பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள்….
View More இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு
“உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்…. உலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை…உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும்…
View More உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்புதமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலுள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஒரு” தலைமை அடிமை”யாகவே உள்ளன. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாநில ஆட்சியைக் கைப்பிடிக்க பிஜேபி தகுதியான ஒரேயொரு தலைவரைக் குறைந்த பட்சம் பத்து வருடங்களுக்காகவாவது வைத்துக் கொள்ளாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது. தலைவரை அடிக்கடி மாற்றுவது என்பது மாநிலத்தில் நான் உன்னை விடப் பெரியவன் என்ற மனோவியாதியை மட்டுமே தலைவர்களுக்குள்ளாக உருவாக்கும்…. கொள்கை, கட்சி அனைத்தையும் தாண்டி தனி நபர் துதிதான் மிக முக்கியமானது என்ற அடிப்படையில் தான் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. மக்களின் உணர்ச்சியைப் பெருக்குகிற, ஹீரோயிச பாணியிலான ஒரு தலைவரை பிஜேபியினர் அடையாளம் காணாத வரை தமிழகத்தில் பிஜேபி வளராது என்பதே நிதர்சனம்..
View More தமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்?செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது என்பது இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு. குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இந்தியா இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல… இந்தியாவில் கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா என்றெல்லாம் இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா அறிவியல் ஆராய்ச்சிகளில் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு செய்யும் இந்த புரட்சிகளின் பிரச்சினைதான் என்ன? இந்த நிர்மூடர்களின் கேள்விகளுக்கான எனது எளிய பதில்கள்…. என் அப்பா தான் குடியிருக்க வீடு வாங்கிய பின்னர்தான், தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் தான், என் அம்மாவுக்கு நகைகள் வாங்கிய பின்னர் தான், எங்களுக்கு எல்லாம் நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுத்த பின்னர்தான், எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படித் தள்ளிப் போடவும் முடியாது. இதைத்தான் ஒரு அரசாங்கமும் செய்யும்….
View More செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்மாற்றுப் பாலின ஆன்மிகம் -1
ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு.
View More மாற்றுப் பாலின ஆன்மிகம் -1தேவையா இந்த வடமொழி வாரம்?
அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. … பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம்
View More தேவையா இந்த வடமொழி வாரம்?மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3
கடந்த 12 வருஷங்களாக குஜராத் மாகாணத்தில் சண்டை சச்சரவுகள் மதக்கலஹங்கள் இவையெதுவும் இல்லாமல் அமைதி நிலவுகிறதே. அதனுடைய மிகப்பெரும் பயனை அடைந்து வருபவர்கள் முஸ்லீம்கள். அதுவும் அடிமட்டத்தில் இருக்கும் முஸ்லீம் சஹோதரர்கள். ரிக்ஷாகாரர்கள் போன்று சமூஹத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் அடைந்த நிம்மதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் உகக்கத் தக்கது…. கேழ்க்கப்பட்ட கேழ்விகள் அனைத்திற்கும் விவாதத்தில் பங்கு பெற்ற ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகளும் தெளிவான நேரடியான பதில்களை அளித்தார்கள் என்பது போற்றத் தக்கது. ப்ரதமராகப் பதிவி ஏற்க இருக்கும் மோதி அவர்கள் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்பது சரியான எதிர்பார்ப்பு….
View More மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். நாலந்தா கொஞ்ச காலத்திற்கு அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே வந்து அதையும் அழித்தார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் தெளிவாக விவரிக்கப்படுகிறது…. ஆனால் “திபெத்திய நூல் ஒன்று நாலந்தா சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுவதாக” மார்க்சிய வரலாற்றாசிரியர் டி.என்.ஜா பதிவு செய்கிறார்…. இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?… மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்… (மூலம்: அருண் ஷோரி, தமிழில்: ராஜசங்கர்)
View More நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2
சஹோதரரே, நம்முடைய விரோதி யார் நண்பர் யார் என்ற விஷயத்தைக் கூட இன்னொரு அரசியல் கட்சி தான் நமக்குச் சொல்லித்தர வேண்டுமா? முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா? குஜராத்தில் மோதி சர்க்கார் ஹிந்துக்களுக்காக அல்லது முஸல்மான் களுக்காக என்று ப்ரத்யேகமாக எந்த கார்யத்தையும் செய்வது கிடையாது. மோதி அவர்கள் எப்போது பேசினாலும் 6 கோடி குஜராத்திகள் என்று அனைத்து குஜராத்திகளுக்காகவும் தான் பேசுவார். அதே போல ஹிந்துஸ்தானம் என்று வரும் போது 125 கோடி ஹிந்துஸ்தானியரைப் பற்றியே பேசுகிறார். நாம் எல்லோரும் அதில் அடக்கம்…. அருகாமையிலேயே கல்விச்சாலைகள் இன்று இருப்பதால் ஒவ்வொரு கல்லூரியிலும் புர்க்கா / ஹிஜாப் (முகத்திரை) அணிந்து முஸல்மாணிய பெண்கள் கல்வி கற்பதை குஜராத்தின் பல நகரங்களில் இன்று காணலாம். இந்த அளவுக்கு இது வரை குஜராத் மாகாணத்தில் வேறு எந்த முக்ய மந்த்ரியும்…… நரேந்த்ரபாய் மோதி அவர்களைப் போல்….. ஒரு கூர்மையான பார்வையுடன் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கல்வியை அணுகவில்லை….
View More மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1
“மோதி அவர்கள் கிட்டத்தட்ட 20 – 30 நபர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 250 முஸ்லீம் குழுக்களுடன் அவ்வப்போது அளவளாவியிருக்கிறார். ஒவ்வொரு அளவளாவலும் ஒரு மணி நேரமாவது நிகழும். அப்போது மிக வெளிப்படையாக அவர்களுடன் சம்வாதம் செய்வார். அப்போது அவர் சொல்லியிருக்கிறார். குஜராத் மாகாணத்தில் முஸல்மாணியர் ஜனத்தொகை 9 – 10 சதமானம் தான். நீங்கள் ஓட்டுப்போடாவிட்டாலும் கூட நான் ஆட்சியைப் பிடித்து விட முடியும். ஆனால் உங்கள் ஆதரவு இல்லாமல் என்னால் ஒரு முழுமையான ஆட்சி நடத்த முடியாது என்பது நிதர்சனம் என்று சொல்வார். முஸ்லீம்களின் ஓட்டு எனக்கு கிடைக்கிறதா இல்லையா என்பது அடுத்த பக்ஷம். 20 கோடி முஸல்மாணியரை நான் அரவணைத்து செல்ல வேண்டும் என்று சொல்வார்” என்கிறார் ஜாஃபர் ஸரேஷ்வாலா.. குஜராத் மாகாண பாஜக Spokesperson என்ற பொறுப்பில் பணியாற்றும் மோ(ஹ்)தர்மா ஆஸிஃபா கான் சாஹிபா என்ற பெண்மணியும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்…
View More மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1