அக்பர் எனும் கயவன் – 4

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

அக்பரின் முன்னோர்கள் காட்டுமிராண்டித்தனமான கொடியவர்கள். அக்பருக்குப் பின் வந்த ஜஹாங்கிர், ஷாஜஹான், அவ்ரங்க்ஸிப் போன்ற அவரது வாரிசுகளும் சாமான்யமானவர்களில்லை. ஆனால் அக்பரை ஒரு நல்ல அரசராக, நீதி வழுவாத நேர்மையாளனாக, அன்பும் கனிவும் உடையவராகத்தான் இந்தியர்களான நாம் அறிந்திருக்கிறோம். எனவே உண்மையான அக்பரைக் குறித்து,  அதாவது அக்பரின் கொடுங்கோன்மையைக் குறித்து, அவரின் துரோகங்களைப் குறித்து, இந்தியர்களுக்கு குறிப்பாக இந்திய ஹிந்துக்களுக்கு அவர் இழைத்த கொடுமையான இரக்கமற்ற சித்திரவதைகளைப் குறித்தும் இனிவரும் கட்டுரைகளில் விளக்கமாக ஆராய முயல்வோம்.

காட்டுமிராண்டித்தனமான சூழலில் கல்வியறிவற்று வளர்க்கப்பட்ட அக்பரின் வாழ்வு ஒரு பெரும் காமுகனாக, குடிகாரனாக, போதைமருந்திற்கு அடிமையானவராகவே இருந்தது. இந்தச் சூழலில் வளர்ந்த ஒருமனிதன் ஒருபோதும்  நல்லொழுக்கம் மிகுந்த ஒருவனாக வாழ்ந்திருக்கவே இயலாது என்பதுதான் உண்மை. நமக்கெல்லாம் கற்பிக்கப்பட்டது போல அவர் உண்மையிலேயே நல்லொழுக்கம் மிகுந்த ஒருவராக இருந்திருந்தால் அவரது மகன்களும்,  பேரன்களும் ஒருபோதும் கொடுஞ்செயல்கள் புரிந்த வன்முறையாளர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதினையும் நாம் உணர வேண்டும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக ஆயிரம் ஆண்டுகள் அன்னியனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தில் மத ஒற்றுமையைப் பேணிக்காப்பது என்கிற பெயரிலும், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் உண்மைகளை மறைத்து பொய்யான வரலாற்றை எழுதுவது வழக்கமாகியிருக்கிறது. உண்மையான வரலாற்றை உள்ளது உள்ளபடியே எழுதுவது என்பது ஒரு தெய்வ குற்றத்திற்கு நிகராகப் பார்க்கப்படுகிறது என்பதனையும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே இந்திய வரலாறு ஏராளமான ஒழுங்கற்ற பகுதிகளையுடைய, முரண்பாடான, மூடத்தனமான, அபத்தமான ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத முடிவுகளை உடையதாக எழுதப்பட்டிருக்கிறது. எனவே இதனை ஆராயப் புகும் ஒவ்வொருவரின் முன்பும் இந்தப் போலித்தனமான வரலாறு சிதறிச் சின்னாபின்னமாவதனையும் நாம் கண்டிருக்கிறோம். அக்பரைக் குறித்து கவனமாகப் பின்னப்பட்ட கதையும் அதில் ஒன்று.

இந்தியாவில் மதச் சமநிலையைப் பேணுவது என்கிற பெயரில் இந்திய வரலாற்றாசிரியர்கள், குறிப்பாக இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், அக்பரை ஒரு பேரரசராக, நீதிமானாக, சிறந்த நிர்வாகியாக சித்தரித்ததுடன், அசோகர் போன்ற ஒரு ஹிந்து பேரரசனுக்கு நிகராகப் புகழ்வது என ஒரு வரைமுறையற்ற பொய்களால் நிறைத்திருக்கிறார்கள்.

அக்பர் அவரது தந்தை வழியில் பெரும் கொலைகாரனான தைமூரையும், தாய் வழியில் அவனை விடவும் பெரும் கொலைகாரனான செங்கிஸ்கானின் வழியில் வந்தவர். அக்பரின் பாட்டனான பாபர், கிழக்கு பாரசீகத்தின் ஒரு சிறு பகுதியாக இருந்த ஃபர்கானாவை ஆண்ட உமர் ஷெய்க்கின் மூத்தமகன். உமர் ஷெய்க்கின் தகப்பனான அபு சையத் தைமூரின் கொள்ளுப் பேரன். உமர் ஷெய்க்கின் முதல் மனைவியும் பாபரின் தாயுமான குட்லுங் நிகார் கானூம், சக்ட்டாய்கானின் மகனான யூனஸ்கானின் இரண்டாவது மகள். சக்ட்டாய்கான் மங்கோலியப் பேரரசரரான செங்கிஸ்கானின் இரண்டாவது மகன்.

அக்பரின் பாட்டனான பாபர் ஒரு ஆட்கொல்லியைப் போல பொதுமக்களால் அஞ்சப்பட்டவன். பாபர் வரும் வழியில் இருந்த ஜனங்கள் பாபரைக் கண்டதும் அஞ்சிச் சிதறி ஓடினார்கள். அக்பரும் பாபருக்கு எந்த விதத்திலும் சளைத்தவரில்லை. வேட்டைக்காரச் சிறுத்தை போல அப்பாவிகளை வேட்டையாடிக் கொல்வதனை ஒரு வழக்கமாக வைத்திருந்த அக்பரைக் கண்டவர்களும் அவருக்கு அஞ்சி விலகி ஓடினார்கள்.

வரலாற்றாசிரிய ஷெலத் பாபரைக் குறித்துச் சொல்கையில், “பாபர் திபல்ப்பூர் நகரைக் கைப்பற்றி அந்தக் கோட்டையில் இருந்த அத்தனை பேர்களையும் வாளுக்கு இறையாக்கினார். பாபரி முன்னனிப்படைகள் தில்லியை நோக்கி முன்னேறி இப்ராஹிம் லோடியின் படைகளைக் கைப்பற்றி அத்தனை பேர்களையும் கொன்று குவித்தார்கள்”. அதனைக் குறித்து பாபர், “நாங்கள் கோடைகாலத்தில் ஆக்ராவை நோக்கி வந்தோம். ஆக்ராவாசிகள் அத்தனை பேர்களும் அச்சத்துடன் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். நாங்கள் உண்பதற்கு உணவோ அல்லது குதிரைகளுக்குக் கொடுப்பதற்குச் சோளமோ கிடைக்கவில்லை. எங்கள் மீது வெறுப்பும், சினமும் கொண்ட அந்தப் பகுதி மக்கள் சாலைகளில் போவோர் வருவோரைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் பலரைப் பிடித்து கொலை செய்தபின்னர் அந்த வழக்கம் நின்றது” என்கிறார்.

தான் கொலை செய்பவர்களின் தலைகளைக் கொய்து அதனை ஒரு கோபுரமாக அடுக்கிப் பார்க்கும் வழக்கம் பாபருக்கு இருந்தது. அதனைக் குறித்து எழுதவரும் வரலாற்றாசிரியர்  கர்னல் டோட், பாபர் ராணா சங்காவை ஃபதேபூர் சிக்ரியில் தோற்கடித்த பின்னர் தோற்றவர்களின் தலைகளினால் அமைக்கப்பட்ட கோபுரமானது ஒரு சிறு மலையைப் போலத் தோற்றமளித்ததாக எழுதியிருப்பதனைச் சுட்டிக் காட்டுகிறார். பாபர் அந்த இடத்திலேயே தனக்கு காஜி  – Gazi (காஃபிர்களைக் கொல்பவன்)எனப் பட்டம் சூட்டிக் கொண்டார்.

பாபர் தன்னை ஒரு ஓரினப்புணர்ச்சியாளனாக அறிவித்துக் கொண்டவர். பாபரைக் குறித்து பிறர் சொல்லும் குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கையில் பாபர் ஒரு மூர்க்கன் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணமாகிறது. தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைக் குறிப்புகளாக எழுதும் பழக்கமுள்ள பாபரே தான் செய்த கொடூரங்களைக் குறித்து எழுதிவைத்திருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

“தாம்போல் போருக்குப் பின்னர் நிறையப் பேர்களை பிணைக்கைதிகளாகப் பிடிபட்டார்கள். அவர்கள் அத்தனை பேர்களின் தலைகளையும் வெட்டும்படி நான் உத்தரவிட்டேன். அதுவே எனது முதலாவது போரும் கூட. கோகாத் மற்றும் ஹங்கு போரில் சரணடைந்த ஆப்கானிகளின் தலைகளைத் துண்டித்து அந்தத் தலைகளைக் கொண்டு ஒரு பெரிய மினார் எழுப்பினோம். சங்கரைச் சேர்ந்த கிவி பழங்குடியினரின் கோட்டை பிடிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் தலைகள் ஒரு குவியலாக குவித்து வைக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிச் சென்ற படைவீரர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் மூக்குகள் வெட்டப்பட்டன. இதுபோலவே பஞ்சூரும் பிடிக்கப்பட்டு அங்கிருந்தவர்களின் தலைகளைக் கொண்டு ஒரு தூண் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சகோராவைப் பிடிக்கும்படி ஹிந்து பெக்கிடம் உத்தரவிட்டேன். அவர்கள் பஞ்சகோராவை நெருங்குவதற்க்கு முன்பே அங்கிருந்தவர்கள் அத்தனை பேர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இதுபோலவே சையத்பூரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிம் போது மேலும் பலர் வாளுக்கு இரயாக்கப்பட்டார்கள். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இப்ராஹிம் லோடியின் ஆப்கானிய படைத்தலைவர்கள் லாகூர் பஜாரில் தோற்கடிக்கப்பட்டார்கள். லாகூர் பஜார் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. நாங்கள் முதன் முதலாக ஆக்ராவுக்கு வருகையில் அங்கிருந்தவர்கள் எங்கள் மீது அச்சமும், வெறுப்பும் கொண்டார்கள். என்னைப் பார்த்தவுடன் அவர்களின் படைத்தலைவர்களும், பொதுமக்களும் அங்கிருந்து அச்சத்துடன் தப்பி ஓடினார்கள். அதனைத் தொடர்ந்து நாங்கள் தில்லியை அடையும்வரை வழியிலிருந்த அத்தனை பேர்களும் எங்களுக்கு அடங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

பயானாவை நோக்கிச் சென்ற காசிமி அங்கே வெட்டிய பல தலைகளுடன் திரும்ப வந்தார். மேவாத்தின் அழிவுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் கைப்பற்றுமாறு முல்லா துருக்கி அலிக்கு உத்தரவிட்டேன். இதுபோலவே மக்பூர் திவானுக்கும் உத்தரவிடப்பட்டு மேவாவின் எல்லைப் பகுதிகளிலிருந்த பல நகரங்களை அழித்து, அங்கிருந்தவர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்ப்ட்டு கொண்டுவரப்பட்டார்கள்”.

இத்தகைய கொடூரரனான பாபரின் வழிவந்த அக்பரின் தகப்பனான ஹுமாயூன் பாபரைவிடவும் கொடூரமானவனாக இருந்தான். பாபருக்காவது இந்தியாவைப் பிடிக்க ரத்தமும், வியர்வையும் வடிக்க வேண்டிய சூழ் நிலை இருந்தது. ஆனால் பாபரின் வாரிசான ஹூமாயுனுக்கு இத்தனை பெரிய தேசமும், அதன் செல்வமும், வளமும் மிக எளிதாகக் கிடைத்த ஒன்று.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித்தும்  “ஹூமாயுன் ஓப்பியம் எனும் போதை மருந்திற்கு அடிமையானவர்” என்கிறார். ஹுமாயூன் ஒரு கொள்ளைக்காரனும் கூட. அதனைக் குறித்து அவரது வேலைக்காரனான ஜவஹர் சொல்கையில் “அக்பரின் பிறப்பின் போது ஹுமாயூன் நாடிழந்து மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். தனக்கு மகன் பிறந்த்தை எப்படிக் கொண்டாடுவது என்று அறியாமல் திகைத்த ஹுமாயுன் என்னிடம் அவர் கொடுத்து வைத்திருந்த 200 வெள்ளிக் காசுகளையும், வெள்ளிக் காப்பையும், சிறிதளவு வாசனை கஸ்தூரியையும் அவர் யாரிடம் கொள்ளையடித்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்” என்கிறார்.

ஆக, அக்பரின் பிறப்பிற்கு சிறிது முன்பாக ஹுமாயூன் யாரோ அப்பாவிகளைக் வழிப்பறி செய்து கொள்ளையடித்திருக்கிறார் என்பது நிருபணமாகிறது. தனக்கு மகன் பிறந்ததால் மகிழ்ச்சியடைந்தாலும் தன்னால் கொள்ளையடிக்கப் பட்டவர்களின் சாபத்திற்கு அஞ்சியே ஹுமாயூன் கொள்ளையடித்தவற்றை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

இந்தியாவின் எல்லா இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் போல ஹுமாயூனும் பாபரின் அரியணைக்காக அவரது சகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். பல தொடர்ந்த போர்களுக்குப் பின்னர் அவரது சகோதரனான கம்ரானைப் பிடிக்கும் ஹுமாயூன் அவரை மிகவும் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்கிறார். இதனைக் குறித்து வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் விளக்குகையில் “கடுமையான போரில் தோல்வியுரும் வேளையில் கம்ரன் பெண்ணைப் போல உடையணிந்து தப்பிக்க முயல்கையில் பிடிபடுகிறார். ஹுமாயூன் அவரைக் குருடாக்குவதுதான் சரியானது என முடிவெடுக்கிறார். அதன்பின் நடந்தவற்றை ஹுமாயூனின் வேலைக்காரனான ஜவஹர் விளக்குகிறார். ஹுமாயூன் தனது உடன்பிறந்த சகோதரனின் துன்பத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கம்ரனை கூடாரத்திலிருந்து வெளியே இழுத்து வந்த ஹுமாயூனின் சிப்பாய்களில் ஒருவன் கம்ரனின் கால்களின் மீது உட்கார்ந்து பிடித்துக் கொள்ள ஒரு கூர்மையான ஈட்டி அவரது கண்களில் பாய்ச்சப்படுகிறது. பின்னர் சிறிது எலுமிச்சை சாரும் உப்பும் அந்தக் கண்களின் மீது பூசப்பட்டு, ஒரு குதிரையின் மீது உட்காரவைத்து விரட்டியடிக்கிறார்கள். ஆனால் கம்ரனின் குடும்பத்தினர் ஹுமாயுனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பபடவில்லை”.

தில்லியில் உள்ள படாடோபமான ஹுமாயுன் கல்லறை (Humayun Tomb)

இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் ஹுமாயுனின் கொடூரமான மனப்பாங்கையும், அவரிடம் சிக்கிய அடுத்தவர்களின் கதியையும் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். சொந்தச் சகதோதரனுக்கு ஒரு உபகாரமாக அவனுடைய குடும்பத்தினர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதே பெரியதொரு விஷயமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் தன் கையில் சிக்கிய அத்தனை அன்னியப் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்வதையே முழு நேரமும் செய்தவர் ஹுமாயுன்.

ஹுமாயுனின் தகப்பனான பாபரே அவனுடைய சகோதரர்களைக் கொல்லவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார் என்றால் எத்தனை பெரிய கொடூர மனமுடையவனாக ஹுமாயுன், அதாவது அக்பரின் தகப்பன், இருந்திருக்க வேண்டும்? இந்தியாவில் பிடிபட்ட செல்வத்தின் அளவைப் பார்த்த ஹுமாயூன் கிறுக்குப் பிடித்தவனைப் போல நடந்து கொண்டான் என பாபரே அவரது குறிப்புகளில் எழுதுகிறார். “ஹுமாயுன் தில்லிக்குச் சென்று பெரும் பொக்கிஷங்கள் நிறைந்த பல பெரிய வீடுகளைக் கைப்பற்றி அங்கிருந்த செல்வத்தைக் கொள்ளையடித்தான். அவனிடமிருந்து இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே நான் மிக மனவேதனையடைந்தேன். மிகக் கடுமையான வார்த்தைகளுடன் கூடியதொரு கடிதத்தை அவனுக்கு அனுப்பி வைத்தேன்”.

ஹுமாயுனின் கொடுங்கோன்மைக்கு ஒரு உதாரணத்தை முகலாய வரலாற்றாசிரியரான பதாயுனின் ஒரு குறிப்பு கூறுகிறது. “ஹுமாயுன் ஆக்ராவிற்கு வந்தவுடன் அங்கிருந்த மக்கள் அனைவரும் இனிமேல் தன் முன்னர் வருகையில் தரையில் முத்தமிட வேண்டும் எனப் புதியதொரு உத்தரவினைப் பிறப்பித்தார்”.

“ஹுமாயுன் ஒப்பியத்திற்கு (போதை மருந்து) அடிமையானதொரு மனிதன்” என்கிறார் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித். ஆக்ராவில் இருக்கையிலேயே தனது சகோதரனான கம்ரனுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பார்த்தவர் ஹுமாயுன். பாபர் அவரை அனுப்பி வைத்த பகுதிகளிலிருந்து அவரது உத்தரவில்லாமல் அங்கிருந்து வெளியேறியவர். இதனைக் கண்ட பாபர் கோபமுற்று அவரை சம்பல் பகுதி கவர்னராக நியமிக்கிறார். குஜராத்தைக் கைப்பற்றிய பிறகு ஹுமாயுன் நடத்திய வெறியாட்டங்கள் கொடுமையானவை.

அக்பரின் தகப்பனான ஹுமாயுன் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த, சிதைந்த மனோபாவமுடைய, சீர்கெட்ட கொடுஞ்செயல் புரிகிற, திருத்தவே முடியாத குடிகாரன். அதனையும் விட போதை மருந்திற்குக் அடிமையான, பிறரைக் கொடுமைப்படுத்தி இன்பம் காண்கிறதொரு சாடிஸ்ட் மனோபாவமுடைய மனிதன்.

(தொடரும்)

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

One Reply to “அக்பர் எனும் கயவன் – 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *