ம(மா)ரியம்மா – 8

This entry is part 8 of 14 in the series ம(மா)ரியம்மா

சிறிது நேரம் இடைவேளை விட்டு அதன் பின் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது. பாதிரியார், உதவி பாஸ்டர், ஹாஜியார் மற்றும் பலர் தனியாக ஓரிடத்தில் கூடி அடுத்தகட்ட வாதங்கள் பற்றிப் பேசுகிறார்கள்.

அச்சோ… மொதல்லியே வேண்டாம்னு சொன்னேனில்லியா… நம்மளால எதையும் பேசி நிரூபிக்க முடியாது. ஓநாய்க்கும் நரிக்கும் தான் செய்யறது சரின்னு தோணினாலும் அதைச் சொன்னா ஊர் உலகம் அதை ஏத்துக்காது. வாழு வாழவிடுங்கறதுதான் இயற்கை விதி. நாம வாழ அடுத்தவங்களை அழிங்கறது மிருக புத்தி.

மிருகமும் ஆண்டவன் படைச்சதுதானடே. நாமெல்லாம் மிருக ஜாதி. பூர்வகுடிகள் எல்லாம் ஆடு மாடுங்க மாதிரி. நாம அழிக்கப் பிறந்தவங்க. அதுங்க அழியப் பிறந்ததுங்க.

ஆனா மனுஷனுக்கு மத்தியில இதைச் சொல்ல முடியாதே அச்சோ.

அதுக்குத்தான் நாம ஒரு நல்ல டெக்னிக் கண்டுபிடிச்சு வெச்சிருக்கோமேடே. எங்கெல்லாம் என்னன்ன கஷ்டங்கள் இருக்கோ அதைப் போக்கத்தான் வந்திருக்கோம்; யாரெல்லாம் கஷ்டப்பட்டு பாரம் சுமக்கறாங்களோ அவங்களுக்கு இளைப்பாறல் தரத்தான் வந்திருக்கோம்னு சொல்லணும்.

அது சரி… நாமளே பஞ்சத்தையும் வெள்ளத்தையும் உருவாக்கணும். சாகறவனுங்க மத்தியில போய் இயேசு ரட்சிக்கிறார்னு ஜெபிச்சு மீட்பர் வேஷமும் கட்டணும்.

கிறிஸ்தவம்னா என்னன்னு ஒத்தை வரியில விளக்கிப்புட்டியே மோனே. சரி. பைபிள்ல கிறிஸ்தவத்தோட அடிப்படைகள் என்னென்னு இப்ப நான் நம்ம ஆளுங்களுக்கு வரிசையாச் சொல்லுதேன். இந்து மதத்துல அதெல்லாம் எப்படி அசட்டுத்தனமாட்டு இருக்குங்கறதையும் சொல்லுதேன். இனிமே நான் பேசப்போறதில்லை. நம்ம விசுவாசிகளே இறங்கி அடிக்கட்டும். மக்ளே நீ போய் கூட்டத்துல உட்கார்ந்து விசுவாசிகளுக்கு ஏதெங்கிலும் சம்சியம் உண்டெங்கில் விளக்கிக் குடுடே.

துணை பாஸ்டர் விசுவாசிகள் மத்தியில் சென்று அமர்கிறார்.

பாதிரியாரின் மரத்தடிப் பிரசங்கம் ஆரம்பிக்கிறது.

கர்த்தர் இந்த உலகத்தைப் படைச்சாரு.

(தணிந்த குரலில் அருகில் அமர்ந்திருப்பவரிடம் துணை பாஸ்டர்) கிழிச்சாரு… உலகத்தை அவருதான் படைச்சாருன்னா அப்போ அவரு எங்க இருந்தாரு?

ஆறு நாள்ல படைச்சுட்டு ஏழாம் நாள் ஓய்வெடுத்தாரு.

(ஆறு நாள்லயே டயர்ட் ஆனா, அவரு ஆண்டவரா எப்படி இருப்பாரு?)

ஆதாமைப் படைச்சாரு. அவன் தூங்கேயில அவன் விலா எலும்பை உருவி ஏவாளைப் படைச்சாரு.

(ஏன் ரெண்டு பேரையும் ஒழுங்கா மொதல்லயே படைச்சிருக்கலாம்ல. அவன் தூங்கும்போது ஏன் விலா எலும்பைத் திருடணும்?)

சர்ப்பத்தோட பேச்சைக் கேட்காதீங்கன்னு சொன்னாரு. அதை அவங்க கேட்காததுனால அவங்களோட வாரிசுகளான இந்த மனித இனம் பாவத்துல, வேதனைல உழலுது.

(ஆதாமும் ஏவாளும் செஞ்ச தப்புக்கு நாம ஏன் கஷ்டப்படணும்?)

இந்த உலகத்துல இருக்கற பாவிகளை ரட்சிக்க தன்னோட குமாரனை அனுப்பி வெச்சாரு. அவரு உலக மக்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செஞ்சாரு.

(உலகத்தைக் காப்பாத்த வேற வழியே தெரியலையா?)

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரு.

(ஆணி அடிச்சுத் தொங்கவிட்டதுல மயங்கியிருப்பாரு. குகைக்குள்ள படுக்க வெச்சிருப்பானுங்க. அங்க இருந்து தப்பிச்சிட்டு செத்துப் பிழைச்சதா கதை கட்டியிருக்கானுங்க.)

பல அத்புதங்கள் செஞ்சிருக்காரு.

(பொறந்தப்பவே ஏரோது மன்னன் ஆயிரக்கணக்குல பச்சைப் புள்ளைங்களைக் கொன்னப்பா இவரு காப்பாத்தலை. இவரு அற்புதம் செஞ்சாராம்).

இப்பயும் செய்யறாரு. குருடனைப் பாக்க வெக்கறாரு. முடவனை நடக்க வெக்கறாரு.

(இதைக் குருடனுங்கதான் நம்புவானுங்க. மூளை முடமாகிப் போனவங்கதான் நம்புவாங்க. நாலு பிட் படத்துல நடிக்கறதுக்கான காசை அரை மணி நேரம் குருடனா முடவனா நடிச்சுட்டு அவனுங்க வாங்கிட்டுப் போறானுவ).

இந்த உலகத்துலயே பாவிகளைக் காப்பாத்த தன் உயிரையே தியாகம் செஞ்ச ஒரே கடவுள் நம் இயேசுதான்.

(எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். அவரு நம்ம பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்துட்டாருன்னா, அதுக்கு அப்பறம் நாம எல்லாரும் பாவத்துல இருந்து தப்பிச்சிருக்கணுமே. அது நடக்கல்லியே. அப்போ அவர் தியாகம் செஞ்சதா சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்).

தன்னோட 12 சீடர்களை அனுப்பி எழுப்புதல் கூட்டங்கள் நடத்தி உலகை ரட்சிக்கச் சொல்லியிருக்காரு.

(அதுல ஒருத்தர் கூட ஏன் பொம்பளை சீடர் இல்லை? ஓ… இருந்திருந்தா வேற எழுப்புதல் நடந்திருக்குமோ).

பாதிரிகள் இந்தியாவை ரட்சிக்கத்தான் வந்திருக்கிறார்கள்.

(2000 வருசங்களுக்கு முந்தியே இயேசு வந்துட்டுப் போயிட்டாரே… அதுக்கு அப்பறம் 1500 ஆண்டுகள் இந்தியா பக்கமே வரலை. ஏன் உலகத்தை ரட்சிக்கவும் பாதிரிகள் புறப்படவே இல்லையே. ஏன் இத்தனை வருஷம் செஃல்ப் எடுக்கவே இல்லை).

இயேசுவை நம்பினா பரலோக சாம்ராஜ்ஜியம் கிடைக்கும். இல்லைன்னா நிரந்தர நரகம் தான்.

பாதிரியார் அதிகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது அவருடைய செல் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பார்ப்பவர் அதில் தெரியும் நபரின் பெயரைப் பார்த்ததும் முகம் மலர்கிறார்.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்.

ஸ்தோத்திரம் ஆண்டவரே.

அட்ரஸ் அனுப்பியிருந்தேனே. கிடைச்சதா?

வந்தது ஃபாதர். ஒரு சின்ன பிரச்னை. நான் இப்ப வெளியூர்ல இருக்கேன். புது பசங்க ரெண்டு பேரை அனுப்பச் சொல்லியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.

புதுசா..?

ஆமாம் அச்சோ. பயப்படவேண்டாம். எல்லாம் நல்லா ட்ரெயினிங் கொடுத்து முடிச்சிருக்கோம்.

அதுக்கில்லை. நீங்க வந்தா பொறுப்பை உங்க கிட்ட விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம். புது ஆளுன்னா ஒரு கண்ணை அங்கயும் வெச்சுப் பார்க்க வேண்டியிருக்கும்.

கவலையே வேண்டாம். புது பார்ட்டிங்கதான் கூடுதலா கும்பிடு போடும்.

லாயல் தேன் தி கிங்…. என்று சொல்லி சிரிக்கிறார் பாதிரியார். மறுமுனையும் சிரிப்பில் கலந்துகொள்கிறது.

சிறிது நேரத்தில் இரண்டு இளைஞர்கள், வீடியோ கேமரா சகிதம் பைக்கில் வந்து இறங்குகிறார்கள். பாதிரியாரைப் பார்த்ததும் சிரித்தபடியே அவரை நோக்கிப் போகிறார்கள். அருகில் இருந்த குடிசைக்குள் சென்று பாதிரியாரும் அவர்களும் பேசுகிறார்கள்.

செந்தில் எல்லாம் சொல்லியிருப்பான்னு நினைக்கறேன் என்று பாதிரியார் ஆரம்பிக்கிறார்.

ஆமாம். அச்சோ. முழு விவாதத்தையும் ஷூட் பண்ணச் சொல்லியிருக்காரு.

முழுசையுமா?

ஆமாம். அப்பறம் எடிட் பண்ணிக்கலாம்னு சொன்னாரு என்று மெள்ளச் சிரிக்கிறார்கள்.

அது சரி… அவனுக்குன்னா எதை ஷூட் பண்ணணும்னு நல்லவே தெரியும். டேப் வேஸ்டாகாம சோலியை முடிச்சிருவான் என்று ஃபாதர் சிரிக்கிறார்.

நாங்களும் அப்படியே செய்யறோம்னுதான் சொன்னோம். அவருக்குத்தான் கொஞ்சம் சந்தேகம்.

அது நியாயம் தான.

இதுல என்ன சிக்கல் ஃபாதர். இந்து நல்லது செஞ்சா பொட்டையும் பூவையும் அழிச்சிட்டு காட்டணும். நம்ம ஆளுங்க செஞ்சா சிலுவைக்குறியையோ தெரேசா படத்தையோ தெளிவா போட்டுக் காட்டணும். இந்துக்கள் தப்பு செஞ்சா நல்லா பட்டை, உத்ராட்சக் கொட்டை போட்டுக் காட்டணும். நம்ம ஆளுங்க செஞ்சா தனியார், புரோகிதர்னு குழப்பி விட்ரணும்.

தம்பி மாஸ் கம்யூனிகேஷன் எங்க படிச்சீங்க?

லயோலாலதான்.

நல்லா சொல்லிக் கொடுத்திருக்காங்க.

மொத நாள்ல இந்த நாலு பாயிண்ட் எழுதிக் கொடுத்தாங்க. படிப்பு முடிஞ்சி வெளிய வர்ற வரைக்கும் தினமும் பாடம் தொடங்கறதுக்கும் முடியறதுக்கும் முன்னால டேப் ரிக்கார்டுல ஓட விட்டு ஓடவிட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க.

செந்தில் சொல்லியிருக்கான். எல்லா கேள்விக்கும் இந்த ஒரு பதிலையே எழுதிக் கொடுத்துத்தான் அவன் கோல்ட் மெடலே வாங்கினானாம்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். வெளியே வருபவர்கள் ஹஜ்ஜியாரைச் சென்று சந்திக்கிறார்கள்.

நல்லது இங்க நடக்கப்போற விவாதத்தை எல்லா சேனல்லயும் ஒளிபரப்ப ஏற்பாடு செஞ்சிருக்கேன் பாய் என்கிறார் பாதிரியார்.

என்ன உமக்கு கோட்டி கீட்டி பிடிச்சிருக்கா. அவனுக்கு நம்மளை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கறானுங்க. அதைப் போய் ஊரே பாக்கணும் உலகமே பாக்கணும்னு ஏற்பாடு செஞ்சிருக்கேன்னு சொல்றீங்க.

பதற்றப்படாதீங்க பாய். நாம மாட்டிக்கிட்டு முழிக்கற மாதிரியான வெர்ஷனை கொஞ்சம் போல எடிட் பண்ணி மொதல்ல ஒளிபரப்புவோம். எப்படியும் இந்துத்துவ பார்ட்டிகள் தங்களோட வட இந்திய சேனல்களை ரொம்ப நம்பிக்கையோட இங்க வர வைப்பானுங்க. மொதல்ல நாம அடி வாங்கறதைக் காட்டுவோம். படிப்படியா இதை நம்ம பக்கம் நான் எப்படிக் கொண்டுவரப்போறேன். க்ளைமாக்ஸ்ல லைவ் ரிலேல இந்துத்துவ கும்பலுக்கு ஒரு மரண அடி கொடுக்கப்போறேன்… இந்த ஊர் மட்டுமில்ல… இந்த மாநிலம் மட்டுமில்ல இந்தியாவே மதம் மாறப் போகுது பாருங்க… என்ன நம்புங்க பாய். பிஃப்டி பிஃப்டி… இனி நம்ம ராஜ்ஜியம்தான்.

ஹஜ்ஜியார் முதலில் தயங்குகிறார். என்றாலும் பாதிரியார் இப்படி உறுதியுடன் சொல்வதால், தந்திரசாலியான அவர் நிச்சயம் சொன்னதை நடத்திக்காட்டுவார் என்று சம்மதிக்கிறார்.

Series Navigation<<  ம(மா)ரியம்மா – 7ம(மா)ரியம்மா – 9 >>

6 Replies to “ம(மா)ரியம்மா – 8”

 1. LEE TV Network சகோதரா நேற்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை கண்டேன்.
  அதில் இந்துக்கள் எல்லாம் மசூதிகளை அனைத்துயும் கோவிலாக மாற்ற துடிக்கிறாங்கனு ஒரு கருத்தை ஆழமா சொல்லி இருக்கிங்க…

  இங்கே அப்படி எல்லாம் யாரும் செய்ய முடியாது அயோத்தி தீர்ப்பு வரலாற்றை ஆராய்ந்து தான் குடுத்தாங்க அதே தான் வாரணாசி தீர்ப்புலயும்

  உங்களுக்கு உண்மையான வரலாறு இருந்தால் சட்டத்தின் மூலமாக அனுகுங்கள் இல்லையேனில் வரலாற்றை பதிவிடங்கள்

  முகலாய படைப்பு பத்தி உங்களுக்கு கொஞ்சம் சொல்ல விரும்புறேன்

  இது தவறான தகவல்கள் என்றால் வரலாற்றை சொல்லுங்க நானும் தெரிஞ்சுகிறேன்

  முகாலய படையெடுப்பில் பாரதத்தின் ஆன்மீக தளவாடங்கள் மீதும் மக்கள் மீதும் அவர்கள் செய்த செயல்கள் இதுவே

  மத வெறியின் உச்சம் இஸ்லாம்

  1- தங்களது கற்பை காப்பாற்றுவதற்காக ராணி பத்மினியுடன் 14000 பெண்களும் எரியும் நெருப்பில் குதித்து உயிர் மாய்த்து கொண்டனர், காரணம் காமபிசாசு
  அலாவுதீன் என்பதை வரலாறு
  மறக்கவில்லை ._

  2- இஸ்லாத்தை ஏற்க மறுத்ததற்காக சம்பாஜி மகாராஜை சித்திரவதை செய்த இரத்தவெறி கொண்ட அவுரங்கசீப் என்பதை வரலாறு மறக்கவில்லை.
  ———————————————

  3- ஒரே நாளில் லட்சக்கணக்கான இந்துக்களை படுகொலை செய்த ஜிஹாதி திப்பு சுல்தான் என்பதை நான் மறக்கவில்லை ._
  ———————————————

  4 -தனது அரண்மனையில் 14 வயது பிராமண சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து மரணதண்டனை விதித்த ஷாஜகானை வரலாறு மறக்கவில்லை
  ———————————————

  5 – எனது ஸ்ரீ ராமர் கோயிலை உடைத்து கோடிக்கணக்கான அப்பாவி இந்துக்களைக் கொன்ற காட்டுமிராண்டி பாபரை வரலாறு மறக்கவில்லை ._
  ———————————————

  6- நாகர்கோட்டில் உள்ள ஜ்வாலமுகி கோயிலின் தாயான துர்காவின் சிலையை உடைத்து, இறைச்சியை எடைபோட
  எடைகல்லாக பயன்படுத்தும்படி கசாப் கடைக்காரனுக்கு கொடுத்த பிசாசு சிக்கந்தர் லோடியை வரலாறு மறக்கவில்லை.
  ———————————————

  7- இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததற்காக சன்யோகிதாவை முகலாய வீரர்களுக்கு முன்னால் நிர்வாணமாக தூக்கி எறிந்த குவாஜா மொயின்தீன் சிஸ்டி என்பதை வரலாறு மறக்கவில்லை ._
  ———————————————

  8- குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை ஃபதேசிங் மற்றும் ஜோராவர் இருவரும் 7 வயது மற்றும் 5 வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் சுவரில் துளை போட்டு உயிருடன்
  புதைத்த இரக்கமற்ற பஜீர் கான் என்பதை வரலாறு மறக்கவில்லை ._
  ———————————————

  9- பண்டா வைரகி இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதால் பைரா பைராகியின் தோல் உரித்து எலும்புகள் தெரிய ஆரம்பிக்கும் வரை சூடான இரும்புக் கம்பிகளால் எரித்த ஜிஹாதிஸ்ட் பஜீர் கான், என்பதை வரலாறு மறக்கவில்லை! _
  ———————————————

  10- முதலில் சம்பாஜி மகாராஜின் கண்களை சூடான இரும்பு கம்பியால் குத்திய கொடுங்கோலன் அவுரங்கசீப், பின்னர் முழு உடலும் சூடான கம்பியால் துளை போட்டான், ஆனால் சம்பாஜி இந்து மதத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை வரலாறு மறக்கவில்லை ._
  ———————————————

  11- இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஹேமுவின் 72 வயதான தந்தையின் உடலில் இருந்து தலையை துண்டித்த அக்பரை வரலாறு மறக்கவில்லை ._
  ———————————————

  12- தர்மவீரர் மாட்டிதாஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததால் குறுக்கு வழியில் உயிரை எடுத்த காட்டுமிராண்டி அவுரங்கசீப்பை வரலாறு மறக்கவில்லை.
  ———————————————

  இப்படி எல்லா பக்கமும் வன்முறையை விதைத்தவர்கள் முகலாய மன்னர்கள்

  இந்துக்களின் ஆன்மீக தளவாடங்கள்
  எங்கு எங்க அழிக்கப்பட்டதோ அதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருந்தால் சட்டத்தின் மூலமாக அதை மீட்கிறோம்

  நீங்கள் இந்த வரலாற்று குறிப்புகள் சரியாக இருந்தால் எங்களுடன் துணை நில்லுங்கள்

  அது பொய் என்றால் நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம்

  பாரத் மாதகே ஜெய்னு சொல்றது
  அது விடுதலை அக்னியில் உருவான வார்த்தை அதை நக்கலா சொல்ற மாதிரி இனிமே வீடியோ எடுக்காதீங்க..

 2. என்ன கவலை மக்களே

  பெட்ரோல் டீசல் விலையை
  குறைக்க வேண்டும்.

  எனதருமை மக்களே

  நாடு ஒரு அசாதாரண சூழ்நிலையில் தாங்க முடியாத பொருளாதார தாக்குதல்களை சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில்

  பெட்ரோல் விலையை குறைக்கிறேன்

  லடாக் எல்லையில் இரண்டு
  வருடங்களுக்கும் மேலாக கூடுதலாக
  நிற்கும் ஒரு இலட்சத்து இருதாயிரம்
  வீரர்களுக்கான படை செலவுகள்.
  தளவாட செலவுகள் அரசுக்கு அதிக
  சுமையான போதும்..

  கொரோனா முடக்கத்தால் இரண்டு
  வருட காலம் வரி வருவாயை அரசு
  இழந்த போதும்..

  இத்தனை பொருளாதார சிக்கலிலும்
  கொரோனா தடுப்பூசி ஒன்று 750
  ரூபாய் வீதம் 200 கோடி தடுப்பூசிகளை
  மக்கள் உயிர் காக்க விலையின்றி
  செலுத்திய போதும்..

  உக்ரைன் ரஷ்யா போரால் ரஷ்யாவின்
  கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய
  மாட்டோம் என்று ஐரோப்பிய நாடுகள்
  அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெயை கூடுதலாக வாங்குவதால்,டிமாண்ட்
  அதிகரித்து கச்சா எண்ணெய் விலை
  உயர்ந்துவிட்டது.இந்த எதிர்பாராத நிதிச்
  சுமை இந்தியாவை அழுத்திய போதும்..

  விலையை குறைக்கிறேன் மக்களே

  பெட்ரோலுக்கு 8 ரூபாய் 33 காசுகளும்
  டீசலுககு 6 ரூபாய் 13 காசுகளுமாக.

  பெற்ற தாயைப் போல்
  மக்களை காத்திடும் அரசு
  பாரத பிரதமர் மோடி ஜி அரசு..
  #ஜெய்_மோடி_சர்க்கார்

 3. கல்குவாரி விபத்து செய்தியை படிக்கும் போது எல்லாம்..
  எனக்கு இந்த மனுசன் ஞாபகம் தான் வருது..
  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

  சிறுவன் சுஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்தப்போ..
  இவரு கடைசி வரை அங்கயேதான் இருந்தாரு..

  கட்டான் தரையில படுத்துட்டு..
  அங்கயே இட்லி பொட்டலத்தை பிரிச்சி சாப்பிட்டு கிட்டு..
  ச்சே.. என்ன மனுசன்யா..??
  ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்..
  ஆனா இவர் உழைப்புக்கு மரியாதை கொடுத்தே ஆகனும்.

  இதே கல்குவாரி விசயத்துல திமுகக்காரன் எவனாவது எட்டிப்பாத்தானா..??

  எல்லாவனும் #நெஞ்சுக்கு_நீதி படம் பாக்க போயிருக்கானுங்க..

  இனிமே அடுத்த நாலு வருசம் சமுகநிதியை பார்க்கனும்னா தியேட்டர்ல போய் சினிமா படத்துலதான் பாக்கனும்..

  மாண்பு மிகு அமைச்சர்கள்..
  மானம் இழந்த மக்கள்..

 4. அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து தற்போது திவாலாகி விட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

  ஒரு நாடு திவாலாகிவிட்டதாக அறிவிப்பது சாதாரண ஒன்றல்ல.

  சர்வதேச நாணய நிதியத்தின் 51 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாது என்பதால் தங்கள் நாடு திவாலானதாக அறிவிக்கும் மிகப்பெரிய முடிவினை எடுத்துள்ளது.

  இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் கடன் 5100 மில்லியன் டாலர்கள். கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும் இலங்கை வாங்கிய கடன் மொத்தமாக 1600 கோடி டாலர்கள்.

  இதில் அதிகப்படியாக சீனாவிடமிருந்து சுமார் 15 சதவிகித கடனை இலங்கை வாங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக சந்தையிலிருந்து 47 சதவிகித கடன் எடுக்கப்பட்டுள்ளது.

  இலங்கை பல இடங்களிலிருந்தும் முதலில் கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால், தற்போது திரும்பிச்செலுத்தும் நேரம் வரும்போது, அதன் கருவூலத்தில் ஒன்றும் மிஞ்சவில்லை. இலங்கையில் மக்கள் வீதியில் அவதிப்படுகிறார்கள்.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவைவிட அதிகம்.

  ஐக்கிய நாடுகளின் மனிதவள அபிவிருத்தி அறிக்கை 2020-ன் படி இலங்கை 72 வது இடத்தில் இருந்தது, அதே நேரத்தில் இந்தியாவின் இடம் 131 ஆக இருந்தது.

  ஆனால் அதன் பின் நேரம், சூழல் எல்லாம் மாறியது. சீனாவிடம் சிறிது சிறிதாக வாங்கிய கடன் புதைகுழியாக மாறி அதில் முழுவதுமாக இலங்கை சிக்கிக்கொண்டது.

  இன்று இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து திவால் நிலைக்கு வந்துவிட்டது.

  சொந்த நாட்டு மக்களுக்கு உரிமையை கொடுக்காமல் அந்நியநாட்டவனிடம் நாட்டை அடகு வைத்ததால் வந்த வினை இது.

  ஆனால் உலக அளவில் தற்போது இந்தியா 6 வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியா, உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச நிதியமே நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  உலக நாடுகள் அத்தனையும் கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கி கிடக்கும் போது ஒரு நல்ல தலைவனின் வழி நடத்தலால் பாரதம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

  தங்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு சொந்த நாட்டை அந்நிய சக்திகளின் கை கூலிகளாக இருந்து துண்டாட நினைக்கும் கும்பலுக்கு நம் பாரதம் எத்தகைய தலைவனின் பாதுகாப்பில் உள்ளது என இப்போதாவது புரிந்தால் சரி….

 5. நாங்குநேரி – அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்து!
  நான்கு பேர் மரணம்!
  ஒரு வாரமாக ஆகியும் தீர்வுகாண மறுப்பது ஏன்?

  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை – நாங்குநேரி அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இளையார்குளம் செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), காக்கைக்குளம் செல்வகுமார் (30) மூன்று பேர் இறந்தும், நாட்டார்குளம் விஜய் (25), விட்டிலாபுரம் முருகன் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டும்; ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் (42) மீட்கப் படாமலும் இருக்கின்றனர். ஒரு வார கால ஆகியும் அந்தக் கோர விபத்தில் இறந்தவர்கள், காயம்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நியாயம் வழங்காமல் அரசியல் தலையீட்டால் மாநில அரசு கால விரயம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் காயத்துடன் மீட்கப்பட்ட ஒருவரைத்தவிர மற்ற 5 பேரும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதில் ’செல்வம்’ என்ற இளைஞர் அண்மையில்தான் தலையாரி பணிக்குத் தேர்வு பெற்று இருக்கிறார். இந்த கல்குவாரி 2018 முதல் 2023 வரை 5 ஆண்டுகளுக்கு அனுமதி பெற்று, ஐந்து ஆண்டுகளில் எடுக்கவேண்டிய அளவை, இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே எட்டி விட்டதால் காரணத்தினால் 2021-லேயே குவாரியை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

  அனுமதி ரத்து செய்யப்பட்ட பின்பு, அரசியல் அதிகாரம் மற்றும் அதிகாரிகளின் துணையோடு ’தினச்சீட்டு’ என்ற விசித்திரமான அனுமதியின் பெயரில் குவாரி இயங்கிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 200 அடிக்குக் கீழே உள்ள கல்குவாரி குழியிலிருந்து கற்களை ஏற்றி வருவதற்கான உள் சுற்றுப்பாதை குறைந்தபட்சம் ஏழரை மீட்டர் இருக்க வேண்டும் என்ற விதி, சுற்றுப்புறச்சூழல் – தொழிலாளர் துறை பதிவு, வெடிமருந்து பாதுகாப்புத் துறை சான்றிதழ், தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறைகளின் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறி அந்த குவாரி தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது.

  நாங்குநேரி பகுதியில் பெரிய தொழிற்சாலைகளோ, வணிக நிறுவனங்களோ, வேளாண்மை சார்ந்த நிரந்தரமான வேலை வாய்ப்புகளோ எதுவும் இல்லாததால் இது போன்ற மிகக் கடினமான வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் அந்தப் பகுதி மக்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற சட்டவிரோத கல்குவாரி நடத்துபவர்கள். அப்பகுதி மக்களை இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிகின்றனர். சட்ட விரோத குவாரியால் நான்கு பேர் உயிரிழந்தது மட்டுமல்ல, அவர்களை நம்பியிருந்த குடும்பங்களின் வாழ்நிலையும் நிலைகுலைந்து போயிருக்கிறது. பெரிய அளவிற்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வு இல்லாத அந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கல்குவாரிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு வாரத்திற்கு மேலாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  இம்மக்களுடைய உழைப்பால் கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொழுத்தவர்கள் இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்ற பிறகும் கூட அவர்கள் கொள்ளை அடித்த பணத்திலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தார் நிவாரணமாகக் கேட்ட நிதியை ஒதுக்குவதற்கு கூடக் கிஞ்சித்தும் மனம் இல்லாமல் அரசியல் அதிகார போர்வைக்குள் ஒளிந்துகொள்ள நினைக்கிறார்கள். இன்று பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக ஒப்புக்கு அதனுடைய உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு அடுத்த இரண்டொரு தினங்களில் கூட அவர்கள் வெளியே வந்து விடுவார்கள். அந்த குடும்பங்கள் கேட்பது முழுக்க முழுக்க நியாயமான கோரிக்கை. குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலையும் நட்ட ஈடாகக் கேட்கிறார்கள். இந்த அரசு மற்றும் குவாரி உரிமையாளர்களால் இதை வழங்க முடியாதா? இதுவரை யாருக்கும் இது போன்ற நஷ்டஈடு வழங்கவில்லையா? இறந்த நான்கு பேருடைய குடும்பத்தாருக்கு அரசு வேலை கொடுப்பதற்கு இந்த அரசுக்கு என்ன கஷ்டம்? ஆனால் எதையுமே செய்யாமல் இந்த அரசும் குவாரி உரிமையாளர்களும் ’இரண்டொரு நாள் நீடித்தால் இப்பிரச்சனை நீர்த்துப் போய்விடும்’ என்ற எண்ணத்தோடே இப்பிரச்சனையை அணுகுவதாகத் தெரிகிறது. இந்தப் போக்கில் இப்பிரச்சனையை அரசு அணுகுமேயானால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.

  மாநில அரசு இறந்தவர்களுடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும், அவர்கள் வலியுறுத்திய 1 கோடி ரூபாயையும் உடனடியாக வழங்கிட வேண்டும். சட்டவிரோதமாக இந்தக் குவாரி இயங்குவதற்குக் காரணமாக இருந்த ஒரு ஒரு அதிகாரியை மட்டும் கண்துடைப்பாக இடைநீக்கம் செய்து ஏமாற்றாமல், கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட, மாநில அளவில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து அரசு செவி சாய்க்கவில்லை எனில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் 23.05.2022 திங்கட்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.

  – டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.,
  நிறுவனர் & தலைவர்
  புதிய தமிழகம் கட்சி.
  20.05.2022

 6. ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியுமா
  வாரியார் சுவாமிகள்..
  மில்லர் வந்தாலும் கில்லரை தடுக்க முடியாது என்று நெய்வேலியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில் பேசினார்…
  மில்லர் அண்ணாதுரைக்கு மருத்துவம் பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த புற்றுநோய் டாக்டர் ‌.. கில்லர் எமதர்மராஜா…

  பொங்கிய தி.க.‌ தி.மு.க. கயவாளிகள் அன்று இரவு வாரியார் சுவாமிகள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பூஜை பொருட்களை தூக்கி எறிந்து ரகளை செய்தனர்…

  அடுத்த நாள் இந்து இயக்கத்தினர் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அவர்களுக்கு பாடம் புகட்டினர்… அந்த தாக்குதலில் பல கிறித்தவர்களும் பங்கேற்றனர்…(எனக்கு தெரிந்தவரும் இருந்தார்)

  வாரியார் பயப்படவும் இல்லை வருத்தப்படவும் இல்லை…

  அந்த பூஜை பொருட்களை தூக்கி எறிந்தவன் பக்கவாதத்தால் கைகால்கள் செயல்படாமல் கஷ்டப்பட்டான். வாரியாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினான்…

  பின்னாளில் இதனைக் கூறி அன்று நான் அமைதியாக ஏன் இருந்தேன் என்றால் தவறாமல் சிவ பூஜை செய்பவன் நான்.. எனது மார்பில் நெஞ்சில்பட சிவலிங்கத்தை அணிந்திருப்பவன்…
  சிவனை நிந்தித்தவனைகூட சிவபெருமான் மன்னித்த வரலாறு உண்டு, ஆனால் சிவத்தொண்டனை தொட நினைத்தவனை நெற்றிக்கண்ணால் ஈசன் தண்டிப்பான்…
  அது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியை பாதித்துவிடக்கூடாது என அவர் சிந்தித்தார்…

  ஆனாலும் சிவ தண்டனையால் கருணாநிதியின் ஒரு கண் பார்வை பறிபோனது…
  இது ஏதோ கற்பனை அல்ல …

  வாரியார் நாயன்மாராக வாழ்ந்த மகான்…

  அதிகாரம்.. பணபலம் படைத்த கருணாநிதியால் தனது கண்ணை ஏன் காப்பாற்றி கொள்ள முடியவில்லை… அது தான் பாவம்…கர்மா..

  அண்ணாமலையின் மீது கை வைத்தால் கண்டிப்பாக மற்றும் ஒரு எம்ஜிஆரை பார்க்கும் திமுக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *