வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்… சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்…
View More ஒரு பயணம் சில கோயில்கள்Author: கிருஷ்ணன் சந்திரசேகரன்
The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை
சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம்.
View More The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமைதொன்மங்களையும் நாயகர்களையும் தேடி…
மைக்கேல் எடுத்திருக்கும் நான்கு ஆவணப்படங்களும் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை முடிவான விடை காணப்படாத தொன்மங்களைப் பற்றியது. அந்த தொன்மங்களை சார்ந்த நாயகர்களைப் பற்றியது – அவர்கள் உண்மையில் இருந்தார்களா ? காலப்போக்கில் மருவி மருவி முற்றிலும் உண்மை அல்லாத புணைவாக மாறக்கூடிய தன்மை கொண்ட தொன்மங்கள் எல்லாம் வெறும் புணைவா என்று ஆராய வரலாற்றின் பாதையில் பின் செல்கிறார்.
View More தொன்மங்களையும் நாயகர்களையும் தேடி…ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்
பொலன்ஸ்கியின் அபிமானிகள் பெரும்பாலோனோர் ஸ்தாபிக்க நினைப்பது போல பொலன்ஸ்கி மனிதரில் புனிதரெல்லாம் கிடையாது. இருண்மை நிறைந்த சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளையும் மனசிக்கல்களையும் சந்தித்த பொலன்ஸ்கிக்கு பெண்கள் ஒரு மருந்தாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இளம் பெண்கள் மீது அவருக்கு இருக்கும் மோகத்தை பொலன்ஸ்கியே வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்.
View More ரோமன் பொலன்ஸ்கி கைது – தொடரும் வினையின் நிழல்டைம் (கொரிய திரைப்படம் 2006)
புதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய மனுஷியாக நம்பி காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் – தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடி போகப் போவதாக முகம் மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான். அவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ,…
View More டைம் (கொரிய திரைப்படம் 2006)உலகத் திரை: The Shawshank Redemption
நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் படம். ஆங்கிலம் நன்றாக புரிந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு பார்க்க வேண்டாம் – எல்லா கதாபாத்திரங்களும் சரமாரியாக கடின வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். என்னுடைய all time favorite பட்டியலில் இந்த படத்திற்கு தனியிடம் உண்டு. ஒரு வேளை உங்களுக்கும் பிடிக்கலாம் ……
View More உலகத் திரை: The Shawshank Redemptionஉலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்
நம்பிக்கையும் ஆழ்ந்த வேட்கையும் கொண்ட மனிதனாக வண்ணிஹாமி, பிரசன்ன விதனாகே இயக்கிய “Death on a full moon day” திரைப்படத்தில் நம் கண்முன் தோன்றுகிறார். ஒரு மணி நேரத்திற்கும் சற்றே அதிகமாக ஓடும் படம். ஆனால் அதன் தாக்கம் அந்த ஒரு மணி நேரத்தையும் தாண்டியதாக இருக்கிறது – எந்த ஒரு சிறந்த திரைப்படத்தைப் போல.
View More உலகத் திரை: Death On a Full Moon Day – சிங்களத் திரைப்படம்