முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்…. உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும், நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும். நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது…. நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம். உதவியானது வெளியிலிருந்து வராது. நமக்குள்ளிருந்தே தான் வரும்.
View More எழுமின் விழிமின் – 34Author: ஆசிரியர் குழு
ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு
கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின்…
View More ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்குஹைதராபாத் குண்டுவெடிப்புகள்
இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் .. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்.. இழந்தவை…
View More ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்எழுமின் விழிமின் – 33
உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை…. பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணிவகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்…..
View More எழுமின் விழிமின் – 33மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று…
View More மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்கும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டு சிறப்பு விழா. பிப்ரவரி 3ம்…
View More கும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்எழுமின் விழிமின் – 32
நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டு, பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக் கூடிய போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்தைய, சிதைந்து குலைந்து போன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழி/துறை இல்லாமல் போகவே இவர்கள் மணி அடிப்பதிலும் மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில், பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பிவிடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறி பிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது”….
View More எழுமின் விழிமின் – 32எழுமின் விழிமின் – 31
சுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது. வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்….. “நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்” என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்…. மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்….
View More எழுமின் விழிமின் – 31விவேகானந்தரின் வீர மொழிகள்
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தாள் என்கிற இந்த மகத்தான தருணத்தில் சுவாமிஜியின் வீரமொழிகளுடன் இணைந்த சில படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்… “வேலையில் ஈடுபடுங்கள், அப்போது உங்களால் தாங்க முடியாத மகத்தான சக்தி உங்களுக்குள் வருவதைக் காண்பீர்கள். பிறருக்காகச் செய்யப் படுகிற சிறுவேலை கூட நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்ப வல்லது. பிறர் நலத்தைப் பற்றி சிறிதளவேனும் சிந்திப்பதனால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது… எந்த நாடு பெண்களை மேன்மைப் படுத்தவில்லையோ அந்த நாடும் சமுதாயமும் எப்போதும் உயர்வடைந்ததில்லை…
View More விவேகானந்தரின் வீர மொழிகள்எழுமின் விழிமின் – 30
ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன. நாமும் அதுபோலவே இருக்க வேண்டும்…. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவை தான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், ‘கண்கள்’ என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது….. இதய பூர்வமான உணச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது….
View More எழுமின் விழிமின் – 30