அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்

தி.மு.க ஆட்சி அரியணையில் அமர்ந்ததில் இருந்து இந்து ஆலயங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதும், ஆகம விதி மீறல்கள், ஆலயச்சொத்துக்களை திருடி விற்றல், தெய்வ விக்கிரகங்கள் கடத்தல் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்து பண்பாட்டு அடையாள அழிப்புகள் தொடர்ந்து வருகின்றன. தங்களின் அந்நிய முதலாளிகள், மாற்று மத, மத மாற்ற சக்திகளை தொடர்ந்து குஷிப்படுத்தி வரும் திராவிட அரசியல் கயவர்களின் அராஜகத்தில் அடுத்த அசிங்கம் அவினாசி ஆலயத்தில் நேற்று நடந்திருக்கிறது.

கொங்கு நாட்டின் ஏழு சிவஸ்தலங்களில் பிரதானமான கோவில் ‘திருப்புக்கொளியூர் அவிநாசி‘ என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடிப் புகழ் பெற்ற அவிநாசி திருத்தலம். தொன்மையும், புகழும் நிரம்பிய புனிதத்தலத்தில் மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். லட்சோப லட்சம் மக்களால் பக்தியுடன் வணங்கப்படும் பாடல் பெற்ற ஸதலத்தில் இது போன்ற திட்டமிட்ட தாக்குதல்கள் குறிப்பிட்ட கால இடை வெளியில் தொடர்ந்து நடைபெற்று வருவது பக்தர்களை நம்பிக்கை இழக்க செய்யும் செயல்.

மே 23 ம் தேதி அதிகாலை பூஜைகள் செய்வதற்காக 4.30 மணிக்கு கோவிலை திறந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடையும் வண்ணம் கோவிலின் பலிபீடம், உண்டியல்கள் முன் அலங்கோலப்படுத்தப்பட்டும், திருச்சுற்று பிரகாரத்தில் இருக்கும் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டும், அந்த சன்னதிகளுக்கு மேல் உள்ள கோபுர கலசங்கள் சுக்கு நூறாக உடைத்து நிர்மூலமாக்கப்பட்ட காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அற நிலையத்துறையினர் மிகவும் தாமதமாக வந்து சேர்வதற்குள் பக்தர்களிடம் செய்தி பரவி கோவில் முன் குழுமத்துவங்கினார்கள்.

அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர் முழு போதையில் சுய நினைவின்றி இருந்ததால் அர்ச்சகர்களும், பக்தர்களும் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். காவல் துறை அதிகாரிகள் வருவதற்குள் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் , ஆர் எஸ் எஸ் கோட்ட அமைப்பு செயலாளர் ஆர்ம்ஸ்றாங் பழனிசாமி, இந்து முண்ணனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் அவினாசி பாஜக மற்றும் இந்து இயக்க தொண்டர்கள் அதிகப்படியாக குழுமி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரினர்.

காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்.

கோவில் வருமானத்தை உண்டு கொழுக்கும் அற நிலையத்துறையினர் இது பற்றி அலட்டிக்கொள்ளாமல், கோவிலை கழுவி விட்டுட்டு அடுத்த வேலையை பாருங்கள் என்ற மனநிலையில் இருந்தனர். வரும் பக்தர்களிடம் சிறப்பு தரிசன கட்டண சீட்டுக்கள் விற்கும் தங்களின் வருவாய் பெருக்கும் செயல் பற்றி கதவை சாத்திக்கொண்டு விவாதித்து கொண்டிருந்தார்கள்.

அவிநாசி வாழ் வியாபார பெருமக்களும், பொது மக்களும் திமுக ஆட்சியில் இதெல்லாம் எதிர் பார்க்க கூடியது தானே? கோவில் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டியிருக்கும் பெந்த கோஸ்தே சர்ச்சிற்கு சொந்தமானது தான் கோவில் . கோவிலுக்கு வந்தால் வழக்கு போடுவேன், அல்லது சுட்டு கொல்லுவேன் என்று இன்னும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று பெரு மகிழ்ச்சியோடு தங்களின் அன்றாட பணிகளை எருமை மாட்டின் மீது பெய்த மழை போல எந்த பாதிப்பும் இன்றி தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

“மூத்த ஓளரங்கசீப்” ஆட்சியின் போது கோவில் தேர் தீ வைக்கப்பட்டதும், இப்போது “இளைய ஓளரங்கசீப்” ஆட்சியில் கோவில் கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை திராவிட இயக்கத்தவர்களும் மத மாற்ற வெறியர்கள் தங்களின் வெற்றியாகவும், அப்பாவி பக்தர்கள் வேதனையோடும் கண்ணீரோடும் கையறு நிலையில் நின்றதை பார்க்க மிகவும் ஆயாசமாக இருந்தது. மாவட்ட நிர்வாகம் , காவல்துறையினர் இந்து ஆலயம் மீதான தாக்குதல் தானே என்ற வழக்கமான அசட்டையோடு இருந்ததை காண முடிந்தது.

காசிக்கு நிகரான அவினாசியில் முன்னர் திமுக ஆட்சியின் போது கோவிலின் பிரமாண்ட தேர் பாஸ்பரஸ் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டு விடிய விடிய எரிய வைக்கப்பட்டு பக்தர்களுக்கு பயத்தை ஊட்டினர். 1990 களில் நடைபெற்ற தேர் எரிப்பிற்கு இப்போது வரை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது திமுகவும் அதன் ஏவல் துறையாக செயல்படும் காவல் துறையும்.

பல நூற்றாண்டுகள் வெயிலும், மழையிலும் கிடந்து பாறை போல இறுகி இருக்கும் புராதான சின்னமான அவினாசியப்பரின் தேர் பீடி குடித்து விட்டு எறிந்த துண்டு பீடியில் எரிந்து சாம்பலாகிப்போனதாக திமுக அரசின் உத்தரவிற்கிணங்க காவல்துறை பொய்யாக ஒரு புனைவை சொல்லி வழக்கை மூடினார்கள்.

பின்னர் ஆலய வளாகத்தில் புதிய ஏற்பாடு நூலோடு புகுந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட, பெயர் வைக்கப்படாத “மன நலம் பாதிக்கப்பட்ட” நபர். திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை.

நகர் மத்தியில் இருக்கும் திருத்தலத்திலேயே, ஒரு திராவிட சமூக விரோதி சர்வ சாதாரணமாக உள்ளே இருக்கும் மூர்த்தங்களை சேதப்படுத்த முடிகிறது என்றால், நிர்வாகம் என்ற ஒன்று சுத்தமாக இல்லை என்றே கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதோடு திராவிட அஜெண்டா பத்திரிக்கைகள் கோவில் சொத்துக்கள் (temple property) என்று பம்மாத்து நியூஸ் போடுவதை பாருங்கள். அந்த மூர்த்தங்கள் வெறும் “சொத்துக்கள்” அல்ல. நாங்கள் வணங்கும் தெய்வ சிலா மூர்த்திகள், Deities! புரியவில்லை என்றால் போய் மீண்டும் ஒருமுறை ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்துவிட்டு இந்த வேலைக்கு வாருங்கள் என்றெல்லாம் அப்பாவி பக்தர்கள் பொறுமுகிறார்கள். ஆன்மாவை அடகு வைத்து வாழும் பத்திரிக்கையாளர்களை இதெல்லாம் பாதிக்கவா போகிறது. இது கூட தெரியாமல் புலம்பும் அப்பாவி பக்தர்களை என்ன சொல்லி தேற்றுவது.

தினமலர் நாளிதழ் மட்டுமே இந்த குற்றச் செய்தி பற்றி உண்மையாக, சரியாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

திமுக கும்பல் ஆட்சியில் திட்டமிட்டு பாடல் பெற்ற ஆலயங்களில் சிறுபான்மையினரை கொண்டு தொடர்ச்சியாக மாட்டுக்கறி சாப்பிட வைப்பது, தெய்வங்களை இழித்தும் பழித்தும் ஊடகங்களில் , திரைப்படங்களில் தொடர்ச்சியாக செய்தி வர வைப்பது. ஆகம நடைமுறைகளை அலட்சியப்படுத்தி ஆபாசமாக சித்தரிப்பது, ஆலய அமைப்பிற்கு பாதுகாவலாய் இருக்கும் பிராமணர்கள் மீது தொடர்ந்து நாசிச இனவெறியோடு வெறுப்பை உமிழ்ந்து இன ஒழிப்பிற்கு அடித்தளமிடுவது – இப்படி திமுகவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்து ஆலயங்கள் மீது நிகழும் தொடர் தாக்குதல்களை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் – வெள்ளிக்கிழமை (மே-26)

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்றெல்லாம் அறம் பாடும் அப்பாவி பக்தர்களின் கண்ணீருக்கு எதேனும் மதிப்பிருக்கிறதா? என்று காலம் பதில் சொல்லட்டும்.


(கட்டுரையாசிரியர் வீர.ராஜமாணிக்கம் கட்டுமான பொறியாளர். சிற்பங்கள், பண்பாட்டு அசைவுகள், இலக்கியம், இந்து பண்பாடு, சைவம், மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர். இவை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்).

2 Replies to “அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்”

  1. இது போன்று செய்தல் மாற்று மதத்தினர் மற்றும் திராவிட கழகத்தினர் பணம் தரலாம் இதை கொஞ்சம் கண்காணிக்க வேண்டும்

  2. யானை கொடுத்து தானே தலையில் மண்ணை வாரி போட்டுக்குமாம். திமுக வின் அழிவு காலம் வந்து விட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *