மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)

இதுதான் மண்ணிலே தென்படும் விண் என்ற தகுதிக்கு எதுவெல்லாம் வரக்கூடும்? ஒருசிலவற்றை வெண்பா வடிவத்தில் தந்திருக்கிறேன். சந்தவசந்தக் குழுவில் நடந்த கவியரங்கில் பங்கேற்றபோது இட்டவை இவை.

View More மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)

கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி
துரத்தத் துரத்தப் பறக்கிறது
தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம்
தொல்லை யுகமாய்த் தொடர்கிறது
வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே
வேட்டை யாடப் படுகிறது!…

View More கவிதை: குருவின் முறுவல் பொன் உதயம்!

கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

சொல்லுள் துலங்கும் மெளனத்தில்
சொக்கிப் போய்நாம் நிற்பதனால்
அல்லை ஒளியின் கருவென்று
அதில்நின் றேநாம் கண்டதனால்
புல்லே மரமாய் மலைக்கின்றோம்
புவியே மலராய் நுகர்கின்றோம்
எல்லை பொய்யோ மெய்தானோ?
இன்னும் எதற்கு இவ்வாதம்?

View More கவிதை: வீதிகளில்லா வெளியினிலே…!

கவிதை: குருநாதன்…

நித்திரைக்கும் பிரக்ஞைக்கும்
நேரத்தில் வசப்படாத
ஒத்திகையால் தாண்ட
ஒண்ணாத ஒருகோட்டில்
சத்திரத்துத் திண்ணையிலே
சாய்ந்துறங்கும் முதியோன்போல்
அத்தனவன் என்னுள்ளே
அரிதுயிலாய்க் கவர்கின்றான்!

View More கவிதை: குருநாதன்…

‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு முன்னால், அல்லது சந்தித்திருந்தால், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம்.

View More ‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

நகரம் நானூறு – 6

ஒரு லிட்டர் பாலும்; ஒரு லிட்டர் தண்ணீரும் ஏறத்தாழ ஒரே விலைக்கு விற்கப்படும் காலமும் வந்துள்ளதல்லவா… நகரத்தில் தென்படும் தண்ணீர் வியாபாரச் சூழல் குறித்த வெண்பாக்கள்…

View More நகரம் நானூறு – 6

அழகியல் அரசியல்

எத்தனையோ சிவபக்தர்களும், ஆத்திகர்களும் ‘அன்பே சிவம்’ திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் குளமாகி, நெக்குருகி நின்றிருக்கிறார்கள். காரணம் திரைப்பட ஊடகத்தின் அழகியல். அரசியல் கட்சிகள் போல மேடை போட்டு, கெட்ட வார்த்தை பேசவில்லை இப்படம். ஒரு மிகப்பெரிய அறிவுஜீவித்தனத்தை முன்வைப்பது போலவே, ரோஹிந்தன் மிஸ்த்ரி, அரவிந்த் அடிகா நாவல்கள் போலவே, அருந்ததிராயின் அரைகுறைக் கட்டுரைகள் போலவே ஒரு தத்துவம் போல், இலக்கியம் போல் தன்னை முன்வைத்துக் கொண்டது ‘அன்பே சிவம்’ திரைப்படம்.

View More அழகியல் அரசியல்

மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்

வியாச பாரதம், வில்லி பாரதம், பாஞ்சாலி சபதம் போன்ற மஹாபாரதத் தலைப்புகளில் நண்பர்கள் அவ்வப்போது தனிமடல்களிலும், சிற்சில குழுக்களிலும் ஐயங்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றுக்கு நான் அளித்துவரும் விடைகளை ஒரு பொதுத் தளத்தில் இட்டு வைப்பது நல்லது என்று பலரும் அபிப்பிராயப்பட்ட காரணத்தால், தமிழ்இந்து தளமே அதற்குப் பொருத்தமான தளம் என்று கருதி இங்கே அந்த விவாதங்களை இடத் தொடங்குகிறேன்.

View More மஹாபாரத உரையாடல்கள் – 001 கற்றலும் சாதியும்

பைத்ருகம் – ஒரு பார்வை – 3

மனிதனுக்கு ஆஸ்திகத்தின் மீது நம்பிக்கை வரவழைக்க ஆழமான தத்துவார்த்தமான தாக்கத்துடன் கூடிய படங்களே எடுக்கப்பட வேண்டுமே ஒழிய விட்டலாசார்யா பாணி, ராம. நாரயணனின் குரங்கு/நாய் படங்கள் அல்ல. ரஜினிகாந்தின் அரைவேக்காட்டுத் தனமான பாபா போன்ற படங்களும் அல்ல. மேலும் இதுபோன்ற படங்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையை அழகாக, கவித்துமாகச் சொல்லவும் வேண்டும். பார்த்தவுடன் அந்தக் கோவில்களுக்குச் செல்லவோ, அந்தச் சடங்குகளை அனுபவிக்கவோ தோன்றவேண்டும்…

View More பைத்ருகம் – ஒரு பார்வை – 3

நவ இரவுப் பண்டிகை

புனிதமான காலமிது
புரட்டாசித் திங்களிது!
மனிதகுலம் வாழ்ந்திடவே
மழைதொடரும் காலமிது!

மலைமகளும் அலைமகளும்
மகிழ்வுடவே கலைமகளும்
குலமகளிர் இல்லமெலாங்
குடியிருக்குங் காலமிது!

View More நவ இரவுப் பண்டிகை