தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்

“தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, அதென்ன வருடப் பெயர் எல்லாம் சுபக்ருது, ப்லவ, சார்வரி, துர்முக, விளம்பி, ஹேவிளம்பி, அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?” – என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல பறைசாற்றிக் கொண்டு அற்பத்தனமான பதிவுகளும் மீம்களும் சமூக ஊடகங்களில் இந்த 2022ம் ஆண்டிலும் உலவிக் கொண்டிருக்கின்றன. சராசரி தமிழர்களின், குறிப்பாக திமுக அடிமைகளின் கலாசார அறிவின்மை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைத் தான் இந்தக் கொசுக்கடிகள் பறைசாற்றுகின்றன.

வருடங்களின் பெயர்கள் மட்டுமல்ல, தமிழின் இரண்டாயிரம் ஆண்டுக் கால பண்பாட்டில், அதன் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், கலை, மருத்துவம் கணிதம் உள்ளிட்ட அறிவுத் துறைகள் இவை எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதம் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்திருக்கிறது. அந்த உண்மை கூட இந்த பரப்புரைகளை உருவாக்கும், அதை மந்தைத்தனமாகப் பரப்பிக் கெக்கலிக்கும் குருவி மண்டைகளுக்குத் தெரியவில்லை.

“ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, ஓம் சக்தி – இதெல்லாம் தமிழா? இவற்றை ஓதுவதை ஒழிப்போம்” என்று நமது புனித மகாமந்திரங்களைக் குறித்தும் இதே வாதத்தை வைத்து நாளை இந்த வெறிநாய்கள் பரப்புரை செய்யலாம். அதற்கான காலத்தை எண்ணிக் காத்திருக்கிறார்கள். அவ்வளவே. இவர்களது மையமான நோக்கம் தமிழ்ப் பண்பாட்டு ஒழிப்பு மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு (274, பெயரியல்) உரை எழுதும் மயிலை நாதர் கூறுகிறார் –

“இஃது, ஒரு நிலத்திற்கே உரியதன்றிப் பதினெண் பூமிக்கும் விண்ணிற்கும் புவனாதிகட்கும் பொதுவாய் வருதலின், திசைச்சொல்லின் அடக்காது வேறோதினாரென்க. அஃதென்னை? வடக்கண் மொழியென்றாராலோவெனின், ஆண்டு வழக்குப் பயிற்சியை நோக்கி அவ்வாறு கூறினாரென்க”.

அதாவது வடசொல் என்பது மற்ற திசைச் சொற்களைப் போன்று அல்ல. அது புவனம் முழுவதற்கும் உரிய ‘சப்தம்’ என்பதன் வடிவம். வடசொல் என்பது வழக்குப் பற்றியதே அன்றி திசை பற்றியதல்ல, எனவே அது தமிழுக்கு வேறானது என்று கருதுவதே தகாது என்று விளக்குகிறார் உரையாசியர்.

விபவ முதலான அறுபது ஆண்டுகளின் பெயர்களைப் பல நூற்றாண்டுகளாக தமிழ் மன்னர்களும் தமிழ்ச் சான்றோர்களும் அறிஞர்களும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அது தமிழ்ப் பண்பாடு சார்ந்தது என்பதற்கு அந்த சான்றே போதுமானது.


புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிவிட்டு, தை மாதப்பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையைத் தர முடியுமா என்று ஒரு நண்பர் கேட்டார். ஏதோ ஒரு குழுமத்தில் டுமீலர் ஒருவர் தமிழ்ப்புத்தாண்டு தை மாதம் முதல்நாள் நாள் என்று கூச்சலிடுகிறாராம். சுத்தம்.

அடித்துத் துவைத்து நொறுக்கப்பட்ட பொய் வரலாறுகளும் திரிபுகளும் தமிழ்நாட்டில் சாவதே இல்லை என்று தோன்றுகிறது. ஆரிய பார்ப்பன வந்தேறி, இராவண-நரகாசுர தமிழ் மன்னர்கள், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இத்யாதி இத்யாதி பற்றியெல்லாம் சீரியசாக எங்கோ சில டுமீலர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் 🙂 அதுவும், தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தமிழ்ப் புத்தாண்டு சித்திரையே என்று அரசாணை வெளியிட்டபின்பும் திமுக கொத்தடிமைகளும், சீமான் அடிப்பொடிகளும், தமிழ்ப் பிரிவினைவாதிகளும் வருடாவருடம் வருடப் பிறப்பின் போதும், பொங்கலின் போது இந்த இழவு ஒப்பாரியை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட கட்டுரைகளை நண்பருக்கு அனுப்பினேன். உங்களுக்கும் உதவலாம்.

தையில் புத்தாண்டு தமிழ் மரபன்று (ஓகை நடராஜன்)

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் (எஸ்.ராமச்சந்திரன்)

சித்திரையில்தான் புத்தாண்டு (எஸ்.ராமச்சந்திரன்)

திரிபே வரலாறாக?: தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து (பால.கௌதமன்)

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – பாகம் 1,2 (ஜெயஸ்ரீ சாரநாதன்)


உலகெங்கும் மேற்கத்திய காலனிய தாக்கத்தாலும், இஸ்லாம் கிறிஸ்தவம் மார்க்சியம் ஆகிய ஆபிரகாமிய மதங்களின் ஆக்கிரமிப்புகளாலும், பற்பல தொல்கலாசாரங்களும் மரபுகளும் அழிந்து விட்டன. ஆனால் பாரத தேசமும் இந்து தர்மமும் அதையெல்லாம் மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் தமிழ்ப் புத்தாண்டை இவ்வளவு மகிழ்ச்சியுடனும் பாரம்பரியத்துடனும் உலகெங்குமுள்ள தமிழ் இந்துக்கள் கொண்டாடி வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.

இது பொறுக்காமல், இந்தப் பண்பாட்டுக் கொண்டாட்டத்தை உடைக்க வேண்டும், குலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் விஷ பிரசாரங்களை முறியடிப்போம்.

2 Replies to “தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்”

  1. அருமையான பொருள் பொதிந்த பதிவு குறிப்பாக இந்த இளைஞர்களுக்கான பதிவு.

  2. வந்தேறிகளின் விளக்கம் சற்று வேடிக்கை யாக இருக்கு. அவர்கள் நோக்கம் கருணாநிதி யை தவறு என்று காட்டுவது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *