தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்

வருடாவருடம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வரும்போது கூடவே ஒரு சர்ச்சையும் வரும். தேசபக்த இயக்கம் என்று சொல்லக்கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் தங்களுடைய இடத்தில் தேசியக்கொடியை ஏற்றுகிறதா இல்லையா என்பதுதான் அந்த சர்ச்சை. ஆர்எஸ்எஸ் காவிக்கொடியைத்தான் ஏற்றுக்கொள்கிறது. இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதில்லை என்ற நச்சுக் கருத்தை – பொய் கருத்தை தொடர்ந்து இந்திய தேசத்தின்மீது நம்பிக்கையில்லாத – தேசியம் ஒரு கற்பிதம் என்று சொல்லக்கூடிய கம்யூனிஸ்டுகள், திராவிட கழகத்தவர்கள், சில இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் தொடர்ந்து விஷமத்தை பொதுவெளியில் கக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்கூட ஒரு தொலைக்காட்சியில் ஒரு இஸ்லாமியர் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்ற பொய்யைக் கூறினார்.

வருடாவருடம் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடர்ந்து சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் கொண்டாடி வருகிறது. தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தி வருகிறது. ஆனாலும் தேசவிரோதிகள் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ள நாக்பூரில் சுதந்திர தினத்தன்று வருடாவருடம் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிற்றது.

sangh-republic

https://www.ibtl.in/blog/2141/myths-vs-facts-about-rss/

2012ல் பெங்களூரில் திரு.மோகன்பாகவத் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.Mohanji-Bhagwat-hoisting-national-Flag-at-Bangalore-Aug-15-2012-1 Mohanji-Bhagwat-hoisting-national-Flag-at-Bangalore-Aug-15-2012-2 Mohanji-Bhagwat-hoisting-national-Flag-at-Bangalore-Aug-15-2012-8

https://samvada.org/2012/news/rss-celebrates-independence-day-sarasanghachalak-mohan-bhagwat-hoists-national-flag-at-bangalore/

2013ல் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திரு.மோகன் பாகவத் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

madurai 1 madurai 2013

2013ல் டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் டாக்டர் மன்மோகன் வைத்யா தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

1146731_405194296247807_1130985851_n

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பி.பரமேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

1001942_627095603990853_1772393845_n

https://visakeo.blogspot.in/2013/08/rss-celebrates-independence-day.html

பெங்களூரில் திரு.மோகன்பாகவத் தேசியக்கொடியை ஏற்றுகிறார்

1.-Mohanji-Bhagwat-hoisting-the-NATIONAL-FLAG-at-Bengaluru-today-15.8.2014-300x225

rss7047

rss7023

மேலே உள்ள இரண்டு படமும் 2014ல் நாக்பூரில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றுதல் நிகழ்ச்சி. திரு.மோகன் பாகவத் அவர்கள் இந்திய தேசியக் கொடி ஏற்றுவது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

https://www.aninews.in/videogallery2/26800-rss-chief-mohan-bhagwat-hoist-national-flag-on-independence-day.html

தினேஷ் ஹெக்டே பெங்களூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகமான கேசவஸில்பா-வில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

10616013_1538048856415530_926772728858629225_n

https://samvada.org/2014/news/rss-celebrates-independence-day-sarasnghachalak-bhagwat-hoists-national-flag-at-rss-birthplace-of-nagpur/

ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.

republic-day

https://www.ibtl.in/blog/2141/myths-vs-facts-about-rss/

1955களில் கோவா இந்தியாவுடன் இணைய வேண்டும், போர்ச்சுக்கீசிய அரசு வெளியேற வேண்டும் என்று தொடர் போராட்டங்களை ஆர்எஸ்எஸ் நடத்தியது. கோவா ஆர்எஸ்எஸ் தலைவர் ஜகன்னாந் ராவ் ஜோஷி சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டு போர்ச்சுகீசிய காவல்துறையால் சிறைபடுத்தப்பட்டார்.

rss-6

https://topyaps.com/other-side-of-rss

1965ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூண்டபோது லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், டெல்லியில் சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டைக் கவனித்துக் கொள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கேட்டுக் கொண்டார். ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதை ஏற்றுக்கொண்டு செம்மையாக செய்தது.

இந்திய தேசத்திற்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் தேசத்திற்காக பாடுபட்டிருக்கிறது. இந்த தேசத்திற்காக தன் உயிரையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடாமல் இருக்குமா?

உண்மை இப்படி ஒருபுறம் இருக்க இந்த போலி தேசியவாதிகள் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்பற்றி விஷமத்தை பரப்பி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் உதவி பெறாத அமைப்புகள் தேசியக் கொடியை ஏற்றவில்லை என்றால் அது குற்றமாகாது. ஆர்எஸ்எஸ் அரசாங்கம் உதவி பெறாத அமைப்பு. அது கண்டிப்பாக தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் இந்திய தேசியக் கொடியை மதித்து ஒவ்வொரு வருடமும் எல்லா மாநிலங்களிலும் உள்ள தங்களுடைய அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறது ஆர்எஸ்எஸ் இயக்கம்.

நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் கட்டாயம் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். பண்டிகை தினம் போல் கொண்டாடி மகிழ வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் உத்தரவு. அதுபோல அரசாங்க உதவி பெறும் பள்ளிகளும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அரசு உதவி பெற்றாலே அவை அரசு சார்ந்த நிறுவனங்கள் என்ற வரிசையில் தான் வரும். அதன்படி பல மதராஸாக்கள் கண்டிப்பாக தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். நடைமுறையில் அப்படி நடக்கிறதா? பல மதராஸாக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. குறிப்பாக வஹாபியர்களால் நடத்தப்படும் மதராஸாக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதே இல்லை. ஆர்எஸ்எஸை கேள்வி கேட்கும் இவர்கள் என்றாவது ஒருநாள் ஏன் மதராஸாக்களில் தேசியக் கொடி ஏற்ற மறுக்கப்படுகிறது என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்களா? விமர்சனம் செய்து இருக்கிறார்களா? இல்லவே இல்லை.

மதராஸாக்கள் ஏன் தேசிய கொடியை ஏற்ற மறுக்கின்றன? ஏனென்றால் அவர்களுடைய மதம் அதை அனுமதிப்பதில்லை. தேசிய கீதம் பாடுவது, தேசிய கொடி ஏற்றுவது, தேசியகொடிக்கு மரியாதை செலுத்துவது இஸ்லாமியருக்கு ஹராமாகும். (https://islamqa.info/en/111877, https://islamqa.info/en/130805) அதாவது அனுமதிக்கப்படாததாகும். இதை யாரும் கேள்விக்குட்படுத்த மறுக்கிறார்கள். அல்லது மறைக்கிறார்கள்.

கடந்த காலங்களிலும் இப்போதும் பல மதராஸாக்கள் உள்பட பல இஸ்லாமிய அமைப்புகள் தேசிய கொடி ஏற்றுவதையோ, தேசிய கீதத்தை பாடுவதையோ கடைபிடிப்பதில்லை. இதில் இந்திய அரசாங்கத்தின் மானியம் பெறாத இஸ்லாமிய அமைப்புகளை விட்டுவிடுவோம். ஆனால் பல மதராஸாக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்பதை எப்படி அனுமதிப்பது? ஏனென்றால் பல மதராஸாக்கள் இந்திய அரசாங்கத்தின் மானியங்களைப் பெறுகின்றன. இப்படிப் பெறுகின்ற அனைத்துமே அரசாங்கத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் மத அடிப்படைவாதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மதராஸாக்கள் மட்டும் கடைபிடிப்பதில்லை.

ஜமாத் ஈ இஸ்லாமி என்ற அமைப்பு தேசியக் கொடியை மதராஸாக்களில் ஏற்றக் கூடாது, அது மதத்திற்கு விரோதம் என்று கூறியது. (https://ibnlive.in.com/news/jamaateislami-protests-tricolour-at-madrassas/57409-3.html) அப்போது சில இஸ்லாமியர்கள் கண்டித்தாலும் பல மதராஸாக்களில் தேசியக் கொடி ஏற்றப்படுவதில்லை. தேசிய கீதம் பாடுவதுகூட மதத்திற்கு விரோதம் என்று இவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் (https://islamicresearchmission.blogspot.in/2012/08/does-national-anthem-jana-gana-mana.html) தேசத்தை அவமதிக்கிற இந்த மாதிரியான செயல்களை, பேச்சுகளை, எழுத்துக்களைக் கூட இங்கு யாருமே விமர்சனத்திற்கு உட்படுத்த மறுக்கிறார்கள். காரணம் என்ன? ஏன் மௌனம்? ஏன் அச்சம்?

இந்திய தேசியக்கொடியை ஏற்றுவதற்கு பள்ளிகளுக்கு சிறப்பு நிதி என்று அரசாங்கம் தருகிறதா என்றால் இல்லை. ஆனால் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மதராஸாக்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படுவது யாருக்காவது தெரியுமா? (https://www.rediff.com/news/2007/dec/30mad.htm) இந்த சிறப்பு நிதி மதராஸாக்களைத் தவிர வேறு பள்ளிகளுக்கு தரப்படுவதில்லை. சிறப்பு நிதி தந்தால் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றுவேன் என்கிற இந்த மனநிலை தேசத்தை மதிப்பதா? அவமதிப்பதா? லஞ்சம் கொடுத்து செய்து கொள்கிற வேலையல்லவா இது? இதைப் பற்றியெல்லாம் இந்தப் போலி தேசியவாதிகளான கம்யூனிஸ்டுகள், திராவிட கழகங்கள் கேள்வி கேட்பதில்லை.

ஆனால் ஆர்எஸ்எஸ்-ஐ மட்டும் குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவது ஏன்? ஏனென்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டுமே இந்த தேசத்தில் மக்களின் மனதில் தேசபக்தியை வளர்த்து வருகிறது. மக்களுக்கு இந்த தேசத்தின்மீது பக்தி வந்தால் இவர்களால் இங்கு அரசியல் செய்ய முடியாது. இந்த நாட்டை மற்ற நாடுகளுக்கு அடிமையாக்க முடியாது. கம்யூனிச வன்முறை கொள்கையை இங்கு பரப்பிட முடியாது. இதை இஸ்லாமிய நாடாக்க முடியாது. மொத்தத்தில் இவர்களின் பருப்பு இங்கு வேகாது. இதனை மனதில் வைத்தே தேசபக்தியை வளர்க்கும் ஆர்எஸ்எஸ்-ஐ குறிவைத்து பொய்பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். ஆனால் என்னதான் இவர்கள் பொய்பிரச்சாரத்தை பரப்பி வந்தாலும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து மின்னிக் கொண்டேதான் போகிறது. அதுதான் இவர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம். உண்மைகள் எப்போதும் ஓய்ந்துவிடுவதுமில்லை; தூங்கிவிடுவதும் இல்லை.

குறிப்பு : நான் இந்த கட்டுரையை எழுத பல தகவல்களை கொடுத்து உதவியவர் நண்பர் ராஜா சங்கர் அவர்கள்தான். அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். அவர் பல தகவல்களை கொடுக்கவில்லை என்றால் இந்த கட்டுரை இல்லை.

95 Replies to “தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்”

 1. ”மதராஸாக்கள் ஏன் தேசிய கொடியை ஏற்ற மறுக்கின்றன? ஏனென்றால் அவர்களுடைய மதம் அதை அனுமதிப்பதில்லை. தேசிய கீதம் பாடுவது, தேசிய கொடி ஏற்றுவது, தேசியகொடிக்கு மரியாதை செலுத்துவது இஸ்லாமியருக்கு ஹராமாகும். (https://islamqa.info/en/111877, https://islamqa.info/en/130805) அதாவது அனுமதிக்கப்படாததாகும். இதை யாரும் கேள்விக்குட்படுத்த மறுக்கிறார்கள். அல்லது மறைக்கிறார்கள்.” – நல்ல கேள்வி. அவர்கள் ஏன்…நாமே கேள்விக்குட்படுத்தலாமே…! இஸ்லாம் ஏக இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தலைவணங்குவதை அனுமதிப்பது இல்லை. வந்தே மாதரம் பாடலை அவர்கள் பாட மறுத்ததற்கும் அதுவே காரணம். (அதில் ஒரு முக்கியமான அரசியல் உண்டு ஆனந்த மடம் நாவலை படித்து பார்த்தால் அது விளங்கும்). ஆர்எஸ்எஸ் ஒரு தேசபக்தி இயக்கம் என நீங்கள் என்னதான் கூவிக்கூவி விற்றாலும் தமிழ்நாட்டில் அந்த சரக்கை விற்பது கொஞ்சம் கடினம் தான். எனது அனுபவத்தில் ஆர்.எஸ்.எஸ் என்பது காவியுடுத்திய ரவுடிக்கும்பல் மட்டுமே. ரவுடிகளில் பலர் நாட்டிற்கு சேவை செய்துள்ளனர். நாகர்கோயிலில் லிங்கம் என்னும் ரவுடி பல மாணவர்களுக்கு கல்வி உதவி/ ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி செய்துள்ளார். மதுரையில் நெல்பேட்டை சீனி என்றொருவரும், இங்கே சென்னையில் அயோத்தியா குப்பம் வீரமணியும் உதாரணம் சொல்ல முடியும். நரேந்திர மோடி/ எல்.கே. அத்வானியும் ஏதாவது நல்லது செய்திருக்கக்கூடும்.ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் நன்மையை காட்டிலும் தீமையே அதிகம் என்பது எனது முடிவு.

 2. //ஆர்எஸ்எஸ் ஒரு தேசபக்தி இயக்கம் என நீங்கள் என்னதான் கூவிக்கூவி விற்றாலும் தமிழ்நாட்டில் அந்த சரக்கை விற்பது கொஞ்சம் கடினம் தான். //

  மிக சரியான கருத்து, ஆர்.எஸ்.எஸ்ஸை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு வடமாநிலங்களை போன்று தமிழ்நாடு அவ்வளவு பிற்போக்கான மாநிலம் இல்லை என்று நினைக்கிறன்.

 3. அன்பர் ஜெயசீலன் கணபதி,

  விவாதத்தை ஏன் மடை மாற்றம் செய்ய விழைகிறீர்கள்?

  ஆர் எஸ் எஸ் அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறதா? இல்லையா?

  ……………. ஆம் ஏற்றப்படுகிறது என்பதனை இந்த வ்யாசம் தரவுகள் சார்ந்து உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியுள்ளது.

  ஒரு இஸ்லாமியர் டிவியில் ஆர் எஸ் எஸ் சம்பந்தமாக இப்படி பொய்யைக் கக்கியிருக்கும் போது……….மதரஸாக்களில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறதா இல்லையா என்ற கேழ்வி நிச்சயம் எழும்.

  மதறஸாக்களில் நிலைமை என்ன என்பதை ஸ்ரீ ம வெங்கடேசன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். எசகு பெசகாகக் கேழ்வி எழுப்புபவர்கள் முதலில் தங்கள் தரப்பு எப்படி என்று தெரிந்து கொள்வது அவசியமாயிற்றே.

  ஆர் எஸ் எஸ் இயக்கத்தினை எதிர்த்த பண்டித நேரு…………..அந்த இயக்கத்தின் ஒழுங்கு முறைகளில் பரிச்சயம் உள்ள ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்த்ரி போன்றோர் …………. முறையாக அந்த இயக்கத்தின் சேவைகளை தேசத்திற்குத் தேவையான சமயத்தில் பெறுவதில் தயக்கம் கொள்ளவில்லை. அதே போலவே மறைந்த ஸ்ரீமதி இந்திராகாந்தியின் செயல்பாடும் இருந்திருக்கிறது.

  \\ எனது அனுபவத்தில் ஆர்.எஸ்.எஸ் என்பது காவியுடுத்திய ரவுடிக்கும்பல் மட்டுமே. \\

  கம்யூனிஸ, தீரா விட, போலி மதசார்பின்மை…………….. போன்ற போலிக்கருத்துக்களால் தீண்டப்பட்டு பிரிவினைவாதத்திலும் ஆப்ரஹாமிய அடாவடித்தனங்களை ந்யாயப்படுத்த விழைபவர்களுக்கும் ஆர் எஸ் எஸ் நிச்சயம் கசக்கும். தேசத்துக்கு த்ரோஹம் செய்ய விழைபவர்களுக்கு எதிராக பெரிய தடைக்கல்லாக இருக்கிறதே இந்த இயக்கம்.

  \\ ஆர்எஸ்எஸ் ஒரு தேசபக்தி இயக்கம் என நீங்கள் என்னதான் கூவிக்கூவி விற்றாலும் தமிழ்நாட்டில் அந்த சரக்கை விற்பது கொஞ்சம் கடினம் தான். \\

  தேச விரோதத்தில் ஊறி ……………ஆயிரக்கணக்கான கோடிகள்…………… லஞ்சத்தில் மூழ்க ………….ஆட்சி செய்த………… ஆப்ரஹாமிய சார்புள்ள காங்க்ரஸ் கட்சியை எதிர்த்து முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது கொஞ்சமல்ல ரொம்ப ரொம்ப கடினமான விஷயமே. ஆனால் அந்த விஷயத்தை சாதித்தாக வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காகத் திட்டம் தீட்டி……….. இவர்களாவது ஆட்சியைப் பிடிப்பார்களாவது…………. என்று நினைத்த ஊடகங்கள், தேச விரோத சக்திகள், ஆப்ரஹாமிய அடாவடி சக்திகள்……….. இவர்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் மீறித்தான் அந்த ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம் நிறைவேற்றப்பட்டது.

  ஆர் எஸ் எஸ் மனிதர்களாலேயே நிரம்பிய ஒரு இயக்கம். தனிப்பட்ட மனிதர்களுடைய செயல்பாடுகளில் நிச்சயம் பிழைகள் இருக்கலாம். ஆனால் இயக்க ரீதியாக ஹிந்துஸ்தானத்துக்கு இடைவிடாது சேவை செய்யும் இயக்கம் ஆர் எஸ் எஸ். இன்றைய திகதியில் எண்ணற்ற எமது முஸ்லீம் சஹோதரர்களும் கூட ஆர் எஸ் எஸ் ஷாக்காக்களில் பங்கு பெறுகிறார்கள் என்பதனையும் நினைவு கூறவும்.

  தங்கள் வாழ்க்கையை சங்கப்பணிக்காகவும் தேசப்பணிக்காகவும் அர்ப்பணித்துள்ள தமிழகத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் எண்ணிறந்தவர்கள். ஆர் எஸ் எஸ் என்பது ஒரு தேசபக்தி இயக்கம் என்பதனால் தான் இத்தனை தமிழர்கள் இதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்கள். ரொம்ப கஷ்டமான காரியத்தையே சாதித்த சங்கம் கொஞ்சம் கஷ்டமான காரியம் என்று தாங்கள் சாதித்தருளிய காரியத்தையும் நிச்சயம் சாதிக்கும். கவலையற்க.

  தேசபக்தி மணம் கமழ மற்றும் தரவுகளால் நிறைந்த மற்றொரு வ்யாசத்தை சமர்ப்பித்துள்ள அன்பின் ஸ்ரீ ம வெங்கடேசன் ஜீ அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். தீராவிட சக்திகளின் துஷ்ப்ரசாரத்தையும் மீறி மும்பை நகரத்தில் தங்கள் பணிகள் கௌரவிக்கப்பட்டன என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மயிலேறும் பெருமான் அருள் தங்களுக்கு என்றென்றும் நிறைவாக இருப்பதாக.

 4. திரு. கிருஷ்ண குமார்….

  //தங்கள் வாழ்க்கையை சங்கப்பணிக்காகவும் தேசப்பணிக்காகவும் அர்ப்பணித்துள்ள தமிழகத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் எண்ணிறந்தவர்கள். ஆர் எஸ் எஸ் என்பது ஒரு தேசபக்தி இயக்கம் என்பதனால் தான் இத்தனை தமிழர்கள் இதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்கள். //

  அடேங்கப்பா.. அப்படியா .. இத இப்ப தான் கேள்வி பட்றேன். ஏன் என்றால் எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் தமிழகத்தை பொறுத்தளவில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சில ஆயிரம் பேர் கூட தேற மாட்டார்கள். உங்கள் கணக்கிற்கு மட்டும் எப்படி தமிழ் மக்கள் எண்ணிறந்தவர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை. இப்படி எல்லாம் நீங்கள் பேசி அப்புறம் தலைவர் மானனீய குருஜி. மோகன் பாகவதிற்க்கு மட்டும் தெரிந்தால் அப்புறம் அவ்வுளவு தான். ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை நாக்பூரில் இருந்து தமிழகதிற்கு மாற்றி விடுவார். தேவையா இதெல்லாம்.

  //தேச விரோதத்தில் ஊறி ……………ஆயிரக்கணக்கான கோடிகள்…………… லஞ்சத்தில் மூழ்க ………….ஆட்சி செய்த………… ஆப்ரஹாமிய சார்புள்ள காங்க்ரஸ் கட்சியை எதிர்த்து முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது கொஞ்சமல்ல ரொம்ப ரொம்ப கடினமான விஷயமே.//

  உங்களுடைய இந்த கருத்தை நான் மட்டுமல்ல, இந்திய தேச மக்கள் மட்டுமல்ல, நம் தேசத்தின் இரும்பு மனிதரான” ஹிந்து ஹ்ருதய சாம்ராட்” கூட நீங்கள் கூறிய கருத்தினை பார்த்து வாயால் சிரிக்க மாட்டார் என்றால் பாருங்களேன்!!!!!!!!

  //ஆனால் இயக்க ரீதியாக ஹிந்துஸ்தானத்துக்கு இடைவிடாது சேவை செய்யும் இயக்கம் ஆர் எஸ் எஸ்.//

  அதைத் தான் நானும் கேட்க்கிறேன், இது வரை ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்க்கு செய்த சேவை தான் என்ன? கொஞ்சம் பட்டியலிடுங்களேன்? சங்கத்தை தொடங்கி இத்தோடு 90 ஆண்டுகள் நிறைவடைய போகிறது, இது வரை இந்து சமுகத்திற்காக இவர்கள் செய்த ஒரு புரட்சிகரமான செயல் என்று எதாவது ஒன்றினை கூறுங்களேன்!!!! இந்நாட்டில் புரையோடிப்போன பிரச்சனைகளான சாதிக்கு எதிராகவும், பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் எனென்ன போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்? இந்நாட்டில் பள்ளி சென்று கல்வி கற்க முடியாத, கற்க வாய்ப்பில்லாத ஏழை இந்து மாணவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஒரு திண்ணை பள்ளியாவது கட்டி கொடுத்திருகிரார்களா? இன்னும் எத்தனை காலம் தான் புயலுக்கும் சுனாமிக்கும் ஓடி ஓடி சேவை செய்தார்கள் என்று இவர்களின் கேமரா ஸ்டண்டுகளையே பெரிதென வியந்தோதி கொண்டிருபீர்கள்!!! சிந்தித்து தீர்கமான பதிலினை கூறவும்.. நன்றி.

 5. திரு கிருஷ்ணகுமார்

  இங்கு ஒருவர் RSS ‘ரவுடிக் கும்பல்’ என்கிறார் – கூடவே இஸ்லாமிய ‘புகழ்’ பாடுகிறார்.

  மற்றொருவர் திருச்சிற்றம்பலம் என்று கூறிக்கொண்டே பாரதம் வேண்டாம் தமிழகம் மட்டும் போதும் என்பவர்.
  இவர்களுக்கெல்லாம் RSS ஐப் பற்றி என்ன பட்டியல் போட்டாலும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. எதற்கு வீணாக இவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். மன வருத்தம்தான் மிச்சம்.

 6. அன்பின் திரு க்ருஷ்ண குமார் அவர்களுக்கு, தாயுமானவன் போன்ற‌ “எல்லாம் தெரிந்த” அறிவாளிகளுக்கு பதில் எழுதாமல் இருப்பதே உத்தமம். \\\இந்நாட்டில் புரையோடிப்போன பிரச்சனைகளான சாதிக்கு எதிராகவும், பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் எனென்ன போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்? இந்நாட்டில் பள்ளி சென்று கல்வி கற்க முடியாத, கற்க வாய்ப்பில்லாத ஏழை இந்து மாணவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஒரு திண்ணை பள்ளியாவது கட்டி கொடுத்திருகிரார்களா?\\\\ இந்த தளத்திலேயே ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

 7. Shri தாயுமானவன்
  “இன்னும் எத்தனை காலம் தான் புயலுக்கும் சுனாமிக்கும் ஓடி ஓடி சேவை செய்தார்கள் என்று இவர்களின் கேமரா ஸ்டண்டுகளை”
  So, helping people during tsunami by RSS is now ” Stunts”. I am sure you would risk your life and limb and will do such stunts when natural disaster strikes next time. But then, it takes dedication and hard work which is anathema for people like you. Mouse clicking on the net, passing derogatory comments in the comfort of your home on RSS, an organization which has been doing yeoman service since inception, is the easy part.

 8. அதே t v நிகழ்ச்சியில் அந்த இஸ்லாமியர் எத்தனை மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பதையும் ஆதாரத்தோடு சொன்னார்.ஆனால் அதெல்லாம் இவர்களுக்கு தேவை இல்லை.அவதூறை பரப்பி வெறுப்பை வளர்க வேண்டும்.”தேசியகீதம் பாடுவது ஹராமாம்.: எப்படிப்பட்ட பொய்.வேண்டுமென்றே தேசியகீதம் ஒன்று இருக்க ஒரு புண்ணாக்கு பாடலை எழுதி வைத்துக்கொண்டு அதை பாடு.அப்பதான் உனக்கு தேசப்பற்று.இல்லையென்றால் நீ தேச விரோதி.என்ன ஒரு திமிர்.ஜாரே ஜகான்சே அச்சா என்று உலகத்திலேயே சிறந்த நாடு எந்நாடு என்று மார்தட்டியவனடா என் முப்பாட்டன் இக்பால்

 9. எங்களின் தேசப்பற்றை எவனும் சந்தேகிக்க முடியாது.அவ்வளவு உறுதியானது நிரூபணமானது எங்களின் தேசப்பற்று.சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயனை வெறி கொண்டு எதிர்க்க வேண்டுமானால் அவனின் அனைத்து அடையாளங்களையும் துறக்க வேண்டும் எனும் நோக்கில் ஆங்கிலம் படிப்பது ஹராம்.என்று தீர்ப்பு வழங்கினார்கள் எங்கள் முன்னோர்.நாங்கள் கல்வியை இழந்தோம்.அதன் நிதர்சன உதாரணமாய் திகழ்பவர்.காய்தேமில்லத் என்று அழைக்கப்படுகிற இஸ்மாயில்.அவரின் சமகால தலைவர்களான அண்ணாதுரை சம்பத் நெடுஞ்செழியன் போன்றோர் படித்த பட்டதாரிகளாக இருக்கும்பொழுது இவர் மட்டும் வாய்ப்பிருந்தும் படிப்பை பாதியிலேயே விட்டு வந்தார்.சுதந்திரம் அடைந்து முஸ்லிம்களுக்கென்று நாடு கிடைத்தும் ஏன் மண்ணைவிட்டு எங்கும் போகமாட்டேன் என்று எங்கள் முன்னோருக்கு தலைமை தாங்கினார்.”உங்களுக்கு இந்தியாவில் பிரச்சனை ஏதுமென்றால் எங்களிடம் கூறுங்கள்”என்று ஜின்னா கூறியபோது “எங்கள் நாட்டில் தலையிட இனி உங்களுக்கு உரிமையில்லை.எங்களை நாங்கள் பார்த்துகொள்வோம் என்று “நீ பாகிஸ்தானியன் நான் இந்தியன் “என்று தெளிவு படுத்தினார்.

 10. வந்தேமாதரம் பாடுவதுதான் தேசப்பற்றின் அளவுகோலோ?நாங்கள் எங்கள் தாய் மண்ணை நேசிப்போம்.மதிப்போம்.ஒருபோதும் யாரையும் எதையும் துதிக்க மாட்டோம்.தொழ.மாட்டோம் வணங்க மாட்டோம்.நான் எனை பெற்ற தாயை விட யாரையும் நேசிக்கவோ மதிக்கவோ போவதில்லை.ஆனால் அவளையே நான் வணங்க மாட்டேனே.அவளைவிட சிறந்தது இந்த உலகில் எனக்கு வேறு எது? என் தாயையே
  வணங்க கூடாது என்றால் அவள் மூலமாய் வந்த தாய் மண்ணை எப்படி வணங்குவேன்.வணக்கும் என்பது வேறு.அது என்னையும் என் தாயெயும் இன்னும் அனைத்தையும் படைத்து பரிபாலித்து காப்பவனுக்கே நான் செய்ய வேண்டியது.

 11. தாயுமானவன்

  ஆர்.எஸ்.எஸ்சின் தமிழக எண்ணிக்கையை எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்குப் புரியப் போவதுமில்லை, நீங்கள் அதை ஏற்கப் போவதுமில்லை. ஆர்.எஸ்.எஸ். இல் உறுப்பினர் என்ற நிலை கிடையாது. இங்கே சந்தா கிடையாது. முழு நேர ஊழியர் மட்டுமே. ஊழியர் எண்ணிக்கையை வைத்து யார் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் என்று அனுமாநிக்கமுடியாது எனபதுதான் ஆர்.எஸ்.எஸின் பலம்.

  நிற்க,

  ஆர்.எஸ்.எஸ் தனது சேவைகளைத் தானாகவோ அல்லது கிளை/ துணை அமைப்புகளாலோ செய்து வருகிறது. அதன் தாக்கம் பலமானதும் பெரியதும் ஆகும். உங்களுக்கு, இப்போது எல்லாவற்றையும் பட்டியலிட்டுச் சொல்ல எனக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை. ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

  ஏகல் வித்யாலயா என்ற பெயரிலான 52525 ஓராசிரியர் பள்ளிகள் பின்தங்கிய கிராமப் பகுதிகளிலும், மலை வாழ் மக்களுக்காக மலைப் பகுதிகளிலும் நடத்தப் பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டமில்லாமல் செய்து வரும் இந்தச் சேவை இது வரை ஆவணப் படுத்தப் படாமல் பன்னெடுங்காலமாக இயங்கி வந்தது. இப்போது ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சேவை சீரிய முறையில் இயங்குகிறது. கிறிஸ்தவ மதமாற்றத்தைப் பின்னணியில் கொண்டு மேலுக்குச் சேவை செய்யும் இயக்கம் போல இல்லாமல் உண்மையான மக்கள் சேவையைக் கருத்துடன் செய்து வருகிறது. மேலதிக விவரங்களுக்கு http://www.ekal.org சென்று அறிந்து கொள்ளுங்கள்.

  தனது சேவையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸின் கொள்கையை மாற்றிக் கொள்ளச் சொல்லிப் போராடி எங்களுக்கு அலுத்து விட்டது. தாயுமானவன் போன்றவர்கள் தவறான பிரசாரத்துக்குப் பலி ஆகாமல் தடுக்க தம்பட்டம் அவசியமாகிறது. நிர்வாணப் பட்டணத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்தானே?

 12. பேரன்பிற்குரிய ஜெனாப் மீரான் சாஹேப்

  நலமாக இருக்கிறீர்களா? தாங்கள் தளத்தில் கருத்துப் பகிர்ந்து பல நாட்கள் ஆகிறது.

  ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க கவிஞராகிய ஜெனாப் முகம்மது இக்பால் அவர்களது “ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” (எழுத்துப் பிழையாக ஜாரே ஜஹாஞ்சே அச்சா” என்று தங்களது உத்தரத்தில் வந்து விட்டது)…………… இதைத் தாங்கள் நினைவுறுத்தியது ……………. பல நினைவலைகளை எழுப்புகிறது. இது பற்றி நிறைய பகிர வேண்டும். தனியாக பின்னர்.

  பேரன்பிற்குரிய ஸ்ரீ ம.வெங்கடேசன் ஜீ அவர்கள் ஹிந்து அறிவியக்கத்தின் பணியாக………… அடுத்தடுத்து தரவுகள் சார்ந்து பல வ்யாசங்களையும் வ்யாசத் தொடர்களையும்……….. அறியாமையிலிருந்து அறிவொளிக்கு செல்லும்படிக்கான ஒரு ஸேதுவாக கட்டுமானம் செய்து வருகையில்……….அந்த ஸேதுவில் ஒரு சில கற்களையாவது அணில் போல நான் பகிர விழைவேன். நமது தளத்து பங்காளர்களான வாசகர்களிடமும்………. இப்படிப்பட்ட வ்யாசங்களை அவர்கள் பகிர வேண்டும் என்பதும் என் விக்ஞாபனம்.

  \\ அதே t v நிகழ்ச்சியில் அந்த இஸ்லாமியர் எத்தனை மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பதையும் ஆதாரத்தோடு சொன்னார். \\

  ஜெனாப், உத்தரபாரதத்தில் எனக்குத் தெரிந்து பல மதறஸாக்களில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. ஆனால் ஆர் எஸ் எஸ் கார்யாலயங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுவதில்லை என்று பொய்யான தகவலைப் பகிர்ந்தது தவறு அல்லவா? எல்லா மதறஸாக்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதிலும் தங்களுக்கு ஆக்ஷேபம் இருக்காது அல்லவா?
  எல்லா மதறஸாக்களிலும் தேசியக்கொடி ஏற்ற அவர்களை உந்துவித்தல் ……………. ஹிந்து………. முஸ்லீம்……….க்றைஸ்தவர் …………. என மதம் கடந்து ………….. நம் அனைத்து ஹிந்துஸ்தானியரின் கடமையல்லவா?

  \\ அவதூறை பரப்பி வெறுப்பை வளர்க வேண்டும் \\

  ஆர் எஸ் எஸ் கார்யாலயங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுவதில்லை என்பது அவதூறு. அதை முனைந்து பொய்யாக பரப்புவது வெறுப்பை வளர்ப்பதாகத் தானே ஆகும்.

  \\ ”தேசியகீதம் பாடுவது ஹராமாம்.: எப்படிப்பட்ட பொய். \\

  இந்தக் கருத்தை இங்கு பகிர்ந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  \\ வேண்டுமென்றே தேசியகீதம் ஒன்று இருக்க ஒரு புண்ணாக்கு பாடலை எழுதி வைத்துக்கொண்டு \\

  **வந்தே மாதரம்** பாடல் பற்றித் தாங்கள் இப்படிக் கருத்துப்பகிர்வது முறையில்லை.

  \\ அதை பாடு.அப்பதான் உனக்கு தேசப்பற்று. \\

  கவலையற்க. கார்கில் யுத்தத்தின் போது கார்கிலில் வசிக்கும் நமது ஷியா முஸல்மான் சஹோதரர்களும் த்ராஸ் பகுதியில் வசிக்கும் எமது ஷியா மற்றும் ஸுன்னி முஸல்மான் சஹோதரர்களும் நமது ஹிந்துஸ்தான சேனையுடன் தோளொடு தோள் கொடுத்து உபகாரமாக இருந்தபடிக்கே நாம் கார்கில் போரில் ஜெயமடைந்தோம். கார்கில் மற்றும் த்ராஸ் பகுதிகளில் பல யுத்த சேதங்களை நேரில் கண்டு அங்குள்ள சஹோதரர்களுடன் அளவளாவிய படிக்கு இதை எழுதுகிறேன்.

  தேச விரோதிகள் அனைவருமே ஒரு மதம். நமது இஸ்லாமிய சஹோதரர்களை அவர் இஸ்லாத்தைப் பின்பற்றும் படிக்கு மட்டிலுமாக………….தேசப்பற்றில் குறைவுடையவர்கள் என்று ஆர் எஸ் எஸ்ஸோ அல்லது ஹிந்து இயக்கங்களோ கருத்துப் பகிர்வதில்லை. அப்படிப் பட்ட கருத்து யார் பகிர்ந்தாலும் அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.

  \\ என்று மார்தட்டியவனடா என் முப்பாட்டன் இக்பால் \\

  வினம்ரதை பூர்வமாக கருத்துப் பகிரும் விஷயத்தில் நான் எமது முஸ்லீம் சஹோதரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது முன்னமும் கூட நான் பகிர்ந்த ஒரு தகவல்.
  தங்களது உத்தரத்தில் **அடா** புடா என்று கருத்துப் பகிர்வது அழகாக இல்லையே.

  ஜெனாப் முகம்மது இக்பால்………… உங்களுக்கு மட்டிலும் முப்பாட்டன் இல்லை…….. மதங்கள் கடந்து அனைத்து ஹிந்துஸ்தானியருக்கும்…………

  அவரது உலகளாவிய இஸ்லாமிய உம்மா என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

  குதா ஹாஃபீஸ்

 13. அன்பின் ஸ்ரீ ரங்கன் மற்றும் ஸ்ரீ ஜனகர், சிவனடியாரான ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் தூய தமிழின் மீது ஆராக்காதல் கொண்டவர். தூய தமிழ் பற்றி நேர்மையான கருத்துடையவர். சைவ சமயத்தில் பற்றுடையவர். ஜாதியற்ற சமுதாயத்தில் பெரும் நாட்டமுடையவர். அவருடைய தனித்தமிழ்த் தேசியம் போன்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆர் எஸ் எஸ் பற்றி அன்பர் அவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போன்ற கருத்துக்களைக் கேட்ட படிக்கு பகிர்கிறார். இது விஷயமாக முடிந்த வரைக்கும் நமக்குத் தெரிந்த கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கம் அளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

  அன்பின் ஸ்ரீ தாயுமானவன் மூடிய மனதினராக இருந்தால் விளக்கங்களை ஏற்க மறுக்கவும் மறுக்கலாம். ஆனால் திறந்த மனமுடைய ஆனால் சம்சயம் உடைய மற்ற பல அன்பர்களுக்கு நாம் அளிக்கும் விளக்கங்கள்………….. ஸ்ரீ தாயுமானவர் அவர்களது கேழ்விகளுக்கு பதிலளிக்கும் வ்யாஜத்தில்……….. பயனுள்ளவையாக இருக்குமே.

 14. //அதே t v நிகழ்ச்சியில் அந்த இஸ்லாமியர் எத்தனை மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பதையும் ஆதாரத்தோடு சொன்னார்.//

  சந்தோஷம். இங்கு திரு வெங்கடேசன் அவர்கள் படங்கள் கொடுத்திருப்பதுபோல் ஏதேனும் தர முடியுமா ?

  //தேசியகீதம் ஒன்று இருக்க ஒரு புண்ணாக்கு பாடலை எழுதி வைத்துக்கொண்டு அதை பாடு.அப்பதான் உனக்கு தேசப்பற்று.இல்லையென்றால் நீ தேச விரோதி..

  இதை விட உங்களது மத வெறிக்கு ஆதாரம் தேவையா ?

  //ஜாரே ஜகான்சே அச்சா என்று உலகத்திலேயே சிறந்த நாடு எந்நாடு என்று மார்தட்டியவனடா என் முப்பாட்டன் இக்பால்//

  அது 1904 இல் டா ! அப்புறம் டா 1910 ல டா – முஸ்லிம் ஹை ஹம் என்று மாத்திட்டார் டா .

 15. இந்த நாட்டுக்கு ஆர் எஸ் எஸ் என்ன செய்தது என்று ஒரு நண்பர் எழுதிஉள்ளார். ஒரே நகைச்சுவை ஆக இருக்கிறது. சிறிதாவது பொது அறிவு உள்ளவர்களுக்கு கூட கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியும்.

  1. ஆர் எஸ் எஸ் சின் சேவையை பாராட்டி பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே , ஆர் எஸ் எஸ் ஐ இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் அழைப்பு விடுத்தார்.

  2. ஆந்திரத்தில் 1977-78 புயலின் போது, ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் சேவை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான திருமதி இந்திரா காந்தி அவர்களாலேயே பாராட்டப்பட்டது.

  3. இப்போது சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்டபோதும் ஆர் எஸ் எஸ் சிறந்த முறையில் தொண்டாற்றியது. இவை தவிர பற்றி தகவல் அறிக்கைகளை அவர்களது வெளியீடுகளில் முழு விவரம் உள்ளது.

  இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபிறகு உள்ள தொண்டு நிறுவனங்களில் ஆர் எஸ் எஸ் சே முதன்மையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 16. ஜெயசீலன் கணபதி

  // இஸ்லாம் ஏக இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தலைவணங்குவதை அனுமதிப்பது இல்லை.//

  அதனால்தான் isis தலைகளை வெட்டிக் கொண்டிருக்கின்றான் என்பது உங்களுக்குத் தெரியுமோ என்னவோ உலகத்துத் தெரியும். அவன் இந்த நாட்டில் உண்டா என்றால் – வருவதற்குத் தயாராக இருக்கின்றான். அப்படி அவன் வந்தால் உங்களை யார் காப்பாற்ற முதலில் முன் வருவார்கள் தெரியுமா ? RSS என்கிற நீங்கள் திட்டுகின்ற
  ‘ரவுடிக்கும்பல்’ தான்.

 17. திரு.மீரான் சாகிப் மிக தெளிவானதொரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள். இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை எப்படியாவது இசுலாமிய எதிர்ப்பு பாடலான “வந்தே மாதரம்” பாடலை பாட வைத்து விட வேண்டும் என்பதில் மத வெறியோடு குறியாக இருக்கும் சில மறமண்டைகள் எப்போது தான் திருந்துவார்களோ.

 18. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  \\ அடேங்கப்பா.. அப்படியா .. இத இப்ப தான் கேள்வி பட்றேன் \\

  ப்ரச்சினையே இது தான். தங்களுக்கும் தரவு சார்ந்து விஷயம் ஏதும் தெரியாது என்றே தொனிக்கிறது.

  1982ம் வருஷம் என நினைவு. வேலூரில் நடந்த 3 நாள் ஷிபிரில் (முகாம்) நான் பங்கேற்ற போது அங்கு கலந்து கொண்ட ஸ்வயம் சேவகர்களின் எண்ணிக்கை மட்டிலும் 3000க்கும் மேல். இது 33 வருஷம் முன்னர்.

  தற்போது தமிழகத்தில் வசிக்காத படிக்கு சங்கத்தில் பங்கு பெறும் அன்பர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது எனக்கு வாஸ்தவமாகத் தெரியாது. எண்ணிறந்த என்றபடிக்கு…… நான் லக்ஷோப லக்ஷம் என்ற மாதிரிக்கான………… ஒரு தவறான ஒரு பிம்பத்தை முன்னிறுத்துவதாகத் தாங்கள் இடித்துறைக்க விழைந்தால்………… முழுதும் தெரியாத ஒரு தகவலைப் பகிர்ந்த படிக்கு என் க்ஷமாயாசனங்கள்.

  பின்னிட்டும் தாங்கள் கருத்துப் பகிர்ந்த படிக்கு தங்களுக்கும் முழுமையான விஷயத்தெளிவு இல்லை என்றே படுகிறது. முழுமையான விபரம் தெரிந்தால் தாங்கள் பகிரலாமே.

  \\ உங்களுடைய இந்த கருத்தை நான் மட்டுமல்ல \\

  நீங்கள் ஏதோ பகடி செய்ய விழைகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் என்னவென்று புரியவில்லை.

  பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஏன் சில பாஜகவினரே கூட விரும்பவில்லை. அதையும் மீறி ஆட்சிக்கு வந்ததை நான் பகிர்ந்துள்ளேன். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தாங்கள் விளக்கினால் தெரிந்து கொள்வேன்.

  \\ இது வரை இந்து சமுகத்திற்காக இவர்கள் செய்த ஒரு புரட்சிகரமான செயல் …………………………….இத்யாதி இத்யாதி

  1. கல்வி………….வித்யாபாரதி (தேசிய கல்விக் கழகம்) என்ற சங்கத்தின் கிளை இயக்கம் (விச்வ ஹிந்து பரிஷத் போன்று) மூலமாக ஹிந்துஸ்தானம் முழுதும் வித்யா மந்திர், சரஸ்வதி சிசு மந்திர், விவேகானந்த வித்யாலயா என்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை (ஒரு திண்ணைப்பள்ளி அல்ல) நடத்தி வருகிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஹிந்து மாணாக்கர்கள் மட்டுமின்றி நமது இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ சஹோதர குடும்பங்களிலிருந்தும் குழந்தைகள் படிக்கிறார்கள். பள்ளிகளின் சங்க்யை எவ்வளவு என்ற புள்ளிவிபரம் துல்யமாக என் வசம் இல்லை.

  2. ஏகலைவ வித்யாலயா என்ற ஓராசிரியர் பள்ளி சங்கத்தின் முயற்சியினால் நக்ஸல்பாரி தீவ்ரவாதி இடதுசாரியினர் ஆதிக்கமுள்ள பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வனவாசிகள் ( = இடதுசாரி சொல்லாடலின் பாற்பட்டு ஆதிவாசி) சமூஹத்தினர் இதன் மூலம் பயன் பெறுகிறார்கள். பள்ளிகளின் சங்க்யை எவ்வளவு என்ற புள்ளிவிபரம் துல்யமாக என் வசம் இல்லை.

  3. விஸ்வஹிந்து பரிஷத் என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக சங்கத்தின் இரண்டாம் அத்யக்ஷகரான பரமபூஜனீய குருஜீ கோல்வல்கர் அவர்களது பெருமுயற்சியினால் ஹிந்துஸ்தானத்தின் சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன, வைதிகத் துறவிகள் மற்றும் சான்றோர் பெருமக்களை ஒன்று திரட்டி ………….**தீண்டாமைக் கொடுமை** என்ற இழிவிற்கு எதிராக இந்த சான்றோர் மற்றும் துறவிகள் வாயிலாக ஒருமித்த குரலை ஹிந்து சமூஹத்தின் முன் வைத்தமை. இந்த செயல்பாட்டின் தொடர்ச்சியே தமிழகத்தில் உத்தபுரம் போன்ற ஒரு ஊரில் ஹிந்துக்களிடையே ஜாதிப்பிணக்குகளை நீக்கி ஒற்றுமையை ஹிந்து இயக்கங்கள் நிலைநாட்ட முடிந்தமை. இதே தளத்தில் இது சம்பந்தமான வ்யாசம் உள்ளது. வாசித்து அறியலாம். ஜாதிகள் மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இன்று தகர்ந்து வருபவை. வெறுமனே வாய்ச்சவடாலால் ஜாதி தகராது. சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் / தினசரி ஷாகாக்களிலும் ஜாதிவேறுபாடு இல்லாமல் அனைத்து ஹிந்துக்களும் (பல முஸல்மாணிய மற்றும் க்றைஸ்தவ அன்பர்களும் கூட) ஒன்றாக தேகாப்யாசம் செய்து, உணவு உண்டு, தேச ஒருமைப்பாடுக்காக தொடர்ந்து கூடி விவாதித்தல் பல தசாப்தங்களாக நிகழும் ஒரு செயற்பாடு. கவனிக்க வாய்ச்சவடால் இல்லை. செயற்பாடு. நீங்கள் நினைப்பது போல் மந்திரக்கோலால் ஒரு க்ஷணப்பொழுதில் **மனிதனால்** உருவாக்கப்பட்ட ஜாதிகள் தகராது. சங்கத்தினது தொடர்ந்த ஜாதி இணக்க செயற்பாடுகளாலும் பெருகி வரும் நகர வாழ்க்கையாலும் இது நிச்சயம் சாத்தியம்.

  4. ஸ்பெக்ட்ரம், நிலக்கரி வளங்களை முறையாக விதரணம் செய்ய விழைந்த பாஜக அரசின் செயற்பாடு பொருளாதார சுரண்டலுக்கு எதிரான செயற்பாடில்லாமல் வேறென்ன? ஊழலற்ற சர்க்காரை நடத்த பாஜக அரசுகள் விழைவதும் அப்படியே. இந்த இயக்கங்களில் மனிதர்கள் தான் உள்ளனர். சில நபர்களது செயற்பாடுகளில் குறைபாடுகள் இருக்கவும் செய்யலாம். ஆனால் இயக்க ரீதியாக ஒட்டுமொத்தமாக நிச்சயம் இந்த இலக்கில் தான் ஹிந்துத்வ இயக்கங்களில் பயிற்சி பெற்ற பாஜகவினரின் செயற்பாடு. இடதுசாரிச் சொல்லாடலாக இதனைத் தாங்கள் முன்வைத்தால் அது தனியாக ஆழமாக முழு விபரம் அறிந்த அன்பர்களால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். எனக்கு அந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லை ஐயன்மீர்.

  5 \\ இன்னும் எத்தனை காலம் தான் புயலுக்கும் சுனாமிக்கும் ஓடி ஓடி சேவை செய்தார்கள் என்று இவர்களின் கேமரா ஸ்டண்டுகளையே \\
  ஐயன்மீர்……….புயல் மற்றும் சுனாமிக்கு எதிராக தாங்கள் பணிபுரிந்திருக்கலாம். அது கேமரா ஸ்டண்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சங்கம் செய்யும் பணிகள் சங்கத்தினை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் எதிர்க்கும் ஊடகவாதிகளாலேயே ……………. ராஹுல் கன்வல் போன்ற பத்ரிக்கையாளர்களாலேயே………….நேரில் கண்டபடிக்கு பொதுமன்றில் பகிரப்பட்டுள்ளது. நாம் ஒரு இயற்கைப்பேரிடரின் போது நமது பங்கினை முழுமையாக அளிக்க முடியாதது தவறில்லை. ஆனால் அப்படி பங்களிப்பவர்களை ………….. அவர்களது பங்கினை கேமரா ஸ்டண்ட் என்று இழித்துரைப்பது……………… நிச்சயம் தரம் தாழ்ந்த செயற்பாடு. தங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.

  6. தமிழகக் கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்வதும் சங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு விஷயம். சான்றாக இதே தளத்தில் மானனீய ஸ்ரீ ஷண்முகநாதன் ஜீ அவர்கள் வழிகாட்டுதலில் தில்லைச்சிற்றம்பலத்தில் சங்கத்தினர் மேற்கொண்ட உழவாரப்பணி பற்றிய வ்யாசம் உள்ளது. கோவில்களில் சேவார்த்திகள் சங்கத்தின் தரப்பிலிருந்து செய்யும் உழவாரப்பணியினை ……………. தாங்கள் கேமரா ஸ்டண்ட் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  7. ராஷ்ட்ர சேவிகா சமிதி மூலம் தேசமளாவி பெண்டிரும் சங்கத்தின் பணிகளில் ஈடுபடுகிறார்கள். பெண்களுக்கும் தேகாப்யாசம், தற்காப்புக்கலை, தேச ஒருமைப்பாடுகளில் பங்கெடுத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சங்கப்பணிகளில் பங்காற்ற முடிகிறது. கேமரா ஸ்டண்ட் என்று தாங்கள் இழித்துரைக்க முனையலாம். ஆனால் இதனால் பயன் பெறும் பெண்டிரும் இந்தப் பெண்டிரால்………… இவர்களது சமூஹப்பணியினால் பயன் பெறுபவர்கள் உகப்பே கொள்கிறார்கள்.

  இதைத்தவிர இன்னமும் பல தளங்களில் சங்கத்தினர் சமூஹப் பணியாற்றி வருகிறார்கள். நான் பகிர்ந்த கருத்துக்கள் வெறும் மேம்போக்கானவை மட்டிலுமே. ஆனால் இதை வ்யாஜமாக வைத்து தரவுகள் சார்ந்து சங்கம் மற்றும் விவித க்ஷேத்ரங்களின் பணிகள் முழுமையான ஒரு வ்யாசமாகவோ அல்லத் வ்யாசத் தொடராகவோ நமது தளத்தில் சமர்ப்பிக்கப்படுதல் நன்று. விஷயங்களை அறிய விழையும் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மூடிய மனதுடன் பகடு மட்டும் செய்ய விழைபவர்கள் தொடர்ந்து அதைச் செய்து வரலாம். உண்மை என்றும் உறங்காது.

 19. திரு கிருஷ்ணகுமார் அவர்களே எல்லா மதரசாகளிலும் எல்லா அலுவலகங்களிலும் எல்லா கடைகளிலும் தேசிய கொடி ஏற்றிய ஆகவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.அது அவரவர் விருப்பம்.தேசிய கொடி ஏற்றினால்தான் நாட்டுப்பற்று இருக்கிறது என்றும் கிடையாது.அது ஒரு வெளிப்படையான அடையாளம் அவ்வளவுதான்.நம் நாட்டு மக்கள் அனைவரையும் உறவுகளாக நினைப்பதும் நடத்துவதும் முழு இந்திய மண்ணில் கிடைக்கும் அனைத்து வளங்களும் நம் அனைவருக்குமானது.இதன் நலனிலும் முன்னேற்றத்திலும் நம் அனைவருக்கும் கடமையும் இருக்கிறது உரிமையும் இருக்கிறது என்ற கருத்தை அனைத்து இந்திய உள்ளங்களிலும் பதிய வைப்பதில்தான் தேசப்பற்றின் உண்மையான அக்கறை வெளிப்படும்.நீ கொடி எற்றினியா நான் கொடி எற்றிநேனா என்று ஆராய்ச்சி பண்ணுவதா தேசப்பற்று? கொடி ஏற்றுவதற்கு சண்டை இட்டு கொண்டிருந்தால் உண்மையில் நம்மிடம் இருப்பது தேசப்பட்றல்ல.அது பாசாங்கு.

 20. //இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை எப்படியாவது இசுலாமிய எதிர்ப்பு பாடலான “வந்தே மாதரம்” பாடலை பாட வைத்து விட வேண்டும் என்பதில் மத வெறியோடு குறியாக இருக்கும் சில மறமண்டைகள் எப்போது தான் திருந்துவார்களோ.//

  அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று ஒரு நாளைக்கு 5 தரம் கூறி – ‘ அப்போ நான் காமாக்ஷி என்று வணங்குகின்றேனே – ஒங்க நம்பிக்கையை கொஞ்சம் மெதுவாகச் சொல்லகூடாதா என்று கேட்கக்கூட எனக்கு உரிமை இந்த நாட்டிலே இல்லை என்பது சில மரமண்டைகளுக்கு எப்போதுதான் புரியப் போகிறதோ.

 21. திரு மீரான் ஷ்ஹிப் தமிழ் கலாச்சாரம் என்பது தாய் விட சிறந்த கோவில் இல்லை என்கிறது .தாய்,தந்தை தான் ஒரு மகன்கு அனைத்தயும் தந்து இறைவனையும் கற்பிக்ரர்கள்.தாய்,தந்தை பின் தான் அனைத்தையும் படைத்து பரிபாலித்து காப்பவன்

 22. திரு மீரான் ஷ்ஹிப்
  Please post pictures of Indian flags across Madarasas like the author of this article to back your claims.I believe Islam teaches that it has no borders. As per Islam, a Muslim’s first obligation is to his fellow Muslims, first and foremost before any nationality. Are you denying this?
  You can put the same question to an Hindu. Are you a Hindu or an Indian first?
  The answer is simple. If there is no India, there will be no Hinduism or Hindus, hence a Hindu will be an Indian first. Can you say the same about Islam?
  Shri தாயுமானவன், Ignorance is bliss. Apparently, you must be leading a very blissful life. I can only infer this from your statements on RSS.

 23. //தேசிய கொடி ஏற்றினால்தான் நாட்டுப்பற்று இருக்கிறது என்றும் கிடையாது.//

  தினமும் loud ஸ்பீக்கர் இல ஊளை இடறீங்கள ? அது எதுக்கு?

 24. ஏன் இந்து சமயத்தில் வட இந்திய வழிபாடு முறைகள் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருக்கிறது. இராமர் , கிருட்டிணர் , சாய் பாபா போன்றவர்களை வழிபடுவது இங்கு இயல்பாக ஆகிவிட்டது. ஆனால்நம்முடைய முருகன் , அய்யனார் போன்ற தேய்வங்களை வட இந்திய பெருமக்கள் அறிவார்களா ?? சிந்தித்து பாருங்கள்

 25. முருகனை பற்றி இங்கு வந்துதான் அறிந்தேன் என்று ஒரு வட இந்தியர் என்னிடம் தெரிவித்தார்

 26. செந்தமிழன் சீமானின் உரைகள் இதைப்பற்றி கோபத்தை வரவைக்கும் ஆனால் உண்மை அதுதான்

 27. தாயிற்சிறந்த கோவிலுமில்லை.என்பது கலாசாரத்தில் சேருவதில்ல.அது ஒரு கருத்தியல்.தாயின் பெருமையை உணர்த்த இப்படியல்லாம் தமிழில் சொல்வதுண்டு.இப்படி மனிதரை தெய்வமாக்கி தெய்வமாக்கி அது எங்கே கொண்டு விட்டுருக்கிரதென்றால் சினிமா கூத்தாடிகளும் தெய்வம்.கேடுகெட்ட அரசியல் தலைவர்களும் தெய்வம்.தாயை தாயாய் பாருங்களேன்.தாயை தாயாய் பாருங்கள்.தகப்பனை தகப்பனாய் பாருங்கள்.ஆட்டை ஆடாய் பாருங்கள்.மாட்டை மாடாய் பாருங்கள்.ஒன்றை ஏன் இன்னொன்றாய் பார்கிறீர்கள்.எல்லாவற்றையும் தெய்வம் தெய்வம் என்று சொல்லி கடவுளின் வல்லமை என்ன அவனின் தன்மை என்ன என்பதே மறந்து போய் அதுதான் நாத்திகத்தை நோக்கி ஒரு சிந்தனையாளனை தள்ளுகிறது.தாய் என்பது யார் அவள் ஒரு பெண்.நம்மை வயிற்றில் கருவுருவதற்கு முன்புவரை எல்லா ஆசாபாசகளோடு இருப்பவள் உண்டானவுடன் அப்படியே மாறிப்போவாள்.அவள் தூக்கம் உணவு ஓய்வு அனைத்தும் துறந்து வயிற்றில் இருப்பதற்காக தன்னையே தியாகம் செய்வாள்.இதற்கு முன் அவள் இப்படி இருந்திருப்பாளா?அவளை இப்படி இருக்க தூண்டியது எது?அது தாய்மை.எப்படி அவள் மார்பகத்தில் பால் சுரப்பதற்கு அவள் காரணமில்லையோ அதேபோல் இந்த தாய்மை உணர்வுக்கும் அவள் காரணமில்லை.அது அவளையும் அவள் சுமக்கும் கருவையும் உருவாகியவனின் கருணை.இது மனிதருக்கு மட்டுமல்ல.எல்லா ஜீவன்களுக்கும் இப்படிப்பட்ட தாய்மை என்ற மகத்துவத்தை அதன் உள்ளங்களில் அவனே சுரக்க செய்கிறான்.கோழையாக இருக்கும் ஒரு சிறு கோழி ,குஞ்சுகளோடு இருக்கும் பொழுது அருகில் போனால் சீறி பாய்ந்து கொத்தவரும்.இந்த தாய்மை உணர்வுதான் சந்ததிகளை தழைக்க வைப்பது.ஆக நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு தாயை வணங்குவோம் என்கிறீர்கள்.நாங்கள் அதை தாண்டி என் தாயையும் அவளுக்கு தாய்மையும் தந்தவனை வணங்குவோம் என்கிறோம்.

 28. அன்புள்ள கிருஷ்ண குமார்,
  நான் எங்கே விவாதத்தை மடைமாற்றம் செய்தேன்?
  ஆர்.எஸ்.எஸ். தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்று ஒருவர் தவறாக விவாதத்தில் பதிவு செய்தால் நீங்கள் சரியான தரவுகளுடன் நிரூபியுங்கள். ஆனால் வெங்கடேசன் அதோடு நிற்கவில்லை. அவர்கள் ஏன் வந்தேமாதரம் பாடவில்லை என்கிறார். அதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். இதில் எங்கே இஸ்லாமியர் ஆதரவு வந்தது? நான் ஒரு தமிழன், உலகெங்கும் மானுடம் தழைத்திட என்னால் முடிந்தளவு பாடுபடுகிறேன். ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான மதவெறியை தூண்டாத ஒரு ஆர். எஸ். எஸ் தொண்டனைக் கூட இப்போது நான் பார்த்ததில்லை (ஒரே ஒரு விதிவிலக்கு எங்கள் ஊர்க்காரரான ஜனா.கிருஷ்ண மூர்த்தி; மதவெறி தூண்டும் வார்த்தையை பேசிய ஒருவனை என் கண் முன்னாடியே கண்டித்தவர் அவர்). மோடி/அத்வானி/வருண்காந்தி/சாக்ஷி மஹராஜ்/ இன்ன பிற ஆர்.எஸ்.எஸ். ”மடத்” தலைவர்களின் பேச்சை கேளுங்கள். புரியும். அப்புறம் என்ன தேசபக்தி….வெங்காயம்…சமூக சேவை….புண்ணாக்கு? நாஜிகள் செய்யாத சமூகசேவையையா நீங்கள் செய்துவிட்டீர்கள்! சென்னையில் உள்ள எல்லா ரவுடிக் கும்பலும் தங்கள் பகுதிகளில் பேரிடர் வரும்போது சேவை செய்கிறார்கள். எனவே அவர்களை போற்றமுடியுமா என்ன? வியாசர்பாடியில் ஒரு தாதா இரவுபாடசாலை நடத்துகிறார் தெரியுமா? அவருடைய வசூல்வேட்டைக்கான களம் சிறியது எனவே ஒரு பாடசாலை நடத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். வசூல்வேட்டை உலகளாவியது எனவே 50000 ஓராசிரியர் பள்ளி நடத்துகிறீர்கள். அவ்வளவு வித்தியாசம்.

 29. நான் ஒரு வியாபாரி.நெருக்கடியான ஒரு வியாபார சூழலில்தான் நான் இங்கே கருத்து பதிகிறேன்.ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நமக்குள் பல் வேறு வகையான கருத்து வேறுபாடுகளும் கடவுட்கோட்பாடுகளும் உள்ளன என்பது நிதர்சனம்.எதில் வேறுபடுகிறோம் எதனால் வேறுபடுகிறோம் என உணர்ந்து வேறுபடுவதற்கான காரணங்களை புரிந்து ஒருவரை ஒருவர் நெருங்கி வரவேண்டும்,இது போன்ற கருத்து பரிமாற்றங்களால் மன கசப்புகள் நீங்கி வேறுபட்டாலும் ஒன்று படுவோம் என்ற நிலைக்கு வரவேண்டும் என்றுதான் இங்கே நான் எழுதுகிறேனே தவிர உங்களோடு வம்பு வளர்க்கவோ மனம் நோகடிக்கவோ அல்ல.எங்களின் தேசப்பற்று மேலானது.மெய்யானது.மிகச்சிறந்த இஸ்லாமியனாக இருக்கும் ஒருவன் மிகச்சிறந்த மனித நேயனாகவும் தன் சக மக்களை வாஞ்சையோடு நோக்குபவனாக்கவுமே இருப்பான்.தேசம் என்பது எது ?மண்ணும் மலையும் மரமும் கடலுமா?சக மனிதனை சகோதரனாய் பாவிப்பதும் அவன் நலனுக்கு எந்த பங்கமும் வராமல் காப்பதும்தான்.எல்லா மனிதனுக்குள்ளும் இது என்னுடையது இதை யாரும் குறை சொல்ல கூடாது என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கத்தான் செய்யும்.என் குடும்பம் என் ஊர் என் மொழி என் நாடு என்பது ரத்தத்தோடு கலந்தது.இதை இன்னும் பெருமித படுத்தும் விதமாய் இதன் அருமை பெருமைகளை அவனுக்கு ஊட்டிக்கொண்டே இருக்கவேண்டுமே அல்லாது நீ தேசிய கொடியை குத்தல்ல.நீ தேசிய கொடியை ஏதல்ல என்று குறை கூறி கொண்டிருப்பது நான் மீண்டும் சொல்கிறேன் இது பம்மாத்து பசப்பு..

 30. பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் ரத்லம் ஊருக்கு அருகில் உள்ளது நெக்ரன் என்ற கிராமம். இந்த கிராமம் உயர் சாதியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். பவன் என்ற தலித் இளைஞரின் திருமணம் இந்த கிராமத்துக்கு அருகில் நடந்தது. அவர்கள் சாதி வழக்கப்படி பவனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக கிராமத்தில் அழைத்துச் சென்றனர். வர்ணாசிரமத்தில் ஊறிய மேல் சாதியினருக்கு இது பொருக்குமா? உடனே இதனை எதிர்த்தனர். ‘தலித் குதிரையில் ஏறி வருவதா?’ என்று பல மேல் சாதி இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இது பற்றி மணமகன் பவன் கூறும் போது ‘மேல் சாதி இளைஞர்கள் நான் குதிரையில் ஊர்வலம் வருவதை விரும்பவில்லை. பிரச்னையாகும் என்பதால் இது பற்றி காவல் துறையில் புகார் செய்தேன். போலீஸ் பாதுகாப்பும் கொடுத்தனர். ஊர்வலம் மேல் சாதியினர் தெருக்களில் நுழைந்த போது என் மேல் கற்களை வீச ஆரம்பித்தனர். உடன் போலீசார் எனக்கு ஹெல்மட் அணிவித்து எனது தலையை காப்பாற்றிக் கொள்ள அறிவுறுத்தினர். அதன் பிறகு ஹெல்மட் அணிந்து பாதுகாப்போடு எனது குதிரை பயணம் அந்த தெருவைக் கடந்தது’ என்கிறார் பரிதாபகரமாக…

  உதவி தாசில்தார் ஜெயின், தால் காவல் நிலைய கண்காணிப்பாளர் சுரேஷ் பாலாஜி போன்று பல அதிகாரிகளும் தலித் மக்களும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். மேல் சாதி இளைஞர்கள் 72 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல் துறை. எதிர்த்த மேல் சாதியினரை அடித்து விரட்ட காவல்துறை முயலவில்லை. மாறாக பாதுகாப்புக்கு மணமகனுக்கு ஹெல்மட் தருகிறது. 🙂 ஏனெனில் மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது பிஜேபி ஆட்சி. எனவே காவல் துறை தனது அதிகாரத்தை பயன் படுத்தாமல் சற்று அடக்கி வாசித்துள்ளது.

  அறிவியலில் மனிதன் எங்கெங்கோ சென்று விட்டான். ஆனால் நமது நாட்டில் சக மனிதன் மனிதனாக வாழ நமது சமூகம் சம்மதிப்பதில்லை. என்று ஒழியும் இந்த வர்ணாசிரம வெறி?

  தகவல் உதவி
  தி இந்து ஆங்கில நாளிதழ்
  13-05-2015

 31. எனது தாய் நாட்டை எனது இனத்தை எனது தாய் மொழியை நேசிப்பது என்பது இயற்கையாகவே ஒருவனின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதற்காக சில பாடல்களையோ சில கொடிகளையோ ஏற்றினால்தான் உனது தேசப் பற்றறை நான் ஒத்துக் கொள்வேன் என்று சிலர் சொல்கின்றனர். இந்த அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்?

  தேசிய கீதம் பாடுவதற்கோ, தேசிய கொடியை ஏற்றுவதற்கோ இஸ்லாம் எந்த இடத்திலும் தடை சொல்லவில்லை. ஆனால் வந்தே மாதரம் பாடலில் ஏகத்துவத்துவத்துக்கு எதிரான கொள்கை உள்ளதால் அதனை பாட எனது மனம் ஒப்பாது. இதனை இன்னும் பகிரங்கமாக சொல்வேன். இதை வைத்து எனது தேசப் பற்றை யாரும் எடை பொட்டால் அவர்கள் அறிவிலிகள் என்று ஒதுக்கி விட்டு சென்று விடுவேன்.

 32. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  தாங்கள் முனைந்து கருத்துத் திரிபு செய்வது தகாதது. உங்கள் கருத்துத் திரிபுகளும் வெறுப்புரைகளும் ஒவ்வொன்றாக கீழே பகிரப்படுகின்றன :-

  1. ஹிந்துக்களையும் ஹிந்து இயக்கங்களையும் குறை சொல்லும் நீங்கள் பொய்ப்பரப்புரை செய்துள்ள் இஸ்லாமிய அன்பருடைய செயல்பாட்டை ஒரு வரி அல்லது அரை வரி கூட கண்டிக்கவில்லை.

  \\ சில நாட்களுக்கு முன்கூட ஒரு தொலைக்காட்சியில் ஒரு இஸ்லாமியர் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்ற பொய்யைக் கூறினார். \\

  இந்த வ்யாசத்தின் மிக முக்யமான நோக்கம் பொதுமன்றில் ஒரு இஸ்லாமியர் செய்துள்ள பொய்ப்பரப்புரையை மறுதலிப்பது. முழுமையான சான்றுகளுடன் அந்த இஸ்லாமியருடைய பொய்ப்பரப்புரை மறுதலிக்கப்பட்டுள்ளது.

  \\ நீ தேசிய கொடியை குத்தல்ல.நீ தேசிய கொடியை ஏதல்ல என்று குறை கூறி கொண்டிருப்பது நான் மீண்டும் சொல்கிறேன் இது பம்மாத்து பசப்பு.. \\

  என்று கருத்துப் பகிர்ந்துள்ள நீங்கள் தான் கீழ்க்கண்ட வாசகத்தையும் பகிர்ந்துள்ளீர்கள். மேற்கண்ட வாசகத்தை பொதுமன்றில் பொய்யுரை செய்துள்ள அந்த இஸ்லாமியரிடம் ஏன் நீங்கள் சொல்லக்கூடாது. அதுவும் தரவுகள் பூர்வமாக உண்மை எது என்று உங்களுக்குத் தெரிந்த பின்பும்.

  \\ அதே t v நிகழ்ச்சியில் அந்த இஸ்லாமியர் எத்தனை மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பதையும் ஆதாரத்தோடு சொன்னார். \\

 33. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  உங்களது இரண்டாவது கருத்துத் திரிபு

  \\ ”தேசியகீதம் பாடுவது ஹராமாம்.: எப்படிப்பட்ட பொய். \\

  இஸ்லாமிக் ரிஸர்ச் மிஷன் என்ற இஸ்லாமிய தளம் எண்ணிறந்த பொய்யுரைகளை *****ஜன கண மன*** என்ற நமது தேசிய கீதத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ளது. தேசிய கீதத்தை இயற்றிய குருதேவ் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களை ……… இங்கிலாந்து ராஜாவைப் போற்றுமுகமாக இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது என்று பொய்ப்பரப்புரை செய்து……….இழிவு செய்துள்ளது. அதன் மூலம் தேசிய கீதத்தின் மீது பொது மக்களுக்கு தேவையற்ற வெறுப்பையும் தாழ்வு மனப்பான்மையையும் புகுத்துகிறது.

  இதை அப்படியே மூடி மறைத்துள்ளீர்கள்.

  வ்யாசத்தில் எங்குமே constitutuent assembly அங்கீகாரம் செய்துள்ள ***வந்தேமாதரம்*** பாடல் பற்றிய பகிர்வு இல்லை. ஆனால் முனைந்து ** வந்தே மாதரம்** பாடலை தங்கள் உத்தரங்களினூடே புகுத்தி வ்யாசத்தின் கருத்தை மடைமாற்றம் செய்துள்ளீர்கள்.

  தேசிய கீதம் பாடுவது ஹராமாம். எப்படிப்பட்ட பொய் என்று சொல்லும் நீங்கள் உண்மையிலேயே தேசிய கீதத்தின் மீது மதிப்பு வைத்துள்ளீர்கள் என்றால் ………..

  தேசிய கீதத்தை இயற்றிய குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் அவர்களையும் தேசிய கீதத்தையும் ஒருங்கே இழிவு செய்துள்ள இஸ்லாமிக் ரிஸர்ச் மிஷன் என்ற உங்களது இஸ்லாமிய தளம் செய்து வரும் விஷமத்தனமான பொய்ப்பரப்புரையை கண்டனம் செய்யுங்கள்.

 34. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  தங்களது மூன்றாவது கருத்துத் திரிபு மற்றும் காழ்ப்புரை :-

  \\ தேசியகீதம் ஒன்று இருக்க ஒரு புண்ணாக்கு பாடலை எழுதி வைத்துக்கொண்டு \\ வந்தேமாதரம் பாடுவதுதான் தேசப்பற்றின் அளவுகோலோ?நாங்கள் எங்கள் தாய் மண்ணை நேசிப்போம்.மதிப்போம்.ஒருபோதும் யாரையும் எதையும் துதிக்க மாட்டோம்.தொழ.மாட்டோம் வணங்க மாட்டோம் \\

  என்னென்ன காழ்ப்புரை செய்து இருக்கிறீர்கள்.

  1. **** ஜன கண மன*** எப்படி தேசிய கீதமோ அப்படியே ****வந்தே மாதரம்*** நமது கான்ஸ்டிடுயண்ட் அஸெம்ப்ளியால் ***தேசியப்பாடல்*** என்ற அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த அஸெம்ப்ளியில் இருந்த சைவர், வைஷ்ணவர், பௌத்தர், ஜைனர் மற்றும் சீக்கியர்கள் அடங்கிய ஹிந்துக்களும், முஸல்மாணியர்களும், க்றைஸ்தவர்களும், ஃபார்ஸிகளும் எப்படி ஜன கண மன கீதத்தை அங்கீகரித்துள்ளார்களோ அதே போல **** வந்தே மாதரத்தையும் **** அங்கீகரித்திருக்கிறார்கள்.

  தேசத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபுஜி ஸ்ரீ ராஜேந்த்ர ப்ரஸாத் அவர்கள்………. தேச விடுதலைப்போராட்டத்தில் ***வந்தே மாதரம்*** என்ற சொல் கிட்டத்தட்ட போர்முழக்கமாக ஹிந்துஸ்தானத்தின் தேச விடுதலைப்போராளிகளால் தேச முழுதும் முழங்கப்பட்டுள்ளதால்…………..இந்தப் பாடலின் இரண்டாம் அடிக்குப் பின் பாரத மாதா ………… **துர்கா**வின் ரூபமாக வர்ணிக்கப்படுவதால்………… அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக ………. இந்தப்பாடலின் முதல் இரண்டு அடிகளை **தேசியப்பாடலாக அங்கீகாரம் செய்வதாக அறிவித்துள்ளார்.

  2. நீங்கள் தாயைத் தொழ வேண்டாம். அது உங்கள் இஷ்டம். ***வந்தே மாதரம்*** பாடக்கூட வேண்டாம் அது கூட உங்கள் இஷ்டமே.

  ஆனால் ****வந்தே மாதரம்*** என்ற கீதத்தை ****புண்ணாக்கு*** என்று நிந்தனை செய்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்த ஒரு கீதம் தேசத்தின் விடுதலைப்போராட்ட வீரர்களின் போர் முழக்கமாக இருந்துள்ளதோ …….. எந்த வரிகளை நமது தேசத்தின் கான்ஸ்டியுண்ட் அஸெம்ப்ளியின் அனைத்து மத சான்றோர்களும் அங்கீகரித்துள்ளார்களோ………அதை பாடாமல் கூட இருந்து விடுங்கள்………. ஆனால் அதைப் புறக்கணிக்கவோ……….. அல்லது அதை இழிவு செய்யவோ எந்த ஹிந்துஸ்தானக்குடிமகனுக்கும் அருகதை கிடையாது.

  3. வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு அடிகளுக்குப் பிறகு தான் பாரத மாதாவை துர்கா எனும் ஹைந்தவக் கடவுளாகப் பாடப்படுதல் காணப்படும். முதல் இரண்டு அடிகளில் தேசத்தை தாயாகவும் ஹிந்துஸ்தானத்தின் இயற்கை வளங்களின் ஸ்வரூபமாகவும் ஸ்துதி செய்தல் மட்டிலும் காணப்படுகிறது.

  4. நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் அவர்களது ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ் எனப்படும் ஹிந்துஸ்தான தேசிய ராணுவத்தில் இந்தப்பாடல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து ஒலிபரப்பாகிய இந்த ராணுவத்தின் ரேடியோக்களில் இந்தப்பாடல் பாடப்பெற்றுள்ளது. இந்த ராணுவத்திலும் ஹிந்துஸ்தானத்தின் அனைத்து மதத்தினரும் பங்கு பெற்றுள்ளனர்.

  4. நீங்கள் இந்தப்பாடலை பாடுவதில் விருப்பம் கொள்ளவிடினும் சரி, எந்த ஒரு பாடலில் துர்கா என்று நாங்கள் வணங்கும் கடவுள் ஸ்துதிக்கப்பட்டுள்ளதோ அந்தப்பாடலை ****புண்ணாக்கு*** என்று காழ்ப்புரை செய்வதற்கு………. அதுவும் ஒரு ஹிந்து தளத்தில்…….. காழ்ப்புரை செய்வதற்கு………. அதுவும் நீங்கள் கருத்துப்பகிரும் வ்யாசத்தில் இந்தப்பாடலைப் பற்றி எந்த விதமான விவாதமும் முன்வைக்கப்படாதிருக்கையில்……… முனைந்து இந்தப்பாடலைப் பற்றி இழிவு செய்வது……. தகாத செயல்………

  \\\ நம் நாட்டு மக்கள் அனைவரையும் உறவுகளாக நினைப்பதும் நடத்துவதும் \\\

  என்ற கருத்தை முன் வைத்துள்ள நீங்கள் ஹிந்துக்களை உண்மையாகவே உங்களது உறவினர்களாக நினைத்தால் ஹிந்துக்கள் வணங்கும் துர்கா தேவியை துதி செய்யும் ஒரு பாடலை ****புண்ணாக்கு***** என்று சொல்வது ஹிந்துக்களது முகத்தில் அறையும் செயல்.

  \\ இது போன்ற கருத்து பரிமாற்றங்களால் மன கசப்புகள் நீங்கி வேறுபட்டாலும் ஒன்று படுவோம் என்ற நிலைக்கு வரவேண்டும் என்றுதான் இங்கே நான் எழுதுகிறேனே தவிர உங்களோடு வம்பு வளர்க்கவோ மனம் நோகடிக்கவோ அல்ல \\

  வந்தே மாதரத்தை இழிவு செய்துள்ள உங்கள் கருத்துக்கள் மேற்கண்ட உங்களது கருத்துக்களுடன் அறவே ஒப்பவில்லை. க்ஷமிக்கவும். நீங்கள் தாயை எப்படி வேண்டுமானாலும் மதித்துக்கொள்ளுங்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று பாடிய தமிழ்ச்சான்றோர்கள் முட்டாள்கள் என்று எம்மால் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அப்படிப் பாடிய எமது முன்னோர்களை முட்டாள்கள் என்று நினைக்கும் அன்பர்களை அறிவு முதிர்ச்சி உள்ளவர்களாகவும் எண்ண முடியாது.

  உங்களது குரான்-ஏ-கரீமில் உள்ள எமக்கு ஏற்பில்லாத வசனங்களை இங்கு உதாஹரித்து ……….. இதே போல ……… நானும் பதிலடி கொடுக்க முடியும் தான். ஆனால் வ்யாசத்தில் சொல்லப்படாத கருத்துக்களை முன்வைத்து மடைமாற்றம் செய்யும் இழிசெயலில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயம் எமக்கு இஸ்லாம் என்ற மத்தின் மீது சித்தாந்த ரீதியாக மாறுபாடு இருந்தாலும்……. எமது இஸ்லாமிய சஹோதரர்கள் அவர்களது மதத்தை ***அவரவர் வழிப்படி*** ………… ***அவரவர் வழிப்படி****………. ***அவரவர் வழிப்படி**** ஷியாவாகவோ பரேல்வி ஸுன்னியாகவோ தேவ்பந்தி ஸுன்னியாகவோ அஹ்மதியாவாகவோ பின்பற்றுவதில் உகப்பு தான். அதை முன்னிறுத்தி அக்காரியத்தில் இறங்க இஷ்டமில்லை.

 35. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  தாங்கள் மறைக்க விழைந்த நாலாவது கருத்துத் திரிபு :-

  \\ தேசியகீதம் பாடுவது ஹராமாம்.: எப்படிப்பட்ட பொய். \\

  முதலில் நீங்கள் பகிர்ந்த கருத்தை வெள்ளந்தியாக ……… ஆமாம்…….. எம்முடைய இஸ்லாமிய சஹோதரர்கள் நமது தேசியகீதத்தைப் பாடுவதை ஹராம் என்று சொல்லமாட்டார்கள்……… ஜெனாப் மீரான் சாஹேப் கருத்துப் பகிர்ந்த படிக்கு இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடுவதை ஹராமாகக் கருதுவது பொய்யாகவே இருக்கவியலும் என்று கருதி ……..ழ்த்துக்கள் கூட தெரிவித்து விட்டேன்.

  ஆனால் முனைப்பாக ஆராய்ந்து கருத்துப் பகிர்ந்துள்ள ………..ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் பகிர்ந்துள்ள தளத்தில் உள்ள ……….கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்கு முன்வைத்திருக்கிறேன்.

  இஸ்லாமிக் கொஸ்சன்ஸ் அண்ட் ஆன்சர்ஸ் என்ற தளத்தில்

  https://islamqa.info/en/111877, https://islamqa.info/en/130805

  மேற்கண்ட இரண்டு கேழ்விகளையும் அதற்கு அளிக்கப்பட்ட உத்தரங்களையும் பரிசீலனை செய்யுங்கள்.

  மிகத் தெளிவாக இந்த இஸ்லாமிய தளத்தில் பகிரப்பட்டுள்ள கருத்து :-

  Praise be to Allaah.

  Firstly:

  Playing or listening to national anthems is haraam. This has been discussed in the answer to question no. 5000 and 20406. It makes no difference whether what is played is songs or the national anthem or anything else.

  ……………………..

  I come from a country where jobs are few, and I cannot get any other job with my high school diploma, but I found a job in the military. However there is an issue, which is the salute; this is mandatory in the military. Is it permissible for me to work in the military? But when I give the salute I do not do so with the intention of showing respect; rather I do it with a different intention. Is it permissible to do that? I hope that you will answer my question in detail, because I am going to start this job in two months’ time.

  Praise be to Allah.

  The military salute that soldiers give to one another, in the form of a gesture with the hand, is a kind of greeting that is not allowed in Islam; rather the greeting of the Muslims is by saying “as-salaamu ‘alaykum (peace be upon you).”

  …………………….

  இப்படியான தேச த்ரோஹக் கருத்துக்களை இஸ்லாமியத் தளங்கள் பரப்புரை செய்து வருகையில் சீர்திருத்தப்பட வேண்டியது இந்த தேச விரோதக் கருத்துக்களை பரப்புரை செய்து வரும் தேச விரோதிகளே என்பதில் யாருக்கும் எந்த சந்தேஹமும் இருக்கக் கூடாது.

 36. சுவனபிரியன் அவர்களே, பாஜக ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்சியை அனைவரின் கவனத்திற்கு கொண்டுவந்து ஹிந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் சிறப்பான பணி செய்தமைக்கு நன்றி. அமைதி மார்க்கத்தை போதிக்கும் இசுலாமியர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பதின் மர்மத்தை என்று விளக்குவீர்?

 37. ஜெனாப் சுவனப்ரியன்

  என்னென்ன இஸ்லாமிய தளங்களில் என்னென்ன கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன என்பது தெளிவாகப் பகிரப்பட்டுள்ளது.

  உங்களுக்குத் தெரியாத அல் தக்கியாவா.

  இந்த வ்யாசத்தின் கருப்பொருளான ………… வழி தவறிய இஸ்லாமியரின் ……..தேசத்தை இழிவு செய்யும் பொய்ப்பரப்புரைகளை கட்டுடைப்பதிலிருந்து ………..மடை மாற்றம் செய்ய நீங்கள் ஹிந்துக்களிடம் காணப்படும் ஜாதி வித்யாசங்களைப் பட்டியலிடுகிறீர்கள். இன்றோ நாளையோ உங்களது சவூதி சர்க்கார் ஷியா இஸ்லாமிய சான்றோரான அய்தொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர் அவர்களது தலையை பொது மக்கள் முன்னிலையில் துண்டிக்கும் காரியத்தைச் செய்ய இருக்கிறது.

  மத்யப்ரதேசம் நீங்கள் பணம் சம்பாதிக்கும் சவூதி அரேபியாவில் இருந்து வெகு தூரம்…….. முடிந்தால் நீங்கள் இருக்கும் சவூதி அரேபியாவில்…………. வஹ்ஹாபி ஸுன்னி / ஸலாஃபி பயங்கரவாத சர்க்கார்…………… ஷியா சான்றோர் ஒருவருடைய தலையை துண்டிக்கும்…………. மாபாதகச் செயலைச் செய்வதை தடை செய்ய முடியுமானால் …………. உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.

  ஓஹ்………… ஐ எஸ் ஐ எஸ் என்ற பயங்கரவாத கும்பல் ஹிந்துஸ்தான செவிலியர் பெண்களை ………….. அவர்கள் தங்களது பணியான நோயாளிகளுக்கு பணிவிடை செய்தல் என்ற பணியினை செய்ய விடாது……….. அவர்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த போது……….. இந்தப் பயங்கரவாதிகள் செய்த கீழ்த்தரமான செயலான நோயாளிகளுக்கு பணிவிடை செய்யும் கடமையைத் தடுக்க விழைந்த கயமைத் தனத்தை மறைத்து………. இந்த பயங்கரவாதிகள் இந்த செவிலியர் பணிப்பெண்களுக்கு பிரியாணி கொடுத்தார்கள் என்று இதே தளத்தில் தாங்கள் விதந்தோயிருக்கிறீர்கள் அல்லவா…………

  அதே போல் இஸ்லாமிய தளங்கள் தேசிய கீதத்தையும் தேசிய வாதிகளையும் இழிவு செய்வதை மறைக்க உங்களது அல் தக்கியா முறைப்படி வேறெதையாவது பேசித் தானே ஆக வேண்டும்.

 38. திரு மீரான்சாஹிப் அவர்களே, மிகச்சிறந்த கருத்தை முன்வைத்தீர்கள்.
  //தேசம் என்பது எது ?மண்ணும் மலையும் மரமும் கடலுமா?சக மனிதனை சகோதரனாய் பாவிப்பதும் அவன் நலனுக்கு எந்த பங்கமும் வராமல் காப்பதும்தான்//
  தங்கள் மதத்தினர் நாள் தவறாமல் குறி தவறாமல் குண்டுவைத்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதின் நோக்கம் என்ன? தான் ஒருவனே இறுதியில் வென்று புவி ஆள்வதா? இந்த குண்டு வெடிப்பில் காடும் மலையும் கடலும் அழிந்தால் எஞ்சுவது என்ன? அட, அறுத்து தின்ன அடுத்தவன் கூட இருக்காமல் போய்விடுவானே! எனவே தான் நாங்கள் எங்கள் காட்டையும் மரத்தையும் நிலத்தையும் போற்றுகிறோம். அரேபியா பாலைவன நிலை எங்களுக்கு வேண்டாம் என ஆண்டவன் எமக்களித்த வரப்ரசாதத்தை புகழ்ந்து பாடுகிறோம். சற்று நிதானித்தால் உட்பொருள் விளங்காமலா போய்விடும்?

 39. திரு. கிருஷ்ண குமார்………….

  தங்களுக்கு சுவனப்ரியன் அவர்கள் தெளிவான ஒரு பதிலை ஆதாரப் பூர்வமாக முன் வைத்திருக்கிறார். தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுக்க ஆயிரக்கணக்கில் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சுவனப்ரியன் கூறியதை விடுங்கள் இது நாள் வரையில் எந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராவது சாதிக்கு எதிராக மேடை ஏறி ஒரு வார்த்தை பேசியதுண்டா, நாட்டின் ஒற்றுமையை, அமைதியை சீர்குலைக்கும் சாதியை ஒழித்து கட்ட வேண்டும் என்று எந்த இந்து அமைப்பு(ஆர்.எஸ்.எஸ் உட்பட) இது வரை தீரமாக போராடி இருக்கிறது என்று தாங்கள் ஆதாரப் பூர்வமாக கூற முடியுமா. அல்லது குறைந்த பட்சம் மேடையிலாவது முழங்கி இருக்கிறதா.

  இது வரை ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்க்கு உருப்படியாக செய்த நல்ல விடயங்கள், ஒரு நல்ல சமுக மாற்றம் என்று எதாவது இருக்கிறதா என்கிற கேள்விக்கு அத்விகா அவர்கள் அளித்த பதிலை பாருங்கள் அதே கேமரா ஸ்டண்டுகளை தான் பட்டியலிட்டுள்ளார். ஆந்திராவில் புயல், நேபாளாத்தில் பூகம்பம், சென்னையில் சுனாமி என்று ஆர்.எஸ்.எஸ் நோகாமல் நோம்பு கும்பிட்ட கதையை அளந்து கொண்டிருக்கிறார். அவரும் என்ன செய்வார் இருப்பதை தானே கூற முடியும்.

  கல்வித் தொடர்பாக தாங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் அண்மையில் நான் பயணம் செய்து இருக்கிறேன். இன்றும் அங்கு வாழ்பவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது மிகவும் எட்டா கனியாகத் தான் இருக்கிறது. போக்கு வரத்து வசதிக் கூட இல்லாத எத்தனையோ மலை கிராமங்கள் இங்கு இருக்கின்றன. இதனாலேயே இங்கு பலரும் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் உண்டு. தங்களிடமே துல்லியமாக எந்த தகவலும் இல்லாத பொழுது எப்படி உங்களால் இவர்களின் சேவையை?!!! பாராட்ட முடிகிறது. நீங்கள் கூறியப்படி வித்யா பாரதி, வித்யா மந்திர் போன்றவிகள் எல்லாம் உண்மையான கல்வி பனி செய்த இருந்தால் நம் நாடு எப்பொழுதோ எழுத்தறிவு பெற்ற நாட திகழ்ந்து இருக்கும்.

  //அவர்களது பங்கினை கேமரா ஸ்டண்ட் என்று இழித்துரைப்பது……………… நிச்சயம் தரம் தாழ்ந்த செயற்பாடு. //

  மன்னிக்கவேண்டும் அய்யா. யாரும் இழித்து எல்லாம் உரைக்கவில்லை, உண்மை அது தான். நாட்டை உலுக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க அதை எல்லாம் விட்டு, இவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பதனை உற்று நோக்கினாலே இந்த உண்மை நன்கு விளங்கும்.

  //பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஏன் சில பாஜகவினரே கூட விரும்பவில்லை. அதையும் மீறி ஆட்சிக்கு வந்ததை நான் பகிர்ந்துள்ளேன். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தாங்கள் விளக்கினால் தெரிந்து கொள்வேன்.//

  இதை பற்றி வேறொரு கட்டுரையில் நான் விரிவாக விவரிக்கின்றேன், அதற்க்கு முன்பு ஒரு சிறு தகவல், பா.ஜா.க தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு வெளியாகும் டைம்ஸ் என்னும் குள்ள நரி பத்திரிக்கையில் மன்மோகன் சிங்கை தாழ்த்தியும் மோடியை புகழ்ந்தும் எழுதிய விதத்திலேயே ஒன்று மட்டும் நன்றாக தெரிந்து விட்டது. மன்மோகன் சிங்கை காட்டிலும் மோடி தான் “ஏகாதிபத்திய நிதி மூலதன” சேவைக்கு!!! சரியானவர் என்பதை “இனம்” கண்டு கொண்டார்கள் என்பதனை.இந்த அடிப்படை தகுதி தான் மோடியை இந்தியாவின் வளர்ச்சி நாயகன் என்கிற அளவிற்கு முகமூடி அணிவித்து மக்களிடம் இட்டு சென்றது. இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சியின் தொடர் ஊழல்களும் ஓரளவிற்கு ஒரு முக்கிய பங்கு வகித்தன என்பதும் உண்மை.

  தொடரும்…………..

 40. திரு.கிருஷ்ண குமார்

  //ஆனால் ****வந்தே மாதரம்*** என்ற கீதத்தை ****புண்ணாக்கு*** என்று நிந்தனை செய்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்த ஒரு கீதம் தேசத்தின் விடுதலைப்போராட்ட வீரர்களின் போர் முழக்கமாக இருந்துள்ளதோ …….. எந்த வரிகளை நமது தேசத்தின் கான்ஸ்டியுண்ட் அஸெம்ப்ளியின் அனைத்து மத சான்றோர்களும் அங்கீகரித்துள்ளார்களோ………அதை பாடாமல் கூட இருந்து விடுங்கள்………. ஆனால் அதைப் புறக்கணிக்கவோ……….. அல்லது அதை இழிவு செய்யவோ எந்த ஹிந்துஸ்தானக்குடிமகனுக்கும் அருகதை கிடையாது.//

  மன்னிக்க வேண்டும். இதை பாடுவதும்,பாடாமல் இருப்பதும் வேறு விஷயம், ஆனால் பாருங்கள் இந்த பாடல் இந்தியை போன்று தேவை இல்லாமல் மக்களின் மீது வலிந்து திணிக்க படுமானால், அதை எதிர்க்கவோ புறக்கணிக்கவோ இந்த நாட்டு குடிமகன்கள் அனைவருக்கு உரிமையுள்ளது. இந்த நாட்டின் தேசிய கீதமான ஜன கன மணவை மட்டும் பாடினால் போதுமானது, நீங்கள் நாட்டுக்கு 4 தேசிய கீதம் வைத்திருந்தால் அதை உங்களின் சங்க கூட்டங்களில் வேண்டுமானால் பாடிக் கொள்ளுங்கள். மக்களின் மீது தேச பக்தி என்கிற பெயரில் எதையும் திணிக்கும் அருகதை இங்கிருக்கும் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. மேலும் அவ்வாறு செய்வது அப்பட்டமான பாசிசமாகும். நன்றி

 41. //ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ள நாக்பூரில் சுதந்திர தினத்தன்று வருடாவருடம் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிற்றது.//

  நாடு விடுதலை அடைந்தது 1947ல் – அதிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகத்தில் ஏன் தேசிய கோடி ஏற்றப்படவில்லை என்பதற்கான காரணத்தை கூற முடியுமா?

 42. நண்பர் க்ரீஷ் அவர்களுக்கு ஒரு நியாயமான பதிலை ஆர்.எஸ்.எஸ். ‘மட’த்தலைவர்கள் யாராவது பதில் தருவார்களா?

 43. வந்தேமாதரம் பாடலை நீங்கள் மட்டும் பாடினால் அதை நிந்தனை செய்வது எனக்கு தகாது.ஆனால் நீ பாடு .நீ பாடியே ஆகவேண்டும்.நீ பாடாவிட்டால் இந்தியனில்லை.உனக்கு தேசப்பற்று இல்லை.என்று நிர்பந்திக்கும்போதுதான் நாங்கள் ஆத்திரமடையிகிறோம்.
  உண்மையில் நல்லிணக்கம் விரும்பும் ஒருவர் திரு ஜெயசீலன்கணபதி அவர்கள் சொன்னதைப்போல “அவர்களின் கொள்கை கோட்பாடு அப்படி.அவர்களை நாம் நிர்பந்திக்க கூடாது.இந்த ஒரு பாடலை பாடுவதில்தான் தேசப்பற்று அடங்கி இருக்கிறதா?”என்று ஆர் எஸ் எஸ் காரர்களாகிய நீங்கள் சொன்னால் அது பெரிய அளவில் கவனம் பெரும்.உங்கள் மேல் அவதூறு சொல்லும் அனைவரும் அடங்கி போவார்கள்.தேசப்பற்றுள்ள இயக்கம் இதைத்தானே செய்யும்.நீங்கள் செய்யும் சேவையை நீங்களே சொல்லிக்காட்ட வேண்டிய அவசியம் வராதே.ஜெயசீலன்கணபதி,தாயுமானவன் போன்ற நடுநிலையான ,உங்க சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்களுக்கே ஆர் எஸ் எஸ் மேல் ஏன் அவநம்பிக்கை வருகிறது.?புயலும் ,பூகம்பமும் வந்தால்தான் சேவை செய்ய வேண்டுமா?மனித மனங்களில் பூகம்பமும் பெரும்விரிசலும் வராமல் பாருங்கள்.மனங்களில் விரிசலை ஏற்படுத்தி மண்ணின் விரிசலுக்கு மருந்து போட்டால் அது நிற்கவே நிற்காது.

 44. எது தேசம் ,அது என் தேசமா உண்மையிலே? தாங்கள் யார்?போடும் வேடம் ,உன்மைதான?என்று ஆயிரம் சந்தேகங்களோடு ,சொல்லியதை மீறி எஏதவது செய்தால் உதைப்பார்களே,என்ற அச்சத்திலே ,அதை உயர்ந்த ஒற்றுமை என்ற பாசாங்கில் வாழும் ,உளவியலில் தேசமேயில்லாத ஒரு கூட்டத்திடம் தேச பக்தி ,தேசிய கொடி,என்றெல்லாம் பாடம் எடுக்கும் சில பயித்தியக்காரர்களைதான் முதலில் காய்ந்து கண்டிக்க வேண்டும் .அவர்களும் என்னத்தான் செய்வார்கள் ?
  பாவம்!ஆரம்பத்தில் சொல்லிக்கொடுத்ததை ,அதாவது இனிப்பு தடவிய’ சிலதுகள் ,’செப்பப்படும் .
  வற்புறுத்தினால் உண்மையும் இரகசியங்களும் ,வக்கிர வடிவங்களும் தலை காட்டத்தானே செய்யும்!அடிக்கடி கேட்டு துளைத்தால் பேதைகள் என்னத்தான் செய்வார்கள் பாவம் ?விட்டுவிடுங்கள் .

 45. நாடு விடுதலை அடைந்தது 1947ல் – அதிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகத்தில் ஏன் தேசிய கோடி ஏற்றப்படவில்லை என்பதற்கான காரணத்தை கூற முடியுமா?

  இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கோடி 2002 ஆம் ஆண்டுக்கு முன்பும் ஏற்றப்பட்டது என்றால் அதை தெளிவுபடுத்தவும்.

 46. //ஜெயசீலன்கணபதி,தாயுமானவன் போன்ற நடுநிலையான ,உங்க சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்களுக்கே ஆர் எஸ் எஸ் மேல் ஏன் அவநம்பிக்கை வருகிறது.?புயலும் ,பூகம்பமும் வந்தால்தான் சேவை செய்ய வேண்டுமா?மனித மனங்களில் பூகம்பமும் பெரும்விரிசலும் வராமல் பாருங்கள்.மனங்களில் விரிசலை ஏற்படுத்தி மண்ணின் விரிசலுக்கு மருந்து போட்டால் அது நிற்கவே நிற்காது.//

  இதை அஹமதியாக்கள் விஷயத்தில் நீங்கள் அமுல் படுத்திவிட்டு அப்புறம் வந்து சொல்லுங்கள்.

 47. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  \\ ஜெயசீலன்கணபதி,தாயுமானவன் போன்ற நடுநிலையான ,உங்க சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்களுக்கே ஆர் எஸ் எஸ் மேல் ஏன் அவநம்பிக்கை வருகிறது.? \\

  அது என்ன உங்க சமூஹம் எங்க சமூஹம்.

  நீங்கள் நடுநிலை என்று சான்றிதழ் கொடுத்து விட்டால் சாரமில்லாக் கருத்துக்கள் சொல்பவர்கள் நடுநிலை ஆகிவிடும் இல்லை. இங்கு வாசிப்பவர்கள் அனைவரும் மூடர்கள். அப்படித்தானே நினைக்கிறீர்கள்.

  உங்கள் கருத்துத் திரிபுகளை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி உங்களது இஸ்லாமிய வெறுப்புமிழும் தளங்களின் தேச விரோதச் செயல்பாடுகளைப் பற்றி நீங்கள் கள்ள மௌனம் சாதித்துத் தானே ஆக வேண்டும். இந்த வெறுப்புமிழும் இஸ்லாமிய தளங்கள் நிச்சயமாக எங்கள் சமூஹம் இல்லை. இந்த இழிவுச் சிந்தனையாளர்களைப் பற்றி கள்ள மௌனம் சாதிக்கும் நீங்கள் உங்கள் சமூஹத்தினராகவே கொண்டு அனைத்து தேசியக் குறியீடுகளையும் வாய்க்கு வந்த படி இகழலாம். வெறுப்புமிழலாம்.

  முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சின் அத்யக்ஷராகிய ஜெனாப் மொஹம்மத் அஃப்ஸல் சாஹேப் அவர்கள் துவங்கி ஹிந்து முஸ்லீம் இணக்கத்துக்குப் பாடுபடும் அனைத்து இஸ்லாமிய சஹோதரர்களும் எங்க சமூஹம் தான்.

  தமிழகத்தின் குணங்குடி மஸ்தான் சாஹிபு, சதக்கத்துல்லாஹ் அப்பா, தமிழகமும் முழு ஹிந்துஸ்தானமும் பெருமை கொள்ளும் இசைப்பரம்பரையின் சொந்தக்காரர்களான ஷேக் சின்னமௌலானா சாஹேப், நாகூர் தர்க்கா ஷெரீஃப்பின் பெருமை வாய்ந்த இசைப்பரம்பரை இவை யாவும் தேசத்தின் மண்வாசம் வீசும் எங்க சமூஹத்தைச் சார்ந்தவர்கள் தான்.

  சர்வ சமய சமரச கீர்த்தனைகளை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அளித்த மயூரம் ஸ்ரீ சாமுவேல் வேதநாயகம் பிள்ளையவர்கள் துவங்கி இன்றைய திகதியில் தமிழகப் பாரம்பர்யம் போற்றும் மதிப்பிற்குரிய ஸ்ரீமான் ஜோ டி குருஸ் ஐயா அவர்கள் ஏழை க்றைஸ்தவ கௌன்ஸிலின் அத்யக்ஷகரான ஸ்ரீமான் ஃப்ரான்ஸிஸ் போன்ற ஹிந்து க்றைஸ்தவ சமூஹ நல்லிணக்கம் பேண ஹிந்துத்வ இயக்கங்களுடன் பாடுபடும் அனைத்து க்றைஸ்தவ சஹோதரர்களும் எங்க சமூஹம் தான்.

  தமிழகத்திலுள்ள சைவம், வைஷ்ணவம், ஜைனம் இவற்றை அழித்தொழித்து தமிழகத்தை அராபிய நகலாக்க விழையும் பயங்கரவாத வஹாபிகளைக் கூட எங்கள் வழிதவறிய சஹோதரர்களாகவே பாவிக்கிறோம். அவர்கள் தங்களை எங்கள் சமூஹத்தவராக நினைக்கவில்லை என்றால் அது அவர்கள் மனோபாவம். அதே போன்றே தமிழகத்திலுள்ள மற்றைய சமயங்கள் தமிழகப் பாரம்பர்யங்கள் இவற்றை சுவடின்றி அழித்தொழித்து தமிழர் அனைவரையும் ஒட்டு மொத்தமாக க்றைஸ்தவராக மாற்ற விழையும் அவலத்தில் பரங்கிப்பணப்பிச்சையில் செயல்படும் க்றைஸ்தவ இவாஞ்சலிக்கல் இயக்கங்கள்.

  \\ வந்தேமாதரம் பாடலை நீங்கள் மட்டும் பாடினால் அதை நிந்தனை செய்வது எனக்கு தகாது.ஆனால் நீ பாடு .நீ பாடியே ஆகவேண்டும்.நீ பாடாவிட்டால் இந்தியனில்லை.உனக்கு தேசப்பற்று இல்லை.என்று நிர்பந்திக்கும்போதுதான் நாங்கள் ஆத்திரமடையிகிறோம். \\

  அப்படியா ஜெனாப்-ஏ-அலி.

  ஹிந்து முஸ்லீம் இணக்கத்தை விரும்பும் எமது இஸ்லாமிய சஹோதரர்கள் வந்தே மாதரம் பாடலின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். உர்தூவில் மா தஸ்லிமத் என அதை மொழியாக்கமும் செய்திருக்கிறார்கள். ஜாமியத் உலேமா இ ஹிந்த் ஸ்தாபனம் வந்தேமாதரம் பாடலுக்கு எதிராக விதித்த ஃபத்வாவை கண்டனம் செய்திருக்கிறார்கள். வந்தே மாதரம் பாடலை இகழ்பவர்களை இஸ்லாத்துக்கும் தேசத்துக்கும் விரோதிகள் என சுட்டியுள்ளனர் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சினைச் சார்ந்த எமது இஸ்லாமிய சஹோதரர்கள்.

  https://archive.indianexpress.com/news/muslim-organisation-slams-vande-mataram-fatwa/539079/

  \\ ஜெயசீலன்கணபதி,தாயுமானவன் போன்ற நடுநிலையான \\

  வேலிக்கு ஓணான் சாட்சி

  அன்பர் ஜெ க சொல்லியுள்ளது

  \\ நான் எங்கே விவாதத்தை மடைமாற்றம் செய்தேன்? ஆர்.எஸ்.எஸ். தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்று ஒருவர் தவறாக விவாதத்தில் பதிவு செய்தால் நீங்கள் சரியான தரவுகளுடன் நிரூபியுங்கள். ஆனால் வெங்கடேசன் அதோடு நிற்கவில்லை. அவர்கள் ஏன் வந்தேமாதரம் பாடவில்லை என்கிறார். அதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். \\

  ஓரமதான பொய்யுரைபரப்புவதில் ஒன்றாய் இணைந்துள்ள நீங்களோ, ஜெ க வோ, ஸ்ரீ தாயுமானவன் அவர்களோ மதிப்பிற்குரிய ஸ்ரீ ம வெங்கடேசன் அவர்களுடைய வ்யாசத்தில் வந்தேமாதரம் பாடல் பற்றி எங்கு என்ன சொல்லியுள்ளார் என்று இந்த வ்யாசத்தின் வாசகங்களை எடுத்துக்காட்டுங்கள். அப்புறம் நட்டு நடு செண்டர் நிலையைப் பற்றிப் பேசலாம்.

  கூசாது வ்யாசத்தின் கருப்பொருளை மடைமாற்றம் செய்து வழிதவறிய தேச விரோத இஸ்லாமியரின் இழிவுச் செயல்களை இந்தக் குழு என்ன தான் மறைக்க விழைந்தாலும் பொது தளத்தில் அது எடுபடாது. இந்தக் குழு முதலில்

  1. மீரான் சாஹிப் வக்காலத்து வாங்கிய இஸ்லாமியர் ஆர் எஸ் எஸ் தேசியக்கொடி ஏற்றவில்லை என்று பொதுமன்றில் புளுகியது தப்பு என்று சொல்லட்டும். இது சம்பந்தமாகக் கள்ள மௌனம் சாதிக்கும் இந்தக் குழு இந்த இஸ்லாமியர் பொது மன்றில் கூறியது புளுகு என்று சொல்லட்டும் முதலில்.
  2. ஸ்ரீ ம.வெ. அவரது வ்யாசத்தில் எங்கு ***வந்தே மாதரம்*** பாடல் பாடுவதைப் பற்றி ப்ரஸ்தாபித்தார் என்று குறிப்பாக வ்யாசத்தின் வாசகங்களை எடுத்தாண்டு சொல்லட்டும். இல்லாவிட்டால் இவர்களது வாதம் மடைமாற்றத்தை முனைந்து செய்ய விழைந்த குதர்க்க வாதம் என்று ஒப்புக்கொள்ளட்டும்.
  3. மீரான் சாஹேப் அவர்கள் தேசிய கீதம் பாடுவது ஹராம் என்று இஸ்லாமியர் சொல்வதாகப் பகிருவது பச்சைப்பொய் என்று சொல்லியுள்ளார். பற்பல இஸ்லாமிய குழுக்கள் தேசிய கீதத்தை இழிவு செய்தும் அதைப் பற்றி துஷ்ப்ரசாரம் செய்தும் அதை எழுதிய குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் பற்றி பொய் சொல்லியதையும் இந்தக் குழு வெட்கமில்லாமல் மறைக்க விழைகிறது. அதற்காகவே விவாதத்தை மடைமாற்றம் செய்கிறது.

  இந்த மூன்று விஷயங்களும் இந்த வ்யாசத்தின் கருப்பொருள் சார்ந்தவை. இது பற்றி முதலில் மீரான் சாஹிப் அவர்கள் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து வைக்கட்டும். தேச விரோதத்தை முனைந்து பரப்புரை செய்யும் இஸ்லாமியர்களிடம் பயந்தாலோ அல்லது அந்த தேச விரோதப் பொய்யுரைகளை ஏற்றாலோ அதைப் பற்றி அவர் தன்னுடைய தெளிவான கருத்துக்களை வைப்பதிலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆட விழையலாம்.

  குதா ஹாஃபீஸ்.

 48. அன்பின் ஸ்ரீ தாயுமானவன் நீங்கள் இழித்துப் பழிக்க வேண்டிய ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்களே.

  சங்கத்தினர் தில்லைச்சிற்றம்பலத்தில் செய்த உழவாரப்பணியை வாயார தாங்கள் இழித்துப்பழித்து கேமரா ஸ்டண்ட் என்று சாடி விட்டு மங்களம் பாடி விடுங்கள்.

  உங்கள் மனதில் ஆர் எஸ் எஸ் மீது காழ்ப்பு இருக்கும் போது ……………. அவர்கள் ஒரு திண்ணைப்பள்ளியாவது கட்டியுள்ளார்களா என்று கேட்டு……………… 50000 சொச்சம் பள்ளிகள் (ஏகல் வித்யாலயா மட்டிலும்) …………. வனவாசிகள் வசிக்கும் பகுதிகளில் கூட இருக்கு எனும் போதிலும் ………………. எங்க க்ருஹத்தருகில் இல்லையே……………. நான் தேடிய இடங்களில் இல்லையே………..அங்கு கதவு இல்லையே………… ஜன்னல் இல்லையே………… ஜன்னல் உள்ளது என்றால்………… கொக்கி இல்லையே……… என்று நிச்சயம் நீங்கள் சொல்லத் தான் சொல்லுவீர்கள். 50000 போதாது. ஐந்து லக்ஷமாவது வேண்டும் என்று புரிந்து கொண்டு நாங்கள் இதை இன்னமும் விஸ்தரிப்போம்.

  ஜாதி இணக்கத்துக்கு சங்கத்தின் பங்களிப்பு என்ன என்று பகிர்ந்த பின்னரும்…………. தாங்கள் மூடிய மனத்தினராக இருந்தால்…………. வாயில் நுரை தள்ள ஓங்கி முழங்கவே செய்யலாம். ஆனால் சங்கத்தின் செயல்பாடுகள் எப்படி? அதன் பலன் கள் யாவை என்பது நிச்சயமாக உத்தரத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்கள் மனம் மூடிவிட்டால் கண்களும் கூட மூடிக்கொண்டு விடும். மிக வெளிப்படையாக சங்கத்தினரிடையே ஜாதிப் பிணக்குகள் இல்லாமல் அனைத்து ஜாதியனரும் ஒன்றிணைந்து ஜாதிப்பூசல்களுக்கு பல இடங்களில் சமாப்தி செய்து இணக்கப்பணியாற்றி வருவது……………….. உங்களிடம் பகிர்ந்த பின்னரும்………… விஷயம் தெரிந்த பின்னரும் …………….. பாடிய பாட்டையே………… திரும்பப் பாடுவது………உங்களக்கு கால விரயத்தை உண்டு செய்யும். க்ஷமிக்கவும் அந்த நேரத்தில் நீங்கள் பல தேவாரப்பனுவல்களை அனுசந்தானம் செய்யலாம்.

  உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. பரங்கிய மற்றும் அராபிய பயங்கரவாத ஆப்ரஹாமியத்துக்கு விலைபோய் விட்ட………… தனித்தமிழ் தேசியம் என்ற………….. தமிழ்நாட்டு தமிழ்ப்பாரம்பர்யம் தொலைத்து விட்ட தமிழகத்து தனித்தமிழ்த் தேசியம்…………. மும்மலத்தையடுத்து நாலாவது மலமாக தங்கள் மீது ஆரோஹணித்துள்ளதே.

  சைவ வைஷ்ணவ க்றைஸ்தவ இஸ்லாமியர்………….. ஈழத்தில் தங்களது தனித்த தமிழ்ப்பாரம்பர்யத்தை தொலைக்கவில்லை. அப்படி யாராவது தப்பித் தவறி தொலைத்தாலும் அங்குள்ள தமிழ்ப்பற்றாளர்களுக்கு அதில் அக்கறை உள்ளது. அதை சாடுவார்கள்.

  தங்களைப் போல தமிழகத்தை அராபிய நகலாக்க விழையும் வஹாபிய அன்பர்களுக்கு ஒத்து ஊத மாட்டார்கள். தமிழகத்தை இவாஞ்சலிக்கல் அக்ரமம் செய்ய பரங்கிப்பணத்தில் கூத்தாடும் தேச விரோத சக்திகளுக்கு ஒத்து ஊத மாட்டார்கள்.

  தமிழகப் பாரம்பர்ய மணத்துடன் ஒப்புமையுள்ள இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவம் போற்றும் அன்பர்கள் தமிழக ஹிந்துத்வ இயக்கங்களுடன் இயன்ற வரை இணைந்தே தேச ஒற்றுமைக்கும் தேச முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறார்கள்

  நிச்சயமாகத் தமிழகத்தின் தனித்த இஸ்லாமியப் பாரம்பர்யத்தின் சான்றோர்களான குணங்குடி மஸ்தான் சாஹிபு, சதக்கதுல்லாஹ் அப்பா, பெருமை மிக்க நாகூர் இசைப்பரம்பரை, தமிழகத்தின் பாரம்பர்ய மணம் வீசும் இஸ்லாமியரின் தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகள்…………… இவையனைத்தின் மீதும் எங்களுக்கு……………. சங்கத்தினருக்கு மதிப்பு உண்டு………… தமிழ்ப்பாரம்பர்ய மணம் வீசும் தமிழக இஸ்லாமிய மரபை அதன் குறியீடுகளை வாய்க்கு வந்த படி ஏசுபவர்கள் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களும் ஜெனாப் மீரான் சாஹேப் அவர்களும். வைகை அனீஸ் போன்ற அன்பர்கள் ………….தமிழ்ப்பாரம்பர்ய தர்க்கா ஷெரீஃப் இஸ்லாமிய வழிபாடுகளைப் பேணுபவர்கள் …………..அராபியப் பணத்தில் தமிழகத்தில் புழங்கும் பயங்கரவாத வஹாபியத்தை கண்டனம் செய்வர். அதே போல தமிழ்மணம் தொலைக்காத ஸூஃபி வழிபாடுகளில் நாட்டம் உள்ள எச் ஜி ரஸூல் சாஹேப் போன்றோரை வஹாபியர்கள் இகழ்ந்து மகிழ்வார்கள்.

  ஈழத்தமிழர்கள் தமிழர்களை அராபிய நகலாக மாற்றி அவர்களிடம் இருக்கும் தமிழ்ப்பண்பாட்டினை அடிச்சுவடின்றி அழித்தொழிக்கும் அவலத்தினை எந்தத் தயக்கமும் இல்லாமல் கண்டனம் செய்ததை இதே தளத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து நீங்கள் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களைக் களவு செய்தல், குளங்களை தூர்த்துவிட்டு பின் அபகரித்தல், கோவில்களை புனருத்தாரணம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் மணல்வீச்சடித்து அதில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் இவற்றைப் பாழாக்குதல்………………இவை பற்பல இஸ்லாமியர்கள் மற்றும் க்றைஸ்தவர்கள் வாயிலாக நடைபெறுகிறது. அவை இந்த தளத்தில் விஸ்தாரமாகப் பகிரப்பட்டுள்ளன. இவையெல்லாம் உங்கள் கண்ணில் படவே படாது. இதைப் பற்றி மூச்சு கூட விடமாட்டீர்கள்.

  \\ சுவனப்ரியன் கூறியதை விடுங்கள் இது நாள் வரையில் எந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராவது சாதிக்கு எதிராக மேடை ஏறி ஒரு வார்த்தை பேசியதுண்டா, \\

  முதலில் திறந்த மனத்துடன் பகிரப்பட்ட கருத்துக்களை படிக்க முனையவாவது செய்யுங்கள். வெட்டியாக வாதம் செய்வதில் யாருக்கும் பயனில்லை. இது சம்பந்தமாக குருஜி கோல்வல்கர் அவர்களது கருத்து மட்டிலுமல்ல செயல்பாடு என்ன? அது அளித்த பயன் என்ன என்று என்னால் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு அ.நீ மற்றும் ம.வெ இவர்கள் எல்லாம் ஜாதி முறைக்கு எதிராக எத்தனை எத்தனை வ்யாசங்கள் எழுதியுள்ளனர். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு விட்டால் இவர்கள் எழுதியுள்ளது நாங்கள் எழுதியுள்ளது ஏதும் உங்கள் கண்ணுக்கு தென்படாது தென்படவே படாது.தமிழகத்தை அழித்தொழிக்க விழையும் வஹாபியமே மெய் என்றால் நல்லது ஏதுமே கண்ணில் படாது.

  \\ தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் அண்மையில் நான் பயணம் செய்து இருக்கிறேன். \\

  உங்கள் முகத்தை பார்த்தறியாத அன்பர்கள் கூட நீங்கள் சொல்லும் விஷயங்களை உண்மை என்று நம்ப வேண்டும். ஆனால் ஆயிரக்கணக்கான பள்ளிகளை தேசமளாவி நடத்துவது பச்சைப்பொய்…………. கேமரா ஸ்டண்ட் என்று நீங்கள் வாதிடுவது …………… என்னென்று சொல்வது…………..வ்யர்த்தமான வாதம்.
  உங்கள் அக்கறைகளை நிச்சயமாக மதிக்கிறேன். ஆனால் அடுத்தவர்கள் செய்யும் பணிகளை இகழ்வது தரம் தாழ்ந்த செயற்பாடு என்று அறியுங்கள். அதில் குறைகள் கண்டால் நிச்சயம் சொல்லுங்கள். ஆனால் அடுத்தவர் செய்யும் சேவை வெறும் கேமரா ஸ்டண்ட் என்று நீங்கள் சொன்னால் உங்களது பங்களிப்பை அடுத்தவர்கள் மெய்யானது இல்லை என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும்?

  பயங்கரவாத ஆப்ரஹாமியத்திலிருந்து தங்களை ஆடல்வல்லான் விலக்கி வைக்கட்டும்.

  திருச்சிற்றம்பலம்.

 49. அறிவியலில் மனிதன் எங்கெங்கோ சென்று விட்டான். ஆனால் நமது நாட்டில் சக மனிதன் மனிதனாக வாழ நமது சமூகம் சம்மதிப்பதில்லை. என்று ஒழியும் இந்த வர்ணாசிரம வெறி? = நிச்சயம் கண்டிக்க வேண்டிய ஒன்றே. அதேபோல் சுவனப் பிரியன் நீங்கள் – கீழே உள்ள செய்தியையும் கண்டிப்பீர்கள?

  https://www.bbc.com/news/world-asia-32717321

 50. கிருஷ்ணகுமார் அவர்களே என் உணர்வு புரிகிறதா அல்லது உங்கள் இயக்கத்தின் மேல் உள்ள பற்றால் அதன் கொள்கையை நிலை நாட்ட துடிக்கிறீர்களா?வந்தமாத்ரம் பாடலை முசல்மான்கள் பாடுகிறார்கள் என்று ஆதாரம் காட்டுகிறீர்கள்.பாடட்டும்.பாடுபவர்களை பற்றி என்ன பிரச்சனை.சமீபத்தில் a r ரஹ்மான் என்ற ஒரு இசைஅமைப்பாளர் அதற்கு இசை அமைத்து இன்னும் பிரபல படுத்தினார்.அதனால் எங்களுக்கென்ன.எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.யாரையும் கட்டாயபடுத்தாதீர்கள் என்றுதானே கூறுகிறோம்.எத்தனையோ இந்து சகோதரர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.அதனால் நீயும் சாப்பிடு என்று அதை சாப்பிடாத ஒரு இந்து சகோதரரை கட்டாய படுத்தலாமா?அது தகுமா?ஒரு கொள்கையை ஏற்று அதை விளங்கி மிகத்தீவிரமாய் கடைபிடிக்க கூடிய மக்கள் ஒரு சாரார் இருந்தால் அந்த அளவிற்கு தீவிரம் காட்டாத மக்களும் இன்னொரு சாரார் இருப்பார்.ஒரு முஸ்லிமாக பிறந்து இஸ்லாத்தின் அடிப்படையே அறியாத I S I S காட்டுமிராண்டிகளை போல உள்ளவர்களும் முஸ்லிம் என்ற போர்வையில் உலாவருகிறார்கள்.அவர்கள் தொழுதாலும் குரான் வசனத்தையே உச்சரித்தாலும் அவர்கள் இஸ்லாமிய கோட்பாட்டை ஏற்றவர்கள்.முஸ்லிம்கள் என்று சொல்ல முடியுமா?இந்திய திரை உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் கான் நடிகர்களை இஸ்லாமிய நெறிப்படி வாழும் உண்மை முஸ்லிகள் என நம்பி அவர்களின் டாம்பீகமான ஆடம்பரமான அழிச்சாட்டியமான வாழ்க்கைதான் இஸ்லாமிய வாழ்கை என்று சொல்வீர்களா?புரியுங்கள்.உணர்வுகளை புரியுங்கள்.நாங்களும் இந்த நாட்டின் அங்கங்கள்.இதன் வளத்திலும் நலத்திலும் பங்குள்ளவர்கள்.அதே வேளை கொள்கையில் கொஞ்சமும் சறுக்காதவர்கள்.

 51. காஞ்சிப் பெரியவரை நீதிபதி மு.மு. இஸ்மாயில் தரிசிக்க ( பார்க்க ) வந்தார். இருவரும் பேசிய பிறகு, நீதிபதி. மு.மு. இஸ்மாயில் பெரியவரை வணங்க முற்ப்பட்டார்.பெரியவர் உடனே, நீங்கள் ஒரு இஸ்லாமியர். இஸ்லாமியர் இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று தடுத்து விட்டார். நாம் தேவை இல்லாமல் இதை வைத்து அவர்களை சந்தேகப் படக்கூடாது, முதலில் ஹிந்துக்கள் அவர்கள் கடமையை ஒழுங்காகச் செய்யட்டும். அப்புறம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லலாம். same to others.

  https://mahaperiyavaa.wordpress.com/2014/10/14/justice-ismails-kamba-ramayana-discussion/

 52. மகளை மதம் மாற்றினால் ,சும்மா இருக்கும் பேராசிரிய மாமனாரும் ,(எட்டாவது படிச்சவனெல்லாம் பேராசிரியராகலாம் என்றிருந்த காலம் அது!)இலவச இணைப்பாக மதம் மாறி சும்மா இருப்பதற்கு சொரிந்து கொண்டாவது இருப்போம் என்று காஸ்மீரையும் கூட்டிக்கொடுக்க கருத்தரங்கம் நடத்துகிறான் .இவர்களிடம் சம்பந்தம் வைத்துக்கொண்டு சாதியை ஒழிக்க அராபியா வில் இருந்து அலையலையாய் ஒட்டகம் மீதேறி வந்து கொண்டுஇருக்கிரார்கள்!இங்கே உள்ள தரகர்கள் ,தலைவனையே மதம் மாற்றி ஐந்து வேளை மண்டி இட வைக்கிற ‘வாயா ஜாலம் ‘காட்டுபவர்கள் .அந்த மாயா ஜாலத்திற்கு மயங்கி அங்கே சாதிஇல்லை ,பேதமில்லை ,என்று சில மண்டூக தலைவர்கள் பேசுகிறார்கள்!

 53. //அதேபோல் சுவனப் பிரியன் நீங்கள் – கீழே உள்ள செய்தியையும் கண்டிப்பீர்கள?//

  அவர்கள் மனிதர்களே அல்ல… மனித உருவில் உலா வரும் மிருகங்கள். தீவிரவாதத்தை கண்டித்து பல பதிவுகள் எழுதியுள்ளேன்.

 54. தாயுமானவன்,ஜெயசீலன்கணபதி,கிரிஷ்,ரமேஷ்ஸ்ரீனிவாசன் போன்ற சகோதரர்களுக்கு நன்றி.நல்லிணக்கத்தையும்,பிறரின் உணர்வுகளையும் மதிக்கிற நம்மைபோன்றவர்களின் கூட்டு கலவையே இந்தியா. என் நேர் எதிர்வீட்டில் ஒரு முதலியார் குடும்பம் வசிக்கிறது.எங்கள் வீட்டு பிள்ளைகள் அங்கும் அங்குள்ள பிள்ளைகள் இங்குமாகதான் ஒற்றுமையோடு இருக்கிறோம்.நாங்கள் பிரியாணி சமைத்தால் “இன்று நீங்கள் உண்பீர்களா “என்று கேட்டுதான் கொடுப்போம்.ஏனெனில் சில கிழமைகளில்,சில நாட்களில் அவர்கள் உண்ண மாட்டார்கள்.அதேபோல் அங்கிருந்தும் வரும்.தீபாவளி ஆயுதபூஜை போன்ற நாட்களில் பூஜைசெய்யாதது என்று சொல்லி தருவார்கள்.இவையெல்லாம் நம் இயல்பிலேயே கலந்த பண்புகள்.இவைகளிலேயே இந்தியா வாழுகிறது.இன்ஷா அல்லாஹ் வாழும்.அந்த நம்பிக்கையோடு முடிக்கிறேன்.

 55. RSS ச்ஹட்டிச்கர், ஓடிஷா போன்ற பின் தங்கிய மாநிலங்களில், நம் ஊர் விவேகானந்த பள்ளிகளைப் போல் பல் பள்ளிகளை நடத்துகிறார்கள். நாம் பேச வந்தது அது பற்றி இல்லை. நாம் இங்கு பேச வந்தது, இஸ்லாமியர்கள் சில உருவகங்களை வணங்க வேண்டுமா என்பதுதான். இஸ்லாமியர் கட்டிடங்களில் கூட உருவங்களைப் பயன்படுத்துவது கிடையாது. இறைவனை உருவமற்றவனாகவே வணங்குகிறார்கள். அவர்கள் மதப் பெரியவர்களையும் உருவ வழிப்பாடு செய்வது கிடையாது. அதை நாம் மதிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீ அதைப் பாட வேண்டும். இதை வணங்க வேண்டும் என்று கூறுவது தவறு.அதே போல் அவர்களும் அரசுப் பதவி வஹிக்கும்போது கொடி வணக்கம் செய்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு அவர்களின் பொது மக்களை எப்படி மைய நீரோட்டத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதையே விவாதிக்க வேண்டும். இஸ்லாமிய சகோதர்களும் எங்கள் மதத்தைப் பற்றி கமெண்ட் சொல்லுவதை நிறுத்தவேண்டும், எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மதம் விவாதத்தை, மாற்றங்களை அனுமதிக்கிறது. சிவ பெருமானையே பார்த்து, நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூற முடியும். அந்த சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது.

 56. ஸ்ரீ ரமேஷ் ஸ்ரீநிவாஸன், ஜெனாப் மீரான் சாஹேப்

  \\\\ நாம் இங்கு பேச வந்தது, இஸ்லாமியர்கள் சில உருவகங்களை வணங்க வேண்டுமா என்பதுதான். \\\

  இந்த வ்யாசத்தின் தலைப்பை உங்களுக்கு மிகத் தெளிவாக நினைவுறுத்துகிறேன்.

  தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்

  நாம் இங்கு பேச வந்தது ஒரு இஸ்லாமிய அன்பர் டிவி நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் காரர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று புளுகியதை …………….. அது உண்மையல்ல அப்பட்டமான புளுகு…………….என்பதை அறியுமுகமாகத் தான்.

  அதற்குத் தான் ஸ்ரீ ம.வெங்கடேசன் தனது அத்தனை வேலைகளுக்கிடையில் ……………. இதற்கான தரவுகளை நண்பர்களிடமிருந்து திரட்டி…………. இது உண்மையல்ல அப்பட்டமான பொய்………….. என்பதைத் தெளிவாக இந்த வ்யாசத்தில் விளக்கியிருக்கிறார்.

  இதை ஒட்டி மிகப்பல இஸ்லாமிய சிந்தனை தளங்கள் தேசிய கீதம் பாடுவது ஹராம் என்ற படிக்கு கருத்துப் பகிர்ந்ததை சுட்டிகள் மூலம் விளக்கியுள்ளார்.

  இப்படி ஒரு தேசிய இயக்கத்தை இழிவு செய்யும் இஸ்லாமியரோ ஆனால் அவர்களது பல மதறஸாக்களில் ………………. ஹிந்துக்கள் கட்டும் வரிப்பணத்தில் மானியம் வாங்கியும்………… அதுவும் ஸ்பெஷலாக மானியம் வாங்கியும் கூட தேசியக்கொடி ஏற்றுவதில்லை. இந்த லக்ஷணத்தில் தேசிய இயக்கமான ஆர் எஸ் எஸ் பற்றி பொய்யான விமர்சனம் வேறு.

  மேலதிகமாக தேசியகீதத்தை நமக்களித்த குருதேவ் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள் இந்தப்பாடலை இங்கிலாந்து மன்னருக்கு ஸ்துதி செய்யும் விதமாகப் பாடியிருக்கிறார் என்று அவரையும் இஸ்லாமிய சிந்தனை தளம் இழிவு செய்திருக்கிறது.

  ஸ்ரீ ம.வெங்கடேசன் ****வந்தே மாதரம்*** பாடலைப் பற்றி எங்கு பதிவு செய்திருக்கிறார் என்று நீங்களாவது வ்யாசத்தின் குறிப்பிட்ட வாசகத்தை சுட்டி விளக்க முடியுமா?

  அவர் இந்த வ்யாசத்தில் எந்த ஒரு வரியிலும் ****வந்தே மாதரம்*** பாடலைப் பற்றி பதிவே செய்யாத போது ………………… ஆர் எஸ் எஸ்ஸை இழிவு செய்வதில் முனைப்புள்ளோர்…………. இந்த வ்யாசத்தில் சுட்டப்பட்ட இஸ்லாமிய பதர்கள் சிலருடைய ( மிகக் குறிப்பாக குறித்துக்கொள்ளவும் ………… ஒட்டு மொத்த இஸ்லாமியரை நான் குறை சொல்லவில்லை) இழி செயல்களை கும்பல் போட்டு கபள சோற்றில் முழுப்பூசணிக்காயாக மறைக்கும் இழிவைச் செய்கிறார்கள்.

  ஆர் எஸ் எஸ் செய்து வரும் பணிகளை செய்யாததாக இழிவு செய்தல், வந்தே மாதரம் பாடலைப் பாட வற்புறுத்துகிறார்கள் என்று ***ஐயோ அடிக்கிறாய்ங்க*** பாணியில் ஓலமிடுதல்……….. இத்யாதி இத்யாதி எல்லாமே……………… கடைந்தெடுத்த அயோக்யத்தனம் செய்து வரும் தரம் தாழ்ந்த சில இஸ்லாமியப் பதர்களின் இழிசெயல்களை மறைக்கும் விதமாகவே…………..

  இந்த வ்யாசத்தின் மிக முக்யமான நோக்கம்……………. டிவி நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமிய அன்பர் ஆர் எஸ் எஸ்ஸில் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று சொன்ன கருத்து அப்பட்டமான பொய் என்று நிறுவுவதே. அதற்கு சான்றுகள் தரவுகளுடன் அளிக்கப்பட்டுள்ளன. அதையடுத்து மதறஸாக்கள் பலவற்றில் மானியம் பெற்றும் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று நிறுவுவதே…………

  அது சரியாக நிறுவப்பட்டுள்ளது.

 57. ஜெனாப் மீரான் சாஹேப் ஸ்ரீ ரமேஷ் ஸ்ரீநிவாஸன்

  வந்தே மாதரம் பாடல் பற்றி இங்கு உத்தரங்களில் ப்ரஸ்தாபம் …………. இஸ்லாமிய அன்பர்கள் பலரது தேச விரோத இழிசெயல்களை மறைக்கு முகமாக …………இஸ்லாமிய அன்பர்களாலும் போலி மதசார்பின்மையை முன்னிறுத்தும் அன்பர்களாலும்…………… வ்யாசத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களில் விவாதம் நடக்கவொண்ணாது மடைமாற்றம் செய்ய நுழைக்கப்பட்டுள்ளது.

  முக்கியமாகக் குறித்துக்கொள்ளுங்கள் இங்கு கருத்துப்பதிந்துள்ள நான் உட்பட எந்த ஒரு வாசகரும் வந்தே மாதரம் பாடல் பாடாதவர் தேச விரோதி என்று கருத்துப்பகிரவில்லை. அப்படி ஹிந்துக்களோ அல்லது ஹிந்து இயக்கங்களோ கருத்துப் பகிர்ந்துள்ளார்களா என்று எனக்குத் தெரியாது. மிகக் குறிப்பாக நான் உத்தரமளிக்கையில் ஜெனாப் மீரான் சாஹேப் அவர்களிடம் வந்தே மாதரம் பாடலைப் பாட விழையாதது தங்கள் இஷ்டம் என்ற அளவுக்கு கருத்துப் பகிர்ந்துள்ளேன். ஆனால் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற ஸ்தாபனத்தைச் சார்ந்த பல இஸ்லாமிய சான்றோர்கள் கருத்தியல் ரீதியாக அப்படி ஒரு கருத்தை பகிர்ந்துள்ளனர்.

  ஸ்ரீ ம வெங்கடேசன் அவர்கள் இந்தப் பாடலைப் பற்றி ஒரு வாசகம் கூட எழுதவில்லை.

  மத நல்லிணக்கத்தின் இலக்கணமாக விளங்கும் பல இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ அன்பர்கள் வெளிப்படையாக விதந்தோதப்பட்டுள்ளார்கள் என் உத்தரங்களில்.

  அப்படியிருக்கையில் ஹிந்துக்கள் எல்லோரும் மத நல்லிணக்கத்துக்கு விரோதமானவர்கள் போலும் ஹிந்து இயக்கங்கள் எல்லாமே மத நல்லிணக்கத்துக்கு விரோதமானவை போலும் கருத்துப் பகிர்வது தரம் தாழ்ந்த செயற்பாடு. வந்தே மாதரம் என்ற பாடலை புண்ணாக்கு என்று இழிவு செய்ய முனைந்தது மிக மிக மிகத் தரம் தாழ்ந்த செயல்பாடு.

  நான் இஸ்லாமியர்களின் மத நூலான குரான்-ஏ-கரீமைக் கரைத்துக்குடித்ததில்லை.

  ஆனால் குரான்-ஏ-கரீமை நன்றாக வாசித்து அதில் பாரங்கதம் பெற்ற அன்பர்கள் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சில் உள்ளனர். மாகாண இமாம் கவுன்ஸிலின் அத்யக்ஷதை வகிக்கும் தகுதி உள்ள அன்பர்கள் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்சில் உள்ளனர். அனைத்து இஸ்லாமிய சம்ப்ரதாயத்தைச் சார்ந்த இஸ்லாமிய அன்பர்களும் இந்த ஸ்தாபனத்தில் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடுவது இஸ்லாமுக்கு விரோதமானது இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல வந்தே மாதரம் பாடலைப் பாடுவது ஹராம் என்று கருத்துப்பகிர்ந்துள்ள ஜாமியத் உலேமா இ ஹிந்த் ஸ்தாபனத்தின் ஃபத்வாவை கண்டனம் செய்துள்ளனர். மேலதிகமாக வந்தே மாதரம் பாடலைப் பாடுவது ஹராம் என்று கருத்துப்பகிரும் இஸ்லாமிய அன்பர்கள் இஸ்லாத்துக்கும் தேசத்துக்கும் விரோதமானவர்கள் …………. என்று கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இஸ்லாமியர்கள் தான். இஸ்லாம் என்பது பயங்கரவாத வஹாபியர்களால் ஒட்டு மொத்தமாக குத்தகை எடுக்கப்பட்டு விடவில்லை ஹிந்துஸ்தானத்தில். தேசத்தின் மீது மாறாக் காதல் கொண்ட தேசப்பண்பாட்டின் மீது மாறாக் காதல் கொண்ட இஸ்லாமியர் மற்றும் க்றைஸ்தவர் கோடி கோடியாக ஹிந்துஸ்தானத்தில் உண்டு. இவர்கள் யாரும் தேசத்தையோ தேசியக்குறியீடுகளையோ மதச்சாயம் பூச விழையார்.

  வந்தே மாதரம் பாடல் மா தஸ்லிமத் என்று முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பினரால் உர்தூவில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது.

  மத ரீதியில் ……….கருத்தியல் ரீதியில்………. இஸ்லாம் சார்பாக …………… இந்தப்பாடலின் மீதான விவாதம்…………. இஸ்லாமியக் கருத்தியலை உள்வாங்கிய இந்த அமைப்பின் முல்லா, மௌலவிகளிடம்………….. தேசத்தின் ஏனைய இஸ்லாமியர்கள் செய்து கொள்ளலாம். இஸ்லாமிய நூற்களை உள்வாங்கிய மற்றைய அன்பர்கள் விவாதிக்க வேண்டியது இந்த ஸ்தாபனத்துடன்.

  மடை மாற்ற விவாதங்களை நிறுத்தி வ்யாசத்தின் கருப்பொருளில் கவனம் செலுத்துங்கள்.

 58. திரு.கிருஷ்ண குமார்

  ஏன் இப்படி? ஷாகாவில் என்ன கற்றுக்கொடுதார்களோ அதன் அடிப்படையிலே இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் கேட்டது மிக எளிமையானதொரு கேள்வி, இது வரை சமுகத்தை பாதித்த, தாக்கம் செலுத்திய முக்கிய பிரச்சனைகளுக்காக(சமுக சுரண்டல்,பொருளாதார சுரண்டல் போன்ற) மக்களை திரட்டி ஆர்.எஸ்.எஸ் என்னென்ன போராட்டம் நடத்தி இருக்கிறது என்பது தான்? இந்த கேள்விக்கு நிறைவான பதில் இது வரை அளிக்கப் படவில்லை. அவர்கள் அடித்த கேமரா ஸ்டண்டுகளையும், சுய தம்பட்டங்களையும் தவிர uruppadiyaaga வேறு ஒன்றுமே இல்லை. அவர்களிடம் நிறை என்று கூறுவதற்கு என்ன இருக்கிறது? இது நாள் வரையில் அவர்கள் நடத்திய மக்கள் போராட்டங்கள் என்ன? இதை தான் நான் பட்டியல் இட சொன்னேன்.

  //ஜாதி இணக்கத்துக்கு சங்கத்தின் பங்களிப்பு என்ன என்று பகிர்ந்த பின்னரும்…………. தாங்கள் மூடிய மனத்தினராக இருந்தால்…………. வாயில் நுரை தள்ள ஓங்கி முழங்கவே செய்யலாம். ஆனால் சங்கத்தின் செயல்பாடுகள் எப்படி? அதன் பலன் கள் யாவை என்பது நிச்சயமாக உத்தரத்தில் பகிரப்பட்டுள்ளது//

  எதை பங்களிப்பு என்று கூறுகிறீர்கள்? இதையா

  “சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் / தினசரி ஷாகாக்களிலும் ஜாதிவேறுபாடு இல்லாமல் அனைத்து ஹிந்துக்களும் (பல முஸல்மாணிய மற்றும் க்றைஸ்தவ அன்பர்களும் கூட) ஒன்றாக தேகாப்யாசம் செய்து, உணவு உண்டு, தேச ஒருமைப்பாடுக்காக தொடர்ந்து கூடி விவாதித்தல் பல தசாப்தங்களாக நிகழும் ஒரு செயற்பாடு.”

  அல்லது இதையா,

  //விஸ்வஹிந்து பரிஷத் என்ற ஸ்தாபனத்தின் வாயிலாக சங்கத்தின் இரண்டாம் அத்யக்ஷகரான பரமபூஜனீய குருஜீ கோல்வல்கர் அவர்களது பெருமுயற்சியினால் ஹிந்துஸ்தானத்தின் சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன, வைதிகத் துறவிகள் மற்றும் சான்றோர் பெருமக்களை ஒன்று திரட்டி ………….**தீண்டாமைக் கொடுமை** என்ற இழிவிற்கு எதிராக இந்த சான்றோர் மற்றும் துறவிகள் வாயிலாக ஒருமித்த குரலை ஹிந்து சமூஹத்தின் முன் வைத்தமை//

  கோல்வால்க்கர் குரலை முன்வைத்ததால் என்ன மாற்றம் நடந்து விட்டது. குரல் கொடுத்த கையோடு சமுகத்தில் இருந்து சாதியை ஒழிப்பதற்கு வேறு என்னென்ன செயல்ப்பாடுகளை சங்கத்திற்காக பணித்தார். இது வரை எந்த ஊரிலாவது ஆர்.எஸ்,எஸ் ஒரு சாதிய கலப்பு திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்திருக்கிறதா. சாதிக்கு எதிரான ஒரு பெரும் போராட்டம் என்று எதையாவது முன்னெடுத்து நடத்தி இருக்கிறார்களா? ஆனால், சுனாமி, புயல், புகம்பம் என்றால் போதும் “ஊடக சாகசத்திற்கு” மட்டும் எந்த குறைவும் இருக்காது. உப்பு சப்பு இல்லாத இதுப்போன்ற சமுகபணிகளை செய்தேன் கணக்கு காட்டுவது எதை நிருபிப்பதற்காக?.

  //வனவாசிகள் வசிக்கும் பகுதிகளில் கூட இருக்கு எனும் போதிலும் ………………. எங்க க்ருஹத்தருகில் இல்லையே……………. நான் தேடிய இடங்களில் இல்லையே………..அங்கு கதவு இல்லையே…………//

  //உங்கள் முகத்தை பார்த்தறியாத அன்பர்கள் கூட நீங்கள் சொல்லும் விஷயங்களை உண்மை என்று நம்ப வேண்டும். ஆனால் ஆயிரக்கணக்கான பள்ளிகளை தேசமளாவி நடத்துவது பச்சைப்பொய்…………. //

  இதில் நான் பொய்கூற என்ன இருக்கிறது.. வேண்டுமானால் தங்களுக்கு நேரம் கிடைத்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நீங்களே நேரில் சென்று பாருங்கள். உண்மை உங்களுக்கு புலப்படும். தாங்கள் கூறிய ஓராசிரியர் பள்ளிகளின் பங்களிப்புகள் இல்லாமலேயே கேரளம் கல்வியில் 100% தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. தமிழகமும் ஓரளவிற்கு முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவை காட்டிலும் ஆர்.எஸ்,எஸ் அமைப்பு பலமாக இருப்பதாக கூறப்படும் வடஇந்திய மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார்,ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அனைத்திலும் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. ஆர்.எஸ்,எஸ்ஸின் கல்விப் பணி என்பது ஒரு கண்துடைப்பு தான் என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.

  தொடரும்………………..

 59. திரு கிருஷ்ணகுமார் அவர்களே அறிந்தே பொய் சொல்கிறீர்கள்.அந்த t v நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றுவது பற்றி பேச்செடுத்தது உங்கள் இயக்கத்தவர்தான்.யுடுபில்
  அந்த பதிவு இருக்கிறது பாருங்கள்.முஸ்லிகளுக்கு வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற சிவசேனையின் திமிர் பேச்சை பற்றிய வாதம்தான் அது.அதில் அவர்தான் மதரசாக்களில் தேசியக்கொடி ஏற்றி இருக்கிறீர்களா என்று கேட்டார்.அதற்கு இவர் ,எற்றபடுகிற மதரசாகளை ஆதாரத்தோடு சொன்னவர் சகோதரர் கிரிஷ் சொன்ன அதே தகவலை அதாவது 1947ல் இருந்து 2002 வரை கொடி எற்றபட்டிருக்கிறதா என்று கேட்டார்.அதை அழகாக திரித்து ஒரு முஸ்லிம்தான் முதலில் கேட்டார் என்பதுபோல அவிழ்க்கிறீர்கள்.பெரும்பாலும் இப்படி குதர்க்கமான வெறி கிளப்பும் பேச்சுகளெல்லாம் உங்கள் இயக்கங்களில் இருந்துதானே ஆரம்பிக்கிறது.நான் மீண்டும் சொல்கிறேன்,இமயம் T V இல் வந்த அந்த காட்சி பதிவு yutube இல் இருக்கிறது. தேசபக்தி தேசியக்கொடி தேசியகீதம் எல்லாமே உங்களுக்கு ஒரே தேசியமாய் இருக்கும் மக்க்களை பிரிக்கும் ஆயுதம் இல்லையா?என்னமோ தேசத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்ததைப்போல.இப்படியெல்லாம் பீற்றி கொள்ளாத கோடிக்கணக்கான மக்களால்தான் எங்கள் தேசம் இன்னும் முழு தேசமாக இருக்கிறது.உங்களைப்போல கொடி ஏற்றி பிலிம் காட்டுபவர்களால் அல்ல.

 60. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  கருத்துப் பரிவர்த்தனம் என்பது பொருள் பொதிந்த கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டும். வெட்டி வம்பு….. விதண்டாவாதம்…….முனைந்து தேச விரோத சக்திகளுடைய அயோக்யத்தனங்களை கபள சோற்றில் முழுப்பூசணியாக மறைக்க விழைதல் ……… இவை விவாதம் ஆகாது.ஆகவே ஆகாது.

  முதலில் வ்யாசத்தின் கருப்பொருளான………. ஆர் எஸ் எஸ் தேசியக்கொடி ஏற்றுவதே கிடையாது என்று பொது மன்றில் புளுகியதை……… இஸ்லாமியப் பதர்கள் தேசிய கீதத்தைப் பாடுவதை ஹராம் என்று தேச விரோதக் கருத்துப் பகிர்ந்ததை ………… தேசிய கீதத்தை எழுதிய குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் அவர்களை இழிவு செய்ததை…….. நீங்களோ அல்லது ஜெனாப் மீரான் சாஹேப் அவர்களோ ஜெனாப் சுவனப்ரியன் அவர்களோ சந்தில் சிந்து பாடிய அல்லது அட்ச்சு வுட்ட அன்பர்களோ……….. ஏதாவது ஒரு வாசகத்தாலாவது கண்டித்தாக சுட்டுங்கள்.

  அன்பின் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் ஏதாவது ஒரு வாசகத்திலாவது வந்தே மாதரம் பாடலைப் பற்றி ப்ரஸ்தாபம் செய்திருக்கிறாரா என்று முதலில் கருத்துப் பகிர்ந்து…….. குறிப்பாக அந்த வாசக்த்தை சுட்டிக்காட்டி……… இல்லாவிடில் ……… முனைந்து அது பற்றி மடை மாற்றக்கருத்துக்கள் பகிர்ந்ததற்கு க்ஷமாயாசனம் கேளுங்கள்.

  தேச விரோத சக்திகளின்………….. தேச விரோத செயல்களை……..அப்படியே கபள சோற்றில் முழுப்பூசணிக்காயாக மறைக்கத் தானே…….. ஆர் எஸ் எஸ் பற்றி அட்ச்சு வுடுதல்……. ஜாதி இணக்க அக்கறை காட்டுதல்………ஏழைகளுடைய கல்வி பற்றி அக்கறை காட்டுதல்……… என்று மடை மாற்றம் செய்கிறீர்கள்!!!!!!!!!!!!!!

  தேச விரோத சக்திகளின் செயலைக் கண்டிக்காது விவாதத்தை மடை மாற்றம் செய்தல் மிக மிக மிகக் கடுமையான தரம் தாழ்ந்த செயற்பாடு.

  \\ திரு.கிருஷ்ண குமார் .ஏன் இப்படி? ஷாகாவில் என்ன கற்றுக்கொடுதார்களோ அதன் அடிப்படையிலே இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். \\

  எனக்குத் தெரியாத விஷயங்களை நிச்சயமாக ப்ரஸ்தாபிக்க மாட்டேன். தெரியாத விஷயங்களை சில சமயம் அறியாமையால் தவறாகப் பகிர்ந்து விட்டால்……… அந்தப் பிழை சரிசெய்யப்பட்டால் நிச்சயமாக மகிழ்வேன்……. பிழை சரிசெய்யப்படுதலில்……. நான் மட்டிலும் பயனடைவது கிடையாது…….. வாசிக்கும் ஒட்டு மொத்த வாசகர்களும்.

  நீங்கள் சுயமாகக் கருத்துப் பகிர்கிறீர்களா? அல்லது தேசவிரோத செண்டமிள் அல்லேலூயாக் காரர்கள்……. அல்லது தேசவிரோத செண்டமிள் பயங்கரவாத வஹாபியர்கள்……… மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை சும்மனாச்சிக்கும் அட்ச்சு வுடுகிறீர்களா என்பதை வாசிக்கும் வாசகர்கள் அவதானிப்பார்கள்………………

  \\ இது நாள் வரையில் எந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராவது சாதிக்கு எதிராக மேடை ஏறி ஒரு வார்த்தை பேசியதுண்டா, \\

  இப்படி வசனம் பேசியது தாங்கள் தானே. இந்த பொய்க்கருத்துக்கு பதிலாகத் தான் பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்கள் ஹிந்து சான்றோர் மற்றும் துறவியர் அமைப்பை ஒன்றாகக் கூட்டி ஹிந்து சமூஹ ஒற்றுமைக்காக முன்னெடுத்த இயக்கம் பற்றிய தகவல் பகிரப்பட்டது.

  \\ இந்நாட்டில் பள்ளி சென்று கல்வி கற்க முடியாத, கற்க வாய்ப்பில்லாத ஏழை இந்து மாணவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஒரு திண்ணை பள்ளியாவது கட்டி கொடுத்திருகிரார்களா? \\

  ஏழை மாணவர்களுக்கு ஆர் எஸ் எஸ் ஒரு திண்ணை பள்ளியாவது கட்டி கொடுத்திரு(((((க்)))))கி((((ரா))))றார்களா என்று வன்மம் மிக அட்ச்சு வுட்டது நீங்கள் தானே…………….இது பொய்யான கருத்துத் தானே………அறியாமையின் பாற்பட்டு நீங்கள் கருத்துப் பகிர்ந்திருந்தீர்கள் என்றால்………..

  50000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் (வித்யா மந்திர் போன்ற பள்ளிகள் இல்லாமல் ……… ஏகல் வித்யாலயா மட்டிலும்) சங்கத்தின் தரப்பில் தேச முழுதும் நடத்தப்படுகின்றன……… என்று கருத்தை அறிந்த பின்னர்………..

  அறியாது பிழையான கருத்தைப் பகிர்ந்த ஒரு அன்பர் என்றால் மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் உணர்ந்து வெட்கி க்ஷமாயாசனம் கேட்டிருக்க வேண்டும்.

  ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டி தேச முழுதும் கல்விப் பணி செய்து வரும் ஒரு ஸ்தாபனத்தையும் அவர்கள் அளித்து வரும் கல்விப் பணியையும் ………… வன்மம் இருந்தால் மட்டிலும் ……….. ஒரு திண்ணைப்பள்ளியைக் கூட கட்டியதில்லை என்று கூசாது பொய் சொல்லி………. அதை அப்படியே கை கழுவி………..ஆயிரக்கணக்கான பள்ளிகள் கட்டி என்ன ப்ரயோஜனம் என்று ……….. அடுத்த மடை மாற்றத்துக்குப் போக முடியும்……….

  அறியாமையின் பாற்பட்டு பிழையான கருத்துக்களை முன்வைப்பது தவறே இல்லை. அப்படித் தவறான கருத்தினை முன்வைப்பவர்கள்……… தங்கள் பிழை திருத்தப்பட்டால் தங்களுடைய பிழை திருத்தப்பட்டதில் அகமகிழ்வே கொள்ளுவார்கள்.

  உங்கள் அலகீடுகள் கோட்பாடுகள் சார்ந்து இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக உங்களுக்கு அலகீடுகள் என்று ஏதுமே இல்லை என்பதனையே உங்கள் உத்தரங்கள் பறை சாற்றுகின்றன. உங்களிடம் காணப்படுவது முன் தீர்மானத்தின் பாற்பட்ட வெறுப்பு மற்றும் வன்மம் மட்டிலுமே.

  இது மிக மிகத் தவறு. அறிவு பூர்வமான செயல்பாடு கிடையாது.

  இஸ்லாமிய க்றைஸ்தவ மதங்களில் உள்ள பன்மைத்துவத்தின் மீதும்………. இந்த மதங்களில் உள்ள தமிழ்ப்பண்பாட்டு வேர்கள் மீதும் உங்களுக்கு லவலேசமும் அக்கறை இல்லை என்பதனையே உங்கள் உத்தரங்கள் பறை சாற்றுகின்றன.

  மாறாக தமிழ்ப்பண்பாட்டினை வேரும் வேரடி மண்ணுமாக அழித்தொழித்து தமிழகத்தை அராபியப்பாலைவன நகலாகவும்………. வாடிகனுக்கு அடிமையாக்கவும் விழையும் தேச விரோத சக்திகளே உங்களுக்கு இஸ்லாமியராகவும் க்றைஸ்தவராகவும் தென்படுகின்றன.

  சங்கத்தின் அன்றாடப் பயிற்சி வகுப்புகளான ஷாக்காக்களில் ஜாதி என்ற விஷயமே கிடையாது என்றும் தெரியும்………சங்கத்தினர் பலர் ஜாதி இணக்கத் திருமணங்கள் புரிந்தமையும் தெரியும்………. ஆனால் என்னிடம் இது சம்பந்தமான டேடாபேஸ் என்று ஏதும் கிடையாது………… அப்படித் தெரியாத விஷயத்தைப் பற்றிக் கூசாது அட்ச்சு வுடுதலும் எனக்குத் தெரியாது……..

  இங்கு நம்மிடையே வ்யாசங்கள் பகிரும் அன்பின் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ………… ஜாதி என்ன……… மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணை விவாஹம் செய்ததும்……… அந்த தம்பதிகள் அவரவர் மதத்தை கண்யமாகப் பேணிவருவதும் நிச்சயமாகத் தெரியும்…….இந்த தம்பதிகள் மீது அனைத்து சங்க அன்பரும் அளவு கடந்த அன்பும் மதிப்பும் வைத்திருப்பதும் தெரியும்……..

 61. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  முதலில் வ்யாசத்தின் கருப்பொருள் சார்ந்து கருத்துப் பகிரும் ஒழுங்கு முறையைக் கைக்கொள்ள விழையுங்கள்.

  இது அறிவு பூர்வமான செயற்பாடு.

  மிக முனைப்பாக வ்யாசத்தின் கருப்பொருளை மடைமாற்றம் செய்வது தரம் தாழ்ந்த செயற்பாடு. இதைத் தவிருங்கள்.

  ஹிந்து ஒற்றுமை, ஜாதி இணக்கம், மத நல்லிணக்கம், போன்ற உயர்ந்த கோட்பாடுகள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறை புரிகிறது.

  ஆனால் உங்கள் அலகீடுகளை கோட்பாடுகள் சார்ந்து உருவகம் செய்யுங்கள். நபர்கள் சார்ந்து அல்லது ஸ்தாபனங்கள் சார்ந்து அல்ல. இவை முன் தீர்மானங்கள் கொள்வதைத் தவிர்க்க விழையும். அலகீடுகள் ஆழமாகப் பதிந்தால் உங்கள் அலகீடுகளின் திசையில் பயணிப்பவர்களை அடையாளம் கொள்ள முடியும்.

  எனக்கு அலகீடுகளே ஆதர்சம். புனித தெரசாள் பற்றிய வ்யாசத்தில் அந்த பரங்கிய அம்மணி செய்த சேவையையே ஒட்டு மொத்தமாக இகழ முனையவில்லை நான். அங்கு சென்று வாசித்து என் கருத்தை அறியலாம். ஆனால் அவர் சேவைகளில் காணப்பட்ட குற்றம் குறைகளை ஒதுக்காது……… தரவுகள் சார்ந்து நிச்சயமாக அவதானிக்க விழைந்தேன்.

  அப்படியே ஹிந்துத்வ சாத்வி அம்மையார் அவர்கள் பொது மன்றில் வசவுகளைப் பொழிந்த நிகழ்வும். எனது பெருமதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் இது சம்பந்தமான வ்யாசம் பகிர்ந்த போதிலும்…….. நான் உத்தர பாரதத்தில் இருப்பதால்……. அவரது வசவுகளின் அர்த்தங்களை முழுமையாக அறிந்ததால்…………அதைத் தயங்காது இடித்துறைத்து இங்குக் கருத்துப் பகிர்ந்துள்ளேன்.

  ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்வ சங்க பரிவார இயக்கங்கள் மனிதர்களாலேயே நிரம்பி உள்ள ஸ்தாபனங்கள். நிச்சயமாக கோடிக்கணக்கான மனிதர்களை உள்ளடக்கிய இப்படிப்பட்ட மிகப்பெரிய ஸ்தாபனங்களில் உள்ள மனிதர்களின் செயற்பாடுகளில் குறைகள் கூட இருக்கலாம். நீங்கள் குறிப்பாகக் காணப்படும் பிழைகளை …….ஆதர்சங்களுக்கு முரணான செயற்பாடுகளை…… தரவுகள் சார்ந்து பகிருங்கள். உங்களை எல்லோரும் பாராட்டவே செய்வார்கள். எல்லோரும் அதனால் பயனுறுவார்கள்.

  அடுத்தவர் செய்யும் மானுட சேவைகளை ****கேமரா ஸ்டண்ட்*** என்று எக்காரணம் கொண்டும் இழித்துப் பழிக்க முனையாதீர்கள். இது மிகவும் தரம் தாழ்ந்த செயற்பாடு.

  சங்கத்தில் முறையாக விவாதிக்கும் பயிற்சியை நான் பெற்ற படிக்கே……..புனித தெரசாள் அவர்களது சேவையை …….நான் எங்கும் எந்த தளத்திலும் ****ஸ்டண்ட்*** என்று இழித்துப் பழித்தது கிடையாது. அதே சமயம் அந்த சேவைகளில் உள்ள குறைபாடுகளை மிகைப்படுத்தல்களை தரவுகள் சார்ந்து ………. தர்க்க பூர்வமாககுறைகளை இடித்துறைக்க தயங்கியதும் கிடையாது.

  மனிதர்கள் அனைவரையும் ஒழுங்கான வாழ்க்கை முறைகளுக்கு பழக்கப்படுத்துவதையே தேச நலன் விரும்பும் ஸ்தாபனங்கள் செய்ய விழைகின்றன. ஆதர்சங்கள் அலகீடுகளாக இருந்தால் வழி தவறிய பாதையில் செல்லும் அன்பர்கள் அவர்களிடத்தே நல்ல பண்புகளைக் கண்டால் அவற்றை நிச்சயமாக ஆதர்சங்களைக் கைக்கொள்ளுபவர்கள் புறந்தள்ள மாட்டார்கள்.

  அன்பர் ஸ்ரீ தொல்.திருமாவளவன் அவர்கள் தில்லைச்சிற்றம்பலத்தில் ஆடல்வல்லானை தர்சனம் செய்ததையும் அன்பர் அவர்கள் லோகசபையில் தமிழில் உரையாற்றுவதையும் கொண்டாடி அன்பர் அவர்கள் பயங்கரவாத தேசவிரோத வஹாபிய சக்திகளுடன் கைகோர்ப்பதை இடித்துறைப்பதும் ஆதர்சங்களின் பாற்பட்டுத்தான்.

  இதே போலவே தான்……. தெருத்தெருவாக சிவலிங்க வழிபாட்டினை கொழுப்பெடுத்து இழிவு செய்ய முனைந்த சீமார் அவர்கள் ……. ****எங்கள்**** முருகப்பெருமானை தம்முடைய பாட்டன் என்றோ முப்பாட்டன் என்றோ பகர்ந்து காவடி எடுத்து செந்திலாதிபனை…… பெரும் கும்பலாகச் சேர்ந்து வழிபட முனைந்த பாங்கினையும் தவறாது உள்வாங்கி அகமகிழ்ந்தமையும். இது தான் இதுவே தான் நான் உயர்ந்த பண்பாட்டு முன்னகர்வாகக் காணவிழைவது. வேர்களுடன் தமிழர்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளுதல்.

  எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானுடைய அருள் வாக்கு தான் நினைவுக்கு வருகிறது.

  படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
  முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
  மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
  நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.

  ஆதர்சங்கள் உங்கள் அலகீடுகளாக இருந்தால் ……. உங்கள் ஆதர்சங்களுடன் பொருந்தி வரும் எந்த ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது மனிதர்களையோ இழிவு செய்ய நீங்கள் முனைய மாட்டீர்கள் ஐயா. மாறாக அலகீடுகள் ஆதர்சங்கள் இல்லாது ஸ்தாபனங்கள் அல்லது மனிதர்கள் என்று இருந்து விட்டால் ஆதர்சங்கள் சுவடு தெரியாது முழுகி விடும். அப்படி ஆகவே கூடாது என்று எதிர்பார்ப்பது தவறானால் எமது க்ஷமாயாசனங்கள்.

  எனக்கு உங்கள் அளவுக்கு பரந்த வாசிப்போ அல்லது பக்தி நிஷ்டையோ கிடையாது. இங்கிதம் கூட குறைவு தான். குறுமதியால் சிறியேன் அதிகப்படியாக ஏதும் பேசியிருந்தால் க்ஷமிக்கவும்.

  அன்பின் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்களுக்கு வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலகி நான் பகிர்ந்த பல கருத்துக்களுக்கும் இப்போது ஆதர்சங்கள் சார்ந்து பகிர்ந்த இந்தக் கருத்துக்களுக்கும் எனது விசனம் கலந்த க்ஷமாயாசனங்கள்.

  ஆதர்சங்களைக் கைக்கொள்வோம். நேர்மையாகக் கருத்துப் பகிர விழைவோம்.

  வ்யாசத்தின் கருப்பொருள் சாராது நீங்கள் பகிரும் எந்த ஒரு கருத்துக்கும் என் தரப்பிலிருந்து மேற்கொண்டு உத்தரங்கள் இருக்காது.

  மடை மாற்றம் இழிவான தரம் தாழ்ந்த செயற்பாடு. தன்னுடைய நேரத்தை செலவழித்து தரவுகளைச் சேகரித்து மெனக்கெட்டு சமயம் ஒதுக்கி எழுத முனைந்த வ்யாச கர்த்தாவுக்கு நாம் வெகுமானம் செய்யாவிட்டாலும் சரி. மடைமாற்றம் செய்வது என்பது அவரை இழிவு செய்வதாகும். அப்படியான இழிவுக் காரியத்தை தொடராதீர்கள்.

  வ்யாசத்தின் கருப்பொருள் சாராது தாங்கள் சமூஹ அக்கறையின் பாற்பட்டு பகிர விழையும் மற்ற எந்தக்கருத்துக்களையும் தனியாக் ஒரு வ்யாசமாக சமர்ப்பியுங்கள். நிச்சயம் விவாதிப்போம். அதற்குத் தானே இங்கு கருத்துப்பகிர்கிறோம்.

  திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 62. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  \\ முஸ்லிகளுக்கு வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற சிவசேனையின் திமிர் பேச்சை பற்றிய வாதம்தான் அது. \\

  நீங்கள் குறிப்பிடும் அந்த விவாதத்தை நான் பார்க்கவில்லை. அங்கு என்ன பேசப்பட்டது என்று எனக்குத் தெரியாது ஐயா. ஆனால் சிவசேனைக் கட்சி பொறுப்பில்லாது இப்படி ஒரு கருத்தைப் பகிர்ந்ததை நான் இணையப்பக்கங்களில் வாசித்திருக்கிறேன். அவர்கள் அப்படிக் கருத்துப்பகிர்ந்திருந்தால் சந்தேஹமே இல்லாமல் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துத் தான் அது.

  இப்படிப்பட்ட பேச்சைக் கண்டிப்பதில் எமக்கோ எமது இயக்க அன்பர்களுக்கோ தயக்கம் சிறிதளவும் கிடையாது. நிச்சயமாகக் கண்டிக்கப்பட வேண்டிய பேச்சுதான் என்பதில் சம்சயமே கிடையாது. நிச்சயமாகத் திமிரான பேச்சே தான். ஒட்டு மொத்த ஒரு சமூஹத்தினரின் வாக்குரிமையை அவர்கள் ஒரு மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதை மட்டிலும் அலகீடாகக் கொண்டு கருத்துப் பகிர்தல் திமிரெடுத்த கொழுப்புப் பேச்சு தான்.

  நான் தமிழ் சேனல்களில் விவாதம் என்ற பெயரில் நடைபெறும் கட்டைப்பஞ்சாயத்துக்களை பார்ப்பது கால விரயம் என்ற கொள்கை உடையவன். இந்த விவாதத்தை நான் பார்க்கவில்லை. நான் ப்ரஸ்தாபிக்கவே செய்யாத ஒரு விஷயத்தை நான் ப்ரஸ்தாபித்ததாகவும் ……… அதையும் மீறி பொய் சொன்னதாகவும் சொல்வது தரம் தாழ்ந்த செயற்பாடு.

  \\ அதை அழகாக திரித்து ஒரு முஸ்லிம்தான் முதலில் கேட்டார் என்பதுபோல அவிழ்க்கிறீர்கள் \\

  யார் முதலில் என்ன பேசினார்……… யார் பின்னாடி என்ன பேசினார் என்பது விவாதமே இல்லை.

  அது மடைமாற்றம்.

  என்னுடைய எந்த வாசகத்தில் முன்னாடி பின்னாடி யார் என்ன பேசினார் என்று விவாதம் செய்தேன்…… என்று என்னுடைய வாசகத்தை சுட்டிக்காட்டுங்களேன். முன்னாடி பின்னாடி …….. இதெல்லாம் வாதமே இல்லை………

  வாதம் ஒரு இஸ்லாமிய அன்பர் ஆர் எஸ் எஸ் காரர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று சொன்னது உண்மையா பொய்யா என்பது தான்……… இந்த வ்யாசத்தில்………… இதில் தெளிவு படவும்.

  ஆர் எஸ் எஸ் காரர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று இஸ்லாமிய அன்பர் பொய் பேசினார் இல்லையா என்பது தான் இந்த வ்யாசத்தின் முக்கியமான விவாதம். இது பொய் என்பதனை ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் தரவுகள் சார்ந்து பகிர்ந்துள்ளாரே. அதனை ஏற்று இன்னமும் பொய்யை பொய் என்று ஏற்க உங்கள் மனம் வராதது சரியல்ல.

  அவர் பேசியது பொய் என்பதனை இப்போதாவது நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்களேன்.

  நாக்பூரில் மெஹல் என்ற இடத்தில் உள்ள சங்க பில்டிங்க் என்று சொல்லப்படும் ஆர் எஸ் எஸ் தலைமையகத்திலும் அதே ஊரில் ரேஷிம்பாக் என்ற இடத்தில் உள்ள கேசவ்குஞ்ச என்ற நினைவகத்திலும்……. என் கண்களாலேயே தேசியக்கொடியினை 1980 களிலேயே பல முறை பார்த்திருக்கிறேன்.

  ஒரு இஸ்லாமிய அன்பர் எந்த ஆதாரமும் இல்லாது சொன்ன கருத்திற்கு பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கிரீஷ் என்ற அன்பர் சொன்ன விஷயத்துக்கு முதலில் என்ன ஆதாரம் என்று கேளுங்கள். இணைய காபி பேஸ்டுகள் ஆதாரங்கள் ஆகா என்றறிக.

 63. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  இங்கு யாரும் தேச ஒற்றுமையையோ அல்லது தேச பக்தியையோ ஒரு ஸ்தாபனத்துக்கோ அல்லது ஒரு மதத்தவர்களுக்கோ குத்தகை எடுத்ததாகப் பேசவில்லை. அது நீங்கள் அறிந்து சொல்லும் அபாண்டம்.

  ஒட்டு மொத்த இஸ்லாமிய சஹோதரர்களையோ அல்லது க்றைஸ்தவ சஹோதரர்களையோ நான் இங்கோ அல்லது வேறெங்குமோ விமர்சனம் செய்தது கிடையாது. அப்படி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சனம் செய்பவர்களைக் கண்டிக்க தயங்கியதும் கிடையாது. என்னுடைய எந்த வாசகத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியரையோ அல்லது க்றைஸ்தவர்களையோ நான் நிந்தித்துள்ளேன் என்று சுட்டிக்காட்டுங்களேன்.

  மாறாக என்னுடைய உத்தரத்தில் ஆதர்சவாதிகளான பற்பல முஸல்மாணிய சஹோதரர்களையும் க்றைஸ்தவ சஹோதரர்களையும் மிகத்தெளிவாக விதந்தோதியமையை வாசித்த பிறகும் தாங்கள் இப்படி எசகு பிசகாகக் கருத்துப் பகிர்வது இழிவான செயற்பாடு.

  மோதி சர்க்காரிடம் எம்முடைய இஸ்லாமிய சஹோதரர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதனை மெனக்கெட்டு மொழியாக்கம் செய்து இந்த தளத்தில் நான் பகிர்ந்த வ்யாசத் தொடரைப் பார்க்கவும்.

  நான் இடித்துறைக்க முற்படுவது……………

  தேசியகீதத்தை……… ஜன கண மன………. தேசிய கீதத்தைப் பாடுவது ஹராம் என்று பகிர்ந்த இஸ்லாமிய தளத்தின் இழிவான செயற்பாட்டைத் தான். தேசிய கீதத்தை நமக்களித்த குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் அவர்களை இங்கிலாந்து மன்னருக்கு துதிசெய்யும் விதமாக இந்தப் பாடல் பாடப்பெற்றது என்று இழிவுக்கருத்துப் பகிர்ந்த இஸ்லாமிய தளத்தின் இழிவான செயற்பாட்டினை தான். இந்த இழிவான செயற்பாடுகளை இடித்துறைக்க உங்களை தடுப்பது எது.

  இப்படி இழிவான கருத்துக்களை பகிர்பவர்கள் இஸ்லாமியராக இருந்தாலும் சரி ஹிந்துக்களாக இருந்தாலும் சரி வேறு எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி……… அவர்களை தேச விரோதிகளாக இடித்துறைப்பதில் தயக்கம் என்பதை கொள்ளவே கூடாது. நம்மில் யாரும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி தயக்கம் கொள்ளக் கூடாது.

  ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் வ்யாசத்தில் வந்தே மாதரம் பாடலைப் பற்றி ப்ரஸ்தாபிக்காத போது தாங்கள் ………. மேற்கண்ட ஆர் எஸ் எஸ் தேசியக்கொடி ஏற்றியதில்லை என்று பொய்க்கருத்துப் பகிர்ந்த இஸ்லாமிய அன்பருடைய இழிவான பொய்யான கருத்தை மறைக்கு முகமாகத் தானே……… வந்தே மாதரம் பாடலைப் பற்றி மடை மாற்றம் செய்ய முனைந்தீர்கள். இது தவறில்லையா ஐயா.

  இதுவரையிலும் வ்யாசத்தில் எந்த வாசகத்தில் ஸ்ரீ ம.வெங்கடேசன் வந்தே மாதரம் பாடலைப் பற்றி ப்ரஸ்தாபித்தார் என்று நீங்களோ அல்லது உங்களால் நட்ட நடு செண்டர் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டவர்களோ பகிரவே இல்லையே. இது தவறாக உங்களுக்குப் படவில்லையா ஐயா? ஏன் இப்படி ஒருவர் சொல்லாத கருத்தைச் சொல்லியதாகத் திணிக்க முனைகிறீர்கள்.

  நேர்மையாகக் கருத்துப் பகிர விழையுங்களேன்.

  நீங்கள் பிற ஹிந்து அன்பர்களுடன் மத நல்லிணக்கத்துடன் பழகுவது பற்றியதான கருத்துக்களினால் இந்த தளத்தின் அனைத்து வாசகர்களும் மிகவும் மனமகிழ்கிறோம் என்றறிக. மிகவும் ஆதர்சமான செயல்பாடே இது.

  முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் ஸ்தாபனம் சார்ந்தும் அதில்லாமல் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதம் சார்ந்தும் எனக்கு மிகப்பல முஸல்மாணிய சஹோதரர்கள் பரிச்சயம் உண்டு ஐயா. அதுவும் சம்ப்ரதாய பேதமெல்லாம் இல்லாமல் ஷியா, பரேல்வி ஸுன்னி, தேவ்பந்தி ஸுன்னி, அஹ்மதியா, போஹ்ரா என பற்பல இஸ்லாமிய சம்ப்ரதாய அன்பர்கள் எனக்கு மித்ரர்கள் தான்.

  அது போலவே எங்களது இயக்கங்களிலும் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களைச் சார்ந்த அன்பர்களும் முஸல்மாணிய சஹோதரர்களுடனும் க்றைஸ்தவ சஹோதரர்களுடனும் அன்புடனேயே பழகுகிறார்கள் என்றும் அறிக. அந்தப் பழகுதலுக்கு ஆதாரம் நாங்கள் ஒன்றாகப் பகிர்ந்து அகமகிழும் நமது தேசத்துப் பண்பாடு. இசை. இலக்கியம். கலை. தேசத்தின் அனைத்து மொழிகள் மற்றும் ப்ராந்தியங்களின் பொதுவான மாண்பு இது.ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இரு மதத்தைச் சார்ந்தவர்களும் ஹிந்து மற்றும் இஸ்லாமிய பந்திஷுகளை தயக்கமில்லாமல் பாடுகிறார்கள் என்று அறிய ………. சம்ப்ரதாய வாதத்தில் மூழ்கிய ………… பயங்கரவாத வஹாபியத்தில் ஆழ்ந்த……… தமிழக இஸ்லாமிய சஹோதரர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.

  இதே தளத்தில் இஸ்லாமிய ஸூஃபி வழிபாடுகள் வெட்கமே இல்லாமலும் தயக்கமே இல்லாமலும் நிந்திக்கப்பட்டதை ……….. தயக்கமே இல்லாது கண்டித்தும் இருக்கிறோம் என்பதனையும் நினைவு கூர்க.

  மதங்கள் கடந்த தேசத்தின் இந்தப் பண்பாட்டுக்கூறுகளை அழித்தொழிக்க முனையும் ஒவ்வொரு இறக்குமதி வாதத்தையும் நிச்சயமாக எதிர்ப்போம். அதில் தயக்கமே காட்ட மாட்டோம். .

  எமது ஷியா, ஸுன்னி, அஹ்மதியா, ஸூஃபி இஸ்லாமிய சஹோதரர்களின் வழிபாடுகளை இழிவு செய்யும்…………. அவர்களை அவர்களது வழிபாடுகளுக்காக தேசம் தேசமாகக் கொலை செய்யும்……… இறக்குமதி வஹாபிய ப்ரசாரங்களையும் நிச்சயமாக நாங்கள் ஏற்க மாட்டோம். இப்படிப்பட்ட பயங்கரவாத வஹாபிய பேச்சுக்களையும் நிச்சயமாகக் கண்டிப்போம்.

  மேற்கொண்டு மடைமாற்றம் செய்ய விழையாதீர்கள். இந்த வ்யாசத்தின் கருப்பொருள் சார்ந்து மட்டிலும் கருத்துப் பகிர விழையுங்கள் என்று நான் நிச்சயம் சொல்வேன். வ்யாசத்தின் கருப்பொருள் சாராது மேற்கொண்டு தாங்கள் பகிரும் எந்த ஒரு கருத்துக்கும் இனி என் தரப்பிலிருந்து உத்தரம் பகிரப்பட மாட்டாது.

 64. திரு. கிருஷ்ண குமார் ….

  இப்போது ஏன் கோபப் படுகிறீர்கள்.. யார் இப்போது இங்கு என்ன மடை மாற்றம் செய்து விட்டார்கள். விவாதம் ஆர்.எஸ்.எஸ்ஸை பற்றி சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. யாரும் இப்பொழுது ஏன் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லாமல் போனது என்பது பற்றியா பேசினோம் மடைமாற்றம் செய்வதற்கு.

  //தேச விரோத சக்திகளுடைய அயோக்யத்தனங்களை கபள சோற்றில் முழுப்பூசணியாக மறைக்க விழைதல் ……… //

  இல்லையே.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றி மிக சரியாகத் தானே விமர்சித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் எந்த சறுக்கல்களும்,மறைப்புகளும் இல்லையே.

  //தேச விரோத சக்திகளின்………….. தேச விரோத செயல்களை……..அப்படியே கபள சோற்றில் முழுப்பூசணிக்காயாக மறைக்கத் தானே…….. ஆர் எஸ் எஸ் பற்றி அட்ச்சு வுடுதல்……. ஜாதி இணக்க அக்கறை காட்டுதல்………ஏழைகளுடைய கல்வி பற்றி அக்கறை காட்டுதல்……… என்று மடை மாற்றம் செய்கிறீர்கள்!!!!!!!!!!!!!!//

  இது உங்களிடம் இருந்து நான் எதிர்ப்பார்த்த ஒன்று தான். அப்படி நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்க்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இது வரை சாதி இணக்கம், ஏழைகளின் கல்வி போன்றவற்றின் மீது ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பதற்கான சரியான பதிலை தாங்கள் இன்னும் தரவில்லையே. யார் முதலில் தேச விரோத சக்தி. மத அடிப்படை வாத அமைப்புகள் அனைத்துமே தேச விரோத சக்திகள் தான் எனுபோழுது ஆர்.எஸ்.எஸ் மட்டும் அதற்க்கு விதிவிலக்கு அல்லவே. இப்போதுள்ள இசுலாமிய அடிப்படை வாத அமைப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடாவடித் தனங்களின் எதிர் வினையாக உருவானவை தான்.

  //அன்பின் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் ஏதாவது ஒரு வாசகத்திலாவது வந்தே மாதரம் பாடலைப் பற்றி ப்ரஸ்தாபம் செய்திருக்கிறாரா என்று முதலில் கருத்துப் பகிர்ந்து…….. குறிப்பாக அந்த வாசக்த்தை சுட்டிக்காட்டி……… இல்லாவிடில் ……… முனைந்து அது பற்றி மடை மாற்றக்கருத்துக்கள் பகிர்ந்ததற்கு க்ஷமாயாசனம் கேளுங்கள்.//

  வந்தே மாதரம் பாடலை பற்றி விவாதித்தது தாங்களும் மீரான் சாகிபும் தான். உங்கள் இருவரின் விவாதத்தில் நான் என் கருத்து எதுவோ அதை சுருக்கமாக கூறி விட்டேன். இதில் நான் என்ன திசை திருப்பினேன்.

  //ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டி தேச முழுதும் கல்விப் பணி செய்து வரும் ஒரு ஸ்தாபனத்தையும் அவர்கள் அளித்து வரும் கல்விப் பணியையும் ………… வன்மம் இருந்தால் மட்டிலும் ……….. ஒரு திண்ணைப்பள்ளியைக் கூட கட்டியதில்லை என்று கூசாது பொய் சொல்லி………. அதை அப்படியே கை கழுவி………..ஆயிரக்கணக்கான பள்ளிகள் கட்டி என்ன ப்ரயோஜனம் என்று ……….. அடுத்த மடை மாற்றத்துக்குப் போக முடியும்……….//

  இதில் எந்த மடைமாற்றமும் இல்லை. இதற்கான என்னுடைய பதிலை என் முந்தைய பின்னூட்டத்தில் தெளிவாக கூறி விட்டேன். 50,000 சொச்சம் பள்ளிகளை கட்டி இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்புறம் ஏன் வட இந்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கல்வியில் மிக பின் தங்கிய நிலையில் இருக்கிறது. தமிழகத்தை போன்று அங்கு திராவிட தீய சக்திகளோ, மத வெறி ஆபிரகாமிய தேச விரோத கும்பல்கள் போன்றோ எந்த அபாயமும் வடமாநிலங்களில் இல்லை, அப்புறம் என்ன கல்வியில் முன்னேறிய மாநிலங்களாக அவற்றை உருவாக்கலாமே. நீங்கள் கூறும் ஏகல் வித்யாலையா 1986ஆம் ஆண்டே தொடங்கப் பட்டு விட்டது என்கிற பொழுது, இதை எப்பொழுதோ சாதித்து இருக்க வேண்டாமா? இதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சமுகத்தை ஏய்க்கும் ஊடக பம்மாத்து அனைவருக்கும் புரிகிறது.

  //மாறாக தமிழ்ப்பண்பாட்டினை வேரும் வேரடி மண்ணுமாக அழித்தொழித்து தமிழகத்தை அராபியப்பாலைவன நகலாகவும்………. வாடிகனுக்கு அடிமையாக்கவும் விழையும் தேச விரோத சக்திகளே உங்களுக்கு இஸ்லாமியராகவும் க்றைஸ்தவராகவும் தென்படுகின்றன.//

  சாதாரண பொது மக்களில் அப்படி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு சில அடிப்படைவாத அமைப்புகளை வைத்து மொத்த சிறுபான்மையினரையும் அப்படி எண்ணுவது சிறுப்பிள்ளை தனமானது. முதலில் இந்தியாவை இந்துராஷ்ட்ரம் என்றுக் கூறுவதை நிறுத்துங்கள். கிறித்துவ, இசுலாமிய மக்களை அந்நியர்களாக எண்ண வைப்பது இதுப் போன்ற அனர்த்தமான பேச்சுகள் தான். இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவானதே.

  திரு.கிருஷ்ண குமார் அவர்களே, என்னுடைய கருத்துக்கள் இடது சாரிகளின் கருத்தினை போன்று இருக்கிறது என்று தெரியும், உண்மையை பேச வேண்டும் என்பது தான் என்னளவில் முக்கியம்.

 65. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  தேச விரோதக் கருத்துக்களை இஸ்லாமிய தளங்களும் ஆர் எஸ் எஸ் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என சில இஸ்லாமியரும் முனைந்து பொய்ப்பரப்புரை செய்கையில் ……… அது வ்யாசத்தில் தெளிவு படுத்தப்பட்டிருக்கையில்…….அதை அப்படியே மறைக்க வேண்டி……… நீங்களும் மற்றும் சில அன்பர்களும் வ்யாசத்தின் முக்யமான கருப்பொருளிலிருந்து வேறு விஷயங்களை பேசுவது மடை மாற்றம் இல்லாமல் வேறு என்னவாகும். எதற்காக நான் யார் மீதும் கோபப் பட வேண்டும். ஒவ்வொரு வ்யாசத்தை அடுத்தும் வ்யாசத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை விவாதிக்காது மடை மாற்றம் செய்யும் போக்கு இந்த தளத்தில் அதிகரித்து வருகிறது. அது ஏன் சுட்டிக்காட்டப்படக்கூடாது என நினைக்கிறீர்கள்?

  ஆர் எஸ் எஸ் காரர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று ஒரு இஸ்லாமியர் பொது மன்றில் பொய் சொல்லியிருக்கிறார். அது பொய் என்று நிறுவ தரவுகள் இந்த வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளன். நீங்கள் அதை ஏன் கண்டிக்கவில்லை?

  ஸ்ரீ ம.வெ அவர்களுடைய வ்யாசத்தில் கொடுக்கப்பட்ட சுட்டியில் தேசிய கீதம் பாடுவது ஹராம் என்று ஒரு இஸ்லாமிய சிந்தனை தளம் சொல்லியிருக்கிறது. அதை ஏன் நீங்களோ அல்லது மீரான் சாஹிபோ கண்டிக்கவில்லை? இது வரை எதிர்மறைக் கருத்துக்கள் பகிர்ந்த ஒரு அன்பராவது ஸ்ரீ ம.வெ அவர்களது வ்யாசத்தில் எங்கு வந்தே மாதரம் பாடலை அவர் ப்ரஸ்தாபித்துள்ளார் என்று பகிரவே இல்லை. அப்போது இது பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் வ்யாசத்தை மடை மாற்றம் செய்வதாகத் தானே கருதப்பட வேண்டும்.

  ஸ்ரீ ம.வெ அவர்களுடைய வ்யாசத்தில் பகிரப்பட்ட சுட்டியில் தேசிய கீதத்தை எழுதிய குருதேவ் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களை இழிவு செய்யும் வண்ணமாக அவர் இங்கிலாந்து மன்னரை துதி செய்ய இந்த கீதம் இயற்றினார் என்று எழுதப்பட்டுள்ளது. தேசிய கீதத்தையும் அதை எழுதிய சான்றோரையும் இழிவு செய்த இஸ்லாமியப் பதர்களை கண்டிக்க உங்களை எது தடை செய்கிறது?

  வந்தே மாதரம் பாடல் பற்றி ஸ்ரீ ம.வெங்கடேசன் ஏதும் ப்ரஸ்தாபிக்காத போது எதற்காக விவாதத்தை ஜெயசீலனில் துவங்கி அதையடுத்து ஜெனாப் மீரான் சாஹேபும் நீங்களும் மடை மாற்றம் செய்துள்ளீர்கள்.

  ஒட்டு மொத்த இஸ்லாமியரோ க்றைஸ்தவரோ வ்யாசத்திலோ அல்லது உத்தரங்களிலேயோ எந்த வாசகத்திலும் எதிர்மறையாக விமர்சிக்கப்படவில்லை. எதற்காக அப்படி பொய் சொல்கிறீர்கள்? மிகப்பல இஸ்லாமியர் விதந்தோதப்பட்டுள்ளதை எதற்காக மறைத்து ……… ஒட்டு மொத்த இஸ்லாமியரும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?

  தேசிய இயக்கமான ஆர் எஸ் எஸ் ஏகல் வித்யாலயா போன்ற பள்ளிகளை மட்டிலும் 50000க்கும் மேற்பட்டு கட்டி தேச முழுதும் கல்விப்பணி அளித்து வருகையில் ………. இந்த ஸ்தாபனம் ஒரு திண்ணைப்பள்ளியையாவது கட்டியிருக்கிறதா என்று நீங்கள் அறியாது சொல்லியிருக்கிறீர்களா? அல்லது கூசாமல் வேண்டுமென்றே பொய் சொல்லியிருக்கிறீர்களா?

  முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற ஸ்தாபனம் மூலம் ஷியா, பரேல்வி ஸுன்னி, தேவ்பந்தி ஸுன்னி, அஹ்மதியா, ஸூஃபி போன்ற அனைத்து சம்ப்ரதாய இஸ்லாமிய சஹோதரர்களுடனும் தேசிய ஒற்றுமையிலும் மத நல்லிணக்கத்திலும் ஈடுபாடுள்ள ஆர் எஸ் எஸ் இயக்கம் தொடர்ந்து சம்வாதம் நிகழ்த்தி வருகையில் இந்த ஸ்தாபனம் இஸ்லாமியருக்கு எதிரானது என்று எதற்காகச் சொல்லுகிறீர்கள்

 66. திரிபுகள் இல்லாமல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கருத்துப் பகிரும் இடதுசாரிகளுடனும் மிகக் குறிப்பாக தமிழ்பேப்பர் அன்பர் ஸ்ரீ மருதன் அவர்களுடன் பல முறை விவாதித்திருக்கிறேன். எல்லாக் கருத்தாக்கங்களிலும் நிறை குறைகள் இருக்கின்றன என அறிவேன்.

  ஆனால் தற்சமயம் நீங்கள் பகிரும் ஒவ்வொரு கருத்தும் பொய்கள் நிறைந்ததாகவும் முனைந்து மடைமாற்றம் செய்ய விழைவதாகவும் அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை அடுத்தவர் சொல்லியதாகக் கருத்துத் திரிபுகள் செய்யுமுகமாகவும் இருக்கிறது.

  நேர்மையான விவாதத்தில் வாசிப்பவர் அனைவருக்கும் பங்குண்டு. அறவே நேர்மையற்ற திரிபு சார்ந்த விவாதம் யாருக்கும் பயனற்றது.

  தாங்கள் ஆர் எஸ் எஸ் ஒரு திண்ணைப்பள்ளியையாவது கட்டியிருக்கிறதா என்று சொன்னபோது அறியாமல் நீங்கள் சொல்லியதாகக் கருதி உண்மை என்ன என்று விளக்குமுகமாகவே உண்மைக் கருத்துக்கள் என்னென்ன என்று நான் அறிந்த வரை விபரம் பகிர்ந்திருந்தேன். அதில் பிழை இருக்குமானால் அதைத் துலக்குவது நேர்மையானது.

  ஆனால் அக்கருத்தை மேலும் மடைமாற்றம் செய்யுமுகமாக தாங்கள் சொன்ன கருத்து கூசாமல் பகிரப்பட்ட பொய்………. என்பதை அப்படியே மறைத்து……. அப்படியே 50000 பள்ளிகள் கட்டியும் என்ன ப்ரயோஜனம் என்று கருத்துப்பகிர்கிறீர்கள்.

  பொருளற்றுத் தொடரும் விவாதத்திலிருந்து அமைகிறேன். க்ஷமிக்கவும்.

 67. கிருஷ்ணாகுமார் அவர்களே வந்தேமாதரம் பற்றி நான் முதலில் இழுக்கவில்லை.முதல் கடிதம் எழுதிய திரு ஜெயசீலன்கணபதி அவர்கள்தான் தேசியக்கொடி பிரச்சனையோடு வந்தேமாதரத்தயும் இணைத்து எழுதி இருந்தார்கள்.அதில் ஒன்றும் தப்பும் கிடையாது.ஏனெனில் வந்தேமாதரம் தேசியக்கொடி எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதான்.பல காலங்களாகவே வந்தேமாதரமும் அரசியல் ஆக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததுதான்.ஆக வந்தேமாதரம் பற்றிய விவாதம் ஒன்றும் தலைப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.
  தேசியக்கொடி விவாதத்திற்கே வருகிறேன்.ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தில் நடந்த வாதத்தை வைத்தே இந்த கட்டுரை வரையப்பட்டிருக்கிறது.நான் அந்த விவாதத்தை பார்த்திருக்கிறேன்.அதைதான் ஆதாரத்தோடு குறிப்பிட்டேன்.”முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் “இது சிவசேனை கருத்து.இதுதான் விவாதத்தின் தலைப்பு.இதில் பேசிய இந்த்த்துவர் தான் மதரசாக்களில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த முஸ்லிம் பேச்சாளர் ஏற்றப்படுகிறது இதோ ஆதாரம் என்று மாநிலம் மாவட்டம் ஊர் மதரசாவின் பெயர் என்று அனைத்தையும் சொன்னார்.இதோ இந்த தளத்தில் வந்த கட்டுரையில் ஆர் எஸ் எஸ் கொடியேற்றுவதை புகைப்படத்தோடு வெளியிடப்பட்டிருக்கிறது.ஆக இருவருமே ஒருவரை ஒருவர் தெரியாமல் கருத்து வெளியிட்டுருக்கிறார்கள் என்று நாம் இதை எடுத்து கொள்ளலாம்.அதை விடுத்து அந்த இஸ்லாமியர் மட்டும் தான் பொய் சொன்னது போலவும் நான் அதற்கு வக்காலத்து வாங்குவது போலவும் ஏன் சித்தரிக்கிறீர்கள்.இதில் ரங்கன்,வெங்கடேஷ் போன்ற வர்களின் கருத்தை பார்த்தீர்களா.?இந்த கட்டுரையோடு அவர்களின் கருத்துகளுக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா?.உங்களுக்கு அவர்களின் கருத்து ஏற்புடையதா.அதை கண்டித்தீர்களா?நம்முடைய அன்றாட வாழ்க்கையே இன்று பெரும்
  போராட்டத்தோடும் பிரட்சனைகளோடும் கழிந்து கொண்டிருக்கும்போது நாம் எவ்வளவு ஒற்றுமையோடும் இணக்கமாகவும் இருந்து இவைகளை எதிர்கொள்ளவேண்டும்?தேசியக்கொடியை எல்லோரும் எல்லா நேரமும் ஏற்றல் என்பது அவ்வளவு முக்கியமா? நாம் முரண்படும் விஷயங்கள் ஏராளம் இருக்கலாம்.அதே வேளை உடன்படும் விஷயங்கள் அதை விட ஏராளம் இருக்கிறது.உடன்பாடுகளை சொல்லி சொல்லி நெருங்க வேண்டுமே அல்லாது முரண்பட்டு முரண்பட்டு முட்டி மோத வேண்டாமே. நாம் கட்டிய மனைவியோடு நாம் பெற்ற பிள்ளைகலோடுமே ஆயிரம் வேறுபாடுகளோடு வாழும்பொழுது இவ்வளவு பெரிய தேசத்தில் ,எத்தனை மொழி ,எத்தனை உணவு முறை !எப்படி வேறுபாடு இல்லாமல் இருக்கும்?வேறுபாடு இருக்கும் .இருக்க வேண்டும்.அதுதான் பல்வேறு வகையான சிந்தனைகளை நமக்குள் தூண்டும்.ஒருவரை ஒருவர் புரிந்து ஏற்று பழகும் பக்குவத்தை நமக்கு தரும்.நாம் இருவரும் நேரில் சந்தித்தால் சகோதர உணர்வால் பிணைய வைக்கும்.இதுவே இந்தியா.இதுவே பெருமை.இதுவே உலக நாடுகளை பொறாமையால் பார்த்து poruma வைக்கும்.இதற்கு முயல்வோம்.

 68. திரு மீராசாஹிப்

  //இதில் ரங்கன்,வெங்கடேஷ் போன்ற வர்களின் கருத்தை பார்த்தீர்களா.?இந்த கட்டுரையோடு அவர்களின் கருத்துகளுக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா?.உங்களுக்கு அவர்களின் கருத்து ஏற்புடையதா.அதை கண்டித்தீர்களா?//

  கொடியேற்றுவது பற்றி நான் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லைதான். ஏனென்றால் கொடி ஏற்றுவது என்பது மிகப் பெரிய விஷயம் – அதில் பல விதிகள் இருக்கின்றன. அவற்றை அரசும், ராணுவமும் மிகச் சரியாகப் பின் பற்றுவார்கள். சாதாரண குடிமகனுக்கு அந்த உரிமை உண்டு என்றாலும் எல்லோராலும் அதை சரியாக கடைப் பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. RSS ஐ வெளியிலிருந்து பார்ப்பவன் நான் என்றாலும் அவர்கள் அதை சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அது போல மதராசாக்களில் கொடி ஏற்றுவது உண்டு என்றால் மகிழ்சியே. நீங்கள் கூறுவது போல இதில் பிரச்சினை இல்லை. வந்தே மாதரம் என்று வரும்போது திரு ஜெயசீலன் இஸ்லாத்தின் ஏக இறைவன் கொள்கை பற்றி பேசுகிறார். இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. சரி நீங்கள் வந்தே மாதரம் பாடக் கூட வேண்டம். அதைப் ‘புண்ணாக்கு’ என்று கூறும் போது வாயை அடைத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா ? ‘ மார்தட்டியவனடா’ – இதுகூட தேசத்தின் பால் உள்ள பெருமை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ‘ இக்பால் ‘ பின்னர் தன் பாட்டை மாற்றியாவர்தானே. ( ஆனால் நான் அந்த பதிலில் கண்ணியம் இல்லாமல் எழுதி இருக்கிறேன் – மன்னிப்பு கோருகிறேன்.)

  திரு தாயுமானவன் ‘மரமண்டை’ என்று கூறும்போது அவருக்கு திருப்பி சொன்ன பதில் உங்களுக்கு வேண்டுமானால் தவறாக இருக்காலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை ஒலி பெருக்கி வைத்து செய்யும் வழிபாடு – அது வேத கோஷமாக இருந்தாலும் சரி, ஆடி அம்மனாக இருந்தாலும் சரி, அய்யப்பனாகட்டும், கர்த்தராகட்டும், நமாசாகட்டும் – பிறர் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்காத வழியே.
  என் வீட்டு பூஜையை வெளியில் கொண்டு வருவது நான் விரும்பாத விஷயம். ஆனால் இதைச் சொல்ல எனக்கு உரிமை இல்லையே.

  நானும் என்னுடைய முஸ்லிம் நண்பன் வீட்டில் ரம்ஜான் விருந்து சாப்பிட்டவன் தான். ஒவைசி பேச்சு கேட்கும் போது கூட – சரி இது அவர்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு, நாளடைவில் சரிஆகிவிடும் என்று தான் நினைத்தேன். தமிழ் நாட்டில் இருந்து IS க்கு இளஞர்கள் செல்கிறார்கள் என்று தெரிய வரும்போது தான் எனக்கு அவ நம்பிக்கை உண்டாகிறது.

  https://www.bbc.co.uk/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

  நீங்கள் தேசப் பற்று மிக்கவர்தான் என்பது உங்கள் எழுத்துக்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உங்கள் தலைவர்கள் அப்படியா என்பது இப்போது கேள்விக்குறியாய் இருக்கிறது.

 69. அன்பின் ஜெனாப் மீரான் சாஹேப்

  ஐயா என்னுடைய கருத்துக்கள் இந்த வ்யாசத்தில் சொல்லப்பட்ட விஷயங்களைச் சார்ந்து தான்.

  ஹிந்துக்கள், இஸ்லாமியர், க்றைஸ்தவர், ஃபார்ஸிகள் என அனைத்து மத சான்றோர்களையும் உள்ளடக்கிய அரசியல் நிர்ணய சபையில் NATIONAL ANTHEM என ஜன கண மன கீதமும் NATIONAL SONG என வந்தே மாதரம் பாடலும் (எந்த ஒரு மதத்து தெய்வத்தையும் குறிக்காத முதல் இரண்டு அடிகள்) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபை எந்த ஒரு கட்சியையும் சார்ந்தது அல்ல.

  வந்தே மாதரம் பாடல் பற்றி………….

  ஜெயசீலன் அவர்கள் ****ஆனால் வெங்கடேசன் அதோடு நிற்கவில்லை. அவர்கள் ஏன் வந்தேமாதரம் பாடவில்லை என்கிறார்** என்று கருத்துப் பதிந்துள்ளார்………

  ஸ்ரீமான் தாயுமானவன் அவர்கள் இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை எப்படியாவது இசுலாமிய எதிர்ப்பு பாடலான “வந்தே மாதரம்” …………. என்று கருத்துப் பதிந்துள்ளார்.

  தாங்களோ ஆனால் அன்பர் ஜெயசீலன் மற்றும் ஸ்ரீ தாயுமானவன் அவர்களை நடுநிலையாளர் என்று கருத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இதுவரை ஒருவராவது ஸ்ரீ ம.வெ அவர்களது வ்யாசத்தில் எந்த வாசகத்தில் அவர் வந்தே மாதரம் பாடலை ப்ரஸ்தாபித்திருக்கிறார் என்று கருத்துப் பகிரவில்லை.

  நான் குரான்-ஏ-கரீம் வாசித்ததில்லை. ஆனால் குரன்-ஏ-கரீமில் பாரங்கதம் உடைய முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் ஸ்தாபனத்தைச் சார்ந்த அன்பர்கள் அரசியல் நிர்ணய சபையால் அங்கீகாரம் பெற்றுள்ள இந்தப்பாடல் இஸ்லாம் மதத்துக்கு விரோதமாக ஏதும் இல்லை என்றுமத ரீதியாகவும் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.

  என்னுடைய கருத்தை முன்னரே பகிர்ந்த படிக்கு வந்தே மாதரம் பாடலைத் தாங்கள் பாடமல் இருப்பது உங்கள் இஷ்டம். ஆனால் பாடல் புண்ணாக்கு என்று இழிவு செய்யப்பட்டது எனக்கு உடன்பாடு உடையது அல்ல.

  அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதம் என்றும் தேசியப்பாடல் என்று அங்கீகரிக்கப்பட்ட பாடலையும் மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும் என்பது என் புரிதல். இதை மதிப்பது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பக்ஷம் இழிவு செய்யாமலாவது இருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

  ****தேசியகீதம் பாடுவது ஹராமாம்.: எப்படிப்பட்ட பொய்**** என்று தாங்கள் கருத்துப் பகிர்ந்திருந்தீர்கள். இந்த வ்யாசத்தில் கொடுக்கப்பட்ட சுட்டியில் காணப்படும் ஒரு இஸ்லாமிய கருத்துத் தளம் தேசிய கீதத்தைப் பாடுவது ஹராம் என்று சொல்லியுள்ளது. தேசிய கீதம் பாடுவது ஹராம் இல்லை ………..என்று தாங்கள் கருதினால் அந்த தளத்துக் காரர்களுக்கு உங்கள் மதநூலின் சாராம்சங்களை எடுத்துறைத்து தேசிய கீதம் பாடுவது ஹராம் ஆகாது என்று நிறுவுவது முறையான செயற்பாடு ஆகும்.

  முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் ஸ்தாபனத்தைச் சார்ந்த சான்றோர்கள் ஜாமியத் உலேமா இ ஹிந்த் ஸ்தாபனத்தாரின் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான ஃபத்வாவைக் கண்டித்தது இப்படி அறிவு பூர்வமாகவே. அத்தோடு நிற்காமல் வந்தே மாதரம் பாடலை அவர்கள் மா தஸ்லிமத் என உர்தூவில் மொழிபெயர்ப்பு செய்த படிக்கு இந்த ஸ்தாபனத்தைச் சார்ந்த நமது இஸ்லாமிய சஹோதரர்கள் இப்பாடலில் இஸ்லாமிய மதத்துக்கு விரோதமாக ஏதும் இல்லை எனவும் நிறுவியுள்ளனர்.

  இந்த தேசத்தின் மாண்பு இதனுடைய பன்மைத்துவம் ஆகும். இந்த பன்மைத்துவத்தை மதிக்க ஆர் எஸ் எஸ் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. தேசத்தின் பண்பாட்டு வேர்களில் ஹிந்துக்கள் மட்டிலும் ஆழ்ந்தவர்களில்லை. நமது இஸ்லாமிய மற்றும் க்றைஸ்த்வ சஹோதரர்களும் கூட ஆழ்ந்திருக்கிறார்கள் என்ற படிக்கே மாற்று மதத்தைச் சார்ந்த அவர்களோடு தேச ஒற்றுமைக்கான சம்வாதம் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் தொடர்கிறது. அது அவ்வாறு தொடர்வது தேச ஒற்றுமையை வளர்க்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

  குதா ஹாஃபீஸ்

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 70. 1. RSS இன் தேசபக்தி பற்றி குறை கூறுவது தேவை இல்லாதது. ஹிந்துக்களின் ஒரே நாடு இது. எனவே இந்த பக்தி பற்றி குறை கூறுவது தேவை அற்றது. நாம் கோடி ஏற்றுவது பற்றி யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை. கட்டுரையே தேவை அற்றது.

  2. RSS தன் சகோதர அமைப்புகள் மூலம் செய்யும் கல்விச் சேவைகள், நேரில் பார்த்தவர்களுக்கு நன்கு புரியும்.

  3. RSS எமெர்ஜென்சி எதிர்ப்பு முதல், ஸ்வதேசி பொருளாதாரக் கொள்கை முதல், தொழிற் சங்கம் வரை எல்ல தளங்களிலும் பனி செய்து வருகிறது.
  4. அதே சமயம் இஸ்லாம் ஒரு இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காத சமயம். அவர்கள் நபிகள் நாயகத்தையே உருவ வழிபாடு செய்யாதவர்கள். அவர்களைப் பொய் அதை வணங்கு – இதை வணங்கு என்றுசொல்லுவது தவறு.
  5. ஆம். தெரசா அவர்கள் மத மாற்றம்தான் செய்தார்கள். அதை ஒரு ஹிந்து சொல்லுவதில் என்ன தவறு?
  6. இரு பக்கங்களிலும் உள்ள சிலர் செய்யும் தவறுகள், அந்த பக்கத்திலேயே கண்டிக்கப்பட வேண்டும். ராகுல் காந்தியால்தான் நேபாள பூகம்பம் வந்தது என்று ஒருவர் உளறியபோது, ஹிந்துக்கள் அதைக் கண்டித்தனர். அதே போல் எல்லா பக்கத்திலும் நடப்பதில்லை. மதானி, ஓயவசி போன்றவர்களின் பேச்சு கண்டிக்கப்படுவதில்லை.

  ஹிந்து பண்பாட்டின் சிறப்பே விவாதம்தான். நாம் இன்றைய நிலையில், நல்ல விவாதங்களை நடத்த வேண்டும். இன்றைய மீடியா, NGO போன்றவைகள், ஹிந்துக்களின் குரலை நசுக்குகின்றன, ஹிந்து என்று சொன்னாலே அவனை தீவர வாதியாகக் காட்டுகின்றன. அதே சமயம், மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்வதும் இல்லை, அது பற்றிச் சொன்னால் மதச்சார்பின்மைக்கு தீட்டு என்று நடந்து கொள்கிறார்கள். அரசியல் கட்சிகளும் அவ்விதமே. இதுதான் இன்றைய பிரச்சினை,

 71. 1. அது என்ன மீரா SAHIB ? சாஹிப் என்று தனக்குதானே பெருமைபடுத்தி கொள்ளவா?

  2. திரு ரங்கன் அப்படி என்ன பொல்லாத கருத்தை சொல்லிவிட்டார்.? அவரை கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ”’புண்ணாக்கு” என்று சொன்னதைவிடவா?

  3. வந்தேமாதரம் பாட எதிர்ப்பு தெரிவிக்கிரீரே! திரு காய்தே மில்லத் அதற்கு தெரிவித்தாரா? அவரும் முஸ்லிம்தானே? அவர் ஏற்றுகொள்ளும்போது நீங்கள் ஏற்று அதை பாடினால் என்னவாம்? இல்லை இல்லை அவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்றால் அவர் எதற்கு காங்கிரஸ் கட்சியில் நீடித்தார்? விட்டு வெளியேறி இருக்க வேண்டுதுதானே?

  4. இந்த சாஹிப் பெற்ற தாயை மதிப்பாராம். ஆனால் அவரை வணங்க மாட்டாராம்!
  முந்தி முந்தி தவமிருந்து 300 நாள் சுமந்து அந்தி பகலாய் ஆதரித்து உச்சி மோந்து முத்தமிட்டு தன உதிரத்தை பாலாக்கி தந்த அந்த கண் கண்ட தாய் வணங்க மாட்டாராம். ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு கற்பனையான கடவுளை மதிப்பாராம். மேலும் வணங்குவாராம். ஒரு துன்பம் வரும்போது அம்மா! என்று அழைத்தால் ஓடோடி வருவாள் பெற்ற தாய். அல்லா! என்று அழைத்தால் வந்து காப்பாற்றுவானா? அப்படி காபாற்றுகிரவனாக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் மெக்காவில் ஜன நெரிசலில் பல முஸ்லிம்கள் இறந்தனரே. அப்போது அவர்கள் அல்லா அல்லா என்று கூவாமலா போய்விட்டார்கள்? அப்போது அவர்களை காப்பாற்றாமல் போனது ஏனப்பா?

  5. ”பாரத தாய் ஒரு தேவிடியா” என்று டெல்லி இமாம் சொல்லுவான். பாரத தாயை நிர்வாணமாக ஹுசைன் என்று கிறுக்கு ஓவியன் வரைவான். அதையெல்லாம் இளிச்ச வாயர்களான நாங்கள் அமைதியாக பொறுத்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால் நபியை ஒரு பத்த்ரிக்கை கார்ட்டூனாக வரைந்தால் நீங்கள் பொங்கி எழுந்து பிரான்ஸ் நாட்டில் 12 பேரை கொல்லுவீர்கள்.

  6. ஒரு நாட்டின் சட்டத்தை முதலில் மதிக்க கற்று கொள்ள தெரியவேண்டும். எந்த சட்டத்திற்கும் நான் பணிய மாட்டேன். என் மத சட்டத்திற்குதான் நான் அடிபணிய வேன் என்று சொல்வது அடாவடிதனம்தானே? இது செகிலரிசம் போற்றும் நாடு.என்பதை மறந்துவிடவேண்டாம். உமக்கு மதம்தான் முக்கியம் என்றால் நீர் பாகிஸ்தான் போகவேண்டும்.என்று சொன்னால் ”ஆஹா என்ன திமிரான வார்த்தை. நாங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமி. எங்களையா பாகிஸ்தான் போக சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறீர்கள். சரி நான் இங்கே கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லும். 1946ல் நநடந்த தேர்தலில் 95% க்கு அதிகமான முஸ்லிம்கள் greater இந்தியாவை உடைத்து பாகிஸ்தான் என்ற முஸ்லிம் நாட்டை உருவாக்க வாகளித்தார்கள். அவர்கள் நினைத்தது போலவே நாடு கிடத்தும் 15% முஸ்லிம்களே பாகிஸ்தானுக்கு போனார்கள். 85% முஸ்லிம்கள் இங்கேயே தங்கிவிட்டனர். 95% எங்கே? 15% எங்கே? நீங்கள் போராடி கேட்டது கைமேல் கிடைத்தபிறகு அங்கு போகாமல் இங்கேயே இருந்துவிட்டு இது நாங்கள் பிறந்த பூமி என்று கதை விட்டு கொண்டிருக்கிறீர்களா?

  7. இந்த சாஹிபுக்கு திரு கிருஷ்ணமூர்த்தி சும்மா பக்கம் பக்கமாக பதிலை பக்குவமாக பணிவாக அளித்து கொண்டிருக்கிறார். இதெல்லாம் சுத்த வேஸ்ட். அவர் (சாஹிப்) எனது கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

  8. திரு தாயுமானவன் என்ற கம்யூனிஸ்ட் கட்சிகாரர் “RSS பள்ளிக்கூடம் நடத்தி என்னத்தை கிழித்தது” என்று கேள்வி கேட்கிறார். நான் திருப்பி அவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இவர் ஆதரிக்கும் இடது கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்காளத்தில் 33 ஆண்டுகள் ஆண்டது. ஆனால் 5 வகுப்பு வரைதான் அங்கே அவர்கள் இலவச கல்வி அளித்தனர். ஆனால் இவர் கேட்கிறார் RSS என்னத்தை கிழித்தது என்று. கேள்வி கேட்ககூட ஒரு தகுதி இருக்கவேண்டும்.

 72. திரு ரங்கன் நீங்கள் வருத்தம் தெரிவித்ததற்கு நன்றி.தலைவர்களை பற்றி குறிப்பிடுகிறீர்கள் யாருக்கு யார் தலைவர்
  இன்றைய தலைவர்கள் என்பவர்கள் தங்களை வளர்த்து கொள்பவர்கள்தான்.விசிலடிச்சான் குஞ்சுகள் வேண்டுமானால் தலைவர்களிடம் மயங்கி கிடக்கும்.அது எல்லா சமயங்களிலும் கேடுகெட்ட தலைவர்களும் அதற்கு தலையாட்டுகிற தலைஇல்லா முண்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.இவர்களை முற்றிலுமாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதானே என் கருத்தின் அடிப்படை நாதம்.

 73. திரு.கிருஷ்ண குமார்

  //ஆர் எஸ் எஸ் காரர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில்லை என்று ஒரு இஸ்லாமியர் பொது மன்றில் பொய் சொல்லியிருக்கிறார். அது பொய் என்று நிறுவ தரவுகள் இந்த வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளன். நீங்கள் அதை ஏன் கண்டிக்கவில்லை?//

  எதற்க்காக கண்டிக்க வேண்டும். என் நாட்டிலேயே தேச பக்தி இயக்கம் என்கிற பெயரில் மக்களை மத ரீதியாக பிளவுப் படுத்தும் தேச விரோத இயக்கங்கள் பல நடமாடுகின்றன. நாட்டை அந்நிய மூலதனத்திற்கு தாரை வார்க்க துடிக்கும், நாட்டின் இயற்க்கை வளங்களை தனியார்மயதிர்க்கும், தாராள மயதிர்க்கும் பங்குப் போட துடிக்கும் தேச விரோத ஆட்சி ஒன்று இங்கு நடக்கிறது. இப்படி ஒரு நிலையில் அவர்களை தேச விரோதிகள் என்றுக் கூறி கண்டிக்க உங்களுக்கோ எனக்கோ என்ன தார்மீக தகுதி இருக்கின்றது.

  //வந்தே மாதரம் பாடல் பற்றி ஸ்ரீ ம.வெங்கடேசன் ஏதும் ப்ரஸ்தாபிக்காத போது எதற்காக விவாதத்தை ஜெயசீலனில் துவங்கி அதையடுத்து ஜெனாப் மீரான் சாஹேபும் நீங்களும் மடை மாற்றம் செய்துள்ளீர்கள்.//

  இந்த மடைமாற்றம் என்பது உங்கள் அளவில் உள்ள பிரச்சனை. இதற்கும் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. வெங்கடேசன் அவர்கள் தேசிய கோடி விடயத்திலேயே ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு நற் சான்று தரும்பொழுது, அதன் உண்மை முகத்தை அம்பலபடுவதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பன்முக மோசடிகளை முன்வைத்து விமர்சனம் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. இனியும் மடைமாற்றம் என்று நீங்கள் கூறினால், இதுத் தொடர்பாக தங்களுக்கு இனி எந்த பதிலையும் நான் அளிக்க போவதில்லை. மன்னிக்கவும்.

  //தேசிய இயக்கமான ஆர் எஸ் எஸ் ஏகல் வித்யாலயா போன்ற பள்ளிகளை மட்டிலும் 50000க்கும் மேற்பட்டு கட்டி தேச முழுதும் கல்விப்பணி அளித்து வருகையில் ………. இந்த ஸ்தாபனம் ஒரு திண்ணைப்பள்ளியையாவது கட்டியிருக்கிறதா என்று நீங்கள் அறியாது சொல்லியிருக்கிறீர்களா? அல்லது கூசாமல் வேண்டுமென்றே பொய் சொல்லியிருக்கிறீர்களா?//

  கூசாமல் பொய் சொல்ல்வது எப்படி என்று ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் தான் பயிற்சி எடுக்க வேண்டும். நான் அதில் அவ்வளவு நிபுணன் அல்ல. 50,000 பள்ளிக்கூடங்கள் கட்டி கல்வி சேவை தருகிறார்கள் என்பதே ஒரு மோசடியான விளம்பரம்.

  உங்கள் வாதத்தின் படியே ஏகல் வித்யாலாவின் 50,000 பள்ளிகள் நாடு முழுவதும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. உங்கள் கணக்கு படி பார்த்தால் மாநிலத்திற்கு 1720 பள்ளிகள் என்று தோராயமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவ்வளவு பள்ளிகள் எங்கே இருக்கிறது என்று கூற முடியுமா. கூறுங்கள் நேரில் சென்று பார்த்து விட்டு வருவோம். அட, 1700 வேண்டாம் குறைந்தது ஒரு 100 பள்ளிகலாவது எங்கு நடக்கிறது என்று எனக்கு காட்டுங்கள் அது போதும்.

  உண்மை என்னவென்றால் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆர்.எஸ்.எஸ் உண்மையிலேயே ஒரு தேச பற்று இயக்கமாக இருந்திருந்தால், அரசு பள்ளிகளை அலட்சிய படுத்திவிட்டு, கல்வியில் தனியார் மயத்தினை புகுத்த நினைக்கும் அரசை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி போராடி இருக்க வேண்டும். அனால். அதை செய்யாமல் ஏகல் வித்யாலயா என்கிற அரசியல் ஸ்டன்ட்டை முன்னெடுக்க என்ன காரணம் . யாரை ஏமாற்ற்ற இதுப் போன்ற நாடகங்கள்.

  //ஆனால் தற்சமயம் நீங்கள் பகிரும் ஒவ்வொரு கருத்தும் பொய்கள் நிறைந்ததாகவும் முனைந்து மடைமாற்றம் செய்ய விழைவதாகவும் அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை அடுத்தவர் சொல்லியதாகக் கருத்துத் திரிபுகள் செய்யுமுகமாகவும் இருக்கிறது.//

  இன்னும் தங்களிடம் இருந்தே நான் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில்கள் இன்னும் அளிக்கப் படவில்லை. இதில் என்னை வசைப் பாடுகிறீர்கள்.

  //இந்த பொய்க்கருத்துக்கு பதிலாகத் தான் பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்கள் ஹிந்து சான்றோர் மற்றும் துறவியர் அமைப்பை ஒன்றாகக் கூட்டி ஹிந்து சமூஹ ஒற்றுமைக்காக முன்னெடுத்த இயக்கம் பற்றிய தகவல் பகிரப்பட்டது.//

  அதைத் தான் நானும் கேட்டேன். கோல்வால்க்கர் தலைமையில் ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்த ஒரு காத்திரமான மக்கள் போராட்டத்தை எனக்கு கூறுங்கள். அப்புறம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பான என் கருத்தினை நான் மாற்றிக் கொள்கிறேன்.

  கிருஷ்ண குமார் அவர்களே.. ஆரிய மாயை, திராவிட மாயை போன்ற அனைத்து மாயைகளைக் காட்டிலும் மிக மோசமானது ஆர்.எஸ்.எஸ் மாயை, அந்த மாயையில் இருந்து உங்களை காக்க சிவ பரம்பொருளை நான் வேண்டிக் கொள்கிறேன் நன்றி..

 74. /முதலில் இந்தியாவை இந்துராஷ்ட்ரம் என்றுக் கூறுவதை நிறுத்துங்கள். கிறித்துவ, இசுலாமிய மக்களை அந்நியர்களாக எண்ண வைப்பது இதுப் போன்ற அனர்த்தமான பேச்சுகள் தான். இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவானதே//

  இந்த ஒரு வரி , நீங்கள் எந்த அளவு புத்திசாலி என்று காண்பிக்கின்றது!!.

 75. Shri மீரான் சாஹேப்
  I am not questioning you patriotism sir. It is the tenets of your religion that bugs me. For a Muslim, his loyalty is ONLY towards Islam and nothing else. Not to his parents, brothers and sisters or his nation. Islam has no borders. Period. This mean if in future, a war breaks down between say Islamic Pakistan and infidel India, Indian Muslims by the Islamic core tenets are required to support his fellow Muslim Pakistani brethren. This a worry for us Kaffirs. How can one be a true Muslim and true Indian patriotic? Please Sir, clarify this matter and I am sure that people of your status will not be indulging in Taqya on this.
  I have just finished reading Shri S.L Bhyrappa’s book ” Avarana, the veil” ( English translation). I, like the author, feel that we all can move forward and live in peace provided the Muslims acknowledge the atrocities committed by their ancestors against Hindus. ( Temple destructions, forced conversion, slavery , rape of Hindu women, etc). The present day Muslims are not responsible for the past atrocities. Acknowledging the barbaric past means that such things won’t happen in future. Germans have admitted the genocide of Jews. This sends out the message that such inhumane acts will never happen again in Germany. Sir, I hope good Muslims like yourself will start this process in earnest.

 76. ரமா அவர்களுக்கு,நான் ஆங்கில பாண்டித்தியம் பெற்றவனல்ல.நான் புரிந்த வரைக்குமான உங்கள் கருத்திலிருந்து பதில் கூற முற்படுகுறேன்.இஸ்லாமிய சித்தாந்தங்களை நீங்கள் புரிந்து கொண்ட விதத்தால் உண்டான அச்சத்தில் இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இன உணர்வால் மனிதனுக்கு உண்டாகும் வெறியை வன்மையாக கண்டிக்கிறது.போர் என்பதும் போராட்டம் என்பதும் அறத்திர்க்காகவும் நீதி நியாத்திர்காகவும் இருக்க வேண்டுமே அல்லாது என் இனம் என் மொழி என் மதம் என்ற ரீதியில் இருப்பது இறை நம்பிக்கைக்கு எதிரானது.குரானுடைய ஒரு வசனம் “நீங்கள் பிற சமுதாயத்தை விட மிகைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தால் வரம்பு மீறி விடாதீர்கள் .நிச்சயமாக வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. ” இன்னொரு வசனத்தில் “உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற நினப்பவர்களோடு இறுதி வரை போராடுங்கள்.தளர்ந்து விடாதீர்கள்”.ஆக ரமா அவர்களே இது எங்கள் பூமி.இதை எங்கள் இறைவன் எங்களின் வாழ்விடமாக ஆக்கி இருக்கிறான்.ஒரு போதும் நாங்கள் இதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம்.அப்படி ஒரு சான்றும் இது வரைக்கும் இந்த பூமியில் இல்லை.இரண்டு முறை பாகிஸ்தானோடு யுத்தம் நடத்தி இருக்கிறோம்.எந்த முஸ்லிமும் பாகிஸ்தான் ஆதரவாளனாக இருந்ததில்லை.கடைசியாக நடந்த கார்கில் யுத்தத்திலும் முஸ்லிம் ரெஜிமெண்ட் என்று சொல்லாக்கூடிய நம் நாட்டு ராணுவத்தின் முஸ்லிம் பிரிவு மிக உக்கிரமாக போரிட்டு பாகிஸ்தான் படையை விரட்டியது என்றுதான் வரலாறு.பாகிஸ்தானோடு நடந்த எந்த யுத்தத்திலும் இங்குள்ள எந்த முஸ்லிம் கட்சியும் இயக்கங்களும் பாகிஸ்தானுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆதரவாய் இருந்ததுமில்லை.

 77. திரு மீரன்சாஹிப்

  //திரு ரங்கன் நீங்கள் வருத்தம் தெரிவித்ததற்கு நன்றி//

  நான் ‘அடா/புடா’ என்று எழுதியதற்கு மாத்திரம் தான் வருத்தம் தெரிவித்தேன். மற்றபடி என் கருத்துக்களில் மாற்றம் ஏதும் இல்லை.

  //தலைவர்களை பற்றி குறிப்பிடுகிறீர்கள் யாருக்கு யார் தலைவர்
  இன்றைய தலைவர்கள் என்பவர்கள் தங்களை வளர்த்து கொள்பவர்கள்தான்//

  நான் இதுகுறித்து அனுப்பிருந்த சுட்டியில் திரு ஜவாஹிருல்லா அவர்களின் வார்த்தை கீழே.

  //இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார்.//

  https://www.bbc.co.uk/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

  அது என்ன ‘பொறுப்புணர்வு ? இது பக்கா தேசத் துரோக நடவடிக்கை என்று மிகவும் கடுமையாகவா அல்லவா அவர் கண்டித்து இருக்கவேண்டும் ? இவர் ராமநாதபுரத்து MLA. இவர் போன்றவர் உங்களுக்கு தலைவர்கள் இல்லை என்றால் பின் யார்தான் சொல்லுங்கள்.

  திரு HONESTMAN கேட்கும் கேள்விகளுக்கு திருப்பி பதில் சொல்லுங்கள் என்று நான் உங்களிடம் சொல்லப்போவதில்லை. சிறுபான்மை/ ஏக இறைவன் போன்ற எல்லைகளுக்கு அப்பால் சென்று அவைகளுக்கு விடை சொல்ல முடியுமா என்று சற்று திறந்த மனதுடன் யோசித்துப் பாருங்கள்.

  ( திரு HONESTMAN RSS/BJP இடம் தவறுகள் காணும்போதும் இதே உஷ்ணத்துடன் கருத்துகளைச் சொல்பவர் என்பது – அவருடைய பிற பின்னூட்டங்களைப் படித்திருந்தால் – தங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். )

 78. திரு கிருஷ்ணகுமார்

  முன்பு நான் சொன்னதையே திருப்பி சொல்கிறேன். திரு தாயுமானவன் நீங்கள் என்ன சொன்னாலும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. சில காலங்கள் வரை நானும் RSS பற்றி அப்படித்தான் அபிப்ராயம் கொண்டிருந்தேன். என்ன செய்வது பள்ளி காலங்களிருந்து அப்படி ஒரு போதனை. ‘கேமரா ஸ்டாண்ட் ‘ என்று அவர் கூறினால் கூறி விட்டுப் போகட்டும். விடுங்கள்.

 79. அவர்களுக்கு

  //திரு தாயுமானவன் என்ற கம்யூனிஸ்ட் கட்சிகாரர் “RSS பள்ளிக்கூடம் நடத்தி என்னத்தை கிழித்தது” என்று கேள்வி கேட்கிறார். நான் திருப்பி அவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இவர் ஆதரிக்கும் இடது கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்காளத்தில் 33 ஆண்டுகள் ஆண்டது. ஆனால் 5 வகுப்பு வரைதான் அங்கே அவர்கள் இலவச கல்வி அளித்தனர். ஆனால் இவர் கேட்கிறார் RSS என்னத்தை கிழித்தது என்று. கேள்வி கேட்ககூட ஒரு தகுதி இருக்கவேண்டும்.//

  கிழிஞ்சிதுப் போங்க… ஆர்.எஸ்,எஸ்ஸை பற்றி கேள்வி எழுப்பினால் அவர் கம்யுனிஸ்டாக தான் இருக்க வேண்டும் என்கிற உங்களின் புல்லறிவினை பார்த்து நான் புல்லரித்துப் போகிறேன். லெனின்,ஸ்டாலின் போன்றோரின் வார்த்தைகளை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன் என்பது உண்மைதான். நல்ல விஷயம் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வது என் இயல்பு. மேலும், மார்க்சியம் பற்றியோ லெனினியம் பற்றியோ நமக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பது நன்றாக ருஜூ ஆகி விட்டது. இதில் சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை.

  //”பாரத தாய் ஒரு தேவிடியா” என்று டெல்லி இமாம் சொல்லுவான். பாரத தாயை நிர்வாணமாக ஹுசைன் என்று கிறுக்கு ஓவியன் வரைவான். அதையெல்லாம் இளிச்ச வாயர்களான நாங்கள் அமைதியாக பொறுத்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். //

  இங்கு ஏற்கனவே பாரதத் தாயை அமெரிக்கா,ஜப்பான், சீன, கொரியா, ஜெர்மன் என்று உலக மேலாதிக்கங்களுக்கு கூறுப் போட்டு கொடுக்க நம் நாட்டின் இரும்பு மனிதர் நாடு நாடாக ஏலம் விட சென்று விட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் வற்றாத ஜீவ நதிக்கூட இருந்த சுவடே தெரியாமல் வற்றினாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை. இதில் இமாமையும் , ஹுசைனையும் மட்டும் தேசத் துரோகிகளாக கைக் காட்டுவது கடைந்தெடுத்த மோசடியாகும்.

 80. //அவர்களுக்கு//

  Honset man அவர்களுக்கு என்று புரிந்துக் கொள்க

 81. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  \\ இதில் என்னை வசைப் பாடுகிறீர்கள். \\

  உங்கள் கருத்தில் சாரமில்லாமையைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவே. உத்தரத்தில் வசைச் சொல் நிச்சயமாக இருக்கக் கூடாது தான். எனக்குத் தெரிந்து நான் வசைச் சொல் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. பின்னும் அப்படி ஏதும் வசைச்சொல் பயன்படுத்தியிருந்தால் நிச்சயம் தவறு. அப்படி நான் என்ன வசைச்சொல் பயன்படுத்தியுள்ளேன் என்று தெரிவித்தால் நன்றி உடையவனாவேன்.

  நீங்கள் நேர்மையான கருத்துக்களை முன்வைப்பீர்கள் என்று ஒரு நம்பிக்கை எனக்கு. அதனால் உங்கள் கருத்துக்களின் மீது மதிப்பு. அந்த உரிமையிலேயே……..இம்முறை அது முற்றும் பொய்த்துப்போனதால் கறாரான விவாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. வசை ஏதும் நான் அறிந்து பகிரப்படவில்லை. உங்கள் விவாதங்கள் கருத்துத் திரிபுகளாகவும் சாரமில்லாததாகவும் முற்றிலும் காணப்படுகின்றன. நிற்க.

  மிகவும் சலித்துப் போய் விட்டாலும்………….. உங்களுடைய சாரமில்லா வாதங்களை கட்டுடைக்க வேண்டும் என்பதால் …………… பதிலிறுக்க விழைகிறேன்.

  \\ உண்மை என்னவென்றால் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆர்.எஸ்.எஸ் உண்மையிலேயே ஒரு தேச பற்று இயக்கமாக இருந்திருந்தால், அரசு பள்ளிகளை அலட்சிய படுத்திவிட்டு, கல்வியில் தனியார் மயத்தினை புகுத்த நினைக்கும் அரசை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி போராடி இருக்க வேண்டும். \\

  க்ஷமிக்கவும். நீங்கள் இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை உடையவராக இருக்கலாம். நடைமுறை உலகில் பெருமளவு தோற்றுப் போன சித்தாந்தம் அது. முற்று முழுதுமாக அது பொய்த்துப்போகவில்லை என்று என் புரிதல். இதன் சில கூறுகளில் எனக்கும் பிடித்தம் உண்டு. நிற்க. உலகில் இடதுசாரி சித்தாந்தத்துக்கு எதிரான சித்தாந்தங்களும் நடைமுறையில் இருக்கின்றன. அவையும் நிறைகுறைகளுடன் சமூஹத்துக்கு பயனளிக்கவும் செய்கின்றன.

  மேலதிகமாக அரசு தவிர தனியார் தரப்பிலிருந்து பள்ளிகளே கூடாது என்றால் தாங்கள் மாற்று மதத்தினரான இஸ்லாமியர் மற்றும் க்றைஸ்தவர்கள் அவர்கள் தரப்பிலிருந்து நடத்தும் பள்ளிகளையும் எதிர்க்க வேண்டும். அதாவது பள்ளிகளை நடத்தும் உரிமை அரசினுடையது மட்டிலுமே என்று உங்களுக்கு சித்தாந்த ரீதியான உறுதியான கொள்கைப் பிடிப்பு இருந்தால்.

  இப்படி உங்களுக்கு ஆழ்ந்த இடதுசாரி சித்தாந்தப் பிடிப்பு இருந்திருந்தால்………….. தங்கள் தரப்பிலிருந்து ஆர் எஸ் எஸ் ஒரு திண்ணைப்பள்ளியையாவது கட்டியுள்ளதா என்று நீங்கள் முதற்கண் கேள்வியே எழுப்பியிருக்கக் கூடாது நீங்கள்…………

  \\ உங்கள் வாதத்தின் படியே ஏகல் வித்யாலாவின் 50,000 பள்ளிகள் நாடு முழுவதும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. உங்கள் கணக்கு படி பார்த்தால் மாநிலத்திற்கு 1720 பள்ளிகள் என்று தோராயமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவ்வளவு பள்ளிகள் எங்கே இருக்கிறது என்று கூற முடியுமா. கூறுங்கள் நேரில் சென்று பார்த்து விட்டு வருவோம். அட, 1700 வேண்டாம் குறைந்தது ஒரு 100 பள்ளிகலாவது எங்கு நடக்கிறது என்று எனக்கு காட்டுங்கள் அது போதும். \\

  ஐயன்மீர், உங்களுக்கு ஒரு விபரம் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்வது நேர்மை. அப்படி இல்லாமல் உங்களுக்குத் தெரியாத விஷயம் உண்மையே இல்லை என்று சாதிப்பது முறையல்ல. உங்களுக்காக இல்லாவிட்டாலும் இந்த தளத்தை வாசிக்கும் வாசகர்கள் அனைவரின் தகவலுக்காகவும் நான் சேகரித்த விபரங்களைப் பகிருகிறேன்.

  இதனால் என்னுடையை சில சம்சயங்களும் கூட தீர்ந்தது. அதற்கு உங்களுக்கு நன்றி.

  ஏகல் வித்யாலயாவை ஏகலைவ வித்யாலயா என்று நான் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன். தவறுக்கு க்ஷமாயாசனங்கள். இன்னொரு குழப்பம் ஓராசிரியர் பள்ளியை ஏகல் வித்யாலயாவுடன் குழப்பிக்கொண்டது. அதற்கும் க்ஷமா யாசனங்கள். ஆனால் இரண்டுமே சங்க பரிவார இயக்கங்கள்.

  சமிபத்திய விபரப்படி 52525 பள்ளிகள் ஏகல் வித்யாலயா ஃபவுண்டேஷன் ஸ்தாபனத்தினரால் நடத்தப்படுகிறது.

  https://www.ekal.org/school-map இங்கே பாரதத்தின் எந்தெந்த மாகாணங்களில் எவ்வளவு பள்ளிகள் என்ற விபரம்.

  2013 Annual Report படி தமிழகத்தில் 1163 பள்ளிகள் ஏகல் வித்யாலயா ஸ்தாபனத்தினரால் நடத்தப்படுகிறது.

  https://www.ekal.org/school-map இங்கு தமிழகப் பள்ளிகள் மேப்பிங்க் செய்யப்பட்டுள்ளன. பெரிதாக்கி தமிழகத்தில் உள்ள அந்தந்தப் பகுதிகளின் மீது க்ளிக்கினால் அந்தப் பகுதியிலுள்ள பள்ளிகள் யாவை அதில் உள்ள குழந்தைகள் எத்தனை? ஆண் பெண் குழந்தைகள் எவ்வளவு பேர் போன்ற விபரங்கள் கிட்டும்.

  ………………………..

  ஓராசிரியர் பள்ளி பற்றி தமிழ் ஹிந்துவில் வ்யாசம் வந்துள்ளது https://tamilhindu.com/2011/03/single-teacher-schools-an-appeal/

  கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த ஸ்தாபனத்தால் ஏகல் வித்யாலயா போலவே நடத்தப்படுகிறது.

  விபரங்கள் https://www.singleteacherschools.org/india/Schools.php. 21 பகுதிகளில் பள்ளிகள். ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு எந்தெந்த க்ராமங்களில் பள்ளிகள் நடக்கின்றன என்ற விபரங்கள் அந்தந்தப் பகுதியில் க்ளிக் செய்ய கிட்டும். ஸ்வாமி விவேகானந்தர் ரூரல் டெவலப்மெண்ட் ஸொஸைட்டி என்ற ஸ்தாபனத்தால் பூஜ்ய ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்களது வழிகாட்டுதலிலும் (சேர்மன்) ஸ்ரீ எஸ்.வேதாந்தம் (ஃபவுண்டர்) அவர்களது முனைப்பாலும் இந்தப்பள்ளிகள் நடைபெறுகின்றன.

  ………………………..

  வித்யா பாரதி…………….. அகில பாரதீய சிக்ஷா சன்ஸ்தான் …………….. தேசிய கல்விக் கழகம்…………. இந்த ஸ்தாபனத்தால் 13514 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்தப்பெறுகின்றன.

  விபரங்கள் https://vidyabharti.net/statistics.php

  மேற்கண்ட விபரங்கள் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயன்மீர். நிச்சயமாக தாங்கள் இந்தப் பள்ளிகளுக்குச் சென்று வரவும். தங்களுடைய அனுபவங்களை அறியக் காத்திருக்கிறோம். வெகு தொலைவில் உத்தரபாரதத்தில் உள்ளபடி எனக்கு தமிழக நிலவரம் நேரடியாகத் தெரியாது. தற்போது அடிப்படை விபரங்கள் தங்களிடம் பகிரப்பட்டுள்ளன. விபரங்களில் பிழைகள் இருந்தால் நிச்சயம் சுட்டவும். தகவற் பிழைகள் சுட்டப்படுவது அனைவருடைய புரிதலையும் மேம்படுத்தும்.

  நிச்சயமாக நான் அறிந்து ஏதும் தங்களை வசைபாடவில்லை. பின்னிட்டும் தாங்கள் புண்பட்டிருந்தால் எமது க்ஷமாயாசனங்கள்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 82. திரு. கிருஷ்ண குமார்….

  இன்னும் இந்த ஓராசிரியர் பள்ளி என்பதை நீங்கள் விடவில்லையா, அதையும் தாண்டி பல விமர்சனங்களை தங்களின் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது வைத்திருக்கிறேன் . ஆனால், நீங்கள் இந்த பள்ளிக்கூட விசயத்தை இன்னும் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். சரி விசயத்திற்கு வருகிறேன்.

  ஏகல் வித்யாலயா பற்றி தாங்கள் கொடுத்த ஆதாரங்களை பார்த்தேன். அனைத்தும் வேலிக்கு ஓணான் சாட்சி என்கிற ரகம் தான். இதில் உங்களுக்கு திருப்தி ஏற்படுவதில் ஆச்சர்யமில்லை. இந்த இணையம் நான் ஏற்கனவே பார்த்த ஒன்று தான். இதை தாண்டி நீங்கள் வேறு ஏதாவது உருப்படியான ஆதாரத்தை தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால்…

  இதை போன்று பல பம்மாத்துஅமைப்புகள்(பல கிறித்துவ பாதிரிகளும் அடக்கம்) இதுப் போன்ற புகைப்படங்களை காட்டி நாங்களும் கல்விப் பணி செய்கிறோம் என்றுக் கூறி நன்கொடை என்கிற பெயரில் பணம் பறிக்கும் பல கும்பல்கள் நடமாடுகின்றன. அது சரி தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ் என்பதே ஒரு மோசடி இயக்கம் தானே. இருந்தாலும் உங்கள் வாதத்திற்கு பக்க பலமாக இருக்க மேலும் 2 இணைய ஆதாரங்களை நானே தருகிறேன் கேட்ச் செய்துக் கொள்ளுங்கள்..

  https://www.thehindu.com/news/national/karnataka/ekal-vidyalayas-help-increase-attendance/article3374270.ece

  https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ekal-vidyalaya-aims-at-taking-the-school-to-the-children/article1873793.ece

  இதம் மூலம் நீங்கள் காத்திரமாக ஒன்றைக் கூறலாம்.. ஹிந்து என்கிற கம்யுனிச சார்பு பத்திரிகையேஏஏ ஏ ஏ…. கூறிய பிறகு.. வேறு என்ன வேண்டும். மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவே திருவாய் மலர்ந்து விட்டார் என்று புலங்காகிதமும் அடைந்துக் கொள்ளலாம்.

  //க்ஷமிக்கவும். நீங்கள் இடதுசாரி சித்தாந்தத்தில் நம்பிக்கை உடையவராக இருக்கலாம். //

  பார்த்தீர்களா,, நான் ஏற்கனவே கூறியதுப் போன்று ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்களுக்கு ஷாகாவில் சொல்லிக் கொடுத்ததை தாண்டி அறிவு வேலை செய்யாது என்று நான் அப்பொழுதே கூறினேன். அரசு தான் பள்ளிகளை ஏற்று நடத்தி தரமான கல்வியை தர வேண்டும் என்றுக் கூற இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை ஒரு இடது சாரி தான் கூற வேண்டும் என்றில்லை. கொஞ்சமாவது மனிதத் தன்மையோடு சிந்தித்தாலே இது புலனாகும். அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பது ஒரு கம்யுனிஸ்டாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களை நினைத்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றுமில்லை. நான் இந்து மதத்தை சேர்ந்தவான் தான், சைவத் தமிழன் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர் அட்டு கும்பல்களை அடியோடு வெறுப்பவன் நான். நம்புவதும் நம்பாமல் இருப்பதும் தங்கள் விருப்பம்.

  //மேலதிகமாக அரசு தவிர தனியார் தரப்பிலிருந்து பள்ளிகளே கூடாது என்றால் தாங்கள் மாற்று மதத்தினரான இஸ்லாமியர் மற்றும் க்றைஸ்தவர்கள் அவர்கள் தரப்பிலிருந்து நடத்தும் பள்ளிகளையும் எதிர்க்க வேண்டும்.//

  நிச்சயமாக, இதில் என்ன சந்தேகம். அதையும் தான் நான் எதிர்க்கிறேன். இசுலாமியர்களும் கிறித்துவர்களும் அதை செய்கிறார்கள் என்றால் உடனே அது புனிதமாகி விடாது. கல்வி என்பது யாரும் பிச்சையாகவோ, நன்கொடையாகவோ போடுவதல்ல. அது ஒவ்வொருவரின் உரிமை.

  //இப்படி உங்களுக்கு ஆழ்ந்த இடதுசாரி சித்தாந்தப் பிடிப்பு இருந்திருந்தால்………….. தங்கள் தரப்பிலிருந்து ஆர் எஸ் எஸ் ஒரு திண்ணைப்பள்ளியையாவது கட்டியுள்ளதா என்று நீங்கள் முதற்கண் கேள்வியே எழுப்பியிருக்கக் கூடாது நீங்கள்…………//

  ம்.. இந்த விமர்சனத்தை, தாங்கள் சுட்டிக் காட்டிய குறையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடிப்படையில் நான் வைத்தக் கேள்வி தவறான ஒன்றுத் தான். அதற்காக என்னை மன்னிக்கவும்.

  //நீங்கள் நேர்மையான கருத்துக்களை முன்வைப்பீர்கள் என்று ஒரு நம்பிக்கை எனக்கு. அதனால் உங்கள் கருத்துக்களின் மீது மதிப்பு. அந்த உரிமையிலேயே……..இம்முறை அது முற்றும் பொய்த்துப்போனதால் கறாரான விவாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. //

  தங்களிடம் இருந்தே ஆர்.எஸ்,எஸ்ஸின் செயல்ப்பாடுகள் குறித்து எந்த நேர்மையான பதிலும் எனக்கு அளிக்கப் படவில்லையே. என்னுடையது சாரமில்லாத வாதம் சரி, அனால் உங்களுடைய வாதம் மிகவும் தவறானவையாக அல்லவா இருக்கிறது. தயாராகத் தான் இருக்கிறேன் ஐயா, கறாரான விவாதத்தை இருவருமே முன்வைத்து பார்த்து விடலாம். நன்றி

 83. (0) எனது 17ந் தேதிய மறுமொழியில் சில “”பெயர்”” பிழைகள் உள்ளன. அதாவது 7 வது பாராவில் கிருஷ்ணமூர்த்தி என்பதற்கு பதிலாக கிருஷ்ணகுமார் என்று படியுங்கள் அதேபோல 3 வது பாராவில் காய்தே மில்லத் என்பதற்கு பதிலாக சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் என்று படியுங்கள்
  (1) ./////தேசத் துரோகிகளாக கைக் காட்டுவது கடைந்தெடுத்த மோசடியாகும்////. இவர்கள் தேச துரோகிகளா இல்லையா என்பது எனது வாதமல்ல. ஆனால் பிறர் மதிப்பவற்றை அவர்களின் மனம் புண்படும்படி பேசுகிறார்களே செய்கிறார்களே அது சரியா என்பதுதான் என் கேள்வி. குரான் ஒரு ”புனித நூல்” அல்ல அது ஒரு ”புருடா நூல்” என்றால் மீராசாஹிப் எனக்கு கண்டனம் செய்ய வருவதற்கு முன் இந்த தாயுமானவன் பெருத்த வன்மையான கண்டனம் செய்ய முதலில் முந்தி கொண்டு ஓடோடி வருவார். அதற்கு வருபவர் மேற்கண்ட இரு முஸ்லிம்களின் தவறான செயல்களை கண்டிக்க ஏன் முன் வரவில்லை என்று நான் கேட்டால் இங்கே மோடியை பற்றி எதை எதையோ எழுதுகிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கபோகும் நிகழ்வுகளை எல்லாம் கூறக்கூடிய ஜோசியரா இவர்? அல்லது தன்னை ஒரு பெரிய visionary leader என்று மனதுக்குள் கற்பனை செய்து கருதி கொண்டிருக்கிறாரா என்று அந்த திருசிற்றம்பலத்துக்குதான் வெளிச்சம்..

  /////உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற நினப்பவர்களோடு இறுதி வரை போராடுங்கள்.தளர்ந்து விடாதீர்கள்”/////
  இந்து பண்டிட்களின் பூர்வீக பூமியான காஷ்மீரிலிருந்து 62006 குடும்பங்களை (கவனிக்கவும் ”not நபர்களை”) அடித்து வெளியேற்றிய முஸ்லிம் தீவிரவாதிகளை அல்லா நேசித்தாரா? அந்த குடும்பங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக 40668 குடும்பங்கள் ஜம்முவிலும் 19338 குடும்பங்கள் டெல்லியிலும் 2009 குடும்பங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழ்ந்து வருவது பற்றி உமக்கு ஒரு கவலையும் இல்லை. இதிலே (வீர)வசனம் வேறு எடுத்துகாட்டு. அது சரி பங்களாதேசிலிருந்து இந்துக்களைத்தான் (அவர்கள் உங்களவர்கள் அல்ல என்று) விரட்டி அடித்து இந்தியாவிற்குள் அங்கே உள்ள முஸ்லிம்கள் அனுப்புகிறார்கள் முஸ்லிம்களை எதற்கு விரட்டி அடிகிரீர்கள்? குடும்ப கட்டுப்பாடு இன்மை, மதமாற்றம் ஆகியவை மூலம் மட்டும் இந்தியாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகையை வெகு வேகமாக அதிகரிக்க முடியாது. அதனால் infiltration மூலம் இன்னும் வேகத்தை அதிகரிக்கமுடியும் என்பதாலா? முஸ்லிம்களின் பிறந்த பூமியான பங்களா தேஷிலிருந்து எதற்கு விரட்டி அடிக்கியபடுகிரார்கள்? அங்கு அவர்கள் இறுதி மூச்சி வரை போராடாமல் இங்கு வந்து எதற்கு கள்ளத்தனமாக புகுந்து ரேஷன் கார்ட் அனைத்தும் வாங்குகிறார்கள். அப்படி அடித்து விரட்டியவர்களையும் இங்கு வந்து கள்ளத்தனமாக குடிஎறியவர்க்ளையும் அதாவது இருவரையுமே உங்கள் அல்லா நேசிப்பாராரோ?

  /////குரானுடைய ஒரு வசனம் “நீங்கள் பிற சமுதாயத்தை விட மிகைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தால் வரம்பு மீறி விடாதீர்கள் .நிச்சயமாக வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை./////
  எதை கேட்டாலும் இவர்கள் எதையாவது (ஒரு திரைகதை) வசனத்தை மேற்கோள் காட்டிவிடுகிறார்கள். பிரிக்கபடாத இந்தியாவில் 1946ல் Bengal மாவட்டத்தின் CM ஒரு முஸ்லிம் ஆவார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த நவகாளி பகுதியில் 5000 க்கு மேற்பட்ட இந்துக்களை முஸ்லிம் வெறியர்கள் கொன்றார்களே! வரம்பு மீரினார்களே! அப்போதும் உங்க அல்லா உங்களை நேசித்து கொண்டுதானே இருந்தார்? 1947ல் மேற்கு பாகிஸ்தானில் இந்துக்கள் 20%ம் கிழக்கு பாகிஸ்தானில் 30%ம் இருந்தவர்கள் ஆனால் இன்று தேதிப்படி அவர்கள் முறையே 1% மற்றும் 8% என்று உள்ளனர். காரணம் என்ன? அவர்கள் அனைவரும் மலடிகள் ஆகிவிட்டனரா? அல்லது குடும்பகட்டுபாடு செய்துகொண்டனரா? பிரசமுதாயத்தைவிட மிகுந்து இருப்பதால் வரம்பு மீறிய செயல்களை செய்ததால்தானே அவர்களின் ஜனத்தொகை குறைந்தது? ஆனால் இந்தியாவில் ஹிந்துக்களின் ஜனத்தையும் முஸ்லிம்களின் ஜனத்தொகையும் என்ன நிலை? 1951ல் இந்தியாவில் முஸ்லிம்கள் 9% ஆக இருந்தவர்கள் 2012ல் அது 14.58% ஆகியுள்ளது. ஆனாலும் அல்லா அப்போதும் அடாவடி முஸ்லிம்களை மட்டும்தான் நேசிப்பாராக்கும்! என்னைய ஒரு நேர்மையற்ற கடவுள்?

