ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

1980களில் தினமணி கதிர் இதழில் வீரவாஞ்சி என்ற தொடர் “ரகமி” (ரங்கஸ்வாமி ஐயங்கார்) எழுதி வந்துகொண்டிருந்தபோது நான் பள்ளி மாணவன். அந்தத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்ததும் அதில் வந்த படங்களும் கூட நினைவில் இருக்கின்றன. 1982 பாரதியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல மேடைகளில் பேச்சுப்போட்டி பரிசுகள் பெற்றுவந்ததால் இயல்பாகவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து எது கிடைத்தாலும் படித்துவிடுவதும் வழக்கமாக இருந்தது. பின்பு ரகமி எழுதிய வேறு சில புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். ஆனாலும் நினைவில் தங்கியிருப்பது வீரவாஞ்சி மட்டும் தான்.

தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு. இதன் பின்னுள்ள Narasimhan U Vijayraghava Sharma ஆகிய நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்.

நெல்லைச் சீமையில் கிளர்ந்த சுதேசி இயக்கம், ரகசிய கூட்டங்களில் காளி சிலை முன்பு கைவிரல் இரத்தத்தைச் சிந்தி சபதம் செய்யும் பாரதமாதா சங்கத்து உறுப்பினர்கள், சிதம்பரம்பிள்ளைக்கும் சிவாவுக்கும் கடும் தண்டனை அளித்த பிரிட்டிஷ் ஆட்சி மீது கனலும் கோபம், புதுச்சேரியில் பாரதியார், வ.வேசு ஐயர் முதலானவர்களுடனான தொடர்புகள், ஆஷ் கொலைக்குப் பின் போலிசாரின் அடக்குமுறைகள், அம்பலமாகும் புரட்சிக்குழுவினரின் நடவடிக்கைகள் நம்பிக்கைத் துரோகங்கள் என்று பலவற்றையும் தொட்டுச் செல்லும் வரலாற்று ஆவணம் இந்தச் சிறிய நூல். எருக்கூர் நீலகண்டன் என்கிற நீலகண்ட பிரமசாரி, ஆலப்புழை ஹரிஹரய்யர், கிருஷ்ணாபுரம் சங்கர கிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை, தென்காசி மடத்துக்கடை சிதம்பரம்பிள்ளை, ஜக்கு என்கிற ஜகன்னாதையங்கார், ‘வந்தே மாதரம்’ சுப்பிரமணிய ஐயர் என ரத்தமும் சதையுமான எளிய மக்கள் – விவசாயிகள், சமையல்காரர்கள், வியாபாரிகள், பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா என பலதரப்பட்ட மக்கள் ஈடுபட்ட இயக்கம் இது. அத்தனை பேரும் 30 வயதுக்குக் குறைவானவர்கள். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில், 9 பிராமணர்கள், 5 பேர் சைவவேளாளப் பிள்ளைமார்கள் (ஒருவர் கூட “போர்க்குடி” எனப்படும் சாதியினர் அல்ல) என்ற விவரணம் நம் தீவிரமான சிந்தனைக்குரியது.

இந்த நூலில் எழுந்து வரும் வாஞ்சியின் ஆளுமை அபாரமானது. 25 வயது வாஞ்சி சுதேசியப் புரட்சி முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து, இறந்துவிடுகிறது. அப்போது வாஞ்சியின் தந்தை ரகுபதி ஐயர் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார்.

“இப்போது என்னால் எங்குமே வரமுடியாது” என்றார் வாஞ்சி மிக்க வெறுப்புடன்.

“அப்படிச் சொல்லாதேடா வாஞ்சி. உனக்குக் குழந்தை பிறந்து செத்துப் போனதற்கு குழந்தைக்கு அப்பா நீதான் புண்ணியாகவசனம் பண்ணவேண்டும்..”

“அப்படியா, நானும் செத்துப் போயிட்டேன்னு நினைச்சு, எனக்கும் சேர்த்து அதையும் நீங்களே பண்ணிவிடுங்கள்”

“எதுக்குடா இப்படியெல்லாம் அபசகுனமா சொல்லறே. நீ இப்படி எல்லாம் சொன்னால் என் மனசு தாளாதுடா. ஊருக்கு வா, தீக்ஷையை க்ஷவரம் பண்ணிக்க வேணும்”

“அப்பா, நான் இதைக் கர்ப்பதீக்ஷையாக வளர்க்கவில்லை. இந்த வெள்ளைக்காரன்களை நம் பாரதநாட்டை விட்டே துரத்தி, பாரததேசம் சுதந்திரம் அடைய வளர்த்த சுப தீக்ஷை. அதற்கான காரியம் நிறைவேறும் வரையில் நான் இதனை எடுக்கப் போவதில்லை. இது சத்தியம்” என்று மிக்க ஆவேசத்துடன் கத்தினார் வாஞ்சி.

இந்த வரிகளை வாசிக்கும் போது உள்ளம் பதைபதைக்கிறது. பெரும் துக்கம் நெஞ்சைக் கவிகிறது. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற பாடல் வெறும் உணர்ச்சிகரம் அல்ல, அதிலுள்ள சத்தியத்தின் தகிப்பு நம்மைச் சுடுகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தேசபக்தரும் வாசிக்க வேண்டிய நூல்:

வீரவாஞ்சி (ஆசிரியர் ரகமி)
பக்கங்கள்: 201
வெளியீடு: பாரதி நூலகம், 1/87 , அக்ரஹாரம் , தேப்பெருமாள் நல்லூர் (போஸ்ட்) கும்பகோணம் வழி.
விலை ரூ 100 + கூரியர் செலவு 40. மொத்தம் ரூ 140 /-
G Pay மூலம் பணம் அனுப்ப 91596 97503.
தொடர்புக்கு – செல் 63812 30158 .
வங்கி மூலம் பணம் அனுப்ப: U.NARASIMHAN INDIAN BANK – THIRUNAGESWARAM, ACCOUNT No.6568672735, IFSC CODE: IDIB000T033

20 Replies to “ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு”

 1. எத்தனையோ இந்துவிரோத படங்கள் வந்தன, நினைத்தாலே கண்ணீர் வரவைக்கும் அளவு இந்து மதம், சீர்திருத்தம் எனும் பெயரில் பிராமண பகடி என வந்து குவிந்தது

  ஆனால் ஒரு இந்துவும் அதை பெரிதாக கருதவில்லை, தடை செய், கைது செய், படத்தை கடலில் போடு என குதிக்கவில்லை

  இப்பொழுது ஒரே ஒரு படம் அதுவும் கிறிஸ்துவத்தையோ அதன் புனிதத்தையோ சாடாமல் மதம் சார்ந்த சாதி பற்றி இந்திய சட்டம் சொல்வதை சொல்கின்றது

  அதற்குத்தான் இத்தனை எதிர்ப்புகள் ஏன் இப்படி?

  அதில்தான் ஒளிந்திருகின்றது ஹிந்து தர்மத்தின் சுதந்திரம், அது காற்றை போல கடலை போல ஆகாயத்தை போல விஸ்தாரமானது, எந்த கட்டுக்காவலும் கட்டுபாடும் அதற்கு இல்லை. திறந்த ஆகாயத்தில் பறக்கும் பறவை போல், விரிந்த கடலில் நீந்தும் மீன் போல் அது எல்லையற்ற சுதந்திரத்தில் ஒரு மனிதனை விட்டு அவனே வாழ்வில் களைத்து ஓடி அமர்ந்து ஞானம் தேட வழி செய்த மதம்

  நீயே கடவுளை தேடி அடைந்ந்து கொள் என சுதந்திரமாக பறக்கவிட்ட மதம். இதனாலேதான் இந்துக்களுக்கு தலைவன் இல்லை, இந்த நாளில் இந்த நேரத்தில் கோவிலுக்கு வரும் கட்டாயம் இல்லை, கோவிலில் கூட்டமாக அமர்ந்து செய்தி கேட்கும் கட்டுபாடு இல்லை, எதுவுமில்லை

  அவன் எதையும் காணலாம், யாருடனும் பேசலாம், எதையும் உண்ணலாம், நினைத்ததை செய்யலாம்

  ஆனால் ஆடாத ஆட்டமும் சுற்றாத சுற்றும் சுற்றிவரும் அவன் களைத்த பறவை மரகிளையில் அமர்தல் போல தானே பின்பு கடவுளில் ஒடுங்குவான்

  அவனால் எந்த நூலையும் வாசிக்க முடியும், எந்த மத ஆலயத்துக்கும் தயக்கமின்றி செல்லமுடியும், தெய்வம் என வந்துவிடால் எல்லா தெய்வத்தையும் அவனால் வணங்க முடியும்

  அவனுக்கு பூரண சுதந்திரம் அங்கு உண்டு, அவன் எப்பொழுது யாரை எப்படி வணங்கவேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான், அவனே தேடுவான், அவனே ஞானத்தை கண்டடைந்து பரமனை அடைவான்

  இதில் ஆயிரம் விமர்சனம், ஏளனம், வலி, இழப்பு இன்னும் ஏராளம் அவன் அடைவான், சிப்பிக்குள் புகுந்துவிடும் மணல் முத்தாவது போல, நிலத்தில் இருக்கும் கரி வைரமாவது போல அவன் வலி தாங்கி தாங்கி ஞானம் அடைவான்

  ஆனால் கிறிஸ்தவம் அப்படி அல்ல, அது உத்தரவிட்டே பழகிய மதம், “இதை ஏற்றுகொள்” “இப்படி அமர்ந்து கொள்” “இதை மட்டும் கேள்” “இவரை மட்டும் ஏற்றுகொள்” “வேறுபக்கம் பார்க்காதே” “வேறு எதையும் உண்ணாதே” என ஒரு ராணுவ கட்டுபாட்டில் மந்தைகளாக, ஆடுமாடுகளாக மக்களை செலுத்தும் மதம்

  அவர்களுக்கு ஒரு ராணுவ மனநிலை வந்துவிடும்

  இதனால்தான் அவர்கள் சென்ற இடமெல்லாம் அந்நிய மதங்களை அழிப்பார்கள், கலாச்சாரத்தை நொறுக்குவார்கள், ஒரு வட்டமிட்டு வாழ்வார்கள், யாருடனும் கலக்க மாட்டார்கள், ஒரு மகோன்னத சிந்தையில் இருப்ப்பார்கள்

  அவர்களை அறியாமலே ஒரு ராணுவ சிந்தனை புகுத்தபட்டுவிடும், அது விமர்சனங்களை தாங்காது, வலி பொறுக்காது, எதையும் சீர்தூக்கி பார்க்காது, தான் செய்வதே சரி மற்ற எல்லாம் தன்னால் அழிக்கவேண்டியது எனும் சிந்தனைக்குள் கொண்டுவந்துவிடும்

  கால்வைக்கும் இடமெல்லாம் துப்பாக்கி, வெடிமருந்து, குண்டு என அழிப்பது மரபுசார் ராணுவம், துப்பாக்கி முனையில் அது அடிமைபடுத்தும்

  கிறிஸ்துவமோ கால்வைக்கும் இடமெல்லாம் அவன் கலாச்சாரத்தை அழிக்கும், அவன் மொழியினை அழிக்கும், மெல்ல மெல்ல அவனை ஐரோப்பிய அடிமையாக்கும், அவனின் ஆன்மீக வேர்முதல் பண்டைய தொடர்புகளை அறுத்து வீசி அவன் வந்த வழி தெரியாமலும் செல்லும் வழி புரியாமலும் ஆக்கி குழப்பி தன் அடிமையாய் வைக்கும்

  சக கிறிஸ்தவனான கறுப்பர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சம உரிமை பெற்றுவாழமுடியுமா? விடுவார்களா?

  கிறிஸ்தவம் அன்பின் மதம் என்றால் ஏன் லிங்கன் முதல் லுத்தர் வரை கொல்லபட்டார்கள்? ஏன் கறுப்பினம் இன்றுவரை போராடுகின்றது?

  சமதர்மம், சம்த்துவம், அன்பு என்றெல்லாம் பேசுபவர்கள் ஏன் ஆப்ரிக்க ஆசிய அகதிகளை ஐரோப்பாவில் விடாமல் அடித்து விரட்டுகின்றார்கள்

  இஸ்லாமியர் சிக்கல் என்பீர்களாயின் பாலஸ்தீனத்திலோ சிரியாவிலோ அமைதியினை கொடுத்தால் ஏன் தீவிரவாதம் வரும், அதன் மூலம் எது?

  அவர்களே சிக்கலை உருவாக்கி அவர்களே ஆயுதமும் கொடுத்து அவர்களே அரசியல் செய்து அவர்களே அகதிகளை உருவாக்கி, அவர்களே சோறும் போட்டு அட்டகாசம் செய்வதெல்லாம் எவ்வகை?

  இந்தியாவில் வந்து கிறிஸ்துவத்தை பரப்பிய வெள்ளையன் ஏன் சுதந்திரம் கேட்டதும் இந்தியரை அடித்தான் உப்புக்கும் வரிவிதித்தான்

  இன்று பரந்து விரிந்த அமெரிக்க ஆஸ்திரேலிய கனடா தேசங்களில் கிறிஸ்தவன் அடிப்படையின் இன்னொரு இனத்துக்கு குடியேற தடை இருப்பது ஏன்?

  ஆம் கிறிஸ்தவம் என்பது மறைமுக ராணுவம் மேல் நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை இன்னொரு நாட்டில் செலுத்தி குழப்பும் ரகசிய ராணுவம்

  ஒரு இந்துவினை கிறிஸ்தவ ஆலயத்துக்கு அழையுங்கள் வருவான், மசூதிக்கு அழையுங்கள் ஓடிவருவான், அவர்களோடு உண்பான் மகிழ்வான், அவனுக்கு மாரியம்மன் போலவே மாதாவினை வணங்க தயக்கம் இருக்காது

  ஆனால் ஒரு கிறிஸ்தவனை இந்து ஆலயத்துக்கு அழையுங்கள், அங்கே உண்ண சொல்லுங்கள் அவனால் முடியாது, காரணம் அந்த ராணுவ பயிற்சி அப்படி

  அழிக்கவேண்டியது என குறிக்கபட்ட இலக்கில் உறவாட எப்படி அனுமதிப்பார்கள்?

  ருத்திரதாண்டவம் படத்தை சில கிறிஸ்தவர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் என்றால் இந்த மனநிலைதான், இதை யாரும் சொல்லி திருத்த முடியாது, அவர்களின் சிந்தனையும் மனநிலையும் முற்றிலும் வேறானது, பைபிளை தவிர உலகில் எதுவுமில்லை எனும் அளவு மூளை சலவை செய்யபட்டிருகின்றது

  அவர்களை கண்டு பரிதாபபடுவதை விட வேறொன்றும் செய்யமுடியாது.

 2. இந்த “ருத்ர தாண்டவம்” படத்துக்கு மக்கள் வழங்கும் பேராதரவு மகிழ்ச்சி தரகூடியது, உலகெல்லாம் குடும்பத்தோடு மக்கள் குவிகின்றார்கள்

  பெருகிவிட்ட தொழிநுட்பத்திலும் திரையரங்கில்தான் பார்ப்போம் என மக்கள் செல்வது, அவர்கள் இப்படத்துக்கும் இயக்குநருக்கும் அவர் சொல்லவரும் விஷயத்துக்குமான பெரும் ஆதரவு

  அஜித்குமார் கால்ஷீட் கிடைக்குமா என அவனவன் தவமிருக்கும் காலத்தில் யாருமே தேடாத அஜித்தின் மச்சினனை பிடித்து இயக்குநர் ஜெயித்திருப்பது எப்படி?

  பெரும் அடையாளமில்லை, பொதுவாக தமிழகம் ஸ்டார்கள் எனும் நடிகர்களைத்தான் நேசிக்கும், இயக்குநர்கள் அவர்கள் பொருட்டே அல்ல‌

  ஜாம்பவான்கள் பீம்சிங் தொடங்கி ஷங்கர் வரை எல்லார் படமும் ஸ்டார் வேல்யூ என மிகபெரிய நட்சத்திரங்களையே நம்பும் பொழுது ஒரு இயக்குநருக்காக மக்கள் குவிந்தார்களே எப்படி?

  படத்தின் மிகபெரிய வரவேற்பு சொல்வது ஒன்றுதான்

  படத்தில் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தாலும் ஏராளமானவர்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்

  அது போதை, சாதி தலைவன், தவறாக பயன்படும் சாதிய வன்கொடுமை சட்டம், அச்சட்டத்தின் பின்னணியில் சிலர் செய்யும் ரவுடியிசம் என பாதிப்புகள் ஏராளம்

  இந்த கிறிஸ்தவ மதமாற்ற கும்பலின் அடாவடியாலும் காங்கிரசும் திமுகவும் அவர்களுக்கு கொடுத்த ரகசிய ஆதரவாலும் பாதிக்கபட்ட மக்கள் ஏராளம்

  சாதிய வன்கொடுமை சட்டம் எவ்வளவு தவறாக பயன்படுத்தபட்டது என்றால் கடந்த ஆண்டில் அச்சட்டம் திருத்தபடும் அளவு அது மோசமாயிற்று

  பிரபல சாதி ரவுடிகள் சொத்துக்களை ஆக்கிரமிக்கவும் மிரட்டவும் அபகரிக்கவும் பல இடங்களில் அது உதவிற்று

  சாதிய போர்வையின் சட்டங்களில் ஒளிந்தபடி ஒவ்வொரு ரவுடியும் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல‌

  அவர்களால் பாதிக்கபட்ட கண்ணீர்விட்ட நல்ல குடும்பத்து மக்கள், பக்திமிக்க மக்கள் கொஞ்சமல்ல‌

  அந்த கண்ணீர்தான் பாஞ்சாலியின் கண்ணீர் போல் தர்மத்தை மீட்டெடுத்திருக்கின்றது, இயக்குநர் மோகன் என்பவர் பாதிக்கபட்ட மொத்த மக்களின் பாதிப்பாக அப்படத்தை கொடுத்திருக்கின்றார்

  இங்கு எக்காலமும் இந்த திராவிட மோசடிகளுக்கு எதிரான குரல் கண்ணதாசன் , ஜெயகாந்தன், சோ ராமசாமி என உண்டு

  அவர்களின் தொடர்ச்சியாக தமிழ்கம் மோகன் அவர்களை கண்டிருக்கின்றது

  கூட்டம் கூட்டமாக மக்கள் தரும் ஆதரவு காலம் காலமாக தேசவிரோதிகள் மற்றும் திராவிட கும்பலிடம் இருந்த திரையுலகில் இப்படி ஒரு படம் வராதா என மக்கள் ஏங்கிய ஏக்கத்தை சொல்கின்றது

  இப்படம் என்ன சம்பாதித்தது என்ன என்பது எமக்கு தெரியாது, ஆனால் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்திருக்க வாய்ப்பே இல்லை

  இப்படம் செய்த மிகபெரிய சாதனை நடுநிலை,சமதர்மம்,சமூக நீதி என உளறிகொண்டிருந்த கும்பலை கதற வைத்திருப்பது

  சினிமா என்பது விஞ்ஞான வித்தை, அதில் அவரவர் கருத்தை தன் திறமைபடி பதிவு செய்யலாம், மோகன் அதை திறம்பட நாட்டுபற்றுடன் சமூக நோக்குடன் செய்தார்

  தேசவிரோத இந்து விரோத கும்பல்கள் கதறுவதே படத்தின் மாபெரும் வெற்றி

  இயக்குநர் மோகன் இன்னும் பல படங்கள் இப்படி கொடுக்க வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் இல்லையென்றால் இனி தேசாபிமான மக்களே அவரை ஆதரிப்பார்கள் என்பது உறுதி

  ஒவ்வொரு தமிழனும் இந்துவும் இந்த டுபாக்கூர் சமூக நீதி கும்பலால் பாதிக்கபட்டிருகின்றான் எனும் உண்மையினை வெளிகொண்டுவந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்

  தமிழ் திரைவானில் நீல நிற இம்சைகளெல்லாம் வந்து இல்லாத பொய்களையெல்லாம் சொல்லும் பொழுது காவி நிறம் வராதா என்ன?

  எம்.ஆர் ராதா ஒருமுறை சொன்னான்

  “டேய்.. கலைஞன்னு சொல்றவனுக்கு சமூக அக்கறை வேணும், நாட்டுபற்றும் போலிகளை கிழிக்கிற தைரியமும் வேணும் அவன் தாண்டா உண்மையான கலைஞன்”

  அவ்வகையில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்றிருக்கும் “திரை இயக்க கலைஞர்”ன் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  தர்மம் எப்பொழுதும் அதர்மம் அத்துமீறி ஆடும் பொழுது ஒருவனை உருவாக்கும், தமிழ் திராவிட பிடி திரையுலகில் மோகன் எனும் தைரியமான இயக்குநரை அப்படி உருவாக்கியுள்ளது

  அவருக்கு தோதாக‌ காலமும் மாறியுள்ளது

  அவர் இப்படி நிறைய படம் எடுக்க வாழ்த்துக்கள்

  கூட்டம் கூட்டமாக அலைமோதும் மக்கள் மோகனிடம் நாங்களும் இப்படித்தான் திராவிட ஆட்சிகளில் பாதிக்கபட்டோம், ஆனால் அமைதியாய் இருந்தொம் என பாவமன்னிப்பு செய்துகொண்டிருக்கின்றார்கள்

 3. ஏ சங்கி நான் ஒடுக்கபட்டவன், தாழ்த்தபட்டவன் என் வலி உனக்கு புரியாது

  உன்னை யார் ஒடுக்கினார்கள், தாழ்த்தினார்கள்?

  அது சாதி, மதம், பிராமணன், இந்த சமூகம்

  ஒடுக்கபடுதல், தாழ்த்தபடுதல் என்றால் என்ன?

  என் உழைப்பை உறிஞ்சி என்னை சக்கையாக எறிவது, என்னை தாழ்நிலையிலே வைத்திருப்பது

  சரி, உன்னை உறிஞ்சியதாக நீ நம்பும் பிராமணன் என்ன சேர்த்துவிட்டான் இன்னும் கோவிலில் மணி ஆட்டி கொண்டேதானே இருக்கின்றான்

  அது, அது.. அவன் எங்களுக்கான சமூக நீதியினை மறுத்தான்

  இதோ பார், மீணவர் கலாமும் பிராமணர் சுஜாதாவும் வகுப்பு தோழர்கள், ஆனால் கலாம் எங்கோ சென்றுவிட்டார், சுஜாதா அந்த இடத்தை அடையமுடியவில்லை ஏன்?

  ஆமாம், எனக்கு குழப்பமாகத்தான் இருக்கின்றது

  இதோ பார், இங்கு நீ மட்டுமல்ல எல்லோரும் ஒரு காலத்தில் ஒடுக்கபட்டவர்களே, தாழ்த்தபட்டவகளே

  எப்படி?

  நம்மை ஆண்டது ஆப்கானியன், என் முன்னோர் உழைப்பும் உன் முன்னோர் உழைப்பும் வரியாக அவனுக்குத்தான் சென்றன, அந்த உழைப்புத்தான் தாஜ்மகாலாலாகவும் அழகிய அரண்மனைகளாகவும் இன்னும் பலவுமாக எழுந்தது

  ம்ம்

  இங்கு எல்லோரும் சுரண்டபட்டோம் , எல்லோரும் தாழ்த்தபட்டோம், எல்லோர் உழைப்பும் ஆப்கானியரால் அடுத்து வெள்ளையனால் சுரண்டபட்டன‌

  இருக்கலாம்

  அவன் உப்புவரை வரிவிதித்தானே சாதிக்கொரு வரி விதித்தானா?

  இல்லை, எல்லா சாதிக்கும் ஒரே வரிதான் விதித்தான்

  அதெல்லாம் என்னாயிற்று

  லண்டனுக்கு கப்பல் கப்பலாக தங்கமாக சென்றது

  சொல், அவன் இங்கே நிர்வகித்தான் எல்லோரையும் அவன் உறிந்ததால்தானே உனக்குரிய உரிமையும் பணமும் கிடைக்காமல் போயிற்று

  ஆமாம்

  சுதந்திர இந்தியாவில் உனக்கு இன்று கிடைக்கும் சலுகை அன்று ஏன் இல்லை அரசாண்டவனும் வரிபிரித்தவனும் பிராமணனான வெள்ளையனா?

  வெள்ளையன்

  புரிந்து கொள், இங்கு எல்லோர் உழைப்பும் அவனால் சுரண்டபட்டது, எல்லோரும் அவன்முன் தாழ்த்தபட்டிருந்தோம், அவன் எல்லோரையும் ஒடுக்கித்தான் வைத்திருந்தான், உன் சமூகத்தினை ஒருவழியில் சுரண்டினான் என்றால் எல்லா சமூகத்தையும் இன்னும் பலவழிகளில் சுரண்டினான்

  ம்ம்

  அவனை விரட்டியபின்புதான் நாம் எழுந்து கொண்டிருகின்றோம், அவன் கொடுக்காத உரிமையினை இந்த சுதந்திர இந்தியாதான் உனக்கு கொடுத்தது, ஒரு விஷயம் சொல்

  என்ன?

  உங்களை போன்றவர்களை ஒடுக்கபட்டவர்கள் என ஆங்கில கைகூலியினர் தூண்டிவிட்டார்களே, ஆனால் உங்களை வெள்ளையன் ஆட்சியில் படிக்க வைத்தார்களா உயர்பதவி தந்தார்களா

  இல்லை

  ஏன்?

  தெரியவில்லை

  சுதந்திர இந்தியாதான் உன்னை உயர்த்தி கொண்டிருக்கின்றது, வெள்ளையன் மறுத்த வாய்ப்பையெல்லாம் இத்தேசமே தருகின்றது, ஆப்கானியமும் வெள்ளையமும் உன்னை மட்டும் சுரண்டவில்லை எல்லோரையும் சுரண்டிற்று, இப்பொழுது எல்லோரும் சேர்ந்துதான் எழுகின்றோம், அதை புரிந்துகொள் உருப்படுவாய் தேசமும் வளமாகும் பலமாகும்

 4. மோடி அரசை அனுதினமும் விமர்சிக்கின்றார் சுப்பிரமணியன் சாமி இன்னும் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் அனுதினமும் விமர்சிக்க்கின்றார்கள்

  ஆனால் பாஜக தொண்டர்கள் ஒரு நாளும் அவர்களை கண்டித்ததில்லை, ஏதும் பேசியதும் இல்லை

  ஆனால் சோனியாவினை ஏதும் சொன்னால் டிவி நிலையத்தை உடைப்பதும், ராகுலை கபில் சிபல் விமர்சித்தால் அவர் வீட்டை உடைப்பதும் காங்கிரஸார் செயல்

  திமுகவிலும் இதுதான் நிலை, கருணாநிதி காலத்தில் அடுத்த தலைவர் பற்றி சொன்னதற்கு பத்திரிகை அலுவலகம் 3 பேரோடு எரிந்ததும், அன்று திமுகவில் இருந்த திருமதி.சுந்தர் சி வீடு தாக்கபட்டதும் வரலாறு

  ஆனால் பாஜக பாசிச கட்சி என்பார்கள் திமுகவினரும் காங்கிரசாரும்

  உண்மையான பாசிசம் காங்கிரசிலும் திமுகவிலும்தான் குடிகொண்டுள்ளது, தலமையினை விமர்சித்தால் கட்சிகாரனை அடிக்கும் அளவு அராஜகமும் அதை தலமை ரசிக்கும்படி பாசிசமும் அங்குதான் உள்ளது

  பாஜக தொண்டன் நாட்டுபற்றாளன், அவன் தன் கட்சிக்காரனின் விமர்சினத்தை ஏற்கின்றான். மோடி என்பவரை நாட்டுக்காக உழைப்பவர் என்றுமட்டும் பார்க்கின்றான், விமர்சனங்கள் அவரை இன்னும் வலுவாக்கட்டும் கூர்மையாக்கட்டும் அது நாட்டுக்கு நல்லது என மனமார விரும்புகின்றான்

  ஜனநாயக்ம் என்பது பாஜகவில் மட்டும்தான் உள்ளது, வேறு எந்த கட்சியிலும் அல்ல‌

  கபில் சிபல் எனும் மூத்த காங்கிரஸார் வீட்டினை ராகுல் எனும் குபீர் தலைவனுக்காக ஒரு கூட்டம் அச்சுறுத்தியிருக்கின்றது ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் அமைதி

  ஏன்?

  உண்மையான பாசிசமும் ஏகாதிபத்தியமும் காங்கிரஸில்தான் இருக்கின்றது

 5. அருமையான பதிவு + தகவல்கள்.இந்தியா என்றோ சுதந்திரம் அடைந்திருக்க வேண்டியது .
  இந்த காந்தியின் சுயநலத்தாலும்,
  பேராசையாலும் , மக்கள் தன வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற பொறாமையாலும் இந்தியாவிற்க்கு சுதந்திரம் என்ற உணர்வு கிடைக்க வெகு காலம் ஆகிவிட்டது .
  இந்தியாவிற்க்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்துக்கு காரணம் காந்தியின் அகிம்சை அல்ல
  நேதாஜியின் போர் குணமும் நாட்டில் பல்வேறு கிளர்ச்சி இயக்கங்கள் வெள்ளையர்களுக்கு எதிராக கிளம்பின மற்றும் இரண்டாம் உலகபோரில் ஏற்ப்பட்ட கடும் சேதம் காரணமாக இந்தியாவை நிர்வகிக்க வெள்ளையனால் முடியல
  சரி சுதந்திரம் கொடுத்துவிடலாம் என்று வெள்ளையன் எண்ணினான் .
  நேதாஜிக்கு பயந்து சுதந்திரம் கொடுத்து விட்டோம் என்று சொன்னால் வரலாறு தவறாக பேசும் என்பதால் காந்தியின் அகிம்சைக்காக சுதந்திரம் கொடுக்கிறோம் என்று மீசையில் மண் ஒட்டாதது போல சென்றுவிட்டார்.
  நேதாஜி தலைமையில் இயங்கிய இந்திய தேசிய இராணுவம் தான் வெள்ளையனை இந்தியாவை விட்டு ஓட ஓட துரத்தி அடித்தது .
  நேதாஜி தான் இந்தியாவின் தேசதந்தை
  சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த காங்ரஸ் அரசு நேதாஜியின் புகழை குழி தோண்டி புதைத்து டபுள் ஏஜென்ட் காந்தியின் புகழை நாடு முழுக்க பாடியது

 6. வாள்முனையில் ஆப்கானியனும் துப்பாக்கி முனையில் வெள்ளையனும் கைபற்றிய தேசத்தை அடிக்காமல் வலிக்காமல் விடுவிப்பேன் என ஒருதலைவன் பேசினால் அது எப்படி சரியான வழியாகும்?

  காந்திமேல் ஏகபட்ட சந்தேகங்கள் உண்டு

  காந்தி இந்தியாவில் பிறந்தவர், லண்டனில் படித்தவர் அப்பொழுதெல்லாம் தெரியாத வெள்ளையன் மனோபாவம், லண்டனில் தெரியா இனவெறி அவருக்கு தென்னாப்ரிக்காவில்தான் தெரிந்ததாம்

  சரி, தென்னாப்ரிக்காவில் என்ன கிழித்தார்? ஒன்றுமில்லை. தனி நாடு வாங்கினாரா? தனி அரசு அமைத்தாரா?

  ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செய்தால் உற்பத்திக்கு அஞ்சி எந்த முதலாளியும் சில எலும்புதுண்டுகளை வீசி எறிவது இயல்பு, அதற்கு காந்தி தேவையே இல்லை

  இந்தியாவுக்கு வந்த காந்தி என்ன செய்தார்?

  இங்கு இந்தியர்கள் வதைபடும் பொழுது சக இந்தியரை அவர் காக்க முயலவே இல்லை, பகத்சிங்கும் இன்னும் பலரும் கொல்லபட்டபொழுது அமைதி காத்தார்

  அவர் ஒரு இந்து ஆனால் அவரின் அணுகுமுறையெல்லாம் இஸ்லாமியருக்கே ஆதரவாய் இருந்தது

  கடைசிவரை மாப்ளா கலவரம் என கேரளாவில் சுமார் 20 ஆயிரம் இந்துக்கள் கொல்லபட்டு எண்ணற்ற இந்து பெண்கள் கற்பழிக்கபட்டபொழுதும் அவர் அங்கு செல்லவே இல்லை

  தமிழக மதுரை வரை வந்த அவருக்கு ஏன் கேரளா செல்ல மனமில்லை

  கைது என அறிவிப்பு வரும்பொழுதெல்லாம், வ.உ.சி செக்கிழுத்த பொழுது, சாவார்க்கர் அந்தமான் சிறையில் சித்திரவதை அனுபவித்தபொழுது காந்தி இஸ்லமிய நவாப்களின் அரண்மனையில் சொகுசு காவலில் இருந்ததெல்லாம் பலத்த சந்தேகத்துக்கு உரியவை

  காந்திக்கு முன் தேசம் எரிந்து கொண்டிருந்தது, அலை அலையாக எழுச்சி இருந்தது

  காந்தி அதை அணைத்தார், யாரும் வெள்ளையனை எதிர்க்கா வகையில் தானே பார்த்து கொண்டார். 30 கோடி மக்களுக்கும் வ.உ.சியும் லாலா லஜபதிராயும் திலகரும் தெரியா நிலையில் காந்தி எனும் வெளிச்சம் படும்படி வெள்ளையன் விளம்பரமும் கொடுத்தான்

  கடைசி வரை முழு சுதந்திரம் பற்றி காந்தி பேசவே இல்லை சில உரிமைகளில் திருப்தி கொண்டிருந்தார்

  காந்தியின் சுயரூபம் தேசம் சுதந்திரம் பெறும் நேரம் தெரிந்தது

  அங்கே நேதாஜி குடும்பத்தை பிரிந்து வெள்ளையனை எதிர்த்து மிகபெரிய படை திரட்டினார், முத்துராமலிங்க தேவர் போன்ற சன்னியாசிகள் அவருக்கு ஆதரவாய் படை திரட்டினர்

  காந்தியோ இளம்பெண்களுடன் ஆராய்ச்சியில் இருந்தார், பாகிஸ்தான் என ஜின்னா கேட்டபொழுது காந்தி “மர்மஸ்தான்” ஆய்வில் இருந்தார்

  வெள்ளையனுடன் அவர் ஆடிய அஹிம்சை டிராமா ஜின்னாவிடம் ஏன் வெல்லமுடியவில்லை?

  ராம் ராம் என முழங்கிய காந்தி ஏன் இந்து நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை

  பாகிஸ்தானுக்கு காசு கொடுக்காதே என தேசாபிமனிகள் எச்சரித்தபொழுது 50 கோடி கொடு என உண்ணாவிரதம் காந்தி ஏன் இருந்தார்?

  அந்த பணத்தை வாங்கி கொண்டு பாகிஸ்தான் படையெடுக்க முயன்றபொழுது காந்தி ஏன் கண்டுகொள்ளவில்லை

  இந்துபெண்கள் கற்பழிக்கட்ட தேச பிரிவினையின் கொடுமையிலும் ஏன் பாகிஸ்தானையோ இஸ்லாமையொ கண்டிக்கவில்லை

  அவரின் வாழ்வினை கூர்ந்து நோக்கினால் தெரிவது ஒன்றுதான்

  அவர் தேசாபிமானியோ உண்மையான சுதந்திரமோ கேட்டவர் அல்ல, அவரின் மனநிலையும் சரியான மனநிலை அல்ல‌

  தமிழக கமலஹாசனுக்கு சற்றும் குறையாத மனநிலையும் நடிப்பு திறமையும் கொண்டவர் அவர்

  காந்தி கோட்சேயால் கொல்லபடாமல் இருந்தால் இன்னும் பலரால் கொல்லபட்டிருப்பார், அவர் உயிரோடு இருந்தால் இன்னும் பல கலவரங்களுக்கு காரணமாக இருந்திருப்பார், தேசம் நிச்சயம் நிம்மதியாக இருந்திருக்காது

  காந்தி எனும் நபர் நாட்டை பற்றியோ இந்நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ கவலைபட்டவர் அல்ல, அவர் ஒருமாதிரியான மனநிலை கொண்டவர்

  அவரை இந்நாட்டின் சுதந்திர தீயினை அணைக்கும் கருவியாக வெள்ளையன் பயன்படுத்தினான்

  ஹிட்லர் எனும் மிகபெரிய சக்தியும், அவனுக்கு பின் உருவான அமெரிக்கா சோவியத் யூனியன் எனும் பெரும் சக்தியும் பிரிட்டனை இழுத்து போட்டு மிதித்தன‌

  அந்த பலம் குன்றிய பிரிட்டன் இந்தியாவினை ஆளும் பலத்தை இழந்தது, அந்த பலவீனத்தில்தான் சுதந்திரம் கிடைத்தது

  காந்தியும் இருந்து ஹிட்லரும் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய சுதந்திரம் 1980களிலும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை

  காந்தி ஒரு வெற்று பிம்பம், அவரை வைத்திருக்கும் வரை இந்திய கரன்சியின் மதிப்பு உயராது

  இந்துக்களுக்கு நியாயமே சொல்லாத அவரின் படத்தை காவல் நிலையத்திலும் கோர்ட்டிலும் வைத்திருக்கும் வரை இங்கு எந்த நியாயமும் வெல்லாது

  பிழைக்க வந்த பிரிட்டிஷ்காரன் இங்கே ஒருவனை கொண்டாடினால் அவன் நிச்சயம் சந்தேகத்துகுரியவன் எனும் தத்துவபடி காந்தி சந்தேகத்துகுரிய நபரே

  அமெரிக்காவில் வாஷிங்டனை கொண்டாடினால் அர்த்தம் உண்டு, சீனா மாவோவினை கொண்டாடினால் அர்த்தம் உண்டு

  ரஷ்யா ஸ்டாலினை கொண்டாடினால் அர்த்தம் உண்டு

  ஆம் விடுதலை என்பது ஒரு அடிமைவர்க்கம் ஆளும் கொடிய அரசை தூக்கி எறிவதே அன்றி ஹிட்லரால் ஓடிய பிரிட்டனை நானே விரட்டினேன் என்பதாகாது

  காந்தி “தேச பிதா” அல்ல தேசத்தின் குழப்பவாதி, அவரை தூக்கி எறியும் காலம் வரும், அதன் பின் தேசம் இன்னும் பலமாகும்

  கோட்சே செய்தது கொலைதான் சந்தேகமில்லை, ஆனால் அவன் 3 தோட்டாதான் சுட்டான் காந்தி உடலில் 4 தோட்டா இருந்தது

  கோட்சேக்கு முன்பும் காந்திமேல் கொலைமுயற்சி நடந்தது, ஒருவேளை கொட்சே பிசகி இருந்தாலும் இன்னொருவன் அவரை விட்டிருக்கவே மாட்டான்

  காரணம் இந்துக்கள் அதுவும் பிரிவினையில் பாதிக்கபட்ட இந்துக்கள், காந்தியால் ஏமாற்றபட்டு எல்லாமும் இழந்த இந்துக்களின் கோபமும் வன்மமும் கண்ணீரும் அழுகையும் அப்படி

 7. நீங்கள் அனைவரும் நன்கு கவனித்து இருக்கலாம்… பாவாடை பாதிரிகள் கொடுக்கும் பேட்டியில்

  ” நாங்கள் யாரையும் மதம் மாற்ற வில்லை … தற்போது இருக்கும் கால கட்டத்தில் அது சாத்தியமும் இல்லை .. வரும் நபர்கள் எல்லோரும் அவர்களின் சொந்த விருப்பத்தின் பெயரில் மட்டுமே வருகிறார்கள் . யாரையும் அத்தனை எளிதாக மதம் மாற்ற முடியாது ”

  என்று ரொம்ப நல்லவன் மாதிரி பேசுவார்கள்… இதை பார்க்கும் நமக்கும்.. ஆமா இல்ல இவனுக சொல்லுவது சரியாகத்தானே இருக்கிறது என்று தோன்றும்

  ஆனால் இதற்கு பின்னால் காரணம் நமக்கு புரியாது… பால் தினகரன் , மோகன் சி லாசரஸ் இவர்கள் எல்லாம் நடத்தும் கூட்டத்தில் எப்படி 2000-3000 நபர்கள் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளுகிறார்கள்.. எப்படி ஒரே நேரத்தில் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி கதறி அல்லேலூயா அல்லேலூயா என்று கத்துகிறார்கள்… இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆகும் .. இதுபோல பெரும்பாலும் செய்வது பெந்த கொஸ்தே மற்றும் பிராட்டஸ்டன்ட் பிரிவுகள்

  இதற்கு பின்னால் இருப்பது நாம் வசிய கலை என்று சொல்லலாம்… அல்லது மாஸ் மெஸ்மரிசம் என்று சொல்லலாம்…சுமார் 100 வருடங்களுக்கு முன்பு அமேரிக்கா நாட்டில் ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் (எல்லாமே இங்கு இருந்து போனதுதான் …) ஏற்பட்ட வளர்ச்சியை இந்த பாவாடை பாதிரிகள் தெரிந்து கொண்டு வசியம் செய்து எல்ல்லோரையும் அவர்களின் மகுடிக்கு ஆடும்படி செய்கிறார்கள்..

  இம்புட்டு தெளிவாக பேசும் நான் உட்பட அனைத்து சங்கிகளும் … இது போன்ற பாவாடைகளின் கூட்டத்துக்கு தொடர்ந்து பல வாரங்கள் போனால் நாமும் அவனுக சொல்லுவதை அப்படியே கேட்போம்… யேசுதான் எல்லாமே என்று சொல்லுவோம்… மேலும் வரும் நபர்களின் புத்தியை பேதலிக்க ஏதோ ஒரு மருந்து /மூலிகையை கண்டிப்பாக சாப்பிட கொடுக்கிறார்கள்.. இந்த பாவாடை பாதிரிகளால் மூளை சலவை செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் என்ன சொன்னாலும் சரி … எப்படி கூறினாலும் சரி அதை கேட்கவே மாட்டார்கள்… நாம் சொன்னதை அப்படியே மறுநாள் அந்த பாதிரியிடம் சொல்லுவார்கள். நான் அப்படி பல நபர்கள் பார்த்து இருக்கிறேன். மேலும் இந்த கூட்டத்தில் இருக்கும் நபர்களை நன்கு பாருங்க… எதையோ பறிகொடுத்தது போலவும்… யாருக்கோ கட்டுப்பட்டது போலவும் ஒரு நிலையில் இருப்பார்கள்

  மேலும் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் காவல்துறையில் ஏட்டாக பணிபுரியும் ஒரு பெண் சில மாதத்துக்கு முன்பு மூளை சலவை செய்யப்பட்டு … அவள் குழந்தை இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்களாக பிணத்தின் முன்பு உட்கார்ந்து கொண்டு ஜெபம் செய்தால் பிழைத்து விடுவான் என்ற செய்தி இதுபோல நிறைய செய்திகளை நீங்களும் படித்து இருக்கலாம்..

  இதை எல்லாம் நம்ப கொஞ்சம் நம்ப கடினமாகத்தான் இருக்கும்.. ஆனால் உரிய முறையில் விசாரித்தால் கண்டிப்பாக நமக்கு இதன் பின்னால் இருக்கும் உண்மைகள் வெளிவரும்

  நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் கண்டிப்பாக இதற்கு முடிவுரை எழுத முடியும் ..

  மதமாற்றத்தை தவிர்ப்போம்.. பாரத தேசத்தை பாதுகாப்போம்

  ஜெய் ஹிந்த்

 8. ஒடுக்கபட்டவன் அல்லது தாழ்த்தபட்டவன் என்றால் யார்?

  பாண்டிய பரம்பரை மதுரையில் மிகபெரிதாக ஆண்டு கொண்டிருந்தது, அவர்களை ஒடுக்கி எழாதவாறு செய்தனர் மாலிக்காபூரும் துக்ளக்கும்

  அந்த பாண்டிய வம்சம் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை அவர்கள்தான் ஒடுக்கபட்டவர்கள் தன் நிலையில் நின்று தாழ்த்தபட்டவர்கள்

  இந்த ஆப்கானிய ஆட்சியில்தான் இந்திய நிலமெல்லாம் அவர்களுக்கு சென்றன, அதில் எல்லா சமூகமும் தன் அடையாளம் இழந்து ஓடுக்கபட்டது

  அடுத்து வெள்ளையன் ஆட்சி இன்னும் அவலம்

  வ.உ.சி போன்றோர் எவ்வளவு சொத்துக்களுடன் வாழ்ந்தனர், அவர்கள் வம்சம் இன்று அனாதைகளாக ஏழைகளாக நிற்க யார் காரணம்?

  வெள்ளையன் வ.உ.சியினை ஒடுக்கினான், அந்த வம்சமே ஒடுங்கிற்று

  கட்டபொம்மன் வம்சம் முதல் பாரதி வம்சம் வரை வெள்ளையன் அடக்கினான், அவர்கள் நிலை தாழ்த்தபட்டது

  இங்கே உண்மையான தாழ்த்தபட்டவர்களும் ஒடுக்கபட்டவர்களும் இவர்கள்தான், அதை சொல்வதில் சந்தேகமில்லை

  வெள்ளையனின் ஆட்சியில் எந்த தொழில் வளர்ந்தது? எந்த தொழிலதிபரோ பெரும் வியாபாரியோ உலகளாவிய அளவில் எழமுடிந்தது?

  ஒருவரும் இல்லை

  இந்திய நெசவு முதல் உப்பு வியாபாரம் வரை ஒடுக்கி வைத்தான் வெள்ளையன், தோணி முதல் கப்பல் வரை அவனே சம்பாதித்தான், எந்த இந்தியனுக்கு உரிமை கொடுத்தான்?

  ஆம் இங்கு தொழிலும் முன்னேற்றமும் வராதபடி ஒவ்வொரு இந்தியனையும் ஒடுக்கித்தான் வைத்திருந்தான்

  அவன் காலத்தில் மின்னிய ஒரே ஒரு தொழிலதிபர் டாடா, அவருக்கு பல நாட்டு அரசுகளுடன் தொடர்பிருந்தது, யூத இனம் போல பார்சி இனம் உலகெல்லாம் தொடர்புகளை வைத்திருந்தது, அவனின் வேர் இந்தியாவில் மட்டும் இருந்திருந்தால் என்றோ வெட்டியிருப்பான் வெள்ளையன்

  இங்கே தொழில்முனைவோர் முதல் விவசாயி வரை அவனுக்கு வரிகட்டி ஒடுங்கி அடங்கித்தான் இருந்தனர், எல்லார் நிலையும் அவன் முன் தாழ்த்தபட்டுத்தான் இருந்தது

  இந்தியாவினை சுரண்டித்தான் லண்டன் எனும் படோபகரமான நகரை அவன் அமைத்தான், இன்றும் அங்கு குவிந்திருக்கும் தங்கம் இங்கிருந்து சுரண்டபட்டதே

  இந்த சுரண்டல் எல்லா இந்தியனின் தலையிலும் விழுந்தது, அது அவனை ஒடுக்கியது

  விவசாயிக்கு வரி, வியாபாரிக்கு வரி, பெரும் தொழிலெல்லாம் வெள்ளையனுக்கு என அவன் அடக்கி வைத்த கொடுமை கொஞ்சமல்ல‌

  இங்கே இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்கபட்டோம் என்பவர்கள் யார் ஆட்சியில் யாரெல்லாம் ஒடுக்கபட்டார்கள் என சொல்லவே மாட்டார்கள்

  பாண்டிய வம்சம் முதல் கட்டம்பொம்மன், பூலித்தேவன், வீரசிவாஜி என இந்நாட்டின் விடுதலை வீரர்களெல்லாம் மின்னிய காலங்கள் உண்டு

  அவர்களின் வாரிசுகள் இன்று எங்கே உண்டு? யாருக்காவது தெரியுமா?

  திலகர் முதல் வ.உ.சி சாவர்க்கர் என வெள்ளையனால் விரட்டி விரட்டி ஒடுக்கபட்டோர் உண்டு, அவர்கள் சந்ததி என்னாயிற்று தெரியுமா?

  ஆனால் நேருவின் குடும்பம் மட்டும் காலகாலமாக நிலைத்திருப்பது எப்படி? வெள்ளையனுக்கு ஜால்ரா இட்ட நீதிகட்சி திமுக திக கோஷ்டியெல்லாம் இன்று கொழித்திருப்பது எப்படி?

  உண்மையில் ஒடுக்கபட்டோம் தாழ்த்தபட்டோம் என சொல்வதற்கு ஒரு வரலாறும் அடையாளமும் வேண்டும், ஒடுக்கபடுதல் என்றால் உன்னத நிலையில் இருந்து வீழ்த்தபடுதல்

  தாழ்த்தபடுதல் என்றால் பெரும் நிலையில் இருந்து வலுகட்டாயமாக தாழ்த்தபடுதல்

  அதை சொல்ல வீரசிவாஜியின் வாரிசுகளில் இருந்து வ.உ.சியின் வாரிசுகள் வரை அவர்களுக்கும் இன்னும் பலருக்கு உரிமை இருக்கின்றது

  அந்நிய ஆட்சியில் செல்வத்தை எல்லாம் இழந்து ஏழைகளான அந்த தரித்திர வாரிசுகளுக்கு இருக்கின்றது, இன்னும் ஆப்கானியராலும் வெள்ளையனாலும் பாதிக்கபட்டோருக்கு அந்த தகுதி இருக்கின்றது

  மாறாக இங்கே நான் ஒடுக்கபட்டவன், தாழ்த்தபட்டவன் என சொல்வோரெல்லாம் எந்த தகுதியில் இருந்து ஒடுக்கபட்டார்கள், எந்த பெரும் நிலையில் இருந்து தாழ்த்தபட்டார்கள் , யார் தாழ்த்தினார்? எதற்காக தாழ்த்தினார்கள் என கேட்டால் பதிலே வராது அல்லது சொல்ல தெரியாது

  அப்படியே இவர்களை தாழ்த்தி வளம் பெற்றது யார்? இவர்களை ஒடுக்கி வாழ்க்கை பெற்றவன் யார் என கைநீட்ட சொல்லுங்கள் அதுவும் சுத்தமாக தெரியாது

  இங்கு எல்லோரும் ஆப்கானியனால் வெள்ளையனால் ஒடுக்கபட்டோம், எல்லோரும் வலுகட்டாயமாக தாழ்த்தபட்டோம்

  எங்கிருந்தோ வந்தவனெல்லாம் மன்னராக, திவானாக, நிஜாமாக, நவாபாக, கலெக்டராக, கவர்னர் ஜெனரலாக அமர்ந்து இந்நாட்டினை ஒடுக்கினான்

  இந்நாட்டின் நிலையினை தாழ்த்தினான்

  அதில் எல்லோரும் ஒடுங்கினோம், எல்லோரும் தாழ்ந்தோம் ஒரு ராணுவமோ படையோ கூட இல்லா இழிநிலைக்கு தேசம் தாழ்ந்தது

  ஒருவேளை உணவுக்கும், ஒரு மேலாடைக்கும் கதறும்படி எல்லோர் நிலையும் ஒடுக்கபட்டுத்தான் இருந்தது

  நேதாஜி கூட நாடு நாடாக ஓடும்படி தாழ்த்தபட்டார், வ உ சி செக்குழுக்கும் அளவு ஒடுக்கபட்டார்

  ஒன்றா இரண்டா இந்நாட்டில் ஒடுக்கபட்டோர்களும், தாழ்த்தபட்டோர்களும்?

  சுதந்திரத்துக்கு பின் தேசம் மெல்ல எழுந்தது, வெள்ளையன் காலம் போல் அல்லாமல் இந்தியரே தொழில்கள் செய்யவும் உற்பத்தி செய்யவும் வழி பிறந்தது

  கதர் என கையால் நூல்நூற்ற இந்நாடு இன்று ஜவுளிதுறையில் உலகில் முன்னணியில் இருக்கின்றது, அப்படியே எல்லா தொழிலிலும் வளம் பெறுகின்றது

  இந்த வளத்தில்தான் எல்லோருக்கும் வாழ்வு கிடைக்கின்றது, எல்லொரும் வாழ்கின்றோம்

  இன்னும் தேசம் உயர உயர எல்லோரும் உயர்வோம், எல்லோரும் எல்லாம் பெற்று வாழ்வோம்

  ஆம், இந்த ஆயிரம் ஆண்டு அடிமைகள் என ஒரு கூட்டம் மட்டும் உரிமை கோர்வது சரியல்ல, ஒவ்வொரு இந்தியனும் ஒடுக்கபட்டான்

  மொகலாய சாம்ராஜ்யத்துக்கு மதுரை மன்னன் வரை வரிகட்டினான், அதில்தான் தாஜ்மஹால் வரை எழுந்தது, அந்த பணம் இங்கே சுரண்டபட்டு இங்கே மக்கள் வாள்முனையில் ஒடுங்கினார்கள்

  வெள்ளையன் வந்து கோட்டைகட்டினானே ஐரோப்பாவில் இருந்தா கூலிகளை அழைத்து வந்தான்?

  எல்லாம் இங்கே சுரண்டபட்ட பணம், எல்லாம் இங்கே இங்குள்ள மக்களை தாழ்த்தி பெற்ற காரியம்

  இங்கு எல்லோரும் ஒரு காலத்தில் ஒடுக்கபட்டோம், இன்று எல்லோரும் வாழ தொடங்கியிருக்கின்றோம் என்பதே நிஜம், அதை பொறுக்காத சிலர் அந்நிய கைகூலிகளாய் அவன் சொன்ன பொய்களை நம்பி இன்னும் கதறிகொண்டிருப்பது பரிதாபம்

 9. மிக சிறிய இனம் அதுவும் ஆயுதமோ வன்முறையோ ஏந்த தெரியாத பிராமண இனம் பெரும்பான்மை சாதியினை இரண்டாயிரம் காலம் அடக்கி வைத்தது எனும் அந்த பொய்தான் இந்த நூற்றாண்டின் மிகபெரிய காமெடி

  விசித்திரமான காமெடியும் கூட‌

  அவர்கள் மிக சிறிய எண்ணிக்கை, அதுவும் அரசனுக்கு கட்டுபட்ட கூட்டம். போர் என வந்தால் பெண்கள், குழந்தைகள், பசுக்களுக்கு ஈடாக எண்ணபட்ட பலவீனமான சமூகம்

  அந்த சமூகம் எப்படி மக்களை அடக்கி வைக்க முடியும்? அரசனுக்கு அவர்கள் கட்டுபட்டவர்கள் எனும் வகையில் அரசனை எப்படி அவர்கள் ஆட்டி வைக்க முடியும்?

  பிராமணர் எனும் சிறு துளியினை கொண்ட இந்த மதம், அந்த மிக சிறு கூட்டத்தின் பிடியில் எப்படி நிலைத்திருக்க முடியும்? அதில் எல்லா சாதியும் இன்றுவரை நீடிக்க முடியும்?

  இங்கே உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்த இனம் யாரையும் தாழ்த்தவில்லை, யாரையும் ஒடுக்கவில்லை

  மாறாக அது தனக்கு ஒரு வட்டமிட்டு தன் ஆச்சார வழக்கங்களை காக்க ஒதுங்கியிருகின்றது, அதுதான் ஓரமாக ஒதுங்கி வாழ்ந்திருக்கின்றது

  அப்படி ஒதுங்கி நின்ற இனத்தை பார்த்து “நீ என்னை அடிமைபடுத்தினாய், இரண்டாயிரம் ஆண்டாக அடிமைபடுத்தினாய்” என முழங்குவதெல்லாம் வரலாற்று காமெடி

  இங்கே அரசுகளும் போர்களும் மாறி மாறி நடந்தன, வென்றவன் தோற்ற நாட்டு மக்களை அடிமையாய் இழுத்து செல்வதும் அவர்களை காலடியில் வைத்து வேலை வாங்குவதும் காலம் காலமான மரபு

  அது மாறி மாறி வரும் சுழற்சி

  அதை பிராமணர் வாளேந்தி செய்யவில்லை இன்னொரு நாட்டில் இருந்து அடிமைகளை இழுத்து வந்ததும், இங்கே அடிமைகளை வாள்முனையில் சவுக்கு முனையில் வாளேந்தி அவர்கள் அட்டகாசம் செய்யவே இல்லை

  அந்த இனம் தன்னை காக்க தன் நம்பிக்கையினை காக்க தனக்கு ஒரு வேலியிட்டு ஒதுங்கி வாழ்ந்த இனம், அவர்களை நோக்கி “எங்களை அடிமைபடுத்தியவனே” என சொல்வதும், அதுவும் தன்னை அடிமைபடுத்தி ஆண்டுகொண்டிருந்தவனை அருகில் வைத்து கொண்டே சொன்னதும் இந்த மகா பெரிய பிரபஞசத்தில் எந்த கிரகத்திலும் எந்த உயிர்களிடத்திலும் காணவே முடியாத காமெடி

 10. இந்து கோவிலின் வருமானங்கள் பலநூறு கோடி, ஏன் சில ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கின்றார்கள்

  இந்து ஆலய நகைகளை உருக்கி எடுக்கும் திட்டத்தின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடியினை தொடுகின்றது

  ஆனால் இப்படியெல்லாம் அள்ளிதரும் இந்து ஆலயங்களுக்கு தமிழக முதல்வர் செல்லமாட்டார், இந்துக்களின் விழாவுக்கு வாழ்த்தும் சொல்லமாட்டார்

  ஏன் என்றால் அவர் நாத்திகராம்

  அதே நேரம் இஸ்லாமிய நோன்பு என்றால் ஓடி செல்ன்று கஞ்சி குடிப்பது, கிறிஸ்தவ விழா என்றால் அதுவும் சி.எஸ்.ஐ விழா என்றால் “நீங்களில்லாமல் அரசு இல்லை” என உருகுவதும் அவரின் வாடிக்கை

  ஆம், ஒரு பைசா அரசுக்கு கொடுக்காத இஸ்லாம், கிறிஸ்தவ மத நிலையங்களுக்கு ஓடும் முதல்வர், அள்ளி அள்ளி கொடுக்கும் இந்துமத ஆலயங்களுக்கு வரமாட்டார்

  அவரை பொறுத்தவரை டாஸ்மாக்கும், இந்து ஆலயமும் ஒன்று , அங்கு சென்றால் அவருக்கு அவமரியாதை, அவமானம் இன்னபிற‌

  இதெல்லாம் தமிழக இந்துக்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் ஏற்பட்டு கொண்டிருக்கும் உச்சகட்ட அவமானம், மிக பெரிய இழிவு

  டாஸ்மாக்கையும், இந்து ஆலயங்களையும் ஒன்றாக ஒரு முதல்வர் கருதுவதெல்லாம் இந்துக்களின் மனதை நடுங்க வைக்கும் செயல்கள்

  இதெல்லாம் சமண அரசன், பவுத்த அரசன், கொடும் போக்கு கொண்ட இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சியில் இந்து ஆலயங்கள் கண்ட அதே காட்சி

  ஆனால் அவர்கள்தான் ஒழிந்தார்களே தவிர இந்துமதம் தன்னை மீட்டெழுந்து நிறுத்தி கொண்டது

  இன்றுள்ள அரசும் அதன் முதல்வரும் கோவில் நகைகளை தொட துணிந்த அமைச்சரும் ஆடட்டும், அவர்களுக்கு குறித்த காலம் முடியும் வரை ஆடட்டும் ஆடி தீர்க்கட்டும்

  எல்லா அக்கிரமாக்கரனும் ஆடவும் ஒரு காலம் உண்டு, அடங்கவும் ஒரு காலம் உண்டு. அதுவரை ஆடட்டும்.

  எத்தனையோ இந்துவிரோத அரசர்களை கண்ட அந்த புனிதமான‌ ஆலயங்கள் இவர்களை நோக்கி மவுனமாக சிரித்து கொண்டிருக்கின்றன

 11. லடாக் எல்லையிலும் உத்ரகாண்ட் எல்லையிலும் தொடர்ந்து வாலாட்டுகின்றது சீனா, பொதுவாக குளிர்காலங்களில் படைகுறைப்பு செய்யும் அந்த நாடு இம்முறை குளிர்காலத்துக்கு முன் ஏதோ செய்ய திட்டமிடுகின்றது

  சீனா எனும் கம்யூனிச தேசத்துக்கு நேரம் சுத்தமாக சரியில்லை. அந்த நாட்டின் நிரந்தர அதிபர் என ஜின்பெங்கை நிறுத்தினார்கள், ஜின்பெங்கின் ஆட்சியில் சீனா வேகமாக சரிகின்றது

  ஜின்பெங்கின் திட்டமான “ஒன் பெல்ட் ஒன் ரோடு” என பெரும்பாலான நாடுகளை சீனாவோடு இணைக்கும் சாலை திட்டம் மிகபெரிய படுதோல்வியில் தொங்கி கொண்டிருக்கின்றது, பல நாடுகள் அதில் இருந்து விலகிவிட்டன, சீனாவின் கடன் கொள்கையும் வட்டி கொள்கையும் இன்னும் பலவும் ஏற்று கொள்ள முடியாதவை என்பதும் நிஜம்

  சீனாவின் வெளியுறவு கொள்கைகள் மிக அபாயமானவை, உலகிலே தன்னை சுற்றியுள்ள எல்லா நாடுகளிலும் வம்பிழுத்து வைத்திருக்கும் ஒரே நாடு சீனா

  அமெரிக்காவுடன் முறுகல் இன்னும் ஒரு மாதிரியான முரட்டு போக்கு, ரஷ்யாவுடனும் முறுகல் என உலகில் இருந்து தனித்து நிற்கும் அந்த நாட்டின் பொருளாதாரம் வேகமாக சரிகின்றது

  தென் சீன கடலில் எத்தனையோ “கடும்” எச்சரிக்கைகளை அந்நாடு செய்தாலும் அமெரிக்கா பிரிட்டனின் அதிரடிகள் தொடர்கின்றன, இன்னும் ஒரு அமெரிக்க கப்பலை கூட தொட்டுபார்க்க சீனாவால் முடியவில்லை, முடிவதும் சுலபமல்ல‌

  சீனாவின் நட்பு அல்லது அடிமை நாடுகளெல்லாம் இப்பொழுது விலகுகின்றன, பிலிப்பைன்ஸ், நேபாளம் என ஒவ்வொரு நாடும் விலகுகின்றது, இலங்கை மீள நேரம் பார்க்கின்றது, மியன்மரில் சீனாவுக்கு எதிரான மக்கள் மனநிலை துப்பாக்கிதூக்கும் அளவு சென்றாயிற்று

  உலகமே திரண்டு சீனாவினை சாத்த தொடங்கியிருக்கும் நிலையில் ஒரு நாட்டை கண்டு சீனா மிகவும் அஞ்சுகின்றது அந்த நாடு இந்தியா

  அமெரிக்காவுக்கு அடுத்து தனக்கு மிரட்டலான பெரும் நாடாக இந்தியாவினை நோக்குகின்றது சைனா, இந்தியாவின் மக்கள் தொகையும் வளங்களும் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்க எளிதானவை

  இந்தியாவின் ராணுவம் உள்ளிட்ட சகலதுறை வளர்ச்சி, உலகநாடுகளிடையே இந்தியாவுக்கு கிடைத்துள்ள நற்பெயர் இவை எல்லாம் சீனாவுக்கு கடும் கோபமான விஷயங்கள்

  சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவில் குடியேறி தொழில்தொடங்குவதால் இந்திய பொருளாதாரம் உயர்வதும் சீன பொருளாதாரம் சரிவதும் அவர்களுக்கு எரிச்சல்

  அடுத்து தென் சீனகடலில் குவாட் அமைப்பிலும் இன்னும் பிரான்ஸ் ஏற்படுத்தும் அடுத்த அமைப்பிலும் இந்தியா சீனாவுக்கு எதிராக இருப்பது கூடுதல் கோபம்

  எல்லாம் சேர்த்துத்தான் இந்தியாவோடு ஒரு உரசலுக்கு தயாராகின்றார்கள், இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வலுவற்ற நிலையில் இருப்பதும் ஒரு காரணம், சீனாவே களத்துக்கு வருகின்றது

  உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, கம்யூனிச பீடம் ஜின்பெங்கினை பார்க்கும் மோசமான பார்வை இவற்றை மாற்றவும் இந்தியா தென் சீனகடலில் தங்களுக்கு இடைஞ்சல் தர கூடாது அமெரிக்க பிரான்ஸ் அணியில் சேர கூடாது என மிரட்டவும் சில கணக்குகளை இடுகின்றது சீனா

  எதிரி நம்மை நோக்கி புன்னகைத்தால் நாம் வீழ்ந்து கிடக்கின்றோம் என பொருள், எதிரி ஆத்திரத்தில் கத்தி தூக்கினால்தான் நாம் வளர்கின்றோம் என்பது பொருள்

  காங்கிரஸ் காலம் போல இந்தியா இல்லாதது , மன்மோகன்சிங் காலம் போல இல்லாதது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சி. மோடியின் இந்தியா இன்னும் சில வருடங்களில் ஆசியாவினை கட்டுபடுத்தும் நாடு எனும் நிலைக்கு செல்லும் எனும் அளவு எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதை, தங்களின் ஆசிய தாதா பட்டம் பறிபோவதை அவர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை

  “தென் சீன கடலுக்கு வராதே” என்பதில் தொடங்கி “உலக நாட்டு கம்பெனிகளே இந்தியாவுக்கு சென்றால் அவ்வளவுதான், அங்கு பாதுகாப்பில்லை” என்ற சூழலை உருவாக்கவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா படைகளை குவிக்கின்றது

  ஆனால் இது மோடியின் பலமான இந்தியா அல்லவா? “உன்னால முடிஞ்சத பாத்த்துக்கல” என சவால்விட்டு எல்லையில் காவலை பன்மடங்காக அதிகரித்து நவீன ராணுவ சாதனங்களை நிறுத்தியிருக்கின்றது

  நிச்சயம் சீனா தாக்காது, காரணம் இங்கே தொட்டால் அந்நாட்டுக்கு எங்கெல்லாம் யாரால் அடிவிழும் என்பது அவர்களுக்கு தெரியும்

  இதனால் இந்தியாவினை பேச்சுவார்த்தைக்கு இழுக்க ஏதோ செய்கின்றார்கள், இந்தியா அதன் போக்கில் மிக தைரியமாக எல்லையில் சீனாவுக்கு அதன் ராணுவ மொழியில் பதில் சொல்ல தயாராய் நிற்கின்றது

 12. தங்கத்தை உருக்கினோம். அதனால் எடை குறைந்தது. அதனால் அளவு குறைந்தது. தூய தங்கம் அளவு கம்மி தான். மிச்சம் காற்றில் போனது. இன்னும் வேறு என்ன சொல்லலாம்? ம்ம்…

  நிறைய நகைகள் போலி திருடியவர்கள் அரச்சகர்கள் என்று சொல்லி ஒரே கல்லில் 4 மாங்காய் அடிக்கலாம். 1. நகை திருடிக்கலாம் 2. பழியை அர்ச்சகர் மீது போட்டு பிராமண வெறுப்பை தூண்டலாம் 3. இருக்கும் அரச்கர்களை நீக்கிவிட்டு அவர்கள் ஆட்களை நியமிக்கலாம். 4. அர்ச்சகர் வேலைக்கு பிராமணர்கள் வர அஞ்சும் நிலையை உருவாக்கலாம்.

  நிறைய செம்பு கலந்திருந்தது. பிராமண சதி…. இப்டி சொல்லி சமாளிக்கலாம்…

  60% செம்பு பித்தளை நகைகள் ,அர்ச்சகர்ள் கைது…

  கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகள் இருக்குது என்று சொன்ன மாதிரி இதிலும் போலி நகைகளை கொடுத்து விட்டார்கள் என்று சங்கடமே இல்லாமல் கூறுவாங்க

  தங்கத்தை உறுக்கி பிஸ்கட்டுகளாக செஞ்சு வச்சிருந்தோம்.

  பிஸ்கட்டுகளை திருடி விட்டாங்க

  முந்தைய ஆட்சியில் பித்தலை கலந்த நகை அதிகமாக மோசடி நடந்து உள்ளது இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  அதைவிட, காணிக்கை நகைகளில் பெரும்பாலானவை பித்தளை என்று சொல்லி கணக்கு காட்டிவிடுவார்கள்.

  கோயிலில் குரங்குகள் அதிகம். சாமிக்கு போட்டிருந்த நகைகளை குரங்குகள் எடுத்து சென்றுவிட்டன

  எதுவும் தங்கநகை இல்லை…. எல்லாம் கவரிங் நகைகள்… அந்தக் கால மன்னர்கள் பிராடு பயலுக….

 13. ஏன் நீங்கள் நகை அணிவதில்லை

  கர்த்தராகிய இயேசுவுக்கு அது விருப்பாமனது அல்ல ப்ரோ

  இதென்ன வெள்ளை டிரஸ், நல்ல ஆடை அணிந்தால்தான் என்ன?

  ஆடம்பரம் கர்த்தருக்கு விரோதமானது ப்ரோ, தேவன் எளிமையானவர்

  ஏனுங்க தாலிய கூட தங்கத்துல போட்டாதான் என்னங்க..

  அய்யயோ அது பைபிளில் சொல்லபடல‌.. இதுல தங்கமா…. ஓ ஜீசஸ்

  ஓஹோ

  யெஸ் ப்ரோ, எளிமையே தேவனுக்கு விருப்பமானது , ஆடம்பரங்களை அவர் வெறுக்கின்ற தேவன்

  அது என்ன கார்?

  பென்ஸ்கார் என்னொடது, 80 லேக்ஸ்

  அந்த வீடு?

  மை ஹவுஸ், தேவ கிருபை அதன் மதிப்பு 10 கோடி

  ஆக எளிமை தேவனுக்கு விருப்பமானது

  ஆமா, நாம அப்படி இருந்தாதான் கர்த்தர் வீடு, காருண்ணு ஆசீர்வதிப்பார்

  ஆக ஒரு கம்மல் அணிந்தால் தவறு அது ஆடம்பரம்

  டெபனட்லி

  ஆனா பேங்க் லாக்கர்ல தங்கம் கிலோ கணக்குல இருக்கலாம், வரிமட்டும் பல்லாயிரம் கோடி கட்டாம ஏமாத்தலாம், ஊரெல்லாம் சொத்து குவிக்கலாம், அதெல்லாம் கிறிஸ்தவம், இயேசு சொன்னது

  ஹிஹ்ஹி இந்துத்வா இந்தியாவுல உங்கள மாதிரி சங்கிங்க இப்படித்தான் சொல்லுவீங்க, ஆனால் இயேசுவுக்காக நாங்க‌ இப்படி நிறைய சுமக்கணும், இரட்சிக்கபட்ட ஜனங்க நாங்க‌

  எது பேங்க் அக்கவுண்டும் சொத்தும் தங்கமுமா, அடிச்சி பிச்சிபுடுவேன் ராஸ்கல்

  அண்ணே இதெல்லாம் ஆசீர்வாதம், உங்களுக்கு சம்பாத்தியத்துக்கும் ஆசீர்வாததுக்கும் வித்தியாசம் தெரியல, அது தானா வரும்
  இயேசுநாதராவது தச்சு தொழில் செய்தாரு, நீங்க என்ன வேலை சார் செய்றீங்க?

  ஐ அம் பாஸ்டர், முழுநேர ஊழியன்

  உங்க அப்பா?

  அவரும்தான்

  உங்க பையன்?

  அவனுக்கு இப்பவே சர்ச்ச் கட்டி வச்சிட்டேன், பரம்பர பரம்பரையா தேவனுக்கு உழைக்கிற குடும்பம் நாங்க‌

  இந்த சொத்தெல்லாம்?

  அது தேவன் கொடுத்த ஆசீர்வாதம், இயேசுவுக்கு உழைச்சா தானா வரும்

  ஆனா அவரே பிச்சைகாரனாதாண்டா செத்தாரு?

  அவர் கஷ்டபடுவார் ஆனா அவர் பக்தன கஷ்ட பட விடமாட்டார், தானா எல்லாம் வரும்

  வரும்டா வரும், அம்பானியாவது ஆயிரம் ரூபாயோடு வந்தாரு, செட்டியார்களெல்லாம் கடல் கடந்து சம்பாதிச்சாங்க இந்தியாவுலே ஒண்ணுமே இல்லாம வந்து மில்லியனரானது ரெண்டே பேர்தாண்டா

  யாருண்ணே

  ஒண்ணு கருணாநிதி இன்னொன்னு தினகரன், ஒண்ணு திராவிடம் இன்னொண்ணு பைபிள் , ஆக நல்ல முதலீடுடா மண்டையா

  திராவிடமும் கிறிஸ்தவமும் ஒண்ணுண்ணே

  அதெல்லாம் இப்பதாண்டா புரியுது, சரி இந்த இயேசுநாதர் எப்ப வருவாரு?

  அவர் வெகு சீக்கிரத்துல வருவாரு

  நிச்சயமாவா?

  கண்டிப்பா, அதுக்கு நீங்க ஞானஸ்நானம் வாங்கி தயாரா இருக்கணும் வாங்க‌

  மாட்டேன்

  வேற ஏன் அவர பத்தி கேக்குறீங்க?

  இல்ல, ஒரு தடவ அவர சிலுவையில அடிச்சி குகைக்குள்ள சரியா வைக்காம விட்டுட்டாங்க , அதுனாலதான் இவ்வளவும், இனி அவரு வந்தா விடவே கூடாதுடா..

 14. அவன் அரசியலில் இருந்தான் அரைகாசு ஊழல் செய்தான் என எதிரியும் சொல்லமுடியாது, அவன் பத்திரிகையாளனாய் இருந்தான் தரம்குறைத்து எழுதினான் என ஒரு வார்த்தை சொல்லமுடியாது

  கலைதுறையிலும் இருந்தான் ஒரு கிசுகிசு கூட யாரும் முணுமுணுக்க முடியாது

  அவன் இந்துமதம் பற்றி எழுதினான் அது மதவெறி என எந்த கொம்பனும் ஒரு புள்ளி கூட வைக்க முடியாது

  அவன் ஒரு வரம், காலம் தந்த சிந்தனையாளன்

  அந்த பெருமகன் இருள் சூழ்ந்த காலத்தின் விடிவெள்ளி, கரு நாகங்களும் சுழலும் வாள்களும் கழுத்தருகே சுற்றிய காலத்திலும் அஞ்சாத மாவீரன், தமிழகத்தில் மானமும் அறிவும் கொண்ட இந்துகுரலாக ஒலித்த ஆலயமணி

  தமிழகத்தின் வீரசிவாஜியும் அவனே, ஆழ்வாரும் அவனே, இரண்டாம் ராஜாஜியும் அவனே, சாணக்கியனும் அவனே, தெனாலி ராமனும் அவனே

  தமிழகம் கண்ட ஒப்பற்ற அறிவாளி, மிக நாகரீகமான பத்திரிகையாளன், அப்பழுக்கற்ற தேசபக்தன், மிக சிறந்த இந்து, கலகலப்பான நடிகன் , சுவாரஸ்யமான மனிதன் என ஏகபட்ட முகங்கள் அவருக்கு உண்டு

  இன்று இந்துத்வாவினை பேசுவது எளிது, திராவிட கும்பலை எதிர்ப்பது மகா எளிது, காரணம் மாறிவிட்ட காலங்கள், பாஜகவின் எழுச்சி, இந்துக்களின் மத அபிமானமெல்லாம் வந்துவிட்ட காலங்கள்

  அதுபோக சமூக வலைதளம் முதல் ஏகபட்ட காவலும் பாதுகாப்பும் உண்டு

  ஆனால் அக்காலம் அப்படி அல்ல, காமராஜரையே வீழ்த்தி திராவிட கும்பல் இங்கே வெற்றிமேல் வெற்றி பெற்று கொண்டிருந்தது, தேசம் முழுக்க கம்யூனிஸ்டுகள் பலமாய் இருந்தார்கள்

  காங்கிரஸ் எனும் அகில இந்திய திமுகவும் சிறுபான்மை, சமதர்மம் என திமுகவின் கொள்கையோடு துதிபாடிய காலம் அது

  அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் இந்து என சொன்னாலே பரிகசிப்பார்கள், இந்துத்வா பேச்சோ எழுத்தோ எல்லாம் யாரும் நினைக்கமுடியா காலம்

  திருமுருக கிருபானந்தவாரியே தாக்கபட்ட காலமும் உண்டு

  அந்த காலங்களில்தான் ராமர் படத்தை செருப்பால் அடித்த சர்ச்சையெல்லாம் வந்தது, இந்துக்களுக்கு இனி யாருமில்லை என்ற அவலம் வந்தது

  டெல்லி காங்கிரசும் தமிழகத்தை கைகழுவ தொடங்கி இருந்தது

  அப்பொழுதுதான் சோ ராமசாமி எனும் யுகபுருஷன் எழுந்தார். இங்கே திராவிடம் அங்கே காங்கிரஸ் என இரு பெரும் தேசவிரோதிகளை எதிர்த்து அவன் எழுத தொடங்கினார்

  ஆயிரமாயிரம் மிரட்டல்கள், வழக்குகள் என எதிர்ப்பு இருந்தாலும் அவர் சொன்ன உண்மையும் அதை நயம்பட சொன்ன அந்த நகைச்சுவை பாணியும் பெரும் ஆதரவினை கொடுத்தன, மக்கள் ரகசியமாக அவரை கொண்டாடினார்கள்

  கருணாநிதி, இந்திரா, ஏன் எதிர்த்து பேசினாலே கொல்வார்கள் என்ற பயமுறுத்தலை செய்த விடுதலைபுலிகளையே முதன் முதலில் கிழித்து தொங்கவிட்டவர் அவர்தான்

  தமிழகத்தில் தேசபக்தன் எப்படி இருக்க வேண்டும், இந்து எப்படி இருக்க வேண்டும் , நல்ல பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டிய உதாரணம் அவர்.

  நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார்

  கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது

  காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு.

  காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராவும் கருணாநிதியும் காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ

  “யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள்…. என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை.

  நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர்

  திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது

  எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் நாட்டுபற்று

  திராவிட போலிகள் பிரிவினை வாதம் அது இது என பேசும்பொழுது, பகுத்தறிவு பேசும்பொழுது அவர் மத நம்பிக்கை பேசினார்

  அவர் கொடுத்த துணிச்சலின் பேரிலே கண்ணதாசன் போன்றவர்கள் பின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற காவியங்களை எழுத முடிந்தது, ஜெயகாந்தன் போன்றோர் தேசியம் பேச முடிந்தது.

  அவரிடம் மத நெறி உண்டே தவிர மதவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது, இந்துமதத்தை சாடியே வளர்த்த போலிகளை அவர் கண்டித்து, கிண்டலடித்து உண்மையினை எழுதினார்

  இன்றுவரை அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு பதில் எந்த பகுத்தறிவாளனிடமும் இல்லை

  பிராமணன் எங்கே ஆண்டான், ஒரு பிராமண அரசனை காட்டுங்கள் என அவர் கேட்டதற்கும், ராமன் சத்திரியன் கண்ணன் வேறு சாதி ஆனாலும் இந்துமதம் அவர்களை கடவுளாக காட்டவில்லையா என கேட்டதற்கும் யாரிடமும் பதில் இல்லை

  புலிகளை தமிழகம் கொண்டாடிய போது 1986லே எச்சரித்தது அவர்தான், பெரும் தைரியமாக அவர்களை எதிர்த்து எழுதினார்

  அவர் வீட்டுக்கு மிக அருகில்தான் பத்மநாபா கொலை நடந்தது, அப்பொழுதும் அவர் புலிகளை கண்டித்து எழுதினார்

  பின்னாளில் அவர் கணித்து எழுதியதுதான் நடந்தது, புலிகள் அழிந்தும் போயினர்

  பத்மநாபா அஞ்சலியின் பொழுது இன்னமும் பொறுங்கள் பல அஞ்சலிகளை செய்யவேண்டி இருக்கின்றது என அவர் எச்சரித்த பின்புதான் ராஜிவ் கொலை எல்லாம் நடந்தது.

  இவ்வளவிற்கும் கொழும்பு சென்று சிங்கள அரசிடம் தமிழர்களுக்காக வாதாடியவர் சோ. சிங்கள அடக்குமுறை இன்னும் பல புலிகளை உருவாக்கும் என தீர்க்கமாக சொன்னவர் அவர்

  ஜெயவர்த்தனவேவினை தமிழக பத்திரிகையாளர் சந்தித்து உண்மை அறிய முயன்றார் என்றால் அது சோ ராமசாமி ஒருவர்தான்.

  ராஜாஜிக்கு பின் மிக சிறந்த தமிழக அறிவாளி சோ என்பதில் மாற்று கருத்தே இல்லை..

  கருணாநிதியினை அரசியல் சாணக்கியன் என்பார்கள், சாணக்கியன் இன்ன்னொருவனை திறம்பட உருவாக்குவானே தவிர தான் சென்று சிம்மாசனத்தில் அமரமாட்டான்

  அப்படி சாணக்கியன் சோவினால் உருவாக்கபட்டவர் தான் மறைந்த ஜெயலலிதா, இந்திரா ஜெயலலிதாவினை கொண்டாட முதல் காரணமாக இருந்தது சோ எழுதிகொடுத்த எழுத்துக்கள்

  ஜெயலலிதா பிரகாசிக்க அவரும் காரணம், பின்பு தமாகா அமையவும் அவரே காரணம், பின்பு விஜயகாந்தினை எதிர்கட்சி தலைவர் என அமர வைத்ததிலும் சோ பங்கு உண்டு

  தமாகா உருவானதிலும் அவருக்கு நிச்சயம் பங்கு உண்டு

  வயது இருந்திருந்தால் நிச்சயம் இன்னொரு அரசன் அல்லது அரசியினை அவர் உருவாக்கி கொடுத்திருப்பார், ரஜினிகாந்தே இப்பொழுது சோ இருந்திருந்தால் ஆயிரம் யானை பலம் எனக்கிருக்கும் என சொன்ன செய்தி சாதாரண விஷயம் அல்ல.

  எத்தனை அரசியல் பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக் இடமே தனி, இன்னொரு பத்திரிகையாளன் இவ்வளவு துணிச்சலாக வரமாட்டான், வந்தாலும் சோ சொல்லும் விதத்தின் நக்கலும் அழகும் ஆழமும் இன்னொருவருக்கு வராது.

  கருணாநிதியினை அவர் காய்ச்சி எடுத்தது போல இன்னொருவன் எழுத முடியாது, ஆனால் இருவரும் அவ்வப்போது சந்திப்பார்கள்.

  சோ ராமசாமி தன் “அண்ணாயிசம்” கொள்கையினை கிழிப்பதை கண்டு அதை மறந்தே விட்டார் ராமசந்திரன்.

  சோவின் ஏராளமான நகைச்சுவை தெறிப்புகள் வந்து போகின்றன,

  தமிழுணர்வை இப்போது வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என அவர் சொன்னபொழுது சிரிக்காதோர் யாருமில்லை

  இன்னும் ஏராளமான பேட்டிகள், கவிஞர் கனிமொழி பற்றி என கேட்ட்பொழுது “நானும் மனோரமாவுடன் சேர்ந்து ஆடிய நடனங்களுக்கு நானே பாடெழுதியிருக்கேன் ஸ்ஸ்க்கு ஸ்ஸ்கு இஸ்கானா என , என்னையும் கவிஞர் என அழையுங்கள்” என அவர் சொன்னபொழுது புன்னகைக்காதோர் யார்?

  “சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுப்பது கவலையே இல்லை, காரணம் சீன தயாரிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனால் அமெரிக்கா கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும்..” என சொன்ன இடமாகட்டும்

  கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடித்த காலத்தில், “கருப்பு பணம் போல சிகப்பு பணமும் இருக்கும் போல..” என சொன்னதாகட்டும் , தனித்து நின்றார் சோ.

  ஏராளமான எழுத்துக்கள், அர்த்தமுள்ள வாதங்கள், குறும்பான பதில்கள்

  இறுதி பேட்டிகளில் அவரிடம் கேட்டார்கள், காங்கிரசினை கண்டிப்பவர் நீங்கள், தற்போதைய காங்கிரசின் பின்னடைவினை எப்படி காண்கின்றீர்கள்?

  சோ சொன்னார்

  “காங்கிரஸ் பின்னடைவது நாட்டிற்கு நல்லதல்ல, தேசிய ஆளும் கட்சிக்கு ஒரு தேசிய கட்சி எதிர்கட்சியாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது”

  இதுதான் சோ

  தமிழகத்தில் இது ஒரு வகையான உதிர் காலம், பெரும் மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் வெற்றிடம் உருவாகிகொண்டிருக்கின்றது

  அம்மரங்களில் இளைபாறிகொண்டிருந்த பறவைகள் எல்லாம் கதறிகொண்டு எதிர்காலம் தெரியாமல் கலங்கி திரிகின்றன‌

  சோ ராமசாமி இல்லாத அரசியல் பக்கங்களை படிக்கவே மனம் ஒப்பவில்லை, இதில் மு,க ஸ்டாலின் முழக்கங்கள் என்றொரு பக்கம் வருகின்றது , ஒரு பக்கம் உதயநிதியின் தீர்க்க தரிசனம் என ஒரு கோஷ்டி வருகின்றது

  அத்தோடு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டு ஓடிவிடலாம் போலிருக்கின்றது

  நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டு , நிறைவாக எழுதிவிட்டு நாட்டுபற்றும் அதற்குரிய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதனை சொல்லி சென்றதற்காக சோவிற்கு நன்றிகள்

  போலி பகுத்தறிவாளர்களை நார் நாராக கிழித்து காட்டியதற்காய் நன்றிகள்

  புலிகளின் போக்கு எதில் முடியும் என அன்றே சொன்னதற்காக நன்றிகள், நீங்கள் சொன்னதை படித்ததால் இந்த முள்ளிவாய்க்கால் எல்லாம் நடக்கும்பொழுது பெரும் கலக்கம் எல்லாம் வரவே இல்லை. இப்படித்தான் நடக்கும் என அன்றே எச்சரித்தது நீங்கள்.

  அடிக்கடி சித்திர குப்தன் வேடத்தில் சினிமாவில் எமனை கலாய்த்தீர்கள், நன்றாக கலாய்த்தீர்கள்
  எமலோகம் இப்பொழுது விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருக்கும்

  நாமெல்லாம் அவரை நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கின்றோம், அழுகை வருகின்றது அதை துடைத்துவிட்டு சிரித்து சிரித்து அழுதுகொண்டிருக்கின்றோம்

  “முகமது பின் துக்ளக்” நாடகம் இன்றுதமிழக அரசாங்கமாகவே நடக்கின்றது, அதை நினைத்து சிரிக்கின்றோம் பின் அழுகின்றோம்

  தங்க பதக்கத்து வைகை வளவனை மறக்க முடியுமா?

  தன் பணக்கார திமிர்பிடித்த தகப்பன் வேலைகாரர்களை படுத்தும் பாட்டை கண்டு, காரில் செல்லும்பொழுது டிரைவரை பிடித்து “டேய் எங்கப்பா முன்னால சரிக்கு சமம் அமர்ந்து வண்டியோட்ட எவ்வளவு தைரியம் ராஸ்கல், எழுந்து நின்று காரோட்டு” என மிரட்டிய காட்சி

  எதைத்தான் மறக்க முடியும்?

  “இந்து மகா சமுத்திரம்” என இந்து மத பெருமைகளை 6 பாகமாக எழுதியதை மறக்க முடியுமா? பிராமணன் யார் என சொல்லி விளக்கியதை மறுக்க முடியுமா?

  துக்ளக்கின் எழுத்துக்கள் யாருக்கு மறக்கும்? இந்திய அரசியல் வரலாற்றை வெகு எளிதாக பதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் அது. ஆணித்தரமான உண்மைகளை அப்படி பதிந்திருப்பார்

  அப்படி ஒரு அசாத்திய அரசியல், காமெடி ஞானி இனி வரமாட்டான். அவர் காலத்தில் வாழ்ந்ததற்காக சந்தோஷபடலாம் அவ்வளவுதான்

  இன்று சோ ராமசாமி பிறந்தநாள்.

  இதயம் கனத்த அஞ்சலிகளுடன் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே அந்த அற்புதமான‌ தேசியவாதிக்கு ஆழ்ந்த அஞ்சலி.

  இந்திராகாலத்தில் இருந்து இந்நாட்டுக்கு எது எது அவசியம் என சோ சொல்லி கொண்டே இருந்தாரோ அதை எல்லாம் மோடி செய்து கொண்டே இருக்கின்றார்

  மோடிக்கு குஜராத் கலவரத்தையொட்டி பெரும் கரும்பிம்பம் தமிழக பத்திரிகளைகளால் சூட்டபட்ட பொழுது மோடியினை தமிழகத்துக்கு அழைத்து வந்து அவரால் ஒருநாள் பாரதம் தலை நிமிரும் என சொன்னவர் சோ

  மோடி மரணவியாபாரி என சோனியா குற்றம்சாட்டியபொழுது, ஆம் ஊழகுக்கு மரணம் கட்டும் வியாபாரி என சோ பதிலுக்கு சீறி சொன்னார்

  இன்று சோ ராமசாமி சொன்னதுதான் நடந்தது, இதுதான் தீர்க்க தரிசனம்

  தமிழகம் கண்ட மிகசிறந்த நாட்டுபற்றுமிக்க பத்திரிகையாளரும், தன் கருத்துக்களை கொஞ்சமும் அச்சமின்றி இறுதிவரை சொன்ன, போலிகளை தோலுரித்துகாட்டிய‌ பத்திரிகையாளரும் இன்றுவரை அவர் ஒருவர்தான்

  பகுத்தறிவினை காட்டி அரசியலை பலர் ஆட்டிபடைத்தபொழுது உண்மையான பகுத்தறிவு பேசி மக்களை சிந்திக்க சொன்ன பெரும் “பகுத்தறிவு பகலவன்” சோ ராமசாமி ஒருவரே..

  அப்படி ஒரு தைரியமும் அறிவும் இனி எந்த பத்திரிகையாளனுக்கும் நடிகனுக்கும் வரப்போவதே இல்லை.

  ராமர்கோவில் அடிக்கல் நாட்டபட்ட நிலையில் சோ ராமசாமிக்கு கூடுதல் நிறைவுடன் அஞ்சலி செலுத்தவேண்டியது கடமை

  காஷ்மீர் இணைப்பை அவர் வலியுறுத்தினார், அமெரிக்க நல்லுறவை அவர் எக்காலமும் தேவை என சொல்லி கொண்டே இருந்தார்

  இதுதான் பலமான இந்தியாவுக்கு வழிவகுக்கும், முழுமையாக ரஷ்ய பிடியில் இந்தியா சிக்குவது நல்லது அல்ல என எச்சரித்தார்

  அவர் சொன்ன வழியில்தான் தேசம் பலம் பெற்றிருக்கின்றது

  அவரின் எழுத்தும் பேச்சும் 1950 முதல் 2015 வரை தமிழகம் பயணித்த அரசியல் வரலாற்றின் தொகுப்புகள், எக்காலமும் கல்வெட்டு போல் அவை உண்மை பேசி கொண்டே இருக்கும்

  ஒரு காலம் வரும், அப்பொழுது சோ ராமசாமியும் அவர் சொன்ன உண்மையும் நிலைத்து ஒளிவீசும், திராவிட பொய்களும் அதை சொன்னவர்களும் வரலாற்றில் மறைந்தே போவார்கள்

  சோ ராமசாமியின் தேசாபிமான சிந்தனையும் எழுத்தும் ஒரு காலம் இங்கே பள்ளி பாடத்தில் வரும், கட்டாயம் வரும், காலம் வழிவிடும்

  கொலைமிரட்டலுக்கும் உயிருக்கும் அஞ்சாமல் உண்மையினை பேசி நின்ற அரிசந்திரனின் சாயல் அவர், ஒரு தவமுனியின் அம்சம் அவர்

  அவரை நினைத்து வணங்காமல் தேசாபிமான எழுத்தும் இந்து எழுத்தும் வராது, வந்தாலும் நிலையாது. தேசமும் தெய்வீகமும் எழுதும் எல்லோருக்கும் அவர் எக்காலமும் வழிகாட்டி

  அந்த சினிமா காட்சி கண்ணுக்குள்ளே நிற்கின்றது

  சோ ராமசாமியினை பிக்பாக்கெட் வழக்கில் பொலீஸ் கைது செய்து இழுத்து செல்கிறது, சோ கெஞ்சுகின்றார்

  “சார் சார் என்ன பாளையங்கோட்டை ஜெயில்ல போடுங்க சார், பிளீஸ் போடுங்க சார்”

  “ஏன்யா?” என காவலர் கேட்கின்றார்

  சோ சொல்கிறார் “அப்படியே 4 கரப்பான் பூச்சி, விஷமில்லா 2 பாம்பும் போடுங்க சார் எவ்வளவு லஞ்சமும் தாரேன்”

  குழம்பி போய் காவலர் கேட்கின்றார் “ஏன்யா அங்க, அதுவும் கரப்பான் பூச்சி எல்லாம்?”

  சோ முட்டைகண்ணை உருட்டி சொல்கின்றார்

  “சார் நானும் பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அப்படி பாட்டு எல்லாம் பாட ஆசையா இருக்கு சார்”

 15. நேற்று இரவு உலகம் முழுக்க முகநூல் குழுமத்தின் சேவை முடக்கபட்டிருந்தது, முகநூல் நிறுவணத்தின் இதர சேவைகளான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமும் முடக்கபட்டது

  சுமார் 7 மணி நேரம் ஏற்பட்ட இந்த முடக்கம் உலகில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது, இன்றைய உலகம் சூரியன் சந்திரன் மழைக்கு அடுத்து இயங்குவது இந்த ஊடகங்களால் என்பது நிஜம், அந்த அளவு வாழ்வோடு இந்த மாய நுட்பங்கள் கலந்துவிட்டன‌

  முடக்கத்துக்கான காரணத்தை நிறுவணம் சொல்லவில்லை ஆனால் இது திட்டமிட்ட ஹேக்கிங் தாக்குதல் என அறியபடுகின்றது

  இந்த கொரோனா காலத்தில் உலகமெல்லாம் பொது முடக்கம் இருந்தது போல் ஏதோ தொழில்நுட்ப கொரோனா தாக்கி முகநூல் & கோஷ்டிகளும் தனிமைபடுத்தபட்டு முடங்கியிருக்கின்றார்கள்

  நிலமை கட்டம் கட்டமாக மெல்ல சீரடைகின்றது, இன்னும் சில மணி நேரங்களில் முழுமையான வழக்க நிலைக்கு வரலாம்

 16. அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது தமிழக அரசின் கமிஷனை போல் அல்ல அது சக்தி வாய்ந்தது

  அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன்

  (நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு)

  அது 1919ல் இந்தியாவில் உள்ளாட்சியினை அறிமுகபடுத்திய வெள்ளையன் (இப்பொழுது நடக்கும் பஞ்சாயத்து முதல் சட்டசபை வரையான தேர்தல்) அதில் சில குறைகள் இருப்பதை உணர்ந்தான், அது இந்தியருக்கு உபயோகமில்லா அதிகாரமில்லா ஆட்சி என குரல்கள் வந்தன‌

  இதனை களைய சைமன் எனும் அதிகாரி தலமையில் ஒரு குழு இந்தியா வந்தது, ஆனால் அக்குழுவில் ஒருவர்கூட இந்தியர் இல்லை

  காந்தியினை, நேருவினை இன்னும் பலரை வெள்ளையன் ……க்கும் மதிக்கவில்லை என்பதுதான் இதில் உள்ள உண்மையான விஷயம்

  இந்தியர் இல்லா இந்த குழு இந்தியருக்கு எப்படி நன்மை பயக்கும் என எதிர்ப்புகள் எழுந்தன, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் எதிர்த்தன நாடெங்கும் பெரும் எதிர்ப்பு உண்டாயிற்று

  இந்தியர் இல்லா இக்குழுவினை புறக்கணிப்போம் என பலத்த கண்டனங்கள் எழுந்தன‌

  இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் போன்றோர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்

  லஜபதிராய் பெரும் தனவந்தர், இன்று பாகிஸ்தானில் இருக்கும் பெரும் மருத்துவமனை அவர் அமைத்து கொடுத்தது. நாடெங்கும் நற்பெயர் பெற்றிருந்தார், அவரை வெள்ளையன் அடித்ததில் பலத்த காயமுற்றார்.
  அதில் இறந்தும் போனார், வருடம் 1928

  அது நாடெங்கும் கிளர்ச்சியினை ஏற்படுத்தியது, போராட்டம் தொடர்ந்து நடந்தது பகத்சிங் கோபத்தோடு கிளம்ப அதுதான் காரணம்,.

  அப்படி திருப்பூரிலும் 1932ல் போராட்டம் நடந்தது , அதில்தான் அந்த சென்னிமலை இளைஞன் 28 வயதேயான குமரனும் கலந்து கொண்டான்

  நொய்யல் நதிக்கரையோரம் ஊர்வலம் சென்றபொழுது போலீஸ் கடும் தடியடியில் இறங்கியது. குமரனின் தலையிலும் பலத்த அடி விழுந்தது , ரத்தம் வழிய விழுந்தான். அது ஜனவரி 10ம் நாள்

  அவன் மரணித்தான், ஆனால் அவன் கையில் தேடிய கொடியினை இறுக பிடித்திருந்தான்.

  தேசம் முழுக்க அந்த செய்தி கண்ணீர் சிந்த வைத்தது, வெள்ளையரில் பலருக்கே கண்கள் கசிந்தன.

  காந்தி நேரில் திருப்பூர் வந்து ஆறுதல் சொன்னார், பின்பு அடிக்கடி அக்குடும்பத்திற்கு கடிதமும் எழுதினார்.

  யாரும் திருப்பி அடித்தால்தான் காந்திக்கு பிடிக்காதே தவிர, அடிவாங்கி செத்தால் மனிதர் அணைத்து கொள்வார், அவரின் மனநிலை அது.

  இத்தேசத்திற்காக உயிர்விட்ட தியாகியான அக்குமரனுக்கு இன்று பிறந்தநாள், சென்னிமலை இப்படியான பல தியாகிகளை கொடுத்திருக்கின்றது தீரன் சின்னமலை அந்த ஊரை சேர்ந்தவர்தான்

  அந்த குமரன் பிறந்த நாளில் நாளில் அந்த “கொடிகாத்த குமரனை ” போற்றுவோம்

  அவருக்கு இத்தேசத்தின் ஆழ்ந்த அஞ்சலிகள். அவர் இறுக பிடித்த கொடிபோல இந்நாட்டை காக்க இத்தேசமே சபதமேற்கின்றது..

  ( தேசமே பொங்கி எதிர்த்த சைமன் கமிஷனை, எல்லா தரப்பும் எதிர்த்த கமிஷனை இரண்டே இரு கட்சிகள் மட்டும் ஆதரித்தன‌

  அது நீதிகட்சி மற்றும் ஈரோட்டு ராம்சாமியின் சுயமரியாதை இயக்கம்

  ஆம், மொத்த இந்தியாவும் எதிர்க்க இவர்கள் மட்டும் சின்னதம்பி கவுண்டமணி போல் தனியே கைதட்டி வரவேற்றுகொண்டிருந்தார்கள்

  அவர்களின் வெள்ளையன் மேலான விசுவாசமும் அச்சமும் அப்படி

  அந்த சைமன் கமிஷனை எதிர்த்து செத்தவன் குமரன், சைமன் கமிஷனை ஆதரித்தது நீதிகட்சியும் ராம்சாமி இயக்கமும்

  ஆனால் நீதிகட்சி, ராம்சாமி வழிவந்த திமுக குமரனுக்கு இன்று அஞ்சலி செலுத்தி அழும்

  ஏதாவது புரியுமா? புரியாது அதுதான் ட்ரவிடியன் ஸ்டோக்)

 17. எல்லையில் சீன மிரட்டல் இருக்கும் நிலையில் இந்திய முப்படைகளின் கூட்டு தளபதி பிபின் ராவத் அமெரிக்கா சென்றிருப்பதும், அங்கே அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை சந்தித்திருப்பதும் உலகை மிரள வைத்த செய்திகள்

  விபின் ராவத் சம்பிரதாய பயணம் மேற்கொள்ளவில்லை மாறாக பலம் வாய்ந்த பெண்டகனுக்கு அழைக்கபட்டிருக்கின்றார்

  அங்கு அமெரிக்க முப்படைகளின் தளபதியினை சந்தித்து பல விஷயங்களை விவாதித்திருக்கின்றார்

  இன்னொரு நாட்டின் தளபதி பெண்டகனுக்கு வருகின்றார் என்றால் அந்நாடு அதாவது அந்த தளபதியின் சொந்த நாடு அமெரிக்காவுடன் ராணுவ கூட்டாளி என பொருள்

  சீனா ஏன் கொந்தளிக்கின்றது, எல்லையில் உருண்டு புரண்டு அழுகின்றது என்பதற்கான காரணம் இப்பொழுது தெரிந்திருக்கும்

  இந்தியாவினை இனி சீனா ஒருவேளை தாக்கினால் இல்லை உரசினால் அதன் கிழக்கு எல்லை தெற்கு எல்லை என எல்லா எல்லையிலும் கட்டம் கட்டி அடிக்க வலுவான தளங்களை அமைத்திருக்கின்றது இந்தியா

  இந்திய தளபதிக்கு பெண்டகனில் கொடுக்கபட்ட வரவேற்பு தெற்காசியாவில் புது கூட்டணிகளையும் இதுவரை இல்லா சடுதி மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது

  நேருவின் குடும்பமும் அந்த காங்கிரசும் என்ன காரணத்துக்கோ ரஷ்யாவிடம் அடங்கி கிடந்தது, 1962ல் அமெரிக்க கென்னடி சீனா இந்தியாவினை முதுகில் குத்தும்பொழுது உதவ வந்தபொழுது கூட நேரு பெரிய விருப்பம் காட்டவில்லை

  ஆனாலும் கென்னடியின் மிரட்டலே போரை நிறுத்திற்று, சோவியத் பெரிய ஆர்வமில்லாமல் இருந்தது

  நேரு போன்ற குழப்பவாதிகள் இருந்தால் தேசம் சீரழியும் சீரழிந்த தேசத்தில் செங்கொடி மலரும் அது சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நலம் என்பது அவர்கள் கணக்கு எனும் தியரி அன்று இருந்தது

  இந்த பின்னணியில்தான் சாஸ்திரி மரணம் நடந்தது, இந்திராவும் சோவியத்துக்கு அஞ்சி காஷ்மீர் சிக்கலை தொட மறுத்தார்

  ஏதோ ஒரு சக்தி இந்தியாவினை மிரட்டியது நிஜம், காங்கிரசார் குறிப்பாக நேரு வம்சம் ரஷ்யாவிடம் கைதிகளானதும் ஒரு வகையில் நிஜம்
  இதில்தான் காஷ்மீர் முதல் ஈழம் வரை காங்கிரஸ் சொதப்பியதும் நடந்தது.

  இப்பொழுது மோடி அரசு புதிய பாதை திறந்துள்ளது அது நாட்டுக்கு எது நல்லதோ அதை செய்வது

  ரஷ்ய எஸ் 400 சிஸ்டம் வாங்கவும் அவர்களுக்கு தெரியும் அந்த விவகாரத்தால் அமெரிக்கா இந்தியாமேல் தடை விதிக்காதவாறு அமெரிக்காவினை சரிகட்டவும் தெரியும்

  உலகின் மிகபெரிய ஜனநாயகநாட்டின் தளபதி உலக வல்லரசின் ராணுவ கோட்டையில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது இந்தியா பெற்றிருக்கும் புதிய பலத்தை காட்டுகின்றது

 18. தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு அநீதி நடந்தது, அது தமிழக பாஜக எனும் கட்சி எவ்வளவு பலவீனமான கட்சியாக நாட்டுபற்றும் வரலாறும் தெரியாத கட்சியாக இருந்தது என்பதற்கு சாட்சியாக இருந்தது

  ஆம், ஒரு ஒப்பற்ற சுதந்திர போராளியும் , பாரதமாதாவுக்கு கோவில் கட்டவேண்டும் என முதலில் விரும்பியவர் சுப்பிரமணிய சிவா

  இதற்காக பாப்பாரபட்டி அருகே இடம் வாங்கினார், ஆனால் அவர வெள்ளையனால் “ஒடுக்கபட்ட” அல்லது “தாழ்த்தபட்ட” பின் காட்சிகள் மாறின‌

  அவரும் மறக்கடிக்கபட்டார், அந்த கோவிலும் மறந்தது, காலங்கள் கடந்தன‌

  காங்கிரசோ காமராஜரோ அந்த பாரதமாதா கோவிலை நினைத்தும் பார்க்கவில்லை, காந்திக்கு எதிரானவர்களை காங்கிரஸ் நினையாது

  அவர்களே நினையாதபொழுது திராவிட கட்சிகளும் நினையாது

  எனினும் 2018ல் எடப்பாடி அரசு ஏதோ திட்டத்துடன் அந்த கோவிலுக்கு அனுமதி அளித்தது, 1924ல் அவர் கண்ட கனவுக்கு 2018ல்தான் அடிதளம் இடபட்டது

  அதையும் 2021ல் கட்டி முடித்தார்கள்

  ஆனால் மிக பிரமாண்டமாக நடந்திருக்க வேண்டிய அந்த விழா, பிரதமரும் குடியரசு தலைவரும் வந்து நடந்திருக்க வேண்டிய விழா அனாதையாக நடந்தது

  தமிழக ஆளுநரோ முதல்வரோ கூட வரவில்லை, சம்பிரதாயத்துக்கு திமுக அமைச்சர் வந்தார்

  பாரத மாதா கோவில் அமைக்க விரும்பி நிலம் வாங்கி அது முடியாமல் தேசத்துக்காய் வெள்ளையன் வஞ்சனையில் அனாதையாய் செத்தவனுக்கு தேசம் கொடுத்த மரியாதை இதுதான்

  நிச்சயம் மோடியினை நாம் குறை சொல்லவில்லை, அவருக்கு இந்த கோவிலுக்கான முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் யாரும் எடுத்து சொல்லவில்லை, தமிழக பாஜகவின் மிகபெரிய சறுக்கல் இது

  இந்த விழாவுக்கு வராத குடியரசு தலைவர் கருணாநிதியின் படதிறப்புக்கு வந்ததும், அங்கிருந்து ஊட்டிக்கு சென்ற அவர் இந்த இடத்தை ஏறேடுத்து பார்க்காததும் மிக வருத்தம்

  அனாதையாக செத்த அந்த தேசமகானின் பாரதமாதா ஆலயமும் அனாதையாக நிற்கவேண்டும் என்பது என்ன வல்விதியோ தெரியவில்லை

  யார் அந்த சிவம்?

  அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று

  சிவம் பேசினால் சவமும் எழும் அளவு உணர்ச்சியான பேச்சு அவருடையது

  தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி

  சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகைக்கு பின் இவர் போன்றவர்கள் மறக்கடிக்கபட்டனர் என்பதுதான் இந்திய சுதந்திர வரலாற்று போரின் சோகம்

  சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் தேவரின் முன்னோடி போன்றவர். தமிழ் பேச்சும் சரி வீரவிளையாட்டுகளிலும் சரி , சிறந்து விளங்கினார்.

  திருவனந்தபுரத்தில் தான் வளர்ந்தார் இந்து மதம் அவருக்கு மிக பிடித்த மதமாயிற்று. கிறிஸ்தவ பள்ளிகளிலும் பின்பு படித்தாலும் இந்து மதத்தின் மீது அவருக்கான அபிமானம் அப்படியே இருந்தது.

  1905ல் நடந்த ரஷ்ய ஜப்பான் போரில், மாபெரும் நாடான ரஷ்யாவினை தோற்கடித்தது ஜப்பான்

  ஆசிய நாடென்று ஐரோப்பிய நாட்டை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கையினை அதுதான் கொடுத்தது, அது இந்தியாவிலும் எதிரொலித்தது

  இந்தியாவில் அது உணர்ச்சியூட்டுவதை கண்ட ஆங்கிலேயன் பிரித்தாளும் சூழ்ச்சியில் கடுமையாக இறங்கினான், வங்கம் பிரிந்ததும் முஸ்லீம் லீக் உருவானதும் அதன் பிறகுதான்

  இக்காலகட்டத்தில்தான் சிவா கடுமையாக போராடினார், பலமுறை சிறைக்க்கு சென்றார்

  பாரதியுடனும், வஉசியுடனும் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது, மூவரும் பாரத தாயின் தவப்புதல்வர்காளகவே போராடினர்

  சில இதழ்களையும் நடத்தினார். அவ்வபோது ராஜதுரோக வழக்கிலும் சிக்கினார்

  1923ல் இந்திய ஒற்றுமைக்காக பாரதமாதா கோவில் அமைக்கும் வேலையில் இறங்கினார். இந்தியாவிலே முதன்முறையாக பாரதமாதா கோவில் அமைக்க பாப்பாரபட்டி அருகே இடம் வாங்கினார்

  கல்கத்தாவிலிருந்து தேசபந்து சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார்.

  இனி பொறுப்பதில்லை என கொதித்த அரசு அவரை இம்முறை கடும் சிறையில் அடைத்தது, அங்கேதான் அவரை தொழுநோய் தாக்கியது, தாக்க வைக்கபட்டது

  சிறையிலிருந்து தொழுநோயாளியாக வந்தார் சிவா, அவரின் நண்பர் வ உசி செக்கிழுத்துகொண்டிருந்தார், பாரதியார் வறுமையில் வாடிகொண்டிருந்தார்

  இம்மூவருமே ஆங்கில புலமை மிக்கவர்கள், பெரும் அறிவாளிகள், கொஞ்சம் தலைவணங்கியிருந்தால் வெள்ளையன் அரசில் பெரும் பதவிகளை வகித்திருப்பார்கள்

  ஆனால் அந்த வெள்ளை மனத்தோருக்கு பொதுநல பற்று இருந்தது, தகுதி இழந்து கொடுநோய்க்கும் கடும் வறுமைக்குள் ஆளானார்கள்

  மிக பெரும் காரியத்தில் இறங்கிய சிவா, தன் 41ம் வயதிலே தொழுநோய்க்கு பலியானார்.

  இன்று அவரின் பிறந்த நாள்

  பாரத தாய்க்கு அவர் கட்ட நினைத்த கோவில் சம்பிரதாயத்துக்கு அதுவும் திராவிட இம்சைகளால் கட்டபட்டதெல்லாம் தேசிய அவமானம்

  தேசம் முழுக்க தேச பக்தி பொங்கும் இக்காலத்தில், தமிழகத்தில் சில சில்லறை பிரிவினைவாதிகள் அதிகம்

  அந்த சிவாவின் கனவான பாரதமாதா கோவிலை திறக்க பாரத பெரும் தலைவர்கள் வராதது அதை விட அவமானம்

  பாரத மாதாவுக்கு ஜே என்பவர்கள் பாரத மாதா கோவில் கட்ட துடித்தவனை புறக்கணிப்பது நிச்சயம் தர்மம் அறம் ஆகாது

  வ.உ.சி , பாரதி என கொண்டாடும் நாடு அவர்களுடன் இருந்த சிவத்தை மறப்பது என்பது அந்த உத்தம தேசபக்தனுக்கு செய்யும் பெரும் துரோகம்

  அந்த அவமானம் துடைக்கபட்டு அந்த உத்தமன் இந்தியாவின் தலமை பீடத்தால் அங்கீகரிக்கபட்டு அவன் கனவு கண்ட பாரதமாதா கோவிலில் இந்தியாவின் உச்ச தலமைகள் அஞ்சலி செலுத்துவதே, நாட்டுபற்று கொண்ட உன்னத தலைவன் அஞ்சலி செலுத்துவதே அவருக்குரிய பெரும் மரியாதை

  அந்நாள் வரும்வரை மனம் முழுக்க துயருடன் அவரை நினைவு கூர்வோம்

  வந்தே மாதரம், பாரத மாதாவுக்கு ஜே..

 19. 3 மாதத்தில் தேர்ந்தல் நடக்கவிருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை தூண்டிவிட்டு கலவரம் நிகழ்த்தி வாக்கு அறுவடை செய்ய முயற்சிக்கின்றது காங்கிரஸ்

  ராமர்கோவில் நிறுவடுதல் , உபியில் கொரோனாவுக்கு எதிரான சிறப்பான செயல்பாடு, மிக பெரிய வளர்ச்சி திட்டம் என பிஜேபி அடித்து ஆடும் நிலையில் காங்கிரஸ் இனி கலவரம் ஒன்றே வழி என இறங்கிவிட்டது

  விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்ட காங்கிரஸ், அந்த சம்பவத்தில் விவசாயிகள் உயிரிழந்த நிலையில் விவகாரத்தை பெரிதாக்க பிரியங்காவினை களத்தில் இறக்குகின்றது

  அவர் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில் தடுத்து வைக்கபட்டிருக்கின்றார்

  விவசாய திட்டங்களை மன்மோகன் முதல் கபில் சிபல் வரை காங்கிரஸின் பெரும் தலைகளே ஏற்றுகொண்ட நிலையில் இந்த குபீர் நேருவழி தலமைகள் தேசவிரோதம் செய்கின்றன‌

  நாட்டுபற்றாளர்கள் என்றால் லடாக் சீன எல்லைக்கு செல்லலாம், அம்ரீந்தர் சிங் அஜித்தோவலிடம் சொன்ன பாகிஸ்தான் எல்லை பற்றி விசாரிக்க செல்லலாம்

  ஏன்? கோவில்கள் பூட்டியிருப்பதால் ஒரு கிலோ பூவினை விற்க முடியாமல் திணறும் தமிழக விவசாயிகளை காண வரலாம்

  அதையெல்லாம் செய்யாமல் உபியில் கலவரம் உண்டாக்க கடும் முயற்சி செய்கின்றது காங்கிரஸ்

  பிரியங்கா அல்ல அவர் பாட்டி வந்தாலும் இனி காங்கிரஸ் உருப்படாது என்பது சோனியாவுக்கு தெரிந்தால் நல்லது

 20. 2 ஆயிரம் ஆண்டுகளாக எங்களை அடக்கி..

  டேய் இங்கே வா, 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி யார் ஆட்சி இருந்தது?

  அதெல்லாம் தெரியாதுண்ணே எங்களை அடக்கி 2 ஆயிரம் வருஷமா..

  டேய் அசோகர் எப்பொழுது ஆண்டார்?

  அவரு கெட்டிக்காரரு, புத்தர ஏற்றுகொண்டு சாதியெல்லாம் ஒழிச்சவரு

  ஆமாண்டா அசோகர், கனிஷ்கர்னு எவ்வளவு பேர் ராஜாவா இருந்தாங்க, அப்ப ஜாதி இல்லதானே

  இருந்திருக்க முடியாதுண்ணே, ஹிஹி அப்போ ஆயிரத்து 1800 வருஷமா

  இருடா, அதுக்கப்புறமும் ஹர்ஷர் முதல் ஏகபட்ட அரசர்கள் இருந்தார்கள், புத்தமும் சமணமும் மாறி மாறி இருந்திச்சி, நாளந்தா பல்கலைகழகத்துல வெளிநாட்டுகாரென்ல்லாம் படிச்சான், நீங்க ஏண்டா படிக்கல..

  ஆமாண்ணே நாங்க படிக்கல, ஆனா அப்போ ஜாதியில்ல, இந்த ஆதிசங்கரர் வந்தார்ல அப்பதான் ஜாதி, ஆக 1100 ஆண்டுகளாக எங்களை அடக்கி வைத்த..

  டேய் இருடா..சங்கரர் எப்போடா ஆண்டாரு? சரி அப்புறமா யார் ஆள வந்தா?

  ஆப்கானியரும் மொகலாயரும்.

  இப்போ சொல்லு

  கிட்டதட்ட 500 வருடமாக …. அண்ணே நீங்க தமிழ்நாட்டுக்கு வாங்க, அங்கதான் விஷயமே இருக்க்கு

  என்ன இருக்கு? மூவேந்தர் என்ன ஜாதிடா?

  தெரியலண்ணே, ஆனா பிராமணர் இல்ல‌

  சரிடா அவங்களுக்கு அடுத்து யார் வந்தா?

  நாயக்கர்கள்ணே, அப்படியே மராட்டியனும், நவாபும் வந்தாங்க.. ஆக 400 வருடமாய் எங்களை அடக்கி வைத்த..

  டேய் வெள்ளைக்காரன் காலம்

  ஆமாண்ணே 200 ஆண்டுகாலம் வெள்ளையனை கைக்குள் போட்டு எங்களை அடக்கி வைத்த பிராமணன்..

  டேய் ஆட்சி அதிகாரம் யார்கிட்ட இருந்து?

  வெள்ளைகாரன்கிட்ட‌

  நிலமெல்லாம் யார்கிட்ட இருந்து, பேக்டரியெல்லாம் யார் வச்சிருந்தா?

  நாயக்கரு, செட்டி, நாயுடு

  பின்ன ஏன் பிராமணன்?

  அவன் எங்கள கோவிலுக்குள்ள விடலண்ணே.. 200 ஆண்டுகாலமாய்

  கோவிலுக்கு பொழைக்க போறியா, சாமி கும்பிடவா?

  சாமி கும்பிட‌

  பொழைப்பு முக்கியமா? கோவில் முக்கியமா?

  பொழைப்புண்ணே

  அப்போ ஒழுங்கா பொழைக்க வேண்டியதான..

  ஆமாண்ணே அதான் பொழைக்க விடல‌

  யாரு?

  நிலம் வச்சிருந்தவன், தொழிற்சாலை வச்சிருந்தவன்

  யாரு சரிபண்ணிருக்கணும்?

  வெள்ளைக்காரன்

  ஏன் செய்யல?

  ஆமாண்ணே… 1947ல் இருந்து எங்களை அடிமையாக…

  டேய் அப்புறமா சுதந்திரமெல்லாம் கிடைசிட்டு ஓடிபோயிரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *