அஞ்சலி: பி.ஆர்.ஹரன்

(மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ செயல்வீரருமான பி.ஆர்.ஹரன் (வயது 54) ஜூலை 4ம் தேதி புதன்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இந்த இணையதளத்தின் ஆரம்ப காலகட்டமான 2009ல் இருந்தே தொடர்ந்து இதில் எழுதிவந்தவர். மரணத்திற்கு முன்பு வெளிவந்த அவரது கடைசிப் பதிவு இந்தத் தளத்தில் வந்த நம்பிக்கை தொடரின் இறுதிப் பகுதி தான். அவரை இழந்து வாடும் உறவினர்கள்,  நண்பர்களது துயரத்தில் தமிழ்ஹிந்துவும் இணைகிறது. அவரது ஆன்மா நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம் – ஆசிரியர் குழு)

“செல்வத்தைத் தந்தேன் – உடலின் உழைப்பினைத் தந்தேன்
திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் – குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்..”

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் குருபூஜை விழாவில் நமது பண்பாட்டின், தேசியத்தின் சின்னமான காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தும்போது பாடும் இந்தப் பாடலின் வரிகள் தான் ஹரனைப் பற்றி எண்ணும்போது நினைவில் நிழலாடுகின்றன. அவரது மறைவில், தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர்.

2004ல் ஜெயேந்திரர் கைதின் பின்னணியில் இந்து இயக்கச் செயல்பாடுகளில் முழு நேரமாக இணைந்தவர் ஹரன்.  செய்தி விமர்சனம், அலசல், சமகால சமூக அரசியல் நிகழ்வுகள், ஆன்மீகம் ஆகிய எந்த விஷயமானாலும், அவரது கட்டுரைகள் அனைத்தும் தகவல் செறிவுடனும் ஆதாரபூர்வமாகவும் இருக்கும். அதற்கு முன்பு புகழ்பெற்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் / மேலாண்மை ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவம், அவரது எழுத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு சிறப்பான கச்சிதத்தையும் நேர்த்தியையும் அளித்தது.  Vijayvaani.com, திண்ணை, தமிழ்ஹிந்து, vsrc.in, வலம் மாத இதழ் ஆகியவற்றில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பிரசினைகளையும் எழுதுவதற்கு அவர் தயங்கியதே இல்லை. தமிழ் செல்வன் என்ற புனைபெயரில் தமிழ்ஹிந்துவிலும் இன்னும் சில ஆங்கிலத் தளங்களிலும் கட்டுரைகளை எழுதி வந்தது அவர் தான். இந்த விஷயம் எங்களது நட்பு வட்டத்தைத் தாண்டி பொதுவில் அனேகமாக யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார்.

எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. சிதம்பரம் கோயில் வழக்கில் தீட்சிதர்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்பதற்காகப் பின்னிருந்து உழைத்தவர்களில் அவரும் உண்டு. கோயில் நிலங்களைப் பாதுகாத்தல், கோயில் நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்துதல், அறநிலையத்துறையினரின் அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தீவிரமாகப் பங்களித்து வந்தார். இவை தொடர்பான பல ஆதாரபூர்வமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். “கிறிஸ்தவ பிராமண சமிதி” போன்ற மதமாற்ற சூழ்ச்சிகள், ஊடகங்களில் திட்டமிட்டு நடத்தப் படும் கிறிஸ்தவ பிரசாரங்கள் மற்றும் இந்துமத அவமதிப்புகள் (விஜய் டிவியின் ‘தாலி’ குறித்த விவாதம்) ஆகியவற்றைக் குறித்து எழுதி அவற்றைக் கவனப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இஸ்லாமிய மதவெறியும், ஆதிக்கமும் பெருகி வருவதை ஆவணப்படுத்துவதிலும் (வேத விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஆவணப் படம்) அவர் காத்திரமான பங்களித்துள்ளார்.  பழங்குடியினர் & பிற்பட்ட கிராமப்பகுதியினருக்கு கல்விச் சேவை வழங்கும் ‘ஓராசியர் பள்ளி’ அமைப்பின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.   தமிழ்நாட்டின் இந்து இயக்கத் தலைவர்கள், தீவிர செயல்வீரர்களில் ஹரனைத் தெரியாதவர்கள் அனேகமாக யாருமே இருக்க முடியாது.

பொதுவாக மிருகங்களிடம் மிகவும் அன்பும் கருணையும் கொண்டவர் ஹரன். தனது சிறுவயது முதலே பூனைப்பிரியராக இருந்தவர். ஆலய வழிபாட்டாளர்கள் சங்கம் அமைப்புடன் இணைந்து பசுக்கள் பாதுகாப்பு, சட்டவிரோதமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம் புகார் கொடுத்து பசுக்களை மீட்பது ஆகியவற்றிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். கடந்த 2 வருடங்களாக கோயில் யானைகள் நலன், பராமரிப்பு குறித்த விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

புகைப்படம்: நன்றி ஜெயகுமார் ராஜகோபால்

ஹரனின் இந்துத்துவ செயல்பாடுகள் வெறுமனே அரசியல், சமூக தளத்தைச் சார்ந்தவை மட்டுமல்ல என்பது அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆழ்ந்த பக்தியுணர்வும், உள்ளார்ந்து ஆன்மீகத்தால் நிரம்பிய வாழ்க்கை குறித்த கண்ணோட்டமுமே அவரது பணிகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருந்தது. காஞ்சி பரமாசாரியாரிடமும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடமும் அவர் கொண்டிருந்த பக்தி மிகவும் உறுதியானது. பாரதம் முழுவதும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்வதும்,  கோயில்களையும், சாதுக்களையும் மகான்களையும் தரிசிப்பதும் அவரது மனத்திற்குப் பிடித்த விஷயங்கள். குறிப்பாக காசியும் கங்கையும் உணர்வுபூர்வமாக அவருக்கு மிகவும் நெருக்கமானவை. தனது ஹிமாலய / காசி யாத்திரை அனுபவங்களை முழுமையான தொடராக vsrc.in தளத்தில் எழுதியிருக்கிறார்.

புகைப்படம்: நன்றி – ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

எழுத்து மட்டுமின்றி செம்மையான பேச்சாற்றலும் குரல்வளமும் கொண்டவர் ஹரன். ‘உடையும் இந்தியா” தமிழ் பதிப்பு புத்தக வெளியீடு உட்பட இந்து இயக்கங்களின் பல நிகழ்ச்சிகளில் அவர் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அண்மைக்காலமாக இசைக்கவி ரமணன் குழுவினரின் பாரதியார் நாடகத்தில் பாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்தும் வந்தார். இப்போதும், ராஜபாளையம், தென்காசி ஆகிய இடங்களில் நாடகத்தை நிகழ்த்துவதற்காக ஜூலை 4ம் தேதி நாடகக் குழுவினரோடு பயணத்திற்காகப் புறப்பட்டிருந்த போதுதான், எழும்பூர் ரயில் நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

2006-7ம் ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் தான், அப்போதைய News Today இதழ்களில் அவர் எழுதிவந்த ஆங்கிலக் கட்டுரைகளின் வழியாக ஹரனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது இணையத்தில், அதுவும் குறிப்பாக தமிழ்ப் பதிவுகளில் இந்துத்துவ ஆதரவாளர்கள் பலதரப்பட்ட இந்து விரோத சக்திளுடன் பல தளங்களில் மோதிக்கொண்டிருந்தோம். ஒரு நட்பு வட்டமாக இணைந்து செயல்படுவது தைரியமும் நம்பிக்கையும் அளிக்கும் ஒன்றாக இருந்தது. அதோடு, ஒத்த சிந்தனைகளும் உணர்வுகளும் கொண்ட பல நல்ல மனிதர்களின் நட்பும் உருவாயிற்று. அந்த வழியில் உருவாகி வளர்ந்தது தான் ஹரனுடனான எனது தோழமை.  அதன் பிறகு பலமுறை சந்தித்து, பழகி, உரையாடி, இணைந்து பணியாற்றியிருக்கிறோம். ஒரு சில விஷயங்களில் கருத்து உரசல்களும் அபிப்பிராய பேதங்களும் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி அனைவரிடமும் மிக இனிமையாகவும் சகஜமாகவும் தோளில் கைபோட்டுப் பேசுமளவுக்கு நெருக்கமாகிவிடக் கூடியவர் ஹரன். தனிப்பட்ட அளவில் அவரது மரணச் செய்தி நெஞ்சை உலுக்கி விட்டது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போதும் அவரைக் குறித்த நினைவுகளே மீளமீள வந்து கொண்டிருக்கின்றன.

அன்பு நண்பருக்கு ஆத்மார்த்தமான கண்ணீர் அஞ்சலி.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

17 Replies to “அஞ்சலி: பி.ஆர்.ஹரன்”

 1. ஹரனின் இழப்பை இன்னும் ஜீரணிக்கமுடியவில்லை. ஹரன் செய்தவை ஏராளம். வெங்கட் சாமிநாதனுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசியவர்கள் பற்றிய குறிப்பை அவர் பேசிய விதம் மிகவும் ஈர்த்தது. வெங்கட் சாமிநாதனைக் குறித்துப் பேசியவர்கள் முன்பே வெங்கட் சாமிநாதனைப் பற்றிப் பேசிய எல்லாவற்றையும் தொகுத்து அங்கே வாசித்தார். ஆச்சரியமாக இருந்தது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதச் சொன்னால் அது குறித்த ஒட்டுமொத்த பார்வையாக அவரது கட்டுரை இருக்கும். வலம் இதழுக்கும் தமிழ் ஹிந்துவுக்கும் அவர் செய்திருக்கும் பங்களிப்பு காத்திரமானது. ஹிந்துத்துவர்களுக்கு பேரிழப்பு.

 2. அண்ணன் என்ற நிலையில் இருந்து என்னை வழிநடத்தியவர். உள்ளத்தில் சரியெனப்பட்டால் பாராட்டவும், தவறெனப்பட்டடால் சுட்டிக்காட்டவும் தயங்காதவர். எது குறித்து விவாதித்தாலும் நாம் விட்டுவிட்ட கோணத்தை எடுத்து வைத்து இதையும் சேர்த்துப் பார் என்பார். நம்மை யோசிக்கத் தூண்டும் வகையில் ஊக்குவிப்பார். அவர் கட்டுரைகள் குறித்தும் கருத்துக் கேட்பார். மாற்றுக் கருத்துச் சொன்னாலும் விவாதிக்கத் தயங்காதவர். இனி இப்படியொருவர் வருவது இறையருளைப் பொறுத்தது.

 3. அன்னாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரவித்து அஞ்சலி செலுத்துவோம். நல்ல தொண்டுள்ளம் படைத்த உத்தமர் ஒருவரைப் பற்றி எழுதியதற்கு – நல்ல எண்ணங்களை விதைத்ததற்கு மிக்க நன்றி.

 4. பார்க்க நினைத்திருந்தவர்களில் ஹரன் அவர்கள் முக்கியமானவர். கடைசி வரை பார்க்க முடியாமலே போய் விட்டது. உண்மையிலேயே அவரது திடீர் மரணம் அதிர்ச்சியைத் தான் அளித்தது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் எவராலும் நிரப்ப முடியாத ஒன்று.

 5. என்னோட கருத்தை வெளியிட்டேன். இங்கே மாடரேஷனுக்காகக் காத்திருக்கும் பட்டியலில் வரவில்லையே? என்ன ஆச்சு?

  திரு ஹரன் அவர்களின் திடீர் மறைவு உண்மையிலேயே பேரதிர்ச்சி தான். அவரைப்பார்க்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. அவர் குடும்பத்தினருக்கும் உற்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இதுவாவது போகிறதா பார்க்கிறேன். 🙁

 6. A Virath Hindu Samaritan, polite nature, I spoke to him on a few occasion, read his articles in News To-day and in several web pages, very bold in expressing the true facts, worked hard for Hindu Unity, very good campaigner, good photographer. It is too early that GOD has sent him a call to attain his feet, It is great loss to Hindu community, and may his soul rest in peace.

  My hear felt condolence to his family members.

 7. செல்வத்தைத் தந்தேன் – உடலின் உழைப்பினைத் தந்தேன்
  திறமைகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்தேன்
  என்ன தந்தபோதும் மனம் அமைதியற்றதால் – குருவே
  உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்..”

  புனித நன்னாளில் இன்று புஜை செய்கின்றோம்
  புஜையாகிற நல்ல மலா்காளகின்றோம்- இந்த
  நாள் வரை நான் தந்ததோர்பணம் -குருவே
  உன்தன் பாதத்தில் இன்று நானே அா்ப்பணம் -ஜெய ஜெய பகவா குருவே ஜெய ஜெய பகவா
  இந்த பாடலின் வரிகளை பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டியதற்கு நன்றி.

 8. இது ஒரு பெரும் இழப்பு. ஈடுகட்டமுடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் ஹிந்துத்துவ சிந்தனையாளர்களும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

 9. தமிழ்செல்வன் என்ற பெயரில் தமிழ் ஹிந்துவில் வந்த வ்யாசங்கள் ஸ்ரீ பீ ஆர் ஹரனுடையது என்று தெரிந்து கொண்டேன். அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் ஸ்ரீமதி ராதா ராஜன் போன்றோர் காந்தியடிகள் பற்றி எடுக்கும் நிலைப்பாட்டிற்கும் ஏனைய ஹிந்துத்வ நண்பர்கள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கும் பெரும் வேறுபாடு உண்டு. இவர்கள் இருவரும் தொடர்ந்து எழுத்துப்பணியை மட்டிலும் கைக்கொள்ளாமல் மதமாற்றத்துக்கு எதிராக களப்பணி செய்தல், கொலைக்கூடத்துக்கு ஆவினங்களைக் கடத்துதலுக்கு எதிராக களத்தில் செயற்படுதல் போன்றவற்றிலும் பங்கு பெற்றவர்கள். இவர்களொடு தோளொடு தோள் கொடுத்து அமரர் ஸ்ரீ பீ ஆர் ஹரன் அவர்களும் களப்பணி ஆற்றியிருக்கிறார். இந்த இருவேறு கருத்தாக்கங்கள் கொண்டவரிடையே சமன்வயத்துடன் பழகுவது அவ்வளவு எளிதல்ல. ஆயினும் மிக எளிமையாக சமன்வயத்துடன் மாற்றுக்கருத்துள்ளவர்களிடம் பழகும் பண்பினைக்கொண்டவர் ஸ்ரீ பீ ஆர் ஹரன் என்பது நினைவு கூறத்தக்கது.

  இவரது அகால மரணம் பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ஹிந்துத்வ இயக்க நண்பர்களுக்கும் இவரது குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல முருகப்பெருமான் மனச்சாந்தி அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

  இதை வாசிக்கும் தமிழ் ஹிந்து வாசக நண்பர்கள் அனைவரும் குறிப்பாக கருமமே கண்ணாயினார் எனக்களப்பணி ஆற்றும் அனைத்து ஹிந்துத்வ இயக்க நண்பர்களும் தமது உடல்நலத்தை செம்மையாகப் பேண வேண்டும் என்றும் விக்ஞாபித்துக்கொள்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை.

 10. It is heart-breaking that Amarar B R Haran is no more to fight for the cause of Hinduism. Amarar, Rightmantra Sunder’s sudden demise was shocking. Once I received an email from Rightmantra Sunder that as long as he is alive, he will see to it that our temples are lit with oil-lamps. He did temple service regularly (“ulavarappani). We need such people to protect Hinduism from being wiped away. Christians and Muslims convert our Hindu brothers and sisters. Hinduism is abused by people who do not have the guts to critisise Christianity and Islam. It is very sad and worrying that we lost these people who worked tirelessly to protect Hindus and Hinduism. Once upon a time Hinduism was practised by people all over the world. But now in Hindusthan, the birthplace of Hinduism, it faces the danger of being wiped out with out a trace. May God give long and healthy life for all the people who fight for the cause of Hinduism.
  Sakuntala

 11. Hinduism is abused by people who do not have the guts to critisise Christianity and Islam.
  ——————-
  இசுலாம் என்பது ஒரு அரேபிய வல்லாதிக்கம் என்பதை எந்த இந்துவும் அறிய மாட்டான். அரேபிய கலாச்சாரம் உலகை ஆள வேண்டும் என்ற தீவிர பிறகலாச்சார அழிப்பை கொள்கையாகக் கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கம் இசுலாம். கிறிஸ்தவமும் அதுதான். இந்திய மண்வாசனை இரண்டு மதங்களிலும் இல்லை.அந்நிய மதம்.இந்து அழிப்பு வெறுப்புஅதன் அடிப்பைட கொள்கை.
  ஆனாலும் பிரச்சனைக்குரியவர்கள் கோழை இந்துக்கள்தாம். இந்துக்களுக்கு முறையான சமய கல்வி அளிக்க எந்த திட்டமும் எந்த மடாதிபதிக்கும் இல்லை.இந்து சமய அறநிலையத்துறைக்கும் இல்லை. எந்த முஸ்லீம் 5 வேளை தொழுகை செய்ய கற்றுக் கொள்வான். கிறிஸ்தவ குழந்தையும் ஜெபம் செய்ய கற்றுக் கொள்ளும்.ஆனால் பெரும்பான்மையான இந்துக்குழந்தைகளின் நிலை என்ன ? பொங்கல் சோறு ….. வாங்க கோவில் என்பதற்கு மேல் ஏதும் இல்லை. அதைியாக பத்மாசனத்தில் அமா்ந்து ?ஏதோ பக்திபாடல்பாட மந்திரங்கள் ஜெபிக்க நாம ஜெபம் செய்ய எத்தனை இந்து குழந்தைகள் அறியும் ? நம்மிடம் பலகினங்கள் நிறைய வே உள்ளது. நேற்று ஒரு 10 வகுப்பு தோ்ச்சி பெற்ற இந்து அருந்ததிய இளைஞன் பின்பக்கம் ஒருவன் தாவா பணி இணைந்து செய்வோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷா்ட அணிந்து இருந்தான்.முன்பக்கம் அம்பேத்கா் படம்போட்டிருந்தது. தாவா பணி என்றால் இசுலாத்தில் மதபிரச்சார பணி என்று அா்த்தம். வாசகத்தை பார்த்து சங்கடப்பட்ட நான் அவன் வீட்டிற்குச் சென்று தாயிடம் பைனிடம் மதமாற்றப் பிரச்சனை தலை தூக்கு கின்றது என்று தொிவித்து விளக்கங்கள் அளித்துள்ளேன்.இந்து அறநிலையத்துறை தூங்குகின்றது. நாம் ஏதாவது செய்ய வேண்டும்.சமய வகுப்புகள் யோகா என்று முறையான சமய பயிற்சி பெறாத குழந்தைகளுக்கு அளிப்பது ஒன்றுதான் நாம் செய்யக் கூடியது.

 12. எனது வீடு கிறிஸ்தவ பேராலயத்திற்கு அடுத்துள்ளது.வீட்டைச்சுற்றி அனைவரும் போனதலைமுறையில் கிறிஸ்தவர்களாக மாறி விட்டவா்கள். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிறிஸ்தவர்கள் சாம் பேத என்று அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி பார்த்தார்கள். 8ம் வகுப்ப படிக்கும் போது விவேகானந்தாின் ஞானதீபம் என்ற புத்தகத்தொகுதியை படித்து -தவறு- வாசித்து முடித்து விட்டேன்.ஸ்ரீராமகிருஷ்ண தபோவன சாதுக்கள் நடத்தும் அந்தா் யோகம் செல்ல வாய்ப்பு கிடைத்தது.இது எனக்கு போதுமானதாக இன்றும் உள்ளது. முறையாக சமய கல்வி கிடைத்தால் எந்த இந்துவும் மதம் மாற மாட்டான்.

 13. ஹரன் மொழிபெயர்த்த “நம்பிக்கை” பன்னிரண்டு பாகத்தையும் ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டாலென்ன? ஒன்று இப்படி உருவாக்கப்பட்ட புத்தகத்தை தனியாக விற்பனைக்கு கொண்டு வரலாம் அல்லது வலம் இதழில் தொடராக வெளியிடலாம். இத்தகைய முயற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 14. //இதை வாசிக்கும் தமிழ் ஹிந்து வாசக நண்பர்கள் அனைவரும் குறிப்பாக கருமமே கண்ணாயினார் எனக்களப்பணி ஆற்றும் அனைத்து ஹிந்துத்வ இயக்க நண்பர்களும் தமது உடல்நலத்தை செம்மையாகப் பேண வேண்டும் என்றும் விக்ஞாபித்துக்கொள்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை.//

  Why don’t you, the RSS, conduct periodic health check up camps for them?

 15. Dear Joe

  \\ Why don’t you, the RSS, conduct periodic health check up camps for them? \\

  RSS as on organisation is out and out focussed on cadre building with patriotism, discipline and dedication. There are vivida kshetras for doing sewa activities. Sewa Bharati, one of the many organisations of Sangh Parivar looks after many sewa activities.

  Having said these, the consciousness about health should start from the self. Yes, to some extent you have a point there. Most of the karyakarthas who are immersed in their field work never think about self 🙁 the point may be taken up in some of the sangh baithak.

 16. My name is not Joe. My name is as my parents gave: Bala Sundara Vinayagam. FYF, my elder brother who is a Tamil novelist, has the name of the same God in different name. You should try to bring Christians and Muslims into Hindu religion. You shouldn’t drive Hindus from Hindu religion. Have not they taught you properly about Ghar Vapsi in RSS?

  Anyway, good you’ve accepted my suggestion. But you seem to have lost some sight. RSS does not contain elite or rich members or middle classes who can afford medical charges in good hospital. If you go to WB and even Kerala, poorer sections are also involved in its activities. So, you cannot make out a case that they should themselves spend for their medical check up in thousands.

  There’re many doctors and other health care professionals in RSS. You can use their services and conduct periodic health check up camp. Many organisations do that for their poor members. Tell your leader or the BJP leader in TN who herself is a doctor.

  The late Haran is middle class. But I don’t know whether it is cardiac arrest or heart attack. Reports use the word heart attack loosely. Cardiac arrest comes suddenly. Heart Attack come with warnings i.e it may have come before and left. If it was heart attack, he would have got it earlier. Or, in childhood, he may have had heart ailment, which will attack in adulthood any time. Whatever it might be, he could have gone for complete medical check up from time to time. I don’t believe he had little time for that. A man who could write a series of long articles every week in Thinnai recently and spent in translating long pieces from English as we saw here, late Haran must have time to care for his heart. He was casual when it came to his health – that’s all we can say. That’s why I said, RSS could have made it mandatory for its workers to undergo medical check up in their camps and the late Haran would have to submit his certificate if he was in RSS. Better late than never.

 17. Anburaj Sir,
  ஒரு 10 வகுப்பு தோ்ச்சி பெற்ற இந்து அருந்ததிய இளைஞன் பின்பக்கம் ஒருவன் தாவா பணி இணைந்து செய்வோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷா்ட அணிந்து இருந்தான்.முன்பக்கம் அம்பேத்கா் படம்போட்டிருந்தது. தாவா பணி என்றால் இசுலாத்தில் மதபிரச்சார பணி என்று அா்த்தம்.

  I was wondering why this kid was wearing that T-shirt. Was he given any monetary benefit to wear this shirt advertising the மதபிரச்சார பணி? Our Hindu brothers and sisters are naïve to believe the false promises given by the Islamic fanatics and the Christian Missionaries. What was the outcome of your conversation with his mother? Is she going to ask her son not to be involved in any such activities? Good on you to talk to his mother. In some website, I read that the Christian missionaries, under the pretext of helping to tie the neck tie for the school kids, put a garland of cross around the kids’ neck, thus without the knowledge of the gullible parents (village folks), the kids are converted into Christianity. Our kids are brain washed by these fanatics.
  முறையாக சமய கல்வி கிடைத்தால் எந்த இந்துவும் மதம் மாற மாட்டான். True. But Christians and Muslims offer some money to the vulnerable people for converting into their religion, I believe.
  Sakuntala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *