உத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர்.
தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. டிசம்பர் 25ம் தேதி தர்ம ரட்சா வேள்வியில் அனைவரும் கலந்து கொண்டு தாய்மதம் திரும்புகின்றனர்.
கன்ஷிராம் நகர், பதாவுங், எடாஹ் மாவட்டங்களைச் சேர்ந்த மதம் மாறியிருந்த இந்துக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
ஏன் டிசம்பர் 25ம் தேதியைத் தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு வறுமையில் இருக்கும் இந்துக்களை ஏமாற்றி கிறிஸ்தவர்களாக்குவதற்கு இந்த நாளைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதே முறையை நாங்களும் கடைப்பிடிக்கிறோம் என்றார் பிராந்த் பிரமுக் ராஜேஷ்வர் சிங்.
மதம் மாறிய கிறிஸ்தவர்களைத் தாய்மதம் திரும்பக் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறினார்.
தொடர்புடைய சுட்டி இதோ ..
மிகவும் சந்தோஷப்படக்கூடிய செய்தி.
தர்மம் மீண்டும் இப்பரத கண்டத்தில் தழைக்கட்டும்
தர்மோ ரக்ஷோ ரக்ஷது
(தர்மத்தை காப்பவர்களை தர்மம் காக்கும்)
அன்புடன்,
வினோத் ராஜன்
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !!
தர்ம: ரக்ஷித: ரக்ஷதி !!
தர்மம் (தன்னை) காப்பவரைக் காக்கிறது.
தேவ்
தேவராஜன்,
தவறுக்கு மன்னிக்கவும். ரொம்ப காலம் முன்னாடி படித்தது. மறந்துவிட்டது. 🙁
மீண்டும் தவறுக்கு மன்னிப்ப்பு கேட்டுக்கொள்கிறேன்
God bless all the reconverts as well as the organisers.