தேவையா இந்த வடமொழி வாரம்?

அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில் சமஸ்கிருதம் என எழுதியிருக்கிறது. … பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம்

View More தேவையா இந்த வடமொழி வாரம்?

படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?

“அந்தக் காலத்தில் வெள்ளைக் காரன் மக்களெல்லாம் பிளேக் நோயில் சாகக் கூடாது என்பதற்காக எலிகளைக் கொல்லும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தினான். உடனே, திலகர், நம்முடைய மதத்தை அழிப்பதற்காக வெள்ளைக் காரன் திட்டமிட்டு இறங்கி விட்டான் என்று எலி ஒழிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். முட்டாள்தனமாக அவர் சொல்லவில்லை; அயோக்கியத் தனமாகச் சொன்னார்.” திராவிடர் கழகம் செய்யும் இந்த பிரச்சாரம் எந்த அளவு உண்மை? தெரிந்து கொள்ள படியுங்கள்…

View More படுகொலையைத் தூண்டினாரா பாலகங்காதரர்?

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3

தேவர்களில் தொடங்கி அசுரர்கள், மனிதர்கள் வரையிலான பல நூற்றுக்கணக்கானவர்களின் மனைவிகளை ராவணன் அபகரித்துச் சென்றதே அவன் செய்த பாவங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாவமாகக் கருதப்பட்டது. அவர்கள் அனைவரின் சாபமும், கண்ணீரும் காலத்தால் வீணாகப் போகவில்லை. இறுதியில் சீதை என்னும் பெண் வடிவில் அவனது முடிவிற்கான காரணம் வந்தது. ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களின் மேல் கடவுளர்கள் அனைவரும் பரிதாபம் கொண்டிருந்தாலும், அவனுக்கு சீதையின் மூலம் வரப்போகும் அழிவைப் பற்றியும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இறுதிவரை ராவணன் தன் வழிகளைத் திருத்திக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடுத்த சாபத்தினால் அவன் தன் சக்தியைப் படிப்படியாக இழந்துகொண்டே வந்தான். ஒரு முறை குபேரனின் மகன் நலக்கூபரனின் மனைவி ரம்பையை ராவணன் பலாத்காரம் செய்தபோது அவள் இட்ட கொடுமையான சாபத்தினால், அவன் நிலைகுலைந்து போனான்….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3

இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை

டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் கூறினார்: “ஆக, பகவா கொடியை செங்கோட்டையில் பறக்க விட ஒரு மகரிடம் வந்திருக்கிறீர்கள். சரிதான். இதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். காவிக்கொடியை தேசிய கொடியாக்க கோரும் அந்த மக்கள் இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.” … ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை, தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை ஆகியவற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், இருள் மிகுந்து சமுதாய தேக்கநிலை திகழ்ந்த காலகட்டத்தில் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் இந்துத்துவர்கள்.

View More இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை

தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது…. இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்… இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம். … இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம்.

View More தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன் தமிழாக்கம்: எஸ். ராமன் முந்தைய…

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1

செவி வழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சு வாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேத மந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துகொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1

கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள்…

View More கைகொடுத்த காரிகை: மங்கையர்க்கரசியார்

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்…. பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்….

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி

சோழ வளநாட்டில் காவிரியாற்றின் கரையிலுள்ள சிவத்தலங்களுள் திருப்பழனமும் ஒன்று. திருவையாற்றுக்கு சுமார் 4…

View More கை கொடுத்த காரிகை: அப்பூதி அடிகள் மனைவி