தியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்

தமிழ்நாடு காவல்துறையும் உளவுத்துறையும் கோவை குண்டு வெடிப்பின் பிரதான குற்றவாளி மதானி தொடங்கி அப்துல் கரீம் வரை என அனைவரையும் இத்தனை பலவீனமான குற்றச்சாட்டில் கைது செய்யும் திறமையற்றவர்கள் அல்ல என்பதும் உலகத்தரம் கொண்டவர்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்கள். சமூகத்தின் அக்கறையின்மை. இதற்கு நாம் கொடுக்கும் விலை இது. … வெள்ளையன்ஜி எனும் தேசபக்தரின் பலிதானத்தின் ஒன்றாம் ஆண்டு நினைவேந்தல் இன்று. இன்று இந்துக்களாகிய நாம் ஒரு உறுதி ஏற்கவேண்டும். இயக்க ரீதியாக அமைப்பு ரீதியாக இந்த வழக்குகளின் போக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம். ஊடகங்கள் மூலம் தொடர்ந்து நம் பலிதானிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். அந்த உணர்வை மறக்காமல் முன்னெடுப்போம். வந்தே மாதரம்!

View More தியாகி வெள்ளையப்பன்ஜி பலிதானம் – ஓராண்டு நினைவேந்தல்

மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!

நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் (BJP Parliamentary Party) இணைச் செயலாளர் திரு.வி.சண்முகநாதன்…

View More மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!

தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை

தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளைப் பரப்பிவரும் தேசிய சிந்தனைக் கழகம் என்ற அமைப்பு,…

View More தேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை

புத்தாண்டில் ஒரு புது சபதம்!

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில்…

View More புத்தாண்டில் ஒரு புது சபதம்!

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள்…

View More கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி?…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

1959ம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவின் பானுமதிக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா “லத்தீன் அமெரிக்காவில் மக்கள் கடும் ஏழ்மையால் துன்பபடுகிரார்கள். உங்கள் ஊரில் காந்தி இருந்தது போல் எங்கள் ஊரில் அவர்களை நல்ல வழிக்கு கொன்டுவர தலைவர்கள் இல்லை. அதனால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது” என்றார். காந்தியின் சத்தியாகிரகம், அகிம்சை அனைத்தும் அவருக்கு பிடித்ததாக கூறினார். ஊருக்கு திரும்பியதும் காஸ்ட்ரோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு பதில் இப்போது ரஷ்யா மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுவதை லேட்டாக புரிந்துகொண்டார். ரஷ்யா அவருக்கு உதவ மறுத்துவிட்டது. காங்கோவில் நடந்த போராட்டம் தோற்று, பொலிவியா திரும்பினார்…

View More காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர். இந்த பிரசினையின் சில அம்சங்களை விளக்கும் முகமாக தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு “தி மெஜாரிடி ரிப்போர்ட்” என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம் (தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், பாஞ்சஜன்யம் இதழின் ஆசிரியர்)…

View More இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்

ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசும்போது சின்னக் கதைகள் மற்றும் உவமைகள் மூலமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். அவற்றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்…. தமிழகத்தில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் தலையாய தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) அவர்கள். தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். 1957 : நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர், 1964 : நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர், 1982: இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார்….

View More அமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்