நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் அவர். எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள்? திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்?….
View More தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்Author: ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்
பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது? சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார்… பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள்…
View More விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம்… நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயல்பை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான். இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?..
View More சென்றதினி மீளாது மூடரே : ஓர் விளக்கம்பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்
ஞாலத்தில் விரும்பியது நண்ண வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் எண்ணியது எய்தும் என்று பாரதி கூற வருவது போல் படுகிறது. விருப்பம் என்பது நமது இச்சையை மட்டும் சார்ந்து நிற்பது. ஆனால் எண்ணுவது என்பது உலகில் உள்ள புற அக மெய்மையைக் கவனத்தில் கொண்டு எழும் மனத்தின் செய்கை என்று படுகிறது… மனத்தின் விழியில் பட்டதை மனம் நயப்பது விருப்பம். மனத்தின் விழியில் அல்லாமல் ஜீவனின் விழியில் பட்ட சிவம் என்னும் நன்மையான பொருளை நாடுதல் எண்ணம் என்று ஒருவாறு வித்யாசம் காணமுடிகிறது. …
View More பாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்கந்தரலங்காரம்: ஒரு தியானம்
வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…
View More கந்தரலங்காரம்: ஒரு தியானம்இந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.. ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார். ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்…
View More இந்துமதமே உலகிற்குத் தன்னை எடுத்துரைத்தது: சுவாமி விவேகானந்தர்சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளியவை. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது… வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது…
View More சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்வேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்
மதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய முறையில் அரிய கருத்துகளைத் திரட்டி சாதாரண மக்கள் நோகாவண்ணம் கற்கத் தருவாரேயானால், நீங்களே இந்த அம்மையாரின் சிறப்பை ஊகித்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த தெளிவு இவர் இயற்றிய வேதாந்த சாஸ்திர பலதிரட்டுப் பாடல் நூலில் தெரியவருகிறது…
View More வேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்
புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது… கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்… எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே…
View More பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]
கேவலம் ஒரு புவிப்பரப்பை தேவியின் சொரூபமாகக் கருதுவதா என்று நினைக்கும் கடுஞ்சாக்தர்கள் சாக்தத்தின் முக்கியமான கருத்தொன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நலம்… தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மிகக் கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய கால வசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது… நாம் இப் பாரத மாது நிரந்தர கன்னி யென்பதாகவும், இவளுக்கும் நரை, திரை முதலியன இல்லையென்பதாகவும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்…
View More பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]