பெரியபுராணம் – அரசியல் சூழ்ச்சியும் ஆன்மீக மாட்சியும்

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள் என்பது நாட்காட்டியை பார்த்த போது தெரிந்தது. பிரதோஷமும் கூட. எனவே திட்டமிடாமலே இன்று இந்த வீடியோ வெளிவருவது சந்தோஷமாகவே இருக்கிறது.

அண்மையில் பார்த்த வீடியோ ஒன்றில் அருணன் எனும் கம்யூனிஸ சித்தாந்தி ‘ஒரு பேரரசனும் அவனது அமைச்சருமாக தமிழ்நாட்டுக்கு பெரியபுராணம் எனும் இலக்கியத்தை தந்திருக்கிறார்கள் என்றால் அதில் அரசியல் காரணம் இருக்குமா இருக்காதா?’ என வினவி கேட்போரை சிந்திக்கச் சொல்லியிருந்தார். அவர் அதன் மூலம் பரப்ப நினைக்கும் கருத்து வெளிப்படை. பெரியபுராணம் மதம் மூலம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்த அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட நூல் என்பதுதான் அது. அதை கேட்ட போதே இதற்கு விளக்கம் அளிக்க வேணுமென்று நினைத்தேன். அதன் விளைவே இந்த வீடியோ.

பெரியபுராணம் ஏன் எழுதப்பட்டது? பேரரசன் ஒருவனின் தலைமை அமைச்சரால் எழுதப்பட்டது பெரியபுராணம். அதை யானையில் ஏற்றி வீதிவலம் வந்தான் அரசன். அமைச்சரை யானையில் அமர வைத்து அவன் கவரி வீசினான். என்றால் இதன் பின்னால் அரசியல் இருக்குமா? இருக்காதா?

இந்த கேள்விக்கு விடை இந்த 19-நிமிட வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *