காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்… தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ சதி இத்யாதி) என்று சதிவலை தியரிகளை எடுத்துவிடுவது ஒரு வழக்கமாகப் போய்விட்டது. கிராம தேவதையான காஞ்சி காமாட்சியை பிராமணர்கள் அபகரித்து விட்டார்கள் என்பதும் இதேபோன்ற ஒரு அவதூற்றுக் கதையே அன்றி வேறில்லை…

View More காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 2017 டிசம்பரில் சுதேசிய இந்தியவியல் – 3 (Swadeshi Indology – 3) மாநாடு சிறப்பாக நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக நிகழ்ந்த ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ குறித்த கருத்தரங்கத்திற்கு டாக்டர். பேராசிரியர் கனகராஜ் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ம.வெங்கடேசன், பத்மன், ஜடாயு, தேவப்ரியா ஆகியோர் உரையாற்றினர். ஈ.வெ.ராவின்  சமூக அழிப்புக் கொள்கைகள், தமிழ் ஊடகங்களின் இந்து எதிர்ப்பு மனநிலை, தமிழ் இலக்கியங்களைத் திரித்தும் அவற்றின் இந்துக்கூறுகளை இருட்டடித்தும் திராவிட இயக்கத்தினர் செய்த பிரசாரம், கிறிஸ்தவ மிஷநரிகளின் பொய்கள் ஆகியவை குறித்து இந்த உரைகள் அமைந்தன. பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த நிகழ்வின் முழு வீடியோ பதிவையும் இங்கு காணலாம்…

View More ‘திராவிட இயக்கத்தின் இந்துமத வெறுப்பு’ கருத்தரங்கம்: வீடியோ

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5

கட்டக்கை அடையும் சிவாஜி ஒரு தவறைச் செய்கிறார். ஒரு சிறிய குதிரையை விலைக்கு வாங்கும்போது, அதற்குச் சேரவேண்டிய விலையை விடவும் அதிகமாகப் பணத்தை குதிரைக்காரனுக்குக் கொடுக்கிறார். ஆச்சரியமடையும் குதிரைக்காரன், இதுபோலப் பணம்கொடுக்க முகலாயர்களிடமிருந்து தப்பிய சிவாஜியால் மட்டும்தான் முடியும் எனச் சொல்லவே, சிவாஜி தன் கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்புகிறார்.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4

சிவாஜி மிகவும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடப்பதாகவும், அவரைத் தொந்திரவுசெய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆட்கள் பரபரப்பாக சிவாஜியின் கூடாரத்திற்குள் மருந்துக் குப்பிகளை எடுத்துச் செல்வதும், வெளியே வருவதுமாக இருக்கிறார்கள்.
இத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருந்து தப்பிய ஒருவன், நிச்சயமாக தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆக்ராவுக்குள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பான் என நம்புகிறார். கோபமும், வருத்தமும் தோய்ந்த மனிதராக மாறும் ஔரங்கஸிப், சிவாஜியைக் கண்டதும் கைதுசெய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ராஜா ஜெய்சிங்குக்குக் கடிதம் எழுதுகிறார்.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3

அந்த வீட்டிற்குப் போனால் தனது கதி என்னவாகும் என்பதினை முழுவதும் உணர்ந்திருந்த சிவாஜி, உடனடியாக அங்கிருந்து தப்பத் தீர்மானிக்கிறார். ஔரங்கஸிப் சிவாஜிக்குக் கெடுதல் செய்யத் தயாராகிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அவரை எட்டுகின்றன.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2

தன்னுடைய அடிமைகளாக சேவகம்புரிகிற ஹிந்து ராஜாக்களைப் போல சிவாஜியையும் சாதாரணமாக எடைபோட்டார் ஔரங்கஸிப். ஒரு ஹிந்து அரசனுக்குத் தான் மரியாதை தருவதா என்கிற அடிப்படைவாத மனோபாவமே அவரது அழிவுக்கும், முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கும் அச்சாரம் போட்டது என்பதனை அந்த நேரத்தில் அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜிக்கு உரிய மரியாதைதந்து அவரைக் கவுரவித்திருந்தால் ஔரங்கஸிப்பிற்குத் தென்னிந்தியாவில் ஒரு பெரும் சக்தி துணையாகக் கிட்டியிருக்கும்.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2

அக்பர் என்னும் கயவன் – 18

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  …

View More அக்பர் என்னும் கயவன் – 18

அக்பர் என்னும் கயவன் – 17

பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது… இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற காஃபிர் அந்த நாட்டுக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அவ்வாறு இருக்கிற காஃபிர்களை அவமானங்களுடன் மட்டுமே வாழ இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எதிரான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அந்தப் பகுதியில் வாழும் முல்லாவே தீர்மானிப்பான். இஸ்லாமியச் சட்டம் அந்த முல்லாவின் மூலமாகவே அங்கு வாழும் ஹிந்து காஃபிர்கள் மீது செயல்படுத்தப்படும் என்பதால் ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளையும், ஆலயங்கள் நிர்மாணிப்பதனையும், ஏன் இடிந்த பழையதொரு ஆலயத்தையும் மீண்டும் கட்டிக் கொள்வதற்கான அனுமதியும் கூட மறுக்கப்படும் என்பதே வரலாறு…

View More அக்பர் என்னும் கயவன் – 17

ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1

ஆக்ராவுக்கு சமாதானம்பேசச் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்ட சிவாஜி, ஔரங்கஸிப்பின் பிடியிலிருந்து தப்பிவந்தது ஒரு பெரும் சரித்திர நிகழ்வேயன்றி வேறில்லை. ஏனென்றால் ஔரங்கஸிப்பிடம் சிக்கிய எவரும் உயிருடன் திரும்பியதில்லை — அவரது சொந்த சகோதரர்கள் உட்பட. ஒருவேளை சிவாஜி அந்தச் சிறையிலேயே இறந்திருந்தால் இந்திய வரலாறே முற்றிலும் மாறியிருக்கும். முகலாய ஆட்சியேகூட இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

View More ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1

அக்பர் என்னும் கயவன் – 16

வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், “நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்… அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய தாடியை காஃபிர்களின் ரத்தத்தால் நிறம் மாற்றிக் கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என அக்பரிடம் கூறினேன். பின்னர் குனிந்து அக்பரின் பாதத்தை முத்தமிட எத்தனிக்கையில் அக்பர் தனது கால்களை நகர்த்திக் கொண்டார். ஆனால் நான் வெளியே செல்ல எத்தனிக்கையில் என்னை மீண்டும் உள்ளே அழைத்த அக்பர் தன்னுடைய கை நிறைய பொற்காசுகளை அள்ளி என்னிடம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்”….

View More அக்பர் என்னும் கயவன் – 16