ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவின் ஓர் அங்கமாக பாகவதத்தின் இந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தை விசேஷமாக வாசிப்பது என்பது பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கிறது… நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமே கண்ணன் அருளமுதம் தான், ஆயினும் கிருஷ்ண ஜயந்தி என்றால் அது பெரியாழ்வாருக்கு உரிய நாள்…
View More ஶ்ரீகிருஷ்ண ஜயந்திக்காக பாகவதம் & திவ்ய பிரபந்தம் தொகுப்புCategory: பண்டிகைகள்
குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆதலால், இன்று சூரியோதயத்திலே நாங்கள் வருணனும் மித்திரனும் அர்யமானும் ஆகிய உங்களை சூக்தங்களால் வேண்டுகிறோம் – நீங்களே ‘ருதம்’ என்னும் தேரைச் செலுத்துபவர்கள். ஒவ்வொன்றையும் ஆள்பவனும், அசையும் அசையாப் பொருள்களுக்குத் தலைவனும், உலகெங்கும் சுற்றுபவனுமான சூரியனை, நமக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொணர்வதற்காக, சகோதரிகளான ஏழு குதிரைகள் ஏந்துகின்றன…
View More குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்
இப்பண்டிகை வராக மூர்த்திக்கும் பூமி அன்னைக்கும் பிறந்த நரகாசுரனை அதே வராக மூர்த்தி – பூமாதேவி அவதார அம்சங்களான ஸ்ரீ கிருஷ்ண சத்யபாமாவால் வதம் செய்யப்படும் நாள் என தென்னகத்தில் கொண்டாடப்படுகிறது. அதர்மியானவன் சொந்த மைந்தனென்றாலும் அவனை வதம் செய்யும் பாரத பண்பாடு எங்கே. கடைமட்டத் தொண்டன் முதல் கணக்கற்றோர் செய்த தியாகத்தை ஒரு குடும்பம் மட்டுமே உண்டு மகிழும் கழகம் எங்கே! எனவே திமுகவினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதென்பது சரியானதல்ல. தீபாவளிக்கு கண்ணியமானதல்ல…
View More தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்
பொ.யு 1310ஆம் ஆண்டு இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன் போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை என்ற ஈழத்து சோதிட இலக்கிய நூல், “உரிய நற்பிதிர்கள் இன்பமுறு தீபாவலியாம் எண்ணெய் – மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே” என்று கூறுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) சதுர்த்தசி என்ற குறிப்பும் உண்டு.. இந்த நூலின் காலகட்டத்தில் வடஇலங்கை – குறிப்பாக யாழ்ப்பாணம் பாண்டியப் பேரரசின் தளபதியாக கருதப்பட்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது… ஆக, ஆயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி வருகின்றனர்…
View More எழுநூறாண்டு பழைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் பேசும் தீபாவளித் திருநாள்குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்
வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம்.. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம்…
View More குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம்தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்
தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, வருடப் பெயர் சுபக்ருது ப்லவ அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?” – என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல அற்பத்தனமான பதிவுகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.. வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு உரை எழுதும் மயிலை நாதர் என்ன கூறுகிறார்?.. தை மாதப்பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையைத் தர முடியுமா என்று நேற்று ஒரு நண்பர் கேட்டார். அடித்துத் துவைத்து நொறுக்கப்பட்ட பொய் வரலாறுகளும் திரிபுகளும் தமிழ்நாட்டில் சாவதே இல்லை என்று தோன்றுகிறது…
View More தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்மோதி அரசின் மாபெரும் நதிநீர் இணைப்புத் திட்டம்
ஒரு நாட்டுக்கு மகா அவசியமான வளம் நீர்வளம் அதுவும் இந்தியா போன்ற விவசாய…
View More மோதி அரசின் மாபெரும் நதிநீர் இணைப்புத் திட்டம்வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்
முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் கவர்னர் எல்லிஸ் காலத்திலும் கூட ம்யிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் அடைந்து போன நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது.. திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்திய கருணாநிதி, அண்ணாதுரை, மறைமலை அடிகள் முதலான அனைவரையும் துாக்கி எறிந்து, 300 ஆண்டு வழக்கத்தையும் துச்சமென மதித்து, தை மாதம் இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படும் என்றும், இதுவே தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் எனவும், 2008ல் அறிவித்தார்… கருணாநிதியின் தை மாதம் ஆண்டு பிறப்பு என்ற கலாசாரத் திரிபை நீக்கி, பழையபடி சித்திரையே, தமிழ் ஆண்டு பிறப்பு என ஜெயலலிதா அறிவித்தார். திருவள்ளுவர் தினத்தையும் மாற்றுகிறேன் என்று சொன்னார். அதைச்செய்ய முடியாமல் அவர் மறைந்தது பெரும் குறையே…
View More வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்
சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் வரைகூட காளையை அடக்குபவர்கள் அந்தப் போட்டியை நடத்தும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் பங்குபெற்று, நெற்றி நிறைய விபூதி பட்டை இட்டுக்கொள்வார்கள். வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்கள். இப்போதைய போட்டிகளில் பங்குபெறுபவர்கள் விபூதி இட்டுக்கொள்வதில்லை. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு களம் காண்பதில்லை… காளையை அடக்குவதற்குப் பின்னால் என்ன மனநிலை செயல்படுகிறது..? ஆண் என்கிற கர்வம். ஊரில் எல்லார் முன்னாலும் வீரனாக வலம் வர வேண்டும் என்ற ஆசை. பெண்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற ஆணாதிக்க மனம்….
View More சல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர்.. விஜயநகர சாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது…
View More தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன?