ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்

காராஷ்டிரத்தில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஞானேஷ்வரர். இவர் மகத்தான ஞானியும், யோகியும், பக்திக் கவிஞருமாவார். ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் (orthodoxy) ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர்.

நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார்.

அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்ததாம். எருமை மனித குரலில் நான்கு வேத சாரங்களையும் சொல்லி பின்வரும் நான்கு சுலோகங்களையும் சொல்லியதாம்:

“ஜன்மநா ஜாயதே சூ’த்ர: கர்மணா ஜாயதே த்3விஜ:
வேதோ3 முக்2யஸ்து விப்ராணாம் ப்3ரஹ்மஜ்ஞாநம் து ப்3ராஹ்மணாம்”

பிறவியினால் அனைவரும் சூத்திரரே. செய்கைகளாலேயே ஒருவன் இருபிறப்பாளனாகிறான். அந்தணனின் லட்சணம்வேதத்தையும் அதன் உட்பொருளான பிரம்மத்தை உணர்தலுமேயாம்.

“தா3ஸீ க3ர்ப4 ஸமுத்3பூ4தோ நாரத3ச்’ச மஹாமுநி:
தபஸா ப்3ரஹ்மணோபூ4த: தஸ்ய ஜாதி ந கல்பயேத்.”

தாஸி வயிற்றில் தோன்றிய நாரதர் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.

ஊர்வசீ’ க3ர்ப4 ஸம்பூ4தோ வஸிஷ்டச்’ச மஹாமுநி:
தபஸா ப்3ரஹ்மணோபூ4த: தஸ்ய ஜாதி ந கல்பயேத்.”

நடனமாதான ஊர்வசி வயிற்றில் தோன்றிய வசிஷ்டர் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.

சு’நகீ க3ர்ப4 ஸம்பூ4த: சௌ’னகச்’ச மஹாமுநி:
தபஸா ப்3ரஹ்மணோபூ4த: தஸ்ய ஜாதி ந கல்பயேத்.”

பெண்நாய் வயிற்றில் தோன்றிய ஸ்ரீ சௌநக பகவான் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

4 Replies to “ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்”

  1. இது போன்ற சாதி அமைப்பு குறித்த சாியான தகவல்களை நிறைய பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  2. ஐயா ,

    /**
    பெண்நாய் வயிற்றில் தோன்றிய ஸ்ரீ சௌநக பகவான் தவத்தினால் பிராம்மணரானார். இவர் இன்ன சாதி என கற்பனையும் செய்யலாகாது.**/
    இந்த ஸ்லோகம் எந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது ?
    தெரிந்தால் சொல்லவும் .
    சௌநக ரிஷி 18 புராணங்களையும், சூத ரிஷியிடமிருந்து ச்ரவணம் செய்தவர் ஆவார் .

  3. நிவ்ருத்தி நாதர் என்பது தான் ஞானேஸ்வரரின் மூத்த சகோதரர் பெயர்.

  4. //நிவ்ருத்தி நாதர் என்பது தான் ஞானேஸ்வரரின் மூத்த சகோதரர் பெயர்.//

    ஞானேஸ்வரரின் குருவும் நிவ்ருத்தி நாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *