தமிழக அரசியல் தமிழர்களாலும் பிற இந்தியர்களாலும், இந்திய அரசியல் இந்தியர்களாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுவதாக நம்புபவர்கள் / நம்ப விரும்புபவர்கள் மிக அதிகம். அவர்கள் நீங்கலாக பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட ஆதிக்க, அராஜக நாடுகளின் அரசியல், பொருளாதார, மதக் கணக்குகளே இந்தியாவைக் கட்டுப்படுத்துகின்றன என்ற உண்மையைப் புரிந்துகொண்டிருப்பவர்களுக்கு, ரஜினியின் விஷயத்தில் பாபா முத்திரை, கீதை வசனங்கள், ஆன்மிக அரசியல் போன்ற இந்து அம்சங்களைத் தாண்டி யோசிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு (உலக அரசியலில் தமிழகம் மிகச் சிறியது என்று எண்ணவேண்டாம். இந்தியாவுக்கான ஸ்கெட்ச் தமிழகம் மூலமும் போடப்படுகிறது).
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை (பிரவேச அறிவிப்பை?) தமிழ் தேசிய பிரிவினைவாதிகள், கம்யூனிஸ சிலுவை தூக்கிகள், திராவிடர் கழக மூடர்கள், தலித் பெயரில் கட்சி நடத்தும் கைப்பாவைகள் எடுத்த எடுப்பிலேயே எதிர்க்கிறார்கள். பா.ஜ.க., காங்கிரஸ், தமகா போன்ற தேசியக் கட்சிகள் வரவேற்றுள்ளன. அ.தி.முக, தி.மு.க. போன்றவை ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் அரசியலுக்கு வரலாம் (நாங்கள்லாம் வரலியா) என்ற அனுபவ அறிவு மிளிர கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
ரஜினியின் தனிக் கட்சி என்பது பாஜகவின் கிளை அணி என்பதாகவே ”இங்கே தரமான (?) முத்திரைகள் வெகு விரைவாகக் குத்தித் தரப்படும்’ அன்கோவினர் முத்திரை குத்திவிட்டிருக்கின்றனர். ரஜினி தனது திரையுலகச் செல்வாக்கை நம்பியோ நல்லாட்சி தந்தாகவேண்டிய உந்துதலினாலோ அரசியலுக்கு நிச்சயம் வரவில்லை என்று நம்பும்படியாகவே அவருடைய இத்தனைகால செயல்பாடுகள் இருந்துள்ளன. அப்படியானால், இப்போது அரசியலில் இறங்க எது, யார் காரணம்..?
இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் ரஜினியின் அரசியல் பற்றி எதுவும் சொல்லிவிடமுடியாது (அவர் அறிவித்திருக்கும் காரணத்தை ”நல்ல வசனம்… ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணிட்டீங்களே… வெல்டன்’ என்று சொல்லிவிட்டுக் கடப்பதே புத்திசாலித்தனம்).
ரஜினியை இயக்குவது யார்..?
இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்க முடியும். இன்று தமிழகத்தில் இரண்டு அரசியல் சக்திகள் / இலக்குகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. ஒன்று : பிரிவினைவாத அரசியல்.
இந்திய மொழி வழித் தேசியங்கள் எல்லாவற்றையும் போலவே இந்தியப் பெருநிலப் பொது நடைமுறைகளில் இருந்து சற்று மாறுபட்டு, தனித்தன்மையுடன் தமிழகமும் இருந்து வந்திருக்கிறது. எனினும் பிற மொழித் தேசியங்களைப் போலவே தமிழகமும் ஈராயிர ஆண்டுகாலமாக இந்தியப் பெரு நிலத்தின் ஓர் அங்கமாக இசைவுடன் இருந்துவந்துள்ளது. அதன் மூலம் தமிழ் கலைகள், தமிழ் பொருளாதாரம், தமிழ் கலாசாரம், தமிழ் சமூக வாழ்க்கை எல்லாம் உரிய உச்சங்களை எட்டியுமிருக்கின்றன. தமிழின் மிகச் சிறந்த பொக்கிஷங்களான ராமாயணமும் மகா பாரதமும் சமஸ்கிருத மூலத்தில் இருந்து முகிழ்த்தவைதானே. இந்தியப் பெரு நிலத்தின் சிவனும் விஷ்ணுவும் தேவியர்களும் தானே தமிழர்களின் தெய்வங்களும் (எதிர்மறை அம்சங்களில்கூட இந்தியப் பெரு நிலத்தின் ஜாதியக் கட்டமைப்புதானே தமிழகத்திலும் அருகு போல் வேரோடி ஆல் போல் தழைத்து வந்திருக்கிறது).
ஆனால், அந்தத் தொடர்பின் கண்ணிகளையெல்லாம் அறுத்தெறிந்து தனித் தன்மை அம்சத்தை இந்திய மரபின் எதிர் நிலையாகக் கட்டமைத்து, ஜனநாயக அரசின் போதாமைகள், சுதந்தரங்கள், நவீன அரசுகளின் பிழைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மொழி உணர்ச்சிகளை மலினமாகத் தூண்டி பெரும் அழிவை நோக்கித் தமிழ் நிலத்தைத் தள்ளும் சக்திகள் (இலங்கையில் அந்தக் கலையில் கற்றுத் தேர்ந்த நிலையில்) வலுப்பெற்றுவருகின்றன. இது ஒரு பக்கம்.
இதன் எதிர் நிலையாக மேற்கத்திய பாணி வளர்ச்சியை இலக்காகக் கொண்ட இந்திய தேசியக் கட்சிகள் மிகுந்த மந்தத் தன்மையுடன் தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சி செய்துவருகின்றன.
ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். எனவே, அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது.
அப்படியே ஆகுக..!
ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே. ஜனாதிபதி மாளிகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு நியாயமான எதிர்ப்பை புதிய ஜனாதிபதி தெரிவித்தால் அடுத்த நாளே இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களின் தலையில் கிறிஸ்மஸ் குல்லாவை மாட்டும் அளவுக்கு எதிர் நிலை சக்திகள் வலுவான நிலையிலேயே இருக்கிறார்கள். ஊடகங்கள், கல்விப் புலம், நீதித்துறை, வருமான வரித்துறை, வங்கித் துறை, உளவுத்துறை என அனைத்திலும் இந்து விரோத, இந்திய விரோத சக்திகள் வலுவாகக் காலூன்றியிருக்கின்றன.
இந்நிலையில் வெறும் அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிலும் பிராந்திய அளவில் போதிய தேசிய நலன் சார்ந்த வழிகாட்டல்கள்கூட சாத்தியமே இல்லாத நிலையில் (அரசுகளை விமர்சியுங்கள்… தேசத்தை நேசியுங்கள் என்ற செய்தியைக்கூடக் கொண்டுசெல்ல முடியாத நிலையில்) ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆரம்பகட்ட மகிழ்ச்சியைத் தாண்டி எங்கும் சென்றுவிடமுடியாது என்பதே கசப்பான நிஜம்.
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுவதென்பது தேசத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் வளத்துக்கும் உதவும் என்ற எளிய உண்மையை உச்சரிக்க ஒரு வாய்கூடத் தமிழகத்தில் இல்லை. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அணு உலைகளைக் திறந்து, அபாயத் தொழிற்சாலைகளைக் கட்டித் தமிழர்களை அழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அயோக்கியர்களின் வாய்கள் ஓயாமல் உளறிக்கொட்ட அனைத்து வாய்ப்புகளும் வாசல்களும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.
சல்லிக்கட்டு கலகத்தின்போது, அந்த விளையாட்டில் இருக்கும் சாதிய மேலாதிக்கத்தைப் பற்றியோ, நவீன காலகட்டத்தில் அப்படியான ஒரு விளையாட்டின் பொருத்தமின்மை பற்றியோ, அதில் தொடர்ந்து இறக்கும், காயம்படும் தமிழர்கள் குறித்த அக்கறையை அந்தக் குடும்பத்தினர் கூடச் சொல்ல முடியாத வகையில் ஒரு பாசிஸப் பேரியக்கமாக அது தேச விரோத சக்திகளால் வடிவமைக்கப்பட்டது.
விவசாயிகள் தினம் தினம் வாடிய பயிரைக் கண்டு வாடி இறப்பதாகப் பெரும் கதையாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்கள், மத்திய அரசின் அமைப்புகள் மீதான எதிர்ப்பு என திட்டமிட்டு தேசத்தின் பொருளாதாரத்தையும் தேசியத்துடனான இணைப்பையும் உடைக்கும் முயற்சிகள் பெரும் வெறியுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் நோக்கில் களம் காண வேண்டிய ரஜினி அதை முழுக்க முழுக்க ரகசியமாகவே செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே சூழலின் அபாயத்தைப் புரியவைக்கப் போதுமானது.
நான் ஒரு பச்சைத் தமிழன்…
வாழ்க தமிழ் மக்கள்… வளர்க தமிழ் நாடு…
என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் நல்லது செய்தாகவேண்டும்…
ரஜினியின் ஆலோசகர்களில் தமிழருவி மணியன், ஜான் மகேந்திரன்…
அரசியல் அறிவிப்பின் போது வெள்ளை அங்கி…
அதிலும் அந்த அறிவிப்பின்போது அவர் மனப்பாடம் செய்து கம்பீரமாகப் பேசிய வசனங்களில் தென்படும் தெளிவு, புத்திசாலித்தனம்…
இவற்றையெல்லாம் மிகவும் இயல்பான, நியாயமான விஷயங்களாக நினைத்துக்கொண்டு எளிதில் கடந்துவிடமுடியாது.
இப்போது அவர் ஒருவேளை தேச விரோத சக்திகளின் நெருக்குதலால் களம் காணுகிறார் என்பது உண்மையாக இருக்கக்கூடுமென்றால் அது தமிழகத்துக்கு மாபெரும் இடியாகவே அமையும். ஜெயேந்திரரை ஜெயலலிதாவை வைத்துக் கைது செய்ய முடிந்தவர்களுக்கு ரஜினி பாபாவை வைத்தே இந்திய விரோதத்தை முன்னெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமில்லை.
எனவே, ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமையும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக திரை மறைவு சக்திகளுக்குக் கிடைத்த பொன் முட்டையிடும் வாத்து அவர்.
அவர் மட்டும் இந்திய தேசியத்துக்கு வலுவூட்டும் வகையில் எதையேனும் வெளிப்படையாகச் செய்தால் இன்று கிடைக்கும் ஊடகக் கவனத்தில் நூறில் ஒரு பங்குகூட அவருக்குக் கிடைக்காமல் போகும். அல்லது அவர் அனைத்து ஊடகத்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார். அவருடைய ரசிகர்கள், குடும்பத்தினர் செய்யும் தவறுகள் பூதாகரப்படுத்தப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படும் வருமான வரித்துறை மிகுந்த கடமை உணர்ச்சியுடன் ரஜினியைக் கட்டம் கட்டும் (பாஜகவுக்கு நெருக்கமாக வரத் தொடங்கிய அடுத்த நிமிடமே பன்னீர் செல்வம் சுற்றிவளைக்கப்படவில்லையா அதுபோல்). இப்போதே காட்சி ஊடகங்களில் ரஜினியின் வருகையை எதிர்க்கும் குரல்களுக்கு மட்டுமே அதி முக்கியத்துவம் தரப்படுகிறது.
இளைய தளபதி ஜோசஃப் விஜய் நாளையே தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தினால் ஒட்டுமொத்த தமிழகமும் அவர் பக்கம் இருப்பதுபோல் இந்த ஊடகங்கள் கத்தத் தொடங்கிவிடும். திக., திமுக, மதிமுக, லதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் (!?) நாம் (மட்டுமே) தமிழர், மே-17, மனித நேயக் கட்சி, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சிகளும் சுப.வீ. உதயகுமார், கெலதமன் போன்ற ”போராளி’கள் அடிவயிற்றில் இருந்து அவரை ஆதரித்து முழங்குவார்கள். கமலுக்கு இப்படியான ரசிகர் கூட்டம் போராளிகள் மத்தியில் இருக்க வாய்ப்பு இல்லை. தமிழக அரசியல் களத்தில் அவர் (அ)கெளரவ துணை நடிகராக மட்டுமே இருக்கமுடியும் என்றே தோன்றுகிறது.
எனவே, யார் என்பது முக்கியமில்லை… எந்தக் கொள்கையை முன்வைத்து அரசியல் செய்ய முன்வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். மத்திய அரசிடமிருந்து சில உரிமைகளை வென்றெடுத்தாக வேண்டி வரும். சில நேரங்களில் முரண்பட வேண்டியும் வரும். ஆனால், இவற்றையெல்லாம் ஜனநாயக வழியில் இந்தியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுப்பது அவசியம்.
ரஜினியால் அது முடியுமா..? அதாவது ரஜினியை பின்னின்று இயக்குபவர்களின் நோக்கம் தமிழர் நலன் என்ற போர்வையிலான இந்திய எதிர்ப்பா… இந்திய நலன் என்ற நோக்கிலான தமிழர் நலனுமா..?
ஒருவேளை ரஜினி பி.ஜே.பி.யின் ஆசியுடன் தான் களம் காணுகிறார் என்றே வைத்துக்கொண்டாலும் இந்து மதத்தின் மீதும் மோதிஜியின் மீதுமான வெறுப்பு ஆழ வேரோடியிருக்கும் தமிழக ஊடகக் களத்தை ரஜினி காந்தின் சூப்பர் ஸ்டார் இமேஜ் வெல்ல முடியுமா?
கேரள, ஆந்திர, கர்நாடகத்தினர் நீங்கலான, தமிழர்களிலும் பிராமணர், தலித்கள், 40% அதிமுகவினர் நீங்கலான திராவிடர்களின் (?) முன்னேற்றக் கழகம் (சரியாகச் சொல்வதென்றால் திருக்குவளை கருணாநிதி ப(க்)தர்களின் முன்னேற்றக் கழகம்) ஆட்சியைப் பிடித்தபோது திராவிடர் கழகத்தின் வெறுப்பு அரசியலில் இருந்து வெகுவாக விலகிவிட்டிருந்தது. என்றாலும், மாநில சுயாட்சி என்ற பெயரில் அவசியமற்ற பிரிவினைவாதத்தின் கூறுகளை உள்ளே கொண்டிருந்த காரணத்தால் இந்திய தேசிய சக்திகள் எம்.ஜி.ஆர். என்ற ஆரிய நிற மன்னாதி மன்னனை முன்வைத்து இந்தியாவையும் தமிழகத்தையும் பலப்படுத்தியதாக வரலாறைச் சிலர் வாசிப்பதுண்டு.
அப்படியானால், அந்த நமக்கு நாமே முன்னேற்றக் கழகத்தின் 2.0 வெர்ஷனான தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் பலம் பெறத் தொடங்கியிருக்கும் இன்றைய நிலையில் இந்திய தேசிய சக்திகள் காலா மன்னனை முன்வைத்து எடுக்கும் ரீ மேக் தானா இது? எனில் இது அமோக வெற்றி பெறட்டும்.
அல்லது முதல் ரவுண்டில் கோட்டை விட்டதை இரண்டாம் ரவுண்டில் வென்றெடுக்க, சர்வ தேச சதியாளர்களின் பின் துணையுடன், முதல் படத்தின் சாயலிலேயே எடுக்கப்படும் புதிய அபாயகரமான படமா?
வரலாறு சதியாளர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப நடந்துவிடாது என்று சொல்பவர்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிச் சண்டைகள், இஸ்லாமிய தேச உள் மோதல்கள், இலங்கைப் பேரழிவு என பல இடங்களில் நடந்தவற்றைக் கண்டும் காணாமல் இருந்தபடியேதான் அதைச் சொல்ல வேண்டியிருக்கும்.
எனவே, காலா வின் 2.0 எப்படி இருக்கும்..?
காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
அது தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் கேட்க விரும்பும் பதிலாக இருக்குமா..?
பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்..!
(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
உண்மைகளை உரைக்கும் உயர் திரு மகாதேவனின் சிறந்த கட்டுரை.
//சர்வ தேச சதியாளர்களின் பின் துணையுடன், முதல் படத்தின் சாயலிலேயே எடுக்கப்படும் புதிய அபாயகரமான படமா?
வரலாறு சதியாளர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப நடந்துவிடாது என்று சொல்பவர்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிச் சண்டைகள், இஸ்லாமிய தேச உள் மோதல்கள், இலங்கைப் பேரழிவு என பல இடங்களில் நடந்தவற்றைக் கண்டும் காணாமல் இருந்தபடியேதான் அதைச் சொல்ல வேண்டியிருக்கும்.//
The hen is on the eggs.Let us wait.But Mr.Rajini has to face the same people who glamore for money for casting votes.It is not Leaders/official who are hindering the development of Tamilnadu.It is the public who are corrupted to the backbone.
பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலை திருமங்கலம் பார்முலாவால் தீவிரமாகி, பின்னர் வந்தவர்களால் நிலைப்படுத்தப்பட்டு விட்டது.
The author has written like a blind BJP follower. The question is not only whether rajni is backed by the BJP or not. There are many more questions facing him.
Has he ever raised his voice on people’s issues or corruption?
He has always supported whoever was in power, be it JJ or mu.ka.
In his speech on Dec 31st, he said that there are many people to stage protests & organize rallies, so his fans should keep quiet.
Is this not highly insulting? Does he mean that the people who protest have no other work.
I am talking about the common man here, not the parties.
As for the BJP, it is blatantly evident that they are against tamilnadu.
Why were the archeological excavations in kadirmangalam abruptly stopped?
What about the Gail project?
When hundreds of farmers fasted & protested in delhi, the PM did not even have the time/inclination to meet them.
But he has the time to meet actress gautami for 30 mins & talk to her.
Great.
A major state like TN was without a governor for close to 1 year. Does tis not show how the centre regards TN?
What is the governor doing today in TN? Is it justified?
Ok, if you say it is, whey do the governors in the BJP ruled states not doing the same?
When Venkaiah naidu was central minister, he had the audacity to come & question the officials in the secretariat & then warn the CM later in the press conference. What authority has he got to do this?
If JJ was alive, would this have happened?
Rajini is a total misfit & irrespective of whether he is supported by BJP or not, he will be an utter failure in politics.
அசத்தலான வ்யாசம்.
\\ திராவிடர் கழக மூடர்கள், \\
+ புத்திசாலி ( அல்லது அப்படி நினைத்துக்கொள்ளும்) திருடர்கள் என்றும் கூட்டிக் கொள்ளலாம்.
\\ நல்ல வசனம்… ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணிட்டீங்களே… வெல்டன்’ என்று சொல்லிவிட்டுக் கடப்பதே புத்திசாலித்தனம் \\
ததாஸ்து. எனக்கு நம்பிக்கை வரவேயில்லை.
\\ இன்று தமிழகத்தில் இரண்டு அரசியல் சக்திகள் / இலக்குகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. ஒன்று : பிரிவினைவாத அரசியல். \\
இரண்டாவதைப் பற்றி வ்யாசம் ப்ரஸ்தாபிக்கவில்லையா? அல்லது நான் வ்யாசத்தை சரியாக வாசிக்கவில்லையா? அந்த இரண்டாவது சக்தியை ஸஸ்பென்ஸாக விட்டுவிட்டீர்களே ஜீ.
\\ இந்திய மொழி வழித் தேசியங்கள் எல்லாவற்றையும் போலவே இந்தியப் பெருநிலப் பொது நடைமுறைகளில் \\
ஒரே செகப்பு சாயமா இருக்கிறதேன்னு நெனச்சேன். இந்த வ்யாசம் பீஆரெம்முடையதா அல்லது தமிழ் சிண்டுவில் வெளிவரும் பாக்சாருடையதான்னு இந்த மொழிவழித்தேசியம் எனும் உலக்கைக்கொழுந்து சொல்லை வாசித்ததும் திகிலடைந்து விட்டேன். ஆனால் போகப்போகத் தெரியும்னு கொஞ்சம் தெம்பைக் கொடுத்திருக்கிறீர்கள் மேற்செல்லும் வ்யாக்யானத்தில்.
\\ அடுத்த நாளே இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களின் தலையில் கிறிஸ்மஸ் குல்லாவை மாட்டும் \\
சரி சரி. வாங்கின காசுக்கு குறைத்துத் தானே ஆகோணும்.
\\ சல்லிக்கட்டு கலகத்தின்போது, அந்த விளையாட்டில் இருக்கும் சாதிய மேலாதிக்கத்தைப் பற்றியோ, \\
ம்…………..இது ஹிந்துத்வத்தின் ஒரு மாற்றுப்பார்வை. பெரும்பான்மை ஹிந்துத்வத்தினர் ஜல்லிக்கட்டினை கோவில் திருவிழாவின் அங்கமாகவே பார்க்கின்றனர். அது அவ்வண்ணம் முழுமையான பாதுகாப்புடன் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக செயல்படுகின்றனர். ஆப்ரஹாமியத்துக்கு விலைபோய்விட்ட டம்ப்ளர்கள் எப்பாடுபட்டாவது வலுக்கட்டாயமாக இதிலிருந்து சமயத்தை அழித்தொழித்து இதை விளையாட்டாக முன்னிறுத்த விழைகின்றனர்.
உங்களுடைய பார்வை ஸ்ரீமதி ராதாராஜன் போன்றோரின் காமாலைப் பார்வை. நாம் (மட்டுமே) டம்ப்ளர் கட்சியினர் ஜல்லிக்கட்டுக் காளைக்கு இதுவரை பாவாடை அல்லது குல்லா போடாத பெருந்தன்மையை டம்ப்ளர்களாகக் கன்வெர்ட் செய்யப்பட்ட தமிழர்கள் மெரீனா பீச்சில் ஓசி பிரியாணி சாப்பிட்டு ஏப்பம் விட்டு செரிமானித்து விட்டனர்.
\\ அரசியல் அறிவிப்பின் போது வெள்ளை அங்கி…
அதிலும் அந்த அறிவிப்பின்போது அவர் மனப்பாடம் செய்து கம்பீரமாகப் பேசிய வசனங்களில் \\\
கிழிஞ்சது க்ருஷ்ணகிரி. இது உருப்படும்னு தோணலை. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ கம் காவ்யா கம் திருவாழ்மார்பன் கம் TAMIL கம் அய் அய் எம் கணபதிராமய்யர் கம் கம்……………..கம்மே பரவாயில்லை.
எப்பிடி இந்த பரட்டையார் அரசியல்ல செயல்படுவார் என்று தெரியவில்லை என்று வ்யாசம் ஆரம்பத்தில் சொன்னாலும் இப்பிடித் தான் செயல்படும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாகவே புரிந்து கொள்கிறென். மயிலாகிய தமிழகத்துக்கு சப்பாணியான எஸ் + எஸ்ஸே பரவாயில்லையா அல்லது பரட்டை பரவாயில்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லணும்னு தேவையில்லை. வெள்ளை அங்கி + வசனம் இத்தையெல்லாம் பாக்கறச்ச என் வோட்டு ஆத்தா வளத்த சப்பாணிக்கே.
Best article on Rajini’s entry I’ve so far read.
ரஜினி அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம். உண்மையை அப்பட்டமாக சொன்னால் இறை அருளால் போடப்பட்ட கட்டளை தான் அவரை தூண்டிவிட்டுள்ளது. தமிழகத்தில் ஈவேராவும் அவரது அடிவருடிகளும் மைனாரிட்டி மதமாற்ற வெறியர்கள் மற்றும் மதமாற்ற மூடர்களுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் செய்துவரும் இந்துவிரோத பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்கள் , அவற்றுக்கு எதிர் வினையாற்றும் அரசியல் தலைவர்கள் இல்லை என்ற வெற்றிடம் ஆகியவை இன்றைய தமிழக அரசியல் சூழலில் ரஜினியை இழுத்து வந்து விட்டன. ஹவாய் ஆதீன ஆன்மீக தலைவரான திருக்கைலாய வாசி சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் அவர்கள் அருளால் ரஜினி தமிழக முதல்வர் ஆவதும் அதனால் தமிழகம் நலம் பல பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
// இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் நோக்கில் களம் காண வேண்டிய ரஜினி அதை முழுக்க முழுக்க ரகசியமாகவே செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே சூழலின் அபாயத்தைப் புரியவைக்கப் போதுமானது. //
ஏன் அதற்கான துணிவு அவரிடம் இல்லையா ?. அதைச் செய்யாவிடில் அவர் அரசியலுக்கு வருவதால் தமிழகத்திற்கு பயன் ஒன்றும் இல்லை. ஆன்மீக அரசியல் என்று சொன்னவர் அது என்ன என்று வினாவிற்குச் சரியான பதில் சொல்லவில்லை. தேவர் மகனாரைப் போல் தேசமே (தெய்வீகம்) ஆன்மீகம் – (தெய்வீகமே) ஆன்மீகமே தேசியம் என்று சொல்லியிருக்கலாம் ? யாரைபார்தும் மண்டியிட வேண்டாம் என்று சொன்னதை வரவேற்கலாம்.
// ஜெயேந்திரரை ஜெயலலிதாவை வைத்துக் கைது செய்ய முடிந்தவர்களுக்கு ரஜினி பாபாவை வைத்தே இந்திய விரோதத்தை முன்னெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமில்லை ./ /
He is not such an eccentric character like Jaya or Kamal ? மீறினால் கலி முற்றிவிட்டது என்று விட்டுதள்ள வேண்டியதுதான்.
// ஆலோசகர்களில் தமிழருவி மணியன், ஜான் மகேந்திரன் //…
தமிழருவி மணியினை நம்பலாம் யார் இந்த ஜான் மகேந்திரன் – பாவாடை வகையராவா – இப்படி இரண்டு பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளவர்களால் தான் தேசியத்திற்கு அபாயம் என்பது நிதர்சனம்
// அரசியல் அறிவிப்பின் போது வெள்ளை அங்கி…//
வெள்ளை அங்கி அணிந்தால் பாவாடைகளுக்கு துணை போவாரோ என்ற பயமா !?
ஜெயா அரசியல் வருகையின் போது ஊடக வேசிகளின் எண்ணிக்கை குறைவு – ஊடகம் மற்றும் சினிமா ஈர்ப்பால் முன் நிறுத்தப்பட்டவர் – திறமையாகச் சிலகாலம் ஆட்சி செய்தவர் – அன்னிய சக்திகளிடம் விலை போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே – ஜெயேந்திரர் கைதிற்குப் பின் அநாகரீகத்தின் உச்சத்தைத் தொட்டவர் – தமிழக மக்களைத் திருடனிடம் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியவர் – செய்த பாவத்திற்கு கைதி என்ற கௌரவ பட்டத்துடன் பரலோக பிராப்தி அடைந்தார். இன்று மொத்த ஊடகமும் வேசிகளாகத்தான் உள்ளது ஆதனால் ரஜினியின் அரசியல் பிரவேசம் ( இரண்டுகெட்டான் வேளையிலே கண்டேனே உன்னையடி கதைதான்)
புலம்பல் ஒர்பக்கம் இருந்தாலும் நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்
ஸ்ரீ குருப்யோ நம:
குருவின் / குருவின் ஸ்தானத்தில் இருப்பவர் பெயரை உச்சரிப்பது நம் மரபு
அல்லவே
நம் மரபு ஹிந்து ஊடக்கத்திலேயே கைவிடப்படுவது வருத்தமளிக்கிறது. காஞ்சி முனிவர் என்றாவது கூறியிருக்கலாம்