கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்

டந்த இரண்டாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் வலுவானது. மிகச் சமீபகாலம் வரை உலக வரலாறே கி.மு – கி.பி.  (கிறிஸ்துவுக்கு முன் – பின்) என்றுதான் பகுக்கப்பட்டு விவரிக்கப்பட்டு வந்தது.  ஏசுவின் பிறப்பையும்  போதனைகளையும் உண்மையான வரலாறு என்றே கிறிஸ்தவ மதம் முன்வைத்தது. ஏசுவின் உபதேசங்களை  அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம், ஏசு போதித்ததாகச் சொல்லப் பட்டும்  அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் கிறிஸ்தவ மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தம்  உலகத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏசு சிந்தியதாகச் சொல்லப் படும் ரத்தத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகமானது என்பதை அறியக் கூடும். பல நூற்றாண்டுகளாக காலனியாதிக்கத்திற்கும், அடிமை வியாபாரத்திற்கும்,  இனவெறி சார்ந்த போர்களுக்கும் படுகொலைகளுக்கும், ஒட்டுமொத்த சமூகங்களையும் கலாசாரங்களையும் அழித்தொழிப்பதற்குமான  கருவியாக  கிறிஸ்தவ மதமும் அதன் அதிகாரபீடங்களுமே இருந்துள்ளன.  உண்மையில் பைபிள் என்ற நூலே கிறிஸ்தவர்கள் பொதுவாக நம்பிப் பிரசாரம் செய்வது போல  எந்தப் பிசிறுமின்றி ஆதாரபூர்வமாகத் தொகுக்கப் பட்ட  ஒன்றல்ல.  எல்லா பழங்கால நூல்களையும் போல மாறுதல்களுக்கும், பிற்சேர்க்கைகளுக்கும், திரிபுகளுக்கும், ஆதிக்க சக்திகளின் வளைத்தல்களுக்கும் எல்லாம் ஆட்படுத்தப் பட்ட ஒன்று தான் அது.

maraikapatanuvum matrapatanavum front covஇந்தப் பின்னணியில், மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தை கறாரான  விமர்சனத்துக்கு உட்படுத்தும் பல நூல்கள் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் வெளிவந்திருக்கின்றன. பற்பல அறிஞர்களால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அவை தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.  ஆனால் அவ்வளவு பெரிய நூற்தொகுதியிலிருந்து  குறிப்பிடத்தக்க எந்த நூலும் தமிழில் மொழியாக்கம் செய்யப் படவில்லை. இந்தியாவில் பொதுவாக ஆங்கில நூல்களை வாசிப்பவர்களுக்குக் கூட அத்தகைய நூல்கள் அறிமுகமாவில்லை.  அவை  புத்தகக் கடைகளிலும், நூலகங்களிலும், ஊடகங்களிலும் மற்றும் வெகுஜன பிரக்ஞையிலும் வந்து சேராதபடிக்கு  இங்குள்ள கிறிஸ்தவ மிஷனரிகளும் சர்ச் அதிகார பீடங்களும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கருத்துத் தணிக்கை செய்து வருவதே இதற்குக் காரணம்.  அண்மைக்காலங்களில் கூட டாவின்சி கோட் திரைப்படம் எவ்வாறு பல மாநில அரசுகளால் தடைசெய்யப் பட்டது என்பதை நாம் அறிவோம்.  இந்திய அறிஞர் சீதாராம் கோயல் 1994ல் எழுதிய Jesus Christ: An Artifice for Aggression என்ற நூலில் இது குறித்த தனது விசனத்தைப் பதிவு செய்கிறார்.  மேற்கத்திய அறிஞர்கள் ஏற்கனவே வந்தடைந்த விமர்சனங்களின் சாராம்சத்தைத் தனது  நூலில் தொகுத்தளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 2009ல் விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள Expressions of Christianity, with a focus on India என்ற தொகுப்பு நூலும் இத்திறக்கில் குறிப்பிடத் தக்கது.

தமிழில் அதைப் போன்ற விரிவான தொகுப்பு நூல் ஒன்றும் இல்லாதிருந்தது. உமரி காசிவேலு எழுதி 2015 பிப்ரவரியில் வெளிவந்துள்ள இந்த நூல் அக்குறையை ஈடு செய்கிறது. தோற்றம், தொன்மை வரலாறு, அறிந்ததும் அறியாததும், கிறித்துவ காப்பியம், ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும், இந்திய வரலாறு எழுதத் திட்டமிடல், அன்னிய மதகுருமார்கள், இன்றைய இந்தியா, பிரிவினைவாதம், நவீன கிறித்துவம் – என்று 10 பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. நூலின் மொழிநடை சிலபல இடங்களில் சிடுக்கானதாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சீராகவும், எளிமையாகவும் அனைத்துவிதமான வாசகர்களும் புரிந்து கொள்ள ஏற்றதாகவும் உள்ளது.

umari-kasilvelu
உமரி காசிவேலு

தூத்துக்குடியைச் சார்ந்த நூலாசிரியர் உமரி காசிவேலு தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கிறிஸ்தவ இறையியல், வரலாறு மற்றும் இன்னபிற துறைகள் குறித்த கல்விப் புலப் பின்னணி எதுவும் இல்லாதவர். ஆயினும், 16 ஆண்டுகளாக, இது குறித்து சுயமாகவே பல நூல்களை வாசித்தும் விவாதித்தும், மற்ற அறிஞர்களுடன் உரையாடியும் இந்த விஷயம் குறித்த தனது புரிதலைத் தொடர்ந்து ஆழப்படுத்தியும் மேம்படுத்தியும் வந்திருக்கிறார். அந்தக் கடின உழைப்பின் பயனாகவே இத்தகைய நூல் சாத்தியமாகியுள்ளது. இப்பணியில் முனைந்த நூலாசிரியரும், அவருக்கு உதவிய மற்ற அறிஞர்களும் செயல்வீரர்களும் பாராட்டுக்குரியவர்கள். மேலும், காஞ்சி மடம், ஸ்ரீராமகிருஷ்ண மடம், காசி மடம், ஆர்ஷ வித்யா குருகுலம் ஆகியவற்றின் இந்து குருமார்களின் ஆசியுரைகள் நூலின் முகப்பில் உள்ளதும் குறிப்பிடத் தக்கது. அன்னிய மதங்களைத் தீவிர விமர்சனங்களுக்கு உட்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்து குருமார்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது. மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

பைபிள் மேற்கோள்கள், பல நூல்களிலிருந்து உள்வாங்கப் பட்ட கருத்துக்கள் இந்த இரண்டையுமே மையமாக வைத்து இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் இறுதியில் துணைநூற்பட்டியலாக 115 ஆங்கில நூல்களும், 65 தமிழ் நூல்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்தப் புத்தகம் பேசக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் குறித்த ஆதாரபூர்வமான Golden References என்று சொல்லக் கூடியவை அந்த நூல்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப, இணையப் புரட்சியின் காரணமாக கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் இதுவரை செலுத்தி வந்த கருத்துத்  தணிக்கைகள் இனிமேலும் சாத்தியப்படாது என்பதே நிதர்சனம். இந்தச் சூழலில் கிறிஸ்தவத்தை இத்தகைய விமர்சனத்திற்கு உள்ளாக்கும் மேலும் பல நூல்கள் தமிழில் வர வேண்டும்.

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்
ஆசிரியர்: உமரி காசிவேலு
பக்கங்கள் 520, விலை ரூ.350
வர்ஷன் பிரசுரம், சென்னை – 17
தொலைபேசி: 044- 2436 1141.

இணையத்தில் இங்கே வாங்கலாம்.

2016 ஜூன்  சென்னை புத்தகக் கண்காட்சியில் LKM பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

maraikapatanavum matrapatanavum back cov

7 Replies to “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்”

  1. விமரிசனம் நூலை வாசிக்கத் தூண்டுகிறது. அருமையான விமரிசனம்.

  2. ஜடாயுவிர்க்கும், வர்ஷன் பிரசுரத்தாற்கும், ஆசிரியர் உமரி காசிவேலு ஐயா அவர்களுக்கும் அனைத்து இந்துக்களின் சார்பாக நன்றி, நன்றி, நன்றி.

    ஆசிரியருடைய 16 ஆண்டு கால உழைப்பிற்கு விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

    1. இதேபோல் நூற்றுக்கணக்கான நூலாசிரியர்கள் ஆயிரக்கணக்கான நூல்களை விரைவில் எழுதி வெளியிடவேண்டும்.

    2. அவைகள் அணைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

    3. இவைகள் அனைத்தையும் ஜடாயுவைபோல் உலகிலுள்ள அணைத்து இந்துக்களுக்கும் அவர்களின் தாய்மொழியிலேயே, பலவழிகளில் கொண்டுசென்று தெருவிக்கப்படவேண்டும். (இதனை ஒரு குழுவமைத்து / குழுக்கலமைத்து, திட்டமிட்டு செயல்படுத்துவது சாலச்சிறந்ததாகும்)

    எ-கா:
    3.1 அணைத்து இந்து வலைத்தளங்களின் பட்டியல் வரைந்து அவ்வப்பொழுது பிரசுரமாகும் இதுபோன்ற நூல்களை அவ்வனைத்து வலைத்தளங்களிலும் அறிவிக்கும்படி செய்யலாம். (ஜடாயுவிற்கு பட்டியலிட உதவலாம்)

    3.2 அணைத்து நூலகங்களிலும், கிளைநூலகங்களிலும், கிராம நூலகங்களிலும், அரசு பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களிலும், இந்நூட்களின் பிரதி இல்லவசமாக வழங்கலாம்.

    3.3 பத்து முதல் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இப்புத்தகங்களை அடிப்படையாகக்கொண்டு போட்டிகள் பலவைத்து பரிசுகள் வழங்கலாம்.

    3.4 யாராவது வந்து “நாங்கள் ஒன்றும் உங்களைபோல் கல்லையும், மண்ணையும், கட்டையையும், மட்டையையும் கும்பிடவில்லை. நாங்கள் உண்மையான பரிசுத்த ஆண்டவரை கும்பிடுகிறோம்!” என்று சொன்னால், செரியாக புரியவில்லை, மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று சொல்லச்செய்து அதனை அலைபேசியில் பதிவு செய்துகொடுப்பவருக்கு ரூ.1,000/- பரிசு வழங்கலாம்.

    3.5 “உன் பிள்ளைக்கு பள்ளியில் சேர்க்க சிபாரிசு செய்கிறேன், வேலை வாங்கி தருகிறேன், பணவுதவி செய்கிறேன் — நீ கிருத்துவனாக மாறு” என்று யாராவது கூறினால், அதனை இக்குழுவிடம் கூறி, இக்குழுவின் உதவியுடன் ஆதாரங்களை திரட்டி, நீதிமன்றத்திற்கு இழுத்துச்சென்று சிறையில் தள்ளுபவருக்கு, அந்த நபர் தருவதாக சொன்னதைப்போல் இருமடங்கு செய்யவேண்டும். (இவ்வாறு இந்தியா முழுவதும், மாவட்டம்தோறும் பத்து நபர்களை உள்ளேவைதால், இதனையே ஒரு தொழிலாக செய்பவர்கள் அத்தொழிலை விட்டு தனக்கும், சமுதாயத்திற்கும், நாட்டு மக்களுக்கும் உபயோகமான வேறு நல்ல வேலையை தேடுவார்கள்)

    “Christians believe that they have been commanded by Christ to go and ‘save’ (convert) the people of this world. This is also supposed to give them special merit when it comes to the day of final judgement. It is this misguided belief that causes breeds a hatred and intolerance for other religions. And from this hatred, these Christian Fundamentalists begin their aggression to convert. And often they will go to any means to convert even if it means violence (NLFT).”
    https://christianaggression.org/what-aggression/

    இவ்வாறு அடுத்தடுத்து வேலைகளை குழுக்கலமைத்து திட்டமிட்டு முறையாக செய்யவில்லையேல், சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களால் மொழிபெயர்த்து எழுதப்பட்ட ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் எழுதிய “கிறிஸ்துவ மதத்தை நிராகரித்தல்” என்ற புத்தகத்தை போன்றே இப்புத்தகமும் அனைவரிடத்தும் சென்று சேராமல், இப்புத்தக ஆசிரியரின் நோக்கம் நிறைவேறாமல் போகும்.

  3. June 1 ,2016 . வந்த, ” கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்” என்ற கட்டுரைக்கு எழுதவேண்டிய கருத்தை , மாற்றி June 2,16. அன்று ” வந்த இந்திய அறிதல் முறைகள்” என்கிற கட்டுரைக்கு மாற்றி எழுதியதற்காக . எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி .

  4. ஜார்ஜ்
    “இவ்வாறு அடுத்தடுத்து வேலைகளை குழுக்கலமைத்து திட்டமிட்டு முறையாக செய்யவில்லையேல், சிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களால் மொழிபெயர்த்து எழுதப்பட்ட ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் எழுதிய “கிறிஸ்துவ மதத்தை நிராகரித்தல்” என்ற புத்தகத்தை போன்றே இப்புத்தகமும் அனைவரிடத்தும் சென்று சேராமல், இப்புத்தக ஆசிரியரின் நோக்கம் நிறைவேறாமல் போகும்”.
    இப்போது நமது தமிழ் ஹிந்துவில் வெளிவந்துகொண்டிருக்கும் கிறிஸ்துவ மதத்தை நிராகரித்தல் என்னும் நூல் அச்சில் வெளியாகவில்லை. இப்போது மொழி பெயர்ப்பினை செய்து கொண்டிருக்கின்றேன். நாற்பது சதவீதம் மட்டுமே இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அடியேனுக்கு பணிப்பழு இருக்கின்றகாரணத்தால் வாரம்தோறும் ஒவ்வொரு பகுதியாக வெளியிடவேண்டும் என்ற எனது எண்ணத்தை நிறைவேற்ற இயலவில்லை. அனைத்து பகுதிகளும் இந்த தளத்தில் வெளியான பின்னர் அச்சில் இந்த நூல் வெளியிடப்படும். விரைவில் இந்த மொழிபெயர்ப்பை நிறைவு செய்ய குருவருளும் திருவருளும் துணை செய்யவேண்டும். இணையத்தில் வாசிக்கும் வழக்கமுள்ள ஹிந்துத்துவர்கள் அனைவரையும் இந்த தொடர் சென்றடைந்தாலே, அடுத்து அச்சில் வெளியாகும் நூலும் தமிழகம் முழுவதும் சென்று சேரும்.

  5. ஒரு மிக அருமையான நூலுக்கு ஒரு அழகான மதிப்புரையை வழங்கி இருக்கும் ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
    பொய்யிலே தோன்றி புனைவில் வளர்ந்து வன்முறையால் உலகை ஆதிக்கம் செய்துவரும் கிறிஸ்தவம் என்னும் அரசியல் கருத்தியலை அனைத்து ஹிந்துக்களும் புரிந்து கொள்ள இது போன்ற நூல்கள் தமிழிலே பலப்பல வரவேண்டும். அவை ஊர்தோரும் விவாதிக்கப்பட ஹிந்துத்துவ அறிவியக்கத்தினர் அனைவரும் வழிவகைகள் செய்தல் வேண்டும்.
    ஹர ஹர மஹாதேவா! ஹர ஹர மஹாதேவா!

  6. வணக்கம்,
    இணயதளத்தில் இந்நூல் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் பார்த்தேன். அந்நிகழ்ச்சியின் காணொளி இருக்கிறதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *