தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?

சென்னை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல் என்பதே இப்போது எனது முடிவு. அதற்கான ஆதாரங்களைக் கீழே தருகிறேன்.

சுவாமிகள் கலந்து கொள்ளும் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து (prayer) சம்ஸ்கிருதத்தில் இருக்கும். அப்போது சபை முழுவதும் எழுந்து நிற்கும். ஆனால் சுவாமிகள் கண்மூடி தனது ஆசனத்தில் அமர்ந்து தான் இருப்பார், எழுந்து நிற்கமாட்டார். ப்ரேயர் முடிந்ததும் அனைவரும் அமர்வார்கள். இதுவே பற்பல வருடங்களாக இருந்து வரும் முறை. இது ஏறக்குறைய ஒரு involuntary action போல நடக்கும் ஒன்று. உதாரணத்திற்கு இரண்டு வீடியோக்களைக் கீழே தருகிறேன். இவை இரண்டுமே SCSMV பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா என்ற வகையிலான *பொது* நிகழ்ச்சிகள். இவற்றில் பேராசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

2016 நவம்பர் நிகழ்ச்சி: 35 – 37 நிமிடங்களைப் பார்க்கவும்.

2014 அக்டோபர் நிகழ்ச்சி: 14 – 17 நிமிடங்களைப் பார்க்கவும்.

இவற்றில் நிகழ்ச்சித் தொடக்கத்தில் ப்ரேயர் பாடல்களாக ‘கணானாம் த்வா கணபதிம்…’ ‘ப்ரணோ தேவீ சரஸ்வதீ…’ ‘பத்ரம் கர்ணேபி:.. ‘ ஆகிய புனிதமான வேத மந்திரங்கள் பாடப் படுகின்றன. மேடையிலுள்ள அதிகாரிகள், பார்வையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நிற்கிறது. சுவாமிகள் அமர்ந்து தான் இருக்கிறார். இதில் யாருக்கும் எந்தப் பிரசினையும் இல்லை.

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். இதுதான் நடந்திருக்கிறது. “நீராரும்” என்ற இந்தப் பாடல் தமிழ்நாடு அரசினுடைய அதிகாரபூர்வ வாழ்த்து என்பது அவரது நினைவில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை (வேதபாடசாலைகளிலும் குருகுலங்களிலுமே அவர் அதிகம் பயின்றிருக்கிறாரே அன்றி தமிழ்நாட்டின் ரெகுலர் பள்ளிகளில் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்). எனவே அவையினர் *அதற்காகத் தான்* எழுந்து நிற்கிறார்கள் என்று அவர் கருதுவதற்கும், தானும் எழுந்து நிற்க வேண்டும் என்று அவர் எண்ணுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் தான் அமர்ந்திருந்தார். “தமிழணங்கே” என்ற வரிகளைக் கேட்டவுடன் இது தமிழ்த்தாயைக் குறித்த பாடல் என்பதை உணர்ந்து கொண்டிருப்பார். சரி, தமிழன்னையும் தேவி சரஸ்வதியின் ஸ்வரூபம் என்பதால் இதைப் பாடியிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.

ஆனால், ஜனகணமன விஷயம் வேறு, அது ஒரு “அரசாங்க சமாசாரம்” என்பது சன்னியாசிகள் உட்பட அனைவருக்கும் தெரிந்த தகவல். அதனால் உடனடியாக எழுந்து நின்று விட்டார். இது தான் விஷயம்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவர் எழுந்து நிற்காதது அவமரியாதையால் அல்ல. மற்ற நிகழ்ச்சிகளில் பாடப்படும் வேத மந்திரங்களைக் கொண்ட சம்ஸ்கிருத கடவுள் வாழ்த்துக்களைப் போல இதுவும் தமிழில் உள்ள ஒரு வாழ்த்து என்று கருதியதால் தான் என்பது வெள்ளிடை மலை. உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். மடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எழுதப்பட்ட ஸ்வராஜ்யா ஆங்கிலக் கட்டுரை அவசரத்திலும் விஷயத்தை சரியாக ஆராய்ந்து பார்க்காமலும் எழுதப்பட்டிருக்கிறது.

காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.

இதுவே இந்தப் பிரசினையில் எனது இறுதியான நிலைப்பாடு.

நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு  காஞ்சி மடம் அளித்துள்ள விளக்கம்

இந்த விளக்கத்தில் கடவுள் வாழ்த்து என்று கருதி தியானத்தில் சுவாமிகள் அமர்ந்திருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டரீதியாகவும் இதுவே சரியானது. தமிழ்த்தாய் வாழ்த்தை அங்கீகரித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் (முடிவில் அல்ல) கடவுள் வாழ்த்தாக (As a Prayer song) இது பாடப்பட வேண்டும் என்றே உள்ளது. பாடலின் போது எழுந்து நிற்க வேண்டும் என்பதும் அரசாணையில் இல்லை. அரசாணையின் பிரதி கீழே.

தமிழைக் குறித்து காஞ்சி மடாதிபதிகள் அனைவரும் உயர்வாகவே கூறி வந்திருக்கிறார்கள். மறைந்த பரமாசாரியார் தமது உரைகளில் பல இடங்களில் திருக்குறள், தேவாரம், பிரபந்தம் முதலிய தமிழ் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டியும் வந்திருக்கிறார். மேலும், இந்துமதத்தின் பொதுவான மற்றும் சன்னியாச நடைமுறைகளின்படி நின்றால் மரியாதை, உட்கார்ந்தால் அப்படியல்ல என்பதெல்லாம் கிடையாது – அது நாம் நமது பொதுநிகழ்ச்சிகளில் வலிந்து ஏற்றுக்கொண்ட ஒரு மேற்கத்திய / கிறிஸ்தவ நடைமுறை மட்டுமே. இந்துமத நிகழ்ச்சிகளில் புனிதமான பல மந்திரங்களை உட்கார்ந்து கொண்டு தான் ஓதுகிறார்கள்.

தமிழ்த்தாய் என்ற கருத்தாக்கமும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் சரி, முற்றிலும் இந்துமதம், இந்துப் பண்பாடு சார்ந்தவை. உண்மையில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மார்க்சியர்கள் ஆகியோருக்குத் தான் அவர்களது மத நம்பிக்கைகளுக்கு எதிரான அந்தப் பாடலைக் குறித்து ஆட்சேபங்களும் எதிர்ப்புணர்வும் இருக்குமே தவிர இந்துக்களுக்கு அல்ல. இது குறித்து மேலும் அறிய “தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல் தெரியாத உண்மைகள்” என்ற எனது பதிவைப் பார்க்கவும்.

2010 செம்மொழி மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது முழு அவையும் எழுந்து  நிற்க அப்போது முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி தனது இருக்கையில்  அசையாமல் உட்கார்ந்திருந்தார் என்பது அப்போதைய வீடியோ பதிவுகளில் தெரிய வருகிறது. அந்த வீடியோவை இங்கே காணலாம்.  அப்போது இதைக் குறித்து எந்த சர்ச்சையும் எந்த “தமிழ் உணர்வாளனும்” எழுப்பியதாகவே தெரியவில்லை.  இத்தனைக்கும் உட்கார்ந்திருந்தவர் தமிழக முதல்வர். அரசியல்வாதி.

எனவே  இப்போதைய எதிர்ப்புகளும் கண்டனங்களும்  வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்யப் படுகின்றன என்றே கருத வேண்டும்.

*****

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பதிவில் எழுதியது)

19 Replies to “தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?”

  1. In many meetings when prayer song was sung the audience were asked to sit and listen.

    This is not a dis- respect in any manner. Everybody sit & sing prayer song in Pooja room.

    There is a rule to standup and respect only National Anthem which Swamy did.

    Also as per sastra sanyasi ‘s supposed bow towards GOD and his mother only.

  2. ‘It’s a Hindu-Muslim Conundrum over Conversions in Maharashtra’

    January 24, 2018

    A majority of Muslims in Maharashtra who chose to change their religion have adopted Hinduism, while a majority of Hindus preferred to convert to Islam in the state, an RTI reply has revealed.

    As per data of the last 43 months acquired by RTI activist Anil Galgali, 1,687 people voluntarily converted to different faiths across the state, said the figures of all religious conversions provided by the Directorate of Government Printing & Stationery (DGPS).

    Of these people who opted to change their religion voluntarily owing to various social-religious reasons, the faith-wise breakdown was: 1,166 Hindus, 263 Muslims, 165 Christians, 53 Buddhists, 16 Sikhs, nine Jains, four Neo-Buddhists and 11 others.

    Out of these Hindus, 664 converted to Islam, followed by 258 adopting Buddhism, 138 embracing Christianity, 88 becoming Jains and 11 taking to Sikhism, one Neo-Buddhist and six to other religions, says the DGPS data.

    “Islam remains a high favourite among the religion change seekers, with 749 out of the total 1,687, between June 10, 2014 and January 16, 2018,” Galgali said citing the data.

    In contrast, from among the Muslims who decided to convert, 87 percent – or 228 embraced Hinduism, 21 embraced Christianity, 12 became Buddhists and two became Jains.

    Out of the Buddhists changing their religion, 21 embraced Islam, 17 became Hindus, 14 took to Christianity and one to Jainism.

    Of the Christians who changed their faith, 100 embraced Hinduism, 47 took to Islam, 11 became Buddhists, five adopted Jainism and two became followers of Sikhism.

    From the 16 Sikhs who changed their religion, 12 embraced Islam, and two each adopted Christianity and Jainism.

    Among the nine Jains, four converted to Islam, two each became Hindus and Christians and one embraced Sikhism.

    “These are only the numbers available with the DGPS which records the changes reported to it.

    In actual terms, the number of people who change their religions is much higher and needs to be studied,” Galgali said.

    https://www.business-standard.com/article/news-ians/it-s-a-hindu-muslim-conundrum-over-conversions-in-maharashtra-118012401422_1.html

  3. பாக்கிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி கார்கில் புகழ் பா்வேஸ் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளை சுதந்திர போராட்ட வீரா்கள் என்று புகழ்ந்தார்.அவரைப் போலவே காஷ்மீா் சட்டமன்ற உறுப்பினா் அசீஸ் அகமது மிர் ” காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்படும் பயங்கரவாத காடையா்கள் அனைவரும் தியாகிகள் மற்றும் சகோதரா்கள் என்று அவா்களது மரணத்தை சாதனையாக பிரச்சாரம் செய்வது தவறு என்று அறிவித்துள்ளார்.அதற்கு மத்திய அமைச்சா் ஜிநேந்திர சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் முஸ்லீம் இயக்கங்கள் கள்ள மௌனம் காத்து வருவது பச்சை தேசத் துரோகம்.

    A terrorist is just a terrorist: Jitendra Singh on PDP MLA’s comment
    Jan 12, 2018
    JAMMU: Union minister Jitendra Singh on Friday tried to play down the “Kashmiri militants are martyrs” remarks of a PDP MLA, calling it a “stray comment” and said the government was firm on its stand against terrorism.
    Aijaz Ahmed Mir stoked a controversy yesterday when he described Kashmiri terrorists shot dead in encounters with security forces as “martyrs” and “brothers” and also cautioned against glorifying their killings.
    “If a stray comment is made by a stray person, it is not to be given any importance. But as far as we are concerned, a terrorist is a terrorist and a terrorist only,” Singh told reporters here in reply to a question seeking his reaction over the remarks.
    “Terrorism is to be dealt in the way terrorism is dealt. We have zero tolerance against terrorism and government is clear on this stand and will continue to follow this stand,” he said.
    The Union minister said such comments amount to disrespecting the nation’s security forces.
    “By saying anything, terrorist cannot be a martyr and by making such an apologetic statement about terrorists, who engineer terrorist acts, amounts to disrespecting security forces,” said Singh.
    Full report at:
    https://timesofindia.indiatimes.com/india/a-terrorist-is-just-a-terrorist-jitendra-singh-on-pdp-mlas-comment/articleshow/62479392.cms
    ——–

  4. திரு.கேசவ விநாயகன் என்ற ராஷ்டிரிய ஸவயம்சேவக் சங்க தொண்டா் மேற்படி வீடியோ மற்றும் கருத்துக்களை பதிவேற்றி வாட்ஸ்அப் பில் வலம் வந்து விட்டது.எனது கைபேசிக்கும் வந்து விட்டது.நன்றி

  5. மேற்படி வீடியோக்களை தமிழ் செய்திச் சேனல்களுக்கு கொடுத்து ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். விஜேந்திரருக்கு எதிராக வைரமுத்துவை பாரதிராஜாவை திமுக செயல் தலைவா் ஸடாலினை முறுக்கேற்றி வருகின்றன நமது செய்தி சேனல்கள்.சிங்கங்கள் குறித்து உலகம் அதிக ஆா்வம் எடுத்துக் கொள்கின்றது.மண்புழுக்களை அல்ல.சங்கரமடாதிபதிகள் சொக்கத் தங்கம்.வாழ்க.எல்லா சோதனைகளையும் அவா்கள் தங்கள் தவத்தால் வெல்வார்கள். ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர

  6. 2010லிருந்தே கருநாநிதியின் உடல்நிலை எப்படி இருந்தது? இங்கே சுட்டிக்காட்டிய நிகழ்ச்சிக்கப்பறம் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் எழுந்து நிறக வேண்டிய நேரத்தில் உட்கார்ந்திருந்தாரா? முதலில் அதை நிருபியுங்கள். கருநாநிதியின் வயது 96. 2010ல் 89. இதை ஓரிரண்டு வருடங்கள் மாறியிருக்கலாம். மற்றபடி அவரால் நிற்கும்படி அவரின் உடல்நிலை இடங்கொடுக்காமல் எப்போதே ஆகிவிட்டது. உட்கார்ந்துதான் பரிசுகளைக்கூட வழங்கும்படி நிலை. எனவே செம்மொழி மாநாட்டில் அவர் உட்கார்ந்திருந்ததை அவரின் உடல்நிலை இடங்கொடுக்கவில்லை என்று பார்த்தத்தெரிந்தவர்கள் அல்லது பழகியவர்கள் அனுமாநித்திருப்பர்.

    இம்மாதம் 8ம் தேதி மாலை மயிலாப்பூரில் பாரதீய வித்யா பவனின் நடந்த டாக்டர் நாகசாமியின் திருக்குறள் பற்றிய நூல் வெளியீட்டுவிழாவுக்குப் போனேன். நூலை வெளியிட்டவர் இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சுவாமிகள். விழா முடிந்த பின் அவர் காரில் ஏறும் முன் பலரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த போது நான் மிக அருகிலேயே நின்றிருக்க வேண்டியபடி என்னைக்கூட்டம் தள்ளிவிட்டது. என் பார்வையில் அவருக்கு வயது 50க்கும் கீழ் இருக்கும். நல்ல திடகாத்திரமாக உடல். நிற்கும் தோரணையில் எந்த வலியுணர்வும் காட்டப்படவில்லை. அதாவது அவருக்கு நல்ல கால்கள்.

    எனவே கருநாநிதி நின்றது; அவரின் கால்கள் நிறகமுடியாதபடி செயலிலிந்தபடியால். இவர் நிற்காமல் போனதுக்கு சங்கர மடம் கொடுத்த விளக்கமே. எது எப்படியாயினும் இங்கு கருநாநிதியையும் இவரையும் ஒப்பிட முடியாது.

  7. ““நீராரும்” என்ற இந்தப் பாடல் தமிழ்நாடு அரசினுடைய அதிகாரபூர்வ வாழ்த்து என்பது அவரது நினைவில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை”
    No comments !!!

  8. இலங்கையில் சில வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது நிகழ்வில் கலந்துகொண்ட சிவாச்சாரியார்கள் எழுந்து நிற்கவில்லை என்று சிலர் விமர்சனம் செய்தனர்.

  9. Of all the comments given on this issue, the best one came from the actor Kamalhasan. He remarked: It should not be the practice to sing this Hymn to Mother Tamil.

    இவ்வளவுதான் சொன்னார். இதன் பொருள்: எங்கு தமிழ் மதிக்கப்படுகிறதோ அல்லது தமிழைத் தங்கள் தாய்மொழி; அதுவே தம் வாழ்வின் முதலிடம்; என்று தம் மொழியைப் போற்றுவோர் நிறைந்த இடத்தில் மட்டுமே இவ்வாழ்த்துப் பாடப்பட வேண்டும். அரசு நிலவரப்படி, அரசு நிகழ்ச்சிகள் பாடுவது போக.

    இதனால் தங்களுக்கு எங்கள் மதமே முதலில் என நினைக்கும் இந்துக்களும், எங்கள் மதம் எவ்வகை உருவகத்தை ஏறகாது எனப் பேசும் இசுலாமியரும் கிருத்துவரும் மற்றவர்களும் கூடுமிடங்களில் இப்பாடல் தவிர்க்கப்பட்டிருந்து வேண்டா விமர்சங்கள் எழாது போகும்.

    பி ஜே பி ஒரு தேசீய கட்சி. அக்கட்சியின் துணைத்தலைவர்களில் ஒருவரின் தந்தையார் ஒரு பெரிய சமஸ்கிருத பண்டிட். அவர் சமஸ்கிருதம்- ஆங்கில் அகராதியை எழுத, அவர் மகன் அதை காஞ்சி சங்கராச்சாரியார் இளைவர் வந்து வெளியிடும் நிகழ்ச்சி. இதற்கும் தமிழ்தாய் வாழ்த்துக்கும் என்ன தொடர்பு. அங்கே குழமியிருந்தோர் தமிழ் பேச, எழுத, வாசிக்க தெரியும். அவ்வளவுதான். தமிழைத் தெய்வமாக போற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

    இனியாவது நடிகர் சொன்னதைப் போல இத்த்மிழ்த்தாய் வாழ்த்தை உங்கள் கூட்டங்களில் போடதீர். மாறாக சரஸ்வதி வ்ந்தனம் பாடுங்கள். நல்லது.

  10. Dear BSV, does a man who cannot ever stand for two minutes have any moral authority to be the chief minister of a large state. If he had a conscience he would have resigned citing poor health. Do you know the view of EVRamasami on tamizhthai vazhthu?.

  11. திரு. BSV அவா்களுக்கு
    யாதும் ஊரேயாவரும் கேளீா் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே உலகிற்கு ஒளியாக உதாரண புருஷனாக மனித நேயத்தோடு வாழ்ந்தவர்கள் தென் இந்தியாவில் வாழ்ந்த இந்தியா்கள். இந்தியன் என்று வாழ்வதே சிறப்பு.திராவிடன் என்பது குண்டுச் சட்டிக்குள் வாழ நினைப்பது.இந்தியன் என்றால் இந்தியா முழுவதும் நமது ஊர்தான்.திராவிடம் தனித்தமிழ்நாடு என்றால் அரேபிய நாடுகளின் நிலைதான் ஏற்படும். 1000 ஆண்டுகள் அடிமையாக இருந்து .இழிநிலை அடைந்த நிலையில் நாடும் அரசும் ராணுவம் போன்ற அமைப்புகள் வலிமையாக முறையில் உருவாகாத நிலையில் பாக்கிஸ்தான் உருவாகி விட்டது.அதைப்பார்த்து சில தமிழா்கள் சப்புக் கொட்டுவது முட்டாள்தனம். சப்புக் கொட்டிய அண்ணாதுரை கருணாநிதி போன்றவா்கள் பிரிவினை பேசினால் ராணுவம் வரும் என்ற ஒருசிறு அறிவிப்பிற்கு அந்தா் பல்டி அடித்து தாங்கள் ஒரு பகல் வேடதாரிகள் என்று நிரூபித்து விட்டார்கள். கருணாநிதி பதவியில் இல்லையெனில் தமிழன் சொரணை கெட்டவன் மானம் கெட்டவன் மடையன் என்பார்.இன்று இந்திய ராணுவம் மற்றும் அரசு மிக வலிமையான நிலையில் உள்ளது.ஒரு மணலைக் கூட இந்தியாவிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது.இந்தியாவிடம் மோதி தொடா்ந்து மண்டையை உடைத்துக் கொண்டதுதான் பாக்கிஸ்தானுக்கு கிடைத்த பரிசு. தமிழ் மொழி சிறக்க திராவிடம் என்ற சிந்தனை அடித்தளம் அநாவசியம். இந்தியாவின் சமாதான நடவடிக்கையை நாசம் செய்து இலங்கை தமிழா்கள் பெரும் எண்ணிக்கையில் செத்து ஒழிய காரணம் பிரபாகரன்தான்.இலங்கையில் உள்ள ஈழம் இந்தியாவில் தமிழ்நாடு இணைத்து ஒரு புதிய நாட்டை யாரும் உருவாக்க முயன்றால் முதல் எதிரி அதற்கு நான்தான். இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி தனி தமிழ்நாடு சாத்தியமில்லை.வேண்டாம்.தமிழனுக்கு திராவிடப் போலிகளால் பெரும் அழிவுதான் ஏற்படும்.
    சங்கரமடம் சமஸ்கிருதத்தையும் வைதீக கர்மா அனுஷ்டானங்களையும் போஷிக்க வேண்டிய நிலையில் உள்ளது. நமது நாட்டின் தொன்மையான மொழி சமஸ்கிருதம்.தொல்காப்பியா் போன்றவா்கள் பார்பனா்களே.ஒரு பார்ப்பனரால் இலக்கணம் செய்யப்பட்ட மொழியைக் கொண்டு பார்ப்பனா்களை இழிவு செய்யும் நிலை தொடருவது மிகப்பெரிய தீண்டாமை ஆகும். தமிழை வளா்த்ததில், இன்றும் அதன் செழுமைக்கு தொண்டு செய்து கொண்டிருப்பவா்களில் பார்ப்பனா்கள் யாருக்கும் சளைத்தவா்கள் அல்ல. சதா அன்று அப்படி இப்படி என்று பேசிக் கொண்டிருப்பது முட்டாள்தனமாகத் தெரிகின்றது. உலகம் நிறைய மாறியிருக்கின்றது.பிறாமணா்களும் மாறியிருக்கின்றார்கள். பிறாமணர்களில் உயா் தகுதியானவர்களை இழிவு படுத்தி நாம் கண்டது என்ன ? இன்று பிறாமணர்கள் தங்களின் அறிவாற்றல் காரணமாக வெளிநாடுகளில் பணி செய்து அந்த நாடுகளை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.நாம்தாம் அவர்களை விரட்டி விட்டோம்.
    சங்கரை மடத்தை அழிக்க நினைப்பதை விட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தையோ ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தை ஆதரிக்கும் வகையில் தாங்கள் போன்றவர்கள் கவனம் செலுத்தலாம். ஸ்ரீநாராயணகுரு வின் சமயம் பிறாமணா்களுக்கு ஏதிரானதும் இல்லை.சார்ந்தும் இருக்கவில்லை. ஸ்ரீநாராயணகுரு அவரது சீடர்களும் 100 ஆண்டுகளுக்கு மேல் முறையான சமய கல்வியை பிறாமணா்கள் அல்லாத மக்கள் மத்தியில் பரப்பி இன்று ஒரு புலையன் புகழ்பெற்ற சிவன் கோவில் தலைமை அா்ச்சகராக கேரளத்தில் தொண்டு செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு புலையன் அந்தணணாக பிறாமணனாக பார்ப்பனாக புடம் போடப்பட்டுள்ளான்.ஆங்கிலத்தில் Take the thunder out of it என்ற கருத்துக்கு இணக்கமாக பிறாமணா்கள் பெற்றுள்ள உயர்தகுதியைப் பெற புலையனுக்கு நாராயணகுரு மந்திரம் உதவியது. சுவாமி விவேகானந்தரும் ” பார்ப்பனா்களோடு மோதி உன் ஆற்றலை விரயம் செய்யாதே.பிறாமணா்களின் உயா் தகுதியை பெற முயல்.வெற்றி பெறலாம். இன்று பிறாமணா் அல்லாதவா்களள் பணம் படைத்து விட்டோம். ஆனால் பண்பாடு சிறக்கவில்லை. Intellectual giants But moral pigmies. தகுதியானவா்களை இழிவு செய்வது நியாமற்ற செயலாக தங்களுக்கு படாதது எனக்கு வருத்தம்தான்.

  12. வாட்ஸ்அப்பில் மேலும் ஒரு வீடியோ வலம் வந்து விட்டது.தௌஹீத் ஜமாத் போன்ற ஒரு அமைப்பைச் சோ்ந்த ஒரு முஸ“லீம் அன்பரின் பெயா் தெரியவில்லை.யு டியுப்பில் அவரது சொற்பொழிவு நிறைய உள்ளது. மேற்படி அன்பர் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது அதற்கு எழுப்பி நிற்பது இசுலாத்திற்கு எதிரானது. காபி, தண்ணீா் குடிக்கப் போகின்றேன். கழிவறை போகின்றேன் என்று ஏதாவது சொல்லி போக்கு காட்டி விட்டு தமிழ்தாய் வாழ்த்து பாடி முடித்தபின் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று பேசி இருக்கின்றார்.
    வீர தீர திராவிட அடலேறு ஸ்டாலின் அவர்களும் வீரமணி அவர்களும் சங்கர மடத்திற்கு எதிரான போராட்டத்தில் மேற்படி நபரையும் சோ்த்துக் கொள்வதுதான் நியாயம்.

  13. It is unjustifiable to say that Karunanidhi’s health did not allow him to stand while the greetings for Mother Tamil was being sung. If he really wanted to show his respect for Mother Tamil, he could have leant on someone for a support. Any one who attended the meeting, would have been more than happy to allow this old man to lean on himself for a couple of minutes. If he cannot do this, he should not have attended the meeting.
    Sakunthala

  14. Anburaj,

    Veeramani, Mu.Ka & his loyal follower BSV are “secularists”. They will criticize only Hinduism & Hindu leaders.

  15. //இந்தியன் என்று வாழ்வதே சிறப்பு.திராவிடன் என்பது குண்டுச் சட்டிக்குள் வாழ நினைப்பது.இந்தியன் என்றால் இந்தியா முழுவதும் நமது ஊர்தான்.திராவிடம் தனித்தமிழ்நாடு என்றால் அரேபிய நாடுகளின் நிலைதான் ஏற்படும்.//
    உயர் திரு அன்புராஜ் அவர்கள் இங்கே அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். தாங்கள் தெரிவித்த அத்தனையும் உண்மைகள், தொடர்ந்து எழுதுங்கள்.

  16. //இலங்கையில் சில வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது நிகழ்வில் கலந்துகொண்ட சிவாச்சாரியார்கள் எழுந்து நிற்கவில்லை என்று சிலர் விமர்சனம் செய்தனர்.//
    எமக்கு கிடைக்க பெற்ற தகவல்கள்படி ´நீராரும்` என்று ஆரம்பிக்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்படுவது தமிழ்நாட்டில் மட்டுமே. இலங்கையில் திராவிட மற்றும் ஈவேஇராமசாமியின் நஞ்சுகள் எடுபடவில்லை.

  17. க மல ஹாஸன் சொல்லுவதைக் கூடப் புரிந்து கொண்டு விடலாம் போலும். ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஸ்வாமின் சொல்ல வரும் விஷயத்தை அந்த பரலோகத்தில் இருக்கும் ஏகபிதாவையன்றி வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறது. சரிதானே ஸ்வாமின் 🙂

    என்ன தான் சொல்ல வருகிறீர். கொஞ்சம் இப்பிடிக்கா. கொஞ்சம் அப்பிடிக்கா. எலெக்ஷன்ல கிலக்ஷன்ல நிக்கப்போகிறீரா?

    பாஷை எந்த பாஷையாக இருந்தாலும் சரி. அது கருத்துக்களின் தாய். ஒவ்வொரு பாஷையும் ஈச்வர ச்ருஷ்டி. அதிலும் ஹிந்துஸ்தானத்தின் மிகத்தொன்மையான மொழிகளான தமிழும் ஸம்ஸ்க்ருதமும் …………. சமயத்துடன் தொடர்பு கொண்ட யாரும் இந்த இரு மொழிகளை மிக உயர்வாகவே போற்றுவார்கள். போற்றுகிறார்கள். மற்றெல்லா மொழிகளையும் போற்றுவது போல்.

    அவ்வண்ணமே ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமின: அவர்களும் அவரது ஸன்யாஸ நியமப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகையில் ………… மாத்ருவந்தனம் என்ற ப்ரார்த்தனா ஸ்துதிக்கு ஒரு ஸன்யாஸியாக நியமப்படி த்யானத்தில் இருந்திருக்கிறார். அவரது ஆச்ரம நியமப்படி தமிழ்த்தாய்க்கு…………. த்யானாவஸ்தையிலிருந்து வந்தனம் செய்திருக்கிறார். முத்தமிழ் வித்தவர்களாகிய …………..ஆப்ரஹாமியக்காசுக்கு கூச்சலிடும் த்ராவிட விசிலடிச்சான் குஞ்சுகள் மட்டிலும் தான் …………..வாங்கின காசுக்கு மாரடிக்க…………… அவர் தமிழ்த்தாய்க்கு அவமரியாதை செய்திருக்கிறார் என்று ஓலமிடலாம்.

    எழுந்து நின்றுத் தான் வணங்க வேண்டும் என்பது தேவரீரது வாக்குதத்த மதமாகிய ஆப்ரஹாமிய மதத்தின் நியமம். காஞ்சி ஆசார்யர் ஆப்ரஹாமிய நியமப்படி ஒழுக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆப்ரஹாமிய குசும்புத்தனமின்றி வேறேதும் கிடையாது.

  18. நேற்று எதோ ஒரு செய்தி தொலைக்காட்சியில் திராவிட இயக்கத்தவர்கள் நடத்திய ஒரு தெருமுனை போராட்டத்தை காட்டினார்கள்.அதில் ஸ்ரீவிஜேந்திரா் போல் வேடமிட்டு முகமூடி அணிந்த ஒருவருக்கு செருப்பு மாலை அணிவித்துஇருந்தார்கள். இது தமிழ்நாடு தானா ? இப்படியெல்லாம் ஒருவரை இழிவு படுத்துவதை நாம் அனுமதிக்கலாமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *