மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

View More மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பைத் தேடிவந்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு — எந்தவிதமான உரிமையோ, அதிக ஊதியமோ இல்லாது அனுதினமும் உழைக்கும் அந்த வாயில்லா[?] ஜீவன்களுக்கு குடியுரிமை வேண்டுமென்றால் அரபுமொழி நன்கு எழுதப்படிக்கப்பேசத் தெரிந்டிருக்கவேண்டும் என்று சொல்லும் அரசு, இது எதையும் எதிர்பார்க்காது, அரபுமொழியே தெரியாத ஒரு ரோபாட் பெண்ணுக்குக் குடியுரிமை எப்படி வழங்கியது என்று பலரும் கேள்விக்கணை தொடுக்கிறார்கள். தலைநகரான ரியாதில் இருபது சதவிகிதமே தரைக்கடி சாக்கடை வசதி உள்ளது.  இந்த அரசு அடிப்படைத் தேவையையே நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ரோபாட்டுகளுக்காகப் புது நகரை உருவாக்க முனைகிறதே என்ற கோபமே அது. “வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையே என்று பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இங்கிருக்கும்போது ஸோஃபியா தன்னிஷ்டத்திற்கு அலைந்து திரிவது எங்ஙனம்?” என்று வெதும்புகிறார் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான அலி அல் அகமது.

View More இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

ஞாயிறு, பக்ரி-ஈத், ரம்சான் போன்ற சமயப்பண்டிகைகளின்போது, அனைத்துச் சமயத்தோரும், சமயமறுப்பாளரும் ஒன்றுகூடி, நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளை வாழ்த்துகிறார்கள்.  இப்படி வாழ்த்துவது சமயநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாராட்டத்தகுந்த  ஒரு நற்செயலே ஆகும்… ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப்படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன….

View More ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

View More கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.
“பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.”

View More திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

கையாலாகாதவனாகிப் போனேன்! — 5

நீ கோட்டும் சூட்டும் போட்டு ஆபீசுலே வேலை பார்க்கற சாப். உன் உலகம் வேற. நான் மூட்டைதூக்கிப் பொழப்பு நடத்துறவன். ரெண்டு வருசம் முன்னால குடிச்சுட்டுப் இவளைப் போட்டு அடிச்ச இவ புருசனை நீ கேட்டமாதிரி ஏண்டா அடிக்கறேன்னு கேட்டேன். அவனும் நான் உங்கிட்ட சொன்னமாதிரி, அடிக்கறத நிறுத்தறேன். தில் இருந்தா இவளையும், இவ புள்ளையையும் கூட்டிக்கிட்டுப்போடான்னான். பாவப்பட்டு இவ புருசன் கிட்டேந்து இவளையும், இவ பிள்ளையும் நான் சேர்த்துகிட்டேன். என்னால அப்படிச் செய்யமுடியும். என் உலகம் அப்படி. உன்னால முடியாது. எங்க வாழ்க்கை ஒனக்குப் புரியவும் புரியாது. இவனை இப்படி நான் தண்டிக்கலேன்னா, இவனும் ஒரு தெருப்பொறுக்கியா, கேப்மாரியா, திருட்டுப்பயலாத்தான் அலைவான். போலீசு இவன்பின்னாலே சுத்தும். ஜெயில்தான் இவனுக்கு மாமியா வூடாகிப்போகும். உனக்குச் சொன்னாப்புரியாது.

View More கையாலாகாதவனாகிப் போனேன்! — 5

கையாலாகாதவனாகிப் போனேன்! – 4

“இவன் அந்தத் திமிர்பிடிச்சவன் வீட்டுக்குத் திங்கப்போகாம இருந்திருக்கணும். இல்லே, போனான். ஒண்ணுக்கும் உதவாத அந்தப்பய சொன்னான்னா, நீயாடா நாயே சோறு போடறே அப்படீன்னு கேட்டுட்டு, அங்கேயே தின்னுட்டு வந்திருக்கணும். ரெண்டுலே ஒண்ணையும் செய்யாம, பொட்டச்சிமாதிரி திரும்பிவந்திருக்கான்.

“ஒருபொழுது பட்டினிகிடக்கட்டும். அப்பத்தான் கோழைத்தனம் போகும்.” என்று விடுவிடென்று வெளியே நடந்து சென்றுவிட்டார்.

நான் சாப்பிடாததனால் அன்று அப்பாவும் அன்று மதிய உணவு உண்டிருக்கமாட்டார் என்று நான் உறுதியாக இன்றும் நம்புகிறேன். அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்க, நெஞ்சில் வலுவுடன் இருக்கவேண்டிய நிலை வரும்பொழுதெல்லாம் அன்று நடந்த நிகழ்ச்சியையும், எனது கையாலாகாத்தனத்தையும், என் தந்தையின் அறிவுரையையும் நினைவுக்கு கொண்டுவருகிறேன்.

View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 4

கையாலாகாதவனாகிப் போனேன்! – 3

வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் என்னைப் பார்த்து ஏளனம் செய்தது. நான் புது புஷ்கோட்டுடனும், பாண்ட்டுடனும், ஒரு கோட்டையைக் கைப்பற்றிய வீரனின் பெருமிதம் முகத்தில் தெரிய கம்பீரப்பார்வையுடன் மரக்குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்துடன், என் தங்கையுடன் நான் நிற்கும் படமும், என் தங்கை குதிரையின் கடிவாளக் கம்பைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படமும் என்னைப் பார்த்துச் சிரித்தன.
ஒவ்வொருமுறை அப்புகைப்படத்தைப் பார்க்கும்போதும், ஒரு கையாலாகாத உணர்வு என்னுள் எழுந்தாலும், என் மகிழ்ச்சியை என்னுள் நிரந்தரமாக்குவதுபோல அந்த புது புஷ்கோட்டின் புகைப்படம் ஒருங்கே தந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் படம் இன்னும் என்னிடம் இருக்கிறது.

View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 3

கையாலாகாதவனாகிப் போனேன்! – 2

“நீ சொல்லறது நல்லா இருக்குடா. இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு. இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக? கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும். அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று இழுத்தாள் மூதாட்டி.
“வாங்க ஐயா. தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன். அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல. சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிக்கப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறேன்.”

View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 2

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்

ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்? நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது. ஊர்வலம் முடிந்ததும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார். அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது

View More அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்