பாஜகவும் இப்தார் விருந்தும்

இஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம். கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம். அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள்.

View More பாஜகவும் இப்தார் விருந்தும்

தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. … பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம்

View More தேவையா இந்த வடமொழி வாரம்?

படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?

“அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான். உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார்.” திராவிடர் கழகம் செய்யும் இந்த பிரச்சாரம் எந்த அளவு உண்மை? தெரிந்து கொள்ள படியுங்கள்…

View More படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?

தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்

எப்படி சீக்கியர்கள் தங்கள் குருக்களின் பலிதானங்களை தம் வீரர்களின் தியாகங்களை நினைவு கொள்கிறார்களோ அப்படியே தியாகி குமார பாண்டியனையும், பேராசிரியர் பரமசிவத்தையும், ஆடிட்டர் ரமெஷையும் பலிதானி வெள்ளையப்பனையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பலிதான தினங்கள் இந்து ஒற்றுமைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாம் பிரதிக்ஞை எடுக்கும் தினங்கள் ஆக வேண்டும். இந்நிலையில் நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். காவல்துறை செய்யும் கைதுகளுக்கு அப்பால் இந்துக்களாகிய நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்து இயக்கங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த வழக்குகளின் போக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் இங்கு ஜிகாதி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்தால் நிச்சயமாக இந்து இயக்கங்கள் அந்த வழக்குகளை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு எடுத்து சென்று விசாரிக்க அழுத்தங்கள் அளிக்க வேண்டும்.

View More தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்

நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே…

View More நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்

முடிவல்ல தொடக்கம்

பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. … வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் விமானங்கள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. … வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள் இந்திய அரசு வரலாற்றில் ஒரு நல்ல மாற்றம். ஒரு ஆறுதலான மாற்றம். அதை உருவாக்கி அளித்தமைக்காக மோதியின் அரசுக்கு என்றென்றும் தேசபக்தி கொண்ட இந்தியர்களின் நன்றி இருக்கும்.

View More முடிவல்ல தொடக்கம்

பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்

அண்மையில் சில பிரிட்டிஷ் நாட்டுப்புறவியலாளர்கள் புகழ்பெற்ற ‘London Bridge’ என்கிற ‘சிறுவர்’ பாடல் குறித்து சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம் கட்டப்பட்ட போது அங்கு நரபலிகள் கொடுக்கப்பட்டதன் நினைவாகத்தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்றும் மிக அண்மையில் கூட அங்கே நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் ஒருவர் எழுத மற்றொருவர் அதை மறுக்க… ஆனால் பாட்டின் சாராம்சம் ஒரு உண்மையான அல்லது போலியான நரபலி நினைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. நாம் நம் குழந்தைகளுக்கு இந்த புத்திசாலித்தனமான விஷயங்களைத்தான் நாகரிகம் என்கிற பெயரில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்…

View More பிள்ளைத்தமிழும் பியாஜெட்டும்

தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது…. இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்… இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம். … இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம்.

View More தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

காமிக்ஸ் படித்தீர்களா?

உலகமெங்கும் ஒடுக்கப்படும் பண்டைய பண்பாட்டு மானுட சமூகங்களுக்கான உரிமை மையமாக இருக்க வேண்டும். பங்களா தேஷில் ஒழிக்கப்படும் பௌத்த-இந்து மக்கள், குர்திஷ் சமுதாய மக்கள், திபெத்தியர், ஈழத்தமிழர், ரோமாக்கள், ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள், ஆப்பிரிக்க ஆன்மிக மரபினர் ஆகிய அனைத்து மக்களின் ஒன்றுபட்ட மையம் ஒன்றை உருவாக்கி இம்மக்களின் மனித உரிமைகள் குறித்த அறிக்கை ஒன்றை பாரத அமைப்பு ஒன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வர வேண்டும்.

View More காமிக்ஸ் படித்தீர்களா?

வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்

மன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நியமனத்தில் மோதி அரசு நீக்கியதை ஊழலில் திளைத்த காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் …

View More வெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்