ம(மா)ரியம்மா – 6

This entry is part 6 of 14 in the series ம(மா)ரியம்மா

ஓர் இந்து எழுந்து நிற்கிறார்.

தாமஸ் தமிழகத்துக்கு வந்ததை கிறிஸ்தவ எஜமானர்களே ஒப்புக்கொள்ளவில்லை. அவர் இன்று பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் இடத்துக்கு தெரியாமல் வந்து தெருமுனையில் நின்று வீரியன் பாம்புக் குட்டிகளே… சாத்தானின் குழந்தைகளே மனம் திரும்பி வாருங்கள் என்று ஏதோ பேச ஆரம்பித்திருக்கிறார். வெட்டிக் கொன்று புதைத்துவிட்டார்கள். அதுதான் உண்மை.

இல்லை…மயிலாப்பூர் பிராமணர்தான் தாமஸைக் கொன்றார் என்று ஹஜ்ஜியார் பதற்றத்துடன் மறுக்கிறார்.

சரி. இந்தக் கட்டுக்கதையை உண்மையென்றே வைத்துக்கொள்வோம்… அப்படியானால், கிறிஸ்தவர்களுக்கு பிராமணர்கள் மேல் கடும் வெறுப்புதானே இருக்கவேண்டும்.

ஆமாம். இருக்கத்தான் செய்கிறது. தாமஸைக் கொன்றதற்காக மட்டுமல்ல. பிராமணரல்லாதவர்களைக் காலகாலமாக அடக்கி, ஒடுக்கிவந்தவர்கள் என்பதால் அவர்கள் மேல் மிக மிகக் கடுமையான வெறுப்பு உண்டு. அது மிகவும் நியாயமானதும் கூட என்கிறார் பாதிரியார்.

அப்படியா… நல்லது; ராபர்ட் டி நோபிலியைத் தெரியுமா..?

ஏன் தெரியாது. ஆயிரக்கணக்கான இந்துக்களை ரட்சித்தவர்.

அவர் காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்துகொண்டு, குடுமி வைத்துக்கொண்டுதான் தனது திருப்பணிகளைச் செய்தார் என்பதும் தெரிந்திருக்குமல்லவா?

அது வந்து….

ஆக, தாமஸைக் கொன்றவர்களைப்போல் வேடமணிந்துகொண்டு கிறிஸ்தவத்தைப் பரப்பியிருக்கிறார். மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படித்தானே.

என்ன செய்ய? இந்துக்களுக்கு பிராமணர்கள் மேல் அவ்வளவு மரியாதை இருந்தது. அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றினார்கள். எனவே, வழியுமாகவும் சத்தியமாகவும் இருக்கும் இயேசுவின் பக்கம் அவர்களைக் கொண்டுவர அந்த வேடத்தை அணிந்துகொண்டார்.

சற்று முன் நீங்கள்தான் சொன்னீர்கள், பிராமணரல்லாதவர்களை பிராமணர்கள் தாறுமாறாக ஒடுக்கினார்கள் என்று. அதே பிராமணரல்லாதவர்கள் பிராமணர்களை மதித்துப் போற்றினர் என்றும் சொல்கிறீர்களே. இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். பிராமணர்கள் ஒடுக்கியிருந்தால் அவர்கள் மேல் மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்திருக்காது. மதிப்பும் மரியாதையும் இருக்கிறதென்றால் பிராமணர்கள் யாரையும் ஒடுக்கியிருக்கமாட்டார்கள்.

பிராமணர்கள் யாரையும் ஒடுக்கவில்லை என்று சொல்வது சூரியன் மேற்கில் உதிக்கிறது என்று சொல்வதற்கு இணையானது.

நல்லது. இந்தியாவில் முதன் முதலில் மத மாற்றம் நடந்தது எங்கு தெரியுமா?

கோவாவில்.

தமிழகத்தில் எங்கு அதிகம் பேர் மதம் மாறினார்கள் தெரியுமா?

கோவா போன்ற கடலோரப் பகுதிகளில்.

அதாவது மீனவர்கள். இன்று மத மாற்றம் பெருமளவுக்கு நடக்கும் இடங்கள் எவை தெரியுமா?

ஒரிஸ்ஸா, உத்தராகண்ட் போன்ற பகுதிகள்.

அதாவது மலையும் காடும் சார்ந்த இடம். இந்தியாவில் பெருமளவுக்கு மத மாற்றம் நடந்து முடிந்த இடம் எது தெரியுமா?

வட கிழக்கு மாநிலங்கள்.

அவையும் மலையும் காடும் சார்ந்தவை. அப்படித்தானே. இப்போது நீங்கள் சொன்ன பகுதிகள் அனைத்தும் வயலும் வயல் சார்ந்த வாழ்வியல் இல்லாதவை. அதாவது, பிராமண ஆதிக்கம் இல்லாதவை. ஆக எங்கு பிராமண ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கு மத மாற்றம் குறைவாக இருந்திருக்கிறது. பிராமணர்போல் வேடமணிந்து மதம் மாற்றியிருக்கிறார்கள். இதிலிருந்தே மத மாற்றத்துக்கு பிராமண – ஜாதி ஒடுக்குமுறை காரணமில்லை என்பது புரியவில்லையா? சரி, கோவாவில் எப்படி மதம் மாற்றினார்கள் தெரியுமா..?

இயேசுவின் போதனைகளைக் கேட்டு மனம் திருந்தியிருப்பார்கள்.

ஃப்ரான்சிஸ் சேவியருக்கே இயேசுவின் போதனைகளின் மீது நம்பிக்கை கிடையாது. அதனால் அவர் தனது அடிமைக்கூட்டத்தை அழைத்துச் சென்று கண்ணில்படுபவர்கள் அனைவரையும் இருவர் கட்டிப் பிடிக்க ஒருவர் வாயில் மாட்டுக் கறியைத் திணிக்கச் சொல்வார். அசுத்தமாகிவிட்ட அந்த நபரை அவருடைய ஜாதியினர் விலக்கி வைத்துவிடுவார்கள். அதன் பின் அவர் கிறிஸ்தவராவது ஒன்றே வழி.

ஆக, மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் இந்து அல்ல என்பதை இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள்.

அப்படி இல்லை. மாட்டுக்கறி சாப்பிடாத ஒருவர் அதைச் சாப்பிட்டதும் அசுத்தமாகிவிடுகிறார். காக்கா கறி, அணில் கறி சாப்பிடாத ஒருவர் வாயில் அவற்றைத் திணித்தால் அவரும் அப்படி அசுத்தமாகிவிடுவார். பன்றிக்கறி தின்னாதவர் வாயில் அதைத் திணித்தால் அவர் என்ன ஆவார் பாய்..?

ஹஜ்ஜியார் பதில் சொல்லாமல் தலைகுனிந்து நிற்கிறார்.

முஸ்லிம்கள் அவரை விலக்கிவைப்பார்கள். இந்த வழிமுறை புரிந்ததால்தான் பாவி சேவியர் அப்படிச் செய்திருக்கிறார். அப்பறம் கோவில்கள் அனைத்தையும் போர்ச்சுகீசிய அரசு இடித்துத் தள்ளியது. கோவில் சொத்துக்களை கிறிஸ்தவராக மதம் மாறுபவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது. ஒரு இந்து தந்தைக்கு இரண்டு மகன்களிருந்து ஒருவர் கிறிஸ்தவராகியிருந்தால் அவருக்கு மட்டுமே தந்தையின் சொத்து பிரித்துத் தரப்பட்டது. கிறிஸ்தவம் இந்தியாவில் பரவியது இப்படித்தான். பிராமணரல்லாதவர்களுக்கு பிராமணர் மேல் வெறுப்பு இருந்தது என்பதெல்லாம் முழுக்க கட்டுக்கதை. ஆனால், கிறிஸ்தவ பிரசாரகர்களுக்கு பிராமணர் மேல் முழு வெறுப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் பிராமணரல்லாதவர்களுக்கு பிராமணர் மேலிருந்த மரியாதைதான். அது இருக்கும்வரை யாரையும் மதம் மாற்ற முடியாது என்பது மிஷ நரிகளுக்குப் புரிந்திருந்தது. பிராமணர்கள் வாழ்ந்தும் வாழச் சொல்லியும் வழிகாட்டிய ஆன்மிக நெறிகளின் பலம் அது.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கர்த்தரின் பக்கம் திரும்பியிருந்த தமிழர்களைப் பல தெய்வங்களை, புராணங்களைச் சொல்லி பிராமணர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்.

ஓரிறைக் கொள்கை உடையவர்கள் என்று உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால், கர்த்தர், இயேசு, மரியாள், புனித ஆவி என்றெல்லாம் வரிசையாக பல தெய்வங்களைப் பட்டியலிடுகிறீர்களே. நீங்களும் உண்மையில் பல தெய்வக் கோட்பாட்டைக் கொண்டவர்கள்தானே.

அதை அப்படிச் சொல்லமுடியாது. டிரினிட்டி என்பதுதான் கிறிஸ்தவ கோட்பாடு: பிதா, சுதன், பரிசுத்த ஆவி.

அப்படியானால் அன்னை மரியாள் கடவுள் அல்ல. அப்படித்தானே. வேளாங்கண்ணியில் இருப்பது யார்? கன்னிக்கு எப்படிக் குழந்தை பிறந்தது..? நம் ஊரில் கன்னிக்குக் குழந்தை பிறந்தால் தப்பாகச் சொல்வார்கள்.

அது தேவ கர்ப்பம்.

அப்படியென்றால்…

புனித ஆவியால் கருத்தரித்தார்.

விஞ்ஞானம்… விஞ்ஞானம் என்று இந்துக்கள் கேலியாக முழங்குகிறார்கள்.

ஒருவருடைய இறை நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தக்கூடாது என்று அவர்களைப் பார்த்துக் கோபப்படுகிறார் பாதிரியார்.

அதாவது, உங்களுடைய இறை நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப் படுத்தக்கூடாது. ஆனால், நீங்கள் இந்துக்களின் இறை நம்பிக்கையைக் கொச்சப்படுத்துவீர்கள். அது உங்கள் உரிமை. உங்கள் மதம் உங்களுக்கு இடும் ஆணை அது. அப்படித்தானே. இந்த உலகில் எந்த நாட்டிலாவது கலாசாரத்திலாவது ஒரு தெய்வத்தை மக்களே கொன்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படிக் கொல்லப்பட்டவர் தெய்வமாக தேவனாக இருக்க முடியுமா?

ஏன் முடியாது. தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு மரபில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றனர். அவற்றில் பலர், கொலை செய்யப்பட்டு அவர்களின் நினைவாக நடுகல், சிலைகள் உருவாக்கப்பட்டு வழிபட்டுவருகிறார்கள் அல்லவா. தமிழர்களின் உண்மையான மதமென்பது அந்த முன்னோர்கள், வீரர்கள், தியாகிகள் ஆகியோரின் வழிபாடுதான். அந்தவகையில் உலக மக்களின் நலனுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த இயேசு தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான கடவுள்.

ஆனால், தமிழ் மரபில் மதமாற்றம் என்பதே கிடையாதே. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான தெய்வம் என்பது குல தெய்வம்தான். அந்தக் குல தெய்வம், ஒரு குலத்தில் ஒரு குறிப்பிட்ட தாய் தந்தையருக்குப் பிறப்பதால் கிடைப்பது. ஆனால், இயேசுவும் அவர் சொன்ன கிறிஸ்தவமும் அப்படி இல்லையே. தன் கண்ணில்படும் மீன்கள் அனைத்தையும் வலையில் சிக்கவைத்து அவற்றின் பூர்வ கலாசார நீரில் இருந்து பிரித்து கிறிஸ்தவக் கட்டாந்தரையில் போட்டுக் கொல்லும் செயலை அல்லவா செய்கிறீர்கள். தமிழ் மரபில் ஒரு குல தெய்வத்தைக் கும்பிடுபவர்கள் இன்னொருவரின் குல தெய்வத்தை அழிக்க முற்பட்டதே இல்லையே. இந்து ஆன்மிக உச்சம் அல்லவா அது. இதைத்தானே கிறிஸ்தவர்கள் தமிழர்களிடம் இருந்து அதாவது, இந்துக்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

அது இந்து மதத்தினுடையது அல்ல. தமிழர்களுடையது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல.

ஒரு மொழியை இன்னொரு மொழியோடுதான் ஒப்பிடவேண்டும். தமிழர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல; அராபியர்கள் அல்ல என்பதுதான் நியாயமான ஒப்பீடு. தமிழர்களின் முதல் இலக்கிய ஆவணமான சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய எழுத்துகள் வரை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்து நம்பிக்கைகளே. தமிழ் மன்னர்கள் அனைவரும் தம்மை இந்துதெய்வங்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்களே. அவர்கள் அனைவரும் இந்து ஆலயங்கள்தான் கட்டினார்கள். ராஜ ராஜ சோழன் சர்ச், மசூதியா கட்டினான்? கிறிஸ்தவ பாரம்பரியத்துக்கும் இந்து கலாசாரத்துக்கும் இடையிலான கலப்பு என்பது பூவோடு சேர்ந்த நார் மணம் பெறுவதுபோல் இருக்கவேண்டும். ஆனால், இங்கோ பன்றியோடு சேர்ந்த கன்று மலம் தின்பதுபோல் ஆகிவிடுகிறது. எவ்வளவு பெரிய வீழ்ச்சி. மதம் மாற்றப்படும் இந்து லௌகிகத்தில் முன்னேறினாலும் அதிலும் நூறில் பத்து பேர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் தெருமுனைகளில் துண்டு பிரசுரம் கொடுக்கத்தான் பயன்படுத்தப்படுவார்கள். ஆன்மிக விஷயத்தில் மதம் மாற்றப்படும் இந்து தன் மதமே அதாவது இஸ்லாமோ கிறிஸ்தவமோ மட்டுமே சரி என்று சொல்லும் மிகவும் இழிவான நிலைக்குத்தான் போகிறான்.

பாதிரியார் தலை குனிந்து நிற்கிறார். பின் சுதாரித்துக் கொண்டு, கடவுள் என்றால் ஒருவர்தான் இருக்கவேண்டும். நீயும் கடவுள்; நானும் கடவுள்; மண்ணும் கடவுள்; மரமும் கடவுள் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

உண்மையில் இந்து ஆன்மிகம் கண்டு சொன்ன மகத்தான விஷயம் அது. யாரைக் கடவுளாகக் கும்பிடுகிறோம் என்பது அல்ல; என்னவிதமான பக்தியுடன், நம்பிக்கையுடன் கும்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். அந்தவகையில் மனதில் பக்தியும் நம்பிக்கையும் கொண்ட ஒருவருக்கு மரமும் தெய்வமே… மண் புற்றும் தெய்வமே… புற்றில் உறையும் நாகமும் தெய்வமே. அதோடு இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது எனும் வகையில் அவரால் உருவாக்கப்பட்ட அனைத்திலும் அந்த இறை அம்சம் இருக்கத்தான் செய்கிறது என்ற நம்பிக்கை அதில் வெளிப்படுகிறது. எனவே அதில் எந்தத் தவறும் குறையும் இல்லை. ஆனால் இந்த இறை அம்சம் என்பதைப் படுகேவலமாகப் புரிந்துகொண்டிருப்பது கிறிஸ்தவர்கள்தான்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஏனென்றால் சர்ச்சில் தரப்படும் வைன் என்பது இயேசுவின் ரத்தம் என்கிறீர்கள். அப்பம் என்பது இயேசுவின் சதை என்கிறீர்கள். எவ்வளவு கொடூரமான, காட்டுமிராண்டித் தனமான நம்பிக்கை. வைனும் அப்பமும் உங்கள் கடவுளின் அம்சமென்றால் அதை பூஜிக்கத்தான் வேண்டும். தின்னவா செய்வார்கள்? இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது என்பது என்னவொரு கொடூரமான சிந்தனை. தேசியக் கொடி வடிவில் கேக் செய்து வெட்டிச் சாப்பிட்டாலே தேசத்தைத் துண்டாடுவதுபோல் மனமெல்லாம் பதறும். நீங்கள் என்னடாவென்றால் இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் ஒவ்வொரு ஞாயிறும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் ஜாம்பிகளைப் போல. உண்மைதான் இயேசு உலகில் இருப்பவர் அனைவரையும் ஜாம்பிகளாக ஆக்குகிறார். அவருடைய சீடர்கள் சிறிய அளவில் முடிந்த அளவுக்கு ரத்தக் காட்டேறிபோல் ரத்தத்தைக் குடிக்கிறீர்கள். தமிழர்கள் அனைவரையும் ஜாம்பிகளாக்கவும் துடிக்கிறீர்கள்.

இந்து கோவில்களிலும் பிரசாதம் என்ற பெயரில் என்னவெல்லாமோ தரத்தானே செய்கிறார்கள்.

அது வேறு. பிரசாதங்களை இறைவனுக்குப் படைத்துவிட்டு இறைவனின் அனுமதியுடன் இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதுபோல் அவை உண்ணப்படுகின்றன.

ஆனால், ஆடு, மாடு, கோழி என வெட்டி இறைவனின் சன்னதியை ரத்தக் களறியாக்கி படையல் உண்பதுதான் காட்டுமிராண்டித்தனம். தௌ ஷேல் நாட் கில் என்பது எவ்வளவு பெரிய, ஆன்மிக உணர்வு. இந்து தெய்வங்கள் ரத்தபலி கேட்பவையாக அல்லவா இருக்கின்றன. அதுதான் ஆன்மிக வீழ்ச்சி.

இறைவனால் படைக்கப்பட்ட உயிரை இறைவன் பெயரால் கொல்வது நிச்சயம் தவறுதான். ஆனால், கிறிஸ்தவர்கள் சர்ச்சில் ஆடு, மாடு வெட்டிப் படையல் இடுவதில்லையே தவிர சமண, பௌத்தர்கள் போல் அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்கள் அல்ல.

அது உண்மைதான். ஆனால், தேவாலய முற்றத்தில் ரத்தபலிக்கு இடமில்லை.

ஆனால், கிறிஸ்தவ உலகமும் அதன் நுகர்வு வெறியும்தான் இன்று உலகில் உயிர்க்கொலையை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. தமிழர் மரபில் அசைவம் சாப்பிட்டது உண்டு. ஆனால் அது மிகவும் அளவோடு இருந்தது. இன்று கிறிஸ்தவ ஊடுருவலும் மொகல் பிரியாணி பரவலும் நடந்த பின்னர்தான் அது நூறு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்து ஆன்மிக மரபானது மிகவும் யதார்த்தமானது. உயரிய லட்சியங்களை எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்துகொண்ட மரபு. அது சமணத்தைப் போல் புலால் மறுப்பை ஒரேயடியாக நிர்பந்திப்பதில்லை. அதே நேரம் கிறிஸ்தவ இஸ்லாம் போல் மூன்று நேரமும் கவுச்சி வாடை பிடித்து அலையும் மிருகங்களாகவும் மனிதர்களை மாற்றவில்லை.

கோவில்களில் பலியிடப்படும் உயிர்களுக்கு இந்து மதம் என்ன பதில் வைத்திருக்கிறது? முன் பிறவில் தவறு செய்தவர்கள் பலி விலங்குகளாகப் பிறக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டப்போகிறீர்களா?

கோவில்களில் தரப்படும் ரத்த பலி என்பது நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும்; ஊரில் நோய் நொடிகள் பரவக்கூடாது. கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலின் பேரில் ஒரே ஒரு ஆடு, ஒரே ஒரு கோழி என்று பலியிடப்படும். உண்மையில் ஆயிரம் கோழிகளின் நலனுக்காக ஒரு கோழி… ஆயிரம் ஆடுகளின் ஆரோக்கியத்துக்காக ஒரு ஆடு பலியிடப்படும். பலியிடப்படும் அந்த பரிதாபத்துக்குரிய உயிரை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கும். ஆனால், காப்பாற்றப்படும் ஆயிரம் உயிர்கள் பற்றி நினைத்து அதை தாங்கிக் கொள்ளலாம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் திறந்த வெளியில் வீச்சருவாளுடன் அருள் பாலிக்கும் ஒரு நாட்டார் தெய்வத்துக்கு கூரை எழுப்பப்பட்டு கருவறை கட்டப்பட்ட நொடியில் இருந்து அந்த தெய்வத்துக்கு ரத்த பலி நிறுத்தப்படும். ஒரு பிராமண பூஜாரி காலடி எடுத்துவைத்ததும் அந்த உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்பட்டுவிடும். இது தமிழர்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு பின்பற்றும் ஆன்மிகப் பயணம். வீட்டில் மாமிசம் உண்பவர்கள் கூட தீட்சை பெற்றுக்கொண்ட அடுத்த நிமிடமே அசைவத்தைத் துறப்பதும் உண்டு.

இதெல்லாம் பிராமணர்கள் பின்னாளில் ஏற்றுக்கொண்ட விஷயங்கள்.

பிராமணர்கள் மட்டுமல்ல. சபரிமலைக்கு செல்ல முன்வருபவர்களுக்கு மாலைபோட்டுவிடும் குருசாமிகள் எல்லா ஜாதிகளையும் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் முதலில் சொல்லும் நல்லுபதேசம் என்பது விரத காலம் முழுவதும் அசைவத்தைத் தவிர்த்துவிடு என்பதுதான். தனது திருவிழா நாளில் ஊரில் இருக்கும் ஆடு, ஒட்டகங்கள் அனைத்தையும் வெட்டு என்று சொல்பவர் நிச்சயம் கருணை கொண்ட கடவுளாக இருக்கவே முடியாது.

(தொடரும்)

Series Navigation<<  ம(மா)ரியம்மா – 5 ம(மா)ரியம்மா – 7 >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *