சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே

நாதுராம் கோட்÷
ஒரு மத வெறியன்
ஒரு முட்டாள்
மாபெரும் குற்றவாளி

மனிதருள் மாணிக்கங்களே
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்
அவனிடத்தில் நீங்கள் இருந்திருந்தால்

உங்கள் தாயை ஒருவன்
தலைமுடியைப் பற்றி இழுத்து வந்து
நடுத் தெருவில் வீசி எறிந்திருக்கிறான்

உங்கள் மனைவியை ஒட்டுத் துணியில்லாமல்
அதே நடுத்தெருவில் குனிக் குறுகியபடி அழவைத்திருக்கிறான்

உங்கள் சின்னஞ்சிறு குழந்தையைத்
தரதரவென இழுத்துவந்து
எட்டி உதைத்து வீசியிருக்கிறான்

ஏற்கெனவே உங்கள் தந்தையின் வயிற்றில்
புனித வாசகங்கள் பொறித்த
கூர்மையான வாளால் குத்தித் திருகி
குடலை உருவி
உங்கள் தந்தைக்கே
மாலையாகப் போட்டுவிட்டிருக்கிறான்

உங்கள் சகோதரனின் கை கால்களை வெட்டி எறிந்திருக்கிறான்
வெட்டப்பட்ட அவை மண்ணில் விழுந்து துடித்தவண்ணம் இருக்கின்றன

நீங்கள் மறைந்திருக்கும் இடம்
வாளுடன் வந்தவனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால்
இதையெல்லாம் உங்களால் பார்க்க முடிந்திருக்கிறது

உங்கள் தாயும்
மனைவியும்
மகளும்
கதறக் கதற உங்கள் கண் முன்னே கற்பழிக்கப்படுகிறார்கள்

சிறிது நேரத்தில் கம்பை ஊன்றியபடி
முதியவர் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறார்

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் உங்கள் தாய்
ஓரத்தில் வீசப்பட்ட துணியையாவது எடுத்துப் போர்த்தும்படி
கை கூப்பிக் கெஞ்சுகிறார்

உங்கள் மனைவி
அந்த முதியவரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்
பச்சிளம் குழந்தையையாவது காப்பாற்றி அழைத்துச் செல்லும்படி

முதியவர் தன் ஊன்றுகோலால்
இருவரையும் எட்டித் தள்ளிவிட்டு
சற்று தொலையில் ஹூக்கா குடித்துக்கொண்டு
கண்களில் மதம் மின்ன
சற்றே களைப்புடன் சாய்ந்திருப்பவன் முன் சென்று நிற்கிறார்

தனது தூய வெண்ணிற இடை ஆடையில் சொருகியிருந்த
அதைவிடத் தூய கைக்குட்டையால்
அவனுடைய உடம்பில் துளிர்த்த
வியர்வைத்துளிகளைத் துடைக்கிறார்

பெரும் கருணையுடன் அவனிடம் கேட்கிறார்
என்னப்பா வேண்டும் இப்போது உனக்கு

அவன் கண்கள் செருக
மென் புன்னகையுடன் கேட்கிறான்
தாகமாக இருக்கிறது மகாத்மாவே

மகாத்மா
உரத்த குரலில் சொல்கிறார்
தாகித்தவனுக்கு தண்ணீர் தருவதே தர்மம்
அவனுக்குரியதை உடனே கொடுங்கள்
அதுவரையில் நான்
அன்னம் தண்ணி உண்ணமாட்டேன் என்று
அறச்சீற்றம் கொள்கிறார்

நாதூராம் கோட்÷
ஒரு மதவெறியன்
ஒரு முட்டாள்
மாபெரும் குற்றவாளி.

மனிதர் குல மாணிக்கங்களே
நீங்கள் சொல்லுங்கள் கோட்சேவின் இடத்தில்
நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

****

அது அன்று புதிதாய் ஆரம்பித்த அவலமல்ல
ஆயிரம் ஆண்டுகளாய் அதுவே உங்கள் வரலாறு

அது அன்றோடு முடிந்த அநீதி அல்ல
அதன் பின்னும் அதுவே உங்கள் அனுபவம்

நீங்கள் கொல்லப்படும்போது
எந்த மகாத்மாவும் உதித்து
உங்களைக் காப்பதில்லை

நீங்கள் கற்பழிக்கப்படும்போது எந்த நியாயவானும்
தன் குரல் உயர்த்தித் தடுப்பதில்லை

நீங்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்படும்போது
எந்தக் கரமும்
உங்கள் கண்ணீரைத் துடைப்பதில்லை

இடிக்கப்பட்ட உங்கள் வழிபாட்டு மையத்தை
நீங்கள் மீட்டெடுக்க விரும்பினால்கூட
ஓராயிரம் பேரின் ரத்தத்தைச் சிந்திய பின்னரே
ஒற்றைச் செங்கல்லை எடுத்துவைக்க முடியும்
ஆனால், நீங்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தினால்
பாய்ந்தோடி வந்து தடுப்பார்கள்

மதக்கடமையைச் செய்பவர்களின்
மனம் கோணாமல் நடந்துகொள்ளுங்கள் என்பார்கள்
அன்பு தானே நம் மதம் என்பார்கள்
அஹிம்சை தானே நம் தர்மம் என்பார்கள்

நீதி உங்கள் பக்கம் இருந்தாலும்
சட்டங்கள் உங்கள் பக்கம் இருக்காது
நீங்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில்
சின்னாப்பின்னப்படுத்தப்படுவீர்கள்
பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில்
பிரித்தாளப்படுவீர்கள்

உங்கள் பன்மைத்துவமே உங்கள் பலிபீடம்
உங்கள் சகிப்புத்தமையே உங்கள் சவப்பெட்டிகள்
பரஸ்பரப் புரிதலின் அடிப்படையிலான
உங்கள் சமூக அமைப்பே
அவர்களின் பதுங்குகுழிகள்
மையம் அழிந்த உங்கள் அதிகாரப் பரவலே
உங்களுக்கான சுருக்குக் கயிறு

நீங்கள் இன்றும் கோட்சேவின் இடத்தில்தான் இருக்கிறீர்கள்
வரலாறு வழக்கம் போலவே மீண்டும் திரும்பப் போகிறது
சொல்லுங்கள் மனிதகுல மாணிக்கங்களே
மகாத்மாக்கள் தொடர்ந்து அவதரிக்கும் ஒரு பூமியில்
உங்களைக் காப்பாற்றிக்கொள்ள
உங்கள் சக ஜீவன்களைக் காப்பாற்றிக்கொள்ள
உங்கள் சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள
என்ன செய்யப்போகிறீர்கள்?

7 Replies to “சொல்லுங்கள் மனித குல மாணிக்கங்களே”

 1. காந்தியினை கொன்றது கோட்சே அது இந்து தீவிரவாதம்

  இந்திராகாந்தி மேல் தமிழகத்தில் கொலைமுயற்சி செய்தது யார்?

  அது கல் தானாக விழுந்தது, அது போக இந்திரா தமிழரின் மான உணர்வினை புரிந்துகொள்ளவில்லை

  ராஜிவினை தமிழகத்தில் கொன்றது என்ன தீவிரவாதம்?
  ஹிஹிஹிஹிஅது ராஜிவ் தமிழரின் உணர்வினை புரிந்து கொள்ளவில்லை, அமைதிபடையாக சென்று…

  ஆஹான், காந்தி மட்டும் இந்துக்களின் உணர்வினை புரிந்தாரா?

  சரி கோட்சே என்ன ஆனான்?

  அவனை தூக்கிலிட்டோம்

  ராஜிவ் கொலையாளிகளை என்ன செய்ய வேண்டும்?

  உடனே விடுதலை செய்து வாழவைக்க வேண்டும்..

 2. இது தாங்க ஆர்.எஸ்.எஸ்!!!
  .
  .
  .

  பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி, தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப் பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ்.
  1925-ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.
  1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது சொந்த நாட்டிலேயே எண்ணற்ற ஹிந்துக்கள் அகதிகளாக முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். அப்போது அங்குள்ள ஹிந்துக்களை உதவிகரம் நீட்டி மீட்டது ஆர்.எஸ்.எஸ்.
  1962-ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ்.எஸ் ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
  1965-ல் பாகிஸ்தான் போரின் போது தலைநகர் தில்லியில் சாலை போக்குவரத்து, கட்டுப்பாடு, காவல் துறை பனி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.
  1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும், பத்திரிக்கைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்யாக்ராஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.
  1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லிணக்க கூடத்தையும், பாத யாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்.
  2004 ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசகரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது ஆர்.எஸ்.எஸ்.
  2013 உத்திரகன்ட் வெள்ள நிவாரண பணியில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அணைத்து வித உதவிகளும் செய்தனர்.
  தேசம் முழு கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
  விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசகரம் நீட்டி உடனே சேவை செய்தது ஆர்.எஸ்.எஸ்.
  தேசம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெறும் இயக்கம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.
  உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி நேரம் செலவிடும் கோடிக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் ஆர்.எஸ்.எஸ் –ற்கு உண்டு.
  தேசமே தெய்வம் !!!
  .
  .
  .
  .
  ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தை நிறுவியவரின் பெயர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆவார்.இவர் எம்.பி.பி.எஸ்.முடித்தவர்.இந்துக்களிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து,ஒன்றுபட்ட இந்து சமுதாயத்தை உருவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்.இந்த இயக்கத்தை உருவாக்கிட இவருக்கு மூன்று ஆண்டுகளாக சிந்தனை செய்தார்.பல தேசபக்தர்களிடம் கலந்துரையாடியபின்னரே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்.இன்று 1947க்கு முன்பாக,ஆங்கிலேயன் இந்தியாவை ஆள்கிறான்;இவனை நாம் எப்படியாவது வெளியேற்றிவிடலாம்.ஆனால்,2000 மைல்கள் சதுர பரப்பளவும்,ஏராளமான வீரர்களும்,மன்னர்களும் வாழ்ந்த இந்த இந்து நாட்டினை எப்படி வெறும் 200 ஆங்கிலேய வியாபாரிகளால் கைப்பற்ற முடிந்தது? என்ற சிந்தனையே இவரது மனதில் உதித்தது.இந்த சிந்தனையோடு பலரை ,பலமுறை கலந்து ஆலோசித்தபின்னரே, இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்துதர்மத்தின் பெருமைகளை அறிய வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே இந்துதேசம் காலம் காலமாக நிம்மதியாகவும்,வலிமையாகவும் இருக்கும்;அதற்கு ஒரு நிரந்தரமான அமைப்பு தேவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ஆர்.எஸ்.எஸ். வெளியில் இருந்து பார்த்தால்,ஆர்.எஸ்.எஸ்.ஒரு தீவிரவாத இயக்கமாகத்தான் தெரியும்.ஏன் எனில்,பத்திரிகைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கம்யூனிஸ்டுகள்.அவர்களை கொள்கையோடு எதிர்கொள்வது ஆர்.எஸ்.எஸ்.மட்டுமே.காங்கிரஸீக்கு எங்கே ஆர்.எஸ்.எஸ்.ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்ற பயத்தினால் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பார்த்து பயம்.அதனால்தான் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர் என பொய்ப் பிரச்சாரம் செய்தது.ஆனால்,நீதிமன்றத்தீர்ப்போ காந்தியை சுட்டுக்கொன்ற சதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கு சிறிது கூட இல்லை என கூறிவிட்டது.

 3. பாப்புலர் பிராண்ட் முட்டாள்களே காந்தியை கொன்ற கோட்சே அகண்ட பாரதத்தின் மீது தேசப்பற்று மிக்க மாமனிதர் உங்களைப்போன்ற தீவிரவாதி இல்லை.

  தன் நாட்டை பிரித்து இஸ்லாமியருக்கு ஒரு நாடு கொடுத்துவிட்டு இதை இந்து தேசமாக அறிவிக்க வில்லையே என்ற விரக்தியில் காந்தியை சுட்டுக்கொன்றார் இதுதான் உண்மை.

  உங்கள் தீவிரவாத அமைப்பு போல ஓடி ஒளிந்து கொண்ட கோழையல்ல.

  எங்கே தில்லிருந்தா செங்கோட்டையில் கலவரத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் கூலிப்படை நாங்கதான் என்று சொல்லு பார்ப்போம்.

  தேசம் போற்றும் தேசியக் கொடியை அவமதித்த காலிஸ்தான் தீவிரவாத கூலிப்படை நாங்கதான்னு வெளியே வந்து சொல்லு திராணி இருந்தா… பாப்புலர் பிராண்ட் ?

  ஆனா கோட்சே நல்லவழியில் பிறந்த ஆண்மகன் என்பதால் தான் காந்தியை சுட்டதை தானே ஒத்துக்கொண்டார்.

  உங்களுடைய இயக்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் குண்டுகளை வைத்து கொலை செய்கிறீர்களே இதற்கு பெயர் என்ன ?

  அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்த்தது யார்???

  உலகளாவிய அளவில் தீவிரவாதிகள் 100% இருப்பது உங்களின் SDPI and PFI அமைப்பில் என்பதை இந்த உலகே அறியும்.

  ஒரு வருடத்திற்கு முன்னால் இலங்கையில் ஒரு சர்ச்சில் 250 பேரை கொன்று குவித்தீர்களே அதற்குப் பெயர் என்ன ?

  ஏன் உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் நபிகள் நாயகத்தை அன்பு மார்க்கம் என்ற பெயரில் வணங்குகிறீர்கள் என்றால் உங்கள் மதத்தில் ஏன் இத்தனை சண்டைகள்.

  நீங்கள் உலகத்தில் உள்ள அனைவரையும் இஸ்லாமியனாக மாற்ற வேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள்.

  உங்களுக்கு மேல் உங்கள் நபிகள் நாயகம் அவருக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார் என்றால் அதை அவரே செய்வாரே எதற்காக சாதாரண ஒரு மனிதனான நீங்கள் துடிக்கிறீர்கள் இதற்கு பதில் சொல்லிவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்.

  மும்பை குண்டு வெடிப்பை செய்த தேசத் துரோகிகள் யார்…

  இந்தியக் காற்றை சுவாசித்துக் கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக காலிஸ்தான் தீவிரவாதிகளாக எமது தேசத்தினை கூறு போட நினைத்து தேசியக் கொடியை அவமதித்த எச்சைகளே….

  விவசாயத்திற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்…. எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்றீங்க….

  அமைதியான தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் ஈனச்செயலை கண்டிக்கின்றோம்.

 4. ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  அவன்……
  1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம். (1/15)
  2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம் (2/15)
  3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம் (3/15)
  4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம் (4/15)
  5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் மரணத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்ற காந்தியின் அஹிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம். (5/15)
  6. இஸ்லாமிய பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி மரமாக வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்.(6/15)
  7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை,சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததனை அறிந்தவனாக இருக்கலாம் (7/15)
  8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம் (8/15)
  9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்.(9/15)
  10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது பிடிவாதத்தால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம் (10/15)
  11. சுதந்திரத்துக்கு உண்மையான காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம் (11/15)
  12. வ.உ.சி செக்கிழுக்க, நேதாஜி தேடப்படும் குற்றவாளி ஆக என தனக்கு உடன்படாத பல தலைவர்களை ஆங்கிலேயனை கொண்டே அழித்த குயுக்தியாக இருக்கலாம் (12/15)
  13. ஆங்கிலேயே ஆட்சியை நீக்கிவிட்டு கிறித்தவ மத அமைப்புகளின் மேலாதிக்கத்தை ஆதரித்ததாக இருக்கலாம். (13/15)
  14. நிர்வாகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்தும் நிர்வாக முறையை (தற்போதைய இங்கிலாந்து மன்னர் குடும்பம் போன்ற) உருவாக்க முயன்றதாக இருக்கலாம் (14/15)
  15. தன்னைத்தவிர வேறு தலைவர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக செயல்பட்டதை அறிந்தவனாக இருக்கலாம் (15/15)
  காந்தி மீதான மனக்கசப்புக்கு… கோட்சே ஆதரவு தன்மைதான் காரணம் என்பது… இந்திய சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தது என்பதைவிட அபத்தமானது. (பாரதத்தையே பதம்பார்த்த ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டில் செத்தவனுக.. … என்ன… அமர்நாத் யாத்திரை போகும்போது… பனிச்சரிவு ஏற்பட்டு செத்தவனுகளா…!!!!????)
  [03/10 23:27] Jey: சிந்திக்க வேண்டிய விஷயம் –
  1947-ல் தேசப்பிளவின் பொழுது –
  20% முஸ்லிம்களுக்காக 21% நிலப்பரப்பு கொடுக்கப்பட்டும் –
  அவர்களில் 40% முஸ்லிம்கள் இங்கேயே தங்க அனுமதித்தது,
  ஹிந்துஸ்தான், பாகிஸ்தான் –
  என்று மதங்களின் அடிப்படையில் இரண்டு நாடுகளாகியிருக்க வேண்டியது –
  இந்தியா என்ற மதசார்பற்ற நாடும் –
  பாக்கிஸ்தான் என்ற மதவாத நாடாகவும் ஆனது
  லட்சக்கணக்கான மக்கள் செத்தது –
  இவை எல்லோருக்கும் தெரியும் –
  ஆனால்,
  அந்த 1947-ல் வெறும் நாடுகள் மட்டும் பிரிக்கப்படவில்லை.
  அசையாச் சொத்துக்களைத் தவிர –
  அசையும் சொத்துக்கள்
  வண்டி வாகனங்கள்,
  ஆடுகள், மாடுகள் –
  டைப்ரைட்டர்கள், மேஜைகள் –
  பேனாக்கள், ஏன் குண்டூசிகள் முதற்கொண்டு பிரிக்கப்பட்டன என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும் –
  அவற்றையெல்லாம் விட –
  மொஹஞ்சதரோவில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் பிரிக்கப்பட்டன –
  அதில் ஒரு அழகிய ஆபரணம் –
  இரண்டாக வெட்டப்பட்டு பிரிக்கப்பட்டது என்பதாவது யாருக்கும் தெரியுமா?
  இவ்வளவு கறாராக பாக்கிஸ்தானுக்கு பங்கு கொடுத்த –
  தாத்தாவும், மாமாவும் –
  நியாயமாக இங்கிருந்த இஸ்லாமியர்களையும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்து –
  நம் நாட்டை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் –
  அவர்களை இங்கே தங்க வைத்து –
  சலுகைகளை அள்ளி வீசி –
  வரை விட்டு – இன்று –
  இந்த பாரதத்தாயை கேவலமாகப் பழிக்கிறார்கள் –
  தேசியக் கொடியை எரிக்கிறார்கள் –
  வந்தேமாதரத்தை நிந்தனை செய்கிறார்கள் –
  இதைத்தான் நாங்கள் எதிர்த்தோம் –
  இவர்களைத்தான் நாங்கள் வெறுத்தோம் –
  இனிமேலும் வெறுப்போம் –

 5. காந்தியினை கொன்றது கோட்சே அது இந்து தீவிரவாதம்

  இந்திராகாந்தி மேல் தமிழகத்தில் கொலைமுயற்சி செய்தது யார்?

  அது கல் தானாக விழுந்தது, அது போக இந்திரா தமிழரின் மான உணர்வினை புரிந்துகொள்ளவில்லை

  ராஜிவினை தமிழகத்தில் கொன்றது என்ன தீவிரவாதம்?
  ஹிஹிஹிஹிஅது ராஜிவ் தமிழரின் உணர்வினை புரிந்து கொள்ளவில்லை, அமைதிபடையாக சென்று…

  ஆஹான், காந்தி மட்டும் இந்துக்களின் உணர்வினை புரிந்தாரா?

  சரி கோட்சே என்ன ஆனான்?

  அவனை தூக்கிலிட்டோம்

  ராஜிவ் கொலையாளிகளை என்ன செய்ய வேண்டும்?

  உடனே விடுதலை செய்து வாழவைக்க வேண்டும்..

 6. *காந்தியும் நேருவும்*
  *எப்படி பட்டவர்கள் என்று*
  உங்களுக்கு தெரியுமா?

  ஆயிரம் தான் நேருமீது கோபம் இருந்தாலும்,
  தேசத்தின் விடுதலை சம்பந்தபட்ட விஷயம் என்றவுடன் வியன்னாவில் இருந்து பம்பாய் வந்த போஸை ஆங்கிலேய அரசு அள்ளி ஜெயிலில் போட்டது.
  வெளிநாட்டில் இருந்த நேதாஜியை வெள்ளைக்காரன் பேச்சை கேட்டு இந்தியா வர வைத்து ஜெயிலில் அடைத்தவர்கள்தான் காந்தியும் நேருவும்.

  இருந்தாலும் பதினோரு மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளி வந்த போஸ் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கல்கத்தாவில் காங்கிரஸ்
  கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இப்படி காங்கிரஸ் கட்சியில் போஸுக்கும் காந்திக்கும் உட்கட்சி போர் நடந்து வரும் நிலையில்
  1939 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இரண்டாம் உலகப்போர் வந்து
  விட்டது..
  இந்த போரில் இங்கிலாந்தும் பங்கேற்கும் அதனால் அவர்களை சுதந்திரம் கேட்டு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்றார் காந்தி.. ஆஹா..என்ன ஒரு தேச பற்று…

  ஆனால் நேதாஜியோ இது தான் சரியான சந்தர்ப்பம் ..ஏனெனில் வெளிநாடுகளுடன் போர் நடைபெறும் பொழுது
  இங்கிலாந்தால் இந்தியாவின் உள்நாட்டில் கவனம் செலுத்த முடியாது ..
  ஆதலால் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும் என்றார்.
  இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் தேர்தல் வந்தது.
  இதில் போட்டியிட்ட நேதாஜியை எதிர்த்து காந்தியின் கைத்தடி பட்டாபி சீதாராமய்யா போட்டி யிட்டார்.

  தேர்தல் நடந்த பொழுது காந்தி சீதாராமய்யாக்கு போடும் ஓட்டு எனக்கு போடும் ஓட்டு என்று காங்கிரஸ் செயற்குழு
  உறுப்பினர்களிடம் மன்றாடினார்.
  ஆனால் நேதாஜி மாபெரும் வெற்றி பெற்றார்.
  இதனால் கட்சி தன்னுடைய கையை விட்டு போவதை அறிந்த காந்தி பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்வி, காங்கிரஸ் கட்சி
  பாதை மாறுகிறது என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார்.

  பாருங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனக்கு பிடிக்காத நேதாஜி தலைவர் ஆகிறார் என்றவுடன் அவரை விரட்ட காந்தி
  இருந்த உண்ணாவிரதம் மூலமாக காந்தி எப்பேர்பட்ட சுயநலவாதி என்பதை அறிந்து கொள்ளலாம்.

  நேதாஜியை காங்கிரஸ் தலைவராக ஏற்க விரும்பாது காந்தி போட்ட உண்ணா விரத டிராமாவினால் மனம் மாறிய காங் செயற்குழு உறுப்பினர்கள் நேதாஜிக்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர்.
  கடைசியில் காந்தியின் கபடவேடம் வெற்றி பெற்றது.

  நேதாஜி தன்னுடைய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பின் கல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய
  நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்ற உரையை கேட்டு, மானமிருந்து இருந்தால் காந்தியும் நேருவும் அன்றே அரசியலில் இருந்து விலகி இருப்பார்கள்.

  காந்தியை ஏன் கோட்சே சுட்டுக் கொன்றார்? மத வழி அரசியலால் காந்தி மீது கோட்சேவுக்கு ஏற்பட்ட கோபத்தினால் காந்தி கொல்லப்பட வில்லை.
  மாறாக காந்தி பாகிஸ்தானுக்கு
  55 கோடியை இந்தியா அளிக்க வேண்டும் என்று டெல்லி பிர்லா ஹவுசில் உண்ணாவிரதம் இருந்தார்.

  எதற்கு தெரியுமா?
  இந்திய பாகிஸ்தான் பாகப்பிரிவினைனை நடைபெற்ற பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய பணம் 75 கோடி ரூபாய். அப்போது இந்தியா
  20 கோடியை அளித்து விட்டு
  55 கோடி ரூபாயை பெண்டிங் வைத்து இருந்தது.

  இந்த 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு இந்தியா அளிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார்.ஆனால் அந்த நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விசயத்தில் முதல் போர் நடைபெற்று வந்தது.
  இந்த 55 கோடி ரூபாயை அளித்தால் பாகிஸ்தான் அதை
  வைத்து ஆயுதம் வாங்கி இந்தியாவை போட்டுத்தாக்கும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் பட்டேல் மறுத்தார்.

  ஆனால் காந்தி உண்ணாவிரதம் இருந்து இந்திய அரசை மிரட்டி பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கிடைக்க வைத்தார்.
  இந்த பணத்தை வைத்து பாகிஸ்தான் வாங்கிய ஆயுதங்களினால்தான் இந்தியாவிடம் இருந்து பிரிந்த ஒரு சிறிய நாட்டிடம் இந்தியா ஒரு வருடத்துக்கு மேல் மல்லுக்கு நின்றது.

  முதல் இந்திய பாகிஸ்தான் போர் சுமார் ஒரு வருடம் நீடித்தது.
  இதன் விளைவாகத்தான் இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதியை இழந்தது . இப்பொழுது சொல்லுங்கள் கோட்சேவின் கோபம் நியாயம் தானே.

  காந்தி தன்னுடைய புகழுக்காக இந்தியாவையும் இந்துக்களையும் பலி கொடுத்த சுயநல வாதி .

  ஒரு வேளை காந்தியும் நேருவும் நேதாஜியை இந்தியாவில் இருந்து துரத்தாமல் இருந்து இருந்தால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேதாஜியே வந்து
  இருப்பார். இந்தியா மோடிக்காக காத்து இருக்காமல் எப்பொழுதோ உலகின் வல்லரசு நாடாக உயர்ந்து இருக்கும்..

  எங்களைப்பொறுத்த வரை நேதாஜி தான் உண்மையான தேசப்பிதா. இதை வருங்கால தலைமுறையினர் அறியும் வகையில் இந்திய வரலாற்றை எழுதி அவர்களை

  காந்தியின் துரோக வரலாற்றை அறிய வைத்து அவர்கள் மூலமாகவே நேதாஜி தான் இந்தியாவின்
  தேசப்பிதா என்று உலகம் அறிய வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *