சென்னை சைவ சித்தாந்த பெருமன்றத்தால் வெளிக்கொண்டுவரப்பட்ட நூலொன்று “திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்பது. சென்னையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தமிழக தொல்லியல்துறையில் பணியாற்றியவருமான முனைவர்.ஆ.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்டது… இரண்டு கேள்விகள் இயல்பாகவே நம்முள் எழுகின்றன. ஒன்று, மாணிக்கவாசகர் எடுப்பித்த கோயில் உண்மையில் எது? இரண்டு, இன்று இருக்கும் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றம், வளர்ச்சி என்பதை எப்படி அறியவேண்டும்? இதில் முன்னதற்கு விடையாக இரண்டாம் கட்டுரையும், பின்னதற்கு விவகாரமாக முதல் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டாம் கட்டுரையில் தான் ஆராய்ச்சியாளர் பல சூக்ஷும முடிச்சிகளை அவிழ்ப்பதாக எண்ணி, சைவ அடியார்கள் தம் நம்பிக்கையை அசைத்து விளையாட முனைந்து , வரலாற்று எச்சங்கள் ஒன்றும் தெளிவாக இல்லாத காரணத்தால், கிடைத்த செதில் கற்களை கொண்டு ஒரு பெரிய கற்பனை கோட்டையை கட்டி எழுப்புகிறார்…
View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1Category: புத்தகம்
அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி
1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion, cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன… இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம். எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும்?….
View More அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்விசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது…
View More சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடுநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்
ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட… நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்… ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும்….
View More நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே
திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது…
View More திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களேசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்
சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்…..
View More சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்அருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்
வியாச மகாபாரதத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் பதிப்பித்து வரும் செ.அருட்செல்வப் பேரரசன், அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை மின்னூல்களாகவும் (E-books) வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றை எளிய வடிவில் கதைகளாக மட்டுமே படித்து அறிந்த வாசகர்களுக்கு, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இவற்றுக்குக் கிடைக்கும் வாசக ஆதரவு, மேலும் பல மஹாபாரதக் கதை நூல்களை இதே வடிவில் வெளியிடுவதற்கு அவரை ஊக்குவிக்கும், தூண்டுதலாக அமையும். இந்த மின் நூல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கின்றன….
View More அருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்தமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு
தடாகமலர் பதிப்பகம் வீர சாவர்க்கர் எழுதிய இரண்டு புத்தகங்களைத் தமிழில் வெளியிடுகிறது. இந்துத்துவத்தின் அடிப்படைகள் (தமிழில்: எஸ்.ராமன்) மற்றும் அந்தமானிலிருந்து கடிதங்கள் (தமிழில்: ஓகை நடராஜன்). முன்பு வெளிவந்த 1857 முதல் சுதந்திரப் போர் அல்லது எரிமலை என்ற புத்தகத்தையும் இப்பதிப்பகம் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. மேலும் விவரங்கள் கீழே…
View More தமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடுபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்
கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம் சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு ஒரு நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அவற்றின் வீடியோ பதிவுகள் கீழே… டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்….
View More பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது
வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் – நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்; மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு….
View More வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது