போகப் போகத் தெரியும் – 38

பாலாமணி நடித்த தாரா சசாங்கம் என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். காட்சியின் விசேஷம், தாரையின் உடலில் துணி இருக்காது.

View More போகப் போகத் தெரியும் – 38

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சேவை செய்வதே எங்கள் உய்ர்மூச்சு என்றெல்லாம் நாடகம் ஆடும், “தமிழ்” அரசியல்வாதிகளில் ஒருவர் கூட மதானியின் விடுதலைக்கு எதிராகவோ, அல்லது அவன் குண்டு வைத்ததனால் பாதிக்கப் பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஆதரவாகவோ, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்து தமிழ் மக்களை அவமரியாதை செய்தனர்.

View More கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 2

கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

ஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான்.

View More கரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக்கள்: 1

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

”சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பது அதற்காக எவ்வளவு அவசியப்பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும், சமுதாயத்தில் ஜாதி மத பேதங்களை அகற்றுவதும். மூடப்பழக்கங்களை ஒழிப்பதும் பொருளியில் சமதர்மமாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடையில் பிரசாரம் செய்யவும் அமுலுக்குக் கொண்டுவரவுமான காரியங்கள் நடைபெறவேண்டும். காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்ராயம்”.

View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 18: தேசப்பற்று இல்லாத ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

போகப் போகத் தெரியும் – 37

உடல் என்ற அடையாளத்தை உதற வேண்டும் என்று நினைக்கும் சமணத் துறவிகள் மீது தாக்குதல்; நிர்வாண ஆராய்ச்சி செய்த ஈவெராவுக்கு சிலை வைத்து பாராட்டு. தமிழகமே இதுதானா உன் தலைவிதி?

View More போகப் போகத் தெரியும் – 37

புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

(தமிழில்: மது) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று… பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.

View More புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்

போகப் போகத் தெரியும் – 36

வைரப்பன் போலிஸ்காரரை அப்படியே அரைகுறை சவரத்தோடுவிட்டுவிட்டு எழுந்துவிட்டார். போலிஸ்காரர் மிரட்டிப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் மசியவில்லை. இறுதியில் போலிஸ்கார் வைரப்பன் மீது பொய்வழக்கு போட்டு அவரை கோட்ர்டுக்கு இழுத்துச் சென்றார். நீதிபதி வைரப்பனிடம் ‘மிச்ச சவரவேலையும் செய்து முடி’ என்றார். அதற்கு வைரப்பன் சொன்னார். ‘நம்மாலே அது முடியாதுங்க, சாமி வேணுமானா நீங்களே செய்துவிட்டுடுங்க’ என்று சொல்லிக்கொண்டே தனது ஆயுதப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீதே வைத்துவிட்டார்.

View More போகப் போகத் தெரியும் – 36

திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்

தலைவர்களின் பிறந்த நாட்கள் விழாக்களின் போது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் ஜோடிகள் “ஏற்பாடு” செய்யப்பட்டு – பாதிபேர் ஏற்கனவே திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள், மீதிப்பேர் கிடைக்கிற சன்மானத்திற்காக, குழந்தை குட்டிகளை வீட்டில்விட்டுவிட்டு, ‘நடிக்க’ முன்வந்திருப்பார்கள் – அவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடக்கும்.

View More திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்

போகப் போகத் தெரியும் – 35

வேதாந்தச் சிங்கமான சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தில் இருந்தபோது, இங்கர்சால் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்ற தகவலை இந்நாட்டு இங்கர்சால்களும் அவருடைய இளவல்களும் அறிவார்களா? அகலமும், ஆழமும் இல்லாத புலமையை வைத்துக்கொண்டே இவர்கள் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

View More போகப் போகத் தெரியும் – 35

போகப் போகத் தெரியும் – 34

‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்!’ என்றான் நண்பன்.

திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

View More போகப் போகத் தெரியும் – 34