சக்தி வழிபாடு, தாயன்பு என்னும் அடிப்படை உணர்வு, பூமி, இயற்கை, பிரபஞ்சம், சிவசக்தி இணைவு – ஐக்கியம், பிரம்மம் – மாயை, மஹாமாயை, ஆற்றல்கள், காளி, லலிதா தேவி, சக்தியின் ரூபங்கள் ஆகிய விஷயங்கள் குறித்துப் பேசும் ஆழமான உரை இது.
“நல்ல ஒரு உரை. முழுவதுமாக கேளுங்கள். ஆற்றொழுக்காக அருமையான தத்துவங்கள் விளக்கப்படுகின்றன. சாந்தமான நடையில் சக்தி தத்துவம் அனைத்துயிர்களிலுமென காட்டிச் செல்கிறார். தன்னுணர்வாய் விரிவதை காட்டுகிறார். ஏமாற்றும் எளிமையின் உள்ளே நல்ல ஆழமும் செறிவும் கொண்ட கச்சிதமான உரை” என்று அரவிந்தன் நீலகண்டன் இந்த உரையைத் தனது ஃபேஸ்புக் பதிவில் பாராட்டியுள்ளார்.
2026 பிப்ரவரி 6 வெள்ளி மாலை கோயம்புத்தூர் ஶ்ரீ சாரதாம்பாள் கோயில் (ரேஸ் கோர்ஸ் சாலை ) அரங்கில் நிகழ்ந்த உரையின் வீடியோ பதிவு.
இந்த நிகழ்ச்சி சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சங்கராசாரிய சுவாமிகளின் அருளாசியுடன் இயங்கும் Aham Brahmaasmi Foundation வேதாந்தக் கல்வி அமைப்பால் ஏற்பாடு செய்து நடத்தப் பட்டது.
