இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் தமது வாழ்க்கை வரலாற்றை ”திரும்பிப் பார்க்கிறேன்” என்று நூலாக எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு பகுதி:


எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு ஸ்டிரைக்கை முன்நின்று நடத்தியிருக்கிறேன். நான் படித்த கிறிஸ்தவ பள்ளிக்கூடம் தினமும் இறைவணக்கத்துடன் தான் தொடங்கும். அதில் ஹிந்துக்களுக்காக ஒரு தமிழ் பாட்டும் கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஓர் ஆங்கிலப் பாட்டும் இடம்பெறும். ஆனால் அதற்கு 10 நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்யேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும் எல்லா ஹிந்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்கு பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டார்கள். அதுமட்டுமின்றி பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வளர்ந்த மாணவர்களைக்கூட அடிக்கும் பழக்கம் அந்தப் பள்ளிக்கூடத்தில் கடைப்பிடிக்கப் பட்டது. இந்த இரண்டு விஷயங்களையும் எதிர்த்துதான் ஸ்டிரைக்.மாநில அரசின் கல்வித்துறை செயலாளராக இருந்த கரையாளர் என்பவர் பள்ளிக்கூடத்துக்கு வந்து சமரசம் பேசினார். இறுதியில் எங்களது கோரிக்கை வெற்றிபெற்றது.


செங்கல்பட்டில் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருந்த லயனல் என்ற மாணவன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன். நான் படித்த வகுப்பில்தான் அவனும் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று லயனலின் அப்பா இறந்துபோனார். அப்பா மறைந்த ஆறுமாத காலத்திலேயே சோகம் தாங்க முடியாமல் அவன் அம்மாவும் இறந்துவிட்டார். பெற்றோரை இழந்த லயனல் மற்றும் அவன் சகோதரர்கள் எங்கள் பள்ளிகூடத்திலேயே கிறிஸ்தவ மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இலவச ஹாஸ்டலில் (அதை போர்டிங் என்று குறிப்பிடுவார்கள்) சேர்ந்துவிட்டார்கள். அதன் பின்னரும் எங்கள் நட்பு நெருக்கமானதாகவே இருந்தது.


அவன் சர்சுக்குப் போகும்போதெல்லாம் கூடவே நானும் போவேன். அங்கு தரும் புனித ரொட்டியையும், நீரையும் வாங்கிக்கொள்வேன். கிறிஸ்தவ மதம் என்பது ஒரு மாற்றுமதம் என்கிற எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை. ஒன்றரை வருடங்கள் இது தொடர்ந்தது. ஒரு நாள் மாலை, எங்கள் பள்ளியைச் சேர்ந்த ரொபைரோ என்ற ஐரோப்பிய பாதிரியார் என்னை தன்னுடைய அறைக்கு அழைத்தார். அன்போடு என்னைப்பற்றி நிறைய விசாரித்தார். டிபன் கொடுத்தார். இறுதியாய் என்னைப் பார்த்து “நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.


நான் வேறுபாடு இல்லாமல் சர்ச்சுக்குப் போனதும், பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதும், கிறிஸ்தவ மதத்தின் மீது ஒரு வித அன்பு கொண்டிருந்ததும் வாஸ்தவம்தான் என்றாலும் என்னை மதம் மாற்ற விரும்பிய ஃபாதர் ரொபைரோவின் முயற்சியை என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அத்துடன் சர்ச்சுக்குப் போவது போன்றவற்றை எல்லாம் நிறுத்திக் கொண்டேன். லயனுடனான நட்பு மட்டும் தொடர்ந்தது.


நன்றி: விஜயபாரதம் (29.5.2009) இதழ்

தட்டச்சு உதவி: வெற்றிச்செல்வன்

3 Replies to “இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்”

  1. உன் பெயர் என்ன்? வேலுசாமியா? இந்தா நீ நாளை முதல் சாமிவேல் என்று தண்ணியை தெளித்து மதம் மாற்றி விடுவார்களாம்.

    மத மாற்றத்திற்கென்றே ஒரு கூட்டம் இந்த பாரத மண்ணில் உண்டாயிருப்பது ஒரு சாபக்கேடு என்பதை தவிர வேறு என்ன சொல்வது?

  2. Christians are more fanatic than muslims. Our Hindu Society facing more threat from evangalists. Beware their real motives.

  3. வரலாற்று இயேசு என ஒருவர் இருந்திருந்தாலும் அவருக்கும் புதிய ஏற்பாடு கதாசிரியர்களுக்கும் தொடர்பு இல்லாது புனையப்பட்ட வெறும் மதமாற்று விளம்பர கதைகளே சுவிசெஷங்கள். இவை பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டும். எனது சிறு முயற்சி; எனது கட்டுரைகள் இங்கே.
    https://devapriyaji.wordpress.com/?ref=spelling

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *