பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)

<< முந்தைய  பகுதி

சென்ற பதிவில் பி ஜே பி எப்படி பிற தமிழ் நாட்டுக் கட்சிகளில் இருந்து வேறு பட்டது என்பதைப் பார்த்தோம். ஆனால் அது மட்டுமே ஒரு மாநிலத்தை ஆளப் போதுமான அடிப்படை தகுதியாகக் கொள்ள முடியாது. ஆகவே பி ஜே பி இது வரை அவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களில் என்ன செய்துள்ளார்கள்? மத்திய அரசில் என்ன செய்து வருகிறார்கள்? தமிழ் நாட்டுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதையும் நாம் பார்த்து விட்டால் தமிழ் நாட்டுக்கு ஒரே வழி பி ஜே பி மட்டுமே என்பதை உறுதியாக உணர்ந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகத் தெளிவாக பி ஜே பியின் சின்னமான தாமரைக்கு மிக அழுத்தமாக நம்பிக்கையுடன் நமது வாக்குகளை அளித்து விடலாம்.

என்ன செய்திருக்கிறது பி ஜே பி அரசு?

1. முதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்த்து விடலாம்.

1.1 இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளது

1.2 ஆப்கானிஸ்தானில் மதபிரசாரம் செய்யப் போய் மாட்டிக் கொண்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியை மீட்டுக் கொண்டு வந்துள்ளது

1.3 யேமனிலும், சோமாலியாவிலும் சிக்கித் தவித்தத் தமிழர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளது. நேற்றுக் கூட மூன்று தமிழர்களின் உயிர்களை பா ஜ க அரசு தலையிட்டு மீட்டுள்ளது

1.4 தென் தமிழ் நாட்டின் முக்கியமான நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. அது வரை காங்கிரஸ் அரசாங்கம் கள்ள மெளனம் சாதித்து வந்தது. செய்யவில்லை. பி ஜே பி அரசே அதை சாத்தியப் படுத்தியுள்ளது

1.5 காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக விலங்குகளைத் துன்புறுத்தாமல் நடத்த ஏற்பாடுகளை பி ஜே பி செய்து வருகிறது

1.6 தமிழ் நாடு முழுவதும் தரமான தேசீய சாலைகளை அதிகரித்து வருகிறது

1.7 தமிழ் நாட்டிற்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய எ ஐ ஐ எம் எஸ் மருத்துவமனையை அறிவித்துள்ளது

1.8 ஏராளமான புதிய ரயில் தடங்களை அறிவித்துள்ளது. தமிழ் நாட்டின் ரெயில் நிலையங்களை மேன்மைப் படுத்தியுள்ளது. வசதிகளை அதிகரித்துள்ளது. புதிய திட்டங்களைச் செயல் படுத்த மாநில அரசின் ஒத்துழைப்புக் கிடைக்காதபடியால் காத்துக் கொண்டிருக்கிறது

1.9 இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக நிவாரணத் திட்டங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுள்ளது. இலங்கையின் தமிழர்கள் வாழும் வட பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அங்கு இந்திய அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை நேரில் பார்த்து வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டுமே. தமிழ் நாட்டு மக்களின் நலன்களில் மட்டும் அல்லாது இலங்கை வாழ் தமிழர்களின்  நலனுக்காகவும் பாடுபடும் ஒரே கட்சி பா ஜ க மட்டுமே. மற்றவை எல்லாம் அவர்களை வைத்து அரசியல் செய்யும் வியாபாரக் கட்சிகள் மட்டுமே

bjp_tn_thamarai_ad1.10 குமரி மாவட்டத்தில் ஒரு பெரிய துறைமுகம் கட்ட குளச்சலில் ஏற்பாடு செய்து வருகிறது. நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்லும் குறுகிய சாலையை அகலப் படுத்தி வருகிறது. புதிய துறைமுகங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும்

1.11 இன்று தமிழ் நாட்டில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் மாநிலத்தை ஆளும் அகந்தையும் திமிரும் மூர்க்கமும் முட்டாள்த்தனமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கட்ந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை துரித கதியில் நிர்மாணித்து தமிழ் நாட்டில் மின் தடையில்லாமல் மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சாரத்தை அளித்து வருகிறது. ஆகவே மின்வெட்டைத் நிறுத்தியது மத்திய மோடி அரசாங்கம் மட்டுமே.

1.12 சென்னையில் பெருமழை காரணமாக வெள்ளம் வந்த பொழுது உடனடியாக பறந்து வந்து நிதியுதவியை ஏற்பாடு செய்தவர் பிரதமர் மோடி. அவற்றில் தன் மூஞ்சியை ஸ்டிக்கர் அடித்து ஒட்டிக் கொண்டது மட்டுமே ஆணவம் பிடித்த ஜெயலலிதா செய்த ஒரே வேலை

1.13 தமிழ் நாட்டின் பெரும்பாலான சமூக நலத் திட்டங்களுக்கு நிதி வழங்குவது மத்திய அரசே. ஜெயலலிதா அரசு சாராயக் கடை நடத்துவதையும் ஊழல்கள் செய்வதையும், இலவசங்கள் அளிப்பதையும் தவிர வேறு எந்தவொரு திட்டங்களையுமே செயல் படுத்தியதில்லை.

1.14 தமிழ் நாட்டில் நீர் வழித் தடங்களை உருவாக்கி கடல் வழியாகவும் நதிகள் வழியாகவும் போக்குவரத்தைச் செயல் படுத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழ் நாட்டில் திமிர் பிடித்த ஜெயலலிதாவின் ஆணவத்தினால் அலட்சியத்தினால் மெத்தனத்தினால் மட்டுமே அந்தத் திட்டங்கள் வேகமாக நடைபெறாமல் உள்ளன

1.15 விவசாயிகளின், மீனவர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது

இவற்றையெல்லாம் விட இன்னும் ஏராளமான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழ் நாடு இன்னும் நேரடியாகப் பயன் பெற்று வருகிறது.

இனி மத்திய அரசின் மகத்தான சாதனைகள். இந்த அனைத்து சாதனைகளையும் நான் ஒரு சில பதிவுகளில் எழுதி விட முடியாது. அதை எடுத்துச் சொல்ல பல ஆயிரம் பக்கங்கள் தேவைப் படும். இருந்தாலும் சில பகுதிகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன்

2. ஊழல் முற்றிலுமாக ஒழிப்பு

bjp_tn_anti_corruption_adபி ஜே பி அரசு ஊழல்களை ஒழிப்போம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது. அதை மத்தியிலும் மாநிலங்களிலும் கடைப் பிடித்து வருகிறது. மத்திய அரசாங்கத்தில் ஊழல்களுக்கு இடம் அளிக்கும் மறைமுகமான டெண்டர் முறைகளையெல்லாம் ஒழித்து விட்டு நேரடியாக அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இணையம் மூலமாக டெண்டர்களை ஏற்று ஏலங்களை நடத்தி வருகிறது. அதன் மூலமாக பல லட்சம் கோடி முறை கேடுகளைத் தவிர்த்திருக்கிறது. இது வரை ஊழல் அற்ற ஆட்சியை அழித்து வந்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் நடந்து வருகிறது. எந்த இடைத்தரகருக்கும் பி ஜே பி அரசில் இடமில்லை. நீரா ராடியா போன்றவர்கள் தலையிட்டு தங்களுக்கு வேண்டியவைகளை நிகழ்த்திக் கொண்ட ஊழல் ராஜ்யத்தை பி ஜே பி ஒழித்து விட்டது

தமிழ் நாட்டில் பி ஜே பி ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நேரடியான ஏலங்களை நடத்தும். சாலை போடுவதில் இருந்து சத்துணவு வரையில் நிகழும் ஊழல்கள் அழிக்கப் படும். கமிஷன்களுக்கு இனி தேவையிருக்காது. தரமான சாலைகள் போடப் படும் தரமான கட்டிடங்கள் பாலங்கள் வெளிப்படையான நேர்மையான காண்டிராக்டுகள் மூலமாக நடத்தப் படும். பெரிய அளவிலான ஊழல்கள் பெரும் அளவில் ஒழிக்கப் படும்.

ஆகவே, ஊழல்களை ஒழிக்க வாக்களிப்பீர் தாமரைக்கு.

2.  மக்களுடன் நேரடி தொடர்புகொண்ட தலைமை

தமிழ் நாட்டில் ஜெயலலிதாவை அவரது மந்திரிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் மத்திய மந்திரிகள் என்று எவருமே நேரடியாக சந்தித்து விடவே முடியாது. அவரும் எவரையும் சந்திக்கவும் மாட்டார். அவர் தன் சொகுசான பாதுகாப்பான ஏசி அறைகளை விட்டு வெளியே வருவதும் கிடையாது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அவர் நேரில் அறிந்து கொண்டதே கிடையாது. சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பொழுது சென்னையில் இருந்து கொண்டே காலதாமதமாக அதுவும் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே சென்ற சுகவாசி ஜெயலலிதா. கடவுளைக் கூட நேரில் பார்த்து விடலாம் ஆனால் ஜெயலலிதவைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் பிரதமர், ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அல்லது அவருக்கு கமிஷன் கொடுக்கும் கம்பெனிக்காரர்களாக இருக்க வேண்டும். பிறருக்கு அவர் தரிசனம் தர மாட்டார். அவ்வளவு ஆணவமும் திமிரும் பிறரை துச்சமாகவும் கேவலமாகவும் எண்ணும் கீழ்த்தர மன நிலை கொண்டவர் ஜெயலலிதா.

கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது அவரை அரை குறை ஆடை அணிந்த நடிகைகள் மட்டுமே எளிதாக சந்திக்க முடிந்தது. அவர் தனக்குத் தானே ஏற்பாடு செய்து கொண்ட பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதற்கே 24 மணி நேரமும் போதாமல் இருந்தது. எப்பொழுதும் மானாட மயிலாட குத்தாட்டங்களில் மூழ்கிக் கிடந்த சுயமோகம் கொண்ட ஒரு முதல்வராக இருந்தார். அவரும் பத்திரிகையாளர்களையோ, பொது மக்களையோ எளிதில் சந்திப்பது கிடையாது. அப்படியே சந்தித்தாலும் அவர்களைக் கெட்ட வார்த்தையில் அசிங்கமாக வசை பாடும் ஒரு கீழ்த்தரமான மனிதர். அவரது மகன் ஸ்டாலினோ பொது இடங்களில் அருகில் இருக்கும் பொது மக்களையே கை நீட்டி அடிக்கும் ஒரு ரவுடியாக இருக்கிறார். விஜயகாந்த் போன்றவர்களை சந்திக்க முடிந்தாலும் அவர் என்ன பேசுகிறார் என்பது பார்ப்பவருக்குப் புரிவதில்லை அவரை சந்திப்பவர் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கிரகிக்கும் திறன் அவருக்கும் இருப்பதில்லை. இவை தமிழ் நாட்டுத் தலைவர்களின் முதல்வர் வேட்ப்பாளர்களின் லட்சணம், தகுதி, யோக்கியதை எல்லாமே

bjp_tn_anti_freebies_ad

ஆனால் மத்தியில் பிரதமர் மோடியையோ அவரது அமைச்சர்களையோ எந்தவொரு குடிமகனும் எளிதில் தொடர்பு கொண்டு விடலாம். இமெயில், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸப், கடிதம் போன்ற அனைத்து விதமான தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அவர்கள் எளிதில் அணுகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பொது மக்களுடன் ரேடியோவில் உரையாடுகிறார். அந்த உரையாடால்களுக்குத் தேவையான தகவல்களை, குறைபாடுகளை எல்லாம் மக்களிடம் கேட்டு வாங்கி பேசுகிறார் அவற்றைத் தீர்க்க தனது வழிகளைச் சொல்லுகிறார். தினந்தோறும் ஏதாவது ஒரு கூட்டம் மூலமாக மக்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார். எந்தவொரு சரியான திட்டத்துடன் எவரும் அவரை எளிதில் அணுக முடிகிறது. எந்தவிதமான ஆணவமும் திமிரும் பந்தாவும் இல்லாமல் அனைவரையும் பணிவன்புடன் எதிர் கொள்கிறார். பேசுவதை கவனத்துடன் கேட்டுக் கொள்கிறார் குறிப்பெடுத்துக் கொள்கிறார். வெளிநாடுகளுக்குப் போனாலும் அங்கும் இந்தியர்களைத் தொடர்ந்து சந்திக்கிறார்.

அவரது அமைச்சர்களான சுரேஷ் பிரபு, சுஷ்மிதா ஸ்வராஜ், பீயூஷ் கோயல் போன்ற அனைவரையும் எப்பொழுதும் எந்தவொரு சாதாரண குடிமகனும் மிக எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. ஓடும் ரெயிலில் இருந்து ஒரு குறையை சுரேஷ் பிரபுவுக்கு ட்விட்டர் மூலமாக அனுப்பினாலோ ஒரு எஸ் எம் எஸ் கொடுத்தாலோ அடுத்த ஸ்டேஷன் வரும் முன்பாகவே அந்தக் குறையை தீர்த்து வைக்கிறார். சமயங்களில் தானே நேரடியாக வருகிறார். வெளியுறவுத் துறை அமைச்சரோ உலகின் எந்த மூலையில் எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் எந்தவொரு குறை இருந்தாலும் உடனடியாக தானே நேரடியாகத் தலையிட்டு அவர்களைக் காப்பாற்றுகிறார். தீர்த்து வைக்கிறார். இப்படித்தான் பா ஜ க தலைவர்கள் செயல் படுகிறார்கள். மக்களோடு மக்களாக வேலை செய்கிறார்கள். சேவை செய்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒரு சாதாரண வார்ட் கவுன்சிலரைக் கூட எவரும் எளிதாக சந்திக்க முடிவதில்லை.

மக்களை தினம் தோறும் சந்தித்து தமிழ் நாட்டின் மூலை முடுக்குகெளுக்கெல்லாம் சென்று குறைகளை அறிந்து தீர்த்து வைக்க அயராது பாடுபடும் எளிமையான தலைவர்கள் வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்காளர்கள் முன் உள்ள ஒரே தீர்வு பா ஜ க வுக்கு வாக்களிப்பது மட்டுமே.

ஆகவே தலைவர்களை மந்திரிகளை எம் எல் ஏக்களை எளிதில் அணுகவும் அவர்களிடம் குறைகளைச் சொல்லவும் அவை உடனுக்குடன் தீர்க்கப் படவும் வாக்களிப்பீர் தாமரைக்கு.

4. மின்சாரத் துறை மற்றும் எரிசக்தித் துறையில் சாதனைகள்

சென்ற தி மு க ஆட்சியில் தமிழ் நாடு இருண்ட ஒரு மாநிலமாக இருந்தது. ஒரு நாளின் 24 மணி நேரங்களில் 26 மணி நேரங்களுக்கு மின்சாரம் இருக்காது. அதன் பிறகு வந்த ஜெயலலிதாவும் மின்சார விநியோகத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எதையும் செய்யவில்லை. மாறாக காற்றாடி மின்சார உற்பத்தியாளர்களிடம் இருந்தும் சோலார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்தும் கமிஷன் அடிப்பதிலேயே குறியாக இருந்தார் அதற்காகவே நத்தம் விசுவநாதன் போன்ற அடியாட்களை வைத்திருந்தார். அவர் தமிழ் நாட்டின் மோசமான மின் உற்பத்தி நிலவரம் மேம்பட எதையுமே செய்யவில்லை. தமிழ் நாட்டுக்கு பயனளித்திருக்கக் கூடிய கூடங்குளம் திட்டத்தை வெளிநாடுகளில் கைக்கூலி வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்திய இந்திய விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு அதை முன்னேற விடாமல் நிறுத்தி வைத்தார். எதிலும் எங்கும் கமிஷன் அடிப்பதில் மட்டுமே அவர் அக்கறை கொண்டிருந்தார். மத்திய எனர்ஜி அமைச்சர் ப்யூஷ் கோயல் பல முறை ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டும் அவர் ஒதுக்கவில்லை. தமிழ் நாட்டில் சோலார் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடம் கூடுதல் விலையில் மின்சாரத்தை வாங்கி அதில் பல லட்சம் கோடி பெறுமான ஊழலைச் செய்தார். தினம் தோறும் மத்திய அரசு தன் தொகுப்பில் இருந்து மின்சாரத்தைப் பகிர்ந்து கொண்டதினாலேயே தமிழ் நாட்டின் மின்சாரத் தட்டுப்பாட்டு ஓரளவு சமாளிக்கப் பட்டது.

bjp_tn_electricity_ad

ஆனால் மத்திய அரசிலோ மின்சாரத் துறை வேகமாக பல சீர்திருத்தங்களைச் செய்து வருகிறது. சூரிய சக்தி மின்சார உற்பத்தியை அடுத்த ஆண்டு வாக்கில் 100 கிகா வாட்டுக்கள் உற்பத்தி செய்யப் போகின்றது. மின்சார இழப்புகளைத் தடுத்து வருகிறது. மின் பகிர்மான வழித்தடங்களை அதிகரித்து எந்த மாநிலத்திலும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவாமல் பார்த்துக் கொள்கிறது. சுதந்திரம் கிடைத்தும் இன்னும் மின்சாரம் பெறாத ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி அளவு 91 சதவீதம் உயர்ந்து உள்ளது. 973 மெகாவாட்டிலிருந்து 1062 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது

மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழகமும் இணைந்திருந்தால், 3ஆண்டுகளில் ரூ.22,400 கோடி மிச்சமாகியிருக்கும். இதன் மூலம் மின் கட்டணத்தை குறைத்திருக்க முடியும் ஆனால் அகங்காரமும் ஆணவமும் திமிரும் நிறைந்த ஜெயலலிதா இதில் அக்கறை காட்டவில்லை. விளவு தமிழ் நாட்டுக்கு பல்லாயிரக்கணான கோடி ரூபாய்கள் இழப்பும் மின்சார பற்றாக்குறையும் மட்டுமே.

இன்று மத்திய அரசின் நிலக்கரிக் கொள்கைகள் காரணமாக தமிழ் நாட்டு மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையே இல்லாத நிலை நிலவுகிறது

நாட்டில் நிலக்கரி சுரங்கங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு குறைந்த விலைக்கு முந்தைய மன்மோகன் அரசு விற்றுக் கொண்டிருந்தது. இதன் மூலமாக பல லட்சம் கோடி ரூபாய்களை மன்மோகனும் சோனியாவும் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிலை இன்று முற்றிலுமாக தவிர்க்கப் பட்டு வெளிப்படையான பொது ஏலம் மூலமாக உரிய விலைக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் உரிமை அளிக்கப் படுகிறது. இதன் மூலமாக உற்பத்தி அதிகரிக்கப் பட்டு நாட்டில் பற்றாக்குறை தீர்க்கப் பட்டுள்ளது. இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி பெரும் அளவில் குறைந்துள்ளது

ஆகவே, தடையில்லாத மின்சாரம் பெற, ஊழலில்லாத மின்சாரம் பெற, சூழல் கேடு இல்லாத மின்சாரம் பெற, சுத்தமான மின்சாரம் பெற, குறைந்த விலையில் மின்சாரம் பெற ஆதரிப்பீர் தாமரையை. வோட்டளிப்பீர் பா ஜ க வுக்கு.

5. சமூக நலத் திட்டங்கள்

முந்தைய ஆட்சிகளில் மக்களுக்காக ஒதுக்கப் பட்ட பணம் அவர்களைச் சென்றடையும் முன்னால் இடைத்தரகர்களுக்கு கமிஷனாகச் சென்றது போக மீதப் பணமே மக்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. அரசாங்கம் அளிக்கும் பென்ஷன், உதவித் தொகைகள், மான்யங்கள், இழப்பு நிவாரணத் தொகைகள் என்று எல்லாமே கமிஷன்களும் லஞ்சமும் கொடுக்காமல் சாதாரண மக்களைச் சென்றடைவதில்லை. இதன் மூலமாக மக்களுக்குக் குறைந்த நிதியே இறுதியாகச் சென்று சேர்ந்தது. அதே நேரத்தில் தகுதியில்லாத ஆட்களுக்கும் நிதி செல்வதன் மூலமாக அரசாங்கத்துக்கும் பெரும் அளவு இழப்பு நேர்ந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பிரச்சினைகளையும் மோடி அரசாங்கம் ஒரே தீர்வில் தீர்த்து வைத்தது

அதுதான் மத்திய அரசின் பிரதான் மந்த்ரி யோஜனா திட்டம் என்னும் அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கும் திட்டம். இந்தத் திட்டம் மூலமாக அத்தனை மக்களையும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்குத் துவக்க வைத்தனர். அவர்களுக்குத் தேவையான மாநியங்களும் இழப்பீடுகளும் நேரடியாக அவர்கள் கணக்குகளுக்கே அனுப்பி வைக்கப் பட்டன. இதன் மூலமாக மோசடியாக போலியாக இழப்பீடுகளும் மாநியங்களும் பெற்றவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள். உரியவர்களுக்கு மட்டுமே நேரடியாக இடைத்தரகர்களுக்கு பங்கின்றி செலுத்தப் பட்டது. இதன் மூலம் மக்கள் நேரடியாக பயனடைகிறார்கள்.

bjp_tn_mave_propaganda

வீட்டுக்கு கேஸ் சிலிண்டருக்கான மானியம் முதல் பல்வேறு நலத் திட்டங்களுக்கான பணம் இப்படி நேரடிக் கணக்கில் வரவு வைக்கப் படுகிறது. இதன் மூலம் மக்களின் சேமிப்பு சக்தியும் பெருகியது அரசாங்கத்தின் விரயமும் நீங்கியது. மேலும் வசதியானவர்களை எல்லாம் தங்களது மான்யங்களை விட்டுக் கொடுக்குமாறு மோடி கேட்டுக் கொண்டார் அதன் மூலமும் பல்லாயிரக்கணக்கான கோடி மானியங்கள் மிச்சப் படுத்தப் பட்டன.

இவை போக ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக மிகக் குறைந்த விலையில் தினம் ஒரு ரூபாய் சேமிப்பில் இன்ஷீரன்ஸ் திட்டங்கள் செயல் படுத்தப் பட்டுள்ளது. சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இனி ஒரு இறப்போ உடல் இழப்போ நிகழ்ந்தால் அவர்களுக்கும் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம் உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு குறைந்த பட்ச இன்ஷூரன்ஸ் தானாகவே உள்ளது. குழ்ந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சேமிப்புத் திட்டங்களும் அறிமுகப் படுத்துள்ளன. விவசாயிகளுக்கு என்று தனியாக இன்ஷீரன்ஸ் திட்டங்கள் அமுல் படுத்தப் பட்டுள்ளன.

முத்ரா திட்டம் மூலமாக நலிவடைந்த பிரிவினர் தொழில் வியாபாரம் துவங்க கடன் அளிக்கப் படுகிறது. இதன் மூலமாக 5 கோடி பேர்கள் பயனடைந்துள்ளார்கள்.

இன்னும் ஏராளமான ச்மூக நலத் திட்டங்கள் வாழ்க்கையின் பல அடுக்குகளில் இருப்பவர்களின் நலன்களுக்காகவும் அறிமுகப் படுத்தப் பட்டு செயல் படுத்தப் பட்டுள்ளன. தமிழ் நாட்டு மக்களும் இதன் மூலமாக பயன் அடைகிறார்கள்

ஆகவே ,ஏழை எளிய மக்கள் இலவசங்களின் துணையில்லாமல் அரசின் சேமிப்புத் திட்டங்கள் மூலமாகவும் இன்ஷீரன்ஸ் திட்டங்கள் மூலமாகவும் வங்கி நிதியுதவித் திட்டங்கள் மூலமாகவும் பயனடைந்து வாழ்க்கையில் முன்னேற ஆதரீப்பீர் பா ஜ கவை. ஓட்டளிப்பீர் தாமரைக்கு

6. ரெயில்வே துறை

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ரெயில்வே துறை என்பது பிரிட்டிஷ் ஆட்சி விட்டு விட்டுப் போன காயலாங்கடை சமாச்சாரமாகவே இருந்தது. ரெயில்வே துறை என்பது அந்த மந்திரிகளின் சொந்தக்காரர்களை நியமிப்பதற்கும் அவர்கள் ஊர்களுக்கு ரெயில் விடுவதற்குமான ஒரு நிறுவனமாக மட்டுமே செயல் பட்டு வந்தது. ஓட்டை உடைசல் பெட்டிகள், மூட்டைப் பூச்சிப் படுக்கைகள், நாறும் குப்பை கூளங்கள் நிறைந்த ரெயில் நிலையங்கள், தாமதமாக வரும் ரெயில்கள், ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் நிறைந்த நிர்வாகம் என்று சகல விதங்களிலும் மிகக் கேவலமான ஒரு அமைப்பாக காங்கிரஸ் ஆட்சிகளில் இயங்கி வந்தது. அப்படிச் சீரழிந்து கிடந்த ரெயில்வே துறையை ஒட்டு மொத்தமாக புரட்சிகரமாக மாற்றி அமைத்து வருகிறது மோடி அரசாங்கம். மோடி அரசில் மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவர் சுரேஷ் பிரபு.

bjp_tn_rural_development_adரெயில்வே துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்றியுள்ளார். ரெயில் பெட்டிகளை மாற்றி உலகத் தரத்தில் நவீனமான பெட்டிகளை இந்தியாவிலேயே தயார் செய்து பயன் படுத்தி வருகிறார். ரெயில் பெட்டிகளின் கூரையில் சோலார் பேனல்கள் பதித்து ரெயில்வேயின் எரிசக்தி செலவைக் குறைத்து வருகிறார். பயணிகளின் புகார்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். ஆன்லைன் ரிசர்வேஷனின் வேகத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறார். மாநிலங்களின் ஒத்துழைப்புடன் புதிய வழித்தடங்களை உருவாக்கி வருகிறார். பல வழித்தடங்கள்களை மின்மயமாக்கி வருகிறார். ரெயில்வேயின் சேவைகளை பல மடங்கு அதிகரித்திருக்கிறார். ரெயில் நிலையங்களை சுத்தமாகப் பராமரிக்கிறார். அங்கு இண்ட்டர்நெட் வசதி ஏற்படுத்தி வருகிறார். ரெயில் நிலையங்களின் மூலமாக வருமானங்களை பெருக்குகிறார். சுற்றுலாவௌ மேம்படுத்த பல புதிய ரெயில்களை அறிமுகப் படுத்தியுள்ளார். ரெயில் பாதுகாப்பை அதிரித்துள்ளார். ஏராளமான புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். சரக்கு ரெயிலின் திறனை அதிகரித்து லாபம் ஈட்ட வைத்துள்ளார். நாடு இதுவரை கண்டிராத முன்னேற்றங்களை ரெயில்வே துறை கண்டு வருகிறது

ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் மத்திய ரெயில் துறையுடன் இணைந்து மாநில அரசும் நிதி அளித்து நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை நிறைவேற்றாமல் முரண்டு பிடித்துக் கொண்டு தமிழ் நாட்டுத் திட்டங்களைப் பாழ்ப் படுத்தி வருகிறார் ஜெயலலிதா. மாநிலத்தின் உதவியின்றி புதிய திட்டங்களை ரெயில்வே துறை செய்ய முடியவில்லை. ஜெயலலிதாவின் ஆணவ அராஜக அகங்கார போக்குகளினால் தமிழ் நாட்டின் ரெயில் திட்டங்கள் மிகவும் மந்தமாகவோ அல்லது முன்னேறாமல் தடைப் பட்டோ கிடக்கின்றன.

ஆகவே, தமிழ் நாட்டின் அனைத்து ரெயில்வே தேவைகளும் உடனடியாக செயல் படுத்தப் பட புதிய ரெயில்களும் பாதைகளும் பெற தமிழ் நாட்டின் வர்த்தகம் விவசாயம் பெருக ஆதரிப்பீர் பா ஜ க வை. ஓட்டளிப்பீர் தாமரைக்கே.

(சாதனைப் பட்டியல் தொடரும்)

அடுத்த பகுதி >>

One Reply to “பா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)”

 1. மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினாலும்
  தமிழக பா.ஜ. மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.
  ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அவசரப்பட்டு சொதப்பினார்கள்
  மிக முக்கியமாக தேர்தல் தேதி அறிவுக்கும் வரை தனிநபர் துதியை வெறுக்கும்
  பா.ஜ. வில் அம்மா புகழ் பாடிவிட்டு கடைசி நேரத்தில் அ.தி.மு.க. வை
  எதிர்த்தால் மக்கள் எப்படி நம்புவார்கள்.
  மத்திய அமைச்சர்கள் ஸ்ரீ பியூஸ்கோயல் ஸ்ரீ ஜவடேத்கர் அ.தி.மு.க. மீது
  குறை சொல்கிறார்கள்.
  ஸ்ரீ நிர்மலா சீதாராமன் ஸ்ரீ வெங்கய்யா ஆகியோர் அ.தி.மு.க. அரசை பாராட்டுகிறார்கள்.
  இதில் மக்கள் எதை நம்புவார்கள்.
  எங்கள் நிலக்கோட்டைக்கு ம. அ. ஸ்ரீ நிர்மலா சீதாராமன் சொந்த
  விஷயமாக வந்த போது கட்சியினரையோ மக்களையோ சந்திக்காமல்
  தொழிலதிபர்களை மட்டும் சந்தித்தார். இதில் மக்களிடம் நெருங்கிய
  தொடர்பு எங்குள்ளது
  சில விஷயங்களை சரிசெய்தால் தான் தமிழகத்தில் பா.ஜ. வளரும்
  ஆனால் என் ஓட்டு தாமரைக்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *