திருப்பூரில் பாரதியார் குருகுலம்

திருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது. [..]

View More திருப்பூரில் பாரதியார் குருகுலம்

தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையிலான ஊடலும் கூடலும் தேர்தல் காலத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, சுயமரியாதைச் சுடரொளியாம் கருணாநிதி நடத்திய அபத்த நாடகம் ஆளும் கூட்டணியின் முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்தியது… ஒரே நாளில், கருணாநிதிக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு எதிரானதாக மாற்றிக்கொள்ளும் வல்லமை ஜெயலலிதா தவிர வேறு யாருக்கேனும் வாய்க்குமா என்பது சந்தேகமே… அல்லது, மக்கள் வெற்றி- தோல்வி பற்றிய எந்தக் கவலையும் இன்றிக் களம் காணும் பாஜகவை சிறிது திரும்பிப் பார்க்கலாம்…

View More தேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி

மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். […] அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே, மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.

View More மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிக மோசமான, ஊழல்மயமான, கீழ்த்தரமான அரசு என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்ட மன்மோகன் அரசுக்கு, இனிமேலும் தி.மு.க.வைக் காப்பது முடியாத காரியம் என்பது புரிந்துபோனது. ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கிலாவது காங்கிரஸ் வெல்ல வேண்டுமானால், ‘ஊழலை சகிக்க முடியாது’ என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காங்கிரஸ் புரிய வைத்தாக வேண்டும் […]

View More தேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க

பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு காங்கிரஸ் வடிவில் இப்போது பாடம் கற்பிக்கப் படுகிறது என்பது அவரது வாதம். எப்படி இருப்பினும், தி.மு.க- காங், கூட்டணி நிர்பந்தங்களின் அடிப்படையில் நீடிக்கவே வாய்ப்புள்ளது. எனினும் அதில், முன்பு போல தி.மு.க.வின் கரம் ஓங்கி இருக்காது என்பது நிதர்சனம்.

View More தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க

திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]

உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை… நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது… சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.

View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]

திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது… அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின… இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..

View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது… ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்… கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா?… எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, ‘ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை’ என்று நாமும் ஏற்போம்…

View More ராசா கைது ஆரம்பமே… இனிதான் இருக்கிறது பூகம்பமே!

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?

View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1

கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம், நன்றியுணர்வுடன் கூடிய ஆசை போன்றவற்றால் கருத்துக் கணிப்புகள் மக்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி, தவறாக வழிநடத்துகின்றன [..] தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்தால், ஊடகங்களின் அதர்மம் புரியும்!

View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1