மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

நரேந்திர மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொன்டவர். அடுத்த தேர்தலைக் குறித்து அல்லாமல், அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவர்… உங்களையும் என்னையும் போலவே, மிக எளிமையான சூழலில் ஒரு தேநீர்க் கடைக்காரரின் மகனாக அவர் பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலும் ரயில்வே பிளாட்பாரத்தில் வேலை செய்தார். நேர்மையின், மன உறுதியின், தேசபக்தியின் சின்னமாக அவர் திகழ்கிறார்… நமது சரியான தேர்வை எண்ணி நமது குழந்தைகள் பெருமைப் பட வேண்டும். மிகச் சிறந்த பிரதமரை அளித்தோம் என்று வரும் தலைமுறைகள் நன்றி கூறும் வகையில் நமது தேர்வு இருக்க வேண்டும். அதற்காகத் தான், நான் திரு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறேன்….

View More மோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்

பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

பாஜகவின் தேர்தல் அறிக்கை நாடெங்கும் புதிய நம்பிக்கை அலையை உருவாக்கியுள்ளது. பொதுத் தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த 52 பக்க அறிக்கையின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து தினமலர் ஒரு நேர்த்தியான 8-பக்க சிறப்பிதழை ஏப்ரல்-8 அன்று வெளியிட்டது. வாசகர்களின் வசதிக்காக அந்த சிறப்பிதழின் பக்கங்களைத் தொகுத்து ஒரே pdf கோப்பாக வழங்குகிறோம். இந்த கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து படிக்கலாம்… பல்துறை பொருளாதார வளர்ச்சி, தேசப் பாதுகாப்பு, மக்கள் நலன், கலாசார உணர்வு என்று பல அம்சங்களிலும் சிறப்பான கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை உள்ளது…

View More பா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)

தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1

தினமும் 10 மணி நேரம் மின் வெட்டை மாநிலம் முழுவதும் செய்து வரும் ஜெயலலிதாவுக்கு இந்த முறை மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டாவிட்டால் அவர் அவர்களை இலவசங்களை வாங்கிக் கொள்ளும் பிச்சைக்காரர்களாக மட்டுமே வருங்காலத்திலும் நடத்துவார்…. தமிழகத்தில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர்களில் பெண் ஒருவர் கூட இல்லை என்பது ஒரு பெரும் குறை. வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை அல்லது வானதி இருவரில் ஒருவர் அறிவிக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இருவரும் இல்லாமல் “கல்வித் தந்தை” ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது….

View More தமிழகமும் 2014 தேர்தலும்: கருத்துக் கணைகள் – 1

அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்

ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….

View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்

முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும், சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை) என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது. கடந்த 12 ஆண்டுகளாக தேசபக்தியும் இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு வளர்ந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் செயல்பாட்டுத் திட்டங்களையும் விவரிக்கிறார் இந்திரேஷ் குமார்…

View More முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா…

View More 1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படை மானுட வாழ்வாதார உரிமைகள் என அடிப்படைகளை இணைக்கும் பார்வையை அவர் தன் பொது வாழ்க்கை முழுவதும் முன்வைத்து வந்தார். தமிழுணர்வாளர்கள், சுதேசி அமைப்பினர் என அனைவருக்கும் அவரது பங்களிப்பும் பார்வையும் முக்கியமானவையாக இருந்தன….. இயற்கை விவசாய மீட்டெடுப்பும் முன்னகர்தலும் இந்த பண்பாட்டு மீட்டெடுப்பில் ஒரு முக்கிய மைய அம்சமாகும். சாதி மத மொழி எல்லைகளுக்கு அப்பால் இந்த மண்ணையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்ட ஒரு ஆன்மிக மக்கள் இயக்கமாக இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த நம்மாழ்வார் வாழ்க்கையே ஒரு தவமாக வாழ்ந்த ரிஷி.

View More நம்மாழ்வார்

DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்

பேஸ்புக்கில்  இந்து தர்மத்தின் பெருமைகள்,  இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி…

View More DHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்

அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

கந்த சஷ்டி முருகனின் விழா. முருகனை ’அக்னி புஷ்பம்’ என்பர். அந்த அக்னி புஷ்பத்தை அக்னிச் சிறு பேழைகளின் முகப்பு எவ்வாறு சித்தரிக்கிறது? பேரா.என்.சுப்ரமணியத்தின் ‘அமுதசுரபி’ நூலகத்தில் உள்ள தீப்பெட்டி பட சேகரிப்பில் இருந்து ஒன்பது சித்திரங்கள்…

View More அக்னிப் பேழைகளில் அக்னி புஷ்பம்

மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!

தமிழகத்தின் திருச்சியில் ‘இளந்தாமரை மாநாடு’ செப்டம்பர் 26, 2013-இல் நடைபெற்றதை அனைவரும் அறிவர்.…

View More மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!