ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது.இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது… இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள்….

View More ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

காலா: திரைப்பார்வை

ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்… மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்…இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்…

View More காலா: திரைப்பார்வை

தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்

எள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான் மிகைல். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான்.. டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது. சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி…

View More தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்

பென் (Ben) : திரைப்பார்வை

‘அற்புத சுகமளிக்கும்’ பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் பேய் பிடித்தவர்களை விரட்டுவதாகவும், தீராத நோய்களை மேடையிலேயே அதிசயமாக குணமாக்குவதாகவும் வெறித்தனமாக கத்தி, கூப்பாடு போடும் அட்டூழிய வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த வெறிக் கூச்சல்களை கிண்டலடித்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் இவை உண்டாக்கும் கடுமையான உளவியல் பாதிப்புகளும், இவற்றின் பின்னால் உள்ள பிறமத -குறிப்பாக இந்து மத- காழ்ப்புணர்வும் எவ்வளவு தூரம் அப்பாவிகளின் சீரழிக்கும் என்பதை 2015ல் வந்த இந்த மலையாளப் படம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி, மிக தைரியமாகக் காட்டுகிறது. கிராமத்து பள்ளியில் படித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கும் ஒரு சிறுவனை அவனது அம்மா நகரத்தில் ஒரு பெரிய கான்வென்ட்டில் படிக்க வைக்க விரும்பி செய்யும் சில பலவந்தமான காரியங்களும், முட்டாள் தனமான முடிவுகளும் அதன் விளைவுகளும் கதை…..

View More பென் (Ben) : திரைப்பார்வை

பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

“பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர்…

View More பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

பாகுபலி: திரைப்பார்வை

ஒவ்வொரு ஃப்ரேமிலும் நமது விழிகளை விரியவைக்கும் விஷுவல்கள் அலையலையாக வந்து மோதுகின்றன. மற்ற பலவீனங்களை எல்லாம் கூட, இந்தப் படத்தின் உண்மையான ஹீரோவான “காட்சி” பின்னுக்குத் தள்ளி விடுகிறது என்றே சொல்லவேண்டும். ‘சினிமா’ என்பது அடிப்படையில் *காட்சி ஊடகம்* என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் ராஜமௌலி… இந்தப் படத்தில் வீர நாயகர்களின் சித்தரிப்பு இந்துத்துவத்தை மறைமுகமாக பிரசாரம் செய்கிறது என்று சில முற்போக்குகள் புலம்புகிறார்கள். இது நாள் வரை அமர் சித்ரகதா படக்கதைகளிலும், அம்புலிமாமாவிலும் நமது இதிகாச புராணங்களிலும் இல்லாத எந்த விஷயத்தை இந்தப் படம் காண்பித்து விட்டது என்று இப்படிக் குதிக்கிறார்கள் தெரியவில்லை….

View More பாகுபலி: திரைப்பார்வை

ஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை

படம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார்… சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் ‘பழைய ஸ்டைல்’ காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன? மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல…

View More ஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை

ஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை

கதை ஒன்று இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி முடிகிறது? அன்பால் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டிய ஒரு தாம்பத்திய வாழ்க்கையை ஒரு வயோதிகப் பார்வை எனும் பயத்தால் தொடங்க வைக்கிறது. முன்பெல்லாம் “பயபக்தி” என்பார்களே. அதுதான் இது. பார்வையாளர்களை அறிவு மிக்கவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக பயத்தால் பணியச் செய்தவர்களாக ஆக்குகிறது; அறிவால் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு உலக அனுபவத்தையும் ஆய்ந்து அறிந்து வாழ்க்கையின் பயனை அறிந்துகொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகிறது. ஒரு வெள்ளைத் தாளைப் பார்த்து விட்டுத் தன் எண்ணங்களால் தன் மனத்தை நிரப்பிக் கொள்பவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்..

View More ஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை

ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்

கயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி என்ற கிழவர் திரைக்கதை எழுதி, குட்டி பத்மினி போன்ற ஜோக்கர்களின் இயக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் வருகிறது என்பது தமிழ் நாட்டின் சாபக் கேடு… 1989ல் ராமானுஜாசாரியார் என்ற தமிழ்த் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. தூர்தர்ஷனில் இந்தப் படத்தை அப்போதே நான் பார்த்திருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கராசார்யா மற்றும் இன்னும் சில விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற கலைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் இந்தப் படத்தின் இயக்குனர்…

View More ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்

கத்தி – திரைப்பார்வை

இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு, நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது… ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்… எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது…உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி கூறுகிறேன், “போலி மதச்சார்பின்மை என்பது மிகப்பெரும் சிலந்தி வலை”. அதில் சிக்கிய சிறுபூச்சியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்…

View More கத்தி – திரைப்பார்வை