நீட் தொடர்பாக, நீட் எதிர்ப்பு அலைகள் தொடர்பாக நான் அறிந்த சில விஷயங்களை எழுத உத்தேசம்.
இரண்டு தேசிய அளவிலான தேர்வுகளில் கட் ஆ ஃப் உடன் தேர்ச்சி அடைந்திருக்கிறேன். சில மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருப்பதின் பகுதியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் முதல் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர் வரை பலருடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். மேலும் ஜீவனோபாயத்தின் பகுதியாக அடிக்கடி Lancet ஐ புரட்டுகிறேன், PubMed ஐ துழாவுகிறேன் ( இதே காரியத்தை செய்யும் நவீன தமிழ் எழுத்தாளர் ஒருவரும் உண்டு. அவர் எதற்கு இதனை செய்கிறார் என்று எனக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியாது 🙂 . உளவியல் கற்ற காலத்தில் நேர்மையான மருத்துவர்கள் கந்து வட்டி கொள்ளையர்கள் உட்பட பலராலும் துன்புறுத்தப்படுவதை நேரடியாக அறிந்துள்ளேன். தனியார் மருத்துவ கல்லூரி சேர்க்கை சம்பிரதாயங்கள் குறித்தும் நேரடி அனுபவம் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வருடம் தோறும் நமது மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் இடத்திலும் இருக்கிறேன். சுமார் பத்து வருடங்களாக மென் திறன் பயிற்சி, குடிமை தேர்வு பயிற்சி ஆகியவற்றை கொடுப்பதால் உள்ள அனுபவம் தனி. இது தவிர மனித வள ஆலோசகராக இருந்ததால் நிறுவனங்கள் நமது மாணவர்களை எப்படி பார்க்கின்றன என்பதும் ஓரளவிற்கு தெரியும். இது அத்தனையையும் தாண்டி சமீபத்தில் வந்த அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாத நோய் தந்த மருத்துவ அனுபவம் தனி. ஏறத்தாழ இரண்டு தசாப்த்தங்களுக்கு முன், head on collusion caseற்கு internal hemorrhage இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத “விபத்து ” specialist மருத்துவரால் ஏற்பட்ட இழப்பும் உள்ளது.
ஏன் இந்த சுய புராணம் ?
இப்போது நீட் தொடர்பாக கருத்துக் கணைகளை வீசும் பலருக்கு இலவச இணைய இணைப்பு இருக்கிறது என்பதை தவிர எந்த தகுதியோ, locus standi யோ இல்லை மேற்கண்டவை எனது தகுதிகள் /தகுதியின்மைகள்.
ஜாதி சங்கங்களும் கல்வி நிறுவனங்களும்
ஐம்பது அறுபது வருடங்ககுக்கு முன்னர் கூட ஜாதி சங்கங்கள் ஆக்க பூர்வமான வேலைகள் பலவற்றை செய்தன. திராவிட சித்தாந்தம் வந்து ஜாதியை ஒழிப்போம் என்று கூற தொடங்கிய பிறகு தான் ஜாதி சங்கங்கள் சீரழிந்து ஓட்டு பிச்சைக்காரர்களின் கூடாரமாகவும், கட்ட பஞ்சாயத்து மையங்களாகவும் மாறின. பல அமைப்புகள் தரகு வேலை செய்ய தொடங்கின. ஜாதி அபிமானம் என்பது வேறு ஜாதி வெறி என்பது வேறு. நமது போராளிகளுக்கு இது புரியவே புரியாது. ஜாதியை கெட்ட வார்த்தையாக மாற்றிய திராவிட அமைப்புகள் ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்திய சரித்திரமே கிடையாது.
தங்கள் சமூகத்தில் நவீன கல்வி கல்வி பெற்றவர்களது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று எண்ணும் அனைவரும் தமது ஜாதி அமைப்புகள் வாயிலாக கல்வி நிறுவனங்கள் தொடங்குவதை குறித்து யோசிக்க வேண்டும். மாநாடு, ஆயிரம் வாகன பேரணி, கலர் கயிறுகள், பன்ச் டயலாக் டீ ஷர்டுகள் ஆகியவை தராத பயனை கல்வி கூடங்கள் தரும். சொல்லப்போனால் இன்றய சூழ்நிலை லாப நோக்கமற்ற கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான சரியான சூழ்நிலை. கல்வி கொள்ளையர்கள் நடுவில் ஒரு நல்ல நிறுவனமானது இருக்காதா என்று நம்மவர்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் “தங்க முட்டை இடும் வாத்தை அறுத்த” மூட கொள்ளையர்கள் வரும் விலைக்கு தங்கள் நிறுவனங்களை விற்க தயாராக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டால் அடுத்த 10/15 வருடங்களுக்குள் ஏற்படும் மாற்றம் வியக்கத்தக்கதாக இருக்கும்.
இந்த முயற்சியில் நீங்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தின் சிறப்பு அதன் கட்டிடங்களிலோ, பேருந்துகளிலோ இல்லை. அந்நிறுவனத்தின் மனிதவளத்தில் தான் உள்ளது. வாயிற்காப்பாளர் தொடங்கி கல்வி நிலைய தலைவர் வரை அனைவரையும் திறமை அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சிறு நகரங்களில் பெரிய அளவு சிரமம் இல்லாமல் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள் ( நன்றி பா ம க ), பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றை உருவாக்கி விடலாம். நிர்வாக இடத்தில் 50% அந்தந்த சமூகத்தை சார்ந்த ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஏழைகள் என்றால் உண்மையான ஏழைகள். சான்றிதழில் மட்டும் ஏழையாக இருப்பவர்கள் அல்ல. மீதம் 50% இடத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்காக சட்டப்படி நன்கொடை வாங்குவதில் தவறில்லை. தரமான கல்வியும், ஒரிஜினல் ஒரு முக ருத்ராட்சம் போல அரிதான பொருள் தான். தரம் இருந்தால் கொட்டி தருவார்கள். ஆனால் தரத்தை எது நிர்ணயம் செய்கிறது?
கல்லூரி /பள்ளி தொடங்கியதும் தான் எட்டு திக்கில் இருந்தும் சூனியம் பறந்து வரும். எத்தனையோ நல்ல கல்வி நிறுவனங்கள் அழிந்தது இத்தகைய செய் வினைகளால் தான். வேறு ஒன்றும் இல்லை. எத்தகைய தகுதியும் இல்லாத தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும் பாடம் ஒழுங்காக எடுக்க தெரியாத கழிசடைகள் ஒவ்வொன்றாக நானும் உங்கள் ஜாதி தான் என்று கிளம்பி வரும். அவர்களுக்கு பலமான சிபாரிசும் வரும். நான் எனது ஜாதி அமைப்பின் கல்வி நிறுவனங்களில் தேர்வு குழுவில் இருந்தாலும் சரிதான், ஏனைய புது கல்வி நிறுவனங்களின் ஆசிரிய தேர்வு குழுவில் இருந்தாலும் சரிதான், ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக கூறுவேன். கல்வி நிறுவனங்களை நாம் நடத்துவது நமது சமுதாய மாணவர்களின் நன்மைக்காக தானே தவிர வேலை செய்யாத புறம்போக்குகளின் நன்மைக்காக அல்ல.
உங்கள் ஜாதியை சேர்ந்த ஒருவனுக்கு வேலை கொடுத்தால் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அவ்வளவு தான். ஆனால் திறமையான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் ஒரு தலைமுறை மாணவர்கள் நல்வாழ்வு பெறுவார்கள். பணத்திற்க்கோ, ஜாதி அபிமானத்திற்கோ பலியாகி மோசமான ஆசிரியர் ஒருவருக்கு வேலை கொடுத்தால் அவர் ஒரு சில தலைமுறை மாணவர்களின் அறிவு கண்களை குருடாகிவிடுவார். உங்கள் நிறுவனத்தையும் நாசம் செய்து விடுவார். இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறையில் இந்த விஷயத்தில் மிக தெளிவாகி இருந்தார்கள். பல கிறிஸ்தவ நிறுவனங்கள் குடுமி வைத்த அந்தணர்களை வேலைக்கு வைப்பதில் எந்த தயக்கமும் கொள்ளவில்லை. திறமை இருந்தால் போதும். அதே போல வைதீக அந்தணர்கள் ஆங்கிலேயரிடம் சென்று ஆங்கிலம் கற்கவும் தயங்கவில்லை. இதனை புரிந்து கொண்டு சர்தார்ஜி ஆனாலும் பார்சியானாலும் திறமை உள்ளவர்களுக்கு வேலை கொடுங்கள். இனி சொந்த ஜாதியில் உள்ள நபர்கள் அதிகம் ஒரு கல்வி நிறுவனத்தில் இருக்க கூடாது என்பதற்கு மனித வள நிர்வாக ரீதியாகவும் ஒரு காரணம் உண்டு. வேற்று ஜாதியையோ /மதத்தையையோ சார்ந்த நபர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் வெளியே தள்ளி விடலாம். ஆனால் மாமனையும் மச்சானையும் உள்ளே வைத்தால் இது நடக்குமா ? வேற்றாள்கள் வேலைகிடைத்ததே புண்ணியம் என்று ஒழுங்காக வேலை செய்வார்கள்.
(தொடரும்)
கட்டுரையாசிரியர் அனிஷ் கிருஷ்ணன் நாயர் தீவிர இலக்கிய வாசகர், சிந்தனையாளர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
அருமையான ஆரம்பம். தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். தொடரக் காத்திருக்கிறேன்.
இந்துக்கள் கல்வி நிலையம் நடத்தவே கூடாது என்ற உயரிய எண்ணத்தில் உருவாக்கப்பட்ட Right to Education Act பற்றிப் படித்துவிட்டு கட்டுரை எழுதவும்
நானும் ஒரு மேல்நிலைப்பள்ளி நிா்வாகத்தை 30 ஆண்டுகாலம் கவனித்து வந்தேன்.கட்டுரை ஆசிாியா் சொல்வது மெத்தசாி. மனிதவளம் தான் முக்கியம். தற்போது அப்பள்ளியில் ஒரு முதுகலை இயற்பியல் ஆசிாியா் பணியிடம் காலியாக உள்ளது.சாதி அபிமானம் மற்றும் அரசின் பொது விதிபடி ஏற்கனவே பட்டதாாி ஆசிாியராக இருக்கும் மிகச் சாதாரண தகுதி படைத்தவா் எம்எஸ்சி பட்டத்தை 7 ஆண்டுகளாக தபாலில் படித்து தோ்ச்சி பெற்றவா்-நிச்சயம் மே.நி.வகுப்பு இயற்பியல் பாடத்தை நியாயமான முறையில் இவரை நடத்த முடியாது என்ற நிலையில் நான் அவருக்கு பதவி உயா்வு அளிக்க ஆதரவு அளிக்கவில்லை.நிதி உதவி பெறும் பள்ளியில் கீழே பணியாற்றுபவா்களுக்குதான் பதவிஉயா்வு அளிக்க வேண்டும் என்றுதான் அரசால் வலியுருத்தப்படுகின்றது.அரசின் உத்தரவிற்கு ஏதிராக செயல்பட வேண்டும் என்றால் நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். குறைந்தது 50000 ஆயிரம் ரூபாய் 3 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்.முடிவு நிச்சயமாக கணிக்க முடியாது. இந்நிலையில் பள்ளிகளில் தகுதியான ஆசிாியா்கள் எங்கே நியமிப்பது ?
இன்று ஆசிரியா்களுக்கு பிரமாதமான ஊதியம் வழங்கப்படுகின்றது.
கலைக்கதிா் படிப்பவா்கள் எத்தனை போ் ? அறிவியல் பத்திாிகை படிப்பவா்கள் எத்தனை போ ? வீட்டில் தாங்கள் போதிக்கும் பாடங்களுக்கு தேவையான புத்தகங்களை வைத்திருப்பவா்கள் எத்தனை போ் ? தொடா்ந்து படிப்பவா்கள் எத்தனை போ் ? ஆசிாியா்கள் உயா்கல்வித்தகுதி பெற்றால் அவா்களுக்கு ஒரு பட்டத்திற்கு இரண்டு ஆண்டு ஊதிய உயா்வுக்கு சமமான தொகை ஊக்க ஊதியமாக வழங்கப்படும்.
M.Phil பட்டத்திற்கு மேல்நிலைப்பள்ளிகளில் ஊக்க ஊதியம் கிடையாது என்று அரசு ஆணையிட்டு விட்டதை மாற்றி ஊ.ஊ வழக்கலாம் என்று உத்தரவிட்டது.உடனே எனக்கு அறிமுகமாக 32 போ்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் M.Phil பட்டம் தபால் வழியில் பெற்றுவிட்டாா்கள்.எனக்கு ஆச்சாியம். எனக்கு அறிமுகமாக பள்ளியில் 4 போ்கள் மிகசாதாரணமாக எந்த வித தனி முயற்சியும் செய்யாமல் தோ்ச்சி பெற்று ஊக்க ஊதாியம் பெற விண்ணப்பித்தாா் . அவாிடம் உனது ஆய்வு கட்டுரையை நான் படித்துப் பாா்க்க வேண்டும் கொடு என்றேன். வருடங்கள் 7கடந்து விட்டது.வரவில்லை.பட்டங்கள் பெறுவதற்கு கல்வித் தகுதி ??????????ஆசிாியா்களின் தகுதியை கூட்ட எதாவது செய்தால் பயனுண்டு.பள்ளிக் கூடங்கள் உருப்படும்.பள்ளிகளில் ஆசிாியா்கள் நியமனத்தில் சாதி வேறுபாடு கூடாது.பாருங்கள் இந்து மற்றும் அரசு பள்ளிகளில் ஆசிாியா் நியமனத்திற்கு ”தகுதித்தோ்வில்” தோ்ச்சி பெற வேண்டும் என்றும் அதேபாடத்தை சிறுபான்மை பள்ளிகளில் நடத்தும் ஆசிாியருக்கு தகுதித்தோ்வு தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் போில் அரசும் விட்டுக் கொடுத்துவிட்டது. எங்கே மனித வளம் ???????ஆசிாியா்களிடம் மனித வளம் இல்லை.இல்லை.என்ன செய்யலாம் ?
The R T E act specify all the educational institution to reserve 25% of seats for poor children’s.. But minority’s institution filed a case in SC and got exemption