ம(மா)ரியம்மா – 1

This entry is part 1 of 14 in the series ம(மா)ரியம்மா

கதைச் சுருக்கம்

மரியம்மா, ஜான் தம்பதியின் உடலில் அவர்களுடைய பாட்டி, தாத்தாவின் ஆவிகள் இறங்குகின்றன. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்களில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்பச் சொல்லி வற்புறுத்துகின்றன.

இந்து தர்மமா… கிறிஸ்தவமா… இஸ்லாமா எது சிறந்தது என்று ஊரார் முன்னிலையில் பெரும் வழக்காடுமன்றம் நடக்கிறது. எந்தத் தரப்பு ஜெயிக்கிறதோ ஊர் மக்கள் அனைவரும் அந்த மதத்துக்கு மாறுவதென்று முடிவாகிறது.

வழக்காடு மன்றத்தின் முடிவில் இன்ப அதிர்ச்சியாக, ஒரு மிக முக்கியமான தலைவரின் ஆன்மாவும் பூமிக்கு வருகிறது. அவர் என்ன தீர்வு சொல்கிறார்… மக்கள் என்ன முடிவெடுக்கிறர்கள்; அந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறார்கள் என்பதே கதை


அதிகாலையில் தூங்கி எழுந்த மரியம்மாவுக்கு, கண்ணாடியைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போடுகிறது.

தினமும் எழுந்ததும் தூக்கத்தில் கலைந்த கேசம், மேலே செருகிய கண்கள் என இருப்பவள் ஒரு டார்ச் லைட்டை முகத்தில் அடித்தபடி கண்ணாடியைப் பார்ப்பது வழக்கம். பேய் போல் பயங்கரமாக முகத்தை விகாரமாக்கி சிறிது நேரம் விளையாடுவாள். படுக்கையில் இருந்தபடி கணவர் ஜான் அதைப் பார்த்து, ‘நீ டார்ச் லைட்டை முகத்துல அடிக்காம இருந்தாலும் டெரராத்தானிருக்க’ என்று கிண்டல் செய்வார்.

இன்று என்னடாவென்றால் மரியம்மாளின் கேசம் நன்கு முடியப்பட்டு அதில் ரப்பர் பேண்ட் போடப்பட்டிருந்தது. பூ வேலைப்பாடு மிகுந்த கிளிப் ஒன்று தலையில் இரு பக்கமும் அழகாகச் செருகப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நெற்றியில் அழகாக, குங்குமம் இடப்பட்டிருக்கிறது!

மதம் மாற்றப்பட்ட நாளில் இருந்து ஒரு நாள் கூட அவள் குங்குமத்தைக் கையால் தொட்டதுகூட இல்லை. இன்று மிக அழகாக நெற்றியிலும் நேர் வகிடிலும் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. முகம் அழகாக, மங்களகரமாக இருந்தது. அதைப் பார்த்ததும் முதலில் மனதுக்குள் ஒரு இனம் புரியாத மன நிறைவு அடைந்தவள், சட்டென்று குங்குமத்தை வேகமாக அழித்தாள்.

திரும்பிப் பார்த்தபோது கணவன் அசந்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரை நெருங்கிப் பார்த்தபோது அவர் நெற்றியில் விபூதி பூசி அது உலர்ந்து, அழிந்து எஞ்சியிருக்கும் தடம் போல் தெரிந்தது. அவசர அவசரமாக அவரை எழுப்பிக் கண்ணாடி முன் கொண்டுவந்து நிறுத்தினாள்.

அவரும் தன் முகத்தில் இடப்பட்டிருக்கும் விபூதியைப் பார்த்து அதிர்ந்துபோய் அவசர அவசரமாக அழிக்கிறார். முகத்தை அலம்பிக்கொண்டு இருவரும் நேராக அவர்கள் வீட்டில் இருக்கும் இயேசு நாதர் படத்துக்கு முன்பாகச் செல்கிறார்கள். மரியம்மாள், மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துக் கண்மூடி வணங்குகிறார். கண்ணைத் திறந்து பார்த்தால் மெழுகுவர்த்தி யாரோ ஊதியதுபோல் அணைந்து கரும்புகை காற்றில் பறக்கிறது. மெழுகுவர்த்தியின் மேலே அரிக்கேன் விளக்கின் கண்ணாடி போன்ற உருளையைக் கொண்டுவந்து மாட்டிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு இருவரும் மண்டியிட்டு வணங்குகிறார்கள்.

கண் திறந்து பார்த்தால் அந்த மெழுகுவர்த்தியும் அணைந்துவிட்டிருக்கிறது.

வீட்டில் ஜன்னல்கள் எல்லாம் சாத்தியிருக்கின்றன. ஃபேனும் போடவில்லை. மரியம்மாளுக்கும் ஜானுக்கும் ஒரே குழப்பமாக இருக்கிறது. அன்று ஞாயிறென்பதால், சர்சுக்குப் போகும்போது பாதிரியாரிடம் இது பற்றிப் பேசலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

சர்ச்சுக்குப் புறப்படும் போதும் பல தடங்கல்கள் வருகின்றன. இவர்கள் ஏறிச் செல்லும் ஆட்டோ வழியில் ரிப்பேர் ஆகி நின்றுவிடுகிறது. சரி, நடந்து போகலாம் என்று நினைத்தால் பாதி வழியில் குழந்தைகளின் செருப்பு அறுந்து போகிறது. ஒரு வழியாக சர்ச்சுக்கு வேர்த்து விறுவிறுக்க வந்து சேர்கிறார்கள்.

வெளிக்காற்றையும் வெளிச்சத்தையும் முழுமையாகத் தடுத்தபடி கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட வழிபாட்டு மையத்தில் மின்விசிறிகள் வெக்கையான செயற்கைக் காற்றை உமிழ்ந்துகொண்டிருந்தன. ட்யூப் லைட்கள் போலி வெளிச்சத்தைத் தந்துகொண்டிருந்தன. மரியமும் ஜானும் குழந்தைகளுடன் சென்று வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள். அன்றைய வழிபாட்டுச் சடங்குகள் முடிந்த பிறகு பாதிரியாரிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள்.

தசம பாகமெல்லாம் ஒழுங்காகக் கொடுக்கிறீர்கள் அல்லவா என்று அவர் புன்முறுவல் பூத்தபடியே கேட்கிறார்.

ஆமாம் ஃபாதர். அதையும்விட அதிகமாவே தந்துவருகிறோம் என்கிறாள் மரியம்.

வீட்டில் புதிதாக கார், பைக் ஏதேனும் வாங்கினீர்களா?

இல்லை ஃபாதர்.

நல்லது கெட்டது எதுவானாலும் சபையிடம் சொல்லிவிடுகிறீர்கள் அல்லவா.

ஆமாம் ஃபாதர்.

சரி… வீட்டுக்குச் செல்லுங்கள். பிரச்னை ஏதேனும் வந்தால் பைபிளை எடுத்து வாசியுங்கள். கர்த்தரை நம்புங்கள்.. ஜெயமே உண்டாகும்- என்று சொல்லி அனுப்புகிறார்.

அன்று இரவு திடீரென்று மரியம் வீட்டில் மட்டும் மின்சாரம் போய்விடுகிறது. அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. மின்சார வாரியத்துக்கு போன் செய்தால், மறு நாள் காலையில் வருவதாகச் சொல்கிறார்கள்.

மரியம் குடும்பத்தினருக்கு பயம் ஏற்படுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு குழந்தைகளுடன் இயேசு நாதருக்கு அருகில் அமர்ந்துகொள்கிறார்கள். குழந்தைகள் தூங்குவதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதன் பிறகு திடீரென்று கூரையில் யாரோ கற்களை வீசுவதுபோலச் சத்தம் கேட்கிறது. ஜன்னல்கள் தாழ் போட்டு வைத்த மறு நிமிடமே திறந்துகொண்டு படார் படார் என்று அடித்துக்கொள்கின்றன.

மரியமும் ஜானும் பதறியபடியே பைபிளை விரித்து வைத்துப் படிக்க அமர்கிறார்கள்.

ஆனால், இவர்கள் படிக்க விரும்பும் வசனங்களுக்குப் பதிலாக வேறு வசனங்களின் பக்கங்களே முன்னால் வருகின்றன.

உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும்.

மரியம் பயந்து நடுங்குகிறாள். திடீரென்று அவள் கையில் இருக்கும் பைபிள் தீப்பிடித்து எரிகிறது.

மரியாளுக்குள் பேய் வந்து இறங்குகிறது. அவர் தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு ஆடத்தொடங்குகிறார்.

ஜான் பதறியபடியே, பாதிரியாருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்கிறான்.

பயப்படாதீர்கள். சிலுவைக்குக் கட்டுப்படாத பேய் இதுவரை பிறக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவர் உதவி பாஸ்டருடன் புறப்படுகிறார்.

வீட்டுக்குள் நுழைபவர் தலைவிரி கோலத்துடன் இருக்கும் மரியம்மாவைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். சுவரில் சரிந்து இருந்த இயேசுநாதர் போட்டோவைச் சரி செய்கிறார். கையுடன் கொண்டுவந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறார். சிறிது நேரத்தில் அதுவும் அணைகிறது.

பாதிரியார் மெள்ளப் புன்னகைத்தபடியே பைபிளை வெளியே எடுக்கிறார். கறுப்பு நிற ஸிப் போட்ட ரெக்ஸின் அட்டைக்குள் அது இருக்கிறது. புத்தகத்தின் ஸிப்பை அவிழ்க்க முயற்சி செய்கிறார். அது இறுகி ஜாமாகிவிட்டிருக்கிறது.

என்ன ஃபாதர்.. உங்களாலயே ஸிப்பை அவுக்க முடியலையா என்று உதவி பாஸ்டர் அவர் அருகில் காதில் குனிந்து கேட்கிறார்.

பாதிரியார் அவரை முறைத்துப் பார்க்கிறார்.

பிறகு உதவி பாஸ்டர் அதை வாங்கி அவரும் திறக்க முயற்சி செய்து பார்க்கிறார். அவராலும் முடியாமல் போகிறது. அவர் முழு வலுவையும் பிரயோகிக்கவே ஸிப்பின் பிடி அறுந்துவிடுகிறது.

பாதிரியாருக்கு சற்று பயம் ஏற்படுகிறது. பைபிளைப் பார்த்துப் படிக்கவே தடுமாறுவார். இப்போது திறக்கவே முடியவில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இயேசுவுக்கு ஜெயம் என்பதையே பல்வேறு ராகங்களில் முழங்குவதென்று முடிவு செய்துகொள்கிறார்.

மரியம்மாளின் ஆட்டம் வலுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் இடம் மாற ஆரம்பிக்கின்றன. சேரில் சென்று உட்கார்ந்தால் அது நகர்ந்துபோய் பாதிரியார் கீழே விழுந்துவிடுகிறார். கீழே விழுந்தவரை பாய் ஒன்று அப்படியே சுருட்டுகிறது. அதில் இருந்து அவரை மீட்டதும் மேலிருந்து ஃபேன் அறுந்து அவர் தலையில் விழுகிறது. சட்டென்று பாய்ந்து விலகித் தப்பிக்கிறார்.

என்னடே என்னையே குறிவெச்சுத் தாக்குது என்று பதறுகிறார்.

பாவிகளுக்குத்தானே முதல் நியாயத் தீர்ப்பு அச்சோ என்று உதவி பாஸ்டர் மெதுவாகச் சொல்கிறார்.

கடைசி வாரம் வரை செஞ்ச பாவத்துக்கு இந்த ஞாயிறு பாவமன்னிப்பு கேட்டுட்டேனேடே.

அது கழிஞ்சு கொறைய மணிக்கூரு ஆயிட்டில்லா ஃபாதர்.

கர்த்தருக்கு ஜெயம் உண்டாகட்டும் என்று சொல்லியபடியே பாதிரியார் பொன்னிறச் சிலுவையை வெளியில் எடுக்கிறார். ஒரு மெட்டல் டிடெக்டர் போல் அதை பத்திரமாகப் பிடித்துக்கொண்டு மெள்ள மரியம்மாளை நெருங்குகிறார். திடீரென்று அவர் கையில் இருக்கும் சிலுவை வளைந்து நெளிகிறது. யாரோ அதைப் பிடித்து வளைத்து உடைப்பதுபோல் சில விநாடிகளில் அது உடைந்து நொறுங்குகிறது.

ஃபாதர் இந்தப் பேய் அந்த டினாமினேஷனோடதா இருக்குமோ என்று உதவி பாஸ்டர் மெதுவாகக் கேட்கிறார்.

எல்லாத்துக்கும் குருசு ஒண்ணுதானடே என்கிறார் ஃபாதர் குழம்பியபடியே.

குருசின் பெலம் பிடித்திருப்பவனின் விசுவாசத்திலன்றோ…

யார் பிரசங்கிச்ச வசனம்டே இது… கேட்டதே இல்லையே.

எழுதிச் சேத்துக்க வேண்டியதுதான் ஃபாதர்.

மொதல்ல இங்க என்னடே நடக்குது. நம்ம பசங்க பாவிகளை ரட்சிக்க பண்ற டெக்னிக்கை தவறுதலா நம்ம பயலுவ இங்க அவுத்துவிட்டதாத்தான் மொதல்ல நினைச்சேன். இது என்னடான்னா குருசையெல்லாம் ஒடிச்சுப் போடுதேடே… நெசம்மாவே பேய் இருக்கோடே இங்க.

அச்சோ, சம்சயமே வேண்டாம். துராத்மாவு இறங்கிட்டுண்டு.

காணிக்கை பெலமா கேட்டு வாங்கலாம். ஆனா, பேயை ஓட்டியாகணுமேடே.

நாம கேட்கறதையும் செய்யறதையும் பார்த்தப் பொறவு அவாளுக்கு பேயே கொள்ளாம்னு தோணிடும் அச்சோ.

மொதல்ல உன்னை வெரட்ட ஒரு ஜெபம் கண்டுபிடிச்சாகணும் என்று முனகுபவர், பைபிளில் இருந்து தெரிந்த வசனங்களையெல்லாம் ஒப்பிக்க ஆரம்பிக்கிறார். இவர் சொல்லச் சொல்ல பேயின் ஆவேசம் அதிகரிக்கிறது.

சம்சியமே இல்லை… இது மத்த க்ரூபுக்க பேயாட்டுத்தான் தோணுது அச்சோ. நம்ம ஜெபத்துக்கு மசியவேல்ல.

மோனே தினேசா…. செத்த அனத்தாம இருடே. குங்குமத்தை இட்டு விடுது… மெழுகுவர்த்தியை அணைக்குது. குருசை உடைக்குது…

அப்பம் நிச்சயம் இந்து பேயாட்டுத்தான் இருக்கும் அச்சோ.

ஃபாதருக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?!

என்னடே நீ சொல்லுத. ஒரு பக்கம் சரியாட்டும் தோணுது. மறிச்சுப் பாத்தா கோட்டித்தனமாட்டும் தோணுது.

ஞானவான்களுக்கு சரியாட்டுத் தோணுகது அவிசுவாசிகளுக்கு கோட்டித்தனமாட்டுத்தான் தோணும் அச்சோ.

இப்ப நீ சொல்றதை நான் மறிச்சுப் பேசினா என்னை கோட்டின்னு சொல்லுத அப்படித்தான.

ஆமென் ஆண்டவரே.

எந்தக் கோட்டிடே உன்னை மதம் மாத்தினான்?

புனித தோமையர் வம்சமாக்கும் அச்சோ.

அப்படின்னா இங்க எப்படி வந்தீங்க..? ஓ இங்கயும் பாவ மன்னிப்பு வழங்கியிருப்பாருல்லா.

அது கெடக்கட்டும். இந்த பேய் இந்து பேய்ன்னு எனக்கு பெலத்த சம்சியமாட்டு இருக்கு அச்சோ. இருங்க பார்த்துடுவோம் என்று சொல்லும் உதவி ஃபாஸ்டர், வெளியில் சென்று தெருக்கொடியில் இருக்கும் வேப்ப மரத்தின் கிளை ஒன்றை ஒடித்துக்கொண்டு வருகிறார். அதை வீட்டுக்குள் கொண்டு சென்றதும் மரியம்மாளின் ஆட்டம் மெள்ள அடங்குகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றினால் அணையாமல் இருக்கிறது. ஜன்னல்கள் அடித்துக் கொள்வது நிற்கிறது.

Series Navigationம(மா)ரியம்மா – 3 >>

3 Replies to “ம(மா)ரியம்மா – 1”

 1. கல்வியின் அருமையினையும் மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பாரத கலாச்சாரமும் இந்து ஞானமும் பெரும் அளவில் சொன்னது

  மகாபாரத அர்ஜூனன் துரோணனுக்கு எப்படி மாணவனான் எனும் காட்சியிலே மாணவனுக்கான இயல்பு அடையாளமிடபடுகின்றது

  அரச குமாரர்கள் விளையாடும் பொழுது கிணற்றில் விழுந்த பந்தை அந்த வழிபோக்கன் அம்புகளால் எடுத்து கொடுத்துவிட்டு நகர பீமன் அவரை வியப்போடு பார்க்க, துரியோதனன் ஏதும் தானம் வேண்டுமா என கேட்க தர்மன் அவருக்கு வாழ்த்து சொல்ல அர்ஜூனன் ஒருவனே அவர் காலில் விழுந்து குருவாக ஏற்றான்

  அந்த குருதான் துரோணராக வந்தார், அந்த பணிவுதான் அர்ஜூனனை கண்ணனிடமும் குருவாக பணிய சொன்னது

  இதே பக்குவத்தை ராமனிடமும் காணமுடியும்

  இன்றைய மாணவர்கள் சிலர் கல்விசாலையில் செய்யும் அராஜகங்களையும், குருவுக்கு நிகரான ஆசிரியர்களை ஏதோ தெருவோர ஜந்துக்களாக கருதி ஆடுவதை கண்டால் மனம் வேதனைபடுகின்றது

  நல்ல குழந்தைகளை பெறாத பெற்றோருக்கு சிறப்பில்லை, நற்பண்பும் கல்வியும் இல்லாதவன் அன்ன கூட்டம் இடையே காகம் போல் கருதபடுவான் என்பது இந்து ஞானியின் வாக்கு

  சாணக்கியன் தன் நூலில் சொல்கின்றான், மாணாக்கர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கின்றான்

  அந்த சுலோகம் இதோ

  “சுகதி செட் தேஜவிடயம்
  வித்யார்த்தி செட் தியாஜெட்சுகம்
  சுகர்த்தினாகா குடோ
  விட்யா குடோ வித்தியார்தினாத் சுகம்”

  ஒரு மாணாக்கன் சுகவாசியாக இருக்க விரும்பினால் கற்பதை கைவிட வேண்டும் , கற்க விருப்பம் இருந்தால் சுக வாழ்க்கைக்கு ஏங்க கூடாது, ஒரே நேரத்தில் கல்வியும் சுகவாழ்வும் கிடைக்காது

  மேலும் தொடர்கின்றான் அந்த இந்து ஞானி

  “காமம் குரோதம் ததா லோபம்
  சுவாட் ஷிங்கார்கார்க்காதுகம்
  அட்னிட்ராஸ்டிசேவா சா வித்யார்த்தி
  ஹயாஸ்த வர்ஜயெட்”

  அதாவது கல்வியில் விருப்பம் இருந்தால் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என சொல்கின்றான் சாணக்கியன்

  புணர்ச்சி எனும் காமம், வெட்டி பேச்சு, கோபம், பேராசை, சுய ஒப்பனை, பொருட் காட்சி எனும் கேளிக்கை, அதிகமான தூக்கம், கொண்டாட்ட மனம், ஆட்டம் பாட்டம் இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்கின்றான் ஞானி

  அதாவது கல்வியினை ஒரு தவம்போல் செய்ய வேண்டும் என்கின்றான்

  இன்னும் அடுத்த சுலோகத்தில் போதிக்கின்றான் ஞானி சாணக்கியன்

  “யத கானிட்வா கானிட்ரன்
  பூத்தாலே வாரி வின்டாதி
  தத்தா குருகாட்டம் வித்யம்
  சுஷ்சுருஷூராதிச்சாட்டி”

  அதாவது மண்வெட்டியாலும் கடப்பாரையாலும் மண்ணை தோண்டி நீரை எடுக்க முயல்வதுபோல ஒரு மாணவன் குருவிற்கு தொண்டு செய்து அவரிடம் இருந்து எல்லாவற்றையும் கற்க முயல வேண்டும் என்பது பொருள்

  அவ்வளவு சிரமபட்டு கற்க வேண்டும் என்கின்றான் சாணக்கியன்

  ஞானியின் அடுத்த ஸ்லோகம் இன்னும் வலிமையானது

  “புஸ்தகம் பிரட்டாயதீட்டம்
  நாதீட்டம் குருசன்னிதானு
  சபாமாட்ய ந ஷோபனேட்
  ஜார்கர்பாய்வ் இஸ்தியா”

  அதாவது குரு இல்லாமல் வெறும் கல்வி மூலம் அறிவை வளர்க்க நினைத்து வளர்ப்பவன் நிலை, கணவனை அறியாமல் பிள்ளை பெறும் பெண்ணின் இழி நிலைக்கு ஒப்பானதாகும் அவனை யாரும் மதிக்கபோவதில்லை

  கடைசியாக குருவின் அருமையினை சொல்லும் ஸ்லோகத்தை சொல்கின்றார்

  “ஏகமேவக்சரம் யாட்சு குரு
  சிஷ்டம் பிரபோதயாட்
  பிரிட்யம் நாஸ்தி தாத்ரயம்
  யாத் தாத்வ தாரின் பவத்”

  அதாவது தன் போதனையால் ஒளியூட்டும் குருவுக்கான கடனை மாணவனால் ஒருபோதும் அடைக்க இயலாது

  எப்படிபட்ட அழகான பொருத்தமான ஸ்லோகங்கள்? எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்கள்

  ஒவ்வொரு பள்ளியின் வாசல்சுவரிலும் வகுப்பறையில் இந்த சுலோகங்களும் அதன் பொருளும் இருந்தால் மாணவர்கள் சிந்தனை எவ்வளவு நலம்பெறும்? அந்த வகுப்பில் எப்படிபட்ட நல்ல மாணவர்களெல்லாம் உருவாகி வருவார்கள்

  சமஸ்கிருதத்தை தமிழன் ஏன் படிக்க கூடாது என விரட்டினார்கள் என்றால் இதற்காகத்தான்

  இந்த ஞான போதனை துண்டிக்கபட்டுத்தான் திராவிட திரிபுகள் புகுத்தபட்டன‌

  சாணக்கியனும் இன்னும் ஏராளமான ஞானியரின் போதனைகளெல்லாம் இந்துஸ்தான ஞான பாரம்பரியங்கள், சமஸ்கிருதம் ஏன் ஞானமொழி என கொண்டாடபட்டது என்றால் இதனால்தான்

  அதனை வெட்டிவிட்டு திராவிட கும்பல் புது குழப்பமான கல்விமுறையினை புகுத்தியதன் விளைவுதான் இன்று காணும் அலங்கோலங்களும் அட்டகாசங்களும், இதன் பின்னணியில் அன்று மிஷனரிகள் இருந்தார்கள் இன்று தனியார் பள்ளி கல்விவியாபாரிகள் இருக்கின்றார்கள்

  அரச மருத்துவமனை நாசமானால் தனியார் மருத்துவமனைக்கு வாழ்வு, அரச பள்ளசாலைகள் நாசமானால் தனியார் பள்ளிக்கு வாழ்வு எனும் அளவில் மாகாணம் நாசமாகிவிட்டது

  தனியார் பள்ளிகளில்தான் மதமாற்றம் முதல் இதர துர்போதனைகளெல்லாம் பெருமளவில் நடக்கின்றன‌

  இங்கு நல்ல சமுதாயம் மீட்டெடுக்கபட பாரத பண்டைய ஞானமொழிகளெல்லாம் துலங்குதல் அவசியம் அதற்கு சமஸ்கிருதமும் இதர ஞான அடையாளங்களும் கற்றலும் அவசியம்

  அவைகளெல்லாம் இளம்பிராயத்திலே சொல்லிகொடுக்கபட்டால் அருமையான இந்து தலைமுறையினை உருவாக்கலாம்

  இந்துக்கள் முதலில் செய்யவேண்டியது தேவாரம் திருவாசகம் என தமிழ் பக்தியினை ஒருபக்கம் குழந்தைகளிடம் வளர்க்கும் நேரம் அப்படியே சமஸ்கிருதம் எனும் ஞானமொழியினையும் போதித்தல் வேண்டும்

  ஊருக்கொரு இந்துபாடசாலை வார இறுதியில் இயங்குதல் அவசியம், சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் ஒருமணி நேரமாவது பண்டைய இந்து பாரம்பரியத்தை குழந்தைகள் பெறுதல் மகா அவசியம்

  சாணக்கியனின் ஸ்லோகத்தை மற்றொரு முறை படித்து பாருங்கள் பெற்றோரும் ஆசிரியரும் மாணவரும் நெஞ்சில் நிறுத்தவேண்டிய வரி அதுதான்

  இந்து பாரம்பரியத்தை மீட்காமல் இங்கு நல்ல மாணவ தலைமுறையினை உருவாக்க முடியாது, பாரத இந்து ஞானம் ஒன்றே அதிசிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்கும்

 2. ஒரு வாரமா தலைல தூக்கிச் சுமந்த தருமபுர ஆதீனத்த இன்னைக்கி எத்தனை பேரு கால்ல போட்டு மிதிச்சிகிட்டு இருக்கீங்க? _

  இதுதான் திராவிட மாடலோட வெற்றி-

  பட்டினப்பிரவேஷத்துக்கு தடை விதிச்சவனோட ஆட்சியையே ஆன்மீக ஆட்சின்னு அதே ஆதீனம் வாயால சொல்ல வெச்சாம்பாரு அங்க அவன் ஜெயிக்கறான், அதே நேரத்துல ஆதரவு கொடுத்த காவிகளே ஆதீனத்த கழுவி ஊத்த வெச்சான் பாரு அங்க திரும்பவும் ஜெயிக்கறான் –

  ஆனா, எல்லா எடத்துலயும் நாம மட்டும் தோத்துகிட்டேதான் இருக்கோம்-

  தமிழ்நாட்ல இருக்கற ஹிந்துக்கள் மட்டும் இல்ல, பல ஆயிரம் கோடி சொத்துக்கள் வெச்சிருக்க ஆதீனங்கள், மடாதிபதிகள் முதல் சில லட்சங்கள் வருமானம் வரும் சிறு கோவில் நிர்வாகிகள் வரை இங்கே சந்திக்கும் பிரச்சினைகள் நம்மவர்களுக்கே புரிவதில்லை என்பதுதான் உண்மை –

  ஆதீனங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் அதனால் பெரிதாக ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பது உண்மை, பல ஆதீனங்களின் சொத்துக்கள் 99 வருட குத்தகை என்ற பெயரில் அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கின்றன, எனக்குத் தெரிந்து ஒரு ஆதீனம் நடத்தும் கோசாலையில் வைக்கோல் வாங்குவதற்குக் கூட நன்கொடை பெறவேண்டிய ஒரு நிலை இதுதான் நிதர்சனம்-

  ஆதீனங்கள் மட்டுமல்ல தனியார் நிர்வகிக்கும் கோவில்களில் கூட பல இடையூறுகள், திருவிழாக்கள் நடத்தக்கூட அறமற்றதுறைக்கு லஞ்சம் அழவேண்டும், மேலும் தற்பொழுதெல்லாம் கட்டாயமாக பர்வீனா சுல்தானா, சுகி.சவம், டாக்டர் சல்மா போன்ற மதசார்பற்ற பேச்சாளர்களை அழைத்து பேச வைக்கவேண்டும் என்று நிர்பந்தம் வேறு (இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்) –

  இதுதான் இன்றைய ஹிந்துக்களின், ஆதீனங்களின் நிலை –

  ஏனென்றால் எல்லாவற்றையும் விட சர்வவல்லமை அதிகாரம் கொண்டவர்கள் ஆட்சியாளர்கள், அவர்களை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல ஒத்து ஊத மறுப்பவர்கள் கூட என்ன ஆவார்கள் என்பதை ஏற்கனவே நாம் சங்கராச்சாரியார் விவகாரத்தில் பார்த்துள்ளோம் –

  அதே நேரத்தில் மாற்றுமதத்தினருக்கு இங்கே ஏராளமான சலுகைகள், ஒருபுறம் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு என்று கூறி ஏராளமான கோவில்களை இடிக்கும் அரசு, கோவில் நிலங்களில் ஆக்ரமிப்பில் இருக்கும் சர்ச்சுகளையோ, மசூதிகளையோ கண்டுகொள்வதில்லை-

  தென்காசி மாவட்டத்தில் 200 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்ரமித்து ஜெபமலை என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறான் ஒருவன் கேட்பாரில்லை –

  சொல்லப்போனால் 90% கிறிஸ்துவ நிறுவனங்கள் இயங்கிவருவது கோவில் நிலங்களில்தான் மீட்க வழியில்லை நமது நிலங்களில் கல்வி நிலையங்கள் நடத்திக்கொண்டே நம்மை மதம்மாற்றி வருகிறார்கள் இதைவிடக் கொடுமை எங்காவது இருக்கிறதா?-

  மாணவி லாவன்யா தற்கொலை நடந்த நேரத்தில் பல நடுநிலைகள் கேட்ட கேள்வி கிறிஸ்தவன்தான் பள்ளிக்கூடம் கட்டி படிக்க வைக்கறான், பிடிக்கலன்னா நீ ஒரு ஹிந்து பள்ளிக்கூடம் கட்டி படிக்க வையேன் என்பது-

  ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமாக ஐந்தரை லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன, ஆதினங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன இவற்றை முறைப்படுத்தினாலே ஆயிரக்கணக்கான பள்ளிகள் கட்ட முடியும் –

  எங்கள் பழனி முருகன் கோவில் மாத உண்டியல் வருமாணம் மட்டும் 3 கோடி, மாதம் ஒரு பள்ளிக்கூடம் கட்ட முடியும் –

  மாற்றுமதத்தவரின் வளங்கள், வருமானங்கள் எல்லாம் அவர்களிடமே இருப்பதால் அவர்கள் அதை வைத்து கல்வி, மருத்துவம் என்று சேவை செய்வதாகக் கூறி மதம் மாற்றி வருகின்றனர், ஆனால் நமது நிலை –

  இன்று பட்டிணப்பிரவேஷம் பற்றிப் பேசும் எவராவது நாகூர் சந்தணக்கூடு விழாவில் இமாமை மனிதர்கள் தோளில் சுமப்பதைப் பற்றிப் பேசுவார்களா?-பேசினால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியும், ஆசாதி, ஆசாதி, அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கிவிடுவார்கள் –

  ஆக, நம்முடைய பிரச்சினைகளுக்குக் காரணம் நம்மிடையே இருக்கும் ஒற்றுமையின்மையே என்பதை உணர்வோம் –

  தீராவிட மாடல் திட்டத்தின்படி நாம் ஆதீனங்களை வெறுக்க ஆரம்பித்துவிட்டால் அது நமக்கு பலவீனமாகும் மதுரை மொட்டை போன்றவர்களைத் தவிர்த்து இன்றும் பல நல்ல ஆதீனகர்த்தாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வேறு வழியில்லாம் அவர்கள் ஒடுங்கிக்கிடக்கிறார்கள் –

  சோடாபாட்டில் வீசுவோம் என்று ஜீயர் சூளுரைத்த பொழுதே கஞ்சாக்கவிஞன் வீட்டின் மீது ஆயிரக்கணக்கான சோடாபாட்டில்கள் பறந்திருந்தால் பயந்திருப்பான்கள் –

  அமைச்சர்கள் நடமாட முடியாது என்று ஆதினம் அறிவித்த உடனே நாலு இடங்களில் அமைச்சர்களை வழிமறித்து இருந்தால் புரிந்திருக்கும் –

  என்ன செய்ய நம்மிடம்தான் ஒற்றுமையில்லையே, காலம் கனியும்வரை காத்திருப்போம்-

 3. குருமூர்த்தி துக்ளக் மேடைல ஒரு முக்கியமான மேட்டரை கொஞ்சம் மறைமுகமாகச் சொல்லி இருந்தார். அதப்பத்தி நானும் கொஞ்ச நாளா எழுதனும்ன்னு இருந்தேன்.

  மோடி தொட்டிருக்கும் உச்சத்தைப் பத்தி தான் சொல்லி இருந்தார். உள்நாட்ல அவர் இருக்கும் உச்சம், அது ஒரு பக்கம். வெளிநாட்ல அவர் அடைஞ்சிருக்கும் உச்சம், அது இந்தியாவுக்குப் புதுசு, உலகத்துக்கேப் புதுசு.

  Morning Consult மாசாமாசம் நடத்தும் அப்ரூவல் ரேட்டிங்க்ஸ்ல 2017ல இருந்து மோடி டாப். ரஷ்யா உக்ரேன் போரைப் பத்தியும், மோடியோட டிப்ளோமேசி பத்தியும், அவரால இந்தியாக்குக் கூடி இருக்கும் மதிப்பைப் பத்தியும் சில எக்ஸாம்பிள்ஸோடச் சொன்னாரு. இப்ப அம்ரிக்கால இந்தியாவை மட்டம் தட்டப் பாத்தப்ப ஜெய்சங்கர் கொடுத்த பதிலடின்னு கொஞ்சம் அடுக்கிட்டேப் போனார்.

  அடுத்தாப்ல குருமூர்த்தி சொல்றார், இந்த விஷயத்தை மக்கள்ட்ட கொண்டுட்டுப் போகனும். இனிமேலான இந்தியத் தேர்தல் இந்தியாவுக்கு மட்டுமானது இல்ல, அது உலகத்துக்கானது. இந்தியாவோட பிஎம்மை நம்ம எலெக்ட் பண்ணல, ஒரு பவர்ஃபுல் உலகத்தலைவரை எலெக்ட் பண்ணப் போறோம். இத மக்களுக்குச் சொல்லனும்ன்னு சொன்னாரு.

  (இனி நான் சொல்ல இருந்தது)

  உண்மை. டோட்டலி அக்ரீ.

  ஆனா, அத மக்களுக்கு மட்டும் சொல்லனும்ன்னு நெனக்கல, பிஜேபிக்கும் சேத்து தான் சொல்லப்படனும். மோடிக்கு அடுத்தது யாருங்கற பதில் அதுல இருக்குது.

  அமித் ஷாவின் வெற்றிகளுக்கு அப்பறம், பிஜேபிக்கு யாரு தலைவரா வந்தாலும், அமித் ஷா மாதிரி வராதுன்னு தான் நமக்குத் தோணும். குஜ்ராத்திஸ்க்கு இன்னமும் மோடி தான் சிஎம்மா வேணும். எனக்கு இப்பவே மலைக்கு அப்பறம் யாரு வந்தாலும் மலை மாதிரி வராதுன்னு தான் தோணும். மோடியும் இந்தியாவுக்கு அப்படித்தான்.

  இது மாதிரி இந்தியாவின் அடுத்த பிஎம், மோடிய விட அதிக தூரம் போகனும். அவர் மோடிய விட இந்தியாவை அதிகமா நேசிக்கனும். அவரோட எண்ணம் மோடிய விட உயர்வானதா இருக்கனும். எல்லாத்தயும் விட முக்கியமா, அவரோட பாடி லேங்குவேஜ், உலகத்தலைவர்களிடம் அவரோட நடை உடை கான்ஃபிடென்ஸ், தைரியம்ன்னு, இதெல்லாம் மோடிய விட அதிகமா இருக்கனும்.

  அது மாதிரி, எதிர்க்கட்சிகள்ல யாருமில்ல. அந்த சைடுல அந்தப் பிரச்னையே இல்ல. ஆனா, இந்த சைடுல தான் பிஜேபிக்கும் பிரச்னை.

  அடுத்த பிஎம்ன்னு அமித் ஷா, யோகின்னு நம்ம பேசிட்டு இருக்கோம். ஆனா மோடியின் உலகத்தலைவர் மாதிரி இவங்களால ஆக முடியுமான்னா, இப்போதைக்கு முடியாது. இந்தியாக்குள்ள இவங்க மோடிய விட அதிகமாக்கூட உச்சம் தொடலாம், ஆனா வெளிய டவுட்ஃபுல்.

  அப்படி மோடி மாதிரி இவங்க ரெண்டு பேரும் மாறனும்ன்னா, இவங்க நெறய மாறனும். அமித் ஷா அமைதியாகனும், யோகி உடை மாற்றனும். கொஞ்சம் அதிகமா இங்கிலீஷ் பேசனும். ஆனா அவங்க அத எல்லாம் மாத்திட்டா, அவங்க அதுக்கப்பறம் அமித் ஷாவும் யோகியும் இல்ல. அப்படியான நடிகர்கள் நமக்குத் தேவையில்ல. இவர்கள் இவர்களாக இருக்கறதாலத்தான் நமக்குப் புடிக்குது. விக்கு வச்சா புடிக்க இதென்ன சினிமாவா இல்ல டிமுகவா.

  அமித் ஷாவுக்கு இந்தியாவுக்குள்ளயே வேலை இருக்கு. யோகிக்கு உபிலயே நெறய வேலை இருக்கு. ஹிமந்தாவுக்கு நார்த் ஈஸ்ட்ல வேலை இருக்கு.

  இவங்களைத் தாண்டி இன்னொரு ஆள் வரனும்.

  என் மனசுல, மூணு பேர் இருக்காங்க. மூணு பேருமே தமிழர்கள். மோடி அளவுக்கு இல்லேன்னாலும் ஒரு பக்கா பிஎம் மெட்டீரியல், உலகத்தலைவர் மத்தில அப்ரூவல் ரேட்டிங்க்ல நிச்சயம் டாப்லயே இருக்க முடியுமானவங்க தான். படிச்சவங்க, விஷயம் அறிஞ்சவங்க, ரொம்பத் தெளிவானவங்க.

  ஒன்னு, ஜெய்சங்கர்.
  ரெண்டு, நிர்மலா சீத்தாராமன்.
  மூணு, ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப earlyன்னாலும் நம்ம மலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *