தமிழக அரசியல்: சர்வம் சர்ச் மயம்

சசிகலாவைக் கட்சித் தலைமையில் அமர்த்தினால் ஒழிய அதிமுகவிடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காது. சசிகலாவின் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக இப்படியான அரசியலைச் செய்திருக்குமா..? ஜெயலலிதாவுக்கு மக்கள் செல்வாக்கு உண்டு. சசிகலாவுக்குக் கிடையாது. எனவே, அதிமுக கட்சியினரைக் கொண்டு அதிமுகவின் மக்கள் செல்வாக்கை முடிந்தவரை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம் என்ற பாஜகவின் வியூகம் மிகவும் தவறு.

நடராஜன் சசிகலா நடத்தும் நாடகம் இது. அடிபட்ட புலியின் வன்மம். இதை பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தத்தின்போதே சொல்லியிருக்கிறேன். ஆனால், அப்படி சசிகலாவை அதிமுகவின் தலைமைக்கு வரவிட்டால் பாஜகவின் வளர்ச்சி இன்னும் ஒரு தலைமுறை பின்னால் போகும். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அதுவே நடக்கும்.

பாஜகவின் நிலை இதில் ஆரம்பத்திலிருந்தே பரிதாபமானதுதான். சசிகலாவை தலைமைக்கு வரவிட்டுத் தோற்பதைவிட சசிகலாவை ஓரங்கட்டிக் கிடைக்கும் தோல்வி கெளரவமானதுதான்.

இந்தப் பத்தாண்டுகளில் சசிகலா இல்லாத அதிமுகவினால் பாஜகவுக்கு நேர்ந்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். எடப்பாடியும், பன்னீர் செல்வமும் இன்றும் சசிகலாவின் எடுபிடிகளே. சின்னம்மாவை ஓரங்கட்டும் பாஜகவுக்கு அவர்கள் கூட இருந்தே குழி பறிப்பார்கள். கூவத்தூரில் போடப்பட்ட திட்டம் இது. கட்சி ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்று சொன்னதன் வெளிப்பாடு இது.

சசிகலாவுக்கு மக்கள் செல்வாக்கு இதுவரை கிடையாது என்பது உண்மையே. ஆனால், கட்சிக்குள் செல்வாக்கு ஜெயலலிதா இருந்த காலத்திலேயே ஜெயலலிதாவைவிட மிக மிக அதிகம்.

புரியும்படிச் சொல்வதானால் நடிகை ஜெயலலிதா, மன்மோகன் சிங்குக்கு சமம். வீடியோ கடை உரிமையாளர் சசிகலா சோனியாவுக்கு சமம். இன்னும் புரியும்படிச் சொல்வதானால், வீடியோ கடை உரிமையாளர் சசிகலா மூலமாக கட்சியைத் தன் கைக்குள் வைத்திருக்கிறது சர்ச் மாஃபியா. நடிகை ஜெயலலிதாவை மக்கள் செல்வாக்குக்காக முன்னிறுத்தியிருந்தது.

திமுக முழுக்கவும் சர்ச்சின் பிடியில்தான் இருக்கிறது. நீதிக்கட்சி காலத்திலிருந்தே அந்த இயக்கம் சர்ச்சின் கைப்பாவைதான். ஸ்டாலின், கிறிஸ்திகாபுருஷன், அன்பில் மகேஷ் என இப்போதும் சர்ச்சின் ஆட்சிதான் நடக்கிறது.

திமுகவுக்குள் பிளவு ஏற்படும். கனிமொழி அக்கா கட்சியை உடைத்துக் கொண்டுவருவார் என்று வியூகம் வகுப்பவர்கள் மனதில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் கனிமொழி அக்கா ஜெகத் கஸ்பரின் தோழி. ஆ.ராசாவின் கூட்டாளி.

சீமான் செபஸ்டியன் தமிழ் தேசியம் என்ற போர்வையில் உருவாக்க விரும்புவது கிறிஸ்தவ தேசியமே. தமிழ் நாடு மட்டுமல்ல; இந்தியாவே எங்களுடையது என்ற அவனுடைய வசனம் இப்போதைக்குப் புரியாது.

அன்புமணி, டேனியல் ராஜா, தாவீது பாண்டியன், திருமா அனைவரும் சர்ச் கைக்கூலிகளே.

கமலின் அசட்டு மய்யவாதமும் ரஜினியின் 2000 ஆண்டுகளாக அதாவது கிறிஸ்துவின் பிறப்பில் இருந்து வாழும் பாபாயிஸமும் ஜோசஃப் விஜய்யின் ஒரு விரல் புரட்சியும் பின் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் பீரங்கிகளே.

சர்வ தேசிய பி.பி.சி. தொடங்கி இந்திய ஊடகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் வசமே.

நேரு காங்கிரஸ் செய்த கீழறுப்பு வேலைகளை அண்டோனியோ காங்கிரஸ் வெளிப்படையாகவே செய்துவருகிறது. கெஜ்ரிவால், மம்தா, பினராய் விஜயன், க்ரிப்டோ ரெட்டி, ஸ்டாலின், பஞ்சாப் முதல்வன் என அனைத்துமே இந்தப் பத்து ஆண்டுகளில் பிரிவினை கோஷங்களோடு முன்னிலைக்கு வந்திருக்கின்றன.

பாஜக முன்னெடுக்கும் வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேசங்களின் பாணியிலான வளர்ச்சியே.

பாஜக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தினாலும் அதிகப் பலன் பெறுவது கிறிஸ்தவ லாபியே. இந்து, இந்திய விரோதம் அதிகம் வெளிப்படும் ஊடகத்துறை இதற்கான அழுத்தமான வெளிப்படையான எடுத்துக்காட்டு. முத்ரா கடன் அதிகம் பெற்றது மத்திய அரசை எதிர்க்கும் தமிழகமே.

தனியார் மயம், உலகமயம், தாராளமயம் என்பதெல்லாம் முழுக்கவும் கிறிஸ்தவ மயம் என்பதன் பொருளாதார வடிவங்கள் மட்டுமே.

நவீன காலத்தில் பாரம்பரிய அம்சங்கள் தாமாகவே நம்மால் கைவிடப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் மரபின் மீது பற்றும் பெருமிதமும் கொண்டவர்களுமே பாதி கிறிஸ்தவர்களாகவே ஆகிவிட்டிருக்கிறோம். கூட்டுக் குடும்பச் சிதைவு, நவீன உணவு, நவீன உடை, நவீன கல்வி, நவீன மருத்துவம், நவீன விவசாயம் என முன்னெடுக்கப்பட்டவை அனைத்துமே கிறிஸ்தவ தேசங்களுடையவையே.

இந்துக்களுக்காக கட்சி நடத்துவதாக பாஜக சொல்லவில்லை. இந்தியா ஃப்ர்ஸ்ட் என்பதுதான் அதன் கோஷம். அந்த இந்தியாவில் இந்துக்களுக்கும் இடம் உண்டு; வேறு கிறிஸ்தவ கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இந்த இடம் கூட இந்துக்களுக்குக் கிடைக்காது.

இந்துக்கள் பாஜகவை மட்டுமே தமக்கான கட்சியாக நினைக்கக் கூடாது.

எப்படி கட்சியே தொடங்காமல் அனைத்து கட்சிகளையும் தன் பிடியில் கிறிஸ்தவ மாஃபியா வைத்திருக்கிறதோ அதுபோல் அத்தனை கட்சிக்குள்ளும் இந்து நலனை முன்னெடுப்பவர்களை இந்து சக்திகள் இடம்பெறச் செய்யவேண்டும்.

இது லட்சிய வியூகம். நடைமுறையில் எப்படிச் செய்ய என்று தெரியவில்லை.

உலகம் முழுவதும் பரவிவிட்டிருக்கும் கிறிஸ்தவத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. முன்பைப் போல் ஆபிரஹாமிய மதங்கள் வாள் கொண்டும் துப்பாக்கி கொண்டும் இப்போது மத மாற்றத்தில் ஈடுபடுவதில்லை. இப்போது தரப்படுவது மென் விஷம். ஓரிரு தலைமுறைகள் கழிந்த பின்னரே கலாசாரத்தின் உயிர் போகும்.

இந்தோனேஷியாவை இஸ்லாம் வாள் கொண்டு வெல்லவில்லை. வேறு வகையான அழித்தொழிப்பு அது. இந்தியாவில் கூட தென் இந்தியாவில் இஸ்லாம் பரவியதென்பதில் போரின் பங்கு குறைவுதான். கோவாவில் காட்டுமிராண்டித்தனமான மதவெறியுடன் செயல்பட்ட கிறிஸ்தவம் பிரிட்டிஷாரின் வெற்றிக்குப் பின்னர் இதே போல் மென் விஷத்தை ஊட்டியே பரவியிருக்கிறது.

ரஷ்யாவைத் துண்டாடியதும் அந்த சர்ச் கார்ப்பரேட் க்ரிமினல்கள்தான்.

சீனாவில் மா சேதுங்கின் பெயரைச் சொல்லியபடியே அதை கம்யூனிஸ்ட் முதலாளியாக ஆக்கியிருப்பதும் அந்த சர்ச் மாஃபியாதான்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பிடியில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளை மேலும் அடிப்படைவாதம் பக்கம் நகர்த்தி அவர்களுக்கு ஜனநாயகப் பாடம் எடுப்பதும் அதே கிறிஸ்தவ வல்லாதிக்க சக்திகளே.

உலகம் முழுவதுமே சர்ச் மாஃபியாவின் மிதமான அழித்தொழிப்புதான் இந்த நூற்றாண்டு முழுவதும் நடந்து வந்திருக்கிறது.

அமெரிக்காவிலும் ஆஃப்ரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இது முழுமையாக முன்பே நடந்துமுடிந்துவிட்டது. ஆசிய, அரபு நாடுகளில் இது முழு வீச்சில் நடந்துவருகிறது.

இந்தியாவிலும் வெகு காலத்துக்கு முன்பே ஆரம்பித்தும்விட்டிருக்கிறது.

பால கங்காதரத் திலகர், வ.உ.சி. பாரதி, அரவிந்தர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட இந்து தேசிய எழுச்சி, மகாத்மா காந்தியால் கைப்பற்றப்பட்டு ஜின்னாவின் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்த்தெடுக்கப்பட்டு இறுதியில் காந்தியத்தின் எதிரியான நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

1947-ல் கிறிஸ்தவ பிடியில் இருந்து இந்தியா வெளியேறியது. 2047க்குள் மீண்டும் கிறிஸ்தவ பிடிக்குள் வந்துவிடும். இதைத்தான் 2047-ல் இந்தியா இருக்காது என்று ஈழத்தை அழித்த ஆண்டன் பாலசிங்கத்தின் தமிழக ஏஜெண்ட் வை.கோபால் சாமி சொன்னான்.

நேற்று கூட அன்னா ஹசாரேயின் மூலமான எழுச்சி கெஜ்ரிவாலிடம் கொடுக்கப்பட்டது.

சல்லிக்கட்டு எழுச்சி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட அராஜகம் இந்திய விரோதமாக இந்து விரோதமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

உதாரணங்கள் ஏராளம். ஓநாயின் பாய்ச்சலை நாம் உணரும் முன் அது நம் மந்தையின் இளம் குட்டிகளை வாயில் கவ்விக் கொண்டு காத தூரம் ஓடிவிட்டிருக்கும். சர்ச் மாஃபியா நம் மந்தையை நூற்றாண்டுகளாகப் பின் தொடர்ந்து வருகிறது. பாதியை ஏற்கெனவே முழுங்கியும்விட்டது. இத்தனை பலத்துடன் எதிர்த்து எஞ்சியிருக்கும் நாம் களைத்து விழும் காலத்துக்காக சுற்றி வளைத்துக் காத்திருக்கிறது.

நவீனத்துவத்தின் பிடியிலும் சர்ச் மாஃபியாவின் பிடியிலும் சிக்கியிருக்கும் இந்திய பூர்வ குடிகளுக்கு, பூர்வ கலாசாரங்களுக்கு ஓரளவுக்கு சிலவற்றை கொஞ்சம் கூடுதல் காலம் தக்கவைத்துக்கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது.

அரபு தேசத்தின் பாலைப் புயல்களுக்கு நடுவே யாஸ்திகளின் குகைக்குள் அணையாமல் எரியும் சின்னஞ்சிறிய மயில் விளக்கு போல் நாமும் எதையேனும் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பெரு வெள்ளம் முழு ஊரையே மூழ்கடித்தாலும் கோபுரக் கலசத்தில் பாதுகாத்து வைக்கப்படும் நவ தானியங்கள் போல் நாமும் எதையேனும் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி
எளியோருக்கு இறுதி நேர ஆறுதல் பரிசுகளை மட்டுமே
அள்ளித் தரும் பெருங்கருணையை
என்றுதான் கைவிடுமோ
தெய்வங்கள் எனப்படும் தெய்வங்கள்

வல்லாதிக்கவாதியின் தேவனுக்கு மட்டுமே
வலிமை பெருகுமென்றால்
எளியவனுக்கு தெய்வங்கள் இருந்தென்ன பயன்?

(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to “தமிழக அரசியல்: சர்வம் சர்ச் மயம்”

 1. இந்த தமிழக மதமாற்ற கோஷ்டிகளுக்கு தமிழகத்தில் இந்தியாவில் ஓரளவு மேல் செயல்பட முடியவில்லை, ஒரு பக்கம் சிலரை பிடித்தால் மறுபக்கம் பெரும் கூட்டம் கலைகின்றது

  இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்து எழுச்சியும் வலுவான இந்திய அரசபீடமும் இவர்களுக்கு சவாலாகின்றன‌

  இதனால் இவர்கள் அந்நிய நாட்டுக்கு செல்ல துடிக்கின்றார்கள், ஆனால் பாகிஸ்தான் ஆப்கன் பர்மா என எங்கும் செல்லமுடியாதபடி சூழல் நிலவுகின்றது, அந்நாட்டு அரச சட்டங்கள் வலுவானவை

  இதனால் அருகிருக்கும் இலங்கை வசமாக சிக்கி கொண்டது, தங்கள் திராவிட தமிழ் முகமூடி போட்டு கொண்டு அங்கு சென்று வித்தைகாட்டலாம் தங்கள் பிரத்யோக ஒப்பாரி மொழியில் சம்பாதிக்கலாம் பலரை தலையினை கழுவலாம் என சிந்தித்த கோஷ்டிகள் அங்கு படையெடுத்தன‌

  ஆனால் அங்குள்ள மக்கள் விழித்துகொண்டார்கள் , பிரச்சினை வெடித்தது

  முதலில் பால் தினகரன் திருப்பி அனுப்பபட்ட நிலையில் இப்போது மோகன் சி லாசராஸும் திருப்பி அனுப்பபட்டிருக்கின்றார்

  “உங்கள் நாட்டு வாலிபர்களை எழுப்புங்கள்,அவர்கள் டாஸ்மாக் போகட்டும் தியேட்டர் போகட்டும் திமுக கூட்டத்துக்கு செல்லட்டும் ” என புன்னகை பூக்க இலங்கை அரசாங்கம் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டது

  இக்கோஷ்டிகள் இப்பொழுது சூரியன் படத்தின் கவுண்டமணி விசாரணையில் “சத்திய சோதனை” என சொல்வது போல இவை “பசாசின் சோதனை” என வானத்தை பார்த்து சொல்லி கொண்டிருக்கின்றன‌

  ஆனானபட்ட இயேசுநாதரே தான் வாழ்ந்த காலத்தில் தன் சொந்த நாட்டைவிட்டு அடுத்தநாட்டுக்கு செல்லவில்லை, போதிக்கவுமில்லை என்பதுதான் விஷயம், இவர்கள் அவருக்கே பாடம் நடத்தும் வித்தைக்காரர்கள்

  ஆக கர்த்தராகிய இயேசுவின் வல்லமை இலங்கை அரசிடம் பலிக்காமல் போனது ஏன் என்று தெரியவில்லை

  இனி என்னாகும்

  பால் தினகரனை போல அல்ல மோகன் சி லாசரஸ், அன்னார் “ஷாபம்” இடுவதில் வல்லவர், இந்நேரம் “இயேஷப்பா உங்களை ஏற்றுகொள்ளா இலங்கைக்கு ஷாபம்… ஷாபம்.. வரட்டுமப்பா” என அவர் பிரார்த்திக்க ஆரம்பித்திருப்பார்

  ஒருவன் அழிந்துபோகட்டும் நாசமாய் போகட்டும் என ஷாபமிடுவது எப்படி நல்ல ஆன்மீகமாய் இருக்க முடியும்? சுயநல மோகமே இம்மாதிரி ஷாபத்தை அடுத்தவனுக்கு இடும், அந்த சுயநலம் ஒருகாலமும் சரியான ஆன்மீகமாய் இருக்கவே முடியாது

  சரி, இலங்கைதான் விடவில்லை, சீனாவோ வடகொரியாவோ சென்று அங்கு பசாசின் சோதனை எப்படி இருக்கின்றது, அங்கு கர்த்தராகிய தேவன் இவர்களை பசாசின் கரங்களில் இருந்து எப்படி விடுவிக்கின்றார் என சோதித்தால்தான் என்ன?

  அதைபற்றியெல்லாம் யோசிக்கமாட்டார்கள்

  காரணம் வடகொரிய அதிபர் சிலுவையிலே இவர்களை அறைந்துவைத்து இயேசப்பா என்னைமீறி வந்து உங்களை இறக்கட்டும் பார்க்கலாம் என நாற்காலி போட்டு அமர்ந்திருப்பார்

 2. தமிழர்கள் கவனத்திற்கு..

  தமிழக மீடியாக்களில் திமுகவின் ஏவல் ஆட்கள் குலுமியிருக்கிறார்கள். திமுக ஆட்சியின் அவலங்களை பேச, சிந்திக்க விடாமல் மடைமாற்றம் செய்யவேண்டும் என்பதே இவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலை.

  1. அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம், ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த அனுமதித்து சட்ட திருத்தம்.

  கேள்வி கேட்டார்களா?

  2. மாதம் தோறும் மின் கட்டணம், வாக்குறுதி.

  கேள்வி கேட்டார்களா?

  3. அதிகரிக்கப்பட்ட சொத்துவரி.

  கேள்வி கேட்டார்களா?

  4. குடிநீர் வரி உயர்வு..

  கேள்வி கேட்டார்களா?

  5. பெட்ரோல், டீசல் ரூ 5 குறைப்போம், வாக்குறுதி.

  கேள்வி கேட்டார்களா?

  6. Gas சிலிண்டர் மானியம் ரூ 100

  கேள்வி கேட்டார்களா?

  7. பழைய ஓய்வு ஊதியம்.

  கேள்வி கேட்டார்களா?

  8. பால், தயிர், நெய், ஆவின் ஸ்வீட்ஸ் விலை கடும் உயர்வு.

  கேள்வி கேட்டார்களா?

  9. பொங்கலுக்கு 5000 தரணும்.

  கேள்வி கேட்டார்களா?

  10. நீட் ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கே தெரியும்.

  கேள்வி கேட்டார்களா?

  11. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூ உரிமை தொகை ம்

  கேள்வி கேட்டார்களா?

  12. ஆ ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம் ம் இது செய்தியானதா? விவாதமானதா?

  13. செந்தில் பாலாஜி மேல் உள்ள லஞ்ச வழக்குகள் பற்றி மீடியா அவரிடம் கேள்வி கேட்டு பார்த்ததுண்டா?

  14. திமுகவின் அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த குற்றசாட்டில் மூல பத்திரத்தை காட்டினார்களா?

  கேள்வி கேட்டார்களா? பத்திரத்தை காட்ட கேட்டார்களா தமிழக ஏவல் மீடியாக்கள்?

  மீடியாக்கள் கேட்டது இது தான். அண்ணாமலை வாட்ச் பில் வேண்டும்.

  தமிழக மீடியா கொத்தடிமை கூட்டத்துக்கு, ஏவல் ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையே மடைமாற்றம் செய்வது தான். மக்கள் சிந்தித்து விட கூடாது. எதிர்க்கட்சியாக திமுக சொன்ன ஒன்றையாவது செய்ததுண்டா? இங்கே தார்மீக கேள்வி கேட்கும், சோறு சாப்பிடும் மீடியா நபர்கள் இங்கே பார்த்ததுண்டா?

  என்ன அரசியல் நடக்கிறது? வளர்ச்சி அரசியலா, சாதி மத அரசியலா? செய்வது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில்லையா?

  வளக்கொழிந்து போன மனுதர்மம் பற்றி திருமா பேசி திசை திருப்ப, ஹிந்து கோயில்கள் sex பொம்மைகள் இருக்கிறது என்று ஆரம்பித்து, சரக்கு மிடுக்கு என்று பேசி, மாற்று சாதியினரிடையே வன்மத்தை வளர்க்க வன்னியரசு, ஹிந்துக்களுடன் வன்மத்தை வளர்க்க ஆளூர் ஷாநவாஸ் என்றல்லவா திமுக கூட்டணி கட்சி விசிக அரசியல் செயகிறது?

  ஸ்டாலின் மேடைகளில் விபூதி அழிக்கப்படுவதும், ராமர், கிருஷ்ணர் பழிக்கப்படுவதும் அல்லவா நடக்கிறது?

  வளர்ச்சி அரசியலா நடக்கிறது இங்கே? மத அரசியல் செய்வது யார்? சாதி அரசியல் செய்வது யார்?

  லிஸ்ட் போடுங்க..

  திமுக ஆதரவு youtube சானெல்கள்.. அரண் செய், ஜீவா டுடே, சீப்பு சேனல், debate, u2brutus.. லிஸ்ட் நூறை தொடும் ம்

  சரி திமுக பத்திரிகையாளர்கள் லிஸ்ட் போடுங்க.. Sp லட்சுமணன், r மணி, ஷ்யாம், பிரியன், சீப்பு, சீவா, மைனர் குஞ்சு, லிஸ்ட் இருநூறை தொடும்.

  வார பத்திரிகை, தின பத்திரிகை, சினிமா பிரபலங்கள், துணை இயக்கங்கள் 300.இவற்றை மீறி இங்கே ஆட்சியாளரை கேள்வி கேட்டு விட முடியுமா?

  நாலாவது தூண் மீடியாவின் ஈரல் அழுகிந ற்றமடிக்கிறது.

  செய்ய கூடியது ஒன்றே.. அந்த சேனல்களை நானும் பார்க்கிறேன். கமெண்ட் செயகிறேன்.

  பிளாக் செய்வதும், hide செய்வதும் மட்டுமே வழி. மேலும் மற்றவர்களையும் அவ்வாறே செய்ய சொல்லுவதும் ஒரு வழி. தமிழர்கள் களத்தில் இறங்கி போராட முடியாது மீடியாவுக்கு எதிராக, அதையே பயன்படுத்தி கொள்கிறார்கள்.

  #மானம்கெட்டமீடியா

 3. அடேய்..
  கட்சிக்காக ஒரு TV சேனல் உருவாக்க நாக்கு தள்ளும்போது, எப்டி இத்தன மதம் மாற்றும் சேனல் கள உருவாக்க முடிகிறது? //அரசு கேபிள் டிசிசிஎல் செட்டப் பாக்ஸில் உள்ளபடி #கிறித்துவர்கள் இந்துக்களை மதமாற்ற நடத்தும் தமிழ் டிவிகள் மொத்தம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்..

  1 நம்பிக்கை டிவி
  2 மாதா டிவி
  3 ஏஞ்சல் டிவி
  4 கெவன் டிவி
  5 பெத்தேல் டிவி
  6 நம்பிக்கை டிவி
  7 எல்சடைடிவி
  8 தூது டிவி
  9 ஜெயம் டிவி

  10 தமிழன் டிவி
  11 அற்புத ஏசு டிவி
  12 சுபவார்த்தா டிவி
  13 ஹோசன்னா டிவி
  14 ஜாய் டிவி
  15 ஷாலோன் டிவி
  16 சுபவார்த்தா டிவி
  17 ஹோசன்னா டிவி
  18 சால்வேஷன்.டிவி

  19 ஆசீர்வாதம் டிவி
  20 316 டிவி
  21 கிராஸ் டிவி
  22 நிஜம் டிவி
  23 ஆராதனா டிவி
  24 வெளிச்சம் டிவி
  25 சத்தியம் டிவி
  26 இமயம் டிவி
  27 விஜய் டிவி
  ஆனால் பெரும்பான்மை இந்துக்களுக்காக ஒரு டிவி கூட இல்லை.

  இதை எல்லாம் நடத்துவதற்கு எவ்வளவு கோடி பணம் வேண்டும்..

  எங்கு இருந்து இவ்வளவு பணம் வருகிறது.

  #அயல் நாடுகளில் இருந்து வரும் கள்ளப் பணம் தான்.

  #பல்லாயிரம் கோடிகள் மற்றும் கல்விவியாபாரம், சர்ச் வியாபாரம் போன்றவற்றால் கொழுத்து கிடக்கின்றனர்.

  #சென்னையின் 30% (இராயபுரம், சாந்தோம்., சைதை, தாம்பரம் போன்று) நிலங்கள் ஆர்சி, சிஎஸ்ஐ, பெந்தகோஸ்ட் மற்றும், தனியார் சபை அமைப்புகளிடம் சென்றுவிட்டது.

  #குமரியின்50%நிலம் மற்ற மாவட்டஙகளின் 10% நிலங்கள் #கிருஷ்தவ அமைப்புகளிடம் போய்விட்டது.

  இந்து அறநிலைய துறை என்ற கேடு கெட்ட, திருடர்கள் நிறைந்த கூட்டம் என்ன செய்கிறது கொண்டிருக்கிறது..

  சிலைகளை திருடி விற்கும்.

  பக்தர்கள் அளிக்கும் #காணிக்கையில் இன்னோவா , பொலிரோ கார் வாங்கும்.

  கோயில் நிலங்களை #திருட்டு தனமாக விற்பனை செய்யும்..

  இவன்கள் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போக, புதிது புதிதாக இடித்து கக்கூஸ் கட்டி கொள்வான்.

  #பக்தர்கள் கோயில் வெளியே சாலையில் சுவர் ஒரம் ஒதுங்க வேண்டி இருக்கிறது.

  கார்ல வண்டில வந்தா பார்க்கிங் சார்ஜ். ஆனா வண்டி காணாமல் போனா இவன் பொறுப்பு அல்ல

  #ஏண்டா கோயில்களை நீங்கள் கட்டினீர்கனா, இல்லை கோயில்களுக்கு உங்கப்பன் சொத்துக்கள எழதி வைத்தீர்களாடா…

  இந்த #கேடுகெட்ட கூட்டம் கோயில்களை விட்டு வெளியேற வேண்டும்.

  வீரம் செறிந்த தமிழர்களை
  #திராவிட ஊழல் ஆட்சியாளர்கள், மது, சினிமா இவற்றால் மதி மயங்கச் செய்து #நடுநிலை இந்துக்களை அவர்களின் கிறிஸ்தவ சதிவலையில் விழவைத்துவிட்டார்கள்..

  #தில்லையாடி வள்ளியம்மை, #வீரசிவாஜி போன்றோர் வாழ்ந்த வீரபூமி், நமது பூமி.. #வந்தேறிகளான கிறித்துவனுக்கும், அரேபியனுக்கும் ஆதரவா இருக்கிறது.

  இந்துவே #தூங்காதே. விழித்துக்கொள்..
  ️️

 4. விட்டல் மஹராஜ் எனும் ஆன்மீக சொற்பொழிவாளர் ரஜினிகாந்தை பற்றி பேசும்பொது 1500களில் குருநாணக் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது

  அதாவது அன்று இந்து ஆன்மீகவாதிகள் என சொல்லிகொண்டவர்கள் எவரும் சரியாக இல்லை, இருந்தவர்களும் பணத்துக்காக மொகலயர்களை ஆதரிப்பது, புகழுக்காக அவர்களை பணிந்து மத நல்லிணக்கம் பேசுவது, இன்னும் இந்துமதத்தை அழித்துகொண்டிருந்த ஆப்கானியரை புகழ்ந்து புகழ்ந்து பேசி தங்கள் நலத்தை காத்தது என அழிச்சாட்டியம் செய்தனர்

  தங்கள் சுயநலனுக்காக இந்து ஆன்மீகவாதிகள் இன்றைய தமிழக ஆதீனங்கள் திராவிட தலமைகளிடம் மண்டியிட்ட்டு நிற்பதை போல் அன்று ஆப்கானியரிடம் மண்டியிட்டு கிடந்தன‌

  இந்துக்களின் எதிரி யார் துரோகி யார் என தெரிந்தும் தங்கள் நலனுக்காக மதத்தை பலிகொடுத்தனர்

  அப்படி சரியான இந்து தலைவர்கள் வழிகாட்டல்கள் இல்லா நேரம்தான், சுயநலவாத தலமைகள் போலிகள் பெருகிவிட்ட காலத்தில்தான் தர்மம் காக்க தனி வழி கண்டார் குருநாணக்

  அதற்கு அவர் சொன்ன காரணம் இதோ

  “நம் நாட்டின் குடிமக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள் நெருப்புக்கு நடுவே கிடக்கும் பிணங்கள் போலச் செயலற்று வாழ்கிறார்கள் அதைபற்றி கவலையுறாது மடாதிபதிகள் தனி உலகில் இருக்கின்றார்கள்

  அறிவுள்ளவர்கள் என சொல்லும் போலி வழிகாட்டிகள் ஆன்மீக‌ வேடம் அணிந்து கொண்டு இசைக் கருவிகளை மீட்டி ,அதற்கு ஏற்ப ஆடிப்பாடிக் குதிக்கிறார்கள்

  உரக்க உரையாடுகிறார்கள் தாங்கள் போற்றும் வீரர்கள் பற்றி எண்ணங்களைப் பாடல்கள் மூலம் வெளியிடுகிறார்கள்

  அறவோர்கள் அறத்தை கடைப்பிடிப்பதாக சொல்கின்றார்கள் ஆயினும் அவற்றுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை முக்திக்கு வழி எது என அவர்களுக்கே தெரியவில்லை

  தங்களை துறவிகள் என்று கூறிகொள்ளும் இவர்கள் வழி தெரியாது திகைத்து வீடு வாசல்களைத் துறந்து போய் விடுவதாக சொன்னாலும் சுயநலத்திலே ஊறி இருக்கின்றார்கள்

  ஒவ்வொருவனும் தன்னை பூரணமானவன் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறான் குறைபாடுடையான் என்று கூறிக் கொள்ள விரும்பவில்லை , அவன் குறைபாடு உடையவனையே கை நீட்டி புகழ்கின்றான், மக்களுக்கு தவறானவர்களையே தலைவராக காட்டுகின்றார்கள், ஆபத்தானதை செய்கின்றார்கள்

  தர்மம் அழிவதை கண்கூடாக பார்க்கின்றார்கள், யார் அழிக்கின்றார்கள் என்பதையும் பார்கின்றார்கள் ஆனால் தர்மத்தை அழிப்பவனை கொன்டாடுகின்றார்கள் அவனோடு இருப்பவனை புகழ்கின்றார்கள்

  தர்மத்தை போதிப்பதாக சொல்பவர்களே அதனை அழிப்பவனோடு நிற்கின்றார்கள் அவனே தர்ம காவலன் என மக்களை நம்ப வைக்கின்றார்கள் , தங்கள் சுயநல லாபத்துக்காக தேசத்தையும் தர்மத்தையுமே விற்க முயல்கின்றார்கள்

  இதய தராசில் எடை போட்டுப் பார்த்தால் இவர்கள் மதிப்பு எவ்வளவு என்பது தெரிந்து போகும்”

  அன்று குருநாணக் எப்படி சுயநல இந்து தலமைகளை கண்டு மனம் கொதித்து சொன்னாரோ அந்த வார்த்தைகள் தமிழக ஆதீனங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் பொருந்தும், ரஜினியினை புகழ்ந்த விட்டல் மகராஜுக்கும் பொருந்தும்

  “தன்னெஞ்சறிந்து பொய்யற்க” என்பதை அழகாக அறிந்து பொய் சொல்கின்றார்கள், ஆனால் “தென்னெஞ்சே தன்னை சுடும்” என்பது மட்டும் நடக்கவில்லை

  காரணம் நெஞ்சமென்றும் மனசாட்சி என்றும் அவர்களுக்கு ஏதுமில்லை, எதுவுமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *