பெரியார் மண்

(வசனம் : ஈ.வெ.ரா., ம.வெங்கடேசன், கோரா (கோபால ராமசந்திர ராவ்)., மகாதேவன்)

பாகம் – 1

வேத கோஷங்கள் முழங்க, நாகஸ்வர இசை உச்சத்தை எட்ட கோபுர கலசங்களில் மங்கல நீர் அபிஷேகம் செய்யப்படவிருந்த தருணத்தில் வானில் கருடன் வலம் வந்தது. பக்த கோடிகள் பெரும் ஆரவாரத்துடன் இரு கைகளை தலைக்கு மேல் குவித்து கோஷமிடுகிறார்கள். கருடன் மெள்ள வலம் வந்தபடியே பூமியை நெருங்கிவந்தது. கீழிறங்கிவர வர அதன் கரு நிழல் கோவிலின் மேல் படரத் தொடங்கியது. கிரஹண காலத்தில் ஏற்படும் திடீர் இருள் போல் கருடன் அருகே வர வர கறுமை அதிகரித்தது. முதலில் பக்திப் பரவசத்தில் இருந்த மக்கள் இருள் அதிகரிப்பதைப் பார்த்ததும் அச்சத்தில் உறைய ஆரம்பித்தனர். கருடன் பறந்து வந்து கோபுரக் கலசத்தில் அமர்ந்தபோது அதன் மேலே அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும் அனைவருடைய பேச்சு மூச்சும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டது.

கருடன் மேல் அமர்ந்திருந்தது ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

அவரைப் பார்த்ததும் பக்தர்களைவிட, குட முழுங்கு நடத்திக்கொண்டிருந்த திராவிர இயக்கத்தினர் வெலவெலத்துப் போயினர்.

இவையெல்லாம் காசு அடிக்கும் வழிமுறைகளில் ஒன்று என்று மக்கள் முன்னால் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் திராவிட இயக்கத்தினர் தடுமாறுகிறார்கள்.

காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள்.

என் கிட்ட கத்துக்கிட்ட சுயமரியாதையும் பகுத்தறிவும் இதுதானா என்று அவர்களை எட்டி உதைக்கிறார்.

உடனே அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீ ரங்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஆலய வாசலில் இருக்கும் சிலையைக் காண்பிக்கிறார்கள்.

இங்கிருந்துதான் ஆட்சி செய்கிறீர்களா என்று கேட்கிறார்.

இல்லை என்று சொல்லி அறிவாலயத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். புயல் போல் காரில் இருந்து இறங்குபவர் அங்கு அவருடைய சிலையைக் காணாமல் கோபம் கொள்கிறார்.

ஆட்சியில் எனக்கும் என் கொள்கைகளுக்கும் இடம் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்களா என்று கேட்கிறார்.

அப்படியெல்லாம் இல்லை என்று அவரை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்று தலைமை இருக்கையில் உட்காரச் சொல்கிறார்கள்.

பாட புஸ்தகத்துல கடவுள் வாழ்த்தையெல்லாம் எடுத்துட்டோம். உங்க வாழ்க்கை வரலாறு பாடத்துல இருக்கு என்று கோபுரச் சின்னத்தை மறைத்தபடியே எடுத்துக்காட்டுகிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உங்களைப் பத்தி கட்டுரைப் போட்டியெல்லாம் நடத்தறோம். உங்க கொள்கைகளுக்கும் உங்களுக்கும் மரியாதை தந்திருக்கோம் என்று பவ்யமாகச் சொல்கிறார்கள்.

ஈ.வெ.ரா. அவரைச் சுற்றி நிற்பவர்கள் ஒவ்வொருவராக உற்றுப் பார்க்கிறார். தரித்த நறுந் திலகத்துடன் இருந்த அமைச்சர் மெள்ள கூட்டத்துக்குள் மறைந்துகொள்கிறார். ஐயாவின் கூர்மையான கண்கள் அதைப் பார்த்ததும் அவரை முன்னால் வரச் சொல்கிறது. அத்தனை பேருக்கும் ஏசியிலும் வேர்க்கத் தொடங்குகிறது. காவி வேட்டி கட்டிய அவர் முன்னால் வந்தால் கதை கந்தலாகிவிடும் என்பதால் என்ன செய்ய என்று பதறுகிறார்கள். காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்திருந்த ஒரு உடன்பிறப்பு அதி சமயோஜிதமாக அந்த அமைச்சரின் வேட்டியை உருவி விடுகிறது. இன்னொருவர் நெற்றியில் இருப்பதை அழித்துவிடுகிறார். அமைச்சர் அண்டர்வேருடன் முன்னால் வந்து நிற்கிறார்.

ஈ.வெ.ரா. அதைப் பார்த்ததும் அபாரம்… அற்புதம்… வெள்ளைக்காரன் மாதிரியே மாடர்னா இருக்காரே இப்படித்தான் இருக்கணும்… என்று அவரைப் பாராட்டுகிறார்.

மேஜையில் இருந்த ரிமோட்டை இயக்கி சுவரில் தொங்கிக் கொண்டிருந்த எல்.சி.டி. டிவியை ஆன் செய்கிறார். அவர்களுடைய போதாத காலம் தொலைகாட்சியில் டாஸ்மாக் வருமானம் புதிய உச்சத்தை எட்டிய பிரேக்கிங் நியூஸ் ஓடுகிறது!

திராவிட மாடல் என்பது குடிகார மாடல் தானா என்று கொந்தளிக்கிறார். பாட புஸ்தகத்துல கள்ளுக்கடை மறியல் செய்தார்; தென்னை மரத்தை வெட்டினார் ஈ.வெ.ரான்னு எழுதிட்டு டாஸ்மாக்கை அரசே நடத்தறது என்ன வெங்காயத்துக்கு என்று கோபப்படுகிறார்.

செய்த தவறை கடைசி வரை ஒப்புக்கொள்ளவே கூடாது என்று ஐயாவிடம் கற்றுக்கொண்ட கொள்கைப்படி பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

அரசு நடத்தவிட்டால் மட்டும் குடிக்காமல் இருக்கவா போகிறார்கள். தனியார் சம்பாதிக்கற பணம் அரசுக்கு வந்தா கூட நாலு நலத்திட்டம் அறிவிக்க முடியும். பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிள், லேப் டாப் எல்லாம் தர்றோம் என்கிறார்கள். இப்பகூட காலை உணவுத் திட்டம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.

பொண்டாட்டி புள்ளையை தொழிலுக்கு அனுப்பினா கூடத்தான் கூடுதல் காசுவரும். நல்லா தின்னு கொழுக்கலாம். வசதியா வாழலாம். அதுக்காக அப்படிச் செஞ்சிருவியா… நீ வோட்டுக்காக எதுவேணும்னாலும் செய்வ..

 (பாராட்டுரையைக் கேட்பதுபோல் பெருமிதத்துடன் புன்னகைக்கிறார்கள். தலையிலடித்துக்கொண்டு தொடர்கிறார்).

அரசாங்கத்தை ஏன் அப்படிச் செய்ய வைக்கற. கட்சியை எப்படி வேணும்னானும் நடத்து. அரசாங்கம்னு வந்தா மக்கள் பிரதிநிதியா நடந்துக்கணும். கொஞ்சமாவது பொறுப்பு, அக்கறை, மானம் மரியாதை, சூடு சொரணை, ஈவு இரக்கம் வேண்டும். குடும்பத் தலைவனைக் குடிக்க வெச்சிட்டு சம்பாத்தியத்தை எல்லாம் பிடுங்கிட்டு புள்ளைகளுக்கு காலைல ஓசிச் சாப்பாடு போடறேன்னு சொல்றியே வெட்கமா இல்லை.  குடிச்சிட்டு சாகறது அம்புட்டுமே நம்ம ஜாதிக்கரனுங்கதான. அந்த ராஜாஜியே கையைப் பிடிச்சு கெஞ்சினாரே சாராயக் கடையைத் திறக்காதேன்னு. காமராஜர் படிக்க வைச்சார். நீ குடிக்க வெச்சிருக்கியே.

குடிக்கறது தப்புன்னு எப்படிச் சொல்றீங்க. மனுஷன் ஆதி காலத்துல இருந்தே குடிக்கத்தான் செய்யறான். குரங்கா இருந்தப்பவே குடிச்சிருப்பான்.

குடிக்கறது தப்பு இல்லைதான். ஆனா அளவோட குடிக்கணும். தெருவுல விழுந்து புரள்ற அளவுக்குக் குடிக்ககூடாது. குடும்பத்தை நடுத்தெருல நிறுத்தறதும் அல்ப ஆயுசுல சாகற அளவுக்குக் குடிக்கறதும் கொலை கொள்ளைனு ஈடுபடறதும் ரொம்பத் தப்பு.

குடிக்காதவனுங்க மட்டும் குடும்பத்தை அப்படி என்ன தூக்கி நிறுத்திட்டானுங்க. டாஸ்மாக் இல்லாத மாநிலத்துல கொலை கொள்ளை நடக்கலையா… குடும்பத்தை நடுத்தெருவுல நிறுத்தலையா? உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வெள்ளைக்காரன் குடிக்கலையா?

வெள்ளைக்காரன் குடிக்கறான்னா அளவோட குடிப்பான். அதோட அவனோட ஊர் குளிர் பிரதேசம். அங்க அது அவனுக்கு ஒருவகையில தேவை. நம்ம நாட்டுக்கு அது தேவையில்லை. அப்படியே குடிக்கறதுன்னா கள்ளு குடிக்கலாம். சுண்டக் கஞ்சி குடிக்கலாம். அது உடம்புக்கு இவ்வளவு கெடுதல் செய்யாது. சிறுபான்மைக் காவலன்னு சொல்றியே இஸ்லாம்ல குடிக்கறது தப்புன்னுசொல்லியிருக்கு. முஸ்லிம் நாடுகள்ல சாராயம் கிடையாது. சாராயக் கடை நடத்தற உனக்கு எப்படி அவனுங்க ஆதரவு தர்றானுங்க?

அவங்க அதுலல்லாம் தெளிவு. அவங்க குடிக்கமாட்டாங்க. குடிச்சிட்டு சாகறதெல்லாம் ஹிந்துக்கள்தான். இதுக்கு வைன் ஜிஹாத்னுகூட ஒரு பேர் வெச்சிப்பானுங்க. நமக்கு இன்னும் கூடுதலா ஆதரவும் தருவானுங்க. இந்துக்களை எவ்வளவு மட்டையாக்கறோமே அவ்வளவு அவங்களுக்குத்தான நல்லது. ஐயா… மறுபடியும் சொல்றேன். இதை ஒரு தொழிலா தொழில் துறையா பாருங்க. அதுல வர்ற வருமானம் மிக மிக அதிகம். அரசு ஏன் இதை விட்டுக் கொடுக்கணும்?

அரசுக்கு சாராய வருமானம் வந்து மக்கள் நலத்திட்டங்களை அறுத்துத்தள்ளிடறமாதிரி சொல்ற. 100 பார் நடத்தினா பத்து பாரோட வருமானம்தான் அரசுக்கு வருது. அந்த பத்து பார்லயுமே ஆயிரம் ரூபாய்க்கு வித்தா ஐநூறு ரூபா கூட கணக்குல வராது. செய்யறது அவ்வளவும் அயோக்கியத்தனம். அதை வக்கணையா பேசி நியாயப்படுத்த வேற செய்யறியா?

எல்லாம் உங்ககிட்ட படிச்சதுதான் ஐயா.

நான் யோக்கியண்டா… நான் கள்ளு இருந்த காலத்துலயே அதை எதிர்த்தவன்டா.

கடைசில அதை கண்டுக்காமதானவிட்டீங்க.

இப்ப நீங்க வெளிநாட்டுச் சரக்கை நிறுத்திட்டு கள்ளுக் கடைகளைத் திறக்கப்போறியா இல்லையா..?

அதுவும் வேணா ஒருபக்கமா ஆரம்பிப்போம். ரூபாய்க்கு மூணு படி அரிசி, உழவர் சந்தை, சமத்துவபுரம்னு எவ்வளவோ செஞ்சிருக்கோம். இதைச் செய்யமாட்டோமா என்ன?

ஈ.வெ.ரா. செய்வதறியாமல் முழிக்கிறார்.

*

பாகம் – 2

அதைவிட காங்கிரஸும் திமுகவும் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தால் அவருக்கு ரத்தம் கொதிக்கிறது.

நான் காங்கிரஸை ஒழிக்கணும்னு சொன்னேன்… நீ என்னடான்ன கவுல் பிராமணனுக்கு கால் கழுவிட்டிருக்கீங்களாடா வெங்காயங்களா என்று கத்துகிறார்.

நீங்க காங்கிரஸை ஆதரிக்கலையா என்ன?

தமிழன் அதோட தலைவரா இருந்தப்ப ஆதரிச்சேன்.  நீங்க அந்த தமிழனை கூத்தாடி முகத்தைக் காமிச்சு தோக்கடிச்சீங்க. ரூபாய்க்கு மூணு படி அரிசின்னு பொய்யைச் சொல்லி தோக்கடிச்சீங்க.

(இதையும் பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள்).

ஐயா, நீங்க பிரிட்டிஷ்காரனே ஆளட்டும்னு சொன்னீங்கள்ல. இப்ப இத்தாலிக்காரியை ஆளவிட்டிருக்கோம். பார்ப்பன பனியா ஆதிக்கத்துக்கு பதிலா பாதிரிமாரோட ஆதிக்கத்தைக் கொண்டுவந்திருக்கோம். எங்க ஆட்சியும் அதிகாரமும் அவங்க போட்ட பிச்சைதான. நீங்க சொன்ன மாதிரியே ஆங்கிலத்தை அரியணைல ஏத்திட்டோம். காட்டுமிராண்டி மொழியை காலாவதியாக்கிட்டு வர்றோம். நீங்க கோடு போட்டீங்க… நாங்க ரோடு போட்டுட்டு இருக்கோம் ஐயா.

அதெல்லாம் சரிதான். ஆனா அந்த ஆங்கிலம் படிச்சு இன்னிக்கும் உச்சத்துல அதே பார்ப்பானும் பனியாவும்தான் உச்சத்துல இருக்காணுங்க. சம்ஸ்கிருதம், ஹிந்தின்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் ஆங்கிலம் வந்ததும் அதைப் பிடிச்சிட்டு மேலேறிப் போனதும் அவனுங்கதான். நீ ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் எதிர்க்கறேன்னு சொல்லி அவனுங்களுக்குத் தேவையான ஆங்கிலத்தைக் கத்துக்க வழி செஞ்சு கொடுத்திருக்க. நான் சொன்ன விஷயமெல்லாத்தையும் அவனுங்க தங்களுக்கு சாதகமா ஆக்கிட்டிருக்கானுங்க. நீ அதுக்கு குனிஞ்சு கொடுத்திருக்க.

அதெல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். அக்ரஹாரத்துல இருந்தவனுங்களை பட்டணத்துக்குத் துரத்தினோம். அங்க இருந்து பரதேசத்துக்குத் துரத்தினோம். அங்கயும் அவனுங்களுக்கு ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சாச்சு. ஒரு ஓரமா அடங்கி ஒடுங்கிக் கிடந்தா பிழைச்சுப்பானுங்க. இப்பவே அவனுங்க ஆளே அடையாளமே தெரியாம ஆகிட்டானுங்க. நாலைஞ்சு தலைமுறைபோனா நாமகூட சாப்பிடாத மாட்டுக்கறியை நாக்கைத் தொங்கப்போட்டுட்டு திங்க ஆரம்பிச்சிருவானுங்க. அவனுங்க எங்க போனா என்ன… என்ன வாழ்க்கை வாழ்ந்தா என்ன… பார்ப்பானே பார்ப்பானை அழிச்சிக்கறப்போ நாம் எதுக்கு நடு ராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்?

ஆனா, ஒரு பார்ப்பானைக் கூப்பிட்டு 380 கோடி தூக்கிக் கொடுத்திருக்க.

அவன் நம்மகிட்ட கை கட்டி சம்பளம் வாங்கற லேபர் ஐயா. பல்லக்குல உட்கார்ந்திருக்கறது நாம. அவன் துக்கறான். தூக்கட்டும். அவனைத்தான் தூக்கவும் வைக்கணும்.

*

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டு மனம் வெதும்புகிறார்.

அங்க தமிழன் ஆடு மாடை விடக் கேவலமா அடிச்சுக் கொல்லப்பட்டிருக்கான். நீ சக்கர நாற்காலில போய் இலகா பிச்சை எடுத்திருக்கியா என்று சீறுகிறார்.

நீங்க மட்டும் என்னவாம்… கீழ் வெண்மணில தீ வெச்சுக் கொன்னபோது கொன்னவங்க உன் ஆளுன்னு வாயை மூடிக்கிட்டுத்தான இருந்த என்று திமுக பதிலுக்குத் திட்ட ஆரம்பிக்கிறது.

அப்படியாக இரு தரப்பினரும் மணியம்மை திருமணத்தையொட்டி விடுதலை, முரசொலியில் பரஸ்பரம் கேவலமாகத் திட்டிக் கொண்டதுபோல் மீண்டும் தெருவில் புரண்டு சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த க்ரிப்டோக்களும் களமாடத் தொடங்குகிறார்கள்.

இவன் யாருடா சின்ன வெங்காயம் என்று அவர்களையும் உரிக்க ஆரம்பிக்கிறார்.

தெய்வம்னு கும்பிட்டா என்ன… முப்பாட்டன்னு கும்பிட்டா என்ன… எல்லாம் ஒரே எழவுதான் என்று திட்டுகிறார்.

காந்தியைக் கொன்ன கோட்சே கெட்டவன்னா பிரபாகரன் மட்டும் நல்ல தலைவனாக இருக்க முடியுமா? 3% இருந்த பிராமணர்கள் இங்க 60% அரசு பதவில இருந்தாங்க. அதுமாதிரி 15% இருந்த தமிழர்கள் இலங்கைல 50% அரசுப் பதவியில இருந்தாங்க. இங்க நாம எந்த ஆயுதத்தையும் தூக்காமலேயே பிராமணரல்லாதவர்களுக்கு அதிகாரத்தை வாங்கிக் கொடுத்தோம். அங்க சிங்களர்களுக்கு இயல்பா கிடைச்சிருக்க வேண்டிய அதிகாரத்தை ஆயுதம் ஏந்திப் போராடித் தடுத்தது ரொம்பத் தப்பு. இங்க பிராமணர்கள் ஆயுதம் ஏந்தி நம்மளை எதிர்த்துப் போராடிக் கொன்னிருந்தா நாம் விட்டிருப்போமா? கொஞ்சம் பேரு எல்லாத்தையும் சுருட்டறது எப்பவுமே தப்பு. எங்கயுமே தப்பு.

தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால நீங்க அவரைத் திட்டறீங்க. இதுல ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஒண்ணும் இல்லை.

பிரபாகரன்தான் தமிழர்களோட முழு அழிவுக்கும் காரணமாகியிருக்கான். காந்தியை எனக்குப் பிடிக்காது. ஆனா அவரோட அஹிம்சைய எனக்குப் பிடிக்கும். ஜனநாயக வழியிலதான் போராடணும்.

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு; பார்ப்பானை அடி.

என் இயக்கம் என்னிக்காவது ஒரு பிராமணரையாவது அடிச்சிருக்கா… கொன்னிருக்கா? கடவுள் சிலையை உடைச்சிருக்கேன். பக்தரை ஒண்ணும் பண்ணினதில்லை. ஜாதி அதிகாரத்தோட அடையாளமான பூணூலை அறுத்திருக்கோம். அப்பக்கூட அந்த பிராமணர் மேல ஒரு சின்ன கீறல்கூட விழுந்ததில்லை. வன்முறையைப் போதிக்கறவன், பின்பற்றுகிறவன் ஒரு நாளும் தலைவரா இருக்க முடியாது; கூடாது என்று சொல்லியபடியே பிரபாகரனின் படத்தை உடைத்துப் போடுகிறார்.

*

பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்ட்கள் பலருடனும் மோதுகிறார்.

சபரி மலைக்கு எல்லா வயதுப் பெண்களும் போகணும்னு ஒரு போராட்டம் வைக்கத்துல ஆரம்பிக்கப் போறோம். வாங்க தலைமை தாங்க என்று அழைக்கிறார்கள். போகிறார். ஆனால், அங்கு அவரை இஸ்லாமியப் பெண்களும் கன்யாஸ்த்ரீகளும் சந்தித்துத் தமது மனக்குறைகளைச் சொல்கிறார்கள். மேடையில் அவர்களை ஏறவைத்து பெண்களை மசூதிக்குள்ள நுழைய விடாம இருப்பது, பர்தா போட்டு மூடுவது, தனி பள்ளிக்கூடம், ஆண் ஆசிரியர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பாடம் எடுப்பது இதையெல்லாம் மாற்றணும் என்று அந்தப் பெண்கள் அவர் தந்த தைரியத்தில் முழங்குகிறார்கள்.

சர்ச்களில் கன்யாஸ்த்ரீகளை கல்யாணம் செய்யாம இருக்கவைக்கறது தேவ தாசி திட்டம் மாதிரியானதுதான்; பாதிரிகளால் வன் புனர்வுக்கு ஆளாகும் கன்யாஸ்த்ரீகளின் கதைகள் வெளியில் வந்தது கொஞ்சம். வராதது ஏராளம் என்று சொல்லி கன்யா ஸ்த்ரீகளுக்கு கல்யாணம் செய்துவைக்கவேண்டும்; சர்ச் வளாகத்தில் அவர்கள் தங்காமல் வீடுகளில் தங்கி சேவை செய்யவேண்டும்; நாலு பேருக்கு நல்லது செய்யணும்னு வந்தா ஏண்டா நம்பும்சகர்களாக்கறீங்க… மாட்டைக் காயடிக்கறதைவிட மனுஷங்களை துறவியாவும் பாதிரியாவும்  கன்யாஸ்த்ரீயாவும் ஆக்கறது ரொம்பத் தப்பு என்று ஒரு போராட்டம் அறிவிக்கிறார்.

*

டிசம்பர் 25 அன்று கீழ் வெண்மணியில் நினைவு நாள் அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. கம்யூனிஸ்ட்களுக்கும் தலித் கட்சிகளுக்கும் இடையே அங்கு மோதல் நடந்துகொண்டிருக்கிறது.

அங்கு செல்லும் ஈ.வெ.ரா., கம்யூனிஸ்ட்களைப் பார்த்து, உங்களால தானடா இத்தனை பேரு செத்திருக்காங்க. காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதி ஒரு சொட்டு ரத்தம் சிந்தாம, அத்தனை பேருக்கும் நிலம் வாங்கிக் கொடுத்திருக்காங்களே… அவங்க கால்ல விழுந்து கும்பிடுங்கடா என்று கர்ஜிக்கிறார்.

தலித் கட்சிகளைப் பார்த்து, நீங்கள்லாம் தனி கட்சி நடத்தற அளவுக்கு வளர்ந்திட்டீங்களாடா என்று திட்டுகிறார்.

தலித் தலைவர்கள் கூனிக் குறுகியபடியே, திராவிட கட்சிக்காரங்க சொல்றதைக் கேட்டுத்தான் இப்பயும் நடந்துக்கிட்டுவர்றோம் எசமான்; தனிக் கட்சியா இருந்தாலும் என்னிக்காவது 18+7 சதவிகிதம் இருக்கற எங்களுக்கு 50 சீட்டுக்கு மேல எம்.எல்.ஏ எலெக்‌ஷன்ல இடம் கொடுன்னு என்னிக்காவது கேட்டிருக்கோமா… ஆண்டைகள் ஊருக்குள்ள எங்க கட்சிக் கொடியை ஏத்திட்டு தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரக்கூடாதுன்னு சொன்னா அதைக்கூட கேட்டுட்டு பம்மித்தான நடந்துக்கறோம்.

அக்கிரஹாரத்துக்குள்ள வராதேன்னு சொன்னதைவிட அநியாயமா இருக்கே.

அதெல்லாம் தொடைச்சிக்கிட்டா போயிரும் ஐயா என்று கை கட்டி வாய் பொத்திச் சொல்கிறார்கள்.

*

பாகம் – 3

இறுதியாக ஈ.வெ.ரா., குன்றக்குடி செல்கிறார்.

கடவுள் மறுப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான உரையாடல் நடக்கிறது.

பஞ்ச காலங்கள்ல ஊரெங்கும்வறுமையின்கோரப்படியில்சிக்கித்தவித்துக்கொண்டிருந்தவர்களைப்பார்த்திருக்கிறேன். இங்குமங்குமாகமனிதர்கள்தெருக்களில்செத்துவிழுவதைப்பார்த்திருக்கிறேன். கடைவீதிகளில்பழங்களும்உணவுப்பொருட்களும்விற்பனைக்காகஅடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இருந்தும்இந்தமக்கள்அவற்றைவாங்கமுடியாமல்செத்துமடிகிறார்கள். கடவுளோட லட்சணம் இதுதான்.

ஆமாம்… அது வேதனையான விஷயம்தான்.

ஒருவேளைஒருநாயோமாடோஅத்தனைபசியுடன்இருந்திருந்தால்அவைஅப்படிமடிந்திருக்குமா?  என்னதான்அடித்துவிரட்டினாலும்அவைகடைக்குள்புகுந்தஅந்தஉணவுப்பொருட்களைஎப்படியாவதுதின்றுதமதுபசியைத்தணிக்கவேமுயற்சிசெய்திருக்கும். மனிதர்களில்யாரும்ஏன்அப்படிஎதுவும்செய்யமுன்வரவில்லை.

திருடுவது தவறு என்று சட்டம் சொல்கிறது.

காவலர்களைக்கண்டுஅவர்கள்பயந்ததாகநான்நினைக்கவில்லை. பஞ்சத்தில்அடிபட்டவர்கள்நூற்றுக்கணக்கில்ஏன்ஆயிரக்கணக்கில்இருந்தார்கள். அவர்களில்வெகுசொற்பமானவர்கள்கடைகளில்புகுந்துபொருட்களைஎடுத்துக்கொள்ளமுயன்றிருந்தால்கூடஒட்டுமொத்தகாவலர்கள்அங்குகுவிக்கப்பட்டாலும்அவர்களைத்தடுக்கமுடிந்திருக்காது. பசியால்உயிர்துறப்பதைவிடஅவர்கள்சிறையில்அடைக்கப்பட்டுகால்வயிறுகஞ்சிகிடைத்திருந்தால்கூடஅவர்களுக்குமேலானதாகத்தான்இருந்திருக்கும். அப்படியிருந்தும்அந்தமக்கள்ஏன்கடைகளைக்கொள்ளையடிக்கமுயற்சிசெய்யவில்லை. அவர்கள்அனைவருமேகோழைகளாஎன்ன? அல்லதுஅவர்கள்அனைவருமேசட்டம்ஒழுங்கைஅவ்வளவுதூரம்மதிக்ககூடியவர்களாஎன்ன?

இறை நம்பிக்கையும் மத நம்பிக்கையும் அவர்களிடையே சில ஒழுங்குகளை போதித்திருக்கின்றன.

ஆமாம். அதுதான் சிக்கல்.

கடைக்காரர்கள்அனைவருமே, சகமனிதர்கள்கண்முன்னேஇறந்துவிழுவதைவேடிக்கைபார்க்கும்அளவுக்குஅத்தனைகல்நெஞ்சக்காரர்களாஎன்ன? அவர்கள்அனைவருமேசகமனிதர்களின்துயரங்களுக்குத்தங்களால்முடிந்தஉதவிகளைச்செய்துமிருப்பார்கள். பஞ்சத்தில்அடிபட்டவர்களுக்குமுடிந்தஅளவுக்குஅன்னதானம்செய்துமிருப்பார்கள். தினம்தினம்அறத்தின்மத்திரங்களைஉச்சாடனம்செய்தபடித்தான்இருந்திருப்பார்கள்.

உண்மைதான். ஏழைகள்கோழைகள்அல்ல; கடைக்காரர்கள்கொடியவர்களுமல்ல… அப்படியிருந்தும்இத்தனைமனிதர்கள்பசியால்இறந்ததுஏன்? அந்தமனிதர்களின்வாழ்க்கைத்தத்துவமேஇந்தப்பிரச்னைக்குக்காரணம்என்றுநினைக்கிறேன்.

நான் அப்படி நினைக்கவில்லை.

எளியமக்களும்கடைக்காரர்களும்ஒரேவிதமானவாழ்க்கைப்பார்வைகொண்டவர்களே. விதி… எல்லாம்விதி… கடவுள்வகுத்தவிதி. கடவுள்அவர்களைஅப்படிமடியவைத்திருக்கிறார். இப்படியானதத்துவத்தையேஇருதரப்பினரும்கொண்டிருந்ததால்அவர்களுடையஉறவில்எந்தமாற்றமும்ஏற்பட்டிருக்கவில்லை. சிலர்வயிறாரஉணவுஉண்டார்கள். பலர்பட்டினியால்உயிர்துறந்தார்கள். எல்லாம்விதிஎன்றதத்துவத்தில்நம்பிக்கைஇருந்ததால்தான்எளியமக்கள்விலங்குகளைப்போல்நடந்துகொள்ளாமல்மரணத்தைஏற்றுக்கொண்டார்கள். பஞ்சம்தொடர்பாகநான்சொன்னஅதேவிஷயம்தான்தீண்டப்படாதவர்களுக்கும்சாதிஇந்துக்களுக்கும்இடையிலானஉறவிலும்வெளிப்படுகிறது. இந்தவிதிக்கோட்பாடேஎல்லாஉறவுகளையும்தீர்மானிக்கிறது.

கர்ம வினைக் கோட்பாடு இல்லாத இஸ்லாமிய கிறிஸ்தவ தேசங்களிலும் ஒடுக்குமுறை, ஏற்றத் தாழ்வு, பஞ்சம், பட்டினி எல்லாம் இருக்கத்தான் செய்கிறது.

அங்கு உள்ள மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை அதற்குக் காரணமாக இருக்கிறது.  அதுவும் தவறுதான். கடவுள் நம்பிக்கை எனும்தத்துவத்தைப்பின்பற்றுவதால்என்னநடந்திருக்கிறது? மனிதன்விலங்கைவிடக்கீழானவனாகஆகிவிட்டிருக்கிறான். வளமாகவாழ்வதற்குபதிலாகநோய்மிகுந்துமரிக்கிறான். தீமையைஎதிர்க்கும்அவனுடையசக்திபலவீனப்பட்டுப்போயிருக்கிறது. சிலருடையசந்தோஷம்என்பதுபலருடையவேதனையின்மீதுகட்டிஎழுப்பப்பட்டிருக்கிறது. நமதுஒழுக்கவிதிகள், அனைவருக்குமானசந்தோஷம்என்பதுபோன்றகனவுகளையும்லட்சியங்களையும்மீறிஇந்தப்பரிதாபமானநிலையேநீடிக்கிறது.

உதவச் சொல்றதும் ஆன்மிகம் தான்.

இல்லை. கடவுள்தான்எல்லாம்என்றஆத்திகக்கோட்பாடுதான்எல்லாதுன்பங்களுக்கும்காரணம். லட்சியவாதவாழ்க்கைமற்றும்தார்மிகஎதிர்பார்ப்புகளைஎல்லாம்வீழ்ச்சியடைச்செய்வதுஅந்ததத்துவமேஎன்றுநம்புகிறேன். இப்படியானஏற்றத்தாழ்வுமிகுந்தவாழ்க்கையைஇனியும்அந்தக்கோட்பாட்டினால்நியாயப்படுத்திவரமுடியாது. வேதனையில்உழலும்மக்கள்அந்தக்கோட்பாட்டுக்குஎதிராகக்கிளர்ந்துஎழப்போகிறார்கள். அன்புக்கும்அமைதிக்கும்மாற்றாகவெறுப்பும்போரும்பரவஆரம்பித்தாகிவிட்டது.

ஆமாம், உலகில் அறமும்லட்சியவாதமும்தழைத்தோங்கவேண்டும்.

கடவுள்நம்பிக்கையும்விதியின்மீதானநம்பிக்கையும்மறைந்துஆத்திகப்பார்வைமறைந்தால்தான்அதுசாத்தியமாகும். நான்நாத்திகத்தைநேர்மறையானகாரணங்களுக்காகவேவிரும்புகிறேன். அப்போதுதான்மக்கள்கடவுளைநம்புவதில்இருந்துவிடுபட்டுசொந்தக்காலில்உறுதியாகநிற்கத்தொடங்குவார்கள். அப்படியானமனிதரின்மனதில்ஆரோக்கியமானசமூகப்பார்வைவளரும். ஏனென்றால், பொருளாதார, சமூகஏற்றத்தாழ்வுகளைநாத்திகம்எந்தவகையிலும்நியாயப்படுத்துவதேஇல்லை.

ஆத்திகமும் இதைத் தவறு என்றுதான் சொல்கிறது. பாவ புண்ணியங்களைச் சொல்லி, நியாயத் தீர்ப்பு நாளைச் சொல்லி மக்களை பரஸ்பரம் அன்புடன் நடந்துகொள்ளத்தான் சொல்கிறது.

ஒரு நல்ல விஷயத்தைப் புரிஞ்சு செய்யற அறிவு மனுஷருக்கு இல்லையா என்ன? இல்லாத கடவுளையும் பொய்யான சொர்க்க நரகத்தையும் சொல்லித்தான் செய்யவைக்கணுமா? கடவுள்நம்பிக்கைமறைந்துமனிதர்கள்சொந்தக்காலில்நிற்கத்தொடங்கினால், ஒட்டுமொத்தமனிதஇனமும்சமமாகமதிக்கப்படும். ஏனென்றால், மனிதர்களிடையேவேற்றுமைக்கானஅம்சங்களைவிடஒற்றுமைக்கானஅம்சங்களேஅதிகம்இருக்கின்றன. அதோடுசகமனிதநேசமானதுஅனைத்துவித்தியாசங்களையும்மட்டுப்படுத்திவிடும்.

கடவுள் பொய்யில்லை. சத்தியம்தான்.

கடவுள்சத்தியம்என்றால்கடவுளைஅப்புறப்படுத்தமுடியாதுபோய்விடும். மனிதரால்உருவாக்கப்பட்டபொய்தான்கடவுள். எல்லாபொய்யானவிஷயங்களையும்போலவே, அதுவும்கடந்தகாலத்தில்ஓரளவுக்குநன்மைதந்திருக்கிறது. ஆனால், எல்லாபொய்யானவிஷயங்களையும்போலவேநீண்டகாலப்பயணத்தில்வாழ்க்கையைச்சீரழித்துவிட்டிருக்கிறது. எனவேகடவுள்நம்பிக்கைநிச்சயம்மறையத்தான்செய்யும். அதுமறைந்துதான்ஆகவேண்டும். அப்போதுதான்மலினஅம்சங்கள்நீக்கப்பட்டுமனிதஇனம்மேம்படும்.

கஷ்டங்கள் பெருகும்போது மனித மனதுக்குப் பற்றுகோல் வேண்டியிருக்கும். வெற்றி மமதை தலைக்கு ஏறும்போது தட்டி வைக்க ஒரு மேலான சக்தி வேண்டும்.

ஆதி மனிதருக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். நவீன மனிதருக்கு அது தேவையில்லை. நாத்திகம்மனிதர்களைத்தன்னம்பிக்கைமிகுந்தவர்களாகஆக்கும். சமூகப்பொருளாதாரசமத்துவத்தைஅஹிம்சைவழியில்உருவாக்க உதவும்.

ஒரு கடவுள் நம்பிக்கை தவறு என்றால் எல்லா கடவுள் நம்பிக்கையும் தவறு; மூட நம்பிக்கை, ஆணாதிக்கம், ஜாதி / மத ஏற்றத்தாழ்வு, வர்க்க ஏற்றத்தாழ்வு எல்லாமே எல்லா மதங்களிலும் இருப்பதுதான். இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?

நான் கிறிஸ்தவ தேசத்தில் பிறந்திருந்தால் அதை எதிர்த்திருப்பேன். இஸ்லாமிய தேசத்தில் பிறந்திருந்தால் அதை எதிர்த்திருப்பேன்.

இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால் நம் தேசத்தில் 200 வருடங்களுக்கு மேல் இஸ்லாம்தான் ஆட்சியில் இருந்தது. கிறிஸ்தவம் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்திருக்கிறது. இந்த 500 ஆண்டுகளில் நடந்த கஷ்டங்களுக்கு அவர்களையும் அவர்களுடைய கடவுளையும் என்றைக்காவது கண்டித்ததுண்டா?

கண்டித்திருக்கிறேனே.

அவர்கள் மிரட்டியதும் அடங்கிவிட்டீர்கள். இந்துக்கள் எதுவும் செய்யாததால் திட்டிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள், அப்படித்தானே.

இந்துவுக்கு 500 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருந்திருக்கலாம். சமூக, கலாசார அதிகாரம் அவர்களிடம்தான் இருந்தது. மக்கள் அவர்கள் சொன்ன புராணங்களையும் பொய்களையும் நம்பித்தான் வாழ்ந்தார்கள். அதனால்தான் அதை எதிர்க்க உதவுவார்கள் என்று கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் நண்பர்களாகப் பார்த்தேன்.

மூட நம்பிக்கையும் ஏற்றத்தாழ்வையும் ஆதிக்க உணர்வையும் எதிர்ப்பதென்றால் மூவரையும்தானே எதிக்கவேண்டும். ஒரு மூட நம்பிக்கைக்கு மாற்று இன்னொரு மூட நம்பிக்கையாக இருக்கமுடியுமா? சரஸ்வதியைக் கும்பிடுவதற்கு மாற்றாக தமிழ் தாயைக் கும்பிடுவது இருக்கமுடியுமா என்று கேட்டவர்தானே நீங்கள்.

இந்து ஆதிக்கத்தை ஒழித்தபின் இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் என் தொண்டர்கள் எதிர்ப்பார்கள்.

நீங்கள் அதற்கான வழியைக் காட்டியிருக்கவில்லையே.

நான் ஆதிக்கத்துக்கு எதிரான நெருப்பைப் பற்றவைத்திருக்கிறேன். அது ஆதிக்கத்தில் யார் இருந்தாலும் எரிக்கும்.

இல்லை நீங்கள் அதுவும் பிராமணர்களைத் திட்டியதெல்லாம் பிராமணரல்லாத இடைநிலை ஜாதிகளின் ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்குத்தான். ஒரு ஒடுக்குமுறைக்கு மாற்றாக இன்னொரு ஒடுக்குமுறையைத்தான் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

அப்படியில்லை. எந்தவொரு அடையாளத்தின் அடிப்படையில் போராடினாலும் அந்த அடையாளத்தில் மேலடுக்கிலிருப்பவர்களுக்கு முதலில் நன்மைகள் கிடைக்கும். அதன் பின் அடுத்த அடுக்குகளுக்கு கீழிறங்கும். பிராமணரல்லாதார் இயக்கத்தில் முதல் தலைமுறையில் பிராமணரல்லாத மேல் ஜாதிகளுக்கு நன்மைகள் கிடைத்தன. அடுத்த தலைமுறையில் அதற்கு அடுத்த அடுக்கினர் பலன் பெற்றனர். அம்பேத்கர் முன்னெடுத்த்வையெல்லாம் முதலில் மஹர்களுக்கும் அதுபோல் பிற மாநிலங்களில் மேலடுக்கில் இருந்த பட்டியல் ஜாதியினருக்கும் நன்மை கொடுத்தது. அதன் பின் அடுத்த அடுக்குகள் பலன் பெறும். மேல் நோக்கிய சமூக நகர்வு இப்படித்தான் இருக்கும்.

அது உண்மையில் அப்படி இருந்திருக்ககூடாது. அதிகம் கஷ்டப்பட்டவருக்கு முதல் சலுகை, உரிமை என்றுதான் இருந்திருக்கவேண்டும். பிராமனரல்லாதாரில் ஆகக் கீழ் நிலையில் இருந்த துப்புரவுப் பணியாளர்களுக்குத்தான் முதலில் அனைத்தும் கிடைத்திருக்கவேண்டும். நீங்கள் ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த பண்ணையார்களுக்குத்தான் கட்சி நடத்தியிருக்கிறீர்கள். குறைந்தபட்சம் தலித்களுக்குக் கிடைச்சிருப்பதெல்லாம் நாங்க போட்ட பிச்சை என்று அரசியல் சாசனம் தந்தவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, இழிவுபடுத்துகிறார்கள் உங்கள் சீடர்கள். ரெட்டமலை சீனிவாசனார், அயோத்திதாசர், எம்.சி.ராஜா என உங்களுக்கு முன்பாகவே உயரம் தொட்டிருந்த தலைவர்களை ஓரங்கட்டித்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்கள். உங்கள் இயக்கம் ஜாதியில் எதைச் செய்ததோ அதுவே மத விஷயத்திலும் நடக்கும்.

அதை நான் மாற்றிக்கொள்ளவே விரும்புகிறேன்.

உங்களுக்கு அந்த தைரியம் உண்டு. நேர்மையும் இருந்தால் மிகவும் நல்லது. கடவுள் வேண்டுமா வேண்டாமா… ஜாதி மதம் வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் ஒரு மனிதரை அவை எப்படியாக மாற்றுகின்றன என்பதை வைத்தே முடிவு செய்யவேண்டும். கடவுள் நம்பிக்கையினால் ஒருவர் இன்னொருவருக்கு நன்மை செய்கிறாரென்றால் அவருக்கு கடவுள் நம்பிக்கை நல்லது. கடவுள் நம்பிக்கை இல்லாததால் ஒருவர் இன்னொருவருக்கு நன்மை செய்கிறாரென்றால் அவருக்கு நாத்திகம் நல்லது. எனவே எந்தக் கொள்கையுமே என்ன செயலாக வெளிப்படுகிறது என்பதை வைத்தே மதிப்பிடவேண்டும்.

ஆமாம்.

பிற மதங்களில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் அதிகம். மிதவாத எண்ணம் கொண்டவர்கள் குறைவு. இந்து தர்மத்தில் அடிப்படைவாத எண்ணம் கொண்டவர்கள் குறைவு. மிதவாத எண்ணம் கொண்டவர்கள் மிக அதிகம். எனவே எல்லா மதங்களிலும் இருக்கும் மிதவாத எண்ணம் கொண்டவர்களின் நலனுக்காகப் பாடுபடவேண்டும். இதில் எந்த மதம், ஜாதியையும் பழிக்கத் தேவையில்லை. குறிப்பாக இந்து மதத்தின் மிதவாதிகளை மட்டுமல்ல; அடிப்படைவாதிகளையுமே கூடப் பழிக்கக்கூடாது. இந்துக்கள் படையெடுத்துப் போய் எந்த முஸ்லிம் நாட்டையும் அழிக்கவில்லை. எந்த கிறிஸ்தவ நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை.

உண்மைதான்.

ஜாதிப் பிரச்னைக்கு தீர்வு ஜாதி சீர்திருத்தத்தில்தான் இருக்கிறது. ஜாதி ஒழிப்பில் இல்லை. கோவில் கருவறைக்குள் நுழையவிடாவிட்டால், நாமே கருவறையே இல்லாத ஒரு புதிய கோவிலைக் கட்டி அனைவரையும் கும்பிடவைக்கவேண்டும். அனைத்து ஜாதியினரில் இருந்தும் அர்ச்சகர்களை நியமித்து பூஜைகள் செய்யவேண்டும். சம்பிரதாயக் கடவுளுக்கு மாற்று நவீனக் கடவுளே. இந்து மதத்துல குறைகள் இருக்கு. ஆனா அதுக்கு மாற்று கிறிஸ்தவமும் இஸ்லாமும் இல்லை. ஏன்னா அது இந்து மதத்தைவிட 1000 மடங்கு கொடூரமானது.

ஆமாம். நான் இந்து மதத்தை ஒழிக்கணும்னு சொன்னதெல்லாம் அதுல இருக்கற ஒடுக்குமுறை ஒழியணுங்கற எதிர்பார்ப்புலதான். அம்பேத்கர்கூட மதம் மாறச் சொன்னபோது நான் அதை ஏத்துக்கலை. கடைசிவரை இந்து மதத்துலயேதான் இருந்தேன். கறை படிஞ்ச இந்து மதத்தோட இடத்துல அந்தக் கறைகளைப் போக்கிய இந்து மதம்தான் இருக்கணும். அதைவிட அழுக்கான இஸ்லாமும் கிறிஸ்தவமும் வரக்கூடாது. சாணியை மிதிக்கப் பிடிக்காம மலத்துல போய் யாராவது காலை வைப்பாங்களா என்று ஈ.வெ.ரா சொல்கிறார்.

இந்துத்துவ இயக்கங்களும் பாஜகவும் செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பார்த்து அவர்களை ஆதரிக்க முன்வருகிறார். திராவிட இயக்கங்கள் மத மாற்ற நடவடிக்கைகளுக்குத் துணைபோவதையும் இடை, கடை நிலை ஜாதியினருக்கு அநீதிகள் இழைப்பது, அதிகார துஷ்பிரயோகம், வாரிசு அரசியல், ஊழலில் திளைப்பது, சொற்ப நபர்கள் அடங்கிய சிண்டிகேட் அராஜக ஆட்சி இவற்றையெல்லாம் பார்க்கும் ஈ.வெ.ரா திராவிட இயக்கத்துக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்தை இந்துத்துவர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறார். 

முதல் வேலையாக ஈ.வெ.ரா, அவர்களுடைய குடும்பத்தினர் நிர்வகித்து வந்த கோவிலுக்குச் செல்கிறார். பூசாரி விபூதிஇட்டுவிடுகிறார். பவ்யமாகக் குனிந்து ஏற்றுக்கொள்கிறார்.

ஹரஹர மஹாதேவ் என்று பூசாரி உரக்க முழங்குகிறார்.

அங்கிருந்து பெரும் ஊர்வலமாகப் புறப்படும் ஈ.வெ.ரா ஸ்ரீரங்கம் சென்று சேர்கிறார். ஈ.வெ.ராவின் கைத்தடியே ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் சிலையை கீழே தள்ளி உடைக்கிறது.

இதுவரை இது இந்த பெரியாரின் மண்ணாக இருந்தது; இனிமே இது இந்த மூல பெரியாரின் மண்ணாக ஆகட்டும் என்று கை காட்டுகிறார். ஒரு ராட்சஸ கிரேன் திரை மூடிய சிலை ஒன்றைச் சுமந்துவந்து அந்தப் பீடத்தில் வைக்கிறது. ஈ.வெ.ரா ரிமோட்டை அழுத்துகிறார். திரை விலகி அந்த இடத்தில் ஸ்ரீ ராமானுஜரின் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

மத மாற்றத்தைக் கற்பித்தவன் முட்டாள்

மத மாற்றத்தில் ஈடுபடுபவன் காட்டுமிராண்டி

மத மாற்றத்துக்கு துணை நிற்பவன் அயோக்கியன் என்ற வாசகங்கள் அதில் பொறிக்கப்படுகின்றன.

அரசியல் சாசனம் சொல்லும் மத பிரசார சுதந்தரம் என்பது வேறு; மத மாற்றம் என்பது வேறு; அது பூர்வ மத அழிப்பு; பண்பாட்டுக் கொலை என்ற வரிகளும் அதில் இடம்பெறுகின்றன. சங்கொலியோடு சேர்ந்து பின்னணியில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் விண்ணை முட்டுகிறது.

One Reply to “பெரியார் மண்”

 1. அயோத்தி மீண்ட வரலாறு :

  உச்சநீதிமன்ற்த்தில் இரு தரப்போடு ராமன் தரப்பில் சிலர் வாதம் செய்த காட்சிகளை காணமுன் அங்கே அகழாய்வில் என்னென்ன பெரும் ஆதாரங்கள் கிடைத்தன என்பதை காணலாம், அதுதான் மிக முக்கியமானது

  1975ம் ஆண்டின் அகழாய்விலே ஆலயம் இருந்த அனைத்தும் கிடைத்தது, ஆனால் இஸ்லாமிய தரப்புக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கோஷ்டியின் உளநாட்டு வெளிநாட்டு அறிவுஜீவிகள் கொடுத்த தவறான நம்பிக்கைதான், அவர்களை ஏமாற்றி செய்யவைத்த வாதம்தான் அடுத்தகட்ட அகழாய்வுக்கு காரணமாயின‌

  அதாவது 1975ல் அந்த பள்ளிவாசலுக்குள் அகழாய்வு செய்யபடவில்லை மாறாக அதன் வெளிபக்க வளாகம்தான் தோண்டபட்டு ஆய்வு செய்யபட்டு தடயங்களும் கல்வெட்டுகளும் ஆலய அடையாளமும் கிடைத்தன‌

  இதனை வேறுமாதிரி சொல்லி இஸ்லாமியரை ஏமாற்றினர் இந்து துவேஷ மேதைகள்

  “இதோ பாருங்கள் இஸ்லாமிய மக்களே, உங்கள் அரசர்களெல்லாம் மகா நல்லவர்கள், கோவிலை இடித்து பள்ளிவாசக்ல் கட்டவே மாட்டார்கள், ஆனால் கோவிலை ஒட்டி கடடுவார்கள், அதனால் அவர்கள் ஆலயம் அருகே வெற்று நிலத்தில்தான் பள்ளிவாசல் கட்டினார்கள்

  அவர்கள் ஆலயலம் இடிந்து அழிந்துவிட்டது அதனால் தோண்டினால் கிடைக்கின்றது, இங்கே உங்கள் தங்கமான அரசர்கள் வெற்று இடத்தில்தான் கட்டினார்கள், தோண்டினால் ஒன்றும் வராது

  காசி,மதுராவில் எப்படி அடுத்தடுத்து மசூதி கோவில் உண்டோ அப்படித்தான் அங்கும் அமைந்திருக்க வேண்டும் அதனால் அஞ்சாதீர்கள்” என தவறான நம்பிக்கை கொடுத்தார்கள்

  காசியிலும் , மதுராவிலும் இதே கொடுமைதான் நடந்ததாக வரலாறு உண்டு, அங்கெல்லாம் பறிகொடுத்த கோவில் பக்கம் பின்னாளில் கோவில் கட்டினார்கள், ஆனால் அயோத்தியில் கடைசிவரை சமரசம் செய்ய இந்துக்கள் தயாராக இல்லை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்து உண்மைவெளிவந்து கொண்டிருந்தது

  ஆனால் இந்து துவேஷ மதவாத சக்திகள் கொடுத்த தவறான‌ நம்பிக்கையில்தான் இஸ்லாமிய தரப்பு தொடர்ந்து வாதிட்டது, உண்மையில் அவர்களும் ஏமாற்றபட்டார்கள்

  அந்த முழு நம்பிக்கையில் சொன்னார்கள் ,”எங்கள் மத த்தில் பிறர் வழிபாட்டுத் தலங்கள் மேல் மசூதி கட்ட அனுமதி இல்லை. ஆகவே பாபர் காலத்தில் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி கோவில் இருப்பது உண்மையாக இருந்தால் நாங்களே அந்த இடத்தை விட்டு விலகி விடுவோம்”

  இதனால் நீதிமன்றம் சர்ச்சைகுரிய இடத்தை தோண்ட உத்தரவிட்டது, அப்போது பள்ளிவாசல் இல்லை அது இடிக்கபட்டிருந்ததால் அகழாய்வு செய்ய யாதொரு தடையுமில்லை

  இதே கருத்தைத்தான் அதாவது சம்பந்த இடத்தில்தான் அகழாய்வு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவும் சொல்லிகொண்டிருந்தது கவனிக்கதக்கது

  பின் நீதிமன்ற உத்தரவுபடி அகழாய்வு குழு களத்தில் இறங்கிற்று, அதன் தலைவராக டாக்டர் பி.ஆர் மணி நியமிக்கபட்டார், 130 வல்லுனர்கள் அந்த பணிக்கு வந்தார்கள்

  இங்கே இந்துக்கள் மட்டுமில்லை 50க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களும் இதர மதத்தவர்களும் இருந்தார்கள்

  மார்ச் 2003 ல் தொடங்கியது இரண்டாம் அகழாய்வு, அது முக்கிய இடத்தில் நடக்க தொடங்கிற்று, மிக பலத்த காவல் இடபட்டது

  ஒரு துரும்பு கூட வெளியே செல்லாத அளவு, அப்படியே உள்ளே வராத அளவு காவல்பலபடுத்தபட்டது, நீதிபதிகள் உள்பட வழக்கின் தரப்பினரும் அதிகாரிகளோடு அங்கேதான் இருந்தார்கள்

  அனுதினமும் நடக்கும் ஆய்வும் கிடைக்கும் தடயங்களும் ஆதாரங்களும் எல்லோராலும் உறுதிசெய்யபட்டு, கையொப்பமெல்லாம் வாங்கபட்டு முத்திரை வைக்கபட்டது

  சுமார் நான்கு மாத ஆய்வுக்கு பின் அறிக்கை 574 பக்கமாக ஆகஸ்டு 22, 2003ல் நீதிமன்றத்திடம் சமர்பிக்கபட்டது

  இந்த பணி மிக தீவிரமாக நடந்தபோதே பெரும் வதந்தியினை யாரோ தூண்டிவிட்டார்கள், அதன்படி 75ம் ஆண்டு ஆய்விலே அங்கு கோவில் இல்லை என உறுதியாயிறு அதனால் இடம் இஸ்லாமியருக்கு சொந்தம் என ஒரு வதந்தி ப்ரவிகொண்டிருந்தது

  ஆனால் அந்த அகழாய்வினை செய்த பி.பி லால் அது பொய் என்றும் தாங்கள் கொடுத்த அறிக்கையில் கோவில் இருந்ததைத்தான் சொன்னோம் என்றும் பேட்டி அளித்து நிலமையினை சரிசெய்தார்

  ஒரு பெரும் பொய்யினை வேகமாக பரப்பி மக்களை குழப்பும் அளவு இந்து துவேஷிகளின் பலம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என பெரும் சக்தியாக இருந்தது, தமிழகத்தில் அது திராவிட சக்திகளாக இருந்தன இன்றும் அவை உண்டு

  இப்படி பொய்கள் பரவிய காலத்தில்தான் சென்னை அகழாய்வு நிலையத்தில் பணிசெய்தவரும், லால் அவர்களுடன் அயோத்தியில் 1975ல் அகழாய்வு செய்தவருமான கே.கே முகமது தன் முக்கிய தகவலை கோரிக்கையாக சொன்னார்

  “பாரத முஸ்லிம் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இஸ்லாமியர்களுக்கு மெக்கா மதினா எவ்வளவு புனிதமோ அது போல் ஹிந்துக்களுக்கு காசி, மதுரா மற்றும் அயோத்தியா. எனவே முஸ்லிம்களே முன்வந்து இந்த மூன்று இடங்களையும் இந்துக்களுக்கு கோவில் கட்ட கொடுக்க வேண்டும்.”

  அவ்வளவுதான் ஆளாளுக்கு பொங்கினார்கள், ஒரு அரசு பணியாளர் ஒருபக்கம் சரியலாம் அவரை அனுமதிக்க கூடாது , இவர் ஒருபக்கம் சரியும் ஆசாமி, இனதுரோகி, விலைபோனவர் என வரிந்துகட்டி அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்றெலலம் கொதிக்க தொடங்கினார்கள்

  அரச ரகசியங்களை கசியவிட்டார் என்றெல்லாம் பெரும் கொந்தளிப்பு வந்தது

  ஆனால் கே.கே முகமது கொஞ்சமும் கலங்கவில்லை, அகழாய்வுக்கு அவசியம் என்பதால் அவர் சமஸ்கிருதமும் கற்றிருந்தார், அவர் கீதையின் ஸ்லோகம் ஒன்றை சொல்லி புன்னகைத்தார்

  “உண்மை பேசி உயிர் போனாலும் உயர்வே” என அவர் சொல்ல நிலமை பதற்றமானது, அவருக்கும் அவரின் மேல் அதிகாரிக்கும் முட்டி கொண்டது

  பின் அரசியல் அழுத்தம் அதிகரித்து அவர் பணியிடை நீக்கம் வரை அலைகழிக்கபட்டார், ஆனால் கடமை ரீதியாக அவர் தவறு செய்யவில்லை என்பதால் கோவாவுக்கு மாற்றபட்டார்

  75ம் ஆண்டு முக்கிய ஆதாராமக கிடைத்தவை, அதாவது பள்ளிவாசல் கட்டடம் அருகே கிடைத்தவை மிக முக்கிய 12 தூண்கள் இந்த தூண்கள் மேல்தான் பள்ளிவாசலின் முக்கிய சுவர் இருந்தது, இவைதான் ஆதாரமாக தாங்கின‌

  அந்த சுவர்களின் நடுவில் தூண்கள் தெரிந்தன, அவற்றின் கீழ்பகுதியில் பூரண கும்ப கலசம் பொறிக்கபட்டிருந்தது, அது இந்துக்களின் அடையாளம், இஸ்லாமிய கட்டங்களில் அது வராது

  இந்த கருங்கல் தூண்களுக்கு கீழே செங்கலால் ஆன அடிபாக தளம் இருந்தது, அங்கே சுட்ட களிமண்ணின் சிலைகள் விலங்குகள் மனிதர்கள் வடிவில் இருந்தன. அம்மாதிரியான சிலைகள் இந்து ஆலயங்களில் மட்டும் காணபடும் அதே வடிவில் இருந்தன, இன்னும் அவை 500 வருடத்துக்கு அதாவது பாபர் காலத்துக்கு மிக மிக முந்தையதாக இருந்தது

  2003 அகழாய்வு இன்னும் பெரும் தகவல்கலை கொடுத்தது, அந்த கட்டடம் இருந்த இடத்தின் கீழ் சுமார் 50 பெரிய தூண்கள் இருந்தன, பெரிய கருங்கல் தூண்கள் அவை

  அப்படியே இந்துக்கள் கருவறை என சுட்டிகாட்டிய இடத்தின் அருகே 17 வரிசைகளில் , 5 தூண்களாக மொத்தம் 85 தூண்கள் இருந்த அடிபாகம் கிடைத்தது, மிகபெரிய மண்டபம் இருந்திருக்க வேண்டும் அந்த மண்டப கூரையினை தாங்கும்படி 85 பெரும் தூண்கள் இருந்திருக்கவேண்டும் என்பது கண்டறியபட்டது

  இந்துக்கள் கருவறையின் சாமி சிலை அபிஷேகத்தின் போது நீர் வெளியேறும் கோமுகி அமைப்பினை முதலை உரு பதித்த மகரப்ரணாளியாக கண்ட்னர்

  அப்படியே கோபுர கலசத்தை தாங்கும் பகுதியான அமலகம் கிடைத்தது, இப்படி 250 பொருட்கள் மிக முக்கியமான ஆதாரமாக கிடைத்தன,

  அடுத்த அடுக்கில் சிவலிங்கம் வந்தது, சிவபார்வதி விக்ரஹங்களும் கிடைத்தன‌

  மிக முக்கிய ஆதாரமாக ஒரு கல்வெட்டு கிடைத்தது அதன் பெயர் “விஷ்ணு ஹரி கல்வெட்டு”

  அது 5 அடிக்கு 2 அடியில் 12-13ம் நூற்றாண்டு சம்ஸ்க்ருதத்தில் 20 வரிகள் கொண்டது., அவற்றின் பொருள் இப்படி என அறிஞர்கள் அறிந்து சொன்னார்கள்

  ” “நம சிவாய” என சிவனை வணங்கி, த்ரிவிக்ரமனான வாமன பகவானை வணங்கி, அடுத்து பரசுராம அவதாரத்தை வணங்கி பின் கோவில் கட்டிய அந்த ராஜ வம்சத்தை பற்றிய விவரங்களை கூறி, அப்போதைய ராஜா கோவிந்தசந்த்ரா என்ற அரசன் இந்த கோவிலை கட்டினான் என்றும் அது தொடங்குகின்றது

  பலமான வாலியை, பத்து தலை ராவணனைக் கொன்ற அந்த விஷ்ணு ஹரிக்காக கட்டினான் எனக்கூறி
  பின் அந்த மிகப்பெரிய கோவிலின் பெருமை விளக்கம் தங்க கோபுரம் பற்றி விளக்கி சொல்லிபடி

  இன்னும் அயோத்தியை கோவில் நகரம் என குறிப்பிட்டு, பின் மேற்கிலிருந்து வரும் படையெடுப்புகளின் அச்சுறுத்தலையும் குறிப்பிட்டு அதற்கு இந்த அரசன் எதிர்க்க தயாராக இருப்பதாகவும் கூறி
  புகழ் வாக்கியத்துடன் முடிகின்றது”

  இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டியிருக்கின்றது?

  கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டபடுகின்றது, அப்போதே மேற்கில் டெல்லிவரை ஆப்கானிய ஆட்சி வந்திருக்கின்றது, அந்த காலகட்டத்தில் பல ஆலய இடிப்பும் கொள்ளைகளும் நடக்கின்றன, சோம்நாத் காசி என பல ஆலயங்கள் தாக்கி இடிக்கபட்டு கொள்ளையடிக்கபடுகின்றன‌

  அந்த நேரம் இந்த ஆலயம் தாக்கபட்டிருக்கலாம் அல்லது கும்பாபிஷேகம் போன்ற பெரும் நிகழ்வு நடந்து இந்த கல்வெட்டு பதிக்கபட்டிருக்கலாம்

  எது எப்படியாயினும் இப்போது அந்த இடம் இந்து ஆலயம் அதுவும் வாலி, ராவணனை கொன்ற விஷ்ணுவின் ஆலயம் இருந்த இடம் என்பது மிக மிக உறுதியாய் தெளிவாயிற்று

  இப்போது இஸ்லாமிய தரப்பு, அதாவது அறிவுஜீவி கும்பலால் ஏமாற்றபட்ட தரப்பு முன்பு நீதிமன்றத்தில் சொன்ன உறுதி நினைவுக்கு வரவேண்டும்

  “எங்கள் மத த்தில் பிறர் வழிபாட்டுத் தலங்கள் மேல் மசூதி கட்ட அனுமதி இல்லை. ஆகவே பாபர் காலத்தில் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி கோவில் இருப்பது உண்மையாக இருந்தால் நாங்களே அந்த இடத்தை விட்டு விலகி விடுவோம்”

  ஆனால் அதை செய்யவிடாதபடி இந்த சக்திகள் குழப்பியடித்தன, கடுமையாக குழப்பின‌

  ஏன் என்றால் அயோத்தி மீட்கபட்டால் இந்து சக்திகள் வளரும் அது அவர்களின் குழப்பவாத பிரிவினைவாத அந்நிய சக்திக்கு ஆதரவான அரசியலுக்கு ஆபத்த்து முக்கியமாக அவர்கள் நீண்டகால திட்டபடி எதிர்கால்த்தில் குழப்பம் பல விளைவித்து நாட்டை துண்டு துண்டாக ஆக்கமுடியாது

  அதனால் கடுமையாக் முழு சக்தியோடு ஏதிர்க்க தொடங்கினார்கள்

  (இந்து துவேஷ தரப்பின் பெரிய பொய்களை துணிச்சலாக எதிர்த்த பி.பி லாலும், கே கே முகமதுவும் காங்கிரஸ் ஆட்சிகாலந்தில் பெரிய பாதிப்புள்ளாகினர்

  பின்னர் மோடி ஆட்சியில்தான் பி பி லாலுக்கு பத்மவிபூஷனும் , கே கே முகமதுவுக்கு பத்ம ஸ்ரி பட்டமும் வழங்கி நாட்டுக்கான அவர்களின் சேவைக்கு அங்கிகீராம் தரபட்டது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *