யாசம், இரவு த்யானம் முடித்து பதினோரு மணிக்கு தூக்கம்.
    ஒரு வேலை சாப்பாடு மத்ததெல்லாம் வேலை.

    இதெயெல்லாம் ஒரு வாரம் நீங்கள் ஆச்சரணம் செய்து பாருங்கள் பெண்டு நிமிந்திரும். ஓடி போய்விடுவீர்கள். க்ஷத்ரியனுக்கு நிறைய சுகம் உண்டு ஆனால் எக்கச்சக்க நித்யப்படி கடமைகள். வைச்யனுக்கு கடைமைகள் கம்மி ஏன் என்றால் அவர்கள் வியாபாரம் செய்ய அலைந்து கொண்டிருப்பார்கள். சூத்திரருக்கு கடமைகள் விதிக்கப் படவில்லை. சுகமாக வாழலாம் (சூத்ர சுகம் அவாப்னுயாத்).

    உங்களது கூற்றுப்படி பிராம்மணர்கள் அப்படியே குஜால்ஸ் செய்து கொண்டில்லை. தனக்காக வாழ அவனுக்கு தடை செய்யப்பட்டது. அவனுக்கும் சூத்திரனுக்கும் குடிசை தான் மிஞ்சியது. சௌக்யமாக வாழ்ந்தது என்னமோ வைச்யர்கள் தான். ராஜாவுக்கு அரண்மனை இருந்தாலும் எக்க சக்க டென்ஷன்.

    சோறு தண்ணி இல்லாமல் மூன்று நாள் அக்னி முன்னாடி நின்று யாகம் செய்து பாருங்கள் சார். காலையில புல்லா வயிறு ரொப்பி எட்டு மணிநேரம் அடையாள உண்ணாவிரதம் போல இல்லை சார் இது.

    உங்களது மேம்போக்கு பார்வையில் ஹிந்து தர்மத்தை இழிவு செய்து போக இயலாது. மனு தர்மம் பிராமணனுக்கு எதிராக எவ்வளவு கடுமையாக இருக்கிறது. அதுவும் அவன் யதியானால் இன்னும் தாங்க ஒண்ணா கடுமை.
    இப்படிதான் எம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்கின்றனர் சிலர், நாளையும் வாழ்வார்கள்.

    இந்த கடுமையை தாங்க யார் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு பிராமணத்வம் வந்து சேரும். அப்படி பட்டவர்கள் தான், ஜட பரதன், விஸ்வாமித்ரர், ஜனகன், சைக்வா ரைகர் இத்யாதிகள். உபநிஷதுகளில் எத்தனையோ பிறப்பால் சூத்திரர்கள் ப்ரம்ஹ ஞானிகளாக காட்டப்பட்டுள்ளனர். அவர்களை அண்டி அரசர்களும் பிராம்மணர்களும் ஞானம் பெற்றுள்ளனர். ச்வேதகேதுவின் தந்தை ஒரு ராஜாவிடம் சீடனாக சேர்ந்து தான் பஞ்சாக்னி வித்யை கற்கிறார்.

    இப்படி எல்லாம் காரணம் சொல்லி. அந்த காலத்திற்கு மனு தர்மம் சரி என்று சொல்லி நிறுத்தவில்லை ஒரு தமிழ் ஹிந்து. மனு சாஸ்திரம் தூக்கி எறியப் படவேண்டியது என்று அதை கண்டனம் செய்துள்ளான். எந்த வேத பாடசாலையில் மனு தர்மம் சொல்லி தரபடுகிறது. இன்று எவ்வளவு ப்ராம்கனர்கள் ப்ராம்ஹணர் அல்லாதவருக்கு வேதம், உபநிஷத் கீதை சொல்லி தருகின்றனர் என்ற கணக்கு உங்களுக்கு தெரியுமா. அநேகர்கள் உள்ளனர். நாங்கள் மாறுவோம், மாற்றத்தை என்கல்லுள்ளிருந்தே பெற எங்களது மதத்தில் இடம் இருக்கிறதும். மனு ஸ்ம்ருதி இல்லாவிடிலும் ஹிந்து மதம் வாழும் ஏன் நன்றாகவே வளர்ந்து வாழும்.

    உங்களால் இது முடியுமா, குர்ஆனில் உள்ள நீசமான விஷயங்கள் வேட்டுக் குத்துக்கள் விஞான பிதற்றல்கள், பிற மதத்தவனை நாயை போல பார்ப்பதும் நடத்துவதும், பெண் காழ்புணர்ச்சி போன்றவை ஒவ்வாதவை என்று உங்களால் ஒப்புக்கொண்டு மாற்றம் கொண்டுவர முடியுமா. மாறாக அப்படி மாற்றம் கொண்ட வர நினைக்கும், சுபி, ஷியாக்களை குண்டு வைத்து கொள்கிறீர்கள்.
    மனு ஸ்ம்ருதியை பற்றி வாய் திறக்க உமக்கு நிச்சயமாக கிஞ்சித்தும் அருகதை இல்லை.

    என்னது நீங்கள் நல்லவரா. கிண்டல் செய்ததில்லையா. அமைதியானவரா இஸ்லாம் அதை போதிக்கிக்குதா. சகோ நீங்க எங்கெங்கெல்லாம் பூந்து என்னென்ன பதில் எப்படி எப்படி தந்துள்ளீர்கள் என்று நாங்க மறந்து விடவில்லை. பல வருசமா பழகறோம் சகோ. உம்ம பத்தி உங்க உம்மாவ பத்தி எங்களுக்கு தெரியாதா.

  122. //வடமொழியே சொல்லித்தரா சிபிஎஸ்ஸீ பள்ளிகள் இந்தியா முழுவதும் உண்டு. அவர்கள் எல்லாரும் ஏன் கொண்டாட வேண்டும்? இது வடமொழிக்கு பிரச்சாமில்லையா?
    //
    இது கேள்வியா. எதற்கு ஆங்கிலம் கட்டாய மொழியாக எல்லா பள்ளிகளிலும் உள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரசாரம் இல்லையா.//

    ஆங்கில வாரம் வேண்டாம். ஏன் தமிழ் வாரமில்லை. தெலுங்கு வாரமில்லை, கன்னட வாரமில்லை. வங்காள வாரமில்லை? இவைகளெல்லாம் வெள்ளைக்காரன் பாஷைகளா? இவைகள் சி பி எஸ் சி பள்ளிகள் சொல்லித்தரவில்லையா?

    //இது அந்தந்த பிராந்திய மாநிலங்கள் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து கொள்ளலாம். மத்திய அரசின் செயல் பாடுகள் பாரத்தை ஒருமை படுத்துவதாக இருக்க வேண்டும். அதை சமக்ஸ்ருதம் சாதிக்கும். இதை பாரத்தின் பல தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் (மக்களும் கூட). சில மாக்கள் தான் சவுண்டு விடுகிறார்கள்.//

    ஏன் சுற்றறிக்கை விடவில்லை? வடமொழியை விட ஹிந்தி ஒருங்கிணைக்கும் தன்மையுண்டு. பல மாநிலங்களிலும் பெருநகரங்களில் மக்கள் பேசுகிறார்கள். புரிகிறார்கள். எங்குமே பேசப்படா கேடகப்படா வடமொழி ஏன்? 30000 பேர் பேசுகிறார்கள் என்று உட்டான்ஸ் வேண்டாம். சவுண்டு விடுவது சாரங்கன்.

    //எவ்விதத்திலும் குறைவில்லை. தமிழ் மாநாடு நடத்த கூட தான் மத்திய அரசு காசு கொடுக்கிறது.
    அந்த அந்த பிராந்திய மொழியையும் கட்டாயமாக அவ்வப் பிராந்திய CBSE கல்லூரிகளில் படித்தே தீர வேண்டும்.
    சமஸ்க்ருத வார கொண்டாட்டம் என்பது ஒரு initiative. நீங்கள் கேட்பது எப்படி என்றால் அம்மா காண்டீனில் எதற்கு இட்லி போடுகிறார்கள் இடியாப்பத்திற்கு என்ன கேடு. இட்லி தமிழ் ஹிந்துவின் உணவு. ஏன் பிரியாணி போடா வேண்டியது தானே என்பது போல இருக்கு.//

    அந்த இனியேட்டிவ் ஏன்? அதைத்தான் கேட்கிறார்கள். இடியாப்பம் இட்லி கதையெல்லாம் வேண்டாம். இனிஷியேட்டிவ் ஏன் இப்போது? ஒரு பலன் தரும் மொழிக்கென்றால் பரவாயில்லை. காளிதாசனின் நாடகத்தைப் படித்தால் வேலை கிடைக்குமா? பின் இனிஷியேட்டிவ் ஏன்? Why do encourage Sanskrit? You come to know the language only because you are brought up as a brahmin and taught to like the language as your religious tag. Not others. For them, it is just a language and they want to see whether it is useful to them in material sense. Finding that it is not, they don’t take it up. Even the students who take the subject in X and XII, forget it once they enter college to pursue professional courses or courses where second language is not compulsory.

    //ஆதரிக்க வேண்டும் என்று யாரவது அறிக்கை விட்டார்களா. தமிழர்கள் ஏற்கனவே சமஸ்க்ருதத்தை ஆதரித்து கொண்டு தான் இருக்கிறார்கள். despite galdwel and mccaulay. despite Kazhagams.

    தமிழாக CBSE பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சமஸ்க்ருதத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். படிப்பது மாணவர்கள், காசு கொடுப்பது பெற்றோர்கள். சரியா.

    மத்திய அரசு, சமஸ்க்ருதத்தை பற்றி பாரதத்தை பற்றி சரியான விழிப்புணர்வு ஏற்பட இதை செய்கிறது. சமஸ்க்ருதம் பயிலாத மாணவனை வலுக்கட்டாயமாக சமஸ்க்ருதத்தில் சேர்ப்பிக்க முயற்சி செய்ய வில்லையே.

    இது பாரத்தை உண்மையிலேயே ஒருமை படுத்தும் முயற்சி. உங்கள்ளுக்க் வயிறு பற்றி எரிகிறது, தமிழனும் விழித்திடுவானோ. நாம் அப்புறம் எப்படி அம்மாவாசை ஜபக் கூட்டம் நடத்தி காசு பார்ப்பது. அல்லாஹு அக்பர் சொல்ல, குண்டு வைக்க எப்படி ஆள் பிடிப்பது. கஷ்டம் தான் போங்கள்.//

    30000 ஆயிரம் தமிழர்களைச்சொல்கிறீர்கள். பப்பையா படித்தார் என்பீர்கள் இல்லையா? தமிழர்கள் அதிக அளவில் வடமொழி படித்து வடமொழி தமிழ்நாட்டில் பரவுகிறது என்பதை நம்பிவிடுவார்கள் படிப்பவர்கள். எங்கு வாழ்கிறீர்கள்? தமிழ்நாட்டில்தானே. உங்களுக்கு வடமொழி வெறி இருப்பதைப்போல அவர்களுக்குத் தமிழ்வெறி இருக்கிறது. மத்திய அரசு என்பதைவிட மோதி அரசு எனபதுதான் சரி. அவர் என் அரசு என்று வெப்சைட்டோ தொடங்கிவிட்டார். அறிக்கையை சிபிஎஸ்சிக்கு அனுப்பினாலே போதும் நிர்ப்பந்தம்தான். கட்டாயம்தான். நேரடியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை.

    பாரத்தை ஒருமைப்படுத்தும் முயற்சிக்கு ஹிந்திதான் சரி. கோடிக்கணக்கான மக்களுக்குத் தெரியும். வடமொழி அதற்கு இலாயக்கில்லை. முசுலீமைப்பற்றி எழுதி கவனததைத் திருப்ப முயல்கிறார். Sanskrit cannot unite Indians for the simple reason it is known only among a small portion of Indian population whereas Hindi can unite as many northern States have it as mother tongues; and where it is not mother tongue also, for e.g. Mumbai, it is popularly understood. But resistance is found in TN only because the language is forced, not because it should be hated. With persuasion and reasoning and proper method, Hindi can be spread here too. Because it is USEFUL. Sanskrit can never be spread because people wont want waste their time in learning a language which is useless to them. Sarangan, even Tamil brahmin youth are not studying it; they are forced by the elders only. Still, it is not popular.

  123. //ஒன்றுக்கும் உதவா மொழியை அரவிந்தன் ஆதரிப்பதேன்//
    இதை சொல்ல உமக்கென்ன தகுதி இருக்கு. இதே வாக்கில் போனால், தமிழ் படிப்பதாலோ தெலுங்கு படிப்பதாலோ என்ன பயன் இருக்கு. ஆங்கிலம் படித்தால் உலகெங்கும் வேலை. கரோல் பாகில் காபி கடைக்காரன் கூட ஆங்கிலம் பேசுகிறான்.
    மொழியை வர்த்தக நோக்கில் பார்ப்பவன் கேவலமாணன் தான். இதற்கு தான் எலிசரை பற்றி படியுங்கள் என்று சொன்னேன். மொழி நம்மை விட பெரியது. அதை வணங்கி ஆதரிக்க வேண்டும்.காசு பண்ண மொழி என்பது மேற்கத்திய சிந்தனை. எல்லா வற்றையும் ஒரு கருவியாக மட்டுமே காணும் உருப்படாத எண்ணம் அது. அதன் சாதக பாதகங்களுக்குள் இப்போ புக வேண்டாம்.//

    எல்லாருக்குமே தகுதி இருக்கிறது. தாய்மொழியைத்தவிர பிறமொழிகளை இலாப நோக்கில்தான் பாமர மக்கள் எடுப்பர். பப்பையா வயதானவர். ரிடையர்டு ஆசாமி. அவரைப்போன்றவருக்கு பொழுது போக்க இலக்கியம் வேண்டும். அது இன்னொரு மொழியிலும் சிறப்பாக இருந்தால் அதைப்படித்து தெரியலாமென அவர் வடமொழி படிக்கிறார்கள்.இப்படிப்பலருண்டு. அவரென்ன தன் வாலிபத்திலா படித்தார்.? அவர்களுக்கு இதைப்படி அதைப்படி என்று எவரும் சொல்வதில்லை. அவர் பெண்ணை வடமொழி படி என்றா சொன்னார். அவ்ர் படித்தது ஜப்பானிய மொழி. ஏன் ப்டித்தார் வேலைக்கு வாய்ப்புண்டு. கிடைத்தது. ஜே என் யூ வில் அவர் ஜப்பானிய் மொழி பேராசிரியர் போதுமா? ஜயகாந்தனின் மகனோ மகளோ வடமொழியா பள்ளியிலெடுத்த்ப்படித்தர் ? பேசலாம். ஆனால் தனக்கென்று வரும் போது வடமொழி அங்கில்லை என்பதுதான் உண்மை. காரணம் யூஸ்லெஸ்.

    பாமர மக்களைப்பற்றிதான் பேசவேண்டும். பாமர மக்கள் இலக்கியத்துக்காக அநநிய மொழியைப் படிக்கமாட்டார்கள். இலாபத்துக்குத்தான். இந்தியா முழுவதும் ஆங்கில மோஹம் அது வேலைக்கு உதவும் எனப்தால். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் ஆங்கில மோஹம் அமெரிக்காவில் வேலைக்குப்போகலாமென்பதற்காக.

    வடமொழி மக்கள் வாழ்க்கைக்கு உதவாது. ஆங்கிலம், ஹிந்தி உதவும். என்பதுதான் உண்மை. கேவலம். பாவம். புண்ணியம் – என்று வயிற்றெரிச்சலைக்கொடடுகிறீர்கள். நேரடியாக உண்மைகளை எதிர்நோக்கப்பயந்தவன் இப்படி பேசுவான்.வய்தான பிற்கு படித்துக்கொள்ளலாம் வடமொழியை. இப்போது தேவையில்லை.

    //என்ன தான் நீங்கள் தலை கீழாக நின்றாலும். வட மொழி வாரம் ஏன் கூடாது என்று அறிவு பூர்வமான வாதத்தை முன் வைக்கவே முடியாது. ஹை கோர்ட்டும் ஒருவர் போட்ட மனுவை தள்ளு படி செய்தாகிவிட்டது.//

    வடமொழி வாரம் கொண்டாடக்கூடாதென்று சொல்லவில்லை நான். ஆனால், அதனால் என்ன நன்மை மக்களுக்கு? ஏன் பிறமொழிவாரம் இல்லை? நீங்கள் ஆதரிக்கும் ஒரே காரணம் அது இந்துமதத்தோடு சம்பந்தப்பட்டது. தமிழ்ம்தான் சம்பந்தப்பட்டது. ஆனால் உங்களுக்கு அதன் வாரத்திற்காக போராட மனமில்லை. அதை மற்றவர்கள் செய்யும் போது வடமொழியின் மேல் வயிற்றெரிச்சல் என்கிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் வடமொழி மதமொழியாகவே தொடரும். மக்கள் மொழியாகாது. முடிந்தால் மோதி தன் ஐந்தாண்டுகளில் செய்யப்பார்க்கலாம். ஐந்தாண்டுகள் கழித்து நாம் ரிவ்யூ பண்ணும்போது 30000 ஆயிரம் தமிழர்கள் 35000 ஆகியிருக்கிறார்களா என்று பார்க்கலாம்.

  124. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழியை முதன்மைப் படுத்தும் விதமாக அந்த மொழி வாரம் கொண்டாடினால் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் அந்த மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியை நேசிக்க வாய்ப்பாகும். அதுவே இந்த தேசத்தின் ஒற்றுமையை பேண வழி. அது தவிர்த்து எவரொருவரும் பேசாத எவர் ஒருவருக்கும் சம்பந்தமில்லா செத்துப் போன ஒரு மொழிக்கு விழா கொண்டாடுவது அரசியலன்றி வேறல்ல. உயிர்ப்புடன் இன்றும் வாழும் மொழிகளுக்கு விழா எடுங்கள் அது அவசியம்.

  125. அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன்

    \\\ சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமுமே கரு. அதைத் தேவையில்லாத அளவுக்கு விமர்சிப்பது ஏனோ? \\\

    விமர்சனத்துக்கு உள்ளானது தங்களது புனைவு. ஒரு கழுவேற்ற சிற்பத்தில் காணப்படும் மனிதர்கள் சமணர்கள் என்ற கருதுகோளின் ஆதாரத்தில் படைக்கப்பட்ட புனைவு.

    புராணங்களில் அர்த்த வாதம் என்று உண்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே. அர்த்த வாதம் வ்யர்த்தவாதம் இல்லை தான். ஆனால் நேரடியான தத்யமும் இல்லை. உங்களது உத்தரத்தில் பெரிய புராண சாரத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

    புராணம் சொல்லும் விஷயம் ஒரு குறியீடாகக் கொள்ளலாமே அன்றி வரலாறு என்று சொல்ல வேண்டுமானால் அதற்கு முழு ஆதாரமும் முன்வைக்கப்பட வேண்டும். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயங்கள் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.

    துர்மத கண்டனம் என்றென்றும் சான்றோர்களின் செயல்பாடாக இருந்திருக்கிறது. ஆப்ரஹாமிய மதங்களில் சொல்லப்படும் இறைக்கோட்பாடு எந்த தர்க்கத்திற்கும் லாயக்கு கூட இல்லாத கோட்பாடு. உலக அமைதிக்கும் மானுட குலத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் ஒரு கோட்பாடு. இன்றைய திகதியில் எங்கெங்கெல்லாம் மனிதர்கள் இரக்கமின்றி ஒருவரை ஒருவர் லக்ஷக்கணக்கில் கோடிக்கணக்கில் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனரோ அதற்கு ஹேதுவான ஒரு கோட்பாடு. அந்த ரீதியில் அதை எதிர்ப்பதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை.

    இப்படிப்பட்ட அரக்கக்கோட்பாடுகள் ஹிந்துஸ்தானத்தில் புழங்குகையில் நமது கலாசாரத்தை உள்வாங்கி மானுடத்தையும் உள்வாங்கியிருக்கின்றன என்பதும் உண்மையே. ஹைந்தவமாகிய ஆப்ரஹாமியம் அரக்கத்தனம் கழுவப்பட்ட கலாசாரம் பேணும் ஆப்ரஹாமியம். மானுடம் போற்றும் கலாசாரம் போற்றும் இத்தகைய ஆப்ரஹாமியத்தில் எமக்கு பிணக்கில்லை. இதன் படி ஒழுகுபவர்களை நான் மனமாரப்போற்றியும் இருக்கிறேன்.

    அரக்கக்கோட்பாடுக்கு பரங்கிப்பணத்தில் பிள்ளை பிடிக்கும் செயல்பாடுடைய……. பரங்கியர் பெயரை சூட்டிக்கொண்டதில் ஆனந்தப்பட்டு ………தமிழுக்காக கண்ணீர் சொறிவது போல் நாடகமாடும் ரெ.மே அம்மணியை…… தாங்கள் அர்த்த பூர்வமாக ஹித பாஷணமாக சாடியமையில் எமக்குப் பெருமிதம் தானே. சம்வாதம் என்பது ஒத்த கருத்தை ச்லாகிப்பதும் பேதங்களை உள்ள படிப் பகிர்வதும் தானே.

  126. அந்தக் காலத்தில் போட்டிகளில் விவாதம் செய்வோர் அனைவரும் வென்றவர் கருத்தை, தோற்றவர் ஏற்றுக் கொள்வோம், இல்லையென்றால் தீயில் இறங்கி உயிர்துறப்போம் அல்லது கழுவில் ஏறுவோம் என்றெல்லாம் சபதம் எடுப்பது வழக்கம். நமக்கு இதைப் போன்ற சபதங்களில் உடன்பாடு இல்லை என்றாலும், இப்படி சபதம் செய்வோர் தோற்றபின்னர் உயிர்துறப்பதை பெருமையாகவும் தான் கொண்ட கொள்கைக்காக செய்த தியாகமாகவும் கருதினர்.

    பழைய தமிழ் இலக்கியங்களிலும் நம் மன்னர்கள் எதிரிகளுடன் போருக்கு புறப்படும் முன்னர் இதுபோன்ற சில சபதங்களை செய்துள்ளதாக தெரியவருகிறது. நம் மன்னர்கள் செய்த சபதன்களைப் பற்றி சங்க இலக்கியங்களிலும் சில பாடல்கள் உள்ளன.

    வாதங்களில் வெற்றி பெற்றோர், தோல்வி அடைந்தவர் உயிர் துறப்பதை விரும்பமாட்டார்கள். சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின் அடிப்படையிலேயே கழுவேறினார்கள். அதற்கு சைவர்கள் யாரும் பொறுப்பல்ல. திக ஆதரவாளர்கள் பல புத்தகங்களில் சைவர்கள் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதுபோல பொய்யாக எழுதி திரிகிறார்கள். சமணர்கள் கழுவில் ஏறினர் என்பதே சரி. கழுவில் ஏற்றப்பட்டனர் என்பது பொய். பெரியார் திடலில் பரிசுத்த ஆவியில் இட்டலி இடியாப்பம் சுடும் திகவிடம் என்ன எதிர்பார்க்க முடியும். ?

  127. சஹோதரி ரெபேக்கா மேரி

    என்னுடைய மொழிநடை தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ கலந்த கலப்பு மொழிநடை. இதை நேர்மையாக இந்த தளத்திலும் மற்றைய தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். என்னுடைய மொழிநடை என் இயல்பின் பாற்பட்டு கலப்பு மொழிநடையாக இருப்பினும் எந்த மொழியும் கலவா தூய தமிழின் மீது எனக்கு மிகுந்த காதல் உண்டு. ஸ்ரீ தாயுமானவன் இதைத் தெளிவாக அறிவார். என்னிடம் பரிச்சயமான ஒத்த கருத்துடைய பேதமான கருத்துடைய அன்பர்கள் பலரும் இதை அறிவர். ஆகையால் எம்முடைய மொழிநடையை விமர்சனம் செய்ய விழைபவர்கள் பால் எமக்கு எந்த பிணக்கும் கிடையாது. ஆனால் விமர்சனம் செய்பவர்கள் தூய தமிழை செயல்பாடாகக் கொண்ட அன்பர்களா அல்லது தூய தமிழ் என்று கோஷம் போடும்,,,,,, பரங்கியருக்குத் தொண்டூழியம் செய்யும் மாபாதகர்களா…….. நாடகமாடிகளா……. என்று நிச்சயம் பார்த்து தோலுரிக்கும் செயல்பாடும் உடையவன். தங்களுக்கும் தூய தமிழுக்கும் தங்களுக்கும் நேர்மைக்கும் பல்லாயிரம் காத தூரம் என்பதை தங்கள் செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

    பரங்கியருக்குத் தொண்டூழியம் செய்ய எம்முடைய தேசத்தையும் தேசத்து கலாசாரத்தையும் விலைபேசும் உங்களுக்கு………… தமிழரின் தொல் சமயமான சைவத்தில் ஒழுகும் எமது சஹோதரரை அரக்கத்தனமான கோட்பாடுடைய உங்கள் பரங்கியர் மதத்திற்கு மதமாற்றம் செய்ய விழைந்த உங்களது இழிவான செயல்பாடையும் உலகம் அறியும்.

    பெயருக்கும் மொழி உணர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று வினவியிருந்தீர்கள்.

    வேதாசலம் என்ற பெயரை மறைமலை என்றும் சூரிய நாரயண சாஸ்த்ரி என்ற பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும் மாற்றிக்கொண்டவர்கள் மூடர்கள் என்று பரங்கிய அம்மணி நினைக்கலாம் தான்.

    உங்களது இலக்கு ஆப்ரஹாமியத்துக்கு பிள்ளை பிடிப்பது என்ற படியால் மொழி உணர்வு என்பது எப்படித் தெரிந்திருக்கும்.

    மொழி உணர்வு என்ற பெயரில் நாடகமாடுதல் மட்டும் தானே மிஷ நரிகளின் செயற்பாடு.

    எமது சமயம், கலாசாரம், மொழி, கோவில்கள், கலைக்கூறுகள் இவற்றை சுவடின்றி அழித்தொழிப்பது தானே உங்களது இலக்கு.

    \\\\ இதற்க்கு மேல் மனுதர்மத்தின் புனிதத்தை பற்றி அது சமுதாயத்திற்கு கூற வரும் நல்ல விடயங்களையும் க்ருஷ்ண குமார் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்று கூறட்டுமே. \\\\\

    அம்மணி, மேம்போக்காகத் தெரிந்த எந்த விஷயத்தைப் பற்றியும் முற்று முழுதாகத் தெரிந்தது போன்று நடிப்பது எமது செயற்பாடு இல்லை என்பதும் ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    விவாதம் மனுதர்மத்தை ஸ்ரீமான் தாயுமானவன் குறை கூறுவதைப்பற்றி இல்லை. ஒரு விஷயத்தைக் குறைகூறுவதன் முன்னர் அது பற்றிய முழுமைப்பார்வை உண்டா இல்லையா என்பது. மொழியாக்கங்களிலிருந்து என் நிலைப்பாடு பற்றி நிச்சயமாக அறிவேன்.

    மூல நூலை ஆராயாமல் மொழியாக்கத்தை மட்டிலும் ஆதாரமாகக் கொண்டு ஒரு கருத்தைப் பகிர்வதில் முழுமை இல்லை. இந்த வரைக்கும் நீங்கள் என்னை இடித்துறைப்பதை முழுமையாக ஏற்கிறேன்.

    இணையத்தில் உலா வரும் டுபாக்கூர் மொழியாக்கத்தில் ஆழ்ந்து……. இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு புளுகுக் கருத்துக்களை பரப்புரை செய்த…….. முழுமுட்டாள்களை பொது தளத்தில் தோலுரித்து துவைத்து வெளுத்திருக்கிறேன்.

    சமயம் கிடைக்கும் போது மனு தர்ம சாஸ்த்ர மூல நூலை வாசித்தறிந்து அது பகிரும் நல்ல விஷயங்களைப் பகிர முனைகிறேன். அது வரை தாங்கள் எம்மை இடித்துரைப்பதை சிரம் தாழ்ந்து ஏற்கிறேன்.

    ஸ்ரீமான் தாயுமானவனுக்கு ஒரு அலகீடு எமக்கு ஒரு அலகீடு என்று நிச்சயமாக இருக்கவியலாது.

    உங்களது விவிலியம் கூட முழுக்க முழுக்க பயங்கரவாதத்தையும் உலக அழிவையும் மூடத்தனங்களையும் ஆப்ரஹாமிய ஏகாதிபத்யத்தையும் மட்டிலும் பகிர்வதில்லை என்று நீங்கள் அறிவீர்களே. இந்த தளத்தில் கருத்துப் பதிந்த பல ஆப்ரஹாமிய அன்பர்கள் கூட விதிவிலக்காக விவிலியத்தில் உள்ள சொல்பமான நல்ல விஷயங்களையும் கூட பகிர்ந்திருக்கிறார்களே 🙂

    பரங்கியர் மதத்திற்காக பரங்கியருக்கு பிள்ளை பிடிக்க……. பரங்கிப்பிச்சைப்பணத்தில் தொண்டூழியம் செய்யும்………. தேசத்ரோஹத்தில் ஆழ்ந்து……. பித்தலாட்ட மதமாற்ற இழிவுச் செயல்பாடுகளில் ஈடுபடும்………..ஐந்தாம்படை பயங்கரவாத ஆப்ரஹாமியருக்கு தேசத்திற்குத் தொண்டு செய்யும் ஆர் எஸ் எஸ் பற்றிப்பேச எந்த அருகதையும் கிடையாது.

    மற்றபடி ஒத்த சமயத்தில் ஈடுபாடுடைய ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களுக்கு தமிழர் தம் தொல் சமயத்திற்கு தமிழ் ஹிந்து தளமும் ஆர் எஸ் எஸ் ஸும் ஆற்றிய தொண்டுகளை குறிப்பாக முன்வைப்பேன்.

    விவிலியத்தில் தமிழைத் தேடிக்கண்டு பிடித்து விட்டீர்களா 🙂

  128. பாலா சுந்தரம்

    அப்பப்பா ரெம்ப கொதிகிறீங்க. யாருக்கு ராமானுஜர் கதை சொல்றீங்கன்னே நீங்க கொழம்பி போய் கிடக்கீங்க. இதுல ஒரே ஊகம் வேறு. எந்த பக்ஷம் பேசுகிறோம் என்றே தெரியாம ரொம்ப கொழம்பி போய் கிடக்கீங்க.

    நீங்கள் ரெண்டு வருஷம் நெட்டில் கிடைத்த வைணவ விசயங்களை படித்து விட்டு வந்து அலம்புவது ஹாஸ்யமாக இருக்கு 🙂 அதை எழுதுவதில் எத்தனை காழ்ப்புணர்ச்சி. நீங்கள் எப்படித்தான் எழுதினாலும், வைணவர் குல கூடஸ்தராக நாங்கள் கொண்டாடுவது நம்மாழ்வாரை தான். பாசி மணி ஊசி மணி வைப்பவரை சாமியாக்கி சாமியை ஆழ்வாராக்கியது நாங்கள் தான். எமக்கு நீர் சீர்திருத்தம் சொல்லி தர வேண்டாம். ராமானுஜர் வேற எந்த ஆழ்வாருக்கு தனியன் இடவில்லை, கள்ளனுக்கு தான் இட்டுருக்கிறார். இதை மனதில் வைத்தே இன்னமும் வாழ்கிறது வைணவ சமூஹம். திருப்பனனுக்கும் சந்நிதி எம்பெருமான் பக்கிலே தான் உறையூரிலே. ஒரு முறையேனும் அமலனாதிபிரானுக்கு பெரியாவாசான் பிள்ளை இட்ட வியாக்யானம் பாரும். மற்ற ஆழ்வார்களை நிந்தித்து இவரே ச்ரேஷ்டர் என்று ச்லாகிப்பார். இந்த பரம்பரை இன்னும் தொடருகிறது.
    நாங்கள் கடந்து வந்து விட்டோம். ஒரு வந்தேறிக் கூட்டம் வந்த கூட்டம் இங்குள்ளவரை குரங்காட்டம் காட்டி குரங்காக மாத்தியது. அந்த குரங்குகள் இன்னும் ஆதி இறைவனை நினைத்துக் கொண்டு விட்டெரிந்த காசுக்கு இன்று கத்தி கொண்டுள்ளது. கொஞ்ச நாள் கழித்து பார்த்தல் தெரியும் சமூஹம் இன்னும் முன்னே சென்றிருக்கும். குரங்கு கூட்டம் மட்டும் கூச்சலை நிறுத்தி இருக்காது.

  129. வியாசன்

    //
    இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளை விட தமிழில் தான் சமஸ்கிருதம் மிகக் குறைவாகக் கலந்துள்ளது. சம்க்கிருதச் சொற்கள் இல்லாமலும் தமிழால் தனித்தியங்க முடியும், ஆனால் சமக்கிருதத்தால் தனித்தியங்க முடியாது. அது ஏற்கனவே செத்தும் போய் விட்டது. சமஸ்கிருதமும் தமிழிலிருந்து அதிகளவில் சொற்களை இரவல் வாங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏனோ?? 🙂
    //

    தமிழில் தான் சமஸ்ருத கலப்பு கம்மி. இது உண்மை. சமஸ்க்ருத கலப்பு இல்லாமல் தமிழால் தனித்து இயங்க முடியும். என்னை பொறுத்த வரை நடை முறை சாத்தியம் கிடையாது. உதாரணமாக விபத்து என்பதற்கு ஒரு தமிழ் சொல் கூறுங்கள். அமைச்சர் என்பதற்கு ஒன்று சொல்லுங்கள். அரசன், கோ என்பதற்கு ஒரு தமிழ் சொல். நீங்கள் சொல்லும் சொல்லீலாம் வழக்கில் உள்ளதா என்று பரீட்சித்து பாருங்கள். பரீட்சை என்பதற்கு தமிழ் சொல் தேர்வு அல்ல. பரீட்சைக்கு (பிரித: ஈக்ஷதே இதி பரீக்ஷா – சுற்றிலும் சரிதானா என்று நோக்குவது).

    //
    ஆனால் சமக்கிருதத்தால் தனித்தியங்க முடியாது
    //
    இது அபத்தம். எதை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள். ஒன்றிரண்டு உதாஹரணம் தர முடியுமா.
    மொழி இன்னொரு மொழியிலிருந்து வார்த்தைகளை வாங்கிக் கொள்வது சகஜம். ஆனால் சமஸ்ருததின் சொல்லாட்சிக்கு நிகரே கிடையாது. நான் தமிழன் தான் அதற்காக உண்மையை ஒத்துக் கொள்வதில் என்ன குறைச்சல். எனக்கு வெறி கிடையாது.
    மற்ற மொழிகளில் உள்ள ஒரு குறை என்ன வென்றால் ஒரு சொல் எப்பொழுதும் ஒரு பொருளை குறிக்கும். சமஸ்க்ருதத்தில் ஒரு சொல் என்றைக்குமே ஒரு பொருளை குறிக்காது. இதற்க்கு நிறைய உதாஹரனகள் இருக்கு. மேலே சொன்ன பரீக்ஷா இதற்கு ஒரு எடுத்துக் ட்டு. சங்கதம்.காம் இல் நிறைய இது போல் தந்துள்ளனர். படித்துக் கொள்ளலாம்.

    கருனாதிக் கூட்டம். Tablet computer என்பதை கஷ்டப்பட்டு குளிகை கணினி என்று மாற்றியது. குளிகை என்பது சமஸ்க்ருத சொல். குளிகா என்றால் tablet. ஏன் அப்படி கிலதி அதனால் குளிகா (முழுங்கப்படுவதால் குளிகா).
    சரி கணினியாவது தமிழா இல்லை. கணயதி இதி கணகம். கணிதம் என்பது சமஸ்க்ருத சொல். கணகம் என்றால் சமஸ்க்ருதத்தில் (கால்குலேடர்) சங்கனகம் (சம்யக் கணயதி நன்றாக கணிப்பதால்) அது கம்ப்யுடர்.

    இப்படி கதை நீண்டு கொண்டே போகும். சமஸ்க்ருதத்தில் பெயர் சொல் என்றும் தனியாக கிடையாது அதுவும் வினை சொல்லிலிருந்து தான் வரும். எல்லா வினைசொல்லிர்க்கும் ஒரு தாது இருக்கும். ரம் என்ற தாது என்றால் இன்பம் தருபவன் என்னு அர்த்தம். ரமயதி இதி ராம:, மற்றோருக்கும் இன்பம் தருபவன் ராமன்.

    உங்களை போன்றோர் திராவிட மாயையில் மூழ்கி எதை எதிர்க்கிறோம் என்று கூட விளங்காமல் நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டிக் கொண்டிருகிறீர்கள். உங்களை இந்த சுவி சேஷ கோஷ்டி முழுங்கிவிடும்.

  130. //நீங்கள் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் வடமொழி மதமொழியாகவே தொடரும். //

    திரு. BALA SUNDARAM KRISHNA,

    வடமொழி மதமொழியாக ஏன் தொடர வேண்டும். தமிழை மதமொழியாக்கினால் என்ன. தமிழர்கள் எதற்காக மதமொழியாக வடமொழியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். சமஸ்கிருதத்துக்கு அதிர்விருக்கிறது, குதிர்விருக்கிறது என்றார் வாதம் வேண்டாம். ஏனென்றால் தெய்வத்தமிழுக்கும் தமிழுக்கும் தெய்வீக சக்தியுண்டு என எங்களின் நாயன்மார்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

  131. //அதோடு உலகத் தமிழ் மாநாடு உலகெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமை அடையும் நாம் அதைக் கொண்டாடும் குறிப்பிட்ட நாடு எதிர்த்தால் என்ன செய்ய முடியும்? அவர்களுடைய மொழி உணர்வுக்கு இது எதிர்ப்பு என்று சொன்னார்களெனில்? மொழி உணர்வு பாதிக்கப்படுகிறது என்று சொன்னால்? என்ன செய்வோம்? நம் மொழியை உலகநாடுகள் கொண்டாடுகையில் நம் நாட்டில் உள்ள ஒரு மொழியை ஏதோ சில பள்ளிகள் மட்டும் கொண்டாடுவதில் என்ன ஆகிவிடும்? புரியத் தான் இல்லை! //

    கீதா சாம்பசிவம் !

    புரியவும் மனது வேண்டும். உலகத்தமிழ் மாநாடு எனபது ஒரு கொண்டாட்டமன்று. எனவே கொண்டாடப்படுகிறது என்பது பொருத்தமற்ற சொல். இம்மாநாடு பாமர மக்களுக்காக கூட்டப்படவில்லை. தமிழறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு கூடுமிடத்தையும் கதைக்குமிடத்தையும் ஏற்படுத்தித் தர. தமிழ் ஆர்வலர்கள் கலந்து இவ்ர்கள் பேச்சையும் விவாதத்தையும் கேட்பர். உலகமெங்குமிருந்து வரும் தமிழறிஞர்கள் தங்கள்தங்கள் கண்டுபிடிப்புக்களை சிறப்புத்தாட்களாக‌ மேடையில் வாசிப்பர். அவற்றுள் வைக்கப்பட்ட கருத்துக்கள் விவாத மேடையில் பேசப்படும்.

    தமிழின் தொன்மை; தமிழ் எதிர்நோக்கும் இன்றைய கேள்விகள்; எதிர்காலத்தை தமிழ் எப்படி எதிர்கொண்டு முன்னடை போடவேண்டும்? தமிழ்ப்புலவர்களின் படைப்புக்கள். புதிய படைப்புக்கள் பழைய படைப்புக்கள்; சமய இலக்கியம்; பொது இலக்கியம்; சிற்றிலக்கியங்கள்; பேரிலக்கியங்கள்; புலம்பெயர்தோரின் தமிழ்க்கொடை; இவை பற்றிய‌ அமர்வுகள் – இப்படி ஒரே தமிழறிஞர்கள்தான் சேரமுடியும். கேட்க முடியும்.

    தற்காலத்தில்தான் இம்மாநாடு அரசியல்வாதிகளால் கெடுக்கப்பட்டது. தங்கள்தங்கள் அரசியல் ஆதாயத்தை இம்மாநாட்டிலும் சேகரிக்க அவர்கள் முனைந்தார்கள்.

    இப்படி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மாநாட்டு மலர் ஏதாவது ஒன்றை படித்ததால் நான் சொல்வதெல்லாம் புரியும்.

    அடுத்து, உங்கள் அந்த நாடுகள் எதிர்த்தால் என்பது பற்றி….

  132. திரு. sarang,

    //தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வட மொழி வாதிகள் யார். இது நிதர்சனமா அல்லது உங்களது என்னமா. எவ்வளவு தமிழர்கள் சார் சமஸ்க்ருதத்தை எதிர்கிறார்கள். அண்ணா சமஸ்க்ருத எதிர்ப்பையும் ஹிந்தி எதிர்பையும் குழப்பிக் கொல்லாதீர்கள் //

    நீங்கள் தான் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொல்ல அல்லது கொள்ள முயற்சிக்கிறீர்கள் அம்பி. 🙂

    தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வடமொழிவாதிகள் யார் என்பது உங்களுக்கே தெரியும். எல்லோரும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் தான்.
    ஒவ்வொருமுறையும் தமிழில் தமிழ்நாட்டில் தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கோயிலகளில் மதமொழியாக ஆக்க முனையும் போது அதை எதிர்ப்பவர்கள் யார்? அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போவது யார்?

    சைவர்களாகிய பெரும்பான்மை உலகத்தமிழர்களின் மெக்காவாகிய சிதம்பரத்திலேயே தமிழர்களால தமிழில் பாட முடியவில்லை, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனது யார்?

    இந்தியாவின் மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் மொழி எல்லோருக்கும் கட்டாய பாடமாக இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தமிழை எல்லோரும் கற்க வேண்டுமென்பதை எதிர்ப்பவர்கள் யார்? அவரகள் தான் தமிழெதிரி வடமொழிவாதிகள். அதில் தமிழை நீசபாசை என்று இழிபடுத்தியவர்களும் அவர்களின் விசிறிகளும் அடங்குவர்,.

    தமது முன்னோர்களின் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தை மிகவும் போற்றும், அசைக்க முடியாத இந்துக்களாகிய இலங்கைத் தமிழர்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்படும் போது, அவர்களின் பழமை வாய்ந்த கோயில்கள் எல்லாம் அழிக்கபபடும் போது, சிங்களவர்களை இந்திய அரசு ஆதாரிக்க வேண்டும் என்று ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நேரடியாக தோன்றி வேண்டுகோள் விடுத்த தமிழெதிரிச் சமக்கிருதவாதிகளும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களும் இந்துக்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை, அவர்களுக்கு தமிழையும் தமிழர்களையும் எதிர்க்க வேண்டும் அவ்வளவு தான்.

    தமிழ்நாட்டுத் தமிழெதிரி வடமொழிவாதிகளுக்கு இன்னும் பல உதாரணங்களை என்னால் தரமுடியும். ஆனால் இந்த தளத்தில் அது வீண் வேலை. அவற்றை நான் எழுதினாலும் வெளியிடுவார்களோ தெரியாது. நீங்கள் விரும்பினால் எனது வலைப்பதிவில் எழுதுகிறேன்.

  133. பாலா

    //
    இந்தியா முழவதும் தலித்துக்களின் மீதான தீண்டாமை அவலம் இந்த மனுவாலேயே. ஆனால் சிலவற்றை விலக்கிவிட்டு மற்றவற்றை ஏற்கலாம் என்றால், நீங்கள் எதையும் எளிதில் ஏற்கும் சட்டை மாற்றிதானே. உங்களைப் பிற இந்துக்கள் எப்படி நம்புவது? Completely throw it out. If you accept the major part, naturally you will end up accepting the left out soon.
    //

    சார் உங்களுக்கு சுத்தாமா எதுவும் இல்லை. இப்படி மனு சாஸ்திரம் சிறந்தது என்று இட்டுக் கட்டும் வேலை எங்களுக்கு இல்லை. அதை தூக்கி போட்டது ஒரு தமிழ் ஹிந்து தான். இதையும் எழுதி இருக்கிறேன். காமாலை காரனுக்கு கண்ணு மட்டும் தான் சரியா தெரியாது என்று நினைத்தேன். உமக்கு பித்தம் தலையில் ஸ்வாமின்.

    ஜாதி திருமணம் பற்றி பேசினால். அதன் அர்த்தம் புரியாமல் அச்சு பிச்சு தனம். கர்ம செய்வதற்கு என்று மனம் முடித்தாள் ஜாதி கட்டுப்பாடு இருக்க தான் செய்யும். அழகை பார்த்து கன்னலம் கட்டுபவனுக்கு கர்ம என்ன வேண்டிகிடக்கு ஜாதி என்ன வேண்டிகிடக்கு. இதையும் தான் சொல்லி இருந்தேன். அதை படிக்காதே உம்ம கண்.

    திருவான்மியூர் ஸ்டால் சென்று நீங்கள் பார்துது சாதி தான். உங்கள் கண்ணில் தான்னே பிரச்சனையை. நான் அங்கு அத்தனை நாட்களும் இருந்தேன். எல்லா ஸ்டால்களுக்கும் சென்றேன் (ஜாதியா ஸ்டால் உட்பட). அங்கே பிணம் எரிப்பவர் ஸ்டால் முதல் வரை பிராமன சங்கம் வரை எல்லோரும் சம தளத்தில் இருந்தனர். ஒரு ஹிந்துத்வா ஐக்கியத்தை அங்கே காண முடிந்தது. உமக்கு என்னடா எல்லாரும் செர்ந்துடான்களா என்று வயித்தெரிச்சல் :-). நாடார் சங்கத்திற்கு மூணு ஸ்டால். பிராமன சங்கத்திற்கு தம்மை துண்டு ஸ்டால் பாத்தீங்களா 🙂 . இதை நிர்வாகம் செய்த கேடு கேட்ட பிராமணர்களை விடுங்கள்.

    நீங்க அங்க வந்து சுத்தி பாத்துட்டு மிளகா பஜ்ஜி சாப்டு சென்ற ஆளு தானே. ஒவ்வோர் இடத்திலும் நிற்று அவர்கள் என்ன காரியம் செய்கிறார்கள் என்று கேட்டேர்களா. அவர்களின் பரந்த ஐக்கிய நோக்கை பார்த்தீர்களா. நாட்டார் சங்கம் ஸ்டாலை பார்த்து ஐயோ நாட்டார் சங்கம். மறுத்து பாண்டியர் ஸ்டாலை பார்த்து ஐயோ இவன் அனைவரையும் ஆண்டானா என்று வயிறு நோகள்.
    முஹம்மது பின் துக்ளக், அவுரங்கசீப் ஸ்டால் போட்டாதான் உங்களுக்கு சந்தோசம் போல.

    //
    எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. உங்களுக்கும் இந்துத்வாவுக்கும் ஏழாப்பொருத்தமிருக்க, எப்படி இங்கே உலாவுகிறீர்? மனுவை ஆதரிப்பது ஏன் என்பது இப்போது புரிகிறது. உங்கள் ஜாதியே என்ற பேச்சுக்கு வலிமை தேட மூசுலீம்களைப்பற்றி பேசுகிறீர்கள். அவாளைக் கட்டச்சொல்லு; நானும் எம் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிறேன். அதாவது நீராக வந்து எதையும் செய்ய மாட்டீர். தலித்துகளை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளா நீஙகள், இந்துமதவளர்ச்சிக்காக தன் ஜாதிவெறியைத் துறக்க இயலா நீங்கள் இசுலாமியரும் கிருத்துவர்களும் தலித்துக்களை ஏமாற்றுகிறார்கள் எனற கபட‌ நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். They are citing persons like you to dalits. உம்மைப்போன்ற பேர்வழிகள் இருக்கும்வரை எப்படி தலித்துகள் இந்துவாக இருப்பார்கள்? வடமொழி என் கண்; தலித்துகளிடம் நாங்கள் நெருங்க மாட்டோம் என்று சொல்பவர் எப்படியப்பா இந்துமதத்தை வளர்க்க முடியும்? மாறப்பாரும். இல்லாவிட்டால் இசுலாமியராகி அல்லது கிருத்துவ பிராமணனாக உம்வீட்டுப்பெண்களை இன்னொரு பிராமணனுக்கு கட்டி வையும்.
    //

    அடடா என்ன புரட்சி என்ன புரட்சி. உங்க வீட்டு பொண்ண ஒரு சுடான் நாட்டுகாரனுக்கு கட்டி வைத்தா மகா புரட்சி. வெக்கமா இல்லை. மாற்றம் தன்னில் வர வேண்டும் சாமி. எங்கள் வீட்டில் நாங்கள் கம்மா ஜாதி பொன்னை கட்டிருக்கோம்.
    முஸ்லிம்களை கேள்வி கேட்பது நீ கேள்வி கேக்க உரிமை இல்லை என்பதற்கு. அவன் ஞாயமா கேள்வி கேட்டா பதில் தரும்வோமலா. உம்ம முயற்சி மத மாற்றம். அதான் வாய மூடு என்கிறோம்.

    //இந்துமதவளர்ச்சிக்காக தன் ஜாதிவெறியைத் துறக்க இயலா // இதை எப்படி நீர் முடிவு பண்ணலாம். உமக்கு என்னை பற்றி தெரியுமா. உங்களுக்கு உம்மை பற்றியே தெரியாதிருக்க ஏன் லவட் ச்பிகர் வைத்து கத்துகிறீர்கள். உங்களது அறியாமை அம்பலமாகிறதே. அடுத்தவனை பற்றி ஒரு கருத்து கூற உமக்கென்ன உரிமை.

    என்னை பற்றி இவ்வளவு கேவலமாக கருத்து கூறுகிறீர்களே அதன் அடிப்படை என்ன. அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று உமக்கு தெரியுமா. எதை வைத்து பேச்சு. நான் பிராமணனா இல்லையா என்று கூட உங்களால் நிர்ணயம் செய்ய முடியாதிருக்க ஏன் பிதற்றல்.

    நீங்கள் பொதுவான கருத்து பரிமாற்றத்தை விட்டு தனி மனித தூஷனையில் இறங்கி விட்டாயிற்று. கழக கண்மணிகள் எதை கய்யால்வார்களோ அதையே தான் நீரும் செய்கிறீர். தொடரட்டும் உங்கள் உபயம்.

    //உதாஹரணம்
    சரணாகதியடைந்தார் மதுரகவி. தன் ஈகோ எல்லாம் ஒழிய இவரன்றி எனக்கு வேறு தெய்வமே இல்லையென எடுத்தார். //தேவமற்றறியேன்//

    சாரங்கன்! இக்கதை அல்லது வரலாற்றின் நோக்கமே உம்மைப்போன்றவருக்குத்தான்
    //

    இது எனக்குதான் என்று எப்படி நிர்ணயம். நான் சாதியத்தை தொடாமல் இருக்க எனக்கு மதுரகவியார் கதை படிக்க அவசியப்படவில்லை. அதற்க்கு முன்னே எங்களுக்கு அந்த நோக்கம் தான்.

    நீங்கள் எங்கு ஆரம்பித்தீர் எங்கு வந்துள்ளீர் பார்த்தீர்களா. சமஸ்க்ருதத்தில் ஆரம்பித்து தனி மனித தூஷனை. உங்களது அழகு இது தான்.

    உமக்கு காமாலை என்ன சொல்கிறது. சமஸ்க்ருதத்தை ஆதரித்தால் அவன் அய்யரு. மோடி அய்யரா. சுத்த புத்தி குருடாக இருக்கிறீர்கள் சார் நீங்கள்.

  134. இன்னொரு நாட்டில் தமிழறிஞர்கள் கூடி விவாதிப்பதை அந்நாட்டினர் எதிர்க்க மாட்டார்கள். காரணம். தமிழர்கள் சிறுபான்மையினர். அவர்கள் மொழி பற்றிய ஆராய்ச்சிக்காகத்தான் கூடுகிறார்களே தவிர, அந்நாட்டு மதத்தைப்பற்றியோ அரசியலைப்பற்றியோ அல்ல. உண்மையில் இம்மாநாடுகள் தொடக்க விழாவை அந்நாட்டு ஆட்சியர் ஒருவர்தான் தொடங்கிவைப்பார். அவருக்கு கொடுக்கும் மரியாதையாக. அதன்பிறகு அந்நியருக்கும் இம்மாநாட்டுக்கும் தொடர்பில்லை. எங்கு தமிழ்பேசுவோர் மொதத ஜனத்தொகை கணிசமாக இருக்கிறார்களோ அங்குதான் இம்மாநாடு நடக்கும். தமிழரே இல்லாத நாட்டில் நடக்காது. எனவே, கனடாவில், மொரீஷியஸில், தில்லியில், மும்பாயில், சவுத் ஆஃபிரிக்காவில், இலங்கையில் – இப்படி நாடுகளில் நடக்கலாம்.

    ஒருவரின் மொழி உணர்வுக்கு எவருமே எங்கேயுமே எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது அவ்வுணர்வு அறிவு மட்டுமாக இருந்தால். அரசியல் கலக்கும்போது அங்கு மற்றவருக்குப் பிரச்சினை எழும். As long as it remains a forum for intellectual exchanges regarding Tamil language, her heritage and her legacy etc. it is an innocuous gathering of intellectuals. No outsider will bother about it. எடுத்துக்காட்டாக, உலகத்தமிழ் மாநாட்டில் தமிழைப்பற்றித்தான் பேசவேண்டும். தமிழர் பிரச்சினைபற்றி பேசக்கூடாது. அஃது அரசியலாகி விடும். அப்படி பேச வாய்ப்பு வேண்டுமென்றால், அதற்கென தனி மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. அங்கு பேசுவர்.

  135. தமிழில் பல பாடல்களை எழுதி புகழ் பெற்ற பாரதிக்கும் சமஸ்பிரத பற்று உண்டு என்பதை தெளிவாக்கும் ஒரு நிகழ்வு:

    பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல் – முரண்பாடு வந்தது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

    ஆனாலும் அப்படி ஒரு மோதல் நடந்தது என்பது மட்டும் உண்மையே!

    ஞானபாநு என்னும் ஓர் மாத இதழ் அதில் (1915 ஜூலை) சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளில் க,ச,ட,த,ப எனும் எழுத்துக்களில் நான்கு வகை ஒலி உண்டு; தமிழை எடுத்துக் கொண் டால் அவ்வாறு இல்லை. க என்ற ஒரே ஒலியுடைய ஒரு எழுத்துத்தான் உண்டு. க,ச,ட,த,ப எழுத்துக்களும் அப்படியே தமிழில் ஒரே ஒலி உடையன. இது தமிழில் உள்ள ஒரு குறைபாடு என்றும், இதனைப் போக்கிட சில குறியீடுகளைப் பயன் படுத்தலாம் என்றும் இதில் அரவிந்தரும் என்னோடு உடன்படுகிறார் என்றும் பாரதியார் ஞானபாநு வில் எழுதியிருந்தார்.

    அதே இதழில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நமது வ.உ. சிதம்பரனார் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தார்.

    தெய்வ பாஷை என்றும், பூரண பாஷை என்றும், சொல்லப்படுகிற சமஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும், பல புதுமை களையும், திருத்தங்களையும் கொண்டுள்ள பாஷை என்று சொல்லப்படுகின்ற வங்காளிப் பாஷை எழுத் துக்களோடும் ழ,ற,ன,தி.ஞீ. என்னும் எழுத்துக்களையாவது, அவற்றின் ஒலி களைக் குறிக்கும் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பர்கள் பாரதியார் அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்கள் ஆயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழி காட்டிகள் ஆவார்கள். பின்னர் நம் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள் என்று பளிச் சென்று பதில் அடி கொடுத்தார்.

    இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று மேலெழுந்தவாரியாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் ஆரிய – திராவிட உணர்வு இதற்குள் இழையோடுகிறது.

  136. பாலா

    //
    பாமர மக்களைப்பற்றிதான் பேசவேண்டும். பாமர மக்கள் இலக்கியத்துக்காக அநநிய மொழியைப் படிக்கமாட்டார்கள். இலாபத்துக்குத்தான். இந்தியா முழுவதும் ஆங்கில மோஹம் அது வேலைக்கு உதவும் எனப்தால். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் ஆங்கில மோஹம் அமெரிக்காவில் வேலைக்குப்போகலாமென்பதற்காக.
    //

    எவ்வளவு முரண் பாடுகள் பாருங்கள்.

    பாமரன் ஆங்கிலம் படிக்கிறானா சார். இல்லையே அப்புறம் எதுக்கு இந்திய அரசு ஆங்கிலம் கற்பிக்க அத்தனை பணத்தை கொட்டுகிறது.

    பாமரனை பிடித்து சமக்ஸ்ருத்த வாரம் கொண்டாட சொன்னார்களா. எங்கே சமஸ்க்ருதம் உள்ளதோ அவர்களை கொண்டாட சொன்னார்கள். இதை இன்னும் விளங்கிக் கொள்ள உங்களால் ஏன் முடியவில்லை. ஏன் என்றால் உங்களின் நோக்கம் சமஸ்க்ருத எதிர்பல்லா. உண்மையில்

    1) பிராமன த்வேஷம்
    2) ஹிந்து த்வேஷம்
    3) எப்படியாவது எத்த்யாவது முடிச்சுப் போட்டு கல்லா கட்டனும்

    //
    வடமொழி மக்கள் வாழ்க்கைக்கு உதவாது. ஆங்கிலம், ஹிந்தி உதவும். என்பதுதான் உண்மை. கேவலம். பாவம். புண்ணியம் – என்று வயிற்றெரிச்சலைக்கொடடுகிறீர்கள். நேரடியாக உண்மைகளை எதிர்நோக்கப்பயந்தவன் இப்படி பேசுவான்.வய்தான பிற்கு படித்துக்கொள்ளலாம் வடமொழியை. இப்போது தேவையில்லை.
    //
    என்னன்னா சொல்ல வாரீங்கோ. குழப்பல் திலகம்னா நீங்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையமா. நான் பலர் (அப்ராம்னர்கள் உட்பட) புலம்ப கேட்டுள்ளேன் ஐயோ சிறு வயதில் சமஸ்க்ருதம் படிக்காமல் விட்டு விட்டேனே பாழாப்போன கருணாநிதியால் எல்லாம் வந்தது இப்போதாவது படிக்கிறேன் என்று. அதை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். அடுத்தமுறை ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புறேன்.

    //
    வடமொழி வாரம் கொண்டாடக்கூடாதென்று சொல்லவில்லை நான். ஆனால், அதனால் என்ன நன்மை மக்களுக்கு? ஏன் பிறமொழிவாரம் இல்லை? நீங்கள் ஆதரிக்கும் ஒரே காரணம் அது இந்துமதத்தோடு சம்பந்தப்பட்டது. தமிழ்ம்தான் சம்பந்தப்பட்டது. ஆனால் உங்களுக்கு அதன் வாரத்திற்காக போராட மனமில்லை. அதை மற்றவர்கள் செய்யும் போது வடமொழியின் மேல் வயிற்றெரிச்சல் என்கிறீர்கள். நீங்கள் எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் வடமொழி மதமொழியாகவே தொடரும். மக்கள் மொழியாகாது. முடிந்தால் மோதி தன் ஐந்தாண்டுகளில் செய்யப்பார்க்கலாம். ஐந்தாண்டுகள் கழித்து நாம் ரிவ்யூ பண்ணும்போது 30000 ஆயிரம் தமிழர்கள் 35000 ஆகியிருக்கிறார்களா என்று பார்க்கலாம்.
    //

    ஐயோ எதுக்குன்ன இப்படி அந்தர் பல்டி, கடசியா வேதாளம் இறங்கிருச்சு போல. தமிழ் மொழி வாரம் கொண்டாட தமிழ் நாடு முயல வேண்டும். அதை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். நீங்கள் நிறையா யோசனைகள் சொல்லலாம். மோடி அரசு எடுத்த ஒரு நல்ல முடிவு ஆங்கிலத்தை கை விட்டது. ஏன் ஆங்கிலத்தை கை விட்டார்கள் பஞ்சாபியை கைவிடலாமே என்பது போன்று இருக்கு உங்கள் வாதம்.
    தமிழ் வாரம் கொண்டாடினால் அதை கூறு கெட்டவர்கள் எதிர்த்தால் நானும் குரல் கொடுப்பேன். சும்மா எதுக்கு போராடனும். இப்படி எல்லாம் மாற வெட்டி ராமதாசு தான் செய்வார். நீங்களும் அப்படி தான் எதிர் பார்கிறீர்கள்.

    நான் சமஸ்க்ருத தளத்தில் இருக்கிறேன் அதனால் அதற்கு போராடுகிறேன், இங்கு மட்டும் அல்ல, களத்திலும் கூடத்தான். நீ எதுக்கு இந்த வேலை செய்யற ஒரு முதியோர் இல்லம் ஏன் நடத்தலாமே என்று நீங்கள் யோசனை சொல்கிறீர்கள். இது உங்களுக்கு இருக்கம் குழப்பத்தையே காட்டுகிறது

    அன்ன இந்த முப்பதாயிரம் நாற்பதாயிரமாக இந்தாண்டே மாரும்னா. ஐந்தாண்டுகள் பொறுக்க வேண்டாம். நான் சொன்ன முப்பதாயிரம் உங்களுக்கு புரிய வைக்க ஒரு கணக்கு. அதையும் தாண்டி இருக்கிறார்கள். இன்று இந்தியாவில் சமஸ்க்ருதம் பேசுபவர்கள் ஒரு கோடியை தொட்டுள்ளனர். அறிந்தவர்கள் பேசத் தெரியாதவர்கள் இதை விட அதிகம்.

    சமஸ்க்ருத்திற்கும் பாரதத்தின் ஒவ்வொரு ஒவ்வொரு மூலைக்கும் சம்பந்தம் உண்டு. அது மதத்தை கடந்த மொழி என்று அங்கீகாரம் அடைந்து ரொம்ப நாளாச்சு.
    st james school london. https://www.youtube.com/watch?v=jF3hXu2wH3g

    இந்த வீடியோ பாருங்கள் அங்குள்ள ஆயா புள்ளைங்க என்ன சொல்றாங்க பண்றாங்கன்னு பாருங்க
    அந்தம்மா சொல்லுது (நான் இல்லை) சமஸ்க்ருதம் படிச்சா ஆங்கில உச்சாரணம் நல்ல வருதாம்.

    எத்தனை கிறிஸ்தவ புள்ளைங்க, முஸ்லீம் புள்ளைங்க சமஸ்க்ருதம் படிக்கிறார்கள் தெரியுமா சார்.

    ஒரு அயர்லாந்து (ஒழுங்க படிங்க அய்யர்லாந்து இல்லை 🙂 ) சமஸ்க்ருத வாத்தியார் என்ன சொல்றாருன்னு பாருங்க (John Scottus School in Dublin )

    https://sanskrityoga.wordpress.com/453-2/

    சைட்டு கொஞ்சம் மெல்ல தான் வரும். அவரு சொல்வதிலிருந்தே சமக்ஸ்ருதம் சிறுவர்களுக்கு ஏன் முக்கியம் என்றும் நீங்கள் படித்துக் கொள்ளலாம்.

    சமஸ்க்ருதத்தில் உள்ள சுபாஷிதங்களுள் ஒரு ஐந்து % ஒருவன் படித்தாலே போதும் அந்த மாணவன் அப்புறம் தவறு செய்வது மிக கடினம். இதை சொன்னவர் ஒரு இசுலாமிய ப்ரொபசர். அவரது பெயரை மருந்து விட்டேன். ஊர் திரும்பியவுடன் புத்தகத்தை பார்த்து தருகிறேன்.

    நீங்கள் எவ்வளவு தான் சிண்டு முடிய நினைத்தாலும் அது நிறைவேறாது. மக்கள் தெளிவாகி விட்டார்கள். சிண்டு முடிந்த கழகங்களின் கதி என்ன என்று இன்று நாம் பார்க்கிறோம்.

  137. உயர்திரு. கிருஷ்ண குமார் ….

    பின்னூட்டம் மிக பெரிதாகவும், அதைவிட பயங்கர ஆத்திர ஆத்திரமாகவும் சொற்கள் தெறித்து விழுகின்றன.. ஒன்று மட்டும் தெரிகிறது கழகங்களின் மீதான பீதி இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பது அனைவரின் பின்னூட்டங்களில் நன்றாக புலனாகின்றது. ஏனென்றால், நான் கழகங்களையோ அல்லது அதன் தலைவர்களையோ எப்போதுமே ஆதரித்ததில்லை. ஆனால் நான் வடமொழி திணிப்பை எதிர்ப்பதை ஏதோ கலைஞரிடம் கற்று கொண்டதை நேரில் பார்த்தது போன்றே இங்கு பேசி கொண்டிருக்கிறார்கள். நான் கலைஞரிடம் தான் கற்றுக் கொண்டேன், அவரின் முழு பெயர் பரிதிமாற் கலைஞர் என்பதாகும். மற்றப்படி கழக கலைஞரிடம் அல்லவே அல்ல. அதிலும் சாரங் ஒருப்படி மேலே சென்று, எனக்கு இருப்பது மொழி மீதான பற்றுதல் அல்ல,மத வெறி என்கிறார்!! அதாவது அவரின் கணக்குப் படி சமற்க்ருத மொழியை எதிர்ப்பவர்கள் யாரும் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான். மிலேச்ச பதறுகளாகத் தான் இருக்கும் என்பது அவரின் கண்டுப்பிடிப்பு. வடமொழியையோ அல்லது இந்தியையோ ஒருவர் எதிர்க்கிறார் என்றால் , ஒன்று அவர் கழகக் கண்மணியாக இருக்க வேண்டும் அல்லது ஆபிரகாமிய மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ‘ஷாகா’வில் சொல்லிக் கொடுத்ததையே இன்னும் உளறி கொண்டிருப்பவர்களிடம் நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.. சரி உங்களின் மேலான வாதத்திற்கு வருகிறேன்.

    //உங்களுக்குத் தெரியாத விஷயங்களை நீங்கள் தர்க்கமாக இல்லாமல் வெற்று கோஷங்களாக முன்வைப்பது சலிப்பைத் தருகிறது.//

    இந்த உலகினில் எல்லாம் தெரிந்தவர் என்று யாருமில்லை ஐயா. ஏதோ எனக்கு தெரிந்ததை கூறினேன். நான் கூறியதில் எது உங்களுக்கு சலிப்பை கொடுத்தது என்று கூறினால் தகும்.

    //இந்தத் திரியில் மதிஹீனமாக மிக்க மலினமான உத்திகளை நீங்கள் கையாண்டது போக அவரை சினக்கிறீர்கள்? //

    எது மதியீனமானது?. பிருகதாரன்யக உபநிடதத்தில் உள்ள மாட்டு கறி உண்டால் அறிவுள்ள குழந்தை பிறக்கும் என்பதையா அல்லது மனு தர்மத்தின் வக்கிரத்தை எடுத்து கூறியதையா. இரண்டுமே ஆதாரங்கள் தான். சோதித்து பார்த்து புறம்பாக ஏதாவது இல்லாத ஒன்றை கூறி இருந்தால் ஒரு “Rebuttal” மறுமொழி ஒன்றை போடுங்கள். விவாதித்து கொள்வோம்.

    //ஆரியம் என்றால் என்ன என்று முதலில் ஆதார பூர்வமாகப் பகிரவும். //

    நீட்டி முழக்காமல் ஆதாரத்தோடு சொல்கிறேன்.. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் நானே தாய். என்னில் இருந்தே அனைத்தும் தோன்றின, நான் இல்லா விட்டால் இந்தியாவில் எந்த மொழியும் வாழ முடியாது, அனைத்தும் நானே என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியதைப் போன்று கொஞ்சமும் வரலாற்று அறிவில்லாமல் பிதற்றி கொண்டிருக்கும் பிதற்றலுக்கு பெயர் தான் ஆரியம் என்பது. ஐயம் இருந்தால் மோடியின் சுற்றறிக்கையை பார்க்கவும். நீங்கள் கொஞ்சம் சிந்தித்தால் நான் கூற வருவதன் மொத்த சாரமும் புரியும். புரியவில்லை என்றால் ஒன்றும் சிக்கலில்லை, தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மறைமலை அடிகள் அல்லது பரிதிமாற் கலைஞர் (இப்போதேல்லாம் மறைமலை அடிகள் மற்றும் பரிதிமாற் கலைஞரின் பெயர்களை அடிக்கடி தாங்கள் பயன்ப்படுத்துவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று) இவர்களின் நூலினை வாசிக்கவும், ஆரியம் என்றால் இன்னதென்று தெளிவாக கூறி இருப்பார்கள். இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் திரிகளில் விளக்க முயற்சிக்கிறேன்.

    //எங்கள் பழனியாண்டவன் மீது ஆணையாகச் சொல்லுங்கள் நீங்கள் சம்ஸ்க்ருதம் கற்றதுண்டா? //

    உங்கள் அளவிற்கு எனக்கு வடமொழி ஞானம் இல்லை. ஏதோ எழுத, படிக்க என்கிற அளவில் தெரியும் அவ்வளவே. என் தாய் கற்றுக் கொடுத்தார். வடமொழி என்பது நான் விரும்பாமல் என்னிடம் வந்த ஒன்று. அதனாலேயே அதன் மீது எனக்கு எந்த நாட்டமுமில்லை.

    //மனுதர்ம சாஸ்த்ரத்தை விமர்சிப்பதற்கு முன்னர் நீங்கள் மனுதர்ம சாஸ்த்ரத்தை முழுதும் வாசித்திருக்கிறீர்களா?//

    முழுமையாகப் படித்திருக்கிறேன், உங்கள் அளவிற்கு மனுவில் எனக்கு கருத்தாழம் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஒரு வேளை மனு தர்மத்தில் பெண்களை பற்றி கூறியிருப்பதாக நான் எடுத்து காட்டியது தவறாக இருக்கும் அளவில் அதன் உண்மையான பொருள் என்ன என்பதை தாங்கள் எனக்கு தெளிய வைக்கலாம்.

    //முழு சம்ஸ்க்ருதமே மனுதர்ம சாஸ்த்ரம் …………. முழு சம்ஸ்க்ருதமே ஜாதியம்………..என்று கூறுவது உளறல் இல்லாமல் வேறு என்ன சொல்லுங்கள்? //

    நீங்கள் கூறுவது உண்மை தான்.. ஆனால் சாதியத்திற்கு ஆதரவான கருத்துக்கள் அடங்கி இருக்கும் ஒரே மொழி சமற்கிருதம் மட்டும் தானே ஐயா? மனு தர்மம் போன்று மனிதர்களை நான்காக கூறுப்போட்டோ அல்லது பெண்களை இழிவு படுத்தும் முகமாகவோ தமிழிலோ அல்லது வேறெந்த இந்திய மொழிகளிலோ இருந்தால் எனக்கு கூறவும். முழு சமற்க்ருதமே சாதியத்தை கூறுபவையல்ல தான். ஆனால் சாதியத்தை கூறுபவை அனைத்தும் இருப்பது சமற்கிருதத்தில் தானே அன்பரே. இது அனைத்தும் மக்கள் கருத்து தான் என்னுடையதல்ல.

    //உலகமே சம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறது என்று பினாத்துவது மதிஹீனம்//

    அப்படி நான் எங்கும் கூறவில்லை மன்னிக்கவும்…..

    //மணிப்ரவாளம் புல்லுருவித்தனம் என்ற கருத்து ஒருபுறம் இருக்கட்டும்………. அதில் பார்ப்பனீயத்தைப் பார்க்க விழைவது பித்துக்குளித்தனமின்றி வேறென்ன…………. //

    கண்டிப்பாக மணிப்ரவாளம் புல்லுருவி தனம் தான். அதில் மாற்று கருத்தே இல்லை. ஏனென்றால் மணிப்ரவாளம் என்பது இயல்பான மொழி கலப்பு அல்ல. வலிந்து திணித்த கொடுஞ்செயலே. தமிழ் அழகான மணிபோன்ற மொழி தான். ஆனால் அதனுடன் இருப்பது பவழமல்ல, பச்சை மிளகாய் தான் என்பதை தாங்கள் உணரவும். அதில் நான் எப்போது பார்ப்பனியத்தை பார்த்தேன். அப்படி எந்த கருத்தையும் நான் முன்வைக்க வில்லையே.

    //ஆனால் உங்கள் ஆக்ரஹத்தை செயலில் காட்டுங்கள். //

    இனி வரும் காலங்களில் தங்களின் அறிவுரைப்படி நடக்கிறேன்.

    //மணிப்ரவாளத்தை ஒழிக்க நீங்கள் முனைவதாலெல்லாம் மணிப்ரவாளம் ஒழியாது.. திருப்புகழும்……//

    மணிப்ரவாளத்தை எப்பொழுதோ ஒழித்துப் பாடைக்கட்டியாகி விட்டதய்யா. நான் கதிரவனுக்கு அளித்த பதிலை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இனி தங்களின் முருகப் பெருமானே நினைத்தாலும் அதை உயிர்பிக்க முடியாது அன்பரே,ஐயம் இருப்பின் தாங்கள் பெரிதும் உவக்கும் ஜெயமோகனின் இணையத்திற்கு மீண்டும் சென்று அவரின் தெளிய தமிழ் நடையை பார்க்கவும்.

    //அறிவு பூர்வமாக முழுமையாகக் கருத்துப் பகிருங்கள். காபி பேஸ்ட் கந்தறகோளங்கள்………… //

    மன்னிக்கவும் நான் காபி பேஸ்ட் எல்லாம் செய்வது கிடையாது. உண்மையாக இருப்பின் அதை பகிர்வது. முடிந்தால் நான் கூறியதை பொய் என்று மெய்பித்து காட்டலாம். என்னையும் தாமஸ் ஆல்வா எடிசனை வடமொழி வியாபாரத்திற்கு “Brand Ambassador” ஆக்கி வம்புகிழுக்கும் ஜனார்தன் சர்மாவை போல் நினைத்து கொண்டால் எப்படி?

    மற்றபடி நீங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மஹாசயரை தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்..

    சிவனை யன்றி பிறிதோர் தெய்வத்தை வழிப்படுவது என்னை பொருத்தமட்டில் “சிவ பாதகமே”. இருந்தாலும்…..

    “சிவயநம நமசிவய கார ணன்சுரந்
    தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
    திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் …… புதல்வோனே”

    முருகப்பெருமான் உங்களை காத்தருள்வாராக….

  138. அண்ணா பாலா

    //
    ஆங்கில வாரம் வேண்டாம். ஏன் தமிழ் வாரமில்லை. தெலுங்கு வாரமில்லை, கன்னட வாரமில்லை. வங்காள வாரமில்லை? இவைகளெல்லாம் வெள்ளைக்காரன் பாஷைகளா? இவைகள் சி பி எஸ் சி பள்ளிகள் சொல்லித்தரவில்லையா?
    //

    கன்னட வாரம் எந்த மாநிலத்தில் கொண்டாடுவார்கள் கேரலாவிலா. ஒரியா வாரம் எங்கே பஞ்சாபிலா கொண்டாடுவார்கள். சுத்த பேத்தலாக இருக்கிறதே உங்கள் பேச்சு.

    தமிழ் மாடாடு போட மத்திய அரசு காசு கொடுத்ததே. நாளையே அம்மா ஏன் தமிழ் மாசம் கொண்டாட வேண்டும் என்று கடுதாசி போட்டு கேக்கலாமே. கேட்டால் மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கத்தான் போகிறது.
    இல்லவே இல்லாத ஒரு விஷயத்தை எப்படி இருப்பதுபோல பாவிக்கிறீர்கள்.

    சரி எல்லா இடத்திலும் ஒரு மொழியின் வாரம் கொண்டாட வேண்டும் என்றால் அது எந்த மொழியாக இருக்கும். அதை எப்படி தேர்வு செய்வது. alphabetical order கொண்டா. முதலில் அசாமீஸ் வரும். அசாமீஸ் வார கொண்டாட்டத்தை கேராள காரனை கொண்டு எப்படி கொண்டாடுவீர்கள். சரி கொண்டாட்டம் என்றால் மத்திய அரசு என்ன செய்ய சொல்லி உள்ளது என்று தெரியுமா உங்களுக்கு. ஆயிரம் பேர கூட்டி சோறு போட்டு, ரெண்டு பேர பேச வெச்சு கை தட்ட சொல்லிருக்கா இல்ல வேர ஏதாவதா.

    அந்த அந்த மாநிலத்தில் அவ்வவ் மொழியை கொண்டாட வேண்டும் என்றால் இதை மத்திய அறுசு செய்ய அதில் என்ன இருக்கு. அதை ஏற்கனவே அரசுகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன.
    இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிற்றுவிக்கப்படும் மொழியில் சமஸ்க்ருதம் ஒன்று. சமஸ்க்ருதம் தெரிவதால் பாரத ஐக்கியம் வரும் என்று மத்திய அரசு நம்புகிறது அதனால் சிறுவர்களை கொண்டு சில போட்டிகளை பேச்சு போட்டி இத்யாதி நடத்த சொல்கிறது. இதை என்ன மத்ரசாவிலா செய்ய சொன்னார்கள். ஓஹோ சுற்றறிக்கை பாதிரிகள் நடத்தும் CBSE பள்ளிக்கும் சென்றுள்ளதால் உங்களுக்கு எரிகிரதா. உங்களுக்கு இன்னும் விளங்கலையா. வெறி இன்னும் அடங்கலையா.

    அடுத்த வருஷமே மத்திய அரசும் ஒவ்வொரு பள்ளிக்கும் அம்மாநில மொழியை போற்றி ஒரு விழா நடத்துங்கள் என்ற சுற்றறிக்கை அனுப்பினால் உங்கள் மொகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வீர்கள். உங்கள் காமாலை பார்வைலதான் பிரச்சனையை என்று இன்னுமா புரியல. ஒரு பெங்காளியனுக்கு மராட்டியனுக்கு இல்லாத மொழி பற்று உங்களுக்கு மட்டும் விசேசமா இருக்கா. அவர்கள் ஏன் கூச்சல் போடலை. கேரளாவில் ஏன் கூச்சல் போடலை.

    நமக்கு மட்டும் ஏன் காமால கண்ணு. ஆள் புடிக்கிற கோஷ்டிகளின் ஆற்பரிப்பு தானே இது. கானா போன கழக மனோபாவம் தானே இது.

  139. பாலா

    //
    அந்த இனியேட்டிவ் ஏன்? அதைத்தான் கேட்கிறார்கள். இடியாப்பம் இட்லி கதையெல்லாம் வேண்டாம். இனிஷியேட்டிவ் ஏன் இப்போது? ஒரு பலன் தரும் மொழிக்கென்றால் பரவாயில்லை. காளிதாசனின் நாடகத்தைப் படித்தால் வேலை கிடைக்குமா? பின் இனிஷியேட்டிவ் ஏன்? Why do encourage Sanskrit? You come to know the language only because you are brought up as a brahmin and taught to like the language as your religious tag. Not others. For them, it is just a language and they want to see whether it is useful to them in material sense.
    //

    இது ஒரு idiotic thinking. என் குடுபத்தில் யாருக்குமே சமஸ்க்ருதம் தெரியாது, என்னை தமிழ் தான் படிக்க வைத்தார்கள். ஏன் குடும்பத்தில் யாருக்கும் சமஸ்க்ருத வாசனை கூட கிடையாது. நான் சம்பாதிக்க ஆரம்பித்தப்புரம் நானாக தான் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டேன், சடங்குகள் செய்வதற்கல்ல. எனக்கு நன்றாக பேச வரும். பல தலித்துக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். எனது வகுப்பில் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் படித்துள்ளனர். ஊர் ஊராக சென்று சேரிகளில் மொழி பயிற்சி தந்துள்ளோம். அங்கே சென்று ராமாயணமா நாங்கள் கற்று தருகிறோம். என்னுடைய வகுப்புகளில் பிராமணர்களை விட பிராமணர் அல்லாதோர் தான் அதிகம் படிக்கின்றனர்.

    //Not others. For them, it is just a language and they want to see whether it is useful to them in material sense.
    //
    இது உங்களது கேடுகெட்ட வாதம். மக்கள் இப்படி நினைப்பதில்லை. there is life beyond economics. உங்கள் கூற்றின் படி பார்த்தால் மோடி அரசு ஆங்கில வாரம் கொண்டாட தான் சொல்லி இருக்க வேண்டும் அதற்க்கு தான் பாருங்கள் அதிக பணம் தரும் மகிமை இருக்கு. மற்ற மொழி வாரம் கொண்டாடினால் காசு வருமா. ஆகா உங்களின் பேச்சு படி தமிழ் மொழி வாரம் கொண்டாடும் என்று சொல்லி இருந்தாலும் நீங்கள் எதிர்பீர்கள்.

    இதெற்கெல்லாம் மாறாக சமஸ்க்ருதிற்கு மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. சமஸ்க்ருதம் பயிற்றுவிக்க கூடியவர்களுள் ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்கலாக உள்ளனர்.
    வரவேற்பு இருப்பதால் தான் அம்மாவின் கடுதாசி பிசுபிசுத்து போனது. இனிமே வன்முறையில் வேண்டுமானால் ஈடுபட்டு தடுக்கலாம். நேர் வழயில் மக்களை ஏமாற்ற இயலாது. பாமரன் உங்களை விட தெளிவாக உள்ளான் என்பதை மறந்து விடாதீர்கள் பாலா.

    ஹிந்திக்காக ஹிந்தி பயிற்றுவிக்க யாரவது ஒரு தமிழ் செல்வியோ, பூங்கொடியோ, வள்ளியோ தன் வாழ்வை அர்ப்பணம் செய்வாளா, இல்லை குப்புமனியும், மணிகண்டனும், சாமிநாதனும் தான் செய்வார்கள. சமஸ்க்ருதிர்காக காசு வாங்காமல் சொந்த பணத்தையும் செலவு செய்யும் மடச்சிகளும் மடையர்களும் இருக்கின்றனர் பாலா என்ன செய்ய. அவர்களுக்கு economics புரிய மாட்டேங்குது. காசு தான் வாழ்கை என்று நம்ப மறுக்கின்றனர். இந்தியன் காசுக்கு அடிமை இல்லை என்று நினைக்கும் ஒரு பேதை கூட்டம் இது பால விடுங்கள் இவர்கள் இப்படியே இருக்கட்டும். இவர்கள் மாற மாட்டார்கள். நீங்கள் கல்லா காட்டுங்கள்.

    ஒரு கூட்டம் வந்து பாலா நலந்தாவிற்கு நெருப்பு வெச்சது (காஸ் அடுப்பு வெடிச்சு தான நெருப்பு பரவலன்னா). அங்குள்ள புத்தங்கள் பலவற்றை படகில் ஏற்றி ஒரு பெரியவரும் இளையவனும் படகை ஓட்டுகிறார்கள், பாரம் தாங்காமல் படகு மூழ்க பார்க்க, பெரியவரும் சிறியவரும் ஒரு முறை பார்த்துக்கொள்கின்றனர். உடனே பெரியவர் தொபுக்குன்னு ஆற்றில் குதித்து உயிரை விடுகிறார். புத்தகங்கள் காப்பாற்ற படுகின்றன. என்ன செய்வது இந்த அறியாப் பெரியவரை. அவருக்கு economics புரிகிரதா.

  140. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //இசுலாமியராகி அல்லது கிருத்துவ பிராமணனாக உம்வீட்டுப்பெண்களை இன்னொரு பிராமணனுக்கு கட்டி வையும்.//

    செல்வி ரெபேக்கா மேரி அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். உங்களது கருத்துப் பரிமாறலுக்கு இது தேவையே இல்லாதது. அவராவது தனது கொள்கையான கிறித்த மதமாற்றுப் பிரச்சாரத்தைமட்டும்தான் செய்தார். நீங்கள் சாரங் அவர்கள் வீடு மங்கையரை அவமதிக்கும் வகையில் எழுதி உள்ளது எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாத ஒன்று. வெட்கப்படவேண்டிய செயல். எல்லை மீறாதீர்கள்.

    நீங்கள் இஸ்லாமிய நண்பர்களை உங்கள்பால் இழுக்க “இசுலமியராகி” என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்கிறீர்கள். மதச் சார்பற்றவர் என்று காட்டிக்கொள்ள முனைகிறீர்கள். (It is called pseudo-secularism). அது தேவையே இல்லாதது. ஜனாப்கள் சுவனப்பிரியனும், மீரான் ஸாஹாப்பும் அந்த அவலத்தைச் செய்வதில்லை. நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?

    வடமொழி எதிர்ப்புதான் உங்கள் கொள்கை என்றால் அதைமட்டுமே செய்யுங்கள். அதை விடுத்து மற்ற காழ்ப்புணர்ச்சிகளை கருத்தில் புகுத்தவேண்டாமே!

    இராமானுஜாச்சாரியார் காலத்தில் பிராமணர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கபடார்களா? “தீண்டத்தகாதவர்கள் என்று தவறாகக் கருதியவர்களைத் தவிர” மற்ற எல்லோரையும் அனுமதித்தார்கள். அப்படி இருக்க, நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைச் சாடுவதில் நியாயமில்லை. அப் பிரிவினர் மட்டற்ற பிரிவினர்களின் எண்ணத்தையும்தான் அக்காலத்தில் வெளிப்படுத்தினார்கள். தீண்டாமை என்னும் கொடிய நோய் அப்படி அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

    அவ்வமயம் ஒரு புரட்சியாளராக இயங்கினார் இராமானுஜாச்சாரியார். புரட்சியாளராக இருந்தும், ஒரு அந்தணர்க்குரிய எந்த நியமங்களையும் அவர் தவிர்க்கவில்லை. அவர் அனைவரையும் வைணவர்களாக, உயர்நிலைக்குக் கொண்டு சென்றார்.

    இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே, தமிழ்நாட்டுக் கோவில்களில் பூசை நடக்கும்போது எச்சமயத்தவர்களையும் இன்று அனுமதிக்கிறார்கள். ஒரு மசூதிக்குள், தொழுகை நடக்கும்பொது, இஸ்லாமியர்கள்தவிர, மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்களா? புனிதத்தலம் என்று கருதுகின்ற மெக்காவில்தான் மாற்றுச் சமயத்தார் நுழைந்துவிட இயலுமா? நான் இஸ்லாமியர்களை இதில் குறைகூறவில்லை. சில சமயம் நாம் மாற்றுச்சமயக் கொட்பாடுகளை மதிப்பதே நலமாகும். அதுபோல அவர்களும் நமது சமயக் கோட்பாடுகளை மதிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

    கருத்துப் பரிமாறலே போதுமானது. சமயப் பரிமாற்றக் கருத்தை, அருள்கூர்ந்து புகுத்தாமலிருப்பீர்களாக என்று தாழ்மையுடன் கோருகிறேன்.

    வணக்கம்.

    வணக்கம்.

  141. வியாசன்

    இப்படியே எழுதிக்கொண்டே போகட்டா என்று சொல்லும்

    கிராமம்,காரணம்,நாமம்,கரம்,சிரம்,புரம்,நகரம்,காகம்,நவீனம்,சர்ப்பம்,
    கிரி,கணிதம்,பாதம்,சூரியன்,சந்திரன்,கிரயம்,தேசம்,ப்ரியம்,வளையம்
    சக்கரம், புத்தகம், முகம், ஸ்தலம், தாகம், ஆதி, அந்தம், புரிதல்,
    குலம், மனித, நரன், மார்கம், சமயம், காலம், கடிகாரம், நதி, அகில
    உலகம், ரூபம், அகஸ்மாத்தா, அக்கிரமம், அங்கம், பத்தினி, புருசன்
    அக்கினி, தற்காலிக, அடம், கோனி, ஆணி, அந்நியன், துரோஹி, பாவி,
    மீன், அதிஷ்டம், அர்த்தம், அவகாசம், அவசரம், இதயம, ஆஸ்ரமம்,
    உன்னதம், உச்சி,ஊகம், கர்ப்பம், தளம், வனம், கலகம், கவசம், பட்சி, பதக்கம்,
    இஷ்டம், கஷ்டம் ,தரம், சகித்து, சாமி, தயவு, தாவி , தாமிரம், நாடி, ஆசை, நீல
    பதவி, கானம், நிலையம்

  142. உயர்திரு பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //பிராமணர்கள் ஒரு சூத்திரர் எழுதியதை அதுவும் தமிழில் எழுதியதை ஏற்க மாட்டோமென்றார்கள்.//

    வரலாறு தெரியவில்லையா உங்களுக்கு? நாவுக்கரசராம் அப்பர் பெருமானின் தமிழ்த் திருமுறையை போற்றவில்லையா பிராமணர்கள்? அவரை சமய குரவர்களில் ஒருவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லையா? அவரும், காழிப் பிள்ளையாரும் ஒன்றாக இணைந்து சைவப் பணி ஆற்றவில்லையா? அவரைத் தந்தையாக எண்ணி, “அப்பரே!” என்று அன்புடன் அழைக்கவில்லையா?

    இராமானுஜர் காலத்திற்கு பலகாலம் முன்பே சைவம் அனைவரையும் ஏற்றுக்கொண்டுவிட்டது, அய்யா!(இங்கு நான் அய்யா என்று விளிப்பது மரியாதைக்குரியதே) மூன்று அந்தண சைவ குரவர்களில் ஒருவரான சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் ஏத்திப்பாடிய அருபத்திமூவரில், திருநாளைப்போவார் நீங்கள் குறிப்பிட்ட “தீண்டத்தகாதவர்”தானே!

    இந்து சமயத்தோர் தம்மிடம் இருக்கும் குற்றம் குறைகளை மெல்ல மெல்ல நீக்கிகொண்டுதான் வருகிறார்கள். அதைக்கண்டு மகிழுமாறு வேண்டுகிறேன்.

  143. பெருமதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களே,

    //புராணம் சொல்லும் விஷயம் ஒரு குறியீடாகக் கொள்ளலாமே அன்றி வரலாறு என்று சொல்ல வேண்டுமானால் அதற்கு முழு ஆதாரமும் முன்வைக்கப்பட வேண்டும். நான் குறிப்பாகச் சொல்ல வந்த விஷயங்கள் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.//

    அந்தவகையில் பார்த்தால் இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆயினும் அவை உண்மையாக நிகழ்ந்தவை என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?

    கம்பநாட்டார் வால்மீகி இராமாயணத்தை மிகைப்படுத்தி எழுதிய வகையில் சேக்கிழார் மிகைப்படுத்தினார் எனலாமே தவிர, அவர் எழுதியது வரலாறல்ல என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.

    நீங்கள் தில்லைச் சிற்பத்தை பற்றி மட்டுமே எதிர்க்கருத்து எழுப்பலாம். அதற்கு எனது பதில், கம்பநாட்டார் அயோத்தியைக் காணாமலேயே, இலங்கையைக் காணாமலேயே வர்ணித்தவாறு, கிட்டத் தட்ட முன்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சிற்பிகளும், தில்லையில் கழுவேற்றிய சிற்பத்தைச் செதுக்கி இருக்கலாம் என்பதே!

  144. பால சுந்தரம் கிருஷ்ணா அவர்களே,

    //பார[த]த்தை ஒருமைப்படுத்தும் முயற்சிக்கு ஹிந்திதான் சரி.//

    வடமொழி வேண்டாம், இந்திதான் ஏற்புடையதா? என்ன வாதம் ஐயா, இது?

    தமிழைக் கொன்றுவிட வேறு எந்த சொற்றொடரும் வேண்டாம். இது ஒன்றே போதும். இதை விடச் சிறந்த ஆயுதத்தை யாராலும் தமிழன்னையின் மார்பிலோ செலுத்திவிட முடியாது.

    தமிழுக்கு நீர் செய்த தொண்டில் இதுதான் தலையான தொண்டாக நிற்கிறது! (இதை வஞ்சப் புகழ்சியாகக் கொள்க!)

    இப்படிப்பட்ட கருத்தின் தாக்கத்தால் என்ன விளைவு ஏற்படலாம் என்று ஊகித்து, நான் எழுதிவரும் “தமிழ் இனி மெல்ல..” என்ற புதினத்தின் முதல் பகுதியை கீழ்க்கண்ட வலையத்தில் படித்துவிட்டு மீண்டும் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

    https://innaiyaveli.blogspot.in/2014/06/2.html

    வடமொழியால் தமிழை ஒன்றும் செய்துவிட முடியாது. இது பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கண்டறிந்த வரலாறு. இந்தி நாற்பது ஆண்டுகளுக்குள்ளாக தமிழ்நாட்டில் (1965-2014) என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நேரில் கண்டவன் ஐயா, நான். இந்த நிலை தொடர்ந்தால், நீங்கள் சொல்வதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டால், நானூறு ஆண்டுகளுக்குள் தமிழ் வழக்கொழிந்து அழிந்து போய்விடும் ஐயா! வடமொழியையாவது உயிரூட்டி நிறுத்திவைக்க ஆள்கள் இருக்கிறார்கள். என் அன்னையாம் தமிழுக்கு, அவள் பேரைச் சொல்லிப் போருளீட்டுபர்கள் உண்டே தவிர, உண்மையாக அவளுக்குக்காக உழைப்பவர்கள் இத் தமிழ் மண்ணில் விரல் விட்டு எண்ணப்படக் கூடியவர்களே!

  145. @Sarang,
    “உங்களால் குர்ஆனில் உள்ள அபத்தங்களை விட முடியுமா? அதில் உள்ள அனர்த்தங்களை, காம விசாரங்களை, வெறியாட்டங்களை கைவிட முடியுமா? உங்களால் இவைகளை வீசி எற்ய முடியுமா? வெட்டி எறிந்தால் குர்ஆனில் மீதி இருப்பது ஐந்து பக்கம் தேறுமா என்பதே சந்தேகம்.”
    Thank you very much. You have taken this Kazaga kunchus and Taqqya wallahas on and have given them a hiding. Here you are bit generous to the Muslims. 5 pages? If you take away the violent parts in Koran, what will be left can be fitted in a single A3 paper. Now we have more on the fray. We have the missionary Rebecca Mary trying to score from the side line with the help of local sepoy Mr தாயுமானவன். On top of this, we have two bit experts with zero knowledge of Sanskrit, passing comments that Sanskrit is a derivative language. The problem is the insecurity of Tamils for their own mother tongue against Sanskrit plus years of DK’s brain washed education. Bash anything that is connected with Sanskrit and Brahmins are the easy fodder. If NaMo had sent a circular asking schools to celebrate Gujarati week or Marathi week, the DK Kunchus would have kept quiet.
    @BALA SUNDARAM KRISHNA, You have 3 Sanskrit words in your name. You have not read Jayshre Saranathan’s article. The ancient, oldest Tamil work is Tholkapyam and apparently, the name itself is Sanskrit. It also mentions about Vedas and that re enforces the fact that Sanskrit is older than Tamil. Nothing wrong with that. I am proud that my mother tongue is the younger sister of such great language, Sanskrit.You are also warning me that if I say Tamil is the younger sister of Sanskrit elsewhere, the Tamil Talibans aka DK/DMK kunchus plus all the self appointed guardians of Tamil, will have my head. Thanks for the warning.

  146. வியாசன்

    வந்துகிட்டே இருக்கு சார், இதுவரைக்கும் ஒரு 250 இருக்கும்ல, சுலபமாக (சமஸ்க்ருத பதம்) ஒரு ஆயிரத்து ஐநூறு, இரண்டாயிரம் தேத்திடலாம். இரண்டாயிரம் என்பது சதரானமானது அல்ல. அத்தனையும் புழக்கத்தில் உள்ளவை. தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்தவை. எத்தனையோ (பழைய) சினிமா பாடல்களில் கையாளப் பட்டவை..

    தமிழில் தனி பதங்கள் இல்லை என்றில்லை. தமிழ் நிச்சயாமாக தனி மொழி. தமிழன் சமஸ்க்ருதம் தெரிந்து கொள்வதால் நன்மையே. தீமை ஒரு துளியும் இல்லை. எவ்வளவோ தமிழ் க்ரந்தங்கள் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வைணவ சம்பிரதாயத்தில் வந்த வடக்கத்தியர் இன்றளவும் பெருமளவில் தினமும் தமிழ் பாசுரங்கள் சொல்லி வருங்கிறனர்.
    இன்றைய நிதர்சனமான உண்மை என்ன என்றால் தமிழில் சமஸ்க்ருதம் பெருமளவில் கலந்துள்ளது என்பதே.

    முனீஸ்வரருக்கு சமஸ்க்ருதத்தில் ஒரு அஷ்டோத்தர நாமாவளி இருக்கு தெரியுமா.

    பாதிப்பு, விவசாயம், நாகம், நாணயம், ஞாயம், நீதி, வரம், பாலன், கதை, விஷம், விஷயம், அண்டம், பிண்டம், அகம், கல்யாணம், சுகம், துக்கம், சந்தோஷம்
    எகோபித்த, குணம், தெய்வம், கணம், வணிகம், கர்மம், தவம், கடி, சித்திரம், ரத்தம்,
    வஞ்சனை, வித்தை, ஜீரகம், கண்டம், திசை, த்ரவம், பூமி, காகிதம், மதி,விதி,
    விமானம், கந்தன், மூலம், நிர்மூலம், நிராகரிக்கிறேன், கஸ்மாலம், நாஸ்தி பண்ணுவது, நாகரீக வாழ்வு, பட்டு, தீவரமான, துலா, பாரம், துரித வண்டி,
    வாகனம், திதி, தாம்பூலம், பலன், பழம், ரகசியம், ராசி, உத்தம், யுவன், திரி, யோகம், சூட்சுமம், அறி, விரோதி, ராத்திரி, யாசிப்பது, நேசிப்பது, வருடம், வாத்தியம், வேஷம், ரோஷம், பரிதாபம், தீரன், வீரன், மந்தம், வேகம், அல்பம், பிரமாதம், ஸ்தம்பிச்சு, ஜுரம், ஜந்து, மிருகம், தேவன், தேவி, காளி, விசாலமான, வித்யாசமான, ஆச்சர்யம், முனிவர், அம்பா, மரணம், மணி, நவ, மடம், பிரேதம்,
    பிரயாணம், பத்தி, பக்தி, நிபுணன், நிர்வாகம், மண்டபம், சின்னம், மதம், சிந்தனை, சிரமம், சாந்தம், சொருபம், சங்கம், சமீப, சங்கமம், மோகம், காமம், குரோதம், சித்தம், திண்டிவனம் (திந்த்ரினி வனம்), கோபுரம், கோபம், மூர்தி, சக்தி, யுக்தி, முக்தி, விரக்தி, ராகம், ரீதி, பீதி, நேத்திரம், விதவை, லீலை, ருசி….

  147. //இப்படியே எழுதிக்கொண்டே போகட்டா என்று சொல்லும்//

    நீங்கள் கூறிய சொற்களில் அரைவாசிக்குமதிகமானவை தமிழிலிருந்து சமக்கிருதம் இரவல் வாங்கியவை. இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில் பேசப்படுகிறது, நேரமிருந்தால் போய்ப் பாருமையா? அண்மையில், சமக்கிருதவாதியான சோ ராமசாமியே “ஸம்ஸ்க்ருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரே சமஸ்கிருதம் ஒரு செயற்கையான (artificial language) மொழி என ஒப்புக் கொள்கிறார். நன்றாகச் செய்யப்பட்ட, refined language சமஸ்கிருதம் என்றால் அது எந்த மொழியிலிருந்து செய்யப்பட்டது அல்லது எந்தெந்த மொழிகளிலிருந்து இரவல் வாங்கிச் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இந்த “நன்றாகச் செய்யப்பட்ட”, தூய்மையான மொழி உருவாக்கப்பட முன்னர் பூமியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஊமையாக இருந்தார்களா அல்லது Sign language மூலம் பேசிக் கொண்டார்களா?

  148. //இதில் வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது கூட உங்களின் மூளை வேலைசெய்யவில்லை என்பது தான். இதைக் கம்பன் பாடவில்லை. 🙂

    “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்”

    (தண்டியலங்காரப் பாடல்)// This is Vyasan against me.

    மூளை வேலை செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை; மூளை \தவறாக வேலை செய்வதே ஆபத்து.

    Little knowledge is a dangerous thing. The readers will have to face the danger.

    தமிழில் தொலகாப்பியம் முதல் இலக்கணவிளக்கம் வரை பண்டை இலக்கண நூலகள் பல. இவ்விலக்கணங்களில் சில வடமொழி இலக்கண நூல்களைத்தழுவின. அவற்றுள் சமணமுனிவர் எழுதிய வீர்சோழியமும், தண்டி என்பவர் எழுதிய தண்டியலங்காரமும் ஆகும். இவ்விரண்டும் வடமொழி இலக்கண நூல்களுள் ஒன்றான காவ்யதர்ச்னததைத் தழுவியவை.

    காவ்யதர்சனம் ஒரு கவிதையிலுள்ள‌ அழகை இரசிக்கவகை செய்யும் அலங்காரத்தை விளக்குகிறது. அந்த அலங்காரம் தமிழில் அணி எனப்படும். அணி செய்தல் என்றால் அலங்காரம். அணி இலக்கணத்தை விளக்கும் நூல்களே வீர சோழியமும் தண்டியலங்காரமும். வீர சோழியம் சோழர் காலத்து நூல. தண்டியலங்காரம் 12ம் நூற்றாண்டு நூல். அணி இலக்கணம் தெரிந்தால்தான் ஒரு கவிதையின் அழகை இரசிக்கமுடியும். வெறும் கருத்துகளுக்காக மட்டுமே கவிதைகள் இல. கவிச்சுவைக்காகவும் கவியின்பத்துக்காகவும்தான்.

    தண்டியலங்காரம் பிற இலக்கண நூல்களைப்போல கவிதையில் அமைந்தது. அதுவும் பண்டைக்காலத்துத் தமிழில். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரை தேவரவர்கள் யாழ்ப்பாணத்துப்புலவர் குமாரசாமியவர்களை தண்டியலங்காரத்துக்கு விளக்கம் எழுதச்சொல்லிப் பணிக்க, அந்த அன்புக்கட்டளையை தம்ழுக்குச்செய்யும் நற்கடமையாக எடுத்து, குமாரசாமியவர்கள் விளக்கமெழுதினார்கள். ஆங்கில மேதை ஜாண்சனின் ஆங்கில அகராதியின் ஸ்டலை ஒத்தது இவர் விளக்கம்.

    ஜாண்சன் ஆங்கில அகராதியை முதலில் தொகுத்தவர். இவர் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறிய பின்னர் அச்சொல் எப்படி மாபெரும் புலவர்களால் எடுத்தாளப்பட்டது என்று அவர்தம் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டுவார். மில்டன், செகப்பிரியர், கீட்சு, செல்லி, போக சில உரையாசிரியர்களும் இதில் அடங்குவர். இதனாலே அவ்வகராதியைப் திரும்பத்திரும்ப படித்துக்கொண்டேயிருப்பவருக்கும் ஆங்கில இலக்கியத்தின் சிறபான பகுதிகள் அத்துப்படியாகும். சுருங்கச்சொலலின், அகராதி வெறும் பொருளை மட்டுமே சொல்லவில்லை.

    இதையே புலவர் குமாரசாமியவர்கள் செய்தார்கள். ஒரிஜனல் தண்டியலங்காரம் அணி இலக்கணத்தை பலபல தலைப்புகளில் வரிசைவரிசையாக வைக்கிறது.. 10ம் வகுப்பில் படித்தீர்களே அவைகளில் சில: தற்குறிப்பேற்ற அணி, வஞ்சப்புகழ்ச்சியணி என்று: இப்படியாக ஏகப்பட்ட அணிகள். ஒவ்வொன்றையும் சொல்லி, அவ்வணி எந்த புகழ்பெற்றப் பாவில் செரிந்துள்ளது என்பதை அப்-பாவைப் போட்டு அப்-பாவிற்கு விளக்கத்தையும் அளித்து அந்த அணியை நமக்கு விளக்குகிறார். அவ்விளக்கங்களுக்கு அவரெடுத்துக்கொண்ட கவிதைகள், கம்பராமாயாணம், கந்த புராணம், சேது புராணம், நாலாயிரப்பிரபந்தம் (பொய்கையாழ்வாரந்தாதி மட்டும்), நான்மணிக்கடிகை, நாலடியார், சீவகசிந்தாமணி. சில கவிதைகளுக்கு ஆசிரியர் பெயர் போடவில்லை. அப்படி பெயர் போடாக்கவிதைதான் நம் ‘தன்னேரி லாத்தமிழ்’ என ஈற்றடியாக வரும் வெண்பா. இது கம்பரால் எழுதப்பட்டதே. இல்லை வேறெவரோ என்றால் எனக்குக்காட்டுங்கள்.

    மதுரைத்தமிழ்ச்சங்கத்தார், தங்கள் பதிப்பை, ‘தண்டியலங்காரம்’ ஆசிரியர் புலவர் குமாரசுவாமி என்று போட்டுவிட்டார்கள். எனவே தண்டியலங்காரத்தின் ஆசிரியரோ இப்புலவர் என ஐயமேற்படுவது இய்றகை. வியாசனுக்கு அந்த ஐயமேற்படவில்லை. நூலைப்படித்து அதில் விளக்கவுரை எழுதிய புலவர் குமாரசுவாமி தம் விளக்கங்களுக்கு மேற்கோள் காட்டவே பல பாடலகளைச் சுட்டி அதில் எப்படி குறிப்பிட்ட அணி கையாளப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல்களில் கம்பரின் ‘தன்னேரிலா தமிழ்’ எனபதும் ஒன்று’ அது பொருள் வேற்றுமை’ என்ற அணிக்கு உதாரணமாகப் புலவர் குமாரசுவாமியவர்கள் காட்டியிருக்கின்றார்கள் என்று புரியாமல் தண்டியே தம் நூலுள் அனைத்துக்கவிதைகளையும் எழுதினார் என்று வியாசன் புரிந்துள்ளார். கொஞ்சம் நிதானம் தேவை வியாசன்!.

  149. //சமஸ்க்ருதிற்கு மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. சமஸ்க்ருதம் பயிற்றுவிக்க கூடியவர்களுள் ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்களாக உள்ளனர்//

    Sarangan!

    //சமஸ்க்ருதிற்கு மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. சமஸ்க்ருதம் பயிற்றுவிக்க கூடியவர்களுள் ஆயிரத்திற்கும் மேலானோர் அப்ராமணர்களாக உள்ளனர்//

    ஆசைகள் உண்மையில்லையென்றால் கற்பனைகள் மன திருப்திக்கு உதவும். 30000 என்றீர்கள். எப்படிச் சொல்கிறீர்கள் என்றால் பேச்சைக் காணேம். தமிழலக்கியத்தில் சமஸ்கிருதம் என்ற சொல் இருக்கிறது என்றீர்கள். காட்டுங்கள் என்றால் பேச்சைக் காணேம். ஆயிரத்துக்கும் மேலான அபார்ப்பனர்கள் வடமொழி ஆசிரியர்களாக இலவசமாகச் சொல்லித்தருகிறார்கள் என்பதை நம்ப முடியாது. ஒருவேளை அவர்கள் இந்துத்வவினராக இருக்கலாமே ஒழிய பொதுமக்களிடமிருந்து இருக்கார். தமிழ்மக்களிடையே வடமொழி கோயில் மொழியாக இருப்பதால் மதிப்பும் மரியாதை இருக்கும். அஃது ஆயிரங்காலமாக‌ இருக்கினறதே. தனிமொழியாக இல்லை. நீங்கள் எவ்வளவுதான் அடுக்கினாலும் நம்பமுடியாது. ஏனென்றால், தமிழகத்தில் நடப்பதை நம்மால் தெரியவது என்ன கஸ்டமா?.

    தெலுங்கு ஒருவர், தமிழகத்தில் எங்கள் மொழிக்கு ஏகோபித்த ஆதரவு, மரியாதை இருக்கு எனச்சொல்லி, தமிழ்மக்களனிவரும் தமிழோடு சேர்த்து தெலுங்கைப்படிக்கோண்டும் என்று சொன்னாலும் சரிதானே? இப்படியே மலையாளமும். ஏனெனில் இவ்விரு மொழிகளும் வடமொழியைவிட தமிழ்ம்மக்களிடையே பரிச்சயமானவை. திராவிட மொழிகளும் கூட. மக்கள் தொகையில் கணிசமாக இவர்கள் இருக்கிறார்கள்.

    காசு வாங்காமல் சொல்லித்தருகிறோமென்றாலே வியாபாரமாகாத‌ பொருளை போனியாக்கிவிட முயறசி.

    நீங்கள் இங்கு வடமொழியைப்போனியாக்க என்னவெல்லோமோ பொய்கள் வீசுகிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் மட்டுமே என்னால் சொல்லவியலும். பொய் சொல்லி மார்க்கெட்டிங் செய்வதும் அவசியமே. மீண்டும்மீண்டும் தமிழ்நாட்டில் மக்களெல்லாரும் வடமொழியை விரும்புகிறார்கள். கறக ஆசைப்படுகிறார்கள். இந்த மோசடிக்கும்பல் திராவிட்க்குஞ்சுகள் மட்டுமில்லாவிட்டால் இரங்க நாதன் தெருவில் எல்லாரும் சமஸ்கிருத்த்திலேயே பேசி, வாங்குவார்கள். தமிழகம் முழுக்க வடமொழிப்பேச்சே அதிலும் தலித் சேரிகளில் எல்லாரும் சமஸ்கிருத்ததிலேயே பேசி சண்டை போட்டுக்கொள்வார்கள் என்ற உங்கள் கற்பனைகளை என் மேல் திணிக்க வேண்டாம்.

    தமிழ் மக்களுக்கு வடமொழி யூஸ்லெஸ்; தமிழ்ம க்களிடையே வடமொழி அறிவே இல்லை. அது தேவையுமில்லை. தமிழே தரிகனத்தான் போட இன்னொரு மொழிக்குத் தண்டோரா போட நான் தயாரில்லை. சாரங்கனின் அவர் ச்காக்களும் போட்டுக்கொண்டே இருங்கள். முதலில் உங்கள் ஜாதிப்பசங்களையே உங்களால் படிகக்வைக்கமுடியவில்லை. அவர்களிடையே படிப்போரும் வியாபார நோக்கில்தான் – தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற- படிக்கிறார்கள். வேலை பார்க்கவல்ல. ராமாவுக்குத் தெரியாது; உங்கள் வீட்டாள்களுக்குத் தெரியாது. பின்னென்ன?

    பணம் எங்களுக்குப்பெரியதன்று. நாங்கள் தியாகிகள் என்பதை வேறெவரிடமாவது சொல்லுங்கள். நான் எதார்த்தவாதி.எதிலும் சேராமால் எதார்த்தங்கள் எவை என்றறியும்போது மட்டுமே அவ்வெதார்த்தங்கள் நல்லதல்ல என்று தெரிந்தால் அவற்றை சோபிக்காமல் பண்ண வழிகளை ஆராய முடியும். உங்களுக்கு ஒரு அஜென்டா. அதை எதார்த்தங்களை எதிர்நோக்கித்தான் உள்ளே நுழைக்கமுடியும். இல்லையென்றால், இப்படியே கற்பனையுலகில் வாழத்தான் முடியும். நான் மேற்சொன்ன சமூகமே எதார்த்தமாகும்.

  150. சூ பீ

    //
    ழ,ற,ன,தி.ஞீ.
    //
    ற இல்லை சரி, ன இல்லை சரி. ஆய்த எழுத்து இல்லை தீ ஞீ இவற்றுக்கு என்ன.

    ழ ற ரீ யும் சந்தஸீ மொழியில் (வேத பாஷை) இருந்து விடப்பட்டுள்ளன.

    சமஸ்க்ருத வாரம் கொண்டாட வேண்டும் தமிழ் கொண்டாட படாது என்று கவர்மெண்டு சொன்னது போல இல்லாத பிரச்சனைய தமிழ் சமக்ஸ்ருத்த பிரச்சனையாக்கி குளிர் காயும் குள்ள நரிகள் குட்டிப் போட்டு கும்மி அடிக்கின்றன.

  151. வியாசன்

    விஷயம் புரியாமல் பிதற்றல் அம்பி என்ற கேவலமாக வேறு அழைத்தல்.

    //
    தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை தருவதை எதிர்க்கும் வடமொழிவாதிகள் யார் என்பது உங்களுக்கே தெரியும். எல்லோரும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் தான்.
    ஒவ்வொருமுறையும் தமிழில் தமிழ்நாட்டில் தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கோயிலகளில் மதமொழியாக ஆக்க முனையும் போது அதை எதிர்ப்பவர்கள் யார்? அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போவது யார்?
    //

    நாங்கள் தமிழுக்குத்தான் முன்னுரிமை தந்துள்ளோம். நாங்க செய்யும் கடவுள் ஆராதனத்தில் எழுபது விழுக்காடு தமிழ் 30 விஷுக்காடு சமஸ்க்ருதம்.
    எந்த வைணவ கோவிலில் வேண்டுமானால் சென்று பாருங்கள். காலை முதல் இரவு நடை சாரரும் வரை பகவானுக்கு தமிழ் அமுது ஊட்டப்பட்டுக் கொண்டே வரும். எத்தனையோ தமிழ் வைணவர்கள், வேதம் கற்க மாட்டேன், தமிழ் வேதமாம் ஆழ்வார்களின் திவ்ய பிரபான்களே போதும் என்று நிற்கிறார்கள்.

    நீங்கள் அரையர் சேவை என்று ஒன்றுண்டு கேட்டதுண்டோ. அத்தனையும் தெய்வத் தமிழ். ஒருமுறை மன்னார்குடி கோவிலில் அரையர் சேவை ஏற்பாடு, அரயராக சீரங்கத்திளிருந்து ஒரு என்பது வயது முதியவர். அவர் ஆனந்த கண்ணீருடன் திருவாய் மொழி பதிகம் பாடுகிறார். நடுவே ஒரு கழக கவுன்சிலர் வர்றார் அவருடன் வந்த ஒரு குண்டர் கோஷ்டி அறையறை ஏறி மித்துக் கொண்டு சாமி கும்பிட சென்றது. அரயருடன் அவருடைய தமிழ் நாதமும் நின்றது, அப்புறம் அந்த குண்டர்களுள் ஒருவன் அரையர் அருகில் வந்து வந்து இதை அப்படியே சொன்னான் “என்ன பெர்சு, உனகெதுக்கு இதெல்லாம்”. தமிழ் தாயின் மனம் எப்படி வெதும்பி இருக்கும். இவர்களை தானே நீங்கள் ஓட்டுப் போட்டு சோறு போட்டு தமிழ் காவலர்கள் என்று பாராட்டி தமிழ் தாய் கோவிலின் சாவியை ஒப்படைத்து உள்ளீர்கள்.

    தமிழ் அழிவது கோவிலில் மந்த்ரம் வேதம் ஓதுவதால் அல்ல இப்படி நீங்கள் எண்ணுவது உங்களது த்வேஷ உணர்வால் எழுவது. தமிழ் அழிவது கழக தர்கூரிகளால். இன்றைய தமிழ் காவலர்கள் கோஷ்டியில் யார் யார் இருக்கிறார்கள் பாருங்கள்.

    வைணவன் இத்தோடு நிற்கவில்லை, சாமி புறப்பாடு நடக்கும் போது தமிழ் வேடம் கூறுவோர் முன்னே செல்வர். இறைவன் தமிழை தேடி செல்வான். வேதம் கூறுவோர் சாமி பின்னே வருவர். தமிழை கடவுளுக்கும் முன்னே வைத்து அழகு பார்பவர்கள் நாங்கள். என்னை அம்பி என்று கூறுவதால் நான் வெம்பப் போவதில்லை. நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் தமிழ் காவலர்கள் தான் உங்களை நெம்பி எம்பப் போகிறார்கள். 🙂

    நீங்கள் செய்வதன் பேர் தான் stereotyping . அதாவது கண்ணை மூடிக்கொண்டு மற்றவனை குருடன் என்று சாடுவது. கண்ணை திறன்கள்.

    என்னை சார்தவர்கள் உங்களை விட தமிழுக்காக அதிக பனி செய்துள்ளனர். சிதம்பரம் கோவில் பிரச்சனையை அதை சார்ந்தவர்கள் தான் தீர்த்துவைக்க வேண்டும். அதன் பக்கலிலே கோவிந்தராஜன் சந்நிதி இருக்கு ,அங்கு போய் நின்றால் தமிழ் நன்றாக கேட்கும். சிங்களத்து பிரச்சனையை இதை கிண்டி விட்டு குளிர் காய்ந்தது காய்வது என்பது இங்கே தமிழ் தமிழ் என்று அளப்பும் கருணாநிதி ஆதிகள் தான். ஒரு சுப்பிரமணிய சாமிக்காக எல்லோரையும் சாடுவதும் stereotyping தான்.

    கோவில்லில் சொல்லப்படுவது சமஸ்க்ருதம் அதே மந்திரத்தை தமிழில் சொல்லலாம் என்றால் என்னால் உங்களுடன் வாதாட முடியாது. இன்றளவும் நீங்கள் கோவிலுக்கு போகலாம், அங்குள்ள அர்ச்சகர் தமிழில் அர்ச்சனை செய்தால், ஒரு பாமரன் கூட சாமி நீங்க முன்ன செய்வீங்களே அதையே செய்யுங்க என்று தான் சொல்கிறான். நான் சொல்வது நிதர்சனம். அங்குள்ள அர்ச்சகர் உங்களோடு சமஸ்க்ருதத்தில் தான் பேசுவேன் என்கிறாரா, அங்கே உங்களுக்கு புளியோதரைக்கு பதில் திந்த்ரினி அன்னமா துருகிரார்கள். பொங்கலுக்கு பதில் முக்தான்னமா தருகிறார்கள்.
    இறைவனுக்கு தீபம் காட்டி அவனின் மூர்த்தியை பற்றி விவரிப்பார்கள் அது எந்த மொழியில் செய்கிறார்கள். சமஸ்க்ருத்திலா. ஏன் குழப்பி கொள்கிறீர்கள்.

    ஆகம விதிப்படியே கோவில், அதை விடுத்து கோவில் கோவிலாகாது. மந்த்ரார்ச்சனை , வேத பாராயணம் எப்பொழுதும் சமஸ்க்ருதத்தில் தான் இருக்கும். அதன் சிறப்பை அறிய அம்மொழியை சிறிதேனும் கற்பேன் என்றில்லாமல். அதை தூஷனை செய்வதால் என்ன லாபம்.

    கோவிலில் தமிழ் வேண்டும் என்று ராமானுஜர் சொன்னார் சிலர் எதிர்த்தார்கள், பலர் ஏற்றுக் கொண்டார்கள். முடிவில் ராமானுஜர் வெற்றி பெற்றார்.

    கோவிலில் தமிழ் வேணும் என்று பெரியாரும் மஞ்ச துண்டும் சொன்னால் ஏன் சிதம்பரத்தில் பயப்படுகிறார்கள் என்று சொல்லியா புரிய வைக்க வேண்டும்.
    என்ன சொல்கிறோம் என்று முக்கியம் இல்லை, யார் சொல்கிறார் என்பது தான் முக்கியம். (இது கூட வேதம் சொல்கிறது வாசாரம்பம் விஜிஞாசஸ்வ).

  152. வியாசன்

    //
    திரு. BALA SUNDARAM KRISHNA,

    வடமொழி மதமொழியாக ஏன் தொடர வேண்டும். தமிழை மதமொழியாக்கினால் என்ன. தமிழர்கள் எதற்காக மதமொழியாக வடமொழியைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். சமஸ்கிருதத்துக்கு அதிர்விருக்கிறது, குதிர்விருக்கிறது என்றார் வாதம் வேண்டாம். ஏனென்றால் தெய்வத்தமிழுக்கும் தமிழுக்கும் தெய்வீக சக்தியுண்டு என எங்களின் நாயன்மார்கள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
    //

    யார் சொல்கிறார் என்று பார்க்க வேண்டும் என்று எழுதி முடித்து பார்கிறேன் உங்களது இம்மருமொழி.

    இப்போதையா பாலா சுந்தரம் யார் என்று உங்களுக்கு தெரியுமா அஜ்ஜோ அஜ்ஜோ .

    தமிழுக்கும் தெய்வ சக்தி உண்டு, நாயன்மார்களும் செரி, ஆழ்வார்களும் சரி சொல்கிறார்கள். தமிழ் மத மொழி இல்லை என்று யார் சொன்னது. தமிழ் ஹிந்துவின் மொழி. இதை மறுக்க யாராலும் முடியாது. இந்தியாவில் இருக்கும் அத்தனை மொழிகளும் ஹிந்துக்களின் மொழியே. இதில் செகுலர் என்ன வேண்டி கிடக்கு.

    இது நிற்க. மந்திர சக்தி என்பது நிரூபணமான ஒன்று. தமிழுக்கு சக்தி பக்தியுடன் கலந்தால் தான் வரும். சமஸ்க்ருத (சந்தஸீ) அக்ஷர கூட்டங்களுக்கு அது தானே அமைந்துள்ளது. அப்படி பட்ட சப்த பிரயோகங்கள் அம்மொழியிலேயே இருக்கின்றன. இதை விளங்கிக் கொள்ள கொள்ள மந்தரகிரம சாஸ்திரங்களை படிக்க வேண்டும். frits staal என்பவர் மூன்று வருடம் முன்பு கேரளாவில் நடந்த அதிருத்ரம் என்ற ஒரு யாகத்தை முழுதுமாக ஆய்வு செய்துள்ளார். அவர் மற்றும் இன்னும் பலர் ஆதார பூர்வமாக மந்திரங்களுக்கு தானே சக்தி (vibration) உண்டு என்பதை கண்டறிந்து எழுதி உள்ளனர். frits staal என்பவர் இரண்டு வருடம் முன்பு மரணித்தார் (அவருடய . அடிருத்ரம் பற்றிய ஆராய்ச்சி பூர்த்தியடையும் முன்னே)

    https://www.thehindu.com/features/friday-review/religion/12day-athirathram-comes-to-an-end/article1701290.ece இதை படிக்கவும்.

    ஒரு பக்ஷமாக பேசும் நீங்கள். யாகத்தில் என்ன நடக்கிறது, மந்திரம் என்றால் என்ன அதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யலாம் அல்லவா. அதன் பின்பு உங்களது வாதம் நாடு நிலையுடன் தெளிவாக இருக்கும்.

  153. வியாசன்

    நாங்கள் குரானை தமிழ்ப்படுத்தி விட்டோம், விவிலியத்தை தமிழ்ப்படுத்தி விட்டோம் என்று கூச்சல் போடும் கூட்டம், ஓதுதல் என்று வரும்போது என்ன செய்கிறது?

    ஓதுதல் என்று வரும்போது உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் அரபிய மொழிலேயே ஓதுகிறார்கள். அஞ்சு முறை லவுடு ஸ்பீகர் அலறுமே கேக்கல்லை? இதே போல ஓதுதல் என்று வந்தால் உலகம் பூரா உள்ள ஜூஸ் ஹீப்ருவிலும், கிறித்தவர்கள் லத்தீனிலும் தான் ஓதுவார்கள்.

    ஹிந்து மட்டும் தான் இளிச்சவாயனா இருக்கணும்னு கிளப்பி விடுவாங்க. நீங்கள் கபாலீஸ்வரர் கோவிலுக்கோ பார்த்தசாரதி கோவிலுக்கோ போங்கள் அங்கே உபன்யாசம் நடக்கும், அது தமிழில் தான், பகவத்கீதை தமிழில் தான் சொல்லப்படும். கிறித்தவர்கள் விவிலிய அர்த்தம் படிப்பதும், குரான் அர்த்தம் முஸ்லிம்கள் படிப்பது ஒரு உபன்யாசம் கேட்பது போல தான்.

    பகவத்கீதை தமிழில் பாரதி செய்திருக்கிறான் டவுன்லோடாவது செய்துள்ளீர்களா.

  154. //வடமொழி எதிர்ப்புதான் உங்கள் கொள்கை என்றால் அதைமட்டுமே செய்யுங்கள். அதை விடுத்து மற்ற காழ்ப்புணர்ச்சிகளை கருத்தில் புகுத்தவேண்டாமே!//

    வடமொழி எதிர்ப்பு என் கொள்கையில்லவே இல்லை. அரைகுறைப்புரிதல் ஆபத்தானது. நான் மொழிகளின் காதலன். எல்லா மொழிகளையும் படிக்க இறைவன் எனக்கு வலிமை கொடுத்திருந்தால் அனைத்தையும் படிப்பவன். எனக்கு நான்கு மொழிகள். மூன்றில் விற்பன்னன். ஒரு மொழி வெறுப்பாளன் என்ற முத்திரை போலியானது. ஏன் வடமொழி வாரம்? ஏன் மோதி அரசு ஒரு மொழிக்காக மட்டும் மெனக்கிடுகிறது என்ற கேள்விகள்தான் என் வாதப்பொருள்.

    மதத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு வைணவ ஞானம் போதாது. நான் எழுதியவைகள் கற்பனைகள் அல்ல. அவை பிராமணர்களால் எழுதப்பட்டவை. திருமழிசையாழ்வாரைப்பற்றி எழுதியவை மயிலாப்பூர் இராமகிருஷ்ணமடத்தால் அச்ச்டிக்கப்பட்டு விநியோகிகப்பட்டது. I am ready to give the reference if asked for. ஒப்பிலியப்பன் கோயில் மடத்தலைவராலும் இலவசமாக விநியோகிக்கப்பட்ட வரலாறு. அதில் ஆழ்வாரை இழிவுபடுத்திய பிராமணர்களை ‘பார்ப்பன மூடனொருவன்’ என்று குறிப்பிடுகிறார். அதில்தான் காவேரியில் தன் பாசுரங்களையெல்லாம் ஆழ்வார் தூக்கியெறிந்தார் எனவெழுதுகிறார். நம்பிள்ளையைப்பற்றி எழுதியவை பேராசிரியர் புருடோத்தம நாயுடுவால் நம்பிள்ளையின் அவதாரிகையின் மொழியாக்கம் செயயப்பட்டதிலிருந்து. சென்னைப்பலகலைக்கழக நூலகத்தில் படிக்கலாம். Prof Purshothama Naidu is a great Vishnavite scholar. Now no more. He rendered Nambillai’s Padi in modern Tamil under the Title Bhagavat Vishayam. ten volumes.

    இராமானுஜருக்கும் பிராமணர்களுக்கும்தான் பிணக்கு. அவரை மற்ற ஜாதியினர் பெரிதும் போற்றினர். ஒரு கூலிக்காரப்பெண்ணுக்கும் ஒரு வண்ணானுக்கும் உள்ள ஆழ்வார் பக்தி எனக்கு இன்னும் வரவில்லையேனெ அழுதவர் அவர். பெரியநம்பி, தலித்து மாறனேரி நம்பிகளுக்கு ஈமக்கிரியை செய்தால் பகிஸ்ஹ்காரம் ப்ண்ணுவோம் என்று சொன்னது மற்ற ஜாதிக்காரர்களல்ல. பிராமணர்கள். நம்மாழ்வார் பாடல்களை அவர் சூத்திரர் என்பதால் அவரை ஏற்கமாட்டோம் எனச்சொன்னது பிராமணர்கள். மற்ற ஜாதிக்காரர்களல்ல. தலித்துக்களை திருநாராயணபுரம் கோயிலுள் நுழையவிட்டால் நாங்கள் வரமாட்டோம் எனச்சொன்னது பிராமணர்களே. அவர் காம்பரமைஸ் பண்ணியது அவர்களுடந்தான் என இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதத்தில் பிராமணர்களேலேயே எழுதப்பட்டது. திருக்கோஷ்டியூர் தலபுராணம் பிராமணார்களாலேயே எழுதப்பட்டது. அவருக்கும் திருக்கோட்டியூர் நம்பிக்கும் நடந்த பிணக்கையும் அக்கோயில் கோபுரத்தின் மீதேறி ‘ பிராமணல்லாதோருக்கு இறைவனின் திருமந்திரம் சொன்னால் எனக்கு நரகம் கிடைக்குமென்றால், எனக்கு நரகமே மேல் என்ச்சொல்லி ஊர்மக்களை உரக்க அழைத்துச்சொன்னது அத்தலவர்லாறு. இன்று நீங்கள் அங்கு சென்றாலும் கோபுரத்தில் மேல் ஏறி எங்கு நின்று அவர் ஊர்மக்களைக்கூவி அழைத்தாரோ அங்கு சென்று உங்களைக்காட்டி, இங்குதான் அச்சம்பவம் நடந்தது என்பார்கள். இச்சம்பவம் அக்கோயில் வரலாற்றில் புகழ்பெற்றது. தமிழ்கத்தில் எக்கோயிலிலும் கோபுரத்தில் ஏற அனுமதியில்லை. இங்கு அவர்களே அழைத்து காட்டுவார்கள். இப்படியாக அனைத்தும் பிராமணர்களாலேயே எழுதப்பட்டு சொல்லப்பட்டது. பிராமணர்களில் சிலர்தான் இராமானுஜர் தொண்டர்களானார்கள். பலர் அவரிடம் சேரவில்லை. பின்னர்தான் சேர்ந்தார்கள் என்பது வரலாறு.

    இவற்றை எழுதினால் உங்களுக்கு கசப்பதேன்? காரணம் ஜாதியை முன்னர் தள்ளி மதத்தையும் இராமானுஜரின் புகழையும் பின் தள்ளுகிறீர்கள். என்னைப்பொறுத்தவரை இது பெருங்குற்றம்.

    எந்த உண்மை வைணவனும் என் எழுத்துக்களை பார்ப்பன துவேசம் என மாட்டான். ஜாதியாளனுக்கு ஜாதியே வேண்டும். அவன் ஒருவனே என்னை எதிர்ப்பான். என்னால் இராமானுஜர், வைணவம், ஆழ்வார்கள் புக்ழ பரவும்/ இவர்களால் இழிவுபடுத்தப்படுகின்றன. பெரியாரால் சமூகத்தில்தான் பிராமணர்களை எதிர்க்க முடிந்தது. அது சுலபம். ம்தத்துக்குள்ளேயே எதிர்ப்பது என்பது இயலாக்காரியம். அதைச்செய்து காட்டி வெற்றி பெற்றவர் இராமானுஜர் in the sense that they accepted his reforms. .இவற்றையெல்லாம் இங்கெழுதாமல், முஸ்லீம் முரசிலா, அல்லது கிருத்துவ முரசிலா எழுதுவார்கள்?

    //புரட்சியாளராக இருந்தும், ஒரு அந்தணர்க்குரிய எந்த நியமங்களையும் அவர் தவிர்க்கவில்லை. அவர் அனைவரையும் வைணவர்களாக, உயர்நிலைக்குக் கொண்டு சென்றார்.//

    என்னையும் புரியவில்லை. இராமானுஜரையும் புரியவில்லை. நான் சொல்ல கேட்டறிந்து கொள்ளுங்கள். முதலில் புரட்சி என்றாலே என்னவென்று தெரியவைல்லை உங்களுக்கு. புரட்சி என்றால், இருப்பதையெல்லாம் தூக்கியெற் எனச் சொல்வதன்று. அவற்றில் எவை இன்றைக்கு இடரே அவற்றை எறிக எனபதுதான் புரட்சி. எனவே இராமனுஜருக்கு பிராமணர்கள் செய்வதில் எவை திருமால் பக்தியை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல இடர்களோ அவற்றை களைய முற்பட்டார். அவர்கள் குரங்குப்பிடியாக பிடிக்க இவர் அவர்களை மனமாற்றம் செய்து வென்றார். இராமானுஜர் பிராமணர்களில் எவர் தம் கொள்கைகளை ஏற்றாரோ அவர்களையே வைணவர் என்றார். அவர் கொள்கை என்னவென்று தெரியுமா? எவருக்கு சாத்தியமோ அவர் வைதீக வழியில் செல்லலாம். அதே சமயம் தான் செய்யும் இன்குலீசிவ் அஜன்டாவை அவர்கள் எதிர்க்கக்கூடாது. இதுதான் கொள்கை. இதை நான் எடுத்தியம்பினால், இராமானுஜரை வைதீகத்தை எதிர்த்தார் என்று பொருளெடுக்கலாமா? வைணவர்களை உயர்நிலைக்கு கொண்டு சென்றார் என்று நீங்கள் எழுதி உங்களுக்கு வைணவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியவிலலை எனக்காட்டுகிறீர்கள்.

    வைணவத்தில் உயர்நிலை தாழ்நிலை என்றெல்லாம் கிடையா. ஒரே நிலைதான். வைணவனாக ஆவதே அந்நிலை. அதற்கு ஜாதிகளை விடவேண்டும். உயர்வு தாழ்வு சொல்லக்கூடாது. இறைவன் ஒருவனே.அவனே திருமால். அவன் தன் பிராட்டியோடும் தன் நித்திய சூரிகளோடு திருப்பாற்கடலில் இருப்பவன். இவனையும் இவன் அவதாரங்களையும் ஏற்றுக்கொண்டு சமத்துவத்தை மதத்தில் நிலநாட்டுபவனே வைணவன. ஆழ்வார்களை ஏற்கவேண்டும். பர தெயங்களை ஏறெடுத்துப்பார்க்கவே கூடாது. தமிழ்பிரபந்தங்கள் பாடப்படவேண்டும் பூஜைகளிலும் கோயில்களிலும் வைணவர்களால். (உடனே வேதங்கள் வேண்டாவா என்று கேட்கவேண்டா. பிராமணர்கள் தமிழ்ப்பாசுர்ங்களைத்தான் எதிர்த்தார்கள். எனவேதான் அவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமென்றார்) இஃது உயர்நிலையும் தாழ்நிலையும் கிடையா. ஒரே நிலை.

    எனக்கு மற்ற சமயங்களையும் அவர்தம் சமயக்கொள்கைகளையும் பற்றி கிஞ்சித்தும் கவலை கிடையாது. அக்கறையும் கிடையாது. அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என் மதத்தை தெரிந்து வாழவே எனக்கு இன்னும் முடிந்தபாடில்லை. வேறுமத ஆராய்ச்சி எனக்கெதற்கு? I don’t want to deal with Rebecca or Suvanappiryan. Their religion is theis. Mine is mine. That’s why I don’t talk to Muslims or Xians in fora, including here, with rare interventions to clarify a point here and a point there. I keep my distance at a safer level always. Far from the madding crowd and its ignoble strife..

  155. பாலா சுந்தரம்

    //
    ஆசைகள் உண்மையில்லையென்றால் கற்பனைகள் மன திருப்திக்கு உதவும். 30000 என்றீர்கள். எப்படிச் சொல்கிறீர்கள் என்றால் பேச்சைக் காணேம். தமிழலக்கியத்தில் சமஸ்கிருதம் என்ற சொல் இருக்கிறது என்றீர்கள்
    //

    ஆசை இல்லை. அது நிதர்சனமான உண்மை, யார் யார் சொல்லித்தரா அவுக வீட்டு விலாசம் எல்லாம் தந்து ஜிஹாத் கோட்டத்திற்கு பலியாக்க நான் விரும்பவில்லை.
    உங்களை சமஸ்க்ருதம் ஒரு நாள் தொடும் பொது உங்களுக்கு இந்த கணக்கு உண்மை என்று தெரியவரும். முப்பதாயிரம் எப்படி என்றால் எனக்கு நேரே அது தெரியும். உங்க வீட்டில் எத்தனை பேர் என்று கேட்க ஐந்து பேர் என்று நான் சொன்னால். எப்படி என்று கேட்டால் என்ன அர்த்தம்.

    //
    தமிழலக்கியத்தில் சமஸ்கிருதம் என்ற சொல் இருக்கிறது என்றீர்கள்
    //
    இதை நான் எப்போ எங்கண்ணா சொன்னேன். ரெம்ப குழம்பிடீங்கோ.

    //
    காசு வாங்காமல் சொல்லித்தருகிறோமென்றாலே வியாபாரமாகாத‌ பொருளை போனியாக்கிவிட முயறசி.
    //

    காசு கொடுத்து டியூஷன் சேர எம்புட்டோ பேரு தயாரா கீறாங்க. கல்விக்கு காசு வாங்கபடாது என்பது இந்தியனின் கொள்கை அண்ணா. நீங்கள் தான் யதார்த்த வாதியாச்சே. சொல்லிகொள்வதில் ஒன்னும் குறைச்சல் இல்லை.

    நாங்கள் தியாகி என்று தம்பட்டம் அடிக்கவில்லை. காசுக்கு அலையும் இக்காலத்தில் மொழிக்காக த்யாகம் செய்ய தமிழச்சிகள் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு
    காட்டினேன். காமாலை கன்வந்தால் சங்கும் மஞ்சள்தானோ.

    தமிழனுக்கு சமஸ்க்ருதம் அவசியம் தேவை. அவன் ததிங்கினத்தோம் போடுவது விஷமிகளின் வலையில் அவன் சிக்கி தவிப்பதால். தான் பிறந்த பூமி சிறந்த பூமி, தன்னுடைய மொழிகள் ஏற்றம் கொண்டவை, தன பண்பாடு சிறந்தது என்று அவன் புரிந்து கொண்டால் தப்புவான். அதற்கு அவனுக்கு மொழி அறிவு வேண்டும். மொழியின் மூலமாகவே ஞானத் தேடல் ஆரம்பிக்கிறது. அதை தடுப்பது மொழி அறிவின்மையே.

    எனக்கு ப்ரத்யக்ஷ அனுபவங்கள் உள்ளன.நான் களத்தில் பனி செய்கிறேன். சமஸ்க்ருதம் கற்க தமிழனுக்கு ஆவல் அதிகம். உங்களுக்கு இந்த அனுபவம் கிடையாது. நீங்கள் பேசுவதும் டில்லியில் அமர்ந்து கொண்டு ராஜ் தீப் சர்தேசையும், JNU ஞானிகளும் பேசுவதும் ஒன்று.

    உங்கள் கூற்று படியே போவோம். உங்கள் வாதப்படி தமிழனுக்கு தமிழே ததிகிங்கினத்தோம். தமிழ் வாரம் நடத்தி மட்டும் என்ன வாழப்போகிறது. தமிழன் உருப்படப் போவதில்லை. அவனை பேசமால் லண்டனுக்கு நாடு கடத்திடலாமா. இது தான் யதார்த்த வாதமா. நீங்கள் பார்த்த தமிழன் யார். உம்மை சுற்றி யார் யார் உலர் என்பது திண்ணமாக உங்களின் கூற்றுப்படி தெரிகிறது.

    //
    தலித் சேரிகளில் எல்லாரும் சமஸ்கிருத்ததிலேயே பேசி சண்டை போட்டுக்கொள்வார்கள் என்ற உங்கள் கற்பனைகளை என் மேல் திணிக்க வேண்டாம்.
    //
    அதீத கற்பனைகள் எனக்கல்ல. யதார்த்தமான, உண்மைகளை தான் நான் சொன்னேன். தமிழகத்தில் ஐம்பது லட்சம் பேர் என்று அவிழ்துவிடவில்லை. என்னிடம் நேரே கணக்கு இருக்கிறது அதை மட்டுமே தந்தேன். வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்களேன் அலக்ஸ் என்று ஒரு கேரளத்தவர் இருக்கிறார் தமிழ் நாட்டில் தான்.

    deccan chronicle பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி.

    //
    The occasion was the joint valedictory function on Sunday, of the over 60 Spoken Samskrit Shibirams (10-day classes) conducted simultaneously in Chennai city during the previous fortnight. Bhagawan Singh wanted each one teach Samskrit to 5 persons. He was the chief guest on the occasion. Over 50,000 people from all walks of life in Tamilnadu (Bharat) have learnt Samskrit over the last decade and many of them can even converse fluently in the language, said Shri. M. M. Alex speaking on the occasion.
    //

    இவர் மலையாள சினிமாவில் வில்லனாக அறுபது படங்களில் நடித்துள்ளார். இன்று அக்னிஹோத்ரம் முதல் செய்கிறார்.

    உங்களின் பாமரன் பார்வையில் கட்டிட தொழிலாளியும் கூலிவேலை செய்பவரும் இருந்து அவர்களுக்கு எதற்கு சமஸ்க்ருதம் என்றால், அவர்கள் எத்தையும் தான் படிப்பதில்லை. அவர்கள் படிப்பு பிடிக்காமல் வேறு தொழில் செய்கிறார்கள். ஒரு பெரிய காய்கறி கடை வைத்துள்ள ஒருத்தர் படிப்பு போர் சார் எவன் படிப்பான் என்கிறார்.

    இப்படிப்பட்டவர்களுக்கு எதற்க்கு சம்ஸ்க்ருதம் என்றா கேட்கிறீர்கள். அவர்களுக்கு நேர் நேர் தேமாயும் தான் வேண்டாம்.

    யதார்த்தமாக பார்க்கும் நீங்கள் சமஸ்க்ருதம் கொண்டாடுவதால் என்ன ஆகிவிடபோகிறது. தமிழன் தெரிடுவனா என்ன. அப்புறம் எதுக்கு சார் சமய விரயம். விடுங்க.

    நீங்கள் யதார்த்த வாதி இல்லை உங்கள் எழுத்திலிருந்து தெரிவது நீங்கள் ஒரு pessimist.

  156. திரு. BALA SUNDARAM KRISHNA அவர்கள் அந்தணர்கள் மேல் விஷத்தை உமிழ்கிறார். இல்லையேல் தூற்றுகிறார்.

    ##Manu has not been completely thrown out by you.## என்று எழுதுகிறார். பிறகு ஆழ்வார்களை பற்றி எழுதுகிறார்.

    63 நாயன்மார்கள் உள்ளனர். அதில் சுமார் 10 அல்லது 12 அந்தணர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள் ஹிந்து மதத்தில் உள்ள பல சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த சிலைகள் கோயில்களில் இல்லையா? அதற்கு பூசை செய்வது இல்லையா? நாம் வணங்குவது இல்லையா? அந்த குருமார்களை நாம் வணங்கும்போது சாதி பார்த்தா வணங்குகிறோம்? அல்லவே.

    நாயன்மார்களை பற்றிய விவரங்களுக்கு:
    https://en.wikipedia.org/wiki/Nayanars

    மேலும், திரு. BALA SUNDARAM KRISHNA அவர்கள் ஊடகங்களில் வந்து விடும் என்பதற்காக மனு தர்மத்தை யாரும் தொடரவில்லை என்று சொல்கிறார். அது முற்றிலும் தவறு.

    தற்போது அந்தணர் சமூகம் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது – சென்னை மாநகரை தவிர. எந்த சமூகமும் அல்லது குடும்பமும் கல்வி அறிவு பெறும்போது அச்சமூகத்தில் அல்லது தனிப்பட்ட குடும்பங்களில் மக்கள் தொகை குறைந்து விடும். தவிர, பகுத்தறிவும் வளரும். அனைவரும் ஒன்றே என்ற மனப்பான்மையும் வளரும். கல்வி அறிவு அறியாமையை போக்கும். இவைகள் எல்லாம் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே விஷத்தையே உமிழாதிர்கள் என்று வேண்டுகிறேன். அம்மக்கள் மாறினால் அதை மனமார ஆதரியுங்கள். அதை விட்டு குறையை மட்டும் நாடாதிர்கள்.

    மீண்டும் மீண்டும் யாம் சொல்வது யாதெனில் அந்தணர்களை காயப்படுத்த விரும்பினால் அதற்கென்று பல இயக்கங்கள் இருக்கிறது. இந்த வாராது வந்த மாமணிபோல் உள்ள இணையதளத்தை தயை செய்து பயன்படுத்தாதீர் – மீண்டும் வேண்டுகிறேன்.

  157. வியாசன்

    //
    நீங்கள் கூறிய சொற்களில் அரைவாசிக்குமதிகமானவை தமிழிலிருந்து சமஸ்கிருதம் இரவல் வாங்கியவை. இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய வலைப்பதிவில் பேசப்படுகிறது, நேரமிருந்தால் போய்ப் பாருமையா? அண்மையில், சமக்கிருதவாதியான சோ ராமசாமியே “ஸம்ஸ்க்ருதம் என்றால் ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரே சமஸ்கிருதம் ஒரு செயற்கையான (artificial language) மொழி என ஒப்புக் கொள்கிறார். நன்றாகச் செய்யப்பட்ட, refined language சமஸ்கிருதம் என்றால் அது எந்த மொழியிலிருந்து செய்யப்பட்டது அல்லது எந்தெந்த மொழிகளிலிருந்து இரவல் வாங்கிச் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
    //
    சொப்பா. நினைத்தேன், வீரமணி மாதிரி பதில் வரும்னு. சோ ராமசாமி என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே தொபுகடீர்ன்னு ஒரு முடிவுக்கு வந்துட வேண்டியது. இதனால் தான் சொல்கிறேன், நீங்கள் சமஸ்க்ருதம் பற்றி சற்றும் புரிதல் இல்லாமல் கற்பனை மற்றும் கொண்டு பேசுகிறீர்கள்.

    பாணினீய சமஸ்க்ருதம் ஒரு செயற்கை மொழி தான். யார் இல்லை என்றால். நன்றாக செய்தது என்று தான் அதற்கு அர்த்தம் எதில் இருந்து என்றால் சந்தஸீ என்ற வேத மொழியிலிருந்தும் அவ்வேத மொழியின் பிரிவுகளாக நடைமுறையில் இருந்த வட்டார வேறுபாடுகளில் இருந்தும். இதை அவரே சொல்கிறார். அவர் தமிழை குறிப்பிட வில்லை. பதஞ்சலி என்று இதற்கு பாஷ்யம் எழுதியவரும் இதை நன்கு விளக்குகிறார். பாணினி செய்தது சந்தஸ் மற்றும் வாட்டார மொழிகளுக்கு ஒரு over arching தளம் தந்தது. உதாரணமாக சொல்லப் போனால் சமஸ்க்ருதத்தில் தாதுக்கள் நித்யம். அவைகளில் இருந்துதான் வினை சொற்கள் வரும். பூ என்ற தாதுவில் இருந்து பவதி (இருத்தல்). சுர என்ற தாதுவில் இருந்து சோரயதி (திருடுதல்). பூ மற்றும் சுர என்ற இவ்விரண்டு தாதுவுக்கும் எத்தனை வேறுபாடு உள்ளது பாருங்கள். இவ்விரண்டிலிருந்து ஒரே மாதிரி வினைச்சொல் எப்படி கொண்டு வருவது அதற்காக அவர் சில சட்டங்களை அமைக்கிறார், தாதுக்கள பத்து குழுக்களாக பிரிக்கிறார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சட்டம். கிட்டத்தட்ட கணிதம் போன்று இருக்கும்.
    பாணி செய்தது இந்த சட்டம் கொண்டது வந்தது தான். அப்படி சட்டத்திற்குள் அடக்கி பேசும் மொழி சமஸ்க்ருதம் அல்லது பாணினீய பத்ததி என்றாயிற்று. அதாவது முன்னே மொழி பேச்சு வழக்கில் இருந்தது அதை என்னும் சீர்திருத்தி சட்ட திடாம் கொண்டு வந்து மெருகேற்றப்பட்டது.

    இது தான் சமஸ்க்ருததின் கதை. நீங்கள் முடிவு செய்தது என்ன. ஓஹோ முன்னாடி எதுவும் இல்லை, சமஸ்க்ருதம் தமிழில் இருந்து வந்தது என்று.

    சமஸ்க்ருத பதங்கள் எந்நாளும் இடுகுரிபெயராக இரா. வேறு மொழியில் இருந்து கடன் வாங்கினால் இடுகுறி பெயாராக தான் அது வரும். அதை திடுதிடுப்புன்னு மூலத்தில் சேர்க்க முடியாது. நான் சுட்டிக் காட்டிய அத்தனை பதங்களும் ஒரிஜினல் சமஸ்க்ருத தாது கொண்ட பதங்கள்.

    உங்கள் சுட்டியை படித்தேன் ரொம்ப சிரிப்பு வருது சார். காயம் என்பதும் சமஸ்க்ருத சொல்லே. உடலை குறிக்கும். “காயென வாசா மனசா இந்த்ரியை: வா.”

    ஆகாசம் என்பது வேத காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ளது. “ஆகாசாத் வாயு: வாயோர் அக்னி, அக்னேர் ஆபஹ அத்ய ப்ருதுவீ” – தைத்ரியம்

    காசா என்றால் தோற்றமளிப்பது. ஆ என்பது சமஸ்க்ருதத்திலும் முன்னொட்டு எங்கும் அதிகம், என்ற அர்த்தங்களில் வரும். எங்கும் தோன்றுவது ஆகாசம்.
    சமஸ்க்ருதத்தில் வான் என்றால் த்யுஹு என்று நாம் சொல்லும் sky.

    sky வேறு ஆகாசம் (ether, plasma) வேறு.

    இல்லை என்றால் கஷதி என்றால் ஒலி எழுப்புவது என்று அர்த்தம். சப்தத்தை தன்மையாக கொண்டதால் ஆகாஷ: (இது சமஸ்க்ருதத்தில் ஆன் பால்)

    பக்திக்கு பற்றி என்று அர்த்தம் சொல்லும் ஒரே ஆள் நீங்கள் தான். பற்றுதல் என்பது பிரபத்தி. பக்திக்கு தமிழர்கள் (பரிப்பாடல், பாசுரங்கள்) தரும் அர்த்தம் வெறும்.
    முக்திக்கும் முற்றி என்கிறீர்கள்.

    (இது சமஸ்க்ருதத்தில் பெண் பால்)

    தரு தர்ம சம்பந்தமே இல்லை. சமஸ்க்ருதத்தில் அது நான்காவது த. தருணி என்பதும் சமஸ்க்ருதத்தில் உள்ளது அது முதல் த. சுட்டவர்கள் ஒன்றுக்கு முதல் தாவும் மற்றதுக்கு நான்காம் தாவும் இடுவார்களா. பாணினி வஞ்சகர்.

    தர்மத்திற்கும் தரு என்பதற்கும் என்ன அர்த்த சம்பந்தம் உள்ளது என்று சொல்லுங்கள். “தரு என்றால் மரம் கல்பதரு என்பதும் சமஸ்க்ருத பதம். கல்ப என்றால் உண்டுபண்ணுவது. கல்பதரு என்றால் நினைப்பதை உண்டுபண்ணும் மரம். தர்மம் என்றால் பிச்சைகாருனுக்கு தர்மம் (தானம்) பண்றது என்றா அர்த்தம்.

    பாணினியின் காலம் கிட்டத்தட்ட 1100 BCE to 800 BCE. அவர் காலத்திற்கு முன்னே பகவத் கீதை இருந்தது, அதன் முதல் ஸ்லோகம், “தர்ம க்ஷேத்ரே குறுக் க்ஷேத்ரே “. உங்களின்படி பார்த்தல் பிச்சை போடும் அல்லதும் கொடுக்கும் இடத்தில் குருவின் இடத்தில்.

    அஹா ஜாக்பாட் பாருங்கள். சேறு (சேறு நிரந்த இடம்) என்பதில் இருந்து தான் க்ஷேத்ரம் வந்தது.

    அரசன் கொஞ்சம் ஓவர் சார். ராஜன் முன்பு அ சேர்த்தது தமிழில் ரநாவில் பதம் ஆரம்பிக்காது என்று.
    அரவணைத்தல் என்பது அரசனா. ஏன் அப்படி என்றால் அம்மா கூடத்தான் சரியா வரும்.

    ராஜதே இதி ராஜன். சாசனம் செய்வதால் ராஜன். விராஜதே – வீற்று இருத்தல். ராஜ தமிழனா அராஜகமும் தமிழ் தானே. அராஜகம் என்றால் அரவனைபின்மயா அல்லது ஒழுங்கின்மையா. அ என்று முன் சேர்த்தல் தமிழில் எதிர்மறை அர்த்தம் வருமா சமஸ்க்ருதத்தில் வருமா.

    சபா , பவதீ என்றால் இருத்தல் ஸ என்ற உபசர்க்கம் (முன்னொட்டு) கூடி இருப்பது என்பது சபா. நீங்கள் தமிழில் உங்களுக்கு பிடித்தமாதிரி ஒரு derivation தந்துவிட்டு உண்மை என்றால் என்ன செய்ய.
    இதுவும் பெண் பால்

    உபாயம் சரி உபெயமும் தமிழில் இருந்து சுட்டார்களா.

    புத்தகத்திற்கும் நீங்கள் தரும் விளக்கம் அபாரம். பழைய விஷயம் கொண்ட நூலை என்ன சொல்வீர்கள். பழயதகம் என்றா.

    எழுதிக் கொண்டே போங்கள் வ்யாசன், இவை உண்மையிலேயே தமிழாக இருந்து அதை சமஸ்க்ருதம் ஏற்றுக் கொண்டிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

  158. hi all,

    no malyali,no telugu no kannda ask give only their respective lanaguages in Temples. All temples belongs to God not to tamils or kannda or hindi.
    Hence, sankrit is common language for all hindu religions(savia,vasinava,sikh,jain,buddha).Only sanskirt allowed in Temple. why wont people learn sanskrit. sanksrit is not language of brahmins. It is language of all hindu religions.

  159. @Bala Sundra krishna,

    your beloved Ramanuja wrote seven books . All seven books only in Sanskrit only. He never write any book in Tamil. why because he want to reach all his views to all people.At the time , sanskrit is link language throughout India(Including Tamilnadu) .Even, malayaali not accepting malayalam came from Tamil. but all people accept sanskrit is common lanugage in India. That’s why Modi announced Sanskrit week got my point.

  160. //சமஸ்க்ருத வாரம் கொண்டாட வேண்டும் தமிழ் கொண்டாட படாது என்று கவர்மெண்டு சொன்னது போல இல்லாத பிரச்சனைய தமிழ் சமக்ஸ்ருத்த பிரச்சனையாக்கி குளிர் காயும் குள்ள நரிகள் குட்டிப் போட்டு கும்மி அடிக்கின்றன.//

    Sarangan

    இதை சுவனப்பிரியனுக்குத்தான் எழுதியிருக்கிறீர்கள். எனினும் ஒரு பிழையான கருத்தை வைத்திருக்கின்றபடியால் அதை விளக்குவதை எவரும் செய்யலாமென்பதாலும் நான் எழுதுகிறேன்.

    வடமொழி வாரம் கொண்டாடவேண்டும் என மத்திய அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விட்டது மோதி அரசு. தமிழ் கொண்டாடப்படக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படித்தான் சொன்னது என்று இங்கு எவரும் எழுதவில்லை.

    மாறாக, ஏன் தமிழ்வாரமும் கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை என்பதுதான் கேள்வி. அதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள். அது மத்திய அரசின் கடமையில்லை. மாநில அரசின் கடமையே.

    மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு மத்திய அரசுதான் ஆணையிட வேண்டுமென்பது கூட தெரியவில்லை உங்களுக்கு. வடமொழிக்குப் பதிலாக ஹிந்தி வாரம் கொண்டாடுங்கள் என்றால் கூட சரியெனக்கு. வடமொழி என்பது கோயில் மொழி. அதை அரசு ஆதரிக்கக் காரணம் மோதியின் அரசு மெல்லமெல்ல இந்துத்வா அஜண்டாக்களை முன் தள்ளுகிறதோ என்ற அச்சத்தினால் திராவிடக்குஞ்சுகளும் ஏனையோரும் எதிர்க்கிறார்கள். நான் எதிர்க்க காரணம் வடமொழிக்கு வாரம் தேவையில்லை. அம்மொழியால் மக்களுக்கு பலனில்லை பணம் சம்பாதிக்க உதவாது என்பது மட்டுமே.

    ஒரு ஐயம்: ஏன் சாரங்கன். எப்போது எவருக்குப் பதில் எழுதினாலும் அடாவடித்தமிழையே பிடிக்கிறீர்கள். இங்கு எழுத வருபவர்களெல்லாம் பேட்டை ரவுடிகள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்களும் கற்றோர். சமூகத்தில் நல்லிடங்களில்தான் இருப்பவர்கள். நாகரிக மனிதர்களிடையே நடக்கும் உரையாடல் பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். இத்தனைக்கும் ஆசிரியத்தொழில் பார்ப்பதாகச் சொல்கிறீர்கள். இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்று தமிழ்ப்புலவர் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

  161. திரு. BALA SUNDARAM KRISHNA,
    //ஒரு பக்ஷமாக பேசும் நீங்கள். யாகத்தில் என்ன நடக்கிறது, மந்திரம் என்றால் என்ன அதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யலாம் அல்லவா.///

    உங்களின் மறுமொழிக்கு நன்றி. நானும் சமக்கிருததுக்கு மந்திரமுண்டு, தந்திரமுண்டு என்ற வாதங்களை எல்லாம் கேட்டிருக்கிறேன். அதை நான் நம்பவில்லை. அதில் எனக்கு ஆர்வமுமில்லை. . உலகில் பல கோடி மக்கள் மந்திரங்கள் கொண்ட சமக்கிருதம் இல்லாமல் கடவுளை வணங்குகிறார்கள். அதனால் தமிழர்களுக்கும் அந்த மந்திர, தந்திரம் கொண்ட சமக்கிருதம் தேவையில்லை, அவர்களின் தெய்வத்தமிழ் ஒன்றே போதுமானது என்பது தான் எனது நிலைப்பாடு.

    உதாரணமாக ஈழத்தில் உலகப்புகழ் பெற்ற கதிர்காமத்திலும் செல்வச் சன்னதியிலும் “மந்திரங்கள் கொண்ட” சமக்கிருதம் இல்லை, பார்ப்பனர்களும் கிடையாது. அதனால் முருகன் எழுந்தோடி விடவில்லை. சமக்கிருத மந்திரங்கள் இல்லாமலே தமிழால் எங்களின் விருப்பத்துக்கேற்றவாறு சிவனை ஆட்டி வைக்கலாம், ஏன் பெண்களிடம் தூது கூட அனுப்பலாம், பிரம்படி வாங்க வைக்கலாம், பிள்ளைப்பேறு பார்க்க வைக்கலாம் இன்னும் என்னவென்னவோ எல்லாம் செய்யலாம் என்பதை, தமிழின் மகிமையை எங்களின் நாயன்மார்கள் எடுத்துக் காட்டிச் சென்றுள்ளார்கள். அப்படியிருக்க, எதற்காக ஐயா, தமிழர்களுக்கு இந்த “மந்திர, தந்திரங்கள் கொண்ட’ சமக்கிருதம்?

  162. Sarang,

    இஸ்லாம் தனது இன, மொழி, பாரம்பரியத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, அவர்களின் மதச் சகோதரர்கள் வேற்று மொழி, இனத்தினராக இருந்தாலும் மத அடிப்படையில் ஒன்றுபடுவதை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஈழத்தில் கொல்லப்படும் தமிழர்களை விட, பலத்தீனத்தில் சாகும் முஸ்லீம்களுக்காக, தமிழ்நாட்டு முஸ்லீம்கள் துடித்தெழுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு பொதுவான மொழி தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாம் தனது தமிழ்ச் சகோதர்களின் நலன்களில் அக்கறை காட்டாமல், உலக முஸ்லீம்களிடம் அதிகளவில் அக்கறை காட்டியதாலோ என்னவோ, இத்தனை நூற்றாண்டுகள் இஸ்லாம் தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்தும் மிகவும் குறைந்தளவிலான தமிழர்களையே அவர்களின் மதத்தின் பால் ஈர்க்க முடிந்திருக்கிறது போல் தெரிகிறது. அதனால் இஸ்லாமியர்கள் அரபு மொழிக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பற்றிப் பேசுவது வீண் வேலை.

    ஆனால் தமிழ்க் கிறித்தவர்கள் முழுமையாக தமிழில் தான் வணங்குகிறார்கள். அவர்கள் தமிழைத் தவிர வேறெந்த மொழியையும் வழிபாட்டுக்குப் பயன்படுத்துவதில்லை. அவர்களின் யேசுவுக்குக் கூட தமிழ் புரிகிறது ஆனால் தமிழ் முருகனுக்கும், தமிழ்நாட்டில் இவ்வளவு காலமிருந்து கொண்டு, ஞானசம்பந்தரின் தமிழ் தேவாரத்தைக் கேட்டுருகி, அதைப் புரிந்து கொண்டு, செத்துப்போன பெண்ணையே உயிர்த்தெழச் செய்த கபாலீச்சரருக்கு மட்டும் தான் இன்னும் சமக்கிருதம் தேவை என்கிறார்கள் உங்களைப் போன்ற சமக்கிருதவாதிகள். அந்த பம்மாத்தைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 🙂

  163. சாரங்கன்,

    //காயம் என்பதும் சமஸ்க்ருத சொல்லே. உடலை குறிக்கும். “காயென வாசா மனசா இந்த்ரியை: வா.//

    காயம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும் என்பதற்கு தொல்காப்பியத்திலிருந்து ஆதாரம் காட்டிய பின்பும், அது சமக்கிருதச் சொல் என்று பிதற்றும் உங்களைப் பார்க்க எனக்கும் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை. 🙂

    பூசை என்பது சமக்கிருதச் சொல்லா அல்லது தமிழிலிருந்து இரவல் வாங்கியதா என்பதற்கும் விளக்கம் கூறுங்கள் பார்ப்போம். சும்மா வெறும் சுலோகங்களை அள்ளி விடுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. உங்களைப் போன்ற சமக்கிருதவாதிகள் சமக்கிருதம் தமிழிலிருந்து பெருமளவில் சொற்களை இரவல் வாங்கியதை ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, வடமொழிக்கு எழுத்தே கிடையாது, கிரந்தம் தமிழ்நாட்டில் வடமொழிக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்டது. வடமொழியை ஆதரித்து, வளர்த்து விட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களின் ஆதரவில் வளர்ந்து விட்டு, தமிழை விட சமக்கிருதம் உயர்ந்தது என்று கூறும், உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்க்கிறார்கள். என்னைப் போன்று எந்த மொழியையும் எதிர்க்காத தமிழர்களும் சமக்கிருதவாதிகளின் தமிழெதிர்ப்பை கண்டு சமக்கிருதத்தை எதிர்க்க வேண்டிய தேவையை உணர்கிறோம். தமிழ்நாட்டில் தமிழை விட எந்தமொழியும் உயர்ந்ததுமல்ல, தமிழைத் தவிர எந்த மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது.

  164. சாரங்கன்,

    // மந்த்ரார்ச்சனை , வேத பாராயணம் எப்பொழுதும் சமஸ்க்ருதத்தில் தான் இருக்கும். அதன் சிறப்பை அறிய அம்மொழியை சிறிதேனும் கற்பேன் என்றில்லாமல். அதை தூஷனை செய்வதால் என்ன லாபம்.///

    தமிழர்கள் அவர்களின் முன்னோர்களின் கட்டிய கோயில்களில் எதற்காக சமஸ்க்ருதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எதற்காக சமஸ்கிருதத்தில் வழிபட வேண்டும், எதற்காக அதைக் கற்க வேண்டும் என்பது தான் இங்குள்ள கேள்வி. தமிழ்மண்ணில் தமிழர்களின் கடவுள்களைத் தமிழர்கள் வணங்குவதற்கு சமஸ்கிருதம் தேவையா?

    திருநாவுக்கரச நாயனார் தனது தேவாரத்தில் “போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்கிறார். இந்த வரிகளிலிருந்து நாங்கள் அறியக் கூடியதென்னவென்றால், நாவுக்கரசர் காலத்தில் தமிழர்கள் அனைவரும் சாதி வேறுபாடன்றி (நாவுக்கரசர் பார்ப்பனரல்ல) கருவறைக்குள் புகுந்து சிவனை திருமுழுக்காட்டி, அதாவது நீரும், பூவும் சொரிந்து வழிபட்டனர் என்பது தெரிகிறது. நிச்சயமாக, ‘போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவோர்’ எல்லோரும் சமக்கிருதத்தில் திருவையாற்றுச் சிவனை வழிபட்டிருக்க மாட்டார்கள். தமிழில் தான் வழிபட்டிருப்பார்கள் அல்லவா. அதனால் எங்களின் முன்னோர்களுக்குத் தேவைப்படாத சமக்கிருதம் இப்பொழுது எங்களுக்கு எதற்கு. சிவனுக்குத் தமிழ் புரியும் என்பது மட்டுமல்ல, தமிழ் என்றால் மிகவும் பிரியம் என்கிறது சைவத்தின் வரலாறு. அதனால் சிவனியத்தையும் மாலியத்தையும் கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு சமக்கிருதமும் பார்ப்பன பூசாரிகளும் தேவையில்லை, தமிழே போதுமானது.

    “மாதர்ப் பிறைக் கண்ணியானை
    மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர் சுமந்து ஏத்திப்
    புகுவார் அவர் பின்புகுவேன்
    யாதும் சுவடு படாமல்
    ஐயாறு அடைகின்ற போது
    காதல் மடப்பிடியோடும்
    களிறு வருவன கண்டேன்”

    -நாவுக்கரசர்-

  165. உயர்திரு வியாசன் அவர்களே,

    // உலகில் பல கோடி மக்கள் மந்திரங்கள் கொண்ட சமக்கிருதம் இல்லாமல் கடவுளை வணங்குகிறார்கள். அதனால் தமிழர்களுக்கும் அந்த மந்திர, தந்திரம் கொண்ட சமக்கிருதம் தேவையில்லை, அவர்களின் தெய்வத்தமிழ் ஒன்றே போதுமானது என்பது தான் எனது நிலைப்பாடு.//

    உங்களது இந்தக் கருத்துக்கு நான் எதிர்க்கருத்து கூறப் போவதில்லை. ஏனெனில், கடவுளர்களை தனி மனிதர்களாக எப்படி வேண்டுமானாலும் தொழலாம். அதர்வ வேதமும், “தாய் மொழியிலேயே கடவுளை வணங்கவேண்டும், தாய்மொழி ஒருவரின் குருதியோடு கலந்திருக்கிறது, தாய்மொழி ஒருவரின் மூச்சுக் காற்று” என்று ஓதா நிற்கிறது. எந்த ஒரு மொழியும் தேவை என்பதும், தேவை இல்லை என்பதும் அவரவர் கருத்து. இங்கு என் வீட்டிலும், என் நண்பர்கள் அனைவரும் என் தமிழ்ப் பற்றைக் கண்டு, என்னைத் “தமிழ் வெறியன்” என்றே அழைப்பார்கள்,

    இருப்பினும், உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லாத கருத்து ஒன்றும் எனக்கு இருக்கிறது. //தமிழர்களுக்கும் அந்த // என்ற இரு சொற்கள்தான். தமிழர்கள் இந்துக்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, கிறித்தவர்களாவோ, சமனார்களாகவே, புத்தர்களாகவோ, நாத்திகர்களாகவோ இருக்கலாம். எனவே நீங்கள் “தமிழ் இந்துக்கள்” என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல, எந்தமொழியைத் தாமிமொழியாகக் கொண்டவரும், நமது இந்து சமயத்தை நன்கு அறிய விரும்பினால், நான் முன்பு சுட்டிய ஒரு கருத்தை மீண்டும் உங்களுக்குச் சுட்ட விரும்புகிறேன். //இந்து சமயம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து வரும் மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும்தான்.இந்து சமயத்தை வடமொழி மட்டிலுமோ, தமிழ் மட்டிலுமோ காண முயற்சித்தால், அது ஒரு கண்ணினால் இவ்வுலகத்தை காண்பது போலத்தான் இருக்கும். இரு கண்களாலும், முப்பரிமாணத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்து சமயத்தின் ஆழம் கிடைக்காது போய்விடும்//

    மந்திரம் என்பது ஒரு கருவியாகும். அவருக்கு அக்கருவி தேவையோ, அவர்கள் அதை உபயோகிக்கலாம். மந்திரம் மனதை ஒருநிலைப்படுத்தும்.

    எடுத்துக்காட்டாக, சைவர்கள் “நமச்சிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தில் ஓதி, மனத்தை ஒருநிலைப்படுத்துகிரார்கள். அங்கனமே, வைணவர்கள் “நாராயணாய” என்ற மந்திரத்தையும், குமரக் கடவுளைப் போற்றுவோர் “சரவணபவ” என்றும், ஆனைமுகனத் துதிப்போர், “ஓம் கம் கணபதியே” என்றும், மற்ற சமயத்தோரில் இஸ்லாமியர்கள். “அல்லாஹு அக்பர்” என்றும், “இன்ஷா அல்லா” என்றும், கிறித்தவர், “ஜீசஸ் சேவ்ஸ்” என்றும், “ப்ரேயிஸ் த லார்ட்” என்றும் ஓதுகிறார்கள்.

    மனதுள் ஓதுவதே மந்திரம். வடமொழித் தோத்திரங்களை மட்டுமே மந்திரம் என்று என்னும் தவறான கருத்தும் பலரிடம் பரவி நிற்கிறது. திருமூலர் எழுதிய பத்தாம் திருமுறை “திருமந்திரம்” என்றே சுட்டப்படுகிறது.

    பலரிடம் விடுத்த வேண்டுகோளை உங்களிடமும் விடுக்கிறேன். “பார்ப்பனர்” என்ற இழித்துரைக்கக் கையாளும் சொல்லை, அருள்கூர்ந்து, ஒரு குறிப்பிட்ட இந்து சமூகத்தவரைச் சுட்டக் கையாலாதீர்கள். நீங்கள் சுட்ட வந்தவர்களுக்குச் சரியான சொல் “பிராமணஅ ர்ச்சகர்கள்” என்பதே. வேதம் ஓதும் பிராமணர்களை “மறையவர்கள்” என்று சுட்டவேண்டும். இவர்களில் மாறுபாடு தெரியாவிட்டால் “பிராமணர்கள்” என்று சுட்டுவதே சிறப்பாகும். நாம் மதிக்கப்பட வேண்டும் என்றால், நமது சொற்கள் சரியாக மதிக்கப்படவேண்டும் என்றால், நாமும் மற்றவர்களை மதிப்போடு சுட்டவேண்டும், இந்துக்களாகிய நாம், நமது உட்பிரிவினர்களையும், ஒருவரை ஒருவர் மட்டுமல்ல, மற்ற சமயத்தாரையும் மத நல்லிணக்கம் கொண்டு ஒழுக, தகுந்த சொற்களாலேய சுட்டவேண்டும்,

    நான் கூறி இருப்பதை நல்லமுறையில் எடுத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    வணக்கம்.

  166. பாலா

    CBSE பள்ளிகள் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் அல்ல. அது ப்ரைவேட்டு பள்ளிகள். CBSE என்பது பாட திட்ட முறை சான்றிதழ் தான்.

    மத்திய அரசு சமஸ்க்ருத வாரம் கொண்டாட சுற்றறிக்கை விடலாம் வற்புறுத்த முடியாது ஏன் என்றால் இது பாட திட்டத்தில் வராது. இதே போல தமிழ் நாட்டு பள்ளிகள் அனைத்தும் தமிழ் வாரம் கொண்டாட வேண்டும் தமிழக அரசு ஒரு சுற்றறிக்கை விடலாம். அதை ஏற்று CBSE பள்ளிகள் கொண்டாடலாம்.

    மேலும் என்னுடைய மறு மொழியில் ஏன் தமிழக முதல்வர் தமிழ் மாதம் வேண்டும் நடத்த சொல்லுங்கள் என்று கடுதாசி போடலாமே என்று கேட்டிருந்தேன். நீங்கள் கூட போடலாம். மத்திய அரசு இதை ஏற்று சுற்றறிக்கையும் விடலாம். இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. நான் முன்பு இட்ட இந்த மறுமொழியை எல்லாம் நீங்கள் படிக்க வில்லை பரவா இல்லை.

    இதை எல்லாம் விடுங்கள். நீதி மன்றமே இந்த எதிர்ப்பை ஆதாரமே இல்லது என்று தீர்பளித்து புறம் தள்ளியாயிற்று. அமையுங்கள்.

    நான் அடாவடியா. சார் இதற்கு பெயர் தான் குழந்தையையும் கிள்ளி விட்டு குழந்தை கிள்ளியது என்று அலறுவது. உங்களின் மறுமொழிகளை ஒரு முறை படியும். எத்தனை பிராமன,ஜாதி, ஹிந்துத்வா த்வேஷம். என்னை பற்றி தனி மனித த்வேஷம். எல்லாம் செய்துவிட்டு சாரங்கனை பார் அவன் சின்னப் பயல் என்பது.
    உங்களோடு கொஞ்சு தமிழிலா பேச முடியும். யாரோடு எப்படி பேசணுமோ அப்படிதான் பேசணும். you are trying to play victim very typical of losers and JNU intellectuals.

    நான் ஆசிரியர் தொழில் பார்கிறேன் என்று எங்கே கூறினேன். இதுவும் உங்களது தவறான ஊகம்.

  167. வியாசன்

    பக்தியால் இறைவனை கட்டுன்ன செய்யலாம். அதில் சந்தேகமே இல்லை. அதனால் கோவில்களில் சமஸ்க்ருதம் கூடாது என்று சொல்ல நீங்கள் திடீர் என உங்களை ராஜ ராஜ சோழன் என்று நினைத்து கொண்டுவிடீர் போல. ஒரு ரூபாய் உண்டியலில் போட்டதால் கேட்கிறீர்களா. தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று எல்லாவிடத்திலும் இருக்கு, யாரவது செய்கிறார்களா. மக்கள் எதை ஏற்கிறார்கள் என்று பாருங்கள். நீங்கள் ஒரு கோவில் கட்டி அந்து தமிழ் மட்டுமே என்று சொல்லுங்கள் அங்கும் மக்கள் வருவார்கள், ஒருவர் மூலையில் ஒக்காந்து கந்த சஷ்டி படிப்பார் நல்லது, இன்னொருவர் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பார். நீங்கள் வேண்டுமேன்றால் இது என் கோவில் இங்கு சமச்க்ருதத்திற்கு இடமில்லை என்று அவரை வெளியே துரத்துங்கள்.

    இறைவனுக்கு பிரம்படி வாங்கித்தர முடியும் என்பதை நீங்கள் நம்பலாம், மந்தர சக்தி உள்ளதை மற்றவர் நம்பக் கூடாது. நல்லா இருக்கு அய்யா உங்கள் நியாயம்

    பக்தி என்று ஒன்று வேலை செய்யும் என்றால் மந்திர சக்தியும் வேலை செய்யும். மந்திர சக்தியை அனுபவத்தில் நிரூபிக்கலாம் [அதற்கு தான் அதிருத்ரம் பற்றி செய்தியை கொடுத்தேன் படித்தீர்களா] , பக்தியை நிரூபிக்கவே முடியாது.
    மந்தர, க்ரியா, தந்தர, பக்தி, ஞான, தான, அப்யாச என்று பல யோகங்கள் உள்ளன என்று விளங்கிக் கொள்ளுங்கள், நீங்கள் சொல்வதை ஏற்று சமஸ்க்ருதத்தை விரட்டி அடித்து தான் தீர வேண்டிய அவசியம் இருக்கிறது என்று எப்படி நினைக்கிறீர்கள். என்னை சாடுகிறீர்கள், அஹங்காரம் எங்கே இருக்கு என்று பார்த்தீர்களா.

    //
    அதனால் தமிழர்களுக்கும் அந்த மந்திர, தந்திரம் கொண்ட சமக்கிருதம் தேவையில்லை, அவர்களின் தெய்வத்தமிழ் ஒன்றே போதுமானது என்பது தான் எனது நிலைப்பாடு.
    //

    உங்கள் நிலைப்பாடு சரி. இது தான் எல்லா தமிழனும் நிலைபாடா அது உங்களுக்கு எப்படி தெரியும். எது திணிப்பு. கோவில் திறந்த காலம் முதல் வரும் சம்பிரதாயத்தை மாற்றுவேன் என்கிறீர்களே அதில் என்ன சிறப்பை கண்டீர்கள். சமஸ்க்ருதம் ஒன்றும் வேதாளங்களின் மொழி அல்லவே, அதை ஒழித்துகட்ட.
    ஆயிரம் ஆயிரம் காலமாக ஆலயங்களில் சமஸ்க்ருதம் இருந்துள்ளது அதனால் தமிழுக்கு என்ன பாதிப்பு வந்தது. பரிபாடல்கள் காலம் முதல் தமிழன் இப்படி தான் சாமி கும்பிட்டான். எந்த ஒரு பண்டைய நல்ல தமிழ் புலவனாவது சமஸ்க்ருதம் தூக்கி எறியப்பட வேண்டும் என்று சொன்னாரா.

    உங்களின் பேச்சுக்கும் பிராமன த்வேஷம் ஒன்றே மூலம் போல் தெரிகிறது. உங்களுக்கு சமஸ்க்ருதம், மந்த்ரம் பற்றி கிஞ்சித்தும் தெரியாதிருக்க hear say என்ற ரீதியில் பேசுகிறீர்கள். மற்ற பக்ஷம் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாமே. முயற்சி செய்ய மாட்டேன் என்றால் உங்கள் பேச்சை கேட்க மாட்டேன் என்று தமிழனுக்கு சொல்லவும் உரிமை உண்டு.

    நீங்கள் வைப்பது அனைத்தும் நம்பிக்கை சார்ந்த வாதம். துளியும் விவரங்கள் சார்ந்தது இல்லை.

  168. வியாசன்,

    உங்கள் கருத்து எங்கு போணியாகாதோ அங்கு அரபியைப் பற்றிப் பேசி புண்ணியமில்லை என்கிறீர்கள். தமிழ் பைபிளில் பார்த்தால், எல்லாம் ஏராளமான சமஸ்கிருதக் கலப்பு உள்ளது. தமிழகத்தில் கோயில்களில் இறைவனுக்கு 16- வகை உபசாரம் செய்யும்போது, திராவிட வேதம் என்று சொல்லி, தேவார திருவாசகம் திருப்பல்லாண்டு என்று ஐந்து தமிழ் வேதநூல்களை தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து திருமறைகள் ஓதப்படுகின்றன. நீங்கள் கோயிலில் சென்று , அங்கு செய்யப்படும் பூசை முறைகளை கவனித்ததில்லை என்று தெரிகிறது.

    sarang – அவர்களின் இடுகைகளையும், மறுமொழிகளையும் நான் தொடர்ந்து கண்ணுற்று வருகிறேன். அவர் சமஸ்கிருதவாதியும் அல்ல. அவரிடம் எவ்வித பம்மாத்தும் இல்லை. அவர் சமஸ்கிருதம் பயின்றவர் அவ்வளவுதான்.நமது திருக்கோயில்களில் ஆகம சாத்திரங்களின் படி, பூஜை முறைகள் நடைபெறுகின்றன. அங்கு தமிழுக்கு இடம் இல்லை என்று தாங்கள் கருதுவது தவறு. வைணவக் கோயில்களில் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஓதப்படுவது நான் தினசரி கேட்கிறேன். சைவக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் போது, கோயில் தூணிலே இங்கு தமிழ் அர்ச்சனையும் செய்யப்படும் என்று விளம்பர அறிவிப்பு பலகை உள்ளது. தாங்கள் இவற்றை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. சமஸ்கிருதம் நம் முன்னோரால் நிறைமாந்தர் மொழியாக கண்டுபிடிக்கப்பட்டு செம்மைப் படுத்தப்பட்ட ஒரு மொழியே. மந்திரம் என்ப நிறைமாந்தரின் மொழியே- என்று தமிழ் மூதுரை தாங்கள் படித்ததில்லையா ? அதன் மீது வெறுப்புடன் நீங்கள் அணுகுவதால், தங்களுக்கு இந்த குரோத உணர்ச்சி உள்ளது.

    தங்களுக்கு இன்னுமொரு விஷயத்தை கூறுகிறேன். நமது திருக்கோயில்களில் இப்போது வேதம் படித்த, ஆகம சாஸ்திரம் பயின்ற மாணாக்கர்கள் புதியதாக கிடைப்பதில்லை. தங்களைப் போன்றோர் இவ்வளவு ஆர்வமாக கேட்பதால், நம் தமிழக கோயில்களில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, இன்னமும் நியமனம் வழங்கப்படாமல் உள்ள நிலையை மாற்ற ஏதாவது செய்யுங்கள்/ நடவடிக்கை எடுத்து அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் செயலை செய்யுங்கள். அதனை விடுத்து, சிறிதாவது நாம் சிந்தித்தால், நமது சென்னை நகரத்தை மெட்ராஸ் என்று சொல்வதற்கு பதிலாக சென்னை என்று 1996-லேயே மாற்றினோமே, ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் இன்னமும் அதாவது சுமார் 20 வருடம் ஆகியும் நமது உயர்நீதிமன்றத்தின் பெயர் மெட்ராஸ் என்றே உள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை எடுங்கள் தம்பி. இப்படி சிறிது சிறிதாக மாற்றங்கள் , நாளடைவில் நீங்கள் விரும்பும் பெரிய மாற்றங்களை கொண்டுவரும்.

    நீங்கள் இன்னொரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். மற்ற மதங்களை சேர்ந்தோர் ஒரே புத்தகம், ஒரே தலைவர் என்று யாரோ சொல்லும் ஒன்றை கேட்கக்கூடியவர்கள்.

    ஆனால் இந்துக்களுக்கு எவனும் தலைவனும் இல்லை, எந்த புத்தகத்தையும் கட்டிக்கொண்டு அழுபவர்களும் அல்ல. சுயமாக சிந்திக்க கூடியவர்கள். ஆட்டு மந்தைகள் அல்ல. இப்படி இருப்பவர்களிடம் மாறுதல்கள் சிறிது சிறிதாக வரும். ஆனால் அந்த மாறுதல்கள் எக்காலத்திற்கும் நிலையாக நிற்கும். சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் இந்த மூன்றுமே இந்து மதத்தின் அடிப்படை ஆகும்.

  169. <>

    ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தேவைகளைச் சொல்லி அவர்கள் மொழியில் தான் வழிபடுகிறார்கள். கோவில் சர்ச் கிடையாது.

    குருக்கள் வந்து சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்யுன்னு சொல்வதில்லை. அங்கே நோக்கம் சர்ச் போன்ற பாதிரியார் பிரார்த்திக்க மற்றோர் பின்தொடரும் முறையல்ல.

    அதோடு அங்கே சன்னிதியில் ஒருவருக்கு கிடைக்கும் நேரமே ரெண்டு நிமிஷமோ மூன்று நிமிஷமோ! பெரிய கோவில்களில் பதினைந்த நொடியோ – இருபது நொடியோ.

    இது இன்னும் சுதந்திரமான முறைதான். எல்லாருக்குமாக குருக்கள் வேண்டிக்கொள்ளாது அவரவர் குறையை அவரவரே மனதுக்குள் சொல்லி நிறைவேறினால இன்ன காணிக்கை என்று சொல்லும் முறை.

    அதே போன்ற முறைகளும் இந்து சமுதாயத்தில் – தமிழ்ச் சமுயதாயத்தில் உண்டுதானே?

    ஆலயத்தில் இருக்கும் பூஜை முறைகள் சமுதாயத்தின் அனைத்து தரப்பாரும் – பாண்டிய சோழ மன்னர்கள் போன்றோரின் இசைவோடு ஏற்படுத்தப்பட்டது தான்.

  170. திரு. BALA SUNDARAM KRISHNA,

    //அணிக்கு உதாரணமாகப் புலவர் குமாரசுவாமியவர்கள் காட்டியிருக்கின்றார்