  2. ///////meerasahib on May 18, 2015 at 2:06 pm ////

  அந்த சாஹிப் தன பெயரை மீராசாஹிப் என்று எழுதும்போது திருவாளர் உயர்திரு தாயுமானவன் அதை மீரான் சாஹிப் என்று எழுதுகிறார். இவர் எப்போதுமே கருத்தில் மற்றும் எழுத்தில் ஆகிய எதிலுமே மடைமாற்றம்தான் செய்வாரா? பிறவிகுணம் போலும்!

  3. நேர்மையானவர்களிடமிருந்து நேரான பதில்கள் கிடைக்கும். ஆனால் தான் ஒரு நியாமானவன் என்று மார்தட்டி கொள்ளும் திருவாளர் தாயுமானவன் எனது கேள்விகளுக்கு நேரான பதில்களை கொடுத்திருக்காரா என்று தயவுசெய்து நன்றாக படித்து பாருங்கள். இவர் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்றே வைத்து கொள்ளுங்கள் ஆனால் 5 வது வகுப்பு வரை மட்டுமே இலவச கல்வி கொடுத்த இடதுசாரி அரசாங்கத்தை பற்றி நான் கேள்வி கேட்டால் தருகிற சரியான பதிலா இது? ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அந்த இடதுசாரி அரசாங்கத்தை கண்டித்தாரா? ஒரு அரசாங்கமே (கம்யூனிஸ்ட் )கல்வி மீது அக்கறை செலுத்தவில்லை.ஆனால் ஒரு தொண்டு அமைப்பு (RSS ) பற்றி குறை சொல்ல வந்துவிட்டார் ரஷிய ஸ்டாலினை பார்த்து மாணவர்கள் “நாங்கள் எந்த வகையில் உங்களுக்கு போராட உதவ வேண்டும்” என்று கேட்டபோது அவர் சொன்னது ” read read read ” அதுதான் நீங்கள் செய்யவேண்டியது என்று சொன்னார். ஆனால் 5 வது வரை மட்டும் இலவச கல்வி கொடுத்து “படி படி படி”என்றால் எப்படி படிக்க முடியும்? அப்புறம் literacy rate வடநாட்டில் ரொம்ப குறைவாக உள்ளது என்று அங்கலாயித்து கொண்டால் என்ன பிரயோஜனம்? அதற்கு RSS தான் முழுக்க முழுக்க முழுமுதற் காரணம் என்பது போல கூறுகிறீரே!

  (3) .//////////மார்க்சியம் பற்றியோ லெனினியம் பற்றியோ நமக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பது நன்றாக ருஜூ ஆகி விட்டது////////. “நமக்கு” என்றால் என்னய்யா அல்லது உங்களையா அல்லது இருவரையுமா? சீனாவில் மாசேதுங் 6 கோடி பேரை கொன்றதை பற்றியும் ரஷியாவில் ஸ்டாலின் 4 கோடி பேரை கொன்றதை பற்றியும் கம்போடியாவில் போல்பாட் 17 லட்சம் பேரை கொன்றதை பற்றியும் வடகொரியாவில்கிம் இல் சுங் 16 லட்சம் பேரை கொன்றதை பற்றியும் எனக்கு நன்கு தெரியும். ஆனால் அதை பற்றி எதுவுமே தெரியாமல்தான் இவர் இப்படி பேசுகிறார் என்று இப்போது இங்கே நன்றாக ருஜூ ஆகிவிட்டது. இதற்கு வெற்று சவடால் வேறு.

 84. திரு மீரன்சாஹிப்
  My congratulations for being such a patriotic Indian first and a Muslim second.
  If the Muslims in the Indian army fought against the Pakistani Muslims in the Kargil war, it means only one thing. They are NOT true Muslims and they were not following true Islam as laid down by the Prophet (PBH). You must be aware how the earlier peaceful Mecca verses were superseded by the later Medina verses by the Prophet (PBH).
  I presume you will have no problems in acknowledging atrocities done by your Muslim ancestors on Hindus. If you openly do this, we can move forward as a peaceful, multi religious society, each respecting the beliefs of the others. Denial will result in only one thing. Hindus will not be able to trust Muslims, as history tends to repeat itself.

 85. ரமா அவர்களே மக்கா வசனம் மதீனா வசனம் பற்றி பல முறை நானே வேறு தலைப்புகளில் பேசும்பொழுது சொல்லி இருக்கிறேன்.மக்காவில் இருக்கும்பொழுது அருளப்பட்ட வசனங்கள் நபியும் தோழர்களும் மிக சாதாரனகர்களாக இருந்தார்கள்.அந்த நிலையில் அவர்களுக்கு தேவையான சட்டங்கள் இறக்கி அருளப்பட்டது.மதீனாவில் வந்து ஆட்சி அதிகாரமும் அவர்களிடம் வந்த பிறகு அதற்கு தேவையான சட்டங்கள் இறக்கி அருளப்பட்டது.மதினாவில் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள்.யூதர்கள் வாழ்ந்தார்கள்.முழு அதிகாரத்தோடும் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள்.நபி மரணிக்கும் போது ஒரு யூதரிடம் தன் போர் கவசத்தை அடகு வைத்து சில ஆழாக்கு கோதுமை வாங்கி அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என்பது வரலாறு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு என்னென்ன சட்டங்கள் வேண்டுமோ வழி காட்டுதல் வேண்டுமோ அதற்கு தக்க போதனைகளே மதீனா வசனங்களில் இருக்கும்.யாரையும் அச்சுறுத்தவோ ஆதிக்கம் செலுத்தவோ அந்த சட்டங்கள் இல்லை.இஸ்லாத்தை ஏற்காத பல மக்கள் மதினாவில் சிறப்பாய் வான்ழ்திருக்கிராறாக்கள்.நீங்கள் வரலாறு படியுங்கள்.

 86. நபிகள் காலத்தில் பிற மதத்தினர் மெதினாவில் இருந்தனர். நிலைமை என்ன ? அங்கு வேற்று மதத்தவர் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டனர் அல்லது கட்டாயமாக மத செய்யப்பட்டுவிட்டனர். உண்மை.

 87. திரு.கிருஷ்ண குமார் அவர்களே ….

  தங்களிடம் ஏதும் நான் கடுமையாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும். நீங்கள் என்னிடம் க்ஷமயாசனங்கள் கேட்பது மிகவும் மனதை நெருடல் ஏற்ப்படுத்தக் கூடிய ஒன்று. என்னை விட அறிவிலும், பண்பிலும் நீங்கள் 1000 மடங்கு மேலானவர். என் நோக்கம் தங்களிடம் கடுமையான முறையில் பேசி என் கருத்தினை நிலைநாட்டுவதல்ல. அப்படி செய்வதால் நான் எந்த ஒரு பயனும் அடைய போவதுமில்லை. ஒன்றை மட்டும் நான் தெளிவாக கூறி விடுகிறேன். நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல. உண்மையாக அல்லவே அல்ல. இது வரை என் மறுமொழிகளில் இந்து மதத்தின் தத்துவார்த்தங்கலையோ, புராண இதிகாசங்களையோ இழித்தும் பழித்தும் பேசியதில்லை. தங்களின் ராமாயணம் சார்ந்த கட்டுரையில் கூட தங்களின் மணிப் ப்ரவாள எழுத்து நடையை பற்றித் தான் விமர்சித்து இருப்பேனே ஒழிய அதை தாண்டி வேறு கட்டுரை சார்ந்து நான் எந்த குறைகளையும் விமர்சனங்களையும் கூறியதே இல்லை. தங்களின் கட்டுரை மட்டுமல்ல இந்த தளத்தில் வெளியாகும் அனைத்து இந்து பண்பாடு சார்ந்து வந்த கட்டுரைகளிலும் அப்படியே. எந்த விமர்சன கண்ணோட்டத்தையும் நான் கூறியதில்லை. அது எனக்கு தேவையும் இல்லாத ஒன்று.

  ஆர்.எஸ்,எஸ் இயக்கத்தின் மீது எனக்கு எப்போதுமே நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. அதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஐயா, ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், மதம் சார்ந்து கூறப்படும் விமர்சனம் என்பது வேறு, இயக்கங்கள் சார்ந்து கூறப்படும் குறைகள் என்பது வேறு. முன்னது நம்பிக்கையின் பாற்ப்பட்ட ஒன்று, பின்னது அவ்வாறு இல்லை. ஆனால், தாங்கள் இந்து சமயத்திற்கு ஈடாக ஆர்.எஸ்,எஸ் இயக்கத்தின் மீது அதீத பற்றுதலோடு இருப்பதாக சிறியேனின் அறிவிற்கு புலப்படுகின்றது. ஆகவே, இனியும் அவ்வியக்கத்தை பற்றி விமர்சித்து தங்களின் மனதை புண்படுத்துவது தரம் தாழ்ந்த செயல் என்று என் மனதிற்கு படுவதால், இனி வரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் தொடர்ப்புடைய விவாதங்களில் ஈடுப் படமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

  ஐயா, ஒன்றை மட்டும் கூறுகிறேன். இந்து மதம் இன்று படு பாதகமான நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. வெறுமனே கோவில்களில் முண்டியடித்து கொண்டு கூடும் கூட்டத்தை பார்த்து நீங்கள் ஒரு வேளை ஆனந்தம் அடைந்தால், மன்னிக்கவும் அது கானல் நீருக்கு ஒப்பான ஒன்றே. இந்து மதத்தின் பெருமை மிகு பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் அழுகி சிதைந்துக் கொண்டிருக்கிறது. பண்பாடு என்பது பொருளாதரத்தை அடிப்படையாக கொண்டு எழுப்பப்படும் மேல் கட்டுமானமே அன்றி வேறெதுவும் இல்லை. இன்றைய நிலையில் இந்து மதத்தை காக்க வேண்டுமானால் அதற்க்கு நம் கண் முன்னே இருக்கும் ஒரே தீர்வு திலகர் பெருமானின் “சுயராஜ்ய” கொள்கையும், காந்தியின் கிராம பொருளாதார கொள்கையும் மட்டுமே. இதைத் தாண்டி மோடி முன்னெடுத்து வரும் அனைத்து விதமான “அந்நிய” சார்புடைய பொருளாதார கொள்கைகள் அனைத்தும் நாட்டையும், இந்து சமய பண்பாட்டையும் திவாலாக்கி விடும், சூனியமாக்கிவிடும். இந்த “அந்நிய” என்கிற சொல்லே இந்திய தேசத்தை பொறுத்த வரை மிகவும் ஆபத்தான ஒரு சொல். இதை நீங்கள் இந்திய வரலாறு நெடுகிலும் எங்கணும் காணலாம். அன்று அன்னியப் படைகள் நாட்டை கபளீகரம் செய்தன, இன்று அன்னிய மூலதனம். இதை மட்டும் மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒன்றுமில்லை நான் கூறுவதற்கு.

  தங்களின் மனதினை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் மீண்டும் 1000 முறை தங்களிடம் சிரம்தாழ்ந்த மன்னிப்பினை கேட்டுக் கொள்கிறேன். என் விவாதத்தை இத்தோடு முடித்து கொண்டு விடைப் பெறுகிறேன். எல்லாம் வல்ல சிவ பெருமான் உங்களுக்கு பரிபூரண ஆசிகளை வழங்கட்டும். நன்றி.

 88. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  இன்னும் சில வருஷங்களில் பணி ஓய்வு பெறப்போகிறேன். காடு வா வாங்கும் சரீர தர்மம். சரீரம் இடம் கொடுக்கவில்லையானால் முன்னமேயே விருப்ப ஓய்வு வாங்கி விடுவேன். சமூஹத்துக்கு என்னால் இன்றைய திகதியில் இன்றைய ஸ்திதியில் கொஞ்சமாவது பங்களிக்க முடிகிறதென்றால் அது ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்வ இயக்கங்களுக்கு பங்களிப்பதன் மூலமே தான். அதில் எனக்கு நிச்சயம் பெரும் மன நிறைவு உண்டு.

  முப்பத்தைந்து வருஷம் முன்னர் சேவா பாரதி எனும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூலம்…….. ஓய்வு நேரத்தில் ஏழை மாணவர்களுக்கு 10ம் வகுப்பு கணிதம் மற்றும் ஆங்க்ல பாடத்தை நான் போதித்த போது எனது வகுப்பில் இஸ்லாமிய க்றைஸ்தவ மாணவர்களும் இருந்தார்கள். அவர்கள் பரீக்ஷையில் ஜெயித்ததே……… அவர்கள் முகத்தில் ஜெயத்தின் மகிழ்ச்சியைக் கண்டதே…… எனக்கு வெகுமானமும் மன நிறைவும். என்னுடைய ஷாகாவிலும் ரெகுலராக இல்லாவிடினும் அவ்வப்போது இஸ்லாமியக் குடும்பங்களிலிருந்தும் குழந்தைகள் வந்ததுண்டு.

  \\ தங்களிடம் ஏதும் நான் கடுமையாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும். நீங்கள் என்னிடம் க்ஷமயாசனங்கள் கேட்பது மிகவும் மனதை நெருடல் ஏற்ப்படுத்தக் கூடிய ஒன்று. என்னை விட அறிவிலும், பண்பிலும் நீங்கள் 1000 மடங்கு மேலானவர் \\

  எதற்காக இப்படி ஒரு விசனம். பிணக்கு என்று வரும்போது நம்மிடம் என்ன குறை என்று முதலில் உள் நோக்கிப் பார்ப்பது என்பது இறைவனோடு நாம் அணுக்கமாகிறோம் என்பதின் அடையாளம். அஹங்காரமும் மமகாரமும் அதிகரிக்கையில் மனம் உள்நோக்கி என்றும் பாராது. வெளியே தான் குறைகளைக் காண விழையும். மாற்றுக்கருத்துள்ளவரிடமும் நிறைகளையும் காண விழைவது அனுபவ முதிர்ச்சியின் அடையாளம்.

  இணையத்தில் புழங்கிப் புழங்கி இளைய தலைமுறையினரின் நூதன பரிபாஷைகளான **அட்ச்சு வுட்டு** இத்யாதி இத்யாதி தொத்திக்கொண்டு விட்டது. என்னுடைய இயல்பான பாஷா சைலியிலிருந்து மாறுவதில் எப்போதுமே தயக்கம் உண்டு. ஆனால் மாறிய பாஷா சைலியின் பாற்பட்டு என்னுடைய கருத்துக்களில் வசவுகளும் உண்டு என்று அறிய நேரிட்டதில் உண்மையிலேயே விசனம் தான்.

  என்னை செப்பனிட்டுக்கொள்வதற்காகக் கேழ்க்கிறேன். நான் அப்படிப் பகிர்ந்த வசவு / வசவுகள் என்ன என்று தாங்கள் பகிர்ந்தால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன். மேற்கொண்டு அப்படிப்பட்ட சொற்களை தவிர்க்கலாமே என்பதால் தான்.

  வாதங்களின் மூலம் ஒருவரின் கருத்தை மற்றொருவர் மாற்றுதல் என்பது துர்லபமே. காரணம் அங்கு கருத்துக்களை விட **தான்** என்பதே மேலோங்கி நிற்பது.

  நான் என்னுடைய தரப்புக் கருத்துக்களை முன்வைக்கும் போது ஆரம்பத்திலேயே……தங்களுக்கு அது ஏற்புடையது என்றில்லாவிடினும் வாசிக்கும் வாசகர்களுக்கு கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி பரிசீலனை செய்பவர்களுக்கு உபகாரமாக இருக்கும் என்றே கருத்துப் பகிர்ந்திருந்தேன்.

 89. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  சில கருத்துக்கள். எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் பகிர விழைகிறேன். உங்களுக்கு சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். சரியல்ல என்று பட்டால் புறந்தள்ளி விடுங்கள். ஆனால் ஏற்பதையும் மறுப்பதையும் புத்திபூர்வமாக காரண கார்யங்களொடு செய்ய விழையுங்கள்.

  \\ ஆர்.எஸ்,எஸ் இயக்கத்தின் மீது எனக்கு எப்போதுமே நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. அதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். \\

  ஹிந்துக்களுக்கும் தேசத்திற்கும் ஆர் எஸ் எஸ் மட்டிலும் தான் சேவை செய்யத் தகுந்தது என்று ஆர் எஸ் எஸ் காரர்களே கூட சொல்ல மாட்டார். ரஷ்யாவிற்கு சென்ற ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையார் பத்ரிக்கையாளர்களிடம் பேசுகையில் ஆர் எஸ் எஸ் போல தாங்களும் ஒரு அமைப்பை ஆரம்பிக்க இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதை பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்களிடம் பத்ரிக்கையாளர்கள் கேட்ட போது……… அதற்கு அவர்……. ஆர் எஸ் எஸ் மாதிரி ஒன்றல்ல தேசத்திற்கு பற்பல இயக்கங்கள் தேவை……. மற்றொருவர் அது போல ஒரு இயக்கம் ஆரம்பிக்கிறார் என்றால் நல்லதே என்றாராம்.

  கல்விச்சேவை அல்லது வேறு எந்த சேவையும் சரி………. ஹிந்துக்கள், இஸ்லாமியர், க்றைஸ்தவர் என யார் செய்தாலும் அது போற்றத் தகுந்ததே. ஆனால் அதில் குறையே காணப்படக்கூடாது என்பதில் தான் பிசகு. ஹிந்துத்வ ஸ்தாபனங்களில் மதமாற்றம் என்பதைக் குறியாக வைத்து எந்தச் சேவையும் செய்வதில்லை. அது கல்விச்சேவையாக இருக்கட்டும் மருத்துவச் சேவையாக இருக்கட்டும் அல்லது இயற்கைப்பேரிடர் சமயத்தில் செய்யும் சேவைகளாக இருக்கட்டும். மாற்று மதத்தவர்களுடைய சேவைகள் மதமாற்றம் என்ற லக்ஷயத்தை முன்னிறுத்தியே முன்னகர்வன. அப்படி இருப்பினும் அந்த நோக்கத்தில் நிச்சயமாக பிழை காணலாமேயன்றி ……… செய்யப்படும் சேவைகள்…….. அதில் வேறு ஏதும் குறையில்லாமல் இருந்தால் பயனாளிகளுக்கு நிச்சயம் அது பேருபகாரம் தான்.

  வெறும் வெறுப்பின் பாற்பட்டு ஒரு சித்தாந்தத்தையோ அல்லது ஒரு மனிதரையோ அல்லது ஒரு இயக்கத்தையோ எப்போதும் அலகிட விழையாதீர்கள். அதில் உள்ள குறைபாடு உங்கள் தர்க்கிக்கும் திறன் குலைவதும் உள்ளபடி அறிய வேண்டிய நிறைகளை அறிவு முதிர்ச்சி மற்றும் அனுபவ முதிர்ச்சியின் பாற்பட்டு அறிய விழைவதும் குலைந்து விடுவது.

  ஆர் எஸ் எஸ்ஸின் கல்விச்சேவை பற்றி நான் அதிகமாகப் பகிர விழைந்தது எனக்கு அதில் உள்ள ஈடுபாடு. மேலும் தேசியக் கல்விக்கழகத்தைச் சார்ந்த மானனீய ஸ்ரீ சுப்பாராவ் ஜீ போன்ற பெரியோர்களுடன் நான் பழகிய படிக்கு. அவர் தன் வாழ்க்கையையே இதற்கு அர்ப்பணித்தவர். மற்ற விஷயங்களில் நான் அதிகம் பகிர இயலாதது…….. ப்ரதேசாந்தரங்களில் அதுவும் பெரும்பாலும் எல்லைப்புறங்களிலேயே உத்யோகம் செய்த படிக்கு……. அதிகமான விஷய ஞானம் இல்லாதது. அது என்னுடைய குறைதான்.

  இன்றைக்கு ஹிந்துஸ்தானத்தில் உள்ள கல்வியின் தேவைக்கு மிக மிக அதிகமான கல்விஸ்தாபனங்களின் தேவை அதிகம். அதை சர்க்கார் மட்டிலும் பூர்த்தி செய்ய முடியாது. தேவையான மக்களுக்கு கால தாமதம் இல்லாமல் கல்விச்சேவை கிட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 90. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

  குறை சொல்லுவதாக எண்ண வேண்டாம். தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களில் வெளிப்படையான தர்க்கப்பிழைகள் காணப்பட்டதால் அதை விளக்க முற்படுகிறேன். இவை தாங்கள் வெறுப்பை மட்டிலும் அலகீடாகக் கொண்டதால் நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். இல்லையில்லை இவை பிழைகளே இல்லை என்று நினைத்தால் புறந்தள்ளி விடுங்கள்..

  முதற்கண் அரசு தவிர யாரும் கல்விச்சேவையில் ஈடுபடக்கூடாது என்று கருத்திருந்தால் தாங்கள் ஆர் எஸ் எஸ் ஒரு திண்ணைப்பள்ளியையாவது கட்டியதுண்டா என்று கேட்டிருக்கவே கூடாது. அதுவும் ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்து தேசத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் நடந்து கொண்டு வருகையில். அது நேர்மையற்ற விமர்சனமாக தொனித்து விடுவது என்பதால். அடிப்படையில் பெருமளவு பிசகான வாதமாதலால்.

  \\ தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் அண்மையில் நான் பயணம் செய்து இருக்கிறேன். \\

  என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருந்தும் கூட எங்கெங்கு என்னென கல்விச்சேவைப் பணிகள் நடக்கின்றன என்று தெரியாமல் இருப்பது / அல்லது பிசகான கருத்துக்கள் பகிர்வது தர்க்கப்பிழையாகக் கருதப்படும் இல்லையா?

  \\ தங்களிடமே துல்லியமாக எந்த தகவலும் இல்லாத பொழுது எப்படி உங்களால் இவர்களின் சேவையை?!!! பாராட்ட முடிகிறது. \\

  பாராட்டுவதற்கு அவ்வளவு துல்லியமான தகவல்கள் தேவையா? தெரியவில்லை. இருக்கட்டும் துல்லியமான தகவல்கள் இல்லாமல் பாராட்டியது பிழை என்று வைத்துக்கொண்டாலும்,………துல்லியமான தகவல்கள் இல்லாமல் பாராட்டுவது தவறு என்றால்……… துல்லியமான தகவல்கள் இல்லாமல் இகழ்வது என்பதும் கூட தவறு தானே

  \\ மாநிலத்திற்கு 1720 பள்ளிகள் என்று தோராயமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவ்வளவு பள்ளிகள் எங்கே இருக்கிறது என்று கூற முடியுமா. கூறுங்கள் நேரில் சென்று பார்த்து விட்டு வருவோம். அட, 1700 வேண்டாம் குறைந்தது ஒரு 100 பள்ளிகலாவது எங்கு நடக்கிறது என்று எனக்கு காட்டுங்கள் அது போதும். \\

  மேற்கண்ட கருத்தைத் தாங்கள் கேட்டு விட்டு விபரங்கள் பகிரப்பட்ட பின்னர் தர்க்க ரீதியான வாதத்தில் தாங்கள் ஈடுபட்டிருந்தால்…….. தாங்கள் பகிர்ந்திருக்க வேண்டிய கருத்து,,,,,,,,ஐயா நேரில் சென்று விட்டு உண்மையிலேயே அவை நடக்கின்றனவா…….. அல்லது வெறும் புள்ளியியல் விபரமாக சகட்டுமேனிக்கு இந்தக் கணக்குகள் பகிரப்பட்டிருக்கின்றனவா? என நேரடி அனுபவத்தைப் பகிர விழையலாம். அதுமிகத் துல்லியமாக எங்கெங்கு சொல்லப்பட்ட விபரங்கள் தவறானவை என்ற குறிப்புகளுடன். அப்படிப் பகிரப்படும் விபரம் தர்க்க ரீதியாக இருக்கும். தாங்கள் பகிரும் கருத்துக்களிலும் மதிப்பு இருக்கும்.

  இவ்வளவும் நான் சொல்வது நீங்கள் குறையே சொல்லக்கூடாது என்பதற்காக அல்ல. அல்லவே அல்ல. நிச்சயம் குறைகளை சொல்லுங்கள். உண்மையான குறைகளை ………. கண்டறிந்த குறைகளைச் சொல்லுங்கள்…….. அதற்கு நிச்சயம் மதிப்பு இருக்கும்.

  \\ ஒரு சில அடிப்படைவாத அமைப்புகளை வைத்து மொத்த சிறுபான்மையினரையும் அப்படி எண்ணுவது சிறுப்பிள்ளை தனமானது. \\

  ஒட்டுமொத்த இஸ்லாமிய சஹோதரர்களையோ அல்லது க்றைஸ்தவ சஹோதரர்களையோ இங்கு அடிப்படைவாதிகளாக யாருமே சித்தரிக்காத போது இப்படிக் கருத்துப் பகிர்வது தவறானதல்லவா?

  \\ முதலில் இந்தியாவை இந்துராஷ்ட்ரம் என்றுக் கூறுவதை நிறுத்துங்கள். கிறித்துவ, இசுலாமிய மக்களை அந்நியர்களாக எண்ண வைப்பது இதுப் போன்ற அனர்த்தமான பேச்சுகள் தான். இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவானதே. \\

  இந்தியா என்ற சொல் நமது அரசியல் சாஸனம் பகிரும் சொல். அதில் எனக்கு மிகவும் மதிப்புண்டு. ஹிந்துஸ்தானம் என்பது இதற்கு சமானாந்தரமான சொல்லே தான். மேலும் ஹிந்துஸ்தானம் என்ற சொல்லுக்கு மதங்கள் கடந்த கட்சிகள் கடந்த ப்ராந்தியங்கள் கடந்த மதிப்பும் கூட உண்டு. ஹிந்துஸ்தானம் என்ற சொல் மதத்தைச் சார்ந்தது……. இஸ்லாமிய க்றைஸ்தவ சஹோதரர்களை தன்னுள் கொள்ளாதது என்பது மிகவும் பிழையான கருத்து. இது சம்பந்தமான வ்யாசம் பாதி எழுதியிருக்கிறேன். அது தொடரப்படவில்லை. மீதிப்பாதியை எழுதி இயன்றால் பகிர விழைகிறேன்.

  எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நிச்சயமாகப் பேசத் தயங்காதீர்கள். ஆனால் வெறுப்பின் பாற்பட்டு / வெறுப்பை அலகீடாகாக் கொண்டு விஷயங்களைப் பகிர முனையாதீர்கள். நீங்கள் அடிப்படையாகவாவது சேகரம் செய்த தகவல்களை மட்டிலும் பகிர விழையுங்கள். பகிரப்பட்ட தகவல்களில் தரவுகள் சார்ந்து பிழைகள் சுட்டப்பட்டால் உகப்பு கொள்ளுங்கள். உங்கள் புரிதல் மேம்படுகின்றது என்று. பிழை சுட்டுதல் என்று மட்டுமில்லாது வீண் பேச்சுக்கள் இருந்தால் நிச்சயம் அதை சுட்டிக்காட்டுங்கள்.

  என்னுடைய வாசகங்களில் வசைகள் இருந்தது எனக்கருத்துப் பகிரப்பட்டிருந்தது. இதை சொல்லுவதற்கு எனக்கு அருகதை இருக்கிறதா தெரியவில்லை. பின்னிட்டும் வசைகள் இல்லாமல் தகவல்களால் நிரம்பிய கருத்துப் பரிமாற்றம் வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் பயனளிக்கும். பாஷா சைலி என்ற குறை விடுத்து …….என்னிடம் வேறேதும் குறை காணப்படாது கருத்துப் பகிர முயற்சிக்கிறேன்.

  ஹிந்து சமூஹ ஒற்றுமை பொருளாதாரம் மட்டிலும் சார்ந்ததல்ல. ஆன்மீகம். வழி தவறிய மாற்று மத சக்திகளால் ஹிந்து சஹோதரர்களுக்கு ஏற்படும் பின்னடைவுகள்…..ஜாதி இணக்கம் / ஜாதி அகற்றம் போன்ற …… மேலும் நீங்கள் அக்கறை கொண்ட படிக்கு நமது தலித் சஹோதர மக்களின் முன்னேற்றம். அதில் பின்னடைவுகள். நாம் என்னென்ன செய்யலாம் போன்ற படிக்கு தனியாகவோ இயக்க ரீதியாகவோ நாம் என்னென்ன செய்யலாம். செய்ய வேண்டும் என்றும் பல கருத்துக்கள் பகிரப்பட வேண்டும். பகிருங்கள்.

  உங்களுடைய மற்றும் ஹானஸ்ட்மேன் போன்ற இளைஞர்களின் கையில் தான் நாளைய ஹிந்துஸ்தானம். பரஸ்பரம் புரிதலுடன் நிறையக் கருத்துக்கள் பகிருங்கள். நேர்மறையாகவும் சரி எதிர்மறையாகவும் சரி. வ்யாசங்கள் எழுதுங்கள். நீங்களேகூட ஒரு கட்டுரை எழுதிப்பகிர்வதாக சொல்லியிருந்தீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மடியிலாது ஊக்கமுடன் எழுதிப் பகிருங்கள்.

  திருச்சிற்றம்பலம்

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 91. Shri தாயுமானவன்
  Ignorance is bliss in your case sir. You have no qualms about denigrating RSS and Ekal Vidyalaya without a clue about either of them. First you challenge RSS about not doing anything, calling their work as stunts. When you were given the facts about Ekal Vidyalaya, you whinge and whine and then coming out with some rubbish statements:”ஏகல் வித்யாலயா பற்றி தாங்கள் கொடுத்த ஆதாரங்களை பார்த்தேன். அனைத்தும் வேலிக்கு ஓணான் சாட்சி என்கிற ரகம் தான். ”
  Are the Ekal teachers imparting basic education to rural children or not? Yes, yes, yes. But obviously your idea of a school ( must have a buildings, staff room etc ) is not Ekal Vidyalay’s idea of a school. Our extended family have been sponsoring quite a number of Ekal schools in India. All of them are one man school and children are taught under the shades of trees in some instances. Yes, we do get an annual report on the school with information on number of students enrolled and with pictures. It cost $500 to run one school for a year. Most of the teachers are doing the work on a voluntary basis. The schools generally become self sufficient in 5 years. Please go to any one of these schools WITH AN OPEN MIND ( hard in your case) and judge it for yourself. Your prejudice and presumptions say much about yourself than anything else. Ignorant but happy to pass judgement. Come out of the well sir and smell the coffee!
  @meerasahib
  Sir, are you willing to acknowledge the genocidal atrocities done by your ancestors in the past against Hindus in the name of Islam? Acknowledging the “Truth” only can take us forward.

 92. //////இந்த “அந்நிய” என்கிற சொல்லே இந்திய தேசத்தை பொறுத்த வரை மிகவும் ஆபத்தான ஒரு சொல்./////

  உங்கள் இந்த கருத்தை நான் அப்படியே 100% ஆதரிக்கிறேன். அந்நிய மூலதனமும் அந்நிய படையெடுப்பும் நாட்டுக்கு ஆகாது என்பதை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில்ஒரு ”அந்நிய” பெண் நம் நாட்டை ஆள் துடிப்பதை எனக்கு பிடிக்கவில்லை இந்த மண்ணுக்கு சிறிதும் சம்பந்தபடாத ”அந்நிய” மதங்களான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றை நீங்கள் முழுமனதோடு ஆதரிப்பதையும் எனக்கு பிடிக்கவில்லை.

  இந்துமதம் இன்று படுபாதாலத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பது என்பது உண்மையே. உங்கள் வருத்தம் கலப்பு ஏதுமற்ற உண்மையானது. அது உங்கள் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து வருகிறது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. இப்படி இந்து மதத்தின்மீது அளவுகடந்த பக்திகொண்ட நீர் அதை தடுத்து நிறுத்த உங்களின் செயல் எதுவும் வேண்டாம் atleast உங்களின் ஆக்கப்பூர்வ கருத்துக்களை இங்கே சொல்லலாமே! அதற்கு மாறாக ”””’அந்நிய””” மதத்தவர்களின் கொள்கைகளுக்கு ஜால்ரா போடுவதுதான் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர்கள் உங்களை பாராட்டுவதும் நீங்கள் அவர்களை ஆஹா ஓஹோ போற்றுவதும் கொஞ்சமும் சகிக்கவில்லை அவர் இந்தியனாக இருப்பதில் நமக்கு ஒருவித ஆட்சபனையும் இல்லை. ஆனால் அவர் ”அந்நிய” மதமான இஸ்லாமியராக இருப்பதும் இந்துக்களை கிண்டலடிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை.தன்னை பெற்ற தாய் நோய்வாய் பட்டால் .அவளை குணபடுத்த முயற்சிக்கவேண்டுமே அன்றி அவளை ஒதுக்கிவிட்டு எதிர் வீட்டு (இன்னொருத்தனின்) அம்மாதான் எனக்கு அம்மா என்று கூறுவது சரியா (((அதாவது இந்து மதத்தில் தவறுகள் இருந்தால் அதை திருத்த முயல்வதற்கு பதிலாக ”அந்நிய” மதம்தான் சிறந்த மதம் அதுதான் இனி என் மதம் என்று கூறுவது போல) நான் கூறுவது தவறா என்று உங்களுக்கு free time கிடைக்கும்போது ஆற அமர சிந்தித்து பாருங்கள். நல்ல ஒரு விடை கிடைக்கும்.

 93. ஹலோ MEERA sahib அவர்களே! எனது 17ந் தேதிய மறுமொழியில் 3,4,5,6 ஆகிய வரிசை எண்கள் கொண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் எங்கே? எங்கே? எங்கே? உங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லையா? அல்லது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லையா? ஒன்று எனது கேள்வியை ஏற்றுகொள்ளும் அல்லது உம தோல்வியை ஒத்துக்கொள்ளும். உங்கள் நீண்ட மௌனம் என் கேள்விகள் முற்றிலும் நியாயமானவைதான் என்று சொல்லாமல் சொல்லும் சம்மதத்திற்கு அடையாளமா? இதற்கும் மௌனம்தான் பதிலா? இல்லை ஏதாவது அல்குர் ஆனிலிருந்து அற்புத வசனங்கள் மேற்கோள் காட்டப்படுமா?

 94. dear all,
  I am Indian citizen and I am Muslim
  I love my country and I respect my national flag, I will not care about other RSS ,madrasa person,sena or any others
  So I see all Indian citizen are same and have same right
  if you not like your mother country but your self under fire or go out where u want
  only the make separate for VOte and power but the away from all danger and runaway(who make trable)
  jaihind

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